Jump to content

இனி உந்தப் பருப்பு வேகாது மோனே- யாழ்ப்பாணத் தம்பி


Recommended Posts

இனி உந்தப் பருப்பு வேகாது மோனே- யாழ்ப்பாணத் தம்பி

 

 

இனி உந்தப் பருப்பு வேகாது மோனே- யாழ்ப்பாணத் தம்பி:-
 
மகிந்தர் வாயை திறந்தாலே எங்களுக்குச் சிரிப்புத்தான். சிலபேருக்கு மகிந்த இல்லாட்டி அரசியல் இல்லை எண்டு புலம்புறினம். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலை மகிந்தவின்டை ஆட்சி கொடிய ஆட்சிதான். அந்தக் கொடிய ஆட்சியிலையும் வாயை அப்பப்ப திறந்து நல்லா கொமடி விடுவார்.. அது பெரிய இழப்புத்தான். இருந்தாலும் இப்பவும் ஆள் வாய் திறந்தால் நல்ல சிரிப்புத்தான். 
 
மகிந்தவின்டை காவியத்திலை இப்ப அவர் கோமாளி கரக்டரிலைதான் நடிக்கிறார். இருந்தாலும் மனுசன் இன்னும் நல்லா அடிக்குது. பின்னப் பாருங்கவன். தமிழ் அரசியல் கைதிகள் ஒரு சிலரை விட்டிருக்கினம். அதுக்கு புலியளை விடுறபடியாலை தனக்கு குண்டுதுளைக்காத கார் வேணுமாம்.. 
 
சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்குதெண்டு நினைப்பியள்..
 
இப்ப அவரின்டை பிரச்சினை உந்த அப்பாவி தமிழ் கைதியளை விடக்கூடாது எண்டுறதுதான். மகிந்தவின்டை கொடிய ஆட்சியலைதான் உந்த அப்பாவி தமிழ் கைதியள் கணபேர் சிறையிலை அடைக்கப்பட்டவையள். தண்ணி குடுத்தவன், தெருவிலை நிண்டு பாத்தவன் எண்டு காரணம் இல்லாமல் சிறையிலை வாழ்கையை எத்தினையோ பேர் கழிச்சுக்கொண்டிருக்கிறான்..
 
கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பதவி அப்பாவி இளைஞர்களுக்கு சிறை. இதுதான் உந்தாளின்டை புலிப்பூச்சாண்டி. இப்ப திரும்ப தொடங்கிறார். அவருக்கு புலி இப்ப தேவையாய் இருக்குது அரசியல் செய்ய. எக்கச்சக்ககமான சனங்களை இனப்படுகொலை செய்த பிறகு திரும்பத் திரும்ப புலிப் பூச்சாண்டி காட்டி நாடகம் ஆடி நடிக்கிற நடிகன் மகிந்தர். 
 
இப்ப திரும்ப குண்டுதுளைக்காத கார் வேணுமாம். இப்பிடி புலிப் பூச்சாண்டி விட்டு சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் எண்டு நினைக்கிறார். அப்பிடி உசுப்பேத்தித்தானே இவ்வளவு காலமும் ஓட்டினவர். கடைசியிலை பிழைச்சுப் போட்டுது. அதாலை இனி உந்தப் பருப்பு வேகாது மோனே எண்டு மகிந்தவுக்கு தாத்தா அட்வைஸ் பண்ணுறார். ஆனால் மகிந்தர் என்ன திருந்தவா போறார்.. 
 
இப்பவே உந்தப் பருப்பு வேகாது எண்டுற உண்மையை விளங்கின கணபேர் மகிந்தரை விட்டிட்டு ஓடுறினம். பின்னாலை ஏகப்பட்ட ஆக்கள் நிண்டவையள்தான். இப்ப கணபேர் மகிந்தவையும் அவரின்டை ஆக்களையும் விமர்சிக்க வெளிக்கிட்டிட்டினம். மகிந்த எதிர்கட்சியிலை இருந்து இழுத்தெடுத்த திஸாநாயக்கவே இப்ப மிகந்தவுக்கு ஆப்புத்தானே  வைச்சிட்டார். 
 
இப்ப மகிந்தவோடை நிக்கிறவையளுக்கு சிங்கள பத்திரிகைகளிலை வரையிற கேலிச்சித்திரங்களை பாத்தாலே நிம்மதி போயிரும். அப்பிடி கிண்டல் அடிக்கிறாங்கள். ஒரு நாலைஞ்சு பேர் இன்னும் இவருக்குப் பின்னாலை உந்தப் பருப்பு வேகும் எண்டு நம்பிக்கொண்டு திரியிறினம்.. அதேடை அவையளுக்கு போறத்துக்கு வழியும் தெரியாது. அரசியல் செய்ய மேட்டரும் இல்லை. 
 
பாப்பம் எதுவரைக்கும் மகிந்தவுக்குப் பின்னாலை இழுபடுறினம் எண்டு.. அவியாத பருப்போடை எத்தினை நாளைக்கு அலையப்போறினம் எண்டுறதையும் பாப்பம். 
 
மகிந்தவுக்கு பெரிய கவலையாம்.. இப்பிடி போனால் தான் எப்பிடி பிழைப்பை நடத்துறதெண்டு. அதுமட்டுமே பின்னாலை நிக்கிறவையளுக்கு அதைவிட கவலையாம்.. உந்தாளை நம்பி நாங்கள் இருக்கிறம். உப்பிடியே போனால் எங்கடை பிழைப்பு எப்பிடி போகும் எண்டு? 
 
அதாலை புதுசாய் ஒரு புரளியை விட்டிருக்கிறார் மகிந்தர்...
 
யாழ்ப்பாணத் தம்பி 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.