Jump to content

சினிமா எடுத்துப் பார்


Recommended Posts

சினிமா எடுத்துப் பார் 26- ‘அன்பே வா’

எஸ்.பி.முத்துராமன்

 
  • spm_2549573g.jpg
     
  • ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்த குடும்பத்துடன் வந்த நேபாள மன்னர்.
    ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்த குடும்பத்துடன் வந்த நேபாள மன்னர்.

முதலில் ‘தி இந்து’ தமிழுக்கு மூன்றாம் ஆண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு எல்லோர் சார் பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம் பரியமிக்க ‘தி இந்து’ ஆங்கில நாளித ழின் வாரிசாக ‘தி இந்து’ தமிழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்துகொண்டி ருக்கிறது. தாயின் அடியைப் பின் பற்றி சிறந்த செய்திகளையும், நல்ல கருத்துகளையும், அழகான புகைப் படங்களையும் வெளியிட்டு மக்களின் முழு ஆதரவை பெற்றுள்ளது. ஆங்கில ‘இந்து’ நாளிதழைப் போல் தமிழ் ‘இந்து’வும் சரித்திரம் படைக்க வாழ்த்து கிறோம். வளர்க தொடர்க…

‘ஆர்.எம்.வீ தயாரிப்பில் நான் இயக்கிய படம் என்ன’ என்று கடந்த வாரம் கேட்டிருந்தேன். சத்யா மூவிஸ் தயாரித்த ‘ராணுவ வீரன்’ படம்தான் அது. சிறந்த விழிப்புணர்வு மிக்க கதை. அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் நடித்தார்கள். படத்தின் கதாநாயகி தேவி. அந்தப் படத்தைப் பற்றி விரிவாக நான் இயக்குநராக பயணித்த காலம் பற்றி பேசும்போது உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அதுவும் சூப்பர் ஸ்டார் பற்றியும், உலக நாயகன் பற்றியும் நிறைய விஷயங்கள் எழுத ஆவலோடு காத்திருக்கிறேன். நீங்களும் படிக்க காத்திருப்பீர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர் களை அறிமுகப்படுத்தியவரே அசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்கு முறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்துதான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவர். அவரது கையால் பரிமாறி உணவருந்தும் நல்வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. அது ஒரு பொற்காலம்.

‘‘நம்ம அசோகன் நேரங்கெட்ட நேரத் துல சாப்பிட வருவாரு. அவருக்கு சாப்பாடு எடுத்து வைங்க’’ என்பார். அது அசோகன் மீது எம்.ஜி.ஆர் காட்டிய அன்பின் அடையாளம். எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் சரித்திரத்தில் இடம் பெற்றது. அதற்கு அடையாளமாக எம்.ஜி.ஆர் பந்தி விசாரிக்க, ஏவி.எம். செட்டியார், நாகிரெட்டியார், எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் விருந் துண்ணும் புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்புக் காக ஏவி.எம் ஸ்டுடியோவில் இருந்த ஏழு ஃப்ளோர்களிலும் செட் போட்டிருந்தோம். கிளைமாக்ஸ் காட்சி யைப் படமாக்க மேலும் ஒரு செட் தேவைப்பட்டது. அப்போது சரவணன் சார் ‘‘இங்கே ஃப்ளோர் இல்லை. வாஹினி ஸ்டுடியோவுல ஒரு ஃப்ளோரை வாடகைக்கு எடுக்கலாமா என்று அப்புச்சியிடம் கேளுங்க’’ என்றார். அப்புச்சியிடம் நான் கேட்டேன். ‘‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் படப்பிடிப்புக்குப் போய்விட்டு வாருங்கள்’’ என்றார் அவர். நாங்கள் ஊட்டி, சிம்லாவுக்குப் படப்பிடிப்புக்காக புறப்பட்டோம்.

வெளிப்புறப் படப்பிடிப்பு களை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பினோம். செட்டியார் அவர்கள் எங்களிடம் ‘‘ஏழாவது ஃப்ளோருக்கு பக்கத்திலேயே இன்னொரு ஃப்ளோர் கட்டியாச்சு. அங்கே நீங்கள் கேட்ட கிளைமாக்ஸ் செட்டை அமைக்கலாம்’’ என்றார். ஒன்றரை மாத காலத்தில் ஒரு அரங்கத்தையே உருவாக்கியிருந் தார் அவர். அப்படி ஒரு திட்டமிடல் செட்டியாரிடம். அந்தத் திட்டமிடலைத் தான் நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்.

எட்டாவது ஃப்ளோர் கட்டும் வேலைகள் நடந்த போது அந்த ஃப்ளோர் கட்டிய மண், கல் எல்லாவற்றையும் வெளியில் கொட்டியிருந்தார்கள். அதன்மேல் நடந்து சென்றுதான் படப்பிடிப்பை நடத்தி னோம். ஒருநாள் ஃப்ளோருக்கு போகும் போது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இன்று மாலை நேபாள மன்னர் குடும்பத் துடன் என்னைப் பார்க்க வருகிறார். இந்த வழியில் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அவர் வந்து செல்லும் அளவுக்குப் பாதையை சரிசெய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை செட்டியாரிடம் கூறினேன். மதியம் 1 மணி வரை படப்பிடிப்பை நடத்திவிட்டு பிரேக்கில் வெளியே வந்தோம். எம்.ஜி.ஆர் அதிர்ச்சியோடு பார்த்தார். மேடு, பள்ளங்கள் முழுவதும் சரிசெய் யப்பட்டு தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, இரண்டு பக்கங்களிலும் பூச்செடி கள் வைக்கப்பட்டிருந்தன. ‘‘செட்டியார் ஸ்டுடியோவில் ஏதும் பூதம் வெச் சிருக்காரா!’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இவ்வளவு குறுகிய நேரத்தில் நிறை வாக செய்துவிட்டாரே…’’ என்று பாராட்டி னார். அன்று மாலை வந்த நேபாள மன்னரும், அவர் குடும்பத்தாரும் ‘‘ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடி யோவுக்கு வந்துள்ளோம்…’’ என்று பெருமையாக கூறினார்கள்.

கிளைமாக்ஸுக்கான சண்டைக் காட்சி படமாக்கும் வேலை தொடங்கியது. வில்லன் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட பயில்வான். அவரிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டை போட்டு ஜெயிப்பதுதான் கிளைமாக்ஸின் உச்சகட்டம். ‘‘பொதுவாக வில்லனை கீழே போட்டு மிதிப்பதைத்தான் படங் களில் பார்த்திருப்போம். இந்தக் காட்சியில் நீங்க, அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி, கொஞ்ச நேரம் வெச்சிருந்து கீழே போட்டு மிதிக்க வேண்டும். அப்படி செய்தால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்…’’ என்று இயக்குநர் திருலோகசந்தர் விளக்கினார்.

டேக்கில் எம்.ஜி.ஆர் அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி கொஞ்ச நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கீழே போட்டு அமுக்கினார். அந்தக் காட்சி படத்தின் ஹைலைட் காட்சிகளில் ஒன்றாக அமைந்தது. எம்.ஜி.ஆர் தினமும் உடற்பயிற்சி செய்பவர். கர்லாக் கட்டையை அவ்வளவு லாவகமாக சுழற்றுவார்.

‘அன்பே வா’ 100 நாட்கள் ஓடியது. ‘கேஸினோ’ திரையரங்கில் 100-வது நாள் விழா நடந்தது. கதை கேட்டபோது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இது என்னோட படம் இல்லை; இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தரின் படம்’’ என்று சொல்லியிருந்தார் அல்லவா. அதையே 100-வது நாள் விழாவிலும் சொல்லி, ‘‘இது திருலோக சந்தரின் வெற்றி. ஏவி.எம்மின் வெற்றி…’’ என்று பாராட்டினார். ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து 160-க்கும் மேலான படங்கள் வந்திருந்தாலும், அவர்களின் சரித்திரத்தில் முக்கியமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு ஏன் கிடைக்கவில்லை? என்ன காரணம்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-26-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE/article7658689.ece

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்!

எஸ்பி.முத்துராமன

 
spm_2557464f.jpg
 

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-27-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article7680614.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 28 - ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’

எஸ்பி.முத்துராமன்

 
 
 
  • ஜெயலலிதா, சிவாஜிகணேசன்.
    ஜெயலலிதா, சிவாஜிகணேசன்.
  • sivaji_jaya_jpg1_2566195g.jpg
     

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ‘பராசக்தி’ படம் பார்த்தப் பிறகுதான் சினிமா ஆசையே எனக்கு வந்தது. கலைஞர் அவர்களின் வசனமும், அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பும் அந்த வயதில் எனக்குள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்தத் தாக்கம்தான் என்னை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களை சினிமாவில் பங்குபெற வைத்தது.

ஏவி.எம் நிறுவனமும், ஜே.ஆர் மூவிஸ் கம்பெனியும் இணைந்து ‘எங்க மாமா’ என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். அந்தப் படத்தை என் குரு நாதர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். குருவுக்கு சிஷ்யன் நான். சிவாஜி அவர் கள்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், நான் மகிழ்ச்சி யின் உச்சத்துக்கே போய்விட்டேன். படத்தில் நாயகி செல்வி ஜெயலலிதா அவர்கள்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது மாதிரி இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அன்றைக்கு அமைந்தது. ‘எங்க மாமா’ படத்தில் 12 குழந்தைகள் நடித்திருப்பார்கள். படப்பிடிப்பில் அவர்கள் செய்த குறும்புத்தனத்தை நாங்கள் சமாளித்த கதை ஒரு பெரிய சவால்!

அந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்கள். இசையும் பாடலும் இணைந்து இன்றும்கூட அந்தப் படத்தின் பாடல்கள் புகழ் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆஸ்டின் காரில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவாஜி நகர்வலம் வருவதுபோல எடுக்கப்பட்ட

‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா

என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’

என்ற பாட்டில் அந்த குழந்தை மலர்களை, தன்னைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு அப்படி ஒரு பாவனையோடு சிவாஜி அவர்கள் நடித்திருப்பார்கள். அதேபோல, பியானோ வாசித்துக்கொண்டே பாடும்

‘எல்லோரும் நலம் வாழ

நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்’

- என்ற பாட்டின் ஒவ்வொரு வரியிலும் ஜெயலலிதா அவர்களின் முகபாவனை மாறிக்கொண்டே இருக்கும். சிவாஜி பியானோ வாசிக்கிற நடிப்பும், அந்த ஸ்டைலும் அவரால் மட்டும்தான் அது முடியும்!

இன்றைக்கு மேலோட்டமாக யோசித் துப் பார்த்தால் கர்ணன், கட்டபொம்மன், பாரதி, வ.உ.சி போன்றவர்களை நினைக் கும்போது சிவாஜிதான் நமக்கு ஞாபகத்து வருவார். இவர்களைப் போல் சிவாஜி நடித்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல் நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

நாளை அக்டோபர் 1-ம் தேதி நடிப்புக்கு இலக்கணம் வகுத்த அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள். அவருக்கு இதய பூர்வமான என்அஞ்சலி.

அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் ஹரி சண்முகம் ஆகியோர் சேர்ந்து அவரது பெயரில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக விழா எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் சிவாஜி பெயரில் எனக்கும், என்னோடு சேர்ந்த 5 கலைஞர்களுக்கும் விருது கொடுக்கிறார்கள். இதை எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக நினைக்கிறோம். சிவாஜி அவர்களின் மகன்களுக்கும், குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சிவாஜி அவர்களை நினைத்துக்கொண்டு எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் நடிப்புத் திறமை மிக்கவர். வசனமாக இருந்தாலும், பாடலுக்கு நடனமாக இருந் தாலும் ஒரு தடவைதான் கேட்பார், பார்ப்பார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்து முடிப்பார். அந்த சக்தி அவருக்கு இயல்யாக இருந்தது. நடிப்பில் அப்படி ஓர் ஈடுபாடு. படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்பது, அரட்டை அடிப்பது இதெல்லாம் அவரிடம் இருக்காது. ஷாட் முடிந்ததும் புத்தகம் படிப்பார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று கடமை ஆற்றுவார்.

நான் இயக்குநராகி மூன்று, நான்கு படங்கள் இயக்கியிருந்த நேரம். விசி.குகநாதனும், கோவிந்தனும் இணைந்து ‘அன்புத் தங்கை’என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். இந்தக் கதைக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் சரியாக இருப்பார் என்று முடிவெடுத்து, நான் இயக்கலாம் என்று கூறினார்கள். அப்போது நான் புது இயக்குநர் பட்டியலில் இருந்தேன். ‘இந்தக் கதையை ஒரு சீனியர் இயக்குநர் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று செல்வி ஜெயலலிதா கூற வாய்ப்பு உள்ளது. அதனால் அவரிடமே கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்று கூறியிருந்தேன்.

செல்வி ஜெயலலிதா அவர்களிடம் வி.சி.குகநாதன் கதையை சொல்ல ‘‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது. யார் டைரக்டர்?’’ என்று கேட்டிருக்கிறார். “எஸ்பி.முத்துராமனை இயக்க சொல்லலாம் என்றிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே செல்வி ஜெயலலிதா ‘‘அவரைத் தெரியுமே ஏ.சி.டி டைரக்‌ஷனில் நான் நடித்த ‘எங்க மாமா’படத்தில் வேலை பார்த்திருக்கிறார். அவரே இயக்கட்டும்’’ என்று உடனே ஒப்புக்கொண்டார். அது எனக்கு அவர் தந்த அங்கீகாரம்.

‘அன்புத் தங்கை’ படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அதில் ஒரு பாடல் காட்சி. செல்வி ஜெயலலிதாவோடு ஒரு புத்தத் துறவி நடிக்க வேண்டும். யாரை நடிக்க வைப்பது? குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க முடியாது. நாயகனாகவும் நடிக்க முடியாது. அப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு கமல்ஹாசனுக்கு. அந்த நேரம் நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். எங்களுக்கு கமல்ஹாசன் நினைவு வந்தது. கமலை புத்தத் துறவியாக்கி செல்வி ஜெயலலிதாவோடு நடிக்க வைத்தோம். என் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த முதல் படம் அது.

இயக்குநர் திருலோகசந்தர் அவர்களிடம் 13 படங்களில் உதவி இயக்குநராக ஏவி.எம்மில் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஏவி.எம் நிறுவனத்துக்கு படம் இயக்கி வந்த திருலோகசந்தர் ஒருமுறை, ‘‘வெளியில் போய் படம் பண்ணலாமா?’’ என்று மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டார். ‘‘விரும்பியதை செய்யுங்கள்’’ என்று செட்டியாரும் கூறினார். ‘‘தங்கக் கூட்டுக்குள் இருந்த என்னை வெளி வானத்தில் சுதந்திரமாக பறக்க அனுமதித்தது தாய் பறவை’’ என்று அவர் ஒரு புத்தகத்தில் நன்றியுடன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நேரத்தில் திருலோகசந்தர் அவர்கள், ‘‘நீங்களும் என்கூட வாங்க’’ என்று என்னை அழைத்தார். செட்டியார் அவர்கள் ‘‘முத்துராமன் இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறிவிட்டார். வெளியில் படப்பிடிப்பு நடக்கும்போதெல்லாம், ஏசி.திருலோகசந்தர் ‘முத்துராமன்… முத்துராமன்’ என்றே பலமுறை அழைத்திருக்கிறார். என் நினைவு அவரை விட்டு போகவில்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணம் மட்டுமல்ல; அது எனக்குக் கிடைத்த பாராட்டு. என்னைப் பற்றி ஏசி.திருலோகசந்தர் குறிப்பிடும்போதும், ‘‘சகல பிரிவுகளிலும் தெளிவு. எல்லா விஷயங்களையும் தன் நகநுனியில் வைத்திப்பார். அபார ஞாபக சக்தி, தலைக்கனம் இல்லாதவர். எளிமையாக பழகக்கூடியவர் எந்தவித கிசுகிசுவுக்கும் ஆளாகாதவர். ஏவி.எம்மின் தூண். எனக்கு எல்லா வகையிலும் பெருந்துணையாக இருந்தவர். இன்றும் இருப்பவர்’’ என்று எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கிறார்.

நான் இயக்கும் எல்லா படங்களின் ஸ்க்ரிப்டையும் எனது குருநாதரின் கைகளில் கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பிறகே, என் படங்களின் படப்பிடிப்பைத் தொடங்குவேன்.

அண்ணன் சிவாஜியை வைத்து நானே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்கும்..!

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-28-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/article7705686.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 29- சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்!

 
spm_2574763f.jpg
 

அண்ணன் சிவாஜி கணேசன் நடித்து நான் இயக்கிய முதல் படம் ‘கவரிமான்’. பஞ்சு அருணாசலமும், பெங்களூரு பி.எச்.ராஜன் னாவும் இணைந்து தயா ரித்த படம். கதை -வசனம் எழுதியது பஞ்சு அருணா சலம். சிவாஜி கதையைக் கேட்டார். ‘‘கதை நல்லா இருக்கே…’’ என்று பஞ்சுவைப் பாராட்டினார். அந்த சந்தோஷத்தோடு படத்தின் மற்ற நடிகர், நடிகைகளைத் தேர்வுசெய்து படப்பிடிக்கான தேதியையும் முடிவு செய்தோம். இதற்கிடையில் அப்போது நான் இயக்கி வந்த ‘ப்ரியா’ படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா, சிங்கப்பூர் சென்று படப்பிடிப்பை முடித்துத் திரும்பினோம்.

சென்னைக்குத் திரும்ப சிங்கப்பூரில் இருந்து நேரடியாக விமான டிக்கெட் கிடைக்கவில்லை. கொழும்பு வழியாக டிக்கெட் கிடைத்தது. நானும், ஒளிப் பதிவாளர் பாபுவும் கொழும்புக்கு வந்து கொழும்பில் இருந்து சென்னைக்கு வேறு விமானத்தில் புறப்பட்டோம். அந்த விமானம் வானில் பறக்க ஆரம்பித்த 10 நிமிடங்களில் மீண்டும் கொழும்பு விமான நிலையத்துக்கே திரும்பியது. விமானத்தில் ஏதோ கோளாறு என்று அறிவித்தார்கள்.

பொறியாளர்கள் பலரும் கூடி விமானத்தின் றெக்கை மீது பெரியப் பெரிய புத்தகங்களை விரித்து வைத்துக்கொண்டு படித்துப் படித்து பழுது பார்த்தார்கள். இது சரி வருமா என்று சிலர் பேசிக்கொண்டார்கள். ஒருசிலர் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு புறப் பட்டார்கள். எங்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

நாளை காலை சிவாஜி அவர்கள் நடிக்கும் ‘கவரிமான்’ படத் தின் முதல் நாள் படப்பிடிப்பு. சரியான நேரத்துக்கு போய் சேர வேண்டுமே என்ற பரப்பரப்பு எங்களைப் பற்றிக்கொண்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் ஒரே நிசப்தம். எல்லோரும் அவரவர் கடவுளைக் கும்பிட்டுக்கொண்டனர். விமானம் தரை இறங்கியதும்தான் எங்களுக்கெல்லாம் உயிர் வந்தது.

அண்ணன் சிவாஜிகணேசன் ‘கவரி மான்’ முதல் நாள் படப்பிடிப்பில் என்னை அழைத்து, ‘‘முத்து என்ன வேணும் னாலும் கேள். எதற்கும் தயங்காதே!’’ என்று தைரியம் கொடுத்தார். சிவாஜி எப்போதுமே வசனம் எழுதிய பேப் பரை வாங்கிப் படிக்க மாட்டார். காட்சிக் குரிய வசனத்தை ஒருமுறை படிக்கச் சொல்வார். அதை அப்படியே உள் வாங்கிக்கொண்டு, ‘‘சரி… நீ போ’’ என்று கூறிவிடுவார். நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் படப்பிடிப்புக்கான மற்ற வேலை களில் ஈடுபட்டிருப்போம். திரும்பிப் பார்த்தால் சிவாஜி நம்மிடம் கேட்ட வசனங்களை முணுமுணுத்துக் கொண்டே வெவ்வேறு விதமாக நடித்துப் பார்ப்பார்.

‘‘முத்து…’’ என என்னை அழைத்து, ‘‘நான் நடிச்சுக் காட்டுறேன் பாரு’’ என்பார். ‘‘அண்ணே… நீங்க நடிச்சுக் காட்டணுமா?’’ என்று கேட்டால், ‘‘உனக் குத்தானே தெரியும் இதற்கு முன்னால உள்ள காட்சி எப்படி இருந்தது? இந்தக் காட்சி எப்படி இருக்கணும்’’னு என்று கூறி இரண்டு, முன்று விதமாக நடித்துக்காட்டுவார். ‘‘கடைசியா செய் தது நல்லா இருக்குண்ணே’’ என்று சொன் னதும், அதே முறையில் நேர்த்தியுடன் நடித்துக்கொடுப்பார்.

அது, அவர் எஸ்பி.முத்துராமனுக்குக் கொடுக்கும் மரியாதை அல்ல; ஓர் இயக்குநருக்கு கொடுக்கும் மரியாதை! எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும், எத்தனை பக்க வசனமாக இருந்தாலும் அவ்வளவு ஈடுபாட்டோடு அண்ணன் சிவாஜி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார். அதுதான் அவர் தொழிலுக்குக் கொடுத்த மரியாதை.

பாடல் காட்சி ஒன்றை படமாக்கத் திட்டமிட்டோம். இளையராஜா இசையில் ‘பிறவா பிரம்மா…’ என்று தொடங்கும் கீர்த்தனைப் பாடல். அதை ஜேசுதாஸ் அருமையாக பாடியிருந்தார். படத்தில் சிவாஜி குடும்பத்துடன் பாடுவதுபோல காட்சி. அந்த ஆடியோ டேப்பையும், பாடலையும் எடுத்துக்கொண்டு அண் ணன் சிவாஜியைப் பார்க்க வீட்டுக்குச் சென்றேன். ‘

‘ஜேசுதாஸின் பாடலில் ஆலாபனை, சங்கதிகள் எல்லாம் வித்தி யாசமாக வந்திருக்கு. நீங்க ஒருமுறை கேட்குறதுக்காகக் கொண்டு வந்திருக் கேன்?’’ என்றேன். பலமாக சிரித்தவர், ‘‘முத்து… லிப் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் சரியா வரணும்னு நான் ஒத்திகை பார்க்குறதுக்காகக் கொண்டு வந்திருக் கியா? நீ எடிட்டரா இருந்து இயக்குநர் ஆனவனாச்சே. நாளைக்கு ஷூட்டிங்ல நீ சரியா பார்த்துக்க’’ என்று கூறினார். மறுநாள் ஷூட்டிங்கில், ஒரு மனிதன் உண்மையாக பாடினால் அந்த பாவனைக்குத் தகுந்த மாதிரி எப்படி அவருடைய நரம்புகள் துடிக்குமோ அப்படி படப்பிடிப்பில் அண்ணன் சிவாஜிகணேசனின் லிப் மூவ்மெண்ட்ஸ் இருந்தது.

அந்தப் பாட்டை ஜேசுதாஸ் பாடினாரா… சிவாஜிகணேசன் பாடி னாரா என்ற சந்தேகமே வரும். பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், ‘‘என்ன முத்து சரியா பாடுறேனா?’’ என்றார். ‘‘நூற்றுக்கு இருநூறு சதவீதம் சரியா இருக்குண்ணே’’ என்று கூறி மகிழ்ந்தேன். அப்போது சிவாஜி அவர்கள் சின்ன வயதில் நாடகத்தில் நடிக்கும்போது வசனம், பாட்டு, நடனம் இதையெல்லாம் சரியாக செய்யவில்லை என்றால் பிரம்பால் அடிப்பார்களாம். ‘‘அந்த நாடகப் பயிற்சிதான் எங்களை வாழ வைக்கிறது’’ என்று நினைவுகூர்ந்தார். நாடகப் பயிற்சி பெற்று சினிமாவில் நடிக்க வந்த நடிகர்கள் அனைவரும் அந்த நாளில் சினிமாவிலும் உச்சியைத் தொட்டார்கள்.

‘கவரிமான்’ படத்தில் சிவாஜிகணே சன் - பிரமிளா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை. மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு பாட்டு. ‘‘பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா’’ என்று தொடங்கும் பாடல். சிவாஜிகணேசன்- பிரமிளா இருவரும் குழந்தையை வைத் துக்கொண்டு ஆடி ஓடி விளையாடு வதுபோன்ற பாடல் காட்சி. அதனை பெங் களூரில் எடுப்பதென்று முடிவு செய் தோம். மறுநாள் படப்பிடிப்புக்காக முதல் நாள் மாலை யூனிட்டை பெங்களூருக்கு அனுப்பி வைத்தோம்.

அண்ணன் சிவாஜிகணேசன், பிரமிளா, நான், ஒளிப்பதிவாளர் பாபு ஆகிய நால்வரும் மறுநாள் காலை விமானத்தில் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் மாலை என்னை பார்க்க பரபரப்பாக பிரமிளா வந்தார். ‘‘ஒரு படத்தில் 10 நட்சத்திரங்களோடு நடிக்க வேண்டிய கிளைமாக்ஸ் காட்சியை முடிக்க முடியவில்லை.

அதற்காக இரண்டு நாட்கள் தேவை என்று அந்த இயக்குநர் கேட்கிறார். அதனால் நான் நாளைக்கு பெங்களூர் வரமுடியாமல் இருக்கிறேன். நீங்கள்தான் உதவ வேண்டும்’’ என்றார். ‘‘பெங்களூருக்கு யூனிட் போய்விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியாது. அண்ணன் சிவாஜிகணேசனிடம் போய் விஷயத்தை சொல்வோம்’’ என்று பிரமிளாவுடன் சிவாஜிகணேசன் வீட்டுக்குச் சென் றேன்.

சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் என்ன சொன்னார்?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-29-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/article7733799.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னதான் சொன்னார்...!  tw_blush:

Link to comment
Share on other sites

3 minutes ago, suvy said:

அப்படி என்னதான் சொன்னார்...!  tw_blush:

நீங்கள் விரைவாக வாசித்து விடுகிறீர்கள் என்று சொன்னார்...:cool:

‘‘உன்னை நம்பி வர்றேண்டா... ஆக வேண்டிய வேலையைப் பாரு’’ என்றார்.

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 30: சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?

எஸ்பி.முத்துராமன்

 
spm_2583979f.jpg
 

நானும் நடிகை பிர மிளாவும் அண் ணன் சிவாஜி வீட் டுக்குச் சென்றோம். எங் களைப் பார்த்ததும் ‘‘என்ன முத்து நாளைக்கு பெங்களூர்ல படப்பிடிப்பு இருக்கு. இந்த நேரத்துல பிரமிளாவை அழைச்சுட்டு வந்திருக்கியே, என்ன விஷ யம்?’’ என்று கேட்டார் சிவாஜி. வேறொரு படப்பிடிப்பின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரமிளா நடிக்க வேண்டியிருப்பதையும், அவரால் பெங்களூர் வர முடியாத நிலைமையையும் எடுத்துச் சொன்னேன்.

‘‘எப்படிப்பா... நானும், பிரமிளாவும், குழந்தையும் நடிக்க வேண்டிய பாடல் காட்சியாச்சே. பிரமிளா இல்லாம எப்படி எடுப்பது?’’ என்றார். அப்போது நான், ‘‘ஒரு யோசனை சொன்னால் திட்ட மாட்டீங்களே…’’ என்று தயக்கத் தோடு கேட்டேன்.

‘‘என்ன சொல்லு!’’ என்றார்.

‘‘உங்களையும் குழந்தையையும் மட்டும் வைத்து ஐம்பது சதவீத படப் பிடிப்பை பெங்களூர்ல எடுத்துப்போம். மீதமுள்ள காட்சியை சென்னையில் அதுக்கு மேட்ச் ஆகிற இடமாப் பார்த்து தனியாக பிரமிளாவையும், குழந்தை யையும் வைத்து ஷூட் பண்ணிக்கிறேன். பெங்களூர்ல எடுக்கிற காட்சிகள்ல சில இடங்களுக்கு மட்டும் பிரமிளாவுக்கு டூப் போட்டுக்கிறேன். இதுக்கு நீங்க சம்மதிக்கணும்’’ என்றேன்.

அண்ணன் சிவாஜி அவர் கள் பெருந்தன்மையோடு ‘‘உன்னை நம்பி வர்றேண்டா... ஆக வேண்டிய வேலையைப் பாரு’’ என்றார்.

அசோஸியேட் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனிடம் சொல்லி ஒரு டூப் நடி கையை மட்டும் ஏற்பாடு செய் யச் சொல்லிவிட்டுப் படப் பிடிப்புக்கு பெங்களூர் கிளம்பினோம். படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி, பிரமிளாவுக்காக போட்டிருந்த டூப் நடிகையைப் பார்த்துவிட்டு ‘‘யாருப்பா இந்த டூப்பைத் தேர்ந்தெடுத்தது. இந்த உருவமும், பிரமிளா உருவமும் சரியா இருக்குமா?’’ என்று கேட்டார். அதனால் டூப்பைத் தவிர்த்துவிட்டு அப்பா(சிவாஜி)விடமிருந்து குழந்தை அம்மா(பிரமிளா)விடம் ஓடி வருவதைப் போலவும் அம்மாவிடமிருந்து அப்பா விடம் ஓடிவருவதைப் போலவும், அம்மா தூரத்தில் நிற்பதுபோல வைத்துக்கொண்டு நடன இயக்குநர் ஏ.கே.சோப்ராவை வைத்து மேனேஜ் செய்து அந்தப் பாட்டை படமாக்கி முடித்தோம். சினிமா எடுக்கும்போது இப்படியெல்லாம் பல பிரச்சினைகள் வரும். சமாளிக்க வேண்டும்.

சென்னை வந்ததும் பிரமிளாவையும், குழந்தையும் வைத்து தோட்டக்கலை பூங்காவில் பெங்களூருக்கு மேட்ச் செய்து படப்பிடிப்பை எடுத்தோம்.

எடிட்டர் விட்டல் சார் பெங்களூரில் சிவாஜியையும் குழந்தையையும் வைத்து எடுத்த காட்சியையும், சென்னையில் பிரமிளாவையும் குழந்தையையும் வைத்து எடுத்த காட்சியையும் சிறந்த முறையில் எடிட் செய்து பாட்டை முழுமையாக்கினார்.

ஒருநாள் அண்ணன் சிவாஜிகணேசன் அவர்கள் ஷூட்டிங் வந்திருந்தபோது, ‘ ‘‘முத்து… பெங்களூர்ல போய் ஒரு பாட்டு எடுத்தோமே. அதை பிரமிளாவோடு மேட்ச் செய்து ஷூட்டிங் பண்ணிட்டியா? அதை நான் பார்க்கணும்’’ என்றார். அவரை அழைத்துக்கொண்டு போய் அந்தப் பாட்டை போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்த சிவாஜி, ‘‘அடப்பாவி! என்னமா மேட்ச் செய்திருக்கே. ஹீரோ, ஹீரோயின் பாடுற டூயட் பாட்டைக் கூட தனித்தனியா எடுத்து நீ மேட்ச் பண்ணிடுவே’’ என்று பாராட்டினார்.

‘கவரி மான்’ படத்தில் ஒரு திருப்பமான காட்சி. சிவாஜி தன் மனைவி பிரமிளாவிடம் சொல்லிக்கொண்டு வெளிநாடு புறப்பட்டுச் செல்வார். விமான நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய அந்த விமானம் பழுது காரணமாக கேன்சல் செய்யப்படுவதாக அறிவிக்கப்படும். உடனே, சிவாஜி அங்கிருந்து வீட்டுக்குத் திரும்புவார். கதவை தட்டினால் வேலைக்காரப் பெண் கதவைத் திறப்பார். மனைவி (பிரமிளா) எங்கே என்று கேட்க, வேலைக்காரப் பெண் பதில் சொல்லாமல் பதற்றத்துடன் ஓடிவிடுவார்.

அப்போது மாடியில் பெட் ரூமிலிருந்து பிரமிளாவும், ஓர் ஆணும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்கும். சந்தேகத்துடன் மாடிப் படிகளில் ஏறுவார் சிவாஜி. பிரமிளாவின் சிரிப்புச் சத்தமும் ஆணின் சிரிப்புச் சத்தமும் அதிகமாகிக் கொண்டேபோகும். ஒவ்வொரு படி ஏறும்போதும் சிவாஜியின் கோபம் மேலும் மேலும் அதிகரிக்கும். பெட்ரூம் கதவருகே வந்து கதவை திறந்தால் பிரமிளாவுடன், ரவிச்சந்திரன் விளையாடிக்கொண்டிருப்பார். அதை பார்த்ததும் சிவாஜியின் கோபம் உச்சத்தைத் தொடும். ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிடுவார். பிரமிளா திகைத்துப் போய் நிற்பார்.

இந்தக் காட்சிகளை எடுத்ததும் சிவாஜி அவர்களிடம் ‘‘உங்கள் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டுங்கள். கேமரா உங்கள் முகத்தை நோக்கி வரும். உங்கள் முகபாவங்களில் கொலை வெறி தெரிய வேண்டும்’’ என்று விவரித்தேன்.

சிவாஜி ‘‘மனைவி இப்படி ஒரு தவறு செய்யும்போது கணவனுக்கு ஆத்திரம் வரும்தான். நான் ரெடி’’ என்றார். ஷாட் ஆரம்பித்தோம். சிவாஜியின் முகத்தை நோக்கி கேமரா சென்றது. அவருடைய கன்னம், நெற்றி, புருவம் எல்லாம் துடித் தன. வெள்ளையாக இருந்த அவருடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிவப் பாக மாறி… விழி பிதுங்கும் அளவுக்கு நடித்தார். அதைப் பார்த்து நாங்கள் அசந்துபோய்விட்டோம். அதுதான் நடிகர் திலகத்தின் நடிப்பு!

அந்தக் கோப வெறியோடு அருகில் இருந்த ஃப்ளவர் வாஸை எடுத்து பிரமிளாவின் தலையில் அடிப்பார் சிவாஜி. பிரமிளா மயங்கி கீழே விழுந்து உயிரைவிடுவார். அவர்களுடைய ஏழு வயது மகள் (சின்ன தேவி) இதனைப் பார்த்துவிடுவார். அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டார் என்று அதிர்ச்சி அடையும் அந்தக் குழந்தை. அன்று முதல் அப்பா மீது மகளுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

கூட்டுக் குடும்பமாக வாழும் அந்த வீட்டில் ஒரு பெரிய விரிசல் விழுகிறது. மனைவி தவறான நடத்தை காரணமாகத்தான் இவ்வளவும் நடந்தது என்பது தெரிந்தால், குடும்ப கவுரவம் கெட்டுப்போகுமே என்று யாரிடமும் சொல்லாமல் சிவாஜிகணேசன் அதை மறைத்துவிடுவார். சிவாஜியின் அண் ணன் (மேஜர் சுந்தர்ராஜன்), தந்தை (கொல்கத்தா விஸ்வநாதன்) எல்லோரும் கூடி மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டில் அந்த சம்பவத்துக்குப் பிறகு கலகலப்பு போய் சலசலப்பு ஏற்படுகிறது. சிவாஜியின் அப்பா கொல்கத்தா விஸ்வநாதன் ‘தன் மகன் காரணம் இல்லாமல் இப்படி செய்திருக்க மாட்டான்’ என்கிற தனது நினைப்பை டைரியில் எழுதி வைப்பார்.

மகள் வளர்ந்த பிறகும் சிவாஜியைக் ‘கொலைகார அப்பா’வாகத்தான் பார்ப்பார். வளர்ந்த மகளாக தேவி நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவி இந்தியாவின் சிறந்த நட்சத்திரமாக வளர்ந்து தனது நடிப்பின் மூலம் பெயர் வாங்கியிருந்தார்.

இந்தச் சூழலில் மகள் தேவிக்குப் பிறந்த நாள் வரும். மகளின் பிறந்த நாளுக்காக ஆசை ஆசையாக பட்டுப் புடவையும், பரிசுகளும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா சிவாஜி. தான் கொடுத்தால் வாங்க மாட் டார் என்பதற்காக, மாடியில் இருக் கும் மகளிடம் அந்தப் பொருட்களைக் கொடுக்குமாறு கொடுத்தனுப்புவார்.

தேவி அந்தப் பரிசுப் பொருளை வாங்கி கோபத்தோடு குப்பைத் தொட்டியில் எறிவார். அதைக் கண்டு சிவாஜி அதிர்ச்சி அடைவார். அந்தக் காட்சியைப் பார்த்த சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-30-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7760307.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 31: ‘கவரிமான்’

எஸ்பி.முத்துராமன்

 
 
siva_2592592f.jpg
 

‘கவரிமான்’ ரிலீஸான அன்று நானும் ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல் உள்ளிட்ட படக் குழுவினர்களும் சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கில் படம் பார்க்கச் சென்றோம். ஒரு படம் ரிலீஸானதும் அதை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கச் சொல்வார் மெய்யப்ப செட்டியார். ரிலீஸாகும் படத்தில் ஒரு சில இடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனால், அடுத்து அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய் யும்போது அந்தக் காட்சியைத் திருத்த வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக, ரிலீ ஸான படங்களை தியேட்டரில் போய் பார்த்து ரிப்போர்ட் எழுதச் சொல்வார். அதை நாங்கள் இன்றும் பின்பற்று கிறோம்.

‘கவரிமான்’ படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து சாந்தி திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தோம். சிவாஜி கணேசன் கொடுத்தப் பரிசுப் பொருளை தேவி கோபத்தோடு மாடியில் இருந்து குப்பைத் தொட்டியில் வீசுவதை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

‘‘ஏய்… உனக்கு என்ன துணிச்சல். எங்க அண்ணன் கொடுத்தப் பரிசையே தூக்கி வீசிறியா?’’ என்று ரசிகர்கள் கடும் கோபத்தோடு ஆரவாரம் செய்தனர். இதை பார்த்த சாந்தி திரையரங்க நிர்வாகி வேணுகோபால் (சிவாஜி கணேசனின் மாப்பிள்ளை) உடனே எங்களை திரையரங்கத்தின் அலுவலகத் துக்குள் வருமாறு அழைத்தார். ‘‘இருக்கட்டும் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம்’’ என்று கூறினேன். அவர், ‘‘தயவு செய்து வாங்க. சிவாஜி அவமானமானப்படுவதை அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம்’’ என்று எங்களை வலுக் கட்டாயமாக அறைக்கு அழைத்துச்சென் றார். அப்போது ஒரு விஷயத்தை உணர்ந் தேன். சிவாஜியின் ரசிகர்கள் அவரை அந்தப் படத்தில் வரும் ஒரு கதாபாத்திர மாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையான சிவாஜிகணேசனாகவே பார்க்கிறார்கள். எப்போதுமே அவரை இப்படித்தான் பார்க்க விரும்பும் ரசிகர் களால் அந்தக் கதாபாத்திரத்தை ரசிக்க முடியவில்லை. கதாநாயகர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட இமேஜ் இருக் கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்க வேண்டும் என்பதை நான் அன்றைக்கு உணர்ந்தேன்.

படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கும் இடத்தில் தேவி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வார். உண்மையாக பழகுகிறார் என்று தேவி நினைத்து பழகிவந்த சேகர் திடீரென தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வார். அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் தேவி ஒரு கட்டத்தில் சேகரை கத்தியால் குத்திவிடுவார். ரத்தம் சொட்ட சொட்ட அந்த இடத்தில் அவர் துடி துடித்து இறந்துவிடுவார். அதை பார்த்து விடும் சிவாஜிகணேசன், தேவியைப் பார்த்து ‘‘மானத்தை காப்பற்ற வேண்டிய சூழல் வந்தால் இப்படித்தான் செய்ய வேண்டி வரும். அன்னைக்கு நடந்த கொலையும் இப்படித்தான். குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற் காக நான் கொலை செய்தேன். கவரிமான் தன் உடலில் இருந்து ஒரு முடியை இழந்தாலும் உயிரை விட்டுவிடும். நீ வாழ வேண்டிய பொண்ணு. நான் ஏற்கெனவே ஒரு கொலை செய்துவிட்டு பழி சுமப்பவன்!’’ என்று கூறி மகள் தேவி கையில் இருக்கும் கத்தியை சிவாஜிகணேசன் வாங்கிக்கொண்டு பழியை தான் ஏற்பார்.

அப்போதுதான் தேவி முதல் தடவையாக சிவாஜியை ‘‘அப்பா’’ என்று அழைப்பார். தேவி சின்ன வயதாக இருக்கும்போது அம்மா பிரமிளா, அப்பா சிவாஜியோடும் மகிழ்ச்சி பொங்க படமாக்கப்பட்ட ‘பூப்போல உன் புன்னகையில்’ என்ற பாட்டின் இசையைப் பின்னணி இசையாக அந்த இடத்தில் இழையவிட்டிருப்பார் இளையராஜா. அதுதான் இளையராஜா!

படத்தில் சிவாஜிகணேசன் தன்னை கொலைக்காரராக காட்டிக்கொள்ளும் இந்தக் காட்சியையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தனித்திறமை யான நடிப்பால் ரசிகர்களிடம் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அண்ணன் சிவாஜி கணேசன். நடை, உடை, பாவனை அனைத்திலும் ஒருவித மிடுக்கான தோற் றத்தையே அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பினார்கள். திரையில் அவரது இமேஜ் எந்த ஓர் இடத்திலும் குறையக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந்தனர். ரசிகர்களுடைய எதிர்பார்ப் புக்கு மாறாக சிவாஜிகணேசன் ‘கவரி மான்’ திரைப்படத்தில் நடித்ததால் அவரது ரசிகர்களால் அதை ஜீரணிக்க முடிய வில்லை. பெரிய அளவில் வெற்றிபெற வேண்டிய படம் பெயரை மட்டும் வாங்கித் தந்தது.

அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து நான் இயக்கிய இரண்டாவது படம் ‘வெற்றிக்கு ஒருவன்’. இந்தப் படத்தை பாஸ்கர் தயாரித்தார். படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடி பிரியா. இவர் நடிப்பிலும் சுட்டி, வாழ்க்கையிலும் சுட்டி. ‘வெற்றிக்கு ஒருவன்’ படப்பிடிப் பில் சரியான திட்டமிடல் இல்லாததால் படத்தை தொடங்கியதில் இருந்தே சிக்கல்தான். படப்பிடிப்பு தாமதத்தால் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் முன்னுக் குப் பின் மாறியது. சிவாஜி இருந்தால் பிரியா இருக்க மாட்டார். பிரியா இருந்தால் சிவாஜியால் இருக்க முடி யாத சூழல். இப்படி பல காரணங்களால் படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்து முடிக்க முடியவில்லை. எப்பவுமே ஒரு படத்தை முறையே திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். அது தவறியதால் படமும் தோல்விப் படமானது என்பதை இங்கே வருத்தத்தோடு நான் பதிவு செய்கிறேன்.

எப்பவுமே நான் சொல்வது ஒரு படம் வெற்றிப் பெற்றால் அது என் குழு வினருக்கு கிடைத்த வெற்றி. அது தோல்வி அடைந்தால் அதனை இயக்குநர் ஒருவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படத்துக்கு ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல் படுபவர் இயக்குநர்தான். அவர்தான் எல்லோரையும் சரியாக அழைத்துச் செல்ல வேண்டும். அது தவறியதால்தான் ‘வெற்றிக்கு ஒருவன்’ படம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை ஒரு இயக்குநராக நான் ஏற்றுக்கொண்டேன். அண்ணன் சிவாஜியை வைத்து தோல் விப் படம் கொடுத்துவிட்டோமே என்ற மன வேதனை ஒருவித வலியை ஏற் படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மீண் டும் அவரையே வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிவாஜி அவர்களை வைத்து இயக்கும் அந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் யார்?

- இன்னும் படம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-31-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7787887.ece

 

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்!

எஸ்பி.முத்துராமன்

 
 
spm_2599787f.jpg
 

அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து மூன்றாவது முறை யாக படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்தத் தயாரிப் பாளர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பசாமி. அந்தப் படம் ‘ரிஷிமூலம்’. சிவாஜிகணேசனுடன் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் உள் ளிட்டவர்கள் இதில் நடித்தார்கள். இயக்குநர் மகேந்திரன் சார் படத்துக்கு கதை - வசனம் எழுதினார்.

என்னுடன் கொண்ட நட்பு முறையில் நான் இயக்கிய கமல், ரஜினி நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’, கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’, பார்த்திபன் நடித்த ‘தையல்காரன்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதி தந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு ‘முள்ளும் மலரும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்தவர். சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர். நான் இயக்கிய வெற்றிப் படங்களில் அவருடைய பங்களிப்பும் உண்டு.

இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ என்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அப் போது கே.பாலசந்தர் சார் ரஜினிகாந்திடம் ‘‘உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?’’ என்று கேட்டார். ரஜினி சொன்ன பதில்: இயக்குநர் மகேந்திரன். இது மகேந்திர னுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு.

கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாததால் ஏற் படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம்தான் ‘ரிஷி மூலம்’. கணவன்- மனைவி கதாபாத் திரங்களில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா வும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகன். படத்தில் கே.ஆர்.விஜயா தன் பிடிவாதத்தால் கணவனிடம் கோபித் துக்கொண்டு 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்வார்.

அத்தனை ஆண்டுகால இடைவெளிக் குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தை செண்டிமெண்டாக நெகிழ்ச்சியோடு படமாக்க திட்டமிட் டோம். அண்ணன் சிவாஜியிடம், ‘‘நீங்கள் இருவரும் சந்திக்கும்போது வசனமே இருக்காது. முக பாவனையை மட்டும் குளோஸ் அப் காட்சிகளில் எடுக்கப் போகி றேன். ஒருவரது கண்களை இன்னொரு வரது கண்கள் பார்க்க வேண்டும். இருவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் எடுப்பேன். நீங்கள் சொல்ல வரும்போது வாய் பேசத் துடிக்கும். விஜயா அவர்களின் காதுகள் கேட்க காத்திருக்கும். உங்கள் முகத்தில் பேசும் பாவனை, விஜயா முகத்தில் பேசுங்கள் என்ற பாவனை… இப்படி குளோஸ்அப் பாவனைகளில் காட்சியைச் சொன் னேன். சிவாஜிக்கும், புன்னகை அரசிக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! கண்கள் பேசின… உதடுகள் துடித்தன… முக பாவத்திலேயே நடித் தார்கள். வசனமே இல்லாமல் மூன்று, நான்கு நிமிடங்கள் நகரும் அந்தக் காட்சி பாராட்டுகளைப் பெற்றது.

சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா இருவரும் சமாதானம் ஆன பிறகு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இளையராஜாவின் துள்ளல் இசை; ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்… சிவாஜியும், விஜயாவும் வெளுத்துக் கட்டினார்கள். அவர்களைப் போல காதலர்கள், திருமண தம்பதிகள்கூட அப்படி ஓர் உணர்வை காட்ட முடியாது.

அந்தப் பாடலை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதத்தின் ஊரான கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் எடுத்தோம். பசுமை சூழ்ந்த அந்த மலைப் பகுதிகளில் படமாக்க திட்ட மிட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இடங்களைத் தேர்வு செய்தோம். அதை சிவாஜி அவர்களிடம் சொன்னபோது ‘‘முத்து… அண்ணனை ரொம்ப அலைய விடாதீங்க. நான் என்ன உங்கள மாதிரி ஓடி ஆடுறவனா? மலை மேல எல்லாம் ஏறாம கீழேயே எடுத்து முடிப்பா…’’ என்றார்.

அந்தப் பாடலை படமாக்க தொடங் கினோம். முதலில் கீழே இரண்டு, மூன்று ஷாட்களை எடுப்பது, அப்படியே 10 அடி தள்ளிப்போய் அங்கே சில ஷாட்களை எடுப்போம். இந்த இடத்தில், அந்த இடத் தில் என்று மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போய் மலை ஏறிய களைப்பே தெரியாமல் மலை உச்சிக்கு அண்ணனை அழைத்துப் போய்விட்டோம். மலை உச்சியில் இருந்து அந்த இடத்தை பார்த் தவர், ‘‘அருமையான இடம். எப்படியோ என்னை மலை உச்சிக்குக் கொண்டு வந்து, நீ எடுக்க நினைச்ச காட்சியை எடுத்து சாதிச்சுட்டே’’ என்றார். இதுதான் கதாநாயகன் போக்கில் போய் சாதித்துக்கொள்வது என்பதாகும்.

அப்பா, அம்மா, மகன் சென்டிமெண்ட் காட்சிகள், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சக்ரவர்த்தி நடிப்பு, மகேந்திரன் சார் வசனம், இளையராஜா இசை, கவியரசர் பாடல் இப்படி எல்லாம் இணைந்து அந்தப் படம் வெற்றி அடைந்தது. படத்தின் 100-வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினோம். விழா மேடையில் தயாரிப்பாளர் கருப்பசாமி, அண்ணன் சிவாஜிக்கு வைர மோதிரம் அணிவித்தார். ‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டே’’ என்ற தோரணையில் அண்ணன் சிவாஜி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையே எனக்கு வாழ்த்தாக இருந்தது.

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கருப்பசாமியைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். சரியாக திட்டமிட்டு ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். படத்தில் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்த உடனே என்னிடம் வந்து, ‘‘இதுவரைக்கும் இத்தனை லட்சம் செலவு’’ என்று எழுத்துபூர்வமான கணக்கை காட்டுவார். ‘‘ஒவ்வொரு செட்யூலுக்கும் என்ன செலவாகிறது என்பது ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டும்’’ என்பார். இது அவசியமான ஒன்று. சினிமா எடுக்கும்போது செலவை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு எடுத்தால் நிச்சயம் நஷ்டம் வராது. நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களும் எடுத்தோம், பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தோம். எல்லாவற்றுக்கும் சரியான திட்டமிடல் இருந்ததால் படம் பட்ஜெட்டுகளுக்குத் தகுந்த மாதிரி எடுக்க முடிந்தது.

நடிப்புக்கு இலக்கணமான அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு தன் வரவு- செலவு பற்றி ஒன்றும் தெரியாது. நடிப்பு… நடிப்பு… நடிப்பு… இதுதான் அவரது சுவாசம். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது சகோதரர் வி.சி.சண்முகம்தான் முறையே சேமித்து முதலீடு செய்து வைத்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் சிவாஜிகணேசன் குடும் பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி, துஷ்யந்த், விக்ரம்பிரபு, ஹரிசண்முகம் எல்லோரும் ஒற்றுமை யுடன் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. கூட்டுக்குடும்ப பெருமையை உணர சிவாஜி குடும்பத்தைப் பாருங்கள்.

இனி, நீங்கள் ஆர்வத்தோடு எதிர் பார்க்கும் கட்டத்துக்கு வரவிருக்கிறேன். என் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி நடிக்க வந்தார்? அவரை வைத்து 25 படங்கள் இயக்கியது எப்படி? உலகநாயகனுக்கு 10 படங்கள் இயக் கிய அனுபவங்கள் என்னென்ன? அவர்கள் இருவருக்கும் எனக்கும் உள்ள உறவு முறைகள்? நான் இயக்கிய 45 படங் களுக்கு இசையமைத்த இசையமைப் பாளர் இளையராஜாவின் இணைப்பு என்ன? பஞ்சு அருணாச்சலத்தின் பங்கு? என் தாய் வீடான ஏவி.எம்மில் எனக்கு கிடைத்த மரியாதை என்ன… என்பதைப் பற்றியெல்லாம் சுவையாக சொல்லப் போகிறேன்.

படிக்கத் தயாராகுங்கள்.

 

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-32-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7813316.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 33: எங்க வீட்டுப் பிள்ளை!

எஸ்பி. முத்துராமன்

 
 
 
  • spm1_2608450g.jpg
     
  • spm_2608451g.jpg
     

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். அந்தத் திருப்பம் உயர்த்தியும் விடும், சமயத்தில் கீழே தள்ளியும் விடும். அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டது. என் தாய் வீடான ஏவி.எம் ஸ்டுடியோவில் எடிட்டிங் அப்ரண்டீஸ் ஆக சேர்ந்து உதவி எடிட்டராகி, உதவி இயக்குநராகி, துணை இயக்குநராகி 16 ஆண்டுகாலம் வேலை பார்த்தேன். என் குடும்பத்தினருடன் இருந்த நேரத்தைவிட ஏவி.எம் ஸ்டுடியோவில்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.

அப்படி ஒரு காலகட்டத்தில் சித்ராலயா கோபுவின் ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தை ஏவி.எம். செட்டியார் அவர்கள் பார்த்தார்கள். சிறப்பான அந்த நாடகத்தை வாங்கி படமாக எடுக்க முயற்சித்தார்கள். நாடகத்துக்கு கதை, வசனம் எழுதிய சித்ராலயா கோபுவை வைத்தே, படத்தையும் இயக்க முடிவெடுக்கப்பட்டு அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

படத்தை எடுக்கும் பொறுப்பை ஏவி.எம். செட்டியார் அவர்கள் தன் மூத்த மகன் முருகன் சாரிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் முருகன் சார் என்னை அழைத்து ‘‘இந்தப் படத்தில் சித்ராலயா கோபுவுக்கு உதவி இயக்குநராக பணி புரியுங்கள்’’ என்று கூறினார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நானும், கோபுவும் சமகாலத்தில் வேலை பார்த்த வர்கள். நான் சீனியர் இயக்குநர்கள் பலரிடமும் உதவியாளராக பணிபுரிந் திருக்கிறேன். ஆனால், கோபு அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முருகன் சார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினேன். அடுத்த நாள் முழுவதும் யோசித்துப் பார்த்தேன். எப்போதும் முழு ஈடுபாட்டு டன் வேலை பார்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருப்பவன். ஆனால், இந்தப் படத்தில் என்னால் அப்படி செய்ய முடியுமா என்ற சந்தேகம் வந்தது.

அடுத்த நாள் திங்கள்கிழமை. ஏவி.எம்.செட்டியார் அவர்களுக்குப் பணிவுடன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் ‘‘இவ்வளவு காலம் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை வைத்திருந் ததற்கு நன்றி. வெளியே சென்று படம் இயக்க அனுமதி கொடுக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தேன். அதை செட்டியார் அவர்கள் படித்துவிட்டு, ‘‘அவனுக்கு ரொம்ப நாட்களாக வாய்ப்பு கொடுக்கணும்னு இருந்தோம். அதைக் கொடுக்கலை.

வெளியே படம் பண்ணப் போறேன்னு சொல்கிறான். அவனுக்கு முறையே என்னென்ன செய்ய வேண்டுமோ செய்து முழு திருப்தியோடு அவனை அனுப்புங்கள்’’ என்று மகன்களை அழைத்து சொன்னார். ஸ்டுடியோவில் எல்லோரிடமும் பிரியா விடை பெற்று, கடைசியாக சரவணன் சாரைப் பார்க்கப் போனேன்.

‘நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் நான் அப்போ தும், இப்போதும், எப்போதும் சொல்கிற ஒரே வார்த்தை ‘ஏவி.எம்.சரவணன் அவர்களை’ என்பதுதான். அவர்தான் என் வழிகாட்டி. அவரைப் பார்த்துதான் வெள்ளை உடை அணிந்தேன். லைட் பாய் தொடங்கி தொழிலபதிபர் வரைக்கும் யார் வீட்டு விஷேசம் என்றாலும் கண்டிப்பாக வாழ்த்துச் சொல்ல சென்று வர வேண்டும் என்று அவரிடம் கற்றுக் கொண்டுதான் இன்றளவும் பின்பற்றி வருகிறேன்.

பத்திரிகையாளர்களை, ஊடக நண்பர்களை அவர் மதிக்கும் பாங்கை பார்த்து மதித்து நடக்கிறேன். கோபத்தை தவிர்க்கிறேன். அனைவரிடமும் அன்பு காட்டுகிறேன். இப்படி நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருவரும் அன்று சந்திக்கும்போது ஒருவித ‘சோகம்’. இருவர் கண்களிலும் கண்ணீர்.

‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பின்போது, ‘‘ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமராவில் என்ன லென்ஸ் போடுவது என்பதை கேமரா மூலம் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயம் டைரக்டர் வியூ ஃபைண்டர் வந்தது. இதில் பார்த்தால்போதும் கேமராவில் பார்க்க வேண்டியதில்லை. அதனை வாங்குமாறு இயக்குநர் ஏ.சி.திருலோக சந்தர் அவர்கள் சரவணன் சாரிடம் கூறினார்கள். சரவணன் சார் என்னை அந்தக் கடைக்கு அனுப்பினார். கடையில் இரண்டு வியூ ஃபைண்டர் மட்டுமே இருந் தன. சரவணன் சாரிடம் சொன்னேன். ‘‘அந்த இரண்டையுமே வாங்கி வந்து விடுங்கள்’’ என்றார். வாங்கி வந்தேன்.

அந்த இரண்டில் ஒன்றை இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரிடம் சரவணன் சார் கொடுத்தார். இன்னொன்றை அவரே வைத்துக்கொண்டார். ‘‘நீங்கள் என்றைக்காவது ஒருநாள் இயக்குநராக வருவீங்க என்று எனக்குத் தெரியும்’’ என்று கூறி எனக்கு அந்த வியூ ஃபைண்டரை பரிசாக அளித்தார். அத்தனை ஆண்டுகாலம் அதை அவர் எனக்காக பாதுகாத்து வைத்திருந்தார் என்று நினைக்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் அந்த வியூ ஃபைண்டரைப் பயன்படுத்தினேன். என் லெட்டர் பேடு, முகவரி அட்டை அனைத்திலும் அந்த வியூ ஃபைண்டரைத் தான் முத்திரையாக வைத்திருக்கிறேன். அந்த அடையாளங்கள்தான் சரவணன் சாருக்கு நான் தெரிவிக்கும் நன்றி. எனக்கு சரவணன் சார்தான் பலம்!

அந்தச் சூழலில்தான் வி.சி.குகநாதன் அவர்கள் ‘‘நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வைத்திருக்கிறேன். அந்த ஸ்கிரிப்ட்டை நீங்கள் இயக்குங்கள்’’ என்று வாய்ப்பளித்தார். அவர் எனக்குக் காலத்தினாற் செய்த உதவி அது. அந்தப் படம் ‘கனிமுத்து பாப்பா’. இந்தப் படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி, ஜெயா, குழந்தை நட்சத்திரமாக தேவி நடித்தார்கள். இசையமைப்பாள ராக ராஜு. என் முதல் ஐந்து படங் களுக்குப் பாடல்களை பூவை செங்குட்டு வன்தான் எழுதினார்.

நான் பெரிய படங்களை இயக்குவதற்குச் சென்ற காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. அதில் எனக்கு இப்போதும் வருத்தம்தான். அண்ணா சொன்னதுபோல் சூழ்நிலைக் கைதியாக ஆனதால் அவரைத் தொடர்ந்து பாடல் எழுத வைக்க முடியாமல் போனது. ‘கனிமுத்து பாப்பா’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததோடு வெற்றிப் படமாகவும் பெயர் பெற்றது.

சுப்ரமணிய ரெட்டியார்தான் ‘கனி முத்து பாப்பா’ படத்துக்கு நிதி உதவி செய்தார். அவரைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். படங்களைத் தயாரிப் பதற்கு முன் படப்பிடிப்பு நடக்கும் சினிமா ஷூட்டிங்களுக்கு சென்று என்னென்ன செலவுகள் எப்படி ஆகிறது என்பதை கற்றுக்கொண்டவர். கிட்டத்தட்ட 6 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களையே சுற்றி சுற்றி வந்து எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சினிமா தொழிலுக்கு வந்தார்.

என் இரண்டாவது படம் ‘பெத்த மனம் பித்து’. அது பெண்கள் படம். திரையரங்கில் காலை 11 மணி காட்சிக்கு 75 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் மத்தியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். நடிகையர் திலகம் சாவித்ரியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமா? 100 நாட்கள் ஓடி விழா கொண்டாடப்பட்டது.

ஏவி.எம்.செட்டியார் அவர்கள் தலைமையில், கலைஞர் கருணாநிதி விருது வழங்க 100-வது நாள். விழா மேடையில் ஏவி.எம்.செட்டியார் அவர்கள், ‘‘இந்தப் படத்தை இயக்கிய முத்துராமன் எங்க வீட்டுப் பிள்ளை’’ என்று பாராட்டினார். அடுத்து பேசிய கலைஞர் அவர்கள், ‘‘என்னோட தொண்டருக்கும் தொண்டன் அண்ணன் இராம.சுப்பையாவின் பையன் முத்துராமன். அவர் எங்களுக்குத்தான் முதல் சொந்தம்’’ என்றார். அன்றைக்கு இருவரும் என்னை உரிமை கொண்டாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. படம் 100 நாள் ஓடியதால் எங்கள் குழுவுக்குத் திரையுலகில் நல்ல குழு என்ற பெயர் வந்தது. அடுத்த கட்டம் என்ன?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-33-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/article7841083.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 34: காதல் பூக்கும் தருணம்!

எஸ்பி.முத்துராமன்

 
 
 
  • spm_2624733g.jpg
     
  • spm1_2624732g.jpg
     

‘பெத்த மனம் பித்து’ படம் வெற் றிக்குப் பிறகு எங்கள் குழுவின் மேல் நம்பிக்கை வைத்து, அடுத்தடுத்து படம் எடுக்க அட்வான்ஸ் கொடுக்க பலர் முன் வந்தார்கள். நல்ல கதை, நல்ல கம்பெனி என்று பார்த்து இறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். இந்நிலையில் ‘விக்டரி மூவிஸ்’ பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த விஜய பாஸ்கர் படம் எடுக்க ஆசையோடு எங்களை அணுகி ‘‘என் கையில் 25 ஆயிரம் ரூபாய் உள்ளது. தொழிலும் தெரியும், எல்லா விநியோகஸ்தர்களும் நல்ல பழக்கம், படம் தொடங்குவோம்’’ என்று சொல்லி அவர் பெயரிலேயே ‘விஜய பாஸ்கர் பிலிம்ஸ்’ என்ற கம்பெனியை ஆரம்பித்தார்.

அப்போது பஞ்சு அருணாசலம் நகைச் சுவை கதைகளை எழுதி நல்ல பெயர் பெற்று வந்தார். கவியரசு கண்ணதாச னின் அண்ணன் கண்ணப்பனின் மக னான பஞ்சு அருணாசலம், கண்ணதாச னிடம் உதவியாளராக இருந்துவந்தார். பின்னர் ஒருகட்டத்தில் படங்களுக்கு வசனம் எழுதச் சென்றார். அவர் எழுதிய முதல் மூன்று படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. அதனால் ‘பாதி படம் பஞ்சு அருணாச்சலம்’ என்றே அவருக்கு பெயர். அதன் பிறகு நகைச்சுவை கதை களுக்குத் திரைக்கதை எழுதி வெற்றி பெற்றார். சினிமா உலகில் தோல்வி களைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து போராடி வெற்றிபெற்றவர் பஞ்சு அருணாசலம்.

அவர் எங்களுக்கு முதன்முதலில் எழுதி கொடுத்த படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘எங்கம்மா சபதம்’. இதில் முத்து ராமன், சிவகுமார், ஜெயசித்ரா, விதுபாலா, மனோரமா, அசோகன் நடித் தார்கள். இசை விஜய பாஸ்கர். கன்னடத் திரை இசையுலகில் புகழ் பெற்றிருந்த அவரை ‘கன்னடத்து எம்.எஸ்.வி’ என்றே அழைப்பார்கள். அவருடைய இசையில் ‘அன்பு மேகமே இங்கு ஓடி வா’என்ற அருமையான பாடலுக்கு, சென்னை கடற்கரையில் இரவு 9 மணி முதல் 2 மணி வரையில் சிவகுமார், ஜெயசித்ரா இருவரையும் நடிக்க வைத்து படமாக் கினோம். சிவகுமாருக்கு அப்போதுதான் திருமணம் முடிந்திருந்தது. அவர் என் அருகில் வந்து ‘‘சார் இந்த ராத்திரி நேரத் துல படப்பிடிப்பு வைக்கிறீங்களே’’ என்றார். ‘‘மனைவியைக் காக்க வைப்பதிலும் ஓர் இன்பம் இருக்கு’ என்று சொல்லி நாங்கள் அவரை கிண்டலடித்தோம்.

‘எங்கம்மா சபதம்’ நகைச்சுவை பட மாக உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது. அதே கதை மீண்டும் ‘வனஜா கிரிஜா’ என்ற பெயரில் எடுக்கப் பட்டதில் இருந்து பஞ்சு அருணாசலத் தின் கதை ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம்.

‘எதையும் பெரிதாக பொருட்படுத் தாத இளம் வயதில் காதலில் இறங்கும் போது, அது ஆத்மார்த்தமான காதலாக மலராமல், டைம் பாஸ் காதலாக முளைத் தால் அதன் விளைவு என்னவாகும்?’ என்பதைப் பின்னணியைக் கொண்ட கதைதான் ‘மயங்குகிறாள் ஒரு மாது’. எங்களை ‘கமர்ஷியல் இயக்குநர்’ என்று சிலர் சொல்கிறார்கள். கருத்துள்ள, கதை அம்சம் கொண்ட படங்களை நாங்களும் எடுத்துள்ளோம் என்பதற்கு 1975-ல் எடுக்கப்பட்ட ‘மயங்குகிறாள் ஒரு மாது’ ஒரு சாட்சி!

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ‘‘சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை முழு படத்துக்கும், குறிப்பிட்ட தொகைக்கு வாடகைக்குத் தரத் தயாராக இருக் கிறார்கள். அங்கு படமெடுக்க முன்வந் தால் ராமப்பாவிடம் சொல்லி, முழு உதவியும் வாங்கித் தருகிறேன்’’ என்றார். தயாரிப்பாளர் விஜய பாஸ்கருக்கு ஒரே கொண்டாட்டம். அங்கு போய் ‘மயங்கு கிறாள் ஒரு மாது’ படப்பிடிப்பைத் தொடங்கினோம். படப்பிடிப்புக்கான அத்தனை வசதிகளையும் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் செய்து வைத்திருந்தார். அப்போது சென்னை யில் மின் தடை (கரண்ட் கட்) இருந் தது. ஆனால், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மின் தடையே இல்லை. காரணம், ஸ்டுடியோ முழுவதும் ஜெனரேட்டர் வசதி செய்திருந்தார் சுந்தரம். அவரெல்லாம் சினிமாவின் தீர்க்கதரிசி!

‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் முத்துராமன், விஜயகுமார், சுஜாதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெய லட்சுமி ஆகியோர் நடித்தனர். சுஜாதா ஒரு கல்லூரி மாணவி. அவர் அணிய வேண்டிய உடைகளை மேக்கப் அறை யில் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார். ‘‘மாடர்ன் டிரெஸ் எனக்கு வேண் டாம். சேலை கட்டிக் கொள்கிறேனே’’ என்றார். ‘‘அது கவர்ச்சி உடை இல்லை. கல்லூரிக்கு அணிந்து செல்கிற சுடிதார் போன்ற உடைதான்’’ என்று எவ்வளவோ சொல்லி பார்த்தும், அவர் பிடிவாதமாக மறுத்தார். சுஜாதாவின் அறைக்கு அருகில் இருந்த குணச்சித்திர நடிகை காந்திமதியிடம் ‘‘என்ன செய் வீர்களோ தெரியாது. சுஜாதாவிடம் கதாபாத்திரத்தை எடுத்துக் கூறி, அந்த உடையை அணிவித்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன். அடுத்த சில மணித் துளிகளில் சுடிதார் உடையில் வந்து நின்றார் சுஜாதா. சாமர்த்தியமான பேச்சிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்தார் காந்திமதி.

படத்தில் விஜயகுமாருக்கும் சுஜாதா வுக்கும் காதல் பூக்கும். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தன் வீட்டுக்கு சுஜாதாவை அழைத்து வருவார். இனிமையான தனிமை காதலர்களை எல்லை மீற வைத்துவிடும். அதன் விளைவு, கரு கலைப்பு வரைக்கும் சென்றுவிடும். அப்போது சுஜாதாவுக்கு சிகிச்சை செய்த டாக்டர் எம்.என்.ராஜம், ‘‘நடந்ததை மறந்து விடு. இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. இனி, அடுத்து உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்’’ என்பார் சுஜாதாவிடம்.

கதாநாயகன் முத்துராமன் வீட்டில் இருந்து சுஜாதாவைப் பெண் பார்க்க வருவார்கள். சுஜாதாவுக்கு பேரதிர்ச்சி. டாக்டர் எம்.என்.ராஜத்தின் தம்பிதான் மாப்பிள்ளை முத்துராமன். எம்.என்.ராஜம் சுஜாதாவை வீட்டுக்குள்ளே தனியாக அழைத்துச் சென்று, ‘‘அன்று சொன்னதைத்தான் இப்போதும் சொல் கிறேன். என் தம்பியைத் திருமணம் செய்துகொண்டு, நல்லபடியாக வாழ்க் கையைத் தொடங்கு’’ என்று கூறி திருமணம் செய்து வைப்பார்.

தேங்காய் சீனிவாசன் எதிர்பாராத விதமாக தான் எடுத்த விஜயகுமார், சுஜாதா இணைந்திருந்த புகைப்படங் களை வைத்துக்கொண்டு, சுஜாதாவை பிளாக்மெயில் செய்வார். சுஜாதா மனதள வில் உடைந்து, உடல்நிலை பாதிக்கப் பட்டு இறந்துவிடும் நிலை யில் தன் கணவ னிடம், தன் தவறை சொல்லி மன்னிப்பு கேட்பார். அதற்கு முத்துராமன், ‘‘உன்னை பெண் பார்க்க வரும்போதே எனக்கு அந்த உண்மை தெரியும். நீயும், என் அக்காவும் பேசியதை நான் அன்றைக்கு கேட்டேன். தெரியாமல் செய்த தவறை மன்னிப்பதுதான் மனித குணம்’’ என்று அவரை ஏற்றுக்கொள்வார். சுஜாதா இறுக்கம் குறைந்து உடல் நலம் பெற்று மகிழ்வோடு வாழ்வார். இதோடு படம் முடியும். இந்தப் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் ‘‘தவறு செய்த கதாநாயகி சாக வேண்டும். அப்படி கதையை முடித்தால் படத்தை வாங்கிக்கொள்கிறோம்’’ என்றார்கள்.

எங்களுக்கு மிகுந்த பண நெருக்கடி. நாங்கள் என்ன செய்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-34-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article7891262.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 35: ‘மயங்குகிறாள் ஒரு மாது’

எஸ்பி.முத்துராமன்

 
 
 
  • mm_2633257g.jpg
     
  • mm1_2633256g.jpg
     

ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தை வாங்கத் தயங்கினார்கள். திருச்சியைச் சேர்ந்த விநியோ கஸ்தர் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு களை அடுக்கி வைத்துக்கொண்டு ‘கிளை மாக்ஸில் கதாநாயகி இறப்பது போல மாற்றிக் கொடுங்கள். உடனே படத்தை வாங்கிக்கொள்கிறேன்’ என்றார். நானும், பஞ்சு அருணாசலமும் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகியைக் கொன்றுவிடக் கூடாது. தவறை மன்னித்து வாழ வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந் தோம். தயாரிப்பாளர் விஜயபாஸ்கரிடம் படம் தொடங்குவதற்கு முன்பே, இதை சொல்லியிருந்ததால் அவரும் அந்த முடிவில் இருந்து மாறவில்லை.

பல வகையில் பணத்தை புரட்டி னோம். படப்பிடிப்பு முடிந்தது படத்தை சென்சாருக்கு அனுப்பினோம். படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரி எங்களை அழைத்து பாராட்டி, ‘யூ’ சான்றிதழ் கொடுப்பதாகக் கூறினார்.

பஞ்சு அவர்கள் என்னை அழைத்து, ‘‘ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதிகாரியிடம் அந்த பருவக் கோளாறு காட்சிகளைப் பற்றி கேட்டுவிடுங்கள்’’ என்றார். நான் சென்சார் அதிகாரியிடம் சென்று ‘‘படத் துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து காதலர் கள் தனிமையில் இருக்கும் காட்சிகளைக் குறைப்பீர்கள் என்று நினைத்தோம்!’’ என்றேன். அதற்கு சென்சார் அதிகாரி, ‘‘படத்தில் திருப்புமுனையே அந்தக் காட்சிதான். இளம் வயதில் தவறு செய் தால் அதன் பின்விளைவு என்ன என் பதை உணர்த்துகிறது. அதனால்தான் அக் காட்சியை வெட்டவில்லை. எல்லோரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என் பதற்காக ‘யூ’ சான்று கொடுத்தோம்’’ என் றார். கதைக்கு சம்பந்தமில்லாமல் கவர்ச் சியாக, அசிங்கமாக வைத்தால்தான் சென்சாரில் கட் செய்வார்கள் என்பதை அன்று புரிந்துகொண்டோம்.

‘சினிமா எடுத்துப் பார்’ என்ற சவாலை ஏற்று பல சங்கடங்களுக்கு மத்தியில் படத்தை வெளியிட்டோம். தவறு செய்த பெண்ணை மன்னித்து வாழ வைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கிளை மாக்ஸை மாற்ற சொன்ன திருச்சி விநி யோகஸ்தரும் படத்தை பார்த்துவிட்டு ‘‘நீங்க ஜெயிச்சீட்டீங்க முத்துராமன் சார். உங்க கிளைமாக்ஸை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்’’ என்றார்.

படத்தில் ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலை எழுதியிருந்த கண்ண தாசன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, படம் எனக்குப் பெரிய தாக்கத்தை கொடுக் கிறது. சுஜாதா கதாபாத்திரம் கண் முன் னேயே சுற்றி சுற்றி வருகிறது. வித்தி யாசமான படமாக எடுத்துவிட்டீர்கள்’’ என்று என்னையும் பஞ்சுவையும் பாராட்டி னார். தம்பிகளுக்கு அண்ணன் கொடுத்த ஆஸ்கர் விருதாக அதை எடுத்துக்கொண் டோம். பட்ட கஷ்டமெல்லாம் படத்தின் வெற்றியில் கரைந்து போனது. இளங்கோ கலை மன்றம் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தின் வெற்றிக்கு விழா எடுத்தது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் விருது கொடுத்தார். புதியவர்களை ஊக்குவித்த இளங்கோ கலை மன்றத் துக்கும், இளங்கோ வீரப்பனுக்கும் எங்கள் நன்றி என்றும் உரியது.

காவிய கவிஞர் வாலி என் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக் கிறார். இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். அதில் ஒரு படம் ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ மணியனின் கதை. திரைக்கதை, வசனம், பாடல்கலை வாலி எழுதியிருந்தார்.

கணவன், மனைவியை கவனிக் காமல் இருந்தால் மனைவி தவறான வழிகளில் போக வாய்ப்பு இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன படம். கதாபாத்திரத்தின் விரகதாபத்தை அள வுக்கு அதிகமாக சொன்னதால் படத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங் களுக்கு வருத்தம். அதைவிட வருத்தம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் எல்லா படங்களுக்கும் எடிட்டரான ஆர்.விட்டல்.

எழுத்தாளர் பிலகிரி படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, குடும்பப் பின்னணி கதையுடன் வந்து என்னைச் சந்தித்தார். அந்தக் கதைதான் ‘ஒரு கொடி யில் இரு மலர்கள்’. அந்தப் படத்துக்கு வசனம் வாலி சார்தான். அந்தப் படத்தின் வசனம் கவிதையாகவே இருந்ததைப் பலரும் பாராட்டினார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயத் தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’ படத்தின் வேலைகள் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தன. அதற்கு வசனம் எழுதுவதற்காக வாலி சார் சேலத்துக்கு வந்திருந்தார். என் குழுவினர் என்னிடம் வந்து ‘வாலி சார் இரவு நேரத்தில் அள வுக்கு அதிகமாக மது அருந்துகிறார்’’ என்றார்கள்.

அடுத்த நாள் அவரை சந்தித்து, அதைப் பற்றி கேட்டேன். ‘‘யார் சொன்னது, யார் சொன்னது?’’ என்று வியப்பாக கேட்டார். ‘‘நாம் இருப் பது சினிமா துறை. இங்கே ரகசியம் எல்லாம் எட்டுத் திக்குக்கும் தெரிந்து விடும்’’ என்று கூறினேன். நான் ‘கனிமுத்து பாப்பா’ படத்தை இயக்கும் நேரத்தில் வி.சி.குகநாதனின் அலுவலகத்துக்கு எதிர்வீடுதான் வாலி வீடு. மாலை நேரத்தில் வாலி சாரோடு பேசிவிட்டு, அவர் மனைவி ரமண திலகம் கொடுக் கும் காபியை குடித்துவிட்டு, அவர் மகன் பாலாஜியோடு விளையாடுவேன். இதனால் நான் வாலி சார் குடும்பத்தில் ஒருவனாகியிருந்தேன். அந்த உரிமை யோடு அவரிடம் பேசினேன்.

‘‘உங்கள் குடும்பத்தில் ஒருவ னாக சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந் தீர்கள். உங்கள் கவிதைகளையும், பாடல் களையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்கள் விழிப்புணர்வு அடையும் அள வுக்கு உங்கள் எழுத்துக்கள் இருக்கின் றன. நீங்கள் குடிக்கு அடிமையாக லாமா? உங்கள் மனைவி ரமண தில கத்தையும், மகன் பாலாஜியையும் நினைத்துப் பாருங்கள்’’ என்று மன அழுத்ததுடன் எடுத்துச் சொன்னேன்.

சில விநாடிகள் யோசித்தவர், ‘‘இனிமேல் எந்தச் சூழலிலும் குடிக்க மாட்டேன்’’ என்று என் கையில் அடித்து சத்தியம் செய்தார். அன்று முதல் வாலி குடிப்பதை விட்டுவிட்டார். இது எனக்குக் கிடைத்த வெற்றி இல்லை. வாலியின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருமுறை வாலியைப் பார்த்தபோது, ‘‘என்னய்யா, நாங்க எவ்வளவோ சொல்லியும் குடிப்பதை நிறுத்தாத நீ, இப்போ எப்படி நிறுத்தினே?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நடந்ததை எடுத்து கூறி யிருக்கிறார். வாலி சார் கைகளில் இரண்டு சாக்லேட்டை கொடுத்த எம்.ஜி.ஆர் ‘ஒன்று உனக்கு. இன்னொன்று முத்துராமனுக்கு!’’ என் றாராம். இந்த சம்பவத்தை துக்ளக் பத்திரிகையில் வாலியே எழுதியிருந்தார்.

இன்றைக்கு உங்களோடு இதைப் பகிர்ந்துகொள்ள காரணம், தற்போது குடிப் பழக்கம் குடும்பத் தலைவர்களை, தொழிலாளர்களை, மாணவர்களை சீரழித்து வருகிறது. அதனால் தமிழ்க் குடும்பங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. அடுத்த தலைமுறை முழுவதும் குடிக்கு அடிமையான தலைமுறையாக ஆகிவிடுமோ என்கிற பயம் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு வருத்தமான மனநிலையில் என் கண்களில் கண்ணீர் வந்து, அந்த துக்கம் எழுதவிடாமல் தடுக்கிறது. அதனால் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சந்திப்போம்.

 

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-35-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article7915494.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 36: துணிவே துணை!

எஸ்பி.முத்துராமன்

 
 
‘துணிவே துணை’ படத்தில் இரு வேடங்களில் ஜெய்சங்கர்.
‘துணிவே துணை’ படத்தில் இரு வேடங்களில் ஜெய்சங்கர்.

காவியக் கவிஞர் வாலி அவர்கள் மதுப் பழக் கத்தை நிறுத்தியதையும், இன்றைய தலைமுறை குடிக்கு எப்படி சீரழிகிறது என்பதையும் கடந்த வாரம் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன். கலங்கிய கண்களோடு அடுத்தவாரம் என்ன பகிரப் போகிறோம் என்பதை சொல்ல மனமில்லாமல் விட்டிருந் தேன்.

அந்த செய்தி வெளிவந்த நாளில் நாமக்கல் அருகே நான்கு பள்ளிக் கூட மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி பிறந்த நாள் கொண் டாடிய செய்தியையும், மற்றொரு பள்ளியில் ஒரு மாணவிக்கு நான்கு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வாட்ஸ் அப்-பில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற கொடூரமான செய்தியையும் படிக்க நேர்ந்தது. இவர்களை நினைக்கையில் கண்ணீர் வந்தது.

அது இதயத்திலிருந்து வந்ததால் சிவப்பாக இருந்தது. இந்தச் சூழலில் குமரி அனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துணிவே துணையாக போராட வேண்டிய நேரம் இது.

நான் இந்த வாரம் சொல்லப் போகும் படம் ‘துணிவே துணை’. இந்தப்படத்தை எப்படி தொடங்கி னோம் என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. சேலம் மாடர்ன் தியேட் டரில் சில படங்களை தொடர்ந்து படமாக்கி வந்தோம். அந்த நாட் களில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையோடு தினமும் இரண்டு நபர்களாவது வருவார்கள். அவர்களிடம், ‘ பண வசதி எப்படி?’ என்று நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் கேட்போம். ‘முதலில் பூஜையை போடுவோம். அப்புறம் பணத்தை புரட்டிவிடுகிறோம்?’ என்பார்கள்.

அதற்கு நாங்கள் ‘பூஜை போட்டு பாதியிலேயே படம் நின்று விடுவதற்கு நாங்கள் படம் எடுக்க மாட்டோம். பண பலத்தோடு வாருங்கள்’ என்று அனுப்பிவிடு வோம். இந்த நிலையில், எளிமை யாக வேட்டி சட்டை அணிந்து ஒரு மஞ்சள் பையுடன் எங்களை பார்க்க ஒருவர் வந்தார். ‘படம் எடுக்க வேண்டும்?’ என்றார். எல்லோரிடமும் சொல்வதைப் போல அவரிடமும் சொன்னோம். மேஜையில் மஞ்சள் பையை கொட்டினார். நோட்டுக்கட்டுகள் குவிந்தன. அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியம்.

cinema1_2642542a.jpg

இதற்கு மேலும் வங்கியில் பணம் இருக்கிறது என்று பாஸ் புக்கை காட்டினார். “நடிகர் ஜெய்சங்கரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம்’’ என்று கூறினோம். நடிகர் ஜெய் யிடம் கூறியதும், ‘நாம இந்தப்படத்தை ஏன் கலர் படமாக எடுக்கக் கூடாது?’ என்று கேட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படி தொடங்கப்பட்ட படம், ‘துணிவே துணை’ அதன் தயாரிப்பாளர் சேலம் பி.வி.துளசிராம்.

படத்துக்கு கதை, திரைக்கதை பஞ்சு அருணாசலம். இது சஸ்பென்ஸ் திரில்லர். படத்துக்கு சரியான தலைப்பை பிடிப்பது ஒரு முக்கியமான வேலை. ஆசிரியர் உயர்திரு. தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு இதழில் ‘துணிவே துணை’ என்று லட்சிய வார்த்தையை போடுவார். அந்த தலைப்பு சரியாக இருக் கும் என்று பஞ்சு அவர்கள் கூற தமிழ் வாணன் அவர்களிடம் கேட்டோம். ‘தாராள மாக வைத்துக் கொள் ளுங்கள். எல்லோருக் கும் துணிவு வருகிற மாதிரி படத்தை எடுங் கள்’ என்றார். தமிழ் வாணன் - ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்’ என்ற அடைமொழிக்கு தன்னை தகுதி யாக்கிக்கொண்டவர். அவர் தந்த செல்வங்கள்தான் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும்.

பொதுவாக கிளைமேக்ஸ் காட்சியில்தான் ஆடியன்ஸ் இருக்கை முனைக்கு வருவார்கள். இந்தப்படத்தில் முதல் 5 ரீல்களில் மக்கள் இருக்கை முனையில்தான் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அல்ல. அதற்கு மேலாக எடுக்கப்பட்ட படம் இது. ஒளிப்பதிவு பாபு. அவரது படப்பிடிப்பு பாராட்டுக்குறியது. எம்.எஸ்.வி அவர்களின் பாடல் களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தன. ஜெய் சங்கர், ஜெயபிரபா, அசோகன், விஜயகுமார், ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்தனர். வில்லன் களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவரை பெரிய வில்லனாக போடுவோம். இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண் கதாபாத் திரம் தலைமை ஏற்கட்டுமே என்று ராஜ சுலோச்சனாவை தலைவியாக்கினோம். அவர் நடிப்பில் வில்லன்களையே மிஞ்சி விட்டார்.

கலை இயக்குநர் ராதா மிக நுணுக்கமாக அரங்குகள் அமைத்தார். ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் வரும் ‘அச்சம் என்னை நெருங்காது’ என்ற பாடலை வித்தியாசமாக படம்பிடித்தோம். மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேடங்களையும் மாஸ்க் முறை யில் பாபு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் பாடல் காட்சி மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்த ஒருவர் இன்று புகழ்பெற்ற நடன அமைப்பாளராக உள்ளார். அவர் யார்? அடுத்த வாரம் பார்ப்போம்.

இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-36-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/article7940483.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்

எஸ்பி.முத்துராமன்

 
 
  • சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
    சண்டைக் காட்சியில் அர்ஜுனுடன் மோதும் அழகு
  • ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்
    ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யா, சந்திரகலா | படம் உதவி: ஞானம்

‘துணிவே துணை’ படத்தில் அபர்ணா நடிக்கும் ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும்’ என்ற பாடல் மிகவும் வித்தியாசமாக அமைந்தது. அந்தப் படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவின் உதவியாளராக கலா பணியாற்றினார். மிகவும் சுறுசுறுப்பு. நடிகர், நடிகைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவார். அவர் தான் இன்றைக்கு உலகப் புகழ் பெற்ற ‘மானாட மயிலாட’நிகழ்ச்சியை நடத்தி வருபவர் என்பது எங்களுக்குப் பெருமை.

திரையுலக முன்னோடி இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களின் வழித் தோன்றல் ரகுராம் மாஸ்டர், அவர் மனைவி கிரிஜா, அவருடைய தங்கைகள் கலா, பிருந்தா ஆகியோரும் நடனக் கலைக்காக சேவை செய்தவர்கள், செய்கிறவர்கள். அந்தக் கலை குடும்பத்தை மனமாறப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

kala_2658948a.jpg

இன்று சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக அசத்தி வரும் அழகு, நான் இயக்கிய ‘துணிவே துணை’ படத்தில் அறிமுகமானவர். அப்போது அவரை சண்டைக் காட்சிகளில் பங்குபெற வைத்தோம். சிறந்த சண்டை வீரராக பல படங்களில் பங்கு பெற்றார். உள்ளுக்குள் இருந்த திறமை ஒரு நாள் வெளியே வந்தே தீரும் என்று சொல்வதைப் போல இன்றைக்கு சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். அதற்குக் காரணம் முயற்சி திருவினையாக்கும் என்பதே. நடிக்க வருகிறவர்கள் சின்ன வேஷம், பேரிய வேஷம் என்று பார்க்காமல் கிடைத்த வேடத்தில் திறமையைக் காட்டி முன்னேற வேண்டும். துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் பின்னாளில் உலகம் புகழும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆகவில்லையா?

azhagu_2658949a.jpg - அழகு

‘துணிவே துணை’ படத்தில் அசோகன் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத் தில் நடித்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அசோகனையும், வில்லன்களையும் ஹெலிகாப்டர் துரத்துகிற மாதிரி காட்சி. அப்போது அசோகன், ‘ஹெலிகாப்டர் கீழே வரும்போது எனக்கு கைக்கு எட்டும் தூரத்தில்தான் வருகிறது. நான் பிடித்து விடட்டுமா? என்றார். ‘ஐயையோ… அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். ஹெலிகாப்டர் கவிழ்ந்துவிடும்’ என்று நான் கத்தினேன். ஹெலிகாப்டரை, கார் மீது இடிக்க வைத்து ரிஸ்க்காக பல ஷாட்களை எடுத்து ஒருவித த்ரில்லோடு படமாக்கினோம்.

அந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மஞ்சப் பையுடன் வந்த துளசிராம் தயாரிப்பாளர் ஆனார். அடுத்தப் படத்தையும் தயாரிக்க முன் வந்தார். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அப்போது துளசிராம் தயாரிப்பாளர் என்ற கிரீடத்தை தலையில் வைத்துக்கொண்டு, சில நிபந்தனைகள் போட்டுக்கொள்ளலாம் என்றார். ‘முதல் படம் எப்படி எடுத்தோமோ, அப்படியே எடுப்போம். நிபந்தனைகள் என்றால் எங்களை விட்டுவிடுங்கள்’ என்று நங்கள் ஒதுங்கிக்கொண்டோம். சினிமா என்பது கடல். ஒரு படத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட முடியுமா?

நடிகர்கள் முத்துராமன், ஜெய்சங்கர் இருவரும் நட்பு அடிப்படையில் எங்கள் படங்களில் எப்போதும் நடிக்கத் தயாராகவே இருந்தார்கள். தயாரிப்பாளர் யார்? கதை என்ன என்று கேட்கவே மாட் டார்கள். அட்வான்ஸ் என்பது பணமாக இல்லை, வாய் வார்த்தையில் மட்டும் தான். அவர்களது டைரியை எடுத்து, ‘10 நாட்கள் எஸ்பி.எம் படம்’ என்று தேதி குறித்து வைத்துவிட்டு வந்துவிடுவேன். நான் குறிப்பிட்ட தேதிகளை யாருக்கும் ஒதுக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் இப்படி ஒரு புரிதலோடு இருந்தது எங்களுக்குப் பெரிய பலமாக இருந்தது. இதெல்லாம் வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கொருவர் இருக்கும் நட்பு அடிப்படையில் செய்தது.

அடுத்து நாங்கள் எடுத்தப்படம் விஜய பாஸ்கர் தயாரித்த ‘காலங்களில் அவள் வசந்தம்’. முத்துராமன், ஸ்ரீவித்யா, சந்திர கலா, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர். ஒரு பெண், தன்னைவிட படிப் பில், அந்தஸ்தில், அழகில் பெரிய இடத்து மாப்பிள்ளைதான் வேண்டும் என்று தட்டிக்கழித்து முதிர்கன்னியாகி விடுவார். அந்தக் கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். ஸ்ரீவித்யா எந்தக் கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்கக்கூடிய நல்ல நடிகை. எங்கள் குழுவில் நட்போடு பழகினார்.

என் மனைவி இறந்தபோது எனக்கு ஆறுதல் கூறும்போது அவர் அழுத அழுகைக்கு, நான் ஆறுதல் கூற வேண்டியதாயிற்று. அவர் உடல் நலமில்லாமல் கேரளாவில் இருக்கும்போது அவரை நான் பார்க்க விரும்பினேன். கமல் பார்த்துவிட்டு வந்த தாக செய்தி வந்தது. கமலிடம் போய் நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். கமல், ‘வித்யா யாரையுமே பார்க்க விரும்பவில்லை. நீங்கள் போய் பார்த்தால் அவர் வேதனை அதிகமாகுமே தவிர உடல்நலம் குணமாகாது’ என்று கூறினார். சில நாட்களிலேயே அவர் இறந்த செய்தி வந்தது. அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அறிந்த எனக்குக் கண் கலங்கியது. அவரை பார்க்கக்கூட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்றைக்கும் இருக்கிறது.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ஸ்ரீவித்யாவுக்குத் தங்கையாக சந்திர கலா நடித்தார். அவருக்கும் முத்து ராமனுக்கும் திருமணம் நடக்கும். முதிர் கன்னியான ஸ்ரீவித்யா தன் நிலையை நினைத்து மனநிலை பாதிப்புக்குள்ளாவார். அதைக் கண்ட தங்கை சந்திரகலா தன் அக்கா குணமடைய தன் கணவனையே அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வார்.

திருமணம் நடந்து முதலிரவு ஏற்பாடு செய்யும் நேரத்தில் மீண்டும் அக்காவுக்கு மனநிலை பாதிக்கப்படும். தந்தை அசோகன் மகள் ஸ்ரீவித்யாவை ஊருக்கு அழைத்துச் செல்வார். தன்னைப் பார்த்து அழும் அசோகனிடம் ஸ்ரீவித்யா, ‘தங்கை தனது கணவரைத்தான் எனக்குக் கணவராக்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. தங்கையின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல்தான் பைத்தியமாக நடித்தேன்’ என்று கூறுவார்.

இளம்பெண்கள் ‘தனக்கு வரும் கணவன் இப்படி இருக்க வேண்டும்? அப்படி இருக்க வேண்டும்’ என்று கனவு கண்டு, வரும் எல்லா மாப்பிள்ளைகளை யும் ஒதுக்கினால் முதிர்கன்னிகளாக ஆக வேண்டியிருக்கும் என்பதை இந்தக்கதையின் மூலம் உணர்த்தினோம். இந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இந்தக் கதையை எங்களிடம் உரிமை வாங்காமலேயே ஹிந்தியில் எடுத்து அந்தப் படம் வெற்றி பெற்றது. அந்த விஷயமே எங்களுக்குக் காலம் கடந்துதான் தெரிந்தது. அதனால் அவர்களோடு போராட முடியவில்லை. கதையின் உரிமையை வாங்காமல் மற்ற மொழியில் படம் எடுப்பது தவறு. அது படைப்பாளிகளின் உழைப்பை ஏமாற்றுவதாகும். உரியவர்கள் சிந்திக்க வேண்டும்.

அன்று ஏரியில் வீடு கட்டினோம். இன்று வீட்டுக்குள் ஏரி. இது நம் எல்லோருக்கும் ஒரு பாடம். இந்த வெள்ளத்தில் இளைஞர்கள் மழையில் நின்று கொண்டு மக்களுக்கு வழிகாட்டியது, உதவிகள் செய்தது வருங்காலத்தில் அவர்கள் நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த மனிதநேயமுள்ள அனைவரையும் வணங்குவோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம். வடியும் கண் ணீரைத் துடைத்துக்கொண்டு அடுத்த வாரம் நான் தூக்கி வளர்த்த உலக நாயகன் கமல் பற்றி எழுதப் போகிறேன். அது எந்தப் படம்? எந்த சூழலில் அமைந்தது? அடுத்த வாரம் பார்ப்போம்.

இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-37-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7995797.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமா எடுத்துப் பார் 38: வித்தியாச நாயகன் கமல்!

எஸ்.பி.முத்துராமன்

 
 
 
 
  • ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார் (1976)
    ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல்ஹாசன், சுஜாதா, விஜயகுமார் (1976)
  • 2_2667833g.jpg
     

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பொன் மொழிக்கு சரியான உதராணமாக கமல் ஹாசன் வளர்ந்துகொண்டிருந்த நேரம் அது. நான் தூக்கி வளர்த்த கமலை கதாநாயகனாக வைத்து படம் இயக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் படங்களில் நடித்து, அவரது மோதிரக் கையால் கொட்டுப்பட்டவர்கள், அடுத்து என் படங்களில் நடிக்க வந்துவிடுவார்கள். எனக்கு அது ஒரு ராசியாகவே அமைந்தது.

மல்லிகைப் பதிப்பகம் என்ற பெயரில் நல்ல புத்தகங்களை வெளியிட்டவர் சங்கர். அவர் என்னை அணுகி, ‘‘படம் தயாரிக்கலாம் என்ற திட்டம் உள்ளது. நீங்கள்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும். புதுமுகங்கள் நடித்தால் நல்லது’’ என்றார். உடனே நான், ‘‘நீங்கள் புதிதாக படம் எடுக்க வருகிறீர்கள். புது முகம் என்றால் வியாபாரரீதியாக கஷ்டப் பட வேண்டியிருக்கும். முதல் படத்தில் அந்த முயற்சி வேண்டாம்’’ என்றேன். சொன்னதைப் புரிந்துகொண்டு, ‘‘உங்கள் விருப்படியே பட வேலைகளைத் தொடங்குவோம்’’ என்று சம்மதித்தார்.

தயாரிப்பாளர் ஓ.கே ஆனதும் கதை வேண்டுமே? ‘‘முதலில் கதையைத் தயார் செய்யுங்கப்பா… அதுதான் அடித்தளம்’’ என்று சொல்லும் ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் பாடம் கற்றவர்களாச்சே, அந்தப் பழக்கம்தானே வரும். கதையைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் கையில் கொடுத்த புத்தகங்களில் ஒன்று, எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை எழுதிய ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்கிற நாவல். அந்தக் கதையை படித்து பார்த்தேன். நடைமுறையில் இருக்கும் கதைகளைவிட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இன்றைக்கு ‘புதிய அலை’ என்று சொல்கிறோமே, அந்தப் பார்முலாவில் அந்தக் கதை இருந்தது. ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று நானும் அந்தக் கதையைப் தயா ரிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினேன்.

அந்த வித்தியாசமான கதையை எழுதிய புஷ்பா தங்கதுரையை வைத்தே திரைக்கதை, வசனம் அமைப்போம் என்று முடிவெடுத்தோம். அவரும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாக திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தார்.

படத்தில் யாரை ஹீரோவாக போடுவது என்ற விவாதம் தொடங்கியது. இந்த மாதிரி வித்தியாசமான கதை களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்காகவே ஒருத்தர் இருக்கிறார். அவர்தான் கமல்!

அவர் நடித்தால் சரியாக வரும் என்று சொன்னேன். கமலிடம் விஷயத்தை சொன்னதும், ‘‘முத்துராமன் சார் இப்ப தான் என் பக்கம் வந்திருக்கார்!’’ என்று மகிழ்ச்சி அடைந்தார் கமல். கதாநாயகி யாக சுஜாதாவைத் தேர்ந்தெடுத்தோம். அவர் இதற்கு முன் நான் இயக்கிய ‘மயங்குகிறாள் ஒரு மாது’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். எங்களோடு தொடர்பில் இருந்ததால் உடனே அவரை ஒப்பந்தம் செய்தோம். படத்தில் மற்றொரு நாயகனாக விஜயகுமாரை அணுகினோம்.

‘‘என்ன சார், கமல், சுஜாதாவுக்கு இருக்கும் அளவுக்கு என் கதாபாத்திரம் பெரிதாக இல்லையே?’’ என்று கேட்டார். ‘கிளைமாக்ஸ் உன் மீதுதான் முடிகிறது. படம் பார்த்து வெளியே செல்பவர்கள் உன் நினைவோடுதான் போவார்கள். கவலைப்படாதீர்கள். நிச்சயம் நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும்’’ என்றேன். ஒப்புக்கொண்டார். அவரும் நன்றாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு திருப்புமுனையாகவே அமைந்தது.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் சுஜாதாவும், கமலும் காதலர்கள். காதல், கல்யாணமாக கனியும் சமயம் கமல் காணாமல் போய்விடுவார். ஒரு வருஷம் ஆகியும் திரும்பவே இல்லை. இனிமேலும் காத்திருக்க முடியாது என்கிற நிலையில் விஜயகுமாரை திருமணம் செய்துகொள்வார் சுஜாதா. ஒரு பிரச்சினையில் சிக்கிய கமல் சிறைக்குப் போய்விட்டு திரும்பி வருவார். சுஜாதாவுக்குத் திருமணமான செய்தி கமலுக்குத் தெரியவரும்.

சுஜாதாவிடம், ‘‘ஒருநாள் மட்டும் என்னுடன் மனைவியாக வாழ்க்கை நடத்துவதுபோல நடி. அந்த ஒருநாள் நினைவிலேயே நான் வாழ்நாள் முழு வதும் வாழ்ந்துவிடுவேன். நிச்சயம் எந்தத் தவறும் நடக்காது!’’ என்று கமல் கூறுவார். சுஜாதாவும் அதற்கு சம்மதிப்பார். அந்த ஒருநாளில் அவர்கள் காதலர்களாக இருந்த நாட்களின் பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வரும். உணர்ச்சிப் போராட்டங்களை ஒருவருக்கொருவர் மறைத்துக்கொண்டு முக பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் கள். இருவரும் தவறு செய்யப்போவ தைப் போல ஒரு பரபரப்பை ஏற்படுத் தும் விதமாக சில காட்சிகளைப் படமாக்கினேன். அப்படி எதுவும் நடப்பதற்கு முன் சுஜாதாவை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார் கமல்.

தனது வீட்டுக்குச் சென்ற சுஜாதா, காதலனுடன் ஒருநாள் மனைவியாக நடித்த நினைவிலேயே இருப்பார். கமலிடம், ‘‘அந்த நாளை என்னால் மறக்க முடியவில்லை. இனி என் கணவரோடு உண்மையாக வாழ முடியாது. என்னை உங்களோடு அழைத்துக்கொண்டுப் போய்விடுங்கள்’’ என்பார். கமலும் அன்று இரவு வீட்டு வாசலில் வந்து நிற்பார். தூங்கிக் கொண்டிருந்த கணவர் விஜயகுமாரை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வாசலுக்கு வருவார் சுஜாதா. வீட்டுப் படியைத் தாண்டப்போகும்போது சுஜாதாவை விஜயகுமார் அழைப்பார்.

‘‘காதலனோடு செல்ல முடிவெடுத்தப் பிறகு ஏன் என்னை வந்து பார்த்தாய்? உன்னோட கண்ணீர் என் காலில் பட்டு விழித்துக்கொண்டேன். திருமணத்துக்கு முன்னால் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். திருமணத்துக்குப் பிறகு ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத் திக்கு ஒருவன் அதுதான் பண்பாடு. கண்ணகியும், சீதையும் வாழ்ந்த நாடு இது. நமக்குன்னு ஒரு கலாச்சாரம், பண்பாடு உள்ளது. அதையெல்லாம் நீ மிதித்துத் தள்ளிவிட்டுச் செல்வதென்றால் போ. அதையெல்லாம் மதிப்பவள் என்றால் வீட்டுக்குள் வா…’’ என்றழைப்பார்.

சுஜாதா அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்து விஜயகுமாரின் காலில் விழுவார். இதை பார்த்துக்கொண்டே இருந்த கமல் மெல்லிய புன்னகையோடு, கையில் வைத்திருக்கும் விஷப் பாட்டிலை பார்ப்பார். சுஜாதாவோடு அங்கிருந்து சென்று தற்கொலை செய்துகொள்கிற முடிவில்தான் கமல் இருந் திருப்பார் என்று சொல்வதைப் போல படத்தை முடித்திருப்போம்.

3_2667831a.jpg

புஷ்பா தங்கதுரை

மூத்த இசையமைப்பாளர் சுவாமி தட்சிணாமூர்த்தி இந்தப் படத்துக்கு இசையமைத்தார். இசைஞானி இளைய ராஜா, பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இருவருக்கும் கர்னாடக இசையை கற்றுக்கொடுத்தவர் சுவாமி தான். அவரது இசைக் கோப்பு முறையைப் பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும். அவர் ஒன்… டூ… த்ரீ என்று கம்பீரக் குரலோடு தன் இசைக் குழுவினரை இயக்குகிற விதமே தனி.

‘ஆண்டவன் இல்லா உலகமிது’, ‘நல்ல மனம் வாழ்க…’ போன்ற பிரபலமான பாடல்களை இந்தப் படத்தில் அவர் அமைத்திருந்தார். அந்த இசை மேதை சுவாமி தட்சிணாமூர்த்திக்கு ஒரு சிக்கல் வந்தது. அது என்ன சிக்கல்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-38-வித்தியாச-நாயகன்-கமல்/article8021320.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 39: அந்த மற்றொரு கண் யார்?

எஸ்பி.முத்துராமன்

 
 
  • ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல் - சுஜாதா.
    ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல் - சுஜாதா.
  • talk_2675986g.jpg
     

மூத்த இசையமைப்பாளர் சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு வந்த சிக்கல், இதுதான். இசையமைப்பில் வித்தியாசமாக ஒரு படத்தை எடுக்கும் ஆசையோடு இயக்குநர் ஒருவர் அவரை சந்தித் தார். பாடல்களுக்கான சூழலை விளக்கிவிட்டு, படத்தில் ஒரு பாடல் மட்டும் மாடர்ன் எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைத் தால் நன்றாக இருக்கும் என்று சுவாமி யிடம் இயக்குநர் கூறினார். சுவாமி யும் ஒப்புக்கொண்டார். எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளை வைத்து தான் இசை யமைத்ததே இல்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான், சுவாமிக்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் நினைவு வந்து, அவரிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறார். தனக்கு கர்னாடக இசையைப் பயிற்றுவித்த குருவே, இப்படி கேட்டதும் சம்மதிக்காமல் இருந்துவிடுவாரா ராஜா? உடனே சம்மதித்து, ‘‘என்ன மாதிரி பாடல் என்பதை மட்டும் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று இளையராஜா கூறினார்.

ஒலிப்பதிவு கூடத்தில் அந்தப் பாடலை கண்டக்ட் செய்கிற வேலையில் இளையராஜா இறங்கிவிட்டார். பாடல் பதிவு நடை பெற்றபோது நான் ராஜாவைப் பார்க்க அங்கு போயிருந்தேன். சுவாமி அவர்கள் என்னை பார்த்ததும் இந்த விஷயங்களை சொன்னார். பெரும்பாலும் ஒரே தொழிலில் இருப்பவர்களுக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும். ஆனால், அங்கே கர்னாடக இசையைக் கற்றுக்கொடுத்த குருவுக்கு, எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளை வைத்து பாடல் பதிவு செய்துகொண்டிருந்தார் சிஷ்யர் இளையராஜா. சிஷ்யரிடம் குரு புதுமைகளை கற்றுக்கொண் டிருக்கிறார். குரு சிஷ்யன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்ததைக் கற்றுக்கொடுப்பதற்கும், தெரியாததைக் கற்றுக்கொள்வதற்கும் வயது என்ன தடை?

படப்பிடிப்பின்போது நினைத்துப் பார்க்க முடியாத சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கும். ‘ ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல், சுஜாதா இருவரும் அறிமுகமாகும் காட்சி. சுஜாதா தன் வீட்டு வாசலில் பூத்திருக்கும் ஊதாப்பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பார். அப்போது ஆகாயத்தில் ஒரு விமானம் பறக்கும். விமானம் போகும் திசையில் சுஜாதாவின் கண்கள் செல்லும்போது, மாடியில் தேகப் பயிற்சி செய்துகொண்டிருக்கும் கமலை பார்ப்பார்.

இருவர் கண்களும் சந்திக்கும். புஷ்பா தங்கதுரையின் கற்பனை இதுதான். அந்த நேரத்தில் விமானத்துக்கு எங்கே போவது? இருவரது பார்வைகள் சந்திப்பதை எடுத்துவிட்டு, விமானம் பறப்பதை ஸ்டாக் ஷாட்டில் எடிட்டிங்கில் இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து படப்பிடிப்புக்குத் தயாரானோம்.

அந்த நேரத்தில் தூரத்தில் விமானம் வரும் சத்தம் கேட்டது. ஒரே ஆச்சர்யம். அந்த விமானம் நம் திசை நோக்கி வந்தால் மிஸ் பண்ணாமல் எடுத்துவிட வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் பாபு சாரிடம் சொன்னேன். சுஜாதாவையும் கமலையும் ஷாட்டுக்குத் தயாராக இருங்கள் என்றேன். கமலுக்கு ஒரே குஷி. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். விமானம் வந்தது. எங்களுக்கு தேவையான மாதிரியே மேலே பறந்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயம். சிறப்பாக அதை படமாக்கினோம். ஒட்டுமொத்தப் படக் குழுவினரின் ஈடுபாட்டால்தான் அந்தக் காட்சியை சிறப்பாக எடுக்க முடிந்தது.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்துக்காக கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு பாடலை எழுதி வாங்குவதற்காக இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஐயா அவர்களோடு போனேன். கவியரசர் கவிதா ஹோட்டலில் அறை எடுத்து பாடல் எழுதிவந்த நேரம் அது. அவரைப் பார்க்க அங்கு பலரும் வந்து காத்திருந்தார்கள். இந்தப் பரபரப்பான சூழலில் எப்படி பாடல் எழுதுவார் என்ற சந்தேகம் இருந்தது. அவரது நிர்வாகி மக்களன்பனிடம் கேட்டேன். ‘நிச்சயம் உங்களுக்கு இன்று பாடல் எழுதுவார்’ என்றார். அவர் சொன்னபடி கவியரசர் வந்தார்.

அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் அமைதியாக, ‘ஆண்டவன் இல்லா உலகம் இது’ பாடலை எழுதி கொடுத்தார். ஆச்சர்யத்தோடு அந்த நிர்வாகியிடம், ‘‘நீங்க சொன்ன மாதிரி எழுதி கொடுத்துட்டாரே!’’ என்று கேட்டேன். ‘‘அங்கே ஒருத்தர் நிக்கிறார் பாருங்க. அவர் கவியரசருக்குக் கடன் கொடுத்தவர். அவருக்கு இன்னைக்கு பணம் கொடுக்கணும். உங்களுக்குப் பாட்டெழுதுறதில் வந்த பணத்தை கடன்காரருக்குக் கொடுத்துட்டார்’’ என்றார். கவியரசரைப் போல் சம்பாதித்தவர்களும் இல்லை. கடன்பட்டவர்களும் இல்லை.

அவசரத்தோடும், அர்த்தத்தோடும் உருவான ‘ஆண்டவன் இல்லா உலகம் இது’ பாடலை பேக் வாட்டர் சூழலில் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் யோசித்தோம். பாண்டிச்சேரியை தேர்வு செய்தோம். படத் தயாரிப்பாளர் சங்கர், ‘உடனே ஷூட்டிங் போகலாம்’ என்று ஆர்வமாக இருந்தார். பாண்டிச்சேரியில் தங்குவதற்கு நல்ல ஹோட்டல் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. யூனிட்டை எல்லாம் ஒரு திருமண மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

நான், பாபு, தயாரிப்பாளர் மூவரிடமும் ‘‘நீங்கள் ஹோட்டலில் தங்கிக்கொள்ளலாமா?’’ என்று தயாரிப்பு நிர்வாகி கேட்டார். ‘‘பாத்ரூமும், டாய்லெட்டும் சுத்தமாக இருந்தால் பிரச்சினை இல்லை, ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கூறி பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம். மாலை வரையில் எந்த பரப்பரப்பும் இல்லாமல் இருந்த அந்த ஹோட்டல், இரவு 9 மணிக்கு மேல் பரபரப்பாகியது. பெண்கள் பலர் வர ஆரம்பித்தார்கள். அங்கே பாலியல் தொழில் நடப்பது அப்போதுதான் புரிந்தது.

ஹோட்டலுக்கு அப்படி வரும் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி விசாரித்தபோது பரிதாபமாக இருந்தது. குடும்ப வறுமையால், கணவன் விட்டுவிட்டுப் போனதால், கடன் தொல்லையால் தற்கொலை வரைக்கும் சென்ற பெண்கள் இதில் சிக்குகிறார்கள் என்கிற தகவல் மனதை கஷ்டபடுத்தியது.

ஹோட்டலுக்கு வந்த அந்தப் பெண்கள் எவருமே விரும்பி இந்தத் தொழிலை செய்யவில்லை என்பதும், சூழ்நிலையால் மனம் வெதும்பியே இந்தத் தொழிலை செய்கிறார்கள். இவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் அவர்களுக்குத் தொழில் கற்றுக்கொடுத்து மறுவாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் அவர்களும் நல்லமுறையில் வாழ்வார்கள். வழுக்கி விழ மாட்டார்கள். இந்தக் காட்சிகளை இரவெல்லாம் கண்ட நாங்கள், பொழுது விடிந்ததும் கண்களைத் துடைத்துக்கொண்டு பாண்டிச்சேரியின் பேக் வாட்டரில் படப்பிடிப்பை தொடங்கினோம்.

இயற்கை காட்சிகள் சிறப்பாக இருந்தால் ஒளிப்பதிவாளர் பாபு அதை இன்னும் அழகாக்கிவிடுவார். படத்தில் பாடல் காட்சி மிகவும் அழகாக அமைந்தது. அப்போது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கேரளப் பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி மிகவும் அழகு என்று எழுதியிருந்தார்கள். அது பாபுவின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்த பாராட்டு.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படம் ரிலீஸுக்குத் தயாரானது. கமர்ஷியல், சென்டிமெண்ட் என்று ஒரு பாதையில் போய்க்கொண்டிருந்த இயக்குநர் முத்துராமனை கமல்ஹாசன் இப்படி இழுத்து விட்டுவிட்டார் என்று சிலர் சொன்னார்கள். அந்தக் கமலை நாங்கள் கமர்ஷியலுக்கு இழுத்து வந்தப் படம் ஏவி.எம்மின் ‘சகல கலா வல்லவன்’.

அந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஹேப்பி நியூ இயர்… இளமை இதோ இதோ…’ என்கிற பாடல் உலகம் எங்கும் 33 ஆண்டுகளாக புத்தாண்டு அன்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதோ நாளை இரவு பிறக்கப்போகும் 2016-ம் ஆண்டும் ஒலிக்கப்போகிறது. அந்த நினைவுகளோடு உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இரண்டு கண்கள். ஒரு கண் கமல். இன்னொரு கண் யார் என்று நீங்களே ஊகித்திருப்பீர்கள். அந்தக் கண்ணைப் பற்றி அடுத்த வாரம் பேசுகிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-39-அந்த-மற்றொரு-கண்-யார்/article8044822.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 40: இரண்டு கண்களைக் கொடுத்த கே.பி.!

எஸ்பி.முத்துராமன்

 
 
spm_2685172f.jpg
 

ரஜினி, கமல் இருவரும் எனது இரண்டு கண்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்கள் இருவரையும் எனக்குக் கொடுத்தவர் பாலசந்தர் சார் தான். அப்போது தென்னிந்திய ஃபிலிம் சேம்பரில் நடிப்புக்காக ஒரு இன்ஸ்டிட் டியூட் நடத்தினார்கள். அதில் படித்துக் கொண்டிருந்தவர்தான் சிவாஜி ராவ். அந்த நடிப்பு பள்ளிக்கு ஒருமுறை கே.பி சார் போயிருக்கிறார். அங்குதான் சிவாஜி ராவை கே.பி சாரிடம் பத்திரிகையாளர் கோபாலி அறிமுகம் செய்து வைத்தார். சிவாஜி ராவின் கண்களில் தெரிந்த ஒளி கே.பி. சாருக்குள் என்னமோ உணர்த்தியிருக்கிறது.

ஒருத்தரின் எதிர்காலத்தை கணிப் பதில் கே.பி சார் ஒரு தீர்க்கதரிசி. ஒரு பெண் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருந் தால், அந்தப் பெண்ணுக்குரிய சரியான ரோல் அடுத்தப் படத்தில்தான் அமை கிறது என்றால் அவரை நினைவில் வைத் திருந்து, வரவழைத்து நடிக்க வைப்பார். அப்படித்தான் சிவாஜி ராவையும் அலு வலகத்துக்கு வரச் சொல்லி நடிக்கச் சொன்னார். அப்போதெல்லாம் நடிக்க வாய்ப்பு கேட்டு வருபவர்கள் சிவாஜி சார் போலவே நடித்துக் காட்டுவார்கள். ரஜினியும் சிவாஜி சாரைப் போல நடித்துக் காட்டியிருக்கிறார்.

உடனே கே.பி சார், ‘‘எல்லாம் ஓ.கே. ரெண்டு நாளைக்கு பிறகு வந்து… உனக்குன்னு உள்ள நடிப்பை, உன் திறமையை, உன் ஸ்டைல்ல நடிச்சுக் காட்டுப்பா’’ என்று அனுப்பி வைத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு பிறகு சிவாஜி ராவ் வந்து, சிகரெட்டை தூக்கிப் போட்டு லிப்ல பிடிப் பது, கண்ணாடியைக் சுழற்றி ஸ்டைலாக அணிவது, தலைமுடியை சீவி கலைத்து விடுவது என்று நடித்துக் காட்டியுள்ளார். சிவாஜி ராவுக்கு அப்போ தமிழ் அவ்வளவு சரளமாக வராது. வசனம் பேசுவதில் தடுமாற்றம் இருந்தது. கே.பி சார் ‘நான் டப்பிங்கிலும் உன் குரலைத்தான் பயன்படுத்துவேன். அதனால் நீ நன்றாக தமிழ் பேசக் கற்றுக்கொண்டு வா’ என்று அனுப்பிவைத்தாராம்.

பெங்களூருக்குத் திரும்பி சென்னை யில் அவர் படிப்பதற்கு தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை விற்று பணம் கொடுத்து அனுப்பிய ராஜ்பகதூரை சந்தித்தார். சிவாஜி ராவ் நடத்துநராக பணியாற்றியபோது அங்கே ஓட்டுநராக வேலை பார்த்தவர்தான் ராஜ்பகதூர். அவர் உதவியுடன் தமிழ் நன்றாக பேசக் கற்றுக்கொண்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பினார் சிவாஜி ராவ். கே.பி.சாரை சந்தித்தார். சிவாஜி ராவுக்கு ரஜினிகாந்த் என்கிற பெயரைச் சூட்டி, ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிக்க வைத்தார் கே.பி சார். அந்தப் படத்தில் அறிமுகக் காட்சியில் சிவாஜி ராவ் ஒரு பெரிய கேட்டை திறந்துகொண்டு உள்ளே வருவார். அதுபற்றி கே.பி அவர்கள் கூறும்போது, ‘தமிழ்நாட்டு மக்களின் இதயக் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தார்’ என்றார். அவர் அன்றைக்கு சொன்னதுபோல் தமிழ்நாட்டு மக்களின் இதயக் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்து சம்மணம் போட்டு ஜம்மென்று உட்கார்ந்துவிட்டார்.

அந்த நேரத்தில் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன், மனோகர் போன்ற வில்லன்கள் நடித்துக்கொண்டிருந்தனர். வில்லன்கள் நடிப்பு பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். அந்த சமயத்தில் வில்லனாக அறிமுகமான ரஜினியின் நடிப்பு ரொம்பவும் வித்தியாசப்பட்டது. அவரது ஸ்டைல் மக்களை கவர்ந்தது. வீடுகளில் தாய்மார்கள் குழந்தைகளிடம் ‘ரஜினி மாதிரி நடிச்சு காட்டுங்க’ என்று சொல்ல குழந்தைகள் நடித்து காட்டினார்கள். ரஜினியின் ஸ்டைல் மக்களிடம் புகழ்பெற்றது.

நாங்கள் ‘ஆண்பிள்ளை சிங்கம்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம். அதில் ரஜினியை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தோம். அவரிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம், நடந்துகொண்டே பேசினார். அவரது நடை, பேச்சு எல்லாவற்றிலும் ஒரு வித் தியாசம் தெரிந்தது. அவரிடம் ‘‘உங்கிட்ட நிறைய விஷயம் இருக்கு. இந்தச் சின்ன ரோலை கொடுத்து அதை வீணாக்க வேண்டாம். இன்னொரு சமயம் அழைக் கிறோம்’’ என்று கூறி அனுப்பி வைத்தோம்.

ஏவி.எம்மில் என்.எஸ்.மணி, மொய் தீன் இருவரும் தயாரிப்பு பிரிவு நிர்வாகி களாக வேலை பார்த்தனர். வாசுமேனன், ரெங்கசாமி ஐயங்கார் இருவரும் தயா ரிப்பு பிரிவில் தலைமை நிர்வாகிகளாக இருந்தனர். நால்வருமே தயாரிப்பு பிரிவுக்கு இலக்கணமாக இருந்தவர்கள். அப்போது ஏவி.எம்மில் ‘அன்னை’ என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார்கள். படத்தில் பானுமதி, சவுகார் ஜானகி இருவரும் நடித்தனர். பானுமதி எதை யுமே சாமானியமாக ஒப்புக்கொண்டு நடிக்க மாட்டார்.

சவுகார் ஜானகியும் அப்படித்தான். இவர்களை சமாளிப் பதற்கே தனித் திறமை வேண்டும், அத்துடன் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. அதில் பஞ்சு அவர்கள் கடும் கோபக்காரர். அவரையும் சமாளிக்க வேண்டும். இவ்வளவையும் சமாளித்து வேலை பார்த்த நிர்வாகிதான் என்.எஸ். மணி. அவருக்கு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை எழுந்து என்னிடம் வந்தார். ‘‘நீங்கள்தான் இயக்க வேண்டும்’’ என்றார். ஒப்புக்கொண்டு எஸ்.என்.எம் பிக்சர் என்ற பெயரில் பட கம்பெனியை தொடங்கினோம்.

என்ன சப்ஜக்ட் எடுக்கலாம் என்று தேடியபோதுதான் எழுத்தாளர் மகரிஷி ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதை வாங்கிப் படியுங்கள் என்றார்கள். வாங்கிப் படித்தோம். கதை எல்லோருக் கும் பிடித்தது. சேலம் சென்று மகரிஷியைப் பார்த்து அந்த நாவலை படமாக்கும் உரிமையை வாங்கினோம்.

கதை கிடைத்துவிட்டது. எங்கள் சமஸ்தான ரைட்டர் பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஹீரோவாக இருந்துகொண்டு தப்பு செய்பவர் ஒருவர். வில்லனாக இருந்துகொண்டு நல்லது செய்பவர் மற்றொருவர். புலித் தோல் போர்த்திக்கொண்டு பசுவாகவும், பசுத் தோல் போர்த்திக்கொண்டு புலியாகவும் நடிக்கும் கதாபாத்திரங்கள். தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த சிவகுமாரிடம் ஹீரோவாக இருந்துகொண்டு வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரம் உங்களுக்கு என்றோம். கொஞ்சம் தயங்கினார். நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. சிவாஜி கூட வில்லனாக நடித்திருக்கிறார்’’ என்று கூறினோம். அவரும் சம்மதித்து சரியாக புரிந்துகொண்டு நடித்துக்கொடுத்தார். படத்தில் அவருக்கு ஜோடி ஜெயா. அவரால் கெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட கதாபாத்திரத்தில் சுமித்ரா.

வில்லனாக இருந்துகொண்டு நல்லது செய்யும் கதாபாத்திரத்துக்கு முன்பு நாங்கள் சந்தித்த ரஜினிகாந்த் சரியாக இருப்பார் என்று முடிவு செய்து அழைத்தோம். விஷயத்தை சொன்னோம். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். ஷூட்டிங் வேலைகளைத் தொடங்கினோம். வாசுமேனனுடைய வாசு ஸ்டுடியோவில் ரஜினிக்கு முதல் நாள் படப்பிடிப்பு. ஏவி.எம்மில் துணை இயக்குநராக இருந்தவர் லட்சுமி நாரா யணன். அவரிடம் 7 வது உதவியாளனாக நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர் தான் பாடகி பி.சுசிலாவுக்கு, எஸ்.ஜானகிக்கு எல்லாம் தமிழ் கற்றுக் கொடுத்தவர். ‘களத்தூர் கண்ணம்மா’ வில் கமல் பேசும் வசனத்தையும் அவர்தான் சொல்லிக் கொடுத்தவர்.

அப்படிப்பட்ட வாத்தியார் லட்சுமி நாராயணனை ரஜினிக்கு டயலாக்கை சொல்லிக் கொடுக்குமாறு சொல்லி விட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் செட்டுக்குள் போய் லைட்டிங் வேலைகளைப் பார்த்தோம். வெளியே வந்து பார்த்தால் ரஜினியைக் காண வில்லை. எங்கே போனார் ரஜினி?

spmraman_2352310a_2490243a.jpg

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/சினிமா-எடுத்துப்-பார்-40-இரண்டு-கண்களைக்-கொடுத்த-கேபி/article8072326.ece

 

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 41: கமலும் ரஜினியும் இணைந்து நடித்தது எந்தப் படம்?

எஸ்பி.முத்துராமன்

 
 
படங்கள் உதவி: ஞானம்
படங்கள் உதவி: ஞானம்

‘புவனா ஒரு கேள்விக்குறி’ ஷூட்டிங் கில் வாத்தியார் லட்சுமி நாரா யணனை ரஜினிக்கு வசனம் சொல் லித் தர சொல்லிவிட்டு, ஒளிப்பதிவாளர் பாபுவும் நானும் செட்டுக்குள் சென்று லைட்டிங் வேலைகளைக் கவனிக்கச் சென்றோம். திடீரென்று ரஜினியைக் காணவில்லை. எங்கே என்று தேடிய போது ஒரு புரொடெக்‌ஷன் பையன் ‘ரஜினி வாசல் பக்கம் போய்க் கொண் டிருக்கிறார்’ என்றார். அப்போது ரஜினி யிடம் கார் இல்லை. எங்கள் நிர்வாகியை அனுப்பி உடனே அழைத்து வரச் செய் தோம். வந்தவரிடம் என்ன விஷயம் என்று கேட்டோம். ‘‘பாலசந்தர் சார் படத்துல மொத்த வசனமுமே இவ்வளவுதான் இருக்கும். நீங்க ஒரு காட்சிக்கே இவ்வளவு வசனம் கொடுக்குறீங்க. என்னால பேசி நடிக்கிறது கஷ்டம்’’ என்றார். ‘‘முழு வசனத்தையும் ஒரே ஷாட்டில் எடுக்க மாட்டோம். பிரிச்சுப் பிரிச்சுதான் எடுப்போம். உங்களால எவ்வளவு பேச முடியுமோ, அதையும் உங்க ஸ்டைல்ல பேசுங்க, போதும்’’ என்றதும் ஒப்புக்கொண்டார்.

கதைப்படி சிவகுமார் தவறு செய்து விட்டு வருவார். அதனை தெரிந்து கொண்ட ரஜினி அவரை கண்டிப்பார். அதற்கு சிவகுமார், ‘‘பத்தோடு பதி னொண்ணு விட்றா’’ என்பார். உடனே ரஜினி ‘‘கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சா அது செரிக் காது. வயித்த கிழிச்சுக்கிட்டு வெளியே வரும்’’ என்று அழுத்தமாகச் சொல்வார். அன்றைக்கே பஞ்சு அருணாசலம் எழுதிய ‘பஞ்ச்’ டயலாக் அது. ரஜினி சொன்ன ஸ்டைலில் அது மக்களிடம் கைத்தட்டலை பெற்றது. அன்றைக்கு தமிழ் வசனம் பேச பயந்த அதே ரஜினி தான் இன்றைக்கு ‘சும்மா அதிரு துல்ல’ என பஞ்ச் வசனம் பேசி அதிர வைக்கிறார். அதற்குக் காரணம் ரஜினி யின் ஈடுபாடு, உழைப்பு, முயற்சிதான்!

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் ரஜினி, மீரா இருவரும் காதலர்கள். இருவரும் ‘விழியிலே மலர்ந்தது/உயிரிலே கலந்தது/பெண்ணென்னும் பொன்னழகே/ அடடா எங்கெங்கும் உன்னழகே’ என்ற டூயட் பாடுவார்கள். பாடலை எழுதியவர் பஞ்சு அருணா சலம்; இசையமைத்தவர் இளையராஜா. அதில் இருந்த இனிமை இன்றும் இனிக் கிறது. என்றும் இனிக்கும். ஒரு காட்சியில் மீராவை மாடு துரத்தும், அதை பார்த்த ரஜினி அவரை காப்பாற்றப் பின் தொடர்ந்து ஓடுவார். மீரா, ஒரு பாழ் கிணற்றில் விழுந்துவிடுவார். ரஜினி கிணற்றில் குதித்து மீராவை தூக்குவார்.

இந்தக் காட்சிக்காக கிணறு கிடைக்கா மல் தேடி அலைந்தோம். கடைசியில் காட்சிக்குப் பொருத்தமான கிணறு போரூர் அருகே கிடைத்தது. ஷூட்டிங் சமயத்தில் ரஜினியும் மீராவும் கிணற்றில் இருந்து வெளியே வரும்போது, ஒரே துர்நாற்றம். எங்களால் அருகில் நிற்க முடியவில்லை. மொத்த யூனிட் ஆட்களும் தண்ணீரை ஊற்றி அவர் களை சுத்தம் செய்தோம். நாங்கள் படமாக்கிய கிணற்றில்தான் மொத்த போரூர் சாக்கடை நீரும் வந்து சேர்கிறது என்பது பிறகுதான் தெரிந்தது. ‘‘எதுவுமே விசாரிக்காமல் உங்களை கிணற்றில் குதிக்க வைத்தது என் தப்புதான்’’ என்று ரஜினியிடம் மன்னிப்பு கேட்டேன். உடனே ரஜினி, ‘‘சார் அதையெல்லாம் விடுங்க. காட்சி நல்லா வந்திருக்கா, அதை சொல்லுங்க’’ என்றார். அதுதான் ரஜினி. அவரின் பெருந்தன்மைக்கு நாங்கள் நன்றி சொன்னோம்.

தடாவில் ஒரு பாடல் காட்சியைப் பட மாக்க புறப்பட்டோம். அங்கு படப்பிடிப்பு சமயத்தில் திடீரென பிளே பேக் மெஷின் கெட்டுப்போனது. அது இருந்தால்தான் பாட்டைப் போட்டு பாடல் காட்சியைப் படமாக்க முடியும். எவ்வளவோ முயற் சித்தும் சரிசெய்ய முடியவில்லை. முழு யூனிட்டும் சென்னைக்குப் போய் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வந்தால் செலவு அதிகமாகும். ரஜினியை மட்டும் சென்னைக்குச் சென்று வர ஏற்பாடு செய்துவிட்டு, நாங்கள் அனைவரும் அங்கேயே தங்க முடிவு செய்தோம்.

அப்போது ரஜினி, ‘‘நீங்க எல்லாரும் இங்கே தங்குறப்ப நான் மட்டும் ஏன் சென்னைக்குப் போயிட்டு வரணும்’’ என்றார். ‘‘இங்கே எந்த அடிப்படை வசதி யும் இல்லை; அதோ அந்த டீக் கடைக் காரர் சப்பாத்தி செய்து தருவதாகக் கூறியுள்ளார்; அந்த வீட்டு மொட்டை மாடி யில் படுக்கப் போகிறோம்’’ என்றோம். அதற்கு ரஜினி, ‘‘நீங்கள்லாம் என்ன செய்றீங்களோ, அதையே நானும் செய்து கொள்வேன்’’ என்று கூறி எங்களோடு டீக்கடை சப்பாத்தியைச் சாப்பிட்டு, மொட்டை மாடியில் உறங்கி, ஆற்றில் குளித்து முடித்து படப்பிடிப்புக்கு வந்து விட்டார். ஹீரோ என்கிற உணர்வு துளியும் இல்லை அவருக்கு. அன்று முதல் இன்று வரை அதே மாதிரிதான் பழகு கிறார். நிறைய புகழ் வந்துவிட்ட பிறகும் ஒருபோதும் அதை தலையில் தூக்கி வைத்துக் கொள்வதில்லை. கேமரா வுக்கு முன்னால் மட்டுமே நடிக்கிறார். கேமராவுக்கு பின்னால் மனிதநேயமுள்ள மனிதராக நடக்கிறார். பொய் சொல்லும் பழக்கமே இல்லாதவர். அவரு டைய 25 படங்களை இயக்கியிருக்கிறேன் என்பதில் எங்கள் குழுவுக்கு பெரிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை ‘தி இந்து’ மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள் வதில் இன்னும் மகிழ்ச்சி!

சுமித்ராவிடம் தவறாக நடந்து கொண்ட சிவகுமார், ஒருகட்டத்தில் அவரை கை கழுவி விடுவார். இதை அறிந்த ரஜினி சுமித்ராவை அழைத்துக் கொண்டுபோய் வாழ வைப்பார். ஊர் உலகத்துக்காக இருவரும் கணவன் - மனைவியாக நடிப்பார்கள். ஒருகட்டத் தில் ரஜினி, ‘‘ஏன் நாம் நடிக்க வேண்டும்? உண்மையான கணவன் மனைவியாக ஆகிவிட்டால் என்ன?’’ என்று சுமித்ரா விடம் கேட்பார். அதற்கு சுமித்ரா ‘‘உங்கள நான் தெய்வமா நினைக்கிறேன். நான் அழுகிப் போன பூ. என் தெய்வத்துக்கு அழுகின பூவை அர்ப்பணிக்க விருப்ப மில்லை. உங்க மேல இருக்கும் நம் பிக்கையிலதான் என் அறை கதவைக்கூட மூடுறதில்லை. ஒரு திரையை மட்டும் போட்டு வெச்சிருக்கேன். நான் சொல் றதை ஏத்துக்கலன்னா நீங்க எப்போ வேணும்னாலும் என் அறைக்குள்ள வரலாம்’’ என்று சொல்லிவிட்டு அறைக் குள் போய்விடுவார்.

ரஜினி அப்போது அசந்துபோய் ‘ராஜா என்பார்/மந்திரி என்பார்/ராஜ்ஜியம் இல்லை ஆள’. என்று பாடுவார். காட்சி யின் கருத்தாழத்தை அந்தப் பாடல் உணர்த்தும். ரஜினி சுமித்ரா இருவரின் நடிப்பும் அசத்தலாக இருக்கும். பஞ்சு அருணாசலத்தின் வரிகளும் இளைய ராஜாவின் இசையும் கதையை கண் முன் கொண்டுவந்து நிறுத்திவி்டும். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ பெரும் வெற்றி பெற் றது. ரஜினிக்கு ஸ்டைல் மட்டும்தான் தெரியும் என்று நினைத்த மக்கள் அவரை சிறந்த குணச்சித்திர கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். பத்திரிகைகள் பாராட்டின. ரஜினியின் வெற்றிப்படிகளில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’யும் ஒன்று.

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் சிறந்த வாய்ப்புகளை நான் பெற்றவன். இருவரைப் பற்றியும் மாறி மாறி எழுதப் போகிறேன். ஒரு படத்தில் என் இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்தார்கள். அது எந்தப் படம்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-41-கமலும்-ரஜினியும்-இணைந்து-நடித்தது-எந்தப்-படம்/article8100467.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 42: ஆடு புலி ஆட்டம்

எஸ்பி.முத்துராமன்

 
 
  • ‘ஆடு புலி ஆட்டம்’ (1977) படத்தில் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்
    ‘ஆடு புலி ஆட்டம்’ (1977) படத்தில் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்
  • ‘மோகம் முப்பது வருஷம்’ படத்தில் கமல்ஹாசன் - சுமித்ரா | படங்கள் உதவி: ஞானம்
    ‘மோகம் முப்பது வருஷம்’ படத்தில் கமல்ஹாசன் - சுமித்ரா | படங்கள் உதவி: ஞானம்

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த படம் ‘ஆடு புலி ஆட்டம்’. கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன். இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல; சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி. ‘இளமை கலந்த’ இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

அந்தக் காலத்தில் பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர். அதன் பிறகு சிவாஜி - எம்.ஜி.ஆர். அவர்கள் வழியில் கமல் - ரஜினி. இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. அதிலும் குறிப்பாக சிவாஜி - எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மோதல் போர்க்களமாகிவிடும். சிவாஜி எம்.ஜி.ஆர் சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ ஓடிய தியேட்டரில் ஒரே கூச்சலும், விசிலும் காதை செவிடாக்கியது. அந்த இரண்டு மகா கலைஞர்களின் ரசிகர்களும் இப்போதும் அவர்களைத் தெய்வமாகவே நினைக்கிறார்கள்.

கே.பாலசந்தர் பட்டறையில் உருவானவர்கள் கமலும் ரஜினியும். அதனாலேயே இருவரிடையே நல்ல நட்பு தொடர்கிறது. ஆடுபுலி ஆட்டம்’ படத்தின் திரைக்கதை - வசனத்தை மகேந்திரன் எழுதியிருந்தார். என்னோடு அவர் பல படங்களில் பணியாற்றியுள்ளார். நல்ல படைப்பாளியான அவருடைய ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

இயக்குநர் சங்கம் நடத்திய ‘டி - 40’ விழா மேடையில் ரஜினியை கே.பாலசந்தர் சார் பேட்டியெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கே.பாலசந்தர் சார் ரஜினியிடம் ‘‘நீ நடித்ததில் உனக்குப் பிடித்த படம் எது?’’ என்று கேட்டார். ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோருமே ஆவலோடு எதிர்பார்த் தார்கள். ரஜினி, ‘‘முள்ளும் மலரும்’’ என்றார். ரஜினியின் திறந்த மனதுக்குப் பெரிய கைதட்டல். இப்படி ரஜினியால் விரும்பப்படுகிற டைரக்டர் மகேந்திரனின் திரைக்கதை வசனம் ‘ஆடு புலி ஆட்டம்’ படத்துக்கு பலம் சேர்த்தது. படத்துக்கு இசையமைத்தவர் விஜய பாஸ்கர்.

அப்போதெல்லாம் வெளியூர்களில் படப்பிடிப்பு நடத்த பட்ஜெட் ஒத்து வராது. எனவே, விஜயா கார்டன், வி.ஜி.பி தங்கக் கடற்கரையில்தான் பாடல்களைப் படமாக்குவோம். ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில் ‘உறவே புதுமை/நினைவே இளமை’ என்ற பாடலில் கமல் சைக் கிளில் சங்கீதாவை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் சுற்றி வருவார். அப்போ தெல்லாம் அங்கு பசுமையான வயல்கள் இருந்தன. அந்தச் சூழலில் பாடலும் குளுமையாக அமைந்தது. அப்படத்தில் கமல் முஸ்லிம் தோற்றத்தில் பாடும் ‘வானுக்கு தந்தை எவனோ/ மண்ணுக்கு மூலம் எவனோ’ என்ற பிரபலமான பாடல் மக்கள் மத்தியில் மத ஒற்றுமைக்கான விழிப்புணர்வை உண்டாக்கியது. கதையும் ஆக்‌ஷனும் கலந்த அப்படம் வெற்றிப்படமானது. ‘‘இன்றைக்கும் ‘ஆடு புலி ஆட்டம்’வசூல் எனக்கு சோறு போடுகிறது’’ என்று நன்றியோடு சொல்வார் தயாரிப்பாளர் சாந்தி நாராயணன்.

இதே தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படம் கணவன்- மனைவி அந்தரங்கம் பற்றியது. அதில் கமல் நாயகன். அந்தப் படம் ‘மோகம் முப்பது வருஷம்’. ‘ஆனந்த விகடன்’ மணியன் எழுதிய நாவல் அது. இந்தப் படத்துக் கும் மகேந்திரன் சார்தான் திரைக்கதை - வசனம் எழுதினார். இசை விஜயபாஸ்கர். கணவன் மனைவியின் அந்தரங்கம் என்பது அசிங்கமான விஷயமில்லை; அது பேரின்பம். மோகம் முப்பது நாள் இல்லை… முப்பது வருஷம் என்பதை முன்வைத்து இக்கதையைப் படமாக்கினோம்.

இதில் கமலுக்கு ஜோடி சுமித்ரா. கமல் வெளிநாட்டில் படித்த மாடர்ன் பையன். சொந்தம் விட்டுவிடக்கூடாது என பட்டிக்காட்டில் வளர்ந்த உறவுப் பெண் சுமித்ராவை கமலுக்கு திருமணம் செய்துவைப்பார்கள். மற்றொரு நாயகன் விஜயகுமார். இவர் ஓர் ஓவியர். பெண்களை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம்கொண்ட விஜயகுமார், அந்த நேசத்தை ஒருநாளும் அவரது மனைவி படாபட் ஜெயலட்சுமியிடம் காட்ட மாட்டார். இப்படத்தில் படாபட் ஜெயலட்சுமி விரகதாபம் கொண்ட பெண்ணாக நடித்தார்.

கமல், தன் மனைவி சுமித்ராவுக்கு ஆசை ஆசையாக மல்லிகைப் பூ வாங்கி வந்து எழுப்புவார். சுமித்ரா, ‘‘அந்தப் பூவை அதோ அந்த சாமி படத்துல போடுங்க. எனக்கு தூக்கம் வருது. என்னை எங்க பாட்டி 8 மணிக்கெல்லாம் தூங்க வெச்சிப் பழக்கிட்டாங்க’’ என்று கூறுவார். அப்படி ஒரு வெகுளியாக சுமித்ரா நடித்தார். படப்பிடிப்பில் ஏதா வது நகைச்சுவையாக பேசினால்கூட தாமதமாகப் புரிந்துகொண்டு, 5 நிமி ஷத்துக்குப் பிறகுதான் சிரிப்பார். அத னாலயே சுமித்ராவுக்கு ‘டியூப்லைட்’ என்று கிண்டலாகப் பெயர் வைத்திருந்தோம்.

இப்படத்தில் ஸ்ரீபிரியாவும் உண்டு. இவருக்கு கமலை ஒருதலையாகக் காதல் செய்யும் கதாபாத்திரம். ‘‘உனக்குக் கல்யாணமாச்சு. நிச்சயம் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டே. உன்கிட்டே ஒரே ஒரு வேண்டு கோள். அது தவறான வேண்டுகோள் தான். எனக்கு ஒரு குழந்தையை மட்டும் கொடு. அந்த ஞாபகத்திலேயே வாழ்ந்துவிடுகிறேன்’’ என்பார். உடனே கமல் ஷோகேசில் இருந்து ஒரு குழந்தை பொம்மையை எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பார். ஸ்ரீபிரியாவின் கேள்விக்கு கமலுடைய ரியாக்‌ஷன் அவரது கண்ணியத்தைக் காட்டும்.

இந்த மாதிரியான சூழலில் கமலும் படாபட் ஜெயலட்சுமியும் தனியே சந்திக்கும் வாய்ப்பு நிகழும். இருவரும் தப்பு பண்ண முயற்சிப்பது போல் காட்சிகளை பில்டப் செய்து, கடைசியில் அதை தவறு என்று உணர்த்தி, கணவன்-மனைவி உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்போம். படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் - சுகுமாரி இருவரும் கணவன் - மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்ன பேச வேண்டும்? தாம்பத்ய வாழ்க்கையை எப்படி இனிமையாக நகர்த்த வேண்டும் என்பதை கமல் - சுமித்ரா, விஜயகுமார் படாபட் ஜெயலட்சுமி ஜோடிகளுக்கு முன்பாக வாழ்ந்து காட்டுவார்கள்.

கணவன் - மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை விரசம் இல்லாமல், எளிமையாகவும் மென்மையாகவும் சொன்னதால்தான் மக்கள் அந்தப் படத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

கமல் படம் பற்றி சொல்லிவிட்டேன். அடுத்து, ரஜினியைப் பற்றி சொல்ல வேண்டும். ஒருமுறை பஞ்சு அருணா சலம் அவர்கள், ‘‘தொடர்ந்து ஒரே மாதிரியான படமாக எடுத்துக்கொண்டிருக்கிறோமே, வித்தியாசமாக ஒரு படம் எடுப்போமா?’ என்றார். அதற்கு நான் ‘‘எந்த மாதிரி எடுப்போம்?’’ என்றேன். ‘‘முழுப் படத்தையும் வெளிநாட்டில் படமாக்குவோம்’’ என்றார். ‘‘செலவு அதிகம் ஆகுமே?’’ என்றேன் நான்.

‘‘அதுக்கு என்னிடம் ஒரு ஐடியா இருக்கு’’ என்றார். என்ன ஐடியா அது?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-42-ஆடு-புலி-ஆட்டம்/article8128178.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 43: அறையில் அழுது கொண்டு இருந்த ஸ்ரீதேவி!

 

 
  • ‘ப்ரியா’ படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி (1978)
    ‘ப்ரியா’ படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி (1978)
  • 1_2712373g.jpg
     

வெளிநாட்டில் வித்தியாசமாக எடுக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தை, தமிழில் மட்டும் எடுத்தால் பொருட்செலவு அதிகமாகும்; நிச்சயம் கையைக் கடிக்கும். அதனால் கன்னடத்திலும் சேர்த்து எடுக்கலாம் என்ற ஐடியாவை பஞ்சு அருணாசலம் கூறினார். கன்னடத்தில் எடுக்கத் தயாரிப் பாளர் ராஜண்ணாவும் தயாராக இருந் தார். அந்தப் படம் ‘ப்ரியா’. இந்தப் படத் தைப் பற்றி இந்த வாரம் எழுதும் போது நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். 1978-ம் வருஷ சிங்கப்பூருக்கும் 2016 சிங்கப்பூருக்கும் எவ்வளவு மாற்றங்கள்!

முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒரு முறை ‘‘சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர் களுக்குப் பங்கு உண்டு. தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் இந்த மண்ணில் கலந்துள்ளது’’ என்றார். சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பது நமக்குப் பெருமை.

சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழர்களோடு, இந்தியர், சீனக்காரர், மலேசியர் என பல நாட்டு இன மக்களும் ஒன்றாகக் கூடி பொங்கல் வைத்தனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ கோ பின் பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும் அவர் மனைவி பட்டுப் புடவை அணிந்தும் கலந்துகொண்டனர். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒரு மாமன்காரனாக தாய்நாட்டின் வாழ்த்து களை அவர்களுக்குக் கூறினேன். ‘ஒரே உலகம்; ஒரே இனம்’ என்று பார்க்க பூரிப்பாக இருந்தது

பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கேஎன். சுப்புதான் ‘ப்ரியா’ படத் தயாரிப் பாளர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’ நாவலைத்தான் படமாக்கினோம். வெளிநாடுகளில் நடக்கும் கதைக்களம். நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ‘ப்ரியா’ நாவலைப் படித்து கதையை உள்வாங் கிக்கொண்டோம். சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் திரைக்கதை வடிவத்தில் இருக்கும். பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கரின் படங் களில் சுஜாதாவின் பங்களிப்பு சிறப்புடன் இருந்தது. சிறந்த கணினி விஞ்ஞானியான அவர், அவ்வளவாக கணினி புழக்கத் துக்கு வராத காலத்திலேயே கமலுக்குக் கணினி கற்றுக்கொடுத்து, திரைப்பட உருவாக்க வேலைகளை அதில் செய்ய வைத்தார். எழுத்தாளர் சுஜாதாவை இந்தக் காலத்தின் ‘திருமூலர்’ என்றே சொல்லலாம். அவருடைய ‘ப்ரியா’ கதைக்கு பஞ்சு அருணாசலம் தன் எழுத் தின் மூலம் மேலும் மெருகேற்றினார்.

‘ப்ரியா’ பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாயகி தேவி. கன்னட நடிகர் அம்ரிஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என நடிகர்கள் தேர் வானார்கள். இளையராஜா புதுமையான பாடல்களை அற்புதமாக இசை அமைத்து, ‘இன்ரிகோ’ (INRECO) ஸ்டீரியோபோனிக் முறையில் ஒலிப் பதிவு செய்துகொடுத்தார். சூப்பர் ஸ்டா ரின் படத்துக்கு சூப்பராகவே பாடல்கள் அமைந்தன.

‘ப்ரியா’படத்தை சிங்கப்பூரில் படமாக் கும் வேலைகளைத் தொடங்கினோம். பொதுவாக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை மட்டுமே எடுப்பது ஒரு விதம். முழு படத்தையும் எடுப்பது சாதாரணமானது இல்லை. படப்பிடிப் புக்குப் புறப்பட்டபோது, செலவோடு செலவாக மளிகை பொருட்களை எடுத் துக்கொண்டு, உடன் சமையல்காரரை யும் அழைத்துச் சென்றோம். அதிகாலையில் படப்பிடிப்புக்குப் புறப்பட்டால் டிபன் ரெடி ஆகியிருக்காது. புகழ்பெற்ற நடன இயக்குநர் சோப்ரா மாஸ்டர் பிரட்டில் ஜாம் வைத்து காலை உணவை தயார் செய்துகொடுப்பார். பஞ்சாபிக்காரரான சோப்ரா நல்ல மனிதர்.

படத்துக்குத் தேவையான சில காட்சிகளை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் படமாக்க நினைத்தோம். ஏர்போர்ட் நிர் வாகத்தை அணுகியபோது, ‘‘பயணிகள் அதிகம் வந்து செல்லும் நேரத்தைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘‘தொகை எவ் வளவு கட்ட வேண்டும்?’’ என்று கேட் டோம். ‘‘இந்தப் படம் மூலமாக எங்கள் ஏர்போர்ட் பல நாட்டு மக்களுக்கும் தெரியப்போகிறது. இன்னும் பல நாட்டுக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவார்கள். உங்கள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்போது ஏன் பணம் வாங்க வேண்டும்? எதுவும் வேண்டாம்’’ என்றார்கள். சுற்றுலாத் துறைக்கு சிங்கப்பூர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.

sujatha_2712371a.jpg

படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் ஒரு விமானத்தை சில மணி நேரங்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது. சுற்றுலாவுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத் துவத்தை போல நமது இந்தியாவிலும் ‘இங்கே தடை; அங்கே தடை’என்று முட்டுக்கட்டை போடாமல் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். இந்தியாவில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறும் கஷ்டம் இங்கு சினிமா எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.

‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்’ என்ற இளமை துள்ளும் பாடலை சிங்கப்பூரில் அழகான ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண் டிய நாயகி தேவி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவர் அறையில் அழுது கொண்டு இருக்கிறார் என்றார்கள்.

ஏன்? ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம்...

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-43-அறையில்-அழுது-கொண்டு-இருந்த-ஸ்ரீதேவி/article8157197.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நவீனன் நாலஞ்சு நாளா தேவி அறைக்குள்ள அழுதுகொண்டு இருக்கின்றாரே, ஒரு எட்டு அறைக்குள்ளே போய் என்னன்டு கேட்கக் கூடாதா... அவ அழும் காரணம் உங்களுக்குத்தான் தெரியும்....!  tw_blush:

Link to comment
Share on other sites

16 minutes ago, suvy said:

ஏன் நவீனன் நாலஞ்சு நாளா தேவி அறைக்குள்ள அழுதுகொண்டு இருக்கின்றாரே, ஒரு எட்டு அறைக்குள்ளே போய் என்னன்டு கேட்கக் கூடாதா... அவ அழும் காரணம் உங்களுக்குத்தான் தெரியும்....!  tw_blush:

ஓஓ அதுவா..<_< ஏதோ ஸ்விம்மிங் ட்ரெஸ் பிரச்சனையாம்..:grin:

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 44: ஸ்ரீதேவியால் அழகான ஸ்விம்மிங் ஃபூல்!

எஸ்பி.முத்துராமன்

 
 
 
  • raji_2722001g.jpg
     
  • raji11_2722003g.jpg
     
  • raji1_2722002g.jpg
     

நான் எழுதும் ‘ப்ரியா’ ஷூட்டிங்கில் கலந்துகொள் ளாமல் அழுது கொண்டிருந்த தேவியைப் பார்க்க அவர் அறைக்குப் போனேன். அவருடைய தாய் ராஜேஸ்வரி என்னிடம் ‘‘ஸ்விம்மிங் டிரெஸ் போட்டுக்க மாட்டேன்’’ என்று அழுகிறாள் என்றார். நான் தேவியிடம் இந்தப் பாடலை நீச்சல் குளத்தில் எடுக் கணும். அதுக்கு ஸ்விம்மிங் டிரெஸ்தான் இயற்கையா இருக்கும். டபுள் பீஸ் ஸ்விம்மிங் டிரெஸ் வேண்டாம். சிங்கிள் பீஸ் ஸ்விம்மிங் டிரெஸ் போட்டுக்க’’ என்றேன். ஆனாலும் தேவி அரை மனதுடன் ஸ்விம்மிங் டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டார்.

ஸ்விம்மிங் டிரெஸ்ஸில் தேவி வந்ததும் அந்த அழகான ஸ்விம்மிங் ஃபூல் கூடுதல் பேரழகு பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் இளமை ததும்பும் ‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்…’ என்ற துள்ளல் பாடல், பாபுவின் ஒளிப்பதிவில் கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியாக அமைந்தது.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிங்கப்பூர், மலேசியப் பெண்களைத் தேடி னோம். அவர்களில் அஸ்னா என்ற பெண்ணை தேர்ந்தெடுத்தோம். படத்தில் அஸ்னாவுக்கு ரஜினி தமிழ் கற்றுக் கொடுப்பது போலவும், ரஜினிக்கு அஸ்னா மலேய மொழி கற்றுக் கொடுப்பது போலவும் காட்சிகள் வைத் தோம். இளையராஜா அதனை பாடலி லேயே இணைத்துக்கொண்டார். ‘என் உயிர் நீதானே.. உன் உயிர் நான்தானே…’ என்கிற அந்தப் பாடல் காட்சி அழகு நிறைந்த பூங்காக்களிலும், கிராண்ட் வீல் சுற்ற ரஜினியும் அஸ்னாவும் பயணிப்பதைப் போலவும் எடுக்கப் பட்டது.

ரஜினி, அஸ்னா வரும் அந்தக் காட்சியை கேமராவை தலைகீழாகக் கவிழ்த்து வைத்து எடுத்தோம். அப்போது கேமரா லென்ஸ் முன்னால் வைத்திருந்த ஃபில்டர் கீழே விழுந்துவிட்டது. அது உடைந்து சுக்கல் சுக்கலாக ஆகியிருக் கும் என்று பயத்தோடு தேடிப் பார்த் தோம். எங்கள் துணை இயக்குநர் வி.பி.மூர்த்தி, ‘‘கண்டுபிடித்தேன்... கண்டுபிடித்தேன்…’’ என்று கத்தினார். அந்த ஃபில்டர் எந்த சேதாரமும் இல்லாமல் ஒரு செடியின் மேல் உட்கார்ந்திருந்தது.

படப்பிடிப்புக்கு மத்தியில் சுவையான சில கலகல விளையாட்டுகளும் அரங் கேறும். எங்கள் மேக்கப் மேன் முத்தப்பா கருப்பாக இருப்பார். இல்லை இல்லை… அட்டக் கருப்பு! கதாநாயகி அஸ்னாவோ சிவப்பு. இல்லை இல்லை… சிவப்போ சிவப்பு! இவர்கள் இரண்டு பேரையும் பார்த்ததும் எங்களுக்கு ஓர் எண்ணம் உண்டானது. அந்தக் கருப்பையும் இந்தச் சிவப்பையும் கையைக் கோத்துக் கொண்டு சிங்கப்பூர் கடைத் தெருக்களில் நடக்க வைத்தால் எப்படியிருக்கும்?! அதை உடனே பரிசோதித்து பார்த்தோம். அஸ்னாவின் கைகளை இணைத்துக் கொண்டு முத்தப்பா காதல் ஜோடியைப் போல் நடக்க, அந்தக் கடைத் தெருவே அவர்களைத்தான் பார்த்தது. அதனை கண்டு படப்பிடிப்புக் குழுவே சிரித்து மகிழ்ந்தது.

சிங்கப்பூரில் உள்ள டைகர் பாம் கார்ட னின் சைனீஸ் மண்டபங்களில் ‘ஏ… பாடல் ஒன்று… ராகம் ஒன்று’ என்ற பாடலை படமாக்கினோம். அதை பகோடா டைப் மண்டபம் என்று சொல்வார்கள். அந்த மண்டபங்களுக்கு பொருத்தமாக ரஜினி, தேவி இருவரையும் சரித்திர கால உடைகளை அணிய வைத்து அழகு பார்த்தோம். ரஜினிக்கு எப்போதும் சரித்திர நாயகனாக நடிப்பதில் ஆசை உண்டு. ரஜினியும் தேவியும் அந்த உடையில் ராஜா - ராணியாகவே காட்சி அளித்தார்கள். கண்கவர் லொகேஷன், அழகு மின்னும் உடையலங்காரம், இனிமை மிதக்கும் பாடல்கள், கைதேர்ந்த நடிகர்கள், அசத்தலான நடனம், அழகிய ஒளிப்பதிவு என இத் தனையும் சேர்ந்தால் படமும், பாடல் களும் ஹிட் ஆகாதா, என்ன?

‘ப்ரியா’ படப்பிடிப்பு சமயத்தில் சிங்கப் பூரில் அந்த நாட்டின் சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தேறியது. அந்த விழாவை படமாக்க வேண்டும் என்று சிங்கப்பூர் சுற்றுலாத் துறையில் அனுமதி கேட்டோம். ‘‘அணி வகுப்புகளுக்கும் பார்வையாளர்களுக் கும் இடையூறு இல்லாமல் நீங்கள் படமெடுத்துக் கொள்ளலாம்’’ என்று அனுமதி கொடுத்தார்கள். சாலையோரங் களில் மக்கள் உட்காருவதற்காக கேலரி அமைத்திருந்தார்கள். அந்தக் கேலரியில் நம் நடிகர்களும் நடிகைகளும் உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்பது போல ஏற்பாடு செய்தேன். டிராகன் நடனம் உட்பட பலவிதமான ஆடல் கலைகள் சிங்கப் பூர் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொண்டன. எல்லாமுமே பார்ப் பதற்கு பிரம்மாண்டமாக இருந்தன.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த தேவியை வில்லன்கள் கடத்துவது போல கதை நகரும். சுதந்திர தின காட்சி களை அந்த விழாவில் எடுத்துக்கொண்டு, தேவியை வில்லன்கள் கடத்தும் அந்த கேலரி காட்சியை ஏவி.எம் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்தோம். உண்மையான விழாவையும், செட் போட்டு எடுத்த ஷாட்டுகளையும் சிறந்த முறையில் ஆர்.விட்டல் எடிட் செய்து கொடுத்தார். சிங்கப்பூரில் நடப்பதுபோலவே அமைந்திருந்தது. தொழில் நுணுக்கத்துக்குக் கிடைத்த பெருமை அது!

அந்தச் சுதந்திர தின விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ பேசும்போது, ‘‘படிப்பின் மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் டாக்டர்களை, இன்ஜினீயர்களை, வக்கீல்களை, கட்டிடக் கலை நிபுணர் களை, விஞ்ஞானிகளை உருவாக்க முடி யும். ஆனால், பொது வாழ்க்கை யில் சேவை செய்ய விரும்புகிறவர் களையும், அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களையும் நான் எப்படி அடையாளம் காண முடியும்? தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக முழுமையாக அர்ப்பணிக்கக் கூடிய இளைஞர்களை மக்கள் சேவைக்கும், அரசியலுக்கும் வருமாறு அழைக் கிறேன்’’ என்றார். அவர் சொல்லியது நம் நாட்டு இளைஞர்களுக்கும் பொருந்தும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பத்திரிகை யாளர்கள் ‘‘உலகத்தில் உங்களுக்கு யாரை சந்திக்க வேண்டும் என்று ஆசை?’’ என்று கேட்டபோது. அதற்கு ரஜினி, ‘‘சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை சந்திக்க ஆசை’’ என் றார். உண்மையிலேயே லீ குவான் யூ உலக நாடு களில் சிறந்த நாடாக சிங்கப் பூரை உருவாக்கியிருக் கிறார். நாங்கள் சிங்கப்பூரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹாங்காங் சென்றோம்.

அங்குள்ள பல மலைகளை உள்ளடக் கிக்கொண்ட ஓஷன் பார்க் என்ற பூங்கா உலகத் திலேயே சிறந்த பூங்கா. அதைப் பார்த்த ரஜினி ‘‘இங்கு சில காட்சிகளை எடுக்கலாமே’’ என்று தனது ஆசையை வெளியிட்டார். அங்குள்ளவர்கள் அதற்கு அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்றார்கள். என்ன செய்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்…

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-44-ஸ்ரீதேவியால்-அழகான-ஸ்விம்மிங்-பூல்/article8187675.ece

Link to comment
Share on other sites

சினிமா எடுத்துப் பார் 45: ரஜினியின் ஹாங்காங் சண்டை

 

ப்ரியா’ (1978) படத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி | ரஜினிக்கு சண்டை பயிற்சி அளிக்கும் ஹாங்காங் மாஸ்டர்
ப்ரியா’ (1978) படத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி | ரஜினிக்கு சண்டை பயிற்சி அளிக்கும் ஹாங்காங் மாஸ்டர்

ஹாங்காங்கில் வாழும் அருணாச்சலமும், அவர் மனைவி திருமதி அபிராமி அருணாசலமும் எங்களுக்காக அந்த நாட்டு அரசு அதிகாரிகளிடம் பேசினர். அந்நாட்டு அரசு அதிகாரிகள் என்னை அழைத்த னர். என்னைச் சுற்றி நான்கு பேர் அமர்ந்துகொண்டு வட்ட மேஜை மாநாடு மாதிரி அழகான ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். எனக்குத் தெரிந்த ஆங்கிலத் தில் அவர்களிடம் பேசினால் அசிங்கப் பட்டுவிடுவோம் என்று யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர்கள், ஒரு மீடியேட் டரை ஏற்பாடு செய்தனர். படப்பிடிப்பு விஷயத்தை விவரமாக சொன்னேன். ‘‘பொழுதுபோக்கு அம்சங்களோடு, நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது. எங்கள் பூங்காவுக்கும் பெயர் கிடைக்கும்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர்.

அவர்கள் என்னிடம் கேள்வி கேட்ட போது, ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாமல் போனதே என்று அவமானப் பட்டு தலைகுனிந்தேன். இதை இங்கு நான் சொல்ல காரணம் உள்ளது. நான் தேவகோட்டையில் தே.பிரித்தோ பள்ளியில்தான் படித்தேன். ரெவ். ஃபாதர் மச்சாடொ சாமியார்தான் பள்ளிக்குத் தலைவர். தலைமையாசிரியரும் அவர் தான். அவர்தான் ஆங்கில வகுப்பு எடுப்பார். அவர் ஆங்கில இலக்கண வகுப்பு எடுக்கும்போது எனக்கு ரொம்ப வும் கசக்கும். நான்தான் பள்ளி மாணவர் தலைவன் என்பதால், ‘‘ஆண்டு விழா சம்பந்தமாக அவரைப் பார்க் கணும், இவர்கிட்ட பேசணும்’’னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு வகுப்புக் குப் போவதைத் தவிர்ப்பேன். அப்போ தெல்லாம் வாத்தியாரை ஏமாற்றிவிட்ட தாக மனதில் நினைத்துக்கொள்வேன். ஆனால், உண்மையில் என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன். அன்று ஹாங் காங் நாட்டில் ஆங்கிலம் பேச முடியாமல் அவமானப்பட்டு நின்றபோது மிகவும் வருத்தப்பட்டேன்.

இந்தக் கால இளைஞர்களுக்காகத் தான் இதைத் சொல்கிறேன். வாய்ப்பு அமையும்போது மொழி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் போட்டித் தேர்வு, நேர்காணல் உட்பட பல இடங்களில் உங்களுக்குக் கை கொடுக்கும். நான் அன்றைக்கு இந்தி, ஆங்கிலப் புலமை பெற்றிருந்தால் இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட அடையாளம் மிக்க இயக்குந ராக பெயர் வாங்கியிக்க முடியும். கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்தாததால் அன்று வாய்ப்பு களை இழந்தேன். இதை என் அனுபவ உரையாக எடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக ஸ்போக்கன் இங்கிலீஷில் கவனம் செலுத்துங்கள்.

படப்பிடிப்பை நடத்த அனுமதி கிடைத்ததும் ஓஷோன் பூங்காவில் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அடுக் கடுக்காக பல மலைகளைக் கொண்ட இடம் அது. ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு காட்சி. யூனிட்டில் குறை வான ஆட்களோடு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தோம். அங்கே படப்பிடிப்புக் கான பொருட்களைத் தூக்கிச் செல்ல கூலி ஆட்கள் கிடைக்கவில்லை. நாங்களே தூக்கிக்கொண்டுப் புறப்பட் டோம். எங்களோடுச் சேர்ந்து ரஜினியும் இரண்டு பேட்டரிகளைத் தூக்கி தோள்பட்டையின் வலதுப் பக்கமும் இடதுப் பக்கமும் சுமந்துகொண்டு மலையேறினார்.

‘‘எதுக்கு ரஜினி… நீங்கப் போய் அதுவும் ரெண்டு தோள்லேயும் தூக்கிட்டு..?’’ என்று கவலையுடன் கேட்டேன். ‘‘லெஃப்ட்ல போட்டா ரைட்ல இழுக்குது. ரைட்ல போட்டா லெஃப்ட்ல இழுக்குது. அதான் ரெண்டு பக்கமும் தூக்கி வெச்சுக்கிட்டேன்’’ என்று இயல்பாக பதில் சொன்னார் ரஜினி. தான் ஒரு பிரபலமான கதாநாயகன் என்கிற நினைப்பு துளியும் இல்லாமல், எங்கள் குழுவில் ஒருவராக இணைந்து பணியாற்றினார். இப்படி ஓர் எளிய மனிதரை சினிமா உலகில் பார்ப்பது அபூர்வம்.

சண்டை காட்சியைப் படமாக்க ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தப் பயிற்சி யாளரை வைத்துக்கொண்டோம். அந்த சண்டை காட்சியின் முதல் ஷாட்டை எடுக்கும்போது அந்த ஹாங்காங் மாஸ்டர் பூமியைத் தொட்டு வணங்கி விட்டு, சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அதை பார்த்ததும் எனக்கும் ரஜினிக்கும் ஒரே ஆச்சரியம். நம்ம ஜூடோ ரத்தினம் மாஸ்டர் இப்படித் தானே நமஸ்காரம் செய்வார். இதையே இவரும் செய்கிறாரே என்று, அவ ரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர் ‘‘குங்பூ, கராத்தே எல்லாம் போதி தர்மர்னு ஒருத்தர் எங்கள் முன்னோர் களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அவர் எங்கள் முன்னோர் களுக்கு கற்றுக்கொடுத்ததைத்தான் இன்றைக்கு நாங்கள் புதுமைப்படுத்தி மற்றவர்களுக்குக் கற்றுத் தருகிறோம்’’ என்றார். இவ்வளவு அரிய பெரும் சாதனைகளுக்கு எல்லாம் தொடக்கம் நாம்தான் என்பதை உணர வைக்கத் தான் இதனை உங்களுக்கு விளக்கமாக எழுதுகிறேன்.

அங்கு நாங்கள் எடுத்த டால்ஃபின் ஷோ ரொம்ப சிறப்பானது. இசைக்கு ஏற்ற மாதிரி டால்ஃபின் நடனம் ஆடும். ஒரு டால்ஃபினை மட்டும் வித்தியாசமாக ஆட வைக்கும் முயற்சியில் அதன் பயிற்சியாளர் ஈடுபட்டார். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த டால்ஃபின் ஆட மறுத்தது. ‘‘முடியலைன்னா விட்டு விடலாமே?’’ என்று நாங்கள் சொன் னதற்கு, ‘‘இன்னைக்கு விட்டுவிட்டால் தொடர்ந்து செய்யாது’’ என்று தொடர்ந்து முயற்சித்து டால்ஃபினை ஆட வைத்துவிட்டார்.

இரண்டு கார்களோடு படப்பிடிப்புப் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்காக ஒரு மினி லாரியையும் வாடகைக்கு எடுத்திருந்தோம். சீனக்காரர் ஒருவர்தான் ஓட்டுநர். மினி லாரியில் ஆட்களை ஏற்றக் கூடாது. தவிர்க்க முடியாத நேரங்களில் சில பேர் அந்த மினி லாரியில் ஏறிக்கொள்வோம். அவருக்கு போலீஸ் பரிசோதனை இடங்கள் அனைத் தும் அத்துப்படி. மினி லாரியில் செல் லும்போது திடீரென்று ‘கிக்கிபிக்கி… கிக்கிபிக்கி…’ என்று கத்துவார். அப்போது நாங்கள் வெளியே தலை தெரியாத அளவுக்கு கீழே மறைந்துகொள் வோம். மீண்டும், ‘மேக்கே… மேம்மே…’ என்று சத்தம் போடுவார். அப் போது நாங்கள் எழுந்துகொள்வோம். அந்த அளவுக்கு அவர் உதவியாக இருந்தார்.

ஒருநாள் சீக்கிரமே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரஜினி, தேவி மற்றும் குழுவினரை எல்லாம் ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் மினி லாரி ஓட்டுநரிடம் ‘‘உயரமான இடத்தில் இருந்து விமானம் புறப்படுவதைப் படமெடுக்க வேண்டும். அந்த மாதிரி இடம் உங்களுக்குத் தெரியுமா?’’ என்று அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டோம். அவரும் தலையாட்டினார். நாங்கள் அவரது மினி லாரியில் புறப்பட்டோம். மலையின் மேலே தொடர்ந்து போய்கொண்டே இருந்தார் ஓட்டுநர். நாங்கள் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் எங்களை வேறு எங்கோ அழைத்து போகிறாரோ என்று பதற்றம் ஏற்பட்டது. நாங்கள் கேட்ட உயரமான இடத்தை அந்த ஓட்டுநர் எங்களுக்குக் காட்டினாரா? அல்லது எங்களை நடுக்காடு மாதிரி நடுமலையில் தவிக்கவிட்டாரா?

- இன்னும் படம் பார்ப்போம்...

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-எடுத்துப்-பார்-45-ரஜினியின்-ஹாங்காங்-சண்டை/article8217835.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயரமான இடம் இன்னுமா கிடைக்கவில்லை....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.