Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இசைக்கலைஞன் said:

யாருக்கு உங்கள் வாக்கு?

 

நன்றி இசைக்கலைஞன்.

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

 

Quote

 

எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!! வெற்றிகரமாக முடிந்திருக்கிறது முதல் பரப்புரைக்கூட்டம்.

"உண்டியல் ஏந்தி வருகிறோம் ஒரு ஒரு ரூபாயும் ஒரு ஒரு வாக்கு என்று கருதுகிறோம். பணம் கொடுத்து வாக்குக் கேட்கும் அரசியல்வாதிகள் மத்தியில் பணமும் கொடுத்து நீங்கள் எமக்கு வாக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். எவ்வளவு வாக்கு கிடைக்கிறது பார்ப்போம்" என்று அறிவித்தார் அறிவுச் செல்வன்.

உண்டியல் வந்தபிறகு தொகையை எண்ணிவிட்டு அவரே அறிவித்தார் 3800 ரூபாய்கள் வந்திருக்கிறது என்று. பிறகு என் பள்ளிக்கூட நண்பன் சரவணன் வந்து 200 ரூபாய் தர அது 4000 ரூபாய் ஆனது!!

"நான் பெயிண்டருங்க... நானே 20 ரூபாயைத் தூக்கி உங்க உண்டியல்ல போட்டுட்டேனுங்க, எங்க வீட்ல 7 ஓட்டு நிச்சயம் உங்களுக்குத்தானுங்கனு ஒரு பெரியவர் வந்து கைகளை பிடித்து நெகிழ்ந்தார்.

உண்மை, உலகத்தில் எதைவிடவும் வலிமையானது... தொகுதியை வெல்கிறோமோ இல்லையோ இந்தத் தேர்தலில் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை வெல்லப் போவது உறுதி!!

2மணி நேரம் கால்கடுக்க நின்று கேட்ட மக்கள் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா? உறுதியாக சிந்திப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். என்னவானாலும் சிந்திக்க மாட்டார்கள் என்று திராவிடமும், மதவாதமும் நம்புகிறது!! சிந்திக்கும் வரை நாம் விடப்போவதில்லை அதுமட்டும் உறுதி.

"ஒரு மனிதனின் மகத்துவம் என்பது அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை மாறாக அவன் எதை அடைய முயற்சிக்கிறான் என்பதில்தான் இருக்கிறது" என்கிறான் கலீல் ஜிப்ரான்.

அப்படிப் பார்க்கையில் நாம் மகத்தானவர்கள்... நமது முயற்சி மகத்தானது.... நாம் விதைக்கிறோம் நிச்சயம் நமது வருங்காலத் தலைமுறைகள் பலனை அறுவடை செய்யும்!!

கூட்டத்தில் பங்கெடுத்த, உதவிகள் வழங்கிய அன்பு உறவுகள் அனைவருக்கும் நன்றி!

அயராது பணி செய்த தம்பிகளுக்கும், நாம்தமிழர் உறவுகள் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்... இன்னும் வேகமாய் பணி தொடர்வோம்!!

பல்வேறு வழிகளில் எமக்கு உதவுகிற எனது மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடாது எனக் கருதி அவர்கள் பெயர்களைத் தவிர்க்கிறேன். வெளிப்படையாய் அவர்களுக்கு நன்றி சொல்லும் காலம் வெகு விரைவில் மலரட்டும்!!

மிக வேகமாய் களம் அமைக்கிறோம்... நிச்சயம் விரைவில் வெல்லப் போகிறோம்!!

 

 

12645270_943373042379357_113331678184683

- பேராசிரியர் கல்யாணசுந்தரம்

https://www.facebook.com/photo.php?fbid=943373042379357&set=a.155050514544951.35420.100001200113975&type=3

Link to comment
Share on other sites

ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களில் தேர்தலில் போட்டியிட கூடுதலான வாய்ப்பு..!

 

 

இந்த வாரம் விகடனுக்கான செவ்வி.

 

Link to comment
Share on other sites

 

தமிழகநேரம் இன்றிரவு 9:00 மணிக்கு.. கேள்வி நேரம் நிகழ்ச்சியில் நேரலையில் பதில்களைத் தருகிறார் சீமான்..

 

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பில்..

- 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி.. ஒரே மேடையில் கடலூரில் நாளை.

- தீய ஆட்சிமுறை ஒழிய.. தூய ஆட்சிமுறை மலர..

- பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு (42 பேர்)..

- திருநங்கைக்கு வாய்ப்பு..

- அரசியல் அங்கீகாரம் இதுவரையிலும் பெறாத தமிழ்ச்சமூகங்களுக்கு அதிக வாய்ப்பு.

- ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியுறாமல் தமிழ் தேசிய இனத்தின் எழுச்சி சாத்தியமில்லை..

- முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை.. நாம் கொண்ட தத்துவத்தை மட்டுமே முன்வைக்கிறோம்.

- தமிழகத்தின் தலைநகரத்தில் சீர்திருத்தங்கள்:

- சென்னை துறைமுக நகராக, கணினி நகராக, திரைத்துறை நகராக இருக்கும்..

- மதுரை மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக இருக்கும்.

- கன்னியாகுமரி தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக இருக்கும்.

மேலும் தகவல்கள் காணொளியில்..

 

Link to comment
Share on other sites

சோழிங்கநல்லூர் தொகுதியின் இன்றைய நிலை.

 

Link to comment
Share on other sites

தேர்தல் சிறப்பு கேள்வி நேரம் இன்று..

 

 

 

 

Link to comment
Share on other sites

13.02.2016: கடலூரில் வேட்பாளர்கள் அறிமுகம்..!

 

தந்தி தொலைக்காட்சியில் தற்போது நேரலையில்..

http://www.thanthitv.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர் தொகுதியின் வேட்பாளராக செந்தமிழன் சீமான்..!

 

தந்தி தொலைக்காட்சியில் செய்திக் குறிப்பு..

 

Link to comment
Share on other sites

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவில் உள்ள தூய‌தமிழர்கள் நாம் தமிழர் கட்சிக்கே வாக்கு செலுத்துவார்கள்..!

 

13.02.2016: கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம் தொடர் பேச்சு..! கடலூரில்..

- ஆர்ப்பரிக்கும் மக்கள்.. தானாக வந்த மக்கள் கூட்டம்..

 

Link to comment
Share on other sites

Quote

 

நேற்று வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராக திருநங்கை தேவி அவர்களை அண்ணன் சீமான் வேட்பாளராக அறிமுகம் செய்தபோது மொத்தக்கூட்டமும் கரவொலியும், ஆரவாரமும் செய்து ஆர்ப்பரித்தது. அப்போது, அக்கா தேவி நெகிழ்ச்சியோடு கண்கலங்கி கரம்கூப்பி நின்றார்.

ஐம்பதாண்டு காலத் திராவிட ஆட்சிகளும், கட்சிகளும் சகோதரிகளாக பார்க்க வேண்டிய திருநங்கைகளை சகமனிதராகக்கூட பார்க்காது ஒதுக்கி வைத்தபோது, நாம் தமிழர் கட்சி அவர்களை சகமனிதராக நேசித்து அரவணைத்து வேட்பாளராக அங்கீகரித்திருக்கிறது. இதுவே உண்மையான மாற்று அரசியல்!

திருநங்கை என்பதால் இவ்வளவு நாட்களாக சமூகத்தால் காயப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட அக்கா தேவி அவர்களை வெல்ல வைக்க வேண்டியது நாம் தமிழர் கட்சிக்கான வேலையல்ல! சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதரின் வேலை; கடமை. அதனை உணர்ந்து அவரின் வெற்றிக்குப் பாடுபடுவோம்!

Salem SriDevi வாழ்த்துகள் அக்கா! நாம் உறுதியாக வெல்வோம்!!

 

 

 

Link to comment
Share on other sites

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது..

திருநங்கை தேவி அவர்களை அறிமுகப்படுத்தியபோது விண்ணதிரச்செய்த ஆரவாரம் 5:03 மணித்துளிகளில்..

 

Link to comment
Share on other sites

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவின் வாக்குகள் யாருக்கு?

 

ஆந்திராவின் ஈநாடு பத்திரிகையில்..

12744198_191414877887844_889980206398595

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ. தொகுதியில் போட்டியிடுவது ஏன்?- நாம் தமிழர் திருநங்கை வேட்பாளர் தேவி பளிச் பேட்டி!

seemaan%20one%20two.jpg

தமிழக சட்டமன்ற தேர்தல்களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், கடலூரில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒவ்வொருவராக அறிவிக்கும்போது, ஒருவரது பெயர் சொல்லும்போது மட்டும் கூட்டம் கைதட்டலில் அதிர்ந்தது. அவர்தான் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் தேவி. அதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? தேவி ஒரு திருநங்கை. அது தான் ஸ்பெஷல்.

திருநங்கை சமூகத்தில் இருந்து ஏற்கெனவே பாரதி கண்ணம்மா என்பவர் 2014 மதுரை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். ஆனால், ஒரு கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை முதன்முதலில் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. 

விகடன் இணையதளத்திற்காக  திருநங்கை தேவியைச் சந்தித்தோம்.

முதல் திருநங்கை வேட்பாளர் என்பதை எப்படி உணர்கிறீர்கள் ?

திருநங்கை என்கிற பெயரை முதலில் கொடுத்ததற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். சமூகத்தில் பலவாறான அவச் சொற்கள் மூலம்தான் நாங்கள் அழைக்கப்படுகிறோம். தற்போது அந்த நிலை மாறி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் எல்லாம் திருநங்கைகளை உறுப்பினர்களாகச் சேர்த்து வைத்திருக்கிறார்களே தவிர, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது கொஞ்சமும் இல்லை. எங்களையும், சக மனிதராக நினைத்து, என்னை வேட்பாளாராக அறிவித்து இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடலூரில் என்னை அறிமுகப்படுத்தும் முன்பு வரை, நான் திருநங்கை என்பது யாருக்கும் தெரியாது. என் பெயரை அறிவித்து , ‘தேவி - ஒரு திருநங்கை’ என்று சொன்னபோது மக்களிடம் ஏற்பட்ட கைத்தட்டல்தான் திருநங்கைகள் மீதான சமுதாய சிந்தனை மாற்றுக்கு ஒரு சான்று.

உங்கள் குடும்பத்தின் பின்னணி ?

என் சொந்த ஊர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி. என் தந்தை பெயர் கோவிந்தன். சாதாரண கூலிக்குடும்பம். என் தந்தை நான் பதினொரு மாதம் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். என் அண்ணன் சிறுவயதிலேயே ஓடிப்போய்விட்டார். என்னுடைய அக்காவும், அம்மாவும்தான் என்னை வளர்த்தார்கள். குழந்தையில் இருந்தே உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். மதிய உணவுக்காக  பள்ளிக்கூடம் சென்றேன். சிறுவயதில் இருந்தே உணவும், அன்பும் கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பா வாங்கி வைத்திருந்த கடனையும் நாங்கள்தான் கட்டவேண்டிய நிலையில் இருந்தோம். 12-ம் வகுப்பு வரைக்கும் அரசுப்பள்ளியில் தான் படித்தேன். அந்த சமயத்தில்தான் என்னுள் இருக்கும் பெண் தன்மையை உணரத் தொடங்கினேன். 

அது  உடல்தோற்றத்திலும் வெளிப்பட்டதால் அந்த சமயங்களில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது எங்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் 18 வயதில் பாலினமாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டு, மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டேன். முதலில் அம்மா சிறிது வருத்தப்பட்டாலும், அதன்பின் என்னை மனமார ஏற்றுக்கொண்டார்கள். 

அதன்பின் சேலம் ‘தாய்’ அமைப்பிலும், ‘விழுதுகள்’ அமைப்பிலும் என்னை இணைத்துக்கொண்டு பணி செய்தேன். குழந்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு, ஆதரவற்றோருக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். முதியோர் இல்லம் ஆரம்பிக்க நினைத்தபோது, உள்ளூருக்குள் பெரும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி, எங்கள் ஊரில் சொந்தமாக நிலம் வாங்கி,  ‘தாய்மடி அறக்கட்டளை’ என்கிற பெயரில் காப்பகம் ஒன்றை நடத்திவருகிறேன்.

எப்படி உங்களுக்கு அரசியலின் மீது ஆர்வம் வந்தது ?

என்னுடைய அறக்கட்டளைக்காக நிலம் வாங்குவதற்கு பணம் சேர்க்க, சென்னையில் சிறிது காலம் வேலை பார்த்தேன். அப்போது தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்தவர்களின் நட்பு ஏற்பட்டது. ஈழத்தின் மீது ஆர்வம் வந்து, பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். 2009 ஈழப் போரில் கொத்துக் கொத்தாக நம் உறவுகள் மடிந்தபோது, மிகவும் பாதிக்கப்பட்டேன். தமிழர்கள் நலன்,  தமிழர்களுக்கு சொந்தமான நாடுகளிலேயே மிகவும் தரக்குறைவான நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நொந்தேன். மற்ற மாநிலங்களில் எல்லாம் மண்ணின் மைந்தர்கள் ஆண்டு கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் இருந்த நிலை மேலும் என்னை மனம் நோகச் செய்தது. 

திருநங்கைகளுக்கு இன உணர்வு இருக்கக்கூடாதா என்ன? அந்த சமயத்தில், நாம் தமிழர் இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அவர்களுடன் இணைத்துக் கொண்டேன். அப்படியே அவர்களுடனான பயணத்தில் இருந்தபோது, தேர்தலுக்கு அண்ணன் சீமான் வேட்பாளர் தேர்வு செய்கிறார் என்று தெரிந்த போது, என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

ஆர்.கே.நகர் தொகுதி தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி. அதில் போட்டியிட என்ன காரணம் ?

திருநங்கையாகப் பிறந்த இந்த சமூகத்தில் பலர் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். எனக்கு அந்த சூழ்நிலை இல்லை. இருந்தாலும், அப்படி பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதனால்தான் தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டேன். நான் சேலம் மாவட்டத்தில் போட்டியிடுவதாகத்தான் அண்ணனிடம் கேட்டிருந்தேன். அவர்கள்தான், என்னை சென்னையில் போட்டியிட தேர்வு செய்துள்ளார்கள். 

திருநங்கை சமூகம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது ?

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நிலை மற்ற இடங்களை விட பரவாயில்லை. இருந்தாலும், திருநங்கைகள் என்றால் ஏளனமாகப் பார்க்கும் நிலை இன்னமும் சமூகத்தில் நிலவி வருகிறது. நாங்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. இயற்கையின் படைப்பில் நாங்களும் ஒரு பாலினம்தான். இந்த சமூகத்தின் புறச்சாயல்கள்தான் எங்களை சாதாரண மக்களிடம் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறது. அதற்கு நாங்கள் மட்டும் காரணம் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால், கண்டிப்பாக மக்களுக்காவும், திருநங்கைகளுக்காகவும் பாடுபடுவேன். என்னுடைய வெற்றி என்பது, திருநங்கை சமூகத்தின் வெற்றியாகவே கருதப்படும். வயிற்றுப் பசிக்காகப் பிச்சை எடுக்கும் நிலை என்பது தான் மோசமான விஷயம். அதை மாற்ற என் வாழ்நாள் முழுக்கப் பாடுபடுவேன்.
devi%20santhi%20seeman.jpg

 

Link to comment
Share on other sites

வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தின் நிழற்படங்கள் சில..

12711214_1764059060491986_74383764441038

12711116_1764059290491963_25481861895076

12698286_1764059300491962_37892420070820

12698676_1764059420491950_76861309983690

12697038_1764059627158596_70596611901171

12697285_1764059587158600_48899879552864

12694901_1764059727158586_27291441980932

12710716_1764059870491905_26838404574209

12716134_1764059923825233_65227828055903

12711262_1764060447158514_51217960488994

12711170_1764060607158498_42835743319029

11143350_1764060720491820_41463536026798

12697227_1764062067158352_72146843981282

12671807_1764062350491657_85175494660839

12698213_1764062790491613_95913189796901

12698280_1764062897158269_53311207779159

12698212_1764063020491590_76219221157345

12716133_1764065977157961_31961636511442

12697391_1764106500487242_42335747751773

12716337_1764108243820401_29495115102421

 

Link to comment
Share on other sites

ஓமலூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளராக ஒரு மாற்றுத் திறனாளி..!

10644291_967304870010930_302039445099705

Link to comment
Share on other sites

கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமிருந்தும்தான் தமிழனுக்கான முதல் விடுதலை தேவைப்படுகிறது..

2010 இல் கட்சியை ஆரம்பித்து மதுரை மாநாட்டில் பேசியபோது.. 

 

Link to comment
Share on other sites

சத்தியம் தொலைக்காட்சியின் கேள்விக்கணைகள் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார், செந்தமிழன் சீமான்..!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.