Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

நகரும் படிக்கட்டுகள் எப்படி இயங்குகின்றன?

 

 
escalator_3120875f.jpg
 
 
 

மிக உயரமான எண்ணற்ற படிக்கட்டுகளைப் பார்த்தால் பலருக்கும் ஒருவித ஆயாசம் தோன்றும். யாரால் இவ்வளவு படிகளை ஏறமுடியும் என்று பெருமூச்சு விட்டால், “பின்னே என்ன உன்னை தூக்கிக் கொண்டு அந்தப் படிகளே நகருமா என்ன?” என்று கூட இருப்பவர்கள் கிண்டலாகக் கேட்கக் கூடும்.

ஆனால் இப்போது நகரும் படிகள் நகர மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டன. எஸ்கலேட்டர் எனப்படும் இவை பெரிய மால்களிலும், ரயில் நிலையங்களிலும் பெருமளவில் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களைத்தான் பல்லக்கில் தூக்கிக் கொண்டு போவார்கள். இந்த நகர்படிகள் உங்களை அதேபோல் ‘தூக்கிக் கொண்டு’ செல்லக் கூடியவை.

இது எப்படி வேலை செய்கிறது என்ற வியப்பு அதில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்குமே வருவது இயல்பு. நகர்படிகள் எனப்படும் Escalator இயங்குவதை இப்படி எளிமையாகக் குறிப்பிடலாம். நகரும் படிகளுக்குக்கீழ் ஒரு பெல்ட் இருக்கிறது. இந்த பெல்ட் என்பதை ஒரு ராட்சத சைக்கிள் செயினுடன் ஒப்பிடலாம். சக்கரங்களுக்கு நடுவே சைக்கிள் செயின் இயங்குவதைப்போல நகரும் படிகளுக்குக் கீழ் இந்த பெல்ட் இயங்குகிறது. இந்த பெல்ட்டை இயக்குவதற்கு மோட்டார்கள் உள்ளன. படிகள் சுற்றிச் சுற்றி வரும் வகையில் அந்த பெல்ட்டை இவை இயக்குகின்றன.

இந்த பெல்ட் எப்போதும் ஒரே திசையில்தான் சுற்றும். அதனால்தான் ஒரு எஸ்கலேட்டரைக் கொண்டு மேலே ஏறலாம். அல்லது கீழே இறங்கலாம். இரண்டையும் செய்ய முடியாது.

அமெரிக்காவில் 35,000 நகர்படிகள் உள்ளனவாம். வீடன் (Wheaton) ரயில் நிலையத்திலுள்ள எஸ்கலேட்டர் நீளமானது. 230 அடி உயரம் கொண்டது. இதைக் கடக்க 2 நிமிடங்கள் 40 நொடிகள் தேவைப்படும் (கண்களை மூடிக் கொண்டு இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மனதில் கொண்டு வாருங்கள்). இதற்கே பெருமூச்சு விடுபவர்கள் அடுத்த தகவலைப் படிக்க வேண்டாம். ஹாங்காங்கிலுள்ள விக்டோரியா சிகரத்தில் சரிவுகளில் அமைந்துள்ள எஸ்கலேட்டரில் பயணம் செய்து முடிக்க இருபது நிமிடங்களாகும். 2620 அடி உயரம் கொண்ட இந்த எஸ்கலேட்டர் 23 பகுதிகளைக் கொண்டது.

1892-ல் எஸ்கலேட்டர் என்பது முதல்முறையாக காப்புரிமை பெறப்பட்டது. அதன் வடிவம் அப்படியொன்றும் அதற்குப் பிறகு மாறிவிடவில்லை. எஸ்கலேட்டர் விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏதோ தடுக்கிவிட்டது, விழுந்து எழுந்தார்கள் என்பதைத் தாண்டி எதிர்பாராத விதத்தில்கூட இந்த விபத்துகள் நடந்துள்ளன.

1987-ல் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் ஒன்றிலுள்ள எஸ்கலேட்டர் திடீரென வெடித்தது. அந்தப் பகுதியிலிருந்து 31 பேர் இறந்தனர். எஸ்கலேட்டர் கருவிக்குக் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வந்த கிரீஸ் மற்றும் குப்பைத்தாள்தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தார்கள்.

அதற்குப் பிறகு அவசர நிலையில் எஸ்கலேட்டரை நிறுத்தக்கூடிய பொத்தான்கள், தானாகவே நிலத்தடிப் பகுதிகளைச் சுத்தம் செய்யக் கூடிய கருவிகள் போன்றவை இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.

உலக அளவில் ஓடிஸ், கோன், ஷின்ட்லர், தைஸென்க்ரூப் ஆகிய நான்கு நிறுவனங்கள்தான் பெருமளவில் எஸ்கலேட்டர்களை தயாரிக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு முன் சிடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் ஜாக் லிவி என்கிற பேராசிரியர் ஒரு புதிய கருவியை உருவாக்கினார். Lebytator என்று பெயரிடப்பட்ட இது மேலும், கீழுமாக இரு திசைகளிலும் செல்லக் கூடிய நகர்படிகள். இது இன்னும் பரவலாகவில்லை.

எஸ்கலேட்டர் விபத்துகளை நினைத்தால் கவலை உண்டாகிறது. என்றாலும் எஸ்கலேட்டர்களைத் தவிர்க்க வேண்டுமென்று விஞ்ஞானி கள் கூறுவதில்லை. ஏனென்றால் நமது வழக்கமான மாடிப் படிகளில் தடுக்கி விழுபவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது!

வீடுகளிலும் எஸ்கலேட்டர் பொருத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் சமீப கால வியப்பு. “வீட்டுக்குள் எஸ்கலேட்டர்கள் குறைந்த நேரத்தில் கட்டித் தரப்படும் கட்டிடத்துக்குப் பாதிப்பு இருக்காது. வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுங்கள். மூத்தவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் வசதி செய்து கொடுங்கள்” என்றெல்லாம் கூறி இதற்கு விளம்பரம் செய்கிறார்கள். முக்கியமாக இதற்கு அப்படியொன்றும் அதிக மின்சாரம் செலவாகிவிடாது என்பது இவர்களின் முக்கிய அறைகூவலாக வருகிறது. மாடிப்படிகளையே எஸ்கலேட்டர் ஆக்க முடியும் என்கிறார்கள். முக்கியமாக அடுக்கு மாடிக் கட்டிடக் குடியிருப்புகளை இவர்கள் குறிவைக்கின்றனர். வெறும் ஆறு, ஏழு படிகள் கொண்ட எஸ்கலேட்டர் எல்லாம் வீடுகளில் இடம் பெறத் தொடங்கிவிட்டன.

Claustrophobia என்பது மூடிய அறைக்குள் சிறிது நேரம்கூட இருக்க முடியாத அதீத பயத்தைக் குறிக்கிறது. இந்தத் தன்மை கொண்டவர்களால் மின்தூக்கியில் (lift) சிறிது நேரம் கூட இருக்க முடியாது. இவர்களுக்கும் தங்கள் வீடுகளில் உள்ள நகர்படிகள் ஆசுவாசமளிக்கின்றன.

tamil.thehindu

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

பிரியங்கா சோப்ராவிற்கு அமெரிக்காவின் இரண்டாவது கெளரவம்!

priyanka_03568.jpg


பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவுக்கு  இரண்டாவது முறையாக 'பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது' வழங்கப்பட்டுள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மைக்ரோசாப்ட் திரையரங்கில்  43-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்க தொலைக்காட்சித் தொடரான 'குவாண்டிகோ'வில் நடித்து  வரும் இந்திய நடிகை  பிரியங்கா சோப்ராவிற்கு  பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகளில் விருப்பமான நடிகை  Favorite Actress in A New TV Series) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.


இவ்விழாவில் பங்கேற்ற பிரியங்கா கூறுகையில், இவ்விருதினை பெறுவதற்கு முக்கிய காராணமான பெண்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால் இது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். பிரியங்கா தற்போது 'குவாண்டிகோ' தொடரின் 2-வது சீஸனில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

நிலவில் உங்கள் பெயர்; கட்டணம்... ஆயிரம் ரூபா மட்டுமே!

 

 

விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முயற்சிக்குத் தேவையான பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற வித்தியாசமான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. அது, நிலவில் உங்கள் பெயரை எழுதுவதுதான்!

பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனம், இம்மாத இறுதியில் இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் தாம் உருவாக்கிவரும் ரொபோ ஒன்றை அனுப்பவுள்ளது.

10_Moon.jpg

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி - அதாவது, இந்தியாவின் 71வது குடியரசு தினத்தன்று - பிஎஸ்எல்வி ரொக்கெட் மூலம், சந்திரனில் விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா தயாராகிவருகிறது. அதனுடன், மேற்படி நிறுவனம், தான் உருவாக்கிவரும் ரொபோ ஆய்வு இயந்திரம் ஒன்றையும் அனுப்ப எண்ணியுள்ளது.

இதற்குத் தேவையான பணத்தை மக்களிடம் இருந்து பெறுவதற்கு வித்தியாசமான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை ரூபா மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாவைச் செலுத்தினால், ஒரு சிறு அலுமினியத் துண்டில் உங்கள் பெயரை மிக நுண்ணிய அளவில் செதுக்கி அதை நிலவின் மேற்பரப்பிலேயே விட்டுவருவதாக இந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.

‘எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் சந்திரனுக்கு சுற்றுலாச் செல்லும்போது, தங்களது மூதாதையரான உங்களது பெயர் நிலவில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படலாம்’ என்றும் இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, சுமார் பத்தாயிரம் பேர் தங்களது பெயரை நிலவில் விட்டுவருவதற்காக தம்மைப் பதிவுசெய்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

virakesari.lk

Link to comment
Share on other sites

 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், டிரம்பின் முதல் நடனம்

அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20 ஆம் நாள் பதவியேற்ற பின்னர், அதன் மகிழ்ச்சியை தன்னுடைய ஆதரவாளர்களுடன் டிரம்ப் கொண்டாடினார்.

Link to comment
Share on other sites

116p11.jpg116p71.jpg

செலீனா கோமஸ்தான் இந்த வார வைரல் வதந்தி. ஒரு பிரேக்குக்குப் பின் கரியரைத் தொடங்கியிருக்கும் அவர் சமீபத்தில் கனடா நாட்டுப் பாடகர் வீக்கெண்டுடன் (பேரே அதுதான் ஜி) பப்ளிக்காக காதல் சில்மிஷங்களில் ஈடுபட, அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின.``இவங்க ரெண்டு பேரும் எப்படி?'' என ரசிகர்கள் தலை காய்ந்துகொண்டிருக்கும்போதே வீக்கெண்டின் முன்னாள் காதலியான பெல்லா ஹேடிட் ...செலீனா கோமஸை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்துவிட்டார். இதனால் காற்றில் பல கதைகள் பறக்கின்றன. #செம ஹாட்டி!


116p3.jpg116p2.jpg

செலிப்பிரிட்டி வாரிசுகள் அங்கேயும் லைம்லைட்டில்தான் இருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்ஸன் பற்றிய டெலிவிஷன் மூவி ஒன்று தயாராகிறது. அதில் மைக்கேல் ஜாக்ஸனாக ஜோசப் ஃபியன்ஸ் என்ற இங்கிலாந்து நடிகர் நடிப்பதாக அறிவிப்பு வர, கொதித்து எழுந்திருக்கிறார் எம்.ஜே-யின் மகளான பாரிஸ் ஜாக்ஸன். `அப்பாவை அவமானப்படுத்த வேண்டாம். நீங்கள் படம் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்படிப் பொருந்தாதவர்களை நடிக்க வைக்காதீர்கள்!' என ஓப்பனாக குமுறியிருக்கிறார். #போல்டு பாரிஸ்!


116p4.jpg

மெரிக்க மாடலான கெண்ட்ரா வில்கின்சன் செம தில்லு பார்ட்டி. சமீபத்தில் ஒரு ஃப்ளைட்டில் ஏறிய அவரும் அவர் தோழியும் உற்சாக `பானம்' அருந்தியிருக்கிறார்கள். அதோடு இல்லாமல் சத்தம் போட்டு மற்றவர்களுக்கும் தொல்லை தர, முன்சீட்டில் இருந்த ஒரு பெண் எழுந்து திட்டியிருக்கிறார். உடனே சண்டைக்குப் போய்விட்டார் கெண்ட்ரா. `அவளுக்கு என்மீது பொறாமை. அதனால்தான் திட்டினாள்' என்பது கெண்ட்ரா வாக்கு. #குடி குட்டியைக் கெடுக்கும்!


116p6.jpg116p5.jpg

ன் காதலிக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் பரிசுகள் தருவது பாடகர் ட்ரேக்கின் ஸ்டைல். இதற்கு முன்னால் அவரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்த ரிஹான்னா, பெர்னிஸ் ஆகியோருக்கு காஸ்ட்லி சர்ப்ரைஸ்கள் கொடுத்து அசத்தினார். இப்போது அவர் காதல் வயப்பட்டிருக்கும் ஜெனிஃபர் லோபஸும் இதற்கு விதிவிலக்கில்லை. சமீபத்தில் அவருக்கு ஒரு லட்சம் டாலர் செலவில் ஒரு பிளாட்டின நெக்லஸ் வாங்கிப் பரிசளித்திருக்கிறார் ட்ரேக். படத்தைப் பார்த்தே புகைவிடுகிறார்கள் நெட்டிசன்கள். #நச்!

vikatan.

Link to comment
Share on other sites

எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்கள் உண்டு
 

article_1484653242-index.jpgஇயற்கை அனர்த்தங்கள் என்றாலே மக்கள் ஆண்டவன் மீதுதான் தங்கள் கோபத்தைக் காட்டுவதுண்டு. ஆனால், எல்லா நிகழ்வுகளுக்கும் காரண காரியங்கள் உண்டு. மனிதர்களின் அடாத செயல்களையும் நாங்கள் ஏற்கத்தான் வேண்டும்.  

ஆனால், புயல் ஏன் வருகிறது என்பதை விடுத்து, அதனால் இந்தப் பூமிக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றித் தெரியவேண்டாமா? 

பூமிப்பந்து வெப்பதட்பங்களால் சூடேறியிருக்கிறது. என்னதான் கடல், ஆறு, ஏரிகள் இருந்தாலும் கூட, வெப்பத்தைச் சீராக்கும் கைங்கரியத்தைப் புயல் செய்கின்றது. 

அதிவேகமான புயல், பரந்த பரப்பளவைக் காற்றினால் சீராக்கி விடுகின்றது. இதனை மனிதரால் செய்யமுடியாது. புயல் அசுர சக்தியல்லவா? 

இயற்கையின் மாற்றங்களால் மக்களுக்கு ஏற்படும் நலன்களைப் பற்றி நாம் உணர்வதுமில்லை. கருணையே இறைகுணம்! உணர்க தோழர்களே!

Link to comment
Share on other sites

காரணம் ஆயிரம்: எப்படி இருந்த கண்டம் இப்படி மாறிடுச்சு...

 
kaaranam_3119559f.jpg
 
 
 

இயற்கைக் காரணிகளால் மலை சிதையலாம். அது சமவெளியாகிப் போகலாம். ஆனால், நீர் ததும்பி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மலையாக முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதானே யோசிக்கிறீர்கள். ஒரு நதி மலையாகியிருக்கிறது. அதிலும் நமக்குத் தெரிந்த மலை. நமது தேசத்தின் மலைதான். அது இமயமலை!

உலகத்தின் மிக உயர்ந்த சிகரமான ‘எவரெஸ்ட்’ சிகரத்தைத் தாங்கி நிற்கிற இமயமலைதான் பெரும் நதியாய் ஒரு காலத்தில் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. உண்மையிலேயே பெரு நதி அது.

ஆதி பூமி

தொடக்கத்தில் இந்த உலகம் ஒரே கண்டமாகத்தான் இருந்தது. இடைவெளி இல்லாத ஒரே நிலப்பரப்பு. இந்தப் பெரிய நிலப்பரப்புக்கு ‘பான்ஜியா’ (Pangea) என்று பெயர். இந்த நிலப்பரப்பைச் சுற்றிலும் ஒரே நீர்ப்பரப்பு. அதற்கு ‘பாந்தலாசா’ என்று பெயர். பான்ஜியா என்றால் ‘எல்லா நிலமும்’என்று அர்த்தம். ‘பாந்தலாசா’என்றால் ‘எல்லா நீரும்’ என்று அர்த்தம்.

பான்ஜியா, பாந்தலாசா மீது மிதந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் பான்ஜியாவுக்கு நடுவே ‘டெத்திஸ்’ என்று ஒரு நதி தோன்றி பான்ஜியாவை இரண்டாகப் பிரித்தது (சிலர் டெத்தீஸ் நதியை, டெத்தீஸ் கடல் என்றும் அழைக்கிறார்கள்). ‘பான்ஜியா’ இரண்டு பெரும் துண்டுகளாக (இரண்டு பெரிய கண்டங்களாக) உடைந்தது.

பூமியின் உள் அமைப்பைப் பற்றியும், பூமியின் உள்ளே நடக்கும் இயக்கங்கள் பற்றியும் ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தெரிந்துகொண்டால் போதும். நதி எப்படி மலையானது என்ற கேள்விக்கான காரணம் தெரிந்துவிடும்.

பூமிக்கு மேல் எப்போதாவது போர் நடக்கும். பூமிக்கு உள்ளே எப்போதுமே போர்க்களம்தான். பூமி அதன் உட்புறத்தில் மூன்று அடுக்குகளாகக் காணப்படுகிறது. நாம் வாழும் வெளிப்புற அடுக்கு ‘பூமி மேல் ஓடு’. இங்கு பெரும்பாலும் பிரச்சினைகள் எதுவும் (புவியியல் ரீதியாக) ஏற்படுவதில்லை.

எமன் மண்டலம்

இரண்டாவது அடுக்கு ‘எமன் இடை மண்டலம்’. வெள்ளி, அலுமினியம், ஈயம், தங்கம் என்று 85 சதவீத கனிமப் பொருட்கள் இந்த இரண்டாவது அடுக்கில்தான் காணப்படுகின்றன. எனவே, இந்த இரண்டாவது அடுக்கு ரொம்பவே எடை.

மூன்றாவது அடுக்கு கருவம் (Cove) என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இது ரொம்பவே ஆபத்தானது. நிக்கல், இரும்பு ஆகிய இரண்டு உலோகங்கள்தான் கருவத்தில் அதிகம் காணப்படுகின்றன. கருவத்தின் வெப்பநிலையை நம்மால் கற்பனைகூட பண்ணி பார்க்க முடியாது. 5,000 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பநிலைதான் பிரச்சினை. இந்த அடுக்கை நோக்கி எந்தப் பொருளுமே நெருங்க முடியாது. நெருங்கிய எந்தப் பொருளும் முழுமையாக இருக்க முடியாது.

உருகிய குழம்பு நிலையில் காணப்படும் இந்தக் கருவத்தின் அதிக வெப்பநிலை காரணமாக, கருவத்துக்குள் இருக்கும் பெரும் பாறைகள் பிளவுபடுகின்றன. அப்போது அந்தப் பகுதி முழுவதும் அமிழ்ந்துபோகிறது அல்லது உயர்ந்துவிடுகிறது அல்லது இடம் மாறிவிடுகிறது.

அப்போது நிலம் அசைவுக்கு உள்ளாகிறது. இந்நிகழ்ச்சியின் விளைவாக ஆற்றல் வெளிப்படுகிறது. இது அலைகளாகப் பூமியில் பரவுகிறது. இந்த அலைகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்கத்தின்போது பூமியில் பெரும் பிளவுகள் உண்டாகின்றன. நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

இது போன்ற அதிர்வுகளும், இயக்கங்களும் பூமிக்குள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், பூமியில் கண்டத்திட்டுகள் ஒரு திசை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இன்றைக்கும் இந்த நகர்வுகள் தொடர்கின்றன. எஸ்கிலேட்டர் (மின் ஏணி) மாதிரி இந்தப் பூமியின் தட்டுகள் நகர்கின்றன. எஸ்கிலேட்டர் படியில் நின்று பயணம் செய்கிற பயணிகள் மாதிரி நாம் மேலே மேலே சென்றுகொண்டிருக்கிறோம்.

எஸ்கிலேட்டர் விரைவாக நகர்வதால் அதன் இயக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பூமியின் இயக்கமும், நகர்வும் மெதுவாக இருப்பதால் நாம் அதனை உணர முடிவதில்லை. இந்திய தட்டு இன்றும் வடக்கு நோக்கி வருடத்துக்கு 15 செ.மீ. தூரம் நகர்கிறது. 15 செ.மீ. தூரம் என்பது குறைவான தூரம் என்பதால் அதை நாம் கண்டு கொள்வதில்லை. (இந்த நகர்வால்தான் இமயமலை பகுதியிலும், வட இந்தியப்பகுதியிலும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது).

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பான்ஜிலா உடைந்து அங்காரா, கோண்ட்வானா என்று மிதந்துகொண்டிருந்த இரண்டு தட்டுகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவை இரண்டும் ஒன்றோடொன்று வேகமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் (மோதிக்கொண்ட பகுதிகள்) வேகமாக உயர்ந்துவிட்டன. இது மாதிரியான விபத்துகளை ‘Collision’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் போது, நேரடியாக மோதிக்கொண்ட ரயில்களின் பெட்டிகள் அந்தரத்தில் உயர்ந்து (தொங்கிகொண்டு) நிற்கும் இல்லையா? அப்படித்தான் அங்காரா, கோண்ட்வானா என்ற இரண்டு திட்டுகளும் மோதிக்கொண்ட பகுதி உயர்ந்து இமயமலை உருவாகிவிட்டது. டெத்திஸ் நதி காணாமல் போய்விட்டது.

இப்படித்தான் வந்தது இயமலை.

tamil.thehindu

Link to comment
Share on other sites

‘ட்ரெண்ட்’ பெட்டி!

 

126p1.jpg

இணையத்தில் நடந்த மல்லுக்கட்டு

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்தவார ஹாட் டாபிக் ஜல்லிக்கட்டுதான். பாரம்பர்யம் என்பதால் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று ஒருபக்கமும், மிருகவதை என்பதால் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று மறுபக்கமும் விவாதங்கள் சூடு பறந்தன. சோஷியல் மீடியா மட்டுமின்றி பல இடங்களிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டனர். நடிகர் சிம்பு, `ஆர்.ஜே' பாலாஜி, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்ததில், `ஜல்லிக்கட்டு' விவகாரம் சூடுபிடித்தது. இதன் காரணமாக #Jallikattu #WeWantJallikattu போன்றவை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பதிவான ட்வீட்களால் #BanJallikattu டேக்கும் ட்ரெண்ட்டில் இடம்பெற்றது. நல்லா மல்லுக்கட்டுறாங்கப்பா!


126p2.jpg

உலக நாயகனே!

அமெரிக்க அதிபராகத் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, பாரக் ஒபாமா மக்களிடையே நிகழ்த்திய இறுதி உரைதான் அமெரிக்க சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாபிக். தொடர்ந்து இருமுறை அதிபர் பதவியில் அமர்ந்த ஒபாமாவின் 8 ஆண்டுகால ஆட்சியை மக்கள் நினைவுகூர்ந்தனர். `அமெரிக்கர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் வலிமை. வேற்றுமை உணர்வு இருக்கக் கூடாது' எனப் பேசிய ஒபாமா, நெகிழ்ந்து கண்கலங்கினார். மொத்தம் 51 நிமிடங்கள் ஒபாமா நிகழ்த்திய, உணர்வுபூர்வமான பிரிவு உரையால் ட்விட்டர் ட்ரெண்ட் அதிர்ந்தது. உலக அளவிலான ட்ரெண்ட்டிங்கில் #Obama பெயர் முதலிடம் பிடித்தது. Bye Bye Obama!


126p3.jpg

இந்திய சுவரின் பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இளம் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கடந்தவாரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். உலகின் கிளாஸிக் கிரிக்கெட்டர்கள் பட்டியலில் மிக முக்கியமானவரான டிராவிட்க்கு, உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. #Dravid #HBDDravid #happybirthdayrahuldravid போன்ற பல டேக்குகள் ஒரேநாளில் ட்ரெண்ட் ஆகின. `என் வாழ்வுக்கு கிரிக்கெட் எவ்வளவு பங்களித்துள்ளது என்பதை பிறந்தநாட்கள் நினைவூட்டுகின்றன. நட்புகள், அனுபவங்கள், பாசம் மற்றும் பல விஷயங்களை எனக்கு கிரிக்கெட் அளித்துள்ளது' என நெகிழ்ந்துள்ளார் பிறந்தநாள் பேபி! ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில், `கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்' என டிராவிட்டுக்குப் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள்!


126p4.jpg

யாருக்கு ஐந்தறிவு..?

பி.பி.சி வெளியிட்ட வீடியோ ஒன்று, கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ, விலங்குகள் தங்களுக்குள் அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதைப் படமாக்கியுள்ளது. கேமரா பொறுத்தப் பட்ட ரோபோடிக் குட்டிக் குரங்கு எந்தவித அசைவும் இல்லாததைப் பார்த்து, உயிரிழந்துவிட்டதாக குரங்குகள் ஒப்பாரி வைத்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. #LangurMonkeys Grieve என்ற பெயரில் வெளியான இந்த வீடியோவானது, இரண்டே நாட்களில் 11 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. கண் கலங்கிட்டேன்!

Link to comment
Share on other sites

பேசும் படங்கள்: வேணும் வேணும் ஜல்லிக்கட்டு வேணும்!

 

 
தலைமுறைகளை தாண்டியும் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் தந்தையின் தோளில் அமர்ந்து ஒலிபெருக்கி மூலம் உரிமை முழக்கமிடும் இளங்கன்று.படம்: ஜி.ஞானவேல்முருகன். | ‘ஏறு தழுவல் எங்கள் உரிமை’ என்ற பதாகையை ஏந்திய படி ஜல்லிக்கட்டு காளை வேடமணிந்த இளங்கன்று. படங்கள்: க.ஸ்ரீபரத்
தலைமுறைகளை தாண்டியும் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் தந்தையின் தோளில் அமர்ந்து ஒலிபெருக்கி மூலம் உரிமை முழக்கமிடும் இளங்கன்று.படம்: ஜி.ஞானவேல்முருகன். | ‘ஏறு தழுவல் எங்கள் உரிமை’ என்ற பதாகையை ஏந்திய படி ஜல்லிக்கட்டு காளை வேடமணிந்த இளங்கன்று. படங்கள்: க.ஸ்ரீபரத்
 
 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வீரியமிக்க, கட்டுக்கோப்பான போராட்டத்தால் தமிழகம் புதிய கவுரவம் பெற்று தரணியில் தலைநிமிர்ந்துள்ளது. கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரையில் குடும்பம் குடும்பமாய் திரண்டு வந்து சாலைகளில் உரிமை முழக்கமிட்டவர்களின் எழுச்சிகரமான போராட்டக் காட்சிகளின் சிறப்புப் படத் தொகுப்பு.

9_3121181a.jpg

ஜல்லிக்கட்டு கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் ருத்ரதாண்டவத்தை நினைவூட்டுகிறதோ என எண்ணும்படி புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில் சிவபெருமான் வேடமணிந்து நடனமாடும் நாடகக் கலைஞர்.படம்: எம்.சாம்ராஜ்

7_3121184a.jpg

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் சென்னை மெரினா கடற்கரையில் இசைக்கேற்ப உற்சாக நடனமிடும் சிறார்கள்.படம்: சி.பார்த்திபன்

8_3121185a.jpg

ஜல்லிக்கட்டின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பேருந்து கூரையின் மேல் ஏறி நின்று மெரினா கடற்கரை நோக்கி பயணமாகும் இளைஞர்கள்.படம்: கே.வி.சீனிவாசன்

10_3121186a.jpg

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பெருகிவரும் ஆதரவுக்கு அடையாளச் சின்னமாக மெரினா கடற்கரை காட்சியளிக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வாகனங்களும் அணிவகுத்து வந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு போராட்டம் நிதானமாக நடைபெறுகிறது.படம்: ம.பிரபு

4_3121206a.jpg

திருச்சியில் நேற்று நடந்த போராட்டத்தில், மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்தியில் எழுதப்பட்ட வாசகங்களுடன் தந்தையுடன் பங்கேற்ற சிறுமி. படம்: ஜி.ஞானவேல்முருகன். போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட சிறுவனை உற்சாகமாக தூக்கி மகிழ்ந்த இளைஞர் பட்டாளம்.

3_3121210a.jpg

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டம் தொடங்கி 5 நாட்கள் ஆகியும், கூட்டம் அதிகரித்துள்ளதே தவிர இம்மியளவும் குறைந்தபாடில்லை. படம்: ஜி.மூர்த்தி

2_3121211a.jpg

ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி, மதுரை தமுக்கம் மைதானம் முன் அலைகடலென திரண்ட மக்கள். படங்கள்: எஸ். ஜேம்ஸ்

1_3121213a.jpg

பெங்களூரு காரைக்கால் ரயில் சேலம் முள்ளுவாடி கேட் அருகே இரண்டாவது நாளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பகலில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்த பயணிகள் ரயில் நேற்று இரவு வரை விடுவிக்கப்படவில்லை. படம்: எஸ். குரு பிரசாத்

 

tamil.thehindu.

Link to comment
Share on other sites

3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி உலக சாதனை

 

குஜராத் மாநிலம் காக்வாட் நகரில் நேற்று ஒரே நேரத்தில் 3.5 லட்சம் பேர் தேசிய கீதத்தை பாடி புதிய சாதனை படைத்தனர்.
குஜராத் மாநிலம் காக்வாட் நகரில் நேற்று ஒரே நேரத்தில் 3.5 லட்சம் பேர் தேசிய கீதத்தை பாடி புதிய சாதனை படைத்தனர்.
 
 

குஜராத் மாநிலம், ராஜ்காட் மாவட்டம், காக்வாட் நகரில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலில் நேற்று அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேசிய கீதத்தை பாடி புதிய உலக சாதனை படைத்தனர்.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டில் வங்கதேசத்தில் 2.54 லட்சம் பேர் சேர்ந்து அந்த நாட்டு தேசிய கீதத்தை பாடியது உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேசிய கீத சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

இவர் இந்தியாவின் சோலார் பெண்மணி!

புதுமைஸ்ரீ லோபாமுத்ரா

 

60p1.jpg

ம் மக்கள் இப்போதுதான் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்துப் பெண், தொழில்முறையில் சோலார் பேனல்கள் அமைத்திருக்கிறார். அத்துடன், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, மாத வாடகைக்கு சார்ஜ் செய்யப்பட்ட விளக்குகள் கொடுத்து, புதிய சாதனை படைத்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் மக்களிடம் பேசும் ‘மனதின் குரல் (மன் கி பாத்)’ நிகழ்ச்சியில் இந்தப் பெண்ணைக் குறிப்பிட்டுப் பேச, ‘இந்தியாவின் சோலார் பெண்மணி’ என்று நாடே கொண்டாடுகிறது அவரை. நூர்ஜஹான் என்பது அந்தப் பெருமைக்குரிய பெயர்! 

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகருக்கு அருகில் உள்ள பைரி டாரியான் கிராமத்தில் வசிக்கிறார் நூர்ஜஹான். 25 வயதில் அவர் தன் கணவரை இழந்தபோது, ஏழு குழந்தைகளுக்குத் தாயாக, நிராதரவுடன் நின்றார். கூலி வேலை செய்து கிடைத்த வருமானத்தில் குழந்தைகளை வளர்த்தார். ஒரு புதுமையான தொழிலைக் கையில் எடுத்தது, அவரே எதிர்பாராதது!

‘`எங்கள் சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களுக்கு இன்றுவரை மின்சார வசதி எட்டிப் பார்க்கவில்லை. ஒரு சில கிராமங்களில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். இதனால் பள்ளிக்குழந்தைகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். கூலி வேலை செய்யும் பெண்களுக்கு மாலையில் வீடு திரும்பி இருட்டுவதற்குள் சமைத்து, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடிப்பது மிகச் சிரமமாக இருந்தது.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் கான்பூரில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம், சோலார் பேனல்கள் அமைப்பது குறித்த பயிற்சியைப் பெண்களுக்கு வழங்கியது. நானும் கலந்துகொண்டேன். `மண்ணெண்ணெய் விளக்குகளுக்குப் பதிலாக, சூரியசக்தியில் எரியக்கூடிய சோலார் விளக்குகளைப் பயன்படுத்தலாம், அதைத் தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம்’ என்று அங்கே கற்றுக்கொண்டேன். மற்ற பெண்களுக்கு அதைத் தொழிலாக முன்னெடுக்கும் தெளிவோ, தன்னம்பிக்கையோ, தைரியமோ இல்லாத சூழலில், ‘இதை நானே செய்கிறேன்’ என்று முன்வந்தேன்’’ என்கிற நூர்ஜஹான், தொண்டு நிறுவனம் வழங்கிய பொருளாதார உதவியுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

60p2.jpg

‘`எங்கள் கிராம மக்களுக்கு, சோலார் விளக்குகள் பாதுகாப்பானவை மற்றும் செலவும் குறைவானது என்பதைப் புரியவைக்கவே பல மாதங்கள் ஆனது. பின்னர் மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து, சோலார் பேனல்கள் அமைத்து, சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்கூடத்தை நிறுவினேன். அந்த மின்சாரத்தை, கருவிகளின் துணைகொண்டு விளக்குகளில் சார்ஜ் செய்தேன். அதை மக்களுக்கு வாடகைக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்.

தினமும் மாலையில் கிராமத்தினர் என்னிடம் வந்து, சார்ஜ் செய்யப்பட்ட சோலார் விளக்குகளைப் பெற்றுச் சென்று, அடுத்த நாள் காலையில் மீண்டும் ஒப்படைப்பார்கள். நான் மீண்டும் ரீசார்ஜ் செய்து வைத்திருக்க, மீண்டும் மாலை வந்து பெற்றுச் செல்வார்கள். ஒரு விளக்குக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்போது இந்த விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழில் என் வாழ்வின் அங்கமாகிப் போனது’’ என்று சொல்லும் நூர்ஜஹானின் முகம், பிரதமரால்தான் குறிப்பிட்டுப் பேசப்பட்டதைச் சொல்லும்போது பிரகாசமாகிறது.

‘`பிரதமர் என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசியது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. அது எனக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பு. அதற்குப் பின்னர், பலரும் என்னைத் தேடிவந்து தொழிலுக்கான உதவிகளைச் செய்தனர். இப்போது மேலும் பல கிராமங்களுக்கு விளக்குகள் அளிக்கும்விதமாக, என் தொழிலை விரிவுபடுத்தி உள்ளேன். இதனால் பல பெண்கள் வேலைவாய்ப்பில் பயனடைந்துள்ளனர். மேலும் பல பெண்களுக்கு இதற்கான பயிற்சி அளித்தும் வருகிறேன். இனி எங்கள் கிராமத்துப் பிள்ளைகளும் மின்விளக்கொளியில் படிப்பார்கள்” எனும்போது, அந்த படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்ணின் கண்களில் நாம் கண்ட ஒளி, பல வீடுகளின் இருள் அகற்றிய பெருவெளிச்சம்!


உலகின் வெளிச்சம்!

நூர்ஜஹான் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ‘மக்களின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய வார்த்தைகள்...

‘`கான்பூரில் வசிக்கும் நூர்ஜஹான் என்ற பெண்மணி, நினைத்தும் பார்த்திடாத அதிச யத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அவர் ஏழை மக்களுக்கு சூரிய மின்சக்தியின் மூலம் எரியக்கூடிய விளக்குகளை, குறைந்த விலை யில் வழங்கி வருகிறார். நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும்விதமாகச் செயலாற்று கிறார். அவர் பெயருக்குக்கூட ‘உலகின் வெளிச்சம்’ என்பதே பொருள்!”

vikatan

Link to comment
Share on other sites

அன்போடு வாழ்ந்தால், அகிலத்தை அசைக்கலாம்
 
 

article_1485146278-article_1429689631-Eaஎனது சித்தத்துக்கு உறக்கமே இல்லை. உறங்கும் வேளையிலும், அது என்னோடு பேசும். விழித்துக்கொண்டால் உலகை இரசிக்கும். இன்ப துன்பங்கள் சாரா வண்ணம், எல்லாம் இறை எனக் கருதும் சிறுவன்.  

நோக்கத்துடனேயே உலகத்தில் உயிர்கள் பிறக்கின்றன. காரண காரியம் அறிந்துகொண்டால், எல்லா மாந்தரும் சித்தர்கள்தானே! புத்தியும் அறிவும் ஞானத்தை மிஞ்சிடாது. அன்போடு வாழ்ந்தால், அகிலத்தை அசைக்கலாம்.  

இன்பத்துக்கு இடையூறு நாங்களே. துன்பத்தைத் துடைக்க விருப்பமில்லாது, பித்தராகிப் பல வழி தேடுபவர். “கடவுளே” என்பர், பின்னர் அவரைத் தூற்றுவர்.  

கடவுள் இலவசமாய் ஈந்திடும் பரம்பொருள். கரத்தை ஏந்துங்கள்; சரம் சரமாய் அருள் மழை பொழியும். மனம்குளிர ஆன்மா ஆனந்தக் கூத்தாடும்.  

பரதேசி ஒருவனின் சுயதரிசனம் இது! 

Link to comment
Share on other sites

நடக்கும் பெண்
 
 

article_1485094809-girl.jpg

இலங்கையை சுற்றி, 1268 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடப்பதற்கான முயற்சியில், தேவிகா காசிஷெட்டி என்ற பெண் இறங்கியுள்ளார். 

தனது நடைபயணத்தைக் கடந்த 10ஆம் திகதியன்று கதிர்காமம் கிரிவேஹர விகாரைக்கு அண்மையில் ஆரம்பித்த இவர், காலி மாவட்டத்தில் உள்ள அஹங்கம நகரத்தை நேற்றுக் கடந்தார். 

தனது பயணத்தை எதிர்வரும் மே மாதத்தன்று, கதிர்காமம் கிரிவேஹர விகாரையிலேயே நிறைவு செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.  

கதிர்காமம், மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அந்தப் பெண், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யால ஊடக கரையோர பாதைகளின் ஊடாக, தான் பயணிப்பதாக அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.    

கதிர்காமம், மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அந்தப் பெண், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யால ஊடக கரையோர பாதைகளின் ஊடாக, தான் பயணிப்பதாக அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.   

.tamilmirror.lk
Link to comment
Share on other sites

மாடல் மடோனாக்கள்!

 

மாடலிங் ஒரு பக்கம், வழக்கமான அலுவலகப் பணிகள் மறுபக்கம் என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி செய்யும் மங்கைகளின் பெர்சனல் பக்கங்கள்... இதோ!

42p1.jpg

விஜி

வயது 22. ஃபேஷன் துறையின் மெர்ச்சண்டைசர், பகுதி நேரமாக மாடலிங் என கலக்கும் திருச்சிப் பொண்ணு. 

 மாடலிங் ஆசை  சின்ன வயசில இருந்தே விதவிதமான காஸ்டியூம்ஸ் போடுறதுல ஈர்ப்பு. அதனாலேயே ஃபேஷன் டெக்னாலஜி எடுத்துப் படிச்சேன். படிப்பு, வேலை ரெண்டுமே ஒரே துறைங்கிறதால ஆல்வேஸ் எனர்ஜெடிக். காலேஜ்ல நிறைய பிராண்டுகளுக்கு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். வெறும் போட்டோவுக்கு மட்டுமே போஸ் கொடுக்குற `பிராப்பர்டி' மாதிரி எனக்கு இருக்கப் பிடிக்காது. நாமளே அந்தப் பொருளுக்கான பிரதிநிதியா இருக்கணும்னு கவனமா இருப்பேன்.

 பிடிச்ச விஷயங்கள்   நிறைய பேசப் பிடிக்கும். புதுப்புது மனிதர்களைச் சந்திக்கப் பிடிக்கும். நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவேன்.

 டயட் ரகசியம்   அட நீங்க வேற, வீட்டுச் சாப்பாட்டை மிஸ் பண்ற ஏக்கத்துலயே உடம்பு மெலிஞ்சு போச்சு.

 மாடலிங் அட்வைஸ்   பல பேருக்கு மாடலிங் பண்ண ஆசை இருக்கும், கனவு இருக்கும். ஆனா, சூழல் அவங்களுக்கு அமையாம இருக்கும். அப்படியே விட்டுடாம, தன்னம்பிக்கையை வளர்த்துக்கணும். முதல் தடவை ஃப்ரீ ஹேர்ல வர்றப்போ நூறு பேர் கிண்டல் பண்ணலாம், விமர்சிக்கலாம். அதையெல்லாம் கேர் பண்ணிக்காதீங்க. அடுத்த தடவை அது ஐம்பதா குறையும். மூணாவது தடவை பத்து, இருபது பேரா குறையும். அப்புறம் உங்களைக் கிண்டல் பண்ணவோ, விமர்சனம் பண்ணவோ யாரும் இருக்க மாட்டாங்க. ஸோ, முதல் தடவையே முடங்கிடாம, அடுத்தடுத்த உயரங்களுக்குப் போக முடியாது. இங்கே தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம்!

 அடுத்து?  இப்போ ஆல்பம்ஸ், குறும்படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். சீக்கிரமே சினிமா தான்! 


42p2.jpg

மசுதா தாஜ்

மார்க்கெட்டிங் துறையில் வேலை, பகுதி நேரமாக மாடலிங் செய்துவரும் சென்னைப் பொண்ணு. வயசு 24.

 முதல் அனுபவம்  முதல் மாடலிங் ஷோ அனுபவத்தை வார்த்தைகளால சொல்ல முடியாது. அந்தளவுக்கு ஹேப்பி மொமெண்ட் அது. ஃபேஸ்புக் மூலமா கிடைச்ச வாய்ப்பு அது. சின்ன வயசுல இருந்து மாடலிங் பண்ணனும்னு ஆசை. திடீர்னு அது கிடைச்சா எப்படி இருக்கும்? அவ்ளோ சந்தோஷமான நாள் அது. `மாடலிங் பண்ணப்போறேன்'னு வீட்டுல சொன்னப்போ, அவ்வளவு சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. பிறகு கொஞ்சம் கொஞ்சமா என்னோட வொர்க் எல்லாம் பார்த்த பிறகு, என் மேல அவங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. இப்போ எல்லோருமே எனக்கு சப்போர்ட்!

பிடிச்ச விஷயங்கள்  கட்டுப்பாடு எல்லாம் கடைபிடிக்காம நல்லா சாப்பிடுவேன். ஃப்ரெண்ட்ஸ் கூட சாட்டிங், சமையல் பண்ணப் பிடிக்கும். போரடிச்சா கிச்சன்ல எதையாவது புது டிஷ்ஷை ட்ரை பண்ணுவேன்.

 லவ் ப்ரோபோசல்ஸ்   ஸ்கூல், காலேஜ் டைம்ல நிறைய வந்துருக்கு. அப்போ விவரம் தெரியாது. இப்போ தெரியும். ஆனா, வேலை நிறைய இருக்கு. எங்கேயும் கமிட் ஆக மனசு வரலை. இனிமே வந்தா, பார்க்கலாம்.
 அடுத்து?  எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணது கிடையாது. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.


42p3.jpg

ஐஸ்வர்யா

சேலத்துப் பொண்ணு. சினிமா, மாடலிங் என ஒரே நேரத்தில் இரண்டு துறைகளிலும் பயணிப்பவர். வயது 21. 

 முதல் மாடலிங்  முதல் ஷோ பண்ணும்போது உள்ளுக்குள்ளே அவ்ளோ உதறல். வீட்டுக்குள்ளேயே இப்படியும், அப்படியுமா `ராம்ப் வாக்' நடந்து பார்த்துக்கிட்டேன்.

 பிடிச்ச விஷயங்கள்  கிடார் வாசிக்கப் பிடிக்கும், நிறைய பாட்டு கேட்பேன்.

லவ் ப்ரோபோசல்ஸ்    வந்திருக்கு. ஆனா பொறுமையா எடுத்துச் சொல்லி, `வேணாம்'னு ரிஜெக்ட் பண்ணிடுவேன். ரொம்ப தைரியமான பொண்ணு மாதிரி தெரிஞ் சாலும், உள்ளுக்குள்ளே எப்போதும் ஒரு நடுக்கம் இருக்கும். அதனாலதான் இப்படி!

 அடுத்து?  மிஸ் இந்தியாவுல கலந்துக்கணும்னு ஆசை. ஏற்கெனவே `உத்தமவில்லன்'ல பூஜாகுமாரிக்கு ஃப்ரெண்ட்டா நடிச்சிருக்கேன். மூணு தமிழ் படங்கள்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன்.


42p4.jpg

ரேஷ்மா

மதுரையில பொறந்த கேரளத்து சேச்சி. பகுதி நேரமாக மாடலிங் செய்துவரும் இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளர். வயது 21. 

முதல் மாடலிங்  சென்னையில தான் படிச்சேன். நியூஸ் பேப்பர்ல `ஃபேஸ் ஆஃப் சென்னை'ன்னு ஒரு போட்டிக்கு ஆடிஷன் அறிவிச்சிருந்தாங்க. போனேன். அங்கே டைட்டில் வின்னர் ஆகலைன்னாலும், `மிஸ் பாப்புலர் ஃபேஸ் ஆஃப் சென்னை'ன்னு டைட்டில் கிடைச்சது. அப்புறம், `மிஸ் மெட்ராஸ்'ல ரன்னர். இதுவே மேலும் மேலும் மாடலிங் பண்ணனும்ங்கிற ஆர்வத்தைக் கொடுத்துடுச்சு.

 பிடிச்ச விஷயங்கள்  டிராவல் பண்ணப் பிடிக்கும். மியூசிக் கேட்கப் பிடிக்கும்.

 லவ் ப்ரோபோசல்ஸ்   ஸ்கூல் டைம்ல வந்திருக்கு. இப்போ ரியாலிட்டி ஷோ பார்த்துட்டு, பல பேர் ஃபேஸ்புக்குல புரபோஸ் பண்றாங்க. எனக்குன்னு ஒருத்தன் பொறக்காமலா இருப்பான்?

 அடுத்து?   சின்ன வயசுல இருந்தே மாடலிங் பண்ணனும், மீடியாவுல வேலை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதேமாதிரி நடந்துடுச்சு. இனி, இந்தத் துறையிலேயே எனக்கான தனி இடத்தைப் பிடிக்கணும்னு ஆசை.

.vikatan

Link to comment
Share on other sites

தொலைந்துபோன நமது பழைய பாரம்பர்யங்கள்!

பாரம்பர்யங்கள்

ல்லிக்கட்டுக்காக இன்று தமிழகமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தொலைக்க இருந்த ஒரு அடையாளம் திரும்பவும் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களும் மஞ்சுவிரட்டில் காயம்படுகிறார்கள் என்ற சிக்கல்கள் இருந்தாலும் பாதுகாப்பாக பாரம்பர்யங்கள் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் குரலாக உள்ளது. இன்று தொலைக்க இருந்த பாரம்பர்யம் போல் நாம் தொலைத்த, மறந்த சிலவற்றை ஞாபகப்படு்த்திப் பார்ப்பாம்.

பாரம்பரிய விளையாட்டு

"டேய் என் வண்டிய இடிக்காத, பிச்சுபுடுவேன். இங்க பாரு அது தான் உன் ரோடு. இது என்னோட ரோடு. நீ எதுக்குடா இங்க வர?" எத்தனை பேருக்கு இந்த நொங்கு வண்டு ஓட்டிய ஞாபகம் உண்டு? இன்றும் கிராமத்தில் எங்கேயோ ஒரு நொங்கு வண்டி ஓடிக்கொண்டு தான் இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இந்த ஒரு வண்டியை மட்டும் நாம் தொலைக்கவில்லை, அதுபோல எத்தனையோ பாரம்பர்ய விஷயங்களை நாம் தொலைத்து இருக்கிறோம்.

  "ஏய் காமாட்சி, அந்த மூணாவது வீட்ல இருக்கால்ல அட, அந்த அம்மணி தான்..." எனத் தொடங்கும் பாட்டிகளின் பேச்சும், "பாப்போமா, யாரு ஜெயிக்கிறான்னு..." என சிறுசுகளின் பாண்டி விளையாட்டும் ," யக்கா கொஞ்சம் தண்ணி தாஞ்சேன்..." என இளைப்பாற்றும் இடமுமாக அனைத்துக்கும் சொந்தம் கொண்டாடியது திண்ணை. ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி மச்சுவீட்டின் வெளித்திண்ணை வரை வீடுகளில் நிறைந்திருந்த திண்ணை இன்று வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறி தொலைந்தே போய்விட்டது. இன்று இந்த திண்ணைகளை வைத்து வீடுகள் கட்டுவது வெகுவாக குறைந்துவிட்டது.            

  "அதோ அது தான். அந்த மூணாவது கிளைல இருக்குல்ல அந்த மாங்கா. எங்கே முடிஞ்சா அடிச்சுக் காட்டு பார்ப்போம்" என இழுத்து அடித்து குறி தவறும்போது, "சே..."  என கோபப்பட்டு தூக்கி எறிந்தும், ஒருவேளை கைக்கு கிடைத்து விட்டால் "பாத்தியா..." என தண்டோரா போட்டு கத்தும் அளவுக்கு மகிழ்ச்சியை தர வல்லது, உண்டிவில். இன்று எத்தனை குழந்தைகள் இதை பார்க்கிறார்கள்? காலத்தின் சக்கரத்தில் சிக்கி காணாமலே போய் இன்று நாம் கிட்டதட்ட உண்டிவில்லை மறந்தே போய்விட்டோம்.

பாரம்பரிய விளையாட்டு

ஒரு கால் நீட்டியும், ஒரு கால் மடித்தும் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் முழுபருப்பை போட்டுக் கொண்டும் இன்னொரு கையில் மரக்கைப்பிடியை லாவகமாக சுற்றிக் கொண்டும் பாட்டிகள் பேசுவதை பார்ப்பது அவ்வளவு அலாதியாக இருக்கும். 'ஆரியக்கல்'. 'திருகை' என்பது அப்போதைய வழக்குப் பெயர். எத்தனை பேருக்கு இந்த பெயர் கூட இப்போது நினைவில் இருக்கும் என்பது தெரியவில்லை. முழு பருப்பை இரண்டாக மூன்றாக உடைக்க பயன்படும் கல் இது. இன்று எங்கோ வீடுகளில் அங்கும் இங்குமாக பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

பாரம்பரிய விளையாட்டு

  "நல்லா இள ஆட்டுக் கறி குழம்பு பிசைஞ்ச சாதத்த ஒரு வெட்டு வெட்டிட்டு, அந்த வேப்பமர நிழலுல, கயித்து கட்டில்ல படுத்தா எங்கேயுமே கிடைக்காத சுகமான தூக்கம்" ஆம், கயிற்றுக் கட்டில். இன்று குஷன் பெட்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போய்விட்ட கயிற்று கட்டில். கயிற்று கட்டில்களை பின்னுதலே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும், "படுத்தா கல்லு மாறி இருக்கு, தூக்கமே வரமாட்டேங்குது" என குற்றஞ்சாட்ட முடியாத கயிற்றுக்கட்டில்கள் இன்று பின்னப்படுவதே இல்லை.

பாரம்பரிய விளையாட்டு

  " அஸ்...அஸ்" என மூச்சு வாங்கியபடியே ராகியையும், கம்பையும், சோளத்தையும் குத்திய ஆட்டுரலும், உலக்கையும் இன்று ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் மட்டுமே காண முடிகிறது. ஆட்டுரலில் உலக்கையால் குத்தி குத்தி சமன் படுத்துவது ஒரு தெளிந்த நடனம் போலிருக்கும். வீட்டு பெண்கள் அதை அவ்வளவு நளினமாக செய்வர். ராகி, கம்பை சமன் செய்வதற்கு மட்டுமல்லாமல் அது பெண்களுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகக்கூட இருந்தது.

இவையெல்லாம மட்டுமில்லாமல் இன்னும் இன்னும் எத்தனையோ பழமைகளை நாம் மறந்தும், தொலைத்தும் இருக்கிறோம். மிச்சம் இருக்கும் சிலவற்றையும் தொலைக்க இருக்கிறோம். அரிக்கேன் விளக்குகள், சாய்வு மர நாற்காலிகள், மண் அடுப்புகள், பாண்டி, பல்லாங்குழி விளையாட்டு ஆகியவற்றை கிட்டத்தட்ட தொலைத்தே விட்டோம். அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவை விளிம்பு நிலையில் இருக்கின்றன. கொஞ்சம் சிரத்தை எடுத்து இவற்றையேனும் காத்தால், படங்களாக மட்டுமின்றி பொருட்களாகவும் இனியேனும் காண முடியும். இன்று மக்கள் அனைவைரும் துவண்டு விட்டனர். இந்த அவசர உலக போக்கும், சுரத்தே இல்லாத வாழ்வும் மறுபடியும் அவர்களை பழமைகளையும், பாரம்பர்யத்தையைும் நோக்கி திருப்பியிருக்கிறது. அந்த வெளிப்பாடுதான் இந்த ஜல்லிக்கட்டு எழுச்சிக்கும் காரணமாக இருக்கலாம். தெளிவான சிந்தனையைும், தீர்க்கமான பார்வையும் கொண்டால் மட்டுமே பழமையான பாரம்பர்யங்களை மீட்டெடுக்க முடியும். 

vikatan.

Link to comment
Share on other sites

ஓவர் எமோஜி ஆகாது!

 

முன்னாடி எல்லாம் யாருக்காவது பிறந்தநாள்னா கேக் வெட்டுவாங்க, ஸ்பிரே அடிப்பாங்க. முக்கியமா, வெட்டுற கேக்கை நமக்கும் கொடுப்பாங்க. இப்போ அப்படியா பாஸ் பண்றாங்க? எல்லாக் கொண்டாட்டத்தையும் வாட்ஸ்-அப்லேயே முடிச்சிடுறாங்க. இல்லைனா, விதவிதமான பிளானோட கெளம்பிடுறாங்க. என்னதான் பண்றாங்கனு எட்டிப் பார்க்கலாமா?

p62a.jpg

வாட்ஸ்அப்-ல ஸ்கூலுக்கு ஒரு குரூப், காலேஜூக்கு ஒரு குரூப், ஆபீஸுக்கு ஒரு குரூப்னு ஆயிரெத்தெட்டு குரூப்பை கிரியேட் பண்ணி வெச்சிருப்பாங்க (கழுத... காசா, பணமா?). ஒரு அப்பாவியை அட்மின் ஆக்கி, ‘இவனைச் சேர்த்துவிடு, அவனைச் சேர்த்துவிடு’னு குனியவெச்சுக் குத்துவாங்க. அந்த குரூப்ல ஒருத்தனுக்குப் பிறந்தநாள்னா சொல்லவா வேணும்? குரூப்ல எப்பவும் ஆக்டிவா இருக்கிற ஒருத்தன், ‘இவனை வாழ்த்துங்கள் ஃபிரெண்ட்ஸ்!’னு ஆரம்பிக்கிறதுதான், டாஸ்மாஸ்கைத் தொறந்ததும் திமுதிமுனு புகுந்து வர்ற கூட்டம் மாதிரி, ‘வாழ்த்துகள்’ வார்த்தையைக் காபி பேஸ்ட் கொடுத்துக் கொத்து புரோட்டா போடுவாங்க!

p62b.jpg

ஒருத்தன் பிறந்தநாள் பேபியோட போட்டோவைத் துழாவித் தேடுவான். எத்தனையோ நல்ல போட்டோ இருக்கும். கேவலமான முடிஞ்சா, படுகேவலமான ஒரு போட்டோவை எடுத்து குரூப்புக்கு வால்பேப்பரா வைப்பான். குரூப்போட பேரும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’னு மாறிடும். ஒரே நேரத்துல நாலைஞ்சு பேருக்குப் பிறந்தநாள் வந்து, நாலைஞ்சு குரூப்புமே ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’னு பெயரை வெச்சுக் கொழப்புற கெரகம் பிடிச்ச அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும்.

p62c1.jpg

காலையில ‘ஹாப்பி பர்த்-டே’னு ஆரம்பிக்கிற ஒருத்தன், மணிக்கொரு முறை ஹாப்பி பர்த்-டே சொல்லிச் சொல்லி நடுநிசி வரை... சம்பந்தப்பட்ட நண்பனோட நெஞ்சைப் பிராண்டுற சம்பவமும் பல இடங்களில் பரவலா நடந்துக்கிட்டு இருக்கு.
 
‘ஹாப்பி பர்த்டே’ மெசேஜைப் பார்த்துப் பார்த்தே வெறுத்துப்போற ஒருத்தன்தான், ‘எங்கே, எத்தனை மணிக்கு ட்ரீட்?’னு கெளப்பிவிடுவான். கூடவே, ‘கேக் வெட்டுறோம். ட்ரீட்டைத் தூக்குறோம்’னு ஒரு கோஷ்டி நோட்டைப் போட்டுக் கெளம்பி பணம் வசூலிக்கும். 500 ரூபாய் கேக் வாங்குறதுக்கு, 50 பேர்கிட்ட 1000 ரூபாய்க்கு ஊழலைத் துவக்கியிருப்பான் இன்னொருத்தன். சில நல்லவர்கள், விதவிதமா கேக் படங்களை கூகுள்ல தேடி அனுப்புறதோட சரி. என்னக் கொடுமை?

p62d.jpg

‘பர்த்டே பேபி’னு பாசமா கூப்பிடுறாங்களேனு பதட்டமாயிடாதீங்க பாஸ். காலையில டீக்கடையில கணக்கு ஆரம்பிச்சு, டிபன், டின்னர் வரைக்கும்... நீங்கதான் அன்னிக்குப் பலிகடானு அர்த்தம். எமோஜியில கேக் வெட்டி, கேக் பீஸ் எமோஜியை எல்லோருக்கும் ஊட்டிவிட்டு, மொத்த ட்ரீட்டையும் எமோஜிக்களால் முடிக்கிற வழக்கமும் இங்கே உண்டு. மோடி, டிஜிட்டல் இந்தியானு சொன்னது இதை இல்லைடா!

Link to comment
Share on other sites

ட்ரம்புக்கும் அவர் மனைவி மெலானியாவுக்கும் 24 வயது இடைவெளியைக் கடந்த காதல்!

டொனால்ட் ட்ரம்பு-மெலானியா

ந்து வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, டொனல்ட் ட்ரம்பின் மூன்றாவது மனைவியாக அவர் வாழ்க்கையில் இணைந்ததுவரை, மெலானியா பற்றிய சுவாரஸ்ய டிட் பிட்ஸ் இங்கே.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்டது டொனல்ட் ட்ரம்ப் குடும்பம். அதன் துவக்க விழாவில் மெலானியா அணிந்திருந்த அவரின் ஆடையில் இருந்து, அமெரிக்காவின் முதல் குடிமகளாக அவரைப் பற்றிய செய்திகளை மீடியாக்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன.

அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் டிசைனர் ரால்ஃப் லாரன் வடிவமைத்த, பட்டையான நெக்லைனுடன் கூடிய நீல நிற ஆடை, அதே நிறத்தில் சாக்ஸ், க்ளவுஸ் என மெலானியா துவக்க விழாவில் அசத்த, 'அமெரிக்காவின் முதல் குடிமகளுக்கான நேர்த்தியான லுக்' என்ற பாராட்டை அந்த ஆடை அவருக்குப் பரவலாகப் பெற்றுத் தந்திருக்கிறது. முன்னாள் மாடல் மெலானியாவுக்கு, ஃபேஷன் விஷயத்தில் பாராட்டு கிடைக்காமல் போகுமா என்ன?!

* அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான டொனல்ட் ட்ரம்ப், இப்போது அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி. பிறப்பில் ஸ்லொவினிய அமெரிக்கப் பெண்ணான மெலானியாவை, இப்போது அமெரிக்காவின் முதல் குடிமகளாக்கியிருப்பது, இரண்டு திருமணங்களில் தோல்வியடைந்திருந்த ட்ரம்ப்பை கரம்பற்றிய அவரின் காதல்.

trump_12297_13105.png

* யுகொஸ்லாவியாவில் பிறந்த மெலானியா, அமெரிக்காவின்  குடியுரிமை பெற்றது 2006-ல். லூய்ஸ் ஆடம்ஸை தொடர்ந்து, கிட்டத்தட்ட 180 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டுப் பெண் அமெரிக்காவின் முதல் குடிமகளாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் மெலானியா.

* ஐந்து வயதில் இருந்து மாடலிங் செய்ய ஆரம்பித்து, பிற்காலத்தில் பிரபல மாடலாக உலகை தன்னை அறியத் செய்த மெலானியாவுக்கு, ஃபேஷன் நகரங்களான இத்தாலி மற்றும் பாரீஸ் பயணங்கள் மிகப் பிடிக்கும்.

* 1998ம் ஆண்டு, ஒரு பார்ட்டியில் டொனல்டை மெலானியா சந்தித்தபோது, அவர் வேறு ஒரு பெண்ணை டேட் செய்துகொண்டிருந்தார். 'அப்போது அவர் என் தொலைபேசி எண்ணைக் கேட்டார். ஆனால், அவர் வேறு ஒரு பெண்ணுடன் டேட் செய்துகொண்டிருந்ததால், நான் என் எண்ணைத் தர விரும்பவில்லை' என்று சொல்லும் மெலானியா, ட்ரம்பின் எண்ணைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

* ட்ரம்பின் முதல் இரண்டு திருமணங்கள் அதிக சலசலப்பு நிரம்பியவை. 1977ம் ஆண்டு இவானாவை மணந்தார் ட்ரம்ப். மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இந்த ஜோடியின் அன்பு, ட்ரம்ப் மார்லா மேப்பிள்ஸுடன் காதல்கொண்டபோது முடிவுக்கு வந்தது. 1993ம் ஆண்டு மார்லாவை ட்ரம்ப் திருமணம் செய்துகொள்ள, கருத்து வேறுபாடுகளால் ஆறு வருடங்கள் வருந்தியேதான் இணைந்திருந்தது இந்த ஜோடி.

* இரண்டு திருமணங்களின் தோல்வி, ட்ரம்புக்கு தந்திருந்த காயத்துக்கு மருந்தாக வந்தார் மெலானியார். 2005-ம் ஆண்டு, ட்ரம்பை மணந்தார் மெலானியா. அவர்கள் இருவருக்குமான வயது இடைவெளி... 24 வருடங்கள். இப்போது ட்ரம்ப்புக்கு வயது 70; மெலானியாவுக்கு 46. வயதின் இடைவெளியை தங்களின் தீரா அன்பால் நிரப்பினார்கள் இருவரும்.

Trump_Inauguration_velu_%281%29_11470_13

* மிகவும் ஆடம்பரமான திருமணமாக பேசப்பட்ட மெலானியா - ட்ரம்ப்பின் திருமணத்தில், நிச்சயதார்த்த மோதிரத்தில் இருந்து வெடிங் கவுன் என அனைத்தும் அட்டைப்பட செய்திகளாயின.

* மெலானியா - ட்ரம்ப் தம்பதியின் பையன் பாரன், தன் அம்மாவின் தாய்மொழியான ஸ்லொவேனியன் மொழியை சரளமாகப் பேசுகிறான். கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் உள்ள அவனுக்கு, பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்பது விருப்பம். பணிப்பெண் அமர்த்தாமல் தானே தன் பையனை வளர்த்து வருவதைக் குறிப்பிட்டிருக்கிறார் மெலானியா.

* முந்தைய திருமணங்களில் ட்ரம்ப்புக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். மெலானியாவுக்கும், ட்ரம்பின் முதல் மனைவியின் மகனுக்கும் வயது இடைவெளி... ஏழு வருடங்கள் மட்டுமே.

* தேர்தல் சமயத்தில் ட்ரம்பின் பிரச்சாரங்களில் இருந்து விலகியே இருந்தார் மெலானியா. ஆனாலும், பிரபல சர்வதேச GQ இதழுக்கு, 2000ம் ஆண்டு மெலானியா அளித்த நியூட் போஸ் புகைப்படங்கள், தேர்தல் சமயத்தில் இரு தரப்பினர்களாலுமே பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக வெளியிடப்பட்டன. ஆம்... எதிர்தரப்பினர் ட்ரம்ப் மீதான மரியாதையைக் கீழிறக்க அந்தப் படங்களை வெளியிட, 'மரணமடைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் அம்மா குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அபத்தமான கருத்துகள் எழுப்பிய எதிர்ப்புகளில் இருந்து மக்களை திசைதிருப்ப, ட்ரம்ப் மெலானியாவின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டார்' என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. ஒரு மாடலாக, தான் கொடுத்த போஸ், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்வலைகளை உண்டுபண்ணும் என்று அப்போது எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார் மெலானியா.

* 5 அடி 11 இன்ச் உயரம் கொண்ட மெலானியா, அமெரிக்காவின் உயரமான முதல் குடிமகள் என்ற அடையாளத்தை, அதே உயரம் கொண்ட முன்னாள் முதல் குடிமகள்கள் எலினா ரூஸ்வெல்ட் மற்றும் மிஷெல் ஒபாமாவுடன் பகிர்ந்துகொள்கிறார்.

* தனது ரிபப்ளிகன் நேஷனல் கன்வென்ஷன் உரையில், மிஷெல் ஒபாமாவின் உரையை வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடித்ததாக வைக்கப்பட்ட விமர்சனங்கள் முதல், தன் கணவர் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியது பற்றி தன்னிடம் கேட்கப்பட்டதுவரை, அனைத்துச் சூழல்களையும் கூல் ஆகவே எதிர்கொண்டார் மெலானியா.

 * 'ஒருவேளை ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனால், முதல் குடிமகளாக உங்களின் செயல்பாடு என்னவாக இருக்கும்?' என்று தேர்தல் சமயத்தில் மெலானியாவிடம் கேட்கப்பட்டது. 'பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துவேன். இணையக் குற்றங்களுக்கு, குறிப்பாக, குழந்தைகள் இணையத்தில் மிரட்டப்படும் போக்குக்கு எதிராகச் செயல்படுவேன்' என்றார்.

ஆக்கப்பூர்வமான அதிகாரம் கைகளில் கிடைத்திருக்கும் பெண். எதிர்பார்த்திருக்கிறது உலகம்

.vikatan.

Link to comment
Share on other sites

கடற்கன்னிகளாக வாழ்க்கை நடத்தும் யுவதிகளும் இளைஞரும்
 

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில்,  யுவதிகள் மூவரும் இளைஞர் ஒருவர் கடற்கன்னிகளாக வேடமணிந்து தொழில்புரிகின்றனர்.

 

21952Mermaid.jpg

 

கெய்ட்லின் நீல்சன், டெசி லமோரியா, மோர்க்ன் கால்ட்வெல் ஆகிய யுவதிகளும் எட் பிரவுண் எனும் இளைஞருமே இந்நால்வரும் ஆவர். 

 

வோஷிங்டன் மாநிலத்தின் தலைநகர் சியாட்டிலில் இவர்கள் கடற்கன்னிகளாக நீந்தி பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர்.

 

21952Inside-Seattles-Mermaid-Community.j

 

கெய்ட்லின் நீல்சன், உயிரியில் பட்டதாரி ஆவார். தான் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து 2015 ஆம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு கடற்கன்னியாக தொழில் புரிய ஆரம்பித்தார். தற்போது அவர் சியனியா கடற்கன்னி என அழைக்கப்படுகிறார்.

 

இவர் பிறக்கும் போது ஒரு காலில் குறைபாடு இருந்தது. தற்போது அவர் காலால் நடப்பதைவிட கடற்கன்னி வாலைப் பொருத்திக் கொண்டு நீந்துவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார்.

 

219522525828.jpg

 

32 வயதான கெய்லின், ஏரிகளில் நீந்தி புகைப்படங்கள், வீடியோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்.

 

அத்துடன் கடற்கன்னி வால்களை தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்.

 

21952_Untitled-1.jpg

 

.metronews.lk

Link to comment
Share on other sites

 

இரண்டாம் உலகப்போரில் கலக்கிய லான்காஸ்டர் போர் விமானம்

இரண்டாம் உலகப் போரில் பிரபலமான மற்றும் செயற்திறன் மிக்க விமானம் லான்காஸ்டர் குண்டுவீச்சு விமானம்.

Link to comment
Share on other sites

கமாண்டோ 2 படத்தின் ட்ரெய்லர்!

பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய தமிழ் படங்களில் நடித்த வித்யூத் ஜாம்வாலின், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட பாலிவுட் படமான கமாண்டோ - A One Man Army, கடந்த 2013-ல் வெளியானது. இப்போது சரியாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த படத்தின் இரண்டாம் பாகமான கமாண்டோ - The Black Money Trail, வருகின்ற மார்ச் 3, 2017 அன்று திரைக்கு வருகிறது.

தற்போது வெளியாகி இருக்கும் அந்த படத்தின் ட்ரெய்லர் வைரலாகி வருகிறது. வழக்கம் போலவே இதிலும் தனது மொத்த வித்தையையும் வித்யூத் ஜாம்வால் இறக்கியுள்ளார் என்றே சொல்லலாம்!

Link to comment
Share on other sites


நிதானமாகச் சொல்லுவதே அழகு!
 

article_1485230470-tyu.jpgவார்த்தையில் சுருக்கம், பேச்சில் நிதானம் இருந்தால் செய்கருமங்கள் சிறக்கும். நிதானமாக என்றும் பேசுபவர்கள் தங்கள் அறிவுக்கு வேலை கொடுத்த பின்னரே, வார்த்தைகளை வெளிவிடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகவே மாட்டாது. 

 

பேசுவதற்கு முன் ஓரிரு வினாடிகளைப் பொறுமையுடன் அடுத்தவர் பேசுவதைச் செவிமடுக்க வேண்டும்.  

 

அப்புறம் அதற்கான பதிலைச் சட்டெனச் சொல்லாமல், நிதானமாகச் சொல்லுவதே அழகு! அதனையும் மென்மையான தொனியில் சொல்லிவிடுதல் நல்லது.

நல்ல செய்திகளையும் கெட்ட செய்திகளையும் ஒரே தொனியில் பேசுதல் கூடாது. மற்றவர் நிலையறிந்து பேசாதவர்கள் பிறர் கோபத்துக்கும் கேலிக்கும் உள்ளாவார்கள்.  

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: ஜனவரி 24
 

article_1453616445-Ekneli300.jpg41: கலிகுலா என அறியப்பட்ட ரோம மன்னன் கையுஸ் சீசஸ் படுகொலை செய்யப்பட்டான்.

1857: தெற்காசியாவின் முதலாவது பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1862: ருமேனியாவின் தலைநகராக புகாரெஸ்ட் தெரிவுசெய்யப்பட்டது.

1918: ரஷ்யாவில் கிறகரியன் கலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1924: ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க் என முன்னர்அறியப்பட்ட பெட்ரோகார்ட் நகரின் பெயர் லெனின்கிராட் என மாற்றப்பட்டது.

1939: சிலியில் இடம்பெற்ற பூகம்பத்தில் சுமார் 5000 பேர் பலியாகினர்.

1966: பிரான்ஸ், இத்தாலி எல்லையில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் 117 பேர் பலி.

1972: இரண்டாம் யுத்தத்தின் முடிவிலிருந்து குவாம் காட்டில் மறைந்திருந்த ஜப்பானிய படைவீரர் சோய்ச்சி யோகோஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.

1986: வொயேஜர் 2 விண்கலம்  யுரானஸ் கிரகத்தை 81500 கிலோமீற்றர் தொலைவில் கடந்து சென்றது.

1993: துருக்கிய பத்திரிகையாளர் உகுர் முக்கு, கார் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.

1996: ரஷ்யாவுக்காக உளவுபார்த்தாக குற்றம் சுமத்தப்பட்ட போலந்து பிரதமர் ஜோசப் ஒலெக்ஸி இராஜினாமாச் செய்தார்.

2003: அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் செயற்பட ஆரம்பித்தது.

2006: இலங்கை ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

2007: சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

2009: இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல்போனார்.

tamilmirror.lk/
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.