Jump to content

ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர்


Recommended Posts

ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர்

 

  திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன.

 

இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந்தர்சிங் அடித்தார். அந்த பந்து நடுவராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான்வாட்டை தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த ஜான்வாட் மைதானத்திலேயே விழுந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Link to comment
Share on other sites

திண்டுக்கல்லில் ரஞ்சி போட்டி: காயமடைந்த ஆஸ்திரேலிய நடுவரின் உடல்நிலை முன்னேற்றம்!

 

திண்டுக்கல்லில் நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் காயமடைந்தார். அவருக்கு திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

cricket_vc22.jpg

திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் தமிழக அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸின் 49வது ஓவரில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் ராஜ்வீந்தர் சிங் அடித்தார். அது நடுவர் ஜான்வாட்டின் கழுத்து பகுதியில் படவே ஜான் மயங்கி விழுந்தார்.

உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜான் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  நலமாக உள்ளார்.

http://www.vikatan.com/news/sports/55875-umpire-got-hurt-in-rajni-trophy.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.