Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசலைக் கட்லட் நல்லதொரு பலகாரம்

Link to comment
Share on other sites

10 hours ago, suvy said:

அந்தக் கடைசி வசனத்துக்காகச் செய்து சாப்பிடலாம்....! tw_blush:

 

இனியும் வளரும் எண்டு நினைக்கிறீங்கள் :grin:

உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு கும்பிடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

இனியும் வளரும் எண்டு நினைக்கிறீங்கள் :grin:

உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு கும்பிடு 

இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, மூளை வளரும் ஆனால் உள்ளே இருக்கும் அறிவு வளருமா என்பதில் உங்களுடன் உடன்படுகின்றேன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை தோசை :

13041393_509857712536221_175598014607619


தேவையானவை:
தோசை மாவு - கால் கிலோ
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
சீரகம் - கால் டீஸ்பூன்
ஜவ்வரிசி - 100 கிராம்.
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஜவ்வரிசியை அரை மணிநேரன் ஊறவைத்து சீரகம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,,உப்பு சேத்து மிஸ்ஸியில் மையாக அரைக்கவும்.இதனை தோசை மாவுடன் கலந்து தோசைகளாகவார்த்து எடுத்துப்பரிமாறவும்.

 

 

கீரை பாத்

12957676_509222509266408_108575065355014


தேவையானவை:
அரிசி - 1 கப்
முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப்
சின்ன வெங்காயம் - 3
சிறுகீரை அல்லது முளைக்கீரை - 3 கப் பொடியாக நறுக்கியது
பூண்டு - 4 பற்கள்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை:
அரிசியையும் பாசிப்பயறையும் ஒன்றாக கலந்து மஞ்சள்தூள், நெய், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வேறு ஒரு பாத்திரத்தில் கீரையுடன் பூண்டு பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வெந்ததும் இறக்கவும்.கீரையை மசித்து சாதத்துடன் கலந்து வைக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

வாழைப்பூ வடை

942240_510241165831209_84851923071271935


தேவையானவை:


வடைக்கு அரைக்க
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
மாவில் கலக்க
வாழைப்பூ - 1 கப்
பெரிய வெங்காயம் - கால் கப்
கறிவேப்பிலை, புதினா- தலா 1 டீஸ்பூன்
மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வடைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும். வெங்காயம், புதினா, கறிவேப்பிலை மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். இனி அரைத்த வடை மாவுடன் இவற்றைச் சேர்த்து கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டையாக்கி உள்ளங்கையில் வைத்து வட்டமாக தட்டவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Link to comment
Share on other sites

வெள்ளரி சாதம்

13000130_510841512437841_773606966187116


தேவையானவை:
பச்சரிசி - 1 கப்
வெள்ளரித் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உ.பருப்பு- தலா அரை டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து தாளிக்க வேண்டியதை சேர்த்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள்தூள், வெள்ளாரி துருவலையும் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள்.இந்த கலவையுடன் சாதம் எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி பரிமாறுங்கள்.

 

 

 

.கறிவேப்பிலை அடை :

12986975_509875849201074_896566479211955


தேவையானவை :
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 3 டேபிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சரிசி,துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்துஅடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,உப்பு,பூண்டினை இந்த மாவுடன் கலந்து கொள்ளவும்..அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடைகளாக வார்த்து எடுத்துப்பரிமாறவும்.

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

மூளை வறுவல்

12998344_511473435707982_232375890914665

 

தேவையானவை:
ஆட்டு மூளை - ஒன்று
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன் (காரத்துக்கு ஏற்ப)
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
மூளையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள மூளையை முழுதாக சேர்த்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். மூளை வெந்து முட்டைப் பொரியல் போல வருகின்ற போது கரண்டியால் உடைத்து விடவும். சிறிது நேரம் மூடிப்போட்டு வேக வைத்து பிறகு அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

 

 

 

 

 

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎01‎/‎2016 at 5:50 AM, நவீனன் said:

இன்ஸ்டன்ட் போண்டா
தேவையானவை:
இட்லி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.

12492032_474375216084471_843949914219449

இது இறுக்கமாக குழைத்தால் வேக நேரமெடுக்கும், வடைக்கு குழைத்த பதத்திலிருந்தால் விரைவில் வெந்து மெது மெதுப்பாக இருக்கும்.
இரண்டு தரம் செய்துவிட்டேன், பிள்ளைகள் சாப்பிடும் போது, இது என்ன ஓட்டை போடாத வடையா என கேட்கின்றார்கள்tw_blush:

நிர்வாகம் இந்த திரியை PIN பண்ணிவிட்டால் நன்றாக இருக்கும். இதில் பல நல்ல சமையல் குறிப்புகள் இருக்கின்றது. இதைப் பார்த்துதான் பல சமையல் செய்கின்றேன்.

நன்றி நவீனன் உங்கள் இணைப்புகளுக்கு.

On ‎19‎/‎04‎/‎2016 at 3:36 PM, நவீனன் said:

 

.கறிவேப்பிலை அடை :

12986975_509875849201074_896566479211955


தேவையானவை :
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 3 டேபிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சரிசி,துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்துஅடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,உப்பு,பூண்டினை இந்த மாவுடன் கலந்து கொள்ளவும்..அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடைகளாக வார்த்து எடுத்துப்பரிமாறவும்.

அடுத்த சமையலறை Project இதுதான், இதற்கு பயறும் சேர்த்தால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன், செய்து பார்த்துவிட்டு கூறுகின்றேன்

Edited by உடையார்
Link to comment
Share on other sites

மரவள்ளி கிழங்கு தோசை

13076639_512507098937949_760175825370706

 

தேவையானவை:
மரவள்ளி கிழங்கு - ஒரு கிலோ
இட்லி அரிசி - 200 கிராம்
சிவப்புமிளகாய் / வர மிளகாய் - 4
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 25 கிராம்
எண்ணெய் - 20 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மரவள்ளி கிழங்கை தண்ணீரில் சேர்த்து, அதன் தோலை நீக்கவும். பிறகு, கிழங்கினை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். துண்டுகளாக்கிய மரவள்ளிக் கிழங்குடன், ஊறவைத்த அரிசி, சிவப்புமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் ஒரு தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், தயாராக வைத்திருக்கும் மாவினை தோசை போல் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். சூடான தோசையை கெட்டியான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

பப்பாளி அல்வா

12592364_512506165604709_284312415990745

தேவையானவை:
பப்பாளி(காய்) - 250 கிராம்
பால் - 500 மில்லி லிட்டர்
சர்க்கரை - 125 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
முந்திரி - 10 கிராம்
திராட்சை - 5 கிராம்
நெய் - 100 மில்லி லிட்டர்
வெண்ணிலா எசன்ஸ் - கால்டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை:
பப்பாளியின் தோலை சீவி, விதைகளை நீக்கி, மீடியம் துண்டுகளாக கட் செய்யவும். கட் செய்த பப்பாளி துண்டுகளை, துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை பொன்நிறமாக வறுத்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் பப்பாளி துருவல், பால் சேர்த்து நன்றாக வேகவிடவும். கலவையில் பால் கொதிவந்ததும் ஏலக்காய், ஆரஞ்சு கலர், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை கெட்டியாகும் பொழுது, நெய்யை சேர்த்து, நன்றாக கிளறவும். பாத்திரத்தில் கலவை ஒட்டாமல் வரும்வரை கிளறியதும், வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Link to comment
Share on other sites

கத்திரிக்காய் வற்றல்

13094178_513181075537218_263383178418162

 

 

தேவையானவை:
கத்திரிக்காய் - ஒரு கிலோ
புளி - பெரிய எலுமிச்சையளவு
உப்பு - ஒரு கைப்பிடி

செய்முறை:
கத்திரிக்காயைக் கழுவி இதன் காம்பை மட்டும் நறுக்கி விடவும். சதைப்பகுதியை நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரில் போட்டு வைப்பதால், கத்திரிக்காய் கறுத்துப் போகாது. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதனுடன் ஊற வைத்த புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளைப் சேர்த்து வேக விடவும். பாதி வெந்தவுடன் கத்திரிக்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு கத்திரிக்காயை தட்டில் ஒவ்வொன்றாகப் பரப்பி வைத்து வெயில் காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும்.
இந்தக் கத்திரிக்காய் வற்றலை வைத்து நாம் தினசரி செய்யும் காய்கறி சாம்பார் போலவே சாம்பார் செய்யலாம். கத்திரிக்காய் வற்றலை சாம்பார் செய்வதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரீல் ஊற வைத்துக் கொள்ளவும். இந்த வற்றலை நன்றாக காயவைத்து எடுத்து வைத்தால், ஒரு வருடம் வரை கெடாது. காய்கறி விலை அதிகமாக விற்கும் காலங்களில் இந்த வத்தலை உபயோகித்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்யும் போது இந்த வத்தலை சேர்த்து குழம்பு செய்யலாம்.

Link to comment
Share on other sites

கறிவேப்பிலைக் கோழி

தேவையானவை:
 சிக்கன் - அரை கிலோ
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள் ) -
ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p15.jpg

செய்முறை:
சிக்க‌னை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். மிதமான தீயில் சிக்கனை வேக விடவும். தேவையென்றால், தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். கலவை கிரேவி பதத்தில்தான் வர வேண்டும். இறக்குவதற்கு முன் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.

 

 

 

மா வற்றல்

தேவையானவை:
 பெரிய கிளிமூக்கு மாங்காய் - 5
 கல் உப்பு - முக்கால் கப்
 மோர் - அரை கப்

p82.jpg

செய்முறை:
மாங்காயை நன்றாகக் கழுவி துடைத்துக் கொள்ளவும். தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதில் உப்பு, மோர் ஊற்றிப் பிசிறி மூடி போட்டு ஒரு நாள் ஊற வைக்கவும். மறுநாள் மாங்காய்த் துண்டுகளை உப்பு நீரிலிருந்து எடுத்து, வெயிலில் காய வைக்கவும். மாலையில் மாங்காய்த் துண்டுகளை இதே உப்பு நீரில் மீண்டும் போட்டு மூடி வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள உப்பு நீர் வற்றும் வரை மாங்காய் வத்தலை ஊறவைத்து காயப்போடவும். பிறகு மாங்காய் வற்றலை இரண்டு நாள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். உப்பு சரியாக இருந்தால், மா வற்றல் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது. காய்ந்த மா வற்றல்களை பாத்திரத்தில் அடைத்து வைக்கவும். இந்த மா வற்றலைக் கொண்டு, சாம்பார், புளிக்குழம்பு செய்யலாம். புளிக்குழம்பு செய்யும் போது மாங்காய் சேர்ப்பதால் தனியாக புளி சேர்க்கத் தேவையில்லை.

மா வற்றலைக் கொண்டு சாம்பாரை காய்கறி சாம்பார் செய்வது போல செய்யவும். சாம்பார் வைப்பதற்கு முன் மா வற்றலை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். மாங்காய் மலிவாக கிடைக்கும்போது இந்த வற்றலை போட்டு வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் மாங்காய் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் செய்யப்படும் அவியல் கூட நன்றாக இருக்கும். ஊற வைத்த மா வற்றலில் ஊறுகாயும் போடலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலநேரத்துக்கு ஏற்ற பதிவுகள்...கத்தரிக்காய் வற்றல் , மாங்காய் வற்றல் வெய்யிலையும் பிரயோசனப் படுத்தலாம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎/‎04‎/‎2016 at 3:36 PM, நவீனன் said:

 

.கறிவேப்பிலை அடை :

12986975_509875849201074_896566479211955


தேவையானவை :
பச்சரிசி - 5 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 3 டேபிஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பச்சரிசி,துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து கறிவேப்பிலை ,காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்துஅடை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.வெங்காயம்,உப்பு,பூண்டினை இந்த மாவுடன் கலந்து கொள்ளவும்..அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அடைகளாக வார்த்து எடுத்துப்பரிமாறவும்.

நல்ல சுவையுடன் சத்தான உணவு பிள்ளைகளுக்கு, தோசை பதத்தில் இருந்தால் விரைவாக சுடலாம்,

நவீனன் தொடர்ந்து இணையுங்கள், சமையல் கலையில் ஒரு கரை காண வேண்டும்.

நன்றி நிர்வாகத்திற்கு PIN பண்ணிவிட்டதிற்கு

Link to comment
Share on other sites

கொத்தவரங்காய் வற்றல்

தேவையானவை:
 கொத்தவரங்காய் - அரை கிலோ
 உப்பு - ஒன்றரை டீஸ்பூன்
 புளிக்காத தயிர் - 2 கப்

p84.jpg

செய்முறை:
கொத்தவரங்காய் பிஞ்சாக இல்லாமல் பெரியதாக, முற்றியதாக இருந்தால் வற்றல் நன்றாக இருக்கும். கொத்தவரங்காயைக் கழுவி இரண்டு நுனிகளையும் நறுக்கி விடவும். ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதில் அரை டீஸ்பூன் உப்பு, மற்றும் கொத்தவரங்காயைச் சேர்த்து பாதி அளவு வேக விடவும். பிறகு கொத்தவரங்காயை தண்ணீர் வடிக்கும் தட்டில் கொட்டி தண்ணீரை வடிக்கவும்.

பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைக்கவும். கொத்தவரங்காயுடன் மீதமுள்ள ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக ஒட்டுமாறு பிசறி வெயிலில் காய வைக்கவும். மாலையில் எடுத்து மீண்டும் அதே தயிரில் போட்டு வைக்கவும். மறுநாள் மீண்டும் வெயிலில் வைக்கவும். இதே போல தயிர் வற்றும் வரை ஊற வைத்து வெயிலில் காய விடவும். காய்ந்த கொத்தவரங்காயை எண்ணெயில் அப்பளம் பொரிப்பது போல் பொரித்து எடுக்கவும். பொரிக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால், வற்றல் கருகி கசப்பு ருசியைக் கொடுக்கும். இந்த வத்தலை தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

 

 

கறிவேப்பிலை இறால்

தேவையானவை:
 இறால் - கால் கிலோ
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
 பொட்டுக்கடலை மாவு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
 கார்ன்ஃப்ளார் மாவு - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சை - ஒன்றில் பாதி
 பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
 முட்டை - ஒன்று (உடைத்து நன்கு கலக்கி வைக்கவும்)
 பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 10
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p16.jpg

செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சைச் சாறு தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறிய இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்து வைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைச்சாறு தெளித்துப் பரிமாறவும்.

 

Link to comment
Share on other sites

மட்டன் கொத்துக்கறி

தேவையானவை:
 கொத்துக்கறி - கால் கிலோ
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்)
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p47.jpg

செய்முறை:
மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

 

 

 

 

மணத்தக்காளி வற்றல்

தேவையானவை:
 மணத்தக்காளிக் காய் - 200 கிராம்
 தயிர் - ஒரு கப்
 உப்பு - ஒரு டீஸ்பூன்

p85.jpg

செய்முறை:
மணத்தக்காளிக்காயை சுத்தம் செய்து கழுவி, தயிர், உப்புடன் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் மணத்தக்காளிக்காயை ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காய விடவும். மாலையில் மீதமுள்ள தயிரில் போட்டு மூடி வைக்கவும். தயிர் வற்றும் வரை மணத்தக்காளியை ஊற வைத்து வெயிலில் காய வைக்கவும். இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும். இந்த மணத்தக்காளி வற்றலை சிறிது நெய்விட்டு பொரித்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்று வலி மற்றும் வயிற்றுப் புண் ஆறி விடும். இந்த வற்றலை எந்தக் காயைக் கொண்டும் செய்யும் புளிக்குழம்பில், தாளிக்கும்போது சேர்த்துக்கொண்டால், குழம்பு மணமாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.

 

Link to comment
Share on other sites

 

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச் : செய்முறைகளுடன்...!

 

mangosenvichhhhh.jpg


தேவையான பொருட்கள் :

பால் – 1 கப்
முட்டை – 1
தேன் – 2 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை தூள் – ஒரு சிட்டிகை
மாம்பழம் – 1
வெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

• மாம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு கிண்ணத்தில் பால், முட்டை, தேன், ஏலக்காய், பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

• முட்டை சேர்க்க விரும்பாதவர்கள், 1 ஸ்பூன் கார்ன்ஃப்லார் (அ) கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யலாம்.

• தோசை கல்லில் வெண்ணெய் போட்டு ரொட்டி துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து, தோசைக்கல்லில் இரு புறமும் மிதமான சூட்டில் டோஸ்ட் செய்யவும்.

• டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளில் நடுவில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைத்து பரிமாறவும்.

• உங்களுக்கு பிடித்த எந்த பழங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

Link to comment
Share on other sites

முருங்கை பூ சூப் : செய்முறைகளுடன்...!

 

soup.jpg


தேவையான பொருட்கள் :
முருங்கை பூ – 2 கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி – 1 ( நறுக்கி கொள்ளவும்)
ரசப்பொடி – 2 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி( சிறதளவு நீரில் கரைத்து கொள்ளவும்)
உப்பு – சுவைக்கு

தாளிக்க :
மிளகு – 1 தேக்கரண்டி ( தூளாக்கவும்)
சீரகம் – அரை தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி


செய்முறை :
* புளியை சிறிதளவு நீரில் கரையுங்கள். அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.

* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.

 

Edited by நவீனன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப் நல்லாயிருக்கு....! சைனீஸ் கலரிங் காட்டுது...!!

கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது என நினைக்கின்றேன்...!

  • Like 1
Link to comment
Share on other sites

சுண்டைக்காய் வற்றல்

தேவையானவை:
 சுண்டைக்காய் - 100 கிராம்
 தயிர் - ஒரு கப்
 உப்பு - ஒரு டீஸ்பூன்

p87.jpg

செய்முறை:
சுண்டைக்காய்களைக் கழுவி காம்பை நீக்கி விட்டு, ஒரு கல்லால் எல்லா சுண்டைக்காயையும் தட்டி, வெயிலில் காய வைக்கவும். காய்ந்த சுண்டைக்காய்களை, உப்பு மற்றும் தயிருடன் கலந்து ஒரு நாள் ஊற வைக்கவும். பின்னர் தயிரிலிருந்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். பிறகு மீதமுள்ள தயிரில் போடவும். இவ்வாறு தயிர் வற்றும் வரை ஊறவைத்து காயப்போடவும். சுண்டைக்காய்களை நன்றாக காய வைத்து எடுத்து வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். காய்ந்த சுண்டைக்காய்களை புளிக்குழம்பில் சேர்த்தால், நல்ல சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

 

பிரெட் ஆனியன் பொடிமாஸ்

தேவையானவை:
 பிரெட் - 10
 நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
 பச்சைமிளகாய் - 3
 துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 கடுகு - அரை டீஸ்பூன்
 உளுந்து - அரை டீஸ்பூன்
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p57.jpg

செய்முறை :
பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

 

Link to comment
Share on other sites

மிளகுக் குழம்பு

13083290_513570565498269_636380061907737

தேவையானவை:
புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு

அரைக்க:
எண்ணெய் - சிறிதளவு
மிளகு - 2 டீஸ்பூன்
மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெயில் நன்றாக மணம் வரும் வரை வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது முதலியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு:
இந்தக் குழம்பு ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும். தேவையென்றால், தாளிக்கும்போது தோலுரித்த
10 பூண்டுப் பல் சேர்த்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை பூரி

தேவையானவை:
 கோதுமை மாவு - கால் கிலோ
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 மிளகு - அரை டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

p17.jpg

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தைச் சேர்த்து வறுத்து சூடு ஆறியதும், மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இனி கோதுமை மாவுடன் அரைத்த பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாகக்கி பூரிகளாக தேய்த்து, எண்ணெயில் சுட்டெடுக்கவும். ஊறுகாய், உருளைக்கிழங்கு கிரேவி, தயிர்ப் பச்சடி, சென்னாவுடன் சேர்த்துப் பரிமாறவும்.

 

மட்டன் கொத்துக்கறி

தேவையானவை:
 கொத்துக்கறி - கால் கிலோ
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்)
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p47.jpg

செய்முறை:
மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூரிக்கும் கொத்துக்கறிக்கும் நல்ல பொருத்தமாய் இருக்கும்....செம டேஸ்ட்..அடி...அடி...தூள்....!!  tw_blush:

Link to comment
Share on other sites

கத்தரி மொச்சை பிரட்டல்

13133200_514957395359586_622145445423261

 

தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ, பச்சை மொச்சை - 100 கிராம், நாட்டுப் பூண்டு - 4 பல் (நசுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (சுத்தம் செய்து, நசுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 4, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கவும். பச்சை மொச்சையை வேகவைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். சோம்பு சிவந்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பாதி வதங்கிய பின் நறுக்கிய கத்திரிப்பிஞ்சு சேர்த்து, நன்றாக வதக்கி... வேகவைத்த மொச்சை, அரை கப் நீர் விட்டுக் கிளறவும். எல்லாம் நன்கு சேர்ந்து உதிர்உதிராக ஆன பின் இறக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் காய்ச்சி... நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரி - மொச்சை கலவையில் சேர்த்துக் கலந்து... கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

நாட்டுக்காய் கூட்டாஞ்சோறு

13103328_514935552028437_976515983013286

 

தேவையானவை: அரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, வாழைக்காய் - ஒன்று, கத்திரிக்காய் - 4, இளம் முருங்கைக்காய் - ஒன்று, அவரைக்காய் - 10, வெள்ளை முள்ளங்கி - ஒன்று (இவற்றைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்), முங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு.

வதக்க: நாட்டுத் தக்காளி - 3 (நறுக்கவும்), நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்.

வறுத்து அரைக்க: தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய் - அரை மூடி (சிறிய மூடி போதும்... துருவிக்கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4, நாட்டுத் தக்காளி - ஒன்று.

செய்முறை: அரிசியுடன், துவரம்பருப்பு, கொஞ்சம் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அகலமான மண்சட்டி (அ) அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து விழுதாக்கவும். அதே மண்சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். இத்துடன் நறுக்கிய காய்கள், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து, முக்கால் பதமாக வெந்த பின் புளிக்கரைச்சல், தேவையான உப்பு, மஞ்சள்தூள், அரிசி - பருப்பு கலவை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். நெய்யை காயவிட்டு, கடுகு தாளித்து, கூட்டாஞ்சோறில் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

சேமியா பிரியாணி

தேவையானவை:
 சேமியா - 200 கிராம்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 2
 கேரட் - 1
 பீன்ஸ் - 3
 காலிஃபிளவர் - ஒரு கைப்பிடியளவு
 தக்காளி - 3
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 புதினா இலை - சிறிதளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 நெய் - 4 டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 கிராம்பு - 2
 ஏலக்காய் - ஒன்று
 பிரிஞ்சி இலை - ஒன்று

p59.jpg

செய்முறை:
சேமியாவை உதிரி உதிரியாக வேக வைத்துக்கொள்ளவும். தக்காளியை பேஸ்ட் போல அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் காலிஃபிளவர் பூக்கள் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி பேஸ்ட்டை ஊற்றி, காய்களை மிதமான தீயில் வேக விடவும். பிறகு மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த சேமியாவைச் சேர்த்து பதமாக கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவி, இறுதியாக நெய் ஊற்றிக் கிளறி, பத்து நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

 

சப்பாத்தி குருமா

தேவையானவை:
 உருளைக்கிழங்கு - 500 கிராம்
 பொடியாக நறுக்கிய
    பெரிய வெங்காயம் - ஒன்று
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
 பச்சைப்பட்டாணி - ஒரு கைப்பிடியளவு
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 கறிமசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு

p58.jpg

செய்முறை:
குக்கரில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப்பட்டாணியைச் சேர்த்து வேகவைத்து, கிழங்கைத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், வெந்த பச்சைப்பட்டாணி சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். மசாலாக்கள் உருளைக்கிழங்கில் நன்கு ஒட்டியதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து இறக்கவும்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.