Jump to content

கனடாவில் கோலாகலமாக தொடங்கவுள்ள இலங்கை உணவுத் திருவிழா!


Recommended Posts

இலங்கை நாட்டின் ’கொத்து ரொட்டி’ உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா கனடாவில் கோலாகலமாக தொடங்க உள்ளதால், அந்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரோண்டோ நகரில் ஆண்டுதோறும் இலங்கை தேசத்தின் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி திருவிழா நடைப்பெற்று வருகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி நடைப்பெற உள்ள இந்த திருவிழாவில், கொத்து ரொட்டி, அரிசி மாவு இடியாப்பம், ஒடியல் கூழ் உள்ளிட்ட இலங்கையின் பல்சுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு திருவிழாவில் பங்கேற்கும் மக்களுக்கு பறிமாரப்படும்.ஒவ்வொரு நாட்டிற்கும் சில உணவுகள் தனிச்சிறுப்பு பெற்றிருப்பது போல, இலங்கையின் கொத்து ரொட்டி உணவு கனடா நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொள்வதால், அந்த நகரில் உள்ள சுமார் 90 சதவிகித ஹொட்டல்கள் அந்த ஒரு நாள் மட்டும் மூடப்படும்.நாள் முழுவதும் நடைபெறும் இந்த விழாவில் உணவு கண்காட்சி மட்டுமன்றி, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

கனடாவில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி, கனடிய குடிமக்களும் இந்த விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பங்கேற்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.மேலும், திருவிழாவின் இறுதியில் சிறந்த கொத்து ரொட்டி தயாரிப்பாளரை தெரிவு செய்ய மக்களிடம் வாக்கெடுப்பு நடைப்பெற்று வெற்றி பெருபவருக்கு பரிசுகளும் வழங்கப்படுவது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.

srilanka_food_002

srilanka_food_003

- See more at: http://www.canadamirror.com/canada/48519.html#sthash.pI6QM2tg.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.