Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

14462731_1136669289715097_41323945429072

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அம்பாட்டி ராயுடுவின் பிறந்தநாள்
Happy Birthday Ambati Rayudu

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

நடிகை.. நாயகி.. மனுஷி! #சில்க் ஸ்மிதா

silk%20.jpg

 

பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, கடும் நெருக்கடியை பிரதமர் இந்திரா காந்தி, சந்தித்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் கையில்  ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. புத்தகத்தில் இருந்து தலையை எடுத்த இந்திரா காந்தி “Who is this ‘Silk’!?” என பக்கத்தில் உள்ளவரிடம் குறுநகையுடன் கேட்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால் அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி,  நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என பெயர் மாற்றப்பட்டது.

உதிரி உதிரியாய் வந்த கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் சில்க்  ஸ்மிதா ஒரு  மின் மினி பூச்சி. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க்  ஸ்மிதா. பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' சில்க் ஸ்மிதாவை மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக காட்டியது. அசோக்குமாரின் 'அன்று பெய்த மழை' பன்முகத் திறமை கொண்ட நடிகையாக்கியது. சில்க்  ஸ்மிதாவின் நடனத்திறமைக்கு விளக்கமேத் தேவையில்லை.

1980களில் ஸ்மிதா இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். ரஜினி, கமல் போன்றவர்கள் கூட படத்தில் ஸ்மிதாவுக்கு கேரக்டர் இருக்கிறதா? என்று கேட்பார்களாம். சில சமயங்களில் அவரது கால்ஷீட்டிற்கு முன்னணி கதாநாயகர்களே காத்திருந்தது உண்டு. தயாரிப்பாளர்களோ கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும் முன்  ஸ்மிதாவிடம் கால்ஷீட் கிடைக்குமா? என்று பார்த்து விட்டுதான் தயாரிப்பு பணியையே தொடங்குவார்கள்.

புகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம்  பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக  ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.

செனனை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்த சில்க் ஸ்மிதா, தெருவில் வரும் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது, 'ஸ்கூலுக்கு போங்கடா ஒழுங்கா..!' என்றெல்லாம் அறிவுரை கூறுவாராம்.தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சில்க் ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் கூட, உள்ளேயிருந்து அடுத்த நிமிடம் பந்து வெளியே வீசப்பட்டு விடுமாம். அதுமட்டுமல்ல, தான் சம்பாதித்த பணத்தை நல்ல காரியங்களுக்கும் சில்க் ஸ்மிதா செலவழித்து வந்துள்ளார். சில்க்கின் சினிமா முகம் தாண்டியும் அவரின் இன்னொரு முகம் அறிந்த பிரபலங்கள் அதை பற்றி,  முன்பு விகடனிலும் பகிர்ந்திருந்தனர்.

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி இன்னும் பல சூழ்நிலைகள் அவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த  தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது. '' தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்'' என சக நடிகைகள் கண்ணீர் விட்டனர். 

கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின்  வாழ்க்கையை மையப்படுத்தி “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா  கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் சக்கைப் போடு போட்டது.

அபார நடனத்திறமையாலும் , கண்களின் வசீகரத்தாலும்  குணச்சித்திர வேடங்களாலும்  தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல்,  தென்னகத் திரைப்பட உலகையே சில்க் ஸ்மிதா பல ஆண்டு காலம் கட்டிப் போட்டிருந்தார்.

சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் ஒட்டப்படும் போஸ்டர்கள் வழியாக  அந்த வசீகர கண்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டுதான்  இருக்கின்றன.

vikatan

Link to comment
Share on other sites

சென்னையில் ரஜினியை சந்தித்தார் தோனி!

 

18445_thumb.jpg

 

கிரிக்கெட் வீரர் தோனி தனது வாழ்க்கை பற்றிய ’எம்.எஸ்.தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்துள்ளார். திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி முடிந்ததும், நடிகர் ரஜினியை சந்தித்தார் அவர். தோனி, சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராம். ரஜினியை சந்திக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசையாம்! தோனி கலந்துகொண்ட விழாவில், அப்படத்தில் தோனியாக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விழாவை தொகுத்து வழங்கினார். நடிகை ஜோதிகா அவரது குழந்தைகள் தியா, தேவுடன் கலந்துகொண்டார்.

vikatan

 

 

With rajni

Link to comment
Share on other sites

14463290_1136669089715117_50800975139670

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கய் விட்டலின் பிறந்தநாள்.
Happy Birthday Guy Whittall

 
Link to comment
Share on other sites

தேவையற்ற பொருட்களும் கல்விக்கு உதவும்- இந்திராணி பாட்டியின் சேவை!

indrani.jpg 

 

சில பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, 'வேஸ்ட்'... எனக் குப்பையில் நாம் எறிந்துவிடுவோம். அவை சென்னையைச் சேர்ந்த இந்திராணி பாட்டியின் கையில் கிடைத்தால் வித்தியாசமான கலை பொருட்களாக மாறிவிடும். 76 வயதிலும் தன் கைப்பட செய்த கலைபொருட்களை நவராத்திரிக்கு சில வாரங்களுக்கு முன்பாக வீட்டிலேயே ஸ்டால் அமைத்து விற்பனை செய்துவருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆண்டுக்கு ஓர் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார் எனும் தகவல் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா!

                                                                      indra.jpg

 

"எனக்கு 16 வயசுல கல்யாணம் ஆச்சு. அப்போலிருந்து என்  இருந்து இப்போ வரைக்கும் வருஷம் தவறாம நவராத்திரிக்கு கொலு வெச்சுட்டு இருக்கேன். எனக்கு விதவிதமான கலைப்பொருட்களை செய்வதில் ஆர்வம் அதிகம். 1969-ல் காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளின்போது அவரை நினைவுபடுத்துற பொம்மைகள், புகைப்படங்களைக் கொண்டு கொலு வெச்சேன். அப்போதில் இருந்து ஒவ்வொரு வருஷமும் வித்தியாசமான முறையில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடுவேன். அப்படித்தான் நாலு வருஷத்துக்கு முன்பு, தேவையில்லைனு குப்பையில எறியுற கப், மூடி, பிளாஸ்டிக், பேப்பர் பொருட்களிலிருந்து கொலு வைக்கவும், கலைபொருட்களைச் செஞ்சு விற்பனை செய்யவும் முடிவெடுத்தேன். அதன்படி என் வீட்டுல வேஸ்டாகும் பொருட்கள், கடைவீதிக்கு போறப்போ கிடைக்கிற பொருட்கள், தெரிஞ்சவங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க கொடுக்கிற பொருட்கள்ல இருந்து கலைபொருட்களைச் செய்றேன். நிறைய பேர் அவங்க வேஸ்ட் பொருட்களைக் குறைஞ்ச விலைக்கு எனக்கு கொடுக்குறாங்க.

                                                              indran.jpg

 

நவராத்திரிக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சேமிச்ச பொருட்களிலிருந்து சின்னதும், பெரியதுமான்னு என் கற்பனைக்கு, விருப்பத்துக்கு ஏற்ப கலைப்பொருட்கள், கடவுள் உருவங்கள், தோரணங்கள், பேனா ஸ்டாண்ட், கொசு விரட்டும் திரவ பாட்டில்களில் விநாயகர் சிலை என  பயனுள்ள பல பொருட்களைச் செய்வேன். இதுக்காக தினமும் ரெண்டு மணிநேரத்தை ஒதுக்குவேன். நவராத்திரிக்கு சில வாரங்களுக்கு முன்னாடியே, பூஜைக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பிச்சுடுவாங்க. அதன்படி நானும் இன்னையில இருந்து என் வீட்டுலயே ஸ்டால்ஸ் போட்டு 5 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரைக்கும் நான் செய்த பொருட்களை விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். குறிப்பா பொருட்களை வாங்குறவங்க கொடுக்கிற பணத்தை என் கையில வாங்கமாட்டேன். துணியால் மூடப்பட்ட ஒரு உண்டியல்ல கஸ்டமர் கையாலயே பணத்தைப் போடச்சொல்லிடுவேன். சேல்ஸ், நவராத்திரி முடிஞ்ச பிறகுதான் அந்த உண்டியலை திறப்பேன். கிடைச்ச மொத்த பணத்தையும், எதாவது ஒரு ஸ்கூல் அல்லது காலேஜ் பொண்ணைத் தேர்வுசெஞ்சு கொடுத்து உதவுவேன். அப்புறமா மறுபடியும் வேஸ்ட் பொருட்களை கலெக்ட் செய்ய அரம்பிச்சுடுவேன்.

முதல் வருஷம் கிடைச்ச 20,000 ரூபாயை அப்போ பி.பி.ஏ., படிச்சுட்டு இருந்த ஹேமமாலினிக்கும், அடுத்த வருஷம் கிடைச்ச 18,000 ரூபாயை, பிளஸ் 1 படிச்சுட்டு இருந்த திவ்யாவுக்கும், போன வருஷம் கிடைச்ச 30,000 ரூபாயை பிளஸ் 2 படிச்சுட்டு இருந்த ஜெயசூர்யாவுக்கும் கொடுத்தேன்" எனப் புன்னகை முகத்தோடு சொல்லும் இந்திராணி பாட்டி சைக்கிள், நீச்சல் பயிற்சி இரண்டிலும் திறமைசாளி. இவ்விரண்டு பயிற்சியையும் தவறாமல் தினமும் செய்து வருகிறார். 

                                                                   indrannii.jpg

 

வயசாகிடுச்சேன்னு சும்மாவே உட்கார்ந்து கதைப் பேசுறதுல எனக்கு விருப்பம் இல்லை. என் மனசும், உடம்பும் ஒத்துழைக்கிற வரைக்கும் என்னோட சொந்த உழைப்பில் கிடைக்கும் பணத்தை, வருஷத்து ஒருத்தர் படிப்பிற்கு கொடுத்து உதவி செய்யணும்னு ஆசை" என மெய்சிலிர்க்க வைக்கிறார், இந்திராணி பாட்டி.

கல்விக்கு உதவும் பாட்டிக்கு... கிரேட் சல்யூட்.

vikatan

Link to comment
Share on other sites

14359102_1136668353048524_52876838938674

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், சிறந்த துடுப்பாட்ட வீரர் அலிஸ்டர் கம்பெல்லின் பிறந்தநாள்.
Happy Birthday Alistair Campbell

 
Link to comment
Share on other sites

14449884_1136667603048599_62865530789704

ஹிந்தியின் பிரபல பாடகர்,மொழி கடந்து இசையின் மூலமாக பல ரசிகர்களை வென்றுள்ள குமார் சானுவுக்கு இன்று பிறந்த நாள்.
Happy Birthday Singer Kumar Sanu

 

14359082_1136666706382022_27157866871524

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மொயின் கானின் பிறந்தநாள்.

1992இல் பாகிஸ்தானிய அணி உலகக்கிண்ணத்தை வென்றபோது இவரது பங்கும் அளப்பரியது.

Happy Birthday Moin Khan

Link to comment
Share on other sites

காதல், கல்யாணம், காலேஜ்ல நமக்கு ஏன் இப்படிலாம் நடக்கல? #சினிமா vs ரியாலிட்டி

சில சினிமாக் காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது கண்கள் விரியும் அளவிற்கு கலர்ஃபுல்லாக, நெஞ்சை நக்கும் அளவிற்கு நெகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் படம் முடிந்தபின் யோசித்துப் பார்த்தால் 'இதெல்லாம் நிஜத்தில் நமக்கு நடக்கவே இல்லையே! ஒருவேளை நம்ம வாழ்க்கையில் மட்டும்தான் நடக்கலியோ?' என்றெல்லாம் சிறுமூளை அழுது புலம்பும். அப்படியான சில 'ஏன் எனக்கு இது நடக்கலை?' டைப் சீன்கள் இவை.

காலேஜ் ஃபேர்வெல்:

சினிமாவில்:

april%20maathaththil.jpg

மொத்த காலேஜும் மெழுகுவத்தி ஏந்திக்கொண்டு இசையமைப்பாளர்கள் போல இடம் வலமாக கையசைக்கும். ஸ்லாம் புக்கில் நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களை எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவார்கள். வருஷாவருஷம் இதே மாசம், இதே தேதி உலகத்தில் எங்கே இருந்தாலும் நாம திரும்ப மீட் பண்ணணும்' எனக் கும்பலாய் சத்தியம் வாங்குவார்கள். அதன்படியே சந்திக்கவும் செய்வார்கள். மிஸ் யூ, லவ் யூ என்றெல்லாம் கண்களில் நீர் வழியப் பிரிவார்கள். 

ரியாலிட்டி:

கடைசி நாள் உட்கார்ந்து 'அந்தக் காலத்துல' என ஒப்பாரி வைக்கும் சீனே கிடையாது. ஸ்லாம் புக்கிற்கு எல்லாம் வேலையே வைக்காமல் ஆளுக்கு ஒரு வாட்ஸ் அப் குரூப் தொடங்கி படுத்துவார்கள். காலேஜ் டூரே கும்பலாக போக முடியாத கிளாஸில் கெட் டு கெதர் மட்டும் நடந்துவிடுமா என்ன? நோ சான்ஸ். மிஸ் யூ எல்லாம் சொன்னால், 'ஏன் இத்தனை நாள் என் உயிரை வாங்குனது பத்தாதா?' என்றுதான் மனசாட்சி கேட்கும். 'ஆளை விடுங்க சாமி! இனிமே இவனுங்க கண்ணுலயே படக் கூடாது பைரவா' என தலை தெறிக்க ஓடத்தான் தோன்றும்.

கல்யாண கலாட்டா:

சினிமாவில்:

mangalyam.jpg

எந்தப் பக்கம் திரும்பினாலும் தேவதைகள் கண்ணில் படுவார்கள். விசாரித்தால் முக்கால்வாசி நம் முறைப்பெண்களாக இருக்கும். திருமணத்திற்கு முந்தைய நாள் மொத்த மண்டபமும் சேர்ந்து 'மாங்கல்யம் தந்துனானேனா' என டான்ஸ் ஆடுவார்கள். ஆண்களும் பெண்களும் இரு தரப்பாகப் பிரிந்து பாட்டுக்கு பாட்டு விளையாடுவார்கள். சொந்தக்காரர்கள் பாசமழை பொழிவார்கள். ஒரே ஜாலிலோ ஜிம்கானாதான்.

ரியாலிட்டி:

டார் டவுசர் போட்டுத் தேடினாலும் ஒன்று இரண்டு தேவதைகள்தான் கண்ணில்படும். அதுவும் கரெக்டாகத் தங்கச்சி முறையாக இருக்கும். முந்தைய நாள் இரவில் முரட்டு மீசை பங்காளியோ, முறைப்பான முறைமாமாவோ கண்டிப்பாக பஞ்சாயத்து செய்வார்கள். 'அப்புறம் தம்பி, இன்னும் சும்மாதான் இருக்கீங்க போல' என சபையில் ஒயிட்ரைஸை அவிழ்ப்பார்கள் சொந்தக்காரர்கள். ஹேங் ஓவரில் முக்கியத் தலைகள் எல்லாம் முக்காடு போட்டு உட்கார்ந்திருக்கும். அப்போ, டான்ஸ், பாட்டுக்கு பாட்டு நடக்கிற கல்யாணம் எல்லாம் எங்கதான்யா நடக்குது?

ஒயிட் காலர் வேலை:

சினிமாவில்:

java%20sunderesan.jpg

கேம்பஸில் செலெக்ட் ஆனதும், ஜம்மென ஐ.டி நகரத்தில் ஒரு வேலை. கை நிறைய சம்பளம், சலிக்க சலிக்க பார்ட்டி, ஆறே மாதங்களில் கார், இரண்டே ஆண்டுகளில் சொந்த வீடு, அடுத்த ஆண்டே கல்யாணம் என ஜாவா சுந்தரேசன் ரேஞ்சுக்கு அசுர வேகத்தில் செட்டில் ஆகலாம். அடுத்தபடியாக, ஃபாரீன் சென்று க்ரீன் கார்ட் ஹோல்டர் ஆகி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட வேண்டியதுதான்.

ரியாலிட்டி

கேம்பஸில் ப்ளேஸ் ஆவதே குதிரைக்கொம்பு. அப்படியே பிளேஸ் ஆனாலும் கால் லெட்டர் வரும்வரை அடியில் இண்டக்‌ஷன் ஸ்டவ்வைப் பற்ற வைத்தது போல உட்கார்ந்திருக்க வேண்டும். வேலை கிடைத்த கொஞ்ச நாளில் பைக், அதற்கு ஈ.எம்.ஐ கட்டி முடிப்பதற்குள் கார், அதற்கு ஈ.எம்.ஐ கட்டி முடிப்பதற்குள் கல்யாணம். அந்தச் செலவை சமாளிப்பதற்குள் சொந்த வீடு. அப்புறம் எங்க ஃபாரீன் போறது? இருக்கும் காலம் முழுக்க ஈ.எம்.ஐ கட்டியே பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்.

லவ் அண்ட் ரொமான்ஸ்:

சினிமாவில்:

kaadhalukku%20mariyathai.jpg

பார்த்தவுடன் மனசுக்குள் ட்ரோன் பறப்பது, விரட்டிச் சென்று விருப்பத்தை சொல்வது - இதெல்லாம் சகஜம். அளவில்லா காதல், சின்னச் சின்ன ஊடல் என வருடம் முழுவதும் வளர்த்து பின்னர் வீட்டில் சொன்னால் சின்னத் தயக்கத்தோடு சம்மதிப்பார்கள். பிறகு என்ன? இரண்டு வீட்டு ஆட்களும் கூடி அட்சதை தூவி வாழ்த்தி நம்மைச் சேர்த்து வைக்க... ஹேப்பிலி மேரீட்!

ரியாலிட்டி:

பார்த்தவுடன் உள்ளே ஏதாவது பறந்தாலும், 'இதெல்லாம் வேண்டாம்' என பயப் பல்லி கத்தும். அதைத்தாண்டி ஓ.கே ஆனாலும் வழிய வழிய காதல் எல்லா வாய்ப்பே இல்லை. கசக்கிப் பிழியும் வேலை பளுவிற்கு நடுவில் நடக்கும் கொஞ்சநேர ரொமான்ஸிலும் சண்டை வந்து சட்டையைக் கிழிக்கும். இதை எல்லாம் ஓவர்டேக் செய்து கல்யாணப் பேச்சு வந்தாலும், வசதி, சாதி, மதம் என ஏகப்பட்ட சிக்கல்கள். அப்புறம் எங்கே ஹேப்பிலி மேர்ரீட் ஸ்டேட்டஸ் தட்ட? பிரச்னையே வராத லவ் எல்லாம் எந்தக் கிரகத்துலய்யா நடக்குது? 

vikatan

Link to comment
Share on other sites

தெரிந்ததை அனைவருக்கும் ஊட்டுக!
 
 

article_1473045463-lnl;oi%5B;.jpgபெற்றுக்கொண்ட வெற்றி, புகழுக்கு அழகு சேர்ப்பது செருக்கற்று இருப்பதாகும். அவ்வண்ணமே வெற்றிப் பாதைக்குப் பிறரையும் அழைத்துச் செல்வதற்கான வழிகளை மேற்கொள்வதுமாகும்.

எங்களது அனுபவங்களினூடான அனுகூலங்களை நாங்கள் மட்டுமே பெற எண்ணுவது கூட சுயநலமானதுதான்.

நல்ல திறமைசாலிகள்கூட செல்லும், திசை தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். தகுந்த ஆலோசனைகளை இத்தகையோருக்குச் சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கான இறைவனின் கொடுப்பனவு பன்மடங்காகிப் பெருகிவிடும்.

காணும் எவரேயாயினும் அவர்கள் நம்மவர்கள் என எண்ணும் மனப்பான்மையை உருவாக்கினால் பூமி புதுப்பொலிவுடன் எம்மை நோக்கும். தன்னலமற்ற ஆசான்போல் தெரிந்ததை அனைவருக்கும் ஊட்டுக!

Link to comment
Share on other sites

ஜெரோலாமோ கார்டானோ

 

 
ACardano_Sagesse1_3021316f.jpg
 

இத்தாலி அறிவியலாளர்

இத்தாலியின் அறிவியலாளரும் முதன்முதலாக இயற்கணிதத் தீர்வு வழங்கியவருமான ஜெரோலாமோ கார்டானோ (Gerolamo Cardano) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள பாவியா என்ற நகரில் பிறந்தார் (1501). தந்தை, வழக் கறிஞர். தன்னைப் போலவே மகனும் சட்டம் பயில வேண்டும் என்று அப்பா வற்புறுத்தினார். ஆனால், மகனுக்கோ அறிவியலி லும் தத்துவத்திலும் ஆர்வம் இருந்தது.

*அப்பாவின் பேச்சை மீறி படுவா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவத்தில் 1526-ல் பட்டம் பெற்றார். எதையும் வெளிப்படையாகப் பேசுவார். தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்காத இவருக்கு நண்பர்களும் அதிகம் இல்லை.

*சில காலம் தனிப்பட்ட முறையில் மருத்துவராகப் பணியாற்றினார். போதிய வருமானம் ஈட்ட முடியதாததால், சிறுசிறு கல்வி நிலையங்களில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். சூதாட்டம், சதுரங்கம் ஆட்டங்களில், கணித அறிவால் சாதுர்யமாக ஆடி வெற்றிபெற்று பணம் ஈட்டியுள்ளார்.

*அசாதாரண அறிவுக்கூர்மை கொண்ட இவர், அற்புதமான மருத்துவ சிகிச்சை அளித்து புகழ் பெற்றார். இவரது அறிவுத் திறனைப் புரிந்து கொண்ட செல்வாக்கு பெற்ற சிலரின் உதவியால் ‘காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ்’ கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது ‘தி பிராக்டிஸ் ஆஃப் அரித்மாடிக்’ மற்றும் ‘சிம்பிள் மென்சுரேஷன்’ என்ற இவரது இரண்டு நூல்கள் வெளியாகின.

*மருத்துவம், தத்துவம், ஜோதிடம், மெய்யியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதினார். டென்மார்க், ஸ்காட்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ் முதலிய நாடுகளுக்கு அழைக்கப்பட்டார். அதன் பிறகு பவியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் ஈருறுப்பு கெழு (binomial coefficients), ஈருறுப்புத் தேற்றம் (binomial theorem) மற்றும் நிகழ்தகவு ஆகியவற்றுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்த முக்கியமானவர்களுள் ஒருவர்.

*நிகழ்தகவு குறித்த ‘லீபர் டெ லூடோ அலியே’ என்ற நூலை 1560-ல் எழுதினார். இது இவரது மரணத்துக்குப் பிறகு வெளியானது. இதுதான் நிகழ்தகவு குறித்து சீராக எழுதப்பட்ட முதல் நூல். ‘இம்மார்டலிடேட்’, ‘ஆர்டிஸ் மாக்னியே’, ‘சிவே டி ரெகுலிஸ் அல்ஜீபிராசிஸ்’, ‘லிப்ரிஸ் ப்ரோபிரிஸ்’, ‘நெரோனிஸ் என்கோமியம்’, ‘மெத்தோடோ மெடின்டி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

*இயற்கணிதத்தைச் சார்ந்த முப்படியச் சமன்பாட்டுக்கு முதன் முதலாக இயற்கணிதத் தீர்வை வழங்கினார். அறிவியலிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இயற்கை அறிவியலின் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

*கார்டியன் கிரில்லே என்ற கிறிப்டோகிராஃபிக் சாதனம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்தும் மேம்படுத்தியும் உள்ளார்.

*இயற்கணிதம், கன அளவு மற்றும் நான்கு எண் சமன்பாடுகள் (quartic equations) உள்ளிட்ட பல்வேறு கணிதத் தீர்வுகளுக்கு இவர் அடித்தளம் இட்டிருந்தது, இவர் மரணமடைந்த பல ஆண்டு களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. முதன்முதலாகப் பூஜ்யத்துக் கும் குறைவான எதிர்மறை எண்களை முறையாகப்பயன்படுத்தியவர்.

*கணிதம், மருத்துவம், உயிரியல், இயற்பியல், வேதியியல், ஜோதிடம் வானியல் ஆகிய களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கிய மேதை ஜெரோலாமோ கார்டானோ 1576-ம் ஆண்டு 75-வது வயதில் மறைந்தார்.

tamil.thehind

Link to comment
Share on other sites

14441042_1136669876381705_19097049440987

தமிழ்த் திரையுலகின் மிகப் புகழ்பெற்ற நடிகையாகவும் நடன தாரகையாகவும் விளங்கிய 'நாட்டியப் பேரொளி' பத்மினியின் நினைவு தினம்

நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சினார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். 17 வயதில் திரையுலகில் புகுந்தார். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் தோன்றிய 250 படங்களுக்கு மேல் நடித்தார். தமிழில் முதன் முதலில் வேதாள உலகம் படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த “மணமகள்” என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார்.

இவரின் கலைச்சேவைக்கு சான்றுகள்:

1. சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)
2. கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)
3. சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது – மாஸ்கோ இளைஞர் விழா 1957.
4. பிலிம் ஃபேர் விருது (1985).
5. சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.

Link to comment
Share on other sites

மாடித்தோட்டம்... செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்...

                         DSC_2349.JPG

மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை..!

*தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து  ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது.

* மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்ய வேண்டும்.

* தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.

*காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் நடலாம்.
 
*தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம். தொட்டி, பாலிதின் பை, நேரடியாக  நிலத்தில்... என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

                        DSC_2360.JPG

*நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு விதைப்பு செய்யதால், நல்ல விளைச்சல் நிச்சயம்.

*ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டதிற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை      திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும்.

* நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சண கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து    நன்கு கிளறிவிட வேண்டும்.

* பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.

* கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.

                    DSC_2368.JPG

* வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.

* பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும்.

* பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர்  நீரில் கரைத்து மாலை வேளையில்        செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.

                   DSC_2355.JPG

மாடித்தோட்டம் செய்யக்கூடாதவை..!

* கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்
* காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
* பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
* பைகளை தயார் செய்த உடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது.
* பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.

                          DSC_2382.JPG
* ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது.
* ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
* மழை காலங்களில் நீர் ஊற்றக் கூடாது.

vikatan

Link to comment
Share on other sites

14368757_1136670243048335_66608852029172

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரும் சகலதுறை நட்சத்திரமுமான மொஹிந்தர் அமர்நாத்தின் பிறந்த தினம்.
Happy Birthday Mohinder Amarnath

 
Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

* இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது. தயாரிப்பாளர்கள்தான் இதில் ரொம்ப ஸ்பெஷல். 50 ஆயிரம் குஜராத் விவசாயிகள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் இரண்டு ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த வர்கீஸ், சென்னையில் பொறியியல் படிப்பையும் அமெரிக்காவில் எம்.இ படிப்பையும்  முடித்தவர். உலகிலேயே அதிக பால் உற்பத்திசெய்யும் நாடாக இந்தியாவை மாற்றியவர். பால் பொருட்களை விற்க அமுல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவரால் பலன் அடைந்த விவசாயிகள், குஜராத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். பாலிவுட்டில்... இன்னொரு பயோபிக் ரெடி!


p37a.jpg

p37b.jpg

பாரா ஒலிம்பிக்கில் வீரர்களைத் தாண்டி வியக்கவைத்திருக்கிறார் ஜா மையா. பார்வைத் திறனற்றவரான ஜா மையா, ஒரு புகைப்படக் கலைஞர்! இவர் எடுத்த அத்தனை படங்களும் உலக அளவில் வைரல் ஹிட். வழக்கமான போட்டோ கிராஃபர்கள்போல் இவர் கேமராவைப் பயன்படுத்துவது இல்லை. ஸ்மார்ட்போன்கள்தான் இவரின் கேமரா. செவிகள்தான் இவருக்குக் கண்கள். `எல்லோரும் கண்களால் பார்ப்பதை நான் மனதால் பார்க்கிறேன். அதனால்தான் என் புகைப்படங்கள் மற்றவர்களின் மனதைத் தொடுகின்றன’ எனக் கூறும் ஜா மையா, அசைவுகளின் ஓசைகளைவைத்தே படங்களை க்ளிக்குகிறார். ஜமாய்ங்க ஜா மையா!


p37c.jpg

தனுஷைப் போல மலையாள நடிகர் ப்ருத்விராஜும் இயக்குநராகி இருக்கிறார். இவருடைய முதல் பட ஹீரோ மோகன்லால். மல்லுவுட்டே மகிழ்ச்சியில் இருக்கிறது. `லூஸிஃபர்’ எனப் படத்துக்குப் பெயரும் சூட்டி ஆன்லைனில் அறிவிப்பும் செய்துவிட்டார் ப்ருத்விராஜ். மறைந்த இயக்குநர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்த இந்தப் படம், கேரள டான் ஒருவரின் உண்மைக் கதையாம். பாலிவுட் நடிகை கொங்கனா சென்ஷர்மாவும் இயக்குநர் ஆகியிருக்குகிறார். `எ டெத் இன் குன்ச்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒரு பீரியட் ஃபிலிம். கல்கி கோச்சலின்தான் ஹீரோயின். நடிகர், இயக்குநர் ஆகும் காலம்!


p37d.jpg

மூன்றரை ஆண்டுகால சாம்பியன் செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்திருக்கிறார் ஏஞ்சலிக் கெர்பர். 28 வயதான கெர்பர், ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு நம்பர் 1 வீராங்கனையாகியிருக்கும் ஜெர்மெனிப் பெண். மூன்று வயதிலேயே டென்னிஸ் பழக ஆரம்பித்தவர் 2003-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச்சுற்றில் இடம்பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். காரணம், அப்போது அவர் உலகின் 92-வது ரேங்க் ப்ளேயர். இப்போது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நம்பர் 1 இடத்தை எட்டியிருக்கிறார். `செரீனாவை எல்லாம் அசைக்கவே முடியாது என்றார்கள். ஆனால், கடுமையான உழைப்பும் பயிற்சியும் எப்பேர்பட்ட வரையும் வீழ்த்தும்' என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். ஸ்டெப் பை ஸ்டெப்பா... இன்னொரு ஸ்டெஃபி!


p37e.jpg

டிசம்பர்-12, யுவராஜ் சிங் திருமணம். தனது 35-வது பிறந்த தினத்தையே திருமண நாளாகவும் மாற்றியிருக்கிறார் யுவராஜ். மாடலும் நடிகையுமான ஹஸல் கீச்சைத் திருமணம்செய்யவிருக்கும் யுவராஜ் சிங், `யுவிகேன்' என்கிற பெயரில் ஃபேஷன் லேபிளையும் தொடங்கியிருக்கிறார். `கிரிக்கெட்டின் இறுதிக் காலத்தில் இருக்கிறேன். அதனால்தான் இப்போது புதிய தொழிலைத் தொடங்குகிறேன். என் ஃபேஷன் டிசைன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்’ என ஹேப்பி எமோஜியாக வலம்வருகிறார் யுவராஜ் சிங். செழிக்கட்டும்... செகண்ட் இன்னிங்ஸ்!


p37f.jpg

*   `மறுபடியும் முதல்ல இருந்தா?' என இன்ப அதிர்ச்சியில் இருக்கிறது `50 ஷேட்ஸ் ஆஃப் கிரே' பட ரசிகர் பட்டாளம். காரணம், சமீபத்தில் வெளியாகிய `50 ஷேட்ஸ் டார்க்கர்' படத்தின் டீஸர் ரசிகர்களை மெர்சலாக்கியிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்துவிட்டது. கூடவே, அடுத்த பாகமான `50 ஷேட்ஸ் ஃபிரீடு' அறிவிப்பு வெளியானது. ஆனால், படத்தின் நாயகன் ஜேமி டோரன் `ஆளை விடுங்கப்பா, என்னால இனி முடியாது' எனப் பேட்டி கொடுத்து ட்ரையாலஜியின் மூன்றாவது பாகத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். மிஸ்யூ ஜேமி!

vikatan

Link to comment
Share on other sites

Bild zeigt 1 Person , Text
 

1907ல் நடந்த ஒரு சம்பவம், இந்திய சோஷலிசக் கூட்டம் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தது. திடிரென்று ஒரு பெண்மணி கையில் நம் நாட்டு தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து அந்த இடத்தில் இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். முதல் தடவையாக ஒரு பெண் கலர் புடவைக் கட்டி இந்தியக் கலாசாரத்துடன் கூட்டத்திற்கு நடுவே முன்னேறி, "பாருங்கள் எல்லோரும், இதுதான் இந்தியத் தேசியக் கொடி, நமது சுதந்திரக் கொடி, இது பல இளைஞர்களின் தியாகத்தாலும் அவர்கள் சிந்திய இரத்த்தாலும் இசையப் பட்டிருக்கிறது, இதை வணங்குங்கள், இந்தக் கொடிக்கு கை கொடுங்கள்" என்று வீரத்துடன் வெற்றி நடை நடந்து பெருமையாக அதை நாட்டினார். மேடம் காமாவின் பிறந்த தினம் செப்டம்பர் 24

Link to comment
Share on other sites

களவாணிக் கூட்டம்!

 

பேங்க் ராபரி போன்ற heist (கொள்ளை) ஜானர் உலக சினிமாக்களைப் பார்க்கும்போது `வாவ்டா' என வாய் பிளக்கத் தோன்றும். ஆனால் நிஜத்தில் சினிமாக்களை எல்லாம் மிஞ்சும் வகையில் சில குழுக்கள் இருக்கின்றன. வித்தியாசமான முறைகளில் கோடிக்கணக்கில் பணம் திருடி போலீஸுக்கே தண்ணி காட்டும் அவர்களைப் பற்றிய மினி டேட்டாபேஸ் இது...

p90.jpg

வைல்ட் பஞ்ச் (Wild Bunch):

19-ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவைப் பதறவைத்த கேங் இது. புட்ச் கேஸிடி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கேங்கில் மொத்தம் 19 பேர். வெள்ளைத் துணியாலான முகமூடி அணிந்துகொண்டு ஓடும் ரயில்களில் கொள்ளை அடிப்பது இவர்களின் ஸ்டைல். 1899-ல் ஓடும் ரயிலில் 60 ஆயிரம் டாலர்கள் கொள்ளை அடித்ததுதான் இவர்களின் முதல் மிஷன். அதன்பின் வரிசையாக எக்கச்சக்க ரயில்களில் கை வைத்தார்கள். குறுக்கே வரும் போலீஸ்காரர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டுவிடுவார்கள். இனி யாராலும் நம்மைத் தொட முடியாது என்ற தைரியம் வரவே நெவாடா மாகாண தேசிய வங்கியைக் கொள்ளையடித்தார்கள். இதுதான் அவர்களின் கடைசிக் கொள்ளை. அதன்பின் ஒருவர் பின் ஒருவராக போலீஸில் சிக்க, கேங் சிதைந்து காணாமலே போனது.


p90a.jpg

தி டில்லிங்கர் கேங் (The Dillinger Gang):

ஜான் டில்லிங்கர் என்பவரால் 1933-ல் தொடங்கப்பட்ட குழு இது. இந்த கேங்கின் துணைத்தலைவர் அமெரிக்காவையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த குழந்தை மூஞ்சி நெல்சன். (சத்தியமா பேரே அதுதான் ஜி) 1933-ல் தொடங்கி அடுத்த ஓர் ஆண்டிற்குள் 13 வங்கிகளில் கொள்ளையடித்தார்கள். மிலிட்டரி ஸ்டைல் ஆக்‌ஷன்தான் இவர்களின் வழிமுறை. நோட்டம் பார்க்க ஓர் ஆள், லாபியில் ஓர் ஆள், பணப்பெட்டகத்தில் ஓர் ஆள், வெளியே காரில் ரெடியாக ஒரு டிரைவர் எனப் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு போலீஸுக்குத் தண்ணி காட்டினார்கள். அந்த நாட்களில் அதி நவீனத் துப்பாக்கிகள், கவசங்கள் கொண்டு கொள்ளையடித்த ஒரே கேங் இதுதான். இவர்களின் ஸ்டைலைத் தழுவி ஹாலிவுட்டில் எக்கச்சக்கப் படங்கள் வெளியாகின. 1934-ல் கேங் லீடர் டில்லிங்கர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட, கேங் சிதைந்து சிதறியது.


p90b.jpg

தி ஸ்டாப்வாட்ச் கேங்:

செம ஸ்டைலிஷ் கேங் இது. பேடி மிட்சல், லியோனல் ரைட், ஸ்டீபன் ரெய்ட் என மொத்தமே மூன்று பேர்தான் இந்தக் குழுவில். மூவருமே கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மொத்தம் 100 வங்கிகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். 1980-ல் பேங்க் ஆஃப் அமெரிக்காவை முற்றுகையிட்டு 2,83,000 டாலர்களை ஸ்வாஹா செய்ததுதான் இவர்களின் மிகப்பெரிய கொள்ளை. ஸ்டாப் வாட்ச் என இந்தக் குழுவிற்குப் பெயர் வர ஒரு சுவாரஸ்யக் காரணம் உண்டு. கொள்ளையடிக்கச் செல்லும் முன், ஸ்டாப் வாட்ச்சை ஆன் செய்துகொள்வார்கள். அதில் 90 விநாடிகள் ஆவதற்குள் வங்கியைக் கொள்ளையடித்துக் கிளம்பிவிடுவார்கள். இவர்களின் இந்த எக்ஸ்பிரஸ் வேகத்தால் போலீஸார் மூச்சுத்திணறினாலும் பின்னர் சுதாரித்து மூவரையும் கம்பி எண்ண வைத்துவிட்டார்கள்.


p90v.jpg

ட்ரெஞ்ச்கோட் ராப்பர்ஸ்:

ரே லீவிஸ் பெளமேன், வில்லியம் ஆர்தர் ஆகிய இரண்டே பேர்தான் இந்தக் குழுவில். ரொம்பவும் சிம்பிளான வழிமுறை இவர்களுடையது. தடாலென வங்கிகளில் நுழைவது, ஊழியர்களை மிரட்டிக் கட்டிப்போட்டுவிட்டு சரசரவென பணத்தை அள்ளிபோட்டுக்கொண்டு பறந்துவிடுவது என பிளான் பண்ணிக் கொள்ளையடித்தார்கள். 1982-ல் தொடங்கி 1998 வரை கிட்டத்தட்ட 28 வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்களின் ஆல்டைம் பெஸ்ட் 1997-ல் 4.4 மில்லியன் டாலர்கள் கொள்ளையடித்ததுதான். ஒருமுறை காரில் வேகமாகச் சென்றதாக போலீஸ் ஆர்தரை தற்செயலாகப் பிடிக்க, விசாரணையில்தான் மாட்டியது சுறாமீன் எனத் தெரிய வந்தது. இப்போது இருவரும் சிறையில்.


p90c.jpg

பிங்க் பேந்தர்ஸ்:

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கொள்ளைக்காரர்கள் என்ற பட்டத்தை ஏகபோகமாக இவர்களுக்கு வழங்குகிறது இன்டர்போல். யூகோஸ்லேவியாவைச் சேர்ந்த இந்தக் குழுவில் நூற்றுக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நகைகளைக் குறிவைத்துக் கொள்ளையடிப்பது இவர்களின் ஸ்டைல். அதற்காக நம்பமுடியாத ஸ்டன்ட்களை எல்லாம் மேற்கொள்வார்கள். ஒருமுறை துபாயில் விலை உயர்ந்த கடிகாரங்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி வளாகத்தை எட்டு ஆடி கார்களால் மோதித் துளைத்து உள்ளே வந்து எட்டு மில்லியன் யூரோ மதிப்பிலான கடிகாரங்களை அள்ளிக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். இப்படி ஜப்பான், ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து எனப் பறந்து பறந்து வேட்டையாடுவதால் இன்டர்போலுக்கு இவர்கள் மிகப்பெரிய தலைவலியானார்கள். கஷ்டப்பட்டுப் பிடித்தாலும் ஜெயிலை உடைத்துக்கொண்டு தப்பிவிடுகிறார்கள். 1993-ல் தொடங்கி இன்றுவரை தண்ணி காட்டும் இவர்களைப் பிடித்தே தீருவது எனக் கங்கணம் கட்டித் திரிகிறது இன்டர்போல்.
 

vikatan

Link to comment
Share on other sites

பயணம் செய்ய வேண்டிய விமானத்தை தவறவிட்டதால் ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி
 

சீனாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தாம் பயணம் செய்­ய­வி­ருந்த விமா­னத்தை தவ­ற­விட்­டதால், அவ்­வி­மானம் புறப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக விமான ஓடு­பா­தையில் அமர்ந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யுள்­ளனர். 

 

19465_24.jpgபெய்ஜிங் சர்­வ­தேச விமான நில­யைத்தில்  அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

 

ஷாங்காய் நக­ருக்குச் செல்லும் பிளைட் சி.ஏ.1519 விமா­னத்தில் இத் தம்­ப­தி­யினர் பயணம் செய்­ய­வி­ருந்­தனர். 

 

காலை 9.30 மணிக்கு இவ்­வி­மானம் புறப்­ப­ட­வி­ருந்­தது. ஆனால், பய­ணி­க­ளுக்­கான இறுதி அழைப்பின் பின்­னரும் இவர்கள் விமா­னத்தில் ஏற­வில்லை. 

 

தாம் விமா­னத்தை தவ­ற­விட்­டதை உணர்ந்த இத்­தம்­ப­தி­யினர் விமான ஓடு­பா­தைக்குள் புகுந்து விமா­னத்தின் அடிப்­ப­கு­தியில் அமர்ந்து கொண்டு, விமானம் புறப்­ப­டு­வதை தடுத்­தனர். விமா­னத்தில் ஏற வேண்­டிய  நேரம் தமக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என அவர்கள் கூறினர்.

 

பின்னர் இத்­தம்­ப­தி­யி­னரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி விமானம் 20 நிமிட தாதமதத்தின் பின் புறப்பட்டுச் சென்றது.

 

19465_25.jpg

 
 
.metronews.lk
Link to comment
Share on other sites

14441208_1136670469714979_16585563134927

பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமும் பின்னாளில் நடிகராக மாறியவருமான மொஷின் கானின் பிறந்தநாள்
Happy Birthday Moshin Khan

 
Link to comment
Share on other sites

செப். 24 - இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென்ற தினம்

கிரிக்கெட் ஆரம்பத்தில் நாள் கணக்கில் ஆடும் டெஸ்ட் போட்டிகளாகவும், பின்னர் அதில் முடிவு கிடைப்பதில்லை  என்பதால் ஒருநாள் போட்டிகளாகவும், அதும் 60 ஓவர் போட்டிகள் என்ற வடிவிலும், பின்னர் 50 ஓவர் என்ற வடிவிலும்  இருந்தது. இந்நிலையில் தான் டி20 எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதில்  எந்த அணிக்கும் அவ்வளவாக அனுபவம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.அப்போதுதான் முதல் உலகக்  கோப்பையை தென்னாப்பிரிக்காவில் நடத்தியது ஐசிசி.

24worldcup_2.jpg


இதில கலந்து கொண்ட அனைத்து அணிகளுமே கத்துக்குட்டி அணி தான். அதிலும் இந்தியாவின் நிலைதான் பரிதாபம்  பயிற்சியாளர் இல்லாத உலக்கோப்பை தொடர், அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சச்சின், டிராவிட், கங்குலி டி20  வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதில்லை என்ற முடிவால் அணிக்கு கேப்டனாக தோனி எனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அறிமுகம் செய்யப்பட்டார். அணியின் அதிகபட்ச அனுபவம் என்பது சேவக், யுவராஜையே நம்பி இருந்தது.

லீக் ஆட்டத்தில் ஹாலந்துடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஒருவேளை அடுத்த ஆட்டத்தில்  பாகிஸ்தானிடம் தோற்றால் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணிக்கு காத்திருந்தது பாகிஸ்தான்  ஆட்டம். எதிர்பாராத விதமாக ஆட்டம் டை ஆக பவுல்டு அவுட் முறையில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. பின்னர்  சூப்பர் 6 போட்டியில் நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் மட்டும் தோல்வியை சந்தித்த இந்தியா, வழக்கம் போல் ராசியே  இல்லாத தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அரையிறுதிலும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் வந்தது. இதற்கிடையில் யுவராஜின் 6 பந்துகளில் 6 சிக்சர் மாயம், கம்பீர்-சேவாக்கின் 135 ரன் பாட்னர்ஷிப் என  சாதனைகளை குவித்தது இந்தியா.

24worldcup_1.jpg



இறுதி போட்டியில் சந்தித்தது தனது பரம வைரியான பாகிஸ்தானைதான்! இந்த போட்டியில் வென்றால் முதல்  உலககோப்பை நமக்குதான் என்ற வெறியில் இரண்டு அணிகளும் போட்டி போட்டன. டாஸ் வென்ற இந்தியா  பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது சேவக் காயம் காரணமாக விளையாடாத்தால் யூசுப் பதானுக்கு அது அறிமுகப்போட்டியாக  அமைந்தது. முதல் போட்டியை சிக்சருடன் துவக்கிய யூசுப் பதான், சிறிது நேரத்தில் ஆட்டமிழக்க கம்பீர் மட்டும் ஒரு  முனையில் நிலைத்து ஆட, மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 5  விக்கெட்களை இழந்து 157 ரன்கள் குவித்தது.

24worldcup_3.jpg



அடுத்து ஆடவந்த பாகிஸ்தானுக்கு இது எளிய இலக்கு என்றாலும் சரியான துவக்கமில்லாததும், முன்னனி வீரர்கள்  ஆட்டமிழந்ததும் பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது. அதோடு இந்திய வீரர்களின் பந்து வீச்சு துல்லியமாக  இருந்தது. ஆனால் மிஸ்பா-உல்-ஹக்கின ஆட்டத்தால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 13  ரன்கள் தேவை ஒரு விக்கெட் தான் உள்ளது என்ற நிலை இந்தியாவின் முன்னனி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனிடம்  பந்து செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிதாக ஜோஹிந்தர் ஷர்மாவிடம் பந்தை அளித்தார் தோனி. முதல்  பந்தில் வைடு, அந்த பந்தில் ரன் இல்லை என்ற சூழல், இரண்டாம் பந்தில் சிக்சர் ஒருவேளை தோனி தவறான முடிவை  எடுத்துவிட்டாரோ என்ற நிலை, மூன்றாவது பந்தை மிஸ்பா விலகி அடிக்க முயற்சித்து ஷார்ட் ஃபைன் லெக்கில் இருந்த  ஸ்ரீஷாந்திடம் செல்ல லாவகமான கேட்ச் இந்தியாவை வெற்றி பெற வைத்தது. புதிய பந்துவீச்சாளரை  அறிமுகப்படுத்தியது உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்றே பந்துகளில் இந்த முடிவு சிறந்த முடிவாக மாறியது.  அதேசமயத்தில் தவறான ஷாட்டால் உலககோப்பையை தவறவிட்டதும் தவறான முடிவுகளில் ஒன்றாக பதிவானது.

எந்த அனுபவமும் இல்லாத இந்தியா கிரிக்கெட் அணி ,முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற தினம்  இன்று செப்டம்பர் 24.

vikatan

Link to comment
Share on other sites

காரணம் ஆயிரம் 01: இரும்பு காந்தமாகும் மாயம்!

 

 
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

இரும்பை ஈர்க்கும் காந்தத்தைப் பார்த்தால் சிறுவர்களுக்கு எப்போதுமே குஷிதான். காந்தத்தை இரும்போடு ஒட்டவைத்து விளையாடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு. இன்னும் சில சிறுவர்கள், இரும்புத் துகள்களைத் தாளில் கொட்டி, தாளின் பின்னால் காந்தத்தை வைத்து, திருடன்-போலீஸ் விளையாட்டுகூட விளையாடுவார்கள். சரி, காந்தத்தை எப்படித் தயாரிக்கிறார்கள்?

காந்தமாக்கப்பட வேண்டிய இரும்புத் துண்டுக்குள் இரும்புத் துகள்கள் தாறுமாறாக இறைந்து கிடக்கும். அதாவது, இரும்புத் துகள்கள் நவக்கிரகம் போல வெவ்வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும். இரும்புத் துகள்கள் இப்படித் தாறுமாறாகக் கிடப்பதால் இரும்பு சட்டக் காந்தத்துக்குரிய வடதுருவக் கவர்ச்சி, தென்துருவக் கவர்ச்சி ஆகியவற்றை இழந்து, இரண்டுக்கும் நடுவில் (நியூட்ரல் ஸ்டேஜ்) இருக்கும்.

காந்தம் செய்யலாம்

இந்த இரும்புத் துகள்களை ஒரே திசையை நோக்கி இருக்கும்படி செய்துவிட்டால் போதும், அந்த இரும்புத் துண்டு காந்தாமாகிவிடும். சரி, தாறுமாறாகக் கிடக்கும் இரும்புத் துகள்களை ஒரே திசையை நோக்கி இருக்கும்படி எப்படிச் செய்வது?

# ஒரு கையில் காந்தமாக்கப்பட வேண்டிய இரும்புத் துண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

# இன்னொரு கையில் ஒரு காந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புத் துண்டின் ஒரு முனையில் காந்தத்தை வைத்து மறுமுனைக்கு அழுத்தி நகர்த்துங்கள் (சின்னக் குழந்தைகள் கைகளால் தரைமீது பொம்மை கார் ஓட்டி விளையாடுவது போல நகர்த்த வேண்டும்).

# இப்படிச் செய்யும்போது காந்தம் நகரும் திசையை நோக்கி இரும்புத்துகள்கள் திரும்பும். பின்னர் ஒரே திசையை அடைந்து இரும்புத் துண்டினைக் காந்தமாக்கிவிடும். இப்படி உருவாக்கப்படும் காந்தங்களுக்குச் செயற்கை காந்தம் என்று பெயர். இந்தக் காந்தங்கள் பலவீனமாகவே இருக்கும்.

காந்த மலைகள் உண்டா?

இப்படிப்பட்ட பலவீனமான காந்தங்கள் இயற்கையாகவே பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன. உலகில் பல ரகசிய இடங்களில் காந்த மலைகள் இருப்பதாகவும், அந்தக் காந்த மலைகள் தங்கள் மேலே செல்லும் இரும்புப் பொருட்களை ஈர்த்துவிடுவதாகவும் கதைகள் உண்டு. உண்மையில் காந்த மலைகள் உலகில் எங்குமே இல்லை.

மலைகளில் இரும்புப் படிவுகள் அதிகமாக இருக்கும் சில பாறைகள், காந்தத் தன்மையோடு காணப்படுகின்றன. மேலே சொன்ன செயற்கை காந்தம் மாதிரி இந்தக் காந்த மலைகளும் மிகவும் பலவீன மானவைதான். இந்த மலைகளால் விமானத்தை எல்லாம் வீழ்த்திவிட முடியாது. ஆனால் “காந்த மலைகள்” என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு நிறைய கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.

காந்த விசை

இன்று பெரியபெரிய தொழிற்சாலைகளில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதற்காக மிகவும் பலமான காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் நம் அன்றாட வாழ்வில் பல இயந்திரங்களைக் காந்த சக்தியில் இருந்து பாதுகாக்கவும் வேண்டியிருக்கிறது. அதனால், காந்த விசைகளால் தாக்கப்படாத சில பொருட்களைக் கொண்டே இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

இதில் இன்னொரு (காந்த ) ஆச்சரியம் என்னவென்றால் (முள்ளை முள்ளால் எடுப்பது போல?) எந்த இரும்பு விரைவில் காந்தமாகிவிடுகிறதோ, அதே இரும்புதான் காந்த விசையைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. அப்படியா என்று ஆச்சரியப்படாதீர்கள். இரும்பு வளையத்துக்குள் இருக்கும் கடிகார முட்கள், இரும்பு வளையத்துக்கு வெளியே இருக்கும் காந்தத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் !

ஓர் ஆச்சரியம்

காந்தமாக்கப்படாத இரும்புத் துண்டில் இரும்புத்துகள்கள் இறைந்து கிடக்கின்றன என்று சொன்னோம் அல்லவா? இப்படிப்பட்ட சில இரும்புத்துண்டில் உள்ள இரும்புத் துகள்களுக்கு இயற்கையாகவேகூடக் காந்தப்பண்புகளும் இருக்கும்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

கோலி... கோழிக் கறி... டயட் குரு!

VIR_2.jpg

விராட் கோலி கிரிகெட்டில் எந்தளவுக்கு தன் பங்களிப்பை தருகிறரோ அதே அளவுக்கு ஃபிட்னெஸ் பிரியரும் கூட. அவரது இந்த ஃபிட்னெஸ், ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம்…… எப்படி அவரது பேட்டிங் திறனும் பெர்சனல் மனோ திடமும் கிரிக்கெட் ஆர்வலர்களை ஈர்த்ததோ அப்படி!!!! தற்போது அவரது ஃபிட்னெஸ் சிலரை ஈர்க்கவும் செய்து உள்ளது. இந்த ஃபிட்னெஸ் விராட் பத்தின சில விஷயங்களை இதோ!!!

ஃபிட்னெஸ் பிரியர் கோலி:

உண்மையில் முன்பெல்லாம் விராட் மிகப்பெரிய சிக்கன் பிரியர். சிறு வயது சிக்கன் ப்ரியர் இப்போதெலாம் அப்படி இல்லை. உணவு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ப்ரோட்டின் சத்துகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். கொழுப்பு சத்து அதிகம் இல்லாத அசைவ உணவுகள், வேகவைத்த காய்கறி வகைகள் ஆகியவைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.

ஃபிட்னெஸ் தான் கோலி ஃபர்ஸ்ட்:

கோலியை பார்த்து உடனிருக்கும் வீரர்களும் கூட டயட் ப்ரியர்கள் ஆகியிருக்கிறார்களாம்.  நியூசிலாந்து டெஸ்ட் தொடர்  நடந்து வரும் நிலையில், பி.சி.சி.ஐ. தங்களுக்கு அங்கு தேவையானவை குறித்து முன்பே அனுப்ப வேண்டும் அவ்வகையில் அவர்கள் அனுப்பிய மெயிலில், முக்கியமாக கூறியிருப்பது டயட் ஃபெசிலிடி தேவைகள் பத்தித்தானாம். இதுகுறித்து பி.சி.சி.ஐ.யின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆபிசர் ஒருவர் கூறும்போது, இப்பொழுதெல்லாம் வீரர்கள் யாவரும் சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக இருப்பதாக கூறுகிறார். கோலியை இது குறித்து கூறும் போது,  “ஒரு கிரிக்கெட்டருக்கு ஃபிட்னெஸ் தான் ரொம்ப முக்கியம். ஏனெனில், சில நேரங்களில் ஒரு நாள் முழுவதுமோ அல்லது இரண்டு மூன்று நாட்களோ தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் எங்களுக்கு உருவாகும். அப்போழுதெல்லாம் இந்த டயட் தான் எங்கள் ஸ்டேமினாவிற்கு பூஸ்ட்டாக இருந்து கஷ்டமான நிலையிலும் ஆட்டத்தில் கவனமாக இருந்து புத்தியை ஒருமுகப்படுத்த உதவியாக இருக்கிறது” என்கிறார் தடாலடியாக.

VIR_1.jpg‘என் ரோல் மாடல் கோலி’

அணியின் ஓப்பனர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் தனக்கு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல் எல்லாமே கோலி தான் என்கிறார். மேலும் கூறும்போது, “எங்களை போன்ற அணியின் புது வீரர்களுக்கு கோலி தான் தி பெஸ்ட் எடுத்துக்காட்டு. யோசித்து பாருங்கள்…… நீங்கள் பார்த்து பார்த்து வியக்கும் ஒரு மனிதர்!!! உங்களின் இன்ஸ்பிரேஷன்…… உங்கள் பக்கத்தில் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்!!!! கோலி எங்களோடு ட்ரெஸ்ஸிங்க் ரூமில் இருக்கும் போது அதே அளவு உற்சாகம் தான் எங்களுக்கும்!!!!!. கோலியின் கட்டுப்பாடுகள், ஒழுக்கம், வேலை நேர்த்தி, கிரிக்கெட்டில் அவர் காண்பிக்கும் பெர்ஃபெக்ஷ்ன், இவை எல்லாத்துக்கும் மேலாக அவரது ஃபிட்னஸ் சீக்ரெட்………….இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் பார்த்து நாங்கள் ஆச்சர்யப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். பெர்சனலாக என்னுடைய ரோல் மாடல் அவர்தான்” என்கிறார் சந்தோஷம் திளைக்க.

கோலி எப்பவுமே ‘நோ காம்பரமைஸ்’:

ராகுலின் இந்த ஆச்சர்ய ஸ்பீச்சை கேட்ட பி.சி.சி.ஐ. கூறும் போது, “ராகுலின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை. கோலி அவ்வளவு பெர்ஃபக்ஷனிஸ்ட்.  அசைவ பிரியர்களுக்கு கிரில்ட் சிக்கன், சைவ பிரியர்களுக்கு பன்னீர்……………என அரேஞ்மன்ட்ஸ் செய்து தருவது சாத்தியக் கூறு. ஆனால், கோலி விஷயத்தில், ப்ளென்டர் வேண்டும் என்பார். ப்ளென்டர் என்பது கலப்பான் ஆகும். இன்றைய சூழலினில் ரெடிமேடாக பாக்கெட்டிலேயே ஜூஸ் வகைகள் கிடைக்கிறது. ஆனால், அதிலெல்லாம் சர்க்கரை அளவும் கார்போஹைட்ரேட் அளவும் அதிகமாக இருக்கும் என்று கூறி, அவாய்ட் செய்து விடுவார் கோலி. ஜூஸில் கூட ஃபெர்ஷ் ஜூஸ், ஹெல்தி ஜூஸ் தான் வேண்டுமென்பதில் கோஹ்லி ரொம்ப ஸ்டிரிக்ட். நோ காம்பரமைஸ்”

ஃபிட்னெஸ் தந்த பூஸ்ட்:

கோலியைப் பார்த்து வளரும் இன்றைய இளம் வீரர்கள் ஒரு விஷயத்தில் சரியாக இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டின் தலை சிறந்த டீமாக இருக்க வேண்டுமென முற்பட்டுவிட்டார்கள். அதற்காக நாட்டின் சுவையான உணவுவகைகளையும் தியாகம் செய்து விட்டனர். கண்முன்னே ஒரு வீரர் ஃபிட்னெஸ்ஸிற்காக எதையும் எவரையும் (உலகின் தலை சிறந்த வீரரானாலும்) தூக்கி எறியும் தைரியம் பெற்றவராக உள்ளார் (கோலியே தான்!!!). அவரிடம் இருந்து இதை கூடவா கற்காமல் இருப்பார்கள்!!!! ஃபிட்னெஸ் தந்த உற்சாகத்தில் நம் வீரர்களை உடலாலும் ஆற்றலாலும் செம ஃபிட் தான். ஆக, இப்போது கோலி ஃபிட்னெஸ் டீச்சரும் கூட….. எங்கள் சார்பில் இந்த குருவிற்கு வாழ்த்துக்கள்!!!

vikatan

Link to comment
Share on other sites

அலையோடு விளையாடு! 01 - கொஞ்சம் பயம், மிச்சமெல்லாம் சாகசம்

 

 
surf_3012493f.jpg
 

கடலை ஒட்டி அமைந்த என் கல்லூரி (சென்னை மாநிலக் கல்லூரி) வாழ்க்கையின்போது கடலையும், வரிசை மாறாமல் காற்றைக் கிழித்துச் செல்லும் பறவைகளையும் நேரத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ரசித்து லயித்துப் போயிருக்கிறேன். சென்னையைச் சுற்றி உள்ள குன்றுகளின் உச்சிக்குச் சென்று ஊரை நோட்டம் விடுவது, தமிழகத்தின் மற்ற ஊர் மலைகளைத் தேடிச் செல்வது, அடர்ந்த காடுகளில் வசிக்கும் நம் பூர்வகுடிகளை நட்பாக்கிக்கொண்டு காட்டுயிர்களையும் இயற்கையையும் அவை பிறந்த இடத்திலேயே ரசிப்பது, புல்லட்டைத் தட்டிவிட்டு மலை மலையாக ஏறுவது என இயற்கையில் புரண்டு எழுவது என்பது இனம் புரியாத, எளிதில் திருப்தியடைந்து விடாத அளவில்லா மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவது. இதில் மூழ்கித் திளைப்பது தனிச் சுகம்.

என் அலுவலகம் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டபோது வடஇந்தியாவில் உள்ள ஆறுகள், மலைகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். காலம்காலமாக நம் மண்ணின் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்வதையே ஒரே வேலையாக வைத்திருக்கும் கங்கை, கோதாவரி போன்ற பேராறுகளின் பிரம்மாண்டத்தைப் பார்த்து விலகி நிற்காமல் துணிச்சலுடன் காலை வைக்கும்போது, அந்த நதிகள் நம்மை ஏந்தித் தாலாட்டுவது அலாதி அனுபவம். இப்படி என்னுடைய பல தேடல்கள், சொல்லில் முழுதாக வடிக்க முடியாத ஆச்சரிய அனுபவங்களைத் தந்துள்ளன. அவற்றில் சில என்னைப் போலவே, உங்களையும் சேர்த்து ஆச்சரியப்படுத்தக் கூடியவை.

பிடித்து இழுத்த இயற்கை

என் சிறு வயதில் இருந்தே சாகச விளையாட்டுகள் என்னை ஆச்சரியப்படுத்தி வந்துள்ளன. காடுகள், மலைகள், ஆறுகள் என்று ஒவ்வொரு முறையும் இயற்கை தன் புது ரகசியம் ஒன்றை எனக்குச் சொன்னபோதும், அவற்றின் மீதான ஈர்ப்பு என் மனதில் பெரிதாக வளர்ந்துகொண்டே வந்தது. ஒரு நிலையில், அது தண்ணீரை மையமிட்டுச் சுழல ஆரம்பித்தது.

உள்நாட்டில் நீர்நிலைகள், ஆறுகள், உலகின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றைக் கொண்ட நம் நாட்டில் இன்றைக்கு 10 சதவீதம் பேருக்கு மட்டுமே நீச்சல் தெரியும் என்ற சேதியை நிச்சயம் நம்ப முடியாது. ஆனால், அதுதான் உண்மை. அதிலும் வெறும் 2 சதவீதம் பேருக்கே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் நீந்தத் தெரியும். இது நிச்சயமாகப் பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல.

நான், நீச்சல் தெரியாத இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லையென்றாலும், நீச்சலைவிடவும் என்னைப் பிடித்து இழுத்தது அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டுதான். அலைச்சறுக்கு விளையாட்டின் மீது ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும், எல்லை தெரியாமல் பூமியைச் சூழ்ந்து கிடக்கும் ஆழி, என் மனதில் சற்றே அச்சத்தையும் ஏற்படுத்தியது.

கண்டேன் ‘பேட்லிங்’கை

அலைச்சறுக்கு விளையாட்டை முறைப்படி கற்பதற்கு, 2014-ம் ஆண்டில் 'Bay of Life' என்ற அமைப்பில் சேர்ந்தேன். பயிற்சியின்போது ஒரு நாள். கடல் சற்று அதிகமாகவே சீற்றம் காட்டியது. அலைச்சறுக்குப் பயிற்சியாளரும் நண்பருமான சௌகத் ஜமால், அப்போது வேறொரு வழியைக் கண்டார். புதிதாக அலைச்சறுக்கு கற்றுக்கொள்பவர்களை, சீறிக்கொண்டிருக்கும் கடலில் இறக்கிவிட்டு என்ன செய்வது? அருகில் இருந்த அலையே இல்லாத நீர்நிலைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டார். புதிய அலைச்சறுக்குப் பாணியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அது SUP எனப்படும் Stand up paddling அல்லது Paddle Boarding. இதைச் சுருக்கமாக 'பேட்லிங்' என்று வைத்துக்கொள்வோம். சௌகத் ஜமால் அறிமுகப்படுத்திய பேட்லிங், என் மனதில் மிகப் பெரிய ரசவாதத்தை நிகழ்த்தியது. அதன் பிறகு நீர்வழிப் பாதைகளின் வழியாக, ஒரு நாய்க்குட்டியைப் போல பேட்லிங் என்னை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. பேட்லிங் பயிற்சியில் தீவிரமாக இறங்கினேன். தண்ணீரின் மேலே மிதந்து செல்லும்போது கிடைத்த அனுபவம், பயத்தைத் தூக்கி கடாசிப் புதிய உலகத்துக்குள் என்னை அழைத்துப் போனது. அதன் பிறகு, அலையடிக்கும் கடலிலும் பேட்லிங் பயின்றேன்.

இழுத்துச் சென்ற ஆறு

என்னதான் சென்னையில் வளர்ந்தாலும், பெத்த மண்ணை மறந்திட முடியுமா? பெரிய கோயில் கம்பீரமாக நிற்கும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஒரு முறை போயிருந்தேன், பேட்லிங் பலகையுடன்தான். அந்த மண்ணைக் கொழிக்கச் செய்த காவிரியின் கிளை ஆறான புது ஆற்றின் (கல்லணைக் கால்வாய்) கரைப்பகுதி கான்கிரீட் போடப்பட்டு, ஐந்து-ஆறு அடி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

ஓடும் ஆற்று நீரில் இறங்கி, பேட்லிங் செய்ய ஆரம்பித்தேன். ஆற்று மேலடுக்கு நீரோட்டம் குறைவாக இருந்ததால், துடுப்பு போட்டேன். சுற்றிலும் மக்கள் வியப்புடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். புதிய இடம், புதிய அனுபவம்... மனதை ஒருமுகப்படுத்திப் பேடிலை செலுத்தினேன்.

பிறகு என் மகன், ஐந்து உறவினர்கள் ஒவ்வொருவராக பேட்லிங் பலகையில் ஏற்றி, அவர்களுக்கும் பேட்லிங் பயிற்சி கொடுத்தேன். பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்று நீரில் இறங்கினேன். இறங்கும்போது, பெரிதாக எந்தப் பிரச்சினையும் இல்லை. மீண்டும் பலகையில் ஏறும்போதுதான் சிக்கல் முளைத்தது. எவ்வளவு முயன்றும் பேட்லிங் பலகையின் மீது என்னால் ஏற முடியவில்லை. ஆற்று நீரின் கீழடுக்கு நீரோட்டம் என்னை வேகமாக, அதன் போக்கில் பிடித்து இழுத்துக்கொண்டு போனது. வெறும் ஐந்து-ஆறு அடி தண்ணியே இவ்வளவு வேகமாக ஒரு ஆளை இழுத்துச் சென்றுவிட முடியும் என்பது அப்போதுதான் புரிந்தது.

நிலைமையைப் புரிந்துகொண்டாலும், யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. நம்பிக்கையைச் சற்றும் கைவிடாமல் மீண்டும் மீண்டும் பலகையில் ஏற நான் முயற்சிக்க, ஆறு என்னைப் பிடித்து இழுக்க - இந்த 'நீர்க் கபடி விளையாட்டு' 300 மீட்டர் தொலைவுக்கு என்னை இழுத்துச் சென்றது, உடல் சோர்ந்து களைத்தது. ஒரு வழியாக ஒரு புதர் என் கைக்கு அருகே வர, அதை இறுகப் பிடித்துக் கரையைத் தொட்டுவிட்டேன்.

எடுத்துக்கொண்ட உறுதி

கரையேறிய அடுத்த நிமிடம், என் மனதுக்குள் இந்தப் பயணத்தின் காட்சிகள் 'பிளாஷ் பேக்'காக வேகமாக ஓடி மறைந்தன. இனிமேல் பேட்லிங் போகும்போது, தண்ணீரில் இறங்கித் துடுப்பு போட ஆரம்பிப்பதற்கு முன்பாக மிதவையங்கியை (Life Jacket) கட்டாயம் அணிந்துகொண்டாக வேண்டும். அது மட்டுமில்லாமல் பேட்லிங் பலகையையும் காலையும் இணைக்கும் இணைப்புக் கயிற்றை (Leash) அணிய மறக்கக் கூடாது என்று எனக்கே நானே ஒரு உத்தரவைப் போட்டுக்கொண்டேன். அன்று முதல் எந்தக் காலத்திலும் இந்த உத்தரவை நான் மீறுவதில்லை, என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடமும் இந்த விதிமுறையைப் பின்பற்றாமல் இருப்பதில்லை.

இந்த விதிமுறைகள் எந்த சாகச விளையாட்டுக்கும் அத்தியாவசியம். உரிய விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கும்போதுதான், சாகசத்தின் மூலம் பெறக்கூடிய பரவச உணர்வு உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் பரவிச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இயற்கையை நேசித்து, அதோடு ஒட்டிவாழ்ந்தால், எந்த ஒரு செயலில் சிக்கல் வந்தாலும், நிச்சயம் அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற தரிசனம் அன்றுதான் கிடைத்தது. தஞ்சை புது ஆறு அனுபவம் மட்டுமல்ல, உலகின் வேறு பல மூலைகளிலும் இதே தரிசனத்தை நான் பெற்றிருக்கிறேன்.

(அடுத்த வாரம்: லிம்கா சாதனைப் புத்தகத்தில்)

tamil.thehindu.

Link to comment
Share on other sites

செப்டம்பர் 24 - சர்வதேச முயல் தினம்!

 

 
International_Rabbit_Day

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  24-ஆம் தேதி சர்வதேச முயல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளானது நாம் வீட்டில் வளர்க்கப்பபடும் மற்றும் காட்டு முயல்களின் பாதுகாப்பபு மற்றும் பராமரித்தல் குறித்த எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

சர்வதேச முயல் தினமானது 1998-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து செய்லபடும் 'முயல் தொண்டு' அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைப்பானது முயல்களின் மீட்டெடுப்பு, பராமரித்தல், அன்பு செலுத்துதல் மற்றும் அவற்றிற்கு எதிரான வேட்டை முதலிய கொடூரங்களை தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றை இலக்காய்  கொண்டு செயல்பட்டு வருகிறது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.