Sign in to follow this  
Followers 0
தமிழரசு

அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக மாணவர் போராட்டம்..

1 post in this topic

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்க மறுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு:- இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி (சுதந்திர தமிழீழ நாடு) கிடைக்கவில்லை.மாணவர்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழ் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் அரசியல் கோரிக்கையாக ஓங்கி ஒளித்துவரும் இந்த வேலையில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல, அது வெறும் மனித உரிமை மீறல் தான் எனக் கூறும் அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை தமிழ் மாணவர்கள் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.2013-ஆ ம் ஆண்டு போர்குற்ற விசாரனை என்றும், 2014-ஆம் ஆண்டு நடந்தது உள்நாட்டு மத கலவரம் என்றும், ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வந்து இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளி அமெரிக்கா தனது பங்கிற்கு இனப்படுகொலையை மூடி மறைக்கும் வேலையை செய்துவருவது நாம் அறிந்ததே!

இந்த வருடம் தீர்மானத்தில் உள்நாட்டு விசாரணையை கோரப்போவதாக அமெரிக்கா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருக்கும் இந்த சூழலில் அமெரிக்க அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் எங்கள் பதிலை, எங்கள் எதிர்ப்பினை தெரியப்படுத்துவதற்கான அறிவிப்பினை தருவதற்காகவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஒழுங்கு செய்திருக்கிறோம் .

வரும் செப்டம்பர் 21-ஆ ம் தேதி ஜெனீவாவில் ஐ.நா மன்றம் கூட இருப்பதையொட்டி செப்டம்பர் 16-ஆ ம் தேதி அமெரிக்க தனது அறிக்கையினை சமர்பிக்கவுள்ளது, அந்த அறிக்கையில் இனப்படுகொலையை மூடி மறைக்கும் விதமாக, மனித உரிமை மீறலுக்கான உள்நாட்டு விசரனையை அமெரிக்கா கோரும் பட்சத்தில் அமெரிக்காவை கண்டித்து அமெரிக்க எதிர்ப்பு நிலையை பிரதிபளிக்கும் வண்ணம் 18.09.2015 அன்று தமிழக வீதிகள் எங்கும் அமெரிக்க கொடி எரியும் , அமெரிக்க நிறுவங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்படும் என்பதனை இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர் விடியல் கட்சி

-தமிழ் இளையோர் மற்றும் மாணவர் கூட்டமைப்பு

-பாலச்சந்தர் மாணவர் இயக்கம்

-இளைய தலைமுறை கட்சி

-பெரியார் மாணவர் கழகம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாணவர் பிரிவு)

http://www.seithy.com/breifNews.php?newsID=140485&category=IndianNews&language=tamil

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  
Followers 0