Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

p20.jpg

`அடடா! இப்படியா ரொமான்ஸ் பண்ணுவாங்க' என பொங்கித் தள்ளுகிறார்கள் ஹாலிவுட்டில். கிறிஸ்துமஸ் முடிந்தவுடன் பிரபல மாடலான ஆம்பர் ரோஸ் தன் செக்ஸியான படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவேற்றினார். ‘இது என் காதலனுக்கு நான் அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசு’ என அவர் போட்ட போட்டோ அவ்வளவு சூடு. `இப்படி எல்லாம்கூட கிஃப்ட் தரலாம்னு இப்போதான் தெரியுது' என்று காதில் புகை கக்குகிறார்கள் ரசிகர்கள்!

p20a.jpg

ம் ஊரில் இயக்குநர் சுராஜ் கிளப்பிய பஞ்சாயத்தே இன்னும் ஓயாத நிலையில் அமெரிக்கப் பாடகி ஏரியானா கிராண்ட் விஷயத்திலும் அதே மாதிரியான பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. ட்விட்டரில் ரசிகர் ஒருவர் அவரைப் பற்றி கொச்சையாகக் கமென்ட் அடிக்க, ‘யார் வேண்டுமானாலும் என் உடல் பற்றி கமென்ட் அடிக்கலாம் என்பதில்லை. நான் வெறும் சதை மட்டுமே அல்ல’ என சூடாகக் கருத்து கூறியுள்ளார் ஏரியானா. அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

p20b.jpg

ன் ரசிகர் ஒருவருக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை அளித்திருக்கிறார் டெய்லர் ஸ்விஃப்ட். 96 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தன் தீவிர ரசிகர் என்பதைத் தெரிந்துகொண்ட ஸ்விஃப்ட், அவர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். மொத்தக் குடும்பமும் அவரைப் பார்த்துக் கொண்டாட, அந்த முதியவருக்கோ குஷி தாங்கவில்லை. நெகிழ்ச்சியில் கண் கலங்க டெய்லரின் பாட்டுக்கு அவர் மெதுவாக ஆட, அந்த வீடியோவைப் பார்த்துப் பார்த்து சிலிர்க்கிறார்கள் ரசிகர்கள்!

p20c.jpg

ஹாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக ஃபிட்னஸ் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் சில நடிகைகள். அவர்களில் முக்கியமானவர் கேட் பெக்கின்ஸேல். ‘கடுமையான வொர்க் அவுட்கள் எப்போதுமே டார்ச்சராகத்தான் இருக்கும். ஆனால், எனக்கு அப்படியான வொர்க் அவுட்கள் மீதுதான் தீராக்காதல். என்ன ஆனாலும் சரி, இதை நிறுத்தப் போவதில்லை’ என பயங்கர எனர்ஜியோடு பேட்டி தட்டியிருக்கிறார் இந்த ‘அண்டர்வேர்ல்ட்’ நாயகி.

vikatan

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

பேசும் படங்கள்: தெறிக்கும் கரிசல்குளம் 'மாதிரி' ஜல்லிக்கட்டு!

 

 
 
 
jallikattu_3117290f.jpg
 
 
 

உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடந்தன. கடந்த 4 நாட்களாக மாணவர்கள் அதிகளவில் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனிடையே, பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாய்ப்பு மங்கிப்போனதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதுரை - கரிசல்குளத்தில் ஒருபக்கம் போராட்டத்தில் மக்கள் ஈடுபட, மறுபக்கம் இளைஞர்கள் 'மாதிரி' ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபட்டனர். அதன் புகைப்படத் தொகுப்பு:

7_3117278a.jpg

2_3117280a.jpg

6_3117281a.jpg

4_3117282a.jpg

5_3117283a.jpg

3_3117284a.jpg

1_3117285a.jpg

 

tamil.thehindu

Link to comment
Share on other sites

மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம்

 

காட்சிப் பிழை என்பதன் நவீன பிரதிபலிப்பாக மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளவாசிகளை மண்டையை பிறாண்டிக் கொள்ள வைத்துள்ளது.

 
மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம்
 
சென்னை:

சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனதுடன் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. காரணம், அதில் காணப்படும் பெண் மூன்று கால்களுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சிப் பிழையால் ஏற்படும் மாயத் தோற்றம் என்பது அந்தப் படத்தை மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தப் பின்னரே புலனாகிறது,

அந்தப் பெண்ணின் வலதுபுறத்தில் தோன்றும் மூன்றாவது கால், அவருக்கு சொந்தமானது அல்ல, அவர் கையில் பிடித்திருக்கும் பூச்செடி ஜாடியின் உருவம்தான் நமக்கு காட்சிப் பிழையாக மூன்றாவது கால் போல் தென்படுகிறது என்பதை பலரால் அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாததால், இந்த புகைப்படம் இணையத்தை கலக்குவதுடன், குழப்பியும் வருகிறது.
C045AF65-630A-404D-8111-2F86A1C4D2F4_L_s
இந்த புகைப்படம், இந்த (2017) ஆண்டின் ’வைரல் குழப்பம்’ எனவும் எடுத்துக் கொள்ளலாம்!

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

போகக்கூடாத இடங்கள்!

 

லகின் பார்வையிலேயே இருந்தாலும் இந்த இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதி கிடையாது. அப்படியான ரகசிய இடங்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்றன. ஒரு நாலு இடங்களை இப்பத் தெரிஞ்சுக்கங்க மக்களே!

p90a.jpg

பாம்புத் தீவு, பிரேசில் :  பிரேசில் நாட்டில் இருக்கும் `இலா டா கொய்மாடா கிராண்டே' என்ற தீவைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கடலில் தனித்திருக்கும் இந்தத் தீவின் பரப்பளவு 4,30,000 சதுர மீட்டர்கள். வெளியிலிருந்து பார்க்க காடுகளும், பாறைகளும் நிறைந்து ரம்மியமாக இருக்கும் இத்தீவிற்குச் செல்ல தடை விதிக்கக் காரணம், இங்கிருக்கும் நச்சுப் பாம்புகளின் எண்ணிக்கை. உலகின் மிகக்கொடிய பாம்பு வகைகளில் ஒன்றான `கோல்டன் லேன்ஸ்ஹெட்' பாம்புகள் இங்கு அதிகமாக உள்ளன. கடித்த இடத்தில் சதை உருகிவிடும் அளவிற்குக் கொடூரமானது இவ்வகைப் பாம்புகளின் விஷம். விஷமற்ற சில வகைப் பாம்புகள் உட்பட, ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று என்ற சராசரியில் இங்கு பாம்புகளின் எண்ணிக்கை உள்ளது. அதாவது, இந்தக் குட்டித்தீவில் மட்டும் லட்சக்கணக்கான பாம்புகள் உள்ளன. இத்தீவில் நிறுவப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தை பராமரித்த குடும்பம், கோல்டன் லேன்ஸ்ஹெட் பாம்புகள் கடித்து ஒட்டுமொத்தமாக இறந்ததை அடுத்து, பொதுமக்கள் இத்தீவிற்குள் நுழைய `நோ என்ட்ரி' போர்டு வைத்தது பிரேசில் அரசு. இந்தத் தடையையும் மீறி அங்கு சென்ற சிலர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். நம் ஊர் கறுப்புச்சந்தையில் மண்ணுளிப் பாம்புகளுக்குத் தாறுமாறான டிமாண்ட் இருப்பதைப் போல, இந்த கோல்டன் லேன்ஸ்ஹெட் பாம்பிற்கும் செம டிமாண்ட். ப்ளாக் மார்க்கெட்டில் இதன் விலை குறைந்தபட்சம் 30,000 அமெரிக்க டாலர்கள் என்கிறது ஒரு ரிப்போர்ட். நமக்கு உயிர்தான் பாஸ் முக்கியம்.

p90.jpg

வடக்கு சென்டினல் தீவு, அந்தமான்:  இந்தியாவில் இருந்தும், இந்தியர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு இடம், வடக்கு சென்டினல் தீவு. அந்தமான் அருகே உள்ள இந்த தீவில் சென்டினலிஸ் என்ற பழங்குடியின மக்கள் உள்ளனர். வெளியுலகத் தொடர்பே இல்லாமல் பல காலமாக இத்தீவில் வாழும் இவர்கள், பிற மக்களைக் கண்டால் வன்முறையான தாக்குதல் நிகழ்த்துவதால் இங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காடுகளும், சுற்றிலும் பவளப் பாறைகளும் நிறைந்துள்ள இத்தீவில் 50 முதல் 400 வரையிலான பழங்குடியின மக்கள் வசிக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தீவின் அருகே சரக்குக் கப்பல் தரைதட்டி ஒதுங்கியிருக்கிறது. பாதுகாப்பிற்காகத் தீவிற்கு நீந்தியே சென்ற அந்நியர்களைத் தாக்க ஆரம்பித்ததும், ஓட்டம் பிடித்துள்ளனர். அதன்பின் இவர்களை பிரிட்டன் அரசு வந்து மீட்டுள்ளது. போர்ட்மேன் என்ற அதிகாரி மட்டும் இங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். ஒரு குடும்பத்தினரை மட்டும் வலுக்கட்டாயமாக போர்ட் ப்ளேர் கொண்டு வந்துள்ளார். வந்தவர்களில் வயதில் பெரியவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளனர். குழந்தைகளை மீண்டும் தீவுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இத்தீவை அபாய வளைவின் கீழ் கொண்டுவந்துள்ளது அரசு. சுனாமியின் போது, மீட்புப்பணிக்காக ஹெலிஹாப்டரில் சென்றனர். அம்பு எய்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களைப் பற்றிய புகைப்படங்களும், வீடியோவும்கூட மிகக்குறைவாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன. தெளிவான கடற்கரை, இயற்கை வளங்களோடு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தாலும் இங்கு செல்வது உயிருக்கு உத்தரவாதமில்லை.

p90c.jpg

ஸ்வல்பார்ட் தீவு, நார்வே: வட துருவத்திற்கு அருகே இருக்கும் ஸ்வல்பார்டு தீவு, நார்வே நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இத்தீவிற்குச் செல்ல பொதுவாக யாருக்கும் அனுமதியில்லை. போர், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தாவரங்கள் அழிந்தால், அவற்றை மீண்டும் விளைவிக்கும் விதமாக உலகம் முழுவதும் பல இடங்களில் விதை சேகரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை உலகம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளானால்? அதற்காகத்தான் இத்தீவில் விதை சேகரிப்பு வங்கி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8,65,000 சாம்பிள்கள் இங்கு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு சேகரிக்கப்படும் விதைகளை மீண்டும் விளைவித்து தாவரங்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை தருகின்றனர். பேங்க் லாக்கர்களில் பொருட்களைப் பாதுகாப்பது போல, மிகப் பாதுகாப்பாக இங்கு விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. மின்சக்தி செயலிழந்தாலும் குறைந்தது 200 ஆண்டுகள் விதைகளுக்கு சேதம் ஏற்படாதவாறு இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வட துருவத்திற்கு அருகில் இருப்பதால் சுரங்கத்திற்குள் பொதுவாகவே மைனஸ் டிகிரியில்தான் வெப்பநிலை நிலவுகிறது. சிரியாவில் நடந்த போர் காரணமாக ஒரேயொரு முறை மட்டும் 130 பெட்டிகளில் அடங்கிய விதைகள் இங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த வங்கியின் பராமரிப்புச் செலவுகளை நார்வே அரசும், சில அமைப்புகளும் சேர்ந்து பார்த்துக் கொள்கின்றன.

p90b.jpg

வாடிகன் ரகசிய காப்பகம்:  கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமான வாடிகன் நகரம், தனக்குள் பல ரகசியங்களைப் புதைத்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று இங்கிருக்கும் ரகசிய ஆவணக் காப்பகம். 10 லட்சம் புத்தகங்கள் அடங்கிய புத்தக அலமாரிகளைக் கவிழ்த்தால் 50 மைல் தூரத்திற்கு நீளும் என்பது இதன் பிரமாண்டம் குறித்துச் சொல்லப்படும் விஷயம்.

போப்பிற்கு வந்த கடிதங்கள், போப் அனுப்பிய கடிதங்கள் உட்பட பல்வேறு பொக்கிஷங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் இங்கு சென்று பார்வையிடலாம். ஆனால், எதைக் குறித்து பார்வையிடச் செல்கிறோம் என விண்ணப்பித்து அனுமதி வாங்க வேண்டும். குருட்டாம்போக்கில் உள்ளே நுழைந்து எதையாவது எடுத்துப் பார்க்க அனுமதியில்லை. இங்கிருக்கும் மிகப் பழமையான கடிதம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மிக உறுதியான கதவுகளுடன், பலத்த காவலுடனும் இது பாதுகாக்கப்படுகிறது. பிரபல அறிவியல் அறிஞர் கலீலியோ மீது கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதற்காக (உலகம் உருண்டை. சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது எனச் சொன்னதற்காக) அவருக்கு எதிராக அப்போதைய போப் எழுதிய கடிதம் உட்பட பல்வேறு ஆவணங்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளன. என்ன பாஸ் கிளம்பிட்டீங்களா?

vikatan.

Link to comment
Share on other sites

வாட்ஸ் அப் கலக்கல்: பணமில்லா பொருளாதாரம்

 

 
whatsapp_3117220f.jpg
 
 
 

1_3117225a.jpg

 

2_3117224a.jpg

3_3117223a.jpg

4_3117222a.jpg

counter_3117221a.jpg

செந்தில்: அண்ணே, Cashlessங்கறாங்க, Card யூஸ் பண்ணுங்கன்றாங்க, Swipe மெஷின் அப்படீங்கறாங்க எனக்கு ஒன்னும் புரியலண்ணே!

கவுண்டமனி: அடேய், இப்போ கல்யாணத்துக்கு மாப்பிளையோ, பொண்ணோ பாக்கணுன்னா என்ன பண்ணுவே?

செந்தில்: ஒரு ப்ரோக்கர் கிட்டே சொல்லி நல்ல இடமா பாக்க சொல்வேன்....

கவுண்டமனி: அப்படி பாத்துகுடுத்தவுடனே அவர் என்ன கேப்பார்?

செந்தில்: கமிஷன் கேப்பார்..

கவுண்டமணி: சரி , ஒரு பிளாட், அல்லது வீடு வங்கணுன்னா என்ன பண்ணுவே?

செந்தில்: ஒரு நில ப்ரோக்கர் கிட்ட சொல்வேன். அவர் நல்ல இடமா பாத்து குடுப்பார். நான் கமிஷன் குடுப்பேன். அதான நீங்க சொல்ல வரீங்க...

கவுண்டமனி: பரவால்லயே புத்திசாலியா இருக்கியே...அதே மாதிரி தான் இந்த கார்டு, cashless எல்லாம். இனிமே அரிசி ,பருப்பு, புளி, உப்பு எல்லாம் வங்கணும்னா குறைஞ்சது 2% கமிஷன் கொடுக்கணும்.

செந்தில்: போங்கண்ணே, இதுக்கெல்லாமா கமிசன் கொடுப்பாங்க?

கவுண்டமனி: ஆமாண்டா, இப்போ நீ உன் பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து கடைக்காரர்கிட்ட குடுக்கிற. அவர் வாங்கி கல்லாவுல போட்டுக்குறார். ஆனா கார்டு உரசினா உன் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து கடைக்காரர் அக்கவுண்ட்ல போடணும் இல்ல அந்த வேலைய செய்யறதுக்கு தான் இந்த கமிஷன்.

செந்தில்: இந்த கமிஷன் யாருக்கு போகும்ண்ணே?

கவுண்டமனி: இந்தியாவில SBI தவிர எந்த அரசாங்க பாங்கும் உரசுற மெசின் கொடுக்கறதில்லை... அதனால நாம உரசுறதால வர்ற எல்லா கமிஷனும் தனியார் முதலாளிகளுக்கு தான் போகும், அது போக, PAY TM மாதிரி கமிஷனுக்குனே நடக்குற கம்பெனிக்கும் போலாம். எப்படியானாலும் அத வியாபாரிதான் கட்டணும். அத அவர் பொருள் விலையில் ஏத்திடுவாரு, அல்லது நம்மகிட்ட அதிகமா பில் போடுவாரு.

செந்தில்: அப்போ நான் ஒரு மாசத்துக்கு 20000 ரூபா செலவு பண்ணா 400 ரூபா கமிஷனுக்கே போய்டுமா?

கவுண்டமனி: கரெக்ட், அதே தான். இது மாதிரி இந்தியாவுல 100 கோடி பேர்கிட்ட இருந்து மாசம் சராசரியா 400 ரூபா கமிஷன் அடிச்சா மொத்தம் எவ்வளவு?

செந்தில்: 400×100=40000 கோடிண்ணே!

கவுண்டமனி: கணக்கில் கில்லாடியா இருக்கியே? அப்ப வருஷத்துக்கு 40000×12=480000 கோடி ஆகும்.

செந்தில்: அண்ணே தல சுத்துதண்ணே! இதென்ன அண்ணே பகல் கொள்ளையாயிருக்கு? இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

கவுண்டமனி: சத்தமா சொல்லாதடா, அப்புறம் உனக்கு தேசபற்றே இல்ல , பாகிஸ்தானுக்கு போன்னு சொல்லிடுவாங்க!

பளிச் வாட்ஸ் அப் பகிர்வுகளை நீங்களும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaiputhumai@thehindutamil.co.in

tamil.thehindu

Link to comment
Share on other sites

உலகின் பசுமை நகரங்கள்

ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற பண்டைய கால நகரங்கள் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. இன்றைய காலத்திலோ நகரங்கள் தொலை நோக்குத் திட்டமிடுதல் இல்லாமல் தன் இஷ்டத்துக்கு உருவாகின்றன. குடியிருப்புப் பகுதியில் தெருக்களைப் பார்த்தால் அகலமாக ஆரம்பித்து குறுகி, சில இடங்களில் வளைந்து எங்கோ சென்று முடியும். ஒரு தெருவுக்கும் இன்னொரு தெருவுக்கும் போய் வர வழி இருக்காது. சாலையின் நடுவே தெய்வச் சிலைகள் இருக்கும். சாலைகளும் பாதசாரிகள் நடக்க வழியின்றி மிக ஒடுக்கமாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான நகரங்கள் இப்படித்தான் இருக்கின்றன. இந்தியாவில் சண்டிகர் முறைப்படி திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். இதில் முறையான சாலைகள், திறந்தவெளி இடங்கள் (OSR) எல்லாம் முறைப்படி உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் நகரத்தில் குப்பை மேலாண்மை செய்ய முறையான வழிமுறை, கழிவுநீர் செல்ல முறையான வழி எல்லாம் இருக்கும். பாதசாரிகள் நடக்க அகலமான தனி நடைமேடை இருக்கும். எல்லாத் தரப்பு மக்களும் வாழ்வதற்கான வசிப்பிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் ஒரு நகரம். இவைதான் பசுமை நகருக்கான அடிப்படை அம்சங்கள். இந்த அடிப்படையிலான உலகின் பசுமை நகரங்களில் சிலவற்றைப் பற்றிய ஒளிப்படத் தொகுப்பு.

roads_3117412f.jpg

 

america_3117420f.jpg
போர்ட்லேண்ட், அமெரிக்கா
sweden_3117410f.jpg
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
 
sanfrancisco_3117411f.jpg
சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
 
oslo_3117414f.jpg
ஆஸ்லோ, நார்வே
netherland_3117415f.jpg
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
 
malmo_3117416f.jpg
மல்மோ, ஸ்வீடன்
denmark_3117417f.jpg
கோபன்ஹேகன், டென்மார்க்
canda_3117419f.jpg
வான்கூவர், கனடா

tamil.thehindu

 

 

 

Link to comment
Share on other sites

சவுதி அரேபிய பெண்கள் போராடுவது ஏன்?

சவுதியில், பெண்ணாக இருப்பதில் ஏராளமான கட்டுப்பாடுகள்.

ஆண்களின் பாதுகாப்பிலேயே பெண்கள் இருக்கவேண்டும் என்பதால் பெண்களால் பல விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியாது.

தந்தை, சகோதரன், மகன் உள்ளிட்ட ஆண்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெண்கள் முடிவெடுக்க முடியும்.

அந்த நடைமுறைக்கு முடிவு கட்டவேண்டும் என்று ஆயிரக்கணக்கான பெண்கள் கோரத்துவங்கியுள்ளனர்.

டுவிட்டர் மூலமும் இணையம் வாயிலாகவும் அவர்கள் தமது உரிமைகளுக்காக போராடிவருகிறார்கள்.

தனது எதிர்கால கனவை தொடர முடியாமல் தடுக்கப்பட்டதாக கூறுகிறார் தனது உண்மையான அடையாளத்தை வெளியிட விரும்பாத சாரா.

"வெளிநாட்டில் சட்டம் படிக்க விரும்பினேன். ஆனால் அப்பா அனுமதிக்கவில்லை. அதற்காக இன்றுவரை வருந்துகிறேன்".

பெண்களுக்கு ஆண்கள் பாதுகாவலர்களாக இருப்பதை மதத்தலைவர்கள் சிலர் ஆதரிக்கிறார்கள்.

மதத்தலைவர்கள் மட்டுமல்ல பெண்கள் சிலரும் கூட, ஆண் பாதுகாப்பு பெண்களுக்கு நல்லதே என்று நம்புகிறார்கள். "மரியாதையிழந்த மேற்குலக பெண்களைப் போல எங்களையும் மாற்ற இந்த பிரச்சாரம் முயல்கிறது" என்கிறார், ஆண்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் பெண்ணான ரத்வா அல் யூசுப்.

ஆண் அனுமதி அல்லது துணையின்றி சவுதி அரேபியாவில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவோ, வாகனம் ஓட்டவோ, வெளிநாடு செல்லவோ முடியாது. அதற்கெல்லாம் அங்கே தடை இருக்கிறது.

Link to comment
Share on other sites

”முதல் பேச்சிலேயே மிச்சலை எனக்கு பிடித்திருந்தது!” - இது அமெரிக்க அதிபரின் காதல் கதை!

Michelle

மெரிக்க அதிபராக பராக் ஒபாமா ஆற்றிய இறுதி உரையில், தனது மனைவி மிச்சலை தனது சிறந்த தோழி என்று அழைத்ததுதான் தற்போது வைரலாகி வரும் செய்தி. “மிச்சல் வாகன் ராபின்சன், நமது 25 வருட உறவில் நீ எனது மனைவியாகவும், என் குழந்தைகளுக்குத் தாயாகவும் மட்டுமில்லை, எனக்கு சிறந்த தோழியாகவும் இருந்திருக்கிறாய். நீ எதிர்பாராத பொறுப்பு உன்னிடம் வந்தது. ஆனால் அந்த பொறுப்பை நீ முழுக்க முழுக்க உனதாக்கிக் கொண்டாய். உன்னால் இந்த வெள்ளை மாளிகை அனைவருக்கும் என்றானது. அதனால் நான் பெருமை அடைந்தேன். இந்த நாடு பெருமை அடைந்தது” என்று கண்ணீருடன் கூறினார். அவரது பேச்சைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். வாழ்க்கையில் பல்வேறு நோக்கங்களுக்கும் பொறுப்புகளுக்கும்  கொள்கைகளுக்குமிடையே இணைந்து வாழ்க்கையை கடத்துபவர்களுக்கு இவர்களது வாழ்க்கை நிச்சயம் ஒரு படிப்பினை.

மிச்சல் மற்றும் ஒபாமா பற்றிய வாழ்க்கைக் கதை 'Southside With You' என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டு கடந்த 2016-ல் வெளியானது. அவர்களின் 25 வருட கால வாழ்க்கைக் கதை மிகவும் சுவாரசியமானது. அதில் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அன்பு, மகிழ்ச்சி, ஒருவருக்கு ஒருவர் ஏற்படுத்திக்கொண்ட நுட்பமான அணுகுமுறை என எல்லாமும் இருந்தது. 

முதல் சந்திப்பு..

1989-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டம் பயின்று வந்த ஒபாமா, சிகாகோவின் சிட்லி ஆஸ்டின் சட்ட ஆலோசனைக் குழுவில் இணைந்தார். அப்போது அவருக்கு ஆலோசகராக இருந்தவர்தான் மிச்சல். “ஹார்வர்ட் கல்லூரியில் பயின்றவர் என்றதும் கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு அறிவு ஜீவியைத்தான் நான் சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஒபாமா அதற்கு நேரெதிராக இருந்தார்” என்று முதன்முதலில் ஒபாமாவைப் பார்த்தபோது தான் எண்ணியதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் மிச்சல். ஒபாமாவுக்கு அந்த கம்பெனியில் மிச்சலைத் தவிர, வேறு எதுவும் பிடித்திருக்கவில்லை. விரைவிலேயே இருவரும் நெருக்கமானார்கள், இருவரும் ஒன்றாக இணைந்து பார்த்த “Do the right thing" நாடகத்தின் வழியாகத்தான் அவர்களது காதலும் மலர்ந்தது.  மிச்சலின் குடும்பத்திற்கும் ஒபாமாவைப் பிடித்திருந்தது. ஒபாமா பெண்களை மதித்து நடத்தும் விதம் மிச்சலின் அம்மாவை மிகவும் கவர்ந்திருந்தது. ”ஒபாமா ஒரு உயரமான வலுவான நிலையில் இருக்கிறார், அதற்குக் காரணம் மிச்சல் அவர் பின்னணியில் வலுவான பெண்ணாக இருப்பதுதான்" என்பார் அவரின் தாய்.

Michelle obama

ஒபாமா -மிச்சலின் அழகிய வாழ்க்கைப் பக்கங்களை புகைப்படங்களாகப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

"தேவாலயத்தின் அடித்தளங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே மிச்சல் முன்பு கூட்டத்தில் பேசுவது போல பேசிக் காண்பிப்பார் ஒபாமா. அந்த பேச்சுகளில் மக்களுக்கான ஒரு திட்டமிடல் தெளிவாகத் தெரிந்தது. அந்த திட்டமிடலில் ஒரு உண்மையும், நேர்மையும், வலிமையும் இருந்தது. அதுதான் ஒபாமாவை இன்னும் நேசிக்க வைத்தது" என்று தனது தனிப்பட்ட பேட்டிகளில் நிறைய முறை கூறியிருக்கிறார் மிச்சல்.

நெருக்கடி காலம்.. 

1991-ல் மிச்சலின் அப்பா இறந்த சமயம் இருவரது வாழ்விலும் மிக நெருக்கடியான காலங்கள். ”நமது இந்த உறவை நீ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டியது பற்றி யோசிக்க வேண்டும்” என்று மிச்சல் ஒபாமாவிடம் கூறுவதாயிருந்தார். ஆனால் அதற்கு முன்பே ஒபாமா தனது கையில் ஒரு மோதிரத்துடன் மிச்சலுக்காகக் காத்திருந்தார். அதன்பிறகு 1998-ல் அவர்களுக்கு மாலியாவும் 2001-ல் அவர்களுக்கு சாஷாவும் பிறந்தார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தங்களை கட்டமைத்துக் கொண்டார்கள். மிச்சல் ஒரு சுதந்திரமான, சுயசிந்தனை உள்ள, தைரியமான பெண்ணாக இருந்தாலும் அவருக்குள் ஒபாமா மட்டுமே அறிந்த ஒரு உணர்வாற்றல்மிக்க பகுதி எப்போதுமே இருந்தது. “எனக்கான சிந்தனைகள் நிறையவே இருந்தாலும் அதனை எல்லோரும் செய்வது போலவே நானும் செய்யக்கூடாது என்பதில் ஒபாமா உறுதியாக இருந்தார். அதுதான் இன்று என்னை நானாகக் உருவாக்கியுள்ளது” என்று ஒபாமாவைப் பற்றி கூறுகிறார் மிச்சல்.

மிச்சல்

2009-ல் பதவியேற்பு  சமயங்களிலும் அதற்குப் பிறகும் ஒபாமா ஆற்றிய பேருரைகளுக்கு பின்னணியில் சில சுவாரசியமான தகவல்களும் இருக்கிறது. மற்ற உலகப் பெருந்தலைவர்கள் போல அவரது பேச்சை எழுதிக் கொடுக்க பெரிய குழுக்கள் எதுவும் செயல்படவில்லை. கூட்டத்துக்கு முதல் நாள் மிச்சலுடன் தன் நேரத்தை செலவிடுவார் அவர். அதிலிருந்துதான் அவருடைய அடுத்தநாளுக்கான பேச்சு தயாராகும். அவர்களுடைய இவ்வளவு வருட திருமண வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக உடற்பயிற்சி செய்துதான் தனது காலைப் பொழுதைத் தொடங்குவார்கள். அதுபோல இரவு மிச்சலைத் தூங்கவைத்த பிறகுதான் ஒபாமாவும் தூங்குவார். காதல் பிடித்தவர்களுக்கும் காதலிப்பவர்களுக்கும் இவர்களது கதை நிச்சயம் கேட்டுக் கேட்டு ரசிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். 

”மிச்சல் எனக்கு அன்பை மட்டும் தரவில்லை, எனக்கான பணிகளும் சூழலும் என்னை அழுத்தும்போது அவள்தான் நான் மூச்சுவிடவேண்டும் என்பதை நினைவுபடுத்துபவள்” என்று கூறுகிறார் ஒபாமா. மிச்சல் சொல்வது போல அந்த மனிதரின் பேச்சில் உண்மை தெரிகிறது.

vikatan

Link to comment
Share on other sites

வயிற்றுத் தசையை வலுப்படுத்தும் பாரிஹாசனம்

பாரிஹாசனம் வயிற்று தசையை வலுப்படுத்தும். கை, கால்களுக்கு வலிமை தரும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

 
 
வயிற்றுத் தசையை வலுப்படுத்தும் பாரிஹாசனம்
 
செய்முறை :

விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும்.

இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் சாதாரண சுவாசம் மேற்கொண்டு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு மறுபக்கமும் இதே போல் செய்யவும். இதே போல் இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள் :

1. வயிற்றுத் தசைகள் பலம்பெறும்.
2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
3. கை, கால் வலுப்பெரும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கைதி மரம்!

 

11p1.jpg

பாகிஸ்தான் நாட்டின் லண்டி கோட்டல் மாவட்டத்தில் இருக்கும் ராணுவ முகாமில் 118 ஆண்டுகளாக ஒரு மரம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. ``மனுஷப் பயலுகளை வாட்டி வதைக்கிறது போதாதுன்னு இது வேறையா?'' என விசாரித்தால், ரணகளமான காரணத்தை அள்ளிப்போடுகிறார்கள். இங்கே இருந்த ஜேம்ஸ் ஸ்குவிட் என்னும் பிரிட்டிஷ்காரர் ஒருமுறை போதையில் இருந்தபோது, இந்த மரம் தன்னை நோக்கி வளர்ந்து வருவதாகக் கோபப்பட்டு, மரத்தைக் கைது செய்ய உத்தரவிட்டாராம். அப்போது சங்கிலியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த, மரம் பிரிட்டிஷ்காரர்கள் பாகிஸ்தானுக்கு விடுதலை அளித்த பின்பும் இன்னும் கைதியாகவே இருக்கிறது.

சூழ்நிலைக்கைதி போல..!

vikatan

Link to comment
Share on other sites

ஜனவரி 15: திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

15940617_1368380403220746_39265488584527

 

இரண்டடியில் வாழ்க்கை தத்துவத்தை போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொணாடப்படுகிறது.

இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு பிடித்த திருக்குறளை பகிர்ந்து அவரை போற்றுங்கள்.

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'

Link to comment
Share on other sites

’மகளிர் மட்டும்’ புதிய போஸ்டர் வெளியீடு!

Magalir mattum jothika

ஜோதிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் மகளிர் மட்டும் திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  தேசிய விருதை வென்ற 'குற்றம் கடிதல்'  என்னும் படத்தை இயக்கிய பிரம்மா தான் இத்திரைப்படத்திற்கும் இயக்குனர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சில நாட்கள் முன்பு சூர்யா தனது மனைவி ஜோதிகாவிற்கு புல்லட் ஓட்ட கற்றுக் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. சூர்யா கொடுத்த பயிற்ச்சியால்,  இத்திரைப்படத்தில் ஜோதிகா கெத்தாக புல்லட்டில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

 

இந்த வார பிபிசியின் தொழில்நுட்பக் காணொளியில்:
*நிண்டெண்டோவின் புதிய அறிமுகம், *ஆளில்லா விமானங்களை வைத்து அமெரிக்கா செய்த சோதனை, *ஒட்டுக்கேட்கப்படாமல் பேச வழிசெய்யும் கருவி, *புதிய தொழில்நுட்பத்துடன் உலகை வலம்வரவுள்ள கப்பல்

Link to comment
Share on other sites

ஆப்ரிக்காவின் சிறந்த படங்கள் (புகைப்படத் தொகுப்பு)

  •  

2017 ஜனவரி 7 முதல் 13 ஆம் தேதி வரை ஆப்ரிக்கா முழுவதிலும் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்கள்:

சனிக்கிழமையன்று, கானாவின் தலைநகரான அக்ராவில் நடைபெற்ற புதிய அதிபரான நானா அக்குஃபோ அடோவின் பதவியேற்வு விழாவின் போது, கன்னத்தில் பல வண்ணங்களில் எழுதி, புதிய அதிபருக்கு தன்னுடைய ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்...
 சனிக்கிழமையன்று, கானாவின் தலைநகரான அக்ராவில் நடைபெற்ற புதிய அதிபரான நானா அக்குஃபோ அடோவின் பதவியேற்வு விழாவின் போது, கன்னத்தில் பல வண்ணங்களில் எழுதி, புதிய அதிபருக்கு தன்னுடைய ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்... அதே நிகழ்ச்சியில், முரசில் தாளமிட்டு முழக்கம் எழுப்பும் இசைக்கலைஞர், அதிபரின் விருந்தினரை மகிழ்விக்கும் காட்சி...  அதே நிகழ்ச்சியில், முரசில் தாளமிட்டு முழக்கம் எழுப்பும் இசைக்கலைஞர், அதிபரின் விருந்தினரை மகிழ்விக்கும் காட்சி... இந்த இசைக்கொம்பு கலைஞர்கள் புதிய அதிபருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் தங்களுடைய இசைக்கொம்பை ஊதுகின்றனர்.  இந்த இசைக்கொம்பு கலைஞர்கள் புதிய அதிபருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் தங்களுடைய இசைக்கொம்பை ஊதுகின்றனர். அன்றைய நாள் கானாவுக்கு அடுத்து அமைந்துள்ள ஐவரி கோஸ்ட், அதனுடைய இரண்டாவது பெரிய நகரமான பௌவகேயின் தெருக்களில் மேலதிக சலுகைகளை கோரிய சிப்பாய்களின் கிளர்ச்சியால் ஸ்தம்பித்தது.அன்றைய நாள் கானாவுக்கு அடுத்து அமைந்துள்ள ஐவரி கோஸ்ட், அதனுடைய இரண்டாவது பெரிய நகரமான பௌவகேயின் தெருக்களில் மேலதிக சலுகைகளை கோரிய சிப்பாய்களின் கிளர்ச்சியால் ஸ்தம்பித்தது. சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றி செய்தி பௌவகேயின் போக்குவரத்தை வெகுவாக பாதித்தது. அப்போது தங்கள் விரும்பம்போல் நேரத்தை கழிக்க இந்த பயணிகளால் முடிந்தது.  சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றி செய்தி பௌவகேயின் போக்குவரத்தை வெகுவாக பாதித்தது. அப்போது தங்கள் விரும்பம்போல் நேரத்தை கழிக்க இந்த பயணிகளால் முடிந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று, சிக்போக் பள்ளியில் இருந்து 200-க்கு மேலான மாணவியர் கடத்தப்பட்டு 1000-மாவது நாளை குறிக்கும் வகையில்  ஞாயிற்றுக்கிழமையன்று, சிக்போக் பள்ளியில் இருந்து 200-க்கு மேலான மாணவியர் கடத்தப்பட்டு 1000-மாவது நாளை குறிக்கும் வகையில் "பிரிங் பேக் அவர் கேள்ஸ்" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் பேரணி நடத்தினர். பின்னர், அவர்களின் இந்த பேரணியை தடுக்க போலிஸார் தடியடி நடத்தி கலைத்ததால், இந்த செயற்பாட்டாளர்களின் பேரணி சுமூகமாக நடைபெறவில்லை.  பின்னர், அவர்களின் இந்த பேரணியை கலவர தடுப்பு போலிஸார் தடியடி நடத்தி கலைத்ததால், இந்த செயற்பாட்டாளர்களின் பேரணி சுமூகமாக நடைபெறவில்லை. புதன்கிழமையன்று, கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தில் பயணியர் மற்றும் சரக்கு ரயில் சேவையின் தொடக்கத்தின் போது காவலில் பாதுகாப்பு பணியாளர்.  புதன்கிழமையன்று, கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தில் பயணியர் மற்றும் சரக்கு ரயில் சேவையின் தொடக்கத்தின் போது காவலில் பாதுகாப்பு பணியாளர். புதன்கிழமையன்று, தலைநகர் ஜூபாவில் பயிற்சி எடுக்கின்ற தெற்கு சூடான் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்.  புதன்கிழமையன்று, தலைநகர் ஜூபாவில் பயிற்சி எடுக்கின்ற தெற்கு சூடான் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள். எல்லை கடந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடைவிதித்திருப்பதால் கோபம் அடைந்துள்ள பகுதியான லிபியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரின் காவல் நிலையத்தின் மீது கற்களை எறிகின்ற துனிஷிய இளைஞர்கள்.  எல்லை கடந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடைவிதித்திருப்பதால் கோபம் அடைந்துள்ள பகுதியான லிபியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரின் காவல் நிலையத்தின் மீது கற்களை எறிகின்ற துனிஷிய இளைஞர்கள். செவ்வாய்கிழமையன்று கொலையுண்ட புரூண்டி நீர்வள அமைச்சர் இம்மானுவேல் நியான்குருவின் மகள், தன்னுடைய தந்தையின் கல்லறையை புஜூம்புராவில் நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது ஆசீர்வதிக்கிறார்.  செவ்வாய்கிழமையன்று கொலையுண்ட புரூண்டி நீர்வள அமைச்சர் இம்மானுவேல் நியான்குருவின் மகள், தன்னுடைய தந்தையின் கல்லறையை புஜூம்புராவில் நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது ஆசீர்வதிக்கிறார். புதன்கிழமையன்று, அல்ஜீரஸில் நடைபெற்ற

 புதன்கிழமையன்று, அல்ஜீரஸில் நடைபெற்ற "வின்டர் சூப்" என்ற வீடில்லாத மக்களுக்கு உணவு வழங்கும் அறக்கொடை நிகழ்வின்போது, வீடில்லாத சிறுமி சாப்பிடுவதை பார்த்த அல்ஜீரிய காவல்துறை அதிகாரி ஒருவர் முழந்தாழ் படியிடுகிறார்.

திங்கள்கிழமையன்று, தாங்கள் தஞ்சம் அடைந்துள்ள வீட்டிற்கு முன்னால் நைஜீரியாவின் தெற்கு காதுனாவில் நடைபெறும் சண்டையால் இடம்பெயர்ந்துள்ள குழந்தைகள்.

 

 திங்கள்கிழமையன்று, தாங்கள் தஞ்சம் அடைந்துள்ள வீட்டிற்கு முன்னால் நைஜீரியாவின் தெற்கு காதுனாவில் நடைபெறும் சண்டையால் இடம்பெயர்ந்துள்ள குழந்தைகள்.

BBC

Link to comment
Share on other sites

இந்தியாவின் ரன்னிங் பாட்டி

old women marathon

மும்பையைச் சேர்ந்த பிரிம்லா ஹிங்கோரி என்ற பெண், கடந்த 13  ஆண்டுகளாக மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போதும் தினசரி காலைகளில் ஜாக்கிங் செல்லும் பிரிம்லாவுக்கு வயது 72. 100 நாட்களில் 500 கி.மீ ஓடியது இவரின் ரெக்கார்டுகளில் ஒன்று. ஒரு நாளில் 2 மணி நேரமாவது உடல்நலத்துக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார் பிரிம்லா. இவருக்கு மூன்று மகன்கள். மகன்கள் வளர்ந்த போது அவர்களுடன் இணைந்து ரன்னிங் சென்று கொண்டிருந்தாராம். தற்போது அவர்கள் மூவருக்கும் திருமணமாகவே அருகல் வசிக்கும் பெண்களுக்கு பூஸ்ட் கொடுத்து ஓட வைக்கிறாராம்.

 

 

போக்கிமான் கோவுக்கு சீனாவில் தடை!

pokemon go

போக்கிமான் கோ கேம்க்கு சீனா தடை விதித்துள்ளது. பாதுகாப்பு குறைவாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஆடியோ, வீடியோ மற்றும் டிஜிட்டல் வெளியீட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. போக்கிமான் கோவுக்கு மட்டுமில்லை பாதுகாப்பு குறைவாக உள்ள அனைத்து ரியாலிட்டி கேம்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்கிமான் கோ கேமால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

 

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

Justin Trudea

பிரதமர் மோடி பொங்கல் வாழ்தை தமிழில் கூறியது ஒருபக்கம் இருக்க, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயுவும், தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'கனட வாழ் தமிழர்களால், கனடா வலுவும், வளமும் அடைந்துள்ளது. அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துகள்' எனக்கூறியுள்ளார்.

 

 

 

Link to comment
Share on other sites

126p1.jpg

இணையத்தில் வீசிய இசைப்புயல்

மயக்கும் இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த வாரம் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ட்விட்டர், ஃபேஸ்புக் உட்பட சோஷியல் மீடியா ட்ரெண்ட்டிங்கில் அதிர்ந்தன. அவரது மகன் அமீனுக்கும் அதே நாளில் பிறந்தநாள் என்பதால் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்தன. ‘உலகின் சிறந்த அப்பா மற்றும் ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்ற வாழ்த்துச் செய்தியோடு அமீன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. ட்ரெண்டிங்கில் #happybirthdayrahman #hbdarrahman #arrameen #arr50 உட்பட 50-க்கும் மேற்பட்ட ஹேஷ்டேக்குகள் இடம்பிடித்தன. வாழ்த்துகள் இசைப்புயலே!


126p2.jpg

இளம் துருவன்

தமிழ் சினிமா ரசிகர்களை சமீபத்தில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன். திரையுலகப் பிரபலங்களான ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ், பார்த்திபன், சுந்தர்.சி உட்பட பலரும் படத்தைப் பார்த்துவிட்டு வாழ்த்தியதில், இப்படம் திரையிடப்பட்ட அரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. உதவி இயக்குநராக யாரிடமும் பணிபுரியாமல், தான் இயக்கியுள்ள முதல் படத்துக்கு வரும் வரவேற்பால் குஷியில் இருக்கிறார் இவர். 22 வயதே ஆகும் கார்த்திக் நரேனுக்கு பிரபலங்கள் மட்டுமின்றி, ரசிகர்களின் வாழ்த்துகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, #duruvangal16 #dirkarthik போன்றவை இந்திய அளவிலான ட்ரெண்டில் இடம்பிடித்தன. ஒரு நாயகன் உதயமாகிறான்!


126p3.jpg

ஹெலிகாப்டருக்கு ஓய்வு

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. தோனியின் விலகலை அடுத்து, நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தே கோஹ்லி கேப்டனாகப் பொறுப்பேற்கிறார். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை உட்பட பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத்தந்த தோனியின் விலகல் ரசிகர்களுக்குக் கவலை அளித்துள்ளது. இதன் பாதிப்பாக #dhoniquits #dhonistepsdown #captaincool #msdstepsdown #bestcaptainever போன்ற டேக்குகள் ட்விட்டர் ட்ரெண்டில் முதல் இடம் பிடித்தன.


126p4.jpg

மீண்டும் யுவி!

நட்சத்திர கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் தன் காதலியான கஸல் கீச்சின் கரம் பற்றிய மகிழ்ச்சியில் இருக்கும் யுவிக்கு, இந்தச் செய்தி மேலும் உத்வேகத்தைத் தந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதாக அறிவித்திருக்கும் நிலையில், யுவராஜ் சிங் அணியில் இடம் பிடித்துள்ளதால் ரசிகர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஒரு வீரராக இந்திய அணிக்கு சிறப்பான பங்களித்தவர் தோனி’ எனத் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் யுவி. அனைத்தையும் தாண்டி, #yuvrajsingh பெயர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. வந்துட்டேன்னு சொல்லு!


126p5.jpg

தெறிக்கவிட்ட மெகா ஸ்டார்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், அவரின் 150-வது திரைப்படமாக ‘கைதி நம்பர் 150’ வெளியாகவுள்ளது. தமிழில் அதிரி புதிரி ஹிட் அடித்த இளைய தளபதியின் ‘கத்தி’ திரைப்படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடை வெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளதால், இப்படத்திற்கு டோலிவுட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெயிலர் யூ-டியூபில் வெளியான இரண்டே நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். ட்விட்டரில் இரண்டு நாட்களுக்கு இப்படம் பற்றிய #khaidino150 ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் கலக்கியது. இப்படத்தைப் பார்க்க ‘வெயிட்டிங்’ என்று ரசிகர்கள் ட்வீட்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர். சரவெடி!


126p6.jpg

இதுதான் இப்போ வைரல்

மெல்வின் என்பவர் தனது ‘ரெடிட்’ சமூக வலைதளத்தின் பக்கத்தில் வெளியிட்ட இப்புகைப்படம், 2017-ம் ஆண்டின் முதல் வைரல் புகைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. புகைப்படத்தைச் சுற்றியுள்ள இடங்கள் தெளிவாகவும், நடுவில் வைக்கப்பட்டுள்ள மாமிசம் மட்டும் மங்கலாகவும் தெரியும் இப்புகைப்படம், எடிட் எதுவும் செய்யப்படவில்லை. அப்புறம் எப்படி மங்கலாகத் தெரிகிறது? மிகவும் மெல்லியதாக வெட்டப்பட்ட மாமிசத் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதுதான் அதற்குக் காரணம். இந்த உண்மையை அறிந்துகொண்ட நெட்டிசன்கள் வியந்து
போய் பகிர்ந்ததில், இப்புகைப்படம் செம ஹிட். வாட்ஸ் அப்பில் #SlicedHam என்ற பெயரில் இப்புகைப்படம் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. ரைட்டு!


126p81.jpg

இந்தியத் திரையில் முதன்முறையாக...

ஒரு சொல்லை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என எப்படிப் படித்தாலும் அதே வார்த்தையாக அமைவதை ஆங்கிலத்தில் ‘பாலின்ட்ரோம்’ என்றழைப்பார்கள். தமிழில் ‘விகடகவி’, ‘காக்கா’ போன்றவை இதற்கு சில உதாரணங்கள். இந்நிலையில், இந்தியாவின் முதல் ‘பாலின்ட்ரோம்’ பாடல் என்ற பெருமையுடன் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது ‘வினோதன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மேகராகமே’ பாடல். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடல், ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்டிலும் #PalindromeSong இடம் பிடித்துள்ளதால், படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ‘வாரே...வா!

vikatan

Link to comment
Share on other sites

“ஹலோ நான் இனோவா பேசுறேன்!”

ஹாய் டியூட்ஸ்...

 

p34b.jpg‘‘ ‘காதல்ல ஏமாந்தவங்களைவிட, கார் வாங்கி ஏமாந்தவங்க அதிகம்’னு ஒரு ஆட்டோ மொபைல் பழமொழி இருக்கு. ஆனா, என் விஷயத்துல நிச்சயமா அது பொய்யாத்தான் இருக்க முடியும். என்னை நம்பிக் கெட்டவங்க யாரும் கிடையாது (நாஞ்சில் சம்பத்தை இழுக்காதீங்க பாஸ்!). எனக்கு இந்த வருஷத்தோட 11 வயசு முடியப் போகுது. 2005-ல்தான் இந்தியாவுக்கு வந்தேன். ஜோதிகா காலத்தில் இருந்து ராதிகா ஆப்தே காலம் வரைக்கும் விதவிதமா என்னை மக்கள் ரசிச்சுக்கிட்டு வர்றாங்க.

என்னோட லேட்டஸ்ட் பெயர்: டொயோட்டா இனோவா கிரிஸ்டா. முன்ன மாதிரி இல்லாம 7 காற்றுப் பைகள், ABS (இந்த பிரேக் இருந்தா வீல் லாக் ஆகாது), டச் ஸ்க்ரீன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்னு எல்லா வசதிகளோடும் வர ஆரம்பிச்சுட்டேன். கண்ணை மூடிக்கிட்டு என்னை ஹைவேஸில் ஓட்டலாம். அந்த அளவு ஸ்டெபிலிட்டிக்கு நான் கியாரன்ட்டி. அது மட்டுமில்ல; நாஞ்சில்கூட ஒரு பேட்டியில சொல்லியிருக்காரு... ‘நோவாமல் பயணிக்க இனோவா’ அப்படீனு! இப்போல்லாம் நான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்; வேகம்னு வந்துட்டா ஃபெராரி, டியூட்ஸ்!

ஒரு காரில் மஞ்சள் போர்டு ரிலீஸ் ஆகிட்டா, (அதாவது, வாடகை கார்) சொந்தமா கார் வாங்குறவங்க அந்தக் காரை ‘டாக்ஸி கார்’னு ஒதுக்கிடுவாங்கனு ஒரு டாக் இப்போவும் இருக்கு. அதை உடைச்சதுல எனக்கு இன்னும் கொஞ்சம் கர்வம். ஒரு கறவை மாடு இருந்தா ஒரு குடும்பமே பிழைச்சுக்கும்னு சொல்வாங்களே... அந்த மாதிரி என்னை வாங்கி வெச்சுக்கிட்டா ஒரு டாக்ஸி டிரைவரோட மொத்தக் குடும்பத்துக்கும் நான் கியாரன்ட்டி.

p34a.jpg

கொஞ்சம் கொஞ்சமா நான் அரசியல், சினிமா, மிடில் க்ளாஸ்னு எல்லா ஏரியாவுலேயும் ரவுண்டு கட்டி சுத்த ஆரம்பிச்சேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகூட இன்னும் என்கூட பயணம் பண்றதைத்தான் விரும்புறார்னு சொன்னா நம்புவீங்களா? இப்படி எல்லாம் கௌரவமா இருந்த என் மேல, சமீபகாலமா ஒரு டாக் இருக்கு. அதாவது, அரசியல்ல என்னை ஒரு காமெடி பீஸாகவும் ராசி இல்லாதவன்னும் சொல்றாங்க! எப்படீனு கேட்கிறீங்களா?

2011-ல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவோட கூட்டணி வெச்சுக்கிட்டு ஜெயிச்சாரே... ஞாபகம் இருக்கா? அப்போ கவர்ன்மென்ட் சார்பா அவருக்கு என்னைத்தான் கொடுத்ததா சொன்னாங்க. ஆனா, நடந்து முடிஞ்ச சட்டசபைத் தேர்தலுக்கு அப்புறமா, ‘ஓட்டுகளைப் பிரிச்சுட்டார்’னு அவர் மேல ஏகப்பட்ட கமென்ட்ஸ். மக்கள் நலக் கூட்டணி டவுன் ஆனதுக்கு, என் மேல பழி போட்டா எப்படி மக்கழே?

ஓர் அரசியல்வாதிக்கு நான் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன். அவரால நான் தமிழ்நாட்ல பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனேன். கண்டுபிடிச்சிருப்பீங்க... யெஸ், நாஞ்சில் சம்பத்! அவர் பேரையே என்னோட லிங்க் பண்ணி மீடியாக்கள்லாம் கிண்டல்கூட பண்ணியிருக்காங்க. அம்மா கட்சியில துணை கொ.ப.செ-வா நாஞ்சில் சம்பத் சேர்ந்ததுக்கப்புறம், அவர் வீட்டு வாசல்ல நான் பரிசா இறங்கினேன். அதுக்கப்புறம் ஒரு டி.வி பேட்டியில வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம, கட்சித் தலைவருக்கு நல்லது பண்றேன்னு நினைச்சு அவர் பேசினது காமெடியாகி, அவரைக் கட்சிப் பதவியிலேருந்தே தூக்கிட்டாங்க. ‘இந்த காருக்காகத்தான் நீங்க கட்சி மாறுனதா சொல்றாங்க; தயவுசெஞ்சு அதைத் திருப்பிக் கொடுத்துடுங்க’னு என்னைப்பத்தி அவருகிட்டே போட்டுக் கொடுத்திருக்காங்க.! என்னால அவர் மானமே போச்சுங்கற மாதிரி மீடியாவுலயும் எழுதுறாங்க. இப்போகூட அம்மா போனதுக்கப்புறம், என்னைத் திருப்பிக் குடுத்துட்டாரு; ஆனா, அதுக்கப்புறம் அவருக்கு சூப்பரான செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கறதுக்கும் நான்தான் காரணமா இருந்திருக்கேன்! இப்போ மறுபடியும் அவரோட செட்டில் ஆகிட்டேன்!

p34.jpg

மதுரையில அழகிரிக்கும் என் மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு. ‘அண்ணனோட இனோவா வருதுடா’னு ஒரு காலத்துல மதுரையையே கிடுகிடுக்க வெச்சுக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் அவர் பண்ணின அட்ராசிட்டியில, வழக்கம்போல நம்மளைக் கோத்துவிட்டாய்ங்க! நல்லவேளை, ஏர்போர்ட்ல சசிகலா புஷ்பாகிட்ட அறை வாங்கின தி.மு.க எம்.பி சிவா, இப்போ டாடா சஃபாரி வெச்சிருக்காரு... இல்லேன்னா, அவர் அந்தம்மாகிட்ட அறை வாங்குனதுக்குக் காரணம் நான்தான்னு எழுதுனாலும் எழுதுவாங்க.

துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு, டி.கே.எஸ்.இளங்கோவன்னு இன்னும் நிறைய பேர் என்னை செல்லமா வெச்சிருக்காங்க. சினிமாக்காரங்க பென்ஸ் காரை ‘ராசியில்லாத காரு’ன்னு ஒதுக்கற மாதிரி, அரசியல்வாதிங்க என் பேரைக் கேட்டாலே பதறுறீங்களே... ஏன்? எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கோங்க... ஏன் ராசி பார்த்து அடுத்தவங்களைப் பழி வாங்குறீங்க? 8 கோடி ரூபாய் போட்டு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கினாலும், அது ரோட்டுக்கு வந்துதான் ஆகணும் பாஸ்! நான், நீங்கள்லாம் எம்மாத்திரம்? வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!’’

vikatan

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று...

ஜனவரி - 16

 

1547 : நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.

 

1581 : இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்ட விரோதமானதாக்கியது.

 

1707 : ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியமாக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

 

1761 : இந்தியாவின் பாண்டிச்சேரியை பிரான்ஸிடமிருந்து பிரித்தானியர்  கைப்பற்றினர்.

 

1795 : நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தை பிரான்ஸ் கைப்பற்றியது.

 

1864 : ஜேர்மனி மீது டென்மார்க் போர் தொடுத்தது.

 

1909 : ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழு வினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

 

885laurent-desire-kabila.jpg1945 : ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.

 

1956 : எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் பலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.

 

1979 : ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

 

1991 : ஈராக் மீது ஐக்கிய அமெரிக்கா போர்ப் பிரகனடம் செய்தது. அமெரிக்க நேரப்படி இத்தினத்தில் வளைகுடா யுத்தம் ஆரம்பமாகியது.

 

1992 : எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்ஸிகோ நகரில் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

 

1993 : விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டபோது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

 

2001 : கொங்கோ ஜனாதிபதி லோரன்ட் கபிலா அவரின் மெய்க்காவலர் ஒருவரால் சுடப்பட்டார். இரு நாட்களின் பின் அவர் உயிரிழந்ததாக கொங்கோ அரசு அறிவித்தது.

 

2002 :  ஒசாமா பின் லேடனினதும் அல் கைதா, தலிபான் அமைப்புகளினதும் சொத்துக்களை முடக்கு வதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறை வேற்றியது. 

 

2006 : எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் ஜனாதிபதியானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

 

2003 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமிக்குத் திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

 

2008 : இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

 

2013 : அல்ஜீரியாவில்  வெளிநாட்டுத் தொழிலாளிகள் 41 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். 

 

2016 : புர்கினோ பெஸோவில் உல்லாச ஹோட்டலொன்றில் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக்கினர். இவர்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர் காயமடைந்தனர். 176 பேர் விடுவிக்கப்பட்டனர்.

.metronews.lk
Link to comment
Share on other sites

20 நிமிட நடைப் பயிற்சியுடன் நாளை ஆரம்பியுங்கள்

வாக்கிங்

 

உடல் எடை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை கட்டுக்கோப்பில் வைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி செய்கின்றன. 20 நிமிடங்கள் வாக்கிங் செல்வது, உடலில் தேவையில்லாமல் ஏற்படும் வீக்கங்களை குறைக்க வல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்திக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்கிறோம் என்கிறது அந்த ஆய்வு.

vikatan

Link to comment
Share on other sites

56 ஆண்டு பழமையான பெராரி கார் ரூ.83 கோடிக்கு ஏலம்!

 

 
ferrari_3118453f.jpg
 
 
 

ஆட்டோமொபைல் துறையில் எத்தனையோ புதுப்புது மாடல்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் வந்தாலும் பழைய கார்களுக்கு இருக் கும் மவுசு என்றைக்குமே தனியானது.

இன்றளவும் பழைய கார்களின் அணி வகுப்பைக் காணக் குவியும் மக்களின் கூட்டம் எப்போதுமே அதிகம். சில நாடு களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற் காகவே பழைய கார்களின் அல்லது மோட்டார் வாகனங்களின் அணிவகுப்பை ஆண்டுதோறும் நடத்துகின்றனர்.

கார்களைப் பொறுத்தமட்டில் பெராரி கார்களுக்கு எப்போதுமே மவுசு அதி கம். இந்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில் 56 ஆண்டு பழமையான பெராரி கிளாசிக் மாடல் கார் ஒரு கோடி பவுண்டுக்கு (சுமார் ரூ. 83 கோடி) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூன்று மாத செலவுத் தொகை இது என்பதால் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் தொகை மூலம் 2 ஆயிரம் மாணவர்கள் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர முடியுமாம்.

இவை அனைத்தையும் தாண்டி இந்த அளவு அதிக தொகைக்கு ஏலம் போவதற்கு காரின் மீதான பிரியமும் அபிப்ராயமும்தான் காரணம். மிகச் சிறிய அழகிய பெராரி கார் இது. இந்த அளவில் இதற்குப் பிறகு பெராரி கார்களைத் தயாரிக்கவில்லை.

பெராரி 250 ஜிடி கலிபோர்னியா ஸ்பைடர் என்ற பெயரில் வெளியான இந்த கார் 56 ஆண்டுகள் ஓடியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வசம் இது வந்துள்ளது. அரிசோனாவில் 19-ம் தேதி இந்த கார் ஏலம் விடப்பட உள்ளது. இந்த காரின் வடிவமைப்பை பினின்ஃபரினா வடிவமைப்பு நிறுவனம் செய்துள்ளது. இது 3 லிட்டர் வி12 இன்ஜினை கொண்ட தாகும். இதன் மேற்கூரை திறந்து மூடும் வகையிலானது. 56 ஆண்டுகள் ஆனாலும் இந்த கார் புதிதாகத் தயாரிக்கப்பட்ட போது எந்த அளவுக்கு சிறப்பாக சீறிப் பாய்ந்ததோ அதே வேகத்தில் இன்றளவும் செயல்படுகிறது.

இந்த காருக்கு ஏன் இந்த அளவுக்கு மதிப்பு என்றால் பெராரி நிறுவனம் இந்த மாடலில் அதிகக் கார்களை தயாரிக்கவில்லை. இதனாலேயே இந்த காருக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டுள்ளது. போன்ஹாம்ஸ் என்ற ஏல நிறுவனம் தான் இந்தக் காரை ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளது. குறைந்தபட்சம் ஒரு கோடி பவுண்டுக்கு ஏலம் போகும் என்று இத்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

85 வயதில் மீன்குழம்பு சமையலில் கலக்கும் கொடிவேரிப் பாட்டி!

     
பழனியம்மாள்    
 

ரோடு மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையும் ஒன்று. இயற்கை சூழலில் அழகாய் அமைந்துள்ளது கொடிவேரி.  இங்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கடைகளின் மீன் வறுவலை சுவைக்காமல் செல்வதில்லை. எக்கச்சக்கமான கடைகள் இங்கே வந்துவிட்ட போதும் மிகச்சுவையான வறுவலும் மீன் குழம்பும் இங்கே கிடைத்தாலும் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியேதான் இருக்கிறது. 

பல தரப்பட்ட கடைகள் இங்கே முளைத்து விட்ட போதும் இங்கே பாட்டிகடை என்பது பிரசித்தம். அப்படியென்ன சிறப்பு அங்கே.. யார் அந்த பாட்டி என்று அறிந்துகொள்ள ஆவலுடன் அந்தக் கடைக்கு சென்றோம். நாம் யாரென்று அறியாத போதும், ‘வாங்கப்பா சாப்பிடுங்க.. சாப்பாடு எடுத்து வை’ என்ற சத்தம் காதினில் விழுந்தது. 85 வயது பாட்டி முதுமையிலும் நம்மை அன்போடு வரவேற்றார். அவரைப் பார்த்ததும் உழைத்து வாழ வயது ஒரு தடையே அல்ல என்பது நமக்குப் புரிந்தது.    

பழனியம்மாள்

கால்கள் தள்ளாடும் வயதிலும் வார்த்தை தள்ளாடாமல் அவரின் வாழ்க்கையின் அனுபவங்களை நம்மோடு அழகாக பகிர்ந்துகொண்டார்.

“என் பேரு பழனியம்மாள். என் கணவர் பேரு காளியண்ணன். இங்கதான் மீன் பிடிக்கிறார். நான் இங்க வந்து 30 வருசத்துக்கு மேல ஆச்சு தம்பி. நான் இங்க மீன் கடை வச்சு இருக்கேன். நான் இங்க வந்தப்போ மொத்தமே ரெண்டு கடைதான் இருந்துச்சு. அப்போ அஞ்சு ரூபாய்க்கு மீன் குழம்பும் சாப்பாடும் செஞ்சி போட்டேன். வயிறு நிறைய நிறைய சாப்பிடலாம். அப்போ விலையெல்லாம் கம்மி.. அதனால அவ்வளோ கம்மியான பணத்துக்கு சாப்பாடு போட்டேன். அந்த விலையில இருந்து இப்போ முப்பது ரூபாய்க்கு விலையை ஏத்தியாச்சு., அதுக்கு முப்பது வருசம் ஆகிடுச்சு” எனச் சிரிக்கிறார் அந்த பாட்டி. அந்த சிரிப்பினில் தெரிந்தது குறைந்த விலையிலும் மற்றவர்களின் பசியை நிரப்பும் மகிழ்ச்சி.   

kodialbum_15287.jpg

ஈரோடு கொடிவேரி அணையை சுற்றியுள்ள மக்களின் அழகியல் வாழ்க்கை...
சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க...

“என்னோட பையனும் மீன் பிடிக்கிறதுன்னு போய் அஞ்சாவது மேல படிக்காம போய்ட்டான். இப்போ பேரனைத்தான் இங்கிலீசு மீடியம் படிக்க வைக்கிறோம்” என்றார். இவருக்கு உதவியாய் இருக்கும் இவரது மருமகள், “பாட்டி சும்மாவே இருக்க மாட்டாங்க.. ஏதாவது வேலை பார்த்துகிட்டே இருப்பாங்க. அதற்கு தகுந்த மாதிரி இங்க வர்றவங்களும் பாட்டி கடையை தேடி வர்றாங்க. அவங்க பாட்டி தான் எங்களுக்கு பரிமாறணும்னு  சொல்வாங்க. பாட்டி மேல அவங்களுக்கு அவ்ளோ மரியாதை. இங்கே வருபவர்களில் நிறைய பேர் இங்கே உடைமைகளை வைத்துவிட்டு செல்வார்கள். அதில் தங்கம் நகை பணம் எல்லாம் இருக்கும். நான் கேட்பேன், ‘எப்படி இந்த மாதிரி நம்புறீங்க’னு. ‘பாட்டியை எங்களுக்குத் தெரியாதா’ன்னு சொல்வாங்க. அந்த அளவு பாட்டி மேல அவங்களுக்கு நம்பிக்கை.

பழனியம்மாள்

ஒருதடவை திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகாரங்க இங்க வந்து கம்பெனியோட பில்-பணம் எல்லாத்தையும் விட்டுட்டு போயிட்டாங்க. அடுத்த நாள் வந்து தேடுனாங்க நான் பத்திரமா எடுத்து வச்சு இருந்து அவங்ககிட்ட கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவங்க அடிக்கடி இங்க வந்து பாட்டி கையால சாப்பிட்டுதான் போவாங்க. போன வாரம் கூட வந்து 300 ரூபாய் கொடுத்துட்டு போனாங்க. ஒருமுறை தனியார் தொலைக்காட்சியில பாட்டியோட மீன் குழம்பு சமையல் வந்துச்சு. அதுக்கப்புறம் பாட்டி கடைதான் இங்க ஃபேமஸ்” என்றார் அவரது மருமகள்.

பழனியம்மாள்

''இதுல பெருசா வருமானம் வரலையப்பா., 100 ,150 னு தினம் கிடைக்கும் அதுவும் எல்லாத்துக்கும் சரியாய் போகிடும். லீவு நாட்கள்ல 200, 300 னு கிடைக்கும் அவ்ளோதான். வேற எதுவும் எங்களுக்கு தெரியாதுப்பா'', 'பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே' என்று நாம் கேட்டதுக்கு “இத்தனை  ஆண்டுகள் வர்றவங்க, போறவங்க முகத்தை பார்த்துட்டு இருந்து பழக்கமாகிடுச்சு திடீர்னு அவர்களை பார்க்காமல் இருக்க முடியலை. வீட்டில் இருந்து சும்மா சாப்பாடு சாப்பிடவும் முடியலை. அதான் என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ  வேலை செய்கிறேன். இனிமேலும் செய்வேன். உழைக்கறதுல என்ன கஷ்டம் தம்பி?” என்று நம்மிடமே கேட்டு அடுத்து வந்தவர்களை கவனிக்க சென்றார்.  

இக்காலத்தில் அதுவும் இந்த முதுமையடைந்த வயதில் உழைத்து உண்ண நினைக்கும் இந்த பாட்டி ஓர் அதிசயம்தான். நமது வாழ்த்துக்களை பாட்டிக்கு சொல்லிவிட்டு, பாட்டி கையால் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.  

.vikatan

Link to comment
Share on other sites

இவர்களுக்கு பள்ளி செல்வதே பிரச்னைதான்... காட்டில் நடந்து, ஆற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்

a2_15114.jpg

ங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிறது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவன். பள்ளிக்கு சைக்கிளில் செல்ல விரும்புகிறான். என்ன செய்வீர்கள்? அதட்டுவீர்கள். "வேண்டாம். பயங்கர டிராபிக். ஏதாவது வண்டி மோதுனா என்ன பண்றது. ஸ்கூல் வேன்ல போ. இல்லைனா அப்பா வேணும்னா கொண்டு வந்து விடவா" என செல்லம் கொஞ்சுவோம் அப்படித்தானே. அப்படி வேனிலோ, இரு சக்கர வாகனத்திலேயோ மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதே நமக்கு பெரிய டென்ஷன். 'லேட் ஆயிடுச்சு. அப்புறம் கேட்டுக்கு வெளியேதான் நிக்கணும்'னு மாணவர்களுக்கும் டென்ஷன். குழந்தைகள் பள்ளி செல்வது என்பது நமக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய டென்ஷன் தான்.

ஸ்மார்ட் ஸ்கூல், ஏசி பஸ், நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என நமக்கு எல்லாம் கிடைக்கிறது. பெரிய தொலைவு இல்லாமல் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க முடிகிறது. ஆனால் இப்படி போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத ஊர்களில் மாணவர்களின் நிலை என்ன? அப்படி ஒரு கிராமம் தான் கோவை காரமடை அருகே வனப்பகுதில் அமைந்துள்ள  பூச்சமரத்தூர் கிராமம். இங்கு  25 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள்.

a4_15245.jpg

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஆனால் வெளி உலகுக்கான தொடர்பை அற்று தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது இந்த கிராமம். சுற்றிலும் காடு, நகரத்துடனான தொடர்பை துண்டிக்கும் ஆறு இவைதான் இந்த ஊரின் அடையாளங்கள்.

ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டும் என்றால் கூட இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். பாலங்கள் இல்லை. ஆற்றில் பெரு வெள்ளம் வந்தால் பல கிலோ மீட்டர் சுற்றித்தான் நகரத்தை அடைய முடியும். இந்த கிராமத்தில் இருந்து சில மாணவர்கள் தினமும் பள்ளி சென்று வருகிறார்கள். வீட்டில் இருந்து சிறுதூரம் நடந்து, அங்கிருந்து பரிசல் பயணம், பின்னர் மீண்டும் சிறு நடை, அங்கிருந்து பேருந்து என விரிகிறது இவர்களின் பள்ளியை நோக்கிய பயணம். இத்தனை கஷ்டமா என்கிறீர்களா? இன்னும் இருக்கிறது பரிசலை இயக்குபவர்களே இவர்கள்தான்.

a3_15438.jpg

நாம் அந்த கிராமத்துக்குச் சென்றிருந்தபோது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நகரத்தின் பேரிரைச்சலில் இருந்து அமைதியான அந்த கிராமத்தை அடைந்திருந்தோம். பில்லூர் அணை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றது. பஸ்சில் இருந்து ஒரு மாணவி உட்பட 4 அரசு பள்ளி மாணவர்கள் இறங்கினர். கற்கள் நிறைந்த சாலையில் பயணிக்கத்துவங்கினார்கள். பள்ளியில் அன்று நடந்ததை பேசி சிரித்தபடியே மேடு-பள்ளம் நிறைந்த அந்த சாலையில் மிக கவனமாக பயணித்தனர்.

ஒரு பெரிய ஆலமரத்தை கடந்து பள்ளத்தில் இறங்க... அங்கு ஆறு. ஆற்றை பார்த்ததும் நமக்கு இருந்த அச்சமும், ஆச்சரியமும் அவர்களுக்கு சுத்தமாக இல்லை. மாணவர்களுள் ஒருவன் ஒரு மரத்தின் பின்னால் இருந்த ஃபைபர் பரிசல், துடுப்பை எடுத்து வந்தார். மிக சாதாரணமாக படகை ஆற்றின் கரையில் வைத்து மற்ற மாணவர்கள் ஏறச்சொல்லி, அந்த மாணவனும் பரிசலில் ஏறினார். இடது வலதாக துடுப்பை இயக்க, படகு மறுகரையை நோக்கிச் சென்றது.

a5_15559.jpg

"நாங்க 6 பேர் சார். இப்படித்தான் தினமும் பரிசல்ல போவோம். அதெல்லாம் பயமில்லை. ரொம்ப வெள்ளம் வந்தா ஸ்கூலுக்கு போக மாட்டோம்" என நாம் கேட்ட அத்தனை கேள்விக்கு ஒற்றை ஒற்றை வார்த்தையாகவே பதில் சொன்னார்கள் மாணவர்கள்.

அங்கிருந்த மக்களிடம் பேசினோம். "தினமும் இந்த பசங்க ஸ்கூலுக்கு இப்படித்தான் போறாங்க. வீட்டுல இருந்து ஆற்றங்கரைக்குப்போய் பரிசல்ல துடுப்பு போட்டு அந்த கரைக்கு போகணும். அங்கிருந்து கவர்மென்ட் பஸ்சை புடிச்சு மறுகரைக்கு போய் அங்கிருந்து பஸ்ல ஸ்கூலுக்கு போவாங்க. சாய்ந்திரமும் இது தான்" என்றார்கள்.மறுபுறம் இதே ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்கிறார்கள் சுற்றுலா பயணிகள். அச்சத்தோடு, 'லைஃப் ஜாக்கெட்' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு பயணிக்கிறார்கள். மாணவர்களிடம் ஆறு மீதான அச்சமும் இல்லை. அவர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை.

a7_15511.jpg

குழந்தைகளை எப்படியெல்லாம் நடந்து கொள்வது, சிறப்பான குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து நாம் தேடி தேடி அறிந்து குழந்தைகளை மிக கவனமாய் பாதுகாத்துக்கொண்டிருக்கிற இதே காலத்தில், பள்ளி செல்ல இத்தனை சிரமங்களை சந்திப்பது என்பது மனதை பிசையத்தான் செய்கிறது.

நாம் கல்வி கற்பது என்பதே மிகப்பெரிய பிரச்னையாக பார்க்க பழகி இருக்கிறோம். ஆனால் பள்ளிக்கு செல்வது என்பதே இவ்வளவு பிரச்னையா என்பது அதிர்ச்சியளிக்கவே செய்கிறது. ஆனால் இதை சாதாரண பயணமாகவே கருதுகிறார்கள் அவர்கள். நமக்குதான் இது பெரிய சாதனையாக மலைக்க வைக்கிறது. ஆனால் நாம் நினைப்பதுபோல் இது சாதனை அல்ல... சாபம். அடிப்படை உரிமையான கல்வியை கற்க இந்த குழந்தைகளை இத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல.

vikatan

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 5 Personen, Personen, die stehen, Schuhe und im Freien
 
 

சிலம்பம் சுற்றும் கனடா பிரதமர்

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் காணொளி மூலம் தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்தினார். இந்நிலையில், தற்போது அவர் சிலம்பம் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 2015 ஆம் ஆண்டில் கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி : liberal.ca

BBC

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.