Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனவைக் கண்டுட்டு உடனே அழித்து விடவும், தவறினால் குடும்பம் கொலைக்களமாயிடும்....!  :unsure: 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

மாற்றம்... முன்னேற்றம்.. அவ்வ்வ்வ்வ்! #MakeADifferenceDay

'மாற்றம் ஒன்றே மாறாதது'ன்னு மகான் சூர்யா சொன்னதற்கேற்ப, இந்த உலகத்தில் இருக்கும் எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டவைதான். இன்னிக்கு நம்மகிட்ட இருக்கிற ஒண்ணு நாளைக்கு வேறொருத்தர்கிட்ட இருக்கலாம். அல்லது இல்லாமலேயே அழிஞ்சும் போகலாம். (இதை யாரு சொன்னதுன்னு கேட்கப்படாது.) அதனால், இழந்த பல விஷயங்களை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்காமல் மாற்றங்களை மனதார ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள். #MakeADifferenceDay

make_a_difference_19168.jpg

 

கருத்தெல்லாம் இருக்கட்டும். பல நூற்றாண்டுகள் ஆனாலும் இவையெல்லாம் மாறவே மாறாதான்னு நம்மைக் கலங்கடிக்கும் சில விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் மாத்துனா பல பேருக்கு நன்மையாக அமையும். யாருக்கு? யாருக்கோ...

 

  • ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணின பேஷன்ட் புட்டுக்கிட்டா, ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே வர்ற டாக்டர், போட்டிருக்கிற கண்ணாடியைக் கழட்டிக்கிட்டே 'ஐ யம் வெரி ஸாரி' ங்கிறதும், ஒரு வேளை பேஷன்ட் பொழைச்சுக்கிட்டா 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்'னு கண்ணாடியைத் தூக்கிப் பார்த்துக்கிட்டே ஆச்சரியப்படுவதும் இந்த சினிமாவில் எப்பத்தான் மாறும் டாக்டர்ஸ்? ஸாரி... டைரக்டர்ஸ்?
     
  • எவ்வளவோ டெக்னாலஜி முன்னேற்றத்தைப் பார்த்திருந்தாலும், அரசியல்வாதிகள் இன்னும் ஏன் பிரதமருக்குக் கடிதத்தையே எழுதிட்டு இருக்காங்கனு புரியவே இல்லை. வீடியோ கான்ஃபரன்ஸ்ல பாலத்தையெல்லாம் திறந்து வைக்கிறீங்க. ஒரு இ-மெயில் அனுப்ப மாட்டீங்களா?
     
  • நம்ம நாட்டில் ஐயாயிரம், பத்தாயிரம் சம்பளம் வாங்குறவய்ங்களும், நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குறவிங்களும் மாசக் கடைசி ஆனால் மட்டும் 'மாப்ள... ஒரு ரெண்டாயிரம் இருந்தாக் கொடுடா. அடுத்த வாரம் சம்பளம் வந்ததும் திருப்பித் தந்திடுறேன்'னு சொல்றது மட்டும் மாறவே மாறாது. #ச்சை.. ஒரே கஷ்டமப்பா!

vadi_19121.JPG

 
  • ஃபேஸ்புக்கில் நாம் என்ன போஸ்ட் போட்டாலும், கமென்ட் பாக்ஸில் வந்து ரீசார்ஜ் ஆஃபர்னு டிசைன் டிசைனா காப்பி பேஸ்ட் கமென்ட் போடுறது மட்டும் எப்போ மாறும்னு தெரியலை. #இன்னுமாய்யா இதையெல்லாம் நம்புறீங்க?
     
  • இந்த ட்விட்டர் யுகமாக இருந்தாலும் சரி, முப்பது வருசத்துக்கு முன்னாடியா இருந்தாலும் சரி, எந்தக் காலமாக இருந்தாலும் பசங்க பொண்ணுங்களை சைட் அடிச்சா, குடும்பத்தில் பல்க்காக இருக்கும் யாரிடமாவது சொல்லிப் பயமுறுத்துவதும், அட்ரஸ் கேட்டால் போலீஸைக் கூப்பிடுறதுமாகப் பசங்களைக் கோத்துவிட்டு விளையாடுவதையே வேலையாக வெச்சிருப்பாங்க. #இந்த ஊர் எப்போதான் மாறும்?
     

vikatan

Link to comment
Share on other sites

ஆந்தைகளின் இராட்சியம்
ஆந்தைகளின் இராட்சியம்

ஆந்தைகளின் இராட்சியம்

 

ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப்படைத்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா…? அதற்கான சான்றுகள் தான் இவை.

Anow

இந்தியாவில் பழமையான பஞ்ச தந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.

ஆந்தைகளின் புத்திக் கூர்மைக்கு சான்றாக அத்தீனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது.

ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு , தந்திரம் , போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இப் பெண்கள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர்.

200px-Athena_ciste

இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது.

பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் ‘ம்’ ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும் ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள்.

ஜப்பானியப் பண்பாட்டில் ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன் இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில் இவை அழுக்கானவையாகவும் கஷ்டத்தைக் கொண்டு வருபவையாகவும் கருதப்பட்டன.

ஆந்தைகள் பற்றிய சிறு கண்ணோட்டம்

220px-Nkr_hessarghatta_bangalore_perched_Mottled_wood_owl

ஆந்தை ஸ்ட்றைஜிபோர்மெஸ் ஐச் சேர்ந்த தனித்த இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும் காதுகளையும் அலகையும் மற்றும் facial disk என அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது.

ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன.

201510121737578011_OWL-brings-luck_SECVPF

இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.

ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியாது.

எனினும் அவற்றின் பார்வை விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.

பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.

download

ஆந்தைகளின் வலுவான நகங்களும் கூரிய சொண்டும் உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டு துண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன.

சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன.

உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன்றவற்றை உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது.

onlineuthayan

Link to comment
Share on other sites

டீ குடிச்சா இண்டர்நெட் ஃப்ரீ: கர்நாடகாவை கலக்கும் சையது பாய் கடை

உலகில் இணையதளம் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டது. இதனால் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நிலவி வந்தன. ஆனால், தற்போது டீக்கடையிலும் நம்மவர்கள் இண்டர்நெட் ஆஃபர்களை வழங்க ஆரம்பித்து விட்டார்கள். கர்நாடகாவில் சிறுகுப்பா என்ற நகரில் 23 வயதான சையது காதர் பாஷா என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் 5 ரூபாய்க்கு டீக்குடித்தால் 30 நிமிடங்களுக்கு இண்டர்நெட் இலவசமாக வழங்குகிறார்.

tea_15411.jpg
அதன்படி, இவரது கடைக்கு வருபவர்களுக்கு வாங்கும் பொருட்களுடன் வைஃபை பாஸ்வேர்டு கூப்பனும் வழங்கப்படுகிறதாம். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே கடையில் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இதனால் இவரது லாபம் தற்போது ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளதாம். முன் ஒரு நாளுக்கு தினசரி 100 கப் டீ விற்பனையாகி வந்தது.

தற்போது ஒரு நாளுக்கு 400 கப் டீ விற்பனையாகி வருகிறது. சரியாக அரை மணி நேரத்துக்கு பிறகு நமது மொபைலில் இண்டர்நெட் ஆட்டோமெடிக்காக ஆஃப்பாகி விடுகிறதாம். முக்கியமாக தற்போது அங்கு இளைஞர்கள் மத்தியில் சையது பாயின் டீக்கடைதான் செம வைரல்.

vikatan

Link to comment
Share on other sites

ஆசியாவின் உலகின் பல நாடுகளிலும் நிலவிய முடியாட்சி முறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மக்களாட்சி முறைதான் பெரும்பாலான உலக நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இந்த நூற்றாண்டிலும் முழுமையான முடியாட்சி நிலவும் நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. முழுமையான முடியாட்சிக்கு உதாரணமாக அரபு நாடுகள் பலவற்றையும் சொல்லலாம். குறிப்பாக, ஆசியாவில் புரூனே முழுமையான முடியாட்சி நாடு எனலாம். இவை அல்லாமல் ஆசியாவில் முடியாட்சி நடைமுறையில் இருக்கும் நாடுகள் அதிகம். இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் பூடானும் முடியாட்சி நாடாகும்.

நேபாளம் சமீப காலத்துக்கு முன்புவரை முடியாட்சி நாடாகத்தான் இருந்தது. ஆசியாவில் இவை அல்லாமல் தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், கம்போடியா ஆகிய நாடுகளிலும் இன்றும் அரச குடும்பத்தின் செல்வாக்கு இருக்கிறது. இவற்றில் புரூனே அரச குடும்பம் உலகத்திலேயே செல்வச் செழிப்பு மிக்க அரச குடும்பமாகும். அரச குடும்பத்தின் மாளிகையான இஸ்தன நூருல் இமான் உலகின் ஆடம்பரமான குடியிருப்பாகும். புகழ்மிக்க ஆசியாவின் அரச மாளிகைகளின் ஒளிப்படத் தொகுப்பு இது:

 

Desktop_3054277f.jpg

3_3054276f.jpg

ராயல் பேலஸ், கம்போடியா
 
1_3054275f.jpg
இஸ்தன நூருல் இமான், புரூனே
 
2_3054274f.jpg
டெக்கன்கோலிங் பேலஸ், பூட்டான்
 
7_3054270f.jpg
கிராண்ட் பேலஸ், தாய்லாந்து
6_3054271f.jpg
டா லாத் கிங் பேலஸ், வியட்நாம்
5_3054272f.jpg
நாரயணகிட்டி பேலஸ், நேபாளம்
 
4_3054273f.jpg
டோக்கியா இம்பீரியல் பேலஸ், ஜப்பான்
 
 

tamil.thehindu

Link to comment
Share on other sites

’டின்னர் சாப்பிடும் கோழி...பிங்க் நிற பிளமிங்கோ’ - அடடே அறிவியல் வெப்சைட்!

scinece%201_17502.png

’ஐய்யோ இன்னைக்கு சயின்ஸ் எக்ஸாம்’ என்று வாழ்நாளில் ஒருமுறையாவது தலைதெறிக்க ஓடியவர்களெல்லாம் கைத்தூக்குங்கள் பார்ப்போம்...அவர்களுக்காகத்தான் இந்த ஆர்ட்டிக்கிள்!

கணிதப் பாடத்தின் சூத்திரங்களைப் போலவே ‘மெட்டபாலிசம், சோடியம் குளோரைடு, கார்பன் குடும்பம்’ ஆகிய அறிவியல் பாடங்களைக் கேட்டாலும் தடதடவெனத் தப்பித்து ஓடும் பெரியவர்களும், சிறியவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். 

அடுத்த வீட்டு சமையல்கட்டில் ஆப்பம், தேங்காய்ப்பால் என்று நுகர்வு சக்தியால் சரியாகச் சொல்லும் நம்மால், அந்த நுகர்வுத் திறன் குறித்து விளக்கச் சொன்னால் கடினமோ கடினம்.

’அப்டி’ பயம்காட்டும் அறிவியலின் ஒவ்வொரு துளியையும் எளிதாக்கும் வகையில் செயல்படுகிற இணையதளம்தான் ’பீட்ரைஸ் தி பயாலஜிஸ்ட்’ (Beatrice the biologist). இந்த இணையதளப்பக்கத்தில் கார்ட்டூன்களாலேயே கடினமான சயின்ஸ் நடப்புகளை எளிதாக விளக்கிவிடுகிறார் இதன் வடிவமைப்பாளரான கிஸிக். 

kiss%202_09005.jpg

ஒருகாலத்தில் பயாலஜி ஆசிரியராக இருந்த கிஸிக், இன்றைக்கு பிரபலமான அறிவியல் கார்ட்டூனிஸ்ட். ’அறிவியல் எப்போதுமே போரடிக்க கூடிய விஷயம் இல்லை. உற்று கவனித்தால் கற்றுக்கொள்ள அது போன்ற ஜாலியான, ஃபன்னியான ஒரு சப்ஜெக்ட்  எதுவுமே இருக்க முடியாது. என்னுடைய வெப்சைட்டால் குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வம் அதிகரிப்பது மகிழ்ச்சி’ என்கிறார் இந்த ஸ்டிரிக்ட் டீச்சர். 

அறிவியலின் குட்டிக் குட்டி விஷயங்களைக் கூட கார்ட்டூன்கள் மூலமாக தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன இவரது கலாட்டா ஓவியங்கள். குளிப்பதனால் அழுக்குப் போகும் என்பதை நாம் எப்படி விளக்கிச் சொல்வோம் குழந்தைகளுக்கு? சோப்புப் போட்டுத் தேய்த்து, தண்ணீரால் கழுவினால் அழுக்குப் போகும் என்று சொல்வோம்.

ஆனால், இந்த டீச்சர் அதையே அழகாக கார்ட்டூன் மூலமாக உருவகப்படுத்தியுள்ளார். சிக்கனாக மாறப்போகும் இரண்டு கோழிகள் பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதை, ‘அவர் என்னை டின்னர் கூப்பிட்டுருக்கார். ஆனால், 10 மணி நேரம் முன்னாடியே நான் வந்துடணுமாம். கேட்கவே வினோதமா இல்ல?’ என்று ஒரு கோழி இன்னொரு கோழியிடம் பேசுவது போன்ற கார்ட்டூனுக்கு லைக்ஸோ லைக்ஸ்.

பிளமிங்கோ பறவைகள் ஆல்கே என்னும் பாசிகளை எந்தளவிற்குச் சாப்பிடுகின்றதோ அந்தளவிற்கு அதன் உடல் வளர்ச்சியும், நிறமாற்றமும் இருக்குமாம். இதையே எளிதான கார்ட்டூனாக விளக்கியுள்ளார் கிஸிக். அம்மா பிளமிங்கோ பறவை குட்டி பிளமிங்கோவிடம் சொல்கிறது, ‘நீயும் அம்மா மாதிரி சீக்கிரம் பிங்க் கலரா மாறணுமா வேணாமா? அப்போ சமத்தா சாப்பிடு’ என்று. 

kk%20600_09450.jpg

இருப்பதிலேயே தெறி கார்ட்டூன் சோடியம் குளோரைடு என்னும் உப்பு நீரில் கரைவதை கிஸிக் விளக்கியுள்ள விதம்தான். ’ஐ லவ் ஹேங்க் அவுட் வித் யூ குளோரைடு’ என்கிறது சோடியம். இரண்டும் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றக் கிளம்பும்போது, தண்ணீர் அருகில் வந்து இரண்டையும் கரைக்கிறது. அப்போது, சோடியம், குளோரைடிடம் ‘நான் உன்னை எப்பவும் மறக்கமாட்டேன்’ என்று சோகத்துடன் சொல்வது பக்கா மாஸ் கார்ட்டூன். 

இது போல, ஆண் கடல் குதிரைதான் முட்டைகளைச் சுமக்கும் என்பதை விளக்கும் வகையில், ஒரு கடல் குதிரை மற்றொன்றிடம், ‘ட்யூட் உன்னோட ட்யூ டேட் எப்போ?’ என்று கேட்டதும், அந்தக் கடல் குதிரை ‘இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்’ என்று கோவம் கொள்வதாகவும் செம்ம ஜாலியாகப் போகிறது இவருடைய சயின்ஸ் தியரி கார்ட்டூன்கள்.

அமீபா, செல் பிரிதல், பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவிலிருந்து உருவாதல், அணுப்பிளவு என்று எல்லாவிதமான அறிவியல் விஷயங்களையும் ஜஸ்ட் லைக் தட் விளக்கிவிடுகின்றன இவரது கார்ட்டூன்கள். ஈசியாக அறிவியல் அறிந்து கொள்ள ஆசைப்படும் பெரியவர்களுக்கும், சயின்ஸ் என்றாலே அடம்பிடிக்கும் குட்டீஸ்களுக்கும் ஜாலிலோ ஜிம்கானா சைட் இதுதான் பாஸ்!

vikatan

Link to comment
Share on other sites

 

அழியும் ஆபத்தில் பனிச்சிறுத்தைகள்
================================
மத்திய ஆசியாவில் சட்டவிரோத வேட்டையால் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. ட்ராஃபிக் இண்டர்நேஷ்னல் என்ற வனவிலங்கு கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒவ்வொரு வாரமும் நான்கு பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுகின்றனவாம். தற்போது உலகில் வெறும் நான்காயிரம் பனிச்சிறுத்தைகளே எஞ்சியுள்ளன

Link to comment
Share on other sites

புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது (Photos)

 

புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது (Photos)

சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க் பூ என்ற புத்த விஹாரை அமைந்துள்ளது.

அங்கு பூஹூ என்ற புத்த மதத் துறவி தன்னுடைய 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, கடந்த 2012 ஆம் ஆண்டில் காலமானார்.

அவர் புத்த மதத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமாக, ஒரு மிகப்பெரிய விஷயத்தை செய்ய குறித்த விஹாரையின் நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, அவர் இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரின் சடலத்தைப் பதப்படுத்தினர்.

பின்னர், அதை பெரிய ஜாடியில் உட்காரும் நிலையில் வைத்து மூடிவைத்தனர்.

அதற்கு தங்க முலாம் பூசி, ஒரு தங்க சிலையாக தற்போது வடிவமைத்துள்ளனர்.

 

china-mummified-monk_wake2-1024x683

monk2

mummified-monk_wake-1024x719

http://newsfirst.lk

Link to comment
Share on other sites

மார்னிங் டூ ஈவினிங் : சர்வம் டிஜிட்டல்மயம்

முழுக்க டிஜிட்டல்மயமான இந்த கலர்ஃபுல் யுகத்தில் செல்போனும், இன்டர்நெட்டும் இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவதுதான் இப்போது ஒருவனுக்கு உச்சபட்சத் தண்டனையாக இருக்கும். இன்றைய ட்ரெண்டி சமூகத்தின் மக்களிடம் டெக்னாலஜியின் வெளிப்பாடு எப்படி இருக்கிறதுன்னு லைட்டா... see more...

digi_19007.jpg

* 'என் போனுக்குக் காசு போடணும்'னு பத்து வருசத்துக்கு முன்னாடி யாராவது சொன்னால், நூறு ரூபாய்த் தாளை குறுக்குவாட்டில் மடிச்சு போனுக்குள்ள திணிக்கணும் போலன்னு நினைச்சுருப்போம். போன் லாக் ஓப்பன் ஆக மாட்டேங்குதுனு சொன்னதுக்காக, அதை அப்படியே வாங்கிக் கால் இடுக்கில் உட்கார வெச்சு சுத்தியலால் அடிச்சு பல துண்டாக்கிக் கொடுப்பாரே வடிவேலு. அந்த மாதிரி பேட்டரியைக் கழட்டுவதற்கு, ரெண்டு கையாலும் தூக்குச்சட்டி மூடியைக் கழட்ட முயற்சிப்பது போல போனை இழுத்துக்கொண்டு கிடப்பதும் ஒருகாலத்தில் நமக்கு நடந்திருக்கும். இப்போதெல்லாம் நிகழ்வு அப்படியே தலைகீழ். சின்னக் குழந்தைகளும் கேண்டி க்ரஷ் முதல் க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் வரை வருடக்கணக்காக விளையாடி விளையாடி டயர்டாகிப் போய்க் கிடக்கிறார்கள்.

 

* முன்னொரு காலத்தில் கம்ப்யூட்டரில், ' ஃபைல்ஸ் அனுப்பியாச்சா?'னு யாரிடமாவது கேட்கும்போது 'பீரோவில் பத்திரமா வெச்சுருக்கேன். எடுத்துட்டு வரவா'னு கேட்டுக் கிச்சுக்கிச்சு மூட்டிய அப்பாவிச் சமூகத்துக்கும், இப்போ 'வீட்டு விண்டோஸை க்ளோஸ் பண்ணிரும்மா'னு சொன்னாலே 'அப்பவே சிஸ்டம் ஷட் டவுன் பண்ணிட்டேனே' எனச் சொல்லும் டெக்னிக்கல் சமூகத்திற்கும் இடையே இருக்கும் ஈஃபிள் டவர் உயர வித்தியாசமே இந்தக் காலம் டிஜிட்டல் யுகமாகிப் போனதற்கான சான்று. கையகலக் கைபேசிக்குள் உலகமே ஒளிந்திருக்கும் விந்தைகள் தெளிவான பின்பு 'இத்துனூண்டு போனுக்குள்ளேயா இம்புட்டு இருக்கு?' எனச் சொல்லியபடியே பல் போன கிழவிகளும் காதில் செல்வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

 

* தனியாக இருப்பதாக நினைப்பதே இப்போதெல்லாம் கையில் மொபைல் இல்லாத தருணங்களிலும், மொபைல் இருந்தும் சார்ஜ் இல்லாத கையறுநிலைகளிலும்தான். யார் எவ்வளவு தொலைவில் இருந்தால் என்ன? கண்காணாத இடத்துக்குக் கண்ணைக்கட்டி கொரியரில் அனுப்பப்பட்டாலும் 'யாமிருக்க பயமேன்' எனத் துணை நிற்கின்றன தொலைத்தொடர்பு சாதனங்கள். நவீன கருவிகள் மனிதனைச் சோம்பேறியாக்குகின்றன என ஆங்காங்கே ஆய்வறிக்கைகளில் சொல்லப்பட்டாலும், பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள் மெசேஜ் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்தாலே அந்தக் கருத்து நம் மனதில் ஒரு நிமிடத்தில் உடைபட்டுப் போகும். முடியும்ம்மா...?

 

dig_19521.jpg

 

* பிள்ளையாருக்கு எலி வாகனமானது போல இப்போது நம்மில் பலருக்குப் பேருதவி புரிந்துகொண்டிருப்பது மவுஸோ, ஸ்மார்ட்போனோதான். தூங்கி விழிக்கும்போதே மொபைல் போன், நோட்டிஃபிகேஷன் சத்தத்தோடு வெளிச்ச நட்சத்திரங்களைத் தூவி வரவேற்கின்றன. பல்லைக்கூட விலக்காமல் பெட் காபி சாப்பிடுவது போல் பெட்ஷீட்டுக்குள் புகுந்தபடி, வந்திருக்கும் வாட்ஸ்-அப், ஹைக் மெசேஜ்களுக்கு ரிப்ளைகளைத் தெறிக்கவிடுகிறோம். முதல்நாள் நள்ளிரவில் போட்ட செல்ஃபிக்கு வந்திருக்கும் போட்டோ கமென்ட்ஸ்களுக்கு பதில் கமென்ட்கள் இட்டு மனசைத் தேற்றிக்கொள்கிறோம். பத்து 'ப்ப்பா..' கமென்ட்களுக்கு மத்தியில் ஒற்றை 'ஆசம்' கமென்ட் தரும் பேரின்பம் ஃபேஸ்புக் வாழ் மக்களுக்கு மட்டுமே புரியும்.

* நல்ல விஷயங்களைப் பகிர வேண்டும்னு நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த விஷயத்தை 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்'ங்கிற பார்த்திபன்-வடிவேலு காமெடிக் கதையாகிக் கடைசியில் 'பகிரப்படும்' எனும் வார்த்தையை மட்டும் கப்பெனப் பிடித்துக்கொண்டு நல்ல சேதி, கெட்ட சேதி, நாலு வருசத்துக்கு முன்னாடியே குழிதோண்டிப் புதைச்ச சேதினு எல்லாத்தையும் தோண்டியெடுத்துப் பகிரோ 'பகீர்'னு ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கோம். வாய்க்கு வந்த எதையாவது சொல்லிட்டு விவேகானந்தரையும், ஐன்ஸ்டீனையும் இழுத்துத் தெருவில் விட்டுக்கிட்டு இருக்கோம். 

* போஸ்ட் பிடிக்கலைனா கம்முனு அடுத்த பேஜை ஸ்க்ரோல் பண்ணிப் பார்த்துப் போய்க்கிட்டே இருப்போம்ல, வாழ்க்கையிலும் அதே மாதிரி நல்லது, கெட்டதுனு தினந்தினம் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கும். நமக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டும் சிம்பிளா லைக் பண்ணிட்டு, சில நேரங்களில் ஹார்ட்டின் சிம்பள் போட்டு அபரிமிதமான விருப்பத்தைத் தெரிவிச்சுக்கிட்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக்கணும். விரும்பத்தகாத நிகழ்வுகளை நிறுத்தி நிதானமாகப் பார்த்து உணர்ச்சிவசப்படுறதுக்குப் பதிலா அப்படியே அப்பீட்டாகி அடுத்த நல்ல நிகழ்வுக்கு 'கிருட்டுக் கிருட்டு'னு ஜம்ப் பண்ணி ட்ராவல் ஆகிட்டே இருக்கணும்னு சுவாமி மார்க்கானந்தா தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற தன்னோட டைம்லைன்ல எழுதி வெச்சுருக்கிறதா ஒரு ஷேரிங் ஸ்டேட்டஸ் சொல்லுது. 

* ஒரு டேப்லட் அளவு மூஞ்சியில் ஒன்பது ஃபில்டர் அப்ளிகேஷன்களைப் போட்டுப் படுத்தியெடுத்து ப்ரொஃபைல் பிக்சரை மாத்திட்டு அதை லைக் பண்ணச் சொல்லி ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருக்கும் மூவாயிரம் பேருக்கும் ப்ரைவேட் சாட்டில் லிங்க் அனுப்பி 'ஆதரவு தாரீர்!' எனக் காலில் விழுந்து போட்டோக்கள் போட்டாலும் தானாகக் கிடைக்கிற முப்பது லைக்தான் நம்ம டைம்லைன்ல ஒட்டும். நாம் செய்யும் சில பல நல்ல விஷயங்களுக்கு ( நல்ல விஷயமா அப்படின்னா...?) ப்ரோமோஷன் கொடுத்து அடுத்தவர்களையும் அதைச் செய்யுமாறு ஊக்குவிக்கணும். அதுக்குக் கிடைக்கிற வெகுமதியை எப்படி இருந்தாலும் மனதார ஏத்துக்கணும். பில்டப் பண்றமோ, பீலா விட்றமோ... அது முக்கியமில்லை. நாம என்ன பண்ணினாலும் இந்த உலகம் நம்மை உத்துப் பார்க்கணும். அவ்ளோதான்.

 

digit_19447.jpg

 

* சங்ககாலத்துல புறா விடு தூது, நாரை விடு தூதுன்னு பறக்கிற ஒரே காரணத்துக்காக பறவைகளோட காலில் லெட்டரைச் செருகி நாடுவிட்டு நாடு இதயங்களை அனுப்பி வாயில்லா ஜீவன்களை வதக்கி, வெயிலில் பறக்கச் சொல்லிப் பாடாய்ப்படுத்தியதெல்லாம் பழைய கதை. போகிறபோக்கில் பொண்ணைப் பார்த்தோமா பெயரைக் கேட்டோமா?, ஃபேஸ்புக் ஐடியைத் தேடினோமா? ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தோமா? ப்ரோபோஸ் பண்ணினோமா?னு பலகட்டப் பரிமாற்றங்களையும் ஓவர் நைட்டிலேயே முடிச்சு அடுத்த நாள் பிக்கப் ஆகி, அதற்கடுத்த நாள் ப்ரேக்-அப் ஆனாலும் அசால்ட்டா அன்ஃப்ரெண்ட் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிடுவான் டிஜிட்டல் உலகத்து இளைஞன். 

* 4ஜி போன் இருக்கு. வீடியோ காலிங் ஆப்ஷனும் இருக்கு. பிறகென்ன, எல்லோருக்கும் கான்ஃபரன்ஸ் கால்ல மீட்டிங்கைப் போட்டுப் பத்துமணிக்கு மேல் சியர்ஸ் சொல்லிப் பார்ட்டியை ஆரம்பிக்க வேண்டியதுதான். தூரத்து நண்பனின் அருகில் இருக்கும் கடலை பர்பியையும், மிக்சர் பாக்கெட்டிலும்தான் நினைத்தவுடன் கைவைத்து அள்ள முடியாது. மற்றபடி, ஸ்கைப்பிருக்க ஜாலிக்கும் அரட்டைக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. வெட்டியாய்க் கிடக்கும் வாட்ஸ்-அப் குரூப்பில் அவ்வப்போது பழங்கதை பேசி சாவடிக்குபோது, மகான் சசிகுமார் 'மூடிக்கிட்டுப் படுங்கடா நொன்னைகளா...' எனச் சொன்னதைப்போல... 'குரூப்பைக் கலைச்சுத் தொலைங்கடா...' எனக் கதறும் தூரம் தொலைவில் இல்லை. 

ஆகவே மக்களே... எல்லாவற்றையும் டிஜிட்டல் யுகத்திற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டு ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஜெட்களில் பறந்துகொண்டிருக்கும் நாம் எதிரில் வருபவர்களை எனிமிகளாய்ப் பார்த்து எரிக்கும் சிவப்பு மூஞ்சி எமோட்டிகான் போட்டுத்தான் கடந்து செல்வோம் என அடாவடித் திட்டங்களாகவே வைத்திருந்தால் எப்படி? சின்னதாய் ஒரு ஸ்மைலி போடலாமே ஃப்ரெண்ட்ஸ்!

vikatan

Link to comment
Share on other sites

விடுபட முடியாத உறவுகள்!

 

article_1476856679-ytuti.jpgசேமிக்கும் பழக்கம் சிறந்தது; அதற்காகத் தர்மம் செய்யாமல் இருத்தலாகாது. 

நாங்கள் இந்த உலகில் நீக்க முடியாத ஓர் அங்கத்தினர்களே! எனவே உலக மக்களிலிருந்து விடுபட முடியாது.  

எங்களுக்காகச் சேமிக்கும் நாம், எங்களோடிணைந்த சமூகத்திற்கும் ஏதாவது எம்மால் இயன்றதைச் செய்தல் எங்களது தலையாய கடமைதான். 

அடுத்த தலைமுறைக்காகச் சேமிக்கும்போதே, எங்கள் கண்முன்னே வாழும், இந்தத் தலை முறையின் உடன் பிறவாதச் சகோதர, சகோதரிகள், ஏதிலிகளை நோக்கக் கூடாதா? 

நன்றாகச் சிந்தித்தால் நாம் எல்லோருமே, எங்கள் உறவினர்களைவிட முகம் தெரியாத நபர்களிடம்தான் கடமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.  

எப்போதும் பிறரிடமே ஏதோ ஒரு முறையில் அனுகூலம் பெற்று வருகின்றோம். 

எல்லோருமே வேண்டப்பட்டவர்கள்தான்! இந்த உலகம் ஒரு பெரிய வீடு. மக்கள் அனைவரும் அதன் குடியிருப்பாளர்கள். விடுபட முடியாத உறவுகள்! 

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தெருவோரக் கடையில் தேநீர் தயாாித்த வசீகர இளைஞர்; ஒரு யுவதி பிடித்த படத்தினால் உலகப் புகழ் பெற்றாா்

 

1641.jpgபாகிஸ்­தா­னி­லுள்ள கடை­யொன்றில் தேநீர் விற்­றுக்­கொண்­டி­ருந்த 18 வய­தான ஒரு இளைஞர் ஒரு புகைப்­ப­டத்­தினால் உல­க­ளா­விய ரீதி­யி­லான புகழ்­பெற்­று­விட்டார். இப்­பு­கைப்­படம் இணை­யத்தில் வெளி­யாகிய சில தினங்­க­ளுக்குள் பெஷன் மொட­லா­கவும் மாறி­யுள்ளார். 

 

இஸ்­லா­மாபாத் நக­ரி­லுள்ள இத்வார் பஸார் எனும் ஞாயிறு பஸாரில்  தேநீர் விற்­ப­னை­யா­ள­ராக பணி­யாற்­றி­யவர் அர்ஷாத் கான். (வட இந்­தியா மற்றும் பாகிஸ்­தானில் இவ்­வாறு தேநீர் தயா­ரிப்­ப­வர்கள்,  பரி­மா­று­வர்­களை சாய்­வாலா என அழைப்பர்). வசீ­க­ர­மான முகத்­தோற்­றத்தை கொண்­டவர் அவர். நீல நிற­மான கண்­க­ளையும் கொண்­டுள்ளார்.

 


அந்த இளைஞர் தேநீர் தயா­ரிப்­பதை படம்­பி­டித்து இன்ஸ்­டா­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் ஒக்­டோபர் 14 ஆம் திகதி வெளி­யிட்டார் புகைப்­படக் கலை­ஞ­ரான ஒரு யுவதி. 

 

அதன்பின் இந்த ஹொட்­டான சாய்­வாலா குறித்து பலரும் பேசத் தொடங்­கினர். மெல்ல மெல்ல  இப்­பு­கைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் பரவத் தொடங்­கி­யது. பாகிஸ்­தானில் மாத்­தி­ர­மல்லால், இந்­தி­யா­விலும் ஏரா­ள­மா­னோரை இந்த இளைஞர் கவர்ந்தார்.  

 

 

ஐஸ்­வர்யா, ரன்பீர் கபூர் பிர­தான வேடத்தில் நடித்த ‘ஏ தில் ஹாய் முஸ்கில்’ படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் நடித்­ததால் அப்­ப­டத்தை வெளி­யி­டு­வ­தற்கு மஹ­ராஷ்ரா அடிப்­ப­டை­வாத கட்­சி­யொன்று எதிர்ப்பு தெரி­வித்த நிலையில் இந்த சாய்­வாலா இளைஞர் மீது இலட்சக் கணக்­கா­னோ­ருக்கு நாடு கடந்த காதல்.

 

 “பாகிஸ்தான் இப்­ப­டி­யொரு சாய்­வா­லாவை கொண்­டுள்­ளது. தயவுசெய்து அதன் மீது குண்­டு­ போ­டா­தீர்கள் என ஸ்ருதி எனும் ஒரு யுவதி எழு­தினார். பிர­ப­லங்கள் பலரும் இந்த இளை­ஞரை 

 

பாராட்டத் தொடங்­கினர். அவரின் பெயர், விபரம் எதுவும் அப்­போது வெளி­யா­கி­யி­ருக்­க­வில்லை. 

 

164chaiwala-arshad-khan.jpg

 

இப்­பு­கைப்­படம் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் அதி­க­மாக பகி­ரப்­பட்ட நிலையில் அவரைப் படம்­பி­டித்த யுவதி, அந்த இளை­ஞரின் வேறு புகைப்­ப­டங்­க­ளையும் இணை­யத்தில் பகிர்ந்தார். இஸ்­லா­மாபாத் இத்வார் பஸாரில் அவரை காணலாம் என்ற குறிப்­பையும் அவர் வெளி­யிட்டார். 

 

இதை­ய­டுத்து, அந்த இளை­ஞரை நேரில் சந்­திப்­ப­தற்கும் அவ­ருடன் படம்­பி­டித்­துக்­கொள்­ளவும்  ஆர்வம் காட்­டினர். இரு தினங்­க­ளுக்குள் சுமார் 50 இளம்­பெண்கள் அவரைத் தேடி­வந்­த­துடன் அவ­ருடன் படம்­பி­டித்துக் கொள்ள விரும்­பி­னராம். 

 

இந்­நி­லையில், அந்த இளை­ஞரை படம்­பி­டித்த யுவ­தியின் சமூக வலைத்­தளப் பக்­கங்­களின் ரசி­கர்கள் எண்­ணிக்­கையும் திடீ­ரென அதி­க­ரிக்கத் தொடங்­கி­யது. 

 

ஜவே­ரியா அலி எனும் யுவ­திதான் அப்­பு­கைப்­ப­டக்­க­லைஞர். ஜியா அலி எனும் பெயரில் இவர் செயற்­ப­டு­கிறார்.

 

1646.jpg

 

பின்னர் அந்த இளை­ஞரை சந்­தித்து அவ­ருடன் தான் பிடித்­துக்­கொண்ட படத்தை வெளி­யிட்ட ஜவே­ரியா அலி, நானே சாய்­வா­லாவை கண்­டு­பி­டித்தேன் என்ற குறிப்­புடன் அப்­ப­டங்­க­ளையும் வெளி­யிட்டார். 

 

இந்த இளைஞர் நிச்­ச­ய­மாக ஊட­கங்­களின் கவ­னத்தை ஈர்ப்பார். அவர் ஒரு மொட­லாக மாறி­வி­டுவார் என சமூக வலைத்­த­ளங்­களில் பலர் கருத்துத் தெரி­வித்­தனர். 

 

அது விரை­வி­லேயே உண்­மை­யா­கி­யது. அந்த இளைஞர் யார் என பாகிஸ்­தா­னிய ஊட­கங்கள் தேடத் தொடங்­கின.

 

அவர் பெயர் அர்ஷாத் கான். 18 வய­தா­னவர் என்­பது தெரி­ய­ வந்­தது. இவரின் தந்தை இரு தட­வைகள் திருமணம் செய்­தவர். இவ­ருக்கு 17 சகோ­தர சகோ­த­ரிகள் உள்­ளனர். 

 

பாகிஸ்­தானின் கைபர் பக்­துன்க்வா மாகா­ணத்தின் மர்தான் நக­ரி­லி­ருந்து வந்த குடும்­ப­மொன்றைச் சேர்ந்த அர்ஷாத் கான். தனது குடும்பம் 25 வரு­டங்­க­ளாக இஸ்­லா­­மா­பாத்தில் வசிப்­ப­தாக இவர் தெரி­வித்­துள்ளார். 

 

4 வரு­டங்­க­ளாக இஸ்­லா­மாபாத் இத்வார் பஸாரில் அர்ஷாத் கான்  பணி­யாற்­று­கி­றராம். தேநீர் விற்­ப­னை­யா­ள­க­ராக பணி­யாற்­று­வ­தற்கு முன்னர் பழங்­களை விற்­பனை செய்தார். 

 

அப்­ப­டி­யானால் இவர் முறை­யாக பாட­சா­லைக்கு செல்­ல­வில்­லையா என்ற கேள்வி எழு­கி­றதா? ஆம். குடும்­பத்­தி­னரின் வறுமை கார­ண­மாக அவரால் பாட­சா­லைக்கு செல்ல முடி­ய­வில்­லையாம்.

 

1642.jpg

 

இன்ஸ்­ட­கிராம், பேஸ்புக், டுவிட்டர் போன்­ற­வற்றில் தனது புகைப்­ப­டங்கள் வேக­மாக பரவ ஆரம்­பத்­த­போது, இந்த சமூக வலைத்­தள சமாச்­சா­ரங்கள் எதுவும் அவ­ருக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

 

‘‘நீங்கள் உல­க­ளா­விய ரீதியில் புகழ்­பெற்­றுள்­ளதைப் பற்றி உங்­க­ளுக்குத் தெரி­யுமா?” என்று கேட்டால். ஆம். நான் புதி­தாக பிர­ப­ல­ம­டைந்­தி­ருப்பதை நான் அறிவேன். இது குறித்து மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

 

எனது புகைப்­ப­டங்­களை (இணை­யத்தில்) எனது நண்­பர்கள் காண்­பித்­தனர். மக்கள் என்­னுடன் இணைந்து 150 இற்கு மேற்­பட்ட படங்­களை பிடித்­துக்­கொண்­டுள்­ளனர்.

 

இத்­திடீர் புகழ் மகிழ்ச்­சி­யா­ன­தாக இருந்­­தாலும் வாழ்­வ­தற்­காக உழைக்கும் வேலை நேரத்­திலும் என்னைச் சூழ்ந்­தி­ருந்து சிலர் படம்­பி­டிக்க முற்­ப­டு­வது எரிச்­சலை ஏற்­ப­டுத்­து­கி­றது” என சில தினங்­க­ளுக்­குமுன் தெரி­வித்தார் உழைப்பின் அவ­சி­யத்தை உணர்ந்த அர்ஷாத் கான்.

 

ஆனால், இப்­போ­தைய நிலைமை வேறு. எதிர்­பார்க்­கப்­பட்­டதைப் போலவே தற்­போது ஒரு மொட­லா­கி­விட்டார் அர்ஷாத் கான். பாகிஸ்­தானின் ஒன்லைன் ஷொப்பிங் இணை­யத்­தள­மான  Fitin.pk  தனது ஆடை­க­ளுக்­கான பெஷன் மொட­லாக பணி­யாற்­றுவதற்கு அர்ஷாத் கானுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ளது.

 

1643a.jpg

 

அர்ஷாத் கான் பெஷன் மொட­லாக தோன்றும் புகைப்­ப­டங்­களும் வெளி­யாக ஆரம்­பித்­துள்­ளன. “சாய்­வாலா, இப்­போது சாய்­வாலா அல்ல. அவர் ஒரு பெஷன் வாலா” என பதி­வொன்றை வெளி­யிட்­டுள்­ளது மேற்­படி நிறு­வனம்.

 

பி.பி.சி. உட்­பட சர்­வ­தேச ஊட­கங்­க­ளிலும் அர்ஷாத் கான் குறித்த செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. 

 

“சாய்­வா­லா­வாக அர்ஷாத் கானை படம்­பி­டித்த ஜவே­ரியா அலி கருத்துத் தெரி­விக்­கையில், அப்­பு­கைப்­படம் இவ்­வ­ளவு பிர­சித்­த­மை­டையும் என தான் எதிர்­பார்க்­க­வில்லை எனக் கூறி­யுள்ளார்.

 

ஊட­கத்­து­றையில் அண்­மையில் பட்டம் பெற்ற ஜவே­ரியா அலி, திரு­ம­ணங்கள் மற்றும் நிகழ்­வு­களை படம்­பி­டிப்­பவர். சில மாதங்­க­ளுக்கு முன்னர் இத்வார் பஸாருக்குச் சென்றபோது மேற்படி இளைஞரை முதன்முதலில் தான் கண்டதாக ஜவேரியா தெரிவித்துள்ளார். 

 

வழக்கமாக சமூக வலைத்தளங்களில் படங்களை தரவேற்றுவது போலத்தான் அப்புகைப்படத்தையும் நான் வெளியிட்டேன். சில தினங்களுக்குப் பின்னர்தான் இப்படம் வேகமாக பரவத் தொடங்கியது என்கிறார் அவர். 

 

“அர்ஷாத் கானுக்கு கிடைத்த திடீர் புகழ் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு அருமையான பிள்ளை. அவர் தனது புகழை சரியாக கையாள்வார் எனவும் பேராசை கொண்ட மக்களால் அவர் சுரண்டப்படாதிருப்பார் எனவும் நம்புகிறேன்” என் ஜவேரியா அலி தெரிவித்துள்ளார்.

 

164_MED211016-PG09-R1.jpg

 

metronews.lk

Link to comment
Share on other sites

14702252_1161906393858053_87918456711452

வடக்கு மாகாண முதலமைச்சர், ஓய்வுபெற்ற நீதியரசர் C.V.விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்.
இனிய வாழ்த்துக்கள் ஐயா

Link to comment
Share on other sites

தாஜ்மகாலில் அற்புதமான தருணத்தை உருவாக்கிய புகைப்படக்காரர்

bb_1476969978_12255.jpg

மோஹித் தேஜ்பால், 25 வயது புகைப்படக் கலைஞர். Photofie ஏற்பாடு செய்திருந்தப் போட்டியில் பயண புகைப்படத்திற்கான விருது பெற்றவர். ஆனால் செய்தி அது கிடையாது. மோஹித் விருது பெற வழிவகுத்த புகைப்படம் தான், இருவரை வாழ்க்கையில் இணைய செய்துள்ளது. 

aa_1476969486_12048.jpg


2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் மெளரத் பெஜி மற்றும் கொலம்பைன் ரூயிஸ் ஆகிய இருவரையும் தன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொன்னார் மோஹித். அந்த சுற்றுலா பயணிகளும் ரோஹித்துக்கு உதவும் நோக்கத்தில்,  தாஜ் மஹால் அருகே உள்ள மண்டபத்தின் வாயிலில் கைகோர்த்தபடி,  நின்றும்,  அமர்ந்தும் போஸ் கொடுத்தனர். அப்படி எடுக்கப்பட்ட, கீழே உள்ள புகைப்படம்தான் Judges Choice Travel Photography விருது பெற்றுள்ளது. 

winning_shot_1476969540_12090.jpg


மோஹித்தின் புகைப்படம் விருது வென்றதை கேள்விப்பட்ட அந்த பிரான்ஸ் சுற்றுலா பயணிகள், மோஹித்திற்கு மனம் உருகி செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர். 


அதில், 'உங்கள் புகைப்படம் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது மோஹித். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது நானும் மெளரத்தும் நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நீங்கள் புகைப்படத்திற்காக கை கோர்த்து நிற்க சொன்ன போது, இருவருக்கும் சங்கடமாக இருந்தது. ஆனாலும் புகைப்படம் அழகாக வர வேண்டும் என்பதற்காக கை கோர்த்து நின்றோம். நாங்கள் இருவரும் முதன்முறையாக கைகோர்த்து நின்ற தருணம் அது. அதற்கு பின்னர் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டோம். தாஜ்மகால் என்னும் அற்புதமான இடத்தில் தோன்றிய அற்புதமான தருணம். இன்றோடு உங்கள் புகைப்படத்திற்காக நாங்கள் கைக்கோர்த்து நின்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் அன்பில் இணைந்துதான் இருக்கிறோம். உங்கள் கலையால் இது போன்ற அற்புத தருணங்களை உருவாக்க வாழ்த்துகள்' இவ்வாறு எழுதியிருந்தனர்.

vikatan

Link to comment
Share on other sites

14721635_1161908127191213_14012346607871

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள், உலகக்கிண்ணம் வென்ற அபார விக்கெட் காப்பாளரும், முன்னாள் உப தலைவருமான ப்ரட் ஹடினின் பிறந்தநாள்.
Happy Birthday Brad Haddin

Link to comment
Share on other sites

‘மாமியாரை ஏன் வில்லி ஆக்கணும்?’- கடுகடு விசு! #mother-in-law-day

mp2_13498.jpg

 

மாமியார்! - உச்சரித்துப் பார்க்கையில் இது ஓர் உறவின் பெயராக மட்டும் தெரிந்தால் இன்னொரு முறை உச்சரியுங்கள் ப்ளீஸ். நீங்கள் திருமணம் ஆனவராக இருக்கலாம், ஆகாதவராகவும் இருக்கலாம். ஆனால் மாமியார் என்கிற வார்த்தையின் வலிமையை நீங்கள் கவனிக்கத் தவறி இருக்க வாய்ப்பில்லை.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா, மாமனார், மைத்துனர் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மாமியார் என்கிற உறவின் உன்னதம் அதை  முழுமையாய் உணரும் போது அலாதியானது.


மாமியார் என்பவள்  நீங்கள் அஞ்சுவதற்கோ அல்லது அவளை விரோதம் பார்க்கவோ,  உருவாக்கப்பட்ட உறவு அல்ல.. நீங்கள் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு இந்த  உறவு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த உறவை நாம்  முழுமையாய்  நேசிக்கிறோமா?


விளையாட்டுக்குச் சொல்லும் போது கூட காவல்நிலையத்தை ’மாமியார் வீடு’ என்று தான் போகிறப் போக்கில் சொல்லிவிடுகிறோம். அப்படி என்றால் அத்தனை சிக்கலானதா இந்த மாமியார் வீடு?. நிச்சயமாக இல்லை. உளவியல் ரீதியாக பார்த்தோம் என்றால் குடும்ப உறவுகள் எல்லாவற்றிலுமே சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும், அம்மாவுக்கும் பிள்ளைக்கும், சகோதரர்களுக்குள், சகோதரிகளுக்குள், கணவன் மனைவிக்குள் என உறவுச்சிக்கல் எல்லா நிலைகளிலும் சூழல்களைப் பொறுத்து அமைந்தாலும், மாமியார்-மருமகனுக்குமான உறவுச் சிக்கலைக் காட்டிலும் மாமியார்- மருமகளுக்குமான உறவுச்சிக்கல் சற்று அதிகமாய் இருப்பதாய் காண முடிகிறது.


ஒரு பெண் தன் பிறந்த வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் போது அவள் சந்திக்கும் சூழலே அவளை மாற்றுச் சிந்தனைக்கு உட்படுத்துகிறது. இத்தனை காலமாய் தன்னை விரும்பி நேசித்த அம்மாவைப் போலவே இங்கே ஒரு அம்மா அவள் மகனை, அதாவது அவள் கணவனை நேசிக்கும் போது சின்ன ஏக்கம் அவளை அறியாமலே அவளுக்குள் ஒளிந்து கொள்கிறது. இதே போலவே தான் இத்தனை காலமாய் நேசித்த தன் மகனை தனக்கு நிகராக கவனிக்கவும், நேசிக்கவும் ஒருத்தி வந்துவிட்டாளே என்ற அன்பின் ஆழம் மாமியாருக்குள்ளும் மெதுவாய் ஒட்டிக் கொள்கிறது. இந்த அன்பின் போட்டி தான் நாளடைவில் மாமியார்- மருமகள் சண்டையாக வேறு சில காரணங்களை வைத்து அமைந்துவிடுகிறது. இந்த இடத்தில் புரிதல் இல்லாத சில விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்.


முந்தைய காலங்களைக் காட்டிலும் இப்போது மாமியாரை மருமகள்களும், மருமகன்களும்  ’அம்மா’ என்று அழைப்பதை கவனிக்க முடிகிறது. இந்த வார்த்தை மாற்றம் மட்டும் இந்த உறவை வலுபடுத்திவிடுமா என்றால் இதை ஒரு பெருமாற்றத்துக்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம். குடும்பச் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் மாமியாரை ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் பங்கெடுப்பது, வெளியிடங்களுக்கு செல்லும் போது அவர்களை அழைத்துப் போவது, குடும்ப நிர்வாகத்தை அவர்களின் ஆலோசனையுடன் அவர்களுடன் இணைந்து வழிநடத்துவது, மரியாதை குறையாமல் பேசுவது, அவர்கள் நோயுற்ற காலங்களில் அக்கறை எடுத்துக் கொள்ளவது, அதிகம் வேலை வாங்காமல் இருப்பது.. இப்படி பல சூழல்களில் அவர்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். இது பெண்ணின் மாமியாருக்கு மட்டுமல்ல. ஆணின் மாமியாருக்கும் பொருந்தும்.


’’ மாமியார் என்னும் உறவுக்கு பலம் சேர்க்கிற,அதே நேரத்தில் பயமுறுத்துகிற பங்கை சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், சின்னத்திரை ஆகியன செய்து வருகின்றன. அதை மக்களிடம் தெளிவாக கொண்டு சேர்ப்பது தான் படைப்பாளியின் கடமை’’ என்னும் விசு, மாமியார் என்னும் உறவு குறித்து வெளிப்படையாய்ப் பேசுகிறார்.

 

mp_13093.jpg


‘’எனக்கு மொத்தம் மூணு பெண் பிள்ளைங்க. மாமியாரிடம் அம்மா பொண்ணு போலவே இருக்காங்க. அதே போல என் அம்மா, என் மேல் எடுத்துக் கொள்ளும் அக்கறையை விட அவங்க மருமகன் மேல தான் அதிகமா அக்கறை எடுத்துப்பாங்க. எனக்கு சப்போர்ட் பண்றதைவிட என் மனைவிக்கு பண்றதுதான் அதிகமா இருக்கும். சகலகலா சம்மந்தி,சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி ஒரு கண்மணி, உரிமை ஊஞ்சலாடுகிறது போன்ற என்னோட நிறைய திரைப்படங்கள்லயும் இந்த உறவுகான புரிதலை என்னால் முடிந்த அளவுக்கு மக்களிடம் சேர்த்திருக்குறதா நம்புறேன்.
தினம் ஒரு ஸ்வாரஸ்யத்தை கூட்டணுங்கிறதுக்காகவே  மாமியாரை வில்லியாகவும் கொடுமைப் படுத்துறவளாவும் காட்டுறதை தொலைக்காட்சி தொடர்கள் நிறுத்திக்கலாம். மாமியார், மருமகள் ரெண்டு பேருமே வீட்ல இருக்குறப்ப ஒளிபரப்பாகும் கற்பனையான சித்தரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் அதை பார்க்கும் உறவுகளிடம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கொண்டு சேர்க்காது. அதனால் ஊடங்கங்களும் உறவுகளை கவனமாக கையாளணும்’’ என்றார் அக்கறையாய்!.

 

பெரிதாக ஒன்றுமில்லை. இவ்வளவு தான். மாமியார் என்று நீங்கள் அழைக்கும் நபர் எங்கோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து முளைத்தவர் அல்ல...அவர் உங்கள் கணவருக்கு அம்மா. அல்லது உங்கள் மனைவிக்கு அம்மா.
இந்த அம்மாக்களை அலாதியாய் நேசிக்கப் பழகுவோம்!

#mother-in-law-day

vikatan

Link to comment
Share on other sites

14705870_1161909177191108_42486547033457

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசனின் பிறந்தநாள்
Happy Birthday Steve Harmison

Link to comment
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p334b.jpg

twitter.com/tamilhumourjoke: எவ்ளோ ஸாரி கேட்டும் மனைவி பேசலையா? நேரா கிச்சனுக்குப் போய் எல்லா டப்பாவோட  மூடியையும் டைட்டா மூடிட்டு, பேசாம வந்து படுத்துக்கணும்!

twitter.com/Piramachari: வீட்டைச் சுத்தம்பண்ணும்போது, ரெண்டு பெரியார் புக்ஸ் இருந்தன. எடுத்து வேறு இடத்துல ஒளிச்சுவெச்சுட்டேன். இல்லைன்னா, அதுக்கும் பொட்டு வெச்சுடுவானுங்க!

twitter.com/Kozhiyaar: கணவன்கள் உறங்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட்டு, சுத்தம்செய்வது மனைவிகளின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு!

twitter.com/Railganesan: அநியாயத்தை அமைதியாகச் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். நியாயத்தைத்தான் சத்தம்போட்டுக் கேட்கவேண்டியிருக்கிறது!

p334.jpg

twitter.com/MePistol: ஒரு பெரும் கூட்டத்துக்குள் இருந்தும் நாம் தனிமையை உணர்ந்தோமேயானால், அது நமக்கான இடம் அல்ல!

twitter.com/mpgiri : நேத்து வரை `புத்தகத்தை எடுத்துவெச்சுப் படிக்க உட்கார்டா’னா... வீட்டுக்குள்ளகூட வரலை. இன்னைக்கு பூஜையில வெச்சப்புறம் `படிக்கணும்பா... எப்ப புக் தருவ?’ங்கிறான்!

twitter.com/Dhrogi: `ஹீரோயினை வெகுளியாக் காண்பிச்சா பசங்களுக்குப் பிடிக்கும்’னு எவனோ இயக்குநர்களுக்கு நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிவிட்டுருக்கான்!

twitter.com/Kozhiyaar: குழந்தைக்குத் தூக்கம் வந்துட்டா, எத்தனை இடி இடிச்சாலும் எழுந்திருக்காது; தூக்கம் வரலைன்னா, எத்தனை அடி அடிச்சாலும் தூங்க மாட்டாங்க!

twitter.com/Kannan_Twitz: தொலைஞ்சுபோறதையே தொழிலா வெச்சிருக்கிற ஒரே பொருள்னா... அது பென்டிரைவ்தான்போல # மிடியல!

twitter.com/iindran : தனிமைக்கு ஒரு வசீகரம் இருக்கிறது. அது நம்மிடமே கேள்விகேட்டு, நம் நேர்மையான பதில்களைப் பெற்று, நம்மையே சவுக்கால் அடிக்கும் விசித்திரம்கொண்டது!

twitter.com/mayavel15: `குடிச்சுட்டு போன்ல யார்கிட்ட என்ன பேசினோம்?’னு மறுநாள் காலையில யோசிப்போம் பாருங்க... அதுதான் ஞாபக சக்தியின் உச்சக்கட்டம்!

twitter.com/Piramachari: `எதுவும் சில்லறை வேலை இருந்தால் சொல்லுங்க... கம்மி ரேட்டுல முடிச்சுடலாம்’ என்பதன் சுருக்கமே விசிட்டிங் கார்டு!

twitter.com/ikrthik : நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நட்புவட்டம்தான்... வாழ்வை, காதலை, பெண்ணை, எந்தக் கோணத்தில் அணுக வேண்டும் எனத் தீர்மானிக்கிறது!

p334a.jpg

p334c.jpg

facebook.com/skpkaruna: `சென்னைக்கு யார் வந்தாலும் என்னைச் சந்திச்சுட்டுத்தான் போகணும்’னு ஆளுநரே உத்தரவிட்டிருந்தால் தவிர, இத்தனை சந்திப்புகள் சாத்தியம் அல்ல!

facebook.com/Sowmya Ragavan: குழந்தைகள், திரும்ப வாங்கிவிடக்கூடிய பொருட்களையே போட்டு உடைக்கின்றனர். பெரியவர்களைப் போல் மனங்களை அல்ல!

facebook.com/karthekarna: கறுப்புப் பேரீச்சம்பழம், குலோப்ஜாமூன் மிக்ஸ், புது வாஷிங்பவுடர்... எப்போதும் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாக கிடைப்பவை!

p334d.jpg

facebook.com/tmaniji: என் சாவுக்கு என்னால் போக முடியாது. நீங்கள் வேண்டுமானால் வரலாம்!

facebook.com/karthekarna: நாம கிளம்பின பிறகு ஆரம்பித்து, போய் சேரும் முன் நிற்பதற்குப் பெயர்தான் மழை. வந்த இடத்தில், `வழியில சாக்கடையில விழுந்துட்டியா?’னு கேட்கிறாய்ங்க # ச்சை!

vikatan

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: எந்த 'வெடி' எப்படி?- கலாய்ப்புத் தெறிப்பு

 

 
vedi2_3054328f.jpg
 

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பட்டாசுகள், புத்தாடைகள், பலகாரங்களோடு இந்த முறை இணைய உலகில் 'வெடி' தொடர்பான பதிவுகளும் சிதறிக்கிடக்கின்றன. 'இந்த' வெடி 'இப்படி' இருக்கும் என்று உவமை, உவமானங்களோடு வெளிவந்த வெடித்தொகுப்புகளும், அவை மீதான விமர்சனங்களும் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

palanikannan

மார்க்கெட்ல புதுசா ஒரு வெடி வந்துருக்காம். அத பத்த வெச்சாலே நம்மள தூக்கி அடிச்சிடுமாம்.. #கேப்டன்_வெடி

ஜோ கற்றது தமிழ் ‏

மோடியும் ராக்கெட் வெடியும் ஒண்ணு. ரெண்டும் இருக்குற இடத்துல வெடிக்காம, ஊர சுத்தி சுத்தி வெடிக்கும்.. #மோடி_வெடி

எந்திரப்புலவன் ‏

வைகோன்னு ஒரு வெடி வந்துருக்காம். எவ்ளோ நல்ல வெடியா இருந்தாலும் இத பக்கத்துல வச்சாபோதும் புஸ்ஸுன்னு போயிருமாம்!!!

Jackie

தோணி வெடினு ஒரு வெடி வந்திருக்காம்...முதல்ல வெடிச்சா புஸ் ஆயிடுமாம். எல்லா வெடியும் வெடிச்சதுக்கு அப்புறம், பினிஷிங்ல வச்சாதான் வெடிக்குமாம்.

Johnny Stark

பக்கெட்ல தண்ணியோட நடமாடிட்டு இருக்கேன்.. எப்போ, யாரு, எங்கிருந்து வெடி போடுவாங்களோன்னு திக்குதிக்குனு இருக்கு..

Karthik Rk

தீபாளிக்கு டி.ஆர். வெடி வந்திருக்காம். பத்தவச்சவுடன் டண்டனக்கா டண்டனக்கானு சவுண்டு விட்டே வெடிக்குமாம்!

சிந்தனைவாதி ‏

இது சூப்பர் ஸ்டார் வெடி. இதுல ஒரு வெடி வெடிச்சா நூறு வெடிச் சத்தம் கேட்கும். ஆனால் எப்ப, எப்படி வெடிக்கும்னு அந்தஆண்டவனுக்குதான் தெரியும்.

Raj

அடுப்புக்குள்ளயே போட்டாலும் இந்த வெடி வெடிக்காதாம். ரொம்ப தன்னடக்கமா இருக்குமாம். #தன்னடக்கவெடி

நாஞ்சில் மனோ

நாமளும் வெடி ஸ்டேட்டஸ் போடலைன்னா ஆட்டையில் சேர்க்க மாட்டார்களாம்.

Sukumar

எல்லா வெடியையும் இப்போவே வெடிச்சிட்டீங்களே, தீபாவளிக்கு எத வெடிக்க போறிங்க? #வெடிப்பதிவர்கள் அலப்பறைகள்.

பொல்லாதவன் ‏

சேவாக்ன்னு ஒரு வெடி இருக்கு, அத ஓப்பனிங்ல கொளுத்தி விட்டாதான் வெடிக்குமாம். #Sehwag

மஹான் ‏

அனிருத்னு ஒரு வெடி வந்திருக்கு.. அது வெடிச்சா, காது கிழியற மாறி சவுண்டு கேக்குமாம்..

ஷான்

இந்த வெடி ஜோக்கு போடறவங்களை, அந்த குண்டர் சட்டத்துல அரெஸ்டு பண்ண முடியாதுங்களா ஆபீசர்ஸ்?

V I S H N U ‏

ஒருத்தர்கிட்ட ஒரு வெடி இருந்துச்சாம்... அத டிவிடி-ல போட்டு பாத்தாராம்… விஷாலும் சமீரா ரெட்டியும் நடிச்சிருந்தாங்களாம்…

vedi1_3054317a.jpg

Ellam Awan Seiyal ‏

மனைவி வெடின்னு ஒண்ணு வந்திருக்காம். அது கணவனோட சொந்தக்காரங்க வந்தாதான் வெடிக்குமாம்.

Villan Vngt ‏

வடிவேல்னு ஒரு வெடி இருக்காம். அது என்ன பண்ணாலும் வெடிக்குமாம்.

M.சிவா

இந்த வெடி பதிவை யார் ஆரம்பிச்சதுன்னு தெரியல. ஃபேஸ்புக், ட்விட்டர்ல சும்மா பட்டாசு மாதிரி வெடிக்குது.

vinothan

மோடினு ஒரு வெடி இருக்காம். அது இங்க விட்டா வெளிநாட்ல போயி தான் வெடிக்குமாம்.

Itz_TheriBoy

சிம்பு வெடின்னு ஒரு வெடி வந்திருக்காம். கடைசி வரைக்கும் வெடிக்காதாம் (படங்கள்). புகை மட்டும் வந்துட்டே இருக்குமாம்.. (டீஸர்).

 

Narayanamoorthi Moorthi

மவுசு எனும் ஊதுவத்தியைக் கொண்டு, பதிவு எனும் நமத்துப்போன வெடி வெடித்து, தினம் தினம் தீபாவளியை முகநூலில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

Kishoker Stanislas

ஆண்டவா! இந்த வெடி போஸ்ட் போடுபவர்களிடமிருந்தும், அவள் போஸ்ட் போடுபவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்று... ஃபேக் ஐடிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.

Thulasi Doss

தீபாவளிக்கு போலீஸ் வெடி அப்டின்னு ஒரு வெடி விற்கிறதாம். ஆளுங்கட்சியப் பார்த்தா புஸ்ஸ்ஸ்னு வெடிக்குமாம். எதிர்க்கட்சிய பார்த்தா டமால் டுமில்னு வெடிக்குமாம். பொதுமக்களப் பாத்தா மட்டும் ஆட்டோ பாம் மாதிரி சத்தமா வெடிக்குமாம்...!

அன்புடன் தமிழ்

இந்த வெடி ஸ்டேட்டஸ் போடறவங்க ஃபோனெல்லாம் வெடிச்சு போகக் கடவது... தாங்கலப்பா....

vedi_3054318a.jpg

‏HariVignesh

ட்விட்டர்'ன்னு ஒரு பழைய வெடி இருக்காம்.. அது என்னைக்கு வெடிக்குதோ, அன்னைக்குதான் இளைஞர்கள் எல்லாம் உருப்படுவாங்களாம்.

Thiruppathi Kannan

பப்புன்னு ஒரு வெடி இருக்காம். அதை யாராலையும் பத்த வைக்கவே முடியாதாம்.

அப்துல் ரஜாக்

மூஞ்சிபுக்ல ரெண்டு நாளா ஏகப்பட்ட வெடி வெடிச்சிகிட்டு இருக்கு. நம்ம பேர்ல ஒரு வெடிகூட இன்னும் வெடிக்கலையே... என் பேர்ல ஒரு #சங்கு_சக்கரமாவது விடுங்கப்பா... #நானும்_ரவுடிதான்_மொமெண்ட்.

இனியவன் சரத்

தீபாவளிய பேஸ்புக்ல கொண்டாடுன மொத தலைமுறை நாமதேன்.

Mohamed Farook

___________ன்னு ஒரு வெடி வந்திருக்காம்.. அது ________________ தான் வெடிக்குமாம்... எதையாவது நிரப்பிக்கோங்க... கொலையா கொல்றாங்கய்யா..

tamil.thehindu

Link to comment
Share on other sites

ஃபுஜிதா டெட்சுயா 10

 

 
ded_3055357f.jpg
 

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய வானியல் அறிஞர் ஃபுஜிதா டெட்சுயா (Fujita Tetsuya) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜப்பானில் புக்குவோக்கா மாகாணத் தில், கிட்டாகியூஷு என்ற ஊரில் பிறந்தார் (1920). பள்ளிப் படிப்பு முடித்து, 1943-ல் இயந்திரப் பொறியிய லாளர் பட்டம் பெற்றார். தான் பயின்ற கல்லூரியிலேயே இணைப் பேராசிரி யராகப் பணியாற்றினார். அணுகுண்டு களால் பேரழிவை எதிர்கொண்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அந்தக் கொடூரத்தின் தாக்கங்களை ஆராய்ந்தார்.

* இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, வானிலை ஆய்வுகளுக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். இடியுடன் கூடிய மழை குறித்து ஆராய்ந்தார். மின்னல் மின்னும் கால அளவுகளை வைத்து இடியின் இயக்கத்தைக் கணக்கிட்டார்.

* சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானிலை நிபுணரும் இடி, மின்னல், புயல் குறித்த தண்டர்ஸ்டோம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹாரஸ் பயர்ஸை தொடர்புகொண்டு, தான் மொழிபெயர்த்த இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவருக்கு அனுப்பி வைத்தார்.

* இந்த இளம் ஜப்பானிய வானியல் வல்லுநர் வெறும் பேப்பர், பென்சில், பாரோமீட்டர் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி, புயல் உருவாவதற்கான சில அடிப்படைக் காரணங்களை நிரூபித்திருந்ததைக் கண்டு வியந்த ஹாரஸ் பயர்ஸ், இவரை சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

* இந்த அழைப்பை ஏற்று சிகாகோ சென்றார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத இவரது பிரச்சினை, படங்கள் மற்றும் வரைபடங்களால் விளக்கும் இவரது திறனை மேம்படுத்தியது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1988-ல் காற்று ஆராய்ச்சி சோதனைக் கூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

* சூறாவளிக் காற்றின் வலிமையை அளவிடும் நுட்பத்தைக் கண்டறிந்தார். இது ‘ஃபுஜிதா அளவீடு’ என்று குறிப்பிடப்படுகிறது. ஒளியின் துணையால் அளவிடப்படும் முறைகளைக் கொண்டு சூறாவளியின் வேவ்வேறு உயரங்களில் காற்றின் வேகத்தை அளக்க எஃப்-அளவீடை மேம்படுத்தி அதை 1971-ல் அறிமுகம் செய்தார். வான் போக்குவரத்தின்போது, விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

* டோப்ளர் ராடார் உதவியுடன் மைக்ரோபஸ்ட் என்ற காற்றுப் பெயர்ச்சி யைக் கண்டறிந்தார். இதுதான் விமானங்கள் விபத்துக்குள்ளாக முக்கிய காரணம் என்பதைக் கூறினார். இவரது யோசனையின் படி டாப்ளர் ராடார்கள், விமான நிலையங்களில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட் டன. இவை, மைக்ரோபஸ்ட் விபத்துகளைத் தடுக்க உதவியது.

* ‘இடியுடன் கூடிய மழை, சுழற்காற்று, புயல் ஆகியவற்றின் செயல்பாடு களைச் சாதாரணமாகக் கண்காணித்தே, இவை எவ்வாறு செயல் படுகின்றன என்பதைக் குறித்து ஒரு கோட்பாட்டை வகுத்துவிடுவார். அதன் பிறகு விரிவாக ஆராய்ந்து நாங்கள் அது மிகவும் சரியானது என்று நிரூபிப்போம்’ என்கிறார் கொலராடோவில் உள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.

* ‘ஒரு விஷயம் குறித்து நாங்கள் அனைவரும் கற்பனை செய்வதற்கு முன்பே அவர் அதைக் குறித்து திட்டவட்டமான ஒரு யோசனையைக் கொண்டிருப்பார். இவரது முறைகள் அறிவியலுக்கு முரண்பட்டதாகத் தோன்றும். ஆனால், இவரது உள்ளுணர்வின் ஞானம் சிலருக்கும் மட்டுமே வாய்த்துள்ளது’ என சக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

* அமெரிக்க தேசிய வானிலை கழக விருது உள்ளிட்ட பல விருதுக ளைப் பெற்றார். ‘டி.தியோடர் ஃபுஜிதா ஆராய்ச்சி சாதனை விருது’ என இவரது பெயரில் 2000-மாவது ஆண்டில் ஒரு விருது அறிவிக்கப்பட் டது. தன் இறுதி மூச்சுவரை ஆராய்ச்சிகளையே சுவாசித்து வந்த, ஃபுஜிதா டெட்சுயா 1998-ம் ஆண்டு 78-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

 

கிளிக் - தொழில் நுட்பக் காணொளி

வர்ஜின் அமெரிக்கா விமான நிறுவனத்தின் நவீன டெக்னோ ட்ரைனர்ஸ் காலணிகள், குழந்தைக்கான ஸ்னு படுக்கை, இந்தியாவில் அறிமுகமாகியுள்ள விவசாயத்திற்கான செயலி, தானாகப் பறக்கும் விமானங்கள் ஆகியவை அடங்கிய காணொளி.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 24

 

1260 : எகிப்­திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்­ப­வரால் கொலை செய்­யப்­பட்டார். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனார்.

 

834varalaru-gamini.jpg1795 : போலந்து, லித்­து­வே­னியன் கூட்­ட­மைப்பு முற்­றாகக் கலைக்­கப்­பட்டு ஆஸ்­தி­ரியா, பிரஷ்யா மற்றும் ரஷ்யா ஆகி­யன தமக்குள் பங்­கிட்டுக் கொண்­டன.

 

1801 : தமி­ழ­கத்தில் மருது பாண்­டிய சகோ­த­ரர்­களும் அவர்கள் குடும்­பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்­பட்ட மன்னர் குடும்­பத்­தாரும் வெள்­ளை­யர்­களால் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

1806 : பிரெஞ்சுப் படைகள் பேர்லின் நகரை அடைந்­தன.

 

1851 : யுரேனஸ் கோளின் சந்­தி­ரன்கள் ஏரியல், உம்­பி­ரியல் ஆகி­யன வில்­லியம் லாசெல் என்­ப­வரால் கண்­ட­றி­யப்­பட்­டன.

 

1857 : உலகின் முத­லா­வது கால்­பந்­தாட்ட அணி­யான ஷெஃபீல்ட் கால்­பந்­தாட்ட அணி இங்­கி­லாந்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1917 : ரஷ்­யாவில் அக்­டோபர் புரட்சி இடம்­பெற்­றது.

 

1930 : பிரேஸிலில் இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது. ஜனா­தி­பதி லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

 

1935 :  எதி­யோப்­பி­யாவை இத்­தாலி கைப்­பற்­றி­யது.

 

1945 : ஐக்­கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

834varalaru.jpg1960 : சோவியத் ஒன்­றி­யத்தின் பாய்க்­கனூர் விண்­த­ளத்தில் ஆர்- 16 ஏவு­கணை வெடித்­ததில் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1964 : வடக்கு றொடீ­சியா ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்று ஸாம்­பியா என்னும் பெயரைப் பெற்­றது.

 

1973 : இஸ்­ரே­லுக்கும் அரபு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான யோம் கிப்பூர் போர் முடி­வுக்கு வந்­தது.

 

1994 : கொழும்பில் தேர்தல் கூட்­டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் காமினி திசா­நா­யக்கா, ஒஸ்வின் அபே குண­சே­கர உட்­பட 52 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

2003 : கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பய­ணத்தை மேற்­கொண்­டது.

 

2007 : சந்­தி­ரனின் சுற்­றுப்­பா­தையில் நிலவைச் சுற்­றி­வரும் முதல் சீன ஆளற்ற விண்­க­ல­மான 'சாங்-1” தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

 

2008 : உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

metronews.lk

Link to comment
Share on other sites

ஹேர் ஸ்டைலால் கோடிகளில் புரளும் வளர்ப்பு நாய்!

dog_10279.jpg

ஆஸ்திரேலியாவில் தனது ஹேர்ஸ்டைலால் வளர்ப்புநாய் ஒன்று இணையதளங்களில் மிகவும் பாப்புலராகியுள்ளது. அது மட்டுமல்லாமல் வளப்ப்பு பிராணிகளுக்கான ஃபுட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு 'ஸ்போக்ஸ் டாக்' ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரைச் சேர்ந்தவர் லூகே கவாங். இவர் டீ என்ற பிளாக் ஆப்கன் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு ஐந்து வயதாகிறது. இந்த நாயின் சிறப்பு என்னவென்றால், பெண்களைப் போலவே நீண்ட கூந்தலுடன் அழகுற காணப்படும். ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் டீ  கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. அண்மையில், இந்த நாயின் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் நீண்ட கூந்தல் கவர, லட்சக் கணக்காணோர் டீயின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர். அதனை பார்த்து விட்டு ஏராளமான விளம்பர நிறுவனங்கள் டீயை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்க அணுகி வருகின்றன.

ஆனால் டீயின் உரிமையாளர் இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் மட்டுமே நடிக்க வைக்க தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். முதல்கட்டமாக வளர்ப்பு பிராணிகளின் உணவு தயாரிக்கும் ராயல் கெனின் நிறுவனத்துக்கு 'ஸ்போக்ஸ் டாக்' ஆக டீ நியமிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஹரியாத் அண்டு ஹவுண்ட் என்ற வளர்ப்பு பிராணிகளின் வாசனைத் திரவிய நிறுவனத்துக்கும் பிராண்ட் அம்பாசடாராகியுள்ளது டீ.

இது குறித்து டீயின் வளர்த்து வரும் லுகே ஹவாங் கூறுகையில், '' தற்போது டீக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது. அதனால் கண்காட்சிகளில் கூட இப்போது பங்கேற்பதில்லை. நாங்கள் வீட்டிலேயே ஓய்வாக அதனை வைத்திருக்கவே கருதுகிறோம். ஆன்லைனில் பாப்புலரான பிறகு, அதற்கு புதிய பணி தேடி வந்துள்ளது. மற்ற  சூப்பர் மாடல்கள் போல புதிய பணியை டீ நிச்சயம் விரும்பும் என்றே நினைக்கிறேன். அதன் சில்வர் நிற கூந்தல்தான் ஆன்லைனில் இந்தளவுக்கு பாப்புலராக்கியிருக்கிறது. டீயை வாக்கிங் அழைத்துச் சென்றால் கூட அதனை பார்க்க ஏராளமான கூட்டம் கூடி விடும். இப்போதைக்கு இரு நிறுவனங்ளுக்காக மட்டும் டீ பணியாற்றும். அனிமல் ஆக்டராக நடிக்க வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்றார்.

vikatan

Link to comment
Share on other sites

14671071_1164716060243753_80736118807603

இன்று ஐக்கிய நாடுகள் தினம்.
UN Day - United Nations Day

1945ஆம் ஆண்டு உலக நாடுகளின் ஒற்றுமை, அபிவிருத்தி, அமைதி ஆகியவற்றை நோக்காகக் கொண்டு ஐ.நா சபை இதே நாளில் உருவாக்கப்பட்டது.

‘ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organisation) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
 
Link to comment
Share on other sites

’இதுக்கு 85 வழிகளா?’ - சின்ன விஷயத்துக்காக செம ஹிட் அடித்த புத்தகம்!

tie%20600_21398.jpg

ஒன்றுமே இல்லாத விஷயமாக நாம் நம்பும் ஒரு கான்செப்டினை வைத்து புத்தகம் ஒன்று ஹிட் அடிக்க முடியுமா? முடியவே முடியாது என்பார்கள் புத்தகப் ப்ரியர்களும், இலக்கியம் சார்ந்தவர்களும். 

ஆனால், அப்படிப்பட்ட கான்செப்டில் உருவான ஆங்கில மொழிப் புத்தகம் ஒன்று வரலாற்றில் கன்னாபின்னாவென்று ஹிட் அடித்திருக்கிறது. நம்புங்கள்....’டை கட்டுவது எப்படி’ என்பதைச் சொல்லிக் கொடுக்கும் புத்தகம்தான் அது.

தாமஸ் ஃபிங், யோங்க் மாவோ ஆகிய இருவரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கல்வியில் தீவிரமாகவிருந்தனர். ஆராய்ச்சி படிப்பு என்றால் சும்மாவா? என்ன தியரி சப்மிட் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்த இருவருக்குமே, கணித சூத்திரங்கள் மீது ஆர்வம் அதிகம்.

tiee%201_21589.jpg

இயற்பியலில் திறமையானவராக இருந்தாலும், தாமஸ் ஃபிங்குக்கும் கணிதத்தில் ஒரு தனி கிரேஸ். பேப்பருக்காக யோசிக்கும்போதுதான் இருவருக்குமே ஒரு செம கான்செப்ட் கையில் கிடைத்தது.

தினமும்தான் கல்லூரிக்கும், வேலைக்கும் டை கட்டிக் கொண்டு போகிறோம். ஆனால், அதை எத்தனை விதங்களில் சரியாகக் கட்ட முடியும் என்று யோசித்திருக்கிறோமா? என்று மண்டையில் ஆணி அடித்த கணக்காய் தோன்றியதுதான் தாமதம், இருவரும் கணிதச் சூத்திரங்களையெல்லாம் உருட்டி, புரட்டி ‘தி 85 வேஸ் டூ டை எ டை' (The 85 ways to tie a tie) என்றொரு ஆய்வு முடிவினை தெள்ளத் தெளிவாக எழுதி முடித்தனர். ஆளுக்கொரு பேப்பரையும் ஆசிரியர்களுக்கு முன்வைத்தனர். 

பேராசிரியர்களிடமும், ஆய்வாளர்களிடமும் அந்த ஆய்வுப் பேப்பர்களுக்கு அதிரிபுதிரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவும், 1999 ஆம் ஆண்டு வாக்கில் ‘ஃபோர்த் எஸ்டேட்’ பதிப்பகம் மூலமாக புத்தகமாகவும் வெளியிட்டனர். 

கணிதக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஆண்கள் மத்தியில் புத்தகத்துக்கு ஏகபோகமாக வரவேற்பு குவியவும், மேலும் 9 மொழிகளில் வெளியாகி சாதனை படைத்தது இந்தப் புத்தகம். 

இத்தனை வருடங்கள் கடந்த போதிலும், இன்றைக்கும் கூட டை கட்டுவதில் யாருக்கேனும் சற்றே சந்தேகம் ஏற்பட்டால், தக்க சமயத்தில் கைகொடுக்கிறது இந்த எவர்க்ரீன் கான்செப்ட் புக். உங்களுக்கும் டை கட்டறது கஷ்டமா இருக்கா பாஸ்? உடனே தயங்காம இந்தப் புக்கை படிச்சுடுங்க!

vikatan

 

Link to comment
Share on other sites

R.K.Laxman: மொழிகளைத் தாண்டி அனைவரையும் கவர்ந்த அற்புதமான கலைஞர்!

மொழிகளைத் தாண்டி அனைவரையும்  கவர்ந்த அற்புதமான கலைஞர்கள் உருவாவது அபூர்வம். p11b.jpgஅப்படி உருவான ஒருவர்... ராசிபுரம் கிருஷ்ணசாமி லஷ்மண்; சுருக்கமாக ஆர்.கே.லஷ்மண். அவரது 'காமன் மேன்’ - இந்தியனின் மனசாட்சி. காலை செய்திதாளில் பார்க்கும் அவரது கார்ட்டூன், அந்த நாள் முழுவதும் நம்மைக் கலகலப்பாக வைத்திருக்கும். அவரின் பிறந்த தினம் இன்று(அக்.:24)

dot.jpgஒருமுறை பிரதமர் நேருவைக் கிண்டல் செய்து ஒரு கார்ட்டூனைப் போட்டுக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் லஷ்மண். அடுத்த நாள் காலை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு போன். மறுமுனையில் பேசியவர், பிரதமர் நேரு. 'உங்கள் கார்ட்டூனை நான் மிகவும் ரசித்தேன். அதில் என்னை நீங்கள் நகைச்சுவையாகச் சித்திரித்திருந்த விதம் அருமை. எனக்கு நீங்கள் வரைந்த அந்த ஓவியத்தை என்லார்ஜ் செய்து தர முடியுமா? நான் அதை ஃப்ரேம் செய்துவைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ எனக் கேட்டார்.   

dot.jpgநேருவுக்கு இருந்த அந்த நகைச்சுவை உணர்வு, அவரது மகள் இந்திரா காந்தியிடம் இல்லை. நெருக்கடி காலத்தின்போது, இந்திராவை நேரில் சந்தித்தார். 'சுதந்திரமாக கார்ட்டூன் போடுவதில் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’ என லஷ்மண் சொல்ல... 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என அதட்டலாகப் பதில் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார் இந்திரா. அதனால் இந்தியாவைவிட்டு சில காலம் வெளியே இருக்கவேண்டிய சூழல். இந்திரா தேர்தலை அறிவித்த நேரம், நாடு திரும்பினார். அதன் பிறகு பிரதமராக வந்த மொரார்ஜி தேசாயும் ஆர்.கே.ல‌ஷ்மணின் கார்ட்டூன்களை நகைச்சுவை விமர்சனங்களாக எடுத்துக்கொள்ளவில்லை.

p11a.jpg 

dot.jpg'காமன் மேன்’ - சாமானிய இந்தியன்தான் லஷ்மண் கார்ட்டூன்களின் ஆதர்ச அடையாளம். அந்த 'காமன் மேன்’ உருவம் ல‌ஷ்மணின் சிந்தனையில் அத்தனை சுலபமாகப் பிறந்துவிடவில்லை. 'இந்தியன் எப்படி இருப்பான்?’ என ஒரே ஒரு சித்திரம் மூலம் வரைந்து காட்டிவிட முடியாது. ஏனெனில், சிலர் தாடி வைத்திருப்பார்கள்; சிலர் பெரிய மீசை வைத்திருப்பார்கள். வட இந்தியர்கள் ஒருவிதமாக ஆடை உடுத்துவார்கள். தென் இந்தியர்கள் வேறு மாதிரி உடை உடுத்துவார்கள். அதனால் காமன் மேனை உருவாக்க ஆரம்பத்தில் நான் நிறையவே சிரத்தை எடுக்கவேண்டியிருந்தது’ எனச் சொல்லியிருக்கிறார் ல‌ஷ்மண். பூனாவில் இருக்கும் ஒரு கல்லூரியில் இவரது சாமானியனுக்கு, 10 அடி உயரத்தில் சிலை ஒன்று அமைத்திருக்கிறார்கள்.

p11c.jpg

dot.jpg எத்தனையோ இந்தியப் பிரதமர்களை ல‌ஷ்மண் வரைந்திருக்கிறார் என்றாலும், அவருக்குப் பிடித்தமானவர் தேவகவுடா. அவர் பிரதமராக இருந்த சமயத்தில் பல முக்கியமான கூட்டங்கள் நடக்கும்போது, அசதி காரணமாகத் தேவகவுடா தூங்கிவிடுவார். அதை வைத்து லஷ்மண் அவரை தன் கேலிச் சித்திரங்களில் செம ஓட்டு ஓட்டியிருக்கிறார். ஒருமுறை லஷ்மணைச் சந்திக்க வேண்டும் என தேவகவுடா கூப்பிட்டு அனுப்பினார். ஆனால், அந்தச் சந்திப்பின்போதும் தேவகவுடா சற்று கண் அயர்ந்ததுதான் ஹைலைட்.

dot.jpg பிற்காலத்தில் மகசேசே விருதை பெற்றிருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் லஷ்மணுக்கு ஓவியம் வரைவதற்கான திறமை போதாது என, பம்பாயின் ஜெ.ஜெ ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிராகரித்ததாம். அதனால், தத்துவத்தின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. மைசூர் மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் காலத்தில்தான் மக்கள் கூடும் பார்க், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் என சென்று, கண்களில் படும் காட்சிகளை மணிக்கணக்கில் ஓவியங்களாகத் தீட்டி பயிற்சி எடுத்தார். சிறுசிறு பத்திரிகைகளில் ஓவியம் வரையும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவரது அண்ணன் ஆர்.கே.நாராயணும், தன் ஆங்கில நாவல்களுக்கு ஓவியம் வரையும் வாய்ப்புகளை இவருக்குக் கொடுத்தார்.

dot.jpgபட்டப் படிப்பை முடித்துவிட்டு, இந்துஸ்தான் டைம்ஸில் வேலைக்குச் சேரும் முடிவோடுp11d.jpgடெல்லி சென்றார் லஷ்மண். 'இத்தனை இளம் வயதில் கார்ட்டூனிஸ்ட் ஆக முடியாது’ என அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மும்பையின் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையின் கதவுகளைத் தட்டி வேலை கேட்க... இவரது திறமையைக் கண்டுகொண்ட அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், 'இதுதான் உன் ஸீட்... போய் உட்கார்ந்துகொள்’ என ஒரு ஸீட்டைக் காட்டினார். அவர் காட்டிய ஸீட்டுக்குப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் யார் தெரியுமா? பால் தாக்கரே.

சிறிது காலத்திலேயே லஷ்மணுக்கும் பத்திரிகை நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒருநாள் திடீரென வேலையை உதறிவிட்டு வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அன்று பஸ் ஸ்ட்ரைக் என்பதால்... வெகுதூரம் போக முடியவில்லை. அதனால் எதிரில் இருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் உள்ளே சென்று வேலை கேட்டார். டைம்ஸோடு இப்படி ஆரம்பித்த பந்தம், அரை நூற்றாண்டு தாண்டி செழித்து வளர்ந்தது.

dot.jpgஎந்தச் சூழ்நிலையிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிபடுவதை அனுமதிக்கவே மாட்டார். பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் இந்தியா எங்கும் கலவரங்களைப் பற்றவைக்க, வட இந்தியாவில் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போக்கு வாடிக்கையானது. அதைக் கண்டிக்கும் விதமாக ல‌ஷ்மண் ஒரு கார்ட்டூன் வரைந்தார். அதில் சிலர் ரயில்கள், கார்கள் போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்திக்கொண்டிருக்க, ஒருவன் இரு சக்கர வாகனம் ஒன்றைக் கொளுத்தவே திணறிக்கொண்டிருப்பான். அவனிடம், 'என்னடா ராம பக்தன்னு சொல்ற. இதைக்கூட உன்னால் கொளுத்த முடியலையா?’ எனச் சலித்துக்கொள்வார்கள் சகாக்கள். இந்த கார்ட்டூனுக்கு இந்து அமைப்புகளிடம் கடும் ஆட்சேபம் கிளம்பியது. மன்னிப்புக் கேட்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை லஷ்மண். அந்த கார்ட்டூனுக்காக வழக்கை எதிர்கொண்டவர் நீதிமன்றம் சென்றபோது, எதிர்தரப்பு வழக்குரைஞரே லஷ்மணிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார். அந்த வழக்குப் பின்னர் நீர்த்துப்போனது!  

dot.jpgலஷ்மணுக்கு, காகங்களை வரைய மிகவும் பிடிக்கும். 'காகங்களைப் போன்ற புத்திசாலிப் பறவைகளே இல்லை’ என வியந்து பேசுவார். 2003-ம் ஆண்டில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த லஷ்மண், என்றும் தன் ரசிகர்களைவிட்டுப் பிரிய மாட்டார். காகங்களும், காக்காய்ப் பிடிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை இவரின் கேலிச்சித்திரங்கள் மக்களின் மனதில் நிழலாடிக்கொண்டுதான் இருக்கும்!

14732220_1265435560181898_45677884769351

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.