Jump to content

சுயவிசாரணை


Recommended Posts

சிரியாவில் இருந்து கனேடிய அரசால் கனடா அழைத்து வரப்பட்ட அகதிகள் முகம் சுழிக்கிறார்கள். தங்களைத் தங்க வைத்திருக்கும் தற்காலிக தங்குமிடம் வசதிக்குறைவாக உள்ளதாவும் தாங்கள் திரும்பவும் ஜோர்தானிய அகதிமுகாமிற்கே மீண்டுவிடலாம் போலுள்ளது என்றும் கூறுவது கனடாவில் பரபரப்பான செய்திகளில் ஒன்றாயுள்ளது. ஏனோ இதைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுர பல அலைகள். எடுத்த எடுப்பில் அகதிகளில் ஆத்திரம் மட்டுமே பிறந்தது. எனினும் இது ஒரு-பரிமாண விடயம் அல்ல என்பதும் கூடவே தோன்றியது. அப்படி நடந்த ஒரு சுய விசாரணையினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கால்நூற்றாண்டிற்கு முன்னர் நம்மவர்கள் (நான் உட்பட) கனடாவிற்கு வந்த காலத்திற்கு மனம் பறந்தது. நிரந்தர வதிவுரிமையினைப் பெற்று விடவேண்டும் என்பதற்கப்பால் எதையும் மனம் வேண்டவில்லை. அரச உதவித் தொகை பெறும் நிலையினைக் கூட பெரும்பான்மையானவர்கள் கிடைத்த முதற் சந்தர்ப்பத்திலேயே நிறுத்திக் கொண்டார்கள் (விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை). ஊரில் வசதியாக இருந்தவர்கள், தொட்டாட்டு வேலைகளிற்கெல்லாம் பணியாளர் வைத்திருந்தவர்கள் கூட உணவகங்களில் கோப்பை கழுவினர். உள்ள வேலைகள் அனைத்தும் செய்தனர். ஒரு அறை இருப்பிடத்தில் ஏழு எட்டுப் பேர் இருந்தனர். கதிரையில் சில மணிநேரம் தூங்கி மூன்று வேலை செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதனையும் எவரும் தட்டில் வைத்து எமக்குத் தூக்கித் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்ததில்லை. 

தாம் வந்த கடன் கட்ட மூச்சு வாங்கும் போதே சொந்தங்களை எடுத்துவரக் காசு கட்டிக்கொண்டிருந்தார்கள். இருந்தும், அனைத்துப் பணிகளிலும் விக்கிரமன் பட கிளைமாக்ஸ் பாட்டுப்போல சொற்ப காலத்துள் ஏறி அமர்ந்து உயரம் தொட்டார்கள் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பின் போதைக்கு ஈழத்தைப் பிரிந்த பெரும்பான்மைத் தமிழன் அடிமை. ஒரு சமூகமாக பிறர் திரும்பிப் பார்க்கும் வகை நம்மவர் ஆகிவிட்டனர் என்பதற்கு இரண்டாம் கருத்து இருக்க முடியாது. இந்த நிலையில் நின்று கொண்டு, புதிதாய் வந்தவர்கள் தற்காலிகத் தங்குமிடம் சார்ந்து முகஞ் சுழிப்பதைப் பார்க்கையில் பிறக்கின்ற ஒவ்வாமையினை மறைக்க முடியவில்லை. அதுவும், நம்மவர்கள் இந்நாட்டிற்குள் நுழைவதற்காய் பயணித்த சட்டத்திற்குப் புறம்பான பாதைகளோடு ஒப்பிடுகையில் சிரிய அகதிகளை அரசு தன்காசில் தன் விமானத்தில் ஏற்றி வந்து இறக்கும் வித்தியாசமே பெரு மலைப்பேற்படுத்துவது. ஆனால், இலகுவில் கிடைக்கும் எதையும் மனம் கொண்டாடுவதில்லையோ என்றே தோன்றுகிறது.

இன்னுமொரு புறத்தில் சிந்தித்தால் ஈழத் தமிழனிற்கு உரிமை தொடர்பான எண்ணம் அறவே இல்லாமை தான் எமது பிரச்சினையோ என்றும் தோன்றுகிறது. அதாவது, காலதிகாலமாக அனுசரிப்பு அரசியல் நமக்குப் பழக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. இடையில் முப்பது வருடங்கள் ஒரே ஒரு தலைமை நடாத்திய விட்டுக்கொடா உரிமைக்குரலை விட்டால் எமக்குள் உரிமைக்குரல் அத்தனை காட்டமாய் ஒலித்ததில்லை. இன்னமும் சொல்வதானால் சமரசமற்ற உரிமைக்குரல் எழுப்பியமை முட்டாள்த் தனம் என்ற விமர்சனமே அத்தலைமை மீது இற்றை வரை பெரும்பான்மை விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. அப்படிப் பார்க்கையில் பாரம்பரிய தேசத்திலே உரிமைக்குரல் எழுப்புவதைக் கூட முட்டாள்த் தனமாகப் பார்க்கும் ஒரு மக்கள் கூட்டத்தால் அகதித் தஞ்சம் கோரிய தேசத்தில் எதனை அடித்துப் பேசிவிட முடியும் ? அப்படிப் பார்த்தால் 'எதையும் எவரும் தட்டில் வைத்துத் தருவார்கள் என்று நாமெவரும் எண்ணவில்லை' என்ற அன்றைய நிலைப்பாட்டை நமது கையாலாகாத் தனம் என்று தான் நோக்கவேண்டுமா என்றும் தோன்றுகிறது. கோபம் புதிய அகதிகள் மீதிருந்து நழுவி எம்மீது ஏறுகிறது.

சிரிய மண்ணில் விழுந்த குண்டுகளில் சிலது கனேடிய விமானங்களில் இருந்தும் விழுந்தன என்ற வகையில், நாம் சிதைத்த அவர்களின் வாழ்விற்கு நாம் நட்ட ஈடு தரவேண்டியது தவிர்க்க முடியாதது தான். அகதி முகாமிற்கு அவர்கள் வந்ததில் நமது பங்கும் இருந்தது என்கையில் நாம் கொடுக்கும் நட்ட ஈடு ஏற்புடையதா என்று கருத்துக் கூறுவது அவர்களது உரிமை தான். ஈழத்தமிழனிற்கு ஓடியே பழகி விட்டதால் துன்பம் இழைத்தவனிடம் நியாயம் கோருவது புதுமையாக இருக்கிறது போலும். சரணாகதி அரசியல் ரெத்தத்தில் ஊறி விட்ட இனத்திற்கு உரிமைக்குரல் முட்டாள்த் தனமாய் தோன்றுவது தவிர்க்க முடியாதது. 

ஒருவன் பரிசு தந்தால் பரிசு பிடித்திருக்கிறது என்று மட்டும் சொல்வது விதியா என்ன? பிடிக்காத பரிசைப் பிடிக்கவில்லை என்று சொல்வதில் அப்படி என்ன பெரிய தவறிருக்கிறது? பிடிக்கும் பரிசைக் கொடுக்கத் துப்பற்றவனிற்கு பரிசு பிடிக்கவில்லை என்று சொல்லும் பேச்சு எதற்கு உறைக்கிறது?

சிரிய அகதிகளின் முகஞ்சுழிப்புச் சார்ந்து உள்ளுர எழுந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகிறது. கோபம் எப்போதுமே கையாலாகாத் தனத்தின் வெளிப்பாடே என்று மீண்டுமொருமுறை உள்ளுர உணரப்படுகிறது. அதனால் கோபம் நம்மீதிருந்தும் இறங்கிக் கொள்கிறது.

Link to comment
Share on other sites

வணக்கம் இன்னுமொருவன் அண்ணா, எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு சாரார் பற்றிக் குறிப்பிட்டதால் எனது கருத்தையும் பதிவிட முடிவெடுத்தேன்.

அவுஸ் அரசாங்க DIBP (Department of Immigration and Border Protection) யில் ஒரு Division Detention Services இதன் கீழ் மூன்று Branch கள் இருக்கின்றன. இவற்றிலே project management, facility management, financial management துறைகளிலே பணியாற்றி இருக்கிறேன்.

இந்த Detention Centre களில் இருப்பவர்களளில் பெரும்பான்மையானோர் சட்டவிரோதமாக கடலால் வந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மை ஈரானியர்கள்/ஆப்கானிகள் அடுத்தது எம்மவர்கள். இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு மூன்று நேர சாப்பாடு, இடை நேரங்களில் snacks soft drinks, இலவச இணைய வசதி, நூலக வசதி, மத சம்பந்தமான தொளுகைகளுக்கான வசதி எனப் பல வசதிகள் உண்டு. இந்த வசதிகளை external contractors மூலம் DIBP ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதற்காக செலவாகும் தொகை பல பில்லியன்கள். அப்படி இருந்தும் இந்த முகாம்களில் இருப்பவர்கள் கையைக் காலை வைத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். எதையாவது உடைத்து நொறுக்குவதும், குசினிக்கு நெருப்பு வைப்பதுவும் என்று இவர்களின் தொல்லைகள் தாங்க முடியாது. நான் நினைப்பதுண்டு, காஞ்சுபோன இரானில இருந்து வந்தவர்களுக்கு மூண்டு நேரமும் திண்டுபோட்டு வேற எதையாவது பிரயோசனமாக செய்ய முடியாதா என. ஆனாலும் அவர்களை திருத்த முடியாது அவுஸ் அரசாங்கம் செய்து கொடுத்த எல்லா வாய்ப்புக்களையும் வசதிகளையும் நாசமாக்குவதும், அரசாங்கத்தைக் குறை சொல்வதும் இவர்களுக்கு முடிந்தது. இதனால் தான் இப்படியான குழப்படிகாறரை பிடித்து மனுஸ் தீவிலே கூடாரங்களிலே காய விட்டிருக்கிறார்கள். Beggars can't be choosers  எனக் கூறுவார்கள். பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலே இவர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியாது. தாங்கள் இதைவிடத் திறமாக இருந்தனாங்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

இதைவிட இன்னொரு விடயம், DSD யினுள்  Detention Health Services (DHS) என்று ஒரு branch இருக்கிறது. இவர்களும் ஒரு external service provider ஐத் தான் பாவிக்கிறார்கள். இந்த இலவச மருத்துவ வசதியைப் பாவித்து பல்லுக் கட்டியவர்களும், மிதப்புக்கு கிளிப் போட்டவர்களும், ஏன் plastic surgery க்கு விண்ணப்பித்த்வர்களும் இருக்கிறார்கள்.

கனேடிய அகதிமுகாம்களின் தரம் பற்றித் தெரியவில்லை ஆனால் நிச்சயமாக வவுனியா அகதி முகாமை விட விலாவூட் தடுப்பு முகாம் பல மடங்கு சிறந்தது.

எனது மனதில் பல கேள்விகள் 

  • இந்த முகாம்களில் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் அவர்களின் நாட்டில் இருந்த வாழ்கையை விட மேம்பட்டதாகவே இருக்கிறது. Atleast உயிர்ப் பயமாவது இல்லை, பிள்ளைகளுக்கும் படிப்பு வசதிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் அவுஸ் அரசாங்கத்தை குறை சொல்லுகிறார்கள்?
  • இவை பிடிக்கவில்லை ஆயின் சொன்னால் அடுத்த கிழமையே ஊருக்கு அனுப்பி வைப்பார்களே, ஏன் அதை செய்கிறார்கள் இல்லை?
  • அவுஸ் அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?
  • அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யும் அளவுக்கு இந்த அகதிகள் அவுசிட்காக எதிர்காலத்தில் என்ன பங்களிப்பு செய்யப் போகிறார்கள்?
  • இவர்களை உள்ளே விடுவதால் அவிசிட்கு என்ன நன்மை?

உங்களைப் போன்றே எனக்கும் கோவம் தலைக்கேறுகின்றது, கொடுப்பதை தட்டிவிடும், அழிவுகளை ஏற்படுத்தும் நன்றி அற்ற ஜென்மங்களின் மீதே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐனவரி முதலாந்திகதி யேர்மனியில் பெண்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் 

இதே கோபத்தையே தந்தது....

ஒருசில கிழமைகளில் 

நன்றி மறந்து விடுவோமா???

ஆனாலும் ஈழத்தமிழனுக்கு ஒரு நற்பெயரை வாங்கிக்கொடுத்த பெருமை எமது தலைமுறைக்கு நிச்சயம் உண்டு

அடுத்த தலைமுறைக்கு இந்த நற்பெயர் மிகவும் பலமாக உதவுகிறது

நன்றி பதிவுக்கும் கோபத்துக்கும்....

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஐனவரி முதலாந்திகதி யேர்மனியில் பெண்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் 

இதே கோபத்தையே தந்தது....

ஒருசில கிழமைகளில் 

நன்றி மறந்து விடுவோமா???

ஆனாலும் ஈழத்தமிழனுக்கு ஒரு நற்பெயரை வாங்கிக்கொடுத்த பெருமை எமது தலைமுறைக்கு நிச்சயம் உண்டு

அடுத்த தலைமுறைக்கு இந்த நற்பெயர் மிகவும் பலமாக உதவுகிறது

நன்றி பதிவுக்கும் கோபத்துக்கும்....

தொடர்ந்து எழுதுங்கள்

உண்மைதான் விசுகர்! புலம்பெயர் நாடுகளில் எம்மவருக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் பிற நாட்டவருக்கு இல்லை. 

Link to comment
Share on other sites

கப்பலில் உயிரை துச்சமாக மதித்து வந்த தமிழ் மக்களை கனடா நடாத்திய விதமும் விமானத்தில் ஏற்றி வந்த சிரியரையும் நினைக்கும் போது கனடா அரசு அகதிகள் மீதே பாரபட்சம் காட்டியதை நினைக்கும் போது கனடிய அரசின் மீதும் ஆத்திரம் வராமல் இல்லை.

Link to comment
Share on other sites

சிரிய அகதிகள் விடயம் அரசியல்படுத்தப்பட்டது. கீழே இருக்கும் DIBP யின் 2016 January organisational structure ஐப் பார்த்தால், Syrian Refugee Resettlement Programme என்று சொல்லி ஒரு division ஐயே ஆரம்பித்திருக்கிறார்கள். SRRP யினுள் நடக்கும் விடயங்கள் கப் சிப்.

DIBP_org_structure.jpg
 

 

Link to comment
Share on other sites

நன்றி புங்கையூரான், துப்பளையான், விசுகு, குமாரசாமி மற்றும் சன்மூன் உங்கள் கருத்துக்களிற்கு.

எனக்கு ஏற்பட்ட முதற்படி கோபத்தையும் பின்னர் அக்கோபத்தின் நியாமின்மையினை நான் உணர்வது பற்றியும் எழுதியிருந்தேன். கோபம் மட்டும் தான் அவதானிக்கப்பட்டிருப்பதாய்த் தோன்றுகிறது.

தும்பளையான் உங்கள் பணி மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் ஆதங்கம் முற்றாக புரிகிறது. இருப்பினும் இந்த முனை சற்றுச் சிக்கலானது என்பது மறுக்கமுடியாது.

ஒரு மனிதன் தனது சூழலை விட்டு விலகுதல் என்பது பலபடி உளவியல் பரிமாணங்களை அனைவரிற்கும் ஏற்படுத்தியே தீரும். வயது மற்றும் குணவியல்புகள் சார்ந்து இந்த உளவியல் சமிஞ்ஞைகள் அனைவரிலும் ஒரே வித வெளிப்பாடுகளை ஏற்படுத்தாது என்றபோதும் குறைந்த பட்சம் சமிஞ்ஞைகள் உள்ளுரப் பிறக்கவே செய்யும். ஒரு மனிதனிற்கு அனைத்தையும் கொடுத்து அவனைத் தங்குமிடத்தில் இருக்கவிட்டால் மகிழ்ந்திருப்பதற்குப் பதில் அவன் குழப்படி செய்கிறான் தீ வைக்கிறான் பொருட்களை உடைக்கிறான் என்ற ஆத்திரம் பொருளாதாரக் கோணத்தில் புரிந்துகொள்ள முடியினும் உளவியல் இங்கு மறுக்க முடியாதது. மேலே தங்குமிடத்தில் நிகழும் வன்முறைகளாகக் குறிப்பிடப்பட்டவற்றi உற்று நோக்கினால் அது ஒரு குழந்தையின் அடம்பிடித்தலை ஒத்திருக்கும். குழந்தையின் அடத்தின் ஒரே அடிப்படை அதனால் தனது உள்ளுணர்வுகளை மற்றவரிற்கு எடுத்தியம்ப முடியவில்லை என்பதற்கப்பால் அதற்கே அவற்றை முற்றாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே.

ஒரு புதிய சூழலில் பலகாரணிகள் வழர்ந்தவர்களை குழந்தைகள் போல் நடாத்தப்படச் செய்கிறது. சற்றுக் கூர்;ந்து அவதானிப்போமேயாயின்—குறிப்பாக இதனை சீனர்களில் அவதானிப்பது இலகு—ஆங்கிலம், உடல் மொழி மற்றும் கலாச்சாரம் சரியாக வரவில்லை என்பதனால் எமது சூழலிற்குப் புதியவர்கள் சில சமயம் எமது பார்வையிலேயே குழந்கைள் (சிறியவர்கள்) போல் தெரிவர். எம்முன்னால் நிற்பவர் சில குழந்தைகளின் தந்தை என்பது கூட எமது பார்வைக்கு மறந்து போகும் வகை சில சமூகவியல் கூறுகள் ஒரு மனிதனை எமது பார்வையில் சிறுமைப்படுத்த விழையும். நீங்கள் மேலே கூறிய வன்முறைகள் எல்லாம் இந்நிலையின் ஒரு தொடர்ச்சியே.

நீங்கள் குறிப்பிட்ட தங்குமிடத்தில் மட்டுமல்ல, எங்கெல்லாம் மனிதர்களிற்கு இலவசமாய் பொருளாதார முனைகள் நிறைவேற்றப்பட்டு வாழ்வு ஓட்டோ பயிலற்றால் ஒட்டப்படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை வெளிப்படும். கனடா முதலிய நாடுகளில் பூர்வீக குடிகள் மத்தியில் இதனை மிகத் துல்லியமாக அவதானிக்க முடியும். பூர்விக குடிகள் மட்டுமல்ல அரச உதவித் தொகையில் சந்ததிகளாக (குறைந்த பட்சம் தாயும் மகளும்) வாழ்வை ஓட்டும் வெள்ளை இனத்தவரிலும் இதனை அவதானிக்கலாம். ஏன் அவளவு தூரம், தமிழ்க் குடும்பங்களில் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்டும் பெற்றோரை, குறிப்பாக தந்தையரை உற்று அவதானித்துப் பாருங்கள்—நாம் மேலே பேசிய அதே அடம்பிடித்தலின் வெளிப்பாடுகள் வௌ;வேறு வடிவங்களில் வெளிப்படும்.

அகதியாக ஒரு மனிதனை அழைத்து வந்தால், நாம் முதலில் செய்ய வேண்டியது அவனை அவனது சொந்தக் காலில் நிற்கச் செய்யவேண்டியது. எமது சமூகம் அகதிநிலையினை வென்றதில் உள்ள மிகப்பெரிய அடிப்படையும் இதுவே. அவன் தனது சூழலைப் பிரிந்த நிலை மறக்கும் வகை புதிய சூழலில் அவனது தடத்தை அவன் ஆழப் பதிப்பதற்கான ஏதுநிலைகள் உருவாக்கப்படவேண்டும். அப்படியில்லாது தங்கிவாழும் நிலை தொடரின் வன்முறை தவிர்க்கமுடியாதது.

உங்களது 'பிச்சைக்காரனிற்கு தேர்வுகளை அனுமதிக்கமுடியாது' என்ற கருத்துச் சார்ந்து எனக்கு மாறுபட்ட கருத்துண்டு. ஆனால் அது வேறொரு தலைப்பிற்கானது.

இந்த உரையாடலிற்கான சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

மிக நல்ல பதிவு இன்னொமொருவன் .

இந்த பதிவில் எனது கருத்தை எழுதி  பிரச்சனை பட விரும்பவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் போற,போற இடங்களில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என அமைதியாக இருப்பதால் தான் இன்னும் அடிமையாகவே இருக்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

தமிழர்கள் போற,போற இடங்களில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என அமைதியாக இருப்பதால் தான் இன்னும் அடிமையாகவே இருக்கிறார்கள்.
 

போற இடங்களிலை மட்டுமில்லை....இருக்கிற இடத்திலையும் நல்ல பேர் எடுக்கோணும் எண்டுதான் நினைக்கினம். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு. 

மனித மனம் விசித்திரமானது. எல்லாவற்றிற்கும் மனமே காரணம் என்பது எனது கருத்து. என்னைப் பொருத்தவரை சிரிய அகதிகளையும்,ஈழத்து அகதிகள் என தாங்களை கூறிக்கொள்பவர்கள்யும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது. மேலும் அவர்களுக்கு (ஈழத்தமிழர்களுக்கு) ஓர் நன்மதிப்பு அல்லது நற்பெயர் இருக்கின்றது என நம்புவதும் ஓர் போலியான மாயையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு இன்னுமொருவன். தமிழர்களிடம் சிறுவயதிலிருந்தே அடக்கம் ,மானம் மரியாதை, பண்பாடு என்று பலவும் திணிக்கப்படுகிறது. அது ஒருவகையில் நன்மைதான் ஆயினும் அவர்களால் தம் கருத்தை இயல்பாக வெளிப்படுத்த முடியாத அடக்குமுறையும் எம் சமூகத்தில் இருப்பதனால் எமக்கு சுதந்திரமாக எம் உணர்வை வெளிப்படுத்துதலோ அன்றி கருத்துக் கூறலோ எதிர்த்தலோ அன்றி எல்லாவற்றையும் இருக்கொண்டும் சமாளித்துக்கொண்டும் வாழ்ந்து பழகிவிட்டது. அப்படியே பலகாலம் எம்மை அடக்கியதில் எம்மை அறியாமலே எம்முள் அடிமைத்தனமும் விதைக்கப்பட்டு அழியாது வேரூன்றியும் விட்டது. எதையுமே மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சொல்லாது விட்டு விட்டு தன் சுதந்திரம் சார்ந்த விடயங்களுமே அவர்களுக்கு தெரியாமல் விட்டுவிட்டது. சுயநலமான உணர்வு அதிகம் என்பதனால் எப்படியோ பொருள் ஈட்டவேண்டும், தம் காலில் நிக்கவேண்டும் என்பவை அவர்களிடம் இருந்ததனால் அதில் மற்றைய இனத்தவரை விஞ்சி நிற்பது பெருமைதான். ஆனால் ஒற்றுமை என்பதோ தன்  இனம் சார்ந்த  சுய அக்கறையோ அற்றவன் தான் தமிழன். நாமாகத்தான் எமக்கு மதிப்பு உள்ளதாக எண்ணிக்கொள்கிறோமே தவிர வெள்ளையர்களுக்கு எல்லோரும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

On 29/01/2016 at 0:43 AM, colomban said:

மேலும் அவர்களுக்கு (ஈழத்தமிழர்களுக்கு) ஓர் நன்மதிப்பு அல்லது நற்பெயர் இருக்கின்றது என நம்புவதும் ஓர் போலியான மாயையே.

 

51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாமாகத்தான் எமக்கு மதிப்பு உள்ளதாக எண்ணிக்கொள்கிறோமே தவிர வெள்ளையர்களுக்கு எல்லோரும் ஒன்றுதான்.

என்னால் இக்கருத்துடன் உடன்பட முடியவில்லை. என்னால் மற்றய நாடுகளைப்பற்றி கருத்திட முடியாது. ஆனால் நோர்வேயைப்பற்றி என்னால் கூற முடியும். இங்கு பொதுவாகவே தினசரிகள் தமிழர்களை "superinnvandrere" (அதாவது Super immigrants) என்றுதான் அழைப்பார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. உதாரணமாக சில

This article is an exploration of one methodological approach to a
particular research question. The essay stems from a project where two
anthropologists compare social networks among Somalis and Tamils
from Sri Lanka living in Norway as a way of focusing other differences
between the two groups. In Norway, Tamils have emerged in the public
eye as a kind of model minority
, with Somalis situated at the other end
of the scale. To select only two variables: while Tamil families have a
labour income far beyond the immigrant population average, most of
the income in Somali households comes from welfare. Seventy per cent
of the Tamils own their own homes, compared to 24 per cent among
the Somalis.1 The aim of the project, in short, is to throw some light on
why these differences prevail by looking at networks of support within
the two groups.
....
There is no doubt that social capital is a powerful analytical tool, and
may be seen to explain many differences e.g. between the Tamil and the
Somali communities in Norway. There is little doubt that the Tamil
community is considerably more developed with respect to both
bounded solidarity and enforceable trust than the Somali.
...
A whole 28,8 per cent of Somali
households consists of single parents with children, compared with
only 2,6 per cent of Tamil households.
...
Tamils in 2001 had a labour-market participation of 61, 1 per cent (both sexes),
compared to 60,8 per cent for the Norwegian population as a whole 
(Lie 2004). Somalis at
the same time had a labour-market participation of 25, 8 per cent.
...
With respect to social mobility it is worth observing that as much as 48,7 per cent of
second-generation Tamils 19-24 years are taking higher education, and more women (58,8
per cent) than men (40,9 per cent). While among Somalis we still do not have a second
generation of comparable age, this is far beyond the national average (31,4 per cent women
and 21,6 per cent men).
...
இது ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து...
https://www.uio.no/studier/emner/sv/sai/SOSANT2210/v12/FUGLERUD_Culture_networks_01419870600960388.pdf

தமிழனுக்கு என்று ஒரு தனிமரியாதை உண்டு. எந்தவித திருகுதாளமும் பண்ணாமல் இருந்த/இருக்கப் போகும் எனக்கும் அதில் பங்குண்டு என்பதில் மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.