Jump to content

சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் என்ன?


Recommended Posts

சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் என்ன?

 
 

புலம்­பெயர் புலி அமைப்­பு­களின் தேவைகள் சரி­யாக நிறை­வேற்­றப்­பட்டு வரு­வ­தனால் அர­சாங்­கத்தின் எந்­த­வொரு செயற்­பாட்­டையும் எதிர்க்­காது பாரா­ளு­மன்­றத்தில் வாய்­மூடி மௌன­மாக இருக்­கு­மாறும் புலம்­பெயர் புலி அமைப்­புகள் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன. புலம்­பெயர் அமைப்­பு­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே சம்­பந்தன் செயற்­ப­டு­கின்றார் என்று மஹிந்த ஆத­ரவு அணி­யினர் குற்றம் சுமத்­தினர்.

sampanthan_15.jpg

கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்துத் தெரி­வித்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான பந்­துல குண­வர்த்­தன இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில் நல்­லாட்சி என்ற பெயரில் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அனைத்து விட­யங்­களும் சர்­வா­தி­கா­ர­மா­கவே உள்ளன.

பாரா­ளு­மன்­றத்தில் மக்­களின் பிர­தி­நி­திகள் அனை­வ­ருக்கும் சம அந்­தஸ்து உள்­ளது. அதேபோல் அர­சாங்கம் செய்யும் மோச­டிகள், ஊழல் தொடர்பில் விமர்­சிக்க அனை­வ­ருக்கும் சம உரிமை உள்­ளது. ஆனால் இன்று அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விமர்­சிக்­கவோ எமது தரப்பு கார­ணங்­களை முன்­வைக்­கவோ எமக்கு வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. பிர­தமர், சபை முதல்வர் மட்­டு­மல்­லாது சபா­நா­ய­கரும் எம்மை கட்­டுப்­ப­டுத்தும் வகை­யி­லேயே செயற்­ப­டு­கின்றார். ஆகவே இது ஜன­நா­யக நாட்டில் எமது உரி­மை­களை மீறும் செய­லாகும்.

பாரா­ளு­மன்­றத்தில் எமக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அடக்­கு­முறை செயற்­பா­டுகள் தொடர்பில் சர்­வ­தேச பாரா­ளு­மன்ற பிரிவில் நாம் முறை­யி­ட­வுள்ளோம். இலங்­கையில் ஜன­நா­யகம் பல­ம­டைந்து சக­ல­ருக்கும் உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் சர்­வ­தேச தரப்­பிடம் தெரி­வித்து வரு­கின்­றது.

ஆனால் உண்­மையில் இலங்­கையில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது சர்­வ­தேச நாடு­க­ளுக்கு தெரி­யாது. ஆகவே இலங்­கையில் எமக்கு எதி­ராக இடம்­பெறும் அடக்­கு­மு­றை­களை நாம் வெளிப்­ப­டுத்­தி­யாக வேண்டும்.

மேலும் அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வரவு – செலவு திட்­ட­மா­னது நாட்டை சீர­ழிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. அரச துறையை தனியார் மயப்­ப­டுத்தி நாட்டை முழு­மை­யாக கொள்­ளை­ய­டிக்­கவே இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அநா­வ­சிய வரி அற­வீ­டுகள், திறந்த பொரு­ளா­தார கொள்­கையில் நாட்டை விற்கும் நட­வ­டிக்­கை­களை இவர்கள் மேற்­கொள்­கின்­றனர்.

நாட்டில் மிகப்­பெ­ரிய பிரச்­சினை தலை­தூ­கி­யுள்­ளது. கல்­வியில் மிகப்­பெ­ரிய கொள்­ளைகள் இடம்­பெ­று­கின்­றன.சூரி­ய­கல வாக­னங்­களை நாட்டில் பாவ­னைக்கு அனு­ம­தித்து இயற்­கையை பாது­காக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. ஆனால் இந்த அர­சாங்கம் மாறாக எரி­பொருள் வாக­னங்­களின் வரியை விடவும் சூரி­ய­கல வாக­னங்­க­ளுக்கு இரண்­டு­ம­டங்கு வரி­வி­திப்பை செய்­துள்­ளது. கடந்த காலங்­களில் இலங்­கைக்கு பொரு­ளா­தார பாது­கா­வ­ல­னாக இருந்த சீனாவை இந்த அர­சாங்கம் புறம்­தள்­ளி­விட்டு நாட்டை பிரிக்கும் கூட்­டணி நாடு­க­ளுடன் கைகோர்த்து செயற்­ப­டு­கின்­றது. நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர உத­வி­யதும், நாட்டில் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்க உத­வி­யதும் சீனாவே தவிர இப்­போது கூட்டு சேர்ந்­துள்ள கூட்­ட­ணி­யல்ல.

இந்த விட­யங்கள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்ப்பு தெரி­விப்­பார்க்ள என்று எதிர்­பார்த்­த­போதும் எதிர்­கட்­சி­யினர் வாய்­மூடி செயற்­ப­டு­கின்­றனர். உண்­மையில் இன்று எதிர்க்­கட்சி ஒன்று எங்கு உள்­ளது என்­பது மக்கள் மத்­தியில் மிகப்­பெ­ரிய கேள்­வி­யாக உள்­ளது. மக்­களின் பொரு­ளா­தார சுமை, நாடு எவ்­வாறு பய­ணிக்­கின்­றது என்­பது இவர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. இவர்­க­ளுக்கு தெரிந்த எல்­லாமே ஈழம் மட்­டு­மே­யாகும்.

வர­வு–­செ­லவு திட்­டத்தை எதிர்க்­கக்­கூ­டா­தென்றும், பாரா­ளு­மன்­றத்தில் வாய்­மூடி இருக்­கு­மாறும் இந்த அர­சாங்­கத்தின் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் ஆத­ரிக்­கு­மாறும் புலம்­பெயர் புலி அமைப்­புகள் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன.

சர்­வ­தேச மட்­டதில் இயங்­கி­வரும் புலம்­பெயர் புலிகள் அமைப்பின் பிரி­வி­னை­வாத செயற்­பா­டுகள் சரி­யாக இந்த அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. எமது அர­சாங்­கத்தில் தடை விதிக்­கப்­பட்டு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்த புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் அனைத்தின் தடை­களும் இந்த அர­சாங்­கத்தில் நீக்­கப்­பட்­டுள்­ளது. திறந்த பொரு­ளா­தார கொள்கை என்ற திட்­டத்தில் புலி­களின் அனைத்து வியா­பா­ரத்­தையும் நாட்டில் முன்­னெ­டுக்க இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இவ்­வாறு நாட்டை பிரிக்கும் சகல உத­வி­க­ளையும் இந்த அர­சாங்கம் செய்­து­வ­ரு­வ­தனால் அதை தடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படக் கூடாது என புலிகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இப்போது நாம் மட்டுமே நாட்டை சரியான பாதையில் முன்னெடுக்க ஒன்றிணைந்துள்ளோம். அதை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் எமக்கு எதிரான அழுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நாம் பாராளுமன்றத்தில் மட்டுமே எமது போராட்டத்தை முன்னெடுக்காது நாட்டு மக்களுடன் ஒன்றினைந்து எமது போராட்டத்தை முன்னெடுக்க தாயாராக உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/12/01/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் தன்னுடைய ஆயுதத்தை மெள‌னித்துவிட்டார் போலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் இருந்ததே ஒரே ஒரு ஆயுதம் தான். அது மெளனிச்சு கால் நூற்றாண்டு கடந்திருக்கும். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

யாழில் சிலபேர் வாயை திறந்து முட்டாள்ஆகினவை  இவருக்கு வக்காளத்து வேண்டினது ஞாபகம்  வந்து தொலைக்குது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.