Jump to content

பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கோரிக்கை


Recommended Posts

151002173020_center_for_sex_workers_righ

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்ட ரீதியான் பாதுகாப்பைத் தருமாறு, இலங்கைப் பாலியல் தொழிலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கோரியிருக்கிறது.
இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய, அந்த சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி தற்போது பாலியல் தொழிலில் 8000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

பலத்த வறுமை காரணமாகவே பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்த அவர் சட்டத்தில் இருக்கின்ற சில அவகாசங்களை பயன்படுத்தி போலீசார் அவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினார். எனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பைத் தரக்கூடிய சட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பி.மகேஸ்வரி கூறினார்.
தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் பல போராட்டங்களை நடத்த தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151020_srilankasexworkers

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... ஆம்பிளையளும் இந்தப்படத்தில நிக்கினம்? :cool:

இருந்தாலும் பெண்களின் கோரிக்கை நியாயமானது போலத் தான் இருக்குது!

இந்த இடத்தில்  தமிழ் சிறியைக் கடுமையாக மிஸ் பண்ணுகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... ஆம்பிளையளும் இந்தப்படத்தில நிக்கினம்? :cool:

இருந்தாலும் பெண்களின் கோரிக்கை நியாயமானது போலத் தான் இருக்குது!

இந்த இடத்தில்  தமிழ் சிறியைக் கடுமையாக மிஸ் பண்ணுகிறேன்!

 

Body guards தான்...  ஒரு பாதுகாப்புக்கு...

சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி நடுவில இருக்கிறா போல..... அப்ப தலைவி எங்கப்பா?

இதுக்கு மட்டும் சிங்கள தலைவி மார் வரமாட்டினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரி வாழ்க...மகேஸ்வரி வாழ்க...:love:
புங்கையர்! பாலியல் தொழில் பொம்புளையளுக்கு மட்டும் எழுதிக்குடுக்கேல்லை. ஆம்பிளையளும் செய்யினம் எண்டதை உங்களுக்கு இந்த இடத்திலை சொல்லிக்கொள்ள விரும்புறன்:cool:  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரி வாழ்க...மகேஸ்வரி வாழ்க...:love:
புங்கையர்! பாலியல் தொழில் பொம்புளையளுக்கு மட்டும் எழுதிக்குடுக்கேல்லை. ஆம்பிளையளும் செய்யினம் எண்டதை உங்களுக்கு இந்த இடத்திலை சொல்லிக்கொள்ள விரும்புறன்:cool:  :grin:

அந்த நீலச் சேட்டுக்காரறரிட்ட 'ஏதாவது' இருக்குமெண்டு நினைக்கிறீங்களா.. குமாரசாமியண்ணை?:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நீலச் சேட்டுக்காரறரிட்ட 'ஏதாவது' இருக்குமெண்டு நினைக்கிறீங்களா.. குமாரசாமியண்ணை?:unsure:

நீலச்சேட்டு எல்லாரையும் செக் பண்ணுற டாக்குத்தரப்பா...டாக்குத்தர் :(  tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

ஏன்... ஆம்பிளையளும் இந்தப்படத்தில நிக்கினம்? :cool:

இருந்தாலும் பெண்களின் கோரிக்கை நியாயமானது போலத் தான் இருக்குது!

இந்த இடத்தில்  தமிழ் சிறியைக் கடுமையாக மிஸ் பண்ணுகிறேன்!

பசுமாடு பால்மாடாவதற்கு காளைமாடு அவசியம். இதைத் தெரிந்துதான் அத்தியடிக் குத்தியன் புங்கையூரில் அதிகக் காளைமாடுகளை வளர்த்துவிட்டது தெரியாதோ..... :grin:

Link to comment
Share on other sites

151002173020_center_for_sex_workers_righ

இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சட்ட ரீதியான் பாதுகாப்பைத் தருமாறு, இலங்கைப் பாலியல் தொழிலாளர் சங்கம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைக் கோரியிருக்கிறது.
இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய, அந்த சங்கத்தின் துணைத் தலைவி பி.மகேஸ்வரி தற்போது பாலியல் தொழிலில் 8000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

பலத்த வறுமை காரணமாகவே பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்ட வருவதாக தெரிவித்த அவர் சட்டத்தில் இருக்கின்ற சில அவகாசங்களை பயன்படுத்தி போலீசார் அவர்களைக் கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினார். எனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பைத் தரக்கூடிய சட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் என்று பி.மகேஸ்வரி கூறினார்.
தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் பல போராட்டங்களை நடத்த தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151020_srilankasexworkers

 

உண்மையில் இதுவொரு சிக்கலான விடயம். இவர்களுக்கு கஷ்டம் என்று கூறி மாற்று வேலைவாய்ப்புகளை பெற்றுக்குடுத்தாலும் ஒருசிலரைத்தவிர மற்றவர்கள் மீண்டும் பழையதொழிலுக்கே போவார்கள். இதற்கு தீர்வு என்பது கடினம் தான்.

இதில் பரிதாபநிலை என்னவென்றால் இவர்களின் போராட்டத்தால் பாலியல்தொழில் அங்கீகரிக்கப்பட்டால் அதில் பலன்பெறுவது இதை நடத்தும் முதலாளிகளும்(முக்கியமாக அரசியல் வாதிகள் or போலிஸ் அதிகாரிகள்) மற்றும் 5  நட்சத்திரகொட்டல்களில் பணம் சம்பாதிக்கும் அழகிகளுமே.

அடுத்து இங்கு கருத்தெழுத தூண்டியது மகேஸ்வரி அக்கா விடயம். தமிழர்களின் நிலைமை எங்கிருக்கின்றது பாருங்கள்...................
சிலவேளைகளில் இது புனைபெயராக இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதுவொரு சிக்கலான விடயம். இவர்களுக்கு கஷ்டம் என்று கூறி மாற்று வேலைவாய்ப்புகளை பெற்றுக்குடுத்தாலும் ஒருசிலரைத்தவிர மற்றவர்கள் மீண்டும் பழையதொழிலுக்கே போவார்கள். இதற்கு தீர்வு என்பது கடினம் தான்.

இதில் பரிதாபநிலை என்னவென்றால் இவர்களின் போராட்டத்தால் பாலியல்தொழில் அங்கீகரிக்கப்பட்டால் அதில் பலன்பெறுவது இதை நடத்தும் முதலாளிகளும்(முக்கியமாக அரசியல் வாதிகள் or போலிஸ் அதிகாரிகள்) மற்றும் 5  நட்சத்திரகொட்டல்களில் பணம் சம்பாதிக்கும் அழகிகளுமே.

அடுத்து இங்கு கருத்தெழுத தூண்டியது மகேஸ்வரி அக்கா விடயம். தமிழர்களின் நிலைமை எங்கிருக்கின்றது பாருங்கள்...................
சிலவேளைகளில் இது புனைபெயராக இருக்கக்கூடும்.

அளவை,

புல்லரிக்குதப்பா.....

எப்பூடி? 

 

Link to comment
Share on other sites

 

அளவை,

புல்லரிக்குதப்பா.....

எப்பூடி? 

 

என்ன பாஸ் செய்யுறது, காலம் கலிகாலம் ஆயிப்போயிடிச்சு

படத்தில் ஒரு தாத்தாவும்(முசுலீம் சகோதரி) நிக்கிறார். மௌலவிமார் கூட வாயப்பொத்த வைச்சுட்டார் Mr.கோத்தா

Link to comment
Share on other sites

நீலச்சேட்டு எல்லாரையும் செக் பண்ணுற டாக்குத்தரப்பா...டாக்குத்தர் :(  tw_dissapointed_relieved:

அப்ப உந்த டாக்குத்தர் ஊசி போடமாட்டாரா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழில் முற்றாக தடைசெய்யப்பட்டு.. உந்த உடம்பை வித்து சுகமாகப் பிழைப்பு நடத்தும் கீழ்நிலைப் புத்திக்கு முடிவு கட்டனும்.

இந்தப் பெண்களுக்கு ஆளுக்கு குறிப்பிட்ட தொகை காணி அல்லது கால்நடைகள்..வழங்கி அதில் இவ்வளவு விளைச்சல் அல்லது பயன் தர பயிர் செய்கையில்.. கால்நடை வளர்ப்பில்.. ஈடுபட அரசு மானிய அடிப்படையில்.. உதவிகள் வழங்கி இவர்களை சாதாரண.. உருப்படியான சமூக வாழ்வில் இணைக்க வேண்டும். இன்றேல் அரச சேவையில்.. வேலை பெறக்கூடிய பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த வேண்டும்.

அத்தோடு... பாலியல் வியாபாரத்தை பாரதூரமான.. குற்றமாக்கி.... மரண தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும். இந்தப் பாலியல் தொழிலால்.. பல குடும்பங்கள் சீரழிவதோடு... பால்வினை நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகம் உள்ளதோடு... போதைப் பாவனைகளும் சட்டவிரோத நடவடிக்கைகளும் பெருகுகின்றன. உந்தப் பெண்களால்.. ஆண்கள் சமூகமும் தறிகெட்ட தனமாய் வாழ ஊக்குவிக்கப்படுகின்றன. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உந்த டாக்குத்தர் ஊசி போடமாட்டாரா? :unsure:

உதென்ன குழந்தைப்பிள்ளை கேள்வி கேக்கிறயள்? ஊசியில்லாமலும் டாக்குத்தர்மார் இருக்கினமே?????  :grin:

நெடுக்கர் எப்பவும் தமாசு பண்ணுறதிலையே இருக்காரு......சூரியன் மேற்கை உதிச்சாலும் உதிக்குமே தவிர புராண காலத்து தெய்வீக தொழிலையெல்லாம் அழிக்க முடியாதுங்கோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் தொழில். ஒழிக்க வேண்டும் என்று நெடுக்கர் நிற்கிறார்.

நெடுக்கருக்கு முன், நெடுக்கருக்கு பின் என்று இந்த தொழில் வாழ்ந்தது, வாழும்.

Link to comment
Share on other sites

பாலியத் தொழில் அங்கீகரிக்கப்படாத இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியத் தொழில் அங்கீகரிக்கப்படாத இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் பெண்கள் சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

பாம்பே ரெட் லைட் ஏரியா கேள்விப் பட வில்லையா? :rolleyes:

சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் எங்குமே உள்ளன. :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழில் முற்றாக தடைசெய்யப்பட்டு.. உந்த உடம்பை வித்து சுகமாகப் பிழைப்பு நடத்தும் கீழ்நிலைப் புத்திக்கு முடிவு கட்டனும்.

இந்தப் பெண்களுக்கு ஆளுக்கு குறிப்பிட்ட தொகை காணி அல்லது கால்நடைகள்..வழங்கி அதில் இவ்வளவு விளைச்சல் அல்லது பயன் தர பயிர் செய்கையில்.. கால்நடை வளர்ப்பில்.. ஈடுபட அரசு மானிய அடிப்படையில்.. உதவிகள் வழங்கி இவர்களை சாதாரண.. உருப்படியான சமூக வாழ்வில் இணைக்க வேண்டும். இன்றேல் அரச சேவையில்.. வேலை பெறக்கூடிய பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த வேண்டும்.

அத்தோடு... பாலியல் வியாபாரத்தை பாரதூரமான.. குற்றமாக்கி.... மரண தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும். இந்தப் பாலியல் தொழிலால்.. பல குடும்பங்கள் சீரழிவதோடு... பால்வினை நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகம் உள்ளதோடு... போதைப் பாவனைகளும் சட்டவிரோத நடவடிக்கைகளும் பெருகுகின்றன. உந்தப் பெண்களால்.. ஆண்கள் சமூகமும் தறிகெட்ட தனமாய் வாழ ஊக்குவிக்கப்படுகின்றன. tw_angry:

நெடுக்கர்.... இந்த விசயத்தில மட்டும் நீங்கள் இன்னும் வளர இடமுண்டு....என்று நினைக்கிறேன்!

உங்கள் கருத்து...அண்மையில் ஒரு இஸ்லாமிய இமாம் சொன்ன கருத்துப் போல உள்ளது!

இறைச்சி இருந்தால்...இலையான்கள் தேடித் தானே வரும்..எனவே இறைச்சியைத் திறந்து வைக்காது 'முக்காடு' போட்டு மூடி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்!

ஆனால் அதிகமான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது.. இப்படியான மூடி மறைக்கும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட சமுதாயங்களில் தான்!

அத்துடன் பாலியல் தொழில் செய்பவர்கள் அனைவரும் வறுமையின் காரணமாக அதைச் செய்வதில்லை! ஆரம்பத்தில் வறுமை காரணமாக இருப்பினும், வறுமை நீங்கிய பின்னரும் அவர்கள் இதைச் செய்கின்றார்கள்! ஏனெனில்.. சமூகத்தில் அவர்கள் தொழிலுக்கு ஒரு தேவை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது!

ஒரு சமுதாயத்தின் 'பாலியல்' தேவைகள் நிறைவு பெற.. இவர்களின் சேவை மிகவும் அவசியமானதுடன்.. 'பாலியல் தேவைகளை' வெளிப்படையான முறையில் நிறைவு செய்ய ஒரு வடிகால் அமைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்!

ஒரு 'கேள்வி' (Demand) இருக்கும் வரை அதற்கான 'அழிப்பும்'(Supply) நிச்சயம் இருந்து கொண்டிருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் தவிர்த்து மற்று எல்லா இடமும் தடை
கீழை நாடுகள்போல் பாலத்தக்ராமும் இல்லையே ????

பெண்களை கைது செய்ய கூடாது ...
போகும் ஆண்களை பிடித்து உள்ளே போட்டால்
எல்லாம் அடங்கும்.
போபவர்கள் மீது அதி கூடிய நடவடிக்கையை எப்போது அறிமுகம் செய்கிறார்களோ அப்போது
பாலியல் தொழில் இல்லது போகும் என்பது என்னுடயை கணிப்பு.

பெண்களின் ஏழ்மை பலவீனம் சூழ்நிலை போன்றவற்றை பாவித்து ஆண்கள்தான்
பாலியல் தொழிலை தூண்டுபவர்கள்.

பெண்கள் இதில் பாவிகள்!
கற்றுக்கொண்ட பின்பு சீரும் பாம்புகளும் உண்டு

Link to comment
Share on other sites

 

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இன்னொரு ஆண் அல்லது பெண்ணின் பாலியல் இச்சைக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்து அதற்காக ஒரு ஊதியம் பெறுவதே பாலியல் தொழில் எனப்படுகிறது.

பண்டைக் காலத்தில் பெண்களே இத்தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இவர்கள் பரத்தையர், கணிகை என்னும் சொல்லால் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். வரவர பின்னாளில் இவர்கள் விலை மகளிர், வேசியர் எனவும் இன்னும் பல்வேறு வித இழி சொற்களாலும் அழைக்கப்பட்டனர், அழைக்கப்பட்டு வருகின்றனர்.

சங்க இலக்கியங்களில் பரத்தையர் எனப்படுபவர் இன்று கருதப்படுவது போல இழிவாகக் கருதப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் வாழ்வியலில் ஒரு அங்கம் போலவே இயல்பாகவே எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கின்றனர். சமூக வளர்ச்சிப் போக்கில் ஆதிக்க சக்திகள் வலுப்பெற பெற, பாலியல் உறவுகளில் கட்டுதிட்டங்கள் பெருகப் பெருக, அதன் ஊடாகவே இப்பரத்தையர்களின் சமூக இருப்பும் தாழ்வாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அல்லது அவ்வாறு கட்டமைக்கப்பட்டு உள்ளது.

இது தமிழ் மூவேந்தர்கள் ஆட்சி, பிற படையெடுப்பாளர்களின் ஆட்சி, வெள்ளையர் ஆட்சி என எல்லாக் காலத்திலும் தொடர்ந்து தற்போதும் அப்படியே நீடித்து வருகிறது. இன்றும் பரத்தையர் எனப்படுபவர் சமூகத்தில் இழிவான பிரிவினராகவே கருதப் படுகின்றனர். பரத்தமை என்பது சட்ட விரோதமாக ஆக்கப்பட்டுள்ளது.

எனினும் சமூகத்தின் எல்லாத் துறைகளையும் சார்ந்த விழிப்புணர்வு, பெண்ணுரிமை ஆகிய சிந்தனைகள், இவர்களை வேசியர், விலை மகளிர் என்னும் சொற்களால் அழைப்பதைத் தவிர்த்து பாலியல் என்பதும் ஒரு தொழில்தான் எனவே, அதைத் தொழிலாக அங்கீகரித்து அவர்களைப் பாலியல் தொழிலாளர்கள் என அழைக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் இவர்களை ஞசடிளவவைரவந என அழைப்பதைத் தவிர்த்து ளுநஒ றுடிசமநசள என அழைக்கவேண்டும் என்கிற சிந்தனை முகிழ்த்து வந்துள்ளது.

தவிரவும் பெண்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபடுபவர்களாக இல்லாமல் தற்போது ஆண்களும் இத்தொழிலில் ஈடுபட அவர்களை ஆயடந ஞசடிளவவைரவநள - ஆயடந ளநஒ றடிசமநசள என அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது ஆண்களே இதுகாறும் செய்து வந்த பணிகளைப் பெண்களும் செய்யப் புகும்போது, அப்பணியில் ஈடுபடுவோரைப் பெண் போலிஸ், பெண் நடத்துநர், பெண் ஓட்டுநர் என்று சொல்ல வில்லையா, அதேபோலப் பெண்களே இதுகாறும் செய்து வந்த பாலியல் தொழிலில் ஆண்களும் புக அவர்கள் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பாலியல் தொழிலின் தோற்றம் பற்றியும், தற்போது அதன் நிலவுகை மற்றும் அதன் சமூக விளைவுகள் பற்றியும், மனித உரிமை, பெண்ணுரிமை நோக்கில் நாம் அவற்றின்மீது சில சிந்தனைகளைச் செலுத்துவது தேவையாகிறது.

பாலியல் வரலாறு குறித்துப் புரிந்துகொள்ள சமூக வளர்ச்சிப் போக்கில், பாலியல் உறவு சார்ந்து, நாம் தொடக்கத்தில் பார்த்த சில செய்திகளை நினைவு கூர்வோம். மனித சமூகம் முதலில் வரை முறையற்ற பாலுறவில் ஈடுபட்டும், பிறகு குழு மணம், இணை மணம் என்கிற நிலைகளைக் கடந்து ஒருதார - ஒரு கணவ முறைக்கும் வந்தது எனக் கண்டோம். இதில் எந்தக் கட்டத்தில் பரத்தையர் என்பவர் தோன்றியிருக்க முடியும்?

நிச்சயமாக, குழு மணம், இணை மணக் காலங்களில், இப்பரத்தைமை தோன்றியிருக்க முடியாது. மாறாக ஒரு தார, ஒரு கணவ முறையின் போதே இது தோன்றியிருக்க முடியும் என்று நம்பலாம். காரணம், குழு மண, இணை மணக் காலங்களில் பரத்தையர் எனப்படுபவர்களுக்கான சமூகத் தேவை தோன்றியிருக்க வில்லை. மாறாக, ஒரு தார - ஒரு கணவ முறையின்போதே அதற்கான தேவை எழுகிறது. அதையொட்டியே பரத்தையர்களும் தோன்று கின்றனர்.

அதாவது, இந்த ஒரு தார - ஒரு கணவ முறை இல்வாழ்வில், பெண் பெரும்பாலும் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளைச் செய்பவளாக, அல்லது காடு கழனிகளில் உழைப்பவளாக, அதாவது வயிற்றுப் பாட்டுக்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாமல் சொந்தத் தேவைக்காகச் சொந்த உழைப்பைச் செலுத்து பவளாக மட்டுமே இருந்தாள். ஆண்களும் பெரும்பாலும் தொடக் கத்தில் இப்படிப்பட்ட வாழ்முறையைக் கொண்டவர்களாகவே இருந்திருப்பர். என்றாலும், தொழில், வாணிகம் வளர்ச்சி அடைய அடைய, பொருளீட்டும் பொருட்டு ஆண்கள் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தொல்காப்பிய நூற்பா ‘முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை’ என்னும் கூற்றின் வழியும், பெண் இல்லத்தில் இருக்க ஆண் மட்டுமே கடல் கடந்து வெளி யிடங்களுக்குச் சென்றான் என்பதை உறுதி செய்யலாம். இது தவிர போர்க் காலங்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இப்படிப்பட்ட நிலையைத் தருக்கப் பூர்வமாக யோசித்துப் பார்த்தால், கணவன் வெளியூர் செல்லும் நாள்களில் தனித்திருக்கும் பெண்களுக்குத் தான் தங்கள் பாலுறவுத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஆண் துணை தேவைப்பட்டிருக்கும். இதன்படி நிச்சயம் முதலில் ஆண் பரத்தையர்கள் தான் உருவாகி இருக்கவேண்டும். ஆனால் பண்டைக் காலத்தில் அப்படி ஆண் பரத்தையர்கள் இருந்ததாக இலக்கியச் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ இல்லை. ஒருவேளை ஆண் பரத்தையர் என்பது ஒரு தனிப்பிரிவாக இல்லாமல், பிற ஆண்களோடு இது இலை மறை காய் மறையாக நிகழ்ந் திருக்கலாம். இவை இலக்கிய மரபு கருதி பொதுவாகத் தவிர்க்கப் பட்டிருக்கலாம். அல்லது இவற்றை வரலாற்றில் பதிவு செய்வது அன்றைய ஆதிக்க சக்தியால் தடுக்கப் பட்டிருக்கலாம். அல்லது பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டு வந்த கற்புநெறி அப்படி ஒரு தேவையை உருவாக்காமல் இருந்திருக்கலாம். எப்படியோ இருக்கட்டும்.

ஆனால், ஆண் தன் தேவையை, அவன் தனித்திருப்பவனோ, துணையோடு இருப்பவனோ எப்படியிருப்பினும் தன்னுடைய பாலியல் வேட்கையைத் தீர்த்துக் கொள்ள பரத்தையர்களை நாடிப் போவதும், இப்படிப்பட்டவர்களின் தேவையை நிறைவு செய்யவே பரத்தையர்கள் இருந்து வந்திருப்பதும், அவர்கள் சமூகத்தில் ஒரு தனிப் பிரிவாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் இலக்கியங்களில், வரலாற்றில் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சித்தரிப்புகளில் இருந்தே பரத்தையர் தோன்றிய காலம், அல்லது தோற்றுவிக்கப்பட்ட காலம் ஆணாதிக்கச் சமூகக் காலம் என்பதையும், இது பெண்ணின் பாலியல் வேட்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஆணின் பாலியல் வேட்கைகளை, தேவைகளை யுணர்ந்து அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இருந்து வந்திருக்கிறது, சமூகத்திலும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படி ஆணின் பாலியல் வேட்கைளைத் தணித்துக்கொள்ள தேவைப்பட்ட பரத்தையர்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, சங்கம் மருவிய காப்பிய காலத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி, இவர்களும் எல்லா மனிதர்களையும் போலவே இயல்பான மாந்த நேயம் உள்ளவர்களாக ஆடல், பாடல் போன்ற கலைகளில் வல்லவர்களாக, நற்பண்பு மிக்கவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. சிலப்பதிகாரக் காப்பியத்தில் வரும் ‘மாதவி’யே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இப்படிப்பட்ட பரத்தையர்கள், அவரவர் வாழ்நிலை சார்ந்து பலதரப்பட்டவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் பேரரசுகள் காலத்தில் பெருங்கோயில்களில் ஆடல் மகளிராக இருந்திருக்கின்றனர். தமிழக மூவேந்தர் ஆட்சியின் போது மட்டுமின்றி, மராத்திய படையெடுப்பு, நாயக்க மன்னர்கள் படையெடுப்பு காலத்திலும், இந்நிலை இவ்வாறே தொடர்ந்து நிகழ்ந்து வந்து, வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும் இது தொடர்ந்து வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஆடல் மகளிர், அதாவது தேவதாசிகள் என அழைக்கப் பட்டவர்கள், இன்று நாம் அறியவரும் அல்லது சாதாரண மலிவான மதிப்பீட்டில் நோக்கப்படும் விலை மகளிரைப் போலக் குறு நோக்குக் கொண்டவர்களாகவோ, சமூகத்தின் தாழ்நிலையில் வைத்து மதிப்பிடப் படுபவர்களாகவோ இருந்திருக்கவில்லை. மாறாக, இவர்கள் சமூகத்தில் நல்ல தகுநிலையுடனும் உயர் செல்வாக்குடனும் இருந்திருக்கின்றனர்.

இவர்கள் தாங்கள் ஈட்டிய பொருளைத் தாங்கள் மட்டுமே அனுபவித்து வாழ நினையாமல் தரும காரியங்களுக்கு, ஏரி, குளம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல், ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் முதலான பல்வேறு நற்பணிகளுக்குப் பெருமளவு உதவிகள் செய்துள்ளனர். இத்தேவதாசிகளின் வாழ்க்கை முறையும் சமூகச் செல்வாக்கும் மக்கள் அவர்களுக்கு அளிக்கும் மரியாதையும் வெள்ளை ஆட்சியின் அதிகாரிகள் பலருக்குப் பொறாமையை ஏற்படுத்துமளவுக்கு அமைந்திருக்கிறது. இதனால் இத்தேவதாசிகளை ஒடுக்கியும், மட்டம் தட்டியும் வைக்க வேண்டிய ஆதிக்க நோக்கு வெள்ளையர்களிடம் முனைப்பு பெற்றது. இதையொட்டியே பாலியல் தொடர்பான வெள்ளை ஆட்சியின் சட்டங்களும் இயற்றப்பட்டன.

இந்தத் தருணத்தில் ஒரு கருத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தியத் துணைக் கண்டத்துள் காலூன்றத் தொடங்கி, இங்கு அனைத்துத் துறைகளிலும் தன் அதிகாரத்தை நிலை நாட்ட முயன்ற வெள்ளை ஆட்சி, இம்மக்களின் வாழ்க்கை முறை யையோ மரபையோ கவனத்தில் கொள்ளாமல் இங்குள்ள ஆதிக்க சக்திகளோடு சேர்ந்துகொண்டு, அதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியிலேயே ஈடுபட்டார்கள். அது தங்களுக்கு இசைவாக இல்லாதபோது தங்கள் நாட்டு, தங்கள் சமூக, தங்கள் கிறித்துவ மதக் கோட்பாடுகள் நெறிமுறைகளுக்கு உகந்ததாகவே இந்த மண்ணுக்கான சட்டங்களை இயற்றினர். பாலுறவு சார்ந்த நடவடிக் கைகளிலும் இதுவே நிகழ்ந்தது.

காட்டாக, இங்குள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வில், வழிபாட்டுச் சடங்குகளில், கோவில் திருவிழாக்களில், பண்டிகை தினங்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பாலுறவு சார்ந்த சித்தரிப்புகள் இடம் பெறுவதும், மக்களும் கூட்டமாகத் திரண்டு இதை இரசிப்பது என்பதும் இயல்பானது. ஆனால் இதுவெல்லாம் ஆபாசம் என்று சொல்லி, இந்நிகழ்ச்சிகளில் இச்சித்தரிப்புகள் இடம் பெறுவதைத் தடை செய்தது, பிரித்தானிய சட்டம். 1860இல் உருவாக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 292, 293, 294 பிரிவுகளை இதற்கெனவே ஒதுக்கி, இச்சித்தரிப்புகளைச் சட்ட விரோதம் ஆக்கியது.

மேலோட்டமான நோக்கில் இப்படிப்பட்ட ஆபாசங்களைத் தடை செய்வது சரிதானே, நல்லதுதானே என்று சிலருக்குத் தோன்ற வைப்பதானாலும், எது ஆபாசம், எது ஆபாசமில்லை என்பதும், குறிப்பிட்ட ஒரு செயலை ஆபாசம் என்றோ ஆபாசமில்லை என்றோ யார் முடிவு செய்வது என்பதும், இதை ஆபாசம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதும் பண்பாட்டு நோக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், ஒரு சமூகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகளை ஆபாசம் என்று சொல்ல இன்னொரு சமூகத்திற்கு அதுவும் ஆதிக்க சமூகத்திற்கு என்ன உரிமையிருக்கிறது என்பது தார்மீக அடிப்படை யிலான முக்கியமான கேள்வி. இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிக் கொண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை நோக்க அதன் ஆதிக்க நோக்கம் புரியும்.

ஆக, மீண்டும் மீண்டும் சாதாரண, நடுத்தர மற்றும் கடைநிலை மக்களின் இயல்பான பாலுறவை, பண்பாட்டு நடவடிக்கைகளை, மேல்தட்டு ஆதிக்கச் சமூகம், தங்கள் தன்னலவாத நோக்கிற்கேற்ப கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என்பதையும், அதன்மீது அதிகாரம் செலுத்தும் நோக்கிலேயே அதற்கான சட்ட திட்டங்களை வகுத்து அவற்றைக் குற்றச் செயலாக ஆக்கியுள்ளனர் என்பதையும், பாலுறவு சார்ந்த அனைத்துச் சட்ட திட்டங்களுக்கும் இதுவே அடிப்படை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரலாறு நெடுக இதற்கான எடுத்துக்காட்டுகளை நிறைய சொல்லலாம். எனினும், பாலுறவு சார்ந்து, பாலியல் தொழில் நடவடிக்கைகள் தடைச் சட்டம் குறித்து மட்டும் சற்று பார்த்து மேலே செல்வோம்.

சங்ககால தமிழர்கள் வாழ்வில் பரத்தையர் இருந்திருக்கின்றனர். ஆனால் அப்போது பரத்தையர் தடைச் சட்டம் இல்லை. சங்கம் மருவிய காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர், பாண்டியர் காலம், மராத்திய நாயக்க மன்னர்கள் படையெடுப்புக் காலம் எங்கிலும் பரத்தையர்கள் தடை செய்யப்பட்டதாகச் சான்றுகள் இல்லை.

மாறாக நாம் பார்த்த தேவதாசிகள் என்பவர்கள் - இவர்கள் ஆதிக்கங்களுக்கு - இறையடியார்க்கும், மன்னர்களுக்கும் சேவை செய்பவர்களாக அந்த நோக்கில் பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும் உட்பட்டவர்களாகச் சமூகத்தில் மிக்க செல்வாக்குடனே வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இப்படி, ஆதிக்கம் சார்ந்த இத்தேவதாசிகள் தவிர சாதாரண பரத்தையர்களும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் எந்தச் சந்தர்ப் பத்திலும் இதில் சம்பந்தப்பட்டவர்களோ, இத்தொழிலோ தடை செய்யப்பட்டிருந் ததாகத் தகவல் இல்லை. தடை என்று வந்த தெல்லாம் வெள்ளை ஆட்சி வந்த பிறகுதான்.

சரி, இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அதாவது சமூகத்தில் பாலியல் சார்ந்த சித்தரிப்புப் பாடல்களால் பரத்தையர்களது நடவடிக்கைகளால் இவர்கள் ஆட்சிக்கு என்ன கேடு? முதலாவதாக, இவர்களது ஆதிக்க நோக்கிலான சமூகக் கட்டுப்பாடு குலைகிறது. அதாவது ஒரு சமூகம் தனது சொந்தக் கட்டுப்பாடுகள் இயக்கங்களுக் குள்ளேயே, அதற்குட்பட்டே இயங்குவது இவர்கள் நோக்கிற்கு இடையூறாக உள்ளது. இது மக்கள் மீதான அதிகாரத்தைத் தளர்த்து கிறது. மக்கள் அனைவரும் அவரவர் விருப்பப்படி எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம் என்கிற சுதந்திரத்தைத் துய்க்கச் செய்கிறது. இவையெல்லாம் தங்கள் ஆதிக்க நோக்கிற்கு எதிரானது என்பது மட்டுமல்ல. இவையனைத்தும் தாங்கள் ஒழுகும் கிறித்தவ மதக் கோட்பாட்டிற்கு எதிரானது என்கிற கருத்தும் இதற்குத் துணை நின்றது. இந்த அடிப்படையிலேயே இவர்கள் இவற்றை, பாலியல் நடவடிக்கைகளைச் சித்தரிக்கும் பாடல்களை, உரையாடல்களை அவற்றை ஆபாசம் என்று தடை செய்தனர். பாலியல் தொழிலுக்கும் இவ்வாறே தடைவிதித்தனர்.

பரத்தமை தொழில் என்பது தொன்மைக்காலம் முதலே தமிழகத்தில் மட்டுமல்ல, அது அனைத்து நாடுகளிலும் உலகு தழுவிய ஒரு போக்காகவே இருந்து வந்திருக்கிறது. எனினும் நாட்டுக்கு நாடு இது வெவ்வேறு நோக்கில், வெவ்வேறு அளவுகளில் கடைப்பிடிக்கப் பட்டு வந்திருக்கிறது. பண்டைய ரோமானியப் பேரரசில் பரத்தையர் தங்கள் அடையாளத்தைக் காட்டிக் கொள்ளும் அளவில் மாறுபட்ட உடையணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஹீப்ரு நாட்டில், ஹீப்ரு அல்லாத வெளியார் மட்டுமே பரத்தையராக இருக்கலாம் எனச் சட்டம் இருந்துள்ளது. ஜப்பான் நாட்டில் பரத்தையர்கள் தனிக் குடியிருப்பாக வசிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய கால ஐரோப்பாவில் பரத்தமைத் தொழில் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான ஒழுங்கு முறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இப்படிப் பரவலாக பல்வேறு நாடுகளிலும் நிலவிய இப் பரத்தைமைத் தொழில், மறுமலர்ச்சிக் காலத்தின்போது 15ஆம் நூற்றாண்டை அடுத்த 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் பால்வினை நோய்கள் ஒரு கொடுந்தொற்று நோயாகப் பரவியதை அடுத்தும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய சீர்திருத்த சிந்தனைகளை அடுத்தும் தடை செய்யப்பட்டு பரத்தையர் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

இதையொட்டி பாலியல் தொழிலுக்கு ஒரு முடிவு கட்டும் நோக்குடன், 1899இல் அனைத்து நாட்டு ஒத்துழைப்புக்கான கோரிக்கை முகிழ்த்தது. இந்நாடுகளின் முன் முயற்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடனான பாலியல் செயல்பாடு பற்றி ஆராய 1899இல் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே வெள்ளை ஆட்சி இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் தேசிய இன மக்களின் பாலுறவு சார்ந்த நடவடிக்கைகளையும் அணுகியது. இதன்பின் 1949இல் ஐக்கிய நாடுகளின் பொது அவை உலகெங்கும் பரத்தைமைத் தொழிலைத் தடை செய்யக் கோரியது.

பிரித்தானிய ஆட்சி 1860இல் கொண்டுவந்த இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 292, 293, 294 ஆகியன வட மாநிலங்களில் ஹோலி பண்டிகையின்போது பாடும் பாடல்களைத் தடை செய்யும் நோக்கி லேயே முதலில் கொண்டு வரப்பட்டன. மக்களிடமிருந்து இதற்குப் பரவலான எதிர்ப்பு கிளம்பவே பின்னாளில் மதம் சார்ந்த, இறை நம்பிக்கைகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இந்நிகழ்வுகளில் இவற்றைப் பாடுவதோ இவற்றைச் சித்தரித்து உரையாடுவதோ, அவை குற்றச் செயல் ஆகாது எனச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இது இப்படி இருக்க தமிழகத்தைப் பொருத்தமட்டில், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் நிலவிய நிகழ்வுகளை நோக்க, இங்குக் கோவில் திருவிழாக்களில், சாமி ஊர்வலங்களில் நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டங்களில், நையாண்டி மேளங்கள் மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சி களில் பாலுறவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து கேலியும் கிண்டலுமான பேச்சுகள், அங்க அசைவுகள் எவ்வளவோ இடம் பெறு கின்றன. மக்கள் அனைவரும் ஆண் பெண் வேறுபாடின்றி இயல்பாக அதை இரசிக்கவோ, கேட்டு மனம் விட்டுச் சிரிக்கவோதான் செய்கின்றனர்.

ஆனால் மேல்தட்டு மக்களோடு தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முயலும் சில நாசூக்குப் பேர்வழிகள்தான் அதைக் கண்டு அருவருக்கவோ அல்லது முகம் சுளிக்கவோ அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளவோ செய்து தங்கள் மேட்டிமைத் தனத்தைப் பறைசாற்றிக் கொள்ள முயல்கிறார்கள். ஆக இப்படி இவற்றை எதிர்ப்பது, கண்டு முகம் சுளிப்பது மேட்டிமை மனோபாவமாகக் கட்டமைக்கப்பட்டது. இங்கே ஒரு செயலைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பொதுவில் எதையும் விரசமாய் எடுத்துக் கொள்ளாமல் இயல்பாய் எடுத்துக் கொள்கிற வரை அது பிரச்சினையில்லை. ஆனால் அது அசிங்கம், ஆபாசம் என்கிற நோக்கத்தோடு, எண்ணத்தோடு அணுக ஆரம்பித்தால் பிறகு எல்லாமும் விரசம்தான். அப்படிப்பட்ட ஒரு நோக்கில் அணுகத்தக்கதே இது. அதாவது இயல்பாய் அம்மணமாய்த் திரிகிற குழந்தைகள், அது பாட்டுக்கு இப்படித் திரிந்து கொண் டிருக்கும் வரை; எது பற்றியும் கவலைப்படாமல் விட்டேற்றியாய் நடந்து கொள்ளும் பெண்கள், அவர்கள் பாட்டுக்கு இப்படி இயங்கிக் கொண்டிருக்கும் வரைப் பிரச்சினையில்லை. ஆனால் மற்றவர்களின் பார்வையும் சொல்லும் செயலும் அவர்களை விரசமாய் உணர வைக்கிற போதுதான், அது சார்ந்த பிரச்சினைகளும் எழுகின்றன. அதைப் போலவேதான் இதுவும்.

ஆக, வெள்ளை ஆட்சி பிற துறைகளில் தன் ஆதிக்க நோக்கில் சட்டங்களை இயற்றியது போலவே, பாலுறவு சார்ந்த நடவடிக்கை களிலும் தன் ஆதிக்க நோக்கில் சட்டங்களை இயற்றியது. இந்து சமய, சமூக ஆதிக்க சக்திகளும் சீர்திருத்தம் என்பதன் பேரால் இதற்கு ஆதரவளித்தனர். பல தருணங்களில் இவர்களே இதற்கான குரலையும் முன்னெழுப்பினர்.

இந்த வகையில் மக்களின் கலை, பண்பாடு சார்ந்த பாடல் ஆடல்களில் உள்ள பாலுறவு சார்ந்த சித்தரிப்புகள் தடை செய்யப் பட்டன. மற்றும் அவற்றுக்கு மாறாக புதிய பாடல் வரிகள் அங்குப் புகுத்தப்பட்டன.

இதற்கடுத்து பரத்தையர்கள் மீதான நடவடிக்கை தொடுக்கப் பட்டது. சமூக உறுப்பினர்களில் ஓர் அங்கமாய் நகருக்குள் மக்களோடு மக்களாய் வாழ்ந்து வந்த பரத்தையர்களை, நகரைத் தூய்மைப் படுத்து வது, சமூகத்தைச் சீர்படுத்துவது, பாலுறவு சார்ந்த நடவடிக்கைகளில் ஒழுங்கு முறையைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது என்கிற பெயரால், இவர்களை நகரைவிட்டு தனிமைப்படுத்தி, ஒதுக்குப் புறமான பகுதிகளில் வாழவைத்து, இவர்களுக்கே உரிய பகுதி எனச் சிவப்பு விளக்குப் பகுதிகளை ஏற்படுத்தியது.

அதாவது பண்பாட்டு நிகழ்வுகளில் பாலுறவு சார்ந்த சித்தரிப் புகளைத் தடை செய்தது போல, இப்பரத்தையர்களையோ பரத்தையர் தொழிலையோ வெள்ளை ஆட்சி தடை செய்யவில்லை என்பது கவனிக்கத் தக்கது. காரணம் இப்பரத்தையர்கள் வெள்ளை இராணுவத் திற்குத் தேவைப்பட்டனர். மனைவி மக்களை விட்டு, நாடுவிட்டு நாடு வந்து, தனிக்கட்டையாக இராணுவ சேவை செய்யும் படையாள் களுக்கு அவர்களின் பாலுறவுத் தேவைகளுக்கு அவர்கள் பயன்பட்டனர். அதேவேளை, அந்தப் பாலுறவு பாதுகாப்பானதாகவும், நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும் பினர். எனவே அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

1857 படைவீரர் பேரெழுச்சியை வெள்ளைப் படையாள்களைக் கொண்டு கொடூரமாக ஒடுக்கிய பிரித்தானிய ஆட்சி இந்திய ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்று நடவடிக்கைகளைக் கொண்டு வந்தது போலவே, பாலுறவு சார்ந்த நடவடிக்கைகளிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாகவே, அதாவது தங்கள் படையாள்கள் தங்கள் பாலுறவுத் தேவைகளுக்குப் பரத் தையர்களை நாடிச் சென்று பால்வினை நோய்களுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவும், எனவே, பரத்தையர்களைத் தங்கள் கண் காணிப்பில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற் காகவுமே, அவர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி தனிப் பகுதிகளில் வைத்தது.

இத்துடன் பால்வினை தொற்று நோய்கள் சட்டத்தைக் கொண்டு வந்து, அவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்து, நோய் வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி அவர் களுக்குச் சிகிச்சையும் அளித்தது. இதற்காக மருத்துவமனை நடை முறைகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. இதோடு மிக முக்கியமாக இச்சிவப்பு விளக்குப் பகுதிகளுக்காக, படையாள்கள் அங்கே இங்கே அலையாமல் அவர்களுக்கு வசதியாக அமைய வேண்டுமென்னும் நோக்கில் பெரும்பாலும் அல்லது வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் அவை படையாள்கள் தங்குமிடங்களின் அருகாமையிலேயே அமைக்கப்பட்டன.

இவ்வாறு பரத்தையர்களை தங்கள் ஆதிக்க நலனுக்கு உகந்தவாறும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வந்த வெள்ளை ஆட்சியாளர்கள், பொதுவான சமூக நோக்கம் கருதியும், பெண்கள் தொடர்பாகச் சில சட்ட திட்டங்களை வகுக்க நேர்ந்தது. இதன்படி 1860ஆம் ஆண்டு உருவாக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 372, 373இல் முதிர் வயதடையாத பெண்களை, அதாவது 18 வயதுக்குக் குறைவான பெண்களைப் பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்குடன் விற்பதையோ வாங்குவதையோ தடை செய்து, முதிர் வயதுடைய பெண்களை மட்டுமே இத்தொழிலில் ஈடுபட வகை செய்தார்கள்.

ஆக, இவ்வாறு பாலுறவு சார்ந்த சமூக ஒழுக்கம் கருதியும், சமூகத்தில் பாலுறவுத் தூய்மை காக்கப்பட வேண்டியும் பரத்தைமைத் தொழில் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன் பின் சுதந்திர இந்தியாவில், 1956ஆம் ஆண்டில் தீயொழுக்க நடத்தைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, பரத்தைமைத் தொழில் முற்றாக தடை செய்யப்பட்டது. இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் மிக விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. என்றாலும் இப்போதைக்கு இதுபற்றி சனநாயக சமத்துவ நோக்கிலும், மனித உரிமை நோக்கிலும் மிக முக்கியமான இரண்டு கேள்விகளை மட்டும் முன்னிறுத்தி ஆராய்வது அவசியமானதாகப் படுகிறது.

1. பரத்தைமை ஒழிப்பின் மூலம் சமூகத்தில் பாலுறவு ஒழுங்கை காப்பாற்றி விடமுடியுமா? பாலுறவு நடவடிக்கையைக் கட்டுப்படுத்தி விட, பாலுறவு சார்ந்த குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமா...?

2. பரத்தைமைத் தொழிலைச் சமூகத்தை விட்டே - அது எந்த சமூகமானலும் சரி, முதலாளியம், சோசலிசம், கம்யூனிசம் எது வானாலும் சரி, அதை அச்சமூகத்தை விட்டே - முற்றாக ஒழித்து விட, அப்புறப் படுத்திவிட முடியுமா...?

இந்த இரண்டு கேள்விகளுக்குமே பதில் நிச்சயமாக முடியாது என்பதுதான். முதலாவதாகப் பரத்தைமை ஒழிப்பின் மூலம் சமூகத்தில் பாலுறவு ஒழுங்கைக் கொண்டு வந்து விடமுடியாது. அதைக் கட்டுப் படுத்தி விடவும் முடியாது. காரணம் பாலுறவு என்பது நாம் ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல அது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. எனவே, அதைப் பெற மனிதன் எந்தவித நடவடிக்கையிலும் இறங்குவான். சமூக ஒழுங்கு, பொது நியதி என்கிற பெயரில் ஓரளவு இதை அவன் ஏற்றுக் கொள்வான், கட்டுப்படுத்திக் கொள்வான் என்றாலும் நிலைமை முற்றும்போது, இத்தேவையின் தீவிரம் உந்தும்போது, அவன் அதை மீறவே செய்வான். அப்படி மீறுவதன் விளைவுகளே, சமூகத்தில் பாலுறவு சார்ந்த குற்றச் செயல்களாக வெளிப்படுகின்றன.

எனவே, இதில் அடுத்தவர் மீது வன்முறையைச் செலுத்த விரும்பாத, மற்றவர்கள் விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடையவோ, துன்புறுத்தவோ விரும்பாத ஒருவன், யாருக்கும் எந்தத் தொந்தரவும் வேண்டாமென்ற நோக்கில் விலைமாதரை நாடிச் செல்லலாம். இப்படிச் செல்வதை ஒழுக்கக் கேடு என்று சொல்லிவிட முடியாது. இது நேர்மையான நாணயமான செயல் என்றே ஒப்புக்கொள்ள வேண்டும்.

காரணம், நேர்மை, நாணயம் என்பதெல்லாம் ஒருவர் பரத்தையைத் தேடிப் போகிறாரா, அல்லது பத்தினி வாழ்க்கை வாழ்கிறாரா என்பதையெல்லாம் வைத்து மதிப்பிடுவதல்ல. ஏனெனில் பரத்தையைத் தேடிப் போகிறவர் பல நல்ல குணாம் சங்களைக் கொண்டவராக இருக்கலாம். பத்தினி வாழ்க்கை வாழ்பவர் பல மோசமான குணாம்சங்களைக் கொண்டவராகவும் இருக்கலாம். ஆகவே இதை யெல்லாம் வைத்து ஒருவர் ஆளுமையை மதிப்பிட்டு விடமுடியாது. மதிப்பிடவும் கூடாது.

இந்த அடிப்படையில் நோக்க, ஒருவர் பரத்தையிடம் போகிறார் என்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல. இதை யெல்லாம் வைத்து அவரது ஆளுமையை மதிப்பிடுவதும் நியாயமல்ல என்பது புரியவரும்.

இப்படிச் சொல்வது பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். இப்படி யெல்லாமா பேசுவது என்று மனம் பொருமலாம். இருக்கட்டும். காலம் காலமாக ஆதிக்கங்கள் நம்முள் உருவாக்கி வைத்திருக்கும் கெட்டிதட்டிப் போன ஆதிக்கக் கருத்துகள், அது சரியா, சரியில்லையா, நியாயமா, நியாயமற்றதா எனக் கேள்விக்குட்படுத்தி, காரண காரிய நோக்கிலோ, தருக்கப் பூர்வமாகவோ, சிந்தித்துப் பார்க்க முயலாத மனநிலை. எதுவானாலும் எது சொன்னாலும் அது அதை அப்படியே ஆமாம் போட்டு ஏற்றுக் கொள்ளும் பகுத்தாய்வற்ற நோக்கு. இப்படியே பழகிப் போனதால்தான் நாம் சொல்லுகிற பலதும் பலருக்கு அதிர்ச்சியை ஏற் படுத்துவதாக இருக்கின்றன.

ஆகவே, இவற்றை இதுவரை சிந்தித்துப் பார்த்த வகையில் அல்லாமல் வேறு வகையில் சிந்தித்துப் பார்ப்போம். இதற்கு அடிப்படையாய் முதலில் ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வோம். அதாவது சமூகம் காலம் காலமாகக் கட்டிப் பாதுகாத்து வந்த ஒழுக்க மதிப்பீடுகளான நேர்மை, நாணயம், நம்பிக்கை, வாய்மை, அறம், நல்லொழுக்கம் இப்படி எவ்வளவோ சொற்கள் நம்மைச் சுற்றி நிலவ, இவை அனைத்திற்கும் பொருள்தான், இவற்றின் நோக்கம்தான் என்ன? என்று யோசித்துப் பார்ப்போம்.

இப்படி யோசிக்க இவை எல்லாவற்றின் பொருளையும் ஒரு வாக்கியத்தில் சொல்லி விடலாம். அதாவது, எல்லாவற்றின் சாரமும், ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. அப்படி எதுவும் ஏற்படுத்தாமல் பழக வேண்டும், வாழ வேண்டும் என்பதுதான். அதேபோலச் சக மனிதன் எவனும் தனக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. தன்னுடைய உரிமையில் தலையிடக்கூடாது என்பதுதான்.

இதையே வேறு வார்த்தைகளில் யோசிப்போம். சுதந்திரம், சமத்துவம், சனநாயகம், மனித உரிமை என்றெல்லாம் பேசுகிறோமே இதன் சாரமான பொருள்தான் என்ன? ஒவ்வொரு மனிதனும் தன் சக மனிதனுக்கு நிகரான சமத்துவத்தைத் தன் வழியில் சிந்திக்கும் இயங்கும் சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் என்பதுதானே? அதே வேளை இந்த உரிமைகள் எதுவும் சக மனிதனின் உரிமையைப் பறிக்கக்கூடாது, பாதிக்கக் கூடாது. அதேபோலச் சக மனிதனும் தன் உரிமையைப் பறிக்கக் கூடாது, பாதிக்கக்கூடாது என்பதுதானே?

இவ்விரண்டையும் நியாயம் என்று ஏற்றுக் கொண்டால் ஒரு மனிதன் பரத்தையிடம் செல்வதில் என்ன குற்றம் இருக்கமுடியும்? யாரையாவது போய் வம்பு செய்தால், அவர்களிடம் போய் வன்முறையில் ஈடுபட்டால், அது தவறு. குற்றச் செயல். ஆனால் இதற்கென்றே இருக்கும் பரத்தையிடம் அவள் விருப்பத்தோடு, சம்மதத்தோடு போனால் அது எந்த வகையில் குற்றம்? இந்தத் தருணத்தில் பரத்தை என்கிற ஒரு சமூகப் பிரிவு இருக்க வேண்டுமா, இருப்பது நியாயமா என்கிற கேள்விகளெல்லாம் எழலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். அதைப் பிறகு பார்ப்போம். தற்போது ஒழுக்கவியல் ரீதியில் ஒரு மனிதன் பரத்தையிடம் செல்வதே குற்றச் செயலாகி விடுமா? அதை வைத்தே அவனது ஆளுமையை மதிப்பிட்டு விட முடியுமா? என்பதுதான் கேள்வி.

முடியாது. இது குற்றச் செயல் ஆகாது என்றால் பரத்தைமையும் குற்றச் செயல் இல்லைதான். ஆனால் இதைத்தான் குற்றச் செயல், இது கூடாது என்கிறது சட்டம்.

வழக்கமான ஆதிக்க நோக்குக்கு இரையான அல்லது பத்தாம் பசலித் தனமான கருத்துக்களிலிருந்து விடுபட்டு, சற்று நியாய உணர்ச்சியுடனும், அறிவியல் நோக்கிலான தர்க்கப்பூர்வ சிந்தனை யுடனும் இப்படி யோசித்துப் பார்ப்போம்.

கடைத் தெருவில் எந்தப் பொருளையும் கூறுகட்டி வைத்து அதன் விலையைக் கூவி வியாபாரம் செய்யலாம். துணிக் கடை, உணவகம், பிற விற்பனைக் கூடங்களில் வாயிற்புறத்தில் ஆள் வைத்து, தெருவே போகிறவர்களை, உள்ளே வந்து போகச் சொல்லி கூவியழைக்கலாம். காலை நேரங்களில் கொலுத்து வேலை, பிற வேலை செய்கிறவர்கள் ஒரு முனையில் கூடி நிற்க, தேவைப்படுபவர்கள் வந்து தேவைப்படும் வேலைக்கு அழைத்துப் போகலாம். ஆனால் ஒரு பெண் தனது உடலை சிறிது நேரம் பிறருக்கு அனுபவிக்கக் கொடுப்பதையோ, அல்லது யாரும் அனுபவிக்க அழைத்துப் போகிறீர்களா அல்லது வருகிறீர்களா என்று கோருவதையோ மட்டும் எப்படி தவறு, குற்றச் செயல் என்று கூறலாம்?

சிலர் கேட்கலாம். மற்றதெல்லாம் பண்டம், கூலியுழைப்பு. ஆனால் பெண்மை அப்படியா? அதைப் பண்டமாக்கலாமா? அதை கூலியுழைப்பு ஆக்கலாமா? இது பெண்ணடிமைத்தனம் ஆகாதா? பெண்மையைக் கேவலப்படுத்துவது, இழிவு படுத்துவது ஆகாதா? எனலாம்.

நியாயம். பெண் என்பவள் பண்டமில்லை, பாலுறவு என்பது கூலியுழைப்புமில்லை என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு பெண் ஏதோ காரணம் பற்றி, இதை வறுமை என்கிற ஒற்றைக் கோணத்தில் மட்டும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை. வறுமை ஒரு முக்கிய அல்லது பெரும்பான்மை காரணமாயிருக்கலாம். அதைத் தாண்டி இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆக ஏதோ காரணம் பற்றி ஒரு ஆணைப் பாலுறவுக்கு அழைக்கிறாள் அல்லது ஆண் அவ்வுறவுக்கு அவளை நாடிப் போகிறான் என்றால் இதில் மற்றவர்களுக்கு என்ன வந்தது? இதை ஏன் சமூகம் குற்றச் செயலாகக் கருதவேண்டும்? அப்படி கருதுவதன் நோக்கம் என்ன, எது அப்படி அவர்களை நோக்க வைக்கிறது? என்பதே இங்குக் கேள்வி.

சரி, இருக்கட்டும். 1956இல் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் இதோ 2006இல் ஐம்பதாண்டுகள் ஆகிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில் பரத்தைமை ஒழிந்து விட்டதா? ஒழிக்கப்பட்டு விட்டதா? இல்லை மாறாக வளர்ந்துள்ளது.

சிறு நகரம், பெரு நகரம் எனப் பாகுபாடு இன்றி எல்லா நகரங்களிலும், அந்தந்த நகரின் தொழில் வணிக வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றின் தேவைக்கேற்ப இத்தொழிலும் பெருகி, ‘ஜாம் ஜாம்’ என்று நடந்து வருகிறது. இது காவல் துறைக்கு, அரசியல் வாதிகளுக்கு, அதிகார வர்க்கத்தினருக்கு நன்கு தெரியும். சரியாகச் சொல்வதானால் இவர்கள் ஆதரவோடும் அனுமதியோடும் தான் இத்தொழில் நடந்து வருகிறது. எப்போதாவது சில சமயம் அதிரடி சோதனை, நடவடிக்கை என்று செய்திகள் வருமே தவிர, மற்றபடி இவர்கள் எல்லோரின் ஆதரவுடன் அன்றாடம் இத்தொழில் கொடி கட்டியே பறக்கிறது. அதாவது அனைத்து ஆதிக்க யந்திரங்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியே வருகின்றன.

இப்படியிருக்க இதைச் சட்டத்தில் மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும்? இந்தத் தடை இதில் என்ன சாதனையை நிகழ்த்தி யிருக்கிறது? எதுவுமில்லை. மாறாக இந்தத் தொழிலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு இது கேட்டை, இடையூறுகளைத்தான் ஏற்படுத்தி யிருக்கிறது. சொல்லப் போனால் இப்படிப்பட்ட கேடுகளை உரு வாக்க வேண்டும், இதுதொடர் புடைய மக்களை அச்சத்திலும், அடிமைத்தனத்திலும் எப்போதும் தொடர்ந்து தங்கள் கட்டுப் பாட்டிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற் காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டு நடப்பில் வைக்கப்பட்டிருக்கிறது எனலாம்.

இப்படி யோசித்துப் பாருங்கள். இத்தொழில் சட்ட விரோதம் என்பதால் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் இதைப் பயந்து பயந்து செய்கிறார்கள். இந்தப் பயம் காரணமாக தங்களுக்குப் பாதுகாப்பு கருதி அவர்கள் தரகர்களை நாடுகிறார்கள். இத்தரகர்கள் பெரும்பாலும் தாதாக்களாகவோ அல்லது தாதாக்களுக்குக் கட்டுப்பட்ட கைக்கூலி களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் இப்படித் தொழிலுக்கு வரும் பெண்களை, அவர்களது அவல நிலையைப் பயன்படுத்தி அவர்களை முடிந்தமட்டும் சுரண்டுகிறார்கள். அனாதையாய், அபலையாய் கிடக்கும் இளம் பெண் களை, தங்கள் தன்னலனுக்காக, வற்புறுத்தி இத்தொழிலுக்குக் கொண்டு வருகிறார்கள். காவல்துறையும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாமுல் வாங்கியும், விரும்புகிற பெண்ணை ஓசியில் துய்த்தும் தங்கள் பங்கிற்கு இப்பெண்களை வதைக்கிறார்கள். இதனால் இப்பெண்கள் இம்மாதிரி நட வடிக்கைகளில் தங்களுக்கு எந்த இடையூறும் நேராதிருக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அரசியல்வாதிகளுக்கும், ஆட்சி நிர்வாகத்தின் முக்கிய புள்ளிகளுக்கும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விருந்து படைத்து அவர்களைத் திருப்திப் படுத்துகிறார்கள். இவ்வாறும் மற்றும் இதை யொட்டியும் இத்தொழில் சார்ந்து நடைபெறும் முறைகேடுகள், கொடுமைகள் ஏராளம்.

சரி, இவ்வளவு கொடுமைகளையும் சம்பந்தப்பட்ட பெண்கள் ஏன் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்? செய்வது சட்டவிரோதத் தொழில். ஆகவே இதில் எங்கேயும் போய் நியாயம் கோர முடியாது. எனவே எது நேர்ந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிற நிர்ப்பந்தம்தானே? இந்த நிர்பந்தத்தால் தானே அவர்கள் தங்களுக்கு என்ன கொடுமை நேர்ந்தாலும் எப்படிப்பட்ட அநீதி இழைக்கப் பட்டாலும் எல்லாவற்றையும் சகித்துப் பொறுத்துக் கொண் டிருக்கிறார்கள்?

இதுவே இத்தொழில் சட்டவிரோதம் அல்ல, சட்டத்திற்கு உட்பட்டதுதான், குற்றச் செயல் அல்ல, பிற சாதாரண செயல்கள் போலவே தான் இதுவும் என்கிற நிலை இருந்தால், யாரும் அவர்களைக் கொடுமைப் படுத்த முடியுமா? முடியாது. அவர்கள் மேல் யாரும் வன்முறையை ஏவ முடியாது. காவல் துறையும் மாமுல் வாங்க முடியாது. அவர்களை ஓசியில் அனுபவிக்க முடி யாது. அப்படி ஏதாவது நேர்ந்தால், முயன்றால் அவர்கள் நியாயம் கேட்டு புகார் தரலாம், நடவடிக்கை கோரலாம். நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம். நடந்த சம்பவத்துக்கு நியாயம் கோரலாம். இழப்பீடு கேட்கலாம். ஆனால் இப்படிப்பட்ட எல்லா வாய்ப்பு களையும் அடைத்து வைத்திருக்கிறது பரத்தமை சட்டவிரோதம் என அதைக் குற்றச் செயலாக்குகிற சட்டம்.

இப்போது புரிகிறதா, பரத்தைமையை ஏன் குற்றச் செயல் என்று அறிவித்து அதற்குத் தண்டனை வழங்குகிறார்கள் என்று?

இதன் நோக்கம் பரத்தையை ஒழிப்பதோ, சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதோ, சமூகத் தூய்மையைப் பாதுகாப்பதோ அல்ல. மாறாக தங்கள் சாதி ஆதிக்கப் புனிதம் காக்க, மேல் தட்டுப் பிரிவினரின் நலம் காக்க, பிற சாதாரண மனிதர்கள் மீது, மனித உடல்கள் மீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்த அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, ஆக இதுபோன்ற காரணங்களுக்காகவே பரத்தைமையைச் சட்ட விரோதம் என அறவித்து அதைத் தடை செய்து, அதே வேளை திரை மறைவில் அதை மீறிக் கொண்டும் இருக்கின்றன ஆதிக்க சக்திகள். ஆகவே இத்தடை மூலம் பாலுறவில் சமூக ஒழுங்கைப் பாதுகாத்து விட முடியாது. பாலுறவு நடவடிக்கையைக் கட்டுப்படுத்தி விடமுடியாது என்பது வெளிப்படை.

அடுத்தது, பரத்தைமையைச் சமூகத்திலிருந்து முற்றாக ஒழித்து விட முடியுமா என்பது பற்றி. முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதில்.

சிலர் பரத்தைமைத் தொழிலுக்கு வறுமைதான் காரணம் என்கிற ஒற்றைக் கோணத்தில் மட்டுமே பார்த்து வறுமை ஒழிந்தால் பரத்தைமையும் ஒழிந்து விடும் என்று வறட்டு வாய்பாடு ஒப்பித்தனர். அதாவது வயிற்றுக்கு மூன்று வேளை சோறு போட்டால், உடுக்க நல்ல துணிமணிகள் இருந்தால், வாழ நல்ல உறைவிடம் இருந்தால் பரத்தைமை போய்விடும் என்றனர்.

சோவியத் ஒன்றியத்தில் 1917இல் புரட்சி வெடித்து1991 இல் அது தாழ்ச்சியுறும் வரை 75 ஆண்டுகள் முக்கால் நூற்றாண்டு சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. எனினும் பரத்தைமை ஒழியவில்லை. மக்கள் சீனத்தில் 1956இல் புரட்சி வெடித்து இதோ இந்த 2009 வரை 53 ஆண்டுகள் அரை நூற்றாண்டுக்குமேல் சோசலிசத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்றது. அங்கும் இன்றும் பரத்தைமை ஒழியவில்லை. பாலியல் குற்றங்கள், நீலப்படத் தயாரிப்புகள், விநியோகங்கள் மறையவில்லை.

எனவே, பரத்தைமைக்கும், பசி பஞ்சம் பட்டினிக்கும் நேரடியாகத் தொடர்புபடுத்தி, பசி ஒழிந்தால் பரத்தைமை ஒழியும் என்கிற வாய்பாடு அர்த்தமற்றது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். பரத்தைமைக்கு வயிற்றுப் பசியைத் தாண்டி வேறு பல காரணங்களும், ஏதோ ஒரு வகையில் பாலுறவுப் பசியும் காரணமாக அமைகின்றன என்பதை நாம் உணரவேண்டும்.

வயிற்றுப் பசி எப்படி விதம் விதமான உணவுகளை நாடுகிறதோ, அதேபோலப் பாலுறவுப் பசியும் விதம் விதமான உறவுகளை வழிமுறைகளை நாடுகிறது. வயிற்றுப் பசியுள்ள ஒருவன் அனைத்து வகை உணவுகளையும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். வெளியிலும் வாங்கிச் சாப்பிட லாம். அதேபோலப் பாலுறவுப் பசிக்காரனும் அவன் விரும்பியவாறான உறவுகளை வீட்டிலும் பெறலாம். இயலாதபோது வெளியிலும் பெறலாம். இது அவரவர் வாழ்நிலை, சமூக இருப்பு, சுற்றி நிலவும் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாடின்மை அல்லது பழகும் வாய்ப்பு, வாய்ப்பின்மை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே இது இயல்பாகவும் நிகழ்ந்து விடுகிறது.

எந்த ஒரு ஆணும் தான் விரும்பும் எல்லா சுகங்களையும் ஒரு பெண்ணிடமே பெற்று விடுவதில்லை. அதேபோல எந்த ஒரு பெண்ணும் தான் விரும்பும் எல்லா சுகங்களையும் ஒரு ஆணிடமே பெற்று விடுவ தில்லை. பெற்று விடவும் முடியாது. இது அவரவர் வாழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். சிலருக்குச் சில ஆசைகள் நிறைவேற வாய்ப்பு கிட்டும். சிலருக்கு அவ்வாய்ப்பு கிட்டாமல் அது அப்படியே அவரவர் ஆழ் மனதிலும் தங்கியிருக்கும். இது மரணம் வரைக்கும் அப்படியே தங்கி அதுவும் உடன் மரணமடைவதும் உண்டு. அல்லாது எப்போதாவது அரிதாகச் சந்தர்ப்பம், சூழ்நிலை வாய்க்கும்போது இது தலை தூக்குவதும், முடிந்தால் தன் தேடலை நிறைவேற்றிக் கொள்வதும் நிகழும்.

அதேபோல அடித்தட்டு மக்கள் மத்தியில் ஒரு சொலவடை உண்டு. ‘ஆசை தீர பண்ணவனும் இல்லை, அழுக்குத் தீர குளித்தவனும் இல்லை’ என்று. இது ஓர் யதார்த்தமான அப்பட்டமான உண்மை. வயிறு முட்ட உணவு உண்டிருக்கும் ஒருவனுக்கு, அந்த ஒரு கணம் அதற்குமேல் உண்ணமுடியாத நிலையில் எல்லாம் போதும் என்று தோன்றும். அது செரித்துப் பசிக்கத் தொடங்கும் போது அடுத்த வேளை உணவு பற்றிய தேடல் தொடங்கிவிடும். அதேபோலத்தான் உடற்பசியும். அந்த நேரம் செய்து முடித்த பிறகு போதும் என்று சோர்வு தட்டலாம். தளர்வு ஏற்படலாம். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலோ, மணிகளிலோ அவரவர் உடல், மன நிலையைப் பொறுத்து இன்னும் வேண்டும் என்று தோன்றலாம். இதுவெல்லாம் இயற்கையே தவிர குற்றச் செயல்கள் அல்ல. குற்றச் செயலாகப் பார்க்க வேண்டிய அவசியமுமில்லை.

எனவே, நாம் பார்க்க வேண்டியதெல்லாம், இதிலே வன்முறை, வலியுறுத்தல், கட்டாயப்படுத்தல் இருக்கிறதா, அடுத்தவர் விருப் பத்திற்கு மாறாக பலாத்காரம், அடுத்தவர் வாழ்விலான குறுக்கீடு இருக்கிறதா? என்பதைத்தானே தவிர, இப்படிப்பட்டவற்றைத்தான் குற்றச் செயலாகப் பார்க்கவேண்டுமே தவிர, இருவரும் மனமொத்து இணக்கமாக ஒரு நிகழ்வில் ஈடுபட்டால் அதைப் போய் குற்றச் செயலாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதே நம் வேண்டுகோள்.

இந்த நோக்கில் பரத்தைமையைப் பார்த்தால் பரத்தைமையை ஒழிக்கவேண்டும் என்கிற எண்ணமோ, அதற்கான அவசியமோ எழாது. மாறாக அதை அனுமதிப்பதே, நீட்டிக்கச் செய்வதே பொருத்தமாக இருக்கும். அதுவே சமூக நலனுக்கும் உகந்ததாக, நல்லதாக இருக்கும் என்றே தோன்றும். உண்மையும் அதுவே.

வேண்டுமானால், வெறும் வெட்டி ஒழுக்கவியல் கோட் பாடுகளில், மதிப்பீடுகளில் இறங்காமல், சனநாயம், சுதந்திரம், சமத்துவம், மனித உரிமை என்கிற நோக்கிலும் சமூக நலன், பாது காப்பு, சமூக அமைதி, பாலுறவுக் குற்றச் செயல்கள் குறைப்பு என்கிற நோக்கிலும் வைத்து, இதன் அடிப்படையில் நோக்க பரத்தைமையைத் தடை செய்து ஒழிப்பது நல்லதா, அல்லது அதை அனுமதித்து விடுவது நல்லதா என்று வாதிட்டால் அனுமதித்து விடுவதே நல்லது என்றுதான் தோன்றும்.

உணர்ச்சிவயப்படாமல், தூய்மைவாதக் கோட்பாட்டு மாயை சார்ந்த அதிர்ச்சிக்கெல்லாம் ஆளாகாது, தருக்கப்பூர்வமானதும், நடைமுறை பூர்வமானதும் ஆன சிந்தனைகளுக்கு நம்மை உட்படுத்தி யோசித்தால் இதன் நியாயம் புரியும். அந்த நோக்கில் பரத்தைமையை அனுமதிப்பதன் சாதகமான அம்சங்களாக நமக்குத் தோன்றுவன.

1. முதலாவதாகவும் அடிப்படையாகவும் பரத்தைமையில் ஈடுபடும் பெண்கள் மீதான வன்முறை, கொடுமை, சுரண்டல் ஒழிக்கப்படும். இவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்குச் சட்டப்பூர்வ நிவாரணம், நியாயம் கோர முற்படுவார்கள். அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படும். குறைந்த பட்சம் அதற்கான வாயில்களாவது திறக்கப் படும்.

2. இதைச் சட்டப்பூர்வமாக்கிவிட்டால், உடனடியாக இல்லாவிட் டாலும் காலப் போக்கில் இது இழிதொழில் என்கிற நிலைமாறி, எல்லாத் தொழில்களைப் போலவே இதுவும் ஒரு தொழில் என்கிற கருத்து உருப்பெற்று, இதற்கு உரிய சமூகத் தகுநிலை கிட்டும். யாரும் தான் பரத்தையாய் இருப்பதற்காக அசிங்கமுற மாட்டார்கள். மாறாகத் தாங்கள் பரத்தையர்கள் என்பதைப் பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு அவர்களும் சமூகத்தில் ஓர் அங்கமாகக் கண்ணியத்தோடு வாழ்வார்கள்.

3. இது இழிதொழில் இல்லை என்றால் இதை நாடிப் போவதும் தவறில்லை. இது இயற்கையானது, நியாயமானது தான் என்கிற உணர்வு சமூகத்தில் ஏற்படும். உணவகத்துக்குப் போய் உணவு உண்பது போல, பரத்தையர் விடுதிக்குப் போய் தன் பால் பசியைத் தீர்த்துக் கொள்வதும் இயல்பான நடப்பு ஆகிவிடும். இதை யாரும் வித்தியாசமாக நினைக்க மாட்டார்கள். எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். இதில் திருட்டுத் தனங்களும் மோசடிகளும் இருக்காது.

4. இவ்வாறு சம்பந்தப்பட்ட ஆண்கள், தனிக்கட்டைகளோ, மணமானவர்களோ, முதிர்வயது இளைஞர்களோ, முதியவர்களோ அவரவர்களுக்கும், அவர்களது பாலுறவுப் பசிக்கு இப்படி ஒரு வெளியீட்டு வாய்ப்பை வழங்கிவிட்டால், அப்புறம் சமூகத்தில் பாலுறவு சார்ந்து நடைபெறும் குற்றச்சாட்டுகளில் பல பெருமளவு குறையும். இந்த வெளிப்பாடு அப்படிப்பட்ட குற்றச் செயல்களைப் பெருமளவு குறைத்து விடும்.

5.     பரத்தைமை என்பதைப் பெண்ணோடு மட்டும் குறுக்கிப் பார்க்காமல், ஆண் பரத்தையர்களையும் உள்ளடக்கிச் சிந்தித்துப் பார்த்தால், பெண்களுக்கு இதன் வழி ஒரு நல்ல வெளிப்பாடு கிடைக்கும். தனித்திருக்கும் பெண்களோ, குடும்பத்தில் இருக்கும் பெண்களோ, தாறுமாறான உறவுகளில் சிக்கிப் பலியாவதோ, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தொல்லைகளைத் தருவித்துக் கொள்வதோ நிச்சயம் குறையும்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மிக அடிப்படையான தேவை, பாலுறவு சார்ந்த செயற்பாடுகளை ஏதோ மகா உன்னதம் மிக்க செயல்பாடாகவோ, உயர்த்தியோ அல்லது மிகக் கேவலமான செயல் பாடாகத் தாழ்த்தியோ நோக்காமல் எல்லாச் செயல்பாடுகளையும் போல அதுவும் ஒரு சாதாரண இயற்கையான செயல்பாடுதான் என்று நோக்கு மளவுக்கு நாம் பக்குவம் பெற வேண்டும் என்பதுதான்.

சரி, இந்தப் புரிதலில் இதோ இங்கே இப்படி இதன் சாதகங் களைப் பட்டியலிடுவது போலப் பாதகங்களைப் பட்டியலிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். முடியாது. மீண்டும் மீண்டும் சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கக்கேடு, சீரழிவு என்கிற ஆச்சாரக் கூச்சல்தான் எழும். இதைத் தாண்டி இதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நியாயத்தையும் முன் வைக்க முடியாது. ஆனால் இவையனைத்துமே ஆதிக்க நலன் சார்ந்த, நம்மை அடிமைப்படுத்துகிற, நம்மை அவர்கள் கட்டுக்குள் வைக்க முயலும் அதிகார நடவடிக்கைகளே தவிர, வேறல்ல என்பதை ஏற்கெனவே பலமுறை மெய்ப்பித்த வகையில் மீண்டும் அதை உறுதிப் படுத்தி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

என்றாலும், இவற்றையெல்லாம் விடுத்து நோக்க, சிலர் ஒரே ஒரு காரணம் சொல்லலாம். அதாவது, இப்படியெல்லாம் அனுமதித்தால், இது உடல் நல நோக்கில், நலவாழ்வு நோக்கில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தாதா, பால்வினை நோய்கள் பெருக்கெடுத்துப் பரவாதா, பல பேருக்கும் இதைத் தொற்ற வைப்பதாகாதா என்று கேட்கலாம். நியாயம். இதை யாரும் மறுப்பதிற்கில்லை.

ஆனால், இதற்கு மாற்று ஏற்பாடுகள் நிறைய செய்து கொள் ளலாம். பரத்தையர்களுக்குப் பருவகால அடிப்படையில் பால் வினை நோய்கள், மற்றும் பிற நோய்கள் குறித்து ஆய்வுகள் செய்து அப்படிப்பட்ட நோய்கள் ஏதாவது இருந்தால் உரிய சிகிச்சைகள் அளித்து, அவர் நல்லுடலுடன்தான் இருக்கிறார் என மருத்துவச் சான்று வழங்கலாம். இதற்கு ஒவ்வொரு வருக்கும் அடையாள அட்டை, உடல் நலக் குறிப்பேடு வைத்துப் பராமரிக்கலாம். விடுதிக்கு வரும் அல்லது விடுதியில் இருக்கும் ஆண்களுக்கு ஆணுறையைக் கட்டாயமாக்கலாம். இப்படி மருத்துவ ரீதியில் உரிய நடவடிக்கைகள் எடுத்து இதன் மூலம் நோய்த் தொற்று அல்லது தொற்று நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கலாம்.

அதாவது கொள்கைப் பூர்வமாக இதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டால், நடைமுறை பூர்வமாகத் தேவையான ஏற்பாடுகளை யெல்லாம் அது அதற்கு உரியவாறு நடப்பில் எதிர் கொள்ளும் பிரச்சினை களுக்கு ஏற்ப அவ்வப்போது செய்து கொள்ளலாம்.

எல்லாம் சரிதான். இது மீண்டும் பெண்ணடிமைத் தனத்துக்கு வழி வகுக்காதா, பெண்களைப் போகப் பொருளாய்க் கருதுவதும், அவர்களை இழிவுபடுத்தவதும் ஆகாதா எனச் சிலர் கேட்கலாம். பல பெண்ணுரிமை அமைப்புகளே கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் பெண் அடிமைத் தன நோக்கிலான சிந்தனை அல்ல இது. மாறாக, முழுக்க முழுக்க பெண் விடுதலை நோக்கிலான சிந்தனையே இது. முதலாவதாகப் பரத்தையர் என்று நாம் சொல்லும்போது பெண் பரத்தையர்களை மட்டுமே கருத்தில் கொண்டு நாம் பேசவில்லை என்பதையும், ஆண் பரத்தை யர்களையும் கருத்தில் கொண்டே பேசுகிறோம் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஆண்கள், தங்கள் பாலுறவுத் தேவைக்குப் பெண் பரத்தையர்களை நாடிச் செல்வது போல், தற்போது பெண்களும் ஆண் பரத்தையர்களை நாடிச் செல்லும் போக்கு முன்வந்துள்ளது. இதற்காக இத்தேவையை நிறைவு செய்ய ஆண் பரத்தையர்களும் தற்போது அதிகமாகி வருகிறார்கள். இந்த நிலையில் இரு பாலருக்கும் பொதுவாகவே இது சொல்லப்படுகிறது.

இதன்படி இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் யாருக்கும் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. காவல்துறைக்குக் கப்பம் கட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கு ‘ஓசி’ சுகம் அளிக்க வேண்டியதில்லை. அரசியல்வாதிகளுக்கோ, அதிகார பீடங்களுக்கோ வணங்கிக் கொடுத்து சேவகம் புரிய வேண்டியதில்லை. இது சட்டப்பூர்வ தொழில் என்பதால் எல்லாத் தொழிலிலும் ஈடுபடுபவர்களுக்கு உள்ளது போன்ற சுதந்திரம் இவர்களுக்கும் உண்டு. இவர்கள் சங்கம் வைத்துக் கொள்ளலாம். அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கலாம். அதற்காகப் போராடலாம். நீதிமன்றம் செல்லலாம். வழக்கு தொடுக்கலாம். இதற்கான சுதந்திரத்தை இவர்கள் முழுமையாக அனுபவிக்கலாம். அப்படி அனுபவிக்க வழி வகுப்பதே இச்சட்டப் பூர்வ உரிமை.

இதில் இன்னொன்றும் மிக முக்கியம். இவர்களில் எந்தப் பெண் ணையும் நீங்கள் போய் பரத்தையர் தொழிலை மேற்கொள்ளுங்கள் என்று நாம் பரிந்துரைக்கவில்லை. யாரையும் வற்புறுத்தவுமில்லை. அவரவர் விரும்பும் வேறு எந்தத் தொழிலையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் இது எந்த விதத்திலும் தடையும் இல்லை. இதைப் பகுதி நேரமாகவும் கூட அவர்கள் மேற்கொள்ளலாம். இதுவெல்லாம் இதில் பிரச்சினை இல்லை.

இப்போது இதில் நாம் சொல்ல வருவதெல்லாம் தற்போது சட்டப் பூர்வமற்றதாக, சட்ட விரோதமாக இருக்கும் இத்தொழிலில் இருக்கும் இடர்ப்பாடுகளை முதலில் களையவேண்டும் என்பதுதான். அதோடு இது சட்டப்பூர்வமாக்கப்பட்டால் இதை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெண்களை, தற்போது, அது ஏதோ அசிங்கம், இழிவு என்பதுபோல நோக்க வேண்டியதில்லை என்பதுதான்.

அது மட்டுமல்ல, ஒரு ஆணுக்கு ஒரு பரத்தையிடம் போக உரிமையிருக்கும் போது, ஒரு பெண்ணுக்கு ஒரு பரத்தனிடம் போக உரிமையில்லையா என்கிற நோக்கிலும் கோரப்படுவது இது. காரணம் இந்தப் பூமி, அதன் வளங்கள், இயற்கை, மனிதர்கள், வாழ்க்கை சுகங்கள் அனைத்தும் ஆணை மையப்படுத்தியே, ஆணுக்காக மட்டுமே படைக்கப் பட்டது போல ஆணாதிக்க நோக்கிலேயே பார்க்கிற பார்வையிலிருந்து, முற்றிலும் விலகி, அதற்கு மாறாக பெண்ணிய நோக்கிலும், பெண் களுக்காகவும் தான் இந்த உலகங்களும், சுகங்களும் என்கிற பெண்ணுரிமை நோக்கிலும் பார்க்கப்படுவது இது. எனவே, பெண்ணுரிமையாளர்கள் இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை. மாறாக வரவேற்க வேண்டிய கருத்து இது.

இப்படி, பரத்தையர் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டால் முடி திருத்தும் நிலையம், அழகு நிலையங்கள் போல் பரத்தையர் இல்லங்களும் இயல்பாகிவிடும். அதை நடத்துபவர்கள் இழிவாகவோ மலிவாகவோ கருதப்பட மாட்டார்கள். அங்குப் போய் வருவதும் இழிவாகவோ, மலி வாகவோ கருதப்பட மாட்டாது.

சமூகம் ஓரளவு இதற்குரிய பக்குவம் அடையும்போது, பெண் பரத்தையர் விடுதிகள் போல ஆண் பரத்தையர் விடுதிகளும் இயல்பாக முளைக்கத் தொடங்கும். அதில் பெண்களும் தங்கள் தேவைக்கு இயல் பாகச் சென்று வரும் நிலை ஏற்படும். காலப் போக்கில் இதுவும் சகஜமாகிவிடும்.

இதையெல்லாம் கேட்க ‘ஐயோ, ஐயோ, அபச்சாரம், அபச்சாரம்’ என்று காதை மூடிக் கொள்ளவோ, கண்களைப் பொத்திக் கொள்ளவோ சிலருக்குத் தோன்றலாம். இப்படிப்பட்ட அற்ப உணர்ச்சிகளுக்கு ஆளாகாது, இடம் தராது, அறிவுபூர்வமாகவும், சமூக அக்கறை யோடும், இச்சிக்கலை அணுகி, அநியாயமாகவும், அப்பாவியாககவும் பாலுறவுக் குற்றங்களுக்குப் பலியாகும் உயிரிகளை நினைத்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க இதன் நியாயம் புரியும்.

பொதுவாக எல்லா மனநிலைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் பழக்கம் என்பதும் ஒரு காரணமாக இருப்பதால், இப்படிப்பட்ட ஆசார உணர்வுகளுக்கும் பழக்கம் ஓர் அடிப்படைக் காரணமாகிறது. அடுத்தது பழக்கத்தின் அடிப்படையிலான கூச்சம். காட்டாக, நகரத்துக்கு நகரம் பேருந்து நிலையங்களில் கட்டணக் கழிப்பறை என்று எழுதிப் போட்டு வைத்திருக்கிறார்கள். அதன் பயன் கழிவுகளை வெளியேற்றத் தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது இயல்பானதும் இயற்கையானதும்தான். இதில் ஒன்றும் தயங்க, கூச்சப்பட எதுவுமில்லை. என்றாலும், நேரங்கெட்ட நேரத்தில் சிலருக்கு வயிற்று உபாதை ஏற்பட, அந்நேரம் அங்கே சென்று திரும்ப சிலபேர் கூச்சப்பட வில்லையா, அது போலவேதான் இதுவும். யாரும் இதை வேறுபாடாக எடுத்துக் கொள்ளாத நிலை ஏற்படும்போது இதுவும் இயல்பாகி விடும். சகஜமாகிவிடும். இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

அதேவேளை இங்கே மீண்டும் மீண்டும் திரும்பவும் திரும்பவும் ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி யெல்லாம் சொல்வதை வைத்து சும்மா இருப்பவர்களையெல்லாம் பரத்தை, பரத்தர்களிடம் செல் என்றோ அல்லது அப்படி ஒரு தொழிலைத் தொடங்கு என்றோ நாம் வலியுறுத்துவதாகவோ, வற்புறுத்துவதாகவோ பரிந்துரைப்பதாகவோ எடுதுக் கொள்ளக் கூடாது. அப்படி இந்தக் கருத்தைத் திரிக்கவும் கூடாது.

நாம் சொல்வதெல்லாம், அருமையான மனிதர்கள், நேர்மையும், நாணயமும், நம்பிக்கையும் மிக்க மனிதர்கள், அவர்கள் ஆண்களோ, பெண்களோ அவர்கள் இப்பாலுறவுச் செயல்பாட்டோடு தொடர்பு டையவர்களாக இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் வன்முறைக்கோ இழிவுகளுக்கோ கொடுமைகளுக்கோ ஆளாக்கப் படக் கூடாது. அவர்களுக்கும் தக்கப் பாதுகாப்பு வேண்டும் என்கிற ஒரே நோக்கிலும் அப்படிப் போகிறவர்களை, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள வர்களை இழிவாகவோ, மலிவாகவோ நோக்கக்கூடாது என்கிற ஒரே நல்லெண்ணத்திலேயுமே இவ்வளவும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

சரி, பரத்தையர் தொழிலைச் சட்டப்பூர்வமாக ஆக்கிவிட்டால் மட்டும் இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீதான வன்முறை தொடராதா, தாதாக்கள், தரகர்கள், விடுதி நடத்துநர்களது கொடுமைகள் நீடிக்காதா என்று சிலர் கேட்கலாம்.

நியாயம். இவ்வளவு கொடுமைகளுக்கும் முதல் அடிப்படைக் காரணம், இத்தொழில் சட்டவிரோத தொழிலாக, குற்றச் செயலாக இருப்பதே என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். எனினும், இதை முறைப்படுத்த, இதில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடைபெறாத வண்ணம் தடுக்க மேலும் சில ஆலோசனைகள் :

1. இப்பரத்தையர் தொழிலை ஒரு பெண் அல்லது ஆண் தனித்தோ கூட்டாகவோ நடத்தலாம். இப்படி நடத்துவதாயின் தனி நபர் உரிமம், தகுதிச் சான்றிதழ், இதர நிபந்தனைகளை நிறைவு செய்து இத்தொழிலை நடத்த வேண்டும்.

2. இப்படி அல்லாமல் விடுதியில் சேர்ந்து பணிபுரிய விரும்பினால், சாதாரணமான நிறுவனங்களில் பணிக்குச் சேர விண்ணப்பம் தருவது போலச் சம்மந்தப்பட்டவர்கள் இதற்கும் விண்ணப்பம் தந்து, பணியில் சேரலாம். வரும் வாடிக்கையாளர்கள், கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை ஊதியமாகப் பெறலாம்.

3. இவர்களுக்கு மருத்துவ வசதி, பிற காப்பீட்டு வசதிகள் போன்றவற்றைச் சிறு சிறு தொழிற்கூடங்கள் அளிப்பது போல், அந்தந்த விடுதிகளும் அரசும் சேர்ந்து கூட்டாக அளிக்கலாம். பருவகாலப் பாதுகாப்பு வசதிகள் செய்து தரலாம்.

இப்படி இந்தக் கோணத்தில் சிந்தித்தால், நடைமுறைத் தேவை சார்ந்து பல யோசனைகள் எழும். அது அதை, அது அதற்கு உரிய தகுதிப் பாட்டோடு நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இப்படி ஒரு நிலைமை உருவாகுமானால், மாற்றம் ஏற்படு மானால், பிற தொழில்கள் எப்படிக் கண்ணியத்துக்கும், பாது காப்புக்கும் உரியதாக ஆகிறதோ அதேபோலப் பரத்தையர் தொழிலும் கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும் உரியதாக ஆகிவிடும். பிறகு அதில் இடைத் தரகர்கள், தாதாக்கள், காவல் துறையினர், தன்னல அரசியல் வாதிகள் ஆகியோரது வன்முறை இருக்க வாய்ப்பில்லை.

இதையும் கடந்து ஏதாவது நிகழுமானால், இப்போதும் சட்டப் பூர்வமாக உள்ள பல தொழில்களில் செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றை வைத்து சட்ட மீறல்கள் நிகழ்வது போல, இதிலும் நிகழ வாய்ப்புண்டு என்றாலும், எது நிகழ்ந்தாலும் இது பற்றிக் காவல் நிலையத்தில் புகார் தர, நீதிமன்றம் செல்ல, நியாயம் கோர அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் இருப்பதால், இப்படி இதில் ஏதும் நேருமானாலும், மனித உரிமை அமைப்புகள் மூலம் நிவாரணம் கோரலாம். கோர வாய்ப்பு உண்டு. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பரத்தையர் தொழிலைச் சட்ட விரோதக் குற்றச்செயல் என்று தற்போது உள்ளதை மாற்றி அதைச் சட்டத்திற்குட்பட்ட, சட்டபூர்வ, சட்டப் பாதுகாப்புக்குரிய ஒரு தொழிலாக அறிவிக்கக் கோருகிறோம்.

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/20540-2012-07-20-09-09-27

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்.... இந்த விசயத்தில மட்டும் நீங்கள் இன்னும் வளர இடமுண்டு....என்று நினைக்கிறேன்!

உங்கள் கருத்து...அண்மையில் ஒரு இஸ்லாமிய இமாம் சொன்ன கருத்துப் போல உள்ளது!

இறைச்சி இருந்தால்...இலையான்கள் தேடித் தானே வரும்..எனவே இறைச்சியைத் திறந்து வைக்காது 'முக்காடு' போட்டு மூடி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்!

ஆனால் அதிகமான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது.. இப்படியான மூடி மறைக்கும் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட சமுதாயங்களில் தான்!

அத்துடன் பாலியல் தொழில் செய்பவர்கள் அனைவரும் வறுமையின் காரணமாக அதைச் செய்வதில்லை! ஆரம்பத்தில் வறுமை காரணமாக இருப்பினும், வறுமை நீங்கிய பின்னரும் அவர்கள் இதைச் செய்கின்றார்கள்! ஏனெனில்.. சமூகத்தில் அவர்கள் தொழிலுக்கு ஒரு தேவை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது!

ஒரு சமுதாயத்தின் 'பாலியல்' தேவைகள் நிறைவு பெற.. இவர்களின் சேவை மிகவும் அவசியமானதுடன்.. 'பாலியல் தேவைகளை' வெளிப்படையான முறையில் நிறைவு செய்ய ஒரு வடிகால் அமைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்!

ஒரு 'கேள்வி' (Demand) இருக்கும் வரை அதற்கான 'அழிப்பும்'(Supply) நிச்சயம் இருந்து கொண்டிருக்கும்!

புங்கை அண்ணா.. உங்களின் சில புள்ளி விபரங்கள் தவறு. மேற்கு நாடுகளில் ஓரளவு பாலியல் சுதந்திரம் இருந்தும்.. அநேக பாலியல் வன்முறைகள் அங்கும் நிகழ்கின்றன. பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது.. ஆண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது நாளாந்த நிகழ்வுகளாக உள்ளன. இதில்.. இந்தியா.. இலங்கை முன்னிலையில் என்ற எழுந்தமான எண்ணப்பாடு தவறாகும்.

பாலியல் தொழில் என்பது மனித சமூகக் கட்டமைப்பை பல தளங்களில் பாதிக்கச் செய்வதோடு.. மனிதரிடையே பல நோய்களின் பரவலுக்கும் இடமளிக்கின்றன. இன்று மில்லியன் கணக்கான மனிதர்கள் சாவின் விழிம்பில் நிற்கக் காரணமான எயிட்ஸ் உட்பட தீர்க்க முடியாத நோய்களின் பரவலுக்கு இது உடந்தையாக உள்ளது.

அண்மையில்.. ஒரு இஸ்லாமிய மாணவியை இங்கிலாந்தில் ஒரு சொலவாக்கியன் பஸ் தரிப்பிடத்தில் வைத்து வன்புணர்ந்துவிட்டு சொலவாக்கியாவுக்கு ஓடிவிட்டான். அவனை அங்கிருந்து மீட்டு வழக்கு நடத்தி இப்போ 20 வருட சிறைத்தண்டனை வழங்கி உள்ளனர். அவனுக்கு வயது 22. அவன் 42 வயதில் வெளிய வந்து... இன்னும் எத்தனை பேரை சீரழிக்கப் போகிறானோ. 

இந்த வழக்கில்.. நீதிபதி சொன்ன தீர்ப்பு தான் முக்கியம். ஒரு 5 நிமிட வேலைக்காக நீ ஒரு 18 வயது இளம் பெண்ணின் மொத்த வாழ்க்கையையும் சீரழித்திருக்கிறாரய் என்பது தான் அது. அதுதான் நிஜம். விபச்சாரிகளிடம் போகும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் காணப் போகும் அந்த தற்காலிய சல்லாபிப்புக்காக.. இந்த ஆண்கள்.. பணம்.. நேரம்.. முயற்சி இவை அனைத்தையும் வீணாக்கி.. பலமான நம்பிக்கைகளை தகர்த்து.. குடும்ப.. தனிமனித உறவுப் பிணைப்புக்களை தவிர்த்து.. மிருகத்திலும் கீழாக வாழத் தூண்டும்.. அபாயங்களை விலைக்கு வாங்கிக் கொடுக்கும்.. இந்தத் தொழில் மனித சமூகத்தில் இருந்து அடியோடு அழிக்கப்பட வேண்டும். 

பாலியல் பற்றி மனிதனிடம் ஒரு சரியான தெளிவு வருகின்ற போது அவன்.. அதனை கட்டுப்படுத்தும் பாங்கை வளர்த்துக் கொள்ளும் நிலை இயல்பில் வளர்க்கப்படுவது அவசியம். மனிதரல்லா விலங்குகளில்.. ஓமோன்கள் செய்வதை.. (நாய் கூட ஒரு காலத்தில் மட்டும் தான் புணரும்.).. மனிதன்.. பகுத்தறிவையும் கல்வி அறிவையும் சமூக அறிவையும் சுய ஒழுக்கத்தையும் கூட்டாகப் பயன்படுத்தி பால் உணர்வுகளை கட்டுப்படுத்தி.. மொனோகமியாக வாழ பழகிக் கொண்டால்.. இந்த பாலியல் தொழில்.. பாலியல் சார்ந்த குற்றங்கள் பெருகுவதை தடுக்க முடியும். பாலியல் தொழிலை அங்கீகரித்து  சட்டரீதியாக்குவதன் மூலமாக இதனை சாத்தியமாக்க முடியாது. அது இன்னும் நிலைமைகளை மோசமாக்கி மீண்டும் பல சட்டவிரோதச் செயல்களும் சமூகவிரோத நடவடிக்கைகளும் பெருகவே வழி செய்யும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது, போரடிக்கும் போது, youtube ல் சொல்லவதெல்லாம் உண்மை பார்பதுண்டு.

அதில் இங்கே நெடுக்கர் சொன்ன 5 நிமிட தவறினால், சிக்கி திணறும் ஆண்கள் தான் வருகிறார்கள்.

இப்படி பிரச்சனை படுவதிலும் பார்க்க, விலை மாதரிடம் போயிருந்தால், இப்படி நாறி இருக்கமாட்டார்களே என்று நினைப்பதுண்டு. (அதாவது இதிலும் பார்க்க அது, அன்றுடன் முடியும் விசயம்).

அது மட்டுமல்ல, இந்த மாதிரி, விதவைகளிடமும், கணவரை பிரிந்த single mother களிடமும் சிக்கும் ஆண்களை போராடி மீட்க முயலும் சட்ட ரீதியான மனைவி மாரிடம், மீண்டும் விட்டுவிடாமல் கைக்குள் வைத்திருக்க சில பெண்கள் சொல்லும் பொய்கள், பய முறுத்துதல்கள்.....

அவளைத் தொடுவானேன், அவலப் படுவானேன் என்ற கதையாக, அங்கே புங்கையர் சொல்லும், விலை மாதர் சேவையின் அவசியம் தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.