Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

13718761_1086088108106549_52209503682082

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் - ஒரு பயனுடைய சகலதுறை வீரராகவும் பல சந்தர்ப்பங்களில் கைகொடுத்த நுவான் குலசேகரவின் பிறந்தநாள் இன்று.

அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெற்றுள்ளார்.
Happy Birthday Nuwan Kulasekara

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

மிசோரம்: 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 
சியோனின் குடும்பத்தினர். | படம்: ராய்ட்டர்ஸ்
சியோனின் குடும்பத்தினர். | படம்: ராய்ட்டர்ஸ்

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த சியோனா என்ற நபர் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிசோரம் மாநிலம் பக்த்வாஸ் தஸ்க்நும் கிராமத்தில் வசித்து வரும் சியோனா வியாழக்கிழமை 72வது பிறந்தநாளை தனது 38 மனைவிகளுடனும், 89 பிள்ளைகளுடனும், பேரக்குழந்தைகளுடனும் ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி முடிந்துள்ளார்.

சியோன் தனது முதல் மனைவியை 1959ஆம் ஆண்டு தனது 15 ஆம் வயதில் திருமணம் செய்துள்ளார். இவரது கடைசித் திருமணம் 2004 ஆம் ஆண்டு அவருடைய 60 ஆம் வயதில் நடைப்பெற்றிருக்கிறது.

சியோனின் குடும்பம்தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என நம்பப்படுகிறது. இந்தப் பெரிய குடும்பத்தால் அவரது கிராமமே சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

Jaffna Boy-இல் ஸ்பா.. ஸ்ஸப்பா

article_1469099473-Jaffna-boy-%281%29.jp

article_1469099492-Jaffna-boy-%282%29.jp

என்னத்தான் கொழும்பில் வசித்தாலும் நம்ப Jaffna Boyயின் பழக்க வழக்கங்கள் இன்னும் மாறவில்லை. கொஞ்ச நாட்களாக Jaffna Boyக்கு சரியான உடம்பு வலி. யாழில் என்றால் நல்லெண்ணையை உடம்பில் தேய்த்தால் நோவு பறந்துவிடும்.

தலைநகரில் எங்கே போய் நல்லெண்ணை தேடுவது??? என்று தலையை பிய்த்துகொண்ட Jaffna Boyக்கு ஸ்பா சென்றருக்கு போய் மசாஜ் செய்யுமாறு அமெரிக்காவில் உள்ள ஆன்டி, ஒரு ஐடியா கொடுக்கிறார்..
ஆன்டி அனுப்பிய 10 டொலர் பணத்துடன் ஸ்பா சென்றருக்கு செல்லும் Jaffna Boyக்கு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தவார கதை..

article_1469099514-Jaffna-boy-%283%29.jp

 

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று...

ஜுலை - 22

 

1499 : ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

 

1587 : அமெரிக்காவின் வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாசிகள் வந்திறங்கினர்.

 

1812 : வெலிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானிய படைகள் ஸ்பெய்னில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

 

1916 : கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

 

775varalaru-july-22.jpg1933 : அமெரிக்க விமானி வைலி போஸ்ட், விமானத்தின் மூலம் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகை சுற்றிவந்து, தனியே உலகைச் சுற்றிப் பறந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

 

1944 : போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாஸிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிஸ ஆட்சி ஆரம்பமானது.

 

2003 : ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14 வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.

 

2011 : நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும் ஊதோயா தீவிலும் அன்டர்ஸ் பிரைவிக் என்பவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 77 பேர் உயிரிழந்தனர்.

 

2013 : சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 89 பேர் உயிரிழந்ததுடன் 500 இற்கும் அதிகமானோர்

metronews.lk
Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: கபாலி - பில்டப் தவிர்த்தால் கூடும் சிறப்பு

 
 
kabali_2942616f.jpg
 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் நடிப்பில் மிகப் பெரிய வரவேற்புடன் 'கபாலி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

படம் ஆரம்பித்ததில் இருந்து கபாலி சாக்லேட்டுகள், கபாலி ஆடைகள், கபாலி விமானம் என நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது. இந்நிலையில் கபாலி படம் எப்படி இருக்கிறது, இன்றைய நெட்டிசன் நோட்ஸில் நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாமா?

ஜீ ‏

அட்டகத்தி தினேஷ் கைதட்டல் அள்ளுகிறார்...!! #மகிழ்ச்சி

kαятнik ‏

பாம்பேல தமிழன காப்பாத்த வந்தவரு #பாட்ஷா

மலேசியால தமிழன காப்பாத்த வந்தவரு #கபாலி

Kirthika Tharan

ரஜினி என்னும் மந்திரம்... கபாலி எனும் திருவிழா. இணையத்தில் படத்தைப் பார்க்க ஆயிரம் லிங்க் வரட்டும்... ஒரு வார்த்தை போதும்.. ரஜினி என்ற மேஜிக் பார்க்க தியட்டருக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு கூர் தீட்டிய வசனத்திற்கும் கைதட்டி கை வலிக்கிறது.

Swaminathan ‏

'நமக்கு நாமே' மற்றும் 'கபாலி' விளம்பரம் நல்லாதான் இருந்தது. ஆனால்...

3_2942580a.jpg

ramji yahoo

கபாலி சுமார் என்றால் தயங்காது பகிருங்கள், எந்திரன் 2 ஹைப் குறைப்பர்.

suresh

ரஜினி எனும் நடிகனை மீட்டெடுத்த வகையில் ரஞ்சித்க்கு வெற்றி. #கபாலி

śámúŕai ‏

கபாலி... கொஞ்சூண்டு மகிழ்ச்சி....

MUGUNDAN ‏

கபாலியை பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள். ஒரே மாதிரியான ரஜினி படங்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு கபாலி ஒரு வித்தியாசமான விருந்து.

1_2942582a.jpg

Rajavel Nagarajan

தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஓவர் ஹைப் தான் படத்தின் முழுமுதல் எதிரி. அவ்வளோதான், மற்றபடி கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய / கூடிய படம் என்பதில் மாற்றம் இல்லை.

தஞ்சை தர்மா

இவ்வளவு நாளா தமிழ்நாட்டுக்காக பாடுபட்டாரு, டேம் கட்டிக்கொடுத்தாரு. ஒரு சேஞ்ச்காக மலேசிய தமிழனுக்காக போராடுறாரு அவ்வளவே. #கபாலி

Pa.Shujeevan ‏

கபாலி படத்துக்கு என்னதான் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் எல்லோரும் படத்தை கட்டாயம் பார்த்தே ஆவாங்க, காரணம் தலைவரின் தரிசனம்.

dharmaraaaj

வந்துட்டேன்னு சொல்லு. எவ்வளவு எதிர்பார்ப்போட போனேனோ அதே அளவு ஏமாற்றத்தோட தியேட்டர விட்டு வெளில வந்துட்டேன்னு சொல்லு. #கபாலி

பாலமுருகன் திருக்கூர்ணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியை நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித்.

மாடர்ன் தமிழன் ‏

இம்புட்டு பில்டப் கொடுக்காம இருந்திருந்தா கபாலி படம் இன்னும் சிறப்பாவே கொண்டாடப்பட்டு இருக்கலாம்.

Krish M ‏

#கபாலி எப்டி இருக்கும்ன்னு நினைச்சுகிட்டு, வேலைய ஒழுங்கா செய்யாம இருக்கறதுக்கு, ஆயிரம் ரூவா குடுத்து FDFS போயிருக்கலாம்.

நீயாநானா ‏

#கபாலி ரஜினி ரசிகர்களுக்கான படமும் இல்ல, சினிமா ரசிகர்களுக்கான படமாவும் இல்ல.

DrJash

#கபாலி - குறைசொல்ல குறையே இல்ல.

s.velukanna ‏

படோபடமான விளம்பரம் ஏற்படுத்தும் விளைவுகள் மிக மோசமான முன்னுதாரணமாகவே இருக்கும். #கபாலி

Vini Sharpana

சா’தீ’ய வெறியர்களுக்கு ‘வெறுப்புடா’!

Vel Kannan

செம்ம்ம்ம ஸ்டைலிலிலிஷ் ரஜினி.. டயலாக் டெலிவரி உட்பட அவரின் உடல் மொழியில் செம ஸ்டைல் காண்பித்து இருக்கிறார். டூயட் இல்லாமல் பஞ்ச் டயலாக் இல்லாமல் ரஜினி.

2_2942581a.jpg

G Gowtham

இது ரஜினி படமா? முழுதாக இல்லை! ஆனாலும்.. ரஜினி என்ற மேஜிக் நம் பால்யத்தோடு கலந்து - கரைந்திருப்பதால், நிச்சயம் ஒருமுறை பார்க்கவேண்டிய படம்தான் - கபாலி.

Ferdinand Jegarthan

ரொம்பக் கெட்ட பயல் சார் இந்த ரஜினி. வயசானாலும் அவர் ஸ்டைலும் அழகும் இன்னும் அவர விட்டுப் போகல...

Sundar Pandian

பிறவியால் எவனும் ஒசந்தவனோ தாழ்ந்தவனோ கிடையாது. இதுதான் கபாலியின் ஒற்றை வரி விமர்சனம்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

பாம்புகள் பற்றி அறியாதவைகள்

பாம்புகள் பற்றி அறியாதவைகள்

 

இந்தியாவில் இருக்கும் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. சில வகையான பாம்புகளின் விஷத்தன்மை, நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகின்றது.

Snake-with-open-mouth-hd-wallpapers

இந்த வகையை சேர்ந்ததே நாகபாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் போன்றவை. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து இரத்தம் உறைவதையும் நிறுத்த வல்லது. கண்ணாடி விரியன் பாம்பு இந்த வகையை சேர்ந்தது ஆகும்.

** ஓராண்டுக்கு பாம்புகளால் மட்டும் உலகில் ஒரு லட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள்.

** பிரேசிலில் இருக்கும் ஓர் தீவிற்கு மக்கள் செல்வதே இல்லை. அங்கு ஐந்து மீட்டர் தூரத்திற்கு ஓர் பாம்பு இருப்பதே இதற்கான காரணம்.

** பாம்புகளும் இரண்டு தலைகளுடன் பிறக்க வாய்ப்புகள் உண்டு. இதில், வேடிக்கை என்னவெனில், இரண்டுமே உணவு உண்ணச் சண்டையிட்டு கொள்ளும்.

** உலகின் முதல் பத்து விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

** பாம்புகளைவிட தேனீக்களால் தான் மனிதர்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர்.

Nine-Foot-Florida-Anaconda-Snake-Attacks-Woman-And-Two-Shih-Tzu-Dogs-in-Melbourne

** பாம்புகளால் அதன் வாயை 150 டிகிரி அளவிற்கு திறக்க முடியும்.

** பிளாக் மாம்பா எனும் பாம்பு கடித்து உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை.

*டைட்டநோபோ எனும் பாம்பு தான் உலகிலேயே பெரிய, நீளமான, எடை அதிகமான பாம்பாகும். இது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஆகும்.

** பாம்புகள் மகுடியின் சப்தத்திற்கு ஏற்ப அசைவதில்லை. பாம்பாட்டியின் உடல் அசைவிற்கு ஏற்ப தான் அசையும்.

** பாம்புகள் தங்களது நாக்கை வைத்து தான் நுகர்கின்றன.

** பாம்புகளுக்கு கண்ணிமைகள் இல்லை.

** பாம்புகள் திறந்த கண்களுடன் தான் உறங்கும்.

** அமெரிக்கர்களுக்கு பாம்புகள் என்றால் மிகவும் பயம். 51% அமெரிக்கர்களுக்கு பாம்பு என்றால் பயம்.

** அதிர்வுகளை வைத்து பாம்பு மற்ற விலங்குகளின் வருகையை உணர்கின்றன.

** சில வகை பாம்புகள் இரண்டு ஆண்டுகள் கூட உணவின்றி உயிர்வாழும் திறன் கொண்டிருக்கின்றன.

onlineuthayan.

Link to comment
Share on other sites

வைரல் படங்கள் #BestOfToday

1-sharuk-dear-zindagi.jpg

டியர் ஜிந்தகி படக்குழுவினருடன் ஷாருக்...


2-anirudh-kabali-fdfs.jpg
 #kabaliFDFS அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன்



3-gv-on-langavi-beach.jpg

லங்காவி பீச்சில், 'கடவுள் இருக்கான் குமாரு' பட ஷூட்டிங்கில் ஜி.வியுடன் இயக்குநர் ராஜேஷ்


4-venkatprabu-kabalifdfs.jpg
#kabaliFDFS வெங்கட்பிரபு..


5-syrian-child-show-pokemon-fr-attention

சிரியாவில் பயங்கர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. உலகின் கவனத்தை ஈர்க்க, போக்கிமார் படத்தைப் பிடித்து, 'எப்படியாவது எங்களுக்கு உதவுங்கள்...' என குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட விழிப்பு உணர்வு படங்கள் வைரல் ஆகின.


6-facebook-internet-flight-1.jpg
ஃபேஸ்புக்கின் முதல் சோலார் இன்டர்நெட் ட்ரோன் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.


7-reunited-daughters-aftr-26-yrs.jpg
26 வருடங்களுக்கு முன் தனது கணவரால் வெளிநாட்டில் இருந்து துரத்தப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயை,  அவரது மகள்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து, ஹைதரபாத் போலீசாரின் துணையோடு  கண்டுபிடித்து கட்டி அழும் நெகிழ்ச்சியான காட்சி...


8-kashmir-strict-restriction-friday-mosq
காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தினால் வெள்ளிக்கிழமை தொழுவதற்குக் கூட பயங்கர கட்டுப்பாடு...


9-donald-trump-speech.jpg
டொனால்டு ட்ரம்ப் பிரசாரத்தில் அவரது ரசிகைகள்...


10-3d-zebra-crossing-on-delhi.jpg
பாதசாரிகள் சாலைகளை கடக்கும் வகையில், ஓட்டுநர்கள் மெதுவாகச் செல்வதற்காக டெல்லியில் 3டி டிசைன் போடப்படுகிறது.


11-prince-jeorge.jpg
  இளவரசர் வில்லியம்ஸின் மூன்று வயது மகன் ஜார்ஜுக்கு இன்று மூன்றாவது பிறந்தநாள். அதனை ராஜ குடும்பத்தினர் இயற்கை சூழலோடு மிக எளிமையாகக் கொண்டாடினர்.


13-hot-air-baloon-festival-isrel.jpg
இஸ்ரேலில் இரண்டு நாட்களாக ராட்சத பலூன் திருவிழா நடைபெறுகிறது.


14-syria-bombblast1.jpg
சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் பாதிப்படைந்தவர்கள் மருத்துவ வசதிகூட இல்லாமல் அவதிப்படும் காட்சி


15-japan-polarbear-waiting-for-food.jpg
ஜப்பானில் உள்ள விலங்கியல் பூங்காவில்  உணவுக்காக
பனி உருக காத்திருக்கும் இரண்டு வயது போலார் குட்டி..


16.jpg
ப்ரோ கபடி விழாவில் தேசிய கீதம் பாடிய சன்னி லியோன்..


17.jpg
கொலம்பியா சுதந்திர தின விழாவில் குட்டி  சோல்ஜர்!


18.jpg
சீனாவில் கடும் வெள்ளம் எதிரொலி...


19.jpg
19. இந்தோனேசியாவில் எரிமலைக்குள் கடவுளுக்கு காணிக்கையாக வீசிய ஆடு, கோழி, பணம் ஆகியவற்றை எடுக்கும் மக்கள்.


20.jpg
20. ஜிம்மில் பியா...

vikatan

Link to comment
Share on other sites

செல்மன் வேக்ஸ்மன் 10

 
 
nobel_laureate_195_2942246f.jpg
 

நோபல் பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்

ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர் செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் (Selman Abraham Waksman) பிறந்த தினம் இன்று (ஜூலை 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ரஷ்யப் பேரரசின் (தற்போதைய உக்ரைன்) நோவா ப்ரிலூகா என்ற இடத்தில் யூதக் குடும்பத்தில் (1888) பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்ததும், கல்வி உதவித்தொகை பெற்று, விவசாயத்தில் பட்டப்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார்.

ரட்கெர்ஸ் கல்லூரியில் சேர்ந்து விவசாயத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1916-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பட்டப்படிப்பின்போது, மண் பாக்டீரியா துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

மண் நுண்ணுயிரியல் குறித்து இவர் எழுதிய நூல் 1922-ல் வெளிவந்தது. ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் துறைத் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். மக்கும் தாவரங்கள் குறித்து 10 ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்து, ‘ஹ்யூமஸ்’ என்ற நூலை வெளியிட்டார். கடல்சார் பாக்டீரியாக்கள் குறித்த ஆய்வுகளை மேம்படுத்தினார்.

ரட்கெர்ஸில் நுண்ணுயிரியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். காசநோயை உண்டாக்கும் கிருமிகள் குறித்த ஆராய்ச்சியை தனது குழுவினருடன் இணைந்து 1932-ல் தொடங்கினார். இந்த நுண்ணுயிரிகள் மண்ணில் விடப்படும்போது மற்ற நுண்ணுயிரிகளால் அழிக்கப்படுவதைக் கண்டறிந்தார்.

ஒரு நுண்ணுயிரி மற்றொரு நுண்ணுயிரியை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் பிறகுதான், ஆன்டி பயாடிக்ஸ் குறித்த முறையான ஆராய்ச்சி தொடங்கியது. ‘ஆன்டிபயா டிக்ஸ்’ (எதிர்உயிரி) என்ற சொல்லை உருவாக்கியதும் இவர்தான்.

இவரது இந்த ஆராய்ச்சி பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டறிய வழிகோலியது. இவரது வழிகாட்டுதலில் ஆல்பர்ட் ஷாட்ஸ் என்ற ஆராய்ச்சி மாணவர், ஸ்டெப்டோமைசின் ஆன்டிபயாடிக் மருந்தை 1943-ல் கண்டறிந்தார். காசநோயை குணப்படுத்த ஸ்டெப்டோமைசின் பயன்படுத்தப்படலாம் என்றும் கண்டறியப்பட்டது.

ஸ்டெப்டோமைசின் மருந்து கண்டுபிடிப்புக்காக வேக்ஸ்மனுக்கு 1952-ல் மருத்துவம் அல்லது உடலியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு தவிர நிறைய விருதுகள் பெற்றார். ஜப்பான் பேரரசர் ஸ்டார் ஆஃப் ரைசிங் சன் விருது வழங்கினார்.

ஸ்டெப்டோமைசின், நியோமைசின் ஆகிய இரண்டும் எண்ணற்ற தொற்றுநோய்களை குணப்படுத்தக்கூடியவை என்று பின்னர் கண்டறியப்பட்டது. கறைபடியாத பெயின்ட், டிடர்ஜென்ட்களில் பயன்படும் என்சைம்கள், திராட்சைத் தோட்டங்களில் பூஞ்சைத் தொற்றைத் தடுக்கும் மருந்து ஆகியவற்றைக் கண்டறிந்தார்.

இதன்மூலம் கிடைத்த காப்புரிமை ராயல்டி தொகையில் பாதியைக் கொண்டு, தன் பெயரில் நுண்ணுயிரியல் அறக்கட்டளையை உருவாக் கினார். இதன் முதல் இயக்குநராகப் பணியாற்றினார். சுயசரிதை உட் பட 28 நூல்களை எழுதியுள்ளார். தனியாகவும், பிறருடன் இணைந் தும் 400-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

மனிதகுல நல்வாழ்வுக்காக, பல மருந்துகளைக் கண்டறிந்த செல்மன் ஆபிரகாம் வேக்ஸ்மன் 85-வது வயதில் (1973) மறைந்தார். நுண்ணுயிரியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இவரது பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

சர்க்கரைத் தமிழில் பிறந்த நாள்!

  • birth_tamil_2942221g.jpg
     
  • அருள் கரோலி, உன்னி கிருஷ்ணன், உத்ரா, அறிவுமதி
    அருள் கரோலி, உன்னி கிருஷ்ணன், உத்ரா, அறிவுமதி

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’னு ஆங்கிலத்தில்தான் பாடணுமா? இனி கொஞ்சும் தமிழில் பாடலாமே என்கிறது ‘நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்’ பாடல். ஐந்து வருடங்களுக்கு முன்பே தான் எழுதிய இந்தப் பாடலை நண்பர்கள் உறவினர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம் பாடியிருக்கிறார் பாடலாசிரியர் அறிவுமதி. அப்போது சிலருடைய காதுகளையும் மனதையும் மட்டுமே வருடிய இந்தப் பாடல் இப்போது வீடியோ பாடலாக இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

குழந்தைத் தமிழ் எளிய இசை

“குழந்தைகளுக்கான கதைகளோ பாடல்களோ தமிழ்ச் சூழலில் முற்போக்காக இல்லை என்கிற கவலை எனக்கு எப்போதுமே இருந்திருக்கிறது. ஐந்து வருடங்களாக அமெரிக்கா செல்லும்போதெல்லாம் அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் இந்தப் பாடலைப் பாடுவேன். ஒரு கட்டத்தில் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் பரிவிளாகம் ச. பார்த்தசாரதி ‘நாம் ஏன் இந்தப் பாடலை இசையமைத்துத் தயாரிக்கக் கூடாது?’ என என்னிடம் கேட்டார். உடனடியாக இசையமைப்பாளர் அருள் கரோலியோடு இணைந்து குழந்தைத் தமிழில் எளிமையான இசை வடிவில், ‘தமிழ் பிறந்தநாள் பாடல்’யை உருவாக்கினோம்” என உற்சாகமாகப் பேசுகிறார் கவிஞர் அறிவுமதி.

பிசாசு படத்தில் ‘நதி போகும் கூழாங்கல்’ என்கிற ஆத்மார்த்தமான பாடலை உத்ரா உன்னி கிருஷ்ணனின் தேன் சொட்டும் குரலில் வார்த்தவர் அருள் கரோலி. மீண்டும் அதே மாயாஜாலத்தை இந்தப் பாடலிலும் கொண்டுவந்திருக்கிறார். “குழந்தைகளுக்கான பாடல் என்பதாலேயே ரொம்பவும் யோசிக்கலை. வாயைத் திறந்தவுடன் பாடுற மாதிரி இருக்கணும்னு எடுத்த எடுப்பில் மனதில் உதித்த மெட்டைப் போட்டேன்” என்கிறார் அருள் கரோலி. பொதுவாக நம் ஊரிலேயே வாழ்பவர்களைவிட வெளிநாட்டில் குடியேறி யவர்கள் தமிழ் மீதும் தமிழர் பண்பாடு மீதும் அதிகமான பற்றுடன் இருப்பதாகத் தனக்குத் தோன்றும் எனச் சொன்ன அருள், இந்த இசை ஆல்பத்தைத் தயாரித்ததன் மூலம் பார்த்தசாரதி அதை நிரூபித்துவிட்டார் எனப் பாராட்டுகிறார்.

உலகத் தமிழ்க் குழந்தைகளுக்குப் பரிசு

கடந்த ஆண்டே பதிவு செய்யப்பட்டுவிட்டது ‘தமிழில் பிறந்தநாள்’ பாடல். ஆனால் ஜூலை 3 அன்றுதான் அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. வலைத்தமிழ்.காம் இணையதளத்திலும் அன்றே வெளியானது.

பல மாதங்களுக்கு முன்பே இசைப் பதிவு செய்துவிட்டதால் இணையதளத்தில் வெளியான இந்த வீடியோ பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் முதலில் பார்க்கவில்லை. பாடல் வைரலாகி நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அதைப் பகிர்ந்த பிறகு தன்னுடைய 50-வது பிறந்தநாளான ஜூலை 9 அன்று பார்த்ததாகச் சொல்கிறார். “என்னுடைய பிறந்தநாளில் அந்த வீடியோவைப் பார்த்தபோது என்னுடைய குழந்தை எனக்காகவே பாடியதுபோல உணர்ந்து நெகிழ்ந்துபோனேன்” என்கிறார் உன்னி கிருஷ்ணன்.

உத்ராவின் குழந்தைத்தனம் மாறாத குரல் இப்பாடலுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. அதிலும் அவர் பாடுவதை வீடியோவில் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியாது. இதில் இன்னொரு சிறப்பு கோபிசெட்டிபாளையம் தாய்த்தமிழ் பள்ளி காலை வணக்கத்தின்போது அத்தனை மாணவர்களும் இந்தப் பாடலைப் பாடும் காட்சியாகும். எல்லோரும் பார்த்துக் கேட்டு ரசிக்கும்படியாக வீடியோ பதிவை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் தமிழ்தம்பி, தொகுப்பாளர் எம்.சந்தீப்பும் பாராட்டுக்குரியவர்கள்.

மொத்தத்தில், உலகத் தமிழ்க் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கும் பிறந்தநாள் பரிசு இந்தப் பிறந்தநாள் பாடல்.

 

tamil.thehindu

Link to comment
Share on other sites

தர்மம், நீதி சரிவதில்லை; சிலிர்த்து எழும்
 
 

article_1469079244-tytuy.jpgகாலம் போகின்ற போக்கைப் பார்த்தால் திருடர்களும் கொலைகாரர்களும் கூட அமைப்புகளை அமைத்து கோரிக்கைகளை முன்வைத்தாலும் வைப்பார்கள் எனச் சிலர் கேலி பேசலாம்.

திருடர்கள் கூட தங்கள் பக்கத்தில் நியாயம் உண்டு எனவும் சொல்லலாம். 'எனக்கு ஏதாவது வேலையை யாராவது தந்தார்களா?' என்று கேட்பதும் உண்டு.

தனக்கு வேண்டாதவர்கள் துரோகிகள்; எனவே அவர்களைத் தண்டித்தேன் என்றும் குற்றாவாளிகள் வீரமாகப் பேசுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தமக்குத் தாமே நீதிபதி வேடம் புனைவதும் தீர்ப்பைத் தங்கள் செய்கைக்கே சாதகமாக எழுதுவதும் துஷ்டர்களின் நித்திய கருமம் ஆகும்.

சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து விட்டன என்பது உண்மைதான். தட்டிக் கேட்காமலும் தடுக்காமலும் சமூகம் கோழைத்தனமாக இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாகும். தர்மம், நீதி சரிவதில்லை; சிலிர்த்து எழும்.

Link to comment
Share on other sites

தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம்

A brewery in Austria has warm beer pool

வியன்னா: ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தை கொண்டு உலகிலேயே முதல் முதலாக ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குளித்தால் உடல் தசைகள் பளபளப்பாகும் என்று நீச்சல் குள நிர்வாகிகள் விளம்பரம் செய்கிறார்கள்.

 

இதில் குளிக்க முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். ஆஸ்திரியா வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இங்கு செல்கிறார்களாம். இதுகுறித்த இந்த யூடியூப் வீடியோவை பாருங்கள். 

 

http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

மெக்ஸிகோவில் கின்னஸ் சாதனை படைத்த புராதன நடன நிகழ்வு
 

மெக்­ஸி­கோவில் நூற்­றுக்­க­ணக்­கான பாரம்­ப­ரிய நடனக் கலை­ஞர்கள் இணைந்து புதிய உலக சாதனை­யொன்றை படைத்­துள்­ளனர். 

 

143763976-01-02.jpg

 

மெக்­ஸிகோ தலை­நகர் மெக்­ஸிகோ நகரத்துக்கு  சுமார் 48 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள தியொ­தி­ஹுவாகன் நக­ரி­லுள்ள புரா­தன பிரமிட் பகு­தி­யொன்றில் கடந்த ஞாயி­றன்று இந்த நடன நிகழ்வு நடை­பெற்­றது.

 

143Untitled-9.jpg

 

“உலகில் மிகப் பெரிய சடங்­கு­ மு­றை­யான புரா­தன நடன நிகழ்வு” எனும் கின்னஸ் சாதனை முயற்­சிக்­காக இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 260 நடனக் கலை­ஞர்கள் இதில் பங்­கு­பற்­றினர்.

 

 143_Untitled-10.jpg

 

ஸ்பானி­யர்­களின் குடி­யேற்ற காலத்­துக்கு முந்­தைய கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்கும் ஆடை அலங்­கா­ரங்­க­ளுடன் நடனக் கலை­ஞர்கள் நட­ன­மா­டினர். 

 

143763986-01-02.jpg

 

யுனெஸ்கோ அமைப்பின் நிபு­ணர்கள் இருவர், மற்றும் 21 கண்காணிப்பாளர்கள் இந்நிகழ்வை நேரில் பார்வையிட்டனர்.

 

143763978-01-02.jpg

143763975-01-02.jpg

 

metronews.lk
Link to comment
Share on other sites

பில்லி செம கில்லி!

 

p102a.jpg

கிரிக்கெட் அம்பயர் என்றதுமே நம் நினைவுக்கு வரும் பெயர் பில்லி பெளடன். அவரைப்பற்றி கொஞ்சம் விபரமாகத் தெரிந்து கொள்ளலாமா?

red-dot9.jpg பில்லி பௌடனின் உண்மையான பெயர் பிரென்ட் ஃப்ரேசர் பௌடன். பில்லி என்பது பட்டப்பெயர். இருந்தாலும் பெயருக்கு முன்னால் இந்தப் பட்டப்பெயர்தான் அட்டை மாதிரி ஒட்டிக்கிச்சு. தற்போது 53 வயதாகும் பில்லி,  1963-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நியூசிலாந்து நாட்டில் பிறந்தவர்.

p102b.jpg

red-dot9.jpg பில்லி தனது டீன் ஏஜில் வேகப்பந்து வீச்சாளராகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆனால், எந்த கரப்பான்பூச்சி கண்ணுபட்டுச்சோ, பில்லி முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். அந்த முடக்கவாதம் அவரது கனவையே முடக்கிப்போட்டது.

red-dot9.jpg அந்த முடக்குவாதத்தின் காரணமாகவே மைதானத்தில் பில்லி, அவுட், சிக்ஸர்கள் முதலியவற்றை சைகையால் தெரிவிக்கையில் கொக்கி போன்று விரலை மடக்கிக் காட்டுகிறார்.

p102c.jpg

red-dot9.jpg முதன்முறையாக நடந்த சர்வதேச டி20 ஆட்டத்தின் நடுவர்களில் பில்லியும் ஒருவர். மற்றொருவர் நியூசிலாந்தைச் சேர்ந்த நடுவர் டோனி ஹில்.

red-dot9.jpg பில்லி 1995-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் நடுவராக இருந்தார். இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் நடுவர்களாய் நின்று சாதனை படைத்துள்ள ஏழு பேரில் பில்லியும் ஒருவர்.  இந்தச் சாதனையை எட்டும் இரண்டாவது இளம் நடுவரும்கூட.

p102d.jpg

red-dot9.jpg விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரர்கள் ஏதேனும் குற்றத்திலோ, ஒழுங்கீன நடவடிக்கைகளிலோ ஈடுபட்டால் அதை எச்சரிக்கும்விதமாக ஃபெனால்ட்டி கார்டுகள் தரும் வழக்கம் கால்பந்து விளையாட்டில் உண்டு. கிரிக்கெட்டில் இது போன்று ஃபெனால்ட்டி கார்டுகள் தரும் விதிமுறை கிடையாது. ஆனால், பில்லி இதுவரை இரண்டு முறை ஃபெனால்ட்டி கார்டு கொடுத்துள்ளார்.

vikatan

Link to comment
Share on other sites

13613318_1086833851365308_70472468524723

தமிழ்த் திரையுலகின் முன்னனி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று
1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் திரைப்படம் மூலம்
தமிழ்த் திரையுலகில் தடம்பதித்தவர்.
நேரிய பாதையில் சீரிய வழியில்
மாறுபட்ட வேடங்களில் திரையில் தன்னை செதுக்கிய நடிகர்

 

Link to comment
Share on other sites

தோற்றவர்களின் கதை - 13

சுசி திருஞானம்தொடர்

 

p30d.jpg

புரூஸ் லீ

ற்காப்புக் கலையின் மந்திர ஆற்றலை, மொத்த உலகுக்கும் எடுத்துச் சொன்ன மின்னல் வேகச் சண்டைக்காரர் புரூஸ் லீ. ‘என்டர் தி டிராகன்’ போன்ற படங்கள் மூலமாக உலக இளைஞர்களை வசீகரித்தவர். ஆசியா கண்டத்தவர்கள் மீதான ஹாலிவுட் தீண்டாமைக்கு மரண அடி கொடுத்த சாகச வீரர்.

அவரது திரைப்படக் காட்சிகள் இன்றும் எண்ணற்ற லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. நுஞ்சாக் உபகரணத்தை வைத்து அவர் அதிரடியாக டேபிள் டென்னிஸ் ஆடியிருக்கிறார். ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் மட்டுமே தரையில் ஊன்றி, ‘புஷ் அப்’ பயிற்சி செய்திருக்கிறார். அதிவேகமாக நுஞ்சாக்கைச் சுற்றி ஒருவரின் வாயில் இருக்கும் தீக்குச்சியைப் பற்றவைத்திருக்கிறார். தன்னை நோக்கி அடுத்தடுத்து வீசி எறியப்படும் தீக்குச்சிகள் அனைத்தையும், நுஞ்சாக் சுற்றியபடியே கவனம் சிதறாமல் ஒன்றன்பின் ஒன்றாகத் தீப்பற்றச் செய்திருக்கிறார்.

30 வயதில் உலகப் புகழ்பெற்று 32 வயதிலேயே மறைந்த அந்தச் சாகச வீரரின் வாழ்க்கையே ஒரு பாடம். துல்லியமான வாழ்க்கைக் குறிக்கோளை உருவாக்கி ஜெயிப்பது எப்படி, மனதின் அற்புத ஆற்றலை ஒன்றுதிரட்டி வெல்வது எப்படி போன்ற வாழ்வியல் கலைகளில் கரைகண்டவர் புரூஸ் லீ.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் 1940-ம் ஆண்டு பிறந்தார் புரூஸ் லீ. அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர். தாயார் கிரேஸ், பாதி ஐரோப்பிய மரபினர். எனவே மத, இனப் பாகுபாடுகள் கடந்த மனிதராகவே புரூஸ் லீ வளர்ந்தார். ஹாங்காங் நகருக்குக் குடிபெயர்ந்தது லீ குடும்பம். அங்கே சுமார் 20 சீனப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்குக் கிடைத்தது. குழந்தைப் பருவத்தில் அவர் பரம சாது. அவரது 13 வயதில் நடந்த ஒரு தெருச்சண்டையில் தற்செயலாக அவரை இழுத்து விட்டுவிட்டனர். பயிற்சியில்லாத புரூஸ் லீயை எதிராளி அடித்து நொறுக்கிவிட்டார். அந்த எதிர்பாராதத் தோல்வி அவருக்குள் ஒரு வைராக்கியத்தை உருவாக்கிவிட்டது. ‘‘வெல்லப்பட முடியாத சண்டைவீரனாக மாறுவேன்’’ என்று அப்போதே உறுதி எடுத்தார் புரூஸ் லீ.

விங் சுவான் என்ற தற்காப்புக் கலை நிபுணரிடம் சேர்ந்து, வெறித்தனமாகப் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் பின்னர், புரூஸ் லீ ஒரு சண்டையில்கூடத் தோற்றதே இல்லை. ‘வம்புச் சண்டைக்குப் போகமாட்டேன், வந்த சண்டையைவிட மாட்டேன்’ என்று முடிவோடு இருந்த புரூஸ் லீயை உள்ளூர் பிரமுகர் ஒருவரின் மகன் சீண்டிப் பார்க்க, அவனைத் துவைத்து எடுத்துவிட்டார் புரூஸ் லீ. பயந்துபோன புரூஸ் லீ-யின் பெற்றோர் அவரை மீண்டும் அமெரிக்கா அனுப்ப முடிவெடுத்தனர். 100 டாலரை அவரிடம் கொடுத்து, ‘‘எப்படியாவது பிழைத்துக்கொள்’’ என்று ஆலோசனை சொல்லி அமெரிக்காவுக்குக் கப்பலேற்றிவிட்டனர்.

p30c.jpg

புரூஸ் லீ

சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கி, வேலை பார்த்துக் கொண்டே படித்தார் புரூஸ் லீ. டேபிள் துடைப்பது முதல் உணவு பரிமாறுவதுவரை உணவகத்தின் எல்லா வேலைகளையும் செய்துவந்தார். சில மாதங்களுக்குப் பின்னர், பகுதி நேரமாகத் தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்கத் தொடங் கினார். சில ஆண்டுகளுக்குப் பின், பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். சீனர் அல்லாதவர் களுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று சீன சமூகத்தவர்கள் பலர் சர்ச்சை செய்தனர். இதுவே ஒரு நாள், சவாலாக மாறியது. ‘‘வாங் ஜேக் மேன் என்பவருடன் புரூஸ் லீ மோத வேண்டும் - சண்டையில் புரூஸ் லீ தோற்றுவிட்டால் அவர் சீனர் அல்லாதவர்களுக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று சவால் விடப்பட்டது. சண்டை ஆரம்பித்தது. தனது மின்னல் வேகத் தாக்குதல்களால் வாங் ஜேக் மேனை வீழ்த்திவிட்டார் புரூஸ் லீ.

தற்காப்புக் கலைப் பயிற்சிப் பள்ளியில் பெரிய வருமானம் இல்லை. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துப் பார்த்தார். அதிலும் சம்பளம் முறையாகக் கிடைக்கவில்லை. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையில் அன்றாட வாழ்க்கைக்கான நிதித் தேவைகளைச் சமாளிப்பதே அவருக்குப் பெரிய சவாலாக இருந்தது. அத்தனைச் சிரமங்களுக்கு இடையிலும் தத்துவப் புத்தகங்களையும், சுய முன்னேற்றப் புத்தகங்களையும் தேடித் தேடி வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார் புரூஸ் லீ.

தான் வாசித்த புத்தகங்கள் தந்த வழிகாட்டுதலில், தனது வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கித் தனது டைரியில் எழுதினார் புரூஸ் லீ. 1969 ஜனவரியில் அவர் தனக்குத்தானே கைப்பட எழுதிய இந்தக் கட்டளை வாக்கியம்தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை உருவாக்கியது. 

‘‘எனது அதிமுக்கியக் குறிக்கோள் - புரூஸ் லீ ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்வேன். அந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக நான் நடிகன் என்ற முறையில் ரிஸ்க் எடுத்து முழு அர்ப்பணிப்போடு உழைப்பேன். 1970-ம் ஆண்டுமுதல், நான் உலகப் புகழ் பெறுவேன். 1980-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன். நான் விரும்பிய வகையில் மன அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வேன்.”

p30.jpg

குறிக்கோள் நிர்ணயித்துச் செயல்படுபவர்கள் பெரும் ஆற்றல் பெறுகிறார்கள் - சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுகிறார்கள் என்பதற்கு புரூஸ் லீ-யின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

1970-ல் ஒருநாள் காலை உடற்பயிற்சியின்போது முதுகில் அடிபட்டு படுகாயமடைந்தார் புரூஸ் லீ. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘‘முதுகில் உள்ள ஒரு முக்கிய நரம்பு சேதமடைந்துவிட்டது. இனிமேல் தற்காப்புப் பயிற்சிகளை மொத்தமாக மறந்துவிடவேண்டும். முழு ஓய்வு எடுத்தாக வேண்டும்’’ என்று பயமுறுத்திச் சென்றனர். தனது சிகிச்சைக் காலத்தை வாசிப்புக் காலமாக மாற்றிக்கொண்டார் புரூஸ் லீ. எத்தனை சோதனைகள் வந்தாலும் லட்சியத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உறுதி செய்துகொண்டார். மிக வேகமாக உடல்நலம் தேறினார். மறுபடியும் ஆக்ரோஷமாகச் சண்டை போட்டு டாக்டர்களை மிரளவைத்தார் புரூஸ் லீ.

சீனத் தற்காப்புக் கலையை மேம்படுத்தி தனக்கெனச் சிறப்புப் பாணி தற்காப்புக் கலையை உருவாக்கினார் புரூஸ் லீ. அதில், அதிவேகம், மன வலிமை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். ‘‘மனதின் அற்புத ஆற்றலை வெளிக்கொணரக் கற்றுக்கொண்டால் மந்திர ஜாலங்கள் நிகழ்த்தலாம்’’ என்று தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஒருவரிடம் இருந்து ஒரே ஒரு இன்ச் தூரத்தில் தனது விரலை வைத்துக்கொண்டு மிகுந்த வலிமையோடு தாக்கி அவரை வீழ்த்தும் ‘ஒரு இன்ச் உதை’ என்ற உத்தியை பலமுறை செய்து காட்டினார்.

தற்காப்புக் கலை தொடர்பான திரைக்கதைகளை எழுதி அதனைப் படமாக்க ஹாலிவுட் பட நிறுவனங்களை அணுகினார். ஹாலிவுட் பட அதிபர்கள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ‘‘ஆசிய முகத்தைக் கதாநாயகனாக உலக சினிமா ஏற்றுக்கொள்ளாது. வெள்ளைக்காரர்களை மட்டுமே கதாநாயகனாக ஏற்க முடியும்’’ என்பதுதான் எல்லா இடங்களிலும் கிடைத்த பதில். அவரது அசாத்தியமான சண்டைக் கலை பற்றித் தெரிந்து வைத்திருந்தபோதும், அதனை இருட்டடிப்பு செய்யவே ஹாலிவுட் பட உலகம் விரும்பியது. ஒரு ஹாலிவுட் படத்துக்காக லொக்கேஷன் பார்க்க இந்தியா வந்துசென்றார் புரூஸ் லீ. அந்தப் பட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தோல்வி மேல் தோல்வி கண்டார் புரூஸ் லீ.

ஹாலிவுட் படங்களில் முக்கிய வேடம் மறுக்கப்பட்ட நிலையில், ஒருமுறை ஹாங்காங் வந்த புரூஸ் லீக்கு எதிர்பாராத வரவேற்பு காத்திருந்தது. அமெரிக்காவில் அவர் நடித்த தொலைக்காட்சித் தொடர்கள் திரைப்படங்களாகச் சீனாவில் வெளியிடப்பட்டு வெற்றி அடைந்தன. எனவே, சீனப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் புரூஸ் லீ. ‘தி பிக் பாஸ்’, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ என்ற இரண்டு படங்கள் அவரை ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்த்தின. பம்பரம்போல் அவர் சுழன்று காட்டிய தற்காப்பு வித்தைகள் ஆசிய சினிமா ரசிகர்களை ஈர்த்தன.

p30b.jpgபுரூஸ் லீ, 1972-ம் ஆண்டில், ‘ரிட்டன் ஆஃப் த டிராகன்’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து, இயக்கி நடித்து, அமெரிக்காவிலும் வெளியிட்டார். விளைவு... புரூஸ் லீயின் மின்னல் வேக சண்டைக் காட்சிகளுக்கு அமெரிக்க இளைஞர்களும் ரசிகர்களாயினர். குங்பூ தற்காப்புக் கலை உலக அளவில்  பிரபலமாகிவிட்டது. புரூஸ் லீ உலக இளைஞர்கள் மத்தியில் கதாநாயகன் ஆகிவிட்டதை உணர்ந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் இப்போது அவரது கால்ஷீட்டை தேடிவந்து நின்றனர். ஹாலிவுட்டுக்காக ‘என்டர் தி டிராகன்’ என்ற அதிரடிப் படம் தயாரானது. புரூஸ் லீயின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில், அந்தப் படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட எல்லாப் பணிகளும் இரண்டு மாதங்களில் முடிவடைந்தன.

‘என்டர் தி டிராகன்’ படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாராத ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி புரூஸ் லீ ஹாங்காங்கில் இருந்தபோது மர்மமான முறையில் மரணமடைந்தார். சண்டைக்காட்சியின்போது தலையில் விழுந்த அடி என்றும், வலி மாத்திரைகளின் பக்க விளைவு என்றும் காரணங்கள் கூறப்பட்டபோதும் உண்மையான காரணம் இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

புரூஸ் லீயின் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘என்டர் தி டிராகன்’ படம் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஒரு மில்லியனுக்கும் குறைவான செலவில் தயாரான அந்தப் படம், 200 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது. உலகத்தின் கவனத்தையெல்லாம் தற்காப்புக் கலைப் பக்கம் திருப்பிவிட்டார் புரூஸ் லீ.

29 வயதில் தனது வாழ்க்கை லட்சியத்தை கட்டளை வாக்கியமாக வடிவமைத்து எழுதிய புரூஸ் லீ, அதனை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார். தோல்விகள், இருட்டடிப்புகள், அவமதிப்புகள் போன்றவற்றைத் தனது சாதுர்யத்தால் வென்ற சாகச வீரர் புரூஸ் லீ கூறும் அனுபவப் பாடம் இதுதான்: ‘‘சூழ்நிலையைக் குறைகூறும் பழக்கத்தைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். வாய்ப்புகளைத் தேடுங்கள் அல்லது நீங்களே வாய்ப்புகளை உருவாக்குங்கள்.”

(இன்னும் வெல்வோம்)

vikatan

Link to comment
Share on other sites

சட்டையில் இந்த லூப் எதற்கு தரப்பட்டுள்ளது என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?

M5R5ABC8800x480_IMAGE55477642-%281%29.jp

சில வகை ஷர்ட்டுகளில் மட்டும் நீங்கள் இந்த லூஸ் ஹோல் கண்டிருக்க வாயப்புகள் உண்டு. இது எதற்காக இருக்கிறது என்று நீங்கள் என்றேனும் யோசித்தது உண்டா? நம்மில் பெரும்பாலானோர் இதை டிசைன் அல்லது ஃபேஷன் என்று நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால், சட்டையின் பின்புறத்தில் அமைந்திருக்கும் இந்த லூப் ஹோல் ஓர் காரணத்திற்காக தான் 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்டது என ஓர் சுவாரஸ்யமான காரணமும் இருக்கிறது...

இந்த வகை சட்டைகளை 1960-களில் அமெரிக்க உடை தயாரிப்பு ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்தது. இந்த லூப் ஹோலை லாக்கர் லூப், ஃபேரி லூப் மற்றும் ஃப்ரூட் லூப் என்றும் கூறுகின்றனர்.

பெண்கள், இதை விளையாட்டு பொருளாக கருதி இழுத்து, இழுத்து விளையாடுவதும் உண்டு. சில சமயங்களில் எங்கேனும் சிக்கி அதன் காரணமாக சட்டை கிழியவும் வாய்புகள் இருக்கின்றன.

பல்வேறு பிராண்டு சட்டைகளில் இந்த லூப் ஹோல் பின் பகுதியில் அமைந்திருக்கும். இது, ஸ்டைல் அல்லது டிசைன்காக அமைக்கப்படவில்லை. ஒருமுறை நீங்கள் கழற்றி மாட்டினாலோ அல்லது துவைத்து இஸ்திரி செய்து வைத்தாலோ சட்டை கசங்காமல் இருக்க அமுக்கமாக லாக்கர் அல்லது ஹேங்கரில் மாட்டி வைக்க தான் இந்த லூப் ஹோல் சட்டையில் இணைக்கப்பட்டது.

ஆனால், இதன் நோக்கம் எதற்கென தெரியாமலேயே நம்மில் பலர் இந்த வகை சட்டைகளை வாங்கி அணிந்து வருகிறோம்.

Link to comment
Share on other sites

 

 

p56a.jpg

* `சானியா மிர்ஸா தன் பயோபிக்கில் நடித்தால், நான் அவருக்கு ஜோடியாக நடிக்கத் தயார்’ என அறிவித்திருக்கிறார் ஷாரூக் கான். 29 வயதான டென்னிஸ் வீரர் சானியா மிர்ஸா, அதற்குள் தன் சுயசரிதை புத்தகத்தை எழுதி முடித்து வெளியிட்டுவிட்டார். `காயம் ஏற்பட்டு இனி சிங்கிள்ஸ் ஆட முடியாது என்ற நிலை உருவானபோது, இரட்டையர் பிரிவில் ஆடி முதலிடம் பெற்றார் சானியா மிர்ஸா. கடின உழைப்புதான் வெற்றிக்கு ஒரே வழி. தோல்வி அடைந்தால் அதில் இருந்து மீள, அதைவிட கடின உழைப்பு தேவை. அந்த இரண்டுமே சானியாவிடம் இருக்கிறது' எனப் புகழ்ந்திருக்கிறார் பாலிவுட் பாட்ஷா. சூப்பர் கேர்ள் சானியா!


* உலகம் முழுக்க ஆற்றல்மிக்க பணியாளர்களின் (Skilled Workers) எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக் கிறது. இதில் அதிகபட்சமாக ஜப்பானில்
81 சதவிகிதப் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இங்கே 64 சதவிகிதம், பிரேசிலில் 63 சதவிகிதம் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் பிளம்பர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட டெக்னிக்கல் வேலைகளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு நிலவுகிறதாம். திறனை வளர்ப்போம்!


p56b.jpg

*  மோடியின் அறிவுரைகளில் ஒன்று, `ட்விட்டரில் ஆக்டிவாக இருக்க வேண்டும்’ என்பது. அதனால், ஃபாலோயர்ஸை அதிகரிப்பதில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே போட்டாபோட்டி நிலவுகிறது. இந்தியாவில் மோடிக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகம் ஃபாலோயர்ஸ்கொண்ட பெண் தலைவராக முதல் இடத்தில் இருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். கிட்டத்தட்ட 54 லட்சம் ஃபாலோயர்ஸ். ஒரு நாளுக்கு குறைந்தது 22 கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட பிரதமர் மோடி, கேள்விகளுக்குப் பதில் சொல்வது இல்லை. ஆனால், ஒரு நாளுக்கு சராசரியாக 16 முறை ரீட்வீட் செய்கிறார்.  ட்ரெண்டிங் மினிஸ்டர்ஸ்!


p56c.jpg

* தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இவர் நிறுத்தப் படலாம் என்பதால், தினமும் கெஜ்ரிவாலை ட்வீட்டுகளால் துவைத் தெடுக்கிறார் ஷர்மிஸ்தா. `டெல்லியில் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் டெல்லி மீதான கவனத்தை இழந்துவிட்டார் கெஜ்ரிவால். மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க, டெல்லியில் ஏதோ சாதனை செய்து முடித்துவிட்டதுபோல, மற்ற மாநிலங்களில் விளம்பரங்களை அள்ளி வீசுகிறார். அவரின் பொய்முகத்தைக் காட்டுவதுதான் என் முழு நேர வேலை' என வெடிக்கிறார் ஷர்மிஸ்தா.  வெல்கம்... வெல்கம்!


p56d.jpg

*  கடந்த 82 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வயதில் சென்ச்சுரி அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். 42 வயதான மிஸ்பா, இந்தச் சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிக்கெட்டின் தலைநகர் லார்ட்ஸ் மைதானத்தில் நிகழ்த்தியிருக்கிறார். `வயதாகிவிட்டது. இவர் ஏன் இன்னமும் விளையாடுகிறார்?' என இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக சதம் அடித்ததும், பிட்சிலேயே  `நான் இன்னமும் ஃபிட்டாகத்தான் இருக்கிறேன்' என்று  சில நிமிடங்கள் புஷ்-அப்ஸ் எடுத்து அசத்தினார் மிஸ்பா.
நீ கலக்கு பெரியப்பு!


p56e.jpg

p56f.jpg

* ஸ்டெஃபி கிராஃபின் `22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்’ என்ற சாதனையைச் சமன் செய்திருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். ஸ்டெஃபிக்கும் செரீனாவுக்கும் கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களில் மட்டும் அல்ல... இன்னும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஸ்டெஃபி, செரினா இருவரின் உயரமும் 5 அடி 9 அங்குலம். இருவருமே 4 வயதில் இருந்து டென்னிஸ் ஆட ஆரம்பித்தவர்கள். 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கும் இருவரும், தலா இரு முறை தொடர்ந்து விம்பிள்டனில் பட்டம் வென்றவர்கள் என டேட்டாக்களால் சிலிர்க்கிறார்கள் டென்னிஸ் ஃபேன்ஸ். சல்யூட் சாம்பியன்ஸ்!

vikatan

Link to comment
Share on other sites

13690904_1086843361364357_80499104806788

ஹரிப்பொட்டர் திரைப்படம் மூலம் அறியப்பட்ட daniel radcliffe க்கு இன்று பிறந்தநாள்

Link to comment
Share on other sites

அழகிய ஆட்டநாயகிகள்!

 

p106a.jpg

‘ஆள் பாதி, ஆட்டம் பாதி’ என அழகும், திறமையும் சரிவிகிதத்தில் கலந்த இந்தியப் பெண் வீராங்கனைகள் சிலர்... யாரையாவது மிஸ் பண்ணியிருந்தா, மன்னிச்சுடுங்க மகாஜனங்களே...

சானியா மிர்சா

விளையாட்டு, அழகு காம்போ என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது சானியா மிர்சாதான். ஆறு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம்னு சோயிம் மாலிக்கோடு மாலையும் கழுத்துமாக நின்றதைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதவை சாத்திக்கொண்டு கலங்கியவர்கள் பல பேர். ஆனாலும், 29 வயதான இந்த தெலங்கானா டென்னிஸ் புயல் இன்றும் பல இளைஞர்களின் மனதை சூறையாடிக்கொண்டுதான் இருக்கிறது. இரட்டையர் பிரிவின் நம்பர் ஒன் வீராங்கனையான சானியா, பத்மபூஷன், பத்ம, அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா எனப் பல விருதுகளுக்கும் சொந்தக்காரர். சுருக்கமா சொல்லணும்னா, இப்போ ‘ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால்’னு டென்னிஸ் பார்த்து அலறிட்டு இருக்கிற முக்கால்வாசிப் பயலுக சானியா மிர்சாவுக்காக டென்னிஸ் பார்க்க ஆரம்பிச்ச பயலுகதான்.

ஜுவாலா கட்டா

p106b.jpg

ந்திய அப்பா, சீனா அம்மா எனச் சேர்ந்த கலவையான ஜூவாலா, இறகுப்பந்து விளையாட்டின் இரட்டையர் பிரிவு ஸ்பெஷலிஸ்ட். இடதுகை பழக்கமுள்ள இவர் விளையாடுவதைப் பார்க்கவே எக்ஸ்ட்ராவா இரண்டு கண்கள் வேணும். அம்புட்டு ஸ்டைலா இருக்கும். ‘குன்டே ஜாரி கல்லந்தாயிண்டே’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். 32 வயதான ஜுவாலாவுக்கு ஒரே ஒருமுறை திருமணம் ஆகி, அதுவும் விவாகரத்தில் முடிந்து போனது. ப்ச்ச்...

அஸ்வினி பொன்னப்பா

p106c.jpg

ஜுவாலா கட்டாவின் ஜிகிடி தோஸ்தி. அஸ்வினியும் ஜூவாலாவும் ஜோடி சேர்ந்த பின்புதான் பல பதக்கங்களை அள்ளினர். கன்னடத்துப் பைங்கிளியான அஸ்வினிக்கும் ஆல் ஓவர் இந்தியா ரசிகர் கூட்டம் உண்டு. அஸ்வினிக்கு வயசு 26 மக்கா...

பிரச்சி தெஹ்லான்

p106d.jpg

மும்பை மாநகரிலே பிறந்த சகலகலா வல்லவி. கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், நடிப்புத் துறை என மூன்றிலும் பின்னியெடுத்துப் பிரபலம் ஆகிவிட்டார் இந்த அழகு அல்வாத்துண்டு. 2010-ம் ஆண்டு நடந்த காமன் வெல்த் போட்டியில் இந்திய வலைப்பந்தாட்ட அணியைத் தலைமை தாங்கியது பிரச்சிதான். அதேபோல்,  ‘தியா அவுர் பாட்டி ஹம்’ என்ற இந்தி நாடகத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவைக்காக 15 கிலோ எடையையும் குறைத்தாராம் இந்த லேடி விக்ரம்.

சர்மிளா நிக்கோலட்

p106e.jpg

கோல்ஃப் வீராங்கனையான சர்மிளாவின் உயரம் ஆறு அடி. இந்திய அம்மாவுக்கும், ஃப்ரெஞ்ச் அப்பாவுக்கும் பிறந்த புள்ள. அதனாலோ என்னவோ அழகு விட்டுப்போகலை. கோல்ஃப் மட்டுமல்லாது பள்ளிக்காலங்களில் மாநில அளவிலான தடகள வீராங்கனையாகவும் இருந்திருக்கிறார் சர்மிளா. அதேபோல், நீச்சல் போட்டிகளில் 6 வயது முதல் 10 வயது வரை எழுபதிற்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றிருக்கிறார். வயதில் இப்போதுதான் கால் சதம் அடித்திருக்கிறார். சர்மிளாவுக்கு ‘செர்ரி’ என்ற செல்லப்பெயரும் உண்டாம்.

தனியா சச்தேவ்

p106f.jpg

டில்லியில் பிறந்த சதுரங்கக் கில்லி. தன்னுடைய ஆறு வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த தனியா, ஆசிய அளவில் 14 வயதிற்குட்பட்டோர், 12 வயதிற்குட்பட்டோர், 20 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் சர்வதேச அளவிலான பல பட்டங்களை வென்றிருக்கிறார். 2005-ல் பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வெல்லும் எட்டாவது இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். 29 வயதான தனியாவுக்கு ஒரு கட்டட வடிவமைப்பாளருடன் 2014-லேயே கெட்டிமேளம் கொட்டியாச்சு.

தீபிகா பல்லிகல்

p106g.jpg

த்திராஜ் கல்லூரியில் படித்த நம் ஊர்ப் பொண்ணு. கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி. இவை எல்லாவற்றைவும் விட முக்கியமான விஷயம், ஸ்குவாஷ்னு ஒரு விளையாட்டு இருக்குனு நம்ம பயலுகளுக்குத் தெரிய வெச்சதே தீபிகாதான். 2014-ம் ஆண்டு நடந்த காமன் வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் இவரும் ஜோஷ்னா சின்னப்பாவும் இணைந்து தங்கம் வென்று நம் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். இதுக்கு மேல நான் ஏதாவது பேசினால் தினேஷ் கார்த்திக் கோச்சுக்குவாப்டி. அதனால், நாம அடுத்து யார்னு பார்ப்போம்.

சாய்னா நேவால்

p106h.jpg

டென்னிஸுக்கு சானியா என்றால், பேட்மின்டனுக்கு சாய்னா. ஹரியானாவில் பிறந்து ஹைதராபாத்தில் வாழும் சாய்னாதான் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை. உலக அளவில் ஐந்தாவது இடம். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வாங்கி நம் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர். ஆனால், சாய்னாவின் சிரிப்புக்கு கண்டிப்பா தங்கம் தந்தே ஆகணும். இப்போது பல விளம்பரங்களில் வந்து சிரித்துக்கொண்டிருக்கிறார் சாய்னா. மகிழ்ச்சி.

அகான்க்‌ஷா

p106i.jpg

ந்தியக் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவி. வாரணாசியில் பிறந்த செக்கச் சிவப்பழகி. அகான்க்‌ஷாவின் குடும்பமே கூடைப்பந்துக்குப் பெயர் போன குடும்பம். இவரது சகோதரிகள் திவ்யா, பிரசாந்தி, பிரதிமா ஆகியோரும் இந்தியக் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடியவர்கள். அதனால், ஊருக்குள் இவர்களை ‘சிங் சிஸ்டர்ஸ்’ என அழைப்பார்களாம். சிங் சிஸ்டர்களிலேயே அகான்க்‌ஷா தான் அழகுனு எல்லோரும் சொல்றாய்ங்க. ஆனால், எனக்கு என்னமோ எல்லோருமே அழகாதான் தெரியறாங்க.

vikatan

Link to comment
Share on other sites

காட்டுக்குள் ஒரு ஜிக்குபுக்கு...!

 

 
  • 1_2803084g.jpg
     
  • 3_2803082g.jpg
     
  • 7_2803078g.jpg
     

மனிதர்கள் வசிக்காத மரங்கள் அடர்ந்த காடு, ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி. இவற்றுக்கு மத்தியில் அட்டகாசமாக இருக்கிறது மார்டினி ரயில்வே ஜங்ஷன். ஆளே இல்லாத இடத்தில் எதற்கு ஒரு ரயில் நிலையம்?

இது நிஜ ரயில் நிலையம் அல்ல. பொம்மை ரயில் நிலையம். 120 அடி நீளத்துக்கு ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு பொம்மை ரயில் ஊர்ந்து போகிறது. ரயிலுக்குள் பொம்மைப் பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். இன்ஜின் பகுதியில் அமர்ந்து ஒருவர் ரயிலை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ரயில் ஆங்காங்கே பல நிறுத்தங்களில் நிற்கிறது. பாலங்களைக் கடக்கிறது. சுரங்கங்களுக்குள் சென்று வருகிறது. உயரமான இடத்தில் ஏறுகிறது, பள்ளமான இடத்தில் இறங்குகிறது. தண்டவாளத்துக்குப் பக்கவாட்டில் விளக்குக் கம்பங்கள் இருக்கின்றன.

5_2803080a.jpg

ரயில் நிலையங்களில் மனிதர்கள் மட்டுமல்ல, நீர்யானை, பெங்குவின், பன்றி, டைனசர் போன்ற விலங்குகளும் பறவைகளும்கூட ரயிலுக்காகக் காத்திருக்கின்றன! ஆங்காங்கே பெஞ்சுகளும் வாகனங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையத்தில் ஓர் அலுவலகம் இருக்கிறது. அதில் ஒரு கடிகாரம் நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மரங்களில் தொங்கு பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாலத்தில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பாலத்தில் காண்டாமிருகத்தோடு சேர்ந்து ஒரு மனிதர் நிற்கிறார்.

ரயில் நிலையங்களில் மனிதர்கள் மட்டுமல்ல, நீர்யானை, பெங்குவின், பன்றி, டைனசர் போன்ற விலங்குகளும் பறவைகளும்கூட ரயிலுக்காகக் காத்திருக்கின்றன! ஆங்காங்கே பெஞ்சுகளும் வாகனங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையத்தில் ஓர் அலுவலகம் இருக்கிறது. அதில் ஒரு கடிகாரம் நேரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள மரங்களில் தொங்கு பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பாலத்தில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பாலத்தில் காண்டாமிருகத்தோடு சேர்ந்து ஒரு மனிதர் நிற்கிறார்.

2_2803083a.jpg

உண்மையான ரயில் நிலையத்தை நினைவுபடுத்தும் இவை எல்லாமே அந்த அழகான மினியேச்சர் மார்டினி ஜங்ஷனில் உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள நீதம் காட்டுப் பகுதிக்குள்தான் இந்த பொம்மை ரயில் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

யார், எதற்காக இந்தக் காட்டுக்குள் இப்படி ஒரு ரயில் நிலையத்தை உருவாக்கியது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

ஜிம் மெட்காஃப் என்ற இன்ஜினியர் பொழுது போக்குவதற்காக இந்தக் காட்டுக்கு அடிக்கடி வருவார். இங்கே சலசலத்து ஓடும் ஓடைக்கு அருகில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார். அந்தத் தண்ணீரைத் தடுத்து, தானே ஓர் அருவியை உருவாக்கினார். அந்த அருவியை அமர்ந்து ரசிப்பதற்காக இரண்டு பெஞ்சுகளைப் போட்டு வைத்தார். தன் மனைவியுடன் அடிக்கடி வந்து செல்வார்.

ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அவரது மகள், கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி பொம்மை ரயிலை வைத்து அலங்காரம் செய்திருந்தாள். அதைப் பார்த்தவுடன் நீதம் காட்டில் ஒரு பொம்மை ரயில் நிலையத்தை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. ஒவ்வொன்றையும் தானே வடிவமைத்தார். 12 ஆண்டுகளுக்கு முன் மார்டினி ரயில் நிலையம் முழுமையடைந்தது.

4_2803081a.jpg

ஜிம் மெட்காஃப் வரும் நாட்களில் மட்டுமே இந்த ரயில் இயங்கும். மற்ற நேரங்களில் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டுச் செல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக மார்டினி ரயில் நிலையம் வெளியே தெரிய ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான பெரியவர்களும் குழந்தைகளும் இந்த இடத்தைத் தேடி வந்தனர். இந்த மினியேச்சர் ரயில் நிலையம் பிடித்துப் போனதால் குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த பொம்மைகளை ஆங்காங்கே வைத்துவிட்டுப் போனார்கள்.

அதனால்தான் மனித பொம்மைகளுக்கு நடுவே நீர்யானை, பெங்குவின், டைனசர் போன்றவையும் ரயிலுக்காகக் காத்திருக்கின்றன!

6_2803079a.jpg

 

tamil.thehindu

Link to comment
Share on other sites


வரலாற்றில் இன்று: ஜூலை 24
 
 

article_1469335420-Air300.jpg1505: போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.

1567: இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.

1911: பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.

1915: சிகாகோ நதியில் கப்பலொன்று கவிழ்ந்ததால் 844 பேர் பலியாகினர்.

1923 - கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி, புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

1924 - பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FஈDஏ) பாரிசில் அமைக்கப்பட்டது.

1931: பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48பேர் கொல்லப்பட்டனர்.

1943: இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1969: சந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் தலைமையிலான விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்.

1969: அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

1974: சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.

1977: லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4 நாள் போர் முடிவுக்கு வந்தது.

1982: ஜப்பானில் மண்சரிவினால் பாலமொன்று உடைந்ததால் 299 பேர் பலி.

1991: இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

2001: பண்டாரநாயக்க விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி பல வான்கலங்களை அழித்தனர்.

2005: டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியில் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக வென்றார்.

2007: லிபியாவில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

.tamilmirror.lk
Link to comment
Share on other sites

ஞாபகம் இருக்கா?

 

p120a.jpg

சின்னவயசில் நாம் சின்னப்புள்ளத்தனமா விளையாடிய சில விளையாட்டுகள்தான் இவை... இப்பவும் விளையாடலாமா?

பல்லாங்குழி:

p120b.jpg

பணியாரக்குழியைப் போல இங்கிட்டு ஏழு, அங்கிட்டு ஏழு குழிகளில்  புளியங்கொட்டைகளைப் போட்டு ஆடும் விளையாட்டு பல்லாங்குழி. புளியங்கொட்டைகள் கிடைக்கவில்லையெனில் ஆட்டுப்புழுக்கைகளை வைத்தும் விளையாடலாம். பல்லாங்குழி விளையாடுவதற்கு அப்படி ஒன்றும் பிரம்ம பிரயத்தனம் தேவையில்லை. சில விதிகள் தெரிந்தால் போதுமானது. ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்...’ என ரொமான்ஸ் செய்யவும் இந்த விளையாட்டு பயன்பட்டது.

கூட்டாஞ்சோறாக்கல்:

p120c.jpg

ஒன்றாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அஞ்சாறு பேர் ஒன்று சேர்ந்து ஆளாளுக்கு வீட்டிலிருந்து அரிசி, உப்பு, மிளகாய்ப்பொடி, சர்க்கரை என ஆட்டையைப்போட்டு யாரும் அண்டாத காட்டுப்பக்கமாய்ச் சென்று அடுப்பு மூட்டிச் சோறாக்குவார்கள். எல்லோரும் ஆளுக்கு ஒரு பொருள் என முறைவைத்துக் கொண்டுவரும்போது உப்பை மட்டும் கொடுத்து ஒப்பேற்றியவர்கள் எதிர்காலத்தில் பெரிய பிஸினஸ்மேன்களாக மாறும் மாட்டுமூளைக்காரர்கள்.

கிச்சு கிச்சு தாம்பாலம்:

p120d.jpg

ஒரு முழம் நீளத்திற்கு மணலை மேடாகக் குவித்து ஒரு சிறு குச்சியை அந்த மணலில் புதைத்து வைக்க வேண்டும். குச்சி இருக்கும் இடத்தைச் சரியாகக் கணித்து எதிராளி அதன்மீது கையை வைத்து மறைக்க வேண்டும். சரியான இடத்தைக் கண்டுபிடிக்கவில்லையெனில் மீண்டும் கண்டுபிடிக்கும்வரை அவரே மண்டை காயவைக்கப்படுவார். இது சிறுவர்களுக்கான விளையாட்டு. இப்போது நீங்கள் விளையாடினால் ‘ஏழுகழுதை வயசுல என்னடா வெளையாட்டு இது’ என போவோர் வருவோரிடமெல்லாம் திட்டு வாங்க நேரிடலாம்.

கிட்டிப்புள்:

p120e.jpg

இரண்டு பக்கமும் கூராக சீவப்பட்ட ஒரு அரையடிக் குச்சியும், ஒரு ஒன்றையடிக் குச்சியும்தான் இந்த விளையாட்டின் சாதனங்கள். தரையைச் சுரண்டி ஒரு கோடுபோலக் குழியைத்தோண்டி அதன்மீது சின்னக் குச்சியை வைத்துப் பெரிய குச்சியால் தூக்கிவிட வேண்டும். அதை ரெய்னா போலப் பாய்ந்து பிடிக்க நினைத்தால், உடலில் ஆங்காங்கே கீறல் விழ வாய்ப்புகள் அதிகம். அதனால் கண்ணை மூடிக்கொண்டு குத்துமதிப்பாக தடுக்க வேண்டும். அந்தக் குச்சி எவ்வளவு தூரம் போகிறதோ அதைப்பொறுத்து பாயின்டுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுதான் இன்றைய நவீன கிரிக்கெட்டுக்கு ஆதித்தாய் என வாட்ஸ்-அப்பில் சிலர் பெருமைக்கு எருமை மேய்ப்பார்கள்!

நாடு பிடித்தல்:

p120f.jpg

பக்கத்து நாட்டைக் கைப்பற்றும் அரசர்களின் ஆதிக்க மனோபாவத்தின் ஆணிவேர் பட்டுப்போகாமல் தொட்டுத் தொடர்ந்ததன் விளைவால் உருவான விளையாட்டு இது. பெரிய கட்டங்களாக வரைந்து அதற்குள் அவரவர் இடத்தில் நிற்க வேண்டும். ஒருவர் ஒரு குச்சியை வேறொருவரின் இடத்தில் போட்டுவிட, மற்றவர்கள் ஓடிவிட வேண்டும். குச்சி விழுந்த இடத்திற்குச் சொந்தமானவர் குச்சியைத் தொட்டதும், ஓடுபவர்கள் அப்படியே நின்றுவிட அவர்மீது குச்சியை சரியாக எறிந்தால், அவர் நாட்டை முடிந்தவரை எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் ‘ராஜா இந்த வாட்டியும் அம்பை எய்ம் பண்ணுறாரு... ஜஸ்ட்டு மிஸ்’

கல்லா? மண்ணா?:

p120g.jpg

‘சாட் பூட் த்ரீ’யில் தோற்ற குழந்தை ‘மண்’ என்று சொன்னால், உடனே பிற குழந்தைகள் ஓடிப்போய் கல் மீது ஏறி நின்றுகொள்ளும். ‘கல்’ என்றால் மண்ணில் நின்றுகொள்ளும். கல்லைவிட்டுக் கீழே இறங்கி மண் மீது நிற்கும் குழந்தைகளைத் தொடப் போகும்போது, அக்குழந்தைகள் மீண்டும் கல்மீது ஏறிக்கொண்டு ‘பிம்பிளிக்கா பிலாப்பி’ காட்டும். அவுட்டான குழந்தை ஏதாவது ஒரு குழந்தையைத் தொட்டுவிடும். பின்னர் அந்தக் குழந்தை மூஞ்சியைத் தொங்கப்போட்டபடி ஆட்டத்தை ஆரம்பிக்கும். அம்மாக்கள் சாப்பிடக் கூப்பிடும் வரை இந்த விளையாட்டு தொடரும்.

vikatan

Link to comment
Share on other sites

'ஆலாயால் தர வேணாம்' - செம்ம பாட்டுங்க..!

கேரளாவின் கவளம் நாராயண பணிக்கர் எழுதிய பிரபல பாடலான 'ஆலாயால் தர வேணாம்' பாடலுக்கு மாடர்ன் டச் கொடுத்திருக்கிறது 'மசாலா காபி' இசைக்குழு. ரீமிக்ஸ் என்றால் ஹிப்ஹாப் பீட்களை சேர்க்கும் காலத்தில், இது ஓரு உண்மையான முயற்சி. பாடலுக்கான வீடியோவும் கண்ணுக்கு அவ்வளவு அழகு. டிரம்ஸ், பேஸ் கிட்டார்..சான்ஸே இல்ல!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.