Jump to content

பூக்களே சற்று பூத்திருங்கள்


Recommended Posts

நன்னாரி - இந்த செடியின் வேர் எதுக்கோ பிரபல்யம், எதுக்கென்றுதான் ஞாபகமில்லை.
 

IMG_0403.jpg

 

குப்பை எரிக்கும் இடமொன்றில் Water melon .
இது வெள்ளரிக்காயும் இல்லை அது வேற. 
வத்தகைப் பழமும் இல்லை - அது கித்துள் கட்டியோட தின்னுறது.

இதை இந்தியாவில் தர்பூசணி என்பார்கள்.

அப்ப இதுக்கு தமிழிலே என்ன பெயர்?

IMG_0406.jpg

இந்த கொடியை முன்னர் பாத்திருக்கின்றேன்  - ஆனால் பெயர் தெரியாது.

IMG_0413.jpg

IMG_0414.jpg

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

நன்னாரி - இந்த செடியின் வேர் எதுக்கோ பிரபல்யம், எதுக்கென்றுதான் ஞாபகமில்லை.

 

நன்னாரி – மருத்துவ பயன்கள்

நன்னாரி

நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும்; தாது வெப்பத்தை அகற்றும்; உடலைத் தேற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.

நன்னாரி கொடி வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்கில் குறுக்கு மறுக்காக அமைந்த நீளமான அகலத்தில் குறுகிய இலைகளைக் கொண்டது. கம்பி போன்ற வளைந்து படரும். நன்னாரி மலர்கள், மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறமானவை. நன்னாரி செடிச்சாறு பால் போன்றது. நன்னாரி வேர்கள் நறுமணமுள்ளவை. மருத்துவத்தில் பயன்படுபவை.

நறுக்கு மூலம், நறுநீண்டி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் நன்னாரி தாவரத்திற்கு உண்டு. நன்னாரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே விளைகின்றது. சமவெளிகள், முட்புதர் காடுகள் மற்றும் கடற்கரையோரங்களில் அதிகமாகக் காணப்படும்.

மலைப் பகுதியில் வளரும் நன்னாரியின் வேர் தடிப்புடன் பெரியதாக இருக்கும். நன்னாரி வேரின் மருத்துவ உபயோகம் மற்றும் நறுமணப் பயன்கள் கருதி பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. இது காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

ஒரு பிடி பசுமையான நன்னாரி வேரைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு, இடித்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து இரசம் வைக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை சேர்த்து, வெறும் வயிற்றில் ½ டம்ளர் அளவு இரசத்தை குடிக்க எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாகும்.

நன்னாரி வேர்த்தூள் 2 தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடிக்க சிறுநீர் கட்டு குணமாகும்.

நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன் 25 பங்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை 50 பங்கு சேர்த்து மணப்பாகு செய்து 15 முதல் 25 மிலி வீதம் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.

நன்னாரி இரு வகைப்படும். வேர்கள் சிறியதாக உள்ள சிறு நன்னாரியின் பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைகள் அகலத்தில் குறுகியவை. சமவெளிகள், புதர்காடுகளில் வளர்பவை.

மற்றொரு வகை, வேர்கள் பெரியதாக உள்ள பெரு நன்னாரியின் மலர்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இலைகள் அகலத்தில் அதிகமானவை. மலைப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வளர்கின்றன.

http://www.inidhu.com/நன்னாரி-மருத்துவ-பயன்க/

Link to comment
Share on other sites

4 minutes ago, நவீனன் said:

நன்னாரி – மருத்துவ பயன்கள்

நன்றி நவீனன். 

Link to comment
Share on other sites

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கறிவேப்பிலைக் கன்றுகள் விற்பதர்க்கு உள்ளேன்.ஆனால் ஒரு கன்று £10. தபாற்செலவு  £10.

 

ஓஓ நன்றி..tw_blush:

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதால் எந்த விதமான வர்த்தக தொடர்புகளும் மேற்கொள்ளவதில்லை என்ற கொள்கை...:grin:

போனமாதம் கனடாவில் இருந்து  2 கன்று சும்மா கொண்டுவந்தேன்...:rolleyes:  20 பவுண்ட்ஸ்க்கு வியாபாரம் செய்ய யோசிக்கிறீர்கள்..tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நவீனன் said:

ஓஓ நன்றி..tw_blush:

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதால் எந்த விதமான வர்த்தக தொடர்புகளும் மேற்கொள்ளவதில்லை என்ற கொள்கை...:grin:

போனமாதம் கனடாவில் இருந்து  2 கன்று சும்மா கொண்டுவந்தேன்...:rolleyes:  20 பவுண்ட்ஸ்க்கு வியாபாரம் செய்ய யோசிக்கிறீர்கள்..tw_yum:

நல்லாய் இருங்கப்பு tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னாரி சர்பத் பெயர்போனது ஜீவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தப் பூவை ஸ்டேஷன் பூ என்று எனது வீட்டில் சொல்லுவோம். இவை எப்பவும் புகையிரத நிலையத்தை அண்டி அதிகமாக இருப்பதால். இப்பூவின் உண்மையான பெயர்  யாருக்காவது தெரிந்தால் பதியவும்.

IMG_0512.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 31/01/2016 at 3:59 AM, Sasi_varnam said:

முடிந்தால் எனக்காக ஒரு "தொட்டா சிணுங்கி" மலரையும் கிளிக்கி விடுங்களேன்.

எப்பவோ சசி கேட்டது. இப்பதான் மட்டக்களப்பில்  கிடைத்தது.

IMG_1882.jpg

IMG_1926.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி ஜீவன்....
என்னவோ தெரியவில்லை இந்த பூவை பார்க்கும் போது எனக்கு என்னடைய இளம் வயது முஸ்லீம் நண்பி "ஒனிஷா" , "ருவைசா" எல்லோரும் மன  கண்ணில் வந்து போகிறார்கள்.
...இந்த தொட்டா சிணுங்கியை தொட்டு அதன் இலைகளை சுருங்க விட்டு ...அது திரும்ப விரியும் வரை ஆவென பார்த்திருந்த காலங்கள் அது...
இதில் சின்ன சின்ன முற்கள்  கூட இருப்பதாக ஞாபகம் ...நான் சொல்வது சரியா?


இன்னும் ஒரு ரிக்வஸ்ட் உங்களிடம் ...முடிந்தால் அரளிய மலர்கள் (டெம்பிள் பிளவர்ஸ்) இது கூடுதலாக பௌத்த வழிபாட்டு இடங்களில் பாவிப்பார்கள். நறுமணத்தோடு கூடிய அழகான மலர்கள் அவை. 
மஞ்சள், வெள்ளை, இளம் சிவப்பு நிறங்களில் கிடைக்கும். 
இதை காரணமாக கொண்டு தான் "அரளிய மந்திரிய" என்று பிரதம மந்திரி வீட்டை அழைப்பார்கள்.  (in Kollupittiya)

 

Link to comment
Share on other sites

6 hours ago, Sasi_varnam said:

என்னவோ தெரியவில்லை இந்த பூவை பார்க்கும் போது எனக்கு என்னடைய இளம் வயது முஸ்லீம் நண்பி "ஒனிஷா" , "ருவைசா" எல்லோரும் மன  கண்ணில் வந்து போகிறார்கள்.
...இந்த தொட்டா சிணுங்கியை தொட்டு அதன் இலைகளை சுருங்க விட்டு ...அது திரும்ப விரியும் வரை ஆவென பார்த்திருந்த காலங்கள் அது...

ஒனிஷா, ருவைசாவும் தொட்டா சிணுங்குவினமோ? :grin:

6 hours ago, Sasi_varnam said:

இதில் சின்ன சின்ன முற்கள்  கூட இருப்பதாக ஞாபகம் ...நான் சொல்வது சரியா?

சரி

6 hours ago, Sasi_varnam said:

இன்னும் ஒரு ரிக்வஸ்ட் உங்களிடம் ...முடிந்தால் அரளிய மலர்கள் (டெம்பிள் பிளவர்ஸ்)

IMG_2410.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பெயர் தெரியாத பூ 
ஆனாலும் 
சிறு வயதில் ஆணா பெண்ணா என்று சுண்டிப்பார்த்த ஞாபகம்.

IMG_3462.jpg

IMG_3465.jpg

IMG_3467.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

பெயர் தெரியாத பூ 
ஆனாலும் 
சிறு வயதில் ஆணா பெண்ணா என்று சுண்டிப்பார்த்த ஞாபகம்.

IMG_3462.jpg

IMG_3465.jpg

IMG_3467.jpg


 

தோட்டுப் பூ !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_3465.jpg

 

தோட்டு பூ....வாவ்.........அதெல்லாம் ஒரு கனாக்காலம். மாலாக்கா கேட்டுதே!!!!!!.:love::love::love:

 

Link to comment
Share on other sites

குப்பைக்குள் பூத்திருந்தாலும் குறையாத அழகுடன் எமது மண்ணின் மலர்கள் சில.

15027950_1466303930049612_6601170586693205852_n.jpg?oh=0d54e750db19284fa4bba41bcf821b67&oe=588CCBEF&__gda__=1489030568_3973f7d55baffccb0be5032ad87ceeb4

15094411_1466304043382934_895422766211081153_n.jpg?oh=21fce018b6720e43be4714cccc4cbf19&oe=58C502B9

15027842_1466304080049597_6526601942445046722_n.jpg?oh=340066aa51d3d6761022c4d1ccae9ff4&oe=58896674

15032150_1466313186715353_4067514881591601068_n.jpg?oh=cc4ea78499d182414415624232c16fe2&oe=58BB7084

15134766_1466313176715354_1622407329980189725_n.jpg?oh=50b1927ca3d7c0de79747432a8ed1584&oe=58C95DAA

15055686_1466313166715355_2147498038343560384_n.jpg?oh=d0f0dd304f1fd987afa3a3053194ae2f&oe=58880B5F&__gda__=1485266525_f0a93743c47ce40cc15f501bb1f8ff43

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:

இது என்ன பூ

Image may contain: flower, plant, nature, outdoor and text

தேங்காய்ப் பூ..மல்லிகை!

On 9/23/2016 at 0:44 AM, ஜீவன் சிவா said:

இந்தப் பூவை ஸ்டேஷன் பூ என்று எனது வீட்டில் சொல்லுவோம். இவை எப்பவும் புகையிரத நிலையத்தை அண்டி அதிகமாக இருப்பதால். இப்பூவின் உண்மையான பெயர்  யாருக்காவது தெரிந்தால் பதியவும்.

IMG_0512.jpg

குரங்கு வால் மல்லிகை!

Link to comment
Share on other sites

Just now, புங்கையூரன் said:

தேங்காய்ப் பூ..மல்லிகை!

தவறு

அனேகமா உங்கள் வீட்டிலும் நின்றிருக்கும் // பூவை கவனித்திருக்க மாட்டீங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பசன்பூருட்:rolleyes:

Link to comment
Share on other sites

3 minutes ago, putthan said:

பசன்பூருட்:rolleyes:

Bildergebnis für passion fruit tree

நானும் ஜீவன் போட்ட படத்தின் இலையை பார்த்துவிட்டு passion fruit என்றுதான் நினைத்தேன். ஆனால் 3 கிழமைக்கு முதல் இன்னும் ஒரு திரியில் செண்பகப்பூ பற்றி நானும் ஜீவனும் உரையாடி இருந்தோம். அதனால் ஜீவன் சென்பகபூவை  போட்டு படம் காட்டுகிறார் என்று நினைத்து விட்டேன்..:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.