Jump to content

சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1444199096-4463.jpg

காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த வரவேற்பாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் நேரம் குறவாக இருக்கும் போது உங்கள் விருப்ப சமையலாக இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

* காலிஃபிளவர் - 300 கிராம்
* முட்டை - 2
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

* எண்ணெய் - தேவையான அளவு
* கடுகு - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதில் அவித்து வைத்த காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.

* வதங்கியதும் அதில் மிளாகாய் பொடி, உப்பு போட்டு நன்கு கிளரவேண்டும்.

* பின்பு அதில் முட்டையை அடித்து விட்டு நன்கு கிளரவேண்டும்.

* இப்போது சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல் தயார்.

 

http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/tasty-cauliflower-egg-roaster-115100700039_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி ஃப்ளவரை பட்டர் போட்டு அவித்துச் சாப்பிடுவது, குழம்பு வைப்பது....!

முட்டையுடன் பொரித்ததில்லை...! பார்க்கலாம்...!! :)

Link to comment
Share on other sites

ம்ம்.. நல்லாய் இருக்கும் போலை இருக்கு... சமைத்துப் பார்க்கணும். நன்றி இணைப்புக்கு சகோ தமிழரசு :)

 

1 hour ago, suvy said:

காலி ஃப்ளவரை பட்டர் போட்டு அவித்துச் சாப்பிடுவது, குழம்பு வைப்பது....!

முட்டையுடன் பொரித்ததில்லை...! பார்க்கலாம்...!! :)

குழம்பா?? நான் கேள்விப்படவே  இல்லை... எப்பிடி வைப்பீர்கள் என்று சொல்வீர்களா பெரியண்ணை?? :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு சூத்திரமும் இல்லை சகோதரி...!

குழம்புக்கு உரிய அடிப்படை விடயம்:

தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் , மூண்டு நாலு கரண்டி எண்ணை விட்டு ,சூடேறினதும் கடுகு , பெ. சீரகம், சிறிது வெந்தயம், போட்டு (இறைச்சி என்டால் கறுவா , கராம்பு 3 , ஏலக்காய் 3 , ) பின் நீளவாக்கில் அரிந்த வெங்காயம் போட்டு வதங்கியதும், நாலாய் கீறின பச்சை மிளகாய்,முழுதாய் 2 செத்தல் மிளகாய் ( ஸ்டைலுக்கு குழம்பின் மேல் மிதக்க வடிவாய் இருக்கும்) வெட்டி வைத்த தக்காளி போட்டு வதங்கியதும், இஞ்சி, உள்ளி பேஸ்ட் போட்டு கிளறி விட்டு, 1 1/2 கரண்டி மிளகாய்த் தூள், 1/2 க. கரம் மசாலா, சிறிது மஞ்சள் தூள், 1 க. மல்லித் தூள் போட்டுப் பிரட்டி ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு ( முதலே கேத்திலில் சுடுதண்ணி வைத்து இருந்தால் வேலை கெதி) அளவாய் உப்பும் போட்டு மூடிக் கொதிக்க விடவும்.  எல்லாக் குழம்புக்கும் இதுதான்  அடிப்படை.

காலி ஃபிளவர் மற்றும் புரோக்கோலி இவற்றை நன்றாகப் பார்த்துக் கழுவ வேண்டும். ஒரு பாத்திரத்துள் இவற்றை உலுத்திப் போட்டு கொஞ்சம் மஞ்சள் போட்டு  சுடுதண்ணி விட்டு கொஞ்ச நேரம் விடவும். பின் வடித்தெடுத்து கொதிக்கிற குழம்பில காலி ஃளவரைப் போட்டு 3 ல் இருந்து 5 நிமிடம் நெருப்பைக் குறைத்து வைத்து இறக்கினால் காலிப் பூ குழம்பு ரெடி...! புரோக்கோலி போட்டால் புரோக் கோலி குழம்பு ரெடி...!

கத்தரி , வெண்டி, கரணைக் கிழங்கைப் பொரித்துப் போட்டால்  கத்தரிக் குழம்பு, வெண்டிக் குழம்பு, கரணைக் குழம்பு ரெடி...!

உருளைக் கிழங்கைப் போட்டு இறக்கினால் உருளைக் கிழங்குக் குழம்பு ரெடி...!

மீன் துண்டுகளைப் போட்டால் , 10 நிமிடம் குறைவான தீயில் விட்டு, கொஞ்சம் அரை கப் கரைத்த புளித்தண்ணி விட்டு கொதித்ததும், இறக்குமுன் ஒன்டரை கரண்டி  நற்சீரகத்தை மிக்ஸியில் இரண்டு சுத்து சுத்திப் போட்டு கறிக்குள் போட்டு இரண்டு விளாவு விளாவி விட்டு  இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி...!

இறைச்சி என்டால் (மேலே அடிப்படையில் தண்ணி விடாமல்) இறைச்சியைப் போட்டு அதிலேயே தண்ணி உண்டு நன்கு பிரட்டி மூடிக் கொதிக்க விடவும், பின் மூடியைத் திறந்து தேவையான அளவு நீர் விட்டு , தூள், உப்பு பார்த்து போட்டு, இறைச்சிகளின் வகைகளுக் கேற்ப 15 ல் இருந்து 20 நிமிடங்கள் வேக விடவும் மணங் குணமான இறைச்சிக் குழம்பு ரெடி...!

அனேகமான குழம்புகளுக்கு அடுப்பை அணைத்து விட்டு ( கட்டிப் பிடித்து அணைக்கக் கூடாது) தேசிப் புளியும் அளவாய் சேர்க்க சுவை கூடுதலாய் இருக்கும்...!  :)

முக்கியமான விடயம் m.s.v  ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி தீயை அப்பப்ப கூட்டிக் குறைத்து விட வேண்டும்...!

 

Link to comment
Share on other sites

  • 10 months later...

1444199096-4463.jpg

காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த வரவேற்பாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் நேரம் குறவாக இருக்கும் போது உங்கள் விருப்ப சமையலாக இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

* காலிஃபிளவர் - 300 கிராம்
* முட்டை - 2
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

* எண்ணெய் - தேவையான அளவு
* கடுகு - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதில் அவித்து வைத்த காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.

* வதங்கியதும் அதில் மிளாகாய் பொடி, உப்பு போட்டு நன்கு கிளரவேண்டும்.

* பின்பு அதில் முட்டையை அடித்து விட்டு நன்கு கிளரவேண்டும்.

* இப்போது சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல் தயார்.

http://tamil.webdunia.com/article/vegetarian-recipes/tasty-cauliflower-egg-roaster-115100700039_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதவன் , முடடைப் பொரியலின் படத்தையெல்லா போடவேணும், முட்டைக்கோஸின் படம்  அழகாய் இருக்கு ....! tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

என்ன ஆதவன் , முடடைப் பொரியலின் படத்தையெல்லா போடவேணும், முட்டைக்கோஸின் படம்  அழகாய் இருக்கு ....! tw_blush:

ker:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்... அருமையாய் இருக்கு , குழந்தைகள் குதூகலமாய்ச் சாப்பிடுவினம்...! tw_blush:

Link to comment
Share on other sites

On 12/11/2015 at 9:51 PM, suvy said:

அனேகமான குழம்புகளுக்கு அடுப்பை அணைத்து விட்டு ( கட்டிப் பிடித்து அணைக்கக் கூடாது)

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
தேவையான பொருட்கள்:
 
காலிஃப்ளவர் - ஒன்று
பெரிய வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 4
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
 
தாளிக்க:
 
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலை உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6 இதழ்
பச்சை மிளகாய் - 2
 
1474265046-7331.jpg


செய்முறை:
 
முதலில் காலிஃப்ளவரை 5 நிமிடம் கொதிக்க வைத்த நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் பொடியாக நறிக்கி கொள்ளவும்.
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காலிஃப்ளவரை போட்டு பிரட்டவும். பின் மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
 
5 நிமிடம் கழித்து நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி சிறிது நேரம் அப்படியே பிரட்டி விடாமல் வேகவைத்து பிறகு கலக்கவும். வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் ரெடி. தேவைப்பட்டால் மிளகுத் தூள் சேர்த்தும் இறக்கலாம்.
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.