Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

வரலாற்றில் இன்று....

மே - 26

 

733varalau.jpg1293 : ஜப்பான் கம­கூரா என்ற இடத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 30,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1805 : இத்­தா­லிய மன்­ன­னாக பிரான்ஸின் நெப்­போ­லியன் போனபார்ட் முடி­சூ­டினான்.

 

1838 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் செரோக்கீ பழங்­கு­டி­களின் கட்­டாயக் குடி­ய­கல்வின் போது 4,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1879 : ஆப்­கா­னிஸ்தான் அரசை உரு­வாக்க கண்­டமாக் உடன்­பாட்டில் ரஷ்­யாவும் ஐக்­கிய இராச்­சி­யமும் கைச்­சாத்­திட்­டன.

 

896 : ரஷ்­யாவின் இரண்டாம் நிக்கலஸ் ரஷ்­யாவின் சார் மன்­ன­னாக முடி சூடினான்.

 

1917 : அமெ­ரிக்­காவின் இலினொய்ஸ் மாநி­லத்தில் ஏற்­பட்ட சூறா­வ­ளியின் தாக்­கத்­தினால் 101 பேர் கொல்­லப்­பட்டு 689 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1918 :  ஜோர்­ஜியா குடி­ய­ரசு அமைக்­கப்­பட்­டது.

 

1966 : பிரித்­தா­னிய கயானா விடு­தலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்­றது.

 

1969 : அப்­பலோ 10 விண்­கலம் மனி­தனை சந்­தி­ர­னுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்­டத்­திற்கு தேவை­யான சோத­னை­களை வெற்­றி­க­ர­மாக முடித்து விட்டு பூமி திரும்­பி­யது.

 

1983 : ஜப்­பானைத் தாக்­கிய 7.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் சுனா­மியை ஏற்­ப­டுத்­தி­யதால் 104 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1986 : ஐரோப்­பிய கொடியை ஐரோப்­பிய சமூகம் அங்­கீ­க­ரித்­தது.

 

1987 : யாழ்ப்­பாணம் வட­ம­ராட்­சியில் இலங்கைப் படை­யி­னரின் ஒப்­ப­ரேஷன் லிப­ரேஷன் இரா­ணுவ நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­கி­யது.

 

1991 : தாய்­லாந்தின் விமானம் வெடித்­ததில் 223 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2002 : மார்ஸ் ஒ.டி.சி விண்­ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படி­வுகள் இருப்­பதை அறிந்­தது.

 

2006 : ஜாவாவில் நிகழ்ந்த பூகம்­பத்தில் 5,700 பேர் கொல்­லப்­பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

 

2008 : சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் பாரிய வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. இதனால் 148 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk
Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

13243990_1050500581665302_98138605187433

உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரேனுக்கு இன்று பிறந்தநாள்.
இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

பிறருக்குச் சந்தோஷங்களை ஈட்டிக் கொடுப்பவனே...
 
 

article_1464235024-k%5Bp%5B.jpgபிறருக்குச் சந்தோஷங்களை ஈட்டிக் கொடுப்பவனே, தூய சந்தோஷங்களுடன் எக்காலத்திலும் வாழும் உரிமையுள்ள தூய ஆன்மாவாகிறான்.

தனக்காகச் செய்யும் காரியங்களால், மனிதன், உலகத்தின் ஷேமங்களை மறந்து விடுகிறான்.

ஆனால், தன் பொருட்டுப் பணியாற்றுவது தவறு அல்ல. 'நீ, இந்த உலகத்துக்கும் உரிமையுள்ளவன் என்பதனால், அதன் வளர்ச்சிக்காக உனது பங்களிப்பை வழங்குவாயாக' என்பதே ஆண்டவனின் கட்டளை எனக் கொள்க.

பிறர், தன்னை மனமார வாழ்த்தும்போது தான், தான் இன்னுமும் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென மகிழ்ச்சியுடன், திட சங்கற்பம் செய்து கொள்கிறான்.

பூரிப்பும் புளங்காகிதமும் களிப்பும், யாராவது ஒருநபர் எங்களால் நன்மை பெற்றதன் மூலம் கிடைத்ததாய் அமைய வேண்டும்.

Link to comment
Share on other sites

 
 
 
Vikatan EMagazines Foto.
 

மே 26: மாவீரன் நெப்போலியன்... ஏழை வீட்டு பிள்ளையாக பிறந்து சக்கரவர்த்தி ஆன தினம் இன்று

தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர்
இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில்
இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய
தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது,
அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை ‘விதியின் மனிதன்’ என அழைத்துக்கொண்டான்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு
ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற
அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன்
அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க
அரசவைக்கு வருவார்.

அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக
உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக்
காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய
மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது
மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.

பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது
போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே
இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு
இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். “ரஷ்யக் குளிர்
நெப்போலியனை தோற்கடித்தது!”என வரலாறு எள்ளி நகையாடுகிறது.

அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள்
தருகிறேன்!”என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி
பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன்.

“முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்”. “முடிந்தது” என்றார் நெப்ஸ். “அடுத்து” என கம்பீரமாக கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் – ஒரே தொழில்
போட்டி” எனவும் சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?”எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!” “ஹ்ம்ம்”
என்ற நெப்போலியன்…

“கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு – வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று
இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. “ஒன்…டூ…த்ரீ!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை
வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம்
என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை
தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.

நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது.
எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார்.
நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன்
தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன்.

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம்
புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.

ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். “அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து
விட்டார்கள். அவ்வளவு தான்!” என்றபொழுது நெப்போலியன், “அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்” என்றார்.

“முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை” என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்து
முடிசூட்டிக்கொண்ட நாள் இன்று..

vikatan

Link to comment
Share on other sites

கோழி முட்டையில் 3 மஞ்சள் கருக்கள்
 

கோழி முட்­டை­களில் இரு மஞ்சள் கருக்கள் இருப்­பது ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல. ஆனால், பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் கோழி முட்­டை­யொன்றை உடைத்­த­போது அதற்குள் 3 மஞ்சள் கருக்கள் இருந்­ததைக் கண்டு பெரும் வியப்­ப­டைந்தார். 

 

1686701.jpg

 

17 வய­தான மேகன் வொட்கின்ஸ் எனும் இந்த யுவதி, தனது மூத்த சகோ­தரி எமிக்கு சொந்­த­மான உணவு விடு­தி­யொன்றில் காலை உணவு தயா­ரிப்­ப­தற்­காக இந்த முட்­டையை உடைத்தார். 

 

இதன்­போது மூன்று மஞ்­சள் கருக்­களை அவர் கண்டார். மேகன் வொட்கின்ஸ் தந்தை சார்ளி கையும் அப்­போது அந்த உணவு விடு­தியில் இருந்தார். இது தொடர்­பாக சார்ளி கை கூறு­கையில், “சமை­ய­லுக்­காக உடைத்த முட்­டையில் 3 மஞ்சள் கருக்கள் இருப்­ப­தாக மேகன் கூறினார்.

 

ஆனால், அப்­பாத்­தி­ரத்தை அசைக்க வேண்டாம் எனவும் அந்த முட்­டையை சமைப்­பதை நிறுத்­து­மாறும் கூறினேன்.  

 

168673b34PAY-Megan-Watkins_25052016_R25_

 

முட்­டையில் 3 மஞ்­சகள் கருக்கள் இருப்­பது அனை­வ­ருக்கும் சற்று திகைப்பை ஏற்­ப­டுத்­தி­யது” எனக் கூறி­யுள்ளார்.

 

இக்­கு­டும்­பத்­தி­ன­ருக்குச் சொந்­த­மான கோழிப்­பண்ணை ஒன்­றி­லி­ருந்து இம்­முட்டை பெறப்­பட்­டி­ருந்­தது. சுமார் 50 கோழிகள் அங்கு உள்­ள­தா­கவும் அவை அண்­மை­யி­லேயே முட்­டை­யிட ஆரம்­பித்­த­தா­கவும் சார்ளி கை தெரி­வித்­துள்ளார்.

 

கோழி முட்­டை­களில் இரு மஞ்சள் கருக்கள் இருப்­ப­தற்­கான வாய்ப்பு ஆயி­ரத்­துக்கு ஒன்று எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

ஆனால், 3 மஞ்சள் கருக்களுக்கான வாய்ப்பு 2.5 கோடிக்கு ஒன்று என நிபுணர்கள்  கூறுகின்றனர். 

metronews.lk
Link to comment
Share on other sites

13235461_1050495488332478_84532659259532

ஆச்சி என்று அன்போடு அழைக்கும் சாதனை நாயகி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்.

பல்லாயிரக்கணக்கான படங்கள்..
பலதரப்பட்ட பாத்திரங்கள்..
அற்புத நடிப்பாற்றல்..
வெள்ளந்தி மனம்...

கடந்த ஆண்டில் எங்களை விட்டுப் பிரிந்த மனோரமா தன் நடிப்பினால் எங்கள் மனங்களில் நிரந்தர இடம்பிடித்த நடிப்புலக அம்மா.

13305105_1143453999046722_86137315370712

மே 26: 'ஆச்சி' மனோரமா பிறந்தநாள் இன்று....

'ஜி‑ல்ஜில் ரமாமணி'யாகக் கொஞ்சியவரை, தமிழகமே 'ஆச்சி' என்று செல்லமாக அழைத்தது. இந்திய அளவில் 'இவருக்கு நிகர் இவர்' என்று ஒப்பீடு செய்ய முடியாத வெகு சிலருள் மனோரமாவுக்கும் ஓர் இடம் உண்டு. தவச்செல்வியின் பெர்சனல் பக்கங்களில் இருந்து இங்கே கொஞ்சம்...

1939-ல் மனோரமா பிறந்த ஊர் ராஜமன்னார்குடி. பெற்றோர் காசிகிளாக்குடையார் - ராமாமிர்தம்மாள்.

பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். பள்ளத்தூர் பாப்பா என்றும் அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பள்ளத்தூரில் வளர்ந்ததால் 'ஆச்சி' என்று அன்பு அடைமொழி சேர்ந்துகொண்டது.

1952-ல் மேடை ஏற்றப்பட்ட 'யார் மகன்' நாடகம்தான் ஆரம்பம். 'அந்தமான் கைதி' மனோரமா நடித்த புகழ்பெற்ற நாடகம். நடித்த நாடகங்கள் சுமார் 5,000-க்கும் மேல்!

அறிஞர் அண்ணா எழுதிய 'வேலைக்காரி' நாடகத்திலும், அவரோடு 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்', 'ஓர் இரவு' நாடகங்களிலும் நடித்திருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய 'உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்!

முதல் சினிமா 'மாலையிட்ட மங்கை'. நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை 1,300-க்கு மேல். இதனால் 'கின்னஸ்' உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார் மனோரமா. இவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் கவியரசு கண்ணதாசன்!

மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய வித்தகி!

'கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராம நாதனோடு திருச்செந்தூர் கோயிலில் திருமணம். ஒரே ஒரு மகன் பூபதி!

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என ஐந்து முதல்வர்களோடு நடித்த பெருமை உடையவர்! அடிக்கடி ஆச்சியைச் சந்தித்தவர்கள் கமல், ரஜினி!

கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் தமிழக அரசு கலைமாமணி விருதும் அளித்து தங்களைப் பெருமைப்படுத்திக்கொண்டுள்ளன!

மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை 'சகோதரன்' என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி கணே சன். இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, 'அண்ணே' என்றுதான் அழைத்தார் ஆச்சி!

காரில் செல்லும்போது, 'மெள்ளப் போ, மெள்ளப் போ' என ஓட்டுநரைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனாலும், எந்த நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்குச் செல்ல வேண் டும் என்பதில் குறியாக இருப்பார்!

பின்னணிப் பாடகிகள் அளவுக்கு இனிய சாரீரம். இவரை அடிக்கடி பாடச் சொல்பவர்களிடம் கூச்சப்பட்டுக்கொண்டே, "என்ன பெரிசா பாடுறேன். பி.சுசீலா அம்மா குரலா என்னுது" என்பார்!

ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் 'தில்லானா மோகனாம்பாள்'. ஆச்சிக்கே பிடித்தது 'சின்னக் கவுண்டர்', 'நடிகன்'. "ஒரு துளி விரசம் இல்லாமல் 'நடிகன்' படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்" என்பார்!

பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் ஆழ்ந்துவிடுவார். படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாதது எதுவும் இல்லை!

மனச் சோர்வு இருந்தால்கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார்.

அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டியவர்!

'ஆச்சி இன்டர்நேஷனல்', 'அல்லி ராஜ்யம்', 'காட்டுப்பட்டிச் சத்திரம்' என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்!

'வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன். பேசலாமா' என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல். சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்!

vikatan

Link to comment
Share on other sites

13235469_1050500294998664_30337934747731

முன்னாள் இங்கிலாந்து சகலதுறை கிரிக்கெட் வீரர் போல் கொல்லிங்வூட்டின் பிறந்தநாள் இன்று.
இங்கிலாந்துக்கு கிடைத்துள்ள ஒரே உலகக் கிண்ணத்தை (2010 உலக T20) வென்று கொடுத்த அணித்தலைவர் இவரே.

 

Link to comment
Share on other sites

நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்த 6 மாத குழந்தை (உற்சாக வீடியோ)

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்தது.

சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியக்க வைத்தது. தொழில்முறை நீர் சறுக்கு வீரர்களான அந்த குழந்தையின் பெற்றோர், "படகு ஏரியின் மறுமுனையில் நின்று விட்டது. அப்படி இல்லாவிட்டால் இன்னும் அதிக தூரத்தை சியாலா கடந்திருப்பாள்" என்று பெருமையுடன் கூறியுள்ளனர்.

 

 

பார்க்ஸ் போனிபை என்பவர் 6 மாதம் 29 நாட்கள் வயதில் நீர் சறுக்கில் ஈடுபட்டதே சாதனையாக இருந்தது. அதனை 6 மாதம் 27 நாட்களில் அதாவது 48 மணி நேர வித்தியாசத்தில் முறியடித்து விட்டார் சியாலா.

vikatan

Link to comment
Share on other sites

நடனமாடுவதில் புதிய உலக சாதனை படைத்த 31,697 பெண்கள்
 

சீனாவில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் ஒரே நேரத்தில் நடனமாடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.   


16878d3.jpg

 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் 4 நகரங்களில் கடந்த சனிக்கிழமை ஏக காலத்தில் இந்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

 

16878d1.jpg

 

மொத்தாக 31,697 பேர் இந் நிகழ்வில் பங்குபற்றினர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையானோர் இணைந்து ஒழுங்கமைக் கப்பட்டு நடனமாடிய நடன நிகழ்வாக இது கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.   


16878d2.jpg

 

பெரும்பாலும் நடுத்தர மற்றும் வயோதிபப் பெண்களே இந் நிகழ்வில் பங்கு பற்றியதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

.metronews.lk
Link to comment
Share on other sites

மனோரமா 10

 

 
manorama_2869042f.jpg
 

கின்னஸ் சாதனை படைத்த நடிகை

‘ஆச்சி’ என தமிழ் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மனோரமா (Manorama) பிறந்த தினம் இன்று (மே 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் வசதியான குடும்பத்தில் (1937) பிறந்தவர். இயற்பெயர் கோபிசாந்தா. தந்தை பிரிந்து சென்ற பிறகு, குழந்தையாக இருந்த மனோரமாவையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி அடுத்த பள்ளத்தூருக்கு குடி பெயர்ந்தார் தாய்.

# மூன்று வயதிலேயே மிக அருமை யாக பாடுவாராம். பலகாரக் கடை நடத்தி வந்த தாயின் உடல்நலம் குன்றியதால், 6-ம் வகுப்புடன் இவரது படிப்பு நின்றது. ஒரு வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்தார்.

# எதேச்சையாக நாடகத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அருமையாகப் பாடியதுடன், அற்புதமாக நடித்தும், நடனமாடியும் அனைவரையும் கவர்ந்தார் இந்த 12 வயது சிறுமி. ‘பள்ளத்தூர் பாப்பா’ என அழைக்கப்பட்டார். பின்னர் ‘மனோரமா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வைரம் நாடக சபாவில் சிறு வேடங்களில் நடித்தார்.

# பி.ஏ.குமார் என்பவர் மூலமாக நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எஸ்எஸ்ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். மொத்தம் 1,000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘நாடக உலகின் ராணி’ எனப் போற்றப்பட்டார்.

# சிங்களத் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். 1958-ல் கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். நாகேஷ் - மனோரமா ஜோடி மிகவும் பிரபலமடைந்தது.

# தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே, தவறே இல்லாமல் பேசி நடிக்கும் ஆற்றல் பெற்றவர். குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்கினார். 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். 1,000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

# அதிக எண்ணிக்கையில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர். கதாநாயகி, அண்ணி, வில்லி என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புலகில் 50 ஆண்டுகளைக் கடந்து பொன்விழா கொண்டாடியவர். நன்கு பாடக்கூடியவர். ‘டில்லிக்கு ராஜான்னாலும்’, ‘வா வாத்யாரே’, ‘மெட்ராச சுத்திப் பாக்க’, ‘மஞ்சக் கயிறு’ ஆகிய பாடல்கள் பிரபலமானவை.

# அறிஞர் அண்ணா, மு.கருணாநிதியுடன் மேடைகளிலும் எம்ஜிஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்றவர்.

# பத்மஸ்ரீ , கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, டத்தோ சாமிவேல் சரித்திர நாயகி விருது, கலா சாகர் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பத்திரிகையாளர் ‘சோ’இவரை ‘பெண் சிவாஜி’ என புகழ்ந்துள்ளார்.

# வறுமையில் வாடி, எந்தப் பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே உலக அளவில் புகழ்பெற்ற மனோரமா கடந்த அக்டோபர் மாதம் 78-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

'ராணி தேனீயைக் காப்பாற்ற' காரை 24 மணி நேரம் துரத்திய தேனீக் கூட்டம்

 

 
காரை துரத்திய தேனீக்கூட்டம்.| படம்: டாம் மோசஸ் என்பாரின் பேஸ்புக்.
காரை துரத்திய தேனீக்கூட்டம்.| படம்: டாம் மோசஸ் என்பாரின் பேஸ்புக்.

பிரிட்டனில் இயற்கைப் பூங்காவிலிருந்து தன் வீடு நோக்கி 65 வயது பெண்மணி ஒருவர் காரை ஓட்டிச் சென்ற போது சுமார் 20,000 தேனீக்கள் கொண்ட கூட்டம் அவரது காரின் பின்பகுதி கண்ணாடியில் குழுமியிருந்தது கண்டு பீதியடைந்தார்.

கரோல் ஹவர்த் என்ற இந்தப் பெண்மணி வெஸ்ட் வேல்ஸில் உள்ள ஒரு ஹேவர்ஃபோர்டுவெஸ்ட் டவுன் செண்டரில் காரை நிறுத்திய சிறிது நேரத்திற்கெல்லாம் காரின் பின்பகுதியில் பிரம்மாண்ட தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு திகைத்தார்.

பெம்புரோக்‌ஷயர் கடற்கரை தேசிய பூங்காவைச் சேர்ந்த டாம் மோசஸ் என்பவர் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பகுதியில் தேனீக்கூட்டம் இருந்ததைக் கண்டு அனைவரையும் எச்சரித்தார், ஏனெனில் பலர் அதற்குள் அந்தக் காரை படம் பிடிக்கத் தொடங்கியிருந்தனர்.

தேனீக்கள் கொல்லப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் டாம் மோசஸ் பெம்புரோக்‌ஷயர் தேனீ வளர்ப்புக் கழகத்தை அணுகி தேனீக்களைப் பாதுகாப்பாக கார்டுபோர்டு பெட்டியில் பிடிக்க உதவினார்.

இவற்றிற்கெல்லாம் பிறகு தனது காரை கரோல் ஹவர்த் வீட்டுக்கு ஓட்டிச் சென்றார், அதாவது பிரச்சினை முடிந்து விட்டது என்றே அவர் நினைத்தார். ஆனால் திங்கள் காலை மீண்டும் காரைப் பார்த்த போது மீண்டும் தேனீக் கூட்டம் அவரது காரின் பின்பகுதியை மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

அதன் பிறகு மீண்டும் தேனீ வளர்ப்புக் கழகத்தினரைத் தொடர்புகொண்டு அவற்றைப் பாதுகாப்பாகப் பிடித்துச் செல்ல உதவினார்.

பொதுவாக தேனீக்கள் தங்கள் தலைமை ராணித்தேனீயின் வழிகாட்டுதலுடன் கூட்டமாகச் செல்லும் எனவே இம்முறையும் ராணித் தேனீயைப் பின்பற்றியே தேனீக்கூட்டம் வந்திருக்கும் என்று பலரும் நினைத்தனர், ஆனால் அம்மாதிரியான ராணித்தேனீ அங்கு எதுவும் இல்லை.

ஆனால் ராணித் தேனீயும் இல்லாத போது இந்தக் கூட்டம் எப்படி காரில் வந்து குழுமியது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று

மே - 27

 

1703 : ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்பேர்க் நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1883 : ரஷ்ய மன்­ன­ராக 3 ஆம் அலெக்­ஸாண்டர் பத­வி­யேற்றார்.

 

1907 : அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­ஸிஸ்கோ நகரில் கொள்ளை நோய் பர­வி­யது.

 

734varalru.jpg1916 : உலக சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்­காக ஒரு அமைப்பை ஸ்தாபிக்க வேண்­டு­மென அமெ­ரிக்க ஜனா­தி­பதி உட்ரோ வில்சன் வலி­யு­றுத்­தினார்.

 

1930 : நியூயோர்க் நகரில் 1056 அடி உய­ர­மான கிறிஸ்லர் கட்­ட­டடம் திறக்­கப்­பட்­டது. அப்­போது உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மாக அது விளங்­கி­யது.

 

1940 : 2 ஆம் உலக யுத்­தத்­தின்­போது ஜேர்மன் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்த 99 பிரித்­தா­னிய படை­யினர் கொல்­லப்­பட்­டனர்.

 

1941 : அமெ­ரிக்­காவில் வரை­ய­றை­யற்ற அவ­ச­ர­கால நிலையை அந்­நாட்டு ஜனா­தி­பதி பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார்.

 

1941 : ஜேர்மன் யுத்தக் கப்­ப­லான பிஸ்மார்க் வட அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் மூழ்­க­டிக்­கப்­பட்­டது. இதனால் 2100 ஜேர்மன் படை­யினர் உயி­ரி­ழந்­தனர்.

 

1960 : துருக்­கிய ஜனா­தி­பதி செலால் பெயார், இரா­ணுவப் புரட்­சியின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்டார்.

 

1964 : இந்­திய பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு கால­மானார்.

 

1971 : மேற்கு ஜேர்­ம­னியில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 46 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1980 : தென்­கொ­ரி­யாவில் கிளர்ச்­சி­யா­ளர்கள் வச­மி­ருந்த குவாங்ஜூ நகரை தென்­கொ­ரிய படை­யினர் கைப்­பற்­றப்­பட்­டனர். இதன்­போது சுமார் 207 பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

1990 : பர்­மாவில் நடை­பெற்ற நாடா­ளு­மன்றத் தேர்­தல்­களில் ஜன­நா­யகக் கட்­சிகள் வெற்றி பெற்­றன.

 

1995 : சுப்­பர்மேன் திரைப்­ப­டங்­களில் நடித்து புகழ்­பெற்ற, நடிகர் கிறிஸ்­டோபர் றீவ், குதி­ரை­யோட்டப் போட்­டி­யொன்­றின்­போது வீழ்ந்­ததால் பக்­க­வா­தத்­திற்­குள்­ளானார்.

 

1997 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்கு எதி­ரான பாலியல் குற்­றச்­சாட்டு தொடர்­பாக அவர் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருக்கும் போதிலும், பௌலா ஜோன்ஸ் எனும் பெண் வழக்குத் தொடர முடியும் என அமெ­ரிக்க உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

 

2001 : பிலிப்­பைன்ஸில் கிளர்ச்சிக் குழு­வொன்­றினால் 20 பேர் பணயக் கைதி­க­ளாக்­கப்­பட்­டனர்.

 

2006 : இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 6,600 பேர் பலியாகினர்.

 

2009 : பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால் 35 பேர் பலியானதுடன் மேலும் 250 பேர் காயமடைந்தனர்.

.metronews.lk
Link to comment
Share on other sites

http://p.imgci.com/db/PICTURES/CMS/178300/178353.jpg13260287_1051064021608958_61105502084824

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வினோதன் ஜோனின் பிறந்தநாள் இன்று
இலங்கை அணியில் முன்பு விளையாடியிருந்த தமிழ் வீரர்களில் ஒருவர் இவர்.

Link to comment
Share on other sites

பற்கள் முழுவதையும் அகற்றிக்கொண்டு 500 பச்சை குத்திக்கொண்ட நபர்
 

இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.

 

1689842.jpg

 

மொத்தமாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளன. 

 

74 வயதான பிரகாஷ் ரிஷி எனும் இவர், 20 சாதனைகளைப் படைத்ததாக கூறுகிறார். தற்போது அவர் “கின்னஷ் ரிஷி” என்றே அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

1942 ஆம் ஆண்டு புதுடில்லியில் பிறந்த பிரகாஷ் ரிஷி,  1990 ஆம் ஆண்டு முதல் தடவையாக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றார்.

 

1689843.jpg

 

அவர் தனது இரு நண்பர்களுடன் மோட்டார் ஸ்கூட்டர் ஒன்றில் 1001 மணித்தியாலங்கள் பயணம் செய்தமை கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.

 

பின்னர் புதுடில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு பீட்ஸா விநியோகித்தமை, ஒரு போத்தல் தக்காளி சோஸை 4 நிமிடங்களுக்குள் உட்கொண்டமை என பல சாதனைகளை அவர் படைத்தார்.

 

வாயில் அதிகம் உறிஞ்சும் குழாய்களை (ஸ்ட்ரோ) வைத்து சாதனை படைப்பதற்காக இவர் தனது பற்கள் முழுவதையும் கழற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

1689839.jpg

 

மகாத்மா காந்தி, 2 ஆம் எலிஸபெத் அரசி உட்பட பல பிரமுகர்களின் உருவங்களையும் இவர் பச்சை  குத்திக்கொண்டுள்ளார்.

 

கின்னஸ் ரிஷியின் மனைவி பிம்லா, உலகின் மிகச்சிறிய உயில் எழுதியமைக்காக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றமை குறிப்பிடத்கதக்து.  

 

1991 ஆம் ஆண்டு அனைத்தும் மகனுக்கே (All to son)என்பதே இந்த உயிலாகும்.

metronews.lk
Link to comment
Share on other sites

கனடாவில் நீல நிற லாப்ஸ்டர்
=============================
கனடாவில் உள்ள மீனவரால் பிடிக்கப்பட்ட இந்த அரிய வகை லாப்ஸ்டர், இதை பிடித்தவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவருமாம்.

ஆனால் இதை யாரும் சாப்பிடப்போவதில்லை.// ஆஆ அப்படி சொல்லகூடாது  நிழலிக்கு இது தெரிந்தால்...:grin:

பிடிக்கப்பட்ட இரண்டு நீல நிற லாப்ஸ்டர்களில் ஒன்று கடலுக்குள்ளேயே விடப்பட்டுள்ளது. மற்றொன்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

13316838_1051061598275867_81598964747355

இலங்கை அணியின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மஹேல ஜெயவர்தனவின் பிறந்தநாள் இன்று.

Happy Birthday Mahela Jayawardena

இலங்கை அணியின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மஹேல.
உலகின் மிகப் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான மஹேல இலங்கை சார்பாக இரண்டாவது அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றவராவர்.
டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்க்ஸில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற இலங்கையர் என்ற சாதனையும் மஹேலவிடமே இருக்கிறது.

தற்போது நேர்முக வர்ணனையாளராகக் கடமையாற்றும் மஹேல இன்னமும் போட்டிகளில் கலக்கி வருகிறார்.
 
 
 
மஹேல ஜயவர்தனவுக்கு இன்று 39 ஆவது பிறந்த தினம்
 

உலகின்  மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும் இலங்கை அணியின் முன்னாள்  தலைவருமான மஹேல ஜயவர்தன இன்று தனது 39 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

 

16908Happy-birthday-Mahela-Jayawardene.j

 

 

1997 ஓகஸ்ட் 2ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் ஆரம்பமான இந்தியாவுடனான போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகனமாவர் மஹேல ஜயவர்தன. அப்போட்டியில் மஹேல 66 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இதே போட்டியில்தான் சனத் ஜயசூரிய 340 ஓட்டங்களையும் ரொஷான் மஹானாம 225 ஓட்டங்களையும் பெற இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 952 ஓட்டங்களைப் பெற்று புதிய உலக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.


149 டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்கள் 50 அரைச்சதங்கள உட்பட 11814 ஓட்டங்களையும்  448 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 19 சதங்கள், 77 அரைச்சதங்கள் உட்பட 12,650 ஓட்டங்களையும் 55 இருபது20 போட்டிகளில்  ஒரு சதம், 9 அரைச்சதங்கள் உட்பட 1493 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன குவித்துள்ளார்.

 

2006 ஆம் ஆண்டு தென் ஆபரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் டெஸ்ட் இன்னிங்ஸ்  ஒன்றில் இவர் பெற்ற 374 ஓட்டங்கள் வலது கை துடுப்பர்ட வீரர் ஒருவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதி கூடிய ஓட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்த மஹேல ஜயவர்தன கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கிண்ணப் போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

metronews.lk
 
 
Link to comment
Share on other sites

பொல்லாதவர்களுடன் இல்லாதவன் இணைத்தால்...
 
 

article_1464320747-good-vs-bad.jpgஎந்தத் தகுதி இல்லாத ஒருவரை மிகையாகப் புகழ்வதும் அவருக்கு அடிமைபோல சேவகம் செய்து வருபவர்கள், தகைமை சால் பெருமக்களைக் கௌரவம் செய்யப் பிரியப்படமாட்டார்கள்.

இத்தகைய பிரகிருதிகள், தங்கள் வாழ்நாள் பூராவும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் சந்தித்த வண்மாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்க யாரையாவது அண்டிப்பிழைப்பதே ஒரே வழி என கண்டிப்பான கொள்கையில் இருப்பவர்கள் தங்கள் சுயத்தை இழந்தவர்களேயாவர்.

காலம் செல்லச் செல்ல இந்த அடிமை வாழ்வு, ஒருவனைக் குற்றியுரும் குலை உயிருமான வேதனைகளை ஏற்படுத்தலாம்.

பொல்லாதவர்களுடன் இல்லாதவன் இணைத்தால், எல்லா பொல்லாப்பும் வந்து சூழும்.

Link to comment
Share on other sites

p58a.jpg

dot1.jpg பாலிவுட் முழுக்க மராத்தி படமான `சாய்ரட்' பரபரப்பாகப் பேசப்பட, ஒரே வாரத்தில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் ஆகிவிட்டார் நாகராஜ் மஞ்சுளே. படத்தைப் பார்த்த அமீர் கான், `இப்போதுதான் `சாய்ரட்' படம் பார்த்தேன். மனது உடைந்துவிட்டது. அந்த இறுதிக்காட்சியின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்' என ஒரு ட்விட் போட, செம உற்சாகத்தில் இருக்கிறது `சாய்ரட்' டீம். லைக்ஸ் குவியுது!


p58b.jpg

dot1.jpg  `இரண்டு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்காக 665 கோடி ரூபாய் சம்பளம்' என டீல் பேசப்பட்டும் நோ சொல்லிவிட்டார் டேனியல் க்ரெய்க். வெவ்வேறுவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, தன்னை நல்ல நடிகனாக நிலைநிறுத்திக் கொள்வதுதான் க்ரெய்க்கின் திட்டமாம். அப்போ அடுத்த பாண்ட்? ``அவெஞ்சர்ஸ்' படத்தில் லோகியாக வந்து ஹல்க்கிடம் செம மாத்து வாங்கும் டாம் ஹிட்டல்ஸ்டன்தான் அடுத்த பாண்ட்' எனக் கிசுகிசுக்கிறது ஹாலிவுட்! பாண்ட் சரியுதே!


p58c.jpg

dot1.jpg  கேன்ஸ் திரைப்பட விழாவில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை நந்திதா தாஸ். எழுத்தாளர் சதக் ஹசன் மன்டோவின் வாழ்க்கையைப் படமாக இயக்கப்போகிறார் இந்த வித்தியாச நடிகை. அந்தப் பாத்திரத்தில் நடிக்கப்போவது நவாஸுதீன் சித்திக்கி. ஆல் தி பெஸ்ட் அழகம்மா!


p58d.jpg

dot1.jpg  ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ டிம் குக், சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவரை, வெவ்வேறு நிறுவனங்களும் அரசியல் தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள். இந்த ஹெவி மீட்டிங்குகளுக்கு மத்தியில் டிம் குக்கை அப்படியே கொத்திக்கொண்டுபோய் தன் `மன்னத்' வீட்டில்வைத்து விருந்துகொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகர் ஷாரூக் கான். டிம் குக்கை பாலிவுட் சார்பில் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துக்கு, அமிதாப் பச்சன் குடும்பத்தினர், அமீர் கான், மாதுரி தீட்சித், ஏ.ஆர்.ரஹ்மான் என திரை நட்சத்திரக் கூட்டமே வந்திருந்தனர். குக்கிங் வித் குங்!


dot1.jpg  நம்ம ஊர் தல-தளபதி சண்டைபோல கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி-ரொனால்டோ... யார் சிறந்த வீரர் என்பதில்தான் எப்போதும் தகராறு. இதற்கு இடையே உலகின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் அலெக்ஸ் ஃபெர்குஸன் `மெஸ்ஸியைவிட ரொனால்டோதான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆடக்கூடியவர். ரொனால்டோவிடம் அனைத்துவிதமான திறமைகளும் உண்டு. அவரால், இரண்டு கால்களையும் கொண்டு பந்தை வலுவாக உதைக்க முடியும்; பந்தை தலையால் கட்டுப்படுத்த முடியும்; ஒரு சிங்கத்தின் தைரியம் அவரிடம் உள்ளது' எனப் புகழ, மெஸ்ஸி ரசிகர்கள் ஃபெர்குஸன் மேல் செம கடுப்பில் இருக்கின்றனர். சமாதானம்... சமாதானம்!


dot1.jpg  ஐஸ்வர்யா ராய்க்கும் - அபிஷேக் பச்சனுக்கும் கேமராக்கள் முன்னிலையில் நடந்த ஊடல்தான் ஆன்லைனில் வைரல் டாக். `சரப்ஜித்' பிரீமியர் ஷோவுக்கு ஐஸ்வர்யா ராயுடன் வந்த அபிஷேக், ஆரம்பத்தில் இருந்தே `ஏன்டா வந்தோம்' என்பதுபோலவே முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்.  மீடியா, ஐஸ்வர்யா ராயுடன் போஸ் கொடுக்குமாறு அபிஷேக்கை அழைக்க, வேண்டாவெறுப்பாக வந்தவர் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே ஐஸ்வர்யா ராயைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். சில விநாடிகள் என்னசெய்வது எனத் தெரியாமல் திகைத்த ஐஸ், கடைசியாக வணக்கம் போட்டுவிட்டு நகர்ந்தார். இந்த வீடியோ ஆன்லைனில் பரவி ட்ரெண்ட் ஆக, `உலக அழகிக்கே இப்படியா?' என சோஷியல் மீடியாவில் கமென்ட்டுகள் பறக்கின்றன. கணவன்-மனைவிக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா!


 

 

p58e.jpg

dot1.jpg  20-20 கிரிக்கெட்டில் இதுவரை சதம் அடிக்காத வீரராக இந்த வருட ஐ.பி.எல்-லைத் தொடங்கிய கோஹ்லி, ஒரே சீஸனில் நான்கு சதங்களை விளாசித் தீப்பிடிக்க வைத்திருக்கிறார். 20-20 வரலாற்றிலேயே ஒரு தொடரில் நான்கு சதங்கள் மட்டும் அல்ல... ஐ.பி.எல்-லில் அதிக ரன்கள் அடித்த சாதனையும் கோஹ்லி வசம். பஞ்சாப் அணிக்கு எதிராக 47 பந்துகளில் அடித்த சதம்தான் ஹலைட். ஃபீல்டிங்கின்போது காயம் ஏற்பட்டதால் கையில் ஏழு தையல்கள் போடப்பட்ட நிலையில் கோஹ்லி அடித்த இந்த சதம், மிரளவைத் திருக்கிறது.  நெருப்புடா! 


dot1.jpg  இந்த சம்மரில் ராஜஸ்தான் மாநிலத்தின் `பலோடி' என்ற ஊரில் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி, அந்த ஊரையே சுட்டுப் பொசுக்கியிருக் கிறது. `இதுதான் இந்தியாவில் பதிவான மிக அதிக வெப்பநிலை' என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்தியா முழுக்கவே மூன்றில் இருந்து ஐந்து டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இயற்கையின் பயங்கரம்!

vikatan

Link to comment
Share on other sites

13320414_1051063414942352_37158501517756

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ரவி சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராகவும் பிரபல நேர்முக வர்ணனையாளராகவும் இருக்கும் சாஸ்திரி முன்னாள் இந்திய அணியின் உப தலைவரும் கூட.
Happy Birthday Ravi Shastri

 

ரவி சாஸ்திரி

 
ravi_2870814f.jpg
 

முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான ரவி சாஸ்திரி (Ravi Shastri) பிறந்த தினம் இன்று (மே 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# பம்பாயில் பிறந்தவர் (1962). தந்தை ஒரு மருத்துவர். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயத்ரிதா சாஸ்திரி. மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிகளுக்கு இடையே நடந்த பல போட்டிகளில் வென்றுள்ளார்.

# ஆர். ஏ. போடார் கல்லூரியில் வணிகம் பயின்றார். கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

# முதலில் பந்து வீச்சாளராக ஆடத் தொடங்கி, படிப்படியாக பேட்ஸ்மேனாகவும் திறன் வாய்ந்த பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகப் பரிணமித்தார். நியுசிலாந்துக்கு எதிராக முதன் முதலாக ஆடிய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

# வலது கை ஆட்டக்காரரான இவர், இடது கை சுழல் பந்து வீச்சாளர். ஒரு பேட்ஸ்மேனாக ‘சப்பாத்தி அடி’ (பிளிக் ஆஃப் தி பேட்ஸ்) இவரது தனி அடையாளமாகத் திகழ்ந்தது.

# 1981-ல் இரானி கோப்பையில் 9-101 என்ற கணக்கில் அவர் விக்கெட்டுகளை சாய்ந்தது சுமார் 20 ஆண்டுகாலம் முறியடிக்கப்படாத சாதனையாக நீடித்தது. கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் சதமடித்தார்.

# இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் புகழ்பெற் றார். 1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டி களிலும் அபாரமாக ஆடினார். அதே ஆண்டு 25 வயதினருக்கு கீழ் உள்ள இந்திய அணிக்குத் தலைமை ஏற்றார். இவரது தலைமை யில் இங்கிலாந்தை இந்தியா, இன்னிங்க்ஸ் வெற்றி கண்டது.

# கட்டாக்கில் கவாஸ்கருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்து உலக சாதனை புரிந்தார். அப்போதிலிருந்து இந்த இணை, வெற்றி இணையாக பல போட்டிகளில் நீடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கிர்மானியுடன் இணைந்து எடுத்த 235 பார்ட்னர்ஷிப் ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இது இன்றளவும் ஏழாவது விக்கெட்டுக்கான தேசிய சாதனையாக நீடிக்கிறது.

# மேலும் முகம்மது அசாருதீனுடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்பாக 214 ரன்களும் கூட மற்றொரு சாதனையாகவே நீடிக்கிறது. 123 பந்துகளில் 113 நிமிடங்களில் அவுட்டாகாமல் இரட்டை சதமடித்தது, கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமான இரட்டை சதமாகப் பெயர்பெற்றது, ஒரே ஓவர்களில் ஆறு சிக்சர்கள் அடித்தது, ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ பட்டம் பெற் றது என இவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

# இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அடிக்கடி அவதிப்பட்ட இவர் 1994-ல் ஓய்வு பெற்றார். 1995-ல் தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகமானார். ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. ஆகியவற்றின் தற்காலிக அலுவல் பணிகளிலும், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுராகவும் பணியாற்றியுள்ளார்.

# கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப இயக்குநர் என்ற பொறுப்பும் வகித்துள்ளார். இன்று 55-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ரவி சாஸ்திரி, தற்போது வெற்றிகரமான தொலைக்காட்சி வர்ண னையாளராக இயங்கி வருகிறார்.

tamil.thehindu

 
Link to comment
Share on other sites

கைவிரல்கள் இல்லாத சிறுமி... ஆனால் விருது அழகான கையெழுத்துக்காக!



572cc0cc44695image.jpg

'தலையெழுத்து சரியில்லை', 'நேரம்  நல்லா இல்லை' என்று வழக்கமான வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிலர் விதி மீது பழிபோடுவார்கள். ஆனால் தடைகள் பல இருப்பினும் தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வெர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya Ellick), இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.

உடல் குறைபாட்டுடன்  பிறந்த அனையா எல்லிக்,  தன் மன உறுதியை விடாமல்,  ஜெயித்துக் காட்டி,  பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மணிக்கட்டுக்குக் கீழே விரல்கள் இல்லாமல் பிறந்த அனையா,  பிறரை எதிர்பார்க்காமல் தானாகவே தன் வேலைகளைச்  செய்துகொள்ளப் பழகிக் கொண்டார். இரண்டு கைகளுக்கு  நடுவே பேனாவை வைத்துக்கொண்டு எழுதப் பழகினார். கைகள் இரண்டும் நன்றாக இருப்பவர்களிலேயே, பலரது எழுத்துக்கள்  படிக்கவே முடியாத அளவுக்கு கிறுக்கல்களாக இருக்கும். ஆனால்  விரல்கள் இல்லாமல் எழுதிய அனையா எல்லிக்கின்  அழகான கையெழுத்திற்காக, 2016-ம் ஆண்டுக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது (Nicholas Maxim Special Award) கிடைத்துள்ளது அந்நாட்டவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

htwritingaward3er1605054x3992.jpgவெர்ஜீனியாவில் உள்ள 'க்ரீன்பேரியர் க்ரிஸ்டியன் அகாடமியில் (Greenbrier Christian Academy) முதல் கிரேடு படித்துவருகிறார் அனையா. அழகான கையெழுத்துப் போட்டியை Zaner-Bloser என்ற கல்வி நிறுவனம், உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு  இடையே, ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இந்த போட்டியில், முதல் கிரேடு தொடங்கி 8-ம் கிரேடு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில், சுமார் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அனையாவின் முத்து முத்தான கையெழுத்தைக் கண்ட நடுவர்கள், ''இரண்டு கைகளும் இருப்பவர்கள்கூட இவ்வளவு அழகாக எழுதமாட்டார்கள்" என பிரமித்துப்போனார்கள்.

இதுகுறித்து அனையாவின் பெற்றோர்கள், 'அனையா கைவிரல்கள் இல்லாமல் பிறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். கவலையோடு இருந்த நாங்கள், இவளது சுறுசுறுப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாவற்றையும்  உடனே கற்றுக்கொள்கிறாள்.  டிரெஸ் போட்டுக்கொள்வது, ஷூவுக்கு லேஸ் கட்டிக்கொள்வது என எல்லாவற்றையும்  தானாகவே செய்துகொண்டு பள்ளிக்கு ரெடி ஆகிவிடுகிறாள். பியானோ நன்றாக வாசிக்கிறாள். அழகான கையெழுத்துப் போட்டியில்  வெற்றி பெற்றதன் மூலம், முதல் பரிசாக 1,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. தற்போது உலம் முழுவதிலும் இருந்து, அனையாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன" என்கின்றனர் பெருமிதத்துடன்.


ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படித் தோன்றியது என கேட்டதற்கு, '' எனக்கு ரோல்மாடல் 30 வயது ஜெசிக்கா காக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கும்  இரண்டு கைகள் இல்லை.  ஆனாலும், தன்னுடைய விடா முயற்சியால் தற்போது விமானம், கார் ஓட்டுவது  என்று எல்லா வேலைகளையும் கால்களாலேயே செய்வதைக் கண்டேன். நானும் அவரைப் போல எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று  ஆர்வம் கொண்டேன். இதுவே என் வெற்றிக்குக் காரணம்'' என்கிறார்,  அனையா எல்லிக்.

vikatan

Link to comment
Share on other sites

13301539_1051062821609078_85595290610923

Happy Birthday Mr.Cricket !!
Mr.Cricket என்று பாராட்டிப் புகழப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் மைக் ஹஸியின் பிறந்தநாள்.
Happy Birthday Michael Hussey

Link to comment
Share on other sites

வாழ்வியல் தரிசனம்

article_1462419517-kjhljhop.jpgஎல்லா மனிதர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என நம்புவோமாக.

இதனை உணராமல், பலர், மற்றவர்களைக் கேலி பேசுதல் அறியாமையேயாகும்.

இன்றைய வாழ்க்கை ஒருவிதமாகவும் எதிர்காலம் மாற்றத்துக்குள்ளாவதும் உலக இயற்கையுமாகும். தற்போதைய வாழ்க்கையில் ஒருவன் நல்ல நிலையில் இல்லாமல் இருந்தாலும் கூட, அவனது எதிர்காலத்தில் செழிப்பானவனாக மாறிவிட முடியும்.

எனவே, எவரினதும் வாழ்க்கையின் முடிவு வரை எம்மால் அவர்கள் பற்றிய முழுமையான சரித்திர மாற்றத்தை, திறனை முடிவு செய்ய முடியாது.

சகலரினது வாழ்க்கையின் இறுதிப் பெறுபேறுகளை முடிவு செய்ய நாங்கள் யார், எல்லாவற்றையும் வல்ல இறைவனே அறிவான்.

Link to comment
Share on other sites

ஆடு மேய்த்த சிறுமி தற்போது கல்வியமைச்சர்

 

FL11.jpg

அநேக நாடுகளுக்கு இடையேயான தீவிரவாதம் தற்சமயம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை. அதிலும், வேறு நாட்டில் இருந்து குடியேறியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலைநாடுகளில், முக்கியமாக முஸ்லிம்களாக இருந்தால் அதிகளவில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.மொரோக்கோவில் பிறந்த நஜாத் பெல்காசெம், குடியேறியவர்களும் மதிப்புள்ளவர்கள்தான். அவர்களை அலட்சியப்படுத்துவது தவறு என நிரூபித்துள்ளார்.

மொரோக்கோவில் 7 பேரில் இரண்டாவது மகளாக பிறந்தார் நஜாட். இவரது தந்தை ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி . இவர் 1982ஆம் ஆண்டு ஃப்ரான்ஸிற்குக் குடிபெயர்ந்தார்.அதற்கு முன் தன் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்க்கும் சிறுமியாக இருந்த இவர் குடிபெயர்ந்த பின்  Paris Institute of Political Studiesல் படித்து 2002ஆம் ஆண்டு பட்டதாரியானார். பிறகு, அதே ஆண்டு French Socialist Partyல் இணைந்தார். முதல்முறையாக 2004-ல் ரோனே ஆல்ப்ஸ் பிரதேச சபையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

 

FL21.jpg

2007ல் Segolene Royal என்னும் முன்னாள் ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளராக இருந்தார். பிறகு, 2012ல் ஹோலண்ட் என்னும் ஜனாதிபதிக்கு செய்தி தொடர்பாளராக இருந்தார். அந்த ஆண்டு ஹோலண்ட் பதவி ஏற்றதும், நஜாத் பெண்கள் உரிமைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். மேல்ஜ்ம், அதே ஆண்டு செப்டம்பரில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக போராட்டம் செய்யும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

2014ல் பெண்கள் உரிமை, நகர மேம்பாடு மற்றும் இளைஞர்கள் விளையாட்டுத்துறை ஆகியவற்றின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், தேசிய கல்வி, உயர்கல்வி மற்றும் ஆய்வின் அமைச்சர் பெனியாட் ஹேமோனை தோற்கடித்து பதவிக்கு வந்தார். இவர்தான் ஃப்ரான்ஸில் அரசு அலுவலகத்தில் பணியாற்றும் முதல் இளைய முஸ்லிம் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.தற்போது ஃப்ரான்ஸின் கல்வி அமைச்சராக வளர்ந்திருக்கிறார் நஜாட்.

மனதில் தீராக்காதலுடன் செய்யும் எந்தவொரு வேலையும் நம்மை மேன்மையடையச் செய்யும். சாதிக்க மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவை தேவையில்லை. மனதில் உறுதி இருந்தால் போதும் என நிரூபித்துள்ளார்.

vikatan

Link to comment
Share on other sites

காமராஜர், தாமஸ் ஆல்வா எடிசன், ஏ.ஆர். ரஹ்மான், விராட் கோலி.... வெற்றிக் கல்வி கற்ற நாயகர்கள்! #BELOWMARKSHEROES

kamarajar600.jpg


டித்துப் பட்டம் பெறாவிட்டாலும் வாழ்க்கையில் ஜொலிக்க முடியும், சாதிக்க முடியும், வெற்றிபெற முடியும்  என்பதற்கு முன்னுதாரணங்களாக திகழும் சாதனை நாயகர்கள் குறித்த பதிவு இது...

இதைப்போன்றே  படித்தது எட்டாம் வகுப்பு... ஆண்டு வருமானம் 290 கோடி...வருமானத்தைத் தொட்ட படிக்காத மேதைகளும் இருக்கிறார்கள்.

காமராசர்:

ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர், 1903-ல் விருதுநகரில் பிறந்தார். தனது ஆறு வயதிலேயே தந்தையை இழந்த காமராசர், பள்ளிப் படிப்பைத்  தொடர முடியாமல், துணிக்கடையில் வேலை பார்த்துவந்தார். அப்போது  டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜோசப் போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பெரிய அளவில் பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லை என்றாலும் கூட காமராசர்,  தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி, சுமார் 23 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார்.  மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர்  படிக்காத மேதை, பெருந்தலைவர், கல்வித் தந்தை என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டார்.
 

kannadasan2.jpg

கண்ணதாசன்:


கவியரசர் கண்ணதாசன், காரைக்குடி அருகில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர்  உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் படித்தார். 15-வது வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது இலக்கிய ஆளுமை சாகா வரம் பெற்றவை. 4,000 -க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000 -க்கும் மேற்பட்ட திரைப்பாட பாடல்கள், கட்டுரைகள், நாவல்கள், சிறு காப்பியங்களைப் படைத்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரும் படிக்காத மேதைதான்.
 

tendulkar.jpg

சச்சின் டெண்டுல்கர்:


'சாதனைகளின் சிகரம்' என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்,  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம்கொண்டதால்,  படிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை. அதனால், 10-ம் வகுப்பில் தேர்ச்சிபெறவில்லை.மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி, கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.  16 வயதில், இந்தியாவின் சார்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வானார் . படிப்பில் தோல்வி அடைந்திருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டில்  பல வெற்றிகளைக் குவித்து,  உலக நாயகனாக வலம் வந்தார்.
 

a-r-rahman.jpg

ஏ.ஆர்.ரஹ்மான்:


'இசைப் புயல்', 'ஆஸ்கர் நாயகன்' என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு,  முழு நேரம்  இசையைக் கற்க ஆரம்பித்தார். எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம்கொண்ட ரஹ்மானுக்கு, கணினிப் பொறியியல் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் டிப்ளமோ பட்டமும் வாங்கினார். பெரிய அளவில் பட்டப் படிப்பு எதுவும்  இல்லாவிட்டாலும், இசையால் உலகளவில் பிரபலமானார், ஏ.ஆர்.ரஹ்மான். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளவர டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன.

kholi.jpg

விராட் கோலி


சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக இருப்பவர் விராட் கோலி. டெல்லியில்  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். படிக்கும்போது, முழு நேரமும் கிரிக்கெட் மீதே கவனம் செலுத்தியதால், 12-ம் வகுப்பு படிப்பை முடித்ததும், படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். படிப்பில் சுமாரான விராட் கோலி, 2008-ல் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாகத் தேர்வாகி, கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்தார்.
 

marykom.jpg

மேரிகோம்:


மணிப்பூர் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். கூலி வேலை செய்துவந்த பெற்றோருடன் வேலைக்குச் செல்வார். பள்ளிப் படிப்பில் சுமாராக  இருந்த மேரிகோம், முதலில் 10-ம் வகுப்பில் தோல்வியடைந்தார்.  தன் விடா முயற்சியால், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்து, ஒலிம்பிக் பதக்கத்தை வென்று, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
 

edison.jpg

தாமஸ் ஆல்வா எடிசன்:


கண்டுபிடிப்புகளின் நாயகன், உலகுக்கு ஒளி தந்த தெய்வம் தாமஸ் ஆல்வா எடிசன். அமெரிக்காவில் பிறந்தவர். முதல் வகுப்பு படிக்கும்போதே, 'மூளைக் கோளாறு உள்ளவன்' என்று ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர். பிறகு, தன் தாயிடம் படிப்பு  கற்றார்.  தான் பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. ஏழு வயதில் ரிச்சர்டு பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்களை  11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். 12-ம் வயதில், பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார். இவர், தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1,300. இதில் மின்சார பல்பு, எலெக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலெக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வு, தொலைபேசி, ஸ்பீக்கர், கிராமபோன், மூவி கேமரா ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. அறிவியல், கணிதப் பாடங்கள் என்று எதையும் முறையாகக் கற்காமலேயே அறிவியலாளராக ஜொலித்தார் தாமஸ் ஆல்வா எடிசன்.
 

writebro.jpg

ரைட் சகோதரர்கள்:


'படைப்புக்குத் தேவை ஆக்க உணர்வு ஒரு சதவிகிதம், விடா முயற்சி 99 சதவிகிதம்' என,  உலக  மேதை தாமஸ் ஆல்வா எடிஸன் கூறுகிறார். பட்டம் பெறாத எடிசனைப் போன்ற படைப்பாளிகளின் அணியில் இடம்பெற்றவர்கள்தான் ஆர்வில், வில்பர் ரைட் சகோதரர்கள். தங்களது விடா முயற்சியால் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்தனர். பல நூற்றாண்டுகளாக கண்டுவந்த மனிதனின் பறக்கும் கனவை , நனவாக்கிய இந்த ரைட் சகோதரர்களும் பள்ளிப் படிப்பில் தோல்வி அடைந்தவர்கள்தான்.
 

stevejobs.jpg

ஸ்டீவ் ஜாப்ஸ்:


அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், படிப்பில் ஆர்வம் இல்லாதவர். கல்லூரியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே, இந்தப் படிப்பு பயன் தராது என கல்லூரிக்கு குட்பை சொன்னவர். இவர்தான் பின்னாட்களில் ஆப்பிள் என்கிற நிறுவனத்தை உருவாக்கினார். கணினி மற்றும் மொபைல் சாதன உற்பத்தியில் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது இந்த ஆப்பிள் நிறுவனம்.

 

dell.jpg

மைக்கேல் டெல்:


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த மைக்கேல் டெல், சிறுவயதில் இருந்தே தொழில்நுட்பம் மற்றும் gadgets-ல் ஆர்வமாக இருந்தார். இவரை மருத்துவராக்க விரும்பி, கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், முதலாம் ஆண்டிலேயே கல்லூரிக்குப் போகாமல் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார். அதுவே தற்போது, 'டெல் இன்க்' என்ற பெயரில் பிரமாண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. உலகில் மிகப் பெரிய கணினி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக , இந்த டெல் கம்பெனியை உருவாக்கிய மைக்கேல் டெல்,  கல்லூரிப் படிப்பை விரும்பாதவர்.

vikatan

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

ஹீரோயின்களின் பாதங்களை பூமியில் பதியவிடாமல், அரை அடி உயரத்தில் தேவதைகளாக்குபவை ஹை ஹீல்ஸ். ஆனால், செருப்புகூட இல்லாமல் வெறும் கால்களுடன் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடந்து அதிரவைத்தார் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ். `நடிகைகள் ஹை ஹீல்ஸ் அணிந்துதான் ரெட் கார்ப்பெட்டில் நடக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜூலியா இப்படி வந்தார்' என மீடியா சொல்ல, ‘கணுக்காலில் சுளுக்குப்பா... அதான்' என சிம்பிளாக முடித்துவிட்டார் பிரெட்டி வுமன்!


p22b.jpg

`அஸாருதினின் முழு அனுமதியுடன் எடுக்கப்பட்ட `அஸார்' படத்தில் பொய்கள் அதிகம்' என டென்ஷனில் எகிறுகிறது கிரிக்கெட் ரசிகர் கூட்டம். `அஸாருதின், மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டார்' என முதன்முதலில் சொன்னவர் தென்ஆப்பிரிக்க கேப்டன் ஹான்சி க்ரோனியே. ஆனால், படத்தில் புக்கி ஒருவர் சொல்வதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. மேட்ச் ஃபிக்ஸிங் நடந்ததாகச் சொல்லப்படும் மேட்சில், நடுவரின் தவறான தீர்ப்பால் அஸாருதின் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆவதுபோல காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில், அந்த மேட்ச் ஃபிக்ஸிங் ஆட்டத்தில் அஸாருதின் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேலும், இந்தப் போட்டிகளின்போது உண்மையிலேயே இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது சச்சின் டெண்டுல்கர். ஆனால், படத்தில் அஸாருதின் கேப்டனாகக் காட்டப்பட்டிருக்கிறார் எனக் கடுப்பாகிறார்கள் ரசிகர்கள்.


p22c.jpg

மிழ், தெலுங்கு சினிமாவில் யார் ஹிட் ஹாட் ஹீரோயின் என்பதில் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும்தான் போட்டி. சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நயன்தாரா நடிக்க இருந்த நிலையில், அந்த வாய்ப்பு அப்படியே இப்போது அனுஷ்காவுக்குத் திரும்பியிருக்கிறது. நயன்தாரா, தெலுங்கில் `பாபா பங்காரம்', தமிழில் `இருமுகன்', `கஷ்மோரா' என பிஸியாக இருக்க, அனுஷ்காவோ `பாகுபலி -2', `பக்மதி' என பிஸியாகப் பறக்கிறார். இருவருமே இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள்!


p22d.jpg

பாலிவுட்டின் மோசமான படம், மோசமான நடிகர் - நடிகைகளுக்கு வழங்கப்படும் விருது ‘கன்டா அவார்ட்ஸ்’. 2015-ம் ஆண்டின் மிக மோசமான படமாக சல்மான் கான் நடித்த ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’வும், மோசமான நடிகராக ‘தில்வாலே’ படத்தில் நடித்த ஷாரூக் கானும், மோசமான நடிகையாக ‘ப்ரேம் ரத்தன் தன் பாயோ’ படத்தில் நடித்த சோனம் கபூரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மோசமான நடிகர் சிறப்பு விருது என `பாம்பே வெல்வட்' படத்தில் நடித்த கரண் ஜோகருக்கு!


p22e.jpg

பிரபல பாடகர் சோனு நிகாமின் `பிச்சைக்காரன்' வேடம், சமீபத்திய ஆன்லைன் வைரல். யூ டியூப் சேனல் ஒன்றின் வீடியோவுக்காக மும்பையின் ஜுஹு-வில் பிச்சைக்காரர்போல மேக்கப் போட்டு, சோனு நிகாம் ஹர்மோனியத்துடன் தெருவில் அமர்ந்து பாட ஆரம்பித்தார். `ஒரு பிச்சைக்காரர் இவ்வளவு சுத்தமாகப் பாடுகிறாரே!' எனக் கூட்டம் கூடிவிட்டது. கடைசி வரை அவர் சோனு நிகாம் என யாருக்கும் தெரியவில்லை. `ஒருநாள் நான் நானாக இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இந்த வேடம். ஓர் இளைஞன் என் கையைப் பிடித்து `அங்கிள், நீங்க காலையில சாப்டீங்களா?' எனக் கேட்டதோடு, என் கையில் 12 ரூபாயைத் திணித்ததை என்னால் மறக்கவே முடியாது.  என நெகிழ்கிறார்.


p22f.jpg

நெக்லஸ் டால் தமன்னா! அதுவும் ‘சோக்கர்’ வகை நெக்லஸ்கள் என்றால் பேபிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘சின்ன வயதில் இருந்தே எனக்கு நெக்லஸ் மீது பைத்தியம். ஆனால், இடையில் நெக்லஸ்களை பெண்கள் விரும்பி அணியாதது வருத்தமாக இருந்தது. இப்போது மீண்டும் நெக்லஸ் ட்ரெண்ட் திரும்புவதில் ஐ'ம் ஹேப்பி’ என நெக்கைக் காட்டிச் சிரிக்கிறார் தமன்னா!

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்   ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு   உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................
    • டீலின் டீடெய்ல்ஸ், என்ன விலை, விமானநிலையம் எப்படி பாவிக்கப்படும் என்ற டீடெயில் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவோடு ரஸ்யாவையும் சேர்த்து இழுத்தது, கட்ட கடன் கொடுத்த சீனாவை திருப்தி செய்யவாக இருக்க கூடும்.
    • அது என்ன‌ என்றால் பெரிய‌வ‌ரே யாழில் இருக்கும் வாத்தியார் என‌க்கு த‌மிழை ஒழுங்காய் தான் சொல்லி தந்த‌வ‌ர்  வாத்தியார் த‌மிழை சொல்லி த‌ரும் போது என்ர‌ நினைவெல்லாம் ப‌ழைய‌ காத‌லின்ட‌ நினைவாக‌ இருந்த‌ ப‌டியால் , வாத்தியார் சொல்லித் தந்ததை நினைவில் வைத்திருக்கவில்லை இதைப் பார்த்த வாத்தியார் இனிஎன்னை கண்காணிப்பார் ஆன‌ ப‌டியால் இனி தமிழில் எழுதுவதில் முதிர்ச்சி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது😁..................................... @வாத்தியார்
    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.