Jump to content

இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

இந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: மழை நீடிப்பதால் ஒரு பந்துகூட வீசப்படாமல் 3வது நாள் ஆட்டம் ரத்து
 
 பெங்களூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் நடுவேயான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. தென் ஆப்பிரிக்கா-இந்தியா நடுவேயான 2வது டெஸ்ட் பெங்களூரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 214 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆன நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.
India vs South Africa test hit by rain
இந்நிலையில், பெங்களூரில் பெய்த மழை காரணமாக, நேற்று நடைபெறவிருந்த 2வது நாள் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.  மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற வேண்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மழை இன்னமும் நின்றபாடில்லை என்பதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
 
பொறுத்து பார்த்த, நடுவர்கள், நண்பகல் சுமார் 12 மணியளவில், 3வது நாள், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். எனவே, 3வது நாள் ஆட்டமும் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. நடுவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்ட அரை மணி நேரத்திற்கு முன்பிருந்து மழை நின்று, ஓரளவுக்கு சூரிய வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. அப்படியிருந்தும் நடுவர்கள் இவ்வாறு அறிவித்தது மைதானத்தில் இருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதிப்பு பெங்களூர்வரை எதிரொலிப்பதால், இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. எனவே, 2வது டெஸ்ட் போட்டியின் எஞ்சிய நாட்களில், ஆட்டம் நடைபெறாமல் டெஸ்ட் போட்டி முடிவடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-vs-south-africa-test-hit-rain-239914.html
Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

4வது நாள் ஆட்டமும் மழையால் ரத்தானது

 

மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் நேற்று ரத்தானது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது சக அணி வீரர்களுடன் கால்பந்து விளையாடினார். படம்: பிடிஐ.
மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் நேற்று ரத்தானது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது சக அணி வீரர்களுடன் கால்பந்து விளையாடினார். படம்: பிடிஐ.

பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 59 ஓவரில் 214 ரன்களுக்கு சுருண்டது. டி வில்லியர்ஸ் 85 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா தலா 4 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 22 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது.

முரளி விஜய் 28, ஷிகர் தவண் 45 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் ரத்தானது. 4-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. மழை இல்லாத போதும் போட்டி நடப்பதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் தகுதியாக இல்லாததால் குறித்த நேரத்தில் 4வது நாள் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை.

மதியம் 1 மணிக்கு நடுவர்கள் ஆடுகளத்தைப் பார்வையிட்டனர். அப்போது 2 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது திடீரென மழை பெய்தது. இதையடுத்து 4வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக 2.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

கடைசி நாளான இன்று மழை இல்லாமல் இருந்தால் ஆட்டம் 9.15 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதால் இந்த போட்டியில் இனிமேல் முடிவு கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் 2வது டெஸ்ட் டிராவில் முடிவடைகிறது.

http://tamil.thehindu.com/sports/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/article7890902.ece

Link to comment
Share on other sites

பெங்களூரு டெஸ்ட்: 5-ம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டு டிராவில் முடிந்தது

 
 
பெங்களூரு மைதான ஊழியர்கள். | படம்: பிடிஐ.
பெங்களூரு மைதான ஊழியர்கள். | படம்: பிடிஐ.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் 2-வது டெஸ்ட் போட்டி அதன் பிறகு ஒருநாள் கூட நடைபெற முடியாமல் கைவிடப்பட்டதால் டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையை தக்க வைத்துள்ளது. சமன் செய்யும் நோக்கத்துடன் வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு நிச்சயம் இந்த டிரா மனச்சுமையை அதிகரிக்கும்.

ஏபி.டிவில்லியர்ஸின் 100-வது டெஸ்ட் போட்டியான இதில் அவர் அபாரமாக விளையாடி அரைசதம் எடுத்ததோடு, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தார்.

ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் சுழலில் சிக்கி 214 ரன்களுக்குச் சுருண்டது தென் ஆப்பிரிக்கா, தொடர்ந்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. அத்துடன் இந்த டெஸ்ட் முடிந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் புள்ளி விவரங்கள் சில:

1974-ம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் எதிரணியை முதலில் பேட் செய்ய களமிறக்கினார்.

ஏபி.டிவில்லியர்ஸ் 38-வது அரைசதம் கண்டார். இந்தியாவுக்கு எதிராக 4-வது அரைசதம். இந்திய மண்ணில் டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 536 ரன்களை 53.60 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த 3-வது தென் ஆப்பிரிக்க வீரரானானர் டிவில்லியர்ஸ். 15 டெஸ்ட் போட்டிகளில் 1029 ரன்களை 42.29 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஜாக் காலிஸ், ஹஷிம் ஆம்லா ஆகியோரும் இந்தியாவுக்கு எதிராக 1,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

நடப்பு இந்திய தொடரில் டி20, ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் சேர்த்து டிவில்லியர்ஸ் 741 ரன்களை 67.36 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

2 பூஜ்ஜியங்கள் தவணுக்கு எதிராக இருந்தாலும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தவண் சராசரி 57.60 என்பது குறிப்பிடத்தக்கது. 6 இன்னிங்ஸ்களில் 288 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுக போட்டியில் எடுத்த 187 ரன்களும் அடங்கும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article7891461.ece

Link to comment
Share on other sites

3வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: நாக்பூர் ஆடுகளமும் சுழலுக்கு சாதகமாக அமைகிறது- தாக்குப்பிடிக்குமா தென் ஆப்பிரிக்க அணி

 
பயிற்சியின் போது இந்திய வீரர்களுடன் ஆலோசனை நடத்திய கேப்டன் விராட் கோலி.
பயிற்சியின் போது இந்திய வீரர்களுடன் ஆலோசனை நடத்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் நாக்பூரில் நாளை தொடங் குகிறது. இதற்கிடையே இந்த போட்டிக்கான ஆடுகளமும் சுழற் பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என தகவல்கள் வெளி யாகி உள்ளது.

3வது டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொட ரில் தென் ஆப்பிரிக்க அணி 0-1 என பின்தங்கியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 108 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற 2வது டெஸ்ட்டில் 4 நாள் ஆட்டம் மழை யால் கைவிடப்பட்டதால் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

ஒருநாள் போட்டி, டி 20 தொடர்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டிய தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் திணறி வருகிறது. அந்த அணி இரு டெஸ்டிலும் சேர்த்து மொத்தம் 166.5 ஓவர்களையே களத்தில் சந்தித்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் கூட தென் ஆப்பிரிக்க அணி 70 ஓவர்களை தாண்ட வில்லை.

சுழலுக்கு சாதகம்

இந்நிலையில் நாக்பூர் ஆடுக ளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதக மாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இததொடர்பாக ஆடுகள வடிவ மைப்பாளர் அமர் ஹர்லேகர் கூறும் போது, நிச்சயம் ஆடுகளத்தில் பந்துகள் திரும்பும். இந்த தொட ரில் அமைக்கப்பட்டு வரும் ஆடுகளங்களில் இருந்து இந்த மைதானம் வித்தியாசமாக இருக்காது. இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என்றார்.

3வது டெஸ்ட் போட்டிக்கு மைதானத்தின் நடுவே உள்ள ஆடுகளம் பயன்படுத்தப்பட உள் ளது. இந்த ஆடுகளம் கடந்த மாதம் ரஞ்சி கோப்பை போட்டியின் போது சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. அஸாம் அணிக்கு எதிரான ஆட் டத்தில் விதர்பா சுழற்பந்து வீச்சாளர்கள் 16 விக்கெட்கள் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத் துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் களுக்கு சாதகமாக அமைக்கப் பட்டுள்ள இந்த மைதானம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.

மாற்றம் இருக்குமா?

இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நாக்பூர் ஆடுகளமும் சோதனை களமாகவே இருக்கும். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கே கைகொடுக்க வாய்ப்புள்ளதால் இந்திய அணியில் எந்தவித மாற் றங்களும் இருக்காது என தெரி கிறது. 2 சுழற்பந்து வீச்சாளர், 2 வேகப்பந்து வீச்சாளர், ஒரு மித வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங் கக்கூடும். பேட்டிங்கில் ஷிகர் தவண் பார்மிற்கு வந்திருப்பது பலம் சேர்க்கிறது. முரளி விஜய், புஜாரா ஆகியோருடன் கோலி, ரஹானேவும் நம்பிக்கையுடன் ஆடி ரன் சேர்க்கும் பட்சத்தில் சிறப்பான ஸ்கோரை சேர்க்கலாம்.

தென் ஆப்பிரிக்க அணியில் மும் மூர்த்திகளாக விளங்கும் ஆம்லா, டுபிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ் ஆகியோர் கடந்த காலங்களில் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றியுள்ளனர். இவர்களில் தற்போது இந்திய டெஸ்ட் தொடரில் டி வில்லியர்ஸ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் எழுச்சி பெறுவது என்பது ஆம்லா, டுபிளெஸ்ஸி கையில் தான் உள்ளது.

ஸ்டெயின்

இந்திய சுழல் ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச் சாளர்களால் டெஸ்டில் பிரகாசிக்க முடியவில்லை. ஸ்டெயின் முழு உடல் தகுதியை இன்னும் எட்ட வில்லை. நேற்றைய பயிற்சியின் போது அவர் ஒரு சில ஓவர்கள் பந்து வீசினார். எனினும் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பே ஸ்டெ யினின் உடல் தகுதி இறுதி நில வரம் தெரிய வரும்.

தென் ஆப்பிரிக்க அணி கடைசி யாக 2010ல் நாக்பூரில் இந்தியா வுக்கு எதிராக டெஸ்டில் விளையாடி யது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றிருந்தது. 4 நாட்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 558 ரன்கள் குவித்தது. ஆம்லா 253 ரன் விளாசினார். ஸ்டெயின் தனது ரிவர்ஸ் ஸ்விங்கால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டும் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டும் சாய்த் தார்.

வேகம் எடுபடுமா?

இந்தியாவில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுக ளங்களில் ஒன்றாக நாக்பூர் ஆடு களம் அப்போது இருந்ததால் தென் ஆப்பிரிக்க வீரர்களால் சாதிக்க முடிந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதுதொடர்பாக அமர் ஹர்லேகர் கூறும்போது, "கடந்த முறை வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது போன்று தற்போது செயல்பட வாய்ப்புகள் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் வித்தியாசமாகவே இருக்கும்" என்றார்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ் வின், ஜடேஜா ஆகியோர் தலா 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இந்த சுழல் கூட்டணி நாக்பூர் டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article7911694.ece?homepage=true

Link to comment
Share on other sites

ரஹானே, கோலியைச் சாய்த்தார் மோர்கெல்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

 

 
ரஹானே ஸ்டம்ப் பறக்கிறது. பவுலர் மோர்னி மோர்கெல். இடம்: நாக்பூர். 3-வது டெஸ்ட் போட்டி. | படம்: ராய்ட்டர்ஸ்.
ரஹானே ஸ்டம்ப் பறக்கிறது. பவுலர் மோர்னி மோர்கெல். இடம்: நாக்பூர். 3-வது டெஸ்ட் போட்டி. | படம்: ராய்ட்டர்ஸ்.

சுழலுக்குச் சாதகமான நாக்பூர் ஆட்டக்களத்தின் குறைந்த பவுன்ஸிலும் இந்திய பேட்ஸ்மென்களை கடும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கி வருகிறார் மோர்னி மோர்கெல்.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 85/2 என்று இருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாரா, ரஹானே, விராட் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து இந்தியா தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து திணறி வருகிறது.

தற்போது ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா ஆடி வருகின்றனர், ரோஹித் சர்மாவுக்கு ஒரு அபாரமான யார்க்கரை வீசினார் மோர்கெல், ஆனால் அவர் அதனை தடுத்தாடிவிட்டார். லேட் இன்ஸ்விங்கிங் யார்க்கரான அது ரோஹித்தை அச்சுறுத்தியது.

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியாவின் நம்பக பேட்ஸ்மேனான புஜாரா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிலிருந்து திரும்ப கால்காப்பில் வாங்கினார் புஜாரா, அது ஸ்டம்பைத் தாக்கும் என்று முடிவெடுத்த நடுவர் கையை உயர்த்தினார். அது நேராக கால்காப்பில் வாங்கப்பட்டது.

மோர்னி மோர்கெல் மீண்டும் பந்து வீச அழைக்கப்பட்ட போது தொடர்ந்து ரஹானே, கோலி ஆகியோரை அவர் பிரச்சினைக்குள்ளாக்கினார். ரஹானே அவுட் ஆவதற்கு முதல் பந்து எட்ஜ் எடுத்தது ஆனால் கேட்சாகவில்லை, அடுத்த பந்து உள்ளே வர ரஹானே பவுல்டு ஆனார். ஸ்டம்புக்குச் செல்லும் வழியில் கால்காப்பைத் தட்டிச் சென்றது பந்து. ரஹானே சற்றே ஆக்ரோஷம் காண்பித்து ஆடினார், ஹார்மர் பந்து ஒன்றை லாங் ஆனில் மேலேறி வந்து சிக்சர் அடித்தார். ஆனால் 13 ரன்களில் அவர் மோர்கெலின் அபார பந்துக்கு பவுல்டு ஆனார்.

கேப்டன் விராட் கோலி 22 ரன்களுக்கு திருப்திகரமாக ஆடவில்லை, அசவுகரியமாகவே ஆடினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்து ஒன்றை வீசினார் மோர்கெல். ஆஃப் திசை லைனில் சற்றே பந்தை வெளியே எடுத்தார், விராட் வழக்கம் போல் எட்ஜ் செய்தார் விக்கெட் கீப்பர் விலாஸுக்கு கேட்ச் ஆனது.

மோர்கெல் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பின் பிட்ச் என்றாலும் இந்தியாவுக்கு குறைந்தது 250 ரன்களாவது தேவைப்படும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/article7915691.ece

Link to comment
Share on other sites

இந்தியா 215 ரன்னுக்கு அவுட்: தென் ஆப்ரிக்கா 2 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு

 

நாக்பூரில் நடந்து வரும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 215 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்திருந்தது.
 

Rahane%20test%20long.jpg

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தொடக்க வீரர்களாக முரளி விஜய்- தவான் களம் இறங்கினர். 12 ரன்னில் தவான் வெளியேற, புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் 40 ரன்னில் இருந்த விஜய், மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கேப்டன் கோலி களம் கண்டார். அப்போது, 21 ரன்னில் இருந்த புஜாரா தனது விக்கெட்டை ஹர்மீரிடம் பறிகொடுத்தார்.

பின்னர் கேப்டனுடன் ஜோடி சேர்ந்த ரஹானே 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா விளையாட வந்தார். அப்போது, 22 ரன்னில் இருந்த கோலி, மோர்கல் பந்தில் வீழ்ந்தார். கேப்டன் ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் ரோகித் 2 ரன்னில் வெளியேறினார்.
 

morkel%20test%20long.jpg

பின்னர் சஹா- ஜடேஜா ஜோடி தென் ஆப்ரிக்கா அணியை பந்துவீச்சாளர்களை சிறிது நேரம் பந்தாடியது. 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 48 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 34 ரன்னிலும், சஹா 32 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த அஸ்வின் 15 ரன்னிலும், மிஸ்ரா 3 ரன்னில் ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 215 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

தென் ஆப்ரிக்கா தரப்பில் ஹர்மீர் 4 விக்கெட்டும், மோர்கல் 3 விக்கெட்டும், ரபடா, எல்கார், இம்ரான் தாகீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் வான் டக் அவுட் ஆனார். இம்ரான் தாகீர் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது. எல்கார் 7 ரன்னிலும், ஆம்லா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்கிறது.
http://www.vikatan.com/news/tamilnadu/55582-face-spin-ordeal-after-india.art

Link to comment
Share on other sites

3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவின் பரிதாப பேட்டிங் - 79 ரன்களுக்கு ஆல் அவுட்

 

 
 
ஜடேஜா - அஸ்வின்
ஜடேஜா - அஸ்வின்

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாளான நேற்று 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடந்த போட்டிகளைப் போலவே இன்றும் சுழற் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் வேகமாக சரிந்து வீழ்ந்தது. நாளின் முதல் ஓவரிலேயே எல்கரின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் தனது அடுத்த ஓவரில் ஆம்லாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். மறுமுனையில் அஸ்வினுக்கு சரியாக ஈடுகொடுத்த ரவீந்திர ஜடேஜாவும் டி வில்லியர்ஸ், ப்ளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்க அணியில் டுமினி மட்டுமே சிறிது தாக்குப்பிடித்து ஆடி 35 ரன்களைக் குவித்தார். இதனால் தான் தென் ஆப்பிரிக்கா 50 ரன்களைக் கடந்தது. ஆனால் டுமினியின் ஆட்டமும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவின் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களின் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக உணவு இடைவேளைக்கு முன்னரே 79 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், மிஷ்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியாவிடம் மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆட்டமிழந்த தென் ஆப்பிரிக்கா

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களுக்குச் சுருட்டியதன் மூலம் எதிரணியினரை ஒரு இன்னிங்சில் ஆகக் குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன்னதாக 1990-ம் ஆண்டு இலங்கையை சண்டிகர் டெஸ்ட்டில் 82 ரன்களுக்குச் சுருட்டியதே குறைந்த ரன் எண்ணிக்கையாக இருந்தது.

100 ரன்களுக்குள் எதிரணியினரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 7 முறை சுருட்டியுள்ளது.

நாக்பூர் டெஸ்ட், இலங்கைக்கு எதிரான சண்டிகர் டெஸ்ட் உட்பட, 1981-ல் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு இந்தியா சுருட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா ஜோஹான்னஸ்பர்கில் இந்தியாவுக்கு எதிராக 84 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. மற்றும் வங்கதேசம் (91), ஆஸ்திரேலியா (93) நியூஸிலாந்து (94) ஆகியவையும் அடங்கும்.

ஹார்மருக்கு அஸ்வின் வீசிய தூஸ்ரா:

இன்று பந்துகள் இஷ்டம் போல் திரும்பின, வலது பக்கமும், இடது பக்கமும் திரும்பி எழும்பி தென் ஆப்பிரிக்காவுக்கு துர்சொப்பனமாக பிட்ச் அமைந்தது

ஹார்மருக்கு அஸ்வின் வீசிய ரவுண்ட் த விக்கெட் பந்து, லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகியது, ஹார்மர் அதனை லெக் திசையில் ஆட முயன்றார். பந்து லெக் திசையிலிருந்து லெக் ஸ்பின் பந்து போல் திரும்பி ஹார்மரின் காலில் பட்டு ஸ்டம்பை தொந்தரவு செய்தது. பெரிய பந்து அல்ல, ஆனால் பிட்ச் அப்படி உள்ளது என்றால் நாம் தென் ஆப்பிரிக்காவின் நிலைமையை ஊகித்துக் கொள்ளலாம்.

அதே போல் டேன் விலாஸ், ஜடேஜாவிடம் எதிர்கொண்ட பந்து விளையாட முடியாத பந்து, அவர் மிடில் அண்ட் லெக் ஸ்டம்பை கவர் செய்து மட்டையை சரியாக வைத்திருந்தும் பந்து லெக் ஸ்டம்ப் லைனிலிருந்து பந்து பயங்கரமாகத் திரும்பி அவர் மட்டையின் விளிம்பைத் தாண்டிச் சென்று பவுல்டு ஆனது

அதே போல் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கும் ஜடேஜா பந்து மைல்கணக்கில் திரும்பியது இதனால்தான் மட்டையின் முன்விளிம்பில் பட்டு ஜடேஜாவிடமே கேட்ச் ஆனது.

மற்றபடி எல்கர், ஆம்லா, டுபிளெஸ்ஸிஸ் அவுட் ஆனதற்கு பிட்ச் காரணமல்ல. எல்கர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான ஷார்ட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்று வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார். ஆம்லா தேவையில்லாத ஒரு அபாயகரமான ஸ்வீப் ஷாட்டில் அவுட் ஆனார்.

டுபிளெஸ்ஸிஸ் ஜடேஜாவின் பந்து திரும்பும் என்று ஆடினார் ஆனால் பந்து திரும்பவில்லை. மிகப்பெரிய ஷாட்டுக்குப் போனார். ஆனால் பந்து மட்டையைக் கடந்து நேராக ஸ்டம்பைத் தாக்கியது.

எனவே பிட்ச் பற்றிய பீதியே பாதிகாரணமாக அமைந்தது. கொஞ்சம் பொறுமையுடன், ஒன்றுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடி அவ்வப்போது பெரிய ஷாட்களை ஆடி, தடுப்பாட்டத்தை ஒரே முனையில் ஒருவரே ஆடாமல் ஒரு ரன்னை எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி ஆடியிருந்தால் நிச்சயம் இவ்வள்வு மோசமான ஸ்கோரில் ஆல் அவுட்டாகியிருக்க மாட்டார்கள்.

பிட்ச் பற்றிய பீதியால் சாதாரண பந்துகள் கூட விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தன. ஆனாலும் இத்தகைய பிட்ச்கள் டெஸ்ட் போட்டிக்கு எந்த வித நியாயமும் செய்யாது என்பதும் உறுதி.

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-79-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/article7918829.ece?homepage=true

Link to comment
Share on other sites

இம்ரான் தாஹிர் அபாரம்: இந்திய விக்கெட்டுகள் சரிவு

 

நாக்பூர் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் 39 ரன்கள் என்ற முக்கியப் பங்களிப்பைச் செய்த ஷிகர் தவண் ஆட்டமிழந்து செல்கிறார். படம்: ஏ.பி.
நாக்பூர் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் 39 ரன்கள் என்ற முக்கியப் பங்களிப்பைச் செய்த ஷிகர் தவண் ஆட்டமிழந்து செல்கிறார். படம்: ஏ.பி.

நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தேநீர் இடைவேளை வரை 13 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

உணவு இடைவேளைக்குப் பிறகு முரளி விஜய் 5 ரன்கள் எடுத்து மோர்னி மோர்கெலின் மெதுவான ஆஃப் கட்டரை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார், பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆம்லாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

ஷிகர் தவண், புஜாரா ஜோடி இணைந்தனர், இதில் புஜாரா சற்றே ஆக்ரோஷமாக ஆடினார். 45 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். மோர்கெலை ஒரு கவர் டிரைவ் பவுண்டரியுடன் அவர் தொடங்கினார். பிறகு ஹார்மர் பந்து ஒன்று பவுன்ஸ் ஆக எட்ஜ் ஆனது ஆனால் ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது பந்து. பிறகு ரபாதா ஓவரில் மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுண்டரியும், அருமையான பிளிக் ஷாட்டில் ஒரு பவுண்டரியும் வந்தது.

அதன் பிறகு டுமினி இரண்டு மகா ஷார்ட் பிட்ச் பந்துகளை வீச லெக் திசையில் 2 பவுண்டரிகளை அடித்தார் புஜாரா. கடைசியில் டுமினியின் அதே ஓவரில் திரும்பாத பந்து ஒன்றில் பீட் ஆகி பவுல்டு ஆனார்.

ஷிகர் தவண் கடினமான சில பந்துகளை சந்தித்தாலும் நின்று விட்டார். அவர் சந்தித்த 26-வது பந்தில்தான் ஹார்மரை ஸ்வீப்பில் தன் முதல் பவுண்டரியை அடித்தார். 11 ரன்களில் இருந்த போது ஹார்மரை மீண்டும் ஸ்வீப் செய்ய முயன்றார் மட்டையில் சரியாக சிக்காமல் டாப் எட்ஜ் எடுத்தது. லெக் திசையில் டீன் எல்கர் வாய்ப்பை நழுவ விட்டார்.

பிறகு டுமினி மீண்டும் ஒரு ஓவரை சொதப்பலாக வீச 3 பவுண்டரிகளை விளாசினார் தவண். பிறகு ஹார்மரின் ஒரு ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த தவண், 78 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று விலாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி முழுக்கட்டுப்பாட்டுடன் ஆடி 16 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிரை லாங் ஆஃபில் தூக்கி அடித்து டுபிளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரஹானே இறங்கியவுடனேயே பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் எட்ஜ் ஆனதா என்பது சரியாக தெரியவில்லை, ஆனால் அவர் அதிக நேரம் நீடிக்கவில்லை அவர் 9 ரன்களில் இம்ரான் தாஹிரின் கூக்ளிக்கு அதன் பவுன்ஸ் காரணமாக ஷார்ட் தேர்ட் மேனில் டுமினியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இன்று இன்னமும் 32 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ரோஹித் சர்மா, சஹா இருவரும் கணக்கைத் தொடங்காமல் தேநீர் இடைவேளையின் போது களத்தில் இருந்தனர். இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7919140.ece?homepage=true

Link to comment
Share on other sites

நாக்பூர் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா ஜெயிக்குமா? - நச்சுனு 4 விஷயங்கள்!

 

ந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று மட்டும் 20 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

Test%20match%203%2001.jpg

11 ரன்களுடன் இன்றைய தினம் ஆட்டத்தை துவக்கிய தென்னாப்பிரிக்கா, வெறும் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 310 ரன்கள் எடுத்தால் இந்த டெஸ்ட் போட்டியை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 14 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 32 ரன்கள் குவித்துள்ளது. நாளைய தினம் மேலும் 278 ரன்களை சேர்த்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி எட்டு விக்கெட்டுகளையும் விரைவில் கைப்பற்றி, தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:

test%20match%203%2002.jpg

அஷ்வின் அபாரம்

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார் அஷ்வின். இன்றைய தினம் ஆட்டத்தின் முதல் ஓவரையே அஷ்வின்தான் வீசினார். முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே எல்கரை வீழ்த்தினார். அதன்பின்னர் அடுத்த ஓவரில் அம்லாவையும் அவுட் செய்தார். இந்த வருடம் மட்டும் ஐந்து முறை ஒரு இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் எடுத்து சாதனை படைத்திருக்கிறார் அஷ்வின். ஒட்டுமொத்தமாக ஒரு  இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் எடுப்பது அஷ்வினுக்கு இது 14 வது முறை ஆகும். இன்றைய தினம் முதல் இன்னிங்ஸில் சைமன் ஹார்மருக்கு நம்பவே முடியாத வகையில் ஒரு பந்தை வீச, அந்த பந்து சுழன்று கால்களுக்கு இடையே புகுந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இந்த ஆண்டின் அற்புதமான பந்து இது என ட்விட்டரில் அஷ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

Test%20match%203%2003.jpg

'சர்' ஜடேஜா

ரசிகர்களால் 'சர்' என செல்லமாக அழைக்கப்படும் ரவீந்திர ஜடேஜாதான் இன்றைய போட்டியின் நாயகர். டி வில்லியர்ஸ் மனநிலையுடன் ஆட்டம் காண்பித்தது ஒரு பந்தை வீச, முன்முடிவுடன் ஷாட் விளையாடி, பின்னர் ஒருவாறு சுதாரிக்க நினைத்து முடியாமல் போக, ஜடேஜாவிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பந்து மைதானத்தில் நன்றாக சுழன்று திரும்புகிறது. எனினும் வேகமாகவும், துல்லியமாகவும் பந்து வீசினார் ஜடேஜா. ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சில் டுபிளசிஸ் போல்ட் ஆனார்.

Test%20match%203%2004.jpg

ஓட்ட நாயகன் 'தாகீர்'

இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடும்போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்திலும் இம்ரான் தாகீரை 24-வது ஓவர் வரை கேப்டன் அம்லா அழைக்கவில்லை. அப்போது இந்திய அணி 96 -2 என வலுவான நிலையில் இருந்தது. இம்ரான் தாகீர் பந்துவீச ஆரம்பித்ததும், இந்திய நடுவரிசை ஆட்டம்  கண்டது. தவான், விராட் கோலி, ரஹானே, சாஹா ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் இம்ரான் தாகீர். இரண்டாவது இன்னிங்க்ஸில் தாகீர் ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் இந்திய அணி 173 ரன்களுக்கு சுருண்டது.

சேஸிங் கடினம்

இந்திய மண்ணில் ஆசியாவை தாண்டிய எந்தவொரு அணியும் நான்காவது இன்னிங்ஸில் 275 ரன்களையே சேஸ் செய்தது கிடையாது. மேலும், தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளம்  சுழற்பந்துக்கு சாதகமாவே உள்ளது. எனவே நாளைய தினம் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர் கிரிக்கெட் வல்லுனர்கள்.

கடந்த ஒன்பது வருடமாக எந்த ஒரு அயல் மண்ணிலும் டெஸ்ட் தொடரை இழக்காத அணி என்ற சிறப்பை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, நாளைய தினம் மோசமான தோல்வியை தழுவி சாதனைகளை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது சேஸிங் செய்து வரலாறு படைக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நாளைய தினம் ரிசல்ட் உறுதி என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

http://www.vikatan.com/news/sports/55642.art

Link to comment
Share on other sites

அஸ்வினிடம் தென் ஆப்பிரிக்கா மீண்டும் சரண்: டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

 
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின். படம்: ஏ.எஃப்.பி.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின். படம்: ஏ.எஃப்.பி.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தன் 2-வது இன்னிங்சில் 185 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் தொடரை 2-0 என்று கைப்பற்றியது இந்தியா. அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று முடிந்த 3-வது டெஸ்டில் 124 ரன்கள் வித்தியாச வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்று வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் அயல் நாடுகளில் 9 ஆண்டுகாலமாக எந்தத் தொடரிலும் மண்ணைக் கவ்வாத தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைப் பயணத்துக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. அடுத்தடுத்து 2 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி கைப்பற்றிய விவரங்களை இனி பார்க்க வேண்டும்.

3-ம் நாளான இன்று 32/2 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா உணவு இடைவேளைக்கு முன்பாக டீன் எல்கர் (18), மற்றும் டிவில்லியர்ஸ் (9) ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வினிடம் எல்.பி.டபிள்யூ முறையில் இழந்து 105/4 என்று இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஹஷிம் ஆம்லா, டுபிளேஸ்ஸிஸ் ஜோடி 72 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆனால் இருவருமே இந்த டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த முரளி விஜய்யின் 40 ரன்களை கடக்கும் முன்னர் 39 ரன்களில் மிஸ்ராவிடம் வீழ்ந்தனர்.

இவர்கள் பிட்சை ஓரளவுக்குப் புரிந்து கொண்டு ஆடினர். பிளைட் பந்துகளுக்கு முன்னால் வந்தும், வேகமாக வீசப்படும் பந்துகளுக்கு பின்னால் சென்றும் ஆடி ஓரளவுக்கு நன்றாக எதிர்கொண்டனர், ஆனாலும் சில பந்துகள் திரும்பிய போது பீட் ஆயினர், சில பந்துகளை ஆடாமல் விட்டனர்.

அஸ்வினின் துல்லியமான அளவு மற்றும் திசைக்கு முன்னால் பவுண்டரிகள் வருவது, ஏன் ரன்கள் வருவதே கடினமாக இருந்தது. தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 151/6 என்று இருந்தது. அதாவது உணவு மற்றும் தேநீர் இடைவேளைகளுக்கு இடையே 46 ரன்களே எடுக்க முடிந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு டுமினி அஸ்வினிடம் 19 ரன்களுக்கும், விக்கெட் கீப்பர் விலாஸ் 12 ரன்களுக்கும், ரபாதா 6 ரன்களுக்கும் மோர்னி மோர்கெல் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர், அஸ்வின் 29.5 ஓவர்களில் 7 மெய்டன்களுடன் 66 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 32 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியில் 98 ரன்களுக்கு 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். மிஸ்ரா இந்த இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மேலும் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலருமானார் அஸ்வின், 2007-ம் ஆண்டு அனில் கும்ளே 49 விக்கெட்டுகளை ஒரு காலண்டர் ஆண்டில் கைப்பற்றி செய்த சாதனைக்குப் பிறகு அஸ்வின் தற்போது சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

3 நாள் போட்டிகள் கடினமானவை: ஹஷிம் ஆம்லா ஏமாற்றம்; விராட் கோலி மகிழ்ச்சி

 

 
கோலி, ஆம்லா. | கோப்புப் படம்.
கோலி, ஆம்லா. | கோப்புப் படம்.

டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஆம்லா ஏமாற்றமடைந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி தொடரை வெல்வதே முக்கியம் என்கிறார்.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவி, ஆம்லா தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்காவின் 9 ஆண்டுகால தோல்வியின்மை சாதனை முடிவுக்கு வந்ததையடுத்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

மொஹாலி, நாக்பூர் டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் தென் ஆப்பிரிக்க தோல்வியில் முடிவடைய பெங்களூர் டெஸ்ட் மழையால் 4 நாட்கள் நடைபெறாமல் டிரா ஆனது. இதனையடுத்து இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 4-வது, கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ஆம்லா கூறும் போது, “நிச்சயமாக, கடும் ஏமாற்றம்தான். மிகவும் கடினமான டெஸ்ட் போட்டி. வெற்றி பெறுகிறோமோ, தோல்வி அடைகிறோமோ, கவுரவமாக நாங்கள் போராட வேண்டும், வீரர்களுக்கு இந்த விதத்தில் நான் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களால் முடிந்த வரையில் நின்று ஆட முயன்றோம். பிட்ச் கடினமானது. புதிய பந்தாயினும், பழைய பந்தாயினும் நன்றாக திரும்பியது, எழும்பியது. 3 நாட்களில் முடிவடையும் போட்டிகள் எப்போதும் கடினமானதே” என்றார்.

விராட் கோலி மகிழ்ச்சி:

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 தொடரை அவர்கள் வென்ற பிறகு டெஸ்ட் வெற்றி உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. மொஹாலி, பெங்களூரு மற்றும் இங்கே நல்ல முறையில் ஆடினோம்.

அஸ்வின் உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர், இங்கு நமக்காக அவர் பெரிய விஷயங்களைச் செய்துள்ளார். உலகில் அவர்தான் இப்போது சிறந்த ஸ்பின்னர் என்றே கூற வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணியினர் ஓரிரு பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவார்கள் என்றே எதிர்பார்த்தோம். பந்துவீச்சில் பொறுமை அவசியம், வாய்ப்புக்காகக் காத்திருப்பது அவசியம். அமித் மிஸ்ரா நல்ல பொறுமைசாலியாக வீசினார்.

இது சவாலான பிட்ச் என்பதில் இருவேறு கருத்தில்லை, ஆனால் நல்ல பேட்டிங் உத்தியைச் செலுத்தி ஆடினால் ஆடமுடியும், இதில் சாக்குபோக்குகளுக்கு இடமில்லை. நமது பேட்ஸ்மென்கள் 3 இன்னிங்ஸ்களில் நல்ல உத்தியைக் கடைபிடித்தனர்.

சில வேளைகளில் பவுலர்களுக்குச் சாதகமான விக்கெட்டுகள் அமைந்து விடும். ஒவ்வொரு நாட்டின் மைதானங்களுக்கு ஏற்பத்தான் ஆட வேண்டும். இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியுள்ளது. தொடரை வெல்வதே முக்கியம். டெல்லி போட்டி எங்கள் சீரான தன்மையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு.

இவ்வாறு கூறியுள்ளார் கோலி.

ஆட்ட நாயகன் அஸ்வின்:

இன்று பிட்ச் சற்றே மந்தமானது. பிட்சில் உதவியிருந்தது, ஆனால் டுபிளேஸ்ஸிஸ், ஆம்லா நன்றாக ஆடினர். ஒரு அணி போராடியது, ஒரு அணி வெற்றிக்காக ஆடியது. பேட்ஸ்மென்கள் சதம் அடிக்க இறங்குகின்றனர், நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த களமிறங்குகிறேன். உணவு இடைவேளைக்குப் பிறகு அமித் மிஸ்ரா நன்றாக வீசினார். உணவு இடைவேளைக்குப் பிறகு டுபிளேஸ்ஸிஸ், ஆம்லா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

தங்களுடைய தடுப்பாட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குபவர்கள் இந்தப் பிட்ச்களில் நன்றாக விளையாட முடியும், என்றார் அஸ்வின்.

http://tamil.thehindu.com/sports/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article7923603.ece

Link to comment
Share on other sites

'கில்லி’ அஷ்வின், 'பாகுபலி’ கோலி, ‘சிங்கம்’ ஜடேஜா! - இந்தியா ஜெயித்தது இப்படித்தான்!

 

லகின் நம்பர் ஒன் அணியான தென்னாப்பிரிக்காவை, கோலி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி, டெஸ்ட் தொடரை வெல்லும் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் பலரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக பல இடங்களில், பல அணிகளிடம் அடிவாங்கி டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது இந்திய அணி. இந்நிலையில்தான் விராட் கோலி தலைமையில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. எனினும், தீவிர ரசிகர்கள் இவ்வெற்றியை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தென்னாப்பிரிக்க அணியிடம் எலி போல மாட்டிக் கொண்டு இந்தியா திணறும் என்றே பலரும் சொன்னார்கள். ஆனால், இன்று நடந்ததெல்லாம் தலைகீழ். தோனி தலைமையில் இந்திய அணி டி20, ஒருதின தொடர்களை இழக்க, யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் அபாரமாக டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி.

 
 


ஒன்பது ஆண்டு காலமாக அயல்மண்ணில் எந்த அணியிடமும் தோற்காத அணி என பெருமையுடன் வளைய வந்த தென்னாப்பிரிக்காவை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து ஆறே நாளில் நசுக்கி, வெற்றி மகுடத்தை சூடி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்திய அணி. இந்தியாவின் அசத்தல் வெற்றிக்குக் காரணம் என்ன?

 

last%20match01.jpg

1. 'அஷ்வினே' ஆயுதம்

அறிவே ஆயுதம் எனப் பெரியோர்கள் சொல்வார்கள். இந்திய அணியைப் பொறுத்தவரையில் 'அஷ்வினே' ஆயுதம். அஷ்வினின் சிறப்பு என்ன தெரியுமா? தடாலடியாக முடிவை மாற்றி சமயோசிதமாக செயல்படுவது தான். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 55 விக்கெட்டுகள் எடுத்து உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்கிறார் அஷ்வின். பல தடைகளைத் தாண்டிதான் இச்சிறப்பைப் பெற்றுள்ளார். 'ஒரே சமூகத்தை சேர்ந்தவர் மட்டுமே தமிழக அணியில் இடம் பிடிக்க முடியும், தோனிக்கு நண்பன் அதனால் தான் அஷ்வின் அணியில் இருக்கிறார். அஷ்வின் சி.எஸ்.கே கோட்டா'  என பல சர்ச்சைகள் அஷ்வினை சுற்றினாலும், இன்று உலகத்துக்கே தான் எப்படிப்பட்ட சிறந்த பவுலர் என்பதை நிரூபித்து விட்டார்.

இலங்கையின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான சங்கக்காராவை அவர்கள் மண்ணிலேயே வைத்து நான்கு இன்னிங்சிலும் அவுட் ஆக்கினார் அஷ்வின். இதற்கு மேல் அஷ்வின் சிறந்த பவுலர் என்பதை எங்கு நிரூபிக்க வேண்டும்? சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் அஷ்வின் பந்துகளை எதிர்கொள்வது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் மிகப்பெரிய சவால். டெஸ்ட் போட்டியில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை சாய்க்கவில்லை எனப் பலரும் குறைப்பட்டு கொண்டிருந்த நிலையில், இத்தொடரில் அதையும் செய்து காட்டிவிட்டார் அஷ்வின். அவர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இதே நிலையில் அவர் இருந்தால் முரளிதரன், வார்னே ஆகியோரின் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு உலகின் ஆல் டைம் நம்பர் 1 ஸ்பின்னர் என்ற அந்தஸ்தை எளிதில் எட்டிப் பிடிக்கலாம்!

last%20match02.jpg

2. 'அஞ்சான்' விராட் கோலி

இந்தியாவின் இந்த வெற்றிக்கு விராட் கோலியின் பங்கு மகத்தானது. ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் சிறப்பாக  விளையாடவில்லை என்றாலும் கூட, கேப்டன் பொறுப்பில் மிகச்சிறப்பாக  செயல்பட்டார். இலங்கை தொடரை விராட் கோலி வென்றாலும் அவருக்கு தோனியை போன்ற பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பலரும் தென்னாப்பிரிக்கா தொடரைக் கவனிப்போம் என்றனர். தென்னாப்பிரிக்காவை விராட் கோலியை போல வேற எந்தவொரு கேப்டனும் கலங்க வைத்திருக்க முடியாது. டெஸ்ட் போட்டியில் கூட ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தினார் விராட் கோலி. பீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார்.

தனது முடிவு தவறு என தெரிந்தால், வலுக்கட்டயமாக தான் எடுத்த முடிவு சரி என நிரூபிக்க முயலாமல் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். குறிப்பாக, இந்த டெஸ்டில் இரண்டாவது நாளில் முதல் ஓவரையே அஷ்வினுக்கு கொடுத்தது 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'. டுபிலசிஸ், அம்லா இருவரும் விடாமல் போராட, அவர்களுக்கு சிறிதும் ரன்கள் சேர்க்க இடம்கொடுக்காமல், அவர்களை ஒரு விதமான அழுத்தத்துக்கு உட்படுத்தினார். சிறந்த பவுலிங், சிறந்த ஃபீல்டிங் ஆகியவைதான் வெற்றிக்கு உதவும் என ரகசியம் உடைக்கிறார் விராட் கோலி.

ஒவ்வொரு பிட்சுக்கும் ஏற்றார்போல பவுலிங் டிப்பார்ட்மெண்டை தேர்வு செய்வதில் மெனக்கெடுகிறார் கோலி. 'கிரிக்கெட் விளையாடுவதே வெற்றி பெறுவதற்குதான், டெஸ்ட் போட்டிகளில் சதமடிப்பதும், இரட்டைச் சதமடித்து, சாதனை செய்வதும் முக்கியமல்ல, போட்டியை வெல்ல வேண்டும்’ என உறுதியாகச் சொல்கிறார் விராட் கோலி. சொன்னதைச் செய்தும் காட்டியிருக்கிறார். ஆக, இந்திய டெஸ்ட் கேப்டன்களில் சிறந்த கேப்டன் வரிசையில் விராட் கோலி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
 
3. சாதகமான பிட்ச்

இந்த தொடரில் இந்திய பிட்ச் பற்றி முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், மீடியாக்கள், ரசிகர்கள் எனப் பலரும் பல விதமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்திய பிட்ச்கள் சாதகமானவை என்பது உண்மைதான். ஆனால், அவை இந்திய அணிக்கோ, தென்னாப்பிரிக்க அணிக்கோ சாதகமான பிட்ச்கள் கிடையாது. இரு அணிகளுக்கும் சூழலுக்குச் சாதகமான, பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்கள்.

ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு வீரர்கள் எதில் தேர்ந்தவர்களோ, சுற்றுப்பயணம் செய்யும் அணி எதில் தடுமாறுவார்களோ அதற்கேற்றவாறு பிட்ச் தயாரிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு இன்னிங்ஸில் 50 ரன்களுக்குள் சுருண்ட கதையெல்லாம் இதற்கு முன்னர் நடந்திருக்கிறது. அந்த மூன்று போட்டிகளும் நடந்தது தென்னாப்பிரிக்க மைதானங்களில் என்பது கூடுதல் தகவல்.

ஸ்பின்னுக்கு சாதகமான இந்த பிட்ச்களில் எப்படி விளையாட வேண்டும் என நிஜத்தில் மற்றவர்களுக்கு காட்டியது யார் தெரியுமா? கண்டிப்பாக இந்தியா வீரர்கள் கிடையாது. ஹஷிம் அம்லா, டு பிளசிஸ் ஆகியோர்தான். நாக்பூர் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இருவரும் டெஸ்ட் போட்டிக்கே உரித்த நேர்த்தியுடன் பேட்டிங் செய்தனர். இருவரும் இணைந்து 278 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தனர். இவ்வகை பிட்ச்கள் தடுப்பாட்டம் விளையாட ஏதுவானவை. குறிப்பாக ஹாஷிம் அம்லாவுக்கு தாக்குதல் பாணியில் பந்துவீசியும் 167 பந்துகளைச் சமாளித்தார்.

இப்போதைய சூழ்நிலையில் உலகம் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் நன்றாக விளையாடும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள்  எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள். டி20 ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் நீண்ட நேரம் நிலைத்து விளையாடும் திறன் பெற்ற தகுதி வாய்ந்த பேட்ஸ்மேன்கள் குறைந்து விட்டனர் என்பதே உண்மை. இதற்கு பிட்ச்சை குறை சொல்லலாமா?

 

4.

 

படுத்தே விட்ட 'தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்'

நாக்பூர் போன்ற சுழலுக்குச் சாதகமான மைதானங்களில் சில சமயங்கள் சேவாக் பாணி ஆட்டம் கைகொடுக்கும். ஆனால், இரு அணியிலும் சேவாக் போன்று அடித்தது ஆடும் ஆட்டபணியை யாருமே பின்பற்றவில்லை. தொடர்ந்து பந்துகளை வீசி ரன்களை வேகமாக சேர்க்கும்போது பீல்டிங்கில் வீரர்கள் கோட்டை விட ஆரம்பிப்பார்கள். இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடும்போது புஜாரா, தவான் ஆகியோர் அவ்வபோது பவுண்டரிகளை ஓடவிட்டு வேகமாக ரன்களை சேர்த்தனர். அது போன்ற தைரியமான இன்னிங்க்ஸ் தென்னாப்பிரிக்க தரப்பில் ஓரிருவர் கூட விளையாடவில்லை என்பதே அந்த அணியின் தோல்விக்கு ஒரு சிறு காரணம்.

அஷ்வின் மற்றும் ஜடேஜா பந்தை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என்றே புரியாமல் தான் பெரும்பாலான வீரர்கள் அவுட்டானார்கள். குறிப்பாக, கடந்த  சில வருடங்களில், அரிதிலும் அரிதாக முதன் முறையாக ஜடேஜா பந்தை குழப்பத்துடன் அரைகுறை மனதோடு விளையாடி 'டக்' அவுட் ஆனார் டி வில்லியர்ஸ். கடந்த முறை தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது இதே நாக்பூர் டெஸ்டில் இரட்டைச் சதமடித்தவர் ஹாஷிம் அம்லா. ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்ஸ் தவிர, மற்ற அனைத்து இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களில் அவுட்டானார்.

வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக மோசமாக பேட்டிங் செய்தது தற்போதைய தென்னாப்பிரிக்க அணிதான். அந்தளவுக்கு உலகின் நம்பர் 1 அணிக்கான எந்த தகுதியும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களிடம் காணப்படவில்லை. ஒரு இன்னிங்ஸில் கூட 250 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை. குறிப்பாக அஷ்வினிடமும், ஜடேஜாவிடமும் 'படுத்தே விட்டார்கள்' தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.

5. அதிர வைத்த 'சர்' ஜடேஜா

'சொல்லி வை ரிட்டர்ன் ஆஃப் தி 'சர்'னு... சொல்லி வை’ என டிவிட்டரில் சர் ஜடேஜாவுக்கு லைக்ஸ் தட்டுகிறார்கள் நெட்டிசன்ஸ். தனது மாயாஜால பந்துவீச்சில் தென்னாப்ரிக்காவை நிலைகுலைய வைத்தார் ஜடேஜா. மெதுவாக சுழன்று, வேகமாக பவுன்ஸ் ஆகும் வகையிலான டாப் ஸ்பின் பந்துகளை சரியான லைனில் வீசினார் ஜடேஜா. அஷ்வின் வீசும் பந்துகள் வேகமாக திரும்பும் என்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகுவர். அந்தச்  சமயத்தில் ஜடேஜா முற்றிலும் அதற்கு நேர்மாறாக பந்தை வீசும்போது செய்தவறியாது திகைத்து, தவறான ஷாட் விளையாட முற்பட்டு, பலர் ஜடேஜா பந்தில் போல்ட் முறையில் அவுட் ஆயினர்.

தோனி ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்போதெல்லாம் சி.எஸ்.கே கோட்டா என ரசிகர்கள் கலாய்ப்பர். ஆனால், இப்போது ஒருதின டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவை மிஸ் செய்கிறோம் என அதே நெட்டிசன்ஸ் ஸ்டேட்டஸ் தட்டும் அளவுக்கும், ஃபுல்ஃபார்மில் பந்து வீசுகிறார் ஜடேஜா. பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கணிசமான ரன்களை சேர்க்கிறார். இந்த தொடரில் ஜடேஜாவை விட பெரும்பாலான் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குறைவாக ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

last%20match05.jpg

6. 'பார்ட்னர்ஷிப் ப்ரேக்கர்' அமித் மிஸ்ரா

மொகாலி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் டி வில்லியர்சை அவுட்டாக்கினார் அமித் மிஸ்ரா. அப்போட்டியில் மற்ற வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார் டி வில்லியர்ஸ். எந்த நிலையிலும் போட்டியின் முடிவுகளை மாற்றும் திறன் கொண்டவர் டி வில்லியர்ஸ். அவரை எப்படி அவுட் ஆக்குவது என மற்ற பந்துவீச்சாளர்கள் திணறியபோது, ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை தொடர்ந்து போல்டாக்கினார் மிஸ்ரா.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் போட்டு அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர் அம்லாவும் - டு பிளசிசும். கிட்டதட்ட மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக 46 ஓவர்களாக இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்திய இக்கூட்டணியை மிஸ்ரா பிரித்தார். இந்தக் கூட்டணி மட்டும் மேலும் 10-20 ஓவர்கள் நின்று விளையாடி இருந்தால் போட்டி நான்காவது நாளுக்கு நீட்சி அடைந்திருக்கும் தவிர, தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கிப் பயணித்திருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்கவில்லை அமித் மிஸ்ரா.  இரண்டு பேரையும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆக்கினார்.

last%20match06.jpg

7. நெருக்கடி - பலமும், பலவீனமும்

இரண்டு அணியினருக்கும் இந்த டெஸ்ட் தொடர் கடுமையான நெருக்கடியாக அமைந்தது. ஒரு தின போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியதால் டெஸ்ட் போட்டி தொடரை இந்தியா இழக்கக் கூடாது என ரசிகர்கள் எண்ணினர். விராட் கோலி முழு நேர கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரில் வென்று விட்டார். இரண்டாவது டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையில் இந்தியா வென்றிருக்காவிட்டால், 'பலரும் கோலிக்கு அதிர்ஷ்டம். இலங்கை வீரர்கள் ஃபார்மில் இல்லை. அதனால்தான் அப்போது இந்தியா வென்றது’ என சப்பைக்கட்டு கட்டியிருப்பார்கள்.

ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி குறைந்தது. அதே சமயம் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகக் கடுமையாக தடுமாறினர் தென்னாப்ரிக்க வீரர்கள். ஆக, ஒரே போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பலவீன நிலைக்குச் சென்றது. 'இதுவரை 1-0 என பின்தங்கிய நிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை' என்ற மோசமான வரலாறு. அதே சமயம், 'கடந்த 9 வருடங்களாக அயல் மண்ணில் தென்னாப்பிரிக்கா தொடரை இழந்ததில்லை' என்ற சாதனையை வேறு காப்பாற்ற வேண்டும் என்பதால் கடுமையான நெருக்கடிக்குள்ளானது தென்னாப்பிரிக்கா. இச்சமயத்தில் இந்தியாவின் கை ஒங்க, அதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களை அழுத்தத்தில் இருந்து மீள விடாமல் கடும் நெருக்கடி கொடுத்து தொடரை வென்று சாதனை படைத்திருக்கின்றனர்!

ஆக சிம்பிளாக, வெல்டன் இந்தியா!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களைத் தாங்கள் புகழ இந்தியர்களால் மட்டுமே முடியும். சுழலுக்கு முற்றும் சாதகமாக தட்டையான பிட்ச்சை அமைத்துவிட்டு கதைவேறு! 

Link to comment
Share on other sites

டெல்லியில் இன்று முதல் 4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்:ஆர்.வி.மூர்த்தி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். படம்:ஆர்.வி.மூர்த்தி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. எனவே இப்போட்டியில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் இதில் தோற்றால் அது இந்திய அணிக்கு எதிராக ஒரு தொடரில் தென் ஆப்பிரிக்கா பெற்ற மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். அதனால் இப்போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களே அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் வீழ்ந்த 50 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் அஸ்வின் மிக அதிகபட்சமாக 24 விக்கெட்டுகளையும், ஜடேஜா 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளனர். அமித் மிஸ்ராவுக்கு 7 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. எனவே இந்த போட்டியிலும் சுழற்பந்து வீச்சாளர்களையே இந்திய அணி பெருமளவில் நம்பியுள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சு ஆறுதலளிக்கும் அதே வேளையில் அணியின் பேட்டிங் கொஞ்சம் சொதப்பலாகவே உள்ளது. இத்தொடரில் முரளி விஜய் (195 ரன்கள்), புஜாரா (160 ரன்கள்) ஆகிய இருவரின் பேட்டிங் மட்டுமே ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி உள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலி மிக மோசமாக ஆடிவருவது கவலையளிப்பதாக உள்ளது.

இன்று போட்டி நடக்கவுள்ள பெரோஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளத்தில் பந்து தாழ்வாகவும், மெதுவாகவும் எழும்பும் என்று கூறப்படுகிறது. இடது கை சுழற்பந்து வீச்சுக்கு இது ஓரளவு சாதகமாக இருக்கும் என்பதால் அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு இந்த மைதானத்தில் நன்றாக எடுபடும் என்று கணிக்கப்படுகிறது.

டேல் ஸ்டெயின்

தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் இப்போட்டியில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. அதனால் அந்த அணி பந்துவீச்சில் மோர்ன் மோர்கலையே பெருமளவில் நம்பியுள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரை அந்த அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் (173 ரன்கள்) மட்டுமே ஓரளவு ரன்களை எடுத்துள்ளார்.

இருப்பினும் கடந்த டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் டுபிளெஸ்ஸி, ஹசிம் ஆம்லா ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடியுள்ளது அந்த அணிக்கு சற்று தன்னம்பிக்கையை அளித் துள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article7944390.ece

Link to comment
Share on other sites

டெல்லி டெஸ்ட்: ரஹானே பொறுப்பான ஆட்டம்.. முதல் நாள் முடிவில் இந்தியா 231/7

 

 டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்களை எடுத்துள்ளது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது.

பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 

 

இந்நிலையில், டெல்லியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை தவிர அணியில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணியில், பவுமா, கைல் அப்பாட் மற்றும் டேன் பியேட் சேர்க்கப்பட்டு, வன் ஜைல், ரபடா, ஹார்மர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 89 ரன்களுடனும், அஸ்வின் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முரளி விஜய் 12. தவான் 33, புஜாரா 14, கோஹ்லி 44, ரோகித் ஷர்மா மற்றும் விருதிமான் சாஹா தலா 1 ரன் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டேன் பியேட் 4 விக்கெட்டுகளையும், கைல் அப்பாட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites

Tamil_DailyNews_331798791886.jpg

ஜடேஜா சுழலில் சுருண்டது தென் ஆப்ரிக்கா இந்தியா வலுவான முன்னிலை: ரகானே 127, அஷ்வின் 56

 
 

புது டெல்லி: தென் ஆப்ரிக்க அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 213 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரகானே சதம் விளாச, ஜடேஜா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தது. ரகானே 89 ரன், அஷ்வின் 6 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய ரகானே சொந்த மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ரகானே - அஷ்வின் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தது. ரகானே 127 ரன் விளாசி (215 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) தாஹிர் சுழலில் டி வில்லியர்சிடம் பிடிபட்டார். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய அஷ்வின் அரை சதம் அடித்தார்.

அவர் 56 ரன் எடுத்து (140 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) அபாட் வேகத்தில் டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இஷாந்த் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா முதல் இன்னிங்சில் 334 ரன் குவித்து (117.5 ஓவர்) ஆல் அவுட்டானது. உமேஷ் யாதவ் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் கைல் அபாட் 5, டேன் பயட் 4, தாஹிர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எல்கர் - பவுமா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தது. எல்கர் 17, பவுமா 22 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் அம்லா 3, டு பிளெஸ்ஸி 0, டுமினி 1, விலாஸ் 11 ரன்னில் அணிவகுத்தனர்.

தென் ஆப்ரிக்கா 84 ரன்னுக்கு 7 விக்கெட் பறிகொடுத்து பரிதாபமாக விழித்தது. பயட் 5 ரன்னில் விடை பெற்றார். ஒரு முனையில் உறுதியாகப் போராடிய டி வில்லியர்ஸ் 42 ரன் எடுத்து (78 பந்து, 5 பவுண்டரி) ஜடேஜா சுழலில் இஷாந்த் வசம் பிடிபட, தாஹிர் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தென் ஆப்ரிக்கா 49.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 121 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மார்னி மார்கெல் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 5, அஷ்வின், உமேஷ் தலா 2, இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணி 213 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாட முடிவு செய்துள்ளது. இன்று விறுவிறுப்பான 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=182533

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரோஸ்-ஷா கொட்லா மைதானம் சர்வதேச தரம் வாய்ந்த ஒர் ஆடுகளமன்று.  2011 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 12 மாதங்களாக இந்த ஆடுகளத்தில் ஆட தடைவிதிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்தியா கெஞ்சிக் கூத்தாடி தடையை நீக்கியது. இந்த ஆடுகளத்திலேயே 1999 பெப்ரவரி 4-7 வரை நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அனில் கும்ளே 74 ஓட்டங்களுக்கு 10 விக்கட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.yarl.com/forum3/topic/67252-இந்திய-இலங்கை-இடையிலான-5வது-மற்றும்-கடைசி-ஒரு-நாள்-போட்டி-கைவிடப்பட்டது/#comment-557528

Link to comment
Share on other sites

 இந்த ஆடுகள விடயத்தில்  சகல கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலும் ICC மிக கடுமையாக அவதானிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் சர்வதேச நடுவர்கள் போன்று சர்வதேச கியுரேட்டர்கள் குழாம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். ஆடுகளம் தயாரிக்கும்போது முதல் 3 நாட்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாகவும் கடைசி 2 நாட்கள் சுழல்பந்து பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகவும் மாறும் வண்ணம் தயாரிக்கப்படல் வேண்டும். ஆடுகளங்கள் அமைந்த புவியியல் அமைப்பு, காலநிலை என்பனவற்றை கருத்தில்கொண்டு அமிக்கப்படும் லைவ்லியான ஆடுகளங்களே டெஸ்ட் ஆட்டங்களை மேன்மையடையச் செய்யும். 

Link to comment
Share on other sites

அம்பயரிடம் சண்டை போட்டு அவுட்டில் இருந்து தப்பிய விராட் கோஹ்லி! டெல்லி டெஸ்டில் பரபரப்பு
 

டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, அவுட் கொடுத்த நடுவருக்கு எதிராக விராட் கோஹ்லி வாக்குவாதம் நடத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இன்று இந்தியா 2வது இன்னிங்ஸ் ஆடி வந்தபோது, 53 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தவித்தது. அந்த நிலையில், 34வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை விராட் கோஹ்லி சந்தித்தார்.

அவுட் கொடுத்த நடுவர்
விராட் கோஹ்லி அதை அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அவுட்டிற்காக, அப்பீல் கேட்க நடுவரும் உடனே அவுட் கொடுத்துவிட்டார்.
 
அம்பயருக்கு திட்டு
இதனால் கடும் கோபம் அடைந்த விராட் கோஹ்லி ஆடுகளத்தை விட்டு வெளியேறாமல் சிறிது நேரம் நின்றபடி ஏதோ திட்டுவதை போல முனகிக்கொண்டருந்தார்.
 
நோ-பால் சந்தேகம்
இந்நிலையில் தாஹிர் கிரீசுக்கு வெளியில் வந்து நோபாலாக அந்த பந்தை வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சோதித்து பார்ப்பதற்காக மைதான நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார். 3வது நடுவர் அதை நோ-பால் என்று அறிவித்தார். இதனால் விராட் கோஹ்லி அவுட்டில் இருந்து தப்பினார்.
 
எதற்காக நோ-பால்?
ஆனால் டிவியில் ரிப்ளே பார்த்தவர்களுக்கு, தாஹிர் கிரீசுக்கு உள்ளே காலை வைத்திருந்தது தெரிந்தது. ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பதும் தெரிந்தது. எனவே, 3வது நடுவர் நோ-பால் என்று அறிவித்தது பேட்டில் படவில்லை என்பதற்காக இருக்கலாம் என்று தெரிகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/virat-kohli-gets-furious-at-australian-umpire-wrong-decision-241546.html

Link to comment
Share on other sites

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: இந்தியா 403 ரன்கள் முன்னிலை

 

Tamil_DailyNews_6957165002823.jpg

புதுடெல்லி: இந்தியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 213 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டியிலும் இந்தியா வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=182637

Link to comment
Share on other sites

டெல்லி டெஸ்ட்: 481 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.. ஆமை வேகத்தில் தென் ஆப்பிரிக்கா ஆட்டம்!
 

 டெல்லி: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களும், தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 121 ரன்களும் எடுத்த நிலையில், 213 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2வது இன்னிங்சை விளையாடியது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

India need 8 wickets to win on final day; Rahane hits 2nd ton

தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோஹ்லி 88 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே சதம் அடித்ததும், இந்திய அணி 267 ரன்னில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ரஹானே 100 ரன்களிலும், சாகா 23 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சிலும் சதம் அடித்த ரஹானே இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.

 

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 481 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா இன்றைய ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் 91 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் பொறுமை காட்டியும், கேப்டன் ஆம்லா, 207 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து அதைவிட அதிக ஆமை வேகத்திலும், ஆடியபடி ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாளை ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெறலாம். இல்லையேல் ஆட்டம் டிரா ஆக வாய்ப்புள்ளது. இன்றைய இரு விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.