Jump to content

நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ்


Recommended Posts

நியூசிலாந்தை இலகுவாக வீழ்த்துவோம்- மத்தியூஸ்

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரைக் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ். இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் ஆட்டம் அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம் என்று இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் நியூசிலாந்தில் நிலைமை வேறு விதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு நிலவும் தட்பவெட்ப நிலையும் எங்களுக்கு சவாலாக இருக்கும். நியூசிலாந்து அணி சவால் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்படும். சொந்த மண்ணில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் மிரட்டும். அதனால் கண்டிப்பாக இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கப் போகிறது. நாங்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியை எளிதாக வீழ்த்த முடியும். நிச்சயம் நியூசிலாந்தை வீழ்த்துவோம்.’ என்று தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=4100&cat=2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.