Jump to content

வட மாகாண விளையாட்டு செய்திகள்


Recommended Posts

வரலாற்றுச் சாதனை படைத்த சென்.மேரிஷ்
 

article_1448615640-2.jpg

-குணசேகரன் சுரேன்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தால் பிரிவு – 2 அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கொழும்பு லெவன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது.

இந்த இறுதிப்போட்டி அரியாலை கால்ப்பந்தாட்ட மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை நடைபெற்றது. மொத்தமாக 74 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் கொழும்பு லெவன் ஸ்ரார்ஸ் அணியும் நாவாற்துறை சென்.மேரிஷ் அணியும் மோதின.

முதற் பாதியாட்டத்தில் சென்.மேரிஷ் அணியின் வீரன் செபமாலைப்பிள்ளை யூட் அடித்த கோல் ஓவ் சைட் கோல் என நடுவரால் அறிவிக்கப்பட, முதற்பாதியாட்டம் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தின் சென்.மேரிஷ் அணி வீரர் ஒருவர், விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 அணிகளுடன் சென்.மேரிஷ் அணி விளையாடியது. இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. இதனால் மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் கொழும்பு லெவன் அணி 1 கோலைப் போட்டது. எனினும் அதற்கு ஈடுகொடுத்து ஆக்கிரோஷமாக ஆடிய சென்.மேரிஷ் அணிக்கு, எஸ்.நிதர்சன் ஒரு கோலை அடித்தார்.

ஆட்டம் 1:1 என்று சமநிலையில் இருந்தமையால், சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் சென்.மேரிஷ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம் பிரிவு – 2 தேசிய சம்பியனாக சென்.மேரிஷ் அணி மாறியது.

வெற்றிபெற்ற சென்.மேரிஷ் அணிக்கு 2 இலட்சம் ரூபாயும், இரண்டாம் இடம்பெற்ற கொழும்பு லெவன் ஸ்ரார்ஸ் அணிக்கு 1 இலட்சம் ரூபாயும் பணப்பரிசில் வழங்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/160093/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%B7-#sthash.YruPrdzd.dpuf
Link to comment
Share on other sites

கொக்குவில் இந்து அசத்தல் வெற்றி

December 03, 2015

தேசியமட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் வத்தளை இலேசியம் அணியை வீழ்த்தியுள்ளது கொக்குவில் இந்துக்கல்லூரி.

பாடசாலைகளின் கூடைப்பந்தாட்டச் சங்கம் தேசிய ரீதியாக நடத்தும் 15வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப் பந் தாட்டத் தொடரின் ஆட்டங்கள் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணியை எதிர்த்து வத்தளை இலேசியம் சர்வதேச பாடசாலை அணி மோதிக் கொண்டது. இதில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணி 46:39 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. இன்று இடம் பெறும் ஆட்டத்தில் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணியுடன் கொக்குவில் இந்துக்கல்லூரி அணி மோதவுள்ளது.

1

http://www.onlineuthayan.com/sports/?p=4370&cat=3

41ஆவது தேசியமட்ட பளுதூக்கல் தொடர் வடமாகாணத்துக்கு வெள்ளியும் வெண்கலமும்

December 03, 2015

தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வட மாகாணத்துக்கு ஓர் வெள்ளியும் ஓர் வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளன.

41ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான இருபாலாருக்குமான பளுதூக்கல் போட்டி கொழும்பு டொறிங்ரன் உள்ளரங்கில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக் கல் போட்டியில் ஆசிகா 58 கிலோ எடைப்பிரிவில் 130 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும், டினேஜா 63கிலோ எடைப் பிரிவில் 115 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். ஆண்களுக்கான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

image-e58fc9c9a71f3654c160f7db02f9ab89199cb76f51f9cdd36be666c19c8512dd-Vimage-25de9e5f2383f85a1a8fc65d854d3f8f766f6681e4c4695b890b5213ae3908f5-V

http://www.onlineuthayan.com/sports/?p=4393&cat=3

சேவியரிடம் வீழ்ந்தது கழுகுகள்

December 03, 2015

வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை 4:2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக் கழகம்.

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக் கழகம் மோதியது. முதல் பாதியிலேயே இருஅணியின ரும் தலா 2 கோல்களைப் பதிவுசெய்து அசத்த ஆட் டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இரண்டாம் பாதியில் கழுகுகளால் தொடர்ந்து ஆதிக்கத்தைத் தொடர முடியவில்லை. சேவியர் மேலும் இரு கோல்களைப் பதிவுசெய்ய 4:2 என்று வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அந்த அணி.

http://www.onlineuthayan.com/sports/?p=4399&cat=11

மகாஜனக் கல்லூரிக்கு வெற்றி

December 03, 2015

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கும் குருநாகல் மல்லிகாதேவி மகா வித்தியாலயத்துக்கும் இடையே நடைபெற்ற 15 வயதுப் பிரிவுக்கு உட்பட்ட நட்பு ரீதியிலான உதைபந்தாட்டத் தொடரில் மகாஜனக்கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மகாஜனக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் ஆண்களுக்கான ஆட்டத்தில் 2:0 என்ற கோல்கணக்கிலும், பெண்களுக்கான ஆட்டத்தில் 3:0 என்ற கோல்கணக்கிலும் மகாஜனக்கல்லூரி வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=4402&cat=11

அமெரிக்கன் உதைபந்தாட்டத் தொடரில் வூல்ப் அணி மூன்றாம் இடம்

December 03, 2015

தேசியமட்டத்தில் நடத்தப்பட்ட அமெரிக்கன் உதைபந்தாட்டத் தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றது யாழ்ப்பாணம் வூல்ப் அணி. குறித்த தொடருக்காக யாழ். மாவட்டத்தில் இருந்து வாரியர்ஸ், ஈகிள்ஸ் அணிகளும் கலந்து கொண்டிருந்தன. வாரியர்ஸ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.

 

?????????????

http://www.onlineuthayan.com/sports/?p=4381&cat=11

Link to comment
Share on other sites

இன்றைய மோதல்கள் – 05.12.2015

December 05, 2015

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான உதைபந்தாட்டத் தொடரில் பருத்தித்துறை லீக்கில் பதிவுசெய்த அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்திலும் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்திலும் ஆகிய மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த தொடரில் இன்று அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் காலை 9மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் காலை 10மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பொலிகை பாரதி விளையாட்டுக் கழகமும் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகமும் பிற்பகல் 4மணிக்கு இடம்பெறும் மற்றொரு ஆட்டத்தில் சக்கோட்டை சென்.தோமஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

எப்.ஏ. தொடரில் வவுனியா மாவட்ட லீக்கில் பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் இன்று சனிக்கிழமை வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் காலை 9 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் 786 அணியை எதிர்த்து சண் சையின் அணி மோதவுள்ளது. மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து அரபியன் போயிஸ் அணி மோதவுள்ளது

http://www.onlineuthayan.com/sports/?p=4484&cat=9

கௌரவிக்கும் நிகழ்வு

December 05, 2015

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் ஒலுமடு அ.த.க.பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய யோ.கிரிதரன் 17வயதுப் பிரிவுக்கு உட்பட்ட 1500 மீற்றர் ஓட்டத்தை 4நிமிடம் 14செக்கன்களில் ஓடி முடித்து 4ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.

2

இவரைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் கு.விமலேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. விருந்தினர்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் கி.மங்களகுமார் ஆசிரியர் ஆலோசகர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=4488&cat=3

யாழ். இந்துவின் மேசைப்பந்தாட்டத் தொடரில் யாழ். இந்து மகளிர் அணி சம்பியனானது

December 05, 2015

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். இந்துக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு கல்வி பயின்ற உயர்தர மாணவர்களால் வடமாகாண ரிதியாக நடத்தப்பட்ட அழைக்கப்ட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்குமான மேசைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் யாழ். இந்து மகளிர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

kkஇறுதியாட்டத்தில் யாழ். இந்து மகளிர் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை ஆர்.சி. அணி மோதியது. மூன்று ஒற்றையர் ஆட்டம், இரு இரட்டையர் ஆட்டங்களைக் கொண்டதான இறுதியாட்டத்தில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஆனைக்கோட்டை ஆர்.சி. சார்பில் சுகன்யாவும் யாழ். இந்து மகளிர் கல்லூரி சார்பில் மதுமதியும் மோதிக் கொண்டனர். இதில் சுகன்யா 11:3, 11:7, 12:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றார்.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஆனைக்கோட்டை ஆர்.சி. சார்பில் அனோசிகாவும், யாழ். இந்து மகளிர் சார்பில் நர்மதாவும் மோதிக் கொண்டனர். நர்மதா 9:11, 11:6, 11:4, 11:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற ஆட்டம் சமநிலையானது.
மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஆனைக்கோட்டை ஆர்.சி. சார்பில் கம்சிகாவும், யாழ். இந்து மகளிர் அணி சார்பில் மகின்சாவும் மோதிக் கொண்டனர். இந்த செற்றை மகின்சா 11:8, 11:8, 11:9 என்ற புள்ளிகளின் கைப்பற்ற ஒற்றையர் சுற்றுக்களின் முடிவில் இந்து மகளிர் 2:1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
முதலாவது இரட்டையர் ஆட்டத்தில் ஆனைக்கோட்டை ஆர்.சி. சார்பில் பிரியங்கா, சுகன்யா இணையும், யாழ். இந்து மகளிர் சார்பில் மதுசா, நர்மதா இணையும் மோதிக்கொண்டனர். இதில் ஆனைக்கோட்டை ஆர்.சி. அணி 11:13, 4:11, 11:8, 11:9, 11:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.
கிண்ணத்தை தீர்மானிக்கும் இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் ஆனைக்கோட்டை ஆர்.சி. சார்பில் தேசிகா, அனோசிகா இணையும், யாழ். இந்து மகளிர் சார்பில் மதுசா, யதுர்சனா இணையும் மோதிக்கொண்டனர். இதில் யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி 11:2, 11:8, 11:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற கிண்ணம் யாழ். இந்து மகளிரிடம் சென்றது

http://www.onlineuthayan.com/sports/?p=4497&cat=3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பருத்தித்துறை லீக்கின் முடிவுகள்

December 17, 2015

பருத்தித்துறை காற்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையிலான 5 வீரர்கள் பங்குபற்றும் காற்;பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களின் முடிவுகள்.

 

முதலாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் பருத்தித்துறை ஜக்கிய அணியை எதிர்த்து திக்கம் இளைஞர் அணி மோதிக் கொண்டது. இதில் திக்கம் இளைஞர் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் உதயதாரகை அணியை எதிர்த்து தொண்டமனாறு ஒற்றுமை அணி மோதிக் கொண்டது.

இதில் உதயதாரகை அணி 2:0 என்ற கோல் கணக்க்கில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் நெற்கொழு கழுகுகள் அணியை எதிர்த்து பொலிகை பாரதி அணி மோதிக் கொண்டது. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றமையால் ஆட்டம் சமநிலைத் தகர்ப்பு உதைகள் வரை நீடித்தது. சமநிலைத் தகர்ப்பு உதைகளில் நெற்கொழு கழுகுகள் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=5883&cat=11

மருதநிலாவுக்கு இலகுவெற்றி

December 17, 2015

எவ்.ஏ. கிண்ணத் தொடரில் வவுனியா மாவட்ட ஆட்டங்களில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற ஆட்டமொன்றில் மருத நிலா அணி வெற்றிபெற்றுள்ளது.

 

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடர் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் வவுனியா மாவட்ட கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து ஏ.பி.சி. அணி மோதிக் கொண்டது. இதில் மருதநிலா அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=5881&cat=11

இன்றைய மோதல்கள்

December 17, 2015

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் காற்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் உரும்பிராய் சென்.மைக்கல் அணியை எதிர்த்து புத்தூர் விக்னேஸ்வரா அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து புத்தூர் எவரெஸ்ட் அணி மோதவுள்ளது.

எவ்.ஏ. கிண்ணத் தொடர்

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் ஏவ்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில், வவுனியா மாவட்ட லீக்கில் பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அல்மாதர் அணியை எதிர்த்து அம்மன் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=5879&cat=9

Link to comment
Share on other sites

டயமன்ஸ் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி

December 18, 2015

இறுதிவரை பரபரப்பாக அமைந்த ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம்.
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையில் நடத்தும் கால்பந்தாட்டத் தொடர் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின.

foot
ஆட்டத்தின் முதல் பத்து நிமிடத்துக்குள் டயமன்ஸ் அணியின் துசி தனது அணியின் முதல் கோலை பதிவுசெய்தார். அடுத்த சில நிமிடங்களில் துசியால் மற்றுமொரு கோல் பதியப்பட டயமன்ஸ் பலமான ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலையில் முடிவடைந்தது முதல் பாதி. இரண்டாம் பாதியில் வெற்றியை உறுதி செய்யும் முனைப்பில் டயமன்ஸ் அணியும் பழிதீர்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நவஜீவன்ஸ் அணியும் முனைப்புக் காட்ட ஆட்டத்தில் அனல் பறந்தது.

அதற்கேற்ப விதிமுறை மீறல்களும் தாராளமாக இடம்பெற்றன. இரண்டாம் பாதியில் மட்டும் டயமன்ஸ் அணியைச் சேர்ந்த 4 வீரர்களுக்கும் நவஜீவன்ஸ் அணியின் ஒருவருமாக மொத்தம் 5 வீரர்கள் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டனர். கோல்கணக்கில் மாற்றம் ஏற்படவில்லை. முடிவில் 2:0 என்று வெற்றிபெற்றது டயமன்ஸ் அணி. இந்தத் தொடரில் யங்கம்பன்ஸ் அணி ஏற்கனவே இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=5971&cat=11

இன்றைய மோதல்கள்

December 18, 2015

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அண்ணா ஸ்ரார் அணியை எதிர்த்து திருக்குமரன் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் ஜேம்ஸ் அணியை எதிர்த்து றேஞ்சர்ஸ்; அணி மோதவுள்ளது.


எவ்.ஏ. கிண்ணத்தொடர்
இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் ஏவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில், வவுனியா மாவட்ட கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் யுனிபைட் அணியை எதிர்த்து அல்மாதர் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=5976&cat=9

விக்னேஸ்வரா, ஞானமுருகன் அணிகள் வெற்றி

December 18, 2015

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.  இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் உரும்பிராய் சென்.மைக்கல் அணியை எதிர்த்து புத்தூர் விக்னேஸ்வரா அணி மோதிக் கொண்டது.

 

இதில் புத்தூர் விக்னேஸ்வரா அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து புத்தூர் எவரெஸ்ட் அணி மோதிக் கொண்டது. இதில் மயிலங்காடு ஞானமுருகன் அணி 8:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=5978&cat=11

பருத்தித்துறை லீக்கின் கால்பந்தாட்ட முடிவுகள்

December 18, 2015

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக், தனத அங்கத்துவக் கழகங்களுக்கு இடையே 5 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடர் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. இந்தத் தொடரில் நேற்று முன்திம் இடம்பெற்ற ஆட்டங்களின் முடிவுகள்.


வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக் கழகமும் மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகமும் மோதின பலத்த போராட்டத்தின் பின் சென்.சேவியர் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை விளையாட்டுக் கழகமும் மோதின. ஆட்டம் முழுவதும் இரு அணியினராலும் கோல்களைப் பதிவு செய்து கொள்ள முடியவில்லை.

இதனால் வெற்றியாளரை சமனிலை தவிர்ப்பு உதைமூலம் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் 3:2 என்று சென்.அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.  மூன்றாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் பருத்திதுறை ஜக்கிய அணியை எதிர்த்து திக்கம் இளைஞர் அணி மோதிக் கொண்டது. இதில் திக்கம் இளைஞர் அணி 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=5987&cat=11

Link to comment
Share on other sites

கோலூன்றிப் பாய்தலில் வடக்குக்கு தங்கமும் வெண்கலமும்

December 19, 2015

01

41ஆவது தேசியமட்ட தடகளத்; தொடரில் வடமாகாணத்துக்கு ஓர் தங்கம், ஓர் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.  பியகம மகிந்த ராஐபக்ச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்தத் தடகளத் தொடரில், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பெண்களுக்கான கோலுன்றிப் பாய்தலில் வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கிய அனித்தா 3.25 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து தங்கப் பதக்கதினையும், காவேரி 2.85 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.

1

http://www.onlineuthayan.com/sports/?p=6097&cat=3

இன்றைய மோதல்கள்

December 19, 2015

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் 5 ஸ்ரார் அணியை எதிர்த்து சென்.பீற்றர் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் யங்கம்பன்ஸ் அணியை எதிர்த்து காந்திஜி அணி மோதவுள்ளது.


எவ்.ஏ. கிண்ணத் தொடர்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏவ்.ஏ. கிண்ணத்துக்காக நடத்தப்படும் கால்பந்தாட்டத் தொடரில், வவுனியா மாவட்டத்துக்கான ஆட்டங்கள் வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் 786 அணியை எதிர்த்து சண் சைன் அணி மோதவுள்ளது. மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்;தில் அல்ஹிஜிரா அணியை எதிர்த்து கோல்டன் பிரதர்ஸ் அணி மோதவுள்ளது.


பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கத் தொடர்
இலங்கைப் பாடசாலைகளின் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் 13வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரின் ஆட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் யாழ். இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாய அணி மோதவுள்ளது.


கலைமதி வி.கழகத் தெடர்
நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையில் முன்னெடுத்துவரும் (அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் தொடர்) கால்பந்தாட்டத் தொடர் குறித்த கழகத்தின் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறும் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பட்டி நவஜீவன்ஸ் விளையாட்டு;க் கழகம் மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6101&cat=9

வளர்மதி, இருதயராஜா அணிகளுக்கு வெற்றி

December 19, 2015

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் வளர்மதி, இருதயராஜா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.


உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டங்களில் மாலை 4 மணிக்கு இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் புத்தூர் சரஸ்வதி; அணியை எதிர்த்து வளர்மதி அணி மோதிக் கொண்டது. இதில் வளர்மதி அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் யாழ். ஜக்கிய அணியை எதிர்த்து மெலிஞ்சிமுனை இருதயராஜா அணி மோதிக் கொண்டது. இதில் மெலிஞ்சிமுனை இருதயராஜா அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6103&cat=11

Link to comment
Share on other sites

பலாலி விண்மீன், சேவியர் இறுதி போட்டியில்

December 20, 2015

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் தொடரில் விறுவிறுப்பாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டங்களில் எதிரணிகளை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம் மற்றும் சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக் கழகம் என்பன.
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் அணிக்கு 5 வீரர்கள் பங்குபற்றும் வகையிலான கால்பந்தாட்டத் தொடரை முன்னெடுத்து வருகிறது. வல்வெட்டித்துறை நெடியகாடு விளையாட்டக் கழக மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்தத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன.

01

இளைஞர் – சென்.சேவியர் முதலாவதாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளதும் பின்வரிசை வீரர்கள் சிறப்பாகச் செயற்பட கோல் கணக்கு எதுவும் ஆரம்பிக்கப்படாமலே முடிவடைந்தது முதல் பாதி. இரண்டாம் பாதியிலும் அதே நிலைமைதான். பதின்ம நிமிடங்கள் வரை சமனிலைத் தன்மையே தொடர்ந்து கொண்டிருந்தது. 14 ஆவது நிமிடத்தில் சக்கோட்டை சென்.சேவியரின் குமாரதீபன் கோலைப் பதிவுசெய்ய சென்.சேவியரின் ஆதிக்கம் ஆரம்பமானது. நிமிடங்கள் உருண்டோட சேவியருக்கான வாய்ப்புக்கள் பலமாகிக் கொண்டிருந்தன. குமாரதீபனால் பதியப்பட்ட அந்தக்கோலே ஆட்டத்தின் ஒரே கோலுமாக அமைய 1:0 என்று வெற்றிபெற்றது சென்.சேவியர் அணி.

1

 

விண்மீன் – சென்.அன்ரனிஸ்

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும் மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் மோதின. அரையிறுதிக்கான அடையாளமே இந்த ஆட்டத்தில் இருக்கவில்லை. ஆரம்பம் முதல் முடிவு வரை விண்மின் அணி ஏக ஆதிக்கம் செலுத்தியது. டேமியனின் ஹெற்றிக் கோல்களும் கைகொடுக்க விண்மீன் 6:0 என்று வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு இலகுவாகத் தகுதி பெற்றது. விண்மீன் சார்பாக டேமியன் 4 கோல்களையும் ஜோன் கெனடி மற்றும் அருள்தாஸ் இருவரும் தலா ஓர் கோலையும் பதிவுசெய்தனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6179&cat=11

அஞ்சல் ஓட்டத்தில் வடமாகாணத்திற்க்கு வெண்கலப்பதக்கம்

December 20, 2015

jjj

35தொடக்கம் 40வயதுப் பிரிவினருக்கான 4×வீரர்கள் பங்குபற்றும் 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வடமாகாணத்தின் சார்பில் கலந்து கொண்ட எஸ்.பாலமுரளி, என். பிரசாந்தன், கே.கியோமார், எஸ்.செல்வச்சந்திரன் ஆகியோரைக்கொண்ட அணி வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.

http://www.onlineuthayan.com/sports/?p=6183&cat=3

இன்றைய மோதல்கள்

December 20, 2015

எவ்.ஏ. கிண்ணத்தொடர் (கிளிநொச்சி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் எவ்.ஏ. கிண்ணத்துக்காக நடத்தப்படும் கால்பந்தாட்டத் தொடரில் கிளிநொச்சி மாவட்ட லீக்கில் பதிவு செய்த கழகங்களின் ஆட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றவுள்ளது. அதில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அளம்பில் இளந் தென்றல் அணியை எதிர்த்து நாச்சிக்குடா சென்.மேரிஸ் அணி மோதவுள்ளது.

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் தெல்லிப்பழை நாமகள் அணியை எதிர்த்து உரும்பிராய் சரஸ்வதி அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் றெட்றேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதவுள்ளது.

மேசைப்பந்தாட்டத் தொடர்ஏசியன் ஜேர்மன் விளையாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் நடத்தப்படும் மேசைப் பந்தாட்டத் தொடர் நேற்று முதல் யாழ். மத்திய கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் ஆண்களுக்கான ஆட்டங்கள் இன்று காலை 7.30 மணி முதல் இடம்பெறவுள்ளன. அரச அலுவலருக்கான ஆட்டங்கள் நாளை திங்கட்கிழமையும் மறுநாள் செவ்வாய்க்கிழமையும் காலை 8 மணிமுதல் இடம்பெறவுள்ளன. தொடரில் பங்குபற்ற விரும்பும் யாழ். மாவட்ட அரச அலுவலர்கள் யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்டச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
எவ்.ஏ. கிண்ணத்தொடர் (பருத்தித்துறை)

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் எவ்.ஏ. கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் தொடரில் பருத்தித்துறை லீக்கில் பதிவுசெய்துள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகமும் காலை 10 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வலிகாமம் நாமகள் விளையாட்டுக் கழகமும் முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெறும் மூன்றாவது ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் மற்றொரு ஆட்டத்தில் மணற்காடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=6187&cat=9

பட்டம் விடும் போட்டி

December 20, 2015

 

pattam2

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடத்தும் பட்டம் விடும் போட்டி தைப்பொங்கல் தினத்தன்று உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் ஆர்வலர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் தம்முடன் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6189&cat=3

டயமன்ஸ் – யங்கம்பன்ஸ் இறுதியில் இன்று மோதல்

December 20, 2015

நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையில் நடத்திவரும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் வதிரி டயமன்ஸ் வளையாட்டக் கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்று பிற்பகல் 3 மணியளவில் மோதவுள்ளது. தொடருக்கான பரிசளிப்பு நிகழ்வு இறுதி ஆட்டத்தைத் தொடர்ந்து நடைபெறும்.

03
கலைமதி வி.கழகத் தலைவர் அ.சிறிஸ்கந்தராசா தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வே.சிவயோகனும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன், வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.மீடின், வடமராட்சி உதைபந்தாட்ட லிக்கின் செயலாளர் ரி.வரதராசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

3

http://www.onlineuthayan.com/sports/?p=6194&cat=11

திருக்குமரன், றேஞ்சர்ஸ் அணிகள் வெற்றி

December 20, 2015

 

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்;கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் அண்ணா ஸ்ரார் அணியை எதிர்த்து திருக்குமரன் அணி மோதிக் கொண்டது. இதில் திருக்குமரன் அணி 8:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் ஜேம்;ஸ் அணியை எதிர்த்து றேஞ்சர்ஸ் அணி மோதிக் கொண்டது. இதில் றேஞ்சர்ஸ் அணி 4:2 என்ற கோல் கணககில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6198&cat=11

Link to comment
Share on other sites

ஒற்றுமையை வீழ்த்தியது வல்வை எவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில்

December 21, 2015

 

எவ்.ஏ. கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வல்வை அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் அல்வாய் நண்பர்கள்; விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது

அதில் நேற்று ஞாயிற்றுக்;கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியை எதிர்த்து தொண்டமானாறு ஒற்றுமை அணி மோதிக் கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒற்றுமை அணி கனதியான போராட்டத்தன்மையை வெளிப்படுத்தவில்லை. இதனால் முழு நேரமும் வல்வையின் கையே ஓங்கியிருந்தது. ஏக ஆதிக்கம் செலுத்தி வல்வை அணி முடிவில் 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6277&cat=11

இன்றைய மோதல்கள்

December 21, 2015

றோயல் வி.கழகத்தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று திஙகட்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் ஊரெழு பாரதி; அணியை எதிர்த்து ஆதிசக்தி அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் நாவாந்துறை சென்.நீக்ளஸ் அணியை எதிர்த்து சென்.சேவியர் அணி மோதவுள்ளது.

பருத்தித்துறை லீக்கின் தொடர்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையில் பரித்தித்துறை லீக் 5 வீரர்கள் பங்குபற்றும் வகையிலான கால்பந்தாட்ட தொடரினை நடத்தி வருகிறது.
இந்தத் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை உடுத்துறை மகா வித்தியலாய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெறவுள்ள ஆட்டங்களில் காலை 8.30 மணிக்கு ரம்போ அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதவுள்ளது.

அந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 10.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சக்திவேல் அணியுடன் மோதிக் கொள்ளும். 9 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அருணோதயா அணியை எதிர்த்து சென்.செபஸ்ரியன் அணி மோதவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 11 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் செந்தமிழ் அணியுடன் மோதும். 9.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சென்.மேரிஸ் அணியை எதிர்த்து தாளையடி சென்.அன்ரனிஸ் அணி மோதவுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 11.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் வத்திராயன் மத்தி அணியுடன் மோதும். 10 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் சென்.பிலிப்புநேரியர் அணியை எதிர்த்து கணேசானந்தா அணி மோதவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 12 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் உதயசூரியன் அணயுடன் மோதும்.

http://www.onlineuthayan.com/sports/?p=6279&cat=11

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி வெற்றி

December 22, 2015

2

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 17ஆம், 18ஆம் திகதிகளில் கொழும்பு டி.எஸ். சேனநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து 14 உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. வலைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன அணி காலி உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தை 14:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

http://www.onlineuthayan.com/sports/?p=6365&cat=3

பருத்தித்துறை லீக்கின் கால்பந்தாட்ட முடிவுகள்

December 22, 2015

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக் வடமராட்சி அணிகளுக்கு இடையில் முன்னெடுத்துவரும் கால்ப்பந்தாட்டத் தொடரில் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் குடத்தனை சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டு;க் கழகம் தாளையடி சென்.அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் என்பன அரையிறுதி ஆட்டங்களிற்கு தகுதி பெற்றுள்ளன.

 

5 வீரர் பங்குபற்றும் இந்தத் தொடர் உடுத்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று இடம்பெற்ற காலிறுதி ஆட்டங்களில் உடுத்துறை பாரதி அணி குடத்தனை சக்திவேலர் அணியை 2:0 என்ற கோல் கணக்கிலும், உடுத்துறை செந்தமிழ் அணி கட்டைக்காடு சென்.செபஸ்ரியன் அணியை 3:2 என்ற கோல் கணக்கிலும் குடத்தனை சென்.பிலிப்நேரிஸ் அணி உதயசூரியன் அணியை 1:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்றன. தாளையடி சென்.அன்ரனீஸ் அணியுடன் விளையாட இருந்த அணி வருகை தராததால் அவ்வணி அரையிறுதி ஆட்டத்திற்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6360&cat=11

கிண்ணம் டயமன்ஸிடம் வீழ்ந்தது கம்பர்மலை யங்கம்பன்ஸ்

December 22, 2015

பீமாவின் அதிரடியான ஹட்ரிக் கோலினால் யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது டயமன்ஸ் விளையாட்டுக் கழகம். நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் அழைக்கப்பட்ட அணிகளுக்கு இடையில் முன்னெடுத்துவரும் கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் பலப்பரீட்சை நடத்தியது. கோல் கணக்கு ஆரம்பிக்கப்படாமலேயே முடிவடைந்தது முதல் பாதி.

12

இரண்டாம் பாதியிலும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான். 23 ஆவது நிமிடத்தில் டயமனஸ் அணியின் அனுபவ வீரரான பீமா தன்னிடம் கிடைத்த பந்தை சரியாகப் பயன்படுத்தி முதல் கோலைப் பதிவுசெய்தார். சில நிமிடங்களிலேயே யங்கம்பன்ஸ் அணியின் பின்கள வீரர் விதி மீறலில் ஈடுபட்டதால் டயமன்ஸ் அணியினருக்கு தண்டனை உதை வழங்கப்பட்டது. பீமாவால் வாய்ப்பு கோலாக்க மாற்றப்பட டயமன்ஸ் அணி 2:0 என்று முன்னிலை வகித்தது.

ஆட்டம் நிறைவடைய 3 நிமிடங்கள் இருக்கும் போது பீமா மீண்டும் ஓர் கோலைப் பதிவுசெய்ய வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது டயமன்ஸ். ஆட்டநாயகனாக டயமன்ஸ் அணியின் பீமாவும் தொடர் ஆட்டநாயகனாக அதே அணியைச் சேர்ந்த துசிகரனும் சிறந்த கோல்காப்பாளராக யங்கம்பன்ஸ் கோல் காப்பாளர் மகிந்தனும் தெரிவுசெயப்பட்டனர் மூன்றாம் இடத்தை உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. வெற்றிபெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை வடமாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன், சு.சுகிர்தன் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6362&cat=11

Link to comment
Share on other sites

பாரதி, செந்தமிழ் அணிகள் இறுதியில் சென்.அன்ரனிஸ், பிலிப்நேரிஸ் வீழ்ந்தன

December 23, 2015

வடமராட்சி கிழக்கு கால்பந்தாட்டத் தொடரில் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் மற்றும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் என்பன இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

சென்.அன்ரனிஸ் – பாரதி

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்ற வடமராட்சி கிழக்கு அணிகளுக்கு இடையிலான 5 வீரர்கள் பங்குபற்றும் கால்ப்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று உடுத்துறை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றன. முதலில் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாளையடி சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தியது. ஆரம்பத்தில் இரு அணிகளதும் ஆட்டத்தில் போராட்டத்தன்மை பிரதிபலித்தது.

01 lead

 

அதற்கேற்றால்போல் முதல் பத்து நிமிடங்களை எட்டுவதுக்குள் இரு அணிகளும் தலா இரு கோல்களைப் பதிவுசெய்திருந்தன. ஆனால் நேரம் செல்லச் செல்ல அன்ரனிஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. பாரதியின் கோல் கணக்கு உயர்ந்து கொண்டே சென்றது. முடிவில் பாரதி அணி 8:3 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது. தாளையடி சென்.அன்ரனிஸ் அணியின் சார்பாக றெக்சன் மூன்று கோல்களையும் பதிவுசெய்தார். உடுத்துறை பாரதி அணியின் சார்பாக விஜிதரன், சுஜீபன், ஜெயதீபன், விஜேந்திரன் ஆகியோர் தலா 2 கோல்களைப் பதிவுசெய்தனர்.

பிலிப்நேரிஸ் – செந்தமிழ்

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டுக் கழகமும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் மோதின. ஆரம்பம் முதல் முடிவுவரை ஏக ஆதிக்கம் செலுத்திய செ;தமிழ் வி.கழகம் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது. செந்தமிழ் சார்பாக சுஜித் 2 கோல்களையும் மயூரன், மதிராஜ் இருவரும் தலா ஓர் கோலையும் பதிவுசெய்தனர்.

1-lead

http://www.onlineuthayan.com/sports/?p=6479&cat=11

மண்ணின் மைந்தர்களுக்கான கௌரவிப்பை முன்னெடுத்தது சென்.மேரிஸ் சனசமூக நிலையம்

December 23, 2015

நாவாந்துறை சென்.மேரிஸ் சனசமூக நிலையத்தினரால் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்ததினால் நடத்தப்பட்ட இரண்டாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான தொடரில் கிண்ணம் வென்ற நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை சென்.மேரிஸ் சனசமூக நிலைய உறுப்பினர் ஜெனந்தன் தலைமையில் இடம்பெற்றது.

நாவாந்துறை சென்.மேரிஸ் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினாராக வடமாகாண சபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பாளருமான இ.ஆனல்ட் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபர் எவ்.எஸ்.அன்ரன், சட்டத்தரணி றெமிடியஸ், யாழ்.கால்பந்தாட்ட லீக்கின் உப தலைவர் இளம்பிறையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6489&cat=11

Link to comment
Share on other sites

பிராந்தியங்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் புத்தளத்தை நொறுக்கியது யாழ்ப்பாணம்

December 24, 2015

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் பிராந்தியங்களுக்கு இடையிலான (16வயதுப்பிரிவினருக்கான) கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புத்தளத்தை வீழ்த்தியது யாழ்ப்பாணம்.
அரியாலையில் அமைந்துள்ள கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் யாழ். பிராந்திய அணியை எதிர்த்து புத்தளம் பிராந்திய அணி மோதிக் கொண்டது.

1-lead

 

ஆட்டத்தில் விறுவிறுப்புத்தன்மை இல்லவே இல்லை. யாழின் வேகத்துக்கு ஏற்ப ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது புத்தளம். யாழின் வீரரர்களான றேம்சன், சாந்தன் இருவரும் தலா இரு கோல்களைப் பதிவுசெய்ய 4:0 என்று முடிவடைந்தது முதல்பாதி.  கிட்டத்தட்ட வெற்றி என்ற நிலையில் இரண்டாம் பாதிக்காக களமிறங்கியது யாழ்ப்பாணம். இறுதி முப்பது நிமிடங்களில் அடுத்தடுத்து 7 கோல்களைப் பதிவுசெய்து 11:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம். இரண்டாம் பாதியில் சாந்தன், கிறிஸ்தோப்பர் இருவரும் தலா ஓர் கோலினையும், றேம்சன் இரு கோல்களையும், வர்மன் 3 கோல்களையும் பதிவு செய்தனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6571&cat=11

சென்.நீக்கிலஸ், யங்கென்றிஸ் அணிகள் வெற்றி

December 24, 2015

 

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கடந்த திங்கட்க்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியை எதிர்த்து புங்குடுதீவு சென்.சேவியர் அணி மோதிக் கொண்டது. இதில் சென்.நீக்கிலஸ் அணி அணி 10:1 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் ஞானகலா அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றிஸ் அணி மோதிக் கொண்டது. இதில் இளவாலை யங்கென்றிஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6576&cat=11

இன்றைய மோதல்கள்

December 24, 2015

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத்தொடரில் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பொற்பதி அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அரியாலை ஐக்கிய அணியை எதிர்த்து ஐயனார் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6578&cat=11

போராடி வென்றது நாமகள்

December 24, 2015

எவ்.ஏ. கிண்ணத்தொடரில் நண்பர்கள், நாமகள் அணிகள் மோதிய ஆட்டத்தில் நாமகள் அணி போராடி வெற்றிபெற்றது.
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் அல்வாய் நண்பர்கள் அணியை எதிர்த்து தெல்லிப்பழை நாமகள் அணி மோதிக் கொண்டது. சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் தெல்லிப்பழை நாமகள் அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது

http://www.onlineuthayan.com/sports/?p=6582&cat=11

தேசியமட்ட கராத்தேத் தொடரில் மகாதேவா மாணவர்கள் பதக்க வேட்டை

December 24, 2015

இலங்கை கராத்தே சங்கம் நடத்திய நடப்பு வருடத்துக்கான தேசியமட்ட கராத்தேத் தொடரில் மகாதேவா ஆச்சிரம மாணவர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கம் அடங்கலாக 11 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு மகரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்தத் தொடரில் 15வயதுப்பிரிவு பெண்களுக்கான 48 கிலோ குமித்தேப் போட்டியில் ஏ.கமலினி தங்கப் பதக்கத்தினையும், கே.பவானி 39 கிலோ பிரிவு குமித்தேப் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் கைப்பற்றினர்.

2

 

16 வயதுப்பிரிவு பெண்களுக்கான 53கிலோ பிரிவு காட்டாப் போட்டியில் எம்.சௌமியா தங்கப் பதக்கத்தினையும், குமித்தேப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும், கே.சாளினி 51கிலோ பிரிவு காட்டாப் போட்டியில் வெள்ளி பதக்கத்தினையும், குமித்தேப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும், லக்குனா 53கிலோ பிரிவு குமித்தேப் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் கைப்பற்றினர்.
15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான குமித்தேப் போட்டியில் ரி.றஜீபன், கே.சிந்துஜன் இருவரும் வெண்கலப் பதக்கத்தினையும், 21 வயதுப்பிரிவு ஆண்களுக்கான குமித்தேப் போட்டியில் எம்.தர்சன் வெள்ளிப் பதக்கத்தினையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6584&cat=3

பதங்கங்களை அள்ளிய யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்

December 24, 2015

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற தேசியமட்ட விளையாட்டு போட்டிகளில் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன அணிக்கு 4 தங்கப்பதக்கங்களும் மூன்று வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

k
கடந்த 17 ஆம் 18ஆம் திகதிகளில் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 14 உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தை பிரதிநிதித்துவம் செய்த கோபிகா குண்டு போடுதலிலும், மேரி பெனீனா நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் இரண்டிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினர்.

 

kopika

மரியரூபன் 100 மீற்றர் ஓட்டத்திலும் எட்மன்ட் ஜஸ்லின் 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் இரண்டிலும் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார். வலைப்பந்தாட்டத்திலும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருந்தது.

marija-ruban

http://www.onlineuthayan.com/sports/?p=6587&cat=3

Link to comment
Share on other sites

தேசியமட்ட மேசைப் பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாண மாணவர்கள் ஆதிக்கம்

December 25, 2015

இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசியமட்ட மேசைப் பந்தாட்டத் தொடரில் 15வயது, 21 வயது ஆண்கள் பிரிவிலும் 18வயது பெண்கள் பிரிவிலும் யாழ். மாவட்ட மாணவர்கள் சம்பியனாக தெரிவாகியுள்ளனர்.

1-lead.......
யாழ். மத்திய கல்லூரியில் கடந்த 19ஆம் திகதியும் 20 திகதியும் இடம்பெற்ற இந்தத் தொடர்களில் 15வயதுப்பிரிவு ஆண்களுக்கான ஆட்டங்களில் ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் துசியந்ததனும்; 21வயதுப்பிரிவு ஆண்களுக்கான ஆட்டங்களில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவன் அ.றொசானும் சம்பியனாக தெரிவானார்கள். 21வயதுப்பிரிவு பெண்களுக்கான ஆட்டங்களில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி நர்மதா சம்பினாக தெரிவானார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6634&cat=3

இன்றைய மோதல்கள்

December 25, 2015

எவ்.ஏ. கிண்ணத் தொடர் (வடமராட்சி)

எவ்.ஏ. கிண்ணத்தொடரில் வடமராட்சி லீக்கில் பதிவுசெய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்கள் இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத்தொடரில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.

றோயல் வி.கழகத் தொடர்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து 5ஸ்ரார் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பாசையூர் சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதவுள்ளது

எவ்.ஏ. கிண்ணத் தொடர் (பூனகரி லீக்)

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டம் ஒன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்குடா ஜோலி போயிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் பள்ளிக்குடா ஜொலி போயிஸ் அணியை எதிர்த்து மன்னார் கில்லறி அணி மோதவுள்ளது. (ம-23)

http://www.onlineuthayan.com/sports/?p=6642&cat=11

தேசியமட்ட மேசைப்பந்தாட்டத் தொடர், வடமாகாண பெண்கள் அணி சம்பியன்

December 25, 2015

இலங்கை அரச திணைக்கள மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இருபாலருக்குமான தேசியமட்ட மேசைப்பந்தாட்டத் தொடரில் 40 வயது தொடக்;கம் 45வயதிற்கு இடைப்பட்ட பிரிவில் வடமாகாண கல்வித்திணைக்கள பெண்கள் அணி சம்பியன் ஆனது.

 

யாழ். மத்திய கல்லூரியின் மேசைப்பந்தாட்டத் திடலில் கடந்த 21ஆம், 22ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்தத் தொடரில் 40 வயது தொடக்;கம் 45வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் சிறிமைதிலியும், இரட்டையர் ஆட்டத்தில் சிறிமைதிலி, பிரிந்தா இணையும் களமிறங்கி கிண்ணத்தைக் கைப்பற்றினர். 25 வயது தொடக்;கம் 30 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் வடமாகாண கல்வித்திணைக்கள அணியின் வீராங்கனை வித்தியராணி வெள்ளிப் பதக்கத்தினை தனதாக்கிக் கொண்டார். குழுநிலைப் போட்டியில் சி பிரிவில் இரு பிரிவுகளிலும் (ஆண், பெண்) வட மாகாண கல்வித்திணைக்கள அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

http://www.onlineuthayan.com/sports/?p=6638&cat=3

Link to comment
Share on other sites

தேசியமட்ட கராத்தேத் தொடரில் சுண்டிக்குளி மாணவிக்கு தங்கம்

December 26, 2015

தேசியமட்ட கராத்தேத் தொடரில் 15வயதுப்பிரிவு பெண்களுக்கான காட்டாப் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி எஸ்.அபிரா தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

1lead
இலங்கை காரத்தேச சம்மேளனம் நடத்திய நடப்பு வருடத்துக்கான தேசியமட்ட காரத்தே தொடர் கொழும்பு மகரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்றது. இதில் 15வயதுப்பிரிவு பெண்களுக்கான காட்டப் போட்டியில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி எஸ்.அபிரா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6716&cat=3

சிறந்த வீராங்கனையாக யாழின் மேரி பெனீனா

December 26, 2015

Dale-Steyn-during-the-South-African-national-cricket-team-training-session-at-Axxess-St-Georges

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான தேசியமட்ட விளையாட்டு நிகழ்வுகள் கடந்த வாரம் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க விளையாட்டரங்கில் இடம்பெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து 14 உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதை யாழின் மேரி பெனீனா கைப்பற்றினார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6719&cat=3

இன்றைய மோதல்கள்

December 26, 2015

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் றேஞ்சர்ஸ் அணியை எதிர்த்து கிளிநொச்சி சென்.ஆன்ஸ் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியை எதிர்த்து தீவகத்தின் மெலிஞ்சிமுனை இருதயராஜா அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6724&cat=11

முல்லை அணிகளுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டத் தொடர்

December 26, 2015

முள்ளியவளை வித்தியா விளையாட்டுக் கழகத்தினர் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடத்தத் திட்டமிட்டுள்ள துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் ஜனவரி மாதம் மூன்றாம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

kwik_cricket_set
இறுதி யுத்தத்தில் சாவடைந்த தமது கழக வீரர்களின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களிற்கு இடையில் வித்தியா வி.கழகம் வருடந்தோறும் பத்துப் பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட மென்பந்து துடுப்பாட்டத் தொடரை நடத்தி வருகிறது. அடுத்த வருடத்துக்கான தொடர் ஜனவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடரில் பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் வித்தியா விளையாட்டுக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தமது பதிவுகளை எதிர்வரும் மூன்றாம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6726&cat=3

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அரையிறுதியாட்டமும் இறுதியாட்டமும்

December 26, 2015

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக், தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுத்துவரும் 5 வீரர்கள் பங்குபற்றும் கால்;பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்களும், இறுதி ஆட்டமும் நாளை ஞாயிற்றுக்கிழமை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன.


மாலை 3 மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் உடுத்துறை செந்தமிழ் அணியை எதிர்த்து சக்கோட்டை சென்.சேவியர் அணி மோதிக் கொள்ளும். தொடர்ந்து 3.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பலாலி விண்மீன் அணியை எதிர்த்து உடுத்துறை பாரதி அணி மோதிக் கொள்ளும். அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி அடையும் அணிகள் 4 மணிக்கு இடம்பெறும் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மோதவுள்ளன. அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெறும் அணிகள் மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=6732&cat=11

Link to comment
Share on other sites

நடுவரைத் தாக்கிய வீரர்கள் வடமராட்சி லீக்கில் சம்பவம்

December 27, 2015

கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் வீரர்களினால் தாக்கப்பட்ட சம்வம் ஒன்று வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் வடமராட்சி லீக்கில் பதிவுசெய்துள்ள கொற்றாவத்தை றேஞ்சர்ஸ், நவிண்டில் கலைமதி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

 

ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி வீரர் ஒருவர் விதிகளை மீறியமைக்காக பிரதம மத்தியஸ்தரினால் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை செய்யப்பட்டார். தீர்ப்பை ஏற்க மறுத்த வீரர் தகாத வார்த்தைகளால் மத்தியஸ்தரை கடுமையாக ஏசியுள்ளதாக அறியவருகிறது. இதனால் மத்தியஸ்தர் சிவப்பு அட்டை காண்பித்து வீரரை வெளியேற்றினார். ஆட்டத்தின் முடிவில் நவிண்டில் கலைமதி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டம் முடிவடைந்ததும் நடுவர்கள் தமக்குரிய ஒய்வு அறைக்கு சென்றுகொண்டிருந்தபோது சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்ட வீரரும் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணியின் ஏனைய வீரர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பிரதான நடுவராக கடமையாற்றியவரை தலைக் கவசத்தினால் கடுமையாக தாக்கியதாக தெரியவருகிறது. இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான நடுவர் பார்வையாளர்களினால் மீட்கப்பட்டு வல்வெட்டித்துறை மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளார். மத்தியஸ்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6789&cat=11

இன்றைய மோதல்கள்

December 27, 2015

 

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் முல்லைத்தீவு சென்.யூட் அணியை எதிர்த்து தெல்லிப்பழை நாமகள் அணி மோதவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் அரியாலை ஜக்கிய அணியை எதிர்த்து வேலனை ஜயனார் அணி மோதவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6792&cat=11

றோயல் இலகு வெற்றி

December 27, 2015

 

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத்தொடரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து 5 ஸ்ரார் அணி மோதிக் கொண்டது. இதில் ஊரெழு றோயல் அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6794&cat=11

தேசியமட்ட கராத்தே தொடரில் சென்.ஜோன்ஸிற்கு 9 பதக்கங்கள்

December 27, 2015

 

இலங்கை கராத்தே சம்மேளனத்தால் நடத்தப்பட்ட தேசியமட்ட கராத்தே தொடரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் உள்பட ஒன்பது பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
13வயதுப்பிரிவினருக்கான காட்டாப் போட்டியில் சென்.ஜோன்ஸைப் பிரதிநிதித்துவம் செய்த விஜயராஜ் நிவேதன், திருசாந் இருவரும் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். 17வயதுப் பிரிவினருக்கான காட்டாப் போட்டியில் துசியந்தன் தங்கப்பதக்கத்தையும் குமித்தேப் போட்டியில் வெண்கலத்தையும், குழுநிலைக் காட்டாவில் வெண்கலத்தையும் கைப்பற்றினார். அதே வயதுப்பிரிவில் களமிறங்கிய தனுசன் காட்டாவில் வெள்ளியையும் குழுநிலைக் காட்டாவில் வெண்கலத்தையும் எழிலன் குமித்தேயில் வெள்ளியையும் குழுநிலைக் காட்டாவில் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6796&cat=3

Link to comment
Share on other sites

நடப்பு வருடத்தின் சிறந்த கழகமாக சென்றலைட்ஸ் வி.கழகம் தெரிவானது

December 30, 2015

image

ஜோர்ஜ் வெப்ஸ்ரர் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட துடுப்பாட்டத் தொடரின் அடிப்படையில் யாழ். மவட்டத்தின் சிறந்த அணியாக சென்றலைட்ஸ் அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. நடப்பு வருடத்தில் தான் எதிர்கொண்ட 19 ஆட்டங்களில் 15 ஆட்டங்களில் வெற்றிபெற்று 100.49 புள்ளிகளுடன் சென்றலைட்ஸ் முதலிடத்தில் உள்ளது. 19 ஆட்டங்களை எதிர்கொண்டு 10 ஆட்டங்களில் வெற்றிபெற்ற கே.சீ.சீ.சீ. 77.74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜொனியன்ஸ் அணி 16 ஆட்டங்களில் பத்தில் வெற்றிபெற்று 75.38 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. காட்லி யைற்ஸ் நான்காம் இடத்திலும் சிறி காமாட்சி ஐந்தாம் இடத்திலும் உள்ளன.  ஆறு முதல் பத்து இடங்களுக்குள் முறையே ஜொலி ஸ்ரார்ஸ், திருநெல்வேலி சீ.சீ., யாழ். சென்றல், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், யூனியன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=6962&cat=3

காரத்தேத் தொடரில் பருத்தித்துறை தற்காப்பு கலையகம் பதக்க வேட்டை

December 30, 2015

தேசிய மட்ட காரத்தேத் தொடரில் பருத்தித்துறை தற்காப்பு கலையக மாணவர்கள் 1தங்கம், 2வெள்ளி, 6 வெண்கலங்கள் உட்பட மொத்தமாக 9 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கை காரத்தே சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட காரத்தேத் தொடர் கொழும்பு காரத்தே சம்மேளனத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பருத்தித்துறை தற்காப்பு கலையக மாணவர்கள் 1தங்கம், 2வெள்ளி, 6 வெண்கலங்கள் உட்பட மொத்தமாக 9 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

2.

பி.துவாரகா 13வயதுப்பிரிவு பெண்களுக்கான குமித்தேப் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும், 55கிலோ எடைப் பிரிவினரின் காட்டாப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும் பி.மிதுசான காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் கைப்பற்றினர். ஆர்.குணதீப் 15வயதுப் பிரிவினரின் குமித்தேப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும், இ.ஆழிக்குமாரன், கே.சஜீகரன் இருவரும் 17வயதுப் பிரிவின் குமித்தேப் போட்டியில் வெண்கலப்; பதக்கத்தினையும், எம்.சயந்தன் 19வயதுப்பிரிவு ஆண்களுக்கான 55 கிலோ எடை பிரிவில் குமித்தேப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும், ஜே.பார்த்தீபன் 21வயதுப்பிரிவினருக்கான 92 கிலோ எடைப் பிரிவில் குமித்தேப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும், எ.அஜந்தன் அதே வயதின் 87 கிலோ எடைப் பிரிவில் குமித்தேப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் கைப்பற்றினர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6966&cat=3

வர்ண விருது வழங்கும் விழா

December 30, 2015

2728317-sports-medal-of-the-russian-federation-isolated-on-white-background

வடமாகாண விளையாட்டு திணைக்களம் 6ஆவது தடவையாக நடத்தும் வர்ண விருது வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ளது. வடமாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவிந்திரன் தலைமையில் நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானமும், வடமாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரி.குருகுலராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=6969&cat=3

Link to comment
Share on other sites

யாழ். மாவட்ட கிரிக்கட் சங்கம் மல்லாகத்தில் மைதான ஒப்பந்தம்

December 31, 2015

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கும் முகமாக மல்லாகத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பதுக்கான காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளார்கள்.
மல்லாகம் சிறிபாஸ்கரன் விளையாட்டு மைதானமே அவ்வாறு குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது.

Cricket-Ball-And-Bat-Wallpaper-2014

மல்லாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் மற்றும் யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரும் இது சம்பந்தமான ஒப்பந்தத்தில் கடந்த திங்கள் கிழமை கைச்சாத்திட்டுள்ளார்கள். கடந்த பல வருடங்களாக யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் இயங்கி வருகின்ற போதிலும் தனக்கென ஒரு மைதானம் இன்மையால் பல்வேறு சிரமங்களுக்கும் முகம் கொடுத்;து வந்த நிலையில் தற்போது சங்கத்துக்கென மைதானம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளமையால் எதிர்காலத்தில் அனைத்து தொடர்களையும்; உரிய முறையில் நடத்த முடியும் என கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

http://www.onlineuthayan.com/sports/?p=7061&cat=2

நடுவரைத் தாக்கிய வழக்கு, வீரருக்கு விளக்கமறியல்

December 31, 2015

நடுவரைத் தாக்கியச் சாட்டில் கைது செய்யப்பட்ட றேஞ்சர்ஸ் வீரரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.  இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏவ்.ஏ. கிண்ணத்துக்காக நடத்திவரும் தொடரில் பருத்தித்துறை லீக்கில் பதிவுசெய்துள்ள கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஆட்டத்தில் றேஞ்சர்ஸ் அணியும் கலைமதி அணியும் மோதின. இதில் பிரதான நடுவர் றேஞ்சர்ஸ் வீரர் ஒருவரை மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை விடுத்தார்.

 

ஆனால் எச்சரிக்கையை ஏற்க மறுத்த வீரர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை நடுவரை நோக்கி பிரயோகித்தமையால் நடுவர் அவரை சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். ஆட்டத்தில் கலைமதி 2:0 என்று வெற்றிபெற்றது. ஆட்டத்தின் முடிவில் நடுவர்கள் ஓய்வறைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்ட வீரரும் ஏனைய வீரர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து நடுவரைத் தாக்கினர். ரசிகர்களுமம் ஏனைய சிலரும் நடுவரை மீட்டு வல்வெட்டித்துறை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதித்தனர். றேஞ்சர்ஸின் வீரர் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில் அவர் கடந்த திங்கட் கிழமை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்று எதிர்வரும் ஆறாம் திகதி வரை வீரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

http://www.onlineuthayan.com/sports/?p=7071&cat=11

வடமாகாணத்தின் வர்ண இரவு நிகழ்வில் வடக்கின் நட்சத்திரமாக டினேயா

December 31, 2015

பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தொடரில் தங்கப் பதக்கத்தையும் வென்ற வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவியான ஜே.ஜே.பி.டினேஜா வடமாகாணத்தின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு வர்ண இரவுகள் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரினால் நேற்று கௌரவிக்கப்பட்டார்.

6
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய 6ஆவது வர்ண விருது வழங்கும் நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளார் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளுதூக்கல் தொடரில் 19வயதுப் பிரிவில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற ஜே.ஜே.பி.டினேஜா, அதேவயதுப் பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்ற யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந், ஆகியோருடன் தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெற்றிபெற்ற 14 வீரவீராங்கனைகளும், ஆண்களிற்கான கபடியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற வவுனியா மாவட்ட அணியும், உதைபந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்ற யாழ்., மன்னார் மாவட்ட இணைந்த அணி வீரர்களும் கௌரவிக்கபட்டதோடு இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை அள்ளிய 54 வீர வீராங்கனைகளும், பெரு விளையாட்டுக்களில் பதக்கங்களைப் பெற்ற 10 பாடசாலைகள் அணிகளும், கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட போட்டிகளில் பங்குபற்றி 63 வீர வீராங்கனைகளுடன் அவர்களிற்கான பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை விளையாட்டுத் திணைக்களத்தினாhல் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஜெனிற்றா, எஸ்.விதுசன், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரி.அன்ரனி டெல்மன், ரி.டென்சிகா ஆகியோருடன், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே.கனகேஸ்வரி ஆகியோரிற்கும் சிறப்பு பரிசில்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வடமாகண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினரும் விளையாட்டுத்துறை இணைப்பாளருமான இ.ஆனல்ட், வடமாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன், எஸ்.கஜதீபன், கே.தர்மலிங்கம், மற்றும் சி.அகிலதாஸ் ஆகியோருடன் வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், மற்றும் வலயக்க கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர், விளையாட்டு திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

http://www.onlineuthayan.com/sports/?p=7073&cat=3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.