Jump to content

பெருமை .. சிறுமை .. பொலிவியா


Recommended Posts

பெருமை .. சிறுமை .. பொலிவியா

 
 
பொலிவியாவில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன்
பொலிவியாவில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன்

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் கிட்டத் தட்ட நடுவாக உள்ள நாடு பொலிவியா. அதன் கிழக்குப் பகுதியில் பிரேசில், தெற்குப் பகுதி யில் பராகுவே மற்றும் அர்ஜென் டினா, தென்மேற்குப் பகுதியில் சிலி, வடமேற்குப் பகுதியில் பெரு ஆகிய நாடுகள் உள்ளன.

“முதன்முதலாக’’ என்பதே பொதுவாக கொஞ்சம் பெருமைக் குரியதுதான். சரித்திரத்தில் இடம் பெறக்கூடியதுதான்.

ஆனால் பொலிவியாவின் இப் படிப்பட்ட ஒரு விஷயம் பெருமைக் குரியது என்று தோன்றவில்லை.

பொலிவியாவில் பத்து லட்சம் குழந்தைகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கேக் விற்பதிலிருந்து கடுமையான உடல் உழைப்புவரை. குடும்பத்தின் ஏழ்மை அவர்களை இப்படிச் செய்ய வைக்கிறது.

இந்த நிலை பல ஏழை நாடுகளில் நிலவும் ஒன்றுதானே? ஏன், இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட குழந்தைத் தொழி லாளிகளை நாம் பார்ப்ப தில்லையா? உண்டுதான். ஆனால்

இங்கெல்லாம் அது குறைந்த பட்சம் ‘சட்டபூர்வமாக’ அனுமதிக் கப்படுவதில்லை.

ஆனால் பொலிவியா? குழந்தை கள் பணிகளில் அமர்த்தப்படுவதை சட்டபூர்வமாக்கிய முதல் நாடு என்ற நெருடலான பெருமையைப் பெற்றிருக்கிறது.

உலகின் பல நாடுகளும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பொலிவியா அதற்கு ஆதரவு தெரிவிப்பதுபோல இப்படியொரு சட்டத்தை இயற்றி இருக்கிறது.

எதைத்தான் நியாயப்படுத்த முடியாது? பொலிவிய அரசு கூறும் நியாயம் இதுதான். “எப்படி யும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத் தப்படுவதை ஒழிக்கவே முடியாது. குடும்பங்களின் பொருளாதார நிலைமை அப்படி. எங்களின் சட்டத்தை முழுமையாகப் பாருங் கள். பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம் என்கிறோம். பாதி நாள் வேலை செய்துவிட்டு பாதி நாள் பள்ளிக்குப் போக வேண்டும் என்கிறோம்’’.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பொலிவியாவில் குழந்தைப் பணியாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகமாகவே வைத்திருக்கிறது. பன்னிரெண்டு வயதுக் குழந்தையின் கூலி, வீட்டிலுள்ள அதன் 10, 8, 6 வயது சகோதர, சகோதரிகளுக்கு உணவு கிடைக்க தேவைப்படுகிறது. பள்ளி விடுமுறைகளின்போது முழுநாள் வேலை செய்வதை குடும்பமும் ஆதரிக்கிறது. சட்டமும் தடுக்கவில்லை.

சட்டத்தில் மேலும் ஒரு சின்ன விளக்கம் இருக்கிறது. பத்து வயதிலிருந்து சுய வேலை செய்யலாம். பன்னிரெண்டிலிருந்து பிறருக்காகப் பணி புரியலாம். பெற்றோர்களின் சம்மதம் தேவை. அதனால் என்ன? கொடுக்காமலா இருக்கப் போகிறார்கள்.

இதற்கு முந்தைய சட்டப்படி 14 வயது தாண்டினால்தான் வேலை செய்ய முடியும்.

புதிய சட்டத்தின்படி 2025-க்குள் தங்கள் நாட்டின் கடுமையான வறுமையை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும் என்கிறது அரசு. தங்கள் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினை கடும் வறுமைதானே தவிர, குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல என்பதை வலியுறுத்துகிறது.

கருத்தடையை ஆதரிக்காத அரசு. கருச்சிதைவு செய்து கொண்டால் 30 வருடங்கள்கூட சிறையில் இருக்க நேரிடலாம் எனும் நிலை. ஆக ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

குழந்தைகள் நல உலக அமைப்பான யூனிசெஃப் என்ன சொல்கிறது? “ஆயிரம் நியாயம் கற்பித்தாலும் பொலிவியா அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்போது குழந்தைகள் கொடூரமாக நடத்தப்படும் வாய்ப்பு அதிகமாகவே உண்டு.’’ என்கிறது.

உலகத் தொழிலாளர் அமைப்பு என்ன காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் பணி செய்வதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று கூறியுள்ளது. வேலை செய்யும் குழந்தைகள் முதலில் இழப்பது தங்கள் குழந்தைத் தன்மையை.

இப்படி பரபரப்பான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பொலிவியா நாட்டு அதிபர் இவா மொரேல்ஸ் பலவிதங்களில் குறிப் பிடத்தக்கவர். பல பெருமைகளுக் கும் உரியவர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா/article7742134.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 2

 
பொலிவியா அதிபர் மொரேல்ஸ்
பொலிவியா அதிபர் மொரேல்ஸ்

அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஆயிரக்கணக் கான பொலிவிய மக்கள் தங்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சமீபத் தில் ஊர்வலமாகச் சென்றார்கள்.

இப்படிக் கலந்து கொண்டவர் களில் பொதுமக்கள், தொழிற்சங்க வாதிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோருமே உண்டு.

இந்த ஒருங்கிணைப்பே கொஞ்சம் வித்தியாசமானதுதான். இவர்களின் வேண்டுகோள் என்ன?

பொலிவியாவின் அரசியல மைப்புச் சட்டத்தின் 168-வது பிரிவு அந்த நாட்டின் அதிபரோ, துணை அதிபரோ அதிகபட்சம் இரண்டு முறைதான் அந்தப் பதவியில் வகிக்க முடியும். இப்போது அந்தப் பதவியை வகிப்பவர்கள் இரண்டாம் முறையாக அந்தப் பதவிகளில் இருக்கிறார்கள் (அது இரண்டாவதா மூன்றாவதா என்பதில் கூட ஒரு சிக்கல் உண்டு. அதைப் பிறகு பார்ப்போம்).

இந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்பதற் காகதான் அந்த ஊர்வலம்.

இது கொஞ்சம் முரணாகத் தெரி கிறது இல்லையா? ஒருவர் இருமுறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்பது நல்லதுதானே? தொடர்ந்து அதிகார போதை என்பது பலவிதக் குற்றங்களைச் செய்யதானே வழிவகுக்கும்? தவிர புதியவர்கள் பதவிகளில் அமர்ந் தால்தானே துடிப்புடன் புதிய மாற்றங்கள் நடைபெறும்? அப்படியிருக்க இதற்கு எதிராக ஓர் ஊர்வலமா?

ஊர்வலத்தின் பின்னணி இதுதான். இப்போது அந்த நாட்டின் அதிபராக இருக்கும் மொரேல்ஸின் ஆட்சி அவர்களுக்கு அவ்வளவு பிடித்துவிட்டது. அவர் தொடங்கி வைத்த மாற்றத்திற்கான ஆரம்பம் தொடரவேண்டுமென்றால் அவரே தொடர்ந்து அதிபராக இருந்தால் தான் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்காகத்தான் மேற்படி சட்டப்பிரிவை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவை நீக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டுமென்றால் நாடாளு மன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கின் ஒப்புதல் வேண் டும். இதற்கு ஒரு மாற்று உண்டு. வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் இந்த மாற்றம் வேண்டுமென்று கோரினால் கூட அதை பரிசீலித்தல் கட்டாயம் ஆகும்.

மேற்படி ஊர்வலம் மற்றும் கோரிக்கை காரணமாக அந்த நாட்டின் இரண்டு அவைகளிலும் இந்த விவகாரம் தீவிர விவாதத் துக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக் கிறது.

அக்டோபர் 2014-ல் (மீண்டும்) பொலிவியாவின் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார் மொரேல்ஸ். அவருக்கு 61 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவரது அரசுக்கு அந்த நாட்டில் பரவலான ஆதரவு இருக்கிறது. நாட்டின் தேசிய வருமானம் அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் அதிகமானது.

ஆக இன்றைய உலகத் தலைவர் களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக மொரேல்ஸ் விளங்கு கிறார். அதுமட்டுமல்ல தொடர்ந்து மூன்றாவது முறையாக பொலிவி யாவின் அதிபராக இருக்கிறார்.

கொஞ்சம் குழப்பம் வந்திருக் குமே. இரண்டு முறைதானே அந்த நாட்டிற்கு ஒருவர் அதிபராக இருக்க முடியும். இதை மாற்ற வேண்டுமென்றுதானே ஊர்வலமெல்லாம் சென்றதாகக் குறிப்பிட்டோம்!

நியாயம்தான். ஆனால் இதில் ஒரு தந்திரமான விஷயம் நடந்தேறி யது. மொரேல்ஸ் சாமர்த்தியமாகச் செயல்பட்டார். அதாவது இரண் டாவது முறை அதிபராக ஆனவுடன் தான் அடுத்த முறை தேர்தலில் நிற்கலாமா, கூடாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் ஒரு கேள்வியை முன்வைத்தார். வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியது. ‘‘அரசியல் அமைப்புச் சட்டம் 2009-ல்தான் மாற்றப்பட்டது. அதாவது ஒருவர் அதிபராக இரு பதவி காலங்களுக்கு மேல் இருக்க முடியாது என்பது மொரேல்ஸ் இரண்டாவது முறை அதிபரான பிறகுதான் அமலுக்கு வந்தது. எனவே மொரேல்ஸ் முதல் முறை அதிபராக இருந்த கால கட்டம் இதில் அடங்காது’’ என்றது. அதாவது மீண்டும் ஒரு முறை மொரேல்ஸ் அதிபர் ஆவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழி இருக்கிறது என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

எதிர்க்கட்சிகள் கொந்தளித் தார்கள். 2005-ல் இருந்து அதிபராக விளங்கும் மொரேல்ஸ், நீதிமன்றத் தையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டார் என்றனர்.

கடந்த 2005 தேர்தலில் வென்று அதிபரானர் மொரேல்ஸ். அவரது முதல் பதவிக்காலம் 2006-ல் தொடங்கி 2011 வரை இருந்திருக்க வேண்டும்.

ஆனால் 2009லேயே அரசியல மைப்பு சட்டத்தை மேலே குறிப் பிட்டபடி மாற்றிவிட்டு பதவி இறங்கினார் மொரேல்ஸ். உடனடி யாக தேர்தலையும் அறிவித்து விட்டார்.

2009-ல் மீண்டும் அவரையே அதிபராக தேர்ந்தெடுத்தனர் மக்கள். அடுத்த பொதுத் தேர்தல் 2014-ல் நடைபெற்றபோது அதில் மீண்டும் மொரேல்ஸ் அதிபர் ஆகலாமா என்று கேள்வி எழுந்தபோதுதான் அந்த நாட்டு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய அந்தத் தீர்ப்பை வெளியிட்டது.

தேசிய ஐக்கியக் கட்சி என்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் சாமுவேல் மெடினா என்பவர் ‘‘அரசியலமைப்பு சட்ட மாற்றம் குறித்து மக்கள் மன்றத்திடம் இவர் கருத்து கேட்டிருக்கலாமே. எதற்காக நீதிமன்றத்தை அணுகினார்? இதிலிருந்தே தெரியவில்லையா இவர் மக்களைச் சந்திக்க பயப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-2/article7746245.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 3

 
வரும் 2020-ல் நடைபெற உள்ள பொலிவியா நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் ஈவோ மொரேல்ஸ் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கும் பழங்குடியின மக்கள். படம்: ஏஎப்பி
வரும் 2020-ல் நடைபெற உள்ள பொலிவியா நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் ஈவோ மொரேல்ஸ் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கும் பழங்குடியின மக்கள். படம்: ஏஎப்பி

மீண்டும் 2020 தேர்தலில் மொரேல்ஸ் போட்டியிடு வாரா? அரசியலமைப்புச் சட்டப்படி இப்போது இது முடியாது. ஆனால் அங்கு அவருக் குத் திரண்டிருக்கும் ஆதரவைப் பார்த்தால் அரசியலமைப்புச் சட்டத் தையே மாற்றி அமைத்துவிட்டு மீண்டும் அவர் தேர்தலுக்கு நிற்கலாம்.

தனக்கு ஏற்றபடி அரசியல மைப்புச் சட்டப்பிரிவை மொரேல்ஸ் சீக்கிரமே மாற்றி விடுவார் என்றுதான் தோன்றுகிறது. தேர்தல் முடிவின்படி 2020 வரை அவர் அதிபராக தொடரலாம். ஆனால் ஏதோ நிகழ்வின் காரணமாக பொதுத் தேர்தலை சீக்கிரமே அறிவிக்க வேண்டி வந்தால்? எதற்கு ரிஸ்க்?

மொரேல்ஸ் இன்னமும் பெரு வாரியான மக்கள் ஆதரவு பெற்ற வராகத்தான் இருக்கிறார். என்றா லும் அந்த ஆதரவின் அளவு முன்பைவிடக் குறைந்திருக்கிறது என்கிறார்கள். சரிந்திருக்கக்கூடிய தன் இமேஜை நிலைநிறுத்தும் வகை யிலும் 2020யிலும் தன் கட்சியே வெல்வதற்காகவும் இப்போதே ஒரு குழு அமைக்கப்பட்டு பணியாற்றத் தொடங்கிவிட்டது.

‘‘எனது கட்சியில் தகுந்த வேறு யாரையாவது அதிபர் வேட்பாள ராக நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்’’ என்று தன் கட்சிக்கு மொரேல்ஸ் உத்தரவிட, கட்சியினரோ ‘‘நாங்கள் கட்சிக்குள் சல்லடைபோட்டுத் தேடி விட்டோம். அதிபராகும் தகுதி மொரேல்ஸுக்கும் துணை அதிப ராகும் தகுதி (இப்போதும் அதே பதவியில் இருக்கும்) அல்வரோ லினராவுக்கும் மட்டும்தான் உள்ளது’’ என்கிறார்கள். பேசி வைத்துக் கொண்டு நடிக்கிறார் களோ என்று தோன்றினாலும் பொலி வியாவை பெரும்பாலும் சரியா கவே வழிநடத்துவதால் மொரேல் ஸுடன் போட்டியிட இப்போ தைக்கு அவர் கட்சியிலோ, எதிர்க் கட்சியிலோ பலமான தலைவர்கள் இல்லை என்பதுதான் நிலவரம்.

‘‘மூன்றாம் முறையாக மொரேல்ஸ் அதிபரானதே சட்ட மீறல். அப்படியிருக்க நான்காம் முறையா? இதென்ன அராஜகம்? மொரேல்ஸ் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார். அதிகார போதை அவரைவிட்டு நீங்க வில்லை’’ என்று கொந்தளிக் கிறார்கள் எதிர்க்கட்சியினர்.‘‘நான் காவது முறையும் அதிபராக முயற் சிப்பேன் என்று நான் சொல்ல வில்லையே’’ என்று மையமாக இதற்கு கருத்து தெரிவிக்கிறார் மொரேல்ஸ்.

மொரேல்ஸின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம் பட்டது. எதிர்பாராத வகையில் வறுமையும் குறைந்து கொண்டு வருகிறது. பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் பொருளாதாரத்தில் முன் னேற்றம் காணாதபோது பொலி வியா விதிவிலக்காக இருக்கிறது.

பொலிவியாவை உதாரண மாகக் கொண்டோ என்னவோ ஈக்வேடார் நாட்டிலும் அரசியல மைப்புப் பிரிவை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேறெதற்கு? ஆட்சி யாளரின் அதிகபட்ச பதவிக் காலத்தை நீட்டிப்பதற்குதான். வெனிசுவேலாவில் ஏற்கெனவே அப்படி ஒரு முயற்சி நடை முறையாகிவிட்டது.

சில நடுநிலையாளர்கள் வேறொரு கவலையைத் தெரிவிக் கிறார்கள். ‘‘பிறந்தவர்கள் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். மொரேல்ஸ் இறக்கும்போது பொலி வியாவில் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களே இருக்கமாட்டார்கள் மொரேல்ஸ் கட்சியில்கூட. இது பொலிவியாவுக்கு பெரும் பின்ன டைவைத் தரும்’’ என்கிறார்கள்.

பொலிவியாவின் அரசியல் மொரேல்ஸ் பதவி ஏற்பதற்கு முன்பு பலவித சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தவித்தது. இவருக்கு முன்பு பதவியேற்ற ஐந்து அதிபர்களில் அத்தனை பேரும் மொத்தமாக நான்கே வருடங்களுக்குள் பதவி இழக்க நேரிட்டது.

ஆனால் மொரேல்ஸின் செயல் பாடுகள் கணிசமான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. இவரது தற்போதைய ஆட்சிக் காலம் 2020-ல் தான் முடிவடைகிறது. அதற்குள்ளாக அங்குள்ள மக்களில் கணிசமானவர்கள் இதற்குக் கவலைப்படுகிறார்கள். சட்டப்படி இவரால் அடுத்த தேர்தலில் அதிபராக முடியாதே என்று தவிக்கிறார்கள்.

‘‘மக்களுக்கு எந்தவித அச்சமும் வேண்டாம். அவர்கள் தங்கள் எண் ணத்தை எழுத்துவடிவில் எங்களிடம் கொடுக்கலாம். ஜனநாயக முறையில் முடிவெ டுப்போம்’’ என்று கூறியிருக்கிறார் மொரேல்ஸ்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தங்கள் நாட்டுத் தலைவர் இருமுறைக்குமேல் அப்பதவியில் நீடிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அதே சமயம் வெனிசுவேலா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற பல நாடுகளில் ஒரே அதிபர் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

அதிபர் ஆவதற்கு முன் ஈவோ மொரேல்ஸின் பின்னணி என்ன என்று கொஞ்சம் பார்ப்போமா?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-3/article7749683.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 4

பொலிவியா நாட்டில் சந்தையில் விற்கப்படும் கோகோ இலை.

 

பொலிவியா நாட்டில் சந்தையில் விற்கப்படும் கோகோ இலை.

மேற்கு பொலிவியாவில் உள்ள இஸல்லாவி என்ற கிராமத்தில் பிறந்தவர் பொலிவியாவின் தற்போதைய அதிபர் மொரேல்ஸ். ஏழு குழந்தைகளில் ஒருவர். என்றாலும் இவர் உட்பட மூன்றுபேரைத் தவிர பிறர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார்கள்.

உள்ளூர் இனமான (அதாவது ஐரோப்பிய இனக் கலப்பில்லாத என்று அர்த்தம்) அய்மரா என்ற இனத்தில் பிறந்தார். அந்த இன வழக்கப்படி மொரேல்ஸ் பிறந்தவுடன் அவரது தொப்புள் கொடியை ஒரு தனி இடத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இளம் வயதில் அவருக்குத் தெரிந்ததெல்லாம் அய்மரா மொழி மட்டும்தான். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார். செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழிலும் செய்தார். சிறுவயதிலிருந்தே கற்பனைத் திறன் மிக்கவராக இருந்தார். சிறுவயதிலிருந்தே தினமும் அதிக நேரம் நடைபயிற்சி செய்வாராம்.

அப்போதே கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர். தான் விளையாடிய கால்பந்தை அவரே உருவாக்கினாராம். தன் பகுதியில்

பலருக்கும் கால்பந்து விளையாட்டில் பயிற்சி கொடுத்து அந்தக் குழுவுக்குக் கேப்டனாக விளங்கினார்.

பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்டார் மொரேல்ஸ். அதிக மதிப்பெண் களைப் பெறவில்லை என்றாலும் பட்டப்படிப்பை படித்து முடித்தார். கூடவே கடைகளில் வேலை செய்து கொஞ்சம் தொகை சம்பாதித் ததையும் குறிப்பிட வேண்டும்.

பின் ஒரு வருடம் ராணுவத்தில் பயிற்சி பெற்றார் (இது அந்த நாட்டில் கட்டாயம்). அந்தக் கால்கட்டம் இவருக்கு மிகுந்த சுவாரசியத்தை அளித்தது. ஆட்சியாளர்கள் ராணுவத்துக்கு அடங்கியதையும், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையும் அவரால் அருகிலிருந்தே காண முடிந்தது. தொடர்ந்த கால கட்டத் தில் இரண்டு ராணுவ ஆக்ர மிப்புகள், 5 அதிபர்கள் அடுத் தடுத்துப் பதவியேற்றனர் என்ற குழப்பமான காட்சியை பொலிவி யாவில் இவர் காண நேரிட்டது.

எல் நினோ புயல் காரணமாக மொரேல்ஸ் குடும்பத்தினரின் விவசாய நிலங்கள் எல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே குடும்பத்தைக் கவனிப்பதில் தன் பார்வையைத் திருப்பினார் மொரேல்ஸ்.

அப்போது கோக்கோ விளைபொருள் அதிக லாபத்தைத் தந்தது. வருடத்துக்கு நான்கு முறை இதைப் பயிரிடலாம் என்பது கூடுதல் வசதி. மதம், மருத்துவம் ஆகிய இரண்டு கோணங்களிலுமே கோக்கோ பயன்பட்டது. ஆனால் இன்னொரு முக்கியமான பயன்பாடு காரணமாகத்தான் அது அதிக அளவில் வாங்கப்பட்டது என்பதே உண்மை. கோகெயின் என்ற போதைப் பொருளின் முக்கிய அடிப்படை கோக்கோ. அதனால்தான் அதிக ஏற்றுமதி. எனவே அதிக விளைச்சல்.

மொரேல்ஸ், கோக்கோ விவசாயிகள் தொழிற்சங்கத்தின் விளையாட்டுப் பிரிவின் செயலாளர் ஆனார். அடிக்கடி கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து நல்ல பெயர் வாங்கினார்.

1980-ல் மிகவும் வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த ராணுவ தளபதி லூயி கார்ஸியா மெஸா, அதிபர் ஆனபோது பிற அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்தார். மொரேல்ஸுக்கு அரசியலில் அழுத்தமான ஆர்வம் உண்டாக, இந்த நிகழ்வு ஒரு காரணம் ஆனது.

கோக்கோ பயிரை விளைவித்த ஒரு விவசாயி கோகெயின் போதைப் பொருளைக் கடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மொரேல்ஸை மிகவும் பாதித்தது. அடுத்த பொதுத் தேர்தலில் கோக்கோ விவசாயிகள் சங்கமும் போட்டியிட்டது.

பொலிவியாவில் விளைந்த கோக்கோ, போதைப் பொருளாக மாற்றப்பட்டு அமெரிக்காவை அடைந்தது. அமெரிக்க அரசு போதைப் பொருளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. பொலிவிய அரசுக்கு உதவ தனது ராணுவ வீரர்களை அனுப்பியது.

பொலிவிய ராணுவத்தினரும் கோக்கோ பயிர்களை எரித்தனர். கேள்வி கேட்ட விவசாயிகளை சித்ரவதை செய்தனர். மொரேல்ஸ் இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அழிக்கப் பட்ட ஒவ்வொரு ஏக்கருக்கும் அரசு அளித்த நஷ்டஈடை வாங்க மறுத் தார். அதிக லாபத்தை ஈட்டித் தரும் ஒரு விளைபொருள் கோக்கோ. காலகாலமாக என் முன்னோர் பயிரிட்டது.

அமெரிக்கா கூறியதற்காக இதற்கு எப்படி தடை விதிக்க வேண்டும்? போதை மருந்து தயாரிப்பாளர்களைத் தண்டிக் காமல், விவசாயிகளை தண்டிப்பது ஏன்?’’. இப்படி யோசித்த மொரேல்ஸ் அப்போதைய அமெரிக்க எதிர்ப்பை தன்வச மாக்கிக் கொண்டார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-4/article7769257.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 5

 
 
பொலிவியா அதிபர் மொரேல்ஸ்.
பொலிவியா அதிபர் மொரேல்ஸ்.

விவசாய யூனியனில் முக்கியப் பதவிகள் மொரேல்ஸை நாடி வந்தன. விவசாயிகள் சித்ரவதையால் இறந்த போதும் அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்புகளை விதைக்கத் தொடங்கினார் மொரேல்ஸ். ஒரு கட்டத்தில் ராணுவம் இவரை நன்கு அடித்து மலைப் பகுதியில் வீசிவிட்டு வந்தது. விவசாய சங்க உறுப்பினர்கள் அவரைக் கண்டெடுத்துக் காப்பாற்றினர். ஒரு கட்டத்தில் விவசாயிகளையே துணை ராணுவம் ஆக்கி கெரில்லா போர் முறை மூலம் அரசைக் கவிழ்க்கலாமா என்றுகூட நினைத்தார். பின்னர் தேர்தல்தான் சிறந்த முறை என்று முடிவெடுத்தார்.

கியூபா, கனடா போன்ற நாடு களுக்குச் சென்று ஆதரவு திரட்டி னார். அங்கெல்லாம் கூட்ட அமைப்பாளர்களுக்கு கோக்கோ இலைகளைப் பரிசாகத் தந்தார். அமெரிக்க எதிர்ப்புக்கு அடையாளமாகவே கோக்கோ இலை கருதப்படத் தொடங்கியது.

எங்கு சென்றபோதிலும் ‘நான் போதைப் பொருள் விவசாயி அல்ல. கோக்கோ பயிர் விவசாயி. கோக்கோ என்பது ஓர் இயற்கைத் தாவரம். அதை நான் போதைப் பொருளாக மாற்றவில்லை. அது எங்கள் கலாச்சாரத்தில் வழக்கமும் இல்லை. எங்கள் நாட்டில் தலையிட அமெரிக்காவுக்கு யார் உரிமை கொடுத்தது?’’ என்று முழக்கமிட்டார்.

இந்த நிலையில் 1993 பொதுத் தேர்தலில் புரட்சி தேசிய இயக்கம் தேர்தலில் நின்றது. கொன்ஜலோ என்பவர் அதிபர் ஆனார். அமெரிக் காவுடன் இணைந்து கொண்டு பல அதிர்ச்சி வைத்தியங்களைக் கொடுத்தார். 12,500 ஏக்கர் கோக்கோ விளைநிலங்கள் எரிக்கப்பட்டன. இதற்கு இரண்டு கோடி டாலர் அமெரிக்க உதவி கிடைத்தது.

மொரேல்ஸ் இதைக் கடுமை யாக எதிர்த்தார். அரசால் சிறைப் பிடிக்கப்பட்டார். சிறையில் இவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங் கினார். அவர் புகழ் பெரிதும் பரவத் தொடங்கியது. வேறு வழியில் லாமல் விடுதலை செய்யப்பட்டார். அர்ஜென்டினாவுக்குச் சென்று அங்கும் ஆதரவு திரட்டினார். பின்னர் 1995 மார்ச் 27 அன்று ஓர் அரசியல் பிரிவைத் தொடங்கினார். முழுக்க இடதுசாரிகளைக் கொண்டிருந்தது இது. 1997 பொதுத் தேர்தலில் இதன் நான்கு உறுப்பி னர்கள் வென்றனர். தொடக்கத்தில் மொரேல்ஸ் தேர்தலில் நிற்பதில் அவ்வளவு குறியாக இல்லை. ஆனால் கட்சியில் பிளவுகள் தோன்ற, பொதுத் தலைவர் தேவைப்பட்டபோது, மொரேல்ஸ் மீது கவனம் அதிகமானது.

மொரேல்ஸ்சின் கட்சி தேர்தலில் வென்றால் அமெரிக்கா பொலிவியாவிற்கு நிதி உதவி செய்வதை நிறுத்திவிடும் என்றார் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதர். இது அமெரிக்காவுக்கே எதிராகத் திரும்பியது. மொரேல்ஸுக்கு ஆதரவு அதிக மானது. மொரேல்ஸ் ஒரு குற்ற வாளி என்றது அமெரிக்கா. அமெரிக்க உளவுத்துறை தன்னைக் கொல்வதற்கு சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார் மொரேல்ஸ்.

2003-ல் அடுத்த திருப்புமுனை நிகழ்ந்தது. நாட்டின் எரிவாயு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இவற்றை அதிக அளவில் வாங்கின அமெரிக்க நிறுவனங்கள். இதற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. சந்தை விலையைவிட குறைவான விலைக்கு விற்பனை நடந்தது மக்களின் கோபத்தை மேலும் தூண்டியது. சாலை மறியலில் ஈடுபட்டனர் எதிர்ப்பாளர்கள். இதில் 80 பேர் கொல்லப்பட்டனர். அப்போது லிபியா, சுவிட்சர்லாந்து என்று மொரேல்ஸ் வெளிநாட்டுப் பயணங்களில் இருந்தார். எனினும் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது அவர் தான் என்றது பொலிவிய அரசு.

எதிர்ப்பாளர்களில் கணிசமான வர்கள் அடக்குமுறையால் இறக்க, அதிபர் சான்செஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்தார் மொரேல்ஸ். அவருக்கான ஆதரவு மிகவும் பெருகியது. ஒரு கட்டத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிலுள்ள மியாமிக்குப் பறந்தார். அடுத்த அதிபர் ஆனார் கார்லோஸ் மெஸ்ஸா என்பவர்.

அவர் நம்பிக்கைக்கு உகந்தவர் அல்ல என்று கருதினார் மொரேல்ஸ். மீண்டும் நாட்டில் சாலை மறியல்கள், கலவரங்கள்.

மெஸ்ஸாவும் ராஜினாமா செய்ய, டிசம்பர் 2005-ல் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்று அதிபர் ஆனார் மொரேல்ஸ்.

பொலிவியா இன்றைய வளத்துக்கு முக்கியமான காரணம் என்று மொரேல்ஸைக் குறிப்பிட லாம். தேர்தலில் நிற்கும்போது ‘‘பொலிவியாவின் மக்களின் நலனுக்குதான் நான் முன்னுரிமை கொடுப்பேன். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தி வைக்கப் பட்டிருந்த அவர்கள் நல வாழ்வை நான் ஒளி பெறச் செய்வேன்’’ என்றார். சொன்னதை கிட்டத்தட்ட செய்து காட்டினார்.

அதிபர் பதவியேற்ற உடனேயே பொலிவியாவின் பெட்ரோலிய கிணறுகளையெல்லாம் தேசியம யமாக்கினார். இதன் மூலம் வரி வருமானம் மிக அதிகமானது.

இப்படிக் கிடைத்த அதிகப்படி வருமானத்தை பல பொதுப் பணிகளுக்கு செலவிட்டார். கூடவே பல சமூகநலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக வறுமை நிலை குறைந்தது. வறுமைக்கோட்டுக்கு மிகக் கீழே இருப்பவர்களின் அளவு 43 சதவீதம் சரிந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-5/article7773281.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 6

 
 
படம்: ராய்ட்டர்ஸ் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டில் உடைமைகளை தேடும் மக்கள்.
படம்: ராய்ட்டர்ஸ் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டில் உடைமைகளை தேடும் மக்கள்.

அமெரிக்காவுடன் நல்ல உறவுமுறையுடன் இருக்க விரும்புகிறோம்’’ என்று சமீபத்தில் அதிபர் மொரேல்ஸ் கூறியிருக்கிறார்.

“மீண்டும்

அதென்ன ‘மீண்டும்’?

ஒருவிதத்தில் அமெரிக்காவுக் கும், பொலிவியாவுக்குமான உறவு 1837-ல் தோன்றியது எனலாம். அப்போது பெரு-பொலிவிய கூட்ட மைப்பு உருவானது. அதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தூதர் அனுப்பப்பட்டார். என்றாலும்கூட இந்த இரு நாடுகளுக்கிடையே நேரடியான தூதரக உறவு ஏற்பட்டுவிடவில்லை.

1848ல் அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. அந்த ஆண்டில் தான் பொலிவியாவை ஒரு தனி சுதந்திர நாடு என்று அமெரிக்கா அங்கீகரித்தது. கூடவே ஜான் ஆப்பிள்டன் என்பவரை பொலிவி யாவுக்கான பிரதிநிதியாக அமெரிக்கா அறிவித்தது.

ஆனால் காலப்போக்கில் பொலிவியாவின் அதிபரான ஈவோ மொரேல்ஸ் அமெரிக்கக் கொள்கை களை அடிக்கடி விமர்சித்தார். வெனிசுவேலா, ஈரான் ஆகிய நாடு களின் தீவிர ஆதரவாளராக அவர் விளங்கியதுகூட இதற்கு ஒரு காரணம்.

அதிபர் ஆவதற்கு முன்பாகவே அமெரிக்காவின் பகைமையை சம்பாதித்துக் கொண்டவர் மொரேல்ஸ். எனவே 2006-ல் அவர் அதிபரான போது பொலிவிய-அமெரிக்க உறவில் மேலும் கசப்புகள் தோன்றின.

“போதைப் பொருள்களை தயாரித்தல் மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் செயல்முறை களில் பொலிவியா பெரும் தோல்வி அடைந்துவிட்டது. என் றாலும் பொலிவியாவுக்கு அளிக் கும் நிதி உதவியை நாங்கள் தொடருவோம்’’ என்று பெருந் தன்மை போல கொஞ்சம் குத்தலாக விமர்சித்தது அமெரிக்கத் தரப்பு.

மொரேல்ஸ் இதற்கு சில நாட்களில் பதில் அளித்தார். தன் னுடைய நாட்டின் முன்னேற்றக் கொள்கைகளை அமெரிக்கா தகர்க்க நினைக்கிறது என்றார். நாட்டின் பல பகுதிகளில் சுயாட்சி என்ற பெயரில் தனக்கு எதிர்ப்பு கள் கிளம்பி உள்ளதற்கு அமெரிக் கப் பின்னணியும் காரணம் என்றார். அமெரிக்கத் தூதரே தன்னைப் பற்றித் தவறாக (போதைப் பொருள் கடத்தலுக்குத் துணையாக இருப் பவர் என்பதுபோல) விமர்சித்த தைக் குறிப்பிட்டார். பொலிவிய மக்கள் மொரேல்ஸுக்கு ஆதர வாக வாக்களித்தால் அமெரிக்க நிதி உதவி நிறுத்திக் கொள்ளப் படும் என்றும் அவர் கூறியதை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அதுமட்டுமல்ல முந்தைய ஆட்சியின்போது புரட்சியாளர் களுக்கு ரகசியமாக அமெரிக்க ராணுவம் உதவி செய்தது என் பதையும் குறிப்பிட்டார். பொலிவி யாவில் உள்ள பின்லேடன் என்றும் அமெரிக்கத் தூதர் தன்னை வர்ணித்தார் என்றார்.

இவற்றின் உச்சமாக நவம்பர் 2010-ல் மொரேல்ஸ் ஓர் அறிக் கையை வெளியிட்டார். பொலிவியா, வெனிசுவேலா, ஈக் வேடார் போன்ற மூன்று நாடு களின் ஆட்சிகளையும் கவிழ்ப்பதற் கான வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது என்றார். பொலிவி யாவின் வெளியுறவுக் கொள்கை களை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது என்று காட்டத்துடன் கூறினார். அப்போது பொலிவியா வுக்கும், ஈரானுக்கிமிடையே பேச்சு வார்த்தைகள் நடக்கத் தொடங்கி யிருந்தன.

ஜூலை 2013-ல் நடைபெற்ற ஒரு சம்பவம் பொலிவிய- அமெரிக்க உறவை மேலும் சீர்குலைத்தது. ரஷ்யாவுக்குச் சென்ற மொரேல்ஸ் பொலிவியாவுக்குத் திரும்பும்போது ஓர் எதிர்பாராத சிக்கல் உண்டானது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஆகிய நாடுகள் அப்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டன. ‘’ மொரேல்ஸ் பயணம் செய்த விமானம் தங்கள் எல்லைக்குள் இறங்கக் கூடாது’’.

ஏன் இந்த அறிவிப்பு? வதந்தி கள் கொடிகட்டிப் பறந்தன. அவற் றில் முக்கியமானது அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் அந்த விமானத்தில் இருக்கிறார் என்று கருதப்பட்டதுதான். அமெரிக்க அரசு ஸ்னோடெனைக் கடும் எதிரி யாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

“எங்களுக்கு அமெரிக்கத் தூதரகம் தேவை யில்லை. அதற்கு மூடுவிழா நடத் தப்படும்’’.

எனவே ஆஸ்திரியாவின் தலை நகர் வியன்னாவில் இறங்கியது மொரேல்ஸ் வந்த விமானம். அவர் நேரடியாக பொலிவியா திரும்ப வேண்டும் என்றால்கூட ஐரோப்பிய நாடு ஒன்றில் இறங்கிவிட்டுதான் பயணத்தைத் தொடர வேண்டி யிருக்கும் (எரிபொருள் நிரப்ப). எனவே தன்னை தன் தாய்நாட் டுக்குத் திரும்ப விடாமல் செய்கிறது அமெரிக்கா என்று கோபப்பட்டார் மொரேல்ஸ். ஐரோப்பிய நாடுகள் தன் விமானத்தை இறக்க தடை விதித்ததற்குக் காரணம் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் தான் என்பது மொரேல்ஸின் உறுதி யான முடிவாக இருந்தது. ஒரு வழியாக பொலிவியா திரும்பிய வுடன் மொரேல்ஸ் திட்டவட்டமா கத் தெரிவித்தார்

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-6/article7783490.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 7

 
 
 
 

ஈரான் மற்றும் கியூபாவைப் பொறுத்தவரை தனது பழைய கசப்புணர்ச்சியை சமீப காலமாக குறைத்துக் கொண்டு வருகிறது அமெரிக்கா. அந்தவிதத்தில் தங்கள் நாட்டுடனும் அமெரிக்கா நல்லுறவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உண்டு என்று கருதுகிறார் மொரேல்ஸ்.

ஒரு காலத்தில் அமெரிக்காவும், பொலிவியாவும் கசப்புகளை எக்கச் சக்கமாக வளர்த்துக் கொண்ட தைப் பார்த்தோம். 2008-ல் இருநாடு களும் தங்கள் தலைநகரங்களில் இருந்த பிற நாட்டின் தூதரகங் களை இழுத்து மூடின. ‘‘எதிர்க்கட்சி களுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஆட்சியிலிருந்து நீக்க திட்டம் போடுகிறார்’’ என்று குற்றம்சாட்டி அமெரிக்க தூதர் பிலிப் கோல்டு பெர்க் என்பவரை பொலிவியாவி லிருந்து வெளியேற்றினார் மொரேல்ஸ். பதிலுக்குச் அமெரிக் காவும் பொலிவியத் தூதரை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது. இனி ‘அமெரிக்க போதை மருந் துக்கு எதிரான நிர்வாகம்’ தனது செயல்பாடுகளை பொலிவியாவில் நடத்தமுடியாது என்று கூறினார் மொரேல்ஸ்.

அதுமட்டுமல்ல செப்டம்பர் 2014ல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்குழுவில் ‘ஒபாமா ஒரு சர்வாதிகாரிபோல நடந்து கொள்கிறார்’ என்று கூறினார். எனினும் வீண்பகை என்பது எதிரிகளுக்கும், தீவிரவாதிகளுக் கும்தான் வாய்ப்பு கொடுக்கும் என்பதை இரு நாடுகளுமே உணரத் தொடங்கி இருக்கின்றன.

2013-ல் பொலிவியாவில் நடைபெற்ற கணக்கெடுப்பின் முடிவு இப்படி இருந்தது. 55 சதவீத மக்கள் அமெரிக்காவுடன் இணக்கம் காட்டலாம் என்று கருத்து தெரிவித்தனர். 29 சதவீதம் பேர் அமெரிக்காவிடம் நட்பு பாராட்ட வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவும் இணைந்து அளித்த கூட்டறிக்கை பொலிவியாவுக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது. ‘‘சிக்கல் இல்லாத தூதர உறவுகளை மேற் கொள்வோம்’’ என்று அந்தக் கூட்டறிக்கையில் கூறியிருக் கின்றன அந்த இரு நாடுகளும்.

‘‘முன்பெல்லாம் கியூபாவுட னும், ஈரானுடனும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எங்களிடம் அமெரிக்கா கூறுவது வழக்கம். இப்போது அந்த இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவு கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இது வியப்பான ஒன்றுதான்’’ என்று தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் மொரேல்ஸ். கூடவே ‘‘உலக நாடு களின் கண்ணோட்டங்கள் மாறிவரும்போது பொலிவியாவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படாமல் இருக்குமா? ’’ என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவும், பொலிவியா வும் நல்லுறவு கொள்ளுமா? அது உண்மையானதாகவே இருக்குமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமெரிக்க உறவு ஒருபுறமிருக்க தனது ஆட்சியில் வேறு சில மாற்றங்களையும் கொண்டு வந்தார் மொரேல்ஸ்.

வெளிநாட்டு மோகத்தைக் குறைக்கும் வகையில் உள்ளூர் பொருள்களை அதிகம் சந்தைப் படுத்தினார். அந்தந்த வட்டார ஆட்சியாளர்களுக்கு அதிக சுயாட்சி கொடுத்தார்.

வழக்கமான தேசியக் கொடி யோடு வானவில் வண்ணங்களைக் கொண்ட ஒரு கொடியையும் முக்கிய சமயங்களில் பறக்க வைத்தார். இது பொலிவியாவுக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத் தின் அறிகுறி என்றார்.

பொலிவியாவின் செல்வந்தர் களுக்கு மொரேல்ஸின் ஆட்சி முறை பிடிக்கவில்லைதான். எனினும் எண்ணிக்கையில் அவர்கள் அப்படி ஒன்றும் அதிக மானவர்களாக இல்லை. மொரேல் ஸின் சோஷலிஸ சிந்தனைகள் நாட்டின் பொருளாதாரத்தை வருங் காலத்தில் அழித்துவிடும் என்று கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொலிவியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம் சான்டா க்ரூஸ். இந்தப் பகுதி வளமானது. இதில் வசிப்பவர்கள் தான் மொரேல்ஸின் பொருளா தாரக் கொள்கைகளை அதிகம் விமர்சித்தார்கள். ஆனால் சமீபகால மாக இவர்களுக்கும், மொரேல் ஸுக்கும் கூட ஓரளவு நல்லுறவு தொடங்கியுள்ளது. நாடு முன்னேறு கிறது என்பதைக் கண்டதும் மொரேல்ஸுக்கான மரியாதை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு..

300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு சாலையை நாட்டில் அமைக்கத் திட்டமிட்டார் மொரேல்ஸ். பொலிவியாவின் பல பகுதிகளும் இதனால் பலன் பெரும் என்று கருதினர். ஆனால் நிலம் கையகப்படுத்துதல் என்ற கோணத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்தன. இதன் கார ணமாக மொரேல்ஸ் அந்தத் திட்டத் தைக் கைவிட்டார். ‘‘பொலிவி யாவின் முன்னேற்றத்துக்கு மிகவும் வழிவகுக்கக்கூடிய ஒரு திட்டத்தை நான் கைவிடுவதில் எனக்கு மிகுந்த வருத்தம்’’ என்றார்.

நாட்டை இரண்டாகப் பிரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு மொரேல்ஸ் மீது உண்டு. காரணம் பொலிவியாவில் ஐரோப்பியர்களுடன் உள்ளூர்வாசி களுக்கு ஏற்பட்ட தொடர்பில் உண் டான கலப்பின மக்களும் பொலிவி யாவில் கணிசமாக உண்டு. மொரேல்ஸின் ஆட்சி மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை என்று கூறி தங்களை ஒதுக்கு வதாக இவர்கள் கருதுகிறார்கள். ஒன்றிணைந்து இருந்தவர்களை தனது செய்கைகளால் மொரேல்ஸ். பிளவுபடுத்துகிறார் என்கிறார்கள் இவர்கள்.

நாட்டின் முக்கியமான துறை களை மட்டும் தனது அரசின் வசம் வைத்துக் கொண்டிருக்கிறார் மொரேல்ஸ். இவற்றில் வெளியுறவு, நிதி ஆகியவை உண்டு. மற்றபடி பல துறைகளுக்குத் தன்னாட்சி வழங்கி விட்டார்.

உலக அளவில் தன்னைப் போலவே இடதுசாரிக் கொள் கைகள் கொண்ட லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-7/article7794509.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 8

 
 
 
பொலிவியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள மடிடி தேசியப் பூங்கா.
பொலிவியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள மடிடி தேசியப் பூங்கா.

பொலிவியாவில் உள்ள மரங் களுக்கு பிறநாடுகளில் கிராக்கி இருக்கிறது. விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணமும் அரசுக்கு இருக்கிறது. இவற்றின் காரணமாக காடுகள் அழிக்கப்படு கின்றன.

பொலிவியா ஒரு தைரியமான நாடு. மொரேல்ஸ் ஒரு துணிவுமிக்க அதிபர் எனலாம். மெக்ஸிகோவில் உள்ள சுற்றுச் சூழல் குறித்து சென்ற ஆண்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பல விஞ்ஞானிகளும்கூட கலந்து கொண்டனர். உலகம் வெப்பமயம் ஆவதைத் தடுத்து நிறுத்த சில நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் இவை குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்தபோது அதில் ஐ.நா.வின் உறுப்பினர்களாக இருக்கும் 192 நாடுகள் இந்த முடிவுக்கு ஒத்துக் கொண்டன. பொலிவியா மட்டுமே இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

பொலிவியா மட்டும் இதில் ஏன் மாறுபட வேண்டும்? காரணம் உண்டு. உலக வெப்பமய மாதல் என்பது நாடு கடந்த பிரச்னைதான். ஆனால் பொலிவியாவில் இதன் தீவிரம் குறிப்பிடத்தக்கது. அங்குள்ள பனி மலைகள் (Andean Glaciers) மூன்றில் ஒரு பங்கு உருகிவிட்டன. அடுத்த 10 வருடங்களில் இப்போது இருப்பதில் பாதி

பனிக்கட்டிகள் உருகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொலிவியா அதிகமாகக் கவலைப்படுகிறது.

தங்களது அரசியல் அமைப்பு சட்டத் திலேயே சுற்றுச் சூழல் தொடர்பான பல சட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்று பொலிவியா திட்டமிடுகிறது. ‘‘மரங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பது என்ற பெயரில் முன்னேற்றத் தைத் தடுத்து நிறுத்தி விட முடியுமா? ‘ஆசிரம வாழ்க்கையா வாழப் போகி றார்கள் பொலிவியர்கள்?’ என்று சில மேலை நாட்டு ஊடகங்கள் இதைக் கிண்டல் செய்கின்றன.

மொரேல்ஸ் இதுகுறித்துக் கவலைப்பட வில்லை. ‘‘பொலிவியாவின் முதல் நிஜமான உள்ளூத் தலைவர் நான்தான். இந்த தேசத் தில் உள்ளூர்வாசிகளைவிட வெள்ளையர் களிடம்தான் எக்கச்சக்கமாக பணம் குவிந்திருக்கிறது. கொஞ்சம் சரிசெய்வதில் தப்பில்லை’’ என்கிறார். (மொரேல்ஸின் ஆட்சியில் 36 உள்ளூர்மொழிகள் அதிகார பூர்வ மொழிகளாக சட்ட அங்கீகாரம் பெற்றுள் ளன).

பணக்காரர்களிடமிருந்து நிலத்தை அரசு ஏற்றுக் கொள்ளும். நிலச் சீர்திருத்தச் சட்டம் அறிமுகமாகிவிட்டது. அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது.

பொதுவான சுற்றுச் சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பொலிவியா மறுத்தவுடன் அமெரிக்கா தான் அந்த நாட்டுக்கு செய்து வந்த நிதி உதவியைக் குறைத்துக் கொண்டது. ஆனால் இந்த மிரட்டல் போதிய பலன் அளிக்கவில்லை. காரணம் பிரேசில், வெனிசுவேலா போன்ற நாடுகள் பொலிவியாவுக்கு நிதி நெருக்கடியின் போது கைகொடுக்கத் தொடங்கின. தவிர உலக நிதியமும், உலக வங்கியும் பொலி வியாவுக்கு அளித்த கடனில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்தன. இதன் காரணமாக பொலிவியாவின் சிக்கல் குறைந்தது.

பொலிவியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது மடிடி தேசியப் பூங்கா. உலக சுற்றுச் சுழல் ஆர்வலர்களின் தனி கவனத்தைப் பெற்றது இந்தப் பூங்கா. ஏன் பெறாது? உலகில் உள்ள பறவை இனங்களில் 11 சதவீதம் இந்தப் பூங்காவில் பறந்து திரிகின்றன.

அப்படியானால் ஓர் ஆகச் சிறந்த வனவிலங்கு பாதுகாப்புப் பகுதி இது எனலாமா? அங்கேதான் சந்தேக மேகங்கள் படிகின்றன.

மடிடியை ஒரு ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்றுதான் பொலிவிய அரசு குறிப்பிடுகிறது. ஆனால் உண்மையில் அப்படியா?

18 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது இந்தப் பூங்கா. ஆனால் இதில் முக்கால்வாசி பகுதி பெட்ரோலிய வளமும் உள்ள பகுதி. ஏற்கெனவே பல நாடுகளும், நிறுவனங்களும் இந்தப் பகுதியின் மீது கண் பதித்திருக்கின்றன. தவிர அங்கு தங்கம் கிடைக்கிறது என்ற செய்தியும் வந்திருக்கிறது. கோகோ பயிர் விளைய அற்புதமான மண் வளம் கொண்ட பகுதி இது என்ற கருத்தும் நிலவுகிறது. தவிர இந்தப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான நீர் மின் நிலையம் கட்டலாம். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தொடங்கியிருக்கிறார் மொரேல்ஸ். சத்தமில்லாமல் சிலவகை ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டன என்கிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பெட்ரோலிய வளங்கள் தோண்டி எடுக்கப் பட்டால், பொலிவியாவின் முன்னேற்றம் சிக்கலின்றி இருக்குமே. தவிர மிக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு இல்லாமல்கூட இதைச் செய்ய முடியுமே. இதுபோன்ற கருத்துகள் பொலிவியாவில் வலம்வரத் தொடங்கிவிட்டன.

ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதி என்றால் நூறு சதவீதம் பாதுகாக்கப்பட வேண்டும். ‘பொறுப்புடன் பூமியைத் தோண்டுவது’ என்பதையெல்லாம் ஏற்க முடியாது. அரசே இதுபோன்ற செயல் களை ஆதரிப்பது மிகவும் அபாயகர மானது என்கிறார்கள் இவர்கள்.

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரான தெரஸா ஃப்லோர்ஸ் என்பவர் ‘‘இந்த அரசு, அன்னை பூமியை காப்பதாக அடிக்கடி கூறுகிறது. ஆனால் இதன் செயல்பாடுகள் அதற்கு நேரெதிராக உள்ளன. மற்ற பல அரசுகளைவிட இந்த அரசு சுற்றுச் சூழலை மிகவும் அழித்துக் கொண்டிருக்கிறது. முடிந்த வரை இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதற்காக சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப் பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நடந்து கொள்கிறது. ‘பாதுகாக்கப் பட்ட பகுதிகள்’ என்றெல்லாம் அரசு வரையறுத்திருப்பது சும்மா பேச்சுக் காகத்தான். நடுநிலைமையான சுற்றுப்புறச் சூழல் அமைப்பின் மூலம் பொலிவி யாவில் விவரத்தை அறியச் சொன்னால் உண்மைகள் வெளிவந்துவிடும். பாதுகாக் கப்பட்ட பகுதிகளுக்கு இந்த அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கு வதில்லை. இந்தப் பகுதிகளில் கோகோ விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்யும்போது அதை அரசு தடுப்பதில்லை’’ என்கிறார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-8/article7799757.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா 9

 
பொலிவியா வந்த போப் பிரான்சிஸுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அந்நாட்டு அதிபர் மொரேல்ஸ்.
பொலிவியா வந்த போப் பிரான்சிஸுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அந்நாட்டு அதிபர் மொரேல்ஸ்.

சமீபத்தில் பொலிவியாவுக்குச் சென்றிருந்தார் போப். இதுவே பலரால் ஓர் அதிசயமாக நோக் கப்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிகளுக்கும், கத்தோலிக்கத் தலைமைக்கும் பொதுவாக ஏழாம் பொருத்தம்தான்.

இந்த நிலையில் பொலிவியாவுக்கு போப் செல்லப்போவதாக திட்டமிட்டது வியப்பை உண்டாக்கியது என்றால் தொடர்ந்தது மற்றொரு வியப்பு.

பொலிவியாவின் பண்பாட்டு அமைச்சகம் போப்பின் வருகையை உறுதி செய்தது. போதாக்குறைக்கு அந்தத் துறையின் அமைச்சர் ‘‘தான் வரும்போது கோகோ இலைகள் தனக்கு அளிக்கப்பட வேண்டுமென்று போப் வேண்டு கோளை விடுத்திருக்கிறார்’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத் தியது.

பொலிவியாவின் முக்கிய விவசாயப் பொருட்களில் ஒன்று கோக்கோ. அந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றியமைத்த தில்கூட இதற்குப் பங்கு உண்டு. கோகோ என்பது சாக்லெட்டில்கூட பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். மருத்துவக் காரணங்களுக் காக கோகோ இலைகளை மெல்வது பொலிவியாவில் சட்டப்படி தவறல்ல. மலையேற்றத் தின்போது கோகோ இலைகளை மெல்வது என்பதும் அங்கு வழக் கத்தில் உள்ள ஒன்றுதான். அதே சமயம் கோகெயின் போதைப் பொருளுக்கும் இது ஒரு முக்கிய மூலப்பொருள்.

ஊடகங்கள் வாடிகனை கேள்வி எழுப்பின. ‘‘எதற்காக கோகோ இலைகளை அளிக்கும்படி போப் கோரியிருக்கிறார்? பொலிவி யாவுக்கும், வாடிகனுக்கும் நட்புறவு தோன்றியதின் அடையாளமா இது? அந்த இலைகளை போப் பொலிவிய மண்ணிலேயே உண்ணப் போகிறாரா?’’.

‘‘பகைமை இல்லாததால்தான் பொலிவியா செல்கிறார் போப். மற்றபடி இலைகளை சாப்பிடுவது குறித்தெல்லாம் அவர் முடிவெடுக்க வில்லை’’ என்றது வாடிகன் தரப்பு.

‘‘தனக்குச் சரி என்று தோன்று வதை அவர் செய்வார்’’ என்று கூறியது வாடிகன். இந்த ஆண்டு ஜூலை 6-லிருந்து 12 வரை போப்பின் பொலிவிய விஜயம் நடை பெற்றது. அப்படிச் சென்றிருந்த போது பொலிவிய அதிபர் மொரேல்ஸை அவர் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து ஊடகங் களில் மிகப் பெரிய அளவில் இடம் பெற்ற செய்தி என்ன வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பொலிவியாவின் கத்தோலிக்கர்களின் நிலை குறித்து போப் பேசியதா? அல்லது கத்தோலிக்க மதம் குறித்த தன் கருத்துகளை மனம் விட்டு மொரேல்ஸ் பேசி அது முக்கிய இடத்தைப் பிடித்து விட்டதா? இரண்டுமில்லை. ஒருவேளை மேலே குறிப்பிட்ட கோகோ இலைகள் தொடர்பான செய்தியா? அதுவும் இல்லை.

மொரேல்ஸ் போப்புக்கு அளித்த ஒரு பரிசுதான் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றது. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சிதான் வெகுமதிப் பொருளாக இருந்தது. ஆனால் ஒரு பெரிய சுத்தியலில் நீளமான கைப்பிடிப் பகுதியில் ஏசுநாதரின் நின்ற உருவமும், அந்தச் சுத்தியலின் மேற்பகுதியில் ஏசுநாதரின் முகமும் இருபுறமும் நீட்டப்பட்டிருந்த அவரது கைகளும் இடம் பெற்றிருந்தன. போதாக்குறைக்கு இந்தச் சிலையில் கீழ்ப்புறம் அரிவாளைப் போலவே காட்சியளித்தது. ஆக கம்யூனிஸச் சின்னத்தில் ஏசுநாதர்!

இதை போப் ஏற்றுக்கொள் வாரா? வாடிகனுக்கு எடுத்துச் செல்வாரா? இந்தக் கேள்விகள் பலமாகவே எழுந்தன. ‘‘இது என்னை எந்தவிதத்திலும் புண்படுத்திவிடவில்லை’’ என்றபடி அதை எடுத்துச் சென்றார் போப்.

சர்ச்சுக்கு எதிராக பலவிதக் கருத்துகளைக் கூறிய மொரேல்ஸ் ஏசுநாதரின் சிலையை அளித்ததன் மூலம் தன் அரசியல் வியூகத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டு விட்டாரோ என்கிற கேள்வியும் அங்கு கட்டுரைப் பொருளாகி வருகிறது.

எஸ்பினல் என்பவர் வடிவமைத் ததைப் போலவே இந்தப் பரிசுப் பொருள் இருக்கிறது. எஸ்பினல் ஒரு கத்தோலிக்க பாதிரிதான். (ஜெசூட் பிரிவைச் சேர்ந்தவர்). எனினும் மார்க்ஸிய தத்துவங் களில் ஈடுபாடு கொண்டவர். இதை வாடிகன் ஆதரிக்கவில்லை. ‘‘ஏழைகளுக்கு அதிக ஆதரவு, அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை’’ என்ற கொள்கை களுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினால் அது காலப்போக் கில், கத்தோலிக்கத்துக்கு ஆதர வாக இருந்த வலதுசாரி ஆட்சி களை பாதிக்கும் என்ற அச்சம் வாடிகனுக்கு. (அங்கெல்லாம் ஏழைகள் புரட்சியில் இறங்கி விட்டால்?).

பொலிவியாவை அடைந்த வுடன் தூய எஸ்பினல் கொலை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்று தன் அஞ்சலியைச் செலுத்தினார் போப்.

எதற்காக போப்புக்கு இந்த வித்தியாசமான பரிசை மொரேல்ஸ் அளிக்க வேண்டும். இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவர் மொரேல்ஸ் என்பதாலும், சர்ச்சுக்கு எதிரான பலவித நிலைபாடுகளை அவர் கொண்டிருந்ததாலும் அவர் அளித்த பரிசு மேலும் விமர்சிக் கப்பட்டது அல்லது பாராட்டப் பட்டது.

‘‘என்னால் இந்தப் பரிசையும் அதிலுள்ள கலை வேலைப்பாடு களையும் புரிந்து கொள்ள முடிகிறது. இது என்னை அவமதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை’’ என்று கூறிய போப் அந்த வெகுமதியை மறக்காமல் வாடிகனுக்கும் கொண்டு சென்று விட்டார்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-9/article7809053.ece

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 10

 

சே குவாராவுடன் (வலது) பிடல் காஸ்ட்ரோ. (கோப்புப் படம்)
சே குவாராவுடன் (வலது) பிடல் காஸ்ட்ரோ. (கோப்புப் படம்)

பிரபல புரட்சியாளர் சே குவாராவுக்கும் பொலிவியாவுக்கும்கூட ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

சே குவாரா பற்றி ஓரளவு அறிந்தவர்களில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம். அவர் பிறந்தது அர்ஜென்டினாவில். அவர் பெரும் புரட்சிகள் செய்த நாடு என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது கியூபா. அப்படியிருக்க பொலிவியாவுக்கும் அவருக்கும் எந்தவகையில் தொடர்பு?

நிச்சயம் உண்டு. தென் அமெரிக்க நாடுகள் அனைத்துக்கு மாகக் குரல் கொடுத்தவர் சே குவாரா. தவிர பொலிவியாவில் தான் அவர் இறந்தார்.

கடந்த 1928-ல் அர்ஜென்டினாவில் ஒரு வளம்மிக்க குடும்பத்தில் பிறந்தவர்தான் சே குவாரா. மருத்துவப் படிப்பைப் பயின்றார். பியூனோ ஏரெஸ் பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி தொடர்ந்தது. அவருக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும். தென் அமெரிக்க நாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் நிறைய இருந்தது. இந்த இரண்டையும் இணைத்துக் கொண்டார் அவர். தனதுமோட்டார் சைக்கிளிலேயே பல தென் அமெரிக்க நாடுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்தார். (மருத்துவக் கல்வியின்போது இப்படிப்பட்ட வாய்ப்புகள் அடிக்கடி கிடைத்து விடுமா என்ன? அவற்றை அவர் எப்படியோ ஏற்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை).

இப்படி ஆர்வத்துடன் அவர் தொடங்கிய பயணங்கள் பெரும்பாலும் சோகத்துடன் முடிவடைந்தன. தென் அமெரிக்க நாடுகளில் நிலவிய வறுமை அவரை வருத்தமடைய வைத்தது. தவிர கீழ்மட்ட மக்களின் மீது ஆட்சியாளர்கள் செலுத்திய அடக்குமுறை அவரைக் கொந்தளிக்க வைத்தது.

கடந்த 1953-ல் மருத்துவப் பட்டம் கிடைத்தது. ஆனால் மன அமைதி கிடைக்கவில்லை. லத்தீன் அமெரிக்காவில் (தென் அமெரிக்க நாடுகள்) தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டார். அப்போது பல இடதுசாரி அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

கடந்த 1950-களில் மெக்ஸி கோவில் அவர் ஒரு தலைவரைச் சந்திக்க, அந்தச் சந்திப்பு சில நாடுகளின் சரித்திரத்தையே திருப்பிப் போட்டது. அவர் சந்தித்தது பிடல் காஸ்ட்ரோவை. அந்தச் சந்திப்பு மெக்ஸிகோவில் ரகசிய இடம் ஒன்றில் நடை பெற்றது. ஏனென்றால் பிடல் காஸ்ட்ரோ அப்போது தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டி ருந்தார்.

அப்போது கியூபாவை படிஸ்டா என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டி அவருக்கு எதிராகப் பல புரட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சே குவாரா. காலப்போக்கில் சே குவாராவும் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கொண்டு கியூபா அரசுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டார். 1959-ல் கியூபாவின் அரசு கைமாறியது. பிடல் காஸ்ட்ரோவின் கைக்கு அதிகாரம் வந்தது. அந்தக் காலகட்டத்தில் சே குவாரா, பிடல் காஸ்ட்ரோவின் பெருநம்பிக்கைக்கு உரியவராக விளங்கினார். தொழில் அமைச்ச ராக நியமிக்கப்பட்டார் சே குவாரா.

லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா (அதாவது யு.எஸ்.) ஆக்கிரமிப்பு செய்வதை சே குவாராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை விவசாயிகள் கடுமையான எதிர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

கடந்த 1965 ஏப்ரலில் சே குவாரா தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் (சிலர் வேறுமாதிரியும் கூறுகிறார்கள். கியூபாவின் பொருளாதார மாற்றம் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக பிடல் காஸ்ட்ரோவுக் கும் சே குவாராவுக்கும் கருத்து மோதல்கள் உண்டாயின என்றும் இதைத் தொடர்ந்து சே குவாரா பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்கிறார்கள்).

பிறகு கியூபாவிலிருந்து வெளி யேறினார் சே குவாரா. ஆப்பிரிக்க பயணத்தை மேற்கொண்டார். அதன் பிறகு இவர் தன்னை வெளிப் படுத்திக் கொண்டது பொலிவியா வில். அப்போது சே குவேராவுக்கு வயது 39. அவர் தங்கியிருந்த இடத்தை வளைத்தது பொலிவிய ராணுவம். (அமெரிக்க ராணுவத்தின் பங்களிப்பும் பொலிவிய ராணுவத்தில் அப்போது இருந்தது). அப்போது கொரில்லா போர்முறைத் தாக்குதலில் தன் குழுவினருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் சே குவாரா.

கைது செய்யப்பட்ட சே குவாராவை அடுத்த நாளே கொலை செய்தது பொலிவிய ராணுவம். அவர் உடலை ஓரிடத்தில் புதைத் தது. அந்த சமாதியின் மேல் எந்தக் குறிப்பும் (பெயர் உட்பட) பொறிக்க அனுமதிக்கப்படவில்லை. அவரது கைகளை மட்டும் துண்டித்து உலகுக்குக் காட்டியது. அதாவது சே குவாரா இறந்துவிட்டார் என்பதற்கான சான்று!

கடந்த 1997-ல் சே குவாராவின் உடல் பகுதிகள் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கியூபாவுக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டன. அதிபர் பிடல் காஸ்ட்ரோவும், ஆயிரக்கணக்கான கியூபா மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1960-ல் அல்பெர்ட்டோ கோர்டா என்பவர் சே குவாராவை வட்டமான தட்டையான குல்லாய் அணிந்திருந்த நிலையில் புகைப்படம் எடுத்திருந்தார். அது பின்னர் உலக அளவில் பரவலாகியது. இந்தியாவில்கூட பல இளைஞர்களின் டீ-ஷர்ட்களில் இடம் பெற்றது இந்த உருவம்தான்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-10/article7813288.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 11

 

பொலியாவில் உள்ள சுரங்கங்களில் ஒன்று.
பொலியாவில் உள்ள சுரங்கங்களில் ஒன்று.

சே குவாராவைப் பற்றி எதிர்மறையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக தனது புரட்சியின்போது கியூபாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு அவர் மரண தண்டனை விதித்தார் என்கிறார்கள்.

தன் கடைசி காலத்தில் (அக்டோபர் 1966) பொலிவியாவுக்கு வந்தபோது அங்கு ஒரு மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கிவிட முடியும் என்று கருதியிருந்தார் சே குவாரா.

மலைப்பாங்கான பொலிவியாவுக்கு அவர் வந்தபோது அங்கிருந்த மக்களில் 60 சதவிகிதம் பேர் அய்மாரா எனும் உள்ளூர் மொழி மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தனர். இவர்களில் பலரும் விவசா யத்தில் ஈடுபட்டிருந்தனர். தகர (டின்) சுரங்கங்களிலும் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர். பெண்கள் நகரங்களி லுள்ள செல்வந்தர்களின் பங்களாக்களில் வீட்டுவேலை செய்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவடை வதற்கு முன் பொலிவிய அரசில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் பெரும் செல்வந்தர்கள்.

இவர்கள் அந்த நாட்டின் டின் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். வளம்கொழித்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சர்வதேச சந்தையில் தகரத்தின் விலை வெகுவாக சரிந்தது. தவிர ஒட்டு மொத்தமாகவே பொலிவியா வறுமையில் மூழ்கத் தொடங்கியது. எனவே கையால் ஆகாத அரசுக்கு எதிராகப் புரட்சிகள் வெடித் தன. மாணவர்களும் தொழிலாளர்களும் சிறு வணிகர்களும், இதில் பெருமளவில் பங்கேற்றனர். ஆளும் கட்சியாக அப்போது விளங்கியது தேசிய புரட்சி இயக்கம் என்ற கட்சி. இதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான மேஜர் குவால்பெர்ட்டோ விலர்ரோயல் என்பவர் புரட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டு தெருவிளக்குக் கம்பம் ஒன்றில் தொங்கவிடப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சியின் பல தலைவர்கள் தலைமறைவானார்கள். கட்சியே தலைமறைவாகிவிட்டது என்றும் கூறலாம்.

1946க்குப் பிறகு இக்கட்சி விக்டர் எஸ்டென்சோரோ என்பவர் தலைமையில் தன்னை புதுப்பித்துக் கொண்டது. அர்ஜென்டி னாவில் குழுமிய இவர்கள் அங்கிருந்தே பொலிவியாவின் அதிபராக விக்டர் எஸ்டென்சோரோவைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் இந்தத் தேர்தல் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டு ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் ஹ்யூகோ பலீனியன் என்பவரிடம் அரசு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இந்த அரசுக்கு எதிராக ஒன்று திரண்டனர் மாணவர்களும், அறிவு ஜீவிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும். 1952 ஏப்ரலில் இவர்கள் தங்கள் எதிர்ப்புகளைச் செயலில் காட்டியபோது அது மிக வலிமையானதாக இருந்தது. காரணம் இவர்களில் பலர் அதற்குள் ஜெர்மானிய ராணுவத்திடம் பயிற்சி பெற்றிருந்ததுதான். தவிர பீரங்கிகளைக்கூட இவர்கள் பயன்படுத்தினார்கள். பின்னர் நாட்டின் தலைமைப் பதவி விக்டர் எஸ்டென்சோரோவுக்கு வழங்கப்பட்டது.

எஸ்டென்சோரோ ஆட்சியில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. வாக்குரிமை வழங்கப்பட்டது. நிலச் சீர்திருத்தம் அறிமுகமானது. கிராமக் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. பெரும் டின் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

அமெரிக்காவைப் பொறுத்தவரை சே குவாரா போன்ற ‘தீவிரவாதிகளை’ விட, எஸ்டென்சோரோ போன்ற சீர்திருத்த வாதிகள் பரவாயில்லை என்று கருதியது. தவிர எதற்கும் சோவியத் யூனியனை அணுகாதவராகவும் எஸ்டென்சோரோ விளங்கினார். எனவே அவருடன் நட்பு பாராட்டியது அமெரிக்கா. இதன் தொடர்ச்சி யாக பொலிவியாவில் சில பெட்ரோலியக் கிணறுகள் அமெரிக்கர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டன.

அடுத்த அதிபர் தேர்தலில், அதற்கு முன்பு துணை அதிபராக இருந்த ஜுவாஜோ என்பவர் அதிபர் ஆனார். இவர் காலத்தில் நாட்டில் பெரும் மாறுதல்கள் தேவை என்பவர்களுக்கும், அவற்றை விரும்பாத வர்களுக்குமிடையே பிளவு ஏற்பட்டது. சுரங்கங்களிலிருந்து குறைவாகவே டின் கிடைத்தது. எனவே இயந்திரங்களை சுரங்க வேலைக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

சுரங்கத் தொழிலாளிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். வன்முறையிலும் ஈடுபட்டனர். அரசு அவ்வப்போது தலையிட்டு தொழிலாளிகளின் சம்பளத்தை அதிக அளவு உயர்த்தியது. இதன் காரணமாக உலக அளவில் குறைந்த விலைக்குப் போட்டியிட்டு டின்னை விற்க முடியாமல் முதலாளிகள் தவித்தனர்.

வேறொரு முக்கியமான மாற்றத்தையும் குறிப்பிடத்தான் வேண்டும். பொலிவியாவில் இருந்த மண்ணின் மைந்தர்கள் அதிகாரபூர்வ மாக குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலை உருவானது விக்டர் எஸ்டென்சோரோ மற்றும் ஜுவாஜோ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில்தான். இதன் விளைவாக நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அவர்கள் செல்லலாம் என்ற நிலை உருவானது. இதன் காரணமாகப் பலரும் நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அங்கே கிடைக்கவில்லை. அதே சமயம் விவசாயம் பாதித்தது. பிற நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் பொலிவியாவுக்கு ஏற்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-11/article7817614.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 12

 

பொலிவியா வனப்பகுதியில் பல மைல் தொலைவுக்கு குதிரையில் பயணம் செய்து விவசாயிகளிடம் சே குவாரா ஆதரவு சேகரித்தார்.
பொலிவியா வனப்பகுதியில் பல மைல் தொலைவுக்கு குதிரையில் பயணம் செய்து விவசாயிகளிடம் சே குவாரா ஆதரவு சேகரித்தார்.

ஒருபுறம் சமூகநல திட்டங்களுக்கு மிக அதிகமாக தேவைப்பட்ட நிதி, மறுபுறம் ஏற்றுமதியைவிட மிக மிக அதிகமான இறக்குமதி. இவற்றின் காரணமாக பொலிவி யாவில் பண வீக்கம் தாறுமாறாக அதிகமானது. பொலிவியா நாணயமான பெஸோவின் மதிப்பு மிகவும் குறைந்தது. ஒரு டாலருக்கு 60 பெஸோ என்று 1952-ல் இருந்த நிலை, 1956-ல் ஒரு டாலருக்கு 12,000 என்கிற அளவில் மாற்றம் கண்டது. அந்த நேரத்தில் அரசின் நிதி நிலைமைக்கு அமெரிக்கா பெரிதும் உதவியது உண்மை. மீண்டும் அரசுக்கு எதிராக சுரங்க முதலாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவருமே கொதித்தெழுந்தனர்.

தன் ஆட்சிக்கு ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்ததும் ஜுவாஜோ தன் ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். போர் பயிற்சி அளிக்க அமெரிக்கா உதவியது.

ஆனால் 1964-ல் வேறொரு எதிர்பாராத நிகழ்வு உண்டானது. ஜுவாஜோவைப் பதவியிலிருந்து நீக்கியது பொலிவிய ராணுவம்! துணை அதிபர் பரியென்டோஸ் என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் சே குவாரா பொலிவியாவை அடைந்தார். தொடக்கத்தில் உருகுவே நாட்டைச் சேர்ந்த ஒரு வணிகர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். பொலிவியாவில் உள்ள சாண்டா க்ரூஸ் என்னும் நகரை அடைந்தார். அங்கே கியூபாவிலிருந்து சிலரும் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளி லிருந்து பலரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு கொரில்லா போர் முறையைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் சே குவாரா.

சே குவாராவின் கனவு இதுவாக இருந்தது. ‘பிடல் காஸ்ட்ரோவுக்கு கியூபாவில் அளிக்கப்பட்ட ஆதரவு பொலிவியாவில் எனக்கு கிடைக் கும். விவசாயிகள் எங்களை ஆதரிப் பார்கள். எனவே உணவுக்கும் இருப் பிடத்துக்கும் பஞ்சம் இருக்காது. உள்ளூர் இளைஞர்களும் எமது சித்தாந்தத்தால் கவரப்பட்டு கொரில்லா ராணுவத்தில் சேரு வார்கள். பிறகு ஒட்டு மொத்தமாக பொலிவியாவின் தலைநகரை நோக்கிச் சென்று புரட்சியில் ஈடுபட வேண்டியதுதான்’.

பொலிவிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சே குவாராவை சந்தித்தார்கள். ஆனால் சே குவாராவின் கனவு நடைமுறைக்கேற்றதாக இல்லை என்று அவர்கள் கருதினார்கள்.

தவிர உள்ளூர் மக்கள் சே குவாராவின் சித்தாந்தங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ‘இருக்கிற பிரச்சினை போதாதென்று சே குவாராவால் புதிய பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று எண்ணினார்கள். ‘‘இந்தப் பகுதியில் உள்ளவர்களின் தலைகள் பாறைகளைப்போல உள்ளன. எங்கள் கருத்துகளால் அவற்றைத் துளைத்து உள்நுழைய முடியவில்லை’’ என்று சே குவாரா தன் நாட்குறிப்பில் எழுதினாராம்.

போதாக்குறைக்கு உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி சே குவாரா குறித்து பொலிவிய காவல்துறைக் குத் தகவல் கூறினாள். அன்றே சே குவாராவும் அவர் குழுவைச் சேர்ந்த மூன்று கெரில்லாப் படை வீரர்களும் வளைக்கப்பட்டனர். அந்தக் கிராமத்தில் இருந்த சிறு பள்ளியில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த தினமே அக்டோபர் 9 அன்று ஒரு ஹெலிகாப்டர் அங்கு வந்தது. அதில் ராணுவத் தளபதி ஒருவர் இருந்தார். கூடவே அமெரிக்க உளவுத் துறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் இருந்தார். இந்த அதிகாரி சே குவாராவின் நாட்குறிப்பில் இருந்த ஒவ்வொரு பக்கத்தையும் தனது புகைப்படத்தில் பதிவு செய்து கொண்டார். பின்னர் சே குவாராவை பல கேள்விகள் கேட்டார். பொலிவிய அரசின் உத்தரவின் பேரில் சே குவாராவின் மூன்று தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். சே குவாரா உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதியது அமெரிக்க அரசு. அவரை பனாமாவுக்கு அழைத்துச் சென்று தகவல்களைக் கறக்க அமெரிக்க விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் பொலிவிய அரசு, சே குவாராவை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது.

‘’யாருக்காவது ஏதாவது தகவல் சொல்ல விரும்புகிறீர்களா?’’ என்று கேட்க, அமெரிக்க உளவுத்துறை அதிகாரியிடம் சே குவாரா கூறியது இவைதான். ‘‘அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமான ஒரு புரட்சியை எதிர்பார்க்கலாம் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் கூறுங்கள். என் மனைவியிடம் மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சி செய்யச் சொல்லுங்கள்’’ என்றாராம்.

‘‘இறப்பை விரைவில் எதிர்பார்த்த போதிலும் அதை துணிவுடனும், வெகு நாகரிகமாகவும் எதிர்கொண் டார் சே குவாரா’’ என்று பின்னர் குறிப்பிட்டார் ரோட்ரிகுயெஸ் என்ற அந்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-12/article7826194.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 13

 

பொலிவியாவின் யுங்கஸ் மலைப்பகுதி தோட்டத்தில் கோக்கோ இலைகளைப் பறிக்கும் பெண். (கோப்புப் படம்)
பொலிவியாவின் யுங்கஸ் மலைப்பகுதி தோட்டத்தில் கோக்கோ இலைகளைப் பறிக்கும் பெண். (கோப்புப் படம்)

நமது தேசியக் கொடிக்கும் பொலிவியாவின் தேசியக் கொடிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே மூன்று குறுக்கு வண்ணப் பட்டைகள் கொண்டவை. இரண்டிலுமே கொடியின் கீழ்ப் பகுதியில் உள்ள நிறம் பச்சை.

சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்கள் கொண்டது பொலிவிய கொடி. நடுவில் (நமக்கு அசோகச் சக்கரம் மாதிரி) அவர்களுக்கு ராணுவச் சின்னம்.

சமீபகாலமாக மற்றொரு கொடி யையும் அரசு தொடர்பான நிகழ்ச்சி களில் மொரேல்ஸ் அறிமுகப் படுத்தி வருகிறார் என்றோம். 2009-ல் மாற்றியமைக்கப்பட்ட பொலிவிய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த இரண்டாவது கொடி தேசியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொடியில் உள்ள ஒன்பது சிறிய மஞ்சள் நிற நட்சத்திரங்கள் பொலிவியாவின் ஒன்பது துறை களைக் குறிக்கின்றன. சற்று கீழே தனியாக ஒரு பெரிய நட்சத்திரம் காணப்படுகிறது. இது கடல் வழிக்கான உரிமை பொலிவியா வுக்கு இருப்பதைக் குறிக்கிறதாம். (ஒரு காலத்தில் பொலிவியாவின் ஒரு பகுதி கடலை ஒட்டியும் இருந்தது. ஆனால் 1884-ல் நடைபெற்ற பசிபிக் யுத்தத்தில் சில நிலப்பகுதிகளை இழந்ததால் இன்று நாற்புறமும் நாடுகளால் சூழப்பட்ட தேசமாகிவிட்டது பொலிவியா).

இந்தத் தொடரில் கோக்கோ அடிக்கடி இடம் பெற்றதற்குக் காரணம் உண்டு. அது பொலிவிய சரித்திரத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று. பொலிவியாவின் உள்ளூர் வாசிகளுக்கு கோக்கோ என்றால் வெகு இஷ்டம். நாமெல்லாம் காப்பியோ, டீயோ குடிப்பதுபோல அவர்கள் பல நூற்றாண்டுகளாக கோக்கோ இலையை மெல்வது வழக்கம். நம் கட்டிடத் தொழிலா ளிகள் பசியை மறக்கவும் பழக்கம் காரணமாகவும் புகையிலையை மெல்வதுண்டு. அதுபோல் அவர்கள் கோக்கோ இலைகளை மெல்கின்றனர்.

இன்றுகூட மூன்றில் ஒரு பொலிவியர் கோக்கோ இலையை அப்படியே சாப்பிடுகிறாராம். 1980-களில் கோக்கெயின் என்ற போதைப் பொருள் உலகெங்கும் பரவியது. அதன் அடிப்படை கோக்கோ இலைகள். முக்கியமாக பொலிவியாவின் லாஸ் யுங்காஸ், சபரே ஆகிய இடங்களில் கோக்கோ அதிகமாக விளைந்தது.

இந்தக் கோக்கோ, போதைப் பொருளாக மாற்றப்பட்டு அமெரிக் காவை பெருமளவில் அடைந்தது என்பதால், இதைத் தடுக்கத் தீர்மானித்தது அமெரிக்கா. கோக்கோ விவசாயிகளையே எதிரி களாக கருதியது. 1990-களில் பெருமளவு அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இதற்கு எதிராக ஈவோ மொரேல்ஸ் செயல்பட்டதும் தொழிற்சங்கத் தலைவர் ஆனதும் பின்னர் அதிபர் ஆனதையும் நாம் கவனித்தோம்.

‘‘கோக்கோவை வரவேற்போம், கோக்கெயினை மறுப்போம்’’ என்ற வாசகங்களுடன் மொரேல்ஸ் கோக்கோ விளைச்சலுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

‘‘கோக்கோவைத் தாராளமாகப் பயிரிடுங்கள். ஆனால் அது கோக்கெயின் எனும் வடிவத்தைப் பெறுவதற்கு ஒத்துழைக்காதீர்கள்’’ என்று அறிவித்தார் மொரேல்ஸ்.

இது ஒரு வியப்பான அறிவிப்பு. ஒரு ஏழை நாடு, அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் அதை எதிர்த்தபடி ஆட்சி செய்வதும் எளிதான விஷயம் அல்ல. இதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து கிடைத்து வந்த லட்சக்கணக்கான டாலர் நிதி உதவி நின்றுவிடக் கூடும் என்று தெரிந்தும் இப்படி ஒரு முடிவெடுத்து செயல்படுத்தினார் மொரேல்ஸ்.

அந்த அறிவிப்பு செய்யப்பட்ட 9 வருடங்களுக்குப் பிறகு பொலி வியா இன்று வெற்றி கண்டிருக் கிறது. கடந்த 4 வருடங்களில் கள்ளத் தனமான கோக்கோ தயாரிப்பை (அதாவது போதைப் பொருளுக் காகவே தயாரிக்கப்படும் கோக்கோ) மூன்றில் ஒரு பங்காகக் குறைத்திருக்கிறது பொலிவியா.

அந்தவிதத்தில் பக்கத்து நாடு களான கொலம்பியா, பெரு ஆகியவற்றை ஏக்கப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது இந்த நாடு. (அங்கெல்லாம் போதைப் பொருள் ஆதிக்கம் மிக அதிகம்).

ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு செயற்கைக் கோள்களின் மூலம் கண்காணிப்பதில் கோக்கோ விளைச்சல் பொலிவியாவில் நிஜமாகவே குறைந்திருக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கியிருக் கிறது. என்றாலும் அமெரிக்காவில் கள்ளத்தனமாக விற்கப்படும் கோகெயினில் ஒரு சதவீதம் பொலி வியாவில் விளையும் கோக்கோவி லிருந்து உருவானதுதான் என்கிறது ஓர் ஆய்வு.

இப்போதெல்லாம் கோக்கோ விவசாயிகள் தங்கள் பயிர்களையும் பிற விவரங்களையும் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 2500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில்தான் கோக்கோ பயிரிடலாம்.

இந்த நிபந்தனைகளை விவசா யிகள் வரவேற்கிறார்கள். ஏனென்றால் அந்த அளவு கோக்கோ விளைச்சலை அரசு சட்டபூர்வ மானதாக ஆக்குகிறது. (இன்ற ளவும் கோக்கோ அளவுக்கு லாபம் தரும் விவசாயப் பொருள் பொலிவியாவில் வேறு எதுவும் இல்லை).

என்றாலும் .இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியாகி உள்ள அரசு அறிவிக்கை பொலிவிய அரசை விமர்சிக்கிறது. இன்னமும் அதிக கட்டுப்பாடுகளை கோக்கோ விவசாயிகளின் மீது பொலிவிய அரசு கொண்டுவர வேண்டும் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கத் தூதரகமே தங்களுக் குத் தேவையில்லை என்று கூறியது பொலிவியா. அந்தக் கசப்பின் மிச்சம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அக்டோபர் 11, 2015 அன்று பொலிவியாவில் உரையாற் றினார். மாறி வரும் வெப்பநிலை குறித்த உலக மாநாட்டில் அவர் பேசும்போது ‘‘அடேலா ஜமுடியோ’’ (Adela Zamudio) என்ற பொலிவிய பெண் கவிஞரைப் பற்றிக் குறிப்பிட்டார் (அன்று உலக மகளிர் தினம் நெருங்கிக் கொண்டிருந்தது).

‘‘சமூகத்தின் தடைகளை மீறிக் கொண்டு ஒரு மகளிர் தலைவியாக அவர் உயர்ந்தார். அவரை நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டும்’’ என்றார்.ஒருவிதத்தில் பார்க்கப் போனால் மகளிர் தினத்தைக் கொண்டாடும் முழுத் தகுதி பொலிவியாவுக்கு உண்டு. அதன் நாடாளுமன்றத்தில் ஆண்களுக்குச் சமமான எண்ணிக் கையில் பெண்களும் இருக்கி றார்கள்.

http://tamil.thehindu.com/world/பெருமை-சிறுமை-பொலிவியா-13/article7836871.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.