Jump to content

தமிழ் பிழைக்கு மன்னிப்பு கோரிய சந்திரிகா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
chandrika_new_001.jpg
தமிழ் எழுத்து பிழையுடனான துண்டு பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பகிரங்க மன்னிப்பு கோரினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிடப்பட்ட துண்டு பிரசுரமொன்றில் எழுத்து பிழை காணப்பட்ட நிலையில், அதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலுள்ள பிரதான அரச நிறுவனங்களில் தமிழ் உத்தியோகத்தர்களின் பற்றாகுறையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது கடந்த 50 வருடங்களாக காணப்பட்ட பாரிய பிரச்சினை எனவும், அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே தற்போதைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது உறுதியளித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பின் சிகரம் தொடங்கி விட்டா. நானும் உங்களைப்போல, ஆயுதத்திற்கு தந்தையை, கணவரை பலி கொடுத்தவா. எனக்கும் உங்கள் வேதனை புரியும் எண்டு நீலிக்கண்ணீர் வடித்து பதவிக்கு வந்து செய்தது மறந்து தமிழ்ப் பிழைக்கு மன்னிப்புக் கேட்டு செய்த பாவத்தை மறைக்கப் பாக்கிறா. கவலை வேண்டாம், நாங்கள் எப்பவோ மன்னித்து, மறந்து உங்களை மீண்டும் உயர்த்தி விட்டோம் பாருங்கோ. உதுக்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேக்கிறீங்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா செய்ததுக்கு 1999 டிசம்பர் 18 அன்று அவவைப் போடப் பார்த்தனாங்கள்! ஜஸ்டு மிஸ்டு. ஒரு கண்ணோட போயிட்டு! 1994 இலையும் சந்திரிகா வரும்போது பேசித் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது! அதுவும் வேஸ்டு! 

Link to comment
Share on other sites

இரவில புளியமரத்தடியில் தூங்கினால் பேய் அடிக்கும் என்பார்கள். உண்மையோ??????????என்னவோ??????????  
 

Link to comment
Share on other sites

தமிழீழத்தை அப்பிடியே அள்ளி வாயிலை போட்டு விட்டிருப்பா. சா பெடியள் தான் பிழை விட்டிட்டாங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.