Jump to content

பூநகரில் இராணுவத்திற்காய் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக நாளை போராட்டம்


Recommended Posts

பூநகரில் இராணுவத்திற்காய் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிராக நாளை போராட்டம்:

 

கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுவதற்காக 27 ஏக்கர் நிலப் பகுதியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

குறித்த பொதுமக்களின் காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை திணைக்களத்தினர் அளவீடு செய்யவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவுள்ளமை தொடர்பிலும் இதற்கான அளவீடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர். 

இதேவேளை பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காட்டுப் பகுதியில் சுமார் 17 ஏக்கர் நிலப்பகுதியை கடந்த 2ஆம் திகதி இராணுவத்தினர் அபகரிப்பதற்காய் சுவீகரிப்பு செய்ய இருந்தநிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124846/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கீரிமலையில் இருந்து கடற்படையின் முனிமுகாம் நீக்கப்பட்டதை.. கடற்படை தளம் நீக்கப்பட்ட கணக்கில் ஒரு கள உறவு ஓடிவந்து இணைத்தார். இதைப் பற்றி அவர் மூச்சும் விடக் காணம். சுற்றி அடிச்சா.. சூறாவளின்னு நினைக்கினம் போல. :rolleyes:

Link to comment
Share on other sites

நேற்று கீரிமலையில் இருந்து கடற்படையின் முனிமுகாம் நீக்கப்பட்டதை.. கடற்படை தளம் நீக்கப்பட்ட கணக்கில் ஒரு கள உறவு ஓடிவந்து இணைத்தார். இதைப் பற்றி அவர் மூச்சும் விடக் காணம். சுற்றி அடிச்சா.. சூறாவளின்னு நினைக்கினம் போல. :rolleyes:

அண்ணே வணக்கம்,

நேற்று நான் பார்த்த செய்தியை இங்கு பகிர்ந்தேன், இன்று இந்த செய்தியை ஆதவன் பகிர்ந்தார். நேற்று அந்த செய்திக்கும் இன்று வந்த செய்திக்கும் இடையில் கிரகிக்கும் பக்குவம் உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன். 

தனிப்பட நான் பதிந்த செய்திக்கு நீங்கள் என்னை சீண்டுவதாக நினைக்க முடியவில்லை. 

கருசணைக்கு நன்றிகள். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.