Jump to content

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்


Recommended Posts

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்

முதலில் ஆபாசப் படங்களைக் காட்டுவதாய் ஆசைகாட்டி, பயனாளியை ரகசியமாய் படம் பிடித்து, அதை வைத்து அவரை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் அதிகரிப்பதாக இணையப் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.

பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன்பக்கத்து கேமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும்.

பின்னர் இந்த செயலி ஃபோனையே செயலற்றுப்போகச் செய்துவிடும். சொல்கிற கணக்கில் ஐநூறு டாலர் பணம் செலுத்தினால்தான் ஃபோன் மறுபடியும் இயக்க முடியும் என்று அச்செயலி எச்சரிக்கும்.பணம் செலுத்தாமல் மறுபடியும் ஃபோனைப் பயன்படுத்துவது மிகவும் சிரமம்.

இப்படியாக மிரட்டிப் பணம் பறிக்கும் செயலிகளை உருவாக்குவது ஒரு லாபகரமான இணையக் குற்றமாக பரவி வருகிறது என இணையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தரவுகளை அழித்துவிடுவோம், வெளியில் பரவவிட்டு விடுவோம் அல்லது ஃபோனை முடங்கச் செய்துவிடுவோம் என்று மிரட்டுகிற இப்படியான செயலிகளை 'ரேன்சம்வேர்' என்று அழைக்கின்றனர்.

http://tamil.thehindu.com/bbc-tamil/ஆண்ட்ராய்ட்-போன்களில்-பயனாளிகளை-மிரட்டிப்-பணம்-பறிக்கும்-விஷமச்-செயலிகள்/article7625956.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Porn app took secret photos of users.

http://www.bbc.co.uk/news/technology-34173372

இதில் சில தீர்வுகள் உள்ளன. எதுக்கும்.. போன்.. லாப்டாப் முன் கமரா மீது சுவிங்கம் ஒட்டிட்டு.. பாவியுங்க.tw_blush:

"Ransomware is more prevalent on computers than phones, but this could be the start of a trend," said Mr Samani.

"You can stay safe with some basic common sense. Some ransomware threatens to delete your photos, videos and documents so back up your data. Then if you are targeted you can wipe your system and start over.

"Only download apps from the proper Google Play store. And if you receive an app download link in an email, don't click it."

Zscaler said anybody that had downloaded Adult Player should reboot their handset into "safe mode". The exact method varies between handset manufacturers.

Safe mode loads the operating system without running any third-party apps, allowing people to delete malicious software.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.