Jump to content

15 தமிழர் நாள்காட்டியின் 12ஆம் முழு நிலாவும் படிப்பினைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015

15-ஆம் பதிவு

30.11.2015

     பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12-வது முழுநிலவு, அதாவது மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்பது 26.11.2015 அன்று கடந்து சென்றது.

     மிகுந்த எதிர்பார்ப்பையும் கவலையையும் ஏற்படுத்திய 12-வது முழுநிலவானது 25.11.2015-ல் வந்து விடக் கூடும் என்ற அச்சம் இருந்தது. அதாவது கடந்த ஆண்டைப் போல 29 நாளில் முறை முதிர்ந்து உதிர்ந்து விட வாய்ப்பு இருந்தது. ஆனால் மயிரிழையில் அது தப்பியது.

     25.11.2015 மாலை 05.45-க்குத் தொடுவானை விட்டு ஒரு பனை உயரத்தில் தோன்றிய நிலவு நள்ளிரவு 12 மணிக்குத் தலை உச்சியைத் தாண்டி 15 நிமிடங்கள் முந்தியது. விடியும் முன்பாக மறைந்து போனது. கண்டிப்பாக இது முழுநிலவின் முந்தைய நாளுக்கான தகுதிகளே. ஆதலால் 25.11.2015-ல் தோன்றிய நிலவுக்கு முழு நிலவு நாளின் தகுதியைத் தர இயலாது. மேலும் முழு வட்டத்திலும் ஒரு நூல் குறை இருந்தது.

     26.11.2015-ல் தோன்றிய நிலவானது வழக்கத்திற்குச் சற்று மாறாக 06.45-க்குத் தோன்றி நடுவானைக் கடப்பதில் அரைமணி நேரம் பிந்தியதுடன் விடிந்தபின் ஒரு மணி நேரம் நீடித்து இருந்தது. இது முழுநிலவின் மறுநாளுக்கான அறிகுறி.

     இவ்வாறான இரண்டுங்கெட்டான் நிலையில் எப்படி முடிவு செய்வது என்பதில் கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்பினை கிடைத்திருக்கிறது.

 

ஆடுதலை விலகல்:

     மூன்றாம் பிறை முதல் முழுநிலவு நாள் வரையில் ஏதாவது ஒரு திசையில் விலகி விலகி ஒதுங்கி ஒதுங்கித் தொடுவானில் தோன்றும் இயல்பு உடையது நிலவு. வளர்பிறையின் போக்கு முடிந்து விட்டால் அடுத்தநாளில் அது திரும்பி விடும். 29-நாளில் உதிரும் நிலவுகள் யாவும் 30-ஆம் நாளில் திரும்பி விடுவது உண்டு.

     அவ்வாறு இல்லாமல் 26.11.2015-ல், 30-ஆம் நாளில் தோன்றிய இவ்வாண்டின் 12-வது முழுநிலவானது வடக்கே நன்றாகி விலகி வளர்பிறைப் பண்பை நன்கு உறுதி செய்தது.

 

 வெற்றித் தகுதி:-

     இந்த நிலவுக்கு வெற்றித் தகுதி தருவதை முந்தைய நாள் நிலவுஎதிர்க்காது என்பதாலும், கடந்த 7-வது நிலவிலும் இது போன்ற நிலை ஏற்பட்டு அது வெற்றி நிலவாகப் பிறகு கருதப்பட்டபடியாலும், அதைத் தொடர்ந்து வந்த 8-வது நிலவு 29 நாளில் உதிர்ந்ததைக் கணிக்க முடிந்தது என்பதாலும் இம்முறை இந்தப் பன்னிரண்டாவது முழுநிலவை வெற்றிபெற்ற நிலவாகக் கருதிக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

பட்டியல்

முழு நிலவுகள்

வர வேண்டிய நாட்கள்

வந்த நாட்கள்

தகுதி

நாள் குறைவு

சிறப்புத் தகுதி (வர வேண்டியது)

ஆங்கில நாள்

1 வது

12

12

     

 

பூசம்

04.01.2015

2 வது

42

42

     

 

மகம்

03.02.2015

3 வது

72

72

     

 

உத்திரம்

05.03.2015

4 வது

102

102

     

 

சித்திரை (அரவு தீண்டியது)

04.04.2015

5 வது

132

131

      X

1

விசாகம்

03.05.2015

6 வது

162

161

     

 

கேட்டை

02.06.2015

7 வது

192

191

     

 

பூராடம்

02.07.2015

8 வது

222

220

      X

2

திருவோணம்

31.07.2015

9 வது

252

249

      X

3

உத்திரட்டாதி

29.08.2015

10 வது

282

278

      X

4

அசுவதி

(பகுதி அரவு தீண்டியது)

27.09.2015

11 வது

312

308

     

 

கார்த்திகை

27.10.2015

12 வது

342

338

     

 

மிருக சீரிடம்

26.11.2015

 

அறிவிப்பு:-

     இவ்வாண்டில் 8 முழுநிலவுகள் வெற்றிபெற்று 4 நிலவுகள் தோல்வியடைந்திருக்கின்றன. அந்த வகையில் ஆண்டு நாட்கள் 360-ல் நான்கு குறைய 356 நாட்களில் ஆண்டு சுருண்டு விடலாம் என்பதை ‘மரபு வழித் தக்கார் அவையம்-2015’ சுட்டிக் காட்டுகிறது.

     கடந்த ஆண்டில் 5 நிலவுகள் மட்டுமே வெற்றிபெற்று 7 நிலவுகள் தோற்றதைக் கணக்கிட்டு 353 நாட்களில் அந்த ஆண்டு சுருண்டதை அறிவித்தது.

 

முன்னேற்றம் எப்படி:-

     இதற்கு முன்னர் பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி திருத்த முயற்சிகளில் ஈடுபடாமல் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது குழந்தைத் தனமானதுதான். ஆனாலும் எத்தனையோ வகை நுண்ணுயிர்கள், செடிகொடிகள், பூச்சிகள், வண்டினங்கள், பறவைகள், மரங்கள் போன்றவற்றின் தவம் இதில் இருக்காது என்று ஒதுக்கிவிட இயலாது. அடுத்த ஆண்டு அது பற்றிப் பேசலாம்.

 

வானவியல் பல்சக்கரம்:-

     தமிழர்கள் செய்ய வேண்டியது எல்லாம், மரபறிவின் அடிப்படையில் வானவியல் பல்சக்கரத்தைக் கவ்விப் பற்றுவது மட்டுமே.

 

தமிழ்ப்புத்தாண்டு:

     மார்கழி முழுநிலவுக்கும் தைத்திங்கள் முழுநிலவுக்கும் இடையில் தான் தென்செலவு நிறைவு பெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டு சரியான நாளைத் தேர்வு செய்வது முதன்மையானது.

 

நிழல் எல்லை:-

      கதிரவனின் தென்செலவின் எல்லையைப் பாகை மூலமாக அல்லாமல் நிழல் கோடுகள் மூலமாக அளந்து அறுதியிட்டிருக்கிறார்கள் தமிழர்கள். அதாவது கடைசி நிழல் ஒருநூல் சுத்தமாகத் தெரிவதையும் கணக்கிடும் ஆற்றல் அவர்களிடம் இருந்திருக்கிறது. இன்னும் இருக்கிறது.

     அந்த வகையில் இவ்வாண்டின் கடைநாள் என்பது 26.11.2015+(15+3) = 14.12.2015 ஆகும். அதாவது மார்கழி முழுநிலவினைத் தொடர்ந்த 15-ஆம் நாளில் மறைநிலவு கணக்கிடப்படும். அந்த நாள் 11.12.2015 ஆகும். அதிலிருந்து மூன்றாம் பிறை நாள் 14.12.2015 ஆகும். அன்றுடன் மார்கழித் திங்கள் நிறைவுறுகிறது. கதிரவன் மகர ராசிக்குள் நுழைய அணியமாகிறான்.

 

ஆண்டுச் சரிவின் பாதிப்பு:-

     ஆண்டுச் சரிவின் பாதிப்பினால் அதில் சிறு பின்னடைவு இருக்கிறது. அதனைச் சரிசெய்யும் நுட்பத்தை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் வளர்த்து வருகிறது. இனி வரும் காலங்களில் தமிழால் அதனைப் புரிய வைக்கும்.

 

வீட்டுப் பொங்கல்:-

     இவ்வாண்டின் 356-ஆவது நாள் 14.12.2015-ல் நிறைவு பெறுவதால் 15.12.2015 அன்று வீட்டுப் பொங்கலிட்டுத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டினை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். அன்றிலிருந்து 12 நாட்களுக்குக் கொண்டாடலாம். அதற்காக 08.12.2015-ல் வண்தோட்டு நெல்லின் கைக்குத்தல் அரிசியை ஊறவைத்து 7 நாள் நிறைவில் கழுநீரை வடித்தெடுத்து 15.12.2015 அன்று காலைக் கதிரவனை வரவேற்றுப் புதுப்பானையில் உலைநீராக ஏற்றிப் பொங்கலிடலாம். இதுவே நாற்ற உணவு ஆகும்.

 

திருப்பொலி:-

     “ஆர்கலி உவகையர் ஒருங்கு உடன் கூடித்

தீது இன்றி(று) பொலிக என தெய்வக்கடி அயர் மார்”     

– முல்லைக் கலி 5-6-105.

     பொலி, பொலி என்று ஒலியெழுப்புவதும், குலவையிடுவதும் பழங்காலந்தொட்டு வழக்கில் இருந்து வருவதாகத் தெரிகிறது. திருப்பொலி மருவித் திருப்பலி ஆக வழங்கப்பட்டு இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் புத்தாண்டு பற்றிய அனைத்து உண்மைகளையும் தொலைத்தாயிற்று.

 

     ஒவ்வொன்றாக மீட்டு எடுப்போம். மீட்டு எடுத்தவற்றைத் தக்க வைத்துக் கொள்வோம்.

 

தமிழ்ப் புத்தாண்டு நாள்:-

     தமிழ்ப் புத்தாண்டு நாள் ஞாயிறு, நட்சத்திரம் சதயம், முதல் முழுநிலவு பூசம் என்பதில் ஒரு போதும் மாற்றம் இல்லை. முதல் முறையாக நிலவு தடுமாறும் போது, முதல் முறையாக நாள் என்ற எண்ணிக்கையும் அதற்கு உரிய கிழமையும் அதன் வழியே நட்சத்திரமும் தடுமாறும். அதற்கு ஒரு மாற்றுப் பற்சக்கர அமைப்பை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 உருவாக்கியிருக்கிறது. அதன் வழியில் பிழையறிவிப்பை அது செய்கிறது.

      தமிழர்கள் புத்தாண்டுக் கட்டமைப்பில் உலகின் முன்னோடிகள் ஆவர். அந்த நுட்பத்தைத் தமிழர் அல்லாதாருடன் பகிர்ந்து கொண்டதே இன்று வரையிலான துன்பத்திற்கு அடிப்படை. இனிமேல் அத்தவறு நிகழாது பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

 

தமிழ்ப் புத்தாண்டு அரசியல்:-

     தமிழ்ப்புத்தாண்டு என்பதே அரசியல்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 இதுவரை தமிழ்த் தேசியப் புரிதல் இல்லாதவர்களிடம் தமிழ்ப் புத்தாண்டு பற்றி பேசியது இல்லை. பேசவும் செய்யாது. தமிழ்த் தேசியத் கருத்தாளர்களும் மிகவும் மெள்ளப் புரிந்து கொள்ளும் போக்கு உடையவர்களாக இருக்கிறபடியால் மெள்ளவே நகர்த்துகிறது.

 

கலைக்கப்படும்:

     மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 என்பது 14.12.2015 அன்று கலைக்கப்படும். அது வரையில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் அச்சேற்றம் பெறும்.

     மீண்டும் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2016 என்பதாக அடுத்த முழுநிலவுக்குப் பிறகு அது வெளிப்படும். இந்த ஆங்கில ஆண்டு அடையாளத்தை இழுத்துச் செல்வது என்பது சில ஆண்டுகளில் அதனைக் கழற்றிவிடுவதற்காகத்தான். அது எவ்வளவு விரைவாக நடக்கும் என்பது தமிழ்த் தேசியர்களின் கைகளில் இருக்கிறது.

 

பருவநிலைகளில் முன்னேற்றம்:-

     தமிழ்ப்புத்தாண்டு தமிழர்களால் புரிந்து கொள்ளப்படும்போது, உலக நன்மை குறித்துப் பருவ நிலை முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்படும்.

 

     மலை அகழ்க்குவனே

     கடல் தூர்க்குவனே

வான் மாற்றுவன் என

     தான் முன்னிய துறை போகலின் (பட்டினப்பாலை 271-273)

 

இது கரிகாலனின் கூற்று. இந்தத் துணிச்சலைத் தந்தது தமிழ்ப் புத்தாண்டு பற்றிய நுட்பம். மீண்டும் தமிழர்கள் தமது ஊற்றமான மரபறிவின் மீது நம்பிக்கை கொண்டு தமிழ்ப் புத்தாண்டினைத் தழுவி வரவேற்றால் உலகம் பயன்பெறும்.

 

___---===ஊஊஊ===---___

 

இது மரபுவழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 இன் வெளியீடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.