Jump to content

குப்பைகளால் நிறைந்து வழியும் யாழ்ப்பாணம்


Recommended Posts

குப்பைகளால் நிறைந்து வழியும் யாழ்ப்பாணம்
 
குப்பைகளால் நிறைந்து வழியும் யாழ்ப்பாணம்
யாழ். ஜிம்மா பள்ளிவாசல் லேனில் மட்டுமல்ல பல இடங்களில் வீசி எறியப்படும் குப்பைகளால் பாரிய தொற்று நோய் அபாயமும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படாமலே இருக்கின்றன.
 
வீடுகளில் சேரும் கழிவுப் பொருட்களை மாநகர சபை உரிய முறையில் அகற்றாத காரணத்தால் சிலர் தமது வீட்டு கழிவுகளை பைகளில் கட்டி வீதிகளில் வீசி எறிகின்றனர். தமது வீடு துப்பரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் வீட்டு கழிவுகளை மற்றவர்களின் வீடுகளுக்கு முன்பாக வீசி எறிகின்றனர். இதற்கு 'மாநகர சபை ஒழுங்காக குப்பை எடுக்க வாறதில்லை' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
 
அதாவது, மாநகர சபை குப்பைகளை கொட்டி வந்த கல்லுண்டாய் வெளிகளில் குப்பை கொட்ட கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அப்பகுதி மக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதனால் கல்லுண்டாய் வெளிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால் குப்பைகளை கொட்ட இடமில்லை என மாநகர சபை கூறுகின்றது.
 
மாநகர சபை குப்பைகளை அகற்றவில்லை என்றாதால் அதனை பைகளில் கட்டி வீதிகளும் மற்றவர்களின் வீட்டுகளுக்கு முன்னால் தூக்கி வீசலாமா ? என்கின்ற கேள்வியும், குப்பை கொட்ட இடமில்லை அதனால் குப்பைகளை அள்ளவில்லை என மாநகர சபை கூறிவிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளது விடலாமா ? என்ற கேள்வியும் எழுகின்றது. இதற்கான பதில்களை உரியவர்கள் தான் வழங்க வேண்டும்.
 
வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகளால் தொற்று நோய் அபாயம் சுகாதார சீர்கேடுகள் மற்றும் துர்நாற்றத்தால் அசௌகரியங்கள் என்பன ஏற்படுகின்றன.
 
இதனால் பாதிப்பினை எதிர்நோக்கும் மக்கள் தாம் மாநகர சபைக்கு அறிவித்தால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கபடுகின்றது. குப்பைகளை கொட்டியுள்ளர்கள் அவற்றை அகற்றுங்கள் என கூறினால், நீண்ட காலதாமதத்திற்கு பின்னரே வந்து அகற்றுவார்கள். என்கின்றனர்.
 
தொடர்ந்து குப்பைகளை கொட்டுகின்றார்கள் என்று மாநகர சபைக்கு முறைப்பாடு செய்தால் அவ்விட்டத்தில் " குப்பைகளை கொட்டாதீர்கள் " என அறிவித்தல் பலகையை நாட்டி விட்டு செல்கின்றார்கள். அதன் பின்னரும் குப்பைகளை கொட்டுகின்றார்கள் என மாநகர சபையிடம் முறையிட்டால் இதற்கு மேல தாம் என்ன செய்வது என மாநகர சபையினர் கைவிரிக்கின்றார்கள்.
 
அது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தால் கொட்டுகின்றவர்களை அடையாளம் காட்டுங்கள் தாம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறுகின்றார்கள். கொட்டுகின்றவர்களை அடையாளம் தெரியும் என்றால் நாமே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போமே .. என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.
 
அத்துடன் மழையினை தொடர்ந்து டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் எம் வீட்டுக்கு அருகில் மற்றவர்களால் வீசப்படும் குப்பைக்குள் நீர் தேங்கி டெங்கு பரவாதா ? அதற்கு யார் மீது நடவடிக்கை எடுக்க போகின்றார்கள் அதற்கும் எம்மீது தான் நடவடிக்கை எடுப்பார்களா ? என்ற கேள்வியினையும் எழுப்புகின்றார்கள்.
 
மழைகாலத்தில் இலையான்களின் பெருக்கம் அதிகளவில் காணப்படும். அந்த நிலையில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளில் இருந்து பெருகும் இளையான்களால் அருகில் உள்ள வீடுகளிலும் இலையான்களின் பெருக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
 
கடந்த வாரங்களில் பெய்த கடும் மழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயங்கள் உள்ளன குறிப்பாக வயிற்றோட்டம், வயிற்றுளைவு, செங்கமமாரி, நெருப்புக்காய்ச்சல் போன்ற தெற்று நோய் அதிகளவில் பரவும் வாய்ப்புக்கள் உள்ளன.அதிலும் 15 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்நோய் அதிகளவில் தாக்கும் அபாயம் உள்ளது.
 
குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை தொற்று நோய் மிக விரைவில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது எனவும் 
 
வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வயிற்றுளைவினாலும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வறிய்றோட்டத்தினாலும், 150 ற்றும் மேற்பட்டவர்கள் நெருப்புக் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே இந்தப் பிரச்சினைக்கு யாழ்.மாநகர சபையை மட்டும் குறைகூறுவதில் பயனில்லை.மக்களும் தவறிழைக்கிறார்கள் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டும் அவற்றில் போடாமல் தூக்கி வீசுகிறார்கள் .அந்தக் குப்பைகள் வீதிகளில் சேருகின்றன.அவ்வாறு சேர்வதால் குறித்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உண்டு. எனவே இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் கவத்திற்கொண்டு இதற்கு உடனடித்தீர்வை காண வேண்டும்.
 

dmy82r.jpg

rv8weu.jpg

20k29tt.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள் ரொம்ப பிஸி....நேரமில்லை....இதுகளைபற்றி கதைக்க நேரமிலை...வெறி சாரி

Link to comment
Share on other sites

பனம்கொட்டை நட நேரமிருக்கும் .பாலாறும் தேனாறும் ஓடுமென்று பொய் சொல்ல தெரியும், இன அழிப்பு நடக்கவில்லை என பறந்து பறந்து சொல்ல தெரியும் இதுகளுக்கு நேரமிருக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.. நவீனன்!

மகாத்மா காந்தியிடம் ஒரு வெள்ளையர் இந்தியர்கள் சுத்தமானவர்கள் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்..!

அப்போது அவர் சொன்ன பதில் இது தான்!

ஆமாம்.. தங்கள் முத்தத்தைக் கூட்டிக் குப்பையைப் பக்கத்துக்கு வீட்டுப் படலையில் கொட்டி விடுவார்கள்!

இதே எமக்கும் பொருந்தும்!

Link to comment
Share on other sites

குப்பை அகற்றுவது ஒரு மாநகர சபையின் அதிகாரத்துக்குள் வரும் விடயம் என்பது கூட புரியாமல் அதை பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்பு என்று நினைக்கும் ஆட்களை என்னவென்பது. மாநகர சபையின் அதிகாரத்துக்கு அடுத்தது மாகாணசபையின் அதிகாரம். விக்கிக்கு வெற்று அறிக்கை கொடுக்கும் விக்கியரின் அதிகாரத்துக்குள் வருவது. இவை அனைத்தும் செயலற்றதாக போகும் போதே ஒரு பா.உ. தனது பகுதிக்கும் மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏதாவது செய்ய வேண்டி வரும்.

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

குப்பை அகற்றுவது ஒரு மாநகர சபையின் அதிகாரத்துக்குள் வரும் விடயம் என்பது கூட புரியாமல் அதை பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்பு என்று நினைக்கும் ஆட்களை என்னவென்பது. மாநகர சபையின் அதிகாரத்துக்கு அடுத்தது மாகாணசபையின் அதிகாரம். விக்கிக்கு வெற்று அறிக்கை கொடுக்கும் விக்கியரின் அதிகாரத்துக்குள் வருவது. இவை அனைத்தும் செயலற்றதாக போகும் போதே ஒரு பா.உ. தனது பகுதிக்கும் மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏதாவது செய்ய வேண்டி வரும்.

 

 

சரியான கருத்து நிழலி.

உள்ளூர் அரசியல் என்ன செய்யுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரும் முஸ்லீம்கள் யாழில் இருந்த போது குப்பை கொட்டடியில் சிவன்பண்ணை வீதியில் இருந்து..  கன்னாதிட்டிச் சந்தி வரை வரும். மாட்டை வெட்டி வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு முன்னால் போடுவார்கள். அதிலும் மக்கள் விசனம் அடைந்து பின்னர் போராளிகள் தலையிட்டு.. அதனை பொதுத்தொட்டியில் போட வகை செய்தார்கள்.

முஸ்லீம்களின் முக்கால்வாசி செயற்பாடுகள் அடாத்தானவை. இது குறித்து மாநகரசபை கடும் சட்டதிட்டங்களை அமுலாக்கினால் அன்றி.. இந்த குப்பை சமாச்சாரம்.. சமூகச் சமாச்சாரமாக அதிக காலம் எடுக்காது. :rolleyes:

Link to comment
Share on other sites

11 hours ago, spyder12uk said:

பனம்கொட்டை நட நேரமிருக்கும் .பாலாறும் தேனாறும் ஓடுமென்று பொய் சொல்ல தெரியும், இன அழிப்பு நடக்கவில்லை என பறந்து பறந்து சொல்ல தெரியும் இதுகளுக்கு நேரமிருக்காது .

முதலமைச்சருடைய அதிகாரத்திற்குள் வரும் விடயத்திற்காக ஏன் சம்பந்தமில்லாமல் மற்றவர்களில் குறை சொல்லுகின்றீர்கள் ,இப்படித்தான் இங்கு பலருடைய கருத்துக்கள் .

இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்த விக்கியருக்கு நேரமில்லையா ?அல்லது நிர்வாகம் நடாத்த தெரியவில்லையா ? 

வல்வெட்டித்துறை நகரசபையை நடாத்த தெரியாதவர்களுக்கு இன்னும் அதிகாரம் தேவையா ?

 

Link to comment
Share on other sites

முன்னைய மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இருந்தபோது யாழ் துப்பரவாக இருந்தது என்பது யாழ்ப்பாணத்திலுள்ள யாவருக்கும் தெரிந்த விடயம்.

Link to comment
Share on other sites

மக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வும் அவசியம் .

நாட்டில் செய்ய வேண்டிய விடயங்கள் பல இருக்கு ஆனால் வீணான விடயங்களில் மண்டையை போட்டு உடைப்பதே பலருக்கு வேலையாகப்போய்விட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

மக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வும் அவசியம் .

நாட்டில் செய்ய வேண்டிய விடயங்கள் பல இருக்கு ஆனால் வீணான விடயங்களில் மண்டையை போட்டு உடைப்பதே பலருக்கு வேலையாகப்போய்விட்டது .

விழிப்புணர்வை விட கடுமையான சட்டங்கள் மூலம்தான் பலதை நிறைவேற்ற முடியும்.

கடுமையான சட்டங்கள்தான் நம்மவருக்கு பிடிக்காத விடயமாச்சே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

முன்னைய மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இருந்தபோது யாழ் துப்பரவாக இருந்தது என்பது யாழ்ப்பாணத்திலுள்ள யாவருக்கும் தெரிந்த விடயம்.

அம்மையார் இருந்த காலத்தில் தான் பெரிய குப்பைப் பிரச்சனை தலைவிரித்தாடியது. அம்மையார் தன் பாதுகாப்புக்கு இருந்தி வைச்சிருந்த இலட்சம் சிங்கள இராணுவம் கக்கா போய் குவிச்சதும் பிரச்சனையாய் இருந்தது. 

நவீன குப்பை சுழற்றி முறைமைகள் அமுல்படுத்தப்பட்டால் அன்றி.. கல்லுண்டாய்... பொம்மைவெளி மட்டும் குப்பைகளை தாங்கும் இடமாக முடியாது.

சேதனக் கழிவுகளை.. அறிவுறுத்தப்படும் புதைகுழிகளில் வெட்டி புதைக்கலாம்.. அல்லது சேதன உரமாக்கம் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். அசேதனக் கழிவுகளை சுழற்சிமுறைப்படுத்த தனியார் நிறுவனங்களோடு இணைந்து புதிய திட்டம் அமுலாவது அவசியம். மேலும் சேதனக் கழிவுகளை வீடுகளில் சேமிக்கவும் எரிவாயு உற்பத்தி பண்ணவும் பாதுக்காப்பான வழிமுறைகளை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதோடு அவற்றை செய்ய முன்வரும் குடும்பங்களுக்கு மாநகர வரிவிதிப்பில் சலுக்கை அளித்து ஊக்குவிக்கலாம். 

மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் இது தொடர்பில் கவனம் எடுப்பது வரவேற்கத்தக்கது. அவர் பொ. ஐங்கரநேசனின் மாணவரும் ஆவார். அந்த வகையில் மாநகரும்.. மாகாண சபையும் கலந்து பேசி விடயங்களை சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் காரணிகளை முன்வைத்து கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியம்.

யோகேஸ்வரி அம்மையார் விட்ட தவறின் தொடர்ச்சியால் தான் இப்பிரச்சனையே. அதில் நீதிமன்றம் தலையிட்ட படியால்.. இது வெளிச்சத்துக்கு வருகுது. :rolleyes:

Link to comment
Share on other sites

Lee%2BKuan%2BYew%2Bcleaning%2BSingapore%

29(15).jpg

20141002133050.jpg

  குப்பை அகற்றுவது ஒரு மாநகர சபையின் அதிகாரத்துக்குள் வரும் விடயம் என்பது கூட புரியாமல் மேலே படத்தில் உள்ள லூசுபயலுகள் ரோட்டை சுத்தப்படுத்திரான்கள்.

"விசுவாசம் வேணும் அதுக்காக ஓவர் விசுவாசம் கொண்டால் அது  உடம்புக்கும் நாட்டுக்கும் கேடு "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மலசல கூடம் இருந்தும் வெட்டவெளியில் மலம் கழித்து பழகியவர்களின் குறைபாடுகளும், தன் வீட்டுக் குப்பையை மற்றவன் வீட்டு வாசலில் கொட்டி மூக்கைப் பொத்துகிறவர்களும் மாற வேணுமே. ஊறிப்போன பழக்கங்களை மாற்றுவது கடினம். இதற்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு சம்பந்த்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு இரகசிய சி.டி கமராக்களை பயன்படுத்தவது சிறந்தது. இது எந்தளவுக்கு பயன்படும் என்பது நம் மக்களின் பொறுப்புணர்வில் தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, spyder12uk said:

Lee%2BKuan%2BYew%2Bcleaning%2BSingapore%

29(15).jpg

20141002133050.jpg

  குப்பை அகற்றுவது ஒரு மாநகர சபையின் அதிகாரத்துக்குள் வரும் விடயம் என்பது கூட புரியாமல் மேலே படத்தில் உள்ள லூசுபயலுகள் ரோட்டை சுத்தப்படுத்திரான்கள்.

"விசுவாசம் வேணும் அதுக்காக ஓவர் விசுவாசம் கொண்டால் அது  உடம்புக்கும் நாட்டுக்கும் கேடு "

பிரதமர்களும் முதலமைச்சர் மாரும் ஒவ்வொரு நாளும் இப்பிடி கூட்டித் துடைச்சுப் போட்டுத் தான் தங்கட அன்றாட அலுவல்களைப் பார்க்கப் போறவை எண்டு எனக்கு இவ்வளவு நாளும் தெரியாது! நன்றி ஸ்பைடர்! (கடவுளே..? எங்கை போய் முட்ட!!??:rolleyes:

Link to comment
Share on other sites

 

28 minutes ago, Justin said:

பிரதமர்களும் முதலமைச்சர் மாரும் ஒவ்வொரு நாளும் இப்பிடி கூட்டித் துடைச்சுப் போட்டுத் தான் தங்கட அன்றாட அலுவல்களைப் பார்க்கப் போறவை எண்டு எனக்கு இவ்வளவு நாளும் தெரியாது! நன்றி ஸ்பைடர்! (கடவுளே..? எங்கை போய் முட்ட!!??:rolleyes:

எங்கடை பாராளுமன்ற பிரதிநிதிகள் எனபடுவோர் இதுவரைக்கும் தமிழ் மக்களுக்கு செய்த ஒரு பத்து நல்ல அலுவல்களை பட்டியல் இட முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு காலி கடற்கறையில் குப்பை சேகரிக்கும் அமெரிக்க தூதுவர்...

இதெல்லாம் வெறும் ஸ்டண்டு மட்டும் தான்

http://www.vivasaayi.com/2013/04/blog-post_1071.html

பொறுப்புக்கூறல் "Accountability" இல்லாத எந்த ஒரு அமைப்பும் இருக்கும் போது மக்கள் தான் அதை சரியான முறையில் தட்டி கேட்க வேணும் ... முதலில் கிராம சேவகரை பிடியுங்கள், அப்புறம் மாநகரசபை, அப்புறம் அவர்களின் தலைமைகள், அதுவும் பயன் தராவிட்டால் அவர்களின் தலைமைகள்....  இப்படி இருக்கும் "ஹையராக்கி" யை தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து பிரச்சினைகளை  தீர்த்துக்கொள்ளலாம்...
ஒரு ஜனநாயக நாட்டில்...

Link to comment
Share on other sites

2 hours ago, Sasi_varnam said:

கொழும்பு காலி கடற்கறையில் குப்பை சேகரிக்கும் அமெரிக்க தூதுவர்...

இதெல்லாம் வெறும் ஸ்டண்டு மட்டும் தான்

http://www.vivasaayi.com/2013/04/blog-post_1071.html

பொறுப்புக்கூறல் "Accountability" இல்லாத எந்த ஒரு அமைப்பும் இருக்கும் போது மக்கள் தான் அதை சரியான முறையில் தட்டி கேட்க வேணும் ... முதலில் கிராம சேவகரை பிடியுங்கள், அப்புறம் மாநகரசபை, அப்புறம் அவர்களின் தலைமைகள், அதுவும் பயன் தராவிட்டால் அவர்களின் தலைமைகள்....  இப்படி இருக்கும் "ஹையராக்கி" யை தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து பிரச்சினைகளை  தீர்த்துக்கொள்ளலாம்...
ஒரு ஜனநாயக நாட்டில்...

நல்லது சசி எங்கடை நாட்டிலை குப்பையை வீசுனால் "முதலில் கிராம சேவகரை பிடியுங்கள், அப்புறம் மாநகரசபை, அப்புறம் அவர்களின் தலைமைகள், அதுவும் பயன் தராவிட்டால் அவர்களின் தலைமைகள்.." இப்படி போக மாட்டார்கள்  நேரே போலிஸ் தண்டப்பணம் பின்பு ஜெசில் களிதான்.

notice-or-sign-no-fly-tipping-maximum-pe

இங்கு என்னடா என்றால் மக்களிடம் ஒட்டு பிச்சை கேட்டு வென்று வந்தவர்களை ராஜா ரேஞ்சுக்கு தடவிக் குடுத்து கொண்டு அவை செய்வினம் இவை செய்ய வேணும் எண்டு சப்பை கதை விட்டுக்கொண்டு எங்களை நாங்களே ஏமாத்த வழி சொல்றிங்க.

இனத்தை வித்து பிழைக்க என்று வந்த அரசியல்வாதிகளிடம் இப்படியான குப்பை பிரச்சினை பற்றி கேட்டது என் தப்புதான்!

14 hours ago, arjun said:

மக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வும் அவசியம் .

நாட்டில் செய்ய வேண்டிய விடயங்கள் பல இருக்கு ஆனால் வீணான விடயங்களில் மண்டையை போட்டு உடைப்பதே பலருக்கு வேலையாகப்போய்விட்டது .

 "மக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வும் அவசியம்" உண்மைதான் .

ஆனால் கடந்த வருடம் கழிவு ஒயில் பிரச்சனையை இதே அரசியல்வாதிகள் புறங்கையால் தட்டிவிட்டு போனதன் தொடர்ச்சியே இது! இதை வீணான விடயம் என்று இதே போன்ற விடயத்தை உங்க நாட்டு அரசியல்வாதி சொல்ல முடியுமா ?

Link to comment
Share on other sites

On 12/1/2015, 1:03:10, Gari said:

முதலமைச்சருடைய அதிகாரத்திற்குள் வரும் விடயத்திற்காக ஏன் சம்பந்தமில்லாமல் மற்றவர்களில் குறை சொல்லுகின்றீர்கள் ,இப்படித்தான் இங்கு பலருடைய கருத்துக்கள் .

இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்த விக்கியருக்கு நேரமில்லையா ?அல்லது நிர்வாகம் நடாத்த தெரியவில்லையா ? 

வல்வெட்டித்துறை நகரசபையை நடாத்த தெரியாதவர்களுக்கு இன்னும் அதிகாரம் தேவையா ?

 

விட்டால் முதல்வர்தான் குப்பை லெறி ஓட்டி விளக்குமாறு பிடிக்கவேணும் எண்டும் சொல்லுவியள்...    

யாழ் மாநகரசபை  வடக்கு முதல்வரின் ஆணைக்கு கீழ் இல்லை  வடக்கு  ஆழுநரின் நிர்வாகத்தில் இருக்கிறது என்பது  யாழ்ப்பாணம் பற்றி தெரிந்த பால் குடிக்கும் தெரியும்...   மாநகராட்சியின் நிர்வாகத்துக்கான நிதி வட மாகான சபையினால் வளங்கப்படுவதும் இல்லை...   இதிலை ,முதலமைச்சருக்கு ஏன் முதுகு சொறியிறீயள்...?   

கையாலாகத மாகான சபையை காட்டி தமிழருக்கு தீர்வை பெற்று தந்த இந்தியாவை பாராட்டின சம்பந்தனை கேக்க வேண்டிய கேள்வியை வேறை யாரையோ பாத்து கேக்கிறீயள்..     

யாழ் மாநகரசபையில் முழு நிர்வாகமும் EPDP  கையில் இருந்தாலும்...   தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கி தாறதாக படம் காட்டின தமிழ் தேசிய கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள் அங்கை இருக்கிறார்கள்...   அதோட யாழ்ப்பாண பாராளுமண்ற பிரதி நிதியும்  தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்...   இவ்வளவு பேருக்கும் தலைவர்  விக்னேஸ்வரன்  இல்லை  சம்பந்தர்...  

ஆதாரமாக ஒரு தலைப்பு

http://www.tamilmirror.lk/112276

 

http://www.yarl.com/forum3/index.php?act=idx

விசயம் இவ்வளவு தான்....   எங்கை கல்லடி பட்டாலும் முன்னம் காலை தூக்கிற நாய் மாதிரி ... முதலமைச்சர் , புலி  எண்டு தொடங்காதேயள்... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.