Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

தமிழ் சினிமாவில் கிச்சுக்கிச்சு மூட்டிய சில கியாகியா நடனங்கள்

தமிழ் சினிமா திரைப்படப் பாடல்களில் குறுக்கும் நெடுக்குமாக வலம்வரும் ஒரு சில கேரக்டர்களைப் பார்த்தால் சிரிப்பை அடக்கவே முடியாது. 'அழகிய லைலா' கவுண்டமணியிலிருந்து 'ஊதுங்கடா சங்கு' பாடலில் ஆடும் தாத்தா வரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். பொதுவாக பாடல் காட்சிகளைப் பார்க்கும் போது, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தவிறவிடுகிறோம். நம் கவனம் முழுவதும் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மேல் மட்டுமே இருக்கும்.

ஆனால் அதைத் தாண்டி பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொன்னால் தாறுமாறாக ஸ்டெப் போடும் கேரக்டர்ஸ் நிறைய உள்ளன. டான்ஸ் ஆடுபவர்களில் மூன்று வகை உள்ளது. ஒன்று சிறப்பாக டான்ஸ் ஆடுபவர்கள், இரண்டு முன்னாடி ஆடுபவர்களைப் பின்பற்றி ஆடுபவர்கள், மூன்றாவது கேட்டகிரி தான் நம்ம ஆளுங்க... என்ன செய்வது என்று தெரியாமல் ரகளையாக ஆடுபவர்கள். அவர்களைப் பற்றிய சிறு தொகுப்பு!

தமிழ் சினிமாவின் வித்தியாச நடனங்கள்

 

ஊதுங்கடா சங்கு :

 

 

கமர்ஷியல் ஷோவில் சமூகப் பிரச்னை ஒன்றின் மீதான கவனம் சேர்த்து, பட்டம் தட்டிய 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் மிகவும் பிரபலம். அதே அளவுக்கு அந்தப் பாடலில் ஆடும் தாத்தாவும் செம ஃபேமஸ் தான் பாஸ். நன்றாகக் கூர்ந்து கவனித்திருந்தால் இந்தத் தாத்தாவை பார்த்திருக்கலாம். முன்னாடி ஆடிக்கொண்டிருக்கும் கோ டான்ஸ்சர்ஸை பார்த்துத் தானும் ஆட முயற்சிப்பார். ஆனால் என்ன செய்வது என்று தடுமாறி, ஒரு கட்டத்தில் உட்கார்ந்து ஆட ஆரம்பித்துவிடுவார். பின் பாடல் முடியப் போவதை அறிந்த பெரியவர், பேக் டூ ஃபார்ம் ஆகி கலக்குவார். முடிவில் ஒரு ஸ்டெப் போட்டுவிட்டு தன் நடன சாகசத்தை நிறுத்திக்கொள்வார்.

அழகிய லைலா :

 

 

'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா' பாடலில் கதாநாயகன் கார்த்தி ஆடும் நடனத்தைப் பார்க்காமல், கவுண்டமணியின் நடனத்தை மட்டும் பார்த்தால் 'குபீர்' சிரிப்பு தான். கவுண்டமணியின் பாடி லாங்வேஜை நினைத்துப் பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படிப்பட்டவர் ஆடினால் எப்படி இருக்கும்! இந்தப் பாடலில் தனது தனித்துவமான ஆட்டத்தை ஆங்காங்கே வெளிப்படுத்துவார்.

மேகம் கருக்குது :

 

 

'குஷி' படத்தில் வரும் பாடல் தான் 'மேகம் கருக்குது' பாடல். ஜோதிகா தன் சிறப்பான நடனத்தை அதில் வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் பாடலில் ஜோதிகாவின் நடனத்தைக் கவனிக்காமல், அவரோடு இணைந்து நடனமாடும் கோ டான்ஸ்சர்களைக் கவனித்தால், அவர்கள் செய்யும் லூட்டிகளைக் காணலாம். பாடலில் திடீரென இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஓடுவது, ஜோ நடனமாடிக் கொண்டிருக்கும் போது குறுக்கே இவர்கள் ஸ்டெப் போடுவது என்று பாடல் முழுவதுமாக இவர்களின் லூட்டிக்குகளுக்குப் பஞ்சமிருக்காது.

 

ரோமியோ ஆட்டம் போட்டால் :

 

 

இந்தியன் 'மைக்கில் ஜாக்ஸன்' பிரபுதேவா பட்டையைக் கிளப்பிய பாடல் 'ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றாதே'. இந்தப் பாடலில் கண்ணுக்குத் தெரியாமலே சில காமெடிகள் உள்ளன. வடிவேலு திரையில் இருந்தால் சொல்லவே தேவையில்லை அவரையும் தாண்டி ஒரு சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் சிரிப்பு தானாகவே வந்துவிடும். ஷில்பா ஷெட்டி, பிரபுதேவா இருவரும் நடனமாடிக் கொண்டிருக்க, திடீரென தரையில் ஒருவர் ஊர்ந்து செல்வார். திடீரென குறுக்கே ஓடுவார். முக்கியமாக அவரின் காஸ்ட்யூம்ஸ் வேற லெவல்!

 

கொக்கு சைவ கொக்கு :

 

 

'முத்து' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கொக்கு சைவ கொக்கு' பாடல். இந்தப் பாடலில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பலரும் நடனமாடியிருப்பர். அவர்களை விட்டுவிடுவோம். இந்த முறை இப்பாடலில் நடிகர் பொன்னம்பலத்தையும் அவருடன் இணைந்து ஆடும் பருமனான நபரை மட்டும் பாட்டு முடியும் வரை பார்த்தால், ஃபுல் எஞ்சாய்மென்ட் தான். மோசமான ஒரு வில்லனை அழைத்துவந்து டான்ஸ் ஆடச் சொன்னால் என்ன ஆகும்ன்றத விஷுவல்ல பாருங்க மக்களே.

 

ஊத்திகினு கடிச்சுக்கவா :

 

 

இந்தப் பாடலைக் கேட்டாலே நம் தலைமுடி கூட டான்ஸ் ஆடும். அந்த அளவு நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றக்கூடிய தேவாவின் இசையும், வரிகளும் அமைந்த பாடல். இந்தப் பாடல் முழுவதுமே அதகளம் தான். சுற்றியுள்ளவர்களை மட்டும் கூர்ந்து கவனித்தால், பாடலைத் தாண்டி சில நகைச்சுவைகள் சிக்கும். அவர்கள் கொடுக்கும் ரியாக்சன்கள், டான்ஸ் ஸ்டெப் என ஒவ்வொன்றிலும் காமெடி ததும்பி வழியும். சின்னச்சின்ன விஷயத்தையும் தவறாது கவனித்துப் பார்த்தால் நடனத்தைத் தாண்டி சில காமெடிகள் தெரியும்.

vikatan

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

உலகத் தலைவர்களின் வசிப்பிடங்கள்

முடியாட்சி காலகட்டத்தில் மன்னர்கள் மிகப் பிரம்மாண்டமான வீடுகளில் வசிப்பார்கள். நாட்டை நிர்வகிக்கும் அலுவலகம் என்பது அந்த வீடுதான். அதனால் பிரம்மாண்டமான அரங்குகள், குறை கேட்கும் கூடம் எல்லாம் சேர்ந்து அந்த அரண்மனை பிரம்மாண்டமாக இருக்கும். இன்றைக்கு அப்படி இல்லை. மக்களாட்சி வந்துவிட்டது. மக்கள் பிரநிதிகள் கூடுவதற்கு ஒரு அவை இருக்கிறது. அலுவல்களைப் பார்க்கவும் செயலர்கள் இருக்கிறார்கள். செயல் அலுவலகம் என்றும் தனியாக இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலிலும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கான அரசு இல்லம் என்பது பிரம்மாண்டமானதாகத்தான் இருக்கிறது.

இவற்றில் இந்தியக் குடியரசுத் தலைவர் இருப்பிடமான ராஷ்டிரபதி பவன் உலகிலேயே மிகப் பெரிது. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1912-ல் தொடங்கப்பட்டு 1929-ல் கட்டிமுடிக்கப்பட்டது. ஆங்கிலயக் கவனர் ஜெனரலுக்காக இந்த மாளிகை கட்டப்பட்டது. 1911-ம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குத் தலைநகர் மாற்றப்பட்டதை அடுத்து இது கட்டப்பட்டது.

இது மட்டுமல்லாது அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையும் மிகப் புகழ்பெற்றது. இங்கிலாந்து மகாராணியின் வசிப்பிடமான பக்கிங்காம் மாளிகையும் உலகப் பிரசித்துபெற்ற வசிப்பிடம். இதுபோன்ற உலகின் பிரபலமான அரசு வசிப்பிடங்ளின் ஒளிப்படத் தொகுப்பு இது:

Desktop_3114605f.jpg

brazil_3114604f.jpg
பேலசியோ அல்வோரடா மாளிகை, பிரேசில்
buckingam_3114603f.jpg
பக்கிங்ஹாம் அரண்மனை, இங்கிலாந்து
 
curinal_3114602f.jpg
க்யூரினல் மாளிகை, இத்தாலி
ellise_3114601f.jpg
எலிசே மாளிகை, பிரான்ஸ்
gremlin_3114600f.jpg
மாஸ்கோ கிரெம்ளின் மாளிகை, ரஷ்யா
 
japan_3114599f.jpg
இம்பீரியல் மாளிகை, ஜப்பான்
italy_3114598f.jpg
பிரசிடென்ஷியல் மாளிகை, இத்தாலி
 
rashtrapathi_3114596f.jpg
ராஷ்டிரபதி பவன், இந்தியா
white_house_3114597f.jpg
வெள்ளை மாளிகை, அமெரிக்கா
 
 

tamil.thehindu

Link to comment
Share on other sites

`தனி ஒருவன்' தியேட்டர்!

 

6p1.jpg

ண்டனைச் சேர்ந்த ஆண்டர்சன் ஜோன்ஸ் என்பவர், சினிமா வெறியர் என்பதையும் தாண்டி வேற லெவல். சினிமா ரசிகர்களின் விருப்பம் வெளியாகும் படங்களைப் பார்க்கவேண்டும் என்பதில்தான் இருக்கும். ஆனால் இவர், தான் பார்ப்பதற்காகவே ஒரு சினிமா தியேட்டர் உருவாக்க வேண்டும் எனச் சிறுவயதிலிருந்தே விரும்பியிருக்கிறார். பஸ் ஓட்டுநராகப் பலகாலம் சம்பாதித்த பணமான 70,000 பவுண்டுகளை வைத்துத் தனது வீட்டுக்குப் பின்புறமிருக்கும் தோட்டத்திலேயே பழம்பெரும் சினிமா நிறுவனமான ABC-ன் வடிவமைப்பில் தியேட்டரைப் பார்த்துப் பார்த்துக் கட்டி முடித்திருக்கிறார்.

6p2.jpg

`Back to the future' எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்த தியேட்டரில் 34 பேர் அமர்ந்து படம் பார்க்கலாமாம். `சிறுவயதில் எனது ஆசையைச் சொன்னபோது சிரித்தவர்கள் இப்போது வாழ்த்துகிறார்கள்' என்கிறார் பெருமை பொங்க..!

vikatan

Link to comment
Share on other sites

பழத்தோட்ட விழா (புகைப்படத் தொகுப்பு)

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள் பழத்தோட்ட விழா என்ற முற்கால பாரம்பரியத்தை கொண்டாடியுள்ளனர். பழத்தோட்டங்களை புத்தாண்டுக்கு தயார் செய்யவும், நல்ல அறுவடை தர மரங்களை ஆசீர்வதிக்கவும், தீய ஆவிகளை விரட்டவும் இந்த பரம்பரியம் உதவுவதாக கூறப்படுகிறது,

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

 

மோரிஸ் நடனக்குழுவினரும், சைகை கலைஞர்களும் இந்த பாரம்பரிய சடங்கை நிறைவேற்ற, வோர்ஸ்டியர்ஷிரிலுள்ள டென்புரி வெல்ஸூக்கு அருகில் இருக்கும் ஒரு பழத்தோட்டத்திற்கு பவனியாக சென்றுள்ளனர். ஆப்பிள் மரம் ஒன்றின் கிளையில் ஆப்பிள் பழச்சாற்றில் ஊறிய கிறிஸ்துமஸ் கேக்கை வைப்பது, வேர்களை சுற்றி ஆப்பிள் பழச்சாற்றை தெளிப்பது, பழத்தோட்ட புகழ்ப்பாடல்களை பாடி, ஆடுவது ஆகியவை இந்த பாரம்பரிய சடங்கில் அடங்குகின்றன.

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

"வோஸ்செயில்" (Wassail) என்கிற இந்த ஆங்கில சொல், "வாயிஸ் ஹயல்" (waes hael) என்கிற ஆங்கிலோ-சாக்ஸன் சொற்களில் இருந்து வருகிறது. புளிக்க வைக்கப்பட்ட மதுவை மரக் குவளை ஒன்றில் வைத்து மேசையில் பரிமாறுவதை வோஸ்செயில் என்ற சொல் தொடக்கத்தில் குறித்தது.

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

பாரம்பரிய வழக்கப்படி, குழந்தை இயேசுவை ஞானிகள் சந்தித்த திருக்காட்சி திருநாளின் பன்னிரெண்டாவது நாளில் அதாவது ஜனவரி 17 ஆம் தேதி, இந்த பழத்தோட்ட விழா நடைபெற்றது. ஆனால், கிரகோரிய நாள்காட்டியின்படி இந்த விழா முன்னதாகவே இடம்பெறுகிறது.

 

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

லியோமின்ஸ்டர் மோரிஸ் குழு உறுப்பினர்கள்

BBC

Link to comment
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

118p1.jpg

twitter.com/Itzmejaanu: சிலர் கோபத்தை `வீரம்'னு நினைச்சுட்டிருக்காங்க!

twitter.com/udayanews: மறைந்த பொதுச்செயலாளருக்குப் பதிலாக, மறைந்து இருந்த பொதுச்செயலாளர் வெளியே வந்திருக்கிறார். அவ்வளவுதான்... ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை!

twitter.com/narsimp: அவ்வளவு அபத்தங்களும் யாருக்கோ, எந்த நாட்டினருக்கோ நடப்பதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

twitter.com/maanniiiiiii: புதுசா பிறந்த இந்தியாவுக்கு `ஏமாந்தியா?'னு பேரு வெச்சிருக்காங்களாம், ரொம்ப நல்லாயிருக்கு!

twitter.com/thirumarant: அம்மாவுடன் இருந்தேன் என்பதைத் தவிர, சசிகலாவிடம் பேச எதுவும் இல்லை... இதையே எல்லா மேடைகளிலும் பேசி எதிர்க்கட்சிகளுடன் அரசியல் செய்ய முடியாது!

118p2.jpg

twitter.com/jeytwits: நடுத்தரவர்க்கத்தின் சேமிக்கும் எண்ணம் எல்லாம், மீதமான குழம்பை ஃப்ரிட்ஜில் வைப்பதோடு முடிந்துவிடுகிறது!

twitter.com/indiavaasan: `ஆபீஸுக்குக் கிளம்பிட்டீங்களா?', `சாப்பிட்டுட் டீங்களா?'னு இனி யாராவது யதார்த்தமாகக் கேட்டால்கூட, சந்தேகமாகப் பார்க்க வைத்துவிட்டது அரசியல்!

twitter.com/Kozhiyaar: பையனுக்கு லீவ் லெட்டர் எழுதும்போது `எந்த க்ளாஸ்?'னு கேட்டதுக்கு, வீட்டுல சோறு போட மாட்டேங்கிறாங்க மக்களே!

118p3.jpg

twitter.com/meenammakayal: தானும் ஓர் இலை என அமர்ந்திருக்கும் பறவை... தானும் ஒரு பறவை எனப் படபடக்கும் இலை!

twitter.com/CreativeTwitz: `என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா?' - போன வருஷ ட்ரெண்ட். `சின்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' - இந்த வருஷ ட்ரெண்டா இருக்கும்!

118p4.jpg

twitter.com/inban_ofl: பொண்ணுங்களுக்கு, தன்னைப் பார்த்துக்கிற பையன் மட்டும்தான் முக்கியம். ஆனா பசங்களுக்கு, தன்னைப் பார்த்துக்கிற எல்லா பொண்ணுங்களும் முக்கியம்!

twitter.com/ValluvarM: கடவுளே... ரெய்டு வர்ற அளவுக்குச் சம்பாதிக்க முடியலைன்னாலும், டாக்ஸ் கட்டுற அளவுக்காவது சம்பாதிக்கணும். இந்த 2017-ல!

twitter.com/kavi_rt: ஓர் ஏழை டீக்கடைக்காரரை நிம்மதியாக ஆட்சி செய்யவிடுகிறதா, இந்த மாஃபியா கும்பல்?

118p5.jpg

facebook.com/Saravanan Chandran: மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்திகள் பலவற்றில், ஒன்று மட்டும் என்னைக் கவனிக்கவைத்தது. அந்தச் செய்தியின் வழியாக ஒரு வாழ்வு தொடங்கி முடிந்த விதத்தை யோசித்தேன். அவருக்கு ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட்கள் என்றால் உயிர். `உயிர் போய்விடும்!' என எச்சரித்த பிறகும் உயிர். எல்லோருக்கும் இதுபோல ஏதாவது ஒரு ஸ்ட்ரஸ் பஸ்ட்டர் தேவையாகத்தான் இருக்கிறது. பொதுவாகவே அவர் மன அழுத்தங்கள் வழியாகவே தன்னுடைய வாழ்வை நகர்த்தியிருக்கிறார். ஹாயாக அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடவே விரும்பியிருக்கிறார். இப்போதுபோல அப்போது நடிகைகளுக்கு கேரவன் எல்லாம் கிடையாது. ஏவி.எம் மரத்தடியில் லன்ச் ஹவரில் அமர்ந்துகொண்டு கதாநாயகர்கள் மட்டித்தனமாக இலைமறை சிலேடையில் ஜோக் சொல்வார்கள். அதைத் தயாரிப்பதற்கு, தனி டிபார்ட்மென்டே இருந்தது. அந்த ஜோக்குகளுக்கு எல்லாம் சிரித்துத் தொலைக்க வேண்டும். அவரும்கூட இதைக் கடந்துதான் வந்திருக்க வேண்டும். அதைக் கடந்து அவர் அரசியலுக்கு வந்தது, நின்றது எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவைதான்.

அவர், வாழ்க்கையின் அத்தனை கலராகவும் இருந்தார்; செய்த தவறுகளுக்கான தண்டனைகளையும் அனுபவித்தார்; உச்சங்களைப் பார்த்தார்; வீழ்ச்சிகளைச் சந்தித்தார்; கொண்டாடப்பட்டார்; தூற்றப்பட்டார்; முன்னுதாரணமாக இருந்தார்; பின்னுதாரணமாகவும் இருந்தார். இந்தப் பெரிய சுழற்சியில் எப்பவும் ஐஸ்க்ரீமையும் சாக்லேட்டையும் தேடிக்கொண்டே இருந்தார் எனப்படுகிறது. இங்கே, அது அவர் வாழ நினைத்த வாழ்க்கைக்கான குறியீடு எனச் சொல்ல முடியும். பல நேரங்களில் உயிரைப் பறிப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஐஸ்க்ரீம் கனவுகள்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றன. நானும்கூட ஐபேக்கோவில் இருந்து ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டபடிதான் இதைக்கூட எழுதினேன். அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சாகச வாழ்க்கைதான். சந்தேகமே இல்லை. தத்துவார்த்தரீதியில் பார்த்தால், வெகுசாதாரண வாழ்க்கைதான். கேவலம் ஒரு ஐஸ்க்ரீமுக்காக வாழ்வைத் தொலைத்த சாமானிய வாழ்க்கைதான்!

facebook.com/giridaran.giri: என்ன ஓவரா குளிருது... குளிக்கும்போது ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுத்தான் குளிக்கணும்போல!

vikatan.

Link to comment
Share on other sites

ஆஷாபூர்ணா தேவி

 

devi_3114960f.jpg
 
 
 

வங்க இலக்கியத்தின் தலைசிறந்த நாவலாசிரியர், கவிஞர், ‘ஞானபீட விருது’ பெற்ற முதல் பெண் எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி (Ashapoorna Devi) பிறந்த தினம் இன்று (ஜனவரி 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் (1909) பிறந்தார். தந்தை புகழ்பெற்ற ஓவியர். மரச் சாமான்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலகட்டம் என்பதால், சிறுமி பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், இவரது சகோதரர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பாடம் கற்றுக் கொடுத்தனர்.

* அவர்களைப் பார்த்துப் பார்த்தே இவரும் எழுதப் படிக்கக் கற்றார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்ட தாய், தன் குழந்தைகளுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கூறினார். தாயைப் பார்த்து இவரும் கையில் கிடைத்ததை எல்லாம் படித்தார்.

* முறைப்படி கல்வி கற்காவிட்டாலும் வாசிப்பு பழக்கம் இவரது எழுத்து ஆர்வத்தை தூண்டியது. 13 வயதில் எழுதத் தொடங்கினார். தான் முதன்முதலாக எழுதிய கவிதையை ‘சிஷு சாதி’ என்ற இதழுக்கு அனுப்பிவைத்தார். அது பிரசுரமானதில் மிகவும் உற்சாகம் அடைந்தார். அதன் ஆசிரியரும் இவரை தொடர்ந்து எழுதி அனுப்புமாறு கூறி ஊக்கப்படுத்தினார்.

* எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்ததில், நிறைய எழுதினார். வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்து, நாடு முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளராக மலர்ந்தார். ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதினார். போகப்போக இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எழுதினார்.

* திருமணத்துக்குப் பிறகு சிறிதுகாலம் எழுத்துப் பணி தடைபட்டது. பின்னர், மீண்டும் தன் பணியைத் தொடங்கினார். சமூக எதிர்ப்புகள், வறுமை, குடும்பச் சுமை, முறையான படிப்பறிவு இன்மை என அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, மாபெரும் எழுத்துப் போராட்டத்தையே நடத்தி வெற்றியும் கண்டார்.

* இவரது முதல் கதைத் தொகுப்பு 1940-ல் வெளிவந்தது. 1944-ல் ‘பிரேம் அவுர் பிரயோஜன்’ என்ற முதல் நாவல் வெளிவந்தது. அதுமுதல் தடையற்ற நீரோட்டம் போல இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.

* வங்க இலக்கியத்தில் முன்னணி படைப்பாளியாகப் போற்றப்பட்டார். 70 ஆண்டுகாலம் நீடித்த இவரது படைப்புகளில் வங்க சரித்திரம், சமூக மாற்றங்கள், பெண்களைச் சுற்றிச் சுழலும் வரலாற்று நிகழ்வுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், சமத்துவம், பெண்கள் சந்தித்த போராட்டங்கள் என இவரது படைப்புக் களம் விரிவடைந்தது.

* ஏறக்குறைய 250 நாவல்கள், 3 ஆயிரம் சிறுகதைகள், குழந்தைகளுக்கான 62 நூல்கள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள் என எழுதிக் குவித்தார். இவரது பல படைப்புகள் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது ‘பாலுசோரி’ நாவல், ‘அபராஜிதா’ என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது.

* பத்மஸ்ரீ விருது,கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ‘தி லைலா’ பரிசு, கிழக்கு வங்க அரசின் ரெயின்ட்ராப் நினைவுப் பரிசு, சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ‘பிரதம் ப்ரதிஸ்ருதி’, ‘ஸ்வர்ணலதா’, ‘பாகுல் கதா’ ஆகிய மூன்று நெடுங்கதைகளின் தொகுப்புக்காக ஞானபீட விருது பெற்றார்.

* தனது தனித்துவம் வாய்ந்த படைப்புகளால் வங்க இலக்கியத்தில் முத்திரை பதித்து, மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆஷாபூர்ணா தேவி 86-வது வயதில் (1995) மறைந்தார்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் - சிறப்பு பகிர்வு

ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் ...

எதோ தடுமாற்றம் உண்டானது ;மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார் ;மங்கலாக உணர ஆரம்பித்தார் .பேச்சு குழற ஆரம்பித்தது ;செயல்பாடுகள் முடங்கின -மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது . இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள் ;முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .

காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது -இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின ; சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வருகிறார் .

1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ; இவரின் "A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் ;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ? எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?" என்று கேட்கப்பட்டது ,"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !" என்றார். நீங்களும் மிச்சமிருப்பதில் மின்னிடுங்கள்

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, sitzt
 

 

vikatan

Link to comment
Share on other sites

ஒரு வேன்... ஒரு நாய்... ஒரு உலகம்!

இத்தாலியைச் சேர்ந்த மரினா பிரோ என்ற பெண்ணுக்கு ஐரோப்பாவை சுற்றிப் பார்க்க ஆசை. உடனே தன் செல்ல நாய் ஓடியோடு கிளம்பிவிட்டார். ஒவ்வொரு இடத்திலும் தங்கினால் செலவாகும் என்பதால் காரையே தங்குமிடமாக மாற்றிவிட்டார். இதற்காக Renault Kangoo மாடல் காரை பயன்படுத்துகிறார். அவ்வப்போது ஓடிக்கு கம்பெனியாய் சில பூனைகளும் கூட வருமாம். மரினாவும் ஓடியும் காடு, மலை, ஏரி என சுற்றும் போட்டோக்கள் இன்ஸ்டாவில் செம வைரல்!

girl_00160.jpg

Link to comment
Share on other sites

வெளியானது நோக்கியா-6 ஆண்ட்ராய்ட் ஃபோன் !

nokia_17351.jpg

ஆண்ட்ராய்ட் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறது நோக்கியா. இந்நிலையில் நோக்கியா-6 என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனை, சைலென்ட்டாக சீனாவில் லான்ச் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்ட் 7.0, 4GB RAM, 64GB, 5.5  HD திரை, அதற்குமேல் 2.5D கொரிலா கிளாஸ்,  இன்டெர்னல் மெமரி, 16 MP ரியர் கேமரா, 8 MP முன் கேமரா, 3,000mAh இன்பில்ட் பேட்டரி உள்ளிட்ட ஆப்சன்களுடன் நோக்கியா-6 வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.16,750. மேலும், இதன் டீசரையும் அதிகராப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அடுத்த மாதத்தில் ரிலீஸ் என்கிறார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

ஐ.ஐ.டி. விடுதி கண்ணாடி, மேகி, விராட் கோலி : சுந்தர் பிச்சையின் ஐ.ஐ.டி. ஃப்ளாஷ்பேக்

15896005_1886981254869645_88714553099007

இந்தியா வந்துள்ள கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, அவர் படித்த ஐ.ஐ.டி கரஹ்பூருக்கு சர்ப்ரைஸ் விசிட் தந்துள்ளார். அங்கு அவரது கல்லூரிகால நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். கல்லூரி காலத்தில் எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.

ஐ.ஐ.டி மெஸ்களில் எனக்கு தெரிந்த ஒரே இந்தி வார்த்தையான ''அபே சாலே'' என்ற இந்தி வார்த்தையை அர்த்தம் தெரியாமலேயே கூறியிருக்கிறேன். பின்பு தான் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன் என்று கூறினார். மேலும் தான் தங்கியிருந்த B-308 அறைக்கு சென்று அங்கு இப்போது தங்கி இருப்பவர்களுடன் உரையாடியுள்ளார்.

‘தான் வகுப்புகளுக்கு அடிக்கடி மட்டம் போடுவேன். ஆனால் நன்றாக படித்துவிடுவேன். முதல் செமஸ்டரில் சி-க்ரேட் வாங்கியதற்காக வருத்தமடைந்துள்ளேன்’ என்று கூறினார்.

‘ஐ.ஐ.டி ஹாஸ்டலுக்கு வெளியே உள்ள இடத்தில் நாங்கள் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். அப்போது நிறைய ரூம்களின் கண்ணாடிகளை உடைத்திருக்கிறோம். குளிர்காலத்தில் அவற்றை பேப்பரால் மறைத்து வைத்திருந்தது மறக்க முடியாத நினைவுகள்’ என்றார். ‘சில நேரங்களில் நாங்களே மேகி சமைத்து சாப்பிட்டிருக்கிறோம் என கரஹ்பூர் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் சுந்தர் பிச்சை.

சுந்தர்பிச்சை

ஐஐடி வளாகத்துக்குள் எப்போதாவது ராகிங்கிற்கு உள்ளான அனுபவம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு ‘இருக்குறது, ஆனால் அவை மிகவும் ரசிக்கக்கூடிய அளவில்தான் இருக்கும் என்றார். குறிப்பாக புதிய மாணவர்கள் வெளியில் சென்று விட்டு வருவதற்குள் அவர்களது ஹாஸ்டல் அறை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் பார்க்க ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்’ என்றார்.

கிரிக்கெட் விளையாட்டை அதிகம் விரும்பி பார்ப்பதாக கூறிய சுந்தர் பிச்சை, தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலியை மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். விராட் கேப்டனாகி இருப்பதை பாராட்டியுள்ளார். தமது இளமைகாலத்தில் கவாஸ்கரை மிகவும் பிடிக்கும் என்றும், தற்போது கோலியை மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். பாலிவுட் நடிகர்களில் ஷாருக், தீபிகாவை பிடிக்கும் என்றார். இவர்களை ஒருமுறை கூகுள் அலுவலகத்துக்கு அழைத்து சுந்தர்பிச்சை கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. 

இதைத் தொடர்ந்து, கரஹ்பூர் ரயில்வே நிலையத்துக்குச் சென்ற சுந்தர்பி ச்சை, தான் சென்னை செல்வதற்கு கோரமெண்டல் எக்ஸ்ப்ரஸில் மூன்றாம் வகுப்பு டிக்கெட்டில் பயணித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பிரதம மந்திரியின் டிஜிட்டல் இந்தியாவில் கைகோர்க்கும் விதமாக 400 ஸ்டேஷன்களில் வை-பை வசதி நிறுவப்படும் என்றார். தற்போது மக்கள் இணைய சேவைக்காக ரயில் நிலையங்களுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

இதற்கு முன்பாக மாணவர்களுடனான கலைந்துரையாடலில் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, அதில் கூகுளின் பங்களிப்பு என பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் சுந்தர் பிச்சை. இந்தியாவுக்காக தயாரிக்கப்படும் ஒவ்வோரு பொருளும் உலகத்துக்காக தயாரிக்கப்பட்டதை போன்றது என்றார்.

தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட சுந்தர்பிச்சையிடம் ஐ.ஐ.டி மாணவர்கள், ஐ.ஐ.டி கரஹ்பூருக்கு டூடுல் வழங்க முடியுமா? என கேட்க அனுப்பி வைய்யுங்கள். தேர்வானால் மகிழ்ச்சி என கூறி சென்றுள்ளார். 

சுந்தர் பிச்சையின் ஐஐடி மாணவர்களுடனான  நேர்காணல் வீடியோ:

 

 

...

vikatan

Link to comment
Share on other sites

15895012_1076672069127803_20257747518197

சூரியமையக் கோட்பாட்டை முன்மொழிந்த விஞ்ஞானி கலிலியோ கலிலி மறைந்த தினம் இன்று (08-01-1642)...

15894729_1076567519138258_33597306021190

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 75வது பிறந்த நாள் இன்று (08-01-1942)

Bild könnte enthalten: 1 Person, Text

இலங்கையின் நான்காவது பிரதமர் S.W.R.D .பண்டாரநாயக்கா பிறந்த தினம் (08-01-1899)

 

Link to comment
Share on other sites

மல்லுவுட் ரியா சாய்ரா

p99a.jpg

கேரளத்தில் பிறந்த குரலழகி. முதல் படமான `ஷட்டர்' ஷூட்டிங்கின்போது இயக்குநர் ஆஷிக் அபுவின் கண்ணில் பட்டார் ரியா. பார்த்தவுடனே பிடித்துப் போய்விட, தன் ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தில் நாயகி ஆக்கினார் அபு. அதே ஆண்டில் ‘தீவ்ரம்’, ‘சாப்டர்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள். 2013-ல் கால்ஷீட் நிரம்பி வழியும் அளவிற்கு ஐந்து படங்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் ஐந்து படங்கள் என கெத்து காட்டுகிறார் ரியா. இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டும்கூட. ஏராளமான படங்களில் குரலும் கொடுத்திருக்கிறார்.


p99.jpg

டோலிவுட் அக்‌ஷா பர்டாஷனி

டித்ததெல்லாம் மும்பை ஸ்காட்டிஷ் ஸ்கூலில். பத்து வயதிலேயே விளம்பர மாடலாகிவிட்டார். பரபரவென 75-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தவரை ‘முஷாஃபீர்’ என்ற இந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்கள். அதன்பின் ‘நீத்து’ என்ற மலையாளப் படம். ‘யுவதா’ என்ற படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவரை உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றார்கள் ரசிகர்கள். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்டான ‘சலீம்’ படத்தில் இவர்தான் அனார்கலி.


p99d.jpg

சாண்டல்வுட் நீத்து ஷெட்டி

ங்களூரில் உதித்த சன்ஃபிளவர். பெற்றோர் காதல் திருமணம் என்பதால் துளு, கொங்கணி என இரு மொழிகளும் பரிச்சயம்.

18 வயதில் சினிமாவில் கால் பதித்தவர் இன்றுவரை கில்லி போல அசையாமல் நிற்கிறார். ‘யாகூ’ என்ற படத்தில் அறிமுகமான இவரை, கூகுளில் தேடித் தேடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். ‘கோட்டி சென்னயா’ என்ற படத்திற்காக மாநில அரசின் விருதை வென்றிருக்கிறார். ஆண்டுக்குக் குறைந்தது ரெண்டு படங்களிலாவது தலை காட்டிவிடுவது நீத்து ஸ்டைல். இன்னும் நிறைய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

 

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் எதுவும் நடக்கும்
 
 

article_1483934472-hdgjudi.jpgஎனது செயலுக்கு நானே பாத்திரமானவன். பிறர் அல்ல; பிறரைச் சாட்டுதல் சொல்லியே தப்பிக்கவும் முடியாது. எனவே, எனது பொறுப்புகளை  நானே சுமக்க வேண்டும். இதன் பொருட்டு எனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்மையாக்க வேண்டும்.

எல்லா மனிதர்களுமே தனித்தனியான பிறப்புகள்தான். அவரவர்களுக்கான வலிமையும் முயற்சியும் தனித்துவமானது. அவர்களே இதனைச் சிருஷ்டித்தாக வேண்டும்.

இந்த விடயத்தில் முழுமையான மனிதனாக, ஸ்திரமான மனநிலையைத் துணிச்சலாக உருவாக்குதல் வேண்டும்.

இறைதுணையுடன் காரியமாற்றினால் மமதையும் ஆணவமும் விட்டொழிந்து போகும். காரிய சித்தி மேலோங்கும். அன்பை உயிர்களுக்கு ஊட்டுவதால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

வாழ்க்கையில் எதுவும் நடக்கும். அதற்கு எம்மைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இன்பம், துன்பம் யதார்த்தம் என்பதை சிந்தையில் இருத்திக்கொள்க.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 09

 

1431 :  பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

 

1707 :  ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைப்பதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

 

1760 : பராய் காட் சமரில் மராட்டியர்களை ஆப்கானியர்கள்  தோற்கடித்தனர்.

 

1768 : பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.

 

1793 : ஜோன் பியர் பிளன்சர,; வெப்ப வாயு பலூனில் பறந்த முதல் அமெரிக்கரானார்.

 

880varalaru-09-01-2016.jpg1799 : பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியனுக்கு எதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

 

1816 : சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை ஹம்பிறி டேவி வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

 

1857 : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 7.9 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

1858 : டெக்சாஸ் குடியரசின் கடைசி ஜனாதிபதி அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

 

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

 

1878 : இத்தாலியின் மன்னராக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினார்.

 

1905 : ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ் பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்று கையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்பமாகுவதற்கு வழிகோலியது.

 

1921 : புனித ஜோர்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

 

1951 : ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் உத்தியோக பூர்வமாகத் திறக்கப்பட்டது.

 

1964 : பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

 

1972 : ஹொங்கொங்கில் குயின் எலிஸபெத் கப்பல் தீக்கிரையானது.

 

1974 : யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

 

1990 : நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

 

1991 : லித்துவேனியாவின் சுதந்திரக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.

 

2001 : சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

 

2005 : சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைய ஒப் பந்தம் கென்யாவில் கைச் சாத்திடப்பட்டது.

 

2007 : அப்பிள் நிறுவனத்தின் முதலாவது  ஐபோனை அந் நிறுவனத்தின் பிரதம நிறை வேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸ் அறிமுகப்படுத்தினார். 

 

2011 : ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

 

2013 : அமெரிக்காவின் நிய+யோர்க்கில் படகொன்று விபத்துக்குள்ளானதால் 85 பேர் காயமடைந்தனர். 

.metronews.lk
Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme

ஈழத்தின் மிகச் கவிஞர்களில் ஒருவரான அமரர் மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் பிறந்த தினம் இன்று....

இவரது இயற்பெயர் - துரைசாமி உருத்திரமூர்த்தி

ஏனைய புனைபெயர்கள் - பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன்

இலங்கையின் தமிழ் வரலாற்றில் அற்புதப் படைப்புக்கள் இவருடையவை.

Link to comment
Share on other sites

ஆப்ரிக்காவின் சிறந்த புகைப்படங்கள்

 

  •  

2016, டிசம்பர் 30 முதல் 2017, ஜனவரி 6 வரையிலான ஒருவார காலத்தில் ஆப்ரிக்காவில் பதிவு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்கள்.

புத்தாண்டின் முந்திய நாள் மாலையில், நைஜீரியாவின் வணிக தலைநகரான லாகோஸிலுள்ள ஒன் லாகோஸ் ஃபிஸ்டாவில் நிகழ்ச்சி நடத்திய கோமாளிகள்.
 புத்தாண்டுக்கு முன்தினம் மாலையில், நைஜீரியாவின் வணிக தலைநகரான லாகோஸிலுள்ள ஒன் லாகோஸ் ஃபிஸ்டாவில் நிகழ்ச்சி நடத்திய `கோமாளிகள்' காட்சி. இரவுநேர கலைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடன மற்றும் பாடல் கலைஞர்களும் நிகழ்ச்சிகளை நடத்தினர்.  இரவு நேர கலைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடன மற்றும் பாடல் கலைஞர்களும் நிகழ்ச்சிகளை நடத்தினர். புத்தாண்டை வரவேற்கும் வகையில், கெய்ரோவின் வெளிப்புறங்களில் இருக்கும் பிரமிடுகளில் விளக்குகள் ஒளிருகின்றன  புத்தாண்டை வரவேற்கும் வகையில், கெய்ரோவின் புறநகரில் இருக்கும் பிரமிடுகளில் ஒளிரும் விளக்குகள். ராடஸ் துறைமுக நகரத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின் அணியோடு நடைபெற்ற நட்பு விளையாட்டு போட்டியில், துனிஷியாவின் கிளப் ஆப்ரிக்கெயின் அணியின் ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து, தீ பந்தம் கொளுத்தி மகிழ்கின்றனர்.ராடஸ் துறைமுக நகரத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின் அணியோடு நடைபெற்ற நட்பு விளையாட்டு போட்டியில், துனிஷியாவின் கிளப் ஆப்ரிக்கெயின் அணியின் ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து, தீ பந்தம் கொளுத்தி மகிழ்கின்றனர். கேப் டவுனில் நடைபெற்ற தெரு பேரணியில் பங்கேற்பாளர் ஒருவர்  கேப் டவுனில் நடைபெற்ற வீதிப் பேரணியில் பங்கேற்பாளர் ஒருவர் ...கானாவிலுள்ள வின்னெபாவில் நடைபெறும் பாரம்பரிய பண்டிகை ஒன்றில் மாறுவேடத்தில் ஒருவர்  ...கானாவிலுள்ள வின்னெபாவில் நடைபெறும் பாரம்பரிய பண்டிகை ஒன்றில் புதிய ஆடை அலங்காரத்தில் மகிழ்விக்கும் ஒருவர் நைரோபியின் தலைநகரிலுள்ள பூங்காவில் புத்தாண்டை கொண்டாட குடும்பங்கள் கூடியுள்ள நிலையில், சறுக்கி விளையாடும் கென்ய குழந்தை கென்ய தலைநகர் நைரோபியி்ல் பூங்காவில் புத்தாண்டை கொண்டாட குடும்பங்கள் கூடியுள்ள நிலையில், சறுக்கி விளையாடும் கென்ய குழந்தை தலைநகர் ஜூபாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் யெய் சந்தையில் இருக்கும் தெற்கு சூடானிய காய்கறி கடை  தலைநகர் ஜூபாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் யெய் சந்தை. மோரோக்கா மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான சியுடா குடியிருப்புக்கு இடையில், எல்லை சோதனை நடத்தப்பட்டபோது, கபோனை சோந்த 19 வயதான குடியேறி இளைஞர் சூட்கேசில் மறைந்திருந்தது செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது  மோராக்கா மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான சியுடா குடியிருப்புக்கு இடையில், எல்லை சோதனை நடத்தப்பட்டபோது, கபோனை சோந்த 19 வயதான குடியேறி இளைஞர் சூட்கேசில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது An aircraft drops water on a wild fire raging in the Helderberg mountains in South Africa  தென்னாப்ரிக்காவின் கேப் டவுனுக்கு அருகில் ஹெல்டர்பர்க் மலைத் தொடர்களுக்கு அருகில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க விமானம் மூலம் நீர் தெளிக்கப்படுகிறது கேப் டவுனுக்கு அருகிலான அதே காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் தீயணைப்பு படையினர்

 கேப் டவுனுக்கு அருகிலான அதே காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் தீயணைப்பு படையினர்

BBC

Link to comment
Share on other sites

சர்வதேச கோப்பி அழகுராணி போட்டி
 

கொலம்பியாவில் சர்வதேச கோப்பி அழகுராணி போட்டி (Reinado Internacional del Café) நடைபெறுகிறது.

 

216795.jpg

 

216791.jpg

 

216792.jpg

 

கொலம்பியாவின் மனிஸாலெஸ் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை நிறுவகத்தால் மனிஸாலெஸ் நகரில் வருடாந்தம் இப் போட்டி நடத்தப் படுகிறது.

 

216793.jpg

 

216794.jpg

 

இம் முறை 46 ஆவது தடவையாக நடைபெறும் இப் போட்டியில் 23 நாடுகளின் அழகுராணிகள் பங்குபற்றுகின்றனர்.

http://www.metronews.lk
Link to comment
Share on other sites

அடேங்கப்பா... ஒரே நாளில் 3,526 'பரோட்டா'! இது நெல்லை கலாட்டா

Nellai Parotta Record


நெல்லை : ‘நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?’ என்கிற தலைப்பில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தி அசத்திய அதே நெல்லை மாவட்டத்தில், இன்னுமொரு பரோட்டா சாதனை. ஒரே நாளில் 3500க்கும் அதிகமான பரோட்டாக்களை தயாரித்து பரோட்டா மாஸ்டர் ஒருவர் சாதனை படைத்து இருக்கிறார்.

செய்யும் வேலை எதுவாக இருந்தாலும், அதில் நேர்த்தியும் திறமையும் இருந்தால் பிறரின் கவனத்தை ஈர்த்து சாதனை படைக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அதே வரிசையில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள மேலகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற இளைஞரும் இணைந்து உள்ளார். பரோட்டா கடையில் வேலை செய்து வந்தபோதிலும், சாதிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்து உள்ளார். கடந்த 13 வருடங்களாக பரோட்டா கடைகளில் மாஸ்டராக வேலை செய்த அனுபவத்தைப் பயன்படுத்தி சாதனை நிகழ்த்தி பலரது பாராட்டையும் பெற்று இருக்கிறார்.

தென்காசியில் உள்ள ஸ்ரீ பாலாஜி பவனில் இவர், 24 மணி நேரத்தில் 3526 பரோட்டாக்களை செய்து பார்வையாளர்களை அசத்தினார். இதற்காக 200 கிலோ மாவு தேவைப்பட்டது. இந்த சாதனையின் போது செய்யப்பட்ட பரோட்டாக்கள் அனைத்தும் அனாதை இல்லங்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சாதனை முயற்சியானது வீடியோ கேமராவில் முழுமையாக பதிவு செய்யப்பட்டது. அத்துடன், வல்லுநர் குழுவினர் அவரது முயற்சியை நேரில் கண்காணித்ததுடன், பரோட்டாக்களின் தரத்தையும் உறுதிப் படுத்தினர்.

Nellai Parotta Record

ராஜேந்திரனின் தந்தை கந்தசாமி, தாய் ராஜம்மாள், சகோதரர் விவேகானந்தன் மற்றும் நண்பர்கள் உடன் இருந்து முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்ததுடன் உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அவர் இந்த சாதனையை செய்து முடித்தார். அவருக்கு தென்காசியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்த சாதனை குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம். ‘‘நான் பத்தாவது வரை மட்டுமே படித்து விட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக ஹோட்டல் வேலைக்குச் சென்றேன். அதில் திறமையாக உழைக்க ஆரம்பித்ததால் குறுகிய காலத்திலேயே பரோட்டா செய்யும் பக்குவத்தைக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு நானே பரோட்டா மாஸ்டராக மாறினேன். அதனால் எனக்கு பல ஹோட்டல்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 13 வருடமாக நான் பரோட்டா மாஸ்டராக இருக்கிறேன்.

Nellai Parotta Record

வேலை செய்வது ஒருபுறம் இருந்தாலும், நாம் படிக்க முடியாமல் போய் விட்டதே என்கிற ஆதங்கம் மட்டும் எனக்குள் இருந்து வந்தது. அதனால், எனது நண்பர்களின் உதவியால் திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்து வருகிறேன். எனது தொழில் பரோட்டா தயாரிப்பது என்று ஆகிவிட்ட சூழலில், அதில் வேகமாக செயல்படுவேன். எனது திறமையையும் வேகத்தையும் பார்த்து வியந்த நண்பர்கள் சிலர், ஒரு நாள் முழுவதும் பரோட்டா செய்து சாதனை படைக்குமாறு சொன்னார்கள். அவர்களது ஆலோசனையால் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டேன்.

எனது குடும்பத்தினர் நண்பர்கள் மட்டும் அல்லாமல் அறிமுகமே இல்லாத பலரும் எனது சாதனை முயற்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது. எந்த தொழிலைச் செய்தாலும் அதில் நமது திறமையை பயன்படுத்தி சாதனை படைக்க முடியும் என்பதை இளைஞர்களுக்கு தெரியப் படுத்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன். அதில் என்னால் சாதனை படைக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார் உற்சாகத்துடன்.

ஹோட்டல் தொழிலாளியாக இருந்தபோதிலும் சாதனை படைக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தி உயர்ந்து நிற்கும் ராஜேந்திரன், நிச்சயம் பாராட்டுக்கு உரியவரே!

 

vikatan

Link to comment
Share on other sites

‘ட்ரெண்ட்’ பெட்டி!

 

126p1.jpg

பதறவைத்த மோடி

2016-ம் ஆண்டு முடிவடையும்போது இணையத்தில் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் மோடிதான். புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு தரப்போவதாக தகவல் வெளியானது முதல், ‘அடுத்து என்ன குண்டைத் தூக்கிப் போடப்போறாரோ?’ என ட்விட்டரில் மீம்களைத் தெறிக்க விட்டனர் நெட்டிசன்ஸ். டிசம்பர் 31-ம் தேதி மாலை தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, கர்ப்பிணிப் பெண்களுக்கு அக்கவுன்ட்டில் பணம் செலுத்துவது உட்பட சில திட்டங்களை பட்ஜெட்டிற்கு முன்னரே அறிவித்ததோடு, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த உரை முடிந்த சிறிது நேரத்தில், நியூ இயர் கொண்டாட்டங்களையும் தாண்டி, ட்விட்டர் ட்ரெண்ட்டில் #Modi முதலிடம் பிடித்தார். ஏ.டி.எம்-ல எப்ப சார் பணம் வரும்?


126p2.jpg

வம்பிழுத்த மல்லையா

சர்ச்சைக்குப் பெயர்பெற்ற விஜய் மல்லையா தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்திருந்தாலும், இந்திய அரசியல் நிலவரங்களைப் பற்றி தனது கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு சர்ச்சை திரி கொளுத்திவருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி அரசு விவசாயிகளுக்குக்கூட தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அமலாக்க அமைப்புகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மறுக்கின்றன. மோடியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குற்றவியல் ஏஜென்சிகள், நடுநிலையாகச் செயல்பட வேண்டும்’ எனக் கூறி மோடியை வம்புக்கு இழுத்திருக்கிறார். நெட்டிசன்கள் மல்லையாவை ட்ரோல் செய்ததால், #Mallya பெயர் ட்ரெண்ட் ஆனது. ஹூம்...ம். அவங்க பிடிச்சு உட்கார வெச்சிருந்தா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா?


126p3.jpg

வைரலான அன்பு

ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த பத்து வயதான `டெய்லர்’ என்ற சிறுவனின் புகைப்படம், கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. புகைப்படத்தில் அடர்ந்த முடியோடு இருக்கும் டெய்லரைப் பார்த்தால், இது சிறுவனா? சிறுமியா? என்றே பலருக்கும் சந்தேகம் வரும். ஆனால் Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டு முடி கொட்டும் தனது தோழிக்கு விக் தயார் செய்யவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக முடி வளர்த்து வருகிறான் இந்தச் சிறுவன். தகவல் அறிந்து இணையத்தில் பலரிடமிருந்தும் டெய்லருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. அவன் பெயரில் டேக் ட்ரெண்டாகி வருகிறது. உள்ளத்தால் உயர்ந்தவன்!


126p4.jpg

உறுதிமொழி ஃபீவர்

இந்தியக் குடிமக்களை சில்லறைக்காகவும், ஏ.டி.எம் தேடியும் அலைக்கழிச்சு ஒருவழியாக 2016-ம் ஆண்டு முடிந்துவிட்டது. புத்தாண்டு பிறந்த நிலையில், உலகம் முழுவதும் அதிகம்பேர் கூகுளில் தேடியது என்ன தெரியுமா? #newyearresolution எடுப்பதைப் பற்றிதான். உறுதிமொழி எடுக்க டிப்ஸ், கெட்டபழக்கங்களை விட என்ன செய்ய வேண்டும் போன்றவையெல்லாம் இது தொடர்பாகத் தேடிய உதிரி டாபிக்ஸ். அதுவும் சரியாக புத்தாண்டு பிறக்க அரைமணி நேரம் இருக்கும்போது 21 லட்சம் பேர் இதைப்பற்றித் தேடியிருக்கிறார்கள். எல்லாம் ஒரு வாரம்தானே!


126p5.jpg

வர்லாம் வா... ஷெர்லாக்!

துப்பறியும் கதாபாத்திரங்களில் ஜேம்ஸ் பாண்டிற்கு நிகராய் பிரபலமான கேரக்டர் ஷெர்லாக். இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, திரைப்படத்திற்கு நிகரான பிரமாண்ட செலவில் தயாராகி ஒளிபரப்பான ஷெர்லாக் தொடர் உலக அளவில் பிரபலம். ஹெச்.பி.ஓ. நிறுவனம் தயாரித்திருக்கும் இத்தொடரின் நான்காவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்தில் #Sherlock ட்ரெண்ட் ஆனது. ட்விட்டரில் இந்த ட்வீட் 14 ஆயிரம் ரீ ட்வீட்கள் மற்றும் 23 ஆயிரம் லைக்குகளைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் கூகுளில் அதிகம் தேடப்படும் பெயராகவும் ஷெர்லாக் மாறியுள்ளது. தேடுங்க, கண்டடைவீர்கள்!


126p6.jpg

ஹாலிவுட் குசும்பு

டப்பிங் புண்ணியத்தில் ஹாலிவுட் சினிமாக்கள், தமிழகத்தின் பட்டி, தொட்டி யெங்கும் பரவிக்கிடக்கின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அருகில் இருக்கும் ஹாலிவுட் என்ற நகரத்தில்தான் அமெரிக்கத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் அலுவலகங்களும், ஸ்டுடியோக்களும் நிரம்பியுள்ளன. இதைக் குறிக்கும் விதமாக அருகில் உள்ள மலைப்பகுதியில் ‘ஹாலிவுட்’ என்ற உலகப்பிரசித்தி பெற்ற பிரமாண்ட போர்டு இருக்கும். ஆண்டுப் பிறப்பன்று சில குசும்புக்கார ஆசாமிகள், Hollywood என்பதை Hollyweed என மாற்றி அட்டகாசம் செய்துள்ளனர். கஞ்சாவைக் குறிக்கும் இவ்வார்த்தையை மாற்றிய நபர்களைக் காவல் துறை தேடிவருகிறது. ஆனால் புத்தாண்டு பிறந்த முதல்நாளே உலகம் முழுவதும் இந்தச் செய்தி பேசப்பட்டு #Hollyweed ட்ரெண்ட் ஆகியுள்ளது. லொள்ளு புடிச்சவங்க பாஸ்!


126p7.jpg

வெள்ளித்திரையில் மாரியப்பன்

பிரேசில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இவரது வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகிறது. மாரியப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சிறிது நேரத்தில் #Mariyappan #Mariyappanthangavelu ஆகியவை ட்ரெண்ட் ஆனதோடு, பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததில் ட்விட்டரில் மெயின் டாபிக் ஆனது. வீ ஆர் வெயிட்டிங்!


126p8.jpg

டைட்டானிக்

டைட்டானிக் கப்பல் பற்றிய விளக்கமே தேவையில்லை என்னும் அளவிற்கு நம் அனைவருக்கும் அதைப்பற்றித் தெரியும். பிரமாண்டமான அந்தக் கப்பல்  பனிப்பாறையில் மோதி மூழ்கியதாகத்தான் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கப்பல் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் முன்னரே பலவீனமாக இருந்ததாகவும், இதன் காரணமாகத்தான் கப்பல் மூழ்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதன் காரணமாக இணையத்தில் மீண்டும் #Titanic வலம் வந்தது. ஒரு முடிவுக்கு வாங்க பாஸ்!

vikatan

Link to comment
Share on other sites

ஸ்பானியர்களின் பாரம்பரிய திருவிழா : வியப்பூட்டும் விசித்திர உருவங்கள்

வடக்கு ஸ்பெயினைச் சேர்ந்த பூர்விக ஸ்பானியர்களின் திருவிழாவையொட்டி அனேகமானோர் வித்தியாசமான தோற்றங்களில் அமைக்கப்பட்ட உடைகளுடன் ஆண்டின் முதாவது விழாவை வரவேற்றுள்ளனர்.

3BF3FEEE00000578-0-image-a-11_1483916343

வடக்கு ஸ்பெயினின் சிலியோ நகரில் ஒவ்வொரு வருடமும்  முதல் ஞாயிற்றுக்கிழமையில் லா விஜாநேரா எனும் கொண்டாட்ட நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.

3BF3FF0000000578-4100152-image-a-28_14833BF3F4E800000578-4100152-image-m-45_1483

குறித்த கொண்டாட்டங்களுக்காக சுமார் 60 ஆண்கள் வரையில் தனித்துவமானமுறையில் உருவாக்கபட்டுள்ள விசித்திர உருவங்களை கொண்ட ஆடைகளை அணிந்து பழைய வருடத்தின் நினைவுகளை மறந்து புதிய வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நகிழ்வாக கொண்டாடுகின்றனர்.

3BF3B67800000578-0-image-a-9_14839163387

3BF3FC7A00000578-4100152-image-a-38_1483 

3BF3B17A00000578-4100152-image-a-44_1483

3BF4000D00000578-0-image-a-17_1483916366

3BF4032600000578-0-image-a-23_1483916382

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Text

 
 
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் முன்னாள் தலைவரும், தற்போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் பணிப்பாளராகப் பதவியேற்கவுள்ளவருமான ஜிம்மி அடம்ஸின் பிறந்தநாள்.
Happy Birthday Jimmy Adams
Link to comment
Share on other sites

குழந்தைகள் டி.வி பார்ப்பதைக் குறைப்பது இவ்வளவு ஈஸியா? #MustReadParents

டிவி பார்க்கும் அண்ணன் தங்கை

'தோ ஒரு நாள் என் குழந்தை அழுதானேனு டிவி பார்க்கவிட்டேன். அது என்னடானா... இப்ப தொடர்கதையா மாறி, எனக்கும் என் கணவருக்கும் தினமும் சண்டை வர்றதே குழந்தைகள் டிவி பார்க்கிறதை வைச்சுதான்" என்பது போன்ற உரையாடல்கள், குமுறல்கள் உங்கள் வீடுகளிலும் எழுகிறதா... அப்படியெனில் உங்களுக்காகதான் இந்த கட்டுரை.

'படிப்படியாக டி.வி பார்க்கும் பழக்கத்தை எப்படி குறைக்கலாம். அதில் இருந்து அவர்களுடைய கற்பனைத் திறன்களை மழுங்கடிக்காமல்குழந்தைகள் நல பயிற்சியாளர் வேள் பாரி வெளிக்கொணர்வது எப்படி?' என்பது பற்றி ஆலோசனைகள் தருகிறார் குழந்தைகளுக்கான தன்னம்பிக்கை பயிற்சி பட்டறைகள் நடத்தும் வேள்பாரி.

''குழந்தைகள் ஏன் டி.வி பார்க்கிறார்கள்? ஏனெனில் அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது. அப்படியெனில் உங்கள் வீட்டுச் சூழலை அவர்களுக்கு பிடித்தது போல மாற்றுங்கள். குழந்தைகள் டி.வி பார்க்காமல் இருக்க வேண்டும் என்று பெற்றோரான நீங்கள் நினைத்தால், முதலில் நீங்கள் டி.வி பார்க்கக் கூடாது.

இன்றில் இருந்து ஒரு வாரத்துக்கு டி.வி பார்க்கின்ற நேரத்தை நிறுத்துங்கள்; அல்லது டி.வி கனெக்‌ஷனை கட் செய்து விடுங்கள். இப்படி செய்வதற்கு முன்பு குழந்தைகளுடன் சேர்ந்து சில டி.வி பார்க்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை திட்டமிடுங்கள். அவற்றையும் உங்கள் பார்வையில் பார்க்காமல், குழந்தைகளிடம் கேட்டு தீர்மானியுங்கள்.

கதை சொல்லுதல், அவர்களுக்கு பிடித்த ஸ்பைடர் மேன் அல்லது பார்ஃபி டாலுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுவது, கண்ணாமூச்சி, கிராப்ட் வொர்க் செய்தல், பூங்காவுக்கு சென்று விளையாடுவது, ரூம் கிளீனிங், பாரம்பரிய விளையாட்டுகள், கதை சொல்வது, புத்தகம் படிப்பது, நூலகம் அழைத்துச் செல்வது, கார்டனிங், சமையல்... என வெரைட்டியாக அவர்களுக்கு பிடித்தது போல திட்டமிடுங்கள். மாலை நேரத்தில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள். குழு விளையாட்டு மூலம் குழந்தைகளின் பல திறன்கள் மேம்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். படிப்பினால் அவர்களது குட்டி மூளைக்குள் கொட்டிக் கிடக்கும் டென்ஷன்களும் காலியாகிவிடும்.  

நிச்சயம் டி.வி இல்லாத ஒரு வார கால அனுபவம், உங்கள் வீட்டையே நல்ல மாற்றத்துக்கு உட்படுத்தியிருக்கும். தேங்கிக் கிடந்த வேலைகள் முடிந்திருக்கும். வீடு எல்லோருக்கும் பிடித்த இடமாக மாறியிருக்கும். டிவி இல்லாமலும் ஜாலியாக இருக்க குழந்தைகள் பழகியிருப்பார்கள். டி.வி பார்க்காமல் குழந்தைகள் இருக்க பழகிக் கொண்டால், அதை அப்படியே தொடருங்கள். இல்லையென்றால் சாப்பிடும் சிறிது நேரம் மட்டும் என சொல்லி அதன்படி நடக்க குழந்தைகளை பழக்கலாம். குழந்தைகளோடு அமர்ந்து அந்த நேரத்தில் மட்டும் பெற்றோரும் டிவி பார்க்கலாம். மற்ற நேரங்களில் குழந்தைகள் தங்களது பணிகளை செய்து கொள்ள உதவியாக இருக்க வேண்டும். டிவி பார்க்கும் கூடுதல் நேரத்தை கட் செய்து விட்டு அந்த நேரத்தில் படி படி என திணிப்பதும் அவர்களை வெறுப்பில் தள்ளும். டிவி பார்க்காத நேரத்தில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்தலாம். பெற்றோர் மாறினால் குழந்தைகளும் மாறுவார்கள். வீட்டில் உள்ள அனைவருமே குழந்தைகளுக்காக தாங்கள் டிவி நேரத்தை தியாகம் செய்ய தயாராகுங்கள். குழந்தைகள் உலகம் குதூகலம் ஆகும்’’ என்கிறார் வேள்பாரி. 

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.