நவீனன்

இளமை புதுமை பல்சுவை

5,289 posts in this topic

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 19

 

1806 : நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.

 

1817 : சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, ஆர்ஜென்டீனாவிலிருந்து அந்தீஸ் மலைத்தொடரை கடந்தது.

 

1839 : பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.

 

1899 : ஆங்கிலோ-–  எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.

 

1903 : ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாகியது.

 

888varalaru---Indira-Gandhi.gif1917 : லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் காயமடைந்தனர்.

 

1927 : சீனாவுக்கு பிரித்தானியா  படைகளை அனுப்பியது.

 

1937 : ஹோவார்ட் ஹியூஸ் என்பவர் லொஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூயோர்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 விநாடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கின.

 

1942 : இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டன.

 

1949 : இஸ்ரேலை கியூபா அங்கீகரித்தது.

 

1966 :  இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி முதல் தடவையாக தெரிவுசெய்யப்பட்டார்.

 

1981 : ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

 

1983 : நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.

 

1986 : முதல் ஐ.பி.எம். ரக கணினி வைரஸான (சி) பிரெயின் ((c) Brain) பரவத் தொடங்கியது.

 

1991 : வளைகுடா யுத்தத்தின்போது இஸ்ரேல் மீது தனது இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை ஈராக் ஏவியது. இதனால் 15 பேர் காயமடைந்தனர்.

 

1993 : செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

 

1997 : யஸிர் அரபாத் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பலஸ்தீன மேற்குக் கரை நகரான ஹெப்ரோனுக்குத்  திரும்பினார்.

 

2006 : ஸ்லோவாக்கி யாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.

 

2006 : புளுட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

metronews.lk
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

மசாலா தோசை இப்போ பர்கராச்சு, அடுத்து என்ன ? - இந்தியர்களின் கற்பனைகள்

  •  

பாரம்பரியமிக்க சில இந்திய உணவு வகைகளை பர்கர் வடிவில் தாங்கள் தயாரித்து பரிமாறும் திட்டத்தை துரித உணவுக்குப் பேர் போன மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இது தோசையா? பர்கரா?

 

 இது தோசையா? பர்கரா?

பர்கர் வடிவில் பரிமாற மெக்டொனால்ட் திட்டமிட்டுள்ளதில் பிரபல தென்னிந்திய உணவான மசால் தோசையும் ஒன்றாகும்.

கடந்த வாரத்தில் மெக்டொனால்ட்டின் புதிய உணவு திட்டங்களான ''தோஸா பர்கர்'' மற்றும் ''அண்டா புர்ஜி பர்கர் (முட்டை துருவல்) ஆகியவை குறித்து தங்களின் கருத்துக்களை பெரும்பாலான இந்தியர்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

சிலர் மெக்டொனால்ட் நிறுவனம் இந்திய உணவுகளுக்கு பொருத்தமான மாற்று உணவுகளை தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள சூழலில், வேறு சிலர் மேலும் பல இந்திய உணவுகளை எவ்வாறு மெக்டொனால்ட் நிறுவனம் தங்கள் பாணியில் பரிமாற மாற்ற முயற்சிக்கலாம் என்று நகைச்சுவையாக கருத்து வெளியிட்டனர்.

இவர்களின் நகைச்சுவையான ஆலோசனைகளை, பிபிசியின் கார்ட்டூனிஸ்டான (கருத்துக் சித்தரக் கலைஞர்) கீர்திஷ் பட் கருத்தில் எடுத்துக் கொண்டு, உலக அளவிலான துரித உணவு சங்கிலிகளில், இந்திய உணவின் பங்கு மற்றும் பரிமாறப்படும் விதம் குறித்து தனது கை வண்ணத்தில் வடிவமைத்துள்ளார்.

'மெக் சமோசா' முயற்சித்து பார்க்கலாமே!

 

'மெக்டொனால்ட் சமோசா' - இது எப்படி?

'மெக்டொனால்ட் சமோசா' - இது எப்படி?

இந்தியாவில் சாதாரண வீதிகளில் கிடைக்கும் எளிய, அதே சமயத்தில் மிகவும் பிரபலமாக உள்ள உணவு சமோசாவாகும். முழுமையாக இந்திய உணவுகளை தயாரித்து, பரிமாறும் துரித உணவகமாக மெக்டொனால்ட் நிறுவனம் மாறுவதற்கு, இதனை தனது மெனு கார்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

ஏன் 'லஸி' பானத்தை சேர்க்கக் கூடாது?

  லஸி

மெக்டொனால்ட் நிறுவனத்தின் இந்திய உணவு மெனு கார்ட் லஸி பானம் இல்லாமல் நிறைவு பெறாது என்று மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தயிரால் தயாரிக்கப்படும் ஒரு அடர்த்தியான இனிப்பு பானம் லஸியாகும்.

அவரவர் பாணி அவரவருக்கே

மெக்டொனால்ட் போன்ற சர்வதேச துரித உணவகங்கள் இந்திய உணவகங்களாக மாற முயற்சிக்கும் வேளையில், சில இந்திய உணவகங்கள் தங்களை சர்வதேச உணவகங்களாக காட்டிக் கொள்ள , பிரபல சர்வதேச துரித உணவு சங்கிலிகளின் பெயர்களை தங்கள் உணவகங்களுக்கு வைத்துள்ளன.

கேஎஃப்சி  

தென் இந்திய மாநிலமான கேரளாவில் பரிமாறப்படும் பிரபல உணவுகளில் ஒன்றான சட்யா உணவு வாழை இலையில் பரிமாறப்படுகிறது.

கேஎஃப்சி துரித உணவகம் இந்திய உணவுகளை தயாரித்து பரிமாறினால் , அது கேஎஃப்சி உணவகமாக தோன்றாமல் முற்றிலும் மாறுபட்டதாக காட்சியளிக்கும்.

'சப்வே' சாம்பார் - இது எப்படி இருக்கு?

சாம்பார் விற்பனையில் 'சப்வே'

 

 சாம்பார் விற்பனையில் 'சப்வே'

சப்வே உணவகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், அந்த உணவகம் பிரபல தென்னிந்திய குடும்பப் பெயரான சுப்பிரமணியன் என்ற பெயரால் ஈர்க்கப்பட்டிருக்கும்.

ரொட்டி (சாண்ட்விச்) மற்றும் சாலடுகளுக்கு பதிலாக, அரிசி ரொட்டியையும், சாம்பார் எனப்படும் பருப்பு குழம்பையும் சப்வே உணவகம் விற்பனை செய்திருக்கும்.

''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

 

''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

 ''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

இந்தியாவெங்கும் உள்ள பிரபல சங்கிலி உணவகமாக யுஎஸ் (அமெரிக்கா) பீட்ஸா உணவகம் கருதப்படுகிறது. பெரும்பாலும், வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவுடன் தான் பீட்ஸா உணவு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஏன் ''யுஎஸ்'' என்பது ''உத்தம் சிங்'' என்ற பிரபல வட இந்திய பெயரை குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது எனபதற்கு எந்த காரணமும் இல்லை.

BBC

Share this post


Link to post
Share on other sites
மிஸ் யூனிவர்ஸ் 2016 அழகுராணி போட்டியில்...
 

மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச) 2016 அழகுராணி போட்டி பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெற்றுவருகிறது.

 

21895malaysia.jpg

 

218951.jpg

 

218952.jpg

 

சேபு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீச்சலுடை பெஷன் ஷோவில் பங்குபற்றிய போட்டியாளர்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

218953.jpg

 

 

metronews.lk/
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
பிரம்ம கமலம் மலர்ந்தது
 

article_1484813134-20170117_222420.jpg

நள்ளிரவு 12 மணிக்கு பூத்து, சூரியன் உதிக்கும் முன்பாக மறைந்து விடும் பூவான பிரம்ம கமலம் என்ற பூ, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமசந்திரா மாவத்தை பகுதியில், நேற்று (18) மலர்ந்துள்ளது. பிரம்ம கமலம் (Epiphyllum oxypetalum) என்பது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நள்ளிரவில் மலரக்கூடிய அபூர்வ வகை பூவாகும்.(கு.புஸ்பராஜ்)

article_1484813148-20170117_222427.jpg

article_1484813161-20170117_222534.jpg

 

.tamilmirror.lk
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites
On 18.1.2017 at 6:54 AM, நவீனன் said:

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் கலக்கும் சிறுமி

Alanganallur Jallikattu protest

அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுமி கோஷம் எழுப்பும் வீடியோ காட்சியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலர் இச்சிறுமியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.  

 

vikatan

 

“இதற்காகத்தான் என் 8 வயது மகளை ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அனுப்பினேன்!” - உருகும் தந்தை

ஸ்வேதா ஜல்லிக்கட்டு

'Turtles can fly' என்கிற ஈரானிய படத்தில் ஹீரோ சாட்டிலைட் என்கிற கதாபாத்திரத்தின் கூடவே துறுதுறுவென ஒரு கதாபாத்திரம் வந்துகொண்டேயிருக்கும். கிட்டத்தட்ட ஸ்வேதா அப்படித்தான் இருக்கிறார், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அலங்காநல்லூர் போராட்டக்களத்தில் எதிரொலித்த எட்டு வயது ஸ்வேதாவின் குரல்தான் தற்போது ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் பிரம்மாண்ட செல்லக்குரல்.

ஸ்வேதா''சொந்த ஊரு சோழவந்தான். இப்போ இருக்குறது கோச்சடை. எனக்கு இரண்டு பொண்ணுங்க, பெரிய பொண்ணு ஸ்ரீநிதி. சின்னப் பொண்ணு ஸ்வேதா. ரெண்டாவது படிக்கிறா. அப்படியே எதிர்மாறானா பொண்ணு. நாங்க விவசாயக் குடும்பம்தான். ஆனா, இப்போ உள்ள நிலைமையில விவசாயத்த சுருக்கிக்கிட்டோம். எங்க வீட்டுலேயும் சரி, என் மனைவி வீட்டுலேயும் சரி... ஜல்லிக்கட்டு காளைகள் இருந்துச்சு. ஆனா, இப்போ அதுவும் இல்ல. இதைப்பத்தி எல்லாம் வீட்டுல பேசுவோம். நாங்க ஜல்லிக்கட்ட நேருல பார்த்து வளர்ந்த தலைமுறை, ஸ்வேதாவுக்கு டிவில-தான் காட்டி இருக்கோம்.

பெத்தவுங்களான நாம  பண்ற விஷயங்கள்தான் குழந்தைங்ககிட்ட முதல்ல போய்ச் சேரும். நம்மள பார்த்துத்தானே அவுங்க கத்துக்கிறாங்க. வீட்டுல சும்மா இருக்குற நேரத்துல விவசாயத்த பத்திப் பேசுவோம். நம்மாழ்வார் கருத்துகளை இவங்களுக்கு ஏத்த மாதிரி கதை பாணில சொல்வோம், இப்படி நாங்க பேசுற எல்லா விஷயத்துலேயுமே அவளோட கவனம் இருக்கும். பீட்டாவ பத்தி நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது அதென்னப்பா காளை மாட்ட மட்டும் தடை பண்றாங்க? பசுவும் மாடுதானே, அதை தடை ஸ்வேதாபண்ண மாட்டாங்களா? அப்புறம் ஏன் பால் கறக்குறாங்கன்னு எதிரெதிர் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவா. அவ கேட்குற  கேள்விக்கு பதில் சொல்லிடுவோம்..சில கேள்விகளுக்கு நாங்களும் பதில் தெரியாம முழிக்க ஆரம்பிச்சுடுவோம்.

ரொம்ப சேட்டைக்கார பொண்ணு. ஆனாலும் படிப்பு, படம் வரையுறதுன்னு எல்லாத்துலயும் தனித்துவம் இருக்கும். இப்போகூட ஸ்கூலுக்கு போறப்போ... 'திரும்ப எப்போ அப்பா அலங்காநல்லூரு போகலாம்'னு கேட்குறா? பிரச்னை சரி ஆகிடும். இல்லைன்னா திரும்பப் போகலாம்னு சொல்லியிருக்கேன்.

எங்க வீட்டைப் பொறுத்தவரை பையன் பொண்ணு எல்லாம் பிரிவினை இல்ல. இங்க எல்லாருமே ஒண்ணுதான் .இது எங்க தலைமுறையோட முடிஞ்சுப்போற பிரச்னை இல்ல. நம்ம மேல நசுக்கப்படுற  அதிகாரத்த எதிர்த்து கேள்வி கேட்கணும்கிற ஒரு துடிப்பு அவுங்களுக்குள்ளேயும் வரணும். அப்படிங்கிறதுக்காகத்தான் நாங்கள் அனுப்பிவெச்சோம்'' என்றார் ஸ்வேதாவின் தந்தை அசோக்.

இவரோடு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் யாரோ ஒரு பெற்றோர் தன் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களின் பாதிப்பில் வலுக்கட்டாயமாக ஏதோ ஒரு கோச்சிங் செண்டருக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.

vikatan

Share this post


Link to post
Share on other sites

ஜல்லிக்கட்டு தடையையடுத்து சேலத்தில் ‘நரி ஜல்லிக்கட்டு’

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, அந்தத் தடையை எதிர்த்து தமிழகமே திரண்டு போராட்டம் நடத்திவரும் இவ்வேளையில், சேலத்தில் ‘நரி ஜல்லிக்கட்டு’ நடத்தப்பட்டுள்ளது.

7_Fox_Jallikkattu.jpg

சேலம் கிராமப்பகுதியொன்றில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் தினத்தன்று இந்த நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் கடந்த 16ஆம் திகதி காணும் பொங்கல் தினத்தன்று இந்த நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

வனத்துறையினர் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின்போது, காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட நரியொன்று கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கையாக அதன் வாயைக் கட்டியபின் அதற்கு பூமாலை சூட்டி கிராமத்தின் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

7_Fox_Jallikkattu_1.jpg

அதன்பின், ஊர் மக்கள் திரண்டு நிற்க, பின்னங்கால்கள் கட்டப்பட்ட நிலையில் நரி கீழே இறக்கிவிடப்பட்டது. இங்கும் அங்கும் ஓடித் திரிந்த நரியைப் பிடிக்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர். கடைசியில் நரியைப் பிடித்த ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் அந்த நரி மீண்டும் காட்டில் விடப்பட்டது.

virakesari.lk/

Share this post


Link to post
Share on other sites

காலத்தை' வென்ற சினிமாக்கள்!

 

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு உண்டு. அதிலும், `டைம் ட்ராவல்' கதைக்களம் கொண்ட ‘பேக் டு தி ஃப்யூச்சர்’ போன்ற திரைப்படங்கள் பல பாகங்களாக வெளிவந்து, தயாரிப்பாளர்களுக்கு வசூலை வாரி இறைத்தன. கொஞ்சம் பிசகினாலும் ஆடியன்ஸ் தலையைச் சொறிவார்கள் என்பதால் இவ்வகைப் படங்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய நிர்பந்தம் படக்குழுவுக்கு இருந்தது. `டைம் ட்ராவல்' கதைக்களம் கொண்ட, உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

102p1.jpg

Intersteller :

வித்தியாசமான மற்றும் குழப்பமான கதைக்களத்தை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தரும் பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய திரைப்படம் இது. பருவநிலை மாற்றங்களால் மனிதன் வசிக்க முடியாத இடமாக பூமி மாறுகிறது. மனிதன் வாழத் தகுதியான இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடிக்கும் நாசாவின் முயற்சியில் கதாநாயகன் மேத்யூ மெக்கனாகேவும் பங்கேற்கிறார். வார்ம் ஹோல், ப்ளாக் ஹோல், ஐந்தாம் பரிமாணம், விண்வெளி நேரம் போன்ற இயற்பியல் கோட்பாடுகள் காரணமாக பூமிக்கும், கதாநாயகனோடு பயணிக்கும் குழுவுக்கும் இடைப்பட்ட காலநேரம் பெரிதும் வேறுபடுகிறது. இறுதியில் பூமியைப் போன்ற கிரகத்தைக் கண்டுபிடித்தார்களா? இவர்களுக்கு இடைப்பட்ட காலநேரத்தால் என்ன விளைவு ஏற்படுகிறது? என்பதை உணர்வுபூர்வமாக படமாக்கி இருந்தார்.  விஷூவல் எஃபெக்ட்டுக்காக இப்படம் ஆஸ்கர் வென்றதோடு, வசூல் வேட்டையாடியது.

102p2.jpg

Frequency :

‘இது கொஞ்சம் ரிஸ்க்கான கதை’ எனப் பல இயக்குநர்கள் ஒதுக்கிய இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிரேகோரி ஹாப்ளிட்டுக்குக் கிடைத்தது. சில்வஸ்டர் ஸ்டாலோன் முதலில் நடிப்பதாக இருந்து, பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் டென்னிஸ் குயாட் நடித்தார். துருவ ஒளி மாற்றத்தால் 30 வருட காலத்தைக் கடந்து பரவும் ரேடியோ அலைகள் மூலம், எதிர்பாராதவிதமாக தந்தையும், மகனும் பேசிக்கொள்கிறார்கள். அதன் விளைவாக அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத மாற்றங்கள்தான் கதை. 2000-ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம், சீட் நுனியில் உட்காரவைக்கும் த்ரில்லிங்கான திரைக்கதையால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.

102p3.jpg

Deja vu :

‘இதை ஏற்கெனவே எங்கேயோ பார்த்திருக்கேன்’ எனச் சில சம்பவங்கள் நம்மை யோசிக்க வைக்குமே? அப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் `தேஜா வு' என அழைக்கிறார்கள். இதே பெயரில் உருவான இத்திரைப்படம் 2006-ல் வெளியானது. ‘ட்ரூ ரொமான்ஸ்’, ‘எனிமி ஆப் தி ஸ்டேட்’ போன்ற படங்களை இயக்கிய டோனி ஸ்காட்தான் இப்படத்தின் இயக்குநர். கப்பலில் வெடிகுண்டு விபத்து நிகழ்ந்து, கடற்படையில் பயிற்சியை முடித்த வீரர்களும், அவர்களின் குடும்பத்தாரும் இறக்கிறார்கள். இதை விசாரிக்க வரும் ஏஜென்ட்டான டென்சல் வாஷிங்டன், பரிசோதனையில் இருக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்துக்கு வந்து எப்படி அத்தனைப் பேர் உயிரையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. ஆவரேஜ் விமர்சனங்கள் பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது.

102p4.jpg

Predestination :

2004-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர்கள் ‘தி ஸ்பீரிக் பிரதர்ஸ்’ என்றழைக்கப்படும் பீட்டர் ஸ்பீரிக் மற்றும் மைக்கேல் ஸ்பீரிக். கடந்த காலத்தில் நடந்த பெரிய குற்றச்செயல்களை, காலத்தைக் கடந்துசென்று தடுக்கும் ஏஜன்ட்டாக நடித்திருக்கிறார் ஏதன் ஹாக். 1975-ல் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஒரேயொரு குற்றவாளி மட்டும் இவருக்குத் தண்ணி காட்டுகிறான். தனது கடைசி வேலையாக மீண்டும் 1975-ம் ஆண்டுக்குச் செல்லும் ஏதன் ஹாக், அங்கு அவன் சந்திக்கும் ஒரு வாடிக்கையாளருக்கு உதவப்போய் நிகழும் திருப்பங்கள் பார்வையாளர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தும். `டைம்-லூப்' எனப்படும் கால சுழற்சியை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படம், பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, செமத்தியாகக் கல்லா கட்டியது. `டைம்ட்ராவல்' பட விரும்பிகள் தவறவிடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று.

102p5.jpg

Groundhog day :

பில் முர்ரே மற்றும் ஆண்டீ மெக்டாவல் நடிப்பில் 1993-ல் வெளிவந்த திரைப்படம் இது. அடாவடியான குணம் கொண்ட வானிலை செய்தி அறிவிப்பாளரான பில் முர்ரே, பனிப்பொழிவு காரணமாகத் தனது செய்திக்குழுவோடு பெனிசில்வேனியா மாகாணத்தில் சிக்கிக்கொள்கிறார். பிப்ரவரி மாதம் 2-ம் தேதி உள்ளூர்வாசிகளால் கொண்டாடப்படும் ‘க்ரவுண்ட் ஹாக் டே’ நிகழ்ச்சியை கவர் செய்யச் செல்லும் அவர், அதே தினத்திலேயே டைம்-லூப்பில் சிக்கிக்கொள்கிறார். அவரது வாழ்க்கையில் அந்த ஒரேயொரு நாள் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. இதிலிருந்து மீள அவர் படும் அவஸ்தைகளும், அவரின் குணத்தில் ஏற்படும் மாற்றங்களும்தான் படத்தின் கதை. காமெடி கலந்துகட்டிய இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. பல விருதுகள் வென்றதோடு, அவசியம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

102p6.jpg

Source code :

ஜேக் ஜில்லென்ஹால் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. ராணுவ வீரரான ஜேக், சிகாக்கோ செல்லும் ரயிலில் வேறொருவரின் உடம்பில் கண்விழிக்கிறார். சிறிது நேரத்தில் அந்த ரயில் வெடி விபத்தில் சின்னாபின்னமாகிறது. அமெரிக்க அரசின் ‘சோர்ஸ் கோட்’ என்ற பரிசோதனைத் திட்டத்தின் கீழ், ஜேக் கடந்த காலத்துக்கு அனுப்பப்படுவது தெரிகிறது. மீண்டும் பழையபடி ரயில் பயணத்தில் கண்விழிக்கும் ஜேக், வெடிகுண்டு விபத்தை நிகழ்த்தும் கொலைகாரனைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களம். படம் வெளியாகி பல விருதுகளை அள்ளியதோடு, வசூலையும் குவித்தது. இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது. திகட்டாத `டைம்ட்ராவல்' படம் பார்க்க விரும்புவர்களை இப்படம் நிச்சயம் ஏமாற்றாது.

102p7.jpg

The butterfly effect :

‘ஃபைனல் டெஸ்டினேசன்’ திரைப்பட வரிசை மூலம் ரசிகர்களுக்கு மரணபயத்தைக் காட்டிய எரிக் ப்ரெஸ் மற்றும் மெக்கீ க்ரூபர் இயக்கிய `டைம்ட்ராவல்' வகை திரைப்படம் இது. ஒரு சின்ன சம்பவத்தால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்தான் பொதுவாக ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ என்றழைக்கப்படும். சிறு வயதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்வதாக நினைக்கும் கதாநாயகன் அஷ்டன் கட்சர், தனது சிறுவயது டைரியை வாசிக்கும்போது கடந்த காலத்துக்குப் பயணிக்கும் வித்தியாசமான சக்தியைப் பெறுகிறான். கடந்த காலத்துக்குச் சென்ற கதாநாயகன் செய்யும் மாற்றங்களால் தற்காலிக வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை ஆக்கியதால், வெளியான அத்தனை நாடுகளிலும் பெரிய வெற்றி பெற்றது.

vikatan

Share this post


Link to post
Share on other sites
மூடப்படுகிறது உலகின் மிகப்பெரிய மீன்சந்தை
மூடப்படுகிறது உலகின் மிகப்பெரிய மீன்சந்தை
----------------------------------------------------------------------------------
உலகின் மிகப்பெரிய மீன்சந்தை இது. 1935 ஆம் ஆண்டு டோக்கியோ சுகுஜியில் பிரத்யேகமாக இந்த மீன் அங்காடி வடிவமைத்து கட்டப்பட்டது.

இந்த ஆண்டின் முடிவில் இது மூடப்பட்டு டோக்யோ பே பகுதியில் புது இடத்தில் புது கட்டிடத்தில் இருந்து செயற்படும்.

பிரபல சுஷி உணவு விடுதி உரிமையாளர்கள் தினமும் காலையில் இங்கே தரமான மீன்களை வாங்குவார்கள். 210 கிலோ எடையுடைய நீலச்செதில் ட்யூனா மீன் $632,000 விலைக்கு விற்கப்படுகிறது.

அதிக அளவில் பிடிக்கப்பட்ட நீலச்செதில்ட்யூனா மீன்களுக்கு, 1960 முதலே தட்டுப்பாடு நிலவுகிறது.

குளிரூட்டப்பட்ட மீன்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்தை விட குறைவாகவே இங்கு விற்பனைக்கு வருகின்றன.

கடலிலிருந்து நேராக இங்கே வரும் மீன்களின் அளவு அதிகபட்சம் 300, 200 சிலசமயம் 100 அல்லது அதைவிட குறைவு.

மீன்வரவு குறைந்துகொண்டே வருவதால் தேவையான மீன்களை இங்கே விற்கமுடிவதில்லை என்கிறார் தோய்சிரோ லிடா. தன் வாழ்நாள் முழுக்க இங்கே பணிசெய்தார். மீன் வரத்தின் மாற்றங்களை நன்கு கவனித்து வருகிறார்.

நீலச்செதில் ட்யூனா மீன் அழிவதற்குள் அதை பிடிக்கத்தடை விதிக்க வேண்டுமென சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

குழந்தைகளுக்கான குறும்படம்: சிறுமியும் சுண்டு விரல் சிறுவனும்

 
animation_3119553f.jpg
 
 
 

நீங்கள் காகிதத்தில் ராக்கெட் செய்து அதை மேலே பறக்க விட்டு விளையாடியிருப்பீர்கள். இதைப்போலவே ஒரு சிறுமி செய்யும் குட்டி விமானத்தின் ஐடியா சுண்டு விரல் அளவுக்கு உள்ள ஒரு குட்டியூண்டு சிறுவனுக்கு எப்படி உதவுகிறது என்பதைச் சொல்கிறது ‘சோர்’ (soar) என்ற குழந்தைகளுக்கான குறும்படம். அதோடு எந்த ஒரு முயற்சியையும் எப்படித் திருவினையாக்க வேண்டும் என்றும் சொல்கிறது இந்தப் படம்.

அந்தச் சிறுமி ஒரு குட்டி விமானத்தைச் செய்து அதை வானில் தூக்கி வீசுகிறாள். ஆனால், அது சிறிது தூரம் பறந் போனதும் கீழே விழுந்து விடுகிறது. உடனே அவள் சோகத்தில் அமைதியாக உட்கார்ந்துவிடுகிறாள். அப்போது வானத்திலிருந்து ஒரு சிறிய பை அவளது தலையில் ‘தொப்’ பென்று விழுகிறது. அது என்னவென்று பார்ப்பதற்குள், ஒரு சிறிய விமானம் அவள் அருகில் வந்து, மரத்தில் மோதி உடைந்து விழுகிறது.

அதிலிருந்து ஒரு குட்டியூண்டு சிறுவன் வெளியில் வருகிறான். அவன் சுண்டு விரல் அளவே இருக்கிறான். பெரிய உருவமாக நிற்கும் அந்தச் சிறுமியைப் பார்த்துப் பயப்படுகிறான். அருகில் கிடக்கும் ஒரு பென்சிலை எடுத்துச் சிறுமியுடன் சண்டைக்குத் தயாராகிறான். பயந்தபடியே அந்தப் பையை எடுக்க முயல்கிறான்.

ஆனால், அந்தச் சிறுமியோ அந்த பென்சிலை அவனிடமிருந்து பிடுங்கி, அவனது உடைந்த விமானத்தின் இறக்கைகளைச் சரி செய்கிறாள். தான் செய்த விமானத்தோடு அவனது விமானத்தையும் சேர்த்துக் கட்டுகிறாள். குட்டிச் சிறுவனின் நண்பர்கள் பறந்துசெல்லும் திசையை நோக்கிப் பறக்க வைக்க முயல்கிறாள். ஆனால், அந்த விமானம் மீண்டும் கீழே விழுந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.

animation_2_3119554a.jpg

அதனால் அச்சிறுவன் இனிமேல் தன் நண்பர்களோடு சேர முடியாதோ என்று சோகத்தில் மூழ்குகிறான். அந்தச் சிறுமியும் நம்மால் உதவ முடியவில்லையே என்று வருத்தம் கொள்கிறாள். அப்போது காற்றில் ஒரு காகிதம் பறந்து வருகிறது. அதைப் பார்த்ததும் அச்சிறுமிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த யோசனைப்படி குட்டிச் சிறுவனை வானில் பறக்க வைக்கச் சிறுமியால் முடிகிறதா? அதற்கு அவள் என்ன செய்தாள்? அந்தக் குட்டி சிறுவன் தன் நண்பர்களோடு சேர்ந்தானா? இதுதான் ‘சோர்’ அனிமேஷன் குறும்படத்தின் கதை.

மொத்தம் 6.14 நிமிடங்கள் இந்தக் குறும்படம் ஓடுகிறது. 2014-ம் ஆண்டு மார்ச் வெளியானது இப்படம். அலைஸ் ட்சுயூ என்ற தைவானைச் சேர்ந்த பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கினார். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற அடிப்படைக் கருத்தை அழகாகக் கூறி, பல விருதுகளை அள்ளிக் குவித்தது இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? இதோ

 

 

tamil.thehindu

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Nahaufnahme

காலஞ்சென்ற பிரபல பின்னணிப் பாடகரும், புகழ்பெற்ற கர்நாடக சங்கீத இசைப்பாடகருமான சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பிறந்தநாள்.

 

Share this post


Link to post
Share on other sites

 

அண்டார்டிக் பனிப்படலத்தில் மாபெரும் வெடிப்பு

Share this post


Link to post
Share on other sites

இன்பாக்ஸ்

 

 36p5.jpg

36p1.jpg

செம கொண்டாட்டத்தில் இருக்கிறது தெலுங்கு சினிமா. பாலகிருஷ்ணாவின் 100-வது படம் `கெளதம புத்ர சட்டகர்னி', ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் சிரஞ்சீவியின் 150-வது படம் `கைதி நம்பர் 150' என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்புகின்றன. `கத்தி' ரீமேக்கான `கைதி எண் 150' படத்தில் 61 வயதான சிரஞ்சீவி செம ஸ்மார்ட் லுக், துள்ளல் டான்ஸுமாக மிரட்ட, இன்னொரு பக்கம் சட்டகர்னியாக பாலையா கிராஃபிக்ஸில் தெறிக்கவிட, ரசிகர்கள் டபுள் ஹேப்பி. பாய்ஸ் ஆர் பேக்!


36p2.jpg

25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். `ரோஜா' படம் வெளிவந்த புதிதில் மோகன்லால், மதுபாலா நடித்த `யோதா' என்ற படத்துக்கு இசையமைத்த
ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது இரண்டாவது முறையாக மோகன்லாலுடன் இணைகிறார். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய `ரந்தமூழம்' வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், பாஞ்சாலியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க, மலையாளத்தின் மெகா பட்ஜெட் படமாக உருவெடுக்க இருக்கிறது `ரந்தமூழம்'. சேட்டன்ஸ் சேஞ்சிங்!


36p3.jpg

அடுத்த அதிரடிக்கு அமீர்கான் ரெடி. `தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' படத்தில் `பிக் பி' அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார் அமீர். `தூம் 3'  இயக்குநர் விஜய் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படம்,  `கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவின்போது கொள்ளைக்காரர்களாக, கொலைகாரர்களாக அடையாளப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிய கதை. கொள்ளைக் காரராக அமீர்கான் நடிக்க, கூட்டத்துக்குத் தலைவனாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். பாலிவுட் அதிரப்போகுது!


36p4.jpg

இந்த ஆண்டு ஆஸ்கரில் பல விருதுகளை அள்ளப்போகும் படமாக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது `லா லா லேண்ட்'. காதலும் காதல் நிமித்தமுமான இந்தப் படத்தில், ரயான் கோஸ்லிங், எம்மா ஸ்டோனின் ரொமான்ஸ் செம!  சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, பாடல் என, ஏழு கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறது. அடுத்தது ஆஸ்கர்தான் என உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.
விருது விருது... வருது வருது!

vikatan

Share this post


Link to post
Share on other sites

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது (Photo)


மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது (Photo)
 

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

தனது தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுரைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16) சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் பேச வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த பழமையான புகைப்படத்தையும் சேர்த்து பாரதியாரின் அசல் புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

201701171309412676_A-new-98yearold-photo-of-an-poet-Bharati_SECVPF.gif

http://newsfirst.lk/

Share this post


Link to post
Share on other sites
உறைந்த ஆற்றின் பனிக்கட்டிக்குள் சிக்கிய நரி
 

ஜேர்­ம­னியைச் சேர்ந்த நபர் ஒருவர், உறைந்த ஆற்றின் பனிக்குள் சிக்­கி­யி­ருந்த நரி ஒன்றை வெளியே எடுப்­ப­தற்­காக பாரிய பனிக்­கட்­டியை உடைத்­துள்ளார்.

 

21837shutterstock_553637716.gif

 

டனுபே ஆற்று நீர் கடும் குளி­ரினால் உறைந்­த­போது, இந்த நரி சிக்­கிக்­கொண்­டது.

 

21837icet-5.gif

 

ஜெகர் பிரான்ஸ் ஸ்டேலே என்­பவர் நரியை காப்­பாற்­ற­வ­தற்­காக அது சிக்­கி­யி­ருந்த பனிக்­கட்டிப் பகு­தியை வெட்டி எடுத்தார். எனினும் , இயற்­கை­யான முறையில் அந்த நரி இறந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்
­ப­டு­கி­றது.

 

21837icet.gif

 

பனிக்­கட்­டிக்குள் நரி சிக்­கியி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளையும் ஜெகர் பிரான்ஸ் ஸ்டேலே வெளி­யிட்­டுள்ளார். சிலர் இப்
­ப­டங்கள் போலி­யா­னவை எனத் தெரி­வித்­துள்­ளனர்.

 

21837ice2.gif

 

எனினும், இவை உண்­மை­யான புகைப்­ப­டங்கள் எனவும் உறைந்த நீர்­நி­லைகள் குறித்து மக்­களை எச்­ச­ரிப்­ப­தற்­காக இப்­ பு­கைப்­ப­டங்­களை தான் வெளியிட்டதாகவும் 61 வயதான ஜெகர் பிரான்ஸ் ஸ்டேலே தெரிவித்துள்ளார்.

.metronews.lk

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites