Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

மே 2: ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே பிறந்ததின சிறப்பு பகிர்வு!

 

சத்யஜித் ரே இந்திய சினிமாவின் போக்கை மாற்றிய இணையற்ற திரை நாயகன். எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் இவர். மொத்தம் வாழ்நாளில் எடுத்ததே முப்பத்தி ஆறு படங்கள் தான். ஆனால், அவர் இந்திய சினிமாவை மடைமாற்றியவர். அப்பா இளம் வயதிலேயே தவறி விட அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை கழிந்தது அவருக்கு.

தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து ஓவியம் கற்றுத்தேறிய பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு உண்டானது .அங்கே தாகூரிடம் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற போனார்; ஒரு படபடக்கும் தாளில் ஒரு கவிதை எழுதி தந்து இதைப் பெரியவன் ஆனதும் படி என்று கொடுத்து விட்டு போய் விட்டார். இவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் மாதம் எண்பது ரூபாய்ச் சேர்ந்தார். அங்கே நன்றாகப் போய்க்கொண்டு இருந்தாலும் அடிக்கடி ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் சச்சரவு உண்டானது, கூடவே வாடிக்கையாளர்களின் ரசிப்புத்தன்மை வெறுப்பு உண்டு செய்ய வெளியேறினார் மனிதர்.

sathiajith.jpg



புத்தக நிறுவனம் ஒன்றில் சேர்ந்து அட்டைப்பட ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலுக்குக் கூட ஓவியம் வரைந்திருக்கிறார்.

பின் ழான் ரீனோர் எனும் பிரெஞ்சு திரைப்பட இயக்குனரை பார்த்ததும், பைசைக்கிள் தீவ்ஸ் படமும் அவரைப் படம் எடுக்கு உந்தி தள்ளியது. தாகூர் கொடுத்த கவிதை தாளை பிரித்துப் பார்த்தார்;

“உலகம் முழுக்க
எத்தனையோ நதிகள் நீர்நிலைகளுக்கு
சென்று இருக்கிறேன் ;
இறைவா
ஆனால்
என் வீட்டின்
பின்புறம் இருந்த சிறிய புல்லின்
நுனியில் தவழ்ந்து சிரிக்கும்
பனித்துளியை கவனிக்க
தவறி விட்டேன்"
எனும் வரிகள் அவரை உலுக்கின.

ஆனால் தன் முதல் படத்தை வங்கத்தின் தலை சிறந்த நூலான பதேர் பாஞ்சாலியை படமாக்க முடிவு செய்தார்.

மூன்று வருட போராட்டம்; நிதி இல்லை. மனைவியின் நகைகளை அடமானம் வைத்தார். கொஞ்சம் பகுதிகள் எடுத்த பொழுது படம் நின்று போனது; அரசிடம் படத்துக்கு நிதி கேட்டார் முதல்வர் பி சி ராய் அதிகாரிகளைப் படத்தைப் பார்க்க சொன்னார்.

"என்ன படம் இது தேறாது!" என்று விட்டனர். நேரு வரை போய் அரசாங்கத்துக்கு படத்தின் உரிமையைத் தாரைவார்த்து படமெடுக்க நிதி பெற்றார். படம் வெளிவந்த பொழுது தான் அதன் மகத்துவம் புரிந்தது .தேசிய விருது கிடைத்தது உலகம் முழுக்க மிகப்பெரும் கவனம் பெற்றது .படத்தைத் திட்டி நியூ யார்க் டைம்ஸ் எழுதியும் அமெரிக்காவில் படம் ஹவுஸ் புல்லாக ஓடியது.

பெரிய நகைமுரண் படத்தைப் பார்த்து விட்டு அந்த நாவலை எழுதிய ஆசிரியர், "என்னய்யா இப்படி சொதப்பி இருக்கே!" என்றாராம். அபராஜிதோ தங்க சிங்கம் விருதை பெற்றுத்தந்தது.

அவர் குழந்தைகளுக்காக கதைகள் எழுதிய அனுபவம் உள்ளவர். பெலூடா எனும் கதாபாத்திரம் மறக்கவே முடியாதது; அறிவியியல் புனை கதைகளும் எழுதியவர். படமெடுத்து பொருளீட்ட கூடிய தருணத்தில் திரும்ப வந்து சந்தேஷ் எனும் தாத்தா உண்டாக்கிய பத்திரிக்கையைப் புதுப்பித்து எண்ணற்ற கதைகள் எழுதினார்.

வங்கத்தின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிப்பதாக அவரின் படங்கள் இருந்தன .வறுமையைப் படமாக்கி காசு பார்க்கிறார் என விமர்சித்தார்கள். சிக்கிம் அரச பரம்பரை பற்றி இவர் எடுத்த படத்தைப் போடவே விடாமல் அரசு தடை செய்தது அவர், மரணத்துக்குப் பல ஆண்டுகள் கழித்து அப்படம் வந்த பொழுது பார்த்தால் சிக்கிமின் வனப்பை பற்றியே படம் பேசி இருக்கிறது எனத் தெரிந்தது; படத்தைப் பார்க்காமலே தடை செய்திருக்கிறார்கள்.

sathiya4001.jpg சாருலதா எனும் அவரின் பெண்மொழி பேசும் படத்தில் பைனாகுலரில் கணவன் வருவதை பெண் பார்த்து விட்டு கதவை திறக்கிற ஷாட்டைப் பதினைந்து நிமிடம் வைத்திருப்பார் ."ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா?: என ஒருவர் கேட்க , "ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? "என்றார்

பெரும்பாலும் நல்ல நாவல்களையே படமாக்கினார். நகர வாழ்வை வெறுத்து காடு புகும் நண்பர்கள் பற்றி ஒரு படம், மகளை வேசியாக்கி விடும் அப்பா, எளிய பெண்ணைத் தேவியாக்கி விடும் மக்கள், விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகனுக்குப் பொது இடத்திலஏற்படும் அனுபவங்கள், அறிவுத்துணையாகத் தன் கொழுந்தனை பார்க்கும் பெண் என அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருக்கள் தனித்துவம் வாய்ந்தவை.

ஏலியன் என்கிற கதை ஸ்க்ரிப்டை அமெரிக்க நிறுவனத்தோடு சேர்ந்து எடுக்க முயன்று முடியாமல் நின்று போனது; அதே பாணியில் ஈ டி படம் வந்த பொழுது அதைத் தன் கதையின் திருட்டு என ரே சொன்னார்.

அவருக்குப் பிரான்ஸ் அரசு விருது வாங்கிக் கவுரவித்தது. உலகத் திரையுலக பிதாமகர் அகிரோ குரோசோவா இப்படிச் சொல்கிறார், "ரேவின் படங்களை பார்க்காதவர்கள் வானில் சூரியனையும்,சந்திரனையும் காணாதவர்கள்.”

எந்த அளவுக்கு அவருக்குத் திரைத்துறை மீது காதல் இருந்தது எனச் சொல்லி இந்த கட்டுரையை முடிக்கலாம். GhareBaire எனும் தாகூரின் கதையின் படமாக்கி கொண்டிருந்த இரண்டு முறை மாரடைப்பு வந்தது மனிதருக்க. கொஞ்ச நாளில் மீண்டு வந்தவர் எடுத்த ஒய்வு என்ன தெரியுமா? ஓயாமல் மூன்று படங்கள் இயக்கியது.

ஸ்ட்ரெச்சர் ஆம்புலனஸ் தயாராக இருக்கும் மனிதர் படம் எடுத்து கொண்டிருப்பார். மரணப்படுக்கையில் இருந்த பொழுது வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டது. அவரால் போக முடியாததால் ஆஸ்கர் அவர் படுக்கைக்கே வந்து சேர்ந்தது. ரே உலகை இந்தியாவை நோக்கி திருப்பிய துணிச்சல்காரர்.

vikatan

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
வரலாற்றில் இன்று: மே 02
 

article_1430804021-binladen.jpg1519: இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி உயிரிழந்தார்.(பிறப்பு - 1452)

1536:  இங்கிலாந்தின் 8 ஆம் ஹென்றி மன்னனின் இரண்டாவது மனைவியும் அவருக்குப்பின் 3 வருடகாலம் ராணியாக ஆட்சி புரிந்தவருமான ஆன் போலெய்ன் தகாத உறவு, மற்றும் ராஜதுரோக குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1933: ஜேர்மனியில் தொழிற்சங்கங்களை அடோல்வ் ஹிட்லர் தடைசெய்தார்.

1945: ஜேர்மன் தலைநகர் பேர்லின் கைப்பற்றப்பட்டாக சோவியத் யூனியன் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

1969: குயின் எலிஸபெத்2 கப்பல் தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது.

1997: பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் டொனி பிளேயர் தலைமையிலான தொழிற்கட்சி பெரு வெற்றி பெற்றது.

1998: ஐரோப்பிய மத்திய வங்கி உருவாக்கப்பட்டது.

2002: கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

2004: நைஜீரியாவில் யேல்வா நகரில் நடந்த கலவரத்தில் 630 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

2006: குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2008: மியன்மாரில் வீசிய சூறாவளியினால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.

2011: அல் கயீடா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்கப்படையினரின் தாக்குதலில் பலி.

tamilmirror.lk
Link to comment
Share on other sites

ஒபாமாவின் 'தெறி' மைக் டிராப் மொமென்ட்!

அமெரிக்க அதிபர் ஒபாமா தன் இறுதி பத்திரிகையாளர்கள் விருந்தில் செய்த 'மைக் ட்ராப்' செம்ம வைரலாக விட்டது. பொதுவாக தாம் பேசியது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்பதை உணர்த்தும் நவநாகரிக 'மூவ்'தான் இந்த மைக் ட்ராப். 'Obama Out' என்று மைக் ட்ராப் செய்யவும், கபாலி ரேஞ்சுக்கு மெர்சலாகிறார்கள் அமெரிக்கர்கள்! ஸ்டைல்தான்!

 

Link to comment
Share on other sites

13133363_10154577303414578_6980241972624

13147763_1035663756482318_22653142619301

சர்வதேசக் கால்பந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமின் பிறந்தநாள்.

இங்கிலாந்து அணியில் மட்டுமன்றி, மன்செஸ்டர் யுனைட்டட், ரியல் மாட்ரிட் போன்ற பல பிரபல கழகங்களுக்கும் இவர் ஆடி உலகம் முழுதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார் பெக்காம்.

Happy Birthday David Beckham

Link to comment
Share on other sites

லண்டனில் திறக்கப்படவுள்ள நிர்வாண உணவு விடுதியில் உணவு உட்கொள்வதற்கு 30,000 பேர் காத்திருப்பு
 

லண்­டனில் திறக்­கப்­ப­ட­வுள்ள நிர்­வாண உணவு விடு­தி­யொன்றில் உணவு உட்­கொள்­வ­தற்கு சுமார் 30,000 பேர் காத்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

16366hotel.jpg

 

The Bunyadi எனும் இந்த உணவு விடுதி எதிர்­வரும் ஜூன் மாதம் லண்­டனில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. 3 மாத காலத்­துக்கு இவ்­ வி­டுதி திறக்­கப்­பட்­டி­ருக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இவ் ­வி­டு­தியில் உணவு உட்­கொள்ள விரும்பும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. கடந்த வார இறு­தி­வரை சுமார் 30,000 பேர் இவ் ­வி­டு­தியில் உணவு உட்­கொள்­வ­தற்­காக பதி­வு­செய்­துள்­ளனர் என பி.பி.சி. தெரி­வித்­துள்­ளது. 

 

இவ்­ வி­டு­திக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்கள் ஆடை­ மாற்றும் அறை­யொன்­றுக்கு அனுப்­பப்­ப­டுவர். அவர்கள் தமது ஆடைகள், மற்றும் ஏனைய உடை­மை­களை லொக்கர் ஒன்றில் வைத்து பூட்டிவிட வேண்டும்.

 

விடுதி நிர்­வா­கத்தால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் ஒரு கவுணை (மேலங்கி) அவர்கள் அணிந்­து­கொள்ள வேண்டும். அதன்பின் மூங்கில் மறைப்­பு­களைக் கொண்ட சிறு பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்ட மண்­ட­பமொன்­றுக்கு அவர்கள் உணவு உட்­கொள்ள அனுப்­பப்­ப­டுவர்.

 

அங்கு வாடிக்­கை­யா­ளர்கள் விரும்­பினால் மேலங்­கியை அணிந்த நிலையில் உணவு உட்­கொள்­ளலாம். அல்­லது அதையும் கழற்றி வைத்­து­வி­டலாம் எனத் ­தெ­ரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 

அங்கு மெழு­கு­வர்த்தி வெளிச்சம் மாத்­தி­ரமே இருக்கும் எனவும் உணவு சமைப்­ப­தற்கு, பரி­மா­று­வ­தற்கும் களிமண் பாத்­தி­ரங்கள், அகப்­பைகள் போன்ற பொருட்­களே பயன்­ப­டுத்­தப்­படும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 

மின்­சாரம், இரா­ச­ய­னங்கள், எரி­வாயு, ஆடைகள் போன்­றவை இங்கு பயன்­ப­டுத்­தப்­பட மாட்­டாது என இவ் ­வி­டுதி உரி­மை­யாளர் செப் லியால் தெரி­வித்­துள்ளார். தொலை­பே­சிகள், கடிகாரங்கள் போன்ற பொருட்களும் தடை செய்யப்பட்டிருக்கும்.

 

எவ்வாறெனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக சமையல் கலைஞர்கள் நிர்வாணமாக இருக்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

metronews.lk
Link to comment
Share on other sites

13113042_1035664369815590_49426711968699

 
கிரிக்கெட் துடுப்பாட்ட சாதனை இமயம் லாராவுக்கு பிறந்தநாள்

உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பிரையன் லாராவின் பிறந்தநாள் இன்று..

டெஸ்ட் மற்றும் முதல் தரப்போட்டிகளில் தனி நபர் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கைகளைத் தன் வசம் வைத்துள்ள கரீபியன் துடுப்பாட்ட இளவரசர் லாராவுக்கு முதல்வன் சூரியனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Brian Charles Lara
Link to comment
Share on other sites

மிதக்கலாம்....லாம்...ம்!

 

p58a.jpg

காலையில எழுந்திரிச்சதுமே கடலைப் பார்க்கிற மாதிரி வீட்டை வாங்கணும்னு பல பேருக்குக் கனவு இருக்கும். எதுக்குச் சிரமம்? இப்போவெல்லாம் கல்லைக்கட்டி கடல்ல இறக்குற மாதிரி உங்க வீட்டையே கடல்ல இறக்கிவிட்டு மிதக்கலாம். இதோ, வந்துவிட்டது ‘யுஎஃப்ஓ வீடுகள்!’.

p58b.jpg

இத்தாலியைச் சேர்ந்த ‘ஜெட் கேப்ஸ்யூல்’ நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த வீடுகள், பறக்கும் தட்டுகளைப் போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்தப் பெயர். ஆனால், வானத்தில் வட்டமிட முடியாது. கடல் அழகை ரசித்துக்கொண்டே மெள்ள மெள்ள மிதந்து வரலாம். ஏனெனில், இது மணிக்கு 6.5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் வசதியைக் கொண்டது. கடலில் வாழ்ந்துகொண்டே, உலகைச் சுற்றி வருவதுதான் யுஎஃப்ஓ வீடுகளை உருவாக்கியதன் நோக்கம்! கிட்டத்தட்ட 400 சதுர அடி அகலத்தில் வியாழன் கிரக வடிவத்தில் இருக்கும் இந்த வீடுகளில் வேலைகளைக் கவனிக்க ஒரு இடம், குளிக்க, சமைக்க ஒரு இடம். கடலை ரசிக்கவும் ஒரு இடம் என எல்லாம் இருக்கு. நல்லாவும் இருக்கு!

p58c.jpg

அதிகபட்சம் மூன்று பேர் வசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை சோலார் பேனல் மூலமாக, சூரியனிடம் இருந்தும் பெறலாம். காற்றாலைகள் மூலம் காற்று, கடல் தண்ணீரில் இருந்தும் பெறலாம். தவிர கடல்நீரை, மழைநீரைக் குடிநீராக மாற்றும் வசதி, காய்கறிகளைப் பயிரிடத் தேவையான தோட்டம்... என நடுக்கடலில் உயிர்வாழத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்கின்றன. காலையில் எழுந்திரிச்சதும் ‘சைக்கிளிங்’ போகணும்னு ஆசைப்பட்டாலும், அதுக்கு இருக்கு தனி ரோடு! குறைவான இடம், நிறைவான வசதிகள் என்ற ஐடியாவோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் தோராயமான மதிப்பு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள்.

p58d.jpg

அதாவது, ஒரு கோடியே முப்பத்து மூணு லட்சத்துக்குச் சொச்சம் ரூபாய்!

vikatan

Link to comment
Share on other sites

மே 3: உலக பத்திரிகை சுதந்திர தினம்... இன்று

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும், பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

13138880_1128102000581922_48497875801531

 

Link to comment
Share on other sites

கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகில் பயணம்.!

The makeshift boat, which is believed to be the first of its kind, was designed by Harry Dwyer and Charlie Waller

கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகொன்றைப் பயன்படுத்தி நதியொன்றில் பயணம் செய்து பிரித்தானியர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

ஹரி டவியர் மற்றும் சார்ளி வோலர் ஆகிய மேற்படி இருவரும் தொழிற்சாலைகளிலிருந்து வீசப்பட்ட கடதாசி பொருட்களை மீள் சுழற்சிக்குட்படுத்தி இந்தப் படகை வடிவமைத்துள்ளனர்.

The houseboat has been named This Way Up and took the designers just one week to create from cardboard

'திஸ் வே அப்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படகை ஒரு வாரத்தை செலவிட்டு ஹரியும் சார்ளியும் வடிவமைத்துள்ளனர்.

இந்தப் படகானது தேம்ஸ் நதியில் மூழ்காது வெற்றிகரமாக பயணித்துள்ளது. அந்தப் படகு தண்ணீரில் மூழ்குவதைத் தடுக்க அதன் மேற் பகுதியில் நீர் கசியாத மெழுகு கடதாசி ஒட்டப்பட்டிருந்தது.

Mr Dwyer and Mr Waller built the sea-worthy houseboat with recycled material thrown away by businesses

மேற்படி படகில் அதனை உருவாக்கிய இரு சாதனையாளர்களும் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

virakesari

Link to comment
Share on other sites

 

வரலாற்றில் இன்று....

மே - 03

 

716_38611905_srilanka2_238.jpg1481 : ஐரோப்­பாவின் ரொட்ஸ் தீவில் ஏற்­பட்ட பூகம்பம் கார­ண­மாக சுமார் 30,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1788 : முதல் மாலை நேர நாளி­த­ழான “த ஸ்டார்” லண்­ட­னி­லி­ருந்து வெளி­வர ஆரம்­பித்­தது.

 

1802 : அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் டி.சி. நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1837 : ஏதென்ஸ் பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1860 : சுவீடன் மன்­ன­ராக நான்காம் சார்ள்ஸ் முடி­சூ­டப்­பட்டார்.

 

1913 : இந்­தி­யாவின் முதல் முழு நீள திரைப்­ப­ட­மான ராஜா ஹரிச்­சந்­திரா வெளி­யா­கி­யது.

 

1921 : அயர்­லாந்து தீவு வட அயர்­லாந்து, தென் அயர்­லாந்து என இரண்­டாக பிரிக்­கப்­பட்­டது. தற்­போது தென் அயர்­லாந்து சுதந்­திர நாடா­கவும் வட அயர்­லாந்து பிரிட்­டனின் ஒரு பிராந்­தி­ய­மா­கவும் உள்­ளன.

 

1939 : நேதாஜி சுபாஸ் சந்­தி­ர­போஸினால் அகில  இந்­தியா போவார்ட் பிளொக் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1942 : விமா­னந்­தாங்கி கப்­ப­லி­லி­ருந்து முதல் விமானப் போர் அமெ­ரிக்­கா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் நடை­பெற்­றது.

 

1945 : லட்­சுமி காந்தன் கொலை வழக்கில், தமிழ் திரைப்­பட உலகில் அன்­றைய முடி­சூடா மன்­ன­னாகத் திகழ்ந்த எம்.கே.தியா­க­ராஜ பாக­வ­த­ருக்கும் பிர­பல நகைச்­சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்­ண­னுக்கும் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

716India_TN.jpg1947 : ஜப்­பானில் 2 ஆம் உலக யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான அர­சி­ய­ல­மைப்பு அமு­லுக்கு வந்­தது.

 

1969 : சென்னை மாநி­லத்­துக்கு தமிழ்­நாடு என பெய­ரி­டப்­பட்­டது.

 

1973 : அமெ­ரிக்­காவின் சிகாக்கோ நகரில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 108 மாடி களைக் கொண்ட சீயர்ஸ் கோபுரம் உலகின் அப்­போ­தைய மிக உய­ர­மான கட்­டிடம் என்ற பெரு­மையை பெற்­றது.

 

1978 : முத­லா­வது ஸ்பாம் மின்­னஞ்சல் தொகுதி, அமெ­ரிக்­காவின் டிஜிட்டல் ஈக்­கி­யூப்மன்ட் கோர்ப்­ப­ரேஷன் நிறு­வ­னத்தின் சந்­தைப்­ப­டுத்தல் பிர­தி­நி­தி­யொரு­வரால் பெரும் எண்­ணிக்­கை­யா­னோ­ருக்கு அனுப்­பப்­பட்­டது.

 

1978 : பிரிட்­டனின் முத­லா­வது பெண் பிர­த­ம­ராக மார்­கரெட் தட்சர் தெரி­வானார்.

 

1986 : பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் “எயார் லங்கா” நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில் குண்டு வெடித்­ததால் 21 பேர் பலி­யா­ன­துடன்  41 பேர் காய­ம­டைந்­தனர்.

 

1999 : அமெ­ரிக்­காவின் ஒக்­ல­ஹாமா மாநி­லத்தில் வீசிய சூறா­வ­ளி­யினால் 45 பேர் பலி­யா­ன­துடன் 665 பேர் காய­ம­டைந்­தனர்.

 

2001 : 1947 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அவ்வமைப்பில் அமெரிக்கா முதல் தடவையாக தனது ஆசனத்தை இழந்தது.

 

2002 : இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக் 21 ரக விமானமொன்று வீழ்ந்ததால் 8 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk
Link to comment
Share on other sites

13131492_1036219556426738_50233530951956

எழுத்துச் சிகரம் சுஜாதாவின் பிறந்தநாள்.

தமிழ் எழுத்தாளர்களில் தனி முத்திரை பதித்து, தனிப்பாணி வகுத்த அமரர் சுஜாதாவின் பிறந்த தினம்...

சிறுகதை, நாவல், விஞ்ஞானப் புனைகதை, ஆராய்ச்சி, கவிதை, பயணக்கட்டுரை, இலக்கியம், சினிமா என்று இவர் தொடாத துறை கிடையாது. தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட 'வாத்தியார்'.

தமிழ் எழுத்துத்துறையில் அறிவியலைப் புகுத்திய முன்னோடி.
இணையத்தில் தமிழின் ஆரம்பகால வளர்ச்சியிலும் சுஜாதாவின் பங்களிப்பு கணிசமானது.

எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்ட இக்கால இளைஞர்களின் துரோணர் சுஜாதா என்றால் அதில் மிகையில்லை.

 

 

மனசுக்கும் கலர் இருக்கும்மா..! - மிஸ் யூ சுஜாதா

 

 sujatha.jpg                                                                

தீவிர வாசகர்கள் தவிர்த்து, மற்ற எல்லாவரையும் விட அதிகமாய் சுஜாதாவை மிஸ் செய்வது இவர்கள் மூவராகத்தான் இருக்கக்கூடும். கமல், மணிரத்னம் & ஷங்கர்! சுஜாதாவுடன் அத்தனை ‘கெமிஸ்ட்ரி’ இருந்தது இவர்களுக்குள்.

“சார்.. படம் பார்க்கற ரசிகன் மனசுல ஆணி அடிச்ச மாதிரி புரியணும்” என்று வசனம் கேட்டால் அவன் மனதில் மட்டுமல்ல அவனது ஏழு தலைமுறைக்கும் புரியற மாதிரி எழுதித்தருவார் இந்த எழுத்து ராட்சஷன். ஷங்கர் சொல்லுவார். ‘என் முழுப்படத்தின் கதையை சுஜாதா ஒரே வரியில் சொல்லிவிடுவார். அந்நியனின், ‘தப்பென்ன பனியன் சைஸா.. ஸ்மால், மீடியம், லார்ஜ்னு.. விளைவோட சைஸைப் பாருங்க’ என்று அவர் எழுதியது ஓர் உதாரணம்.
 

canuguess1.jpg


மேலே ‘எழுதியவர் - சுஜாதா’ என்று சொல்லும் டைட்டில் எந்தப் படத்தினுடையது என்று கணிக்க முடியுமா உங்களால்? பலருக்குத் தெரிந்திருக்கலாம்.. நினைத்தாலே இனிக்கும். கமல் ரஜினி நடிப்பில், பாலசந்தர் இயக்கி, 1979ல் வெளிவந்த படம். அப்போது சுஜாதாவுக்கு வயது 44

kamalnsujatha.jpg

அதற்கு முன்பே காயத்ரி, ப்ரியா என்று இவரது கதைகள் படமாக ஆக்கப்பட்டாலும் அவை இரண்டுமே ரஜினி படங்கள். இவரைப் படித்துப் படித்து, சந்திக்கும் ஆவலில் இருந்தவர் கமல். முதன்முதலாக கமலும் சுஜாதாவும் சந்தித்துக் கொண்டபோது கமலுக்கு வயது 23. சுஜாதாவுக்கு 41. ஒரு சிந்தனை சுவாரஸ்யத்திற்காகச் சொல்கிறேன்.. இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டபோது ஷங்கரின் வயது 13. அன்றிலிருந்து 20 வருடம் கழித்து மூவரும் ’இந்தியன்’ என்றொரு மெகா ஹிட் படத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை, காலத்தைத் தவிர வேறு எவரும் கணித்திருக்க முடியாது.
 

இந்தியன் படத்தில், நிழல்கள் ரவியை கமல்... ஸாரி.. இந்தியன் தாத்தா கொல்லும் காட்சி. வெறும் இரண்டே நிமிடங்களில் உங்களை உறைய வைக்கும் வசனங்கள்.

‘நீ ஒருத்தன் வாங்கறதால உனக்கு கீழ இருக்கறவனெல்லாம் வாங்கறான். இப்படித்தான் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, நிதி, மின்சாரம், உணவு, சுகாதாரம், கல்வி, காவல், தொழில்னு எல்லாத் துறைலயும் வாங்கி வாங்கி நாட்டை வளர விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கீங்க. நல்ல காத்தில்ல.. நல்ல பொருளில்ல.. நல்ல சாப்பாடில்ல.. ஏகப்பட்ட இயற்கை வளங்கள் இருந்தும் இந்த நாடு பிச்சைக்கார நாடா இருக்கே... ஏன்..? ஒவ்வொரு இந்தியனும் கடனாளியானதுண்டா மிச்சம். பக்கத்துல இருக்கற குட்டிக்குட்டி தீவெல்லாம் பெரிய பெரிய தீவா வளர்ந்திருக்கே.. எப்படி.. ஏன்?”

”அங்கெல்லாம் லஞ்சம் இல்ல”

“இருக்கு... இருக்கு.. அங்கெல்லாம் கடமைய மீறுறதுக்குதாண்டா லஞ்சம். இங்க கடமைய செய்யறதுக்கே லஞ்சம்.. தேசிய ஒருமைப்பாடுங்கறது இந்த நாட்ல லஞ்சத்துல மட்டும்தாண்டா இருக்கு” என்று தொடர்ந்து அவர் பேசும் வசனங்களின் வீரியம் 20 வருடங்கள் கழித்தும் வலிக்கிற நிஜமாய் இருக்கிறது.

’முதல்வன்’ படத்தின் ‘ரகுவரன்-அர்ஜுன்’ நேர்காணல் காட்சியை மறக்க முடியுமா? படத்தின் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சி அது. திரையில் இரு ஆண்கள் 15 நிமிடத்திற்கு நீள நீள வசனம் பேசிக் கொண்டிருப்பதை ரசிகன் சலிக்காமல் பார்க்க வேண்டுமானால், வசனத்தின் முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும்! ‘எதிர்கட்சிகிட்ட எவ்ளோ வாங்கின’ என்று கேட்க, ‘நீங்க எதிர்கட்சியா இருந்தா எவ்ளோ கொடுத்திருப்பீங்க’ என்ற பதில் கேள்வி, தமிழக அரசியல் தலைவர்களின் எதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்த சுஜாதா குறும்பு.

போகிற போக்கில், நகைச்சுவை வெடியைக் கொளுத்துவதிலும் இவர்தான் பெஸ்ட். அதாவது நல்ல சீரியஸான காட்சிக்கு இடையே ஒரு குண்டூசியைக் குத்தி, ஒரு நிமிடம் சிரிக்கவும் கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிற காமெடி.

முதல்வனில், சேல்ஸ் டேக்ஸ் கட்டணும் என்று ஒருநாள் முதல்வனாக அர்ஜுன் கெத்து காட்டிக் கொண்டிருப்பதை ரகுவரன் டிவியில் பார்த்துக் கொண்டே, தன்னருகே இருக்கும் மந்திரியிடம் கேட்பார்.
“யோவ் நிதித்துறை.. ஒருநாளைக்கு சேல்ஸ் டாக்ஸ் வருமானம் எவ்வளவு?”

அந்த மந்திரி, மிகவும் மரியாதையான குரலில் கேட்பார்: ‘கட்சிக்குங்களா.. நாட்டுக்குங்களா?”     

அந்நியனில், விக்ரம் சொல்லும் ‘சொக்கன் சிக்ஸ்டி ஃபைவ்’ சுஜாதாவைத் தவிர யார் மூளையிலும் உதித்திருக்க வாய்ப்பில்லை. இந்தியனில் கவுண்டமணி சொல்லும் ‘என்னய்யா மம்மியப் பாத்த எம்.எல்.ஏ மாதிரி பம்முறே’வை எழுதுகிற தில்லையும் சொல்லலாம்.

தனது மீடியா ட்ரீம்ஸ் மூலமாக படமும் தயாரித்தார். கீழே இருக்கும் டைட்டில் எந்தப் படம் என்று யூகியுங்கள்.


canuguess2.jpg


ஞானராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வந்த பாரதிதான், மேலே நீங்கள் பார்த்த டைட்டில். படத்தில் க்ரியேட்டிவ் அட்வைஸர் சுஜாதா!

ஷங்கரைப் போலவே, மணிரத்னத்திற்கும் இவர்தான் ஃபேவரிட். ரோஜா, திருடா, இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து என்று இவருக்கு சுஜாதா நெருக்கம். ஷங்கர், மணிரத்னம் இருவர் படங்களிலுமே, ரொமான்டிக் வசனங்கள் இருக்கும், மெல்லிய நையாண்டித்தனமான காமெடி தேவைப்படும், படு சீரியஸ் பட்டாசு வசனங்கள் வேண்டிவரும். எல்லாவற்றிக்குமே கைகொடுக்ககூடியவராக சுஜாதா இருந்தார்.

கன்னத்தில் முத்தமிட்டால். மாதவன் கதாபாத்திரம் எழுத்தாளர். பெயர் இந்திரா. யாரை நினைத்து வைத்திருப்பார் மணிரத்னம் என்று சொல்லவேண்டுமா? சொந்த க்ரவுண்டில் செஞ்சுரி அடிக்கிற ஜோரில் சுஜாதா வசனமெழுதியிருப்பார். படத்தில் இவர் வசனமெழுதிய ஒரு காட்சியை ’நீளம் கருதி, மனசே இல்லாமல் வெட்டிவிட்டேன்’ என்பார் மணிரத்னம். அதில் வருகிற வசனம் ஒன்று; ‘மனசுக்கு கலர் இருக்கும்மா.. சிவப்பு, பச்சை, மஞ்சள், காவிக்கலர், கருப்பு, பழுப்புன்னு பலதும்’. எதைச் சொல்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையிலும், அதே சமயம் நேரடியாக இல்லாமலும் எழுதுவதுதான் இவர் சிறப்பு. 

இவர் எழுதிய ‘அஞ்சு கோடி பேரு அஞ்சுகோடி தடவை அஞ்சஞ்சு பைசாவா திருடினா தப்பா’ என்கிற ஒருவரி உணர்த்துகிற அரசியலைப் புரிந்து கொண்டாலே, இவரைக் கொண்டாடாமல் விடமாட்டார்கள்.

parashakthi.jpg


சிவாஜியில், சுமனை மிரட்டும்போது ‘யார்டா நீ?’ என்று கேட்க ‘பராஷக்தி ஹீரோடா’ என்பார். சிவாஜி என்ற பெயரை தொடர்பு படுத்தி, இப்படி எழுதும் சிந்தனைதான் சுஜாதா.

இப்படி கமல், ரஜினி, மணிரத்னம், ஷங்கர் என்று சினிமாவின் பட்டத்து யானைகளின் முதுகில் சமமாக வலம் வந்து கொண்டிருந்தார் சுஜாதா என்றெழுதி இந்தக் கட்டுரையை முடித்தால், ‘என் பிறந்தநாளுக்காக சம்பிரதாய ஜல்லியாக எழுதி முடிக்கப்பட்ட ஒரு சாதாரண கட்டுரை’ என்று சுஜாதாவே திட்டுவார்.

ஒன்றே ஒன்று.. இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் நிச்சயம் நாங்கள் எல்லோரும் மிஸ் செய்கிற நபர் நீங்கள்தான் வாத்தியாரே!

vikatan

Link to comment
Share on other sites

'மின்தேக்கி' வேணும்னா 'என்வினவி' ல கேளு! - தமிழ் தெரிஞ்சுக்க இதப்படிங்க!

 

collage1.jpg

’கார்த்தி, திறன் பேசியை மறந்து வெச்சுட்டுப் போற பாரு’ என்றான் அசோக்.

அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த கார்த்தி, ‘இல்ல அசோக், மின்னேற்றில மாட்டிருக்கேன். வந்து எடுத்துக்கறேன்” என்றான்.

“ப்ச்.. என்னோட மின்தேக்கிய எடுத்துட்டுப் போடா. இல்லைன்னா என்னோட வரை பட்டிகையை எடுத்துக்க. அங்க போய், தற்படம் எடுத்து என் வினவில அனுப்பு. இல்லன்னா, நினைவுச்சில்லுல சேமிச்சு வந்து என்னோட நினைவிக்கோலுக்கு மாத்திக்குடு. ஏற்கனவே நீ குடுத்ததெல்லாம் என்னோட வன்நினைவில இருக்கு”

”சரி.. கிளம்பறேன்”

“வழி தெரியலைன்னா புவி நில்லிட அறிமுறையப் பார்த்துக்கோ. இல்லன்னா என்வினவில வழி சொல்றேன்"

--------------------------------------------
ன்ன மக்களே.... மண்டை காயுதா? திறன்பொருட்கள் நிறைய இருந்தாலும்... ஓகே...அதாவது கேட்ஜெட்ஸ் நிறைய இருந்தாலும், அதற்கான தமிழ் வார்த்தைகள் என்னென்னன்னு தெரிஞ்சுக்கற ஆவலும், பயன்படுத்தலாமேங்கற ஆவலும் பலருக்கும் இருக்கு.

அதற்காக கவிஞர் மகுடேசுவரனைத் தொடர்பு கொண்டோம். அவர் கொடுத்த தமிழ் வார்த்தைகள் கீழே...

1029447910423995657985326919406356676058


1. Smart Phone – திறன்பேசி
தொலைபேசி, அலைபேசி, கைப்பேசிகளைப் போல் தானாக, இன்னும் திறனுடன் இயங்கத்தக்கவை என்பதால் திறன்பேசி.

2. Smart Watch – திறன்கடிகாரம்
வெறுமனே கடிகை (நேரம்) பார்ப்பதற்காக மணிக்கட்டில் ஆரமாக அணியப்பட்டது தொழில்நுட்பத்தால் மேம்பட்டு திறம்பட்ட செய்கைகளைச் செய்யவல்லது என்பதால் திறன்கடிகாரம்.

3. Whatsapp – என்வினவி
Whatsup என்ற ஒலிப்பில் அமைந்த தொடர்புச் செயலி. ‘என்ன… நலமா ?’ என்று வினவுவதே தொடர்புகொள்ளலில் முதல் கண்ணி. வாட் என்பதைக் குறிக்க என். இந்த என், என்ன என்பதன் வேர். வினவுதல் என்பதற்கு ஆராய்தல், கேட்டல், விசாரித்தல் என்று பல பொருள்கள். அதனால் ‘என்வினவி’ என்னென்று வினவுகின்ற செயலி. சிலர் கட்செவி அஞ்சல் என்கிறார்கள். காணவும் கேட்கவும்படி அஞ்சல் செய்யப்படும் எல்லாமே கட்செவி அஞ்சல்கள்தாம். அதனால் வாட்சப் – என்வினவி.

4. Selfie Stick – தற்படக்கோல்.
செல்ஃபி என்பது தற்படம். தற்படம் எடுக்கப் பயன்படுகின்ற கோல் என்பதால் தற்படக்கோல்.

5. Tablet – வரைபட்டிகை
இச்சொற்றொடரைத் திமுக தலைவர் கருணாநிதி தம் முகநூல் பதிவில் எடுத்தாண்டிருந்தார். வரைதல் என்றால் கைப்பட எழுதுதல், சித்திரம் தீட்டுதல், கைதொட்டுத் தீற்றுதல் ஆகிய பல பொருள்களில் வழங்கும். பட்டிகை என்றால் ஏடு, அரசபத்திரம் போன்றவற்றை முற்காலத்தில் குறிப்பர். கைதொடலும் ஏட்டுவடிவும் கலந்த அந்தக் கருவிக்கு வரைப்பட்டிகை பொருத்தமான பெயர்தான்.

6. Blue Tooth – நீலப்பல்

7. Headset / Head Phone – காதணிபாடி
காதுக்கு அணிந்து தனிப்படக் கேட்பதற்குப் பயன்படுவது. பாடுவது என்பது அதன் ஒலிப்புத் தன்மையைச் சிறப்பித்துக் கூறுவதற்காகத்தான். காதில் அணிந்து பாடிக்கொண்டிருப்பதுதான் அதனால் பெரும்பான்மையோர் பெறும்பயன்.

8. Play Station – விளையாட்டகம்
உலகமெங்கும் விளையாட்டுக்குப் புகழ்பெற்ற அக்கருவியை அதே பெயரில் மொழிபெயர்த்து வழங்கலாம்.

9. Charger – மின்னேற்றி

10. Memory Card – நினைவிச்சில்லு

11. Pen Drive – நினைவிக்கோல்
எங்கெங்கும் எடுத்துச் செல்வதற்கு அதன் நினைவிக்குள் பதிவு செய்கிறோம். கோல் என்பது எழுதுகோல் போல் கையால் பயன்படுத்தப்படும் தன்மையால் வந்தது.

12. Projector – ஒளிபெருக்கி

13. Remote – தொலைச்சொடுக்கி

14. GPS (Global Positioning System) – புவிநில்லிட அறிமுறை

புவியின்மீது நாம் இருக்கும்/நிற்கும் இடத்தை அறிவதற்குப் பயன்படுகின்ற அறிவியல் முறை.

15. App - செயலி
குறிப்பிட்ட செயல் ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட செயல்பாட்டு நிரலி என்பதால்.

16. Power Bank – மின்தேக்கி

17. Hard Disc – வன்நினைவி
நினைவகத்தில் பதித்து வைக்கும் எல்லாவற்றை நினைவிற்கொண்டிருப்பதால்.

18. Gadget – திறன்பொருள்
பல்வகையான திறப்பாடுகளையுடைய, பொருள்கள் யாவும் இப்பெயரில் அழைக்கப்படலாம். இப்பொருள்கள் யாவும் நுணுக்கமான திறனுடையவை.

19. SimCard – அழைதகடு
கைப்பேசிக்குள் இட்டு அழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் அதனை அழைதகடு என்னும் வினைத்தொகையால் அழைக்கலாம்.

நன்றி கவிஞரே!

vikatan

Link to comment
Share on other sites

13116159_1036222643093096_72304474121819

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சனின் பிறந்தநாள்.
 

Link to comment
Share on other sites

7 hours ago, நவீனன் said:

எழுத்துச் சிகரம் சுஜாதாவின் பிறந்தநாள்.

இந்த மனுஷன் அந்த சலவைகாரி ஜோக்கை சொல்லாமலே போட்டுதே!

இவரது எழுத்துகளுக்கு சில உதாரணங்கள்

துச்சாதனன் இல்ல்லாமலே துகிலுரியும் பாஞ்சாலிகள் 
மந்திரம் இன்றியே சோரம் போகும் குந்திகள் 

நகை போட்டுக்காம இருக்கிறதே மேல்
அப்ப நகை போட்டுக்கிறது ஃபீமேலா

நன்றி சுஜாதா 

Link to comment
Share on other sites

யாருக்கு ஓட்டுப்போடலாம்? - சுஜாதா சொன்ன யோசனைகள்!

 

KPSujatha1.jpg 


நான் வோட்டுப் போடத் தவறுவதே இல்லை. அதுவும் இந்த முறை வோட்டுப் போடுவது என் வாழ்வில் ஒரு நீண்ட எலெக்ட்ரானிக் பயணத்தின்  நிறைவு.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் சில நகரத் தொகுதிகளில் எலெக்ட்ரானிக் வோட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உருவ அமைப்பில், பாரத் எலெக்ட்ரானிக்ஸில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டவன் என்கிற தகுதியில் எனக்குத் தனிப்பட்ட திருப்தி. இந்தப் பயணம் பல வருடங்களுக்கு முன் கேரளாவில் பரூரில் துவங்கியது.

முதன்முறையாக ஐம்பது இயந்திரங்களை, ஒரு தொகுதியின் பகுதியில் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். அதை எலெக்ட்ரானிக்ஸ் நுண்ணணுவியலுக்குக் கிடைத்த வெற்றியாக ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். ஆனால், இதன் முழு அறிமுகத்துக்கு இத்தனை தாமதமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம், அரசியலும் நீதிமன்றங்களும்தான். எல்லாத் தேர்தலிலும் தோற்றவர் எப்போதும் தன்னைத் தவிர மற்ற எல்லாப் புறக் காரணங்களையும் கூறுவார்... அந்த முறை புதிய காரணம் ஒன்று சேர்ந்துகொண்டது. இயந்திரத்தை வைத்து இன்ஜினீயர்கள், சி.ஐ.ஏ., மைய அரசு எல்லோரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று முதலில் எல்.டி.எஃப். கம்யூனிஸ்ட் வேட்பாளரும், அவர் வெற்றி பெற்றிட, தோற்றுப்போன யு.டி.எஃப். காங்கிரஸ் வேட்பாளரும் கேஸ் போட்டார்கள். அது கேரள உயர் நீதி மன்றத்தில் தோற்றது.

மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை  மாமியார் வீட்டுக்குப் போகும் நத்தை போல ஊர்ந்து கொண்டிருக்க, இடையே சில நகர்ப்புற, பாதி நகரத் தொகுதிகளில் ஏறத்தாழ பன்னிரண்டு இடங்களில் இந்த இயந்திரத்தை உப தேர்தல்களில்,  தேர்தல் கமிஷனில் அப்போது செக்ரெட்டரியாக இருந்த தைரியசாலி கணேசன், ஆர்ட்னன்ஸ் உதவியுடன் பயன்படுத்தினார். சுப்ரீம் கோர்ட் இறுதியில் 'அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்காமல் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது' எனத் தீர்ப்பு அளித்தது (இதற்காக நான் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று சாட்சி சொன்ன அனுபவத்தை மற்றொரு சந்தர்ப்பத்தில், என்னுடைய லீகல் அட்வைஸரைக் கலந்தாலோசித்து விட்டு எழுதுகிறேன்).

அரசியல் சட்டத்தைத் திருத்த, மக்களவைக்குத்தான் அதிகாரம் உள்ளது. மக்களவை கட்சி மாற்றம், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற தேசத்துக்கு அத்தியாவசியமான விஷயங்களில் கவனமாக இருந்து, தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதை நிறைவேற்ற ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆயின. இயந்திரத்துக்குப் பச்சை விளக்கு கிடைத்தது. இப்போது ராஜஸ்தானில் நயா கா(ன்)வ் என்னும் கிராமத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு வாக்காளர்களும் 'அதென்ன மெஷின்... சீஸ் கியா ஹை என்கிற ஆர்வத்தினால் மட்டும் வோட்டுப் போட வருகிறோம்' என்ற செய்தியைப் படிக்கும்போது ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கிறேன்.

தேர்தல் கமிஷன் மொத்தம் ஒன்றரை லட்சம் மெஷின்கள் வாங்கி இருந்தது. ஒரு மெஷின் ஐயாயிரம் ரூபாய் என்று சுமார் எழுபத்தைந்து கோடி ரூபாய் செலவழித்து வாங்கியிருந்தவை பயன்படாமல் கலெக்டர் அலுவலகங்களிலும் தாலுகா ஆபீஸ்களிலும் உறங்கிக்கொண்டு இருந்தன. கடைசியில் ராஜகுமாரி முத்தம் கிடைத்து, ஏறத்தாழ பத்தாண்டு தூக்கத்திலிருந்து எழுந்தன.

இயந்திரங்களில் பாதி எண்ணிக்கை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்தவை. மீதி ஹைதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் மற்றொரு மத்திய சர்க்கார் நிறுவனம் தயாரித்தவை. டிஸைன் ஒன்றுதான்... தமிழ்நாட்டில் ஹைதராபாத் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் பயன்படுத்த கமிஷனிடம் இருக்கும் இயந்திரங்கள் போதாது. மீண்டும் ஆர்டர் செய்து பயன்படுத்தினால் தேர்தல் முடிந்த மாலையே முடிவுகளை அறிவித்துவிடலாம். ராத்திரியே தலைவிதிகள் நிர்ணயிக்கப்பட்டு யார் சிறந்தார்கள், யார் இழந்தார்கள் என்பதெல்லாம் மறுநாள் பல் தேய்ப்பதற்குள் தெரிந்து விரும். இரும்பு வோட்டுப் பெட்டிகள் வேண்டாம். வாக்குச் சீட்டுகளை லட்சக்கணக்கில் அச்சடிக்க வேண்டியது இல்லை. கள்ளவோட்டு கிடையாது. செல்லாத வோட்டு கிடையாது. மின்வாரிய கரண்ட் தேவையில்லை, பாட்டரி. அடிக்கடி தேர்தல் வந்தால் பரவாயில்லை. பதினைந்து நாட்களுக்குள் ஒரு பொதுத்தேர்தல் நடத்தலாம். எத்தனையோ சௌகரியங்கள். பீகாரில் போல அதைக் கடத்திக் கொண்டு போனால் மேலே வோட்டுப் போடாதபடி தானாகவே அணைந்து கொள்ளும்.

அதை எதிர்த்தவர்கள் 'முன்னேற்ற நாடான அமெரிக்காவிலேயே பயன்படுத்த வில்லையே... நாம் என்ன அப்படி உயர்ந்து விட்டோம்...?' என்கிற ஒரு வாதத்தை முன்வைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. எல்லா புத்திசாலித்தனமான எலெக்ட்ரானிக் சாதனங்களும் அமெரிக்கா அல்லது ஜப்பானிலிருந்துதான் வரவேண்டும் என்கிற தாழ்வுமனப்பான்மையை நீக்கியது எங்கள் முக்கிய சாதனை.

தேர்தலில் யாருக்கு வோட்டுப் போடுவதாகத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆர்வமில்லை. உங்கள் குழப்பத்துடன் என் குழப்பத்தையும் சேர்க்க ஆசையில்லை. ஆனால், வோட்டுப் போடுவது முக்கியம். காரணம், ஏதோ ஒரு விதத்தில் இந்த அதிசய ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை (அல்லது கோபத்தை, வெறுப்பை) தெரிவிக்க முடிகிறது. தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நிதரிசனங்கள் இவை - சட்டப் பேரவையில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சிதான் ஆட்சிக்கு வர முடிகிறது. ஊழலிலோ அசாதனைகளிலோ இருவரும் ஒரே குட்டை மட்டைகள். வேட்டிக் கரையை உற்றுப் பார்த்தால்தான் வித்தியாசம் தெரிகிறது. அதனால்தான் தமிழ்நாடு எப்போதும் ஜராசந்த வதம் மாதிரி புரட்டிப் புரட்டிப் போட்டு 'இவர் போதும், அடுத்தது நீ வாய்யா... நீ வந்து சுரண்டு. முதல் வருஷமாவது மக்களுக்கு ஏதாவது செய்' என்று மாற்றுகிறார்கள். இடையே சினிமா நடிகர்கள் குட்டையைக் குழப்பினாலும் 'நெகட்டிவ் வோட்டு' என்பது தமிழ்நாட்டின் தேர்தல் பழக்கமாகிவிட்டது.

மத்திய அரசைப் பொறுத்த வரையில் அதன் தலைவிதியை நிர்ணயிப்பது உ.பி.முதலான இந்தி வளையமும் பசுமாடும்தான். அ.தி.மு.க., தி.மு.க. இருவரும் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்த பழைய புராணங்களைப் புரட்டினால் தலை சுற்றி உடனே ஒரு லிம்கா அடிக்க வேண்டும். சேராமல் சேர்ந்து, விலகி, மீண்டும் சேர்ந்து, விலகிய இந்த விளையாட்டில் யாருக்குப் போட்டாலும் ஏமாறப் போவது மக்கள்தான்.

இதனால் தேர்தலைப் படித்தவர் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது... குறிப்பாக நடுத்தர, மேல்தட்டு வர்க்க மக்கள். ஏழைகளைக் குஞ்சாலாடு, மூக்குத்தி, வேட்டி - சேலை, பாக்கெட் பிரியாணி என்று ஏதாவது கொடுத்துப் போட வைத்துவிடுவார்கள். நடுவாந்தரம்தான் வோட்டுப் போடுவதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து, நகம் வெட்டிக்கொண்டே எஃப். டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் வோட்டுச் சாவடிக்குப் போக கஷ்டப்பட மாட்டார்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்.

ஐ.டி கார்டு இல்லையென்றாலும் வோட்டுப் போடலாம்... போட வேண்டும். யாருக்கு என்று என்னைக் கேட்டாலும், கீழ்க்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

KPSujatha3.jpg

 

1. இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு வோட்டுப் போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதியென்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்துப் பாருங்கள். டி.வி-யில் பார்த்தால் போதாது, முதலில் அவர் உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியிலிருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

2. உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக வோட்டுப் போடப் போகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி, மக்கள், டிரைவர், வேலைக்காரி, அல்சேஷன் எல்லோருக்கும் சொல்லலாம்.

3. யாருக்கு என்று தீர்மானித்திருக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன் முறையாக வந்து வோட்டுக் கேட்டவருக்குப் போடுங்கள்... தலையையாவது காட்டினாரே!

4. உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்குப் போடுங்கள். முப்பத்துமூன்று விழுக்காடு என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்தபட்சமாவது ஆதரிக்க வேண்டியவர்கள். மக்களவையில் கொஞ்சம் வாதிட்டு சண்டை போடும் மேனகா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, மார்கரெட் ஆல்வா, மாயாவதி, ஏன்... பூலான்தேவி போன்றவர்கள் மூலம் சலுகைகள் பெற அதிகம் வாய்ப்புள்ளது. அலங்காரத்துக்கு நிற்கும் சினிமா நடிகைகளைத் தவிர்க்கவும். பெண் என்பதால் அனிமல் ஹஸ்பண்டரி இலாகாவிலாவது டெபுடி அசிஸ்டெண்ட் ஸ்டேட் மினிஸ்டர் பதவியாவது கொடுத்துத் தொலைப்பார்கள்.

5. இதற்கு முன்பு இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால், அவர் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையைக் காட்டியிருக்கிறார் என்றால் அவருக்குப் போடலாம் (நிலா டி.வி-யில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களைப் பேட்டி கண்டபோது ஒரு பெண்மணியை 'இப்ப இருக்கற எம்.பி. யாருன்னாவது தெரியுமாம்மா உங்களுக்கு?' என்று கேட்டதற்கு, 'எம்.பி-யா... அப்படின்னா?' என்று வியப்புடன் கேட்டார்). எனவே, போடுவதற்கு முன் முகம்! அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்தக் கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி வைத்துக் கொள்வது நலம். அதைக் காட்டி 'இதில் என்னனென்ன நீங்கள் செய்திருக்கிறீர்கள்?' என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள். அதே போல், இந்த முறை கட்சி வேட்பாளர்களிடம் தேர்தல் வாக்குறுதி என்று குட்டியாக ரேஸ் புக் மாதிரி ஒரு புத்தகம் இருக்கும். அதை ஒரு பிரதி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் - பத்து மாதத்தில் மறுபடி தேர்தல் வந்தால் கேட்பதற்கு, குறிப்பாக, 'நிலையான ஆட்சி அமைக்கப் போகிறோம்' என்று யாராவது சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி இனி சாத்தியமில்லை. வரும் தேர்தலில் எந்த ஆட்சியாவது ஐந்து வருஷம் தாங்கினால் நான் மொட்டை போட்டுக்கொள்கிறேன்.

6. சுயேச்சை வேட்பாளர்களுக்குப் போடாதீர்கள். வேஸ்ட்.

7. கொஞ்ச நாள் தையா, தக்கா, ஆட்டம் பாட்டம், சிக்குபுக்கு, முக்காபுலா போன்ற அறிவுசார்ந்த புரோகிராம்களைப் புறக்கணித்து பிரணாய் ராய், ரபி பெர்னார்ட், மாலன் போன்றவர்கள் நடத்தும் தேர்தல் புரோகிராம்களைப் பாருங்கள். தூர்தர்ஷன்கூடப் பார்க்கலாம். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும் அல்லது தலைவரும் டி.வி-யிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் பாத்திரத் திருடன் போல திருட்டுமுழி முழிக்காதவராக, யாரைப் பார்த்தால் 'இவர் ஏதாவது செய்வார்... முதல் நாளே உள்ளங்கை அரிக்காது' என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்குப் போடலாம் (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது). அல்லது பத்து வார்த்தை கோர்வையாகத் தமிழ் பேசத் தெரிந்திருந்தால் போடலாம்.

KPSujatha2.jpg

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால், சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும். ஆனால், கட்டாயமாக வோட்டுப் போடுங்கள்... அது அவசியம்.

பார்லிமெண்ட் தொங்கினாலும் நொண்டினாலும் பரவாயில்லை. சண்டை வந்தால் விட்டுக் கொடுப்பது இல்லை. மேலும் முதன்முதலாக இந்தக் கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்துக் கொண்டு, மர மேஜைகளைத் தட்டி வெளியேற்ற விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருந்திருக்கிறது. அது முன்னேற்றத்துக்கான அறிகுறி. ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அரசியல் மாற்றங்கள் இருந்தும், அந்த நாடுகளின் பொருளாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. நம் இந்தியப் பொருளாதாரமும் அந்த நிலைக்கு வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். அது இப்போது மனிதர்களைச் சாராமல் பருவ மழையை மட்டும் சார்ந்துள்ளது. பருவ மழையும் இவ்வளவு பாவாத்மாக்கள் இருந்தும் தவறாமல் பெய்கிறது.

தயவுசெய்து வோட்டுப் போடுங்கள். 'டாமினோ எஃபெக்ட்' என்று ஒன்று உள்ளது. அதன் மூலம் உங்கள் ஒற்றை வோட்டை வைத்துக்கொண்டு தேசத்தின் தலைவிதியைப் படித்தவர்களால் மாற்ற முடியும். அது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்பினால் உங்கள் ஊரின் பஸ் ஸ்டாண்ட் சமீபம்,  அஜீஸ் மான்ஷனுக்கு பதினெட்டாம் தேதி சூறாவளிச் சுற்றுப் பயணம் வரும்போது சொல்கிறேன். ரூம் நம்பர் பதினெட்டு. அவசரத்தில் இருப்பவர்கள் ரூபாய் பதினெட்டுக்கு ஒரு மணியார்டர் அல்லது டிராஃப்ட் எடுத்து அனுப்பினால் (வி.பி.பி. கிடையாது) தபாலில் விடை அனுப்பப்படும். நீங்கள் அனுப்புவதில் ஒரு ரூபாய் கார்கில் நிதிக்கு அனுப்பப்படும். Jokes apart, please vote. It is your sacred duty.

(29.8.99 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடரிலிருந்து....)

Link to comment
Share on other sites

விமானிகளின் சாகசம்
 

16393angel.jpgஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டிலுள்ள  பாலமொன்றின் கீழாக சாகச விமானிகள் விமானங்களைச் செலுத்திச் செல்வதைப் படங்களில்
காணலாம்.


“சங்கிலிப் பாலம்” என அழைக்கப்படும் ஹங்கேரியின்
மிகப் பழைமையான இப் பாலத்தின் கீழ் ஹங்கேரியைச் சேர்ந்த ஐரோப்பிய விமானப் பந்தய சம்பியனான ஸெல்டொன்
வேரெஸ், அவரின் தென் ஆபிரிக்க சகாக்களான ஜேசன் பீமிஸ், லாரி பீமிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் இவ்வாறு விமானங்களைச்
செலுத்தினர்.

 

கின்னஸ் சாதனையொன்றுக்கான முயற்சியாக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

16393angell.jpg

metronews.lk/
Link to comment
Share on other sites

கூலிங்கான போகா!

 

 

p64a.jpg

ஜெர்மனியினர் யோகாவையும், பீரையும் சரியான அளவில் மிக்ஸ் செய்து ‘போகா’ எனப் புதிதாக ஒரு ஃபிட்னெஸ் பயிற்சிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள். (ஆஹா...) இந்தப் பயிற்சியில் பங்குபெறுபவர்கள் பீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டோ, தலையில் கரகம் போல் வைத்துக்கொண்டோ, அல்லது கேப்பில் ஒரு கல்ப் அடித்துக்கொண்டோ ஆசனங்கள் செய்யலாம். மேட்டர் சுவாரஸ்யமாக இருப்பதால், மக்களும் பயிற்சி வகுப்புகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

p64b.jpg

p64c.jpg

p64d.jpg

p64e.jpg

இதுபற்றி ‘போகா’ பயிற்சி முறையைக் கண்டுபிடித்த யோகா பயிற்றுவிப்பாளர் ஜுலா கூறுகையில், ‘‘யோகா செய்யவும், பீர் குடிக்கவும் நிறைய மக்களுக்குப் பிடிக்கும். அதுதான் இந்த இரண்டையும் இணைத்துப் புதிதாய் ‘போகா’வைக் கண்டுபிடித்தேன். இங்கு போகா செய்ய வருபவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து வருபவர்கள் அல்ல, நிறையப் பேர் யோகா செய்யாமல் வெறும் பீர் மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பிடுறாங்க. ஆனால், இதற்காக நான் கவலைப்படவில்லை. இந்தப் பயிற்சி, மக்களுக்கு யோகா சொல்லிக்கொடுப்பதையும் தாண்டி அவர்களின் கவலைகளை மறக்கடித்து ஜாலியாக உணரவைத்தாலே போதும்னு நினைக்கிறேன். கர்ப்பிணிப் பெண்களும் ‘போகா’ பயிற்சி செய்யலாம். ஆனால், அவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பீர்’’ என்கிறார். ஆனால், பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் ‘இது ஒரு மொக்கை ஐடியா. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’ எனக் கழுவி ஊற்றி வருகிறார்கள். எனக்கு இந்த ‘போகா’ செய்யறவங்களைப் பார்க்கும்போது ‘தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி’ சிவக்குமார்தான் ஞாபகத்துக்கு வருகிறார்!

vikatan

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: மே 04
 
 

article_1430803040-margaretthatcher.jpg1493: ஐரோப்பாவுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட 'புதிய உலகத்தின்' பகுதிகளை எல்லைக் கோடொன்றின் அடிப்படையில் ஸ்பெய்னுக்கும் போர்த்துக்கலுக்கும் பாப்பரசர் 6 ஆம் அலெக்ஸாண்டர் பிரித்துக்கொடுத்தார்.

1904: அமெரிக்காவினால் பனாமா கால்வாய் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1910: கனேடிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1912: கிறீஸ் நாட்டின் ரொட்ஸ் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.

1945: வடக்கு ஜேர்மனிய இராணுவம் அமெரிக்கத் தளபதி பீல்ட் மார்ஷல் பேர்னார்ட் மொன்ட்கோமரியிடம் சரணடைந்தது.

1949: இத்தாலியின் டொரினோ கால்பந்தாட்டக் கழகத்தின் வீரர்கள் அனைவரும் (காயத்தினால் சுற்றுலாவில் பங்குபற்றாத ஒருவரைத் தவிர) விமான விபத்தொன்றில் பலியாகினர்.

1953: ஏர்னஸ்ட் ஹெம்மிங்வேவுக்கு த ஓல்ட் மேன் அன்ட் த ஸீ நாவலுக்காக புளிட்ஸர் விருது வழங்கப்பட்டது.

1979: மார்கரட் தட்சர், பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவானார்.

1990:சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1994: இஸ்ரேல் பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத்தும் காஸா மற்றும் ஜெரிக்கோ பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.

2000: லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.

2002: நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148பேர் கொல்லப்பட்டனர்.

2014: கென்யாவின் நைபூரி நகரில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 62பேர் படுகாயமடைந்தனர்.

tamilmirror.lk
Link to comment
Share on other sites

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் தங்கச் சட்டை மனிதர்

 
பங்கஜ் பராக் | படம்: சிறப்பு ஏற்பாடு
பங்கஜ் பராக் | படம்: சிறப்பு ஏற்பாடு

தங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் (47), கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ரூ.98,35,099 செலவில், உலகின் மிக விலை உயர்ந்த தங்கச் சட்டை அணிந்தவர் என்று அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பில் நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பங்கஜ், நாசிக் மாவட்டம், இயோலா நகர துணை மேயராக பதவி வகிக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் தனது 45-வது பிறந்த நாளில் இந்த தங்கச் சட்டையை தைத்தார்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

13131102_1036771729704854_44406534450319

என்றும் இளமையுடன் இனிய வலம் வரும் தமிழின் முன்னணி நடிகை த்ரிஷாவின் பிறந்த நாள் இன்று.

இப்போதிருக்கும் நடிகைகளில் மிக நீண்ட காலம் நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, அனேகமான முன்னணிக் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார்.

 

 

அழகாய் ஜொலிக்கும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள்
 

16411thrisha.jpgதமிழ், தெலுங்கு இரண்டு மொழிக ளிலும், 10 ஆண்டுக ளுக்கு மேலாக சினிமா வில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா.

 

இன்று அவர் தனது 33 பிறந்த நாளை கொண்­டா­டு­கிறார்.


பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். த்ரிஷா ஒரு மொடலாக தன் வாழ்க்கையை தொடங்கி 1999 ஆம் ஆண்டு  மிஸ் சேலம், 'மிஸ் சென்னை' என்ற பட்டத்தை வென்றவர்.

 

இதற்கு பின் பல இயக்குநர்கள் இவரை நடிக்க வைக்க படையெடுத்தனர். குறிப் பாக கௌதம் மேனன் தன் முதல் படமான ‘மின்னேலே’ படத்தில் இவரை நடிக்க வைக்க முயற்சி செய்தாராம்.


ஜோடி படத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் தலையை காட்டினாலும், ‘லேசா லேசா ’படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், முதன்முதலாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் ‘மௌனம் பேசியதே’.


த்ரிஷா திரையில் காலடி எடுத்து வைத்த நேரத்தில் சிம்ரன், ஜோதிகா என மிகப்பெரிய நடிகைகள் திரையுலகை ஆட்சி செய்த வந்த நேரம். ஆனால், இவரின் கடுமையான உழைப்பு எளிதில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த ஆண்டு நடிகர் கம­லு­டனும் நடித்து விட்­டார்.


ரஜினி, விக்ரம் போன்ற போன்ற முன்­ன­­ணி நடி­கர்­க­ளுடன் மட்­டுமே த்ரிஷா நடிக்­க­வில்லை. த்ரிஷா எப்போதும் செல்ல பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். வீதியில் அநா­தை­யாக நாய்கள் கிடப்­பதை கண்டால் அதனை எடுத்து பரா­ம­ரித்து வரு­­ப­வர்­தான் த்ரி­ஷா.


இவர் இதுவரை 2 பிலிம் பேர் விருதை வாங்கியுள்ளார். மேலும், கலைமாமணி, தென்னிந்தியாவின் சிறந்த நடிகை, நந்தி விருது போன்ற விரு­து­க­­ளையும் பெற்­றுள்­ளார்.


த்ரி­ஷா­வுக்­கு நடி­கர் ரணா­வுடன் காதல் என்று பேசப்­பட்­டாலும் அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகையில் , 2015 ஆம் ஆண்டு இயக்­கு­நர் வருண் மணி­ய­னோடு திரு­மண நிச்­ச­ய­­தார்த்தம் நடை­பெற்­றது. ஆனால்  திரு­மணம் தனிப்­பட்ட கார­ணங்­களால் நடை­பெ­றாமல் போன­து.


10 வருடங்களுக்கு மேல், இன்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் த்ரிஷா இன்று போல் என்றும் தன் திரைப்பயணத்தில் வெற்றிபெற
அவ­ருக்­கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

metronews.lk

article_1462337416-2.jpg

 

 

Link to comment
Share on other sites

இவங்களும் பிரபலங்கள்தான்!

 

p72a.jpg

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’னு சொல்வாங்க. (அது யாருன்னுதான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்). அப்படி நாம் கொண்டாடும் நம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைத் துணைகளைப் பற்றிப் பார்ப்போமா...

கீதா பாஸ்ரா: இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் மனைவி. இங்கிலாந்து நாட்டில் இந்தியப் பெற்றோர்களுக்கு பிறந்த இவர் நடிப்புக் கலை பயின்றவர். ‘தில் தியா ஹை’, ‘தி ட்ரெய்ன்’ என சில பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். பல நாட்களாகவே ‘லவ் பண்றாய்ங்களா, இல்லையா?’ என மக்களைக் குழப்பி மண்டை காய வைத்தவர்கள், ஒருவழியாக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.

ஹேசல் கீச்: ஹேசலை நம்மில் பல பேர் பார்த்திருப்போம். ‘செய் ஏதாவது செய்’ எனப் பாடியே ‘பில்லா’ படத்தில் அஜித்தின் துப்பாக்கியை ஆட்டையைப் போடுவாரே அவரேதான் இவர். இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து அப்பாவுக்கும், மொரிஷியன் அம்மாவுக்கும் பிறந்த ஹேசலுக்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை நம் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங். வாழ்த்துக்கள் யுவி.

p72b.jpg

ஆயிஷா முகர்ஜி: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ- இந்தியப் பெண்ணான ஆயிஷாதான் இந்திய அணியின் ஓப்பனர் ‘முறுக்கு மீசை’ தவானின் துணைவி. தவானை விட கிட்டத்தட்ட பத்து வயது மூத்தவரான ஆயிஷா ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். ஹர்பஜன் சிங்தான் தவானுக்கு ஆயிஷாவை முகநூல் மூலமாக அறிமுகப்படுத்தினார். இருவரும் சில ஆண்டுகள் ஒருவரை ஒருவர் காதலித்து, 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, இன்று மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள்.

சாக்‌ஷி: தோனியைத் தெரியும் எல்லோருக்குமே சாக்‌ஷியையும் தெரிந்திருக்கும். சாக்‌ஷியும் தோனியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அந்த நட்பு பின்னாளில் காதலாக மாறி 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தச் சமயம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கும் சாக்‌ஷி, கொல்கத்தாவின் தாஜ் பெங்கால் ஹோட்டலில் ட்ரெய்னியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

p72c.jpg

ரித்திகா சஜ்தேஹ்: அதிரடி ஓப்பனர் ரோஹித் சர்மாவின் மனைவி. மும்பைப் பெண்ணான இவர் விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் ஒரு விளையாட்டு மேலாளரும்கூட. ரோஹித் சர்மாவும் இவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தோனிக்கும் சாக்‌ஷிக்கும் நடந்தது போலவே இவர்களுக்கும் நட்பு, காதலாக மாற சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

தீபிகா பல்லிகல்: தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி. தீபிகா பல்லிகல் சென்னையில் பிறந்த ஒரு கேரள குடும்பத்தைச் சேர்ந்த பெண். எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலம் படித்தவர். அது மட்டுமல்ல, 24 வயதே ஆன சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர். ஸ்குவாஷ் வீராங்கனைகள் தரவரிசையில் டாப்10-ல் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் எனப் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. தினேஷ் கார்த்திக் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்துப் பெற்றவர்.

p72d.jpg

ப்ரியங்கா சௌத்ரி:  இந்திய அணியின் பிரபல ஆட்டக்காரர், சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளை சுரேஷ் ரெய்னாவின் மனைவி. ப்ரியங்காவும், ரெய்னாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் (நீங்களுமா?). ரெய்னாவின் தாயாருக்கு ப்ரியங்காவை ரொம்பவே பிடித்துப்போக  ரெய்னாவின் அம்மா ஆசைப்பட்டது போலவே, இருவருக்கும் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு வரை நெதர்லாந்து நாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தார் ப்ரியங்கா.

மயந்தி லாங்கர்: ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி. உண்மையிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஸ்டூவர்டை விட மயந்தியை நன்றாகவே தெரியும். பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளைத் தொலைகாட்சியில் தொகுத்து வழங்குவதே விளையாட்டு ஊடகவியலாளரான மயந்திதான்.

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.