Jump to content

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2016


Recommended Posts

யாழ். சென். ஜோன்ஸ் - குரு­நாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

 

யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குரு­நாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற பாட­சாலை கிரிக்கட் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

cricket.jpg

இந்தப் போட்­டியில் துடுப்­பாட்­டத்தில் எவரும் குறிப்­பிட்டுக் கூறு­ம­ள­வுக்கு பிர­கா­சிக்­கா­த­போ­திலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்­க­ளான யதுசன் வசந்தன்இ கானா­மிர்தன் அரு­ளா­னந்தம் ஆகிய இரு­வரும் ஓர் இன்­னிங்ஸில் தலா 5 விக்கெட்­டுக்களைக் கைப்­பற்றி பந்­து­வீச்சில் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

நத்தார் பண்­டி­கைக்கு முன்னர் கண்டி திரித்­துவ கல்­லூ­ரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்­றி கொண்­டி­ருந்த செய்ன் ஜோன்ஸ் அணி­யினால் இந்தப் போட்­டியில் சாதிக்க முடி­யாமல் பொனது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட தீர்­மா­னித்த புனித ஆனாள் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கட்­க­ளையும் இழந்து 153 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றது.

துடுப்­பாட்­டத்தில் ரந்­தீர ரன­சிங்க (40), நிப்புன் அஷோக் (34) ஆகிய இரு­வரும் அணிக்­கான அதி­க­பட்ச ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

ஜோன்ஸ் பந்­து­வீச்சில் யதுசன் வசந்தன் 5 ஓட்­ட­மற்ற ஓவர்கள் அடங்­க­லாக 14 ஓவர் கள் வீசி 26 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்கெட்டுக்­களைக் கைப்­பற்­றினார். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய செய்ன் ஜோன்ஸ் முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கட்­க­ளையும்

இழந்து 204 ஓட்­டங்­களைப் பெற்­றது. ஹெரல்ட் லஸ்கி அம­ர­சேன (45), யதுசன் வசந்தன் (37), நிலோஜன் மகா­லிங்கம் (31) ஆகிய மூவரும் சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்­தனர்.

பந்­து­வீச்சில் ரந்­தீரஇ வனித்த, பியுமல், நிப்புன் ஆகிய நால்­வரும் தலா 2 விக்­கெட்டுக்களைக் கைப்­பற்­றினர். புனித ஆனாள் இரண்­டா­வது இன்­னிங்ஸில் சகல விக்­கெட்டுக்­க­ளையும் இழந்து 204 ஓட்­டங்­களைப் பெற்­ற­துடன் ஆட்டம் முடி­வுக்கு வந்­தது.

http://www.virakesari.lk/article/1891

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள்- 2016.01.13

January 13, 2016

all-sports-banner

பருத்தித்துறை கால்பந்தாட்டத் தொடர்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் சில இன்று புதன்கிழமை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்தத் தொடரில் பிற்பகல் 3மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மணற்காடு சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து வல்வை அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் திக்கம் அணியை எதிர்த்து நெடியகாடு இளைளஞர் அணி மோதவுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தொடர்

வடமாகாண உடற்கல்வி ஆசிரியர் சங்கம் நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று புதன்கிழமை இடம்பெறும் ஆட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி மோதவுள்ளது.

சிறிமுருகன் வி.கழகத் தொடர்

யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் மல்லாகம் சிறிமுருகன் ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடத்தும் கரப்பந்தாட்டத் தொடரின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் இன்று புதன்கிழமை மல்லாகம் சிறிமுருகன் ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் மல்லாகம் நியூவொரியஸ் அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=7595&cat=9

Link to comment
Share on other sites

போராடி வென்றது யங்ஹென்றிஸ்

January 13, 2016

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டம் ஒன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உரும்பிராய் இந்துக்கல்லுரி மைதானத்தில் இடம்பெற்றது.

 

இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதிய இந்த ஆட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட நிமிடத்தில் இரண்டு அணியினரும் தலா இரண்டு கோல்களைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது. சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் இளவாலை யங்ஹென்றிஸ் அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=7597&cat=11

 

அராலி பாரதி ஏ.எல். அணிகளுக்கு வெற்றி

January 13, 2016

PremiershipFootball-150x150அராலி மாவத்தை விளையாட்டுக்கழகம் உழவர் திரு விழாவை முன்னிட்டு நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் அராலி மாவத்தை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் அராலி பாரதி அணியை எதிர்த்து அராலி ஸ்ரார் அணி மோதிக் கொண்டது. இதில் அராலி பாரதி அணி 3:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் ஏ.எல். அணி மோதிக் கொண்டது. இதில் இரண்டு அணியினரும் தலா ஓர் கோல்களைப் பெற்றமையால் சமநிலை தகர்ப்பு உதைகள் வழங்கப்பட்டன. இதில் ஏ.எல் 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=7599&cat=11

இறுதி ஆட்டத்தில் இளவாலை மத்தி, இந்து இளைஞர் மோதத் தகுதி

January 13, 2016

மல்லாகம் சிறிமுருகன் ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடத்திவரும் கரப்பந்தாட்டத் தொடரில் இளவாலை மத்திய விளையாட்டுக் கழகம், ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் என்பன வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

volleyball_3

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இளவாலை மத்திய அணியை எதிர்த்து மல்லாகம் நீயூவொரியஸ் அணி மோதிக் கொண்டது. இதில் இளவாலை மத்திய விளையாட்டுக் கழக அணி 3:2 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புத்தூர் கலைமதி அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் அணி மோதிக் கொண்டது. இதில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 3:2 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=7601&cat=3

 

முல்லைத்தீவு துடுப்பாட்டத் தொடரில் விசுவமடு தோழர்கள் அரையிறுதிக்கு தகுதி

January 13, 2016

Cricket-Ball-And-Bat-Wallpaper-2014முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட்ட சங்கம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்திவரும் விலகல் முறையிலான 50 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டத் தொடரில் விசுவமடு தோழர்கள் அணி அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் கள்ளப்பாடு உதயா அணியை எதிர்த்து விசுவமடு தோழர்கள் அணி மோதிக் கொண்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கள்ளப்பாடு உதயா அணி 25 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 91 ஒட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ராஜா 32 ஓட்டங்களையும் மதிவதனன் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுதாகரன் 4 இலக்குகளையும், கௌசின் 2 இலக்குகளையும் வீழ்த்தினர். 92 ஒட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விசுவமடு தோழர்கள் அணி 22.3 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக ஹரிகரன் 23 ஒட்டங்களையும் சாள்ஸ் 16 ஒட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் அர்யுன் 2 இலக்குகளையும் நவராஜ், ராஜா, தீபன் மூவரும் ஓர் இலக்கினையும் வீழ்த்தினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7604&cat=11

 

கரப்பந்தாட்டத் தொடர்

January 13, 2016

volleyballlநீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் 65 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கரப்பந்தாட்டத் தொடர் ஒன்று நடத்தப்படவுள்ளது. தொடரில் கலந்து கொள்ளவிரும்பும் விளையாட்டுக் கழகங்கள் தமது விண்ணப்பங்களை இம்மாதம் 15ஆம் திகதியன்றும் அல்லது அதற்கு முன்னரும் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7606&cat=3

 

சென்.ஹென்றிஸ், நெல்லியடி மத்தி அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி

January 13, 2016

யாழ்ப்பாண பாடசாலைகளின் விளையாட்டுச்சங்கம் நடத்தும் 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்ற இளவாலை சென்.ஹென்றிஸ், நெல்லியடி மத்திய கல்லூரி அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன.

1

யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற இந்த காலிறுதி ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதிக் கொண்டது.  ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தனது கட்டுப்பாட்டை வியாபித்திருந்த நெல்லியடி மத்திய கல்லூரி அணி 6:0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

001

இரண்டாவது ஆட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதிக்கொண்டது. இரு அணிகளில் ஒன்றாலும் தனித்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கோல் கணக்கு ஆரம்பிக்கப்படாமலேயே முதல்பாதி முடிவடைந்தது.

இரண்டாம் பாதியிலும் இதே விடாப்பிடி நிலைமைதான். பெரிதான மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆட்டம் நிறைவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் ஆட்டத்தில் ஒரே கோலையும் வெற்றிக்கோலையும் பதிவுசெய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது சென்.ஹென்றிஸ்.

சென்.பற்றிக்ஸ், புங்குடுதீவு மகா வித்தியாலய அணிகள் ஏற்கனவே அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் இன்று இடம்பெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் (யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில்) பிற்பகல் 2.30 மணிக்கு புங்குடுதீவு மகா வித்தியாலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் மோதவுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=7608&cat=11

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள்- 2016.01.14

January 14, 2016

all-sports-bannerஏவ்.ஏ. கிண்ணத் தொடர்

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் யாழ். கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான எவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரின் ஆட்டங்களில் சில இன்று வியாழக்கிழமை அரியாலையில் அமைந்துள்ள கால்பந்தாட்டப் பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து உரும்பிராய் சரஸ்வதி அணி மோதவுள்ளது. மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதவுள்ளது. மாலை 5 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் உரும்பிராய் சென்.மைக்கல் அணியை எதிர்த்து புத்தூர் விக்னேஸ்வரா அணி மோதவுள்ளது.

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா ரைவர புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்ததில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சக்தி அணியை எதிர்த்து அல்இக்பால் அணி மோதவுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தொடர்

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும் அரையிறுதி ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=7682&cat=9

யங்ஸ்ரார் இலகுவெற்றி

January 14, 2016

 

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்ததில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் யங்ஸ்ரார் பி அணியை எதிர்த்து அம்மன் அணி மோதிக் கொண்டது. இதில் யங்ஸ்ரார் பி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=7684&cat=11

வல்வை நெடியகாடு, அன்ரனிஸ் காலிறுதி ஆட்டங்களுக்குத் தகுதி

January 14, 2016

footballபருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கினால் நடத்தப்படும் 19 வயதுப் பிரிவினருக்கான ஆட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் மற்றும் மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் என்பன காலிறுதி ஆட்டங்களுக்குத் தகுதி பெற்றுள்ளன.

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்த காலிறு ஆட்டங்களில் முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகமும் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்கள் வரை கோல்கள் எவையும் பதிவுசெய்யப் படாததால் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை ஆட்டம் நிடித்துச் சென்றது. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் வல்வை அணி வெற்றிபெற்று காலிறுதிக்குத் தகுதிபெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை அணி மோதியது. ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அன்ரனிஸ் அணி 4:0 என்று வெற்றி பெற்று காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. அவ்வணி சார்பாக நிருஜன் 3 கோல்களையும் டெனிசன் ஒரு கோலையும் பதிவுசெய்தனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7686&cat=11

யாழ். இந்துவை வீழ்த்தியது ஸ்கந்தவரோதயா

January 14, 2016

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் 19 வயதுப்பரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியை 5 இலக்குகளால் வீழ்த்தியது ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி.

கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 205 ஒட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக கதியோன் 60 ஒட்டங்களையும் மிதுசாந் 36 ஒட்டங்களையும் பிரசாந் 30 ஒட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ். இந்துக் கல்லூரி அணி சார்பில் சிவலக்சன் அதிகபட்சமாக 6 இலக்குகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய யாழ். இந்துக்கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 101 ஒட்டங்களை மட்டுமே பெற்றது. அதிகபட்சமாக கிருத்திக்றொசான் 37 ஒட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி சார்பில் கதியோன் அதிகபட்சமாக 7 இலக்குகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக மீண்டும் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி அணி, சகல இலக்குகளையும் இழந்து 194 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக எம்.துவரகன் 71 ஒட்டங்களையும், விதுசன் 21 ஒட்டங்களையும், எஸ்.துவாரகன் 21 ஒட்டங்களையும், கலைச்செல்வன் 20 ஒட்டங்களையும் பெற்றனர்.

பந்துவிச்சில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சார்பில் சாருசன் 4 இலக்குகளையும், சஞ்சேயன் 3 இலக்குகளையும், கதியோன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

91 ஒட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி 5 இலக்குகள் இழப்பில் இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக தியான் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் யாழ். இந்துக் கல்லூரி அணி சார்பில் எம்.துவாரகன் 3 இலக்குகளையும் எஸ்.துவாரகன் ஒர் இலக்கினையும் வீழ்த்தினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7698&cat=3

சென்.ஹென்றிஸ் – நெல்லியடி மத்தி இறுதி மோதலுக்கு தகுதி

January 14, 2016

யாழ்ப்பாண பாடசாலைகளின் விளையாட்டுச்சங்கம் நடத்தும் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் சென்.பற்றிக்ஸை வீழ்த்திய சென்.ஹென்றிஸ், புங்குடுதீவு மகா வித்தியாலயத்தை வீழ்த்திய நெல்லியடி மத்திய கல்லூரி அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதத் தகுதிபெற்றுள்ளன.

1-lead...

சென்.பற்றிக்ஸ் – சென்.ஹென்றிஸ்

யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இளவாலை சென்.ஹென்றிஸ் அணியை எதிர்த்து சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதிக் கொண்டது.

கோல் கணக்கு ஆரம்பிக்கப்படாமலேயே முடிவடைந்தது முதல்பாதி. இரண்டாம் பாதியிலும் இதே நிலைமைதான். 35ஆவது நிமிடத்தில் சென்.ஹென்றிஸ் அணி வீரன் கிளக்சன் முதல் கோலைப் பதிவுசெய்தார்.

42ஆவது நிமிடத்தில் ஹென்றிஸின் மற்றொரு வீரரான மதுஸ்ரன் இரண்டாவது கோலைப் பதிவுசெய்ய சென்.ஹென்றிஸ் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. பத்தே நிமிடத்தில் பழிதீர்த்தது பற்றிக்ஸ். தற்பொழுது நிலைமை 2:1. மேலதிக கோல்கள் எவையும் பதியப்படாத நிலையில் வெற்றிபெற்றது சென்.ஹென்றிஸ்.

1lead

புங்குடுதீவு மகா வித்தியாலயம் – நெல்லியடி மத்தி.

பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதிக்கொண்டது. வாய்ப்புக்கள் கிடைக்கப்படுவதும் இரு அணியினரும் அதை வீணடிப்பதுமாகவே ஓடி மறைந்தது முதல்பாதி.

இரண்டாம் பாதியின் 35ஆவது, 45ஆவது நிமிடங்களில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வீரன் விதுசன் தனது அணிக்கான கோல்களை அடுத்தடுத்து பதிவு செய்தார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தால் பதிலுக்கு ஓர் கோலை மட்டுமே பதிவுசெய்ய முடிந்தது. முடிவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

http://www.onlineuthayan.com/sports/?p=7700&cat=11

Link to comment
Share on other sites

மற்றொரு வெற்றிதோல்வியற்ற முடிவில் யாழ். சென். ஜோன்ஸ் அணியினர்

 

யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் மாத்­தளை புனித தோமஸ் அணிக்கும் இடையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை கிரிக்கட் போட்டி நேற்­று­முன்­தினம் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

இப் போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் 260 ஓட்­டங்­களைக் குவித்த செய்ன்ற் ஜோன்ஸ், புனித தோமஸ் அணியை அதன் முதல் இன்­னிங்ஸில் 86 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்­தி­யது.

அத்­துடன் புனித தோமஸ் அணியை இரண்­டா­வது இன்­னிங்ஸில் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டு­மாறும் செய்ன்ற் ஜோன்ஸ் அழைத்­தது.

முத­லா­வது இன்­னிங்ஸில் மிகத் துல்­லி­ய­மாக பந்­து­வீ­சிய செய்ன்ற் ஜொன்ஸ் அணி­யினர், இரண்­டா­வது இன்­னிங்ஸில் சோபிக்கத் தவ­றி­யதைப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட புனித தோமஸ் அணி­யினர் நிதா­னத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி ஆட்­டத்தை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டனர்.

செய்ன்ற் ஜோன்ஸ் சார்­பாக துடுப்­பாட்­டத்தில் சிரேஷ்ட வீரர்­களில் ஒரு­வ­ராக ஜெனி ஃப்ளெமின் செப­மா­லைப்­பிள்ளை, தேவப்­பி­ரஷாந்த் சந்­தி­ர­மோகன் ஆகி­யோரும் பந்­து­வீச்சில் கானா­மிர்தன், நிலோஜன் மகா­லிங்கம், கபில்ராஜ் கன­க­ரட்ணம் ஆகியோரும் பிர­கா­சித்­தனர்.

http://www.virakesari.lk/article/2069

Link to comment
Share on other sites

யாழ். பாடசாலைகளின் கால்பந்தாட்டத் தொடரில் சம்பினானது ஹென்றிஸ்

January 17, 2016

யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடத்திய 19 வயதுப்பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரில் நெல்லியடி மத்திய கல்லுஸரியை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது சென்.ஹென்றிஸ்.
சென்.ஹென்றிஸ் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் மின்னொளியில் இடம்பெற்றது இந்த இறுதியாட்டம்.

1-lead

ஆட்டத்தின் ஆரம்பித்திலிலேயே (6ஆவது நிமிடத்தில்) மதுசனின் உதவியுடன் சென்.ஹென்றிஸின் கோல் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டடு விட்டன. அடுத்த சில சில நிமிடங்களில் தனேஸ் மற்றுமொரு கோலை அடிக்க ஹென்றிஸின் வாய்ப்புக்கள் பலம்பெற்றன. பதிலுக்கு நெல்லியடி மத்திய கல்லூரி அணியினுடைய முன்கள வீரன் விதுசன் தனது அணிக்கான முதலாவது கோலினை பதிவு செய்தார்.

ஹென்றிஸின் மைந்தர்களான சுமன் 17ஆவது நிமிடத்திலும், அன்ரனிராஜ் 28ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பதிவுசெய்ய முதல்பாதியின் முடிவில் 4:1 என்று முன்னிலை பெற்றிருந்தது ஹென்றிஸ்.
இரண்டாம் பாதியிலும் ஹென்றிஸின் ஆதிக்கம் மிகையாக பதிவாகியது. நெல்லியடி மத்தியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

மேலும் மூன்று கோல்கள் சென்.ஹென்றிஸின் கோல் கணக்கில் உயர்வுபெற முடிவில் சொந்த மண்ணில் வைத்து 7:1 என்ற கோல் கணக்கில் சம்பியனானது சென்.ஹென்றிஸ்.

தாக்குதல் பாணியுடைய வீரனாக நெல்லியடி மத்திய கல்லூரி அணியின் விதுசன், சிறந்த கோல் காப்பளாராக ஹென்றிஸின் அமல்ராஜ், சிறந்த முன்கள வீரானாக சென்.பற்றிக்ஸின் கில்மன்ராஜ், சிறந்த வீரானாக ஹென்றிஸின் தனேஸ், தொடராட்டநாயகனாக ஹென்றிஸின் யூட்சுமன் ஆகியோர் தெரிவானார்கள்.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து புங்குடுதீவு மகா வித்தியாலய அணி மோதிக் கொண்டது.

இதில் சென்.பற்றிக்ஸ் 2:0 என்ற கோல் கணக்கின் அடிப்படையில் வெற்றிபெற்றது.  முன்னதாக இடம்பெற்ற காட்சி ஆட்டத்தில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் தெல்லிப்பளை மகாஐனாக் கல்லூரியும் மோதின. இதில் தெல்லிப்பளை மகாஐனாக் கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபரும் யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் தலைவருமான எஸ்.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி, பண்பாட்டு அலுவலகள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசாவும் சிறப்பு விருந்தினராக ஐக்கிய இராச்சியத்தின் யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தலைவர் எஸ்.சற்குணசீலன், வட மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7868&cat=2

கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் சிறிமுருகனின் சம்பியன்

January 17, 2016

மல்லாகம் சிறிமுருகன் ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடத்திய கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் மல்லாகம் சிறிமுருகன் ஐக்கிய விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடத்திவந்த கரப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் கடந்த வியாழக்கிழமை மல்லாகம் சிறிமுருகன் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில் இடம் பெற்றது.

volleyball_3

 

இதில் இளவாலை மத்திய அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் அணி மோதிக் கொண்டது. 5செற்களைக் கொண்ட இந்த இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25:23, 25:18, 25:22 என்ற நேர்செற் கணக்கில் இளவாலை மத்தியை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

சிறந்த வீரானாகவும், மக்கள் மனம் கவர்ந்த வீரனாகவும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லக்சன் தெரிவானர். இறுதியாட்ட நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் கஐதீபனும், கௌரவ விருந்தினராக யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் மனோகரனும் கலந்து கொணடனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7883&cat=3

இன்றைய மோதல்கள்

January 17, 2016

ஜொலி ஸ்ரார் வி.கழகத் தொடர்

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் சில இன்று சனிக்கிழமை யாழ்.இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெறவுள்ளது.

மாலை 4மணிக்கு இடம்பெறும் பெண்களுக்கான ஆட்டத்தில் பட்டபிளை அணியை எதிர்த்து திருக்குடும்ப கன்னியர் மட அணி மோதவுள்ளது. மாலை 5 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சென்றலைட்ஸ் (சொக்ஸ்) அணியை எதிர்த்து ஜொலிஸ்ரார் அணி மோதவுள்ளது.

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து முல்லைத்தீவு சென்.யூட் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=7885&cat=9

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள்- 2016.01.19

January 19, 2016

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து யங்ஸ்ரார் “பி” அணி மோதவுள்ளது.

 

ஜொலிஸ்ரார் வி.கழகத் தொடர்

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30மணிக்கு இடம்பெறும் ஆண்களுக்கான ஆட்டத்தில் பற்றிசியன்ஸ் அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் (சொக்ஸ்) அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=7999&cat=9

பமிலியன்ஸ், ஜொலிஸ்ரார் அணிகளுக்கு இலகுவெற்றி

January 19, 2016

basketball_2202707b

ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான ஆட்டத்தில் பட்டபிளை அணியை எதிர்த்து பமிலியன்ஸ் அணி மோதிக்கொண்டது. இதில் பமிலியன்ஸ் அணி 37:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற ஆண்களுக்கான ஆட்டத்தில் ஜொலிஸ்ரார் அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி மோதிக் கொண்டது. இதில் ஜொலிஸ்ரார் அணி 71:51 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8002&cat=9

குறோஸ்ரார், சென்.அன்ரனிஸ் அபார வெற்றி

January 19, 2016

 

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்ஏ. கிண்ணத் தொடரில் மன்னார் லீக்கில் பதிவுசெய்துள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் சில நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆயர் இரயாப்பு ஜோசப் மைதானத்தில் இடம்பெற்றன.

முதலாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து சாந்திபுரம் குறோஸ் ஸ்ரார் அணி மோதியது. இதில் சாந்திபுரம் குறோஸ்ரார் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணிக்கும் விடத்தற்தீவு ஐக்கிய அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8006&cat=11

முல்லைத்தீவு கழகங்களின் காலிறுதியாட்ட முடிவுகள்

January 19, 2016

footballமுல்லைத்தீவு கால்பந்தாட்டச் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 7 வீரர்கள்  பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் சில நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றன.

முதலாவதாக இடம்பெற்ற சென்.அன்ரனிஸ் அணிக்கும் செம்மலை உதயசூரியன் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் செம்மலை உதயசூரியன் அணி 8:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவதாக இடம்பெற்ற இளந்தென்றல் அணிக்கும் பாரதிதாசன் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் இளந் தென்றல் அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

சென்.யூட் அணிக்கும் சூப்பாறாங் அணிக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாது காலிறுதியாட்டத்தில் சென்.யூட் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அலை ஒசை அணிக்கும் சந்திரன் அணிக்கும் இடையிலான நான்காவது காலிறுதியாட்டத்தில் சந்திரன் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8010&cat=11

மன்னார் பிராந்தியம் வெற்றி

January 19, 2016

 

banner-footballpitchஇலங்கை கால்பந்தாட்டச் சம்மேனம் நடத்தும் பிராந்தியங்களுக்கு இடையிலான 16 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புத்தளம் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. அதில் மன்னார் பிராந்திய அணியை எதிர்த்து புத்தளம் பிராந்திய அணி மோதிக் கொண்டது. இதில் மன்னார் பிராந்திய அணி 3:1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8012&cat=11

 

பற்றீசியன்ஸை வீழ்த்தியது ஜொலிஸ்ரார்

January 19, 2016

 

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் பற்றிசியன்ஸ் அணியை எதிர்த்து ஜொலிஸ்ரார் அணி மோதிக் கொண்டது. இதில் ஜொலிஸ்ரார் அணி 52:44 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது

http://www.onlineuthayan.com/sports/?p=8024&cat=3

நெடுந்தீவு கரப்பந்தாட்டத் தொடரில் ஸ்ரார், சென்.ஜோன்ஸ் அணிகள் சம்பியனாகின

January 19, 2016

நெடுந்தீவு பிரதேச செயலகங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான நடப்பு வருடத்துக்கான கரப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் நெடுந்தீவு ஸ்ரார் அணியும், பெண்கள் பிரிவில் நெடுந்தீவு சென்.ஜோன்ஸ் அணியும் சம்பியனாகின.

1-lead
நெடுந்தீவு மகா வித்திலாயல மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த இறுதி ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் நெடுந்தீவு ஸ்ரரர் அணியை எதிர்த்து நெடுந்தீவு வளர்மதி அணி மோதிக் கொண்டது. மூன்று செற்களைக் கொண்ட இந்த இறுதியாட்டத்தில் நெடுந்தீவு ஸ்ரார் அணி 25:20, 26:24 என்ற நேர் செற்கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

1lead

தொடர்ந்து இடம்பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் நெடுந்தீவு சென்.ஜோன்ஸ் அணியை எதிர்த்து நெடுந்தீவு அன்ரனிஸ் அணி மோதிக் கொண்டது. மூன்று செற்களைக் கொண்ட இந்த இறுதியாட்டத்தில் நெடுந்தீவு சென்.ஜோன்ஸ் அணி 25:20 20:18 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

http://www.onlineuthayan.com/sports/?p=8030&cat=3

Link to comment
Share on other sites

யாழ்.மத்திய கல்லூரியிடம் வீழ்ந்தது சென்.பற்றிக்ஸ்

 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் 19 வயதுப்பரிவு ஆண்களுக்கான துடுப்பாட்டத் தொடரில் மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒன்றில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை இன்னிங்ஸாலும் 12 ஒட்டங்களாலும் வீழ்த்தியது யாழ். மத்திய கல்லூரி அணி.


நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 171 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரதிஸ்சன் 49 ஒட்டங்களையும் அலன்டின் 36 ஒட்டங்களையும் டானியல் 32 ஒட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ். மத்திய கல்லூரி அணி சார்பில் ஸ்ரிபன்ராஜ் 4 இலக்குகளையும், தசோபன் 3 இலக்குகளையும், அலன்ராஜ் ஓர் இலக்கினையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 320 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக அலன்ராஜ் 95 ஒட்டங்களையும், கிருபாகரன் 59 ஓட்டங்களையும், ஸ்ரிபன்ராஜ் 59 ஒட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
இன்னிங்ஸ் தொல்வியைத் தவிர்க்க வேண்டுமாயின் 149 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய களமிறங்கிய சென்.பற்றிக்ஸ் 137 சகல இலக்குகளையும் பறிகொடுத்தது. முடிவில் இன்னிங்ஸாலும் 12 ஒட்டங்களாலும் மகுடம் சூடியது மத்தி.

http://www.onlineuthayan.com/sports/?p=8100&cat=3

இன்றைய மோதல்கள்

January 20, 2016

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் யுனிபைட் அணியை எதிர்த்து கோல்டன் பிரதர்ஸ் அணி மோதவுள்ளது.

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று புதன்கிழமை இடம்பெறும் ஆட்டத்தில் நாச்சிக்குடா சென்.மேரிஸ் அணியை எதிர்த்து மன்னார் அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணி மோதவுள்ளது.

ஜொலிஸ்ரார் வி.கழகத் தொடர்

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலாருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கே.கே.எஸ். அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் புளூஸ் அணி மோதவுள்ளது

http://www.onlineuthayan.com/sports/?p=8102&cat=2

யங்ஹென்றிஸ் அபாரம்

January 20, 2016

 

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்ட தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் பாசையூர் சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் அணி மோதிக் கொண்டது. இதில் இளவாலை யங்கென்றிஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8105&cat=11

ஜொலிஸ்ரார் கிண்ண முடிவுகள்

January 20, 2016

 

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் ஆண்களுக்கான ஆட்டத்தில் ஜொலிஸ்ரார் அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி மோதிக் கொண்டது. இதில் சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி 74:51 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது. நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி. அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் புளூஸ் அணி மோதிக் கொண்டது. இதில் கே.ஸி.ஸி.ஸி. அணி 72:54 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8107&cat=3

வருடாந்த விளையாட்டு விழா

January 20, 2016

 

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் ரி.நவரட்னம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபையின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கலந்துகொள்ளவுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=8109&cat=3

Link to comment
Share on other sites

கிண்ணம் உதயசூரியனிடம்

January 21, 2016

2

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் உதயசூரியன் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இறுதியாட்டத்தில் நெடுந்தீவு உதயசூரியன் அணியை எதிர்த்து நெடுந்தீவு மகா வித்தியாலய அணி மோதியது. நெடுந்தீவு மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உதயசூரியன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.

http://www.onlineuthayan.com/sports/?p=8179&cat=11

சென்றலைட்ஸ் சொக்ஸ் அபார வெற்றி

January 21, 2016

 

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ்.இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் (சொக்ஸ்) அணியை எதிர்த்து பற்றிசியன்ஸ் அணி மோதிக் கொண்டது. இதில் சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி 63:40 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8184&cat=3

ஸ்ரான்லியை வீழ்த்தியது ஸ்கந்தா

January 22, 2016

மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையில் இலங்கை பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் ஸ்ரான்லிக் கல்லூரி அணியை இன்னிங்ஸாலும் 107 ஒட்டங்களாலும் வீழ்த்தியது ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி.


ஸ்ரான்லிக் கல்லூரி மைதானத்தில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல இலக்குகளையும் இழந்து 245 ஒட்டங்களைப்பெற்றது. அதிகபட்சமாக கதியோன் 97 ஒட்டங்களையும், சயந்தன் 33 ஒட்டங்களையும், சாருசன் 30 ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரான்லிக்கல்லூரி சார்பில் சஞ்ஜிவன், அருள்காந்தி இருவரும் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லிக் கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 40 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக சுஜிகரன் 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சார்பில் சந்தோஸ், அஜன்தன் இருவரும் தலா 5 இலக்குகளை வீழ்த்தினர். பொலோஒன் செய்ய வேண்டிளய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஸ்ரான்லி, இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டுமாயின் 205 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கியது. இலண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற்றம் தொடர சகல இலக்குகளையும் இழந்து 99 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஜெயகரன்; 27 ஒட்டங்களைப் பெற்றார். பந்து விச்சில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணி சார்பில் கதியோன் 4 இலக்குகளையும் விதுசன் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=8266&cat=3

சென்.அன்ரனிஸ் அணி வெற்றி

January 22, 2016

 

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து நாச்சிக்குடா சென்.மேரிஸ் அணி மோதிக் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணியினரும் தலா இரு கோல்களைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டன. சமநிலைத் தவிர்ப்பில் அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8270&cat=11

கே.கே.எஸ். அபாரம்

January 22, 2016

 

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ்.இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் (புளூஸ்) அணியை எதிர்த்து கே.கே.எஸ். அணி மோதிக் கொண்டது. இதில் கே.கே.எஸ். அணி 65:58 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8272&cat=3

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள்

January 23, 2016

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தும் லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் ஏ.பி.சி. அணியை எதிர்த்து அம்மன் அணி மோதவுள்ளது.

ஜொலிஸ்ரார் வி.கழகத் தொடர்

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்தும் இருபாலருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் யாழ். இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம் பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் பெண்களுக்கான ஆட்டத்தில் கே.கே.எஸ். அணியை எதிர்த்து யாழ். இந்து மகளிர் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் ஆண்களுக்கான ஆட்டத்தில் கே.கே.எஸ். அணியை எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக அணி மோதவுள்ளது.

ஐக்கிய வி.கழகத் தொடர்

நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் நீர்வேலி ஐக்கிய அணியை எதிர்த்து சிறுப்பிட்டி கலையொளி அணி மோதவுள்ளது. இரவு 8மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சக்காய் வொலிக்கிங்ஸ் அணியை எதிர்த்து நாயன்மார்கட்டு பாரதி அணி மோதவுள்ளது.

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத் தொடர்

இலங்கை கால்பந்தாட்டச் சமமேளனம் நடத்தும் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையிலான யூனியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளன. இதில் கிளிநொச்சி லீக் அணியை எதிர்த்து முல்லைத்தீவு லீக் அணி மோதவுள்ளது.

உடற்கல்வி டிப்பிளோமா ஆசிரியர் சங்கத் தொடர்

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=8329&cat=1

சென்.நீக்கிலஸ் அபாரம்

January 23, 2016

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லுரி மைதானத்தில இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்தறை சென்.நீக்கிலஸ் அணியை எதிர்த்து முல்லைத்தீவு உதயசூரியன் அணி மோதிக் கொண்டது. இதில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8334&cat=11

போராடி வென்றது விண்மீன்

January 23, 2016

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையிலான எவ்.ஏ. கிண்ணத்துக்கான மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

 

பலாலி விண்மீன் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதிக் கொண்ட இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணியினரும் தலா ஓர் கோலினை பெற்றமையால் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை ஆட்டம் இழுபறிப்பட்டது. சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் பலாலி விண்மீன் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8336&cat=1

Link to comment
Share on other sites

இந்துவை வீழ்த்தியது யாழ்.மத்திய கல்லூரி

 

January 24, 2016

யாழ். இந்துக்கல்லூரியின் 19வயதுப்பிரிவு அணியும் யாழ்.மத்திய கல்லூரியின் 19 வயதுப்பிரிவு அணியும் மோதிய நட்பு ரீதியிலான துடுப்பாட்டத் தொடரில் யாழ்.இந்துக்கல்லூரி அணியை இன்னிங்ஸாலும் 114 ஒட்டங்களாலும் வீழ்த்தியது யாழ்.மத்திய கல்லூரி அணி.

Cricket-Ball-And-Bat-Wallpaper-2014
யாழ். மத்திய கல்லூரியின் மைதானத்தில் கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல இலக்குகளையும் இழந்து 103 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக எம்.துவாரகன் 31 ஒட்டங்களையும், எஸ்.துவாரகன் 20 ஒட்டங்களையும், சிவலக்சன் 13 ஒட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி அணி சார்பில் தசோபன் 5 இலக்குகளையும், ஸ்ரீபன்ராஜ் 4 இலக்குகளையும், கிசோத் ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.  பதிலுக்கு தனது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்.ம்மிய கல்லூரி சகல இலக்குளையும் இழந்து 298 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக கிருபாகரன் 63 ஒட்டங்களையும், டினோசன் 59 ஒட்டங்களையும், கார்த்திபன் 51 ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யாழ்.இந்துக் கல்லூரி அணி சார்பில் எம்.தூவரகன் 4 இலக்குகளையும், சிவலக்சன் 3 இலக்குளையும், ஜெயநேசன் 2 இலக்குளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்.இந்துக்கல்லூரி அணியினர் 71 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் பறிகொடுத்தது. பந்து வீச்சில் யாழ்.மத்திய கல்லூரி சார்பில் ஸ்ரிபன்ரா7 இலக்குகளையும், தசோபன் 3 இலக்குகளையும், கதியோண் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites

கிளி­நொச்சி மாவட்ட மட்ட சது­ரங்க சுற்றுப் போட்டி

 

கிளி­நொச்சி மாவட்ட சது­ரங்கச் சங்­கத்தால் எதிர்­வரும் 30, 31 ஆம் திக­தி­களில் மாவட்ட மட்டத்­தி­லான சது­ரங்கச் சுற்­றுப்­போட்டி நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

Chess_Board.jpg

கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெ­ற­வுள்ள இப்­போட்­டி­யா­னது 14 பிரி­வு­க­ளாக நடை­பெ­ற­வுள்­ளது.

9வயது, 11வயது, 13வயது, 15வயது, 17வயது, 19 வயது மற்றும் 19 வய­திற்கு மேற்­பட்டோர் என்ற வய­துப்­ பி­ரி­வு­களில் ஆண், பெண் என தனித்­தனிப் பிரி­வு­க­ளாக இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டள்­ளது.

வெற்றி பெறு­ப­வர்­க­ளுக்கு பணப்­ப­ரி­சில்­களும், பதக்­கங்­க ளும், வெற்­றிக்­கிண்­ணங்­களும், வெற்­றிச்­சான்­றி­தழ்­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. 9வயது, 11வயது பிரி­வு­களில் முதலாம் இடம்­பெ­று­ப­வ­ருக்கு 2500 ரூபாவும் 2ஆம் இடம்­பெ­று­ப­வ­ருக்கு 1500 ரூபாவும், 3ஆம் இடம் பெறுபவருக்கு 1000 ரூபா பணப் பரிசில்கள் வழங்கப் படவுள்ள

http://www.virakesari.lk/article/2497

Link to comment
Share on other sites

ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியிடம் வீழ்ந்தது யாழ்ப்பாணக் கல்லூரி அணி

January 28, 2016

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியை 175 ஒட்டங்களால் வெற்றிபெற்றது ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி.


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக் கிழமை இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 186 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக கதியோன் 50 ஒட்டங்களையும், சயந்தன் 37 ஒட்டங்களையும், மதுசாந் 23 ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பில் கொலின்ஸ், துவாரகன் இருவரும் தலா 3 இலக்குகளையும், கஜீபன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஜிந்துசன் 20 ஓட்டங்களையும், சதுசன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சார்பில் கதியோன் 6 இலக்குகளையும், சண்சேயன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

83 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 211 ஒட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக சயந்தன் 57 ஓட்டங்களையும், திவாகரன் 31 ஓட்டஙகளையும், சிறிகுமார் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பில் ஜிந்துசன் 3 இலக்குகளையும், கொலின்ஸ், கஜிபன் இருவரும் தலா 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.
295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி119 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக திலக்சன் 62 ஒட்டங்களையும், கஜீபன் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில்

http://www.onlineuthayan.com/sports/?p=8533&cat=3

மெய்வன்மைப் போட்டிகள்

January 28, 2016

சாவகச்சேரி மகளிர் கல்லூரி

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வன்மை திறனாய்வுப் போட்டிகள் இன்று பி.பகல் 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரியின் அதிபர் திருமதி ல.முகுந்தகன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொள்ளவுள்ளார்.

மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை

மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரி அதிபர் சிறிராமச்சந்திரன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வடமராட்சி கல்வி பணிப்பாளர் சி.நந்தகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
இமையாணன் அ.த.க வித்தியாலயம்

யாழ்ப்பாணம் இமையாணன் அ.த.க. வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு வித்தியாலயத்தின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலயத்தின் அதிபர் கு.ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக குறித்த வித்தியாலயத்தின் ஓய்வுநிலை அதிபர் நவமணி சந்திரசேகரம் கலந்துகொள்ளவுள்ளார்.
வல்வை மகளிர் வித்தியாலயம்

வல்வை மகளிர் வித்தியலாயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி நாளைமறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியாளவில் வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வித்தியாலயத்தின் அதிபர் செல்வி சுப்பிரமணியக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன் கலந்து கொள்ளவுள்ளார்

http://www.onlineuthayan.com/sports/?p=8543&cat=3

Link to comment
Share on other sites

மகாஜனாவின் கால்பந்தாட்ட அணிக்கு கல்லூரியால் மகத்தான வரவேற்பு

January 28, 2016

தேசியமட்ட கால்பந்தாட்டத் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் அணிக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரிச் சமூகத்தால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

2
இலங்கை பாடசாலைகளின் கால்பந்தாட்டச் சங்கத்தினால் தேசியமட்டத்தில் நடத்தப்பட்ட சமபோசா கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பெண்களுக்கான 15 வயதுப்பிரிவில் மகாஜனாக் கல்லுஸரி அணி சம்பியனாகியிருந்தது. கிண்ணத்துடனும் தங்கப்பதக்கத்துடனும் நேற்றுமுன்தினம் தாயகம் திரும்பிய அணியினருக்கு கல்லூரி சமூகத்தினாரால் மகாத்தன வரவேற்பு வழங்கப்பட்டது.

கல்லூரியின் முன்றலில் வைத்து கல்லூரியின் பிரதி அதிபர் வே.சந்திரசேகரத்திடம் கிண்ணம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து முன்றலில் இருந்து வீராங்கனைகள் கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரியின் பாவலர் துரையப்பா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு தேனீர் விருந்து உபசாரம் இடம்பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8540&cat=11

இன்றைய மோதல்கள்

January 28, 2016

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 19ஆவது வருடமாக வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அல்மதீனா அணியை எதிர்த்து நியூபைட் அணி மோதவுள்ளது.

ஐக்கிய வி.கழகத் தொடர்

நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதியாட்டத்தில் நீர்வேலி ஐக்கிய அணியை எதிர்த்து தோப்பு வாலிபர் அணி மோதவுள்ளது. தொடர்ந்து இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்தது புத்தூர் கலைமதி அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=8545&cat=1

முல்லை லீக் அபாரம்

January 28, 2016

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கான யூனியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டம் ஒன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி கால்பந்தாட்ட லீக் அணியை எதிர்த்து முல்லைத்தீவு கால்ப்பந்தாட்ட லீக் அணி மோதிய இந்த ஆட்டத்தில், முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக் அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8549&cat=11

தோழர்களை வீழ்த்தியது முல்லைத்தீவு சென்.யூட்

January 28, 2016

முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான 50 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஓர் ஆட்டத்தில் முல்லைத்தீவு சென்.யூட் அணியிடம் வீழ்ந்தது விசுவமடு தோழர்கள் அணி.


முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விசுவமடு தோழர்கள் அணி 20பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக தினேஸ் 20 ஒட்டங்களையும், சசி 19 ஓட்டங்களையும், கௌசி 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முல்லைத்தீவு சென்.யூட் அணி சார்பில் குகதாஸ் 5 இலக்குகளையும், தபேந்திரன், வியாசன் இருவரும் தலா 2 இலக்குகளையும், கண்ணன் ஓர் இலக்கினையும் வீழ்த்தினர்.

85 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு சென்.யூட் அணி 13.1 பந்துப்பரிமாற்றத்தில் 5 இலக்குகளை இழந்து இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக மிராஜ் 23 ஒட்டங்களையும், சுபேந்திரன் 21 ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விசுவமடு தோழர்கள் அணி சார்பில் சசி 2 இலக்குகளையும், காந்தன், கௌசி இருவரும் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=8551&cat=3

வாலிபர், ஆவரங்கால் மத்தி அணிகள் வெற்றிபெற்றன

January 28, 2016

நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

 

இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் கச்சாய் வொலிக்கிங்ஸ் அணியை எதிர்த்து தோப்பு வாலிபர் அணி மொதியது. இந்த ஆட்டத்தில் தோப்பு வாலிபர் அணி 2:1 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் அச்சுவேலி யுத் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி அணி மொதியது. இந்த ஆட்டத்தில் ஆவரங்கால் மத்தி அணி 2:0 என்ற செற்கணக்கில் வெற்றிபெற்றது

http://www.onlineuthayan.com/sports/?p=8553&cat=1

Link to comment
Share on other sites

சம்பியனானது சுன்னாகம் காந்தி நியூஸ்ரார்!

February 02, 2016

பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகமும் நமக்காக நாம் அமைப்பும் நடாத்திய அணிக்கு 7பேர் 6ஓவர் கொண்ட மாவட்ட மட்ட கிரிக்கெட் போட்டியில் சுன்னாகம் காந்தி நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

பொங்கலை முன்னிட்டு மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகமும் நமக்காக நாம் அமைப்பும் நடாத்திய அணிக்கு 7பேர் 6ஓவர் கொண்ட மாவட்ட மட்ட கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டி 31.01.2016 மாலை 3 மணிக்கு மானிப்பாய் அட்டகிரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது அரையிறுதியில் மானிப்பாய் இந்தியன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் மோதியது.

நாணயற்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மானிப்பாய் இந்தியன்ஸ் விளையாட்டுக் கழக அணி 3 விக்கட்களை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.

அணிக்காக ரஹீம் 56 ஓட்டங்களையும், பவிந்திரன் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி சார்பில் மோகனதீபன் 2 விக்கட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 82 என்னும் வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி ரமணனின் அதிரடி கைகொடுக்க 5 விக்கட்களால் வெற்றி பெற்றது.

இதில் ரமணன் 46 ஓட்டங்களையும், மோகனதீபன் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் மானிப்பாய் இந்தியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் ராம் 2 விக்கட்களைக் கைப்பற்றினார்.

cup1

இரண்டாவது அரையிறுதியில் சங்கானை நியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் மோதியது.
நாணயற்சுழற்சியில் வென்ற சங்கானை நியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி 33 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது. யோகசாந் 13 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு 34 என்னும் இலக்கோடு துடுப்பாடிய சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

cup2

இதன் படி இறுதிப் போட்டியில் சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணியும் மோதியது.

நாணயற் சுழற்சியில் வென்ற ஆனைக்கோட்டை லெவின் ஸ்ரார் விளையாட்டுக் கழக அணி 4 விக்கட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ரமணன் 19 ஓட்டங்களையும், கண்ணன் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி சார்பில் செந்தா 2 விக்கட்களைக் கைப்பற்றினர்.பதிலளித்து 59 என்னும் இலக்கோடு துடுப்பாடிய சுன்னாகம் காந்திநியூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி ஒரு கட்டத்தில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களை இழந்து தடுமாறியது.

எனினும் களம் புகுந்த தயாளன் அதிரடி காட்ட இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்டமிழக்காமல் அதிரடியாக 40 ஓட்டங்களைக் குவித்த தயாளன் போட்டியின் சிறப்பாட்டக்காரனாக தெரிவானார்.

cup3

அமைப்பின் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ஆர்.பவிஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,மானிப்பாய் இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறை முதல்வர் எஸ்.உதயணன், முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைப்பின் இயக்குனருமான க.உஷாந்தன், மானிப்பாய் மெற்கு இளைஞர் கழக தலைவர் உதயன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=8738&cat=3

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள்- 2016.02.09

February 09, 2016

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரியின் மைதானத்தில் இடம் பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு இடம்பெறும் சூப்பர் 8 அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இளவாலை யங்யஹன்றிஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதவுள்ளது.

குணபாலசிங்கம் ஞாபகார்த்தத் தொடர்

யாழ். கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் குணபாலசிங்கம் குடும்பத்தினர் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து நடத்தும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பாசையூர் சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து அரியாலை ஐக்கிய அணி மோதவுள்ளது.

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகர்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க் கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அல்மதீனா அணியை எதிர்த்து 786 அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=8974&cat=9

முல்லைத்தீவு மாவட்ட ஊர்கடந்து ஓட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முதலிடம்

February 09, 2016

முல்லைத்தீவு மாவட்ட ஊர்கடந்து ஓட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் சார்பாக கலந்துகொண்ட புலேந்திரன் ஜெனந்தன் ஆண்கள் பிரிவிலும், யோகேஸ்வரன் புவேந்தினி பெண்கள் பிரிவிலும் முதலாம் இடங்களைக் கைப்பற்றினர்.

1

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 6ஆம் திகதி காலை 7 மணியளவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு என். முகுந்தன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஆண்கள் பிரிவில் 25 வீரர்களும், பெண்கள் பிரிவில் 18 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். ஆண்களுக்கான தூரமாக 12 கிலோ மீற்றர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை 20 வீரர்கள் ஓடிமுடித்தனர். பெண்களுக்கான தூரம் 8 கிலோ மீற்றராக நிர்ணயிக்கப்பட்டது. இதனை 16 வீராங்கனைகள் ஓடி முடித்தனர்.

2

 

ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை ஒட்டு சுட்டான் பிரதேச செயலர் பிரிவின் சார்பாக கலந்துகொண்ட புலேந்திரன் ஜெனந்தனும், இரண்டாம் இடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் சார்பாக கலந்து கொண்ட மகேஸ்வரன் குமுதனும், மூன்றாமிடத்தை ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் சார்பாக கலந்துகொண்ட செங்கோல் அலெக்ஸ் என்பவரும் தமதாக்கினர்.

பெண்கள் பிரிவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் சார்பாக கலந்துகொண்ட யோகேஸ்வரன் புவேந்தினி முதலாம் இடத்தையும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் சார்பாக கலந்துகொண்ட சுப்பிரமணியம் சுடர்மதி இரண்டாம் இடத்தையும் அதே பிரதேச செயலர் பிரிவின் சிவனேஸ்வரன் டிலக்சனா மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

நிகழ்வுக்கு விருந்தினர்களாக மாகாணசபை பிரதித் தவிசாளர் ம.அன்ரனி ஜெகநாதன், மாகாணசபை உறுப்பினர் பு.இரவிகரன், உடற்கல்விப் பணிப்பாளர் மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=8976&cat=3

செவின் ஸ்ராரை வீழ்த்தி அரையிறுதிக்குள் ஞானம்ஸ்

February 09, 2016

கரவெட்டி கிருஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் நவிண்டில் செவின் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஞானம்ஸ் வி.கழகம்.

கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது இந்த காலிறுதி ஆட்டம். நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஞானம்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 பந்துப்பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அதிகபட்சமாக ரஜி 18 ஓட்டங்களையும், பிரகாஸ் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் செவின் ஸ்ரார் அணி சார்பாக சாந்தன் 2 இலக்குகளையும் மதன் ஓர் இலக்கினையும் கைப்பற்றினர்.

56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குக் களமிறங்கிய செவின் ஸ்ரார் அணி இறுதிப் பந்துப்பரிமாற்றம் வரை கடுமையான போராட்டத்தை வெளிக்காட்டிய போதிலும் 4 ஓட்டங்களால் தோல்வியடைந்து அரையிறுதிக்கான வாய்ப்பைத் தவற விட்டது. அதிகபட்சமாக மதன் 22 ஓட்டங்களையும், சாந்தன் 11 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்னர்.

http://www.onlineuthayan.com/sports/?p=8983&cat=3

றூபவாகினி நிறுவனத்தால் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டத் தொடர்

February 09, 2016

றூபவாகினி நிறுவனத்தால் யாழ். மாவட்டத்தில் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் ஆவரங்கால் இளைஞர் கழக அணியும் பெண்கள் பிரிவில் மகாஜன இளைஞர் கழக அணியும் வெற்றிபெற்று சம்பியனாகின.

4

 

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் மகாஜன இளைஞர் கழக அணி, கரவெட்டி சிவகுமாரன் இளைஞர் கழக அணியை 2:0 என்ற செற் கணக்கிலும், இளவாலை மத்திய இளைஞர் கழக அணி, ஆவரங்கால் இளைஞர் கழக அணியை 3:0 என்ற செற் கணக்கிலும் வீழ்த்தி கிண்ணங்களைக் கைப்பற்றின.

3

அன்ரனிஸ்- றோயல் ஆட்டம் சமநிலையில்

February 09, 2016
 

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மின்னொளியில் இடம்பெற்ற சூப்பர் 8 அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அந்தோனியார்புரம் சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதிக் கொண்டது. இதில் இரண்டு அணியினரும் தலா 2 கோல்களைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

கால்பந்தாட்டத் தொடரில் அரியாலை ஐக்கிய அணி வெற்றிபெற்றது

February 09, 2016

footballறோயல் வி.கழகம் நடத்திவரும் குணபாலசிங்கம் ஞாபகார்த்த கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன் தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டமொன்றில் அரியாலை ஐக்கிய அணி வெற்றிபெற்றது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விலகல் முறையிலான இந்தத் தொடரில் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் மின்னொளியில் இடம்பெற்ற ஆட்டத்தில் சென்.றொக்ஸ் அணியை எதிர்த்து அரியாலை ஐக்கிய அணி மோதிக் கொண்டது. இதில் அரியாலை ஐக்கிய அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

யாழை வீழ்த்தியது மட்டக்களப்பு

February 09, 2016

இலங்கை கால்பந்தாட்டச் சமமேளனம் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையில் நடத்திவந்த கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யாழ். லீக் அணி மட்டக்களப்பு லீக் அணியிடம் தோல்வியடைந்தது.

மட்டக்களப்பு பொது விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முழுவதுமாக தனித்து ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு லீக் அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேரிஸை வீழ்த்தியது இரணை மாதா நகர் மேரிஸ்

February 09, 2016

356217-footballபூநகரி கால்பந்தாட்ட லீக் தனது அங்கத்துவக் கழகங்களின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையில் நடத்திவந்த கால்பந்தாட்டத் தொடரில் இரணைமாதாநகர் சென்.மேரிஸ் அணி சம்பியனாகியுள்ளது. முழங்காவில் விநாயகர் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு இடம்பெற்ற  இந்த இறுதியாட்டத்தில் இரணைமாதாநகர் சென். மேரிஸ் அணியை எதிர்த்து நாச்சிக்குடா சென்.மேரிஸ் அணி மோதிக் கொண்டது. இதில் இரணைமாதாநகர் சென்.மேரிஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.

ஜொலிஸ்ரார் வி.கழகத் தொடரில் சென்றலைட்ஸ் சொக்ஸ், கே.கே.எஸ். அணிகள் சம்பியனாகின

February 09, 2016

ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார் கிண்ணத்துக்காக நடத்திய இரு பாலாருக்குமான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் சென்றலைட்ஸ் சொக்ஸ் அணியும் பெண்கள் பிரிவில் கே.கே.எஸ். அணியும் சம்பியனாகின.

1c7438f6-187a-4c99-bf4c-a976e578a96d

யாழ். இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் பெண்கள் பிரிவில் கே.கே.எஸ். அணியை எதிர்த்து பமிலியன்ஸ் அணி மோதிக்கொண்டது. இதில் கே.கே.எஸ். அணி 58:42 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது. தாக்குதல் பாணியுடைய வீரங்கனையாக கே.கே.எஸ். அணியின் பொபிற்ராவும் சிறந்த தடுப்பாட்ட வீராங்கனையாக பமிலியன்ஸ் அணியின் எக்சிபாவும் தெரிவானார்கள்.

1

 

ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கே.ஸி. ஸி.ஸி. அணியை எதிர்த்து சென்றலைட்ஸ் சொக்ஸ் அணி மோதிக்கொண்டது. சென்ற லைட்ஸ் சொக்ஸ் அணி 88:45 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானது. தாக்குதல் பாணியுடைய வீரனாக சென்றலைட்ஸ் சொக்ஸ் அணியின் கிசாந்தனும் சிறந்த தடுப்பாட்டவீரனாக சுயனும் தெரிவானார்கள்.

இறுதியாட்ட நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மருத்துவர் கோபிசங்கரும், சிறப்பு விருந்தினராக ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பூபாலசிங்கமும் கலந்து கொண்டனர்.

UTHAYAN

Link to comment
Share on other sites

யாழில் பயிற்சிகளை வழங்குகின்றஆஸ்திரேலிய கூடைப்பந்தாட்டப் பயிற்றுநர்

February 10, 2016

ஆஸ்திரேலிய நாட்டின் கூடைப்பந்தாட்டப் பயிற்றுநர் டமைன் கொட்டர் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெறும் கூடைப்பந்தாட்டப் பயிற்சிமுகாமில் பங்குபற்றி பயிற்சிகளை வழங்குகின்றார். நேற்று யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சி வழங்கிய இவர் இன்று யாழ். மாவட்டப் பாடசாலைகளின் அணிகளுக்குப் பயிற்சி வழங்கவுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9012

Link to comment
Share on other sites

கிண்ணத்தை வென்றது யாழ். பல்கலை அணி

February 16, 2016

யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கம் பதிவு செய்யப்பட்ட அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய வலைப்பந்தாட்டத் தொடரில் யாழ். பல்கலைக் கழக அணி சம்பியன் ஆகியுள்ளது.

1

 

அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் கிறாஸ் கொப்பர்ஸ் அணியை எதிர்த்து யாழ். பல்கலைக்கழக அணி மோதிக்கொண்டது. இதில் யாழ். பல்கலைக்கழக அணி 34:33 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் அரியாலை ஐக்கிய அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி விளையாட்டுக்கழக அணி மோதிக்கொண்டது. இதில் அரியாலை ஐக்கிய அணி 30:25 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இன்றைய மோதல்கள் 2016.02.16

February 16, 2016

யங்ஸ்ராரின் தொடர்

வவுனியா வைரவ புளியங் குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து அம்மன் அணி மோதவுள்ளது.

கரவெட்டி கால்பந்தாட்டத் தொடர்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பதிவு செய்த கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3மணி முதல் சில ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இமையாணன் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கரணவாய் மத்திய விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நாச்சிமார் கோவிலடி சிறி அம்பாள் விளையாட்டுக் கழகமும் அதே மைதானத்தில் தொடர்ந்து இடம்பெறும் ஆட்டத்தில் கரவெட்டி நவசக்தி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளளன.

அல்வாய் மனோகரா விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரவைச்சுடர் விளையாட்டுக் கழகமும் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.

போராடி வென்றது சென்.மேரிஸ் அணி

February 16, 2016

கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் நடத்தும் ஈ.கே.குமரையா ஞாபாகர்த்த கிண்ணத்துக்காக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

football (1)

 

அரியாலையில் அமைந்துள்ள கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மாலை 4.15 மணிக்கு இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதிக்கொண்டது. இதில் இரண்டு அணியினரும் ஆட்ட நேர முடிவில் தலா ஓர் கோலைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது. சமநிலைத்தவிர்ப்பில் சென்.மேரிஸ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்போட்ஸ், நெடியகாடு அணிகள் அரையிறுதியை உறுதிப்படுத்தின

February 16, 2016

கரவெட்டி கிருஸ்ரார் வி.கழகம் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் கரவெட்டி ஸ்போட்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகம் என்பன வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளன.

யாழ். கொட்டடி-வல்வை நெடியகாடு

லீக் முறையிலான இந்தத் தொடர் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. நேற்றுமுன்தினம் முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ். கொட்டடி விளையாட்டுக் கழகமும் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகமும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங் கிய கொட்டடி அணி 6 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக நிரேன் 20 ஓட்டங்களையும், மோகன் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வல்வை நெடிய காடு விளையாட்டுக் கழகம் சார்பாக நாதன் 2 இலக்குகளையும், ஈசன், சிறிகிருபா இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

62 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய நெடியகாடு அணி 5.5 பந்துப்பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து இலக்கை அடைந்து அரையிறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது. அதிக பட்சமாக வசந் 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் கொட்டடி வி.கழகம் சார்பாக மிதுன் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

யாழ். கொட்டடி- கரவெட்டி ஸ்போட்ஸ்

தொடர்ந்து இடம்பெற்ற மற்றொரு ஆட்டத்தில் யாழ். கொட்டடி விளையாட்டுக் கழகமும் கரவெட்டி ஸ்போட்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பபை தக்க வைக்கலாம் என்ற நிலையில் இரு அணியினரும் களமிறங்கினர். நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத் தாடிய கொட்டடி அணி 5 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 24 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

அதிகபட்சமாக மோகன் மட்டும் 6 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பவன் 3 இலக்குகளையும், மனோ 2 இலக்குகளையும், டெஸ்மன் ஓர் இலக்கினையும் கைப்பற்றினர். 25 ஓட்டங்கள் என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய ஸ்போட்ஸ் அணி 2.1 பந்துப்பரிமாற்றங்களில் இலக்குகள் இழப்பின்றி வெற்றிபெற்றது.

சிறிமுருகன், நாவலர், இளைஞர் அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி

February 16, 2016

இமையாணன் மத்திய வி.கழகம் யாழ். மாவட்ட ரீதியாக நடத்திவரும் துடுப்பாட்டத் தொடரில் இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகம், மல்லாகம் சிறிமுருகன் விளையாட்டுக் கழகம் மற்றும் தும்பளை நாவலர் விளையாட்டுக் கழகம் என்பன அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நாவலர் – இணுவில் கலையயாளி

இமையாணன் மத்திய வி.கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் முதலாவதாக இடம் பெற்ற ஆட்டத்தில் தும்பளை நாவலர் விளையாட்டுக் கழகமும் இணுவில் கலையயாளி விளையாட்டுக் கழகமும் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கலையயாளி விளையாட்டுக் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 8 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக கோகுலன் 14 ஓட்டங்களையும், கஜி 12 ஓட்டங்களையும் பெற்றனர். 70 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் 7.4 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்குகளை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று 8 இலக்குகளால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஸ்ரீபன் 28 ஓட்டங்களையும், வினோ 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மோகன் 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.

இமையாணன் இளைஞர் – றோயல்

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகமும் இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இமையாணன் இளைஞர் அணி 8 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 52 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

அதிக பட்சமாக நிரோசன் 20 ஓட்டங்களையும், கவி 8 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் றோயல் அணியின் சார்பாக சதீஸ் 2 இலக்குகளையும், கோபன் 3 இலக்குகளையும் கைப்பற்றினர். 53 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு பதிலுக்கு களமிறங்கிய றோயல் அணி 7.5 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 43 ஓட்டங்களை மட்டுமே பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் இமையாணன் இளைஞர் அணியின் சார்பாக மணாளன் 3 இலக்குகளையும், பிரசாந், பிரகாஸ் இருவரும் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக இமையாணன் இளைஞர் விளையாட்டுக் கழகத்தைச் செர்ந்த மணாளன் தெரிவு செய்யப்பட்டார்.

சிறிமுருகன் – புத்தூர் ஞானவைரவர்

இறுதியாக இடம்பெற்ற ஆட்டத்தில் மல்லாகம் சிறிமுருகன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து புத்தூர் ஞானவைரவர் விளையாட்டுக் கழகம் மோதியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிமுருகன் அணி 8 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக சிவதானு 39 ஓட்டங்களையும், மகிழன் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஞானவைரவர் அணியின் சார்பாக உசானந் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். 91 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு களமிறங்கிய ஞானவைரவர் அணி 8 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 5 இலக்குகளை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று 50 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

பந்துவீச்சில் சிறிமுருகன் அணியின் சார்பாக கண்ணா 2 இலக்குகளையும் கஜீவன், சிவதனு மற்றும் கெளசி ஆகியோர் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக சிறிமுருகன் அணியின் சிவதனு தெரிவு செய்யப்பட்டார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9372&cat=3

Link to comment
Share on other sites

சென்.தோமஸ் – யாழ். மத்தி ஆட்டம் சமநிலையில் முடிவு

February 17, 2016

மாத்தளை சென்.தோமஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான நட்பு ரீதியிலான டெஸ்ட் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

மாத்தளை சென்.தோமஸ் கல்லூரியின் மைதானத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி சகல இலக்குகளையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பிரியலக்சன் 57 ஓட்டங்களையும், கோமேதகன் 47 ஓட்டங்களையும் கிருபாகரன் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மாத்தளை சென். தோமஸ் கல்லூரியின் சார்பில் பந்துல 5 இலக்குகளையும், அவநாய 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.

தனது முதலாவது இன்னிங் ஸுக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாத்தளை சென். தோமஸ் கல்லூரி அணி 109 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. அதிகபட்சமாக சில்வா 27 ஓட்டங்களையும், டில்சாந் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரியின் சார்பில் கிருபாகரன் 4 இலக்குகளையும், அலன்ராஜ் 3 இலக்குகளையும், தசோபன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களத்தடுப்பு செய்ய தகுதியற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்ஸுக்காக களமிறங்கியது மாத்தளை சென். தோமஸ். இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்படி சகல இலக்குகளையும் இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பந்துல 107 ஓட்டங்களையும், டில்சாந் 83 ஓட்டங்களையும் நிரோசன் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்.மத்தியகல்லூரியின் சார்பாக அலன்ராஜ் 3 இலக்குகளையும், கிருபாகரன், தசோபன் இருவரும் தலா இரண்டு இலக்குகளையும் வீழ்த்தினர்.

219 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்கு களமிறங்கிய யாழ். மத்திய கல்லூரி அணி இரண்டாம் நாள் முடிவில் 6 இலக்குகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் சமநிலையானது. அதிகபட்சமாக கிருபாகரன் 53 ஓட்டங்களையும், பிரியலக்சன் 50 ஓட்டங்களையும், ஸ்ரிபன்ராஜ் 20 ஒட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மாத்தளை சென். தோமஸ் கல்லூரியின் சார்பில் டில்சாந் 5 இலக்கை வீழ்த்தினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9441&cat=3

Link to comment
Share on other sites

கிளிநொச்சி மாவட்ட சதுரங்கத் தொடர்கள்

February 17, 2016

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் நடப்பு வருடத்துக்கான மாவட்டமட்ட சதுரங்கத் தொடர்களில் கிளிநொச்சி மாவட்டத் தொடர் எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தொடர் நடைபெறவுள்ளது. 7 வயதுப் பிரிவு, 9 வயதுப் பிரிவு, 11 வயதுப் பிரிவு, 13 வயதுப் பிரிவு, 15 வயதுப் பிரிவு, 17 வயதுப் பிரிவு, 20 வயதுப் பிரிவு ஆகிய வயதுப் பிரிவுகளில் தொடர் நடைபெறும்.

15 வயது, 17 வயதுப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களும், குறித்த பிரிவுகளில் பங்கு பற்றும் 6 மாணவர்களுக்கு ஒரு மாணவர் என்ற வீதத்திலும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

7 வயதுப் பிரிவு, 9 வயதுப் பிரிவு, 11 வயதுப் பிரிவு, 13 வயதுப் பிரிவுகளில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியும். பங்குபற்றும் மாணவர்களது பெயர் விவரம் அடங்கிய விண்ணப்பங்களை பொறுப்பாசிரியர் எதிர்வரும் 19ஆம் திகதி கரைச்சிக் கோட்டக்கல்வி அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்தல் வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

http://www.onlineuthayan.com/sports/?p=9435&cat=3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்றைய மோதல்கள்- 2016.02.26

February 26, 2016

all-sports-banner

உருத்திரபுரம் ம.வியின் கால்பந்தாட்டத் தொடர்

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம், குறித்த வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும் பிரதி அதிபருமான திருமதி சந்திரகாந்தன் கமலாவதி ஞாபகார்த்த கிண்ணத்துக்காக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் கால்பந்தாட்டத் தொடர் ஒன்றை முன்னெடுத்து வருகிறது.

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்தத் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் காலை 8 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் முழங்காவில் மகா வித்தியாலய அணியை எதிர்த்து கோணாவில் மகா வித்தியாலய அணி மோதவுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி மு.ப. 11.45 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியுடன் மோதவுள்ளது. காலை 9.15 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அக்கராயன் மகா வித்தியாலய அணியை எதிர்த்து உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி மோதவுள்ளது.

முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் சென்.லூட்சியா மகா வித்தியாலய அணி மோதவுள்ளது. பிற்பகல் 2மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் அ.த.க. அணியை எதிர்த்து வேரவில் இந்து மகா வித்தியாலய அணி மோதவுள்ளது.

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தும் லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் லயன்ஸ் அணியை எதிர்த்து ஈகிள்ஸ் அணி மோதவுள்ளது.

வைகறை வி.கழகத் தொடர்

யாழ். மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுமதியுடன் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடத்தும் தாச்சித் தொடரின் ஆட்டங்கள் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் மயிலிட்டி கண்ணகி அணியை எதிர்த்து இருபாலை விக்னேஸ்வரா அணி மோதவுள்ளது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் மல்வம் ஞானபிரகாசர் அணியை எதிர்த்து அளவெட்டி பாரதி அணி மோதவுள்ளது.

யாழ். கோட்டப் பாடசாலைகளின் வலைப்பந்தாட்ட இறுதிகள் இன்று

February 26, 2016

யாழ். கோட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரின் அரையிறுதியாட்டமும் இறுதியாட்டமும் இன்று வெள்ளிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் வி.கழக மைதானத்தில் நடை பெறவுள்ளன.

15வயதினருக்கான அரையிறுதியாட்டங்களில் பாசையூர் புனித அந்தோனியார் றோ.க.பாடசாலையை எதிர்த்து வைத்தீஸ்வரா கல்லூரி அணியும், சென்.ஜேம்ஸ் பெண்கள் கல்லூரி அணியை எதிர்த்து சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் மோதவுள்ளன.

17வயதுப் பிரிவினருக்கான அரையிறுதியாட்டங்களில் பாசையூர் புனித அந்தோனியார் றோ.க.பாடசாலை அணியை எதிர்த்து வைத்தீஸ்வரா கல்லூரி அணியும், திருக்குடும்ப கன்னியர் மடத்தை எதிர்த்து சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் மோதவுள்ளன.

19வயதுப் பிரிவினருக்கான அரையிறுதியாட்டங்களில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து திருக்குடும்ப கன்னியர் மடமும், வேம்படி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து பாசையூர் புனித அந்தோனியார் றோ.க.பாடசாலை அணியும் மோதவுள்ளன.

 

கரவெட்டி கால்பந்தாட்டத்தின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று

February 26, 2016

கரவெட்டி பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டத்தின் அரையிறுதியாட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணி தொடக்கம் அல்வாய் மனோகரா மைதானத்தில் நடைபெறவுள்ளன.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வதிரி டயமன்ஸ் அணியை எதிர்த்து கரவைச் சுடர் அணி மோதவுள்ளது. தொடர்ந்து இடம்பெறும் இரண்டாவது அரையிறுதியில் யங்கமன்ஸ் அணியை எதிர்த்து கருணாகரன் அணி மோதவுள்ளது.

 

மெய்வன்மைப் போட்டிகள்

February 26, 2016

யாழ். மாவட்ட மெய்வன்மைச் சங்கம் நடத்தும் கனிஷ்ட பிரிவினருக்கான மெய்வன்மைப் போட்டிகள் நாளை சனி மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன. சென்.பற்றிக்ஸ் மைதானத்தில் காலை 8 மணி தொடக்கம் தொடர்கள் ஆரம்பமாகி நடைபெறும்.

http://www.onlineuthayan.com/sports/

 

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள்-2016.02.28

February 28, 2016

சங்கானை பிரதேச செயலக கரப்பந்தாட்டம்

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை இளைய நட்சத்திர விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

வைகறை வி.கழகத் தொடர்

யாழ். மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுமதியுடன் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடந்தும் தாச்சித் தொடரின் ஆட்டங்கள் புதுமடம் வைகறை விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் தாவடி காளியம்பாள் ஏ அணியை எதிர்த்து நாவற்குழி சரஸ்வதி அணி மோதவுள்ளது.

 

தாச்சித் தொடரின் முடிவுகள்

February 28, 2016

யாழ். மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் அனுமதியுடன் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடத்தும் தாச்சித் தொடரின் ஆட்டங்கள் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களின் முடிவுகள் வருமாறு:-

இரவு 6.30 மணிக்கு இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் சங்கானை இளங்கதிர் அணியை எதிர்த்து மானிப்பாய் பெஸ்ட் கோம் அணி மோதிக் கொண்டது. இதில் மானிப்பாய் பெஸ்ட் கோம் அணி 12:9 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து இரவு 7.30மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மயிலிட்டி பாரதி அணியை எதிர்த்து கைதடி வளர்மதி அணி மோதிக்கொண்டது. இதில் மயிலிட்டி பாரதி அணி அணி 10:3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது.

 

ஈகிள்ஸ் அபார வெற்றி

February 28, 2016

வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆட்டமொன்றில் ஈகிள்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

 

சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான இந்தத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம் பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம் பெற்ற ஆட்டத்தில் லயன்ஸ் அணியை எதிர்த்து ஈகிள்ஸ் அணி மோதிக் கொண்டது. இதில் ஈகிள்ஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

 

தமிழ் மத்திய ம.வி, கலைமகள் அணிகள் வவுனியா கால்பந்தாட்டத்தில் சம்பியன்

February 28, 2016

வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட நகர கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்துத் தொடரில் 15 வயதுப்பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அணியும், 19 வயதுப்பிரிவில் நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய அணியும் சம்பியனாகின.

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டங்களில் 15 வயதுப் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணியை எதிர்த்து பூந்தோட்டம் மகா வித்தியாலய அணி மோதிக் கொண்டது. இதில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது. மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியலாய அணி, பூவரசங்குளம் மகா வித்தியலாய அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அந்த இடத்தை தனதாக்கியது.

19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய அணியை எதிர்த்து மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி மோதிக்கொண்டது. இரு அணியினரும் தலா ஓர் கோலைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலைத் தகர்ப்பு வரை இழுபறிப்பட்டது. சமநிலைத் தகர்ப்பு உதைகளில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.

மூன்றாம் இடத்தை வவுனியா முஸ்லிம் மகா வித்தியலய அணி, வவுனியா மத்திய மகா வித்தியாலய அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனதாக்கியது.

 

தெல்லிப்பழைக் கோட்ட கரப்பந்துத் தொடரில்:ளவாலை மெய்கண்டான் கணிச ஆதிக்கம்

February 28, 2016

தெல்லிப்பழைக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடர்களில் 15 வயது, 17 வயது, 19 வயது ஆண்கள் பிரிவுகளில் முதலாவது இடங்களைக் கைப்பற்றிய இளவாலை மெய்கண்டான் வித்தியாலயம் பெண்கள் பிரிவிலும் சில இடங்களைப் பெற்றுள்ளது.

மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர் நடைபெற்றது.

15வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை இளவாலை மெய் கண்டான் வித்தியாலயமும் 2ஆம் இடத்தை வசாவிளான் மகா வித்தியாலயமும் 3ஆம் இடத்தை நடேஸ்வராக் கல்லூரி அணியும் பெற்றன.

17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை இளவாலை மெய்கண்டான் வித்தியாலயமும் 2ஆம் இடத்தை வசாவிளான் மகா வித்தியாலயமும் பெற்றன.

19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை இளவாலை மெய்கண்டான் வித்தியாலயமும் 2ஆம் இடத்தை வசாவிளான் மகாவித்தியாலயமும் 3ஆம் இடத்தை மகாஜனக் கல்லூரியும் பெற்றுள்ளன.

15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆட்டத்தில் முதலாம் இடத்தை அருணோதயக் கல்லூரி அணியும் 2ஆம் இடத்தை மகாஜனக்கல்லூரி அணியும் 3ஆம் இடத்தை இளவாலை மெய்கண்டான் வித்தியாலயமும் தமதாக்கின.

17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆட்டத்தில் முதலாம் இடத்தை வசாவிளான் மகா வித்தியாலயமும் 2ஆம் இடத்தை மகாஜனக்கல்லூரி அணியும் 3ஆம் இடத்தை இளவாலை மெய்கண்டான் வித்தியாலயமும் பெற்றன.

19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆட்டத்தில் முதலாம் இடத்தை வசாவிளான் மகா வித்தியாலயமும் 2ஆம் இடத்தை மகாஜனக் கல்லூரி அணியும் 3ஆம் இடத்தை அருணோதயக் கல்லூரி அணியும் பெற்றன.

 

டயமன்ஸ், யங்கம்பன்ஸ் அணிகள் இறுதியில் மோதத் தகுதி

February 28, 2016

கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கழகங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் விளையாட டயமன்ஸ் அணியும் யங்கம்பன்ஸ் அணியும் தகுதி பெற்றுள்ளன.

டயமன்ஸ்- கரவைச்சுடர்

குறித்த தொடர்களின் அரை யிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மனோகரா மைதானத்தில் நடைபெற்றன. முதலாவது அரையிறுதியாட்டத்தில் வதிரி டயமன்ஸ் அணியை எதிர்த்து கரவைச்சுடர் அணி மோதியது. ஆட்டத்துடன் இணைந்து டயமன்ஸின் ஆதிக்கமும் ஆரம்பமானது.

அந்த அணியின் துசிகரன், அருண்ராஜ், பிரதீபன் மூவரும் அடுத்தடுத்துக் கோல்களைப் பதிவுசெய்தனர். மேலதிக கோல்கள் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது ஆட்டம்.
முதல்பாதி முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் மீதமிருக்கையில் கரவைச்சுடர் அணியின் ரொபின்சன் பதில் கோலைப் பதிவுசெய்ய 3:1 என்ற டயமன்ஸின் ஆதிக்கத்துடன் முடிவடைந்தது முதல் பாதி.

இரண்டாம் பாதியின் பதின்ம நிமிடத்தில் கரவைசுடர் அணியின் தவசீலன் மற்றுமொரு கோலைப் பதிவு செய்யதார். தற்பொழுது நிலைமை 3:2 ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது. கரவைச்சுடரால் கடுமையாகப் போராட முடிந்ததே தவிர டயமன்ஸை வீழ்த்தி விட முடியவில்லை.

டயமன்ஸ் அணியின் லக் கீசன், மதுசுதன் அடுத்தடுத்து கோல்களைப் பதிவுசெய்ய முடிவில் டயமன்ஸ் அணி 5:2 என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்றது.

யங்கம்பன்ஸ்- கருணாகரன்

இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து கருணாகரன் அணி மோதியது. நீண்ட போராட்டத்தின் மத்தியில் யங்கம்பன்ஸ் அணியின் குகரதன் முதல் கோலைப் பதிவுசெய்தார். அக்கோலே முதல் பாதியின் ஒரே கோலுமாக அமைந்தது.

மாற்றங்கள் ஏதுமில்லாமல் ஓடி மறைந்தது இரண்டாம் பாதி. முடிவில் 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது யங்கம்பன்ஸ்.

 

http://www.onlineuthayan.com/sports/

 

Link to comment
Share on other sites

தெல்லிப்பழைக் கோட்ட கால்பந்தாட்டத்தில் அருணோதயா, மகாஜனா கிண்ணம் வென்றன

March 03, 2016

தெல்லிப்பழை கல்விக் கோட்டமட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் 15 வயதுப் பிரிவில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணியும் 17 வயது, 19 வயதுப் பிரிவுகளில் தெல்லிப்பழை மகா ஜனக்கல்லூரி அணிகளும் கிண்ணம் வென்றன.

15வயதுப்பிரிவு இறுதியாட்டம்

அளவெட்டி அருணோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை இறுதி ஆட்டங்கள் இடம்பெற்றன.

15 வயதுப்பிரிவு அணியினருக்கான இறுதியாட்டத்தில் யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி மோதிக் கொண்டது.

இரண்டு அணியினரும் எதுவித கோல்களையும் பெறாததினால் ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது.

சமநிலைத் தவிர்ப்பில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.

17வயதுப்பிரிவு இறுதியாட்டம்

17 வயதுப்பிரிவு அணியினருக்கான இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலய அணி மோதிக் கொண்டது.

இரண்டு அணியினரும் ஆட்டநேர முடிவில் தலா 2 கோல்களைப் பெற்றதனால் ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது.

சமநிலைத் தவிர்ப்பில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது. மூன்றாம் இடத்தைத் தெல்லிப்பழை யூனியன் கல்லுரி அணி தனதாக்கியது.

19வயதுப்பிரிவு இறுதியாட்டம்

19வயதுப்பிரிவு அணியினருக்கான இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலய அணி மோதிக் கொண்டது.

இரு அணிகளும் தலா ஓர் கோலைப் பெற்றதனால் இந்த ஆட்டமும் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது.

சமநிலைத் தவிர்ப்பில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.

 

 

அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்

March 03, 2016

PremiershipFootball-150x150கோப்பாய் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டத்தில் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் 15, 17வயதுப் பிரிவில் கிண்ணம் வென்றுள்ளது.

தொடரின் இறுதியாட்டம் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 15வயதுப் பிரிவினருக்கான தொடரில் முதலாமிடத்தை அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயமும் 2ஆம் இடத்தை ஊரெழு கணேசா வித்தியாலயமும் 3ஆம் இடத்தை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயமும் பெற்றுள்ளன.

17வயதுப் பிரிவினருக் கான தொடரில் முதலாமிடத்தை அச்செழு சைவப் பிரகாச வித்தியாலயமும் 2ஆம் இடத்தை ஊரெழு கணேசா வித்தியாலயமும் 3ஆம் இடத்தைப் புத்த கலட்டி விஷ்ணு வித்தியாலயமும் பெற்றுள்ளன.

 

 

யாழ்.மாவட்ட கரம் சங்கத் தொடரில் சம்பியனாகின மணி, கே.ஸி.ஸி.ஸி.

March 03, 2016

யாழ். மாவட்ட கரம் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய இருபாலாருக்குமான கரம் தொடரில் ஆண்கள் பிரிவில் மணி விளையாட்டுக் கழக அணியும் பெண்கள் பிரிவில் கே.ஸி. ஸி.ஸி. விளையாட்டுக்கழக அணி யும் சம்பியனாகின.

மணி – கே.ஸி.ஸி.ஸி.

இறுதியாட்டங்கள் யாழ். மத்திய கல்லூரியின் உள்ளக அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றன. ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் மணி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.ஸி. ஸி.ஸி. விளையாட்டுக் கழகம் மோதிக் கொண்டது.

மூன்று ஒற்றையர் ஆட்டங்களையும், இரண்டு இரட்டையர் ஆட்டங்களையும் கொண்டதான இந்த ஆட்டத்தில் 3:2 என்ற கணக்கில் மணி வி.கழகம் கிண்ணம் வென்றது. ஒற்றையர் ஆட்டங்களை மணி வி.கழகமும், இரட்டையர் ஆட்டங்களை கே.ஸி.ஸி.ஸி. அணியும் முழுவதுமாகக் கைப்பற்றியிருந்தன.

கே.ஸி.ஸி.ஸி. சிறிகாமாட்சி

பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி. அணியை எதிர்த்து சிறிகாமாட்சி அணி மோதியது. இரண்டு ஒற்றையர் ஆட்டம், ஓர் இரட்டையர் ஆட்டத்தைக் கொண்டதாக இந்த இறுதியாட்டம் அமைந்திருந்தது.

ஒற்றையர் ஆட்டங்கள் 1:1 என்று சமநிலையாகியதை அடுத்து இரட்டையர் பிரிவில் கிண்ணம் தீர்மானமாகும் நிலை ஏற்பட்டது.

இதில் சிறப்பாகச் செயற்பட்ட கே.ஸி.ஸி.ஸி. அணி 2:1 என்ற செற் கணக்கில் கிண்ணம் வென்றது.

 

http://www.onlineuthayan.com/sports/

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சம்பியனானது கலட்டி றோ.க.பாடசாலை

March 20, 2016

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 19வயதுப் பிரிவு ஆண்களுக்கான கபடியில் கலட்டி றோ.க. பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

2
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்
தினம் வெள்ளிக்கிழமை இந்த இறுதியாட்டம் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் கலட்டி றோ.க.பாடசாலை அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. இதில் கலட்டி றோ.க. பாடசாலை அணி 18:9 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது. மூன்றாமிடத்தைப் பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி அணி பெற்றது.

 

வலிகாம ஹொக்கியில் பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை சம்பியனானது

March 20, 2016

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான ஹொக்கியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

1lead

சுழற்சி முறையில் நடைபெற்ற இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து குளமங்கால் மகா வித்தியாலய அணி மோதியது.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியின் வீராங்கனைகள் அபிராமி, டிலக்சிகா ஆகியோரின் கோல்களினால் அந்த அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து யாழ்ப்பாணக் கல்லூரி அணி, மோதியது.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி, டிலக்சிகாவின் கோலால் 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நடைபெற்ற இரு ஆட்டங்களின் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

 

யாழ்.கல்வி வலய கரப்பந்து

March 20, 2016

யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 15வயது, 17வயது, 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடர்கள் நாளை திங்கட்கிழமை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளன. ஆண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளது.

 

திருக்குடும்பம்- கொக்குவில் இந்து இறுதியாட்டத்தில் நாளை மோதல்

March 20, 2016

யாழ். கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவு இறுதியாட்டத்தில் திருக்குடும்ப கன்னியர் மட அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக்கல்லூரி அணி நாளை மோதவுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் பிற்பகல் 2.30 மணிக்கு இறுதியாட்டம் இடம்பெறும். பிற்பகல் 3.30 மணிக்கு இடம் பெறும் ஆண்களுக்கான அரையிறுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து யாழ். இந்துக் கல்லூரி அணி மோதவுள்ளது.

 

வடமராட்சி கபடியில் மிகப்பெரும் ஆதிக்கம்

March 20, 2016

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கபடியில் 15, 19 வயதுப் பிரிவுகளில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணிகள் கிண்ணங்களைச் சுவீகரித்துள்ளன.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைதானத்தில் நேற்றுச்சனிக்கிழமை இந்த இறுதியாட்டங்கள் நடைபெற்றன. 15வயது பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது.

இதில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி 44:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. மூன்றாமிடத்தை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி தனதாக்கியது.

19வயது பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது.

இதில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி 33:11 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது. மூன்றாமிடத்தை வட இந்து மகளிர் கல்லூரி அணி பெற்றது.

 

http://www.onlineuthayan.com/sports/

 

 

 

Link to comment
Share on other sites

கிண்ணம் வென்றது  கொக்குவில் இந்து யாழ். கூடைப்பந்தாட்டத்தில்

 
திருக்குடும்பக்கன்னியர் மட அணியை வீழ்த்திய கொக்குவில் இந்துக்கல்லூரி அணி யாழ் வலய மட்ட சம்பியனானது.
 
யாழ். கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் கடந்த திங்கட்கிழமை யாழ். இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றது. கொக்குவில் இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட அணி மோதிக் கொண்ட இந்த ஆட்டத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணி 40:31 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சம்பியனானது.
 
 

கபடியில் கலக்கியது பருத்தித்துறை மெதடிஸ்

March 24, 2016
வடமராட்சி வலய மட்டப் பெண்களுக்கான கபடித் தொடரில் 19 வயதுப் பிரிவில் நடப்பு வருடச் சம்பியனாகியது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை.
 
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை 31:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் சம்பியனாகியது.
 
 

சம்பியனானது சோமஸ்கந்தா யாழ். வலய கரப்பந்தாட்டத்தில்

March 24, 2016
 
யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 17வயது ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
 
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இறுதியாட்டம் நடை பெற்றது. இறுதியாட்டத்தில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணியை எதிர்த்து ஆவரங்கால் மகாஜன வித்தியாலய அணி மோதியது. இதில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:21, 25:16 என்ற புள்ளி களின் அடிப்படையில் முதல் இரு செற்களையும் வென்று கிண்ணத்தை தனதாக்கியது. மூன்றாமிடத்தை ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய அணி பெற்றது.
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.