Jump to content

இந்தியா எதிர் தென்ஆப்ரிக்கா T20, ஒரு நாள் போட்டி செய்திகள்


Recommended Posts

வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி: பேட்டிங்கில் 4-ம் நிலையில் இறங்குகிறார்?

 
  • பெங்களூரு பயிற்சி முகாமில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி. | படம்: பிடிஐ.
    பெங்களூரு பயிற்சி முகாமில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி. | படம்: பிடிஐ.
  • ஆக்ரோஷமான ஷாட்டை ஆடும் தோனி. | படம்: பிடிஐ
    ஆக்ரோஷமான ஷாட்டை ஆடும் தோனி. | படம்: பிடிஐ

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலான நீண்ட தொடரை அடுத்து பெங்களூருவில் தயாரிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஷிகர் தவண், தோனி, மொகமது ஷமி ஆகியோர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டு கடுமையான பயிற்சி மேற்கொண்டனர்.

புதன் கிழமையன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ஒருநாள் அணி கேப்டன் அடுத்தடுத்து பெரிய பெரிய ஷாட்களை ஆடினார். ரவிசாஸ்திரி அவரது ஆட்டத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட நேரம் தோனியுடன் ரவிசாஸ்திரி உரையாடினார்.

இத்தனையாண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பினிஷர் பணியைச் செய்து கொண்டிருந்த தோனி இனி 4-ம் நிலையில் களமிறங்கவுள்ளதாக தெரிகிறது. ரவிசாஸ்திரி கூறியிருப்பதும் சூசகமாக இதனை உணர்த்துகிறது:

"இதற்கான நேரம் வந்து விட்டது என்று தோன்றவில்லியா? எவ்வளவோ ஆண்டுகள் அவர் பின்னால் இறங்கி அணியின் சுமையை தன் தோள்களில் சுமந்துள்ளார். எனவே அவர் தனது பேட்டிங்கை முழுமையாக மகிழ்ச்சியுடன் ஆட வாய்ப்பளிக்க வேண்டாமா?

மிகச்சிறந்த ஒரு கேப்டன் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், நான் இந்திய அணியை மட்டும் குறிப்பிடவில்லை, உலக கிரிக்கெட்டிலேயே தோனிக்கு ஈடு கிடையாது. அவரது சாதனைகளை எடுத்துப் பாருங்கள். குறைந்த ஓவர் போட்டிகளில் அவர் சாதித்தவற்றை எண்ணிப்பார்க்கும் போது ஒருவரும் அவர் அருகில் கூட நிற்க முடியாது” என்றார்.

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள மொகமது ஷமி, தனது வழக்கமான ரன்-அப்-ஐ மேற்கொண்டு பந்து வீசினார். சுமார் 1 மணி நேரம் வலைப்பயிற்சியில் வேர்க்க விறுவிறுக்க அவர் பயிற்சி செய்தார்.

வியர்வை பிசுபிசுக்க பயிற்சி செய்த மற்றொரு வீரர் ஷிகர் தவண். இவரும் காயத்தின் அறிகுறி இல்லாமல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். வரும் ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெறும் வங்கதேச ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ கேப்டனாக ஷிகர் தவண் களமிறங்குகிறார்.

இசாந்த் சர்மா, வருண் ஆரோன் ஆகியோரும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

அயல்நாட்டில் 2006-ற்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரைக்கூட இழக்காத தென் ஆப்பிரிக்க அணியின் சவாலைச் சந்தித்து வீழ்த்த இந்திய அணி தயாராகி வருவதாகவே தெரிகிறது. அனைத்திற்கும் மேலாக வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் பெற்ற தோல்விகளுக்கு ஈடுகட்டும் விதமாக தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் வீழ்த்த தோனியும் தயாராகி வருவதாகவே தெரிகிறது.

4-ம் நிலையில் தோனி களமிறங்குவது என்பது எதிரணியினருக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம், ஏனெனில் அவர் நின்று ஒன்று, இரண்டு என்று எடுத்து ரன் விகிதத்தை இலக்குக்கு தோதாகக் கொண்டு செல்ல முடிவதோடு, அவ்வப்போது பெரிய ஷாட்களையும் ஆடக்கூடியவர் மேலும் கடைசி வரை நின்றால் எந்த ஒரு வெற்றி இலக்கும் தோனியைப் பொறுத்தவரை கைப்பிடி மண்ணே. எனவே 4-ம் நிலையில் தோனி என்பது மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்குவது.

http://tamil.thehindu.com/sports/வலைப்பயிற்சியில்-பெரிய-ஷாட்களை-ஆடிய-தோனி-பேட்டிங்கில்-4ம்-நிலையில்-இறங்குகிறார்/article7688863.ece

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

இம்ரான் தாஹிர் பந்துவீச்சை எச்சரிக்கையாக எதிர்கொள்ளுங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் அறிவுரை

 
 
sachin_2260845f.jpg
 

தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்துவீச்சை எச்சரிக்கையாக எதிர்கொள்ளுங்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சச்சின் மேலும் கூறியதாவது: இம்ரான் தாஹிர் தலைசிறந்த பந்துவீச்சாளர். அவருடைய பந்துவீச்சை முறையாகவும், எச்சரிக்கையாவும் எதிர்கொள்ள வேண்டும். இம்ரான் தாஹிர் வரும் தொடரில் முன்னணி பவுலராக திகழ வாய்ப்புள்ளது.

நம்முடைய இந்திய அணியும் அற்புதமான அணிதான். இந்திய அணியில் மிகத்திறமையான வீரர்களும், அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடக்கூடிய வீரர்களும் இருக்கிறார்கள். நம்முடைய வீரர்களைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லலாம். ஆனால் கிரிக்கெட் என்று வரும்போது குறுக்கு வழி எதுவும் கிடையாது. இந்திய அணி சிறந்த அணி என்பது எனக்குத் தெரியும்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே டி20 தொடர், ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகிய 3 தொடர்கள் நடைபெறவுள்ளன. அதனால் இந்தத் தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் தொடரை பார்ப்பதற்காக மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன். இரு அணிகளும் சமபலம் கொண்டவையாகும்.

நான் ஒருபோதும் பலவீனமான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியதில்லை. அந்த அணி எப்போதுமே மிகமிக வலுவான அணியாகவே இருந்திருக்கிறது. இப்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏ.பி.டிவில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா போன்ற வலுவான வீரர்கள் இருக்கிறார்கள். இதேபோல் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல் ஆகியோரையும் மறந்துவிட முடியாது.

http://tamil.thehindu.com/sports/இம்ரான்-தாஹிர்-பந்துவீச்சை-எச்சரிக்கையாக-எதிர்கொள்ளுங்கள்-இந்திய-வீரர்களுக்கு-சச்சின்-அறிவுரை/article7691808.ece

Link to comment
Share on other sites

காயமடைந்த வைஸுக்கு பதிலாக அல்பி மோர்க்கல்

 INxq0ev2y6.jpg

 

கை முறிந்தமை காரணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க சர்வதேச இருபது-20 போட்டிக் குழாமிலிருந்து சகலதுறை வீரர் டேவிட் வைஸ் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக இன்னுமொரு சகலதுறை ஆட்டக்காரர் அல்பி மோர்க்கல் குழாமில் இடம்பெற்றுள்ளார். இதனையடுத்து 18 மாதங்களுக்கு பிறகு தென்னாபிரிக்க சர்வதேச இருபது-20 அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

பருவகாலத்துக்கு முன்னரான பயிற்சி ஆட்டமொன்றில் தனது பந்துவீச்சில் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முயற்சித்த போதே வலது கையில் வைஸ் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு சத்திரசிகிச்சை தேவைப்படுவதுடன், அவர் ஆறு வாரங்களலவில் போட்டிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இதேவேளை காலில் என்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து குணமடைந்து வரும் துடுப்பாட்ட வீரர் ரீலி ரொஸோ ஒருநாள் குழாமிலிருந்து விலகியுள்ளதுடன், இவருக்கு பதிலாக இருபது-20 குழாமில் முதன்முறையாக இடம்பெற்ற காயா சொண்டோ குழாமில் இடம்பெற்றுள்ளார்.

 

தவிர அண்மையில் காயமடைந்திருந்த துடுப்பாட்ட வீரர் பவ் டுபிலிசிஸ், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மொரிஸ் ஆகியோர் காயத்திலிருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.

http://tamil.wisdensrilanka.lk/article/2023

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு எதிராக தோல்வியடையும் அணியாகவே தென் ஆப்பிரிக்கா தெரிகிறது: டேரில் கலினன்

 
டேரில் கலினன். | கோப்புப் படம்: ஜி.கிருஷ்ணசாமி.
டேரில் கலினன். | கோப்புப் படம்: ஜி.கிருஷ்ணசாமி.

இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா நடப்பு தொடரில் தோல்வியடையவே அதிக வாய்ப்புள்ளது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கலினன் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியினரின் அனுபவமின்மையும் இந்தியாவின் தட்பவெப்பமும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்குக் கடும் சவாலாக அமையும் என்றார் டேரில் கலினன்.

“நிச்சயமாக! எந்த அணி தோல்வியடைய அதிக வாய்ப்பிருக்கிறது என்று கேட்டால் அது தென் ஆப்பிரிக்க அணிதான் என்று நான் கூறுவேன். அவர்கள் குளிர்காலத்திலிருந்து நேராக இந்திய துணைக் கண்டத்துக்கு வந்திறங்கியுள்ளனர். வெறுமனே ஆட்டக்கள நிலவரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தட்பவெப்ப சூழ்நிலையையும் எதிர்கொள்ள அனுபவம் தேவை. டிவில்லியர்ஸ், ஆம்லா தவிர அனுபவஸ்தர்கள் இந்த அணியில் இல்லை.

ஸ்பின்னைக் கொண்டு இந்தியாவை வீழ்த்த முடியாது:

தென் ஆப்பிரிக்க அணி தங்களது ஸ்பின் பந்துவீச்சைக் கொண்டு இந்தியாவை வீழ்த்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. எங்கள் காலத்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டே இந்தியாவை வீழ்த்தியுள்ளோம். ஆனால், இப்போதைய இந்திய வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் ஆடுகின்றனர். இந்தியா சமீப காலங்களாக ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுகின்றனர் என்றாலும் நான் வேகப்பந்து வீச்சாளர்கள் 4 பேரையே களமிறக்குவேன்.

டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை சமீப காலங்களில் தொடக்கத்தில் சரியாக வீசுவதில்லை என்றே கருதுகிறேன். மோர்கெல் இந்த சூழ்நிலைகளில் துல்லியமாக வீச வேண்டிய தேவையுள்ளது. இந்தப் பிட்ச்களில் வெர்னன் பிலாண்டரை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மென்களுக்குப் பிடிக்கும். அவர் அதிக ஓவர்களை தொடர்ச்சியாக வீசும் உடல்தகுதி இல்லாதவர். சுழற்பந்து வீச்சும் அனுபவமற்றது. இவர்கள் இந்திய அணியை ஆல்-அவுட் செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

இந்திய வேகப்பந்து வீச்சு பலனளிக்கும்...

மாறாக இந்திய வேகப்பந்து வீச்சு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை நிச்சயம் நெருக்கடிக்குள்ளாக்கும். நிச்சயம் வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்குமாறு பிட்ச் அமையும் என்றே எதிர்பார்க்கிறேன். 4-ம் நாளில் பந்துகள் திரும்பும். எனவே புதிய பந்தில் தென் ஆப்பிரிக்கா 2, 3 விரைவு விக்கெட்டுகளை இழந்தால், அதன் பிறகு இந்திய சுழற்பந்து வீச்சிடம் தென் ஆப்பிரிக்கா நிச்சயம் மீள முடியாத நிலைக்கே செல்லும். நான் தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்தால் ஒன்றும் எடுக்காத பிளாட் பிட்ச்களை இட்டால் மகிழ்ச்சியடைபவனாக இருப்பேன்.

இம்ரான் தாஹீர் அச்சுறுத்தல் அல்ல..

நிரூபிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் இல்லை. தாஹிர் அதிகம் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. இந்த வடிவத்தில் அவர் சிறந்து விளங்கவில்லை. ஏனெனில் இங்கு அதிக ஓவர்களை தொடர்ச்சியாக, சீராக வீசுவது அவசியம், இதற்கு தாஹிர் தோதுபட மாட்டார் என்றே கருதுகிறேன்.

பிறகு புதிய ஸ்பின்னர்களான் சைமன் ஹார்மர், டேன் பியட் ஆகியோர் நிச்சயம் இந்திய அணியை ஆல் அவுட் செய்யக் கூடியவர்கள் அல்ல. அப்படி நடக்க வெண்டுமெனில் இந்தியா மிக மோசமாக ஆடினால்தான் உண்டு”

இவ்வாறு கூறினார் கலினன்.

http://tamil.thehindu.com/sports/இந்தியாவுக்கு-எதிராக-தோல்வியடையும்-அணியாகவே-தென்-ஆப்பிரிக்கா-தெரிகிறது-டேரில்-கலினன்/article7702084.ece

Link to comment
Share on other sites

கோப்பை வெல்லுமா இந்தியா: இன்று தென் ஆப்ரிக்கா ‘டுவென்டி–20’ சவால்

dhoni, india

தரம்சாலா:  இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ போட்டி இன்று துவங்குகிறது. இதில் புலி போல பாய்ந்து தென் ஆப்ரிக்க அணியை தோனி துவம்சம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 72 நாட்கள் நடக்கும் இதில் முதலில் ‘டுவென்டி–20’ தொடர் துவங்குகிறது. 

இந்தியா ஆதிக்கம்:

இதில் தரம்சாலாவில் முதல் போட்டி இன்று நடக்கிறது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், ‘டுவென்டி–20’ என வந்து விட்டால், இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இவ்விரு அணிகள் மோதிய 8 போட்டிகளில் 6ல் இந்தியா வென்றுள்ளது. இது நமக்கு சாதகமான விஷயம். 

நீண்ட இடைவெளி:

அதேநேரம் கடந்த ஒரு ஆண்டில் இந்திய அணி 2 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் (எதிர்–ஜிம்பாப்வே) தான் பங்கேற்றுள்ளது. மற்றபடி இந்திய வீரர்களுக்கு பிரிமியர் தொடரில் பங்கேற்ற அனுபவம் அதிகம் உள்ளன.

கேப்டன் தோனியை பொறுத்தவரையில் ஒரு ஆண்டுக்குப் பின் இப்போது தான் ‘டுவென்டி–20’ போட்டியில் களமிறங்குகிறார். கடைசியாக 2014, செப்., 7ல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். 

தவிர, வங்கதேச தொடர் முடிந்து மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார். 2016ல் இந்திய மண்ணில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், இத்தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடி தோனிக்கு ஏற்பட்டுள்ளது.

யார் துவக்கம்:

காயத்தில் இருந்த மீண்ட ஷிகர் தவான், வங்கதேச ‘ஏ’ தொடரில் சதம் அடித்து மீண்டுள்ளார். இவருடன் இணைந்து ரோகித் சர்மா அல்லது ரகானே துவக்கம் தரலாம். ‘மிடில் ஆர்டரில்’ விராத் கோஹ்லி, ரெய்னா, தோனி வருவர்.

ஹர்பஜன் வருகை:

ஆடுகளத்தில் பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகும் என்பதால் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் தோனி களமிறங்கலாம். சமீபத்திய ‘இலங்கைத் தொடர் நாயகன்’ அஷ்வின், அக்சர் படேல், அமித் மிஸ்ராவுடன் ‘சீனியர்’ ஹர்பஜனும் வந்துள்ளது போட்டியை அதிகரித்துள்ளது.

வேகப்பந்து வீச்சில் மோகித் சர்மா, புவனேஷ்வர் குமார், ஸ்ரீநாத் அரவிந்த் உள்ளனர். தவிர, ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடுவும் அணியில் இடம் பெறுவரா என இன்று தான் தெரியும்.

டுபிளசி ‘அனுபவம்’:

தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் பலர் பிரிமியர் தொடரில் பங்கேற்றவர்கள். கேப்டன் டுபிளசி, சென்னை அணியில் தோனியுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

இதனால் தோனியின் பலம், பலவீனம், களத்தில் வகுக்கும் திட்டங்கள் அனைத்தும் இவருக்குத் தெரியும். இது இந்திய அணிக்கு சற்று பலவீனம் தான்.தவிர, குயின்டன் டி காக், ‘சூப்பர் மேன்’ டிவிலியர்ஸ், டுமினி, டேவிட் மில்லர், இம்ரான் தாகிர், ஆல்பி மார்கல் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் மிரட்ட காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தோற்றதால் சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படலாம்.

அட்டவணை

நாள் போட்டி இடம் நேரம்

 

அக். 2 முதல் ‘டுவென்டி–20’ தரம்சாலா 

அக். 5  2வது ‘டுவென்டி–20’ கட்டாக் 

அக். 8  3வது ‘டுவென்டி–20’ கோல்கட்டா 

.........

அக். 11 முதல் ஒருநாள் கான்பூர் 

அக். 14 2வது ஒருநாள் இந்துார் 

அக். 18 3வது ஒருநாள் ராஜ்காட் 

அக். 22 4வது ஒருநாள் சென்னை 

அக். 25 5வது ஒருநாள் மும்பை 

.......

நவ. 5–9 முதல் டெஸ்ட் சண்டிகர் 

நவ. 14–18 2வது டெஸ்ட் பெங்களூரு 

நவ. 25–29 3வது டெஸ்ட் நாக்பூர் காலை 

டிச. 3–7 4வது டெஸ்ட் டில்லி காலை 

* ‘டுவென்டி–20’ போட்டிகள் இரவு 7.00, ஒரு நாள் போட்டிகள் மதியம் 1.30, டெஸ்ட் போட்டிகள் காலை 9.30 மணிக்கும் துவங்கும். 

http://sports.dinamalar.com/2015/10/1443720145/dhoniindia.html

Link to comment
Share on other sites

தரம்சாலாவில் இன்று யுத்தம் ஆரம்பம் : கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள் யார் யார்?

 

தென்னாப்பிரிக்கா 72 நாள்  மிக நீண்ட இந்திய சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இன்று முதல் 20 ஓவர் போட்டிகள் ஆரம்பமாகின்றன. உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இந்த தொடரில் முக்கியமாக சில வீரர்களை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்களை பற்றிய மினி டிட்பிட்ஸ் இங்கே !

இந்திய அணி

1.  ஷிகர் தவான்

ஷிகர் தவானும் , ஸ்டெயினும் ஐ.பி.எல்லில் ஒரே அணிக்காக விளையாடுபவர்கள். 'லிமிட்டட் ஓவர்' கிரிக்கெட்டில் ஸ்டெயினின் வியூகங்கள், அவரின் மனநிலை  தவானுக்கு நன்றாகவே தெரியும். தென்னாப்பிரிக்காவுடன் இதுவரை விளையாடிய நான்கு ஒருதின இன்னிங்ஸில் இரண்டு சதம், ஒரு சதம் விளாசியிருக்கிறார் தவான்.கடந்த உலககோப்பையிலும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதிரடி சதம் எடுத்தார். தவான் புல்பார்மில் இருப்பதோடு, இந்திய மண்ணில்  போட்டிகள் நடைபெறுகிறது என்பதால் தென்ஆப்பிரிக்க பவுலர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்.

dhoni_vc1.jpg


2. அஜின்க்யா ரஹானே

அணிக்கு எப்போது, என்ன தேவையென்றாலும் எந்த கேப்டனாக இருந்தாலும் முதலில் வந்து  நிற்பது ரஹானே தான். எந்த ஆர்டரிலும் , எந்த பிட்சிலும் நன்றாக விளையாடுவார் என்பதால் ரஹானேவின் கன்சிஸ்டன்சி  இந்தியாவுக்கு பெரிய பிளஸ்.  டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள் இரண்டிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறந்த ஆவரேஜ் வைத்திருக்கும்  ஒரே வீரர்  ரஹானே மட்டுமே. பீல்டிங்கில் மிகவும் துடிப்போடு செயல்படுபவர் என்பதால் ரஹானேவை சமாளிக்கவே தனி யுக்தியை வகுத்திருக்கிறது தென் ஆப்பிரிக்க அணி.

3. ரவிச்சந்திர அஷ்வின் :-

டெஸ்ட், ஒருநாள் , டி20 என அனைத்து போட்டிகளிலும் டாப் 10 பவுலர் வரிசையில் இருக்கும் உலகின் ஒரே வீரர் சென்னைப்பையன் அஷ்வின்.. இந்திய மண்ணில் அஷ்வினின் பந்துகளை எந்தவொரு பேட்ஸ்மேனும் அடித்து நொறுக்குவது அரிதிலும் அரிதான காட்சி. ரன் வேகத்தை மட்டுப்படுத்தி,  போட்டியை இந்தியாவின் கட்டுக்குள் வைக்க கேப்டன் கூல், கோலி என இருவரும் முதலில் அழைப்பது அஷ்வினைத்தான். அம்லா, டிவில்லியர்ஸ் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக அஷ்வின் திகழுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

dhoni_vc2.jpg



4. மகேந்திர சிங் தோனி

தனது கேரியரில் கத்தி முனையில் இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் கூலாக இருப்பது தோனியின் ஸ்பெஷல். பொதுவாக இந்திய அணி எப்போதுமே கடைசி பத்து ஓவர்களில் தான் வெற்றியை கோட்டை விடும்.பினிஷிங் டச் கொடுக்க சரியான ஆள் இல்லாமல் இந்தியா தடுமாறிய போது , வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருந்த தோனி தனிப்பட்ட சாதனைகளை கருத்தில் கொள்ளாமல் ஐந்து,ஆறு,ஏழு என வெவ்வேறு நிலைகளில் அணிக்கு  தேவையான் போது களமிறங்கி வெற்றியை தேடித்தந்தவர்.  தொடக்கவீரர்கள் மற்றும் வீராட்கோலி தடுமாறிய சமயங்களில் மிடில் ஆர்டரை பலப்படுத்த நான்காவதாக கூட களமிறங்கி சிறப்பாக விளையாடுபவர் தோனி என்பதால்,  இந்த முறை தோனி  தேவைகேற்ப முன்கூட்டி களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

18 பந்தில் 60 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை இருக்கிறது, அணியின் ஒரே பேட்ஸ்மேன் தோனி மட்டுமே களத்தில் இருக்கிறார் என்றால் கூட எதிரணியினர் செம டென்ஷனாக இருப்பார்கள். அதான் தோனி.

5. குர்கீரத் சிங் :-

பஞ்சாபில் இருந்து கிளம்பியிருக்கும்  புது சிங்கம் இவர். ஐ.பிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவர் தற்போது ஆஸ்திரேலிய ஏ, வங்கதேச ஏ அணிகளுக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்ட் பெர்மாமான்ஸ் காட்டியது மட்டுமின்றி மேட்ச்வின்னராகவும் திகழ்ந்ததால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உலகத்தை திரும்பிபார்க்க வைத்திருக்கிறார்.தோனி ஆல்ரவுண்டர்களை மிகவும் விரும்புவார் என்பதால் குர்கீரத் சிங்க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு பிரகாசம்.

தென்னாபிரிக்க

1. அம்லா : -

தென்அப்பிரிக்காவின் சுவர் ஹாஷிம் அம்லா. குஜராத்தின் சூரத் நகரில் இருந்த குடும்பத்தின் வம்சாவளி தான் அம்லா. சுமார் ஆறடி உயரம் கொண்ட அம்லா தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அம்லா சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் சதமடித்து மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார். அம்லாவுக்கும் இந்தியாவுக்கு நிறைய தொடர்பு இருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டே இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் அம்லா ஆனால் அப்போது சோபிக்கவில்லை என்பதால் அணியில் இருந்து நீக்கபட்டார் பிறகு 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டபோது முதல் டெஸ்டில் மூன்றாம் நிலையில் இறங்கி 253 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார் .அப்போது தான் கிரிக்கெட்உலகின் ஒட்டு மொத்த கவனமும் அம்லாவின் மீது திரும்பியது. கடந்த ஐந்து வருடமாக அம்லாவின்  தான் நம்பர் ஒன் தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் . சுழற்பந்து வீச்சையும் அம்லா சிதறடிப்பார் என்பதால் தென்னாப்பிரிக்கா அம்லாவை மலை போல நம்பியிருக்கிறது.

2. ஏ பி டிவிலியர்ஸ் : -

ஆச்சர்யம்! சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு உலகளவில் எக்கச்சக்க ரசிகர்கள் இப்போது ஏ.பி.டிவில்லியர்ஸ்க்கு  தான். எப்பேர்பட்ட பந்துவீச்சாளராக இருந்தாலும் மைதானத்தின் எந்தவொரு மூளைக்கும் பர்பெக்டாக தனது பேட் மூலம் பந்தை அனுப்பும் வீரர்  டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸ் கடந்த இரண்டு வருடமாக கேரியரின் உச்சத்தில் இருக்கிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் டிவில்லியர்ஸ் படைத்த சாதனைகளை கண்டு அனைத்து பவுலர்களுக்குமே உள்ளூர கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது.

dhoni_vc3.jpg


தற்போதைய நிலவரப்படி டெஸ்ட் மற்றும் ஒரு தினபோட்டிகள் இரண்டிலும் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ். " என்னை சூப்பர்மேன் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள் ஆனால் அதற்கு நான் தகுதியானவனா என தெரியாது, பவுலர்கள் என்னை சூப்பர்மேனாக எல்லாம் பார்க்கமாட்டார்கள். ஒவ்வொரு போட்டியிலும் இறங்கும்போது எனக்கு நடுக்கம் இருக்கிறது. தனிநபரின் சாதனைகள் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை அணியின் வெற்றியே முக்கியம், நான் ஓய்வு பெற்ற பின்னர் வேண்டுமானால் எனது சிறந்த இன்னிங்க்ஸ் பார்த்து நான் பெருமிதம் கொள்ளலாம்"  என சமீபத்திய பேட்டி ஒன்றில் அடக்கிவாசித்திருக்கிறார் இந்த டெவில் மேன்.

3. டுமினி : -

டுமினிக்கு சமீபத்தில் தான் பெண்குழந்தை பிறந்திருக்கிறது அந்த உற்சாகத்தில் வரிசையாக  தனது குழந்தையோடு செல்பி எடுத்து  சோஷியல் நெட்வொர்க்கில் அப்லோடிக்கொண்டே இருக்கிறார். 'டாடி'  அந்தஸ்து பெற்ற பின்னர் டுமினி விளையாடுவது இந்தியாவுடன் தான். இந்திய மண் சுழலுக்கு சாதகமானது என்பதால் டுமினி பார்ட்டைம் பந்துவீச்சாளர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் டெஸ்ட், ஒன் டே, டி-20 மூன்று பார்மெட்டிலும் அணியில் இடம் கொடுத்திருக்கிறது புரோட்டீயஸ் கிரிக்கெட் வாரியம் .


4. ஸ்டெயின் : -

சந்தேகமே இல்லை ஆசிய மண்ணில் அபராமாக பந்துவீச கூடிய  உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் தான். லைன் அண்ட் லென்த்தில் துல்லியமா க பந்துவீசும் ஸ்டெயின் பந்துவீச்சை சமாளிப்பது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கடினம். தற்போதைய தென்னாப்பிரிக்க அணியில் இருக்ககூடிய,  இந்திய மண்ணை முழுமையாக அறிந்த வேகபந்துவீச்சாளர் ஸ்டெயின் தான். 2008 ஆம் ஆண்டு  இந்திய மண்ணிலேயே ஸ்டெயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெஸ்ட் போட்டியில் முதல்
இன்னிங்ஸில் வெறும் 20 ஓவரில் 76 ரன்னுக்கு  இந்தியா ஆல் அவுட்டானதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. டெஸ்ட் போட்டிகளின் உலகின்  நம்பர் ஒன் பவுலர் ஸ்டெயின் அந்த அணியில் பவுலிங் டிபார்ட்மெண்ட் கேப்டன்.

dhoni_vc4.jpg



5. ககிசோ ரபாடா :-

வங்கதேசத்துக்கு எதிராக  அறிமுகமான முதல் ஒருதினப்  போட்டியிலேயே  ஹாட்ரிக் சாதனை படைத்து ஆறு விக்கெட்டுகளை சாய்த்தவர் ககிசோ ரபாடா.  இந்திய சுற்றுபயணத்தில் மூன்று பார்மேட்டில் இருக்கும் ஒரே வேகபந்து வீச்சாளர் இவர் மட்டுமே. ஸ்டெயினுக்கு கூட இடமில்லை, வலது கை பந்துவீச்சாளரான ரபடாவுக்கு வயது 20 மட்டுமே. ரபாடா பந்துவீச்சை இதுவரை  இந்திய வீரர்கள் எதிர்கொண்டதில்லை என்பதால், இந்திய பேட்டிங்கை குலைக்கும் துருப்புசீட்டாக ரபாடாவை வைத்திருக்கிறது தென்னாபிரிக்கா.

 நம்பர்ஸ்  சீக்ரெட்ஸ்  (பாக்ஸ் மேட்டர் )


தரவரிசை  அட்டவனை :-

டெஸ்ட் :-

இந்தியா - 5 வது இடம்
தென்னாபிரிக்கா - முதல் இடம்

ஒருதின போட்டிகள்

இந்தியா - 2 வது இடம்
தென்னாபிரிக்கா - 3 வது  இடம்

டி-20

இந்தியா -  4 வது இடம்
தென்னாபிரிக்கா -  6 வது  இடம்

http://www.vikatan.com/news/article.php?aid=53164

Link to comment
Share on other sites

'டுவென்டி-20' கிரிக்கெட்: இந்திய அணி 'பேட்டிங்'
 
 

தரம்சாலா: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1355235

India 51/1 (7/20 ov)

 

Link to comment
Share on other sites

தரம்சாலாவில் ரோகித் சர்மா அபார சதம்: 200 ரன்களை நோக்கி இந்தியா!

 

ரம்சாலாவில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார்.

roh.jpg

டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி இந்திய அணியை பேட் செய்ய கேட்டுக் கொண்டது. ரோகித் சர்மாவுடன் ஷிகர் தவான் களமிறங்கினார். தவான் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து ரோகிர் சர்மாவுடன் விராட் கோலி இணைந்தார்.

இந்த ஜோடி தென்ஆப்ரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ரோகித் சர்மா 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 62 பந்துகளில் சதம் கடந்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். தற்போது இந்திய அணி 15 ஓவர்களில் 158 ரன்களுடன் விளையாடி வருகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=53181

India 199/5 (20/20 ov)

Link to comment
Share on other sites

ரோஹித் சர்மா சதம், அஸ்வின் பந்துவீச்சு வீண்: தென் ஆப்பிரிக்கா வெற்றி

 
 
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

தரம்சலாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மாவின் அதிரடி சதமும், ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார பந்துவீச்சும் விரயமாக தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஜோடிகள் ஆம்லா, அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் கடைசியில் ஏகப்பட்ட அதிர்ஷ்டத்துடன் ஜே.பி.டுமினி ஆகியோரின் ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்க வெற்றி சாத்தியமானது.

பேட்டிங்குக்கு சாதகமான ஆட்டக்களத்தில் டுபிளெஸ்ஸிஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைக்க இந்தியா ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் விராட் கோலியின் அதிரடி 43 ரன்களுடன், கடைசி பந்தை வழக்கம் போல் தோனி பவுண்டரிக்கு வெளியே சிக்சர் அடித்து முடிக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

நடுவரின் தவறான தீர்ப்புகள்:

தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு இந்திய நடுவரின் தவறான தீர்ப்புகளும் ஒரு காரணம். 77 ரன்களுக்கு விக்கெட் விழாத நிலையில் அதன் பிறகு அஸ்வின் டிவில்லியர்ஸை வீழ்த்த ஸ்ரீநாத் அரவிந்த் டுபிளெஸ்ஸிஸை வீழ்த்த, ஆம்லா புவனேஷ் குமாரின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆக 95/3 என்று ஆனது.

அப்போது ஆட்டத்தின் 13-வது ஓவரை அக்சர் படேல் வீச 5 ரன்களில் இருந்த டுமினி அக்சர் படேல் பந்தை லெக் திசையில் திருப்பி விடும் முயற்சியில் கால்காப்பில் வாங்கினார். பந்து நேராக லெக் மற்றும் மிடில் ஸ்டம்பை தாக்கியிருக்கும், ஆனால் முறையீடு எழுந்தவுடனேயே தன் நிலையை விட்டு நகர்ந்த நடுவர் நாட் அவுட் என்றார். இது துல்லியமான அவுட் என்பதே ரீப்ளேயும், வர்ணனையாளார்களும் தெரிவித்தது.

பிறகு 17-வது ஓவரில் தெ.ஆப்பிரிக்கா 156/3 என்ற நிலையில், டுமினி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ் குமாரின் அற்புதமான, அரிய யார்க்கர் ஒன்று ஸ்டம்புக்கு நேராக டுமினியின் பூட்-ஐ தாக்கியது, இதுவும் பிளம்ப். ஆனால் முறையீடு எழும்போது தன் நிலையை விட்டு அகன்று விடுவதிலேயே குறியாக இருந்த நடுவர் இந்த அவுட்டையும் மறுத்தார்.

இந்த இரண்டுமே அவுட், இரண்டுமே நாட் அவுட் என்றதால் டுமினிக்கு ஆவேசம் பிடிக்க சாத்தி எடுக்கத் தொடங்கினார். புவனேஷ் குமார் மிகவும் கோபமடைந்து வழக்கமான ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை வெறுப்பில் பயன் படுத்தினார். இந்த இரண்டு தீர்ப்புகளும் தென் ஆப்பிரிக்க வெற்றியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது.

டிவில்லியர்ஸ், ஆம்லா அபாரத் தொடக்கம்:

200 ரன்கள் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டிவில்லியர்ஸ் அபாரமாத் தொடங்கினர். புவனேஷ் குமாரின் முதல் ஓவரில் ஆம்லா 2 பவுண்டரிகளை விளாச 10 ரன்கள்.

பிறகு தனது முதல் டி20 போட்டியில் ஆடும் ஸ்ரீநாத் அரவிந்த்துக்கு அக்னிப் பரிட்சை, டிவில்லியர்ஸுக்கு வீசுவது. அதில் அரவிந்த் பந்து வீச்சு நாசம் செய்யப்பட்டது. 4-வது பந்தில் தடபுடவென இறங்கி வந்த டிவில்லியர்ஸ் மிட்விக்கெட் திசையில் முதல் சிக்சரை அடித்தார். பிறகு கடைசி பந்தை மிக அற்புதமாக பாயிண்டில் பவுண்டரி அடிக்க 14 ரன்கள் வந்தது. 3-வது ஓவரில் மீண்டும் ஆளுக்கொரு பவுண்டரி.

பிறகு மோஹித் சர்மாவை, டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகள் விளாசினார். இரண்டும் ஷார்ட் பிட்ச் பந்துகள். 5-வது ஓவர் ஸ்ரீநாத் அரவிந்த் மீண்டும் வீச அழைக்கப்பட ஆம்லா, பின்னால் சென்று அருமையான ஸ்கொயர் டிரைவி அடிக்க 4.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 50 ரன்களை எட்டினர்.

அதன் பிறகு படேல் ஓவரில் ஆம்லா ஒரு பந்தை கட் செய்ய முயன்ற போது எட்ஜ் எடுக்க தோனிக்கு மிகவும் கடினமான வாய்ப்பு, அவரால் பிடிக்க முடியவில்லை.

7 ஓவர்கள் முடிவில் 72 ரன்கள் என்று அபாரமாக ஆடி வந்த நிலையில் அஸ்வின் கொண்டு வரப்பட அவர், மிகவும் புத்திசாலித்தனமாக பந்தை மெதுவாக வீசினார். இதனால் கொஞ்சம் டிவில்லியர்ஸ், ஆம்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த ஓவரில்தான் டிவில்லியர்ஸ் டீப் ஸ்கொயர் லெக்கிற்கு பந்தை அடித்து விட்டு 2-வது ரன் ஓட புவனேஷ் குமார் பந்தை எடுத்து நேராக ரன்னர் முனைக்கு த்ரோ செய்ய ஆம்லா சில அடிகள் பின் தங்கினார், 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆம்லா ரன் அவுட் ஆனார்.

அதன் பிறகு டிவில்லியர்ஸ், அஸ்வினின் பந்தை சரியாகக் கணித்ததோடு, நம்ப முடியாத அளவுக்கு மிட்விக்கெட்டில் ஆன் டிரைவ் பவுண்டரி மூலம் அரைசதம் கண்டார். இந்த ஒரு ஷாட் டிவில்லியர்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதற்கான சாட்சியம்.

ஆனால், முதல் பந்து அடித்த அருமையான, நம்பமுடியாத ஆன் டிரைவ் கொடுத்த தெம்பில் அடுத்த பந்தை இறங்கி வந்து ஆட முயன்றார், ஆனால் அஸ்வின் அவருக்கு கடினமான லெந்தில் பிட்ச் செய்து திருப்ப டிவில்லியர்ஸ் உடம்பில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. அருமையான பந்தில் 32 பந்து 51 ரன்களுடன் டிவில்லியர்ஸ் வெளியேறினார்.

அதன் பிறகு 4 ரன்கள் எடுத்த நிலையில் டுபிளெஸ்ஸிஸ். ஸ்ரீநாத் அரவிந்த் ஷாட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்று மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 95/3 என்று இருந்தது.

டுமினி களமிறங்கி அஸ்வினிடம் திக்கித் திணறினார். உள்ளே வரும் என்று ஆடிய போது பந்து அவரது மட்டையை அபாயகரமாகக் கடந்து சென்றது. வெளியே செல்லும் என்று நினைத்த போது சறுக்கிக் கொண்டு நேராக வந்தது. டுமினியை ஆட்டிப் படைத்தார் அஸ்வின்.

ஆனால் அஸ்வின் அளவுக்கு படேல் எடுபடாததால் அவரை வாங்கு வாங்கென்று வாங்கினார் டுமினி. 15-வது ஓவருடன் அஸ்வினின் பந்து வீச்சு முடிவுக்கு வந்தது. 4 ஒவர்கள் 26 ரன்கள் ஒரு விக்கெட். ஆனால் அவர் வீசிய விதம் அதி அற்புதமானது என்பதோடு டிவில்லியர்ஸ் போன்ற திமிங்கிலங்களை வீழ்த்தும் கலையை அஸ்வின் கற்றுக் கொண்டு விட்டார் என்பதையும் அறிவுறுத்துவதாக அமைந்தது.

15 ஓவர்களில் 134/3 என்ற நிலையில் 30 பந்துகளில் வெற்றிக்கு 66 ரன்கள் தேவை. இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது.

ஆனால் அக்சர் படேல், வீசிய 16-வது ஓவரில் டுமினி அவரை 3 சிக்சர்கள் விளாசினார். வாகான லெந்தில் வீசியதோடு, ஒரு படு மட்டரகமான ஷார்ட் பிட்ச் பந்தையும் வீசினார், மூன்றுமே ஸ்டேடியத்தில் போய் விழுந்தது. அந்த ஓவரில் 22 ரன்கள் வந்ததோடு இந்தியாவின் வாய்ப்புக்கு ஆப்பு வைத்தார் டுமினி.

ஆனால் கடைசியில் 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ் குமார் ஒரே ஓவரில் 14 ரன்களை கொடுத்தார். முதல் 2 பந்துகளில் 10 ரன்கள் வந்தது. இதுவும் வாய்ப்பை முறியடித்தது. கடைசியில் ஸ்ரீநாத் அரவிந்தை ஒரு தீர்மானமான சிக்சரை அடித்தார் டுமினி, பிறகு ஒரு சிங்கிள் எடுத்து வெற்றி பெற்றார் டுமினி.

அவர் 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய பெஹார்டியன் 23 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்தியத் தரப்பில் புவனேஷ் 40 ரன்கள், ஸ்ரீநாத் அரவிந்த் 4 ஓவர்களை முடிக்காமலேயே 44 ரன்கள், அக்சர் படேல் 45 ரன்கள். அஸ்வின் மட்டுமே நேற்றைய ஆட்டத்தின் சிறந்த பவுலராகத் திகழ்ந்தார்.

ரோஹித் சர்மாவின் அதிரடி சதமும், விராட் கோலியுடன் சதக்கூட்டணியும்:

இந்தியாவின் பலவீனம் ஷார்ட் பிட்ச் பந்துகள் என்று தவறான புரிதலில் ரபாதா, கிறிஸ் மோரிஸ், மெர்சண்ட் டி லாங்கே அத்தகைய பந்துகளை வாரி வழங்க ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அடித்து நொறுக்கினர். ஷிகர் தவண் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 13 ஓவர்களில் 138 ரன்கள் என்ற சாதனை சதக்கூட்டணி அமைத்தனர். 27 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை பூர்த்தி செய்த முதல் இந்திய வீரரானார். இவர் இம்ரான் தாஹிரை டீப் மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்து 1000 ரன்களை கடந்தார்.

மெர்சண்ட் டி லாங்கே 24 ரன்களில் ரோஹித் இருந்த போது தனது பந்துவீச்சில் தன்னிடம் வந்த கேட்சை விட்டார். அதன் பலன் அனைத்து வடிவங்களிலும் ரோஹித் சர்மா சதம் கண்டதே. 62 பந்துகளில் ரோஹித் சர்மா சதம் கண்டார். ரெய்னாவுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் சதம் கண்டார் ரோஹித் சர்மா.

66 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து அபாட்டிடம் வீழ்ந்தார். கோலியையும் அபாட் முன்னதாக வீழ்த்தினார். இருவரும் புல்ஷாட்டை சரியாக ஆடாமல் கேட்ச் கொடுத்தனர். ஒரே ஓவரில் இருவரும் அவுட் ஆகி வெளியேறினர். தோனி கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கி 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இந்தியா 199 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கான இலக்கு இது என்றே அப்போது நினைத்தனர். ஆனால் டிவில்லியர்ஸ், ஆம்லா, டுமினி, நடுவர் வேறு மாதிரியாக நினைத்து விட்டனர். ஆட்ட நாயகனாக டுமினி தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/ரோஹித்-சர்மா-சதம்-அஸ்வின்-பந்துவீச்சு-வீண்-தென்-ஆப்பிரிக்கா-வெற்றி/article7718856.ece

Link to comment
Share on other sites

நடுவர் தீர்ப்புகளுடன், பந்து வீச்சும் தோல்விக்குக் காரணம்: தோனி

 
கேப்டன் தோனி. | கோப்புப் படம்.
கேப்டன் தோனி. | கோப்புப் படம்.

தரம்சலாவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கான 200 ரன்களை விரட்டி வென்றது தென் ஆப்பிரிக்கா. இந்த எதிர்பாராத தோல்வி குறித்து தோனி தன் கருத்துகளை பரிசளிப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:

வெற்றிக்கு நெருக்கமாக வந்தோம்... ஆனால் பனிப்பொழிவு சிறிது சிக்கலை ஏற்படுத்தியது. சில தருணங்களில் நாங்கள் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தோம்.

இத்தகைய ஓவர்கள் பவுலர்களுக்கு நெருக்கடியான தருணம், சில தீர்ப்புகள் எங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததும் அழுத்தத்தை அதிகரித்தது. இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

நான் கடைசி ஓவரை ரெய்னாவுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் இங்குள்ள சூழ்நிலைகள் அதற்குச் சாதகமாக இல்லை என்று நினைத்தேன். வலது, இடது கை கை பேட்ஸ்மென் இருவருக்குமே அக்சர் நன்றாக வீசினார்.

இங்கு பந்தை வீசும் முறையை செயல்படுத்துவது முக்கியம், ஏனெனில் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமானது, அவுட் ஃபீல்டில் பந்துகள் பறக்கின்றன. எனவே பந்தை எங்கு பிட்ச் செய்வது என்பதை செயல்படுத்தும் விதம் இங்கு முக்கியம்.

இத்தகைய பிட்ச்களில் எதிரணி பேட்ஸ்மென்களை தவறான ஷாட்களை ஆட வைக்க வேண்டும். அத்தகைய தவறான ஷாட்களுக்கு அவர்கள் வசப்படுமாறு வீச வேண்டும். இதில்தான் விக்கெட்டுகள் விழ சாத்தியம் அதிகம்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/india/நடுவர்-தீர்ப்புகளுடன்-பந்து-வீச்சும்-தோல்விக்குக்-காரணம்-தோனி/article7718929.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

அதிவேக டி20 1,000 ரன்கள் கோலியின் சாதனை; அதிக சிக்சர்கள்: சில சுவையான தகவல்கள்

 
 
138 ரன்கள் சேர்ந்து எடுத்து புதிய இந்திய டி20 சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி.
138 ரன்கள் சேர்ந்து எடுத்து புதிய இந்திய டி20 சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி.

தரம்சலாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைய அந்த ஆட்டத்தில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

தரம்சலா போட்டியின் புள்ளி விவரங்கள் சில...

டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரரானார் விராட் கோலி. மேலும் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியவர் என்ற சாதனையையும் கோலி நிகழ்த்தினார். 27 இன்னிங்ஸ்களில் இவர் இந்த ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்பாக 1000 ரன்களை டி20-யில் எட்டிய வீரர்களைக் காட்டிலும் 5 இன்னிங்ஸ்கள் குறைவாக விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டி சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், கெவின் பீட்டர்சன் டி20 1000 ரன்களை 32 இன்னிங்ஸ்களில் கடந்தனர். இந்திய வீரர்களில் டி20-யில் 1000 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மென் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மாவின் டி20 சராசரி 57.40. 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் 2 அரைசதங்களுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 287 ரன்களை எடுத்துள்ளார். ஒரு எதிரணிக்கு எதிராக குறைந்தது 150 ரன்கள் எடுத்த வீரர்களை எடுத்துக் கொண்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மாதான் அதிக சராசரி வைத்துள்ள வீரராகிறார்.

2007 உலகக் கோப்பைக்கு பிறகு டி20-யில் 200 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக துரத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010 டி20 உலகக் கோப்பையில் ரெய்னா எடுத்த சதத்துக்குப் பிறகு டி20 சதம் கண்ட 2-வது இந்திய வீரரானார் ரோஹித் சர்மா.

டி20 கிரிக்கெட்டில் 8 அரைசதங்கள் கண்ட டுமினி, நேற்று 28 பந்துகளில் அரைசதம் கண்டது அவரது அதிவேக அரைசதமாகும்.

2007 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் சேவாக்-கம்பீர் ஜோடி 136 ரன்களை சேர்ந்து எடுத்த பிறகு தற்போது டி20-யில் அதிக ரன்களை ஜோடி சேர்ந்து குவித்த ஜோடியானது விராட் கோலி-ரோஹித் சர்மா ஜோடி. இவர்கள் நேற்று 138 ரன்களை எடுத்து புதிய இந்திய சாதனை நிகழ்த்தினர்.

இந்திய அணியின் 199 ரன்கள் டி20 கிரிக்கெட்டில் 4-வது அதிகபட்ச ஸ்கோராகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010 டி20 உலகக் கோப்பையில் எடுத்த 186 ரன்களை நேற்று இந்தியா கடந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சில் இந்திய அணியினர் நேற்று 11 சிக்சர்களை அடித்தனர். டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த அணியாகத் திகழ்கிறது இந்தியா. இதற்கு முன்னதாக மே.இ.தீவுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 12 சிச்கர்களை ஒரு இன்னிங்ஸில் அடித்து சாதனையை வைத்துள்ளனர்.

பவர் பிளேயில் நேற்று தென் ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை 2-வது மோசமான பவர் பிளே ரன் வழங்குதலாகும் இது, இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்களை பவர் பிளேயில் இந்தியா விட்டுக் கொடுத்தனர்.

நேற்றைய போட்டியில் மொத்தம் 20 சிக்சர்கள். இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இதுவே அதிகம்.

டுமினி நேற்று 7 சிக்சர்களை விளாசினார். இந்தியாவுக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேனானார் டுமினி.

http://tamil.thehindu.com/sports/அதிவேக-டி20-1000-ரன்கள்-கோலியின்-சாதனை-அதிக-சிக்சர்கள்-சில-சுவையான-தகவல்கள்/article7719570.ece

Link to comment
Share on other sites

அமித் மிஸ்ராவை ஏன் தேர்வு செய்யவில்லை?- கேப்டன் தோனி விளக்கம்

 
 
கேப்டன் தோனி. | படம்: பிடிஐ.
கேப்டன் தோனி. | படம்: பிடிஐ.

அக்சர் படேலின் ஒரு ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றி தீர்மானிக்கப்பட்டதையடுத்து அவருக்குப் பதிலாக அமித் மிஸ்ராவை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்ற கேள்வி எழுந்ததையடுத்து தோனி விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “மிஸ்ராவை குறிப்பிட்டு பேசும் போது, நாம் டாப் 7 வீரர்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும், அதில் அங்கு அவர் எங்கு பொருந்துவார் என்பது முக்கியம்.

சரியான அணிச்சேர்க்கை என்றால் 6 பேட்ஸ்மென்கள், 7-வது வீரர் கொஞ்சம் பேட்டிங் ஆட வேண்டும் அவ்வளவே. ஏனெனில் ரன்கள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது.

மேலும் 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறோம், இவர்கள் நன்றாக வீசி வருகின்றனர். ஆகவே யாரோ ஒரு ஸ்பின்னரை நீக்கி விட்டு மிஸ்ராவை அணியில் சேர்ப்பதற்கான பலமான காரணங்கள் இருப்பதாக நான் கருதவில்லை.

வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டுமே என்பதால் ஆட்டம் நம் கையை விட்டு போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் அந்த குறிப்பிட்ட ஒரு ஓவர் நீங்கலாக அக்சர் நன்றாகத்தான் வீசினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இது நிகழக்கூடியதே. தரமான பேட்ஸ்மேன் ஒருவர் செட் ஆகிவிட்டார் என்றால் நல்ல பவுலர்கள் கூட ரன்களைக் கொடுப்பது சகஜமே. அக்சர் தனது அளவு மற்றும் திசையில் சீரான முறையில் வீசினார். அவர் அதிகம் தளர்வான பந்துகளை போடுபவர் அல்ல.

நல்ல பேட்ஸ்மென்கள் பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் செட்டில் ஆகிவிடும் நிலையில் அவர் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அந்த ஓரு ஓவர் நீங்கலாக அக்சர் பந்து வீச்சு குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அவர் பல்வேறு விதமான பந்துகளை டி20-யில் வீசுகிறார். ஆனால் பிட்ச் அவருக்கு சாதகமாக இல்லை.

பனிப்பொழிவு இருந்ததால் 3 ஸ்பின்னர்களை சேர்க்க முடியாது. மேலும் மைதானம் பெரிய மைதானமும் அல்ல. ஆகவே கலவையான விஷயங்கள் தீர்மானிக்கின்றன, நாம் கண்ணை மூடிக் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சரியல்ல எனவே ஸ்பின்னர்களை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூற முடியாது.

சில நாட்களில் நமது பேட்ஸ்மென்கள் சரியாக ஆடவில்லை எனும் போது, நீங்கள் கூறுவீர்கள் நாம் 7 பவுலர்களுடன் ஆட வேண்டும் என்று. நீங்கள் நிறைய விஷயங்களைப் பார்க்க வேண்டும், பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் பொறுத்தே சிறந்த 11 வீரர்களைத் தேர்வு செய்ய முடியும்” இவ்வாறு கூறினார் தோனி.

தோனி விளக்கம் சரியானதா?

அக்சர் படேல் பந்துவீச்சில் டுமினிக்கு ஒரு எல்.பி. கொடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அக்சர் படேல் வீசிய அந்த ஓவரில் ஃபுல் லெந்த் மற்றும் ஒரு மட்டரகமான ஷார்ட் பிட்ச் பந்தை வீசி 3-ம் சிக்சராகப் பறந்தது.

அதிகம் தளர்வான பந்துகளை அக்சர் வீசுபவர் அல்ல என்ற தோனியின் கூற்றை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டாலும், 3 பந்துகள் தொடர்ச்சியாக மோசமாக ஒரு சர்வதேச அளவிலான பவுலர் வீசுவது தகாது.

அஸ்வினிடமிருந்து அக்சர் பாடம் கற்கவில்லை. அஸ்வின் பந்துகளை வழக்கமாக வீசுவதை விட மெதுவே வீசினார். இதனால்தான் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தார், டுமினிக்கு அஸ்வின் பந்து வீச்சு இன்னும் கூட புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அக்சர் வீசியது மிகவும் பிளாட்டான பந்து வீச்சு. பேட்ஸ்மென்களின் ரிப்ளெக்சுக்கு ஏற்ப அவர் பந்து வீசினார். ஆனால் அஸ்வின் பேட்ஸ்மென்களின் ரிப்ளெக்ஸை சற்றே மந்தப் படுத்தினார்.

அமித் மிஸ்ராவை தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல தெரிவே. ஆனால் ஒரு போட்டியை வைத்து அக்சர் படேலை முடிவெடுத்து விடக்கூடாது என்பதே தோனியின் நியாயமான வாதமாக தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/அமித்-மிஸ்ராவை-ஏன்-தேர்வு-செய்யவில்லை-கேப்டன்-தோனி-விளக்கம்/article7720602.ece

Link to comment
Share on other sites

இரண்டாவது டி20 ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவை பழிதீர்க்குமா இந்தியா?

 
  • பயிற்சியின் நடுவே விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருக்கும் கேப்டன் தோனி.
    பயிற்சியின் நடுவே விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருக்கும் கேப்டன் தோனி.
  • தென் ஆப்பிரிக்க வீரர்கள் டூ பிளெஸ்ஸி, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி ஆகியோர் கட்டாக்கில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்
    தென் ஆப்பிரிக்க வீரர்கள் டூ பிளெஸ்ஸி, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி ஆகியோர் கட்டாக்கில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் முனைப்புடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. இதில் தர்மசாலாவில் நடைபெற்ற முதலாவது டி20 விளையாட்டுப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளிடையேயான 2-வது டி20 போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

தோனிக்கு நெருக்கடி

இந்திய அணியைப் பொறுத்த வரை முதல் போட்டியில் தோற்ற தால் இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

குறிப்பாக 3 மாத ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை வழி நடத்திச் செல்லும் கேப்டன் தோனி, இன்றைய போட்டியில் வென்று தனது ஆற்றலை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறார். ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத்தந்த கோலி யை டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கும் கேப்டனாக்க வேண்டும் என்று சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். இன்றைய போட்டியில் இந்தியா தோற்கும் பட்சத்தில் தோனியின் கேப்டன் பதவிக்கு நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முதல் போட்டி நடந்த தர்மசாலா கிரிக்கெட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டி நடக்கும் பாராபதி கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் பலமான அணியாக கருதப்படும் இந்திய அணிக்கு இது சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இன்றைய போட்டி குறித்து நேற்று கட்டாக்கில் நிருபர்களிடம் பேசிய இந்திய வீரர் ரோஹித் சர்மா, “முந்தைய போட்டியில் இருந்து நாங்கள் சில விஷயங் களை கற்றுக்கொண்டோம். பேட்டிங்கிலும், பந்துவீச் சிலும் நாங்கள் சில விஷயங்களைச் சரி செய்ய வேண்டியுள்ளது. கட்டாக் கில் நடைபெறவுள்ள போட்டியில் நாங்கள் வலுவாக திரும்பி வருவோம்” என்றார்.

உற்சாகத்தில் தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் வென்ற உற்சாகத்துடன் அந்த அணி இன்றைய போட்டியில் களம் இறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸி, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆகியோர் ஐபிஎல் போட்டிகளின்போது இந்திய மைதானங்களில் ஆடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். அந்த அனுபவம் தென் ஆப்பிரிக்க அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜே.பி.டுமினி, பெஹார்டியன் ஆகியோர் நல்ல பார்மில் இருப் பதும் அந்த அணியை உற்சாகப் படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது.

இந்தியா:

மேகந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நாத் அரவிந்த், அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவன், ஹர்பஜன் சிங், விராட் கோலி, புவேனஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, அக்‌ஷர் படேல், அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா.

தென் ஆப்பிரிக்கா:

டூ பிளெஸ்ஸி (கேப்டன்), கைல் அபாட், பர்ஹான் பெஹார்டியன், குயின்டன் டி காக் (விக்ெகட் கீப்பர்), மெர்ச்சன்ட் டி லேஞ்சி, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர்,

எட்டி லீய், டேவிட் மில்லர், அல்பி மோர்கல், கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, கயாஸோண்டோ.

இதுவரை...

இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை 9 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 6 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மழையால் ஆட்டம் பாதிக்குமா?

டி20 போட்டி நடக்கும் கட்டாக் நகரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அங்கு மேலும் 2 நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படுேமா என்ற கவலை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டி

போட்டி நேரம்: இரவு 7 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

http://tamil.thehindu.com/sports/இரண்டாவது-டி20-ஆட்டம்-தென்-ஆப்பிரிக்காவை-பழிதீர்க்குமா-இந்தியா/article7725787.ece

Link to comment
Share on other sites

முதலில் துடுப்பெடுத்து ஆடிய இந்தியா 17.2 ஓவரில் 92 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்களையும் இழந்துள்ளது.

Link to comment
Share on other sites

டுவென்டி-20 கிரிக்கெட்: ரசிகர்கள் ரகளையால் போட்டி நிறுத்தம்
 
 

கட்டாக்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா அணி 'பவுலிங்' தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 17.2 ஓவரில் 92 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. இதையடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு 93 ரன்கள் என்ற சுலப இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் 'டுவென்டி-20' கிரிக்கெட்டில், இந்திய அணி, தனது இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. தொடர்ந்து களமிறங்கியுள்ள தென் ஆப்ரிக்கா அணி12 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இடையில் ரசிகர்கள் ஆவேசமடைந்து மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்தனர். இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டி துவங்கிய பின் ஒரு ஓவர் வீசப்பட்ட நிலையில் ஆவேசம் குறையாத ரசிகர்கள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் மீண்டும் மைதானத்திற்கு வீச உடனடியாக வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1357484

Link to comment
Share on other sites

இந்தியா மோசமான பேட்டிங்: ரசிகர்கள் ரகளை; டி20 தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

 
  • மைதானத்தில் ரசிகர்கள் இந்திய அணியை எதிர்த்து பாட்டில் வீச்சில் ஈடுபட ஆட்டம் நிற்த்தப்பட்ட போது மைதானத்தில் அமர்ந்திருந்த இந்திய வீரர்கள். | படம்: கே.ஆர்.தீபக்.
    மைதானத்தில் ரசிகர்கள் இந்திய அணியை எதிர்த்து பாட்டில் வீச்சில் ஈடுபட ஆட்டம் நிற்த்தப்பட்ட போது மைதானத்தில் அமர்ந்திருந்த இந்திய வீரர்கள். | படம்: கே.ஆர்.தீபக்.
  • மைதானத்தினுள் பாட்டில்களை விட்டெறிந்த ரசிகர்கள். | படம்: பிடிஐ.
    மைதானத்தினுள் பாட்டில்களை விட்டெறிந்த ரசிகர்கள். | படம்: பிடிஐ.

கட்டாக் டி20 போட்டியில் மோசமாக பேட் செய்து 92 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் டி20 தொடரை இழந்தது. ரசிகர்கள் ஆவேசமடைந்து மைதானத்தில் பாட்டில்களை விட்டெறிந்தனர்.

முதல் டி20 போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கட்டாக் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக விளையாட தோல்வியடைந்து தொடரையும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இழந்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் 92 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 96/4 என்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்று முன்னிலை பெற்றுவிட்டது.

ரசிகர்கள் பாட்டில் வீச்சு: தடங்கலுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்திய இன்னிங்ஸ் சோகமாக 92 ரன்களில் முடிந்ததையடுத்து மைதானத்தில் ரசிகர்கள் ஆவேசமடைந்து பாட்டில்களை மைதானத்துக்குள் விட்டெறிந்தனர்.

ஆனால் நிலைமை சற்றே சரியாக தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தொடங்கப்பட்டது. அஸ்வின் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அஸ்வின் அபாரப் பந்துவீச்சு: ரசிகர்கள் பாட்டில் வீச்சினால் நிறுத்தப் பட்ட ஆட்டம்

93 ரன்கள் வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸை தொடங்கியவுடன் குமார் முதல் ஓவரை வீச 2-வது ஓவர் அஸ்வின் வந்தார், 2 ரன்கள் எடுத்த ஆம்லாவை வீழ்த்தினார், லெக் ஸ்லிப்பில் ரோஹித் சர்மா தட்டித் தட்டி கேட்ச் பிடித்தார்.

டுபிளெஸ்ஸிஸ் அஸ்வினை அடித்து ஆடத் தொடங்கினார், மேலேறி வந்து மிட் ஆஃபில் ஒரு சிக்சரும், பவுண்டரியும் அடித்து 16 ரன்களில் இருந்த போது அஸ்வினின் இதே ஓவரில் மீண்டும் ஒரு முறை மேலேறி வந்து ஆட முயன்றார், பந்தை கொஞ்சம் மெதுவாக வீச சரியாக சிக்கவில்லை மோஹித் சர்மா அதே மிட் ஆஃப் திசையில் பின்னால் ஓடி அருமையாக கேட்ச் பிடித்தார்.

மீண்டும் டிவில்லியர்ஸை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது ஒதுங்கி கொண்டு ஆட முயன்றார் ஆனால் பந்து மட்டையைக் கடந்து ஆப் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. இம்முறையும் பந்தை கொஞ்சம் இழுத்து மெதுவாக ரிலீஸ் செய்தார் அஸ்வின், ஏமாந்தார் டிவில்லியர்ஸ்.

அஸ்வின் 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து விழுந்த 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டுமினி 19 ரன்களுடனும், பெஹார்டியன் 8 ரன்களுடனும் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது களத்தில் இருந்தனர்.

அஸ்வின் ஸ்பெல் முடிந்தவுடன் மீண்டும் ரசிகர்கள் பாட்டில் வீச்சில் ஈடுபட்டனர். அதாவது 11 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 64/3 என்று இருந்த போது மேலும் பாட்டில்கள் மைதானத்துக்குள் விட்டெறியப்பட ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பிறகு நிலைமை கட்டுக்குள் வர 10 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா மேலும் 6 ரன்களைச் சேர்த்து 70/3 என்று 13-வது ஓவரில் இருந்த போது ரசிகர்களின் ஒருபகுதியினர் மீண்டும் பாட்டில் வீச்சில் ஈடுபட வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் டக்வொர்த் லூயிஸ் கணக்கின் படி 13 ஓவர்களில் தேவைப்படும் 55 ரன்களைக் காட்டிலும் அதிகமாக இருந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதாகவே பொருள். ஆனால், சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அப்போது பெஹார்டியன் 12 ரன்கள் எடுத்து அக்சர் படேலின் ஆர்ம் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார். டேவிட் மில்லர் களமிறங்கி அக்சர் படேலை மிகப்பெரிய சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். 18-வது ஓவரின் முதல் பந்தை ரெய்னா வீச டுமினி பவுண்டரி அடித்து டி20 தொடர் வெற்றியைச் சாதித்தார். டுமினி 30 ரன்களுடனும், டேவிட் மில்லர் 10 ரன்களுடனும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

எந்த விதமான சீரியசான அணுகுமுறையுமற்ற பேட்டிங்:

டாஸ் வென்ற டுபிளெஸிஸ் இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். தொடக்கத்தில் அபாட்டும், இம்ரான் தாஹிரும் வீசினர், ஆனால் இம்ரான் தாஹிர் ஒரு ஓவர் வீசிய பிறகு நிறுத்தப்பட்டார்.

முதல் 4 ஓவர்களில் 28 ரன்கள் என்ற சுமாரான தொடக்கம் பெற்றது இந்திய அணி. இந்நிலையில் 4-வது ஓவரில் 10 ரன்களுக்கும் மேல் வந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் வீசிய நேர் பந்தை ஷிகர் தவண் பிளிக் செய்ய முயன்று பந்தை விட கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். அவர் 11 ரன்களில் அவுட்.

அதன் பிறகு நடந்தெதெல்லாம் இந்திய அணியினர் மறக்க வேண்டியது. விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் பந்தை டீப் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு 2-வது ரன்னுக்காக் பேட்டிங் முனையை நோக்கி ஓடினார், ஆனால் அங்கு கிறிஸ் மோரிஸ் அபாரமாக ஓடி வந்து பந்தை எடுத்து டிவில்லியர்ஸுக்கு அருமையாக த்ரோ அடிக்க கோலி சில அடிகள் பின் தங்கி ரன் அவுட் ஆனார். அருமையான பீல்டிங் அது.

கடந்த போட்டியின் சத நாயகன் ரோஹித் சர்மா 22 ரன்கள் எடுத்து பாயிண்ட் திசையில் தட்டி விட்டு மில்லரின் கை பலத்தை சோதிக்குமாறு ரன் ஓடினார், பவுலர் முனையில் மில்லரின் த்ரோ நேராக ஸ்டம்பைத் தாக்கியது ரோஹித் ரன் அவுட் ஆனார். மற்றொரு அருமையான பீல்டிங். பின்னங்காலில் சென்று ஆடிவிட்டு குவிக் சிங்கிள் ஓடுவது அவ்வளவு சுலபமல்ல, அதுவும் மில்லர் போன்ற பீல்டருக்கு எதிராக ரோஹித் சர்மாவின் மோசமான முடிவாக இது அமைந்தது.

ராயுடுவின் வேடிக்கையான அவுட்:

9-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ரபாதா பந்து வீச வந்தார். அப்போது ரன் கணக்கைத் தொடங்காத அம்பாத்தி ராயுடு அல்வா போல் வந்த புல்டாஸில் பீட் ஆகி பவுல்டு ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் இப்படி அவுட் ஆவதை நினைத்துப் பார்க்க முடியாது, ரபாதாவும் இனி அப்படியோரு அல்வா பந்தை வீசப்போவதுமில்லை. ஒரு முறை லஷ்மண் ஒருநாள் போட்டியில் ஷோயப் அக்தரிடம் இப்படி புல்டாஸில் பவுல்டு ஆனார். ஆனால் அது 150 கிமீ வேகம் கொண்ட புல்டாஸ், பந்து வரும்போது கண நேரத்தில் லஷ்மண் பந்தை பார்வையிலிருந்து இழந்தார், ஆனால் இது சாதாரணமான ஒரு புல்டாஸ். இதில் பவுல்டு ஆகியதன் மூலம் ராயுடு தனது இடத்தை இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மளமள விக்கெட்டுகள்:

தோனியும், ரெய்னாவும் 45/4 என்பதிலிருந்து தட்டுத் தடுமாறி 67 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தினார்கள். அப்போது 5 ரன்கள் எடுத்த தோனி, தனது சென்னை சூப்பர் கிங்ஸ் சகாவான ஆல்பி மோர்கெல் வீசிய வெளியே சென்ற பந்தை சொத்தையாக கட் செய்ய பந்து எட்ஜ் எடுத்து டிவில்லியர்ஸின் அருமையான கேட்ச் ஆனது.

சுரேஷ் ரெய்னா 22 ரன்கள் எடுத்து படுமோசமாக ஆட்டமிழந்தார். இம்ரான் தாஹிர் வீசிய கூக்ளியை, டிரைவுக்கான பந்தாக அது இல்லாதது தெரியாமல் டிரைவ் ஆட அது கவரில் ஆம்லா கையில் போய் உட்கார்ந்தது. இவ்வளவு அனுபவமிக்க ரெய்னா பந்தை கணிக்க முடியாமல், தரையோடும் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது பார்க்க வேதனையளித்தது.

அடுத்த பந்தே மீண்டும் கூக்ளியாக ஹர்பஜன் சிங் பவுல்டு ஆனார். ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார் இம்ரான் தாஹிர், ஆனால் எடுக்க முடியவில்லை. 9 ரன்கள் எடுத்த அக்சர் படேல் 16-வது ஓவரின் 4-வது பந்தில் மோர்கெல் பந்தை பிளிக் செய்து ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். புவனேஷ் குமார் ரன் எடுக்காமல் அதே ஓவரில் மோர்கெலின் நேர் பந்தை கோட்டை விட்டு பவுல்டு ஆனார். அஸ்வின் 11 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியாக மோரிஸ் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று பவுல்டு ஆனார். 17.2 ஓவர்களில் இந்தியா 92 ரன்களுக்குச் சுருண்டது.

ஆல்பி மோர்கெல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மோரிஸ், தாஹிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மொத்தம் 104 பந்துகள் விளையாடிய இந்திய அணி அதில் 50 பந்துகளில் ரன் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ரசிகர்கள் ரகளை, மோசமான பேட்டிங் என்று இந்தியாவுக்கு மறக்க வேண்டிய டி20 போட்டியாக இது அமைந்தது.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-மோசமான-பேட்டிங்-ரசிகர்கள்-ரகளை-டி20-தொடரை-வென்றது-தென்-ஆப்பிரிக்கா/article7727242.ece

Link to comment
Share on other sites

'இதுதான் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்!' - இந்திய ரசிகர்களுக்கு டுப்லெசி கண்டனம்

 

ட்டாக் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதற்காக தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுப்லெசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tup.jpg

இது குறித்து அவர் கூறுகையில், '' கடந்த 5 ஆண்டு காலமாக இந்தியாவில் நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இது போன்ற ஒரு சம்பவத்தை கண்டதில்லை. இங்கே போட்டிக்காகத்தான் வந்துள்ளோம். சிறந்த அணி வெற்றி பெறுகிறது. இன்னும் 5 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இது போன்ற இன்னொரு சம்பவத்தை நான் பார்க்க விரும்பவில்லை. இந்த சுற்றுப்பயணத்தில் இதுதான் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் '' என்றார்.

இந்திய கேப்டன் தோனி, '' விசாகப்பட்டினத்தில் ஒரு முறை இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. அப்போதும் ரசிகர்கள் பாட்டில்களை வீசி தகராறில் ஈடுபட்டனர். அதனால் இது போன்ற சம்பவங்களை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஒடிசா மாநில காவல்துறையினரை இந்த சம்பவத்திற்காக குறை கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53328

Link to comment
Share on other sites

நாங்கள் சரியாக விளையாடாத போது இப்படி நடப்பதுண்டு: ரசிகர்கள் ஆவேசம் பற்றி தோனி

 
ஆட்டம் முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டன் டுபிளெஸ்ஸிஸ், தோனியுடன் பேசும் காட்சி. | படம்: ஏ.எப்.பி.
ஆட்டம் முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் டி20 கேப்டன் டுபிளெஸ்ஸிஸ், தோனியுடன் பேசும் காட்சி. | படம்: ஏ.எப்.பி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்ததையடுத்து மைதானத்தில் இந்திய ரசிகர்கள் பாட்டில்களை விட்டெறிந்தனர். இதனால் சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.

இது குறித்து ஆட்டம் முடிந்த பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் வீரர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. ரசிகர்களில் பலம் வாய்ந்த சிலரின் த்ரோவினால் வீசிய பாட்டில்கள் எல்லைக் கோடு வரை வந்து விழுந்தது.

எனவே வீரர்கள் மைதானத்தை விட்டு சென்று விடுவது நல்லது என்று நடுவர்கள் நினைத்தனர். ரசிகர்களின் இம்மாதிரியான செயல்பாடுகள், சரியாக விளையாட போது உருவாவதே. நாங்கள் சரியாக விளையாடவில்லை எனவே இதுமாதிரியான செயல்கள் நடைபெறுகின்றன. முதல் பாட்டில்தான் பிரச்சினை. அடுத்தடுத்த பாட்டில் வீச்சு விளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக வீசப்பட்டதே. அதில் நாம் கூர்ந்து பார்க்க எதுவுமில்லை.

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் நாம் சுலபமாக வென்றோம், அப்போதும் கூட நிறைய பாட்டில்கள் பறந்தன. எப்போதுமே முதல் பாட்டில் வந்து விழுந்தால் போதும் தொடர்ந்து அது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிடும். ஒருவர் செய்தால் அதனை மற்றவர்களும் பின்பற்றும் பொழுதுபோக்கு விவகாரமாகவே நான் இதனைப் பார்க்கிறேன், இதில் சீரியசாக எடுத்து கொள்ள எதுவுமில்லை” என்றார் தோனி.

தோல்வி பற்றி பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:

நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவில்லை. பேட்டிங்கில் முதலில் ரன் அவுட் விவகாரத்தை கவனிக்க வேண்டும். மேலும் விக்கெட்டை கொத்தாக இழப்பது, இதில் இன்னமும் நாம் முன்னேறவில்லை. மொத்தத்தில் பேட்டிங் நன்றாகவே இல்லை. எங்கு தவறு நிகழ்ந்தது என்பதை கவனித்து விவாதிக்க வேண்டும்.

இது போன்று ஆடுவது அவ்வப்போது நிகழ்வதுதான், ஆனால் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியுறுவது எப்படி? என்பதை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும், ரன்களுக்காக ஓடும் போது அழைப்பு விடுப்பதில் இன்னமும் முன்னேற்றம் தேவை.

சில பீல்டர்களிடம் நாம் கூடுதலாக ஒரு ரன் எடுக்க வாய்ப்பிருப்பதாக நினைப்போம் ஆனால் பந்து நாம் நினைப்பதை விட அவரிடம் வேகமாகச் சென்றடையும். 1.8, 1.9 ரன்களை 2-ஆக மாற்றலாம் ஆனால் 1.7-ஐ 2 ரன்களாக மாற்ற முடியாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பவுலிங் சேர்க்கை பற்றி அதிகம் கூற முடியவில்லை, காரணம் ரன்களை பெரிய அளவில் எடுக்காததே. ஆனால் ஒன்று மட்டும் கூற முடியும் ஸ்பின்னர்கள் சிறப்பாக வீசுகின்றனர். வரும் ஆட்டங்களில் பிற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது.

அமித் மிஸ்ரா நன்றாக வீசி வருகிறார். ஆனால் இடது கை வீரர்கள் உள்ளே வரும் பந்துகளை சவுகரியமாக ஆடுவார்கள், அதனால்தான் 2 ஆஃப் ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம்.

தனது பேட்டிங் குறித்து...

நிறைய முறை நான் பேட்டிங் ஆட செல்லும் போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் 16-வது அல்லது 17-வது ஓவராக இருக்கிறது, அல்லது 4 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 5 அல்லது 6-வது ஓவரில் களமிறங்க நேரிடுகிறது. எனவே விக்கெட்டுகள் விரைவில் விழும்போது நான் மூளையைப் பயன்படுத்தியே ஆடுவேன். சரி, 130 ரன்கள் வரை கொண்டு வந்தால் நல்லது என்று ஆடுவேன். பின்னால் பெரிய ஷாட்களை ஆடுவேன். முதலில் சற்று மெதுவாக ஆடுவேன்.

ஆனால் இனி இந்த டி20 கிரிக்கெட்டில் வந்தது வரட்டும் என்று இறங்கியவுடனேயே அடிக்க வேண்டியதுதான் போலிருக்கிறது. ஏனெனில் டி20 கிரிக்கெட் என்பது அதிக ரன்கள் சேர்ப்பது பற்றியது.

இது மிகவும் குறுகிய வடிவம், இங்கு நான் தேவைக்கு அதிகமாக சிந்தித்து செயல்படுவதாக உணர்கிறேன், நான் சுதந்திரமாக ஆட வேண்டிய வடிவம் டி20, ஆனால் ஒருநாள் போட்டிகளில் நான் இப்போடு எப்படி ஆடுகிறேனோ அதையே தொடர்வதுதான் நல்லது என்று கருதுகிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/நாங்கள்-சரியாக-விளையாடாத-போது-இப்படி-நடப்பதுண்டு-ரசிகர்கள்-ஆவேசம்-பற்றி-தோனி/article7730478.ece?homepage=true

Link to comment
Share on other sites

டி20-யில் டிவில்லியர்ஸை அதிக முறை வீழ்த்திய அஸ்வின்; மேலும் சில தகவல்கள்

 
டிவில்லியர்ஸை வீழ்த்திய அஸ்வின். | படம்: ஏ.எஃப்.பி.
டிவில்லியர்ஸை வீழ்த்திய அஸ்வின். | படம்: ஏ.எஃப்.பி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை இந்தியா இழந்தாலும், அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு டிவில்லியர்ஸை மீண்டும் வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை இந்தியா இழந்தாலும், ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கும் சில புள்ளி விவரங்கள் இருக்கவே செய்கின்றன.

அதில் குறிப்பாக, தனது பந்துவீச்சை பெரிய திமிங்கிலங்களை அனாயசமாக வேட்டையாடும் அளவுக்கு அசாத்தியமாக மேம்படுத்திய அஸ்வின் பந்து வீச்சு பற்றியது.

இலங்கை தொடரில் சங்கக்காராவை அனைத்து இன்னிங்ஸ்களிலும் வீழ்த்தினார், அதே போல் கிறிஸ் கெய்லை சிலபல முறைகள் வீழ்த்தியுள்ளார், இந்த வரிசையில் டிவில்லியர்ஸ் தற்போது இணைந்துள்ளார். அஸ்வின், டிவில்லியர்ஸை டி20 கிரிக்கெட்டில் 5 முறை அவுட் செய்துள்ளார். மற்ற பவுலர்கள் அதிகபட்சம் 3 முறையே டிவில்லியர்ஸை வீழ்த்தியுள்ளனர். அஸ்வினுக்கு எதிராக டிவில்லியர்ஸின் பேட்டிங் சராசரி வெறும் 12.40.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இர்பான் பத்தானின் அதிகபட்ச விக்கெட்டுகளான 28-ஐ கடந்தார். அஸ்வினின் டி20 சிக்கன விகிதம் ஓவருக்கு 7.24. இதிலும் அஸ்வின் தற்போது முன்னிலை வகிக்கிறார்.

2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்களுக்குச் சுருண்ட பிறகு தற்போது 92 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அதாவது இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே 100க்கும் குறைவான ரன்களில் இந்தியா ஆட்டமிழந்துள்ளது. அதேபோல் டி20 போட்டிகளில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பது மொத்தமாக 4-வது முறையே.

தொடர்ச்சியாக 4-வது போட்டியில் நேற்று இந்திய தொடக்க வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். முதல் டி20-யில் ஷிகர் தவண் ரன் அவுட் ஆனார். நேற்று ரோஹித் சர்மா, இதற்கு முன்னதாக ஜிம்பாப்வேயிற்கு எதிராக விஜய் மற்றும் ரஹானே ரன் அவுட் ஆகினர்.

தோனியின் கேப்டன்சியின் கீழ் தொடர்ச்சியாக 4-வது டி20 தோல்வியாகும் நேற்றைய தோல்வி. உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தொடங்கியது இந்த தோல்வி. 2009-ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக 4 போட்டிகளை தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி இழந்துள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற 10 டி20 சர்வதேச போட்டிகளில் விராட் கோலி குறைந்தது 20 ரன்களையாவது எடுத்தார். கடந்த 11 இன்னிங்ஸ்களில் கோலியின் ஒற்றை இலக்க ரன் இதுவே. கடந்த 10 இன்னிங்ஸ்களில் கோலி 484 ரன்களை 5 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். சராசரு 69.14.

http://tamil.thehindu.com/sports/டி20யில்-டிவில்லியர்ஸை-அதிக-முறை-வீழ்த்திய-அஸ்வின்-மேலும்-சில-தகவல்கள்/article7730708.ece

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு 3-0 தோல்வி: டேவிட் மில்லர் திட்டவட்டம்

 
 
கட்டாக்கில் இந்திய அணி விக்கெட் ஒன்றை கொண்டாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள். | கோப்புப் படம்.
கட்டாக்கில் இந்திய அணி விக்கெட் ஒன்றை கொண்டாடும் தென் ஆப்பிரிக்க வீரர்கள். | கோப்புப் படம்.

டி20 கிரிக்கெட் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கும் தென் ஆப்பிரிக்கா 3-வது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு 3-0 தோல்வியைப் பெற்றுத் தரும் என்று அந்த அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத விதத்தில் டி20-யில் ஆதிக்கம் செலுத்தும் தென் ஆப்பிரிக்கா அணியின் மனநிலை பற்றி டேவிட் மில்லர் உற்சாகம் தெரிவித்தார்.

"நாங்கள் 2-0 என்று முன்னிலையில் உள்ளோம், எனவே 3-0 என்று அதனை மாற்ற உறுதியாக இருக்கிறோம். எங்கள் தயாரிப்புகள் உண்மையிலேயே நல்ல முறையில் அமைந்தது. அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம், நாளை கொல்கத்தாவில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவோம்.

கொல்கத்தாவுக்கு 2-0 என்ற முன்னிலையுடன் வருவது அருமையாக உள்ளது. தொடரை வென்றது உண்மையில் பெரிய வெற்றியே. இங்கு வரும்போதே நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதியுடனும், எங்களுக்கு நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டும் வந்தோம்.

மிகப்பெரிய வீரர்களுடன் கூடிய இந்திய அணி ஒரு மிகப்பெரிய டி20 அணியாகும். எனவே உலக டி20 இங்கு நடைபெறும் நிலையில் இந்தியாவை வீழ்த்தியது பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது.

இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறோம். அதற்கு இந்தத் தொடரில் வெற்றி பெறுவதென்பது மிகப்பெரிய தன்னம்பிக்கை ஊட்டமாகும்” என்றார்.

பனிப்பொழிவு இருப்பதால் உள்நாட்டு டி20 போட்டிகளை இன்னும் முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று தோனி கூறியிருப்பது பற்றி டேவிட் மில்லரிடம் கேட்ட போது, “எனக்கு இது பற்றி என்ன கூற வேண்டுமென்று தெரியவில்லை. பனிப்பொழிவு ஓரளவுக்கு பிரச்சினையே. ஆனால் இது இரு அணிகளுக்கும்தானே. இதனை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை என்றே கருதுகிறேன்.

நாங்கள் இங்கு வந்து வெற்றி பெறுவதற்கு ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பலர் ஆடுவதும் காரணம். ஐபிஎல் ஒரு அருமையான தொடர், நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. நிச்சயம் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய பிட்ச் நிலைமைகள் நன்றாக தெரிய ஐபிஎல் ஒரு மிகப்பெரிய உதவி புரிந்துள்ளது. நாங்கள் உள்நாட்டில் விளையாடுவது போல்தான் உணர்கிறோம்”

இவ்வாறு கூறினார் மில்லர்.

http://tamil.thehindu.com/sports/இந்தியாவுக்கு-30-தோல்வி-டேவிட்-மில்லர்-திட்டவட்டம்/article7734320.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.