Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

p32.jpg

மும்பை மோகினி! 2016-ன் அட்டகாச தெலுங்கு அறிமுகம். நடிப்புப் பயிற்சியோ மாடலிங் தண்டாலோ எடுத்துக் கொண்டு டோலிவுட்டுக்கு வரவில்லை. அப்பா ஜிதின் லால்வானி இந்தி சீரியலில் பிஸி நடிகர் என்பதால் ரத்தத்திலேயே பலக்கிற்கு நடிப்பு கலந்திருக்கிறது. நண்பர் மூலம் `அப்பாயிதோ அம்மாயி' படத்தின் ஆடிஷன் வாய்ப்பு வர அப்பாவே ஹைதரபாத் கூட்டி வந்து `ஓகே' பண்ணி இருக்கிறார். நாக சௌர்யாவின்  நட்பு ஸ்க்ரீனையும் தாண்டித் தொட்டுத் தொடர்வதால் இப்போது ஒன்ஸ்மோர் அவருடன் நடிக்கிறார். மகேஷ்பாபுவோடு ஜோடி போடுவதும் ஜெனீலியாவின் இடத்தைக் கைப்பற்றுவதும் தான் அடுத்த ஐந்தாண்டு திட்டம்! ஜெய் பலக் பாலி!


சாண்டல்வுட் காருண்யா ராம்

p32a.jpg

`யார் இந்த முயல் குட்டி?' எனப் பாட்டுப்பாட வைக்கும் அழகுக்குட்டிச் செல்லம் பிறந்ததும் வளர்ந்ததும் ரோஸ்கார்டன் மைசூரு. மாடலிங் மங்கையை போன வருடத்திய ஹிட் `வஜ்ராக்யா' மூலம் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக்கி அழகு பார்த்திருக்கிறது கன்னட சினி உலகம். ஆனால், 5 வருடத்துக்கு முன்பே ரிச் கேர்ளாக சில படங்களில் தலைகாட்டி இருக்கிறாராம் பாவம்! `கிரகூறின கய்யாலிகலு' என்ற பெண்ணியம் பேசும் சினிமாவில் பெஸ்ட் கம்பேக் சொல்லி அதகளம் பன்ணி இருக்கிறார் காருண்யா. இளம் இயக்குநர்களின் சாய்ஸ் ரேஸில் காருண்யாவின் பெயர் கன்ஃபர்ம் லிஸ்ட்டில் இருக்கிறது. கோலிவுட் மேல காருண்யாவுக்கு கருணை இருக்கும்னு நம்புவோம்!


மல்லுவுட் ஷாமிலி

p32c.jpg

நம்ம பேபி ஷாமிலியேதான் பாஸ். சினிமா தாகம் கொண்ட இவரைப் பற்றி பயோ-டேட்டா தேவையா என்ன? `ஓயே!' படத்தின் மூலம் ஹீரோயின் என்ட்ரி கொடுத்தவருக்குச் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் குவியவில்லை. அதனால் தன் சொந்தபூமியான கேரள சினிமாவில் கால் பதித்து இருக்கிறார். இந்த ஆண்டு  `வல்லெம் தெட்டி புல்லெம் தெட்டி' என்ற படத்தின் மூலம் குஞ்சாக்கோ போபனுக்கு நாயகியானார். அக்காவைக் கொண்டாடிய தேசத்தில் ஏனோ தங்கச்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை. சீக்கிரமே `வீர சிவாஜி'யின் மூலம் தமிழுக்கு வரப்போகிறார். வா பேபிமா!

vikatan

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
எழுந்திருப்பதற்கு மறுத்தால், வாழ்க்கை வீழ்ந்துவிடும்
 
 

article_1472099055-gdhf.jpgஅதிகாலையில் படிக்க வேண்டும் என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு.

பிற ஒலி, ஓசைகள் எங்கள் மூளையில் பதிய நேரிட்டால் அது கல்வி கற்பதற்கு இடையூறாக அமையும்.

மேலும், ஒருவர் இரவு நேரத்தில் ஓய்வாக நித்திரை செய்து, அதிகாலையில் எழுந்திருக்கும்போது மூளை புத்துணர்ச்சியுடன் எதுவித சலனமும் இல்லாமல் இருக்கும்.

எனவே, புதிதாக எந்த விடயத்தினையும் படிக்கும்போது, அதனை அதிகாலையில் படித்தால் அது சிக்கென மூளையில் பதிவேற்றம் பெற்றுவிடும்.

ஏகாந்தமான சூழலில்த்தான் மேதைகள், ஞானிகள் பல விடயங்களைக் கண்டு உணர்ந்தார்கள்.

அதிகாலையில் எழுந்திருப்பது சிரமமாகச் சிலருக்கு இருக்கலாம். சோம்பலை விட்டொழித்து துயில் நீத்தால், காலக்கிரமத்தில் அதுவே நல்ல பழக்கமாகி விடும். கற்றலும் சிரமமின்றி நடந்தேறிவிடும்.

எழுந்திருப்பதற்கு மறுத்தால், வாழ்க்கை ஒழுங்கே வீழ்ந்துவிடும். எழுக விழிப்புடன்‚

Link to comment
Share on other sites

கின்னஸ்... சாதனைப் புத்தகம் உருவான கதை! 

                                        f2x0CG3.jpg

ஆகஸ்ட் 27. இது உண்மையில் சாதனையாளர்களின் தினம். ஒரே மூச்சில் 151 எரியும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பவராக இருக்கட்டும்; உலகமே வியந்து பார்க்கும் ஓட்டப்பந்தய வீரர் ஹுசேன் போல்ட்டாக இருக்கட்டும்; 17,000 பாடல்களுக்கு மேல் பாடி அசத்திய பி.சுசீலா அம்மாவாக இருக்கட்டும்... அத்தனைபேரும் கொண்டாடவேண்டிய நாள்.  ஏனென்றால், இந்த தினம்தான் அவர்களுக்கான அங்கீகாரத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியது. 1955-ம் ஆண்டு, இதே நாளில்தான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்துபவர்களின் திறமையை ஆவணப்படுத்தப் போகிற ஒரு புத்தகம் முதன்முதலில் வெளியானது. அந்தப் புத்தகம், `தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்.’ இந்தப் புத்தகம் வெளியானதற்குப் பின்னணியில் ஒரு போட்டி இருந்தது என்பதுதான் ஆச்சர்யத் தகவல். 

                                        GWR2016-Packshots-2016Spine-website_tcm2

அவர் பெயர் சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver). இங்கிலாந்துக்காரர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில், அவர்களின் காவல் பணியில் சேர்ந்து (1910) இந்தியாவில் பணியாற்றியவர். 1921-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திரும்பியவர், ஒரு இன்ஜினீயரிங் கம்பெனியில் வேலைபார்த்தார். பிறகு, கனடா அரசு அவருக்கு வேலை கொடுத்தது. அந்த நாட்டு துறைமுகங்களை மேற்பார்வை செய்யும் வேலை. கனடாவில் இருந்தபோது, ஏழு மாத காலம் நியூ பிரன்ஸ்விக் நகரத்தில் இருக்கும் செயின்ட் ஜான் துறைமுகத்தின் மறுகட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். துறைமுகத்தில் ஒரு பெரிய தீ விபத்து. அந்தப் பணியை விடவேண்டியதானது. பிறகு, வேறு ஒரு நிறுவனத்தில் வேலை, அரசுப்பணி என போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. 1946-ம் ஆண்டு, `ஆர்தர் கின்னஸ், சன் அண்ட் கோ’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானார். அது, ஒரு பியர் தயாரிக்கும் தொழிற்சாலை. 

ஒருநாள் அயர்லாந்தில் நடக்கும் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். அது, நம் ஊர் விருந்து மாதிரி அல்ல. ஆங்கிலத்தில் `ஷூட்டிங் பார்ட்டி' (Shooting Party) என்று சொல்வார்கள். ஒரு ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ மக்கள், கூட்டமாகக் கூடுவார்கள். துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும். எல்லோரும் தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். எது சிக்குகிறதோ அதைச் சுட்டுத் தள்ளுவார்கள். அன்றைக்கு ஸ்லேனி ஆற்றங்கரையில் ஷூட்டிங் பார்ட்டி. அங்கே ஒரு விவாதம். ஐரோப்பாவில் இருக்கும் பறவைகளில் வேகமானது எது... ‘கோல்டன் குளோவரா?’ (ஒருவகை ஆட்காட்டிக் குருவி) `கிரௌஸா?’ (சதுப்பு நிலத்தில் வாழும் ஒருவகைக் கோழி). விவாதத்தில் முடிவே கிடைக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது, இரு பறவைகளில் எது வேகமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; எந்தக் குறிப்புகளும் இல்லை; அது தொடர்பான ஒரு புத்தகம்கூட இல்லை. 

                                       20150821-5-bolt.jpg

அதன் பிறகு ஹ்யூக்-குக்கு இதுபோல எத்தனையோ சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அதிக நேரம் தூங்கியவர் யார்; நீண்ட நேரம் பாடியவர் யார்... இப்படி பல கேள்விகள். தன்னைப்போல பதில் கிடைக்காமல் பலரும் இதுபோன்ற கேள்விகளோடு தவிப்பார்கள் என்பதும் அவருக்குப் புரிந்தது. இது தொடர்பாக ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்கு விற்பனையாகுமே, புகழ் பெறுமே என்கிற எண்ணமும் தோன்றியது. அதற்கு உதவினார் ஒருவர், ஹியூக்கின் கின்னஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். 'கிறிஸ்டோபர் சாட்டாவே' என்பது அவர் பெயர். கிறிஸ்டோபர், தன்னுடைய நண்பர்களான நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வ்ரிட்டர் இருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர்கள், லண்டனில் நிகழ்வுகளைக் கண்டுபிடித்து தொகுக்கும் ஒரு ஏஜென்ஸி நிறுவனத்தை நடத்திவந்தார்கள். இவர்களின் கூட்டு முயற்சியால் 1955-ம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ம் தேதி, 198 பக்கங்கள் கொண்ட முதல் ‘கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ புத்தகம் வெளியானது. 

கின்னஸ் என்பது ஓர் உயரிய அங்கீகாரம். சாகசம் புரிபவர்களுக்கு கிடைக்கும் கௌரவம். அப்படிப்பட்ட முதல் கின்னஸ் புத்தகம் வெளியான இந்த நாளை நாமும் கொண்டாடுவோம்! 

vikatan

Link to comment
Share on other sites

14051572_1111959165519443_65111538111761

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக எப்போதும் கருதப்படும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான சேர்.டொனால்ட் ப்ரட்மனின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Sir Don Bradman

அனேக கிரிக்கெட் சாதனைகளை தன வசம் வைத்திருந்த கிரிக்கெட் பிதாமகர் சேர்.டொன்னின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரியான 99.94 என்பது என்றென்றும் அவர் புகழ் கூறும் ஒரு விடயமாக இருக்கப்போகின்றது.

 
Link to comment
Share on other sites

பாரிய முதலைகளுடன் மல்யுத்தம் நடத்தும் யுவதி
 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், பாரிய முத­லை­க­ளுடன் 'மல்­யுத்தம்' நடத்­து­வதை பொழுது போக்­காகக் கொண்­டுள்ளார்.

 

18830cro-1.jpg

 

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த கய்லா கார்வி எனும் 24 வய­தான இந்த யுவதி 5 வய­தி­லி­ருந்து முத­லை­க­ளுடன் விளை­யாடி வரு­கி­றாராம். இது­வரை 100 இற்கும் அதி­க­மான முத­லை­களை தான் பிடித்­துள்­ள­தாக அவர் கூறு­கிறார்.

 

இவரின் தந்தை கெவின் கார்­வியும் முத­லை­களைப் பிடிப்­பதை தொழி­லாகக் கொண்­டவர். கய்­லாவும் அவரின் தந்தை கெவினும் (53) இணைந்து முதலை பிடிப்­பது தொடர்­பாக பாட­சா­லை­யொன்­றையும் நடத்­து­கின்­றனர்.

 

18830cro-2.jpg

 

தனது காத­லா­ரான கிறிஸ் ஸ்டட்ஸ் (26) சகிதம், முத­லை­களைத் தேடி புளோ­ரிடா மாந­ிலத்தின் பல்­வேறு இடங்­க­ளுக்கும் கய்லா கார்வி பயணம் செய்­கிறார்.

 

12 அடி நீள­மான பாரிய முத­லைகளு டன் மல்­லு­க்கட்டும் கய்லா இது தொடர்­பாக கூறு­கையில், இவை எனக்கு அச்சமேற்படுத்தவில்லை அவை செல்லப் பிராணிகள் போன்றவை தான் என்கிறார்.

.metronews.lk
Link to comment
Share on other sites

நீங்கள் ஒரு நல்ல கணவரா?- 10PointCheck

Untitled.png

 "வேலை..குடும்பம்..குழந்தைன்னு நான் நல்லாதானே பாத்துக்கிறேன்.. அப்புறம் எங்க  மிஸ் ஆகுது”ன்னு யோசிக்கறீங்களா? அப்ப இந்த 10 பாயிண்ட்ஸ் உங்களுக்குதான். புது ஜோடியில இருந்து சில்வர் ஜூப்லி கொண்டாடின ஜோடிகள் வரைக்கும் இந்த மேட்டர் பொருந்தும். கல்யாணமே ஆகலைன்னாலும் எதிர்காலத்துல யூஸ் ஆகும் ப்ரோ.

 

1. சமைச்சு கொடுங்க : 

உங்க மனைவிதான் தினமும் உங்களுக்கு சமைச்சு தறாங்களா? அப்ப ஒருநாள் நீங்க சமைச்சு கொடுக்க டிரை பண்ணுங்க. சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆளாக இருந்தால், இன்னும் சிம்பிள். உங்க மனைவிகிட்டயே 'நீ சமைக்க சொல்லிக்கொடு, நான் கத்துக்கறேன்'னு அவங்க சொல்லச் சொல்ல கேட்டு அவங்களுக்கு இஷ்டமானதையே செஞ்சு கொடுக்கலாம். சமைச்சது ரொம்ப சுமாராக இருந்தாலும் கண்டிப்பாக இந்த சாப்பாடு அவங்களுக்கு டேஸ்டாக தான் இருக்கும். 


2.எழுதுங்க : 

லவ் லெட்டரை காதலிக்கற பொண்ணுக்கு தான் கொடுக்கணும்னு கிடையாது. மனைவிக்கும் கொடுக்கலாம். அவங்களை எவ்வளவு லவ் பண்றீங்க, அவங்க வந்ததுக்கு பிறகு உங்க வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி இருக்குனு குட்டி காதல் கடிதமா எழுதி கொடுங்க. 'பேப்பர்ல எழுதி பல வருஷம் ஆச்சு பாஸ்?னு யோசிச்சா... மெசேஜ் டைப் பண்ணி அனுப்புங்க. திருமண வாழ்க்கையும், ஒரு வகையான காதல் வாழ்க்கைதாங்க. 

 

3. கிப்ட் கொடுங்க : 

வைர மோதிரமோ, தங்க வளையலோ, காஸ்ட்லி டிரஸோ தான் வாங்கிதரணும்னு கிடையாது. அவங்க ரொம்ப நாளா ஒரே செப்பலை பயன்படுத்தறாங்கனு தெரிஞ்சா புது செப்பல் வாங்கிக்கொடுக்கங்க. சின்ன சின்ன பரிசுகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். (அதுக்குன்னு வளையல் வாங்கித் தந்தத எல்லாம் கணக்குல காட்டாதீங்க பாஸ்)

 

4. கட்டிப்பிடிங்க : 

கமல் சொன்ன அதே கட்டிப்பிடி வைத்தியம் தான். காலையில எழுந்ததும், ஆபிஸ் விட்டு வந்ததும், தூங்கப்போவதுக்கு முன்னரும்னு சின்ன ஹக் பண்ணுங்க. கிஸ் கொடுங்க. அப்புறம் பாருங்க, ரேம் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு ஃபோனா வாழ்க்கை சும்மா ஸ்மூத்தா போகும்.

 

5. சண்டை வந்தா சமாளிக்கணும் : 

 ரோடு போட்டதும் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதும்,  கல்யாணம் பண்ணதும் பேமிலிக்குள்ள சண்டை வரதும் சகஜம் தான். சண்டை வந்தால், உடனே மனைவி மேல குற்றம் சொல்லாதீங்க. திட்டாதீங்க. எதனால சண்டை வந்ததுனு உட்கார்ந்து பேசி அப்பவே தீர்த்துடுங்க. குழந்தைங்க முன்னாடியோ, உறவினர்கள் முன்னாடியோ சண்டை போட்டுக்காதீங்க. யார்கிட்டயும் உங்க மனைவியை விட்டுக்கொடுத்து பேசாதீங்க. (உங்க அம்மாகிட்ட கூட பாஸ்)

 

6. ஷேர் பண்ணுங்க : 

புது விஷயங்களை ஏதாவது படிச்சலோ, பார்த்தாலோ, கேட்டாலோ ஃபேஸ்புக்ல ஷேர் பண்ற மாதிரி உங்க மனைவியிடமும் ஷேர் பண்ணுங்க. அவங்க ஏதாவது சொன்னா காது கொடுத்து கேளுங்க. பக்கத்து வீட்டு கதையை சொன்னால் கூட சுவாரஸ்யமா  கேட்டுக்கோங்க. அலுத்துகாதீங்க. 'நீ சமைச்சு கொடுத்த சாப்பாடு சூப்பர்' , ' டிரஸ் செம'னு அடிக்கடி பாராட்டுங்க. 

 

7. எல்லாத்துக்கும் எதிர்பார்க்காதீங்க : 

சிலர் எது வேணும்னாலும் அவங்க மனைவியை தான் எதிர்பார்ப்பாங்க. எந்த பொருள் எங்க இருக்குனு கூட தெரியாத அப்பாவி ஜீவனாகவே வளர்ந்து இருப்பாங்க. அவங்க உங்களுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து எடுத்துக்கொடுத்தாலும், நாட்கள் போக... போக... இது சலிப்பை ஏற்படுத்தும். 'நம்மள ஒரு வேலைக்காரி மாதிரி பயன்படுத்தறாரோ'னு கூட யோசிக்கலாம். அதுனால, இனி  கூப்பிட்ட குரலுக்கு அவங்க ஓடி வரணும்னு நினைக்காதீங்க. ”யாரங்கே”ன்னு கேட்க நாம என்ன புலிகேசியா?


8. ஹெல்ப் பண்ணுங்க : 

டைம் கிடைச்சா, அவங்களுக்கு சின்ன சின்ன உதவி பண்ணுங்க. வாஷ்பேஷின்ல பாத்திரம் இருந்தால் கழுவி கொடுங்க. வீட்டை சுத்தப்படுத்துங்க. துணி துவைச்சு காயப்போட உதவுங்க. இந்த ஹெல்ப் எல்லாம் நீங்க அவங்க மேல எவ்வளவு கேர் எடுத்துக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க. 

9. டூர் போங்க : 

அலுவலகம், வீடு, குழந்தைகள்னு ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்தால் சலிப்பு வரலாம். வருஷத்திற்கு ஒருமுறையாவது மனைவி, குழந்தைகளுடன் டூர் போங்க. கொஞ்சம்டைம் இருந்தால் மனைவி கூட லாங் டிரைவ் போங்க. அவங்க அம்மா, அப்பாவையோ, அவங்களுக்கு பிடித்த நண்பரையோனு சர்ப்ரைஸாக வர வைத்து அவங்க முன்னாடி நிறுத்துங்க. இதுக்கு எல்லாம் பலன் கொஞ்ச நாட்களிலேயே தெரிஞ்சுப்பீங்க. 

10. பணமும் முக்கியம் : 

ஒர் குடும்பம் நல்லா இருக்கணும்ன்னா, கண்டிப்பா பொருளாதாரமும் முக்கியம். உங்க சம்பளம் எவ்வளவு? மாசம் என்னென்ன செலவு ஆகுதுனு மனைவிகிட்ட உட்கார்ந்து பேசி செக் லிஸ்ட் போட்டு செலவு பண்ணுங்க. குழந்தைங்க படிப்பு, எதிர்கால திட்டம்னு எல்லாத்துக்கும் அவங்க கூட கலந்து பேசுங்க. அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

இப்படியாக வாழ்ந்தால்  “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்” பாஸ்,

 

vikatan

Link to comment
Share on other sites

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage

a.png

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனியொருவனா, ஆயிரத்தில் ஒருவனா? உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் நீங்கள் யார் என்பதை...!  

உலகின் பெரும் ஆளுமைகள் அனைவரும் தனித்துவமான உடல்மொழியை  கொண்டவர்கள். நம் அருகாமை உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் முதல் காட்சி சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினிகாந்த். உடைமைகளை பெற்றுக்கொண்டு சிறை வாசலுக்கு நடந்து வர கதவுகள் திறக்கின்றன.அவர் நடந்து வருவது மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது. ஆனாலும் அவரின் முகத்தைக் காட்டும் வரையில் கூட பொறுத்திருக்காமல் எழுந்து நின்று கைதட்டி விசிலடிக்கிறோம் என்றால். அது அவரது உடல்மொழி செய்யும் மேஜிக். உங்கள் உடல்மொழியை மேம்படுத்திக் கொள்வதற்கான சில சிம்பிள் டிப்ஸ் இங்கே...

2aa.jpg

1. நம்மில் பெரும்பாலானோரும்  பேசுகையில் கைகளை மார்புக்கு குறுக்காக  கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்போம். கைகளை காட்டிக்கொள்வது என்பது நம் எதிராளியிடம்  நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.  மேலும் அந்த உரையாடலில்  கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செய்கிறோமாம்.

33aa.jpg

2. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது. தாடையை சொறிவது. மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு ந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.   
 

3. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதின் மூலமே சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள்  உங்கள் சின்ன சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும். 

5. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.   

6aa.jpg

6. போலியாக  செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள். 
 
7. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர்  காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ. அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது. காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம். நம் மீதான நம்பிக்கையை  சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனியொருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான்.  ஆனால் நம் உடல், நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!

vikatan

Link to comment
Share on other sites

14079752_1111960505519309_31132528556109

பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் முதன்மையானவராகக் கணிக்கப்படும் மொஹமட் யூசுப்பின் (முன்னர் யூசுப் யுஹானா) பிறந்தநாள்.

 
Link to comment
Share on other sites

கூகுள் உலக வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ள இடங்கள் (ஓர் பார்வை)

கூகுள் உலக வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ள இடங்கள் (ஓர் பார்வை)

கூகுள் உலக வரைபடத்தில் (Google Earth Map) நாம் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது.

சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாய் இருப்பதுடன், அவை திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோ இருக்கும்.

அவ்வாறான சில இடங்கள் கூகுள் வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ளமைக்கு பாதுகாப்புக் காரணங்கள் கூறப்பட்டாலும் தெளிவான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை.

மறைக்கப்பட்ட இடங்களாவன…

1. நேபால் பனிச் சேணம் (Nepal Snow Saddle): 22,000 அடி உயரத்தில் உறைந்த பனி மலையின் உச்சியில் இப்பகுதி உள்ளது.

2. உடைந்த அம்பு (The Broken Arrow): மற்ற இடங்களோடு ஒப்பிடும் போது இந்த இடம் சற்று மங்கலான முறையில் தெரிகிறது.

3. ஹார்ப் அரசு ஆய்வு மையம் (HAARP government research facility): அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ளது.

4. பேக்கர் ஏரி (Baker Lake): கனடாவில் உள்ள இந்த இடம் வேற்றுக்கிரக வாசிகளுக்கான கலங்கரை என்றும் சிலரால் நம்பப்படுகிறது.

5. ராம்ஸ்டெயின் விமானப் படைத்தளம் (Ramstein Airforce Base): ஜெர்மனியில் உள்ள விமானப் படைத்தளமான இதுவும் மறைக்கப்படுகிறது.

6. பசிபிக் வடமேற்கு, அமெரிக்கா: வேலிகள் இருப்பதைத் தவிர்த்து அந்த இடத்தைப் பற்றிய வேறு எந்த விபரமும் இல்லை.

7. ஸாஸ்ஹலோம்பட்டா (Szazhalombatta): இது ஹங்கேரி நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம்.

8. ஹஸ் டென் போஸ்க் மாளிகை (Huis Ten Bosch Palace): டச்சு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த மாளிகை மறைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

9. மோபில் எண்ணெய் கூட்டுத்தாபனம் (Mobil Oil Corporation): அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் இது உள்ளது.

10. ரீம்ஸ் (Reims): பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் விமானப்படைத்தளமாகும்.

11. மாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca): அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த கார் பந்தயத்தளம்.

12. பாபிலோன் (Babylon): ஈராக் நாட்டில் உள்ள மிகவும் மங்கலாகக் காட்சியளிக்கும் பகுதி இது.

13. டான்டாகோ தேசிய பூங்கா (Tantauco National Park): சிலி நாட்டில் உள்ள இந்த தேசியப் பூங்காவானது ஏன் மறைக்கப்படுகிறது என்பதற்குத் தெளிவான காரணம் இல்லை.

14. பாதுகாப்பு சிறைச்சாலைகள் (Security Prisons): அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு சிறைகள் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15. ஒரு ரஷ்ய நாட்டவரின் இல்லம்: கூகுள் வரைபடம், பாதுகாப்புக் காரணத்திற்காக நபர் ஒருவரின் வீட்டை மறைத்து வைத்துள்ளது.

16. நேட்டோ தலைமையகம் (NATO Headquarters): போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம்.

17. ஸீப்ருக் (Seabrook): அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்பியரில் உள்ள அணு வசதி மையம்.

http://newsfirst.lk

Link to comment
Share on other sites

 
 
 
Bild zeigt 2 Personen , Personen, die lachen , Hut und Nahaufnahme
 

ஆகஸ்ட் 27: டோனால்ட் பிராட்மன் எனும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு

கிரிக்கெட்டின் அதிகபட்ச டெஸ்ட் சராசரியான 99.94 இவர் வசம் இருந்தது என்பது இவரின் பிரம்மாண்டத்தை தெளிவாக சொல்லும். சின்னப்பையனாக யாரும் பயிற்சி தராமல் கிரிக்கெட் ஸ்டாம்ப்பை கொண்டு கோல்ப் பந்தை அடித்து விளையாடி பயிற்சி செய்தவர் அவர் . அவர் ஆடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மிகக்குறைவாகவே ஆடப்பட்டன .

அப்பொழுது இங்கிலாந்தும்,ஆஸ்திரேலியாவும் மிகப்பெரிய சண்டைக்கோழிகள் . ஆஷஸ் தொடரை வாழ்வா சாவா பிரச்சனையாக இருநாட்டவரும் கருதினார்கள் . இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில் கிரிக்கெட்
உலகிற்குள் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நுழைந்தார் பிராட்மன் .இன்றைக்கு போல அவர் காலத்தில் கிரிக்கெட்டில் பெரிய வருமானம் கிடையாது ;ஸ்டாக் ப்ரோக்கராக வேலை பார்த்தார் இவர் ;காலையில் ஏழு மணியில் இருந்து பத்து
வரை அங்கே வேலை பார்த்துவிட்டு மைதானத்துக்கு வருவார் ;பின் இரவு ஏழு முதல் பத்து மணிவரை மீண்டும் அந்த வேலையை செய்வார்.

இவர் ஆடிய இருபதாண்டு காலத்தில் ஒரே ஒரு முறை தான் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை இழந்தது என்பதே இவர் எத்தகைய ஆட்டத்திறன் கொண்டவர் என்பதை விளக்கும் . இங்கிலாந்து ஜெயித்த ஒரு முறையும் பாடிலைன் என்கிற
பந்துவீச்சு முறையை பின்பற்றியது -ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லெக் ஸ்டம்ப் பக்கம் பந்து எழும்புமாறு செய்வார்கள் ;எண்ணற்ற பீல்டர்கள் லெக் சைடில் நிற்க வைக்கப்பட்டு விக்கெட்டை கழட்டி விடுவார்கள் .இது கிரிக்கெட்டின் ஆரோக்கியமான போக்கிற்கு எதிரானது என எதிர்ப்பும் எழுந்தது .அப்படிப்பட்ட தொடரில் கூட 56 என்கிற சராசரியை வைத்திருந்தார் அவர் .

ஒரு உள்ளூர் போட்டியில் டான் பிராட்மன் ஆட களம் புகுந்தார். அவரின் விக்கெட்டை ஏற்கனவே ஒருமுறை ஐம்பத்தி இரண்டு ரன்களுக்கு ஒருமுறை எடுத்திருந்த போட்டி நடந்த ப்ளாக்ஹீத் ஊரின் வீரரான வெண்டெல் பில்லுக்கு ஒரே ஆரவாரத்தின் மூலம் உற்சாகப்படுத்தினார்கள் ரசிகர்கள். முதல் ஓவரின் எட்டு பந்துகளில் 6, 6, 4, 2, 4, 4, 6, 1 என்றும் அடுத்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4, 6, 4 என்றும் அடித்து நொறுக்கிய பிராட்மன் இருபத்தி இரண்டு பந்துகளில் நூறு ரன்களை கடந்தார் ! இந்தப்போட்டி நடந்த வருடம் 1931. !

கடைசி இன்னிங்க்சில் நான்கு ரன்கள் எடுத்தால் 7,000 ரன்கள் மற்றும் நூறு என்கிற சராசரியை தொட முடியும் என்கிற நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார் . சச்சின் அவரை அவரின் 90 வயதில் சந்தித்தார் ;"நீங்கள் இப்பொழுது ஆடியிருந்தால் என்ன சராசரி வைத்திருப்பீர்கள் டான் ?"என சச்சின் கேட்ட பொழுது "70 !"என்றார் டான் .ஏன் அப்படி என்பது போல சச்சின் பார்க்க ,"கம்மான் !90 வயதில் எழுபது என்பது ஒன்றும் குறைவான சராசரி இல்லை !"என்றார் பிராட்மன் . கிரிக்கெட்டில் 99.94 என்கிற எண்ணுக்கு மிகப்பெரிய வசீகரத்தை தந்த நூற்றுக்கு நூறு கச்சிதமான பிராட்மனின் பிறந்த தினம் இன்று

vikatan

Link to comment
Share on other sites

செங்குத்துத் தோட்டம்!

 

p6b.jpg

க்கள்தொகை அதிகரிப்பால் அதை ஈடுகட்ட நகரமயமாக்கல் கட்டாயமாகிறது. என்னதான் வாழ்க்கை முறைகள் மாறினாலும் பணத்தைச் சாப்பிட்டு உயிர்வாழ முடியாதே. பூமி வெப்பமடைதலால் விவசாயத்துக்குத் தேவையான நீரின் அளவும் குறைந்துவிட்டது. விவசாய நிலங்களும் வேறு வழியில்லாமல் கட்டடங்களாக உருமாறிவிட்டன. எல்லாவற்றுக்கும் மாற்றாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புதுமையியலாளர்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து ஒரு யோசனையைப் பல ஆண்டுகளாக முன்வைத்து, இப்போது அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அதுதான் இந்த செங்குத்துத் தோட்டம் எனப்படும் Aero Farm.

p6a.jpg

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் தொங்கும் தோட்டம் போல வித்தியாசமான செங்குத்தான தோட்டத்தை அமைத்திருக்கிறார்கள். தாவரங்கள் வளருவதற்கு மண், சூரிய ஒளி ஆகியவை அவசியம் என்கிற விதியையே தலைகீழாகப் புரட்டிப்போடும் விதமாய், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் துணிகள், எல்.இ.டி விளக்குகள், காற்றாடிகளை வைத்தே காய்கறிகளை விளைவிக்கிறார்கள். அடுக்குக்காக ஒரே இடத்தில் பல மட்டத்தில் இந்த முறை விவசாயத்தைச் செய்ய முடியும் என்பதால் குறைந்த இடமே போதுமானது. சாதாரண கீரைவகைகள் முதல் கேரட், முட்டைகோஸ், தக்காளி வரை கிட்டத்தட்ட 250 வகையான காய்கறிகளையும் இந்த முறையில் விளையவைக்க முடியும் எனச் செய்து காட்டியிருக்கிறார்கள்.

p6.jpg

இதற்கு உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தவே இல்லையாம். மண்ணில் செய்யும் விவசாயத்தை விட 95 சதவிகிதம் குறைவான நீரே பயன்படுகிறதாம். ‘1,300 ஏக்கர் நிலத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளைவிட பத்து மடங்கு அதிகமாக இந்தத் தோட்டத்தின் மூலம் விளைவிக்க முடியும். மேலும் வருடத்திற்கு 900 டன் காய்கறிகளை உற்பத்தி செய்து அனுப்பலாம்’ எனவும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார் இந்தத் தோட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான டேவிட் ரோசன்பெர்க்.

கார்ப்பரேட் விவசாயம் களைகட்டுது!

vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

கூகுள் உலக வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ள இடங்கள்

ஒரு காலத்தில் தமிழீழத்தின் பல பகுதிகளும் மறைக்கப்பட்டிருந்தன.

Link to comment
Share on other sites

மமதைக்கு வெளிச்சத்தைப் பிடிக்காது
 
 

article_1471233185-uytjuy.jpgஎல்லாமே எனக்குத் தெரியும் என்று வெளியில் பலருக்கும் வாய் சொல்லும். ஆனால் உள் மனமோ, 'அட உனக்கு ஒன்றுமே தெரியாது' எனக் குத்திப் பேசும்.

என்றாலும் மமதை மனதை அடக்கி, அச்சுறுத்திப் பொய் பேச வைக்கும். மமதைக்கு வெளிச்சத்தைப் பிடிக்காது. தனது ஆட்சிக்குள் எஜமானனை மீறியே செயற்படும்.

எனினும், எல்லாச் சமயத்திலும் நல்ல அறிவுத் திறனுடையவர்களை ஆணவத்தினால் வென்றுவிட முடியாது.

புலன் வழிசெல்லாமல் இருக்க அறிவுக்கு வேலை கொடுங்கள். தன்முனைப்புடன் செயற்பட்டால் பிறர் நகைக்க வாழ்வதுடன், கிடைக்க வேண்டிய பெரும் பேறுகளை வேறு திசைக்கே திருப்பிவிடும்.

கௌரவமாக வாழ இறுமாப்பு, செருக்கு, அதிகார மிடுக்கு ஆகியவை மிகவும் அவசியமானது எனத் தப்பான எண்ணங்களை வரைந்து கொள்வதுபோல் அறியாமை வேறில்லை.

பணிவோடு உண்மைக்கும் அன்புக்கும் தலை வணங்கினால் நிலை பெற்ற வாழ்வு நிச்சயம்.  

Link to comment
Share on other sites

தமிழறிஞர் கால்டுவெல் நினைவு தினம் இன்று!

14055103_1213368628721925_28020424024892

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல். 15 ஆண்டு கால உழைப்பின் பயனாக அவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆங்கில நூல் தமிழ் மொழிக்கும் அதன் திராவிடக் குடும்பமான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்குமான உறவை உலகுக்குச் சொன்னது. அதனால்தான் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கால்டுவெல்லையும் மலையாள மொழியை ஆய்வுசெய்த டாக்டர் குண்டட் ஆகிய இருவரையும், 'அவர்களுக்கு திராவிடம் கடன்பட்டுள்ளது’ என்று சொன்னார்.

நற்கருணை தியான மாலை, தாமரைத் தடாகம், நற்கருணை, பரதகண்ட புராதனம் ஆகிய நூல்களை தமிழில் எழுதும் அளவுக்கு தமிழைக் கசடறக் கற்றவர். கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காகச் சென்னை வந்தார். கிறிஸ்துவம் கற்பிக்கவே தமிழ் படித்தார். அதன் பிறகு தமிழ் அவரை விடவில்லை. எங்கு போனாலும் நடந்தே போகும் பழக்கம் வைத்திருந்தார். சென்னையில் இருந்து நெல்லை வரை பல்வேறு ஊர்கள் வழியாக நடந்துபோய் தமிழ்நாட்டு மக்களை படித்தவர் அவர். ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான தொப்புள் கொடி உறவை முதலில் சொன்னவரும் கால்டுவெல்லே!

vikatan

Link to comment
Share on other sites

கறுப்புச் சூறாவளி

 

simon_001_2980854f.jpg
 

* கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை.

* ரியோ ஜிம்னாஸ்டிக் அனைத்துச் சுற்றுப் தங்கப் பதக்கத்தை வென்ற அடுத்த கணமே, ட்விட்டரில் டிரெண்டிங் ஆன பெயர்.

* ‘சிமோஜி’ - அவருடைய பெயரில் வந்துள்ள இமோஜியின் பெயர்தான் இது.

* ரியோ ஒலிம்பிக்கில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வீராங்கனையின் பெயர்.

“நான் அடுத்த உசேன் போல்ட்டோ மைக்கேல் ஃபெல்ப்ஸோ கிடையாது. நான்தான் ‘முதல்’ சிமோன் பைல்ஸ்” - தன்னைப் பற்றி அவரே கூறியுள்ள இந்தக் கூற்று, அவர் யார் என்பதை மிகச் சிறப்பாக வரையறை செய்துவிடுகிறது.

விளையாட்டுக் களம் என்றாலும் சரி, பேச்சென்றாலும் சரி இந்தத் தனித்தன்மைதான் சிமோன் பைல்ஸ். ரியோ ஜிம்னாஸ்டிக் களங்களில் நகர்ந்தும் காற்றில் பறந்தும் வித்தைகளை நிகழ்த்துவதற்கு முன் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த அவர், இப்போது உலகப் பிரபலம்.

தனிச் சிரிப்பு

அமெரிக்காவில் ஆப்பிரிக்கக் குடும்பம் ஒன்றில் பிறந்து, அம்மாவின் அரவணைப்பு கிடைக்காத துயரத்தைக் கடந்து, எல்லோரும் உலகப் புகழை அடைந்துவிடுவதில்லை. ஆனால், ரியோ ஜிம்னாஸ்டிக் களங்களைத் தன் தனிப் பாணி புன்னகையால் இன்றைக்குப் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் 19 வயது சிமோன் பைல்ஸ்.

simon_004_2980863a.jpg

பயிற்சியாளருடன்

இன்றைய தேதிக்கு உலகின் ஆகச் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அவர்தான். வரலாற்றின் மிகச் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் பட்டியலில் தன் இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே உறுதி செய்துவிட்டார்.

மூன்று நாளில் புது வித்தை

அமெரிக்காவில் ஒஹையோ மாகாணம் கொலம்பஸில் 1997-ல் பிறந்தவர் சிமோன். சின்னக் குழந்தையாக இருந்தபோது, அவருடைய அம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போனது. அதனால் ஐந்து வயதிலேயே தாத்தா ரொனால்ட், பாட்டி நெல்லியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

ஆறு வயதானபோது, பள்ளி சார்பில் ஒரு ஜிம்னாஸ்டிக் களத்துக்கு அழைத்துச் சென்று வீரர், வீராங்கனைகள் தாவுவதையும் காற்றில் சுழன்று கரணம் அடிப்பதையும் காட்டினார்கள். இன்றைக்கு ஜிம்னாஸ்டிக் களங்களை அதிரவைத்துக் கொண்டிருக்கும் சிமோனுக்கு, ஜிம்னாஸ்டிக்ஸ் அப்படித்தான் அறிமுகம் ஆனது. கொஞ்ச நாளிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற, சிமோனுக்கு சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஜிம்னாஸ்டிக் வித்தைகளுக்குச் சரியான அடித்தளம் அமைக்கும் வயது அது. தொடர் பயிற்சிகள் காரணமாக நடுநிலை வகுப்புகளுக்குப் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே படித்தார் சிமோன்.

“பயிற்சி மையத்தில் மற்ற குழந்தைகளும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளும் ஒரு மாதமோ, ஒரு வருடமோ எடுத்துக்கொண்டு கற்றுக்கொண்டு வெளிப்படுத்தும் புதிய ஜிம்னாஸ்டிக் நகர்வை, சிமோன் மூன்றே நாட்களில் நூல் பிடித்த மாதிரி செய்துகாட்டி அனைவரையும் அசத்திவிடுவாள்” என்று பழசை நினைவுகூர்ந்து பாராட்டுகிறார் அவருடைய பயிற்சியாளர் அய்மீ பூர்மேன். அன்று தொடங்கி இன்றுவரை சிமோனின் பயிற்சியாளர் இவர்தான்.

ஜிம்னாஸ்டிக் களத்தில் நளினமும் அழகும் சிறக்க அவர் வெளிப்படுத்துவது ஃபுளோர் எக்சர்சைஸ் எனப்படும் தளப் போட்டிதான். ஜிம்னாஸ்டிக்கில் அவருக்கு ரொம்பப் பிடித்ததும் அதுதான்.

பதக்கக் குவியல்

16 வயது நிறைந்த வீராங்கனைகளே ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க முடியும். 2012 லண்டன் ஒலிம்பிக்கின்போது அவருக்கு 16 வயது நிறைவடைந்திருக்க வில்லை. அதன் காரணமாக, சற்றே தாமதமாக 2013-ம் ஆண்டு உலக சாம்பியன் ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து அவரது ஆதிக்கம் தொடங்கியது.

இன்று வேறெந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை விடவும், பல்வேறு பிரிவுகளில் அதிக உலக சாம்பியன் தங்கப் பதக்கங்களை சிமோன் தன்வசமாக்கிக் கொண்டுள்ளார். உலக சாம்பியன் பட்டங்களைத் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வென்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த ஒலிம்பிக்கில் ஐந்து பிரிவுகளில் நான்கு தங்கமும், ஒரு வெண்கலமும் வென்றுள்ளார். மற்ற நான்கு பிரிவுகளிலும் தங்கம் வென்ற அவர், பீம் பிரிவில் வெண்கலமே வெல்ல முடிந்தது. அப்போதும்கூட தன் அக்மார்க் புன்னகையுடன் பதக்கத்தைக் கழுத்தில் ஏந்திக்கொண்டார் சிமோன். ஒரு வீராங்கனைக்கு இதைவிட வேறென்ன தகுதி வேண்டும்?

இன்னும் ஐந்து வருடம்

ஒரு பக்கம் பதக்கங்களைப் பெற்றுக் குவிக்கும் சிமோன், ஜிம்னாஸ்டிக் தள நடைமுறைகளில் புதிய நகர்வு முறையையும் 16 வயதிலேயே கண்டுபிடித்து விட்டார். இரட்டைக் கரணம் அடித்து, உடலைப் பாதியளவு திருப்பி, கடைசியாகத் தரையிறங்குவது - இதுதான் சிமோன் பைல்ஸ் நகர்வு. இந்த நகர்வின் உச்சத்தில் தன்னுடைய உயரத்தைப் போல இன்னொரு மடங்கு அவர் தாவுவது பலரும் கற்பனை செய்ய முடியாத வித்தை. 2013-ம் ஆண்டில் இந்த நகர்வை அவர் கண்டறிந்தார். இந்த நகர்வுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுப் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் பேலன்ஸ் பீம் பிரிவில் சற்றே சறுக்கியதால், தங்கப் பதக்க வாய்ப்பு அவருக்குச் சறுக்கியது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஐந்து தங்கம் வெல்லும் சாதனையும் இதனால் தவறிப் போனது. ஒலிம்பிக் பதக்க வேட்டையில் இது அவருடைய முதல் களம்தான்.

அவருடைய ஜிம்னாஸ்டிக் மேதைமையைப் பார்க்கும்போது, ரியோ ஒலிம்பிக்குடன் அவருடைய சாதனைகள் முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவரது எதிர்காலச் சாதனைகளுக்காக டோக்கியோ மைதானங்களும் ஒலிம்பிக் ரசிகர்களும் இப்போதே காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

சிமோனின்மறுபக்கம்

simon_005_2980864a.jpg

simon_002_2980860a.jpg

குழந்தைப் பருவத்தில் அம்மாவின் மடியில்

பிடித்த விஷயம்: நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்வது.

பொழுதுபோக்கு: மீன்பிடித்தல், நடனம் (கால்கள் சும்மா நிற்காது), புதிய ஃபேஷன் புதிய உடைகள்.

மோசமான பழக்கம்: தங்கையை மிரட்டி வேலை வாங்குதல்.

விளையாட்டில் மிகப் பெரிய தடை: என்னை நானே சந்தேகிப்பது.

குறிக்கோள்: மிகச் சிறந்த ‘சிமோனாக’ இருப்பது.

tamil.thehindu.

Link to comment
Share on other sites

ரியோ ஒலிம்பிக் நிறைவு!

p94.jpg

ரியோ நகரில் 17 நாட்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான விழாவோடு நிறைவுபெற்றன. 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்டனர். 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் உள்பட 121 பதக்கங்களுடன் அமெரிக்கா, பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா 67வது இடத்தைப் பிடித்தது. இந்த ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்து ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றனர். மல்யுத்தத்தில் சாக்‌ஷி வெண்கலப் பதக்கத்தையும், முதல் முறையாக இந்தியா சார்பில் பேட்மின்டன் இறுதிப்போட்டியில் ஆடிய இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். பிரதமர், சூப்பர்ஸ்டார் என அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று இணையம் முழுக்க #girlpower #WomenPower #PVSindhu #ProudOfUSindhu #Sindhustan #SakshiMalik #SakshiWinsBronze போன்ற டேக்குகள் ஒவ்வொன்றும் ட்ரென்ட்டில் கலக்கின. ப்ரெளட் ஆஃப் யூ கேர்ள்ஸ்!


புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர்

p94a.jpg

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதியோடு முடிவடைவதை அடுத்து, அந்தப் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி நாடுமுழுவதும் நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது துணை ஆளுநராக செயல்பட்டு வரும் உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #UrjitPatel என்ற டேக் சில நாட்களாகவே ட்ரெண்டில் இடம்பிடித்தது. இவருக்கு கென்யாவின் குடியுரிமை இருக்காமே! சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்லப்போறாரோ!


செவாலியே நாயகன்!

p94b.jpg

உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலகப் பங்களிப்பைப் பாராட்டி, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருதை வழங்கவிருப்பதாக அந்நாட்டின் கலாசாரத்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் அந்நாட்டின் ‘ஹென்றி லாங்லாய்ஸ்’ விருதையும் கமல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மிகப்பெரிய விழா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ‘செவாலியே’, @ikamalhaasan, #KamalHaasan என அத்தனையும் தேசிய அளவில் ட்ரென்ட் அடித்தன. உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு!


மிஸ் யூ மச்சிலி

p94c.jpg

ராஜஸ்தானில் உள்ள ரந்தம்போர் தேசியப்பூங்காவைச் சேர்ந்த மச்சிலி என்ற பெண்புலி, சமீபத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதன் இடதுபுறத்தில் மீன் போன்ற வரிகள் இருந்ததால் மச்சிலி என்று அழைக்கப்பட்டது. உலகில் மிக அதிகமான புகைப்படங்களில் பதிவான புலி என்ற பெருமை இதற்கு உண்டு. ரந்தம்போர் தேசியப்பூங்காவிற்கு ஆண்டுக்கு சுமார் 60 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தந்த இந்தப் புலி, தனது 20-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உணவருந்தாமல் சமீபத்தில் உயிரிழந்தது. விலங்கு நல ஆர்வலர்கள், நெட்டிசன்ஸ் #machli என்ற டேக்கில் தங்கள் சோகத்தைப் பதிவு செய்தனர். துயரம்!


பிரம்மாண்டமே!

p94d.jpg

 

இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தனது 54வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். தற்போது சூப்பர்ஸ்டார் நடிக்கும் ‘2.0’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஷங்கருக்கு, நாடு முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்ததால் தேசிய அளவில் #shankar #HappyBirthdayShankar டேக்குகள் ட்ரென்ட் ஆனது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை ட்விட்டரில் பதிவு செய்தார் ஷங்கர். வாழ்த்துகள்!


சகோதர சகோதரிகளே...

p94e.jpg

தமிழ் சினிமாவில் சகோதரி சென்டிமென்ட் என்றென்றும் ஹிட்தான். பெண்கள் பலருக்கும், கூடப் பொறந்தாதான் அண்ணனா! நீகூட அண்ணன்தான்னு சொல்லி கையில் பேண்ட் கட்டிவிடுற நாள்தான் ரக்ஷா பந்தன். ராக்கியோட ஹன்சிகா போட்டோவுக்கு கொடுத்த போஸ், சொந்த சகோதர, சகோதரிகள் மட்டுமின்றி இணையத்தில் பழகிய பாசக்காரர்கள் கொண்டாடிப் போட்ட போட்டோக்கள் என எல்லாமே வைரல். இன்னொரு பக்கம் ராக்கிக்குப் பயந்து பசங்க கிண்டல் செய்து போட்ட மீம்கள் எல்லாம் வைரல். இவ்வாறாக #HappyRakshaBandhan டேக் கலகலப்பாக ட்ரெண்ட் ஆனது. என்ன தவம் செஞ்சுப்புட்டோம்!


கண்டனங்கள்

p94f.jpg

‘நீங்கள் தாக்க வேண்டுமா? என்னைத் தாக்குங்கள்! என்னை சுடுங்கள்! ஆனால் தலித்துகளை தாக்காதீர்கள்!’ என இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் உள்ள உனா நகரில் ஆதிக்க சாதியினரால் மீண்டும் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து உனா நகரில் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டாலும், தலித்துகள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. #GujDalitsUnderAttack என்ற பெயரில் நெட்டிசன்ஸ் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். போராட்டம் நீடிக்கும்!


சிகரம் தொட்ட பெண்

p94g.jpg

மிக இளம் வயதில், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற சாதனைக்குரியவர் பூர்ணா மாலவத். தெலங்கானாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த சாதனைப் பெண்ணின் வாழ்க்கை வரலாறு ‘பூர்ணா’ என்ற பெயரில் தற்போது படமாகியுள்ளது. விஸ்வரூபம் வில்லனான ராகுல் போஸ், இப்படத்தை இயக்கித் தயாரித்துள்ளார். சுதந்திர தினத்தன்று தன்னைப்பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி வெளியிட்டார் பூர்ணா மாலவத். #poornafirstlook என்ற பெயரில் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். வானமே எல்லை!

vikatan

Link to comment
Share on other sites

சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

 

 சென்னை, இதை ஒரு நகரம் என்று சொல்வதை விடவும் நம் சொந்த வீடு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு சென்னை நகருக்கும் சென்னைவாசிகளுக்குமான பந்தம் அவ்வளவு நெருக்கமானதும், பிரிக்கமுடியாததுமாகும். எத்தனையோ கனவுகளை நிஜமாக்கிய, எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த நம்ம சென்னையை பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

14-1426330498-seabath.jpg

இந்தியாவின் நீண்ட கடற்கரை : இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை, உலகத்தின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற சிறப்புகளை தாங்கி நிற்கிறது மெரினா பீச். சென்னையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான இது சென்னைவாசிகளின் வாழ்கையில் இரண்டற கலந்திருக்கிறது என்றே சொல்லலாம். 

14-1426330531-volleyball.jpg

இந்தியாவின் நீண்ட கடற்கரை : ஆரோக்கிய வாழ்விற்காக காலையில் நடை பயிற்சி செய்வதில் ஆரம்பித்து, தனக்கு பிரியமான தோழியிடம் காதலை சொல்வது வரை ஒவ்வொரு சென்னைவாசியின் வாழ்கையின் பல அற்புத தருணங்களில் இந்த மெரினா கடற்கரையும் பங்கேடுத்திருக்கிறது. சென்னை வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் செல்லவேண்டிய இடம் இந்த மெரினா கடற்கரையாகும்.


14-1426332188-cooum-river.jpg

கூவம் :

கூவம் என்றதுமே மூக்கை துளைத்தெடுக்கும் நாற்றமும், சாக்கடையுமே நம் நினைவுக்கு வருவது வரலாற்று துரதிர்ஷ்டங்களில் ஒன்று. இப்போது சென்னையின் கழிவுநீர் தொட்டியாக மாறிப்போயிருக்கும் கூவம் ஆற்றில் ஒரு காலத்தின் படகு போக்குவரத்து நடைபெற்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? .

14-1426332497-madras-medical-college.jpg

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி : எக்மோர் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உலகத்திலே இருக்கும் மிகப்பழமையான மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாகும். 1835ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் நிறுவப்பட்ட இக்கல்லூரியில் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவ பட்டதாரியான DR.முத்துலட்சுமி போன்றோர் கல்வி கற்றிருகின்றனர். 

14-1426330449-lovers.jpg

 

சிறந்த இந்திய நகரம் : அமெரிக்காவில் வெளியாகும் 'தி நியுயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையின் ஆய்வு முடிவுகளின் படி உலகில் வாழ சிறந்த 50 நகரங்களில் ஒன்றாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய நகரம் மற்றும் ஒரே தென் கிழக்கு ஆசிய நகரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. 

 

14-1426333390-8352559049-6787e7e72c-k.jpg


வண்டலூர் மிருக காட்சி சாலை: சென்னையை தாண்டி புறநகரில் அமைந்திருக்கும் வண்டலூர் மிருக காட்சி சாலை வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சென்று வர சிறந்த ஓரிடமாகும். சென்னை நகரில் இருந்து 31கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த மிருக காட்சி சாலை தான் இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் மிருக காட்சி சாலையாகும். அது மட்டும் இல்லாமல் தெற்காசியாவில் இருக்கும் மிகப்பெரிய மிருக காட்சி சாலைகளுள் ஒன்று என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. 


14-1426333879-5040978972-0faa59a263-b.jpg

 

ஹாலிவூட் - கோலிவூட் : 'சினிமா' என்னும் கனவுத் தொழிற்சாலை இயங்கும் சொர்க்கம் இந்த கோடம்பாக்கம் ஆகும். அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் இடமான ஹாலிவூடுக்கு இணையாக இங்கும் திரைப்படங்கள் தயாராவதால் இது 'கோலிவூட்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு மட்டுமே வருடத்திற்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தாயாராகின்றன. உங்களுக்கும் சினிமா கனவுகள் இருந்தால் உடனே கோடம்பாக்கத்துக்கு பஸ் ஏறுங்கள். 

14-1426330492-santhome.jpg

சாந்தோம் சர்ச் : ஐரோப்பாவிற்கு வெளியே இருக்கும் ஒரே 'பசிலிக்கா' சர்ச் என்ற பெருமையை பெற்றுள்ளது சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் சாந்தோம் சர்ச். இது 16ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகளால் கட்டப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க கிருத்தவர்கள் வருடம் முழுக்க இந்த சர்ச்சுக்கு யாத்திரை வருகின்றனர். 

14-1426334293-royapuram-stn-oct07.jpg


ராயபுரம் ரயில் நிலையம் : ராயபுரத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம் தான் இன்று இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான ரயில் நிலையமாகும். மும்பை - தானேவில் தான் முதல் ரயில் நிலையம் கட்டப்பட்டது என்றாலும் அவை இன்று பயன்பாட்டில் இல்லை. 1856ஆம் ஆண்டில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

14-1426334497-bombardment-of-madras-by-s.jpg

உலகப்போரில் பங்குகொண்டது : முதலாம் உலகப்போரில் சென்னை மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது தெரியுமா ?. ஆம் இன்றைய பேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்திருந்த பர்மா ஆயில் கம்பெனியின் மீது 1914 ஆம் ஆண்டு 'எம்டன்' என்ற சிறிய ரக ஜெர்மன் நாடு நீர்மூழ்கி கப்பல் குண்டு வீசியிருக்கிறது. 


14-1426330558-wind.jpg

 

14-1426330544-waytosriperumputhur.jpg

 

14-1426330524-vandhiyathevanstatue.jpg

14-1426330515-tnagar.jpg

14-1426330466-napierbridge.jpg

14-1426330460-muthukaduboathouse.jpg

14-1426330437-kolappoti.jpg

14-1426330423-kapaleeswarartemple.jpg

14-1426335316-gandhistatue.jpg

14-1426330395-horseriding.jpg

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.  

 

http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

டாலர் தோழர்கள்!

 

லகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த ஆண்டில் செலிபிரட்டிகளின் வருமானத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் முதல் நட்சத்திரக் கால்பந்து வீரர் மெஸ்சி வரை அனைவரின் வருமானம் குறித்த தகவல்கள்.

p88.jpg

மெரிக்க பாப் ஸ்டார் டெய்லர் ஸ்விப்ட் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 1989 வேர்ல்ட் டூர் என்ற பெயரில் இவர் மேற்கொண்ட இசைக் கச்சேரிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு மட்டும் இவரது வருமானம் 170 மில்லியன் டாலர்கள். அம்மாடியோவ்!

p88a.jpg

ஹாரி ஸ்டைல்ஸ், நியால் ஹோரன், லியாம் பெய்ன் மற்றும் லூயிஸ் டாம்லின்சன் ஆகியோர் அடங்கிய ஒன் டேரக்சன் இசைக்குழு கடந்த ஆண்டு 110 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி அதிக வருவாய் பெறும் செலிபிரட்டிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

p88b.jpg

 

மெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் பாட்டர்சன் 95 மில்லியன் டாலர் வருமானத்துடன் இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 30 கோடிக்கு மேற்பட்ட இவரது புத்தகப் பிரதிகள் விற்பனையானதுதான் இதற்குக் காரணம். வசதிதான்!

p88c.jpg

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திரக் கால்பந்து வீரர் கிரிஸ்டியன் ரொனால்டோவும் அமெரிக்க எழுத்தாளர் டாக்டர் பில் மெக்ராவும் 88 மில்லியன் டாலர் வருமானத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.  டபுள் தமாக்கா!

p88d.jpg

ரி ஏய்ப்பு சர்ச்சையில் சிக்கிய நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி 81.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளார். இதன் காரணமாக இவர் இந்தப் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். வா தல!

p88e.jpg

57 வயதிலும் அழகுப்பதுமையாய் வலம் வரும் பாப் பாடகி மடோனாவின் கடந்த ஆண்டு வருமானம் 76.5 மில்லியன் டாலர்கள். ஆத்தே!

p88f.jpg

டென்னிஸ் சூப்பர்ஸ்டார் ரோஜர் ஃபெடரர் பிரெஞ்ச் ஓப்பனிலிருந்து பாதியில் வெளியேறிய போதும் கடந்த ஆண்டு 68 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி இந்தப் பட்டியலில் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். லவ் ஆல்!

p88g.jpg

ஜாக்கி சான் கடந்த ஆண்டு பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டதால் அவருக்கு 61 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்தப் பட்டியலில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜாலி ஜாக்கி!

vikatan

Link to comment
Share on other sites

முதல் விலங்குக் காட்சி சாலை!

 
anima_2984084f.jpg
 

இன்று உலகில் நிறைய இடங்களில் விலங்குகள் காட்சி சாலை உள்ளது. முதன்முதலில் எப்போது விலங்குகள் காட்சி சாலையை அமைத்தார்கள்? உலகில் முதன் முதலாக கி.மு.1150-ம் ஆண்டில் சீன அரசர் ஒருவர் விலங்குகள் காட்சி சாலையை அமைத்தார். அந்தச் சாலையில் பல வகை மான்கள், பறவைகள், மீன்கள் ஆகியவை இருந்தனவாம். ஆனால், அது அரசக் குடும்பத்தினர் மட்டுமே செல்லும் இடமாக இருந்தது.

முதன்முதலில் மக்களின் பார்வையிடுவதற்குத் திறந்துவிடப்பட்ட விலங்குகள் காட்சி சாலை பாரீஸில் உள்ளது. 1793-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் காட்சிச் சாலையில் இறந்த உயிரினங்களின் சடலங்கள் பதப்படுத்திக் காட்சிக்கு வைக்கப்பட்டன. கூடவே, உயிருள்ள விலங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

உலகிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்கா லண்டனில் உள்ளது. 1829-ம் ஆண்டு திறக்கப்பட்ட ரீஜென்ட் பூங்காதான் அது. இதேபோல இன்னொரு பெரிய உயிரியல் பூங்கா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 1844-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகச் சிறந்த நேர்த்தியான விலங்குகள் காட்சி சாலை என்ற பெருமைக்குரியது இது.

tamil.thehindu

Link to comment
Share on other sites

 

p94.jpg

தோனிடா!

‘கூல் கேப்டன்’ தோனியின் வாழ்க்கை வரலாறு தற்போது ‘எம்.எஸ். தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகியுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கி, சுசந்த் சிங் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெயிலரை தோனி, ரசிகர்கள் முன்னிலையில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த ட்ரெயிலர் வெளியான அடுத்த நாளே, யூடியூப் தளத்தில் 33 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. #dhonitrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. செப்டம்பர் மாதத்தில் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எல்லாம் சரி. தோனிக்கு அம்மாவா பூமிகாவை நடிக்க வெச்செதெல்லாம் ஓவர் பாஸ்!

p94a.jpg

மகிழ்ச்சி!

ஐ.பி.எல். போட்டிகளில் சி.எஸ்.கே. அணி பங்கேற்க முடியாத வருத்தத்தில் இருந்த தமிழக மக்களை ஆறுதல்படுத்தும்விதமாக எட்டு அணிகள் கலந்துகொள்ளும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை தமிழக மக்களிடம் அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் வந்த ஹைடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வேஷ்டி, சட்டையோடு போய் அசத்தினார். தனது நெருக்கடியான பயணத்தின் இடைவெளியில் நெல்லைக்குச் சென்றபோது இருட்டுக்கடை அல்வாவை டேஸ்ட் பார்த்தவர், சென்னைக்கு வந்து ‘கபாலி’ படத்திற்குச் சென்றார். தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பயன்படுத்திய ‘#magizhchi’, ‘#OndraTONWeightDa’, ‘#TherikkaVidalama’, ‘#Semmaley’ போன்ற அனைத்து வார்த்தைகளும் நேஷனல் ட்ரெண்ட் ஆகின. மேத்யூ ஹைடன் இனி மாரிமுத்து ஹெய்டன்!

p94b.jpg

பொங்கியெழுந்த மக்கள்!

மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் மக்கள் நெருக்கடியும், காலதாமதமும் ரொம்பவே சகஜம். இந்நிலையில் கடந்த வாரத்தில் புறநகர் ரயில் வர 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமானது. பொறுமையிழந்த மக்கள் கூட்டம் ரயில்வே தடங்களில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் சிறியதாய் ஆரம்பித்த இந்தப் போராட்டம், பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வகையில் வலுத்தது. ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பாபு காலதாமதம் இன்றி இனி ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்தார். #BadlapurAgitation என்ற பெயரில் ட்விட்டரிலும் இந்த விவகாரம் தேசிய ட்ரெண்டில் இடம்பிடித்தது. நம்மைவிடக் கோபக்காரங்களா இருக்காங்க!

உலக இளைஞர்கள் தினம்!

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களைக் கெளரவிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் தினத்தைக் கொண்டாடி வருகிறது. இதனையொட்டி கடந்த வாரம் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரில் இருந்து பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை #InternationalYouthDay டேக்கில் தெரிவித்தனர். அதே தினத்தில்தான் உலக யானைகள் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இரண்டுமே இப்போ பிச்சை எடுத்துதான் வாழ வேண்டியிருக்கு எனத் தங்களைத் தாங்களே கலாய்க்கவும் நெட்டிசன்ஸ் தவறவில்லை. இந்த நேர்மை எங்கயோ கொண்டு போகப்போகுது பாஸ்!

பாக்ஸ் ஆபீஸ் சுல்தான்!

p94c.jpg

சல்மான் கான் நடிப்பில் வெளியான  ‘சுல்தான்’, இந்தியாவிற்குள் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையைப் படைக்கும் மூன்றாவது பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்னால் அமீர்கான் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பிகே’ திரைப்படமும், கடந்த ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘பஜ்ராங்கி பாய்ஜான்’ திரைப்படமும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளன. சும்மாவே ஆடும் சல்லுபாய் ரசிகர்கள் #SALMANTheSULTANOf300crClub என்ற டேக்கில், காலில் சலங்கை கட்டிவிட்டதுபோல ஆடியதில் இந்திய ட்ரெண்ட் ஸ்தம்பித்தது. சபாஷ் சல்லு!

வதந்தி!

சோஷியல் மீடியாவில் யாராவது பிரபலத்தைப் பற்றிய வதந்தி வேகமாகப் பரவி, பின்னர் அந்தப் பிரபலமே மறுப்பு தெரிவிப்பது சகஜம். ஆனால் இந்த முறை வதந்தியில் ட்விட்டரே சிக்கியது. ஏதோ ஒரு விஷமி 2017-ம் ஆண்டோடு ட்விட்டர் தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக வதந்தியைக் கிளப்பிவிட, பதறிப்போன நெட்டிசன்ஸ் #savetwitter என்ற டேக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்களைக் குவித்தனர். பின்னர் அந்நிறுவனம் இது வெறும் வதந்தி எனத் தெரிவித்த பின்னர்தான் நெட்டிசன்ஸ் பெருமூச்சு விட்டனர். வயித்துல பாலை வார்த்தீங்க!

p94d.jpg

ஜெய்ஹிந்த்!

இந்தியாவின் 70-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் தேசியக்கொடி ஏற்றினர். நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உலகத் தலைவர்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ட்விட்டரில் #IndependenceDayIndia என்ற டேக்கில் லட்சக்கணக்கான ட்வீட்கள் குவிந்ததை அடுத்து உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. வருடம் ஒருமுறை!

p94e.jpg

பறவையே எங்கு இருக்கிறாய்?

இருமுறை தேசிய விருதுகளும், பலமுறை பிலிம்ஃபேர் விருதுகளும் வென்றது மட்டுமில்லாமல் பல கோடிப்பேரின் இதயங்களை வென்றவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் திடீர் மரணம் அனைவரையும் உலுக்கியது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் #ripnamuthukumar #நாமுத்துகுமார் போன்ற டேக்குகளில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர். அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உனது கதையை காலமும் சொல்லும்!

vikatan

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் வினோதங்கள்!

 

லிம்பிக்கில் இதுவரை பல வித்தியாசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் மறக்கவே முடியாத சில...

யாரும்மா நீ?

p90.jpg

ஒலிம்பிக் துவக்க விழாவில் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களும், நிர்வாகிகளும் அணிவகுப்பது மரபு. 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்தியாவின் சார்பில் வீரர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஆனால் அணிவகுப்புத் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியக்கொடியைத் தாங்கி நடந்த சுஷில் குமார் அருகே சிவப்பு சட்டை, நீல நிற பேன்ட் அணிந்த ஒரு பெண்ணும் இந்திய வீரர்களுடன் அணிவகுத்தார். இந்திய அணிக்குச் சம்பந்தமே இல்லாத இந்த ‘மர்ம’ பெண் யாரென்றே வீரர்களுக்கே தெரியவில்லை. அதன்பின்புதான் அவர் பெயர் மதுரா நாகேந்திரா என்றும், பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்!

நம்பிக்கை நாயகன்!

p90a.jpg

பிரிட்டிஷ் தடகள வீரரான டெரக் ரெட்மன்ட், ஓட்டப்பந்தயத்தில் காமன்வெல்த், ஐரோப்பிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். 1992-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரை இறுதிப் போட்டியில் இவர் ஓடிக்கொண்டிருந்தபோது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் கீழே விழுந்தார். அதற்குள் மற்ற வீரர்கள் இவரைக் கடந்து பந்தய தூரத்தைக் கடந்திருந்தனர். வலியைப் பொறுத்துக்கொண்டு எழுந்த டெரக், தனது தந்தையின் உதவியோடு அழுதபடி ஒரு காலை ஊன்றி நொண்டிக்கொண்டே பந்தய தூரத்தைக் கடந்தார். இறுதிப்போட்டிக்குச் செல்லும் தகுதியை இழந்தபோதும், பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று இவருக்கு மரியாதை செலுத்தினர். விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக இன்றளவும் இந்தச் சம்பவம் நினைவுகூரப்படுகிறது!

வாத்துக்கே வழிவிட்டவர்!

p90b.jpg

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹென்றி ராபர்ட் பியர்ஸ் (செல்லமாக பாபி பியர்ஸ்) துடுப்புப்படகு வீரர். இரண்டாயிரம் மீட்டர் தொலைவைத் துடுப்புப்படகின் மூலம் கடக்கும் படகுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பாபி பியர்ஸ். 1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் கால் இறுதியில் பிரான்ஸ் வீரர் வின்சன்ட் சாவ்ரின் உடன் மோதினார். பந்தயத்தின் பாதிவழியில் வாத்து தனது குஞ்சுகளுடன் கரையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நீந்திச் சென்றது. இதைக்கண்ட பியர்ஸ் துடுப்பைச் செலுத்தாமல் நின்று வாத்து கடக்கும்வரை காத்திருந்தார். வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் இவர் நடந்துகொண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்பு தன்னை முந்திச் சென்ற சாவ்ரினை 30 வினாடி வித்தியாசத்தில் பியர்ஸ் வென்றது தனிக்கதை!

vikatan

Link to comment
Share on other sites

வெற்றிக்கு நிறம் தடையல்ல - #Saynotofairnesscream

            fairness%20cream.jpg

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா’. இது ஒரு தமிழ் படத்தோட வசனம்.
‘சிவாஜி’ படத்துல, ரஜினிகூட இருக்குற நிறத்தைவிட இன்னும் அதிகபடுத்தணும் என்று அவர் எடுக்கிற முயற்சியைப் பார்த்திருப்போம்.

ஒவ்வொருவரும் இருக்குற நிறத்தைவிட இன்னும் அதிக வெள்ளை ஆகணும்னு நினைச்சு, மார்க்கெட்ல் கிடைக்கிற எல்லா அழகு சாதன கிரீம்களையும் (Fairness cream) வாங்கிப் பயன்படுத்துறோம்.

வெள்ளையா இருந்தாத்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என பொய்யான ஓர் எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கு. ‘அவங்களுக்குத்தான் நிறைய விஷயங்களைப் பற்றி அறிவும் தெளிவும் இருக்கும். நிறம் குறைந்து உள்ளவர்களுக்கு எதைப் பற்றியும் தெளிவு இருக்காது’ என நம்மைநாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.

ஓர் ஆய்வில், ‘ஒருவர் தன்னை அழகாக வெளிக்காட்டிக்கொள்வதால், அவர் நிதி, சமூகம், அறிவார்ந்த செயல்கள், அரசியல் ரீதியாக பல இடங்களில் சாதிக்க முடியும்’ என  கண்டறிந்து உள்ளனர். அப்படி உள்ளவர்களுக்குப் பொதுவாகவே தங்களைப் பற்றிச் சுய நம்பிக்கையும், எல்லா விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். இந்த நம்பிக்கையும், முயற்சியும் வெற்றியில் முடியுமா என்பது தெரியாது. இருப்பினும், செய்யும் வேலைகளில் பாசிட்டிவ் ஆன எண்ணம் இருந்தால் அது வெற்றியில் முடிய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கறுப்பு ஏழையின் நிறம் அல்ல!

இங்கு அழகு என நாம் பேசுவது நிறத்தை அல்ல... நம்மை நாம் மற்றவர்களிடம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான். ஒருவரின் உடை, பேச்சு, தன்னம்பிக்கைதான் அவருடைய வெற்றியைத் தீர்மானிக்கும். நிறம் குறைந்தவர்கள் எங்கேயும் சாதிக்காமல் இல்லை. வெற்றி, நிறத்தைப் பொறுத்து அமைவது இல்லை என்பதை ஏற்கக்கூட நம்மில் பலருக்கு மனம் வருவது இல்லை. கறுப்பு என்பது ஏழையின் நிறமோ, தோற்பவர்களின் நிறமோ அல்ல... அமெரிக்க அதிபர் ஒபாமா கறுப்பு நிற சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் அந்த நாட்டை 8 வருடங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடிய உசேன் போல்ட் கறுப்பு நிறத்தவர்தான்.

தற்போதைய சூழலில் பலரும் நிறத்தை மெருகேற்றிக்கொள்ளும் எண்ணத்தில் கடைகளில் விற்கப்படும் கிரீம்கள், அழகு நிலையங்களில் உபயோகிக்கப்படும் பிளீச்சிங் பவுடர் போன்றவைகளைப் பயன்படுத்தித் தங்களின் சருமத்தை வீணாக்குகிறார்கள். விளம்பரங்களில் காட்டப்படுவது உண்மை என நம்பி அதைப் பயன்படுத்தி அவர்களின் பணம் மற்றும் நேரத்தைச் செலவு செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. விளம்பரங்களில் செய்யப்படும் கிராஃபிக்ஸ் போன்று நம் முகத்தில் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

        fairness%20cream%20one.jpg

ஒவ்வோர் ஆண்டும் அழகு சாதன கிரீம்களின் வியாபாரமும், அதைத் தயாரிக்கும் கம்பெனிகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மக்கள், இன்றைக்கும் இந்த கிரீம்கள் தங்களின் சருமத்தை மெருகேற்றும் என நம்புகிறார்கள். கம்பெனிகளின் வியாபாரம் அதிகரிக்க அவர்கள் செய்யும் விளம்பரங்களை எல்லா துறையிலும் சாதிக்கும் பலரும் நம்புகிறார்கள். அதைப் பயன்படுத்துவதால் எந்தவிதப்  பயனும் இல்லை என்று தெரிந்தும், கௌரவத்துக்காக ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள். இது 3 ஆயிரம் கோடி வியாபாரச் சந்தையாகவே மாறிவிட்டது.

ஹைட்ரோ குயினோன்!

கானா நாட்டின் உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகார துறை , இந்தத் தோல் வெளுக்கும் கிரீம்களில் ஹைட்ரோ குயினோன் (hydroquinone) மூலப்பொருள் இருப்பதால், அதை இந்த மாதம் தடை செய்யும்படி அறிவித்துள்ளது. ஹைட்ரோ குயினோன் என்ற மூலப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை புற்றுநோயை உண்டாக்கக் கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஹைட்ரோ குயினோன் சேர்க்கப்பட்ட பொருள்களை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தடை செய்துள்ளனர்.

நடந்து முடிந்த ஒலிம்பிக்கில்கூட பெண்களின் முயற்சியும், கடின உழைப்பும்தான் அவர்களை வெற்றி அடைய செய்ததே தவிர, விளம்பரங்களில் காட்டப்படும் முகத்துக்குப் பூசப்படும் கிரீம்கள் அல்ல...

மக்களுக்கு வெள்ளை நிறத்தின் மீது ஒரு மோகம். அதனால், அதை மேம்படுத்த கிடைக்கும் கிரீம்களை அதிகம் நம்புகிறார்கள். வெள்ளையாக இருப்பது ஒரு நிறமே தவிர, அது அரசியல் என்பது இல்லை. வெற்றிபெற்றவர்கள் அனைவரும் வெள்ளை நிறத்திலும் இருப்பது இல்லை... வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாரும் வெற்றிபெறுவதும் இல்லை. திறமையும், முயற்சியும்தான் ஒருவரை உயரவைக்கும் என நம்புங்கள்.

அழகு சாதன கிரீம்கள் டாக்டரின் பரிந்துரை இன்றி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

தோல் சுருக்கம்
முகத்தின் நிற மாற்றம்
காயங்கள்
சூரியக்கதிர்களால் பாதிப்பு
தேவையற்ற ரோமம் முகத்தில் வளர்தல்
தோல் அலர்ஜி
தோல் புற்றுநோய்

vikatan

Link to comment
Share on other sites

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p38.jpg

னைவி மட்டுமில்லை. ரூம்மேட் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான். என்ன சொன்னாலும் தலையாட்ற ஒருத்தன், எதுக்கெடுத்தாலும் முரண்டுபிடிக்கிற ஒருத்தன், அட்டு சோம்பேறியா ஒருத்தன், எக்ஸ்ட்ரா ஸ்மார்ட்டா இன்னொருத்தன்... பேச்சுலர்ஸ் இருக்கிற வீட்டில் இதுதான் பெரும்பாலான நிலைமை. ‘அதுக்கு என்ன பாஸ் பண்றது? இவனுகளோடதான் வாழ்க்கையை ஓட்டணும்ங்கிறது நம்ம தலைவிதி’னு தலையில் கை வெச்சு உட்கார்ந்துடாதீங்க. உங்களுக்குப் பிடிச்ச, உங்க எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரி நாலுபேர் சேர்ந்தா, அது ரூம் இல்லை. சொர்க்கம். இதோ, ‘ஃப்ளாட் சாட்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இப்பவே இன்ஸ்டால் பண்ணுங்க. அத்தனை லட்சணமும் பொருந்திப்போற பசங்களை மட்டும் ரூம்மேட்ஸா வெச்சுக்கோங்க!

p38a.jpg

அப்ளிகேஷனைத் தரவிறக்கி, நமக்கான புரொஃபைல் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் ரூம்மேட் எப்படி இருக்க வேண்டும் என அப்ளிகேஷனில் பதிவு செய்தால் போதும். நீங்கள் எதிர்பார்க்கும் அதே தகுதிகளோடு இருக்கும் இன்னொரு நபர், உங்களைச் சாட்டிங்கில் தொடர்புகொள்வார். ‘சமைக்கத் தெரியுமா?’, ‘பாத்திரம் கழுவுவியா?’, ‘சரக்கு அடிக்கலைனாலும், கம்பெனி கொடுப்பியா?’ என உங்கள் இஷ்டத்திற்குக் கேள்விகளைத் தட்டலாம். ‘அட, நாம எதிர்பார்த்ததை அப்படியே கேட்கிறாரே?’னு சாட்டிங் பண்ணவருபவரும் ஃபீல் பண்ணா, ரூமுக்கு ஒரு அடிமை ரெடி! ‘தேய்க்காத பாத்திரத்தைப் பார்த்தாலே எனக்கு அலர்ஜி ஆயிடும்’, ‘சமையலை நீங்களே பார்த்துக்கோங்களேன் பாஸ்’, ‘ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் எனக்குத் தூக்கம் கண்ணைக் கட்டிடும்’ என உங்களோட அத்தனை கேள்விக்கும் ‘அது சரிப்பட்டு வராதே பாஸூ’ என இழுத்துக்கொண்டிருந்தால், நாம எஸ்கேப்! இப்படியாக, ஒவ்வொரு அடிமைகளாகத் தேடித் தேடி எடுத்தால், அட்டகாசமான ‘பேச்சுலர்ஸ்’ உங்களுக்குக் கிடைக்கலாம்! ரூம் மேட்ஸைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது சிரமங்கள் இருந்தால், அதற்கென ஒரு பிரத்யேக உதவியாளரையும் இலவச இணைப்பாக வழங்குகிறது இந்த அப்ளிகேஷன்.

இதுதவிர, வீடு தேடுவது, நமக்குப் பிடித்த வாடகை வீட்டை அப்ளிகேஷன் வழியாகவே டீல் பேசுவது போன்ற இன்னபிற வசதிகளும் இதில் அடக்கம். இப்போதைக்கு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் ‘ஃப்ளாட் சாட்’ அப்ளிகேஷன், கூடிய விரைவில் சென்னைக்கு அறிமுகம் ஆகவிருக்கிறதாம்! அப்புறமென்ன? நமக்கான ரூம் மேட்ஸைத் தேடுங்க பாஸ்!

டவுன்லோடு லின்க் : https://play.google.com/store/apps/details?id=in.flatchat

vikatan

Link to comment
Share on other sites


அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்
 
 

article_1472446062-u,9%5B.jpgஒருவர் அறிஞர், மேதாவியாக உருவாகுவதற்கு அவரது ஆசிரியர், பெற்றோர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது.

அமைதியான சுற்றுச் சூழலும் முக்கிய காரணமாகும். எதிர்வீட்டுச் சண்டை, சதா ஒலிபெருக்கிகளின் பலத்த ஓசை போன்ற அமைதியற்ற சூழல் மாணவர்களை மட்டுமல்ல, சாதாரணமான சகல பிரஜைகளையும்; திக்குமுக்காட வைக்கின்றது.

சுற்றுப்புறத்தில் அல்லது வெளியே வாசம் செய்யும் சிலர், கல்வி கற்பவர்களைக் கண்டால் பிடிக்காத நபர்களைப் போல் விஷத்தைக் கக்குவார்கள். உதவி புரியாத உபத்திரவவாதிகள் இவர்கள்.

பொறாமையற்ற, பரந்த மனப்பான்மையுடைய நல்ல இதயம் கொண்டோர் வாழும் இடம் தூய்மையுடன் துலங்கும். பிள்ளைகள் அமைதியுடன் கற்பதற்கு அனுமதியுங்கள்.  

 
Link to comment
Share on other sites

தேசிய விளையாட்டு தினம்: பிராட்மேன், ஹிட்லர் பாராட்டிய தயான் சந்த்… #HBDDhyanChand

daya1.jpg

இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். அவரைப் பற்றி பலரும் அறியாத சில விஷயங்கள் இதோ!

சந்த் என்பது இவரது இயற்பெயர் அல்ல, அவருடைய நன்பர்கள் அவருக்கு அளித்த பெயர். இவர் தன் 16வயதில் இந்தியப் போர்ப்படையில் சேர்ந்தார். பகல் பொழுதில் வேலை, இரவில் விளையாட்டுப் பயிற்சி. நிலவு வரும் வேலையில் பயிற்சி செய்வதால் இவரை இவரது நன்பர்கள் சந்த் என்று அழைத்தனர். சந்த் என்றால் ஹிந்தியில் நிலவு என்று அர்த்தம்.

இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. தன் அசாத்தியமான ஹாக்கி பந்தை கையாலும் திறனைக் கண்டு இவரை தீ விஸார்ட்(The Wizard)-மந்திரவாதி என்று அழைத்தனர். இவர் தன்னுடைய சர்வதேச போட்டிகளில் 400 மேற்ப்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

1928ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் சந்த் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியா அந்த ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற செய்தியை ஒரு நாளிதல் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது “This is not a game of Hockey, but magic. Dhyan Chand is, in fact the magician of Hockey”. இதன் தமிழ் அர்த்தம் “இது ஹாக்கி விளையாட்டல்ல, மாயாஜாலம். தயான் சந்த் இந்த ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி”. 

1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அமெரிக்காவை 24-1 மற்றும் ஜப்பானை 11-1 என்று வீழ்த்தியது. இதில் தயான் சந்த் 12 கோல்கள் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங் 13 கோல்கள் அடித்தனர். உலகம் இவர்களை “ஹாக்கி இரட்டையர்கள்” என்று அழைத்தது.

d1sds.jpg

 

இவர் இவ்வளவு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தாலும் சந்த்தை பொருத்தவரையில் எது சிறந்த போட்டி என்று கேட்டால் கல்கத்தா கஸ்டம்ஸ் மற்றும் ஜான்சி ஹீரொஸ்-கு இடையே 1933ஆம் ஆண்டு நடந்த பெய்டன் கோப்பை இருதிப் போட்டியே என்று அவரே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “அந்த நாட்களில் கல்கத்தா அணி மிகப் பெரிய அணி. ஷௌகட் அலி, ஆசாத் அலி, கிலௌட் டீஃஹோல்ட்ஸ், சீமன், மொசின் போன்ற பெரிய வீரர்கள் இருந்தார்கள். எங்கள் அணி மிகவும் இளம் அணி. ரூப் சிங், இஷ்மாயில் தவிர சிறந்த வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் எங்கள் அணி “செய் அல்லது செத்து மடி” என்ற மனப்பான்மை கொண்ட வீரர்கள் இருந்தார்கள். இது ஒரு பெரிய ஆட்டம், திருப்பங்கள் நிறைந்து இருந்தன, ஒரு சிரு வாய்ப்பு எங்களுக்கு வெற்றியை அளித்தது.கல்கட்டா அட்டம் சிறப்பு, எங்களுடைய கோல்கள் அவர்களுடைய கருனையில் கிடைத்தது. திடீரென நான் பந்தை கொண்டு உள்ளே சென்றேன். பந்தை இஷ்மாயிலுக்கு அடித்தேன். அவர் ஜெஸ்ஸி ஓவென்ஸ் வேகத்தில் சென்றார். ஒரு சிரு குழப்பம் எதிர் அணியில். அதை தனக்கு சாதகமாக மாற்றிய இஷ்மாயில் கோல் அடித்தார். எங்கள் அணி வெற்றி பெற்றது” என்று கூறினார்.

1935ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவின் ஒரு தலைசிறந்த கிரிக்கட் வீரர் டான் பிராட்மன் சந்த்-ஐ அடிலைடு மைதானத்தில் சந்தித்தார். அப்போது சந்த்-ஐ அவர் “இவர் கிரிக்கட்டில் ரன்கள் சேர்ப்பது போல ஹாக்கியில் கோல்கள் அடிக்கிறார்” என்று புகழாரம் சுட்டினார்.

ஹிட்லர் கண்டு வியந்த மனிதர் தான் தயான் சந்த். நாம் அனைவரும் ஹிட்லரை கண்டு வியந்திருப்பொம்,ஆனால் ஹிட்லரே தயான் சந்த்-ஐ கண்டு வியந்துள்ளார். அது 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக். இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதியது, இந்தியா. ஆவலுடன் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் ஹிட்லர். இந்தியா வெற்றி பெற்றது. தயன் சந்த் அருமையாக விளையாடினார். தயான் சந்த்-இன் ஆட்டத்தை கண்டு வியந்த ஹிட்லர் அவருக்கு மேஜர் பதவி, ஜெர்மனி நாட்டுரிமை, மற்றும் பல சலுகைகளை அளித்தார். அவர் நினைத்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் பணிவாக மறுத்துவிட்டார்.

na1.jpg

 

கோல்கள் பல குவித்த தயான் சந்த்-இன் சுயசரிதையான “கோல்!” என்ற புத்தகத்தை 1952ஆம் ஆண்டு மெட்ராஸில்( தற்போதைய சென்னை) ஸ்போர்ட்ஸ் & பாஸ்டைம் வெளியிட்டது.

ஒருமுறை சந்தின் ஹாக்கி மட்டையில் காந்தம் உள்ளதா என்று உடைத்துப் பார்த்தனர் அதிகாரிகள். அதற்கு பதில் கூறும் விதமாக அடித்த ஆட்டத்தில் ஒரு கத்தடியை கொண்டு ஹாக்கி விளையாடினார். அதிலும் கோல்கள் அடித்தார்.
தயான் சந்த் 3ஆம் அக்டோபர் 1979ஆம் ஆண்டு இறந்து போனார். ஆனால் அவர் இறந்த பிறகு கூட இன்றைய வரைக்கும் ஹாக்கியில் ஒரு ஜாம்பவானாகவே திகழ்கிறார். மேலும் இவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது இந்திய அரசு. மேலும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோனாச்சாரியா விருது மற்றும் பத்ம புஷன் விருது ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது.

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.