Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: மரம் மனிதன்!

 
 
masala_2720631f.jpg
 

வங்கதேசத்தில் வசிக்கும் 25 வயது அபுல் பஸாடர் ‘மரம் மனிதன்’ என்று அழைக்கப்படுகிறார். அவரது இரண்டு கைகளிலும் கால்களிலும் மரங்களின் வேர்ப்பகுதியைப் போல கரடு முரடான மருக்கள் காணப்படுகின்றன. 10 வயதில் அபுல் ‘ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ்’ தாக்கத்துக்கு உள்ளானார். இந்த வைரஸ் தோலையும் ஈரமான ஜவ்வையும் பாதிக்கிறது. அதனால் அவரது கைகளிலும் கால்களிலும் மருக்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. ரிக்‌ஷா ஓட்டியாக இருந்தவருக்குத் தற்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. சாப்பிடுவது முதல் அனைத்து வேலைகளுக்கும் அடுத்தவரின் உதவி தேவைப்படுகிறது. ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ்களில் 100 வகைகள் உள்ளன. 30 வகை மரபணுக்களைப் பாதிக்கக்கூடியவை. எல்லா பாப்பில்லோமா வைரஸ்களும் மருக்களை உண்டாக்கக்கூடியவை.

என்ன கொடுமை இது?

லண்டனில் சட்டம் படித்து வருகிறார் 20 வயது சைமா அஹ்மது. 195 ரூபாய் கொடுத்து கிட்காட் சாக்லெட் பாக்கெட்டுகளை வாங்கினார். ஆனால் ஒரு பாக்கெட்டிலும் வேஃபர் இல்லை. வெறும் சாக்லெட் பார் மட்டுமே இருந்தது. ஏமாற்றமடைந்த சைமா, நெஸ்லே நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிவிட்டார். ’’நான் நெஸ்லே மீது நம்பிக்கை வைத்து சாக்லெட் வாங்கினேன். என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டது நெஸ்லே. உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனம் இவ்வளவு அலட்சியமாக வாடிக்கையாளர்களைக் கையாளக் கூடாது. இந்தத் தவறுக்காக நெஸ்லே நிறுவனம் என் வாழ்நாள் முழுவதும் எனக்கு சாக்லெட்களை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் வாழ்நாள் முழுவதும் அவர்களின் சாக்லெட்களுக்கு தரம் நிர்ணயிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன். என் கடிதத்துக்கு மன்னிப்புக் கேட்டு, என் கோரிக்கையை ஏற்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்கிறார் சைமா.

ம்… கலக்குங்க சைமா!

பிரிட்டனைச் சேர்ந்த மரச்சாமான்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, மரங்களை வளைத்து, மேஜைகளையும் நாற்காலிகளையும் உருவாக்கி வருகிறது. கவின் முன்ரோ என்ற டிசைனர் அழகான மரங்களை எல்லாம், நாற்காலிகளாகவும் மேஜைகளாகவும் இயற்கையிலேயே மாற்றி வருகிறார். இதற்காக மரங்களையோ, கிளைகளையோ அவர் வெட்டுவதில்லை. நாற்காலி, மேஜைகளுக்கு ஏற்றவாறு அச்சுகளை வைத்து, வளைத்து வளரவிடுகிறார். ஒரு நாற்காலி, மேஜை அளவுக்கு வளர்ந்த பிறகு அதை அப்படியே வெட்டி எடுக்கிறார். அதற்குப் பிறகு வெட்டுவதோ, மரத்தை இழைப்பதோ கிடையாது. இயற்கையாக நாற்காலியும் மேஜையும் விளைந்தது போலக் காட்சியளிக்கின்றன. ’’எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்படிச் செய்யும்போது 10 நாற்காலிகள்தான் செய்ய முடிகிறது என்றால், அந்தப் பத்தும் தனித்துவம் மிக்கதாக இருக்கின்றன என்பது முக்கியமான விஷயம்’’ என்கிறார் முன்ரோ. இதற்காக 2.5 ஏக்கரில் 400 மரங்களை வளர்த்து வருகிறார். பிளாஸ்டிக் அச்சுகளைப் பயன்படுத்தி, விதவிதமான மரச்சாமான்களை உருவாக்கி வருகிறார். ஒரு மரத்தை வளர்த்து, நாற்காலிகளாக, மேஜைகளாக மாற்றுவதற்கு 4 முதல் 8 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. ஆண்டுக்கு 50 பொருட்களை மட்டுமே விளைவித்து, விற்று வருகிறார் முன்ரோ. ஒரு நாற்காலியின் விலை 2.5 லட்சம் ரூபாய்!

நாற்காலி, மரத்தில் காய்த்தாலும் விலை ரொம்பவே அதிகம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/article8182523.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: அர்ப்பணிப்புக்குத் தலை வணங்குகிறோம்!

 
 
masala_2721974f.jpg
 

வாஷிங்டனில் கடந்த வாரம் இறந்து போனார் ‘கோன்னி’ என்று அழைக்கப்படும் Concepcion Picciotto. உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 35 வருடங்களாக வெள்ளை மாளிகை வாசலில் நின்று போராடி வந்தவர். அமெரிக்காவில் இவரைத் தெரியாதவர்களே கிடையாது. ஸ்பெயினில் பிறந்த கோன்னி, பாட்டியால் வளர்க்கப்பட்டார். 1960-ம் ஆண்டு நியூயார்க் வந்து சேர்ந்தார். ஸ்பெயின் நாட்டு அலுவலகத்தில் வேலை செய்தார். இத்தாலியரைத் திருமணம் செய்துகொண்டார். ஓக்லா என்ற பெண்ணைத் தத்தெடுத்துக் கொண்டார். கணவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இருவருக்கும் பிரச்சினை வந்துவிட்டது.

கோன்னியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார் அவரது கணவர். குழந்தையையும் இழந்து விட்டார் கோன்னி. பிரச்சினைகள் முடிந்து வெளியே வந்தபோது, அநியாயத்தைக் கண்டு போராட வேண்டும் என்று முடிவெடுத்தார். 1981-ம் ஆண்டு அணு எதிர்ப்புப் போராட்டத்தைக் கையில் எடுத்தார். சில மாதங்களில் வில்லியம் தாமஸ் என்ற போராட்டக்காரரும் சேர்ந்துகொண்டார். வெள்ளை மாளிகைக்கு வெளியே சிறிய கூடாரம் அமைத்து தினமும் போராடி வந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம் இறந்து போனார். கோன்னி தனியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். பல முறை அதிகார மட்டத்தில் இருந்து தாக்குதல்களைச் சந்தித்திருக்கிறார். தன் வாழ்நாளில் 90 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

பாதுகாப்புக்காகத் தலையில் ஹெல்மெட் அணிந்திருப்பார். கூடாரத்தை விட்டு ஓர் இரவு வெளியே சென்றாலும் காவலர்கள் கூடாரத்தை அப்புறப்படுத்தி விடுவார்கள். மீண்டும் கூடாரம் போடுவார். வெயில், பனி, மழை எதையும் பொருட்படுத்தியதில்லை. ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா என்று பல அதிபர்களின் ஆட்சியில் உலக அமைதியை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால் ஒருவர் கூட இவரிடம் வந்து பேசியதில்லை. அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோன்னியைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

மைக்கேல் மூர் ஆவணப்படத்தில் கோன்னி இடம்பெற்றுள்ளார். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களைக் குறைக்க எடுத்து வரும் நடவடிக்கைகளில் கோன்னியின் போராட்டத்துக்கும் ஒரு பங்கு உண்டு. சிலர் கோன்னியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னாலும், பெரும்பாலானவர்கள் அவரை ஒரு ஹீரோவாகக் கருதுகிறார்கள். அமெரிக்க வரலாற்றிலேயே அதிகக் காலம் போராடிய 80 வயது கோன்னி, கடந்த வாரம் தன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். ஏராளமான பொதுமக்கள் அவரது கூடாரத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். வெள்ளை மாளிகையில் இருந்தும் இரங்கல் குறிப்பு வெளியிடப்பட்டது.

தங்களின் அர்ப்பணிப்புக்குத் தலை வணங்குகிறோம் அம்மா!

பெட் காபி என்ற பெயரில் சிலர் தூங்கி விழித்ததும் காபி குடிப்பார்கள். பல் தேய்க்கும் விஷயத்தையும் காபியையும் இணைத்து ‘பவர் எனர்ஜி’ என்ற பெயரில் புதிய பற்பசையை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டான் மெரொபோல்.

‘‘உலகிலேயே முதல் முறை உருவாக்கப்பட்ட காபி கலந்த பற்பசை இதுதான். காலை எழுந்தவுடன் பற்பசை கொண்டு பல் துலக்கினால் காபி குடித்த திருப்தியும் கிடைக்கும். பற்களும் சுத்தமாகிவிடும். 50 சதவீத அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் பல் துலக்குகிறார்கள். எல்லோரையும் பற்கள் மீது கவனம் செலுத்த வைப்பதற்காக ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். காபி கலந்த பற்பசையை உருவாக்கினேன். வாயில் பற்பசை பட்டவுடன் காபி குடித்த புத்துணர்வு கிடைக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் பற்பசையைப் பயன்படுத்தலாம்’’ என்கிறார் டான்.

‘‘பவர் எனர்ஜி உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை முடித்து விட முடிகிறது. பற்களும் ஆரோக்கியமாக இருக்கிறது. காபிக்குச் செலவு செய்யும் பணமும் மிச்சமாகிறது’’ என்கிறார் ரேச்சல் பிக். பவர் எனர்ஜியில் ஃப்ளூரைட் கிடையாது. அதனால் இது மருந்து வகையில் வராது. பல் மருத்துவர்களும் பவர் எனர்ஜியை அங்கீகரித்திருக்கிறார்கள். ஆனால் பற்பசையைப் பயன்படுத்திய பிறகு வாயைச் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். பற்பசை வெளிவந்த மூன்று நாட்களில் 35 சதவீதம் பேர் இதைப் பயன்படுத்திவிட்டனர். மேலும் விற்பனை அதிகரிக்கும் என்கிறார்கள்.

ஆவி பறக்க காபி குடிக்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகுமா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article8187632.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நின்றுகொண்டே உட்காரலாம்!

 
 
masala_2723337f.jpg
 

நின்றுகொண்டே பல மணி நேரம் வேலை செய்யக்கூடியவர்களுக்காக ஒரு புதுமையான ஆர்செலிஸ் நாற்காலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைக் கால்களில் அணிந்துகொண்டால், நிற்கும்போது உட்கார்ந்த திருப்தி கிடைக்கும். நாற்காலி என்று சொல்லிக்கொண்டாலும், இது நிஜமான நாற்காலி இல்லை. நிற்கும்போது கால்களும் தொடைகளும் வலி இல்லாமல் இருப்பதற்கு உதவும் கருவிதான் இது. நாம் எந்த நிலையில் நிற்க வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்றார் போல இந்தக் கருவியைச் சரி செய்துகொள்ளலாம். வளைத்துக்கொள்ளலாம். ஆர்செலிஸைக் காலில் மாட்டிக்கொண்டால் எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தாலும் உங்களுக்குக் களைப்பே வராது. கால்கள் வலிக்காது. ஆர்செலிஸ் முழுவதும் கார்பனால் உருவாக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு வளைத்தாலும் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடியது. இதை இயக்குவதற்கு பேட்டரிகளோ, மின்சாரமோ தேவை இல்லை.

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளின்போது, மருத்துவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்காகவே ஆர்செலிஸ் நாற்காலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் என்று நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கக்கூடிய வேலைகளைச் செய்யும் அனைவரும் இந்த ஆர்செலிஸைப் பயன்படுத்திகொள்ளலாம். ஜப்பானைச் சேர்ந்த நிட்டோ நிறுவனம் பல்வேறு அளவுகளில் இதைத் தயாரித்திருக்கிறது. இன்னும் பல பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருப்பதால், இந்த ஆண்டு இறுதியில்தான் ஆர்செலிஸ் விற்பனைக்கு வர இருக்கிறது.

அடடா! நின்றுகொண்டே உட்காரலாம்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ரெக்ஸ் வீட்டில், ஒரு வாத்து குஞ்சு பொரித்தது. வாத்துக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக ரெக்ஸ் அருகில் சென்றார். அப்பொழுது பான்டிகூட் என்ற வயிற்றில் பையுடைய பெருச்சாளியைப் போன்ற விலங்கின் குட்டி அங்கே இருந்தது. சின்னஞ்சிறு குட்டியைத் தன் குஞ்சுகளுடன் சேர்த்து, பாதுகாத்துக்கொண்டது தாய் வாத்து. ஒரு வாரத்தில் பான்டிகூட் காதுகள் நிமிர்ந்து விட்டன, சிறிய வால் வளர்ந்துவிட்டது. சாம்பல், பழுப்பு முடிகள் முளைத்துவிட்டன. தாய் வாத்துக்கு அது தன் குஞ்சு அல்ல என்பதும் தங்கள் இனத்தைச் சேர்ந்த உயிரினம் அல்ல என்பதும் நன்றாகத் தெரிந்தே இருக்கிறது.

ஆனாலும் அடைக்கலம் தேடி வந்த குட்டியைத் தன் இறக்கைகளுக்குள் வைத்து, பத்திரமாகப் பாதுகாத்து வருகிறது. சற்று வளர்ந்த குட்டி, வாத்தை விட்டு வெளியே சிறிது நேரம் சென்றாலும் மீண்டும் வாத்து இருக்கும் இடத்துக்கே வந்து சேர்ந்து விடுகிறது. தாய் பான்கூட் அருகில்தான் வசிக்க வேண்டும் என்கிறார் ரெக்ஸ்.

விநோத நட்பு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article8192728.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கழுகு வானூர்தி!

 
 
masala_2724926f.jpg
 

தானாக இயங்கும் சிறிய வான் ஊர்திகளைப் பல்வேறு காரணங்களுக் காக உலகம் முழுவதும் பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். ராணுவம், போக்குவரத்து, எல்லைப் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்த வானூர்திகளின் பங்களிப்பு மகத்தானது. ஆனால் இன்று தனி மனிதர்கள்கூட இந்த வானூர்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதுவும் வேண்டாதவர்களைக் கண்காணிக்க, அவர்களின் செயல்களைத் தெரிந்துகொள்ள என்று தவறான வழிகளில் வானூர்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் வானில் சிறிய வானூர்திகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

தேவையற்ற வானூர்திகளைக் கட்டுப்படுத்தவும் செயலிழக்கச் செய்யவும் பல்வேறு நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டச்சு காவல்துறை இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க கழுகின் உதவியை நாடியிருக்கிறது. கழுகுகளுக்குப் பயிற்சியளித்து, வானில் பறந்துகொண்டிருக்கும் தேவையற்ற தானியங்கி வானூர்திகளை அழிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இயற்கையிலேயே கழுகுகளுக்கு வேட்டையாடுவதில் ஆர்வம் அதிகம். வானில் பறந்துகொண்டிருக்கும் சிறிய வானூர்திகளைக் கால்களால் பிடித்து, உறுதியான அலகால் உடைத்து எறிந்துவிடுகின்றன கழுகுகள்.

தற்போது பரிசோதனை முயற்சிகளில்தான் கழுகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 மாதங்களில் இந்த முயற்சி சிறந்ததா, இல்லையா என்பது தெரிந்துவிடும். சிறிய வானூர்திகள் என்றால் கழுகுகளுக்குப் பிரச்சினை இல்லை. சற்றுப் பெரிய வானூர்திகள் என்றால் கழுகுகளின் கால்களும் அலகுகளும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அதனால் தொழில்நுட்ப முறையில் புதிய கருவியை உருவாக்கி, இந்த வேலையைச் செய்ய வேண்டும்.

பாவம், கழுகுகளை இந்தப் பணியிலிருந்து விடுவிப்பதுதான் நல்லது…

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் இருந்து கிளம்ப வேண்டிய சீன விமானம், பனிப்புயல் காரணமாகத் தாமதமானது. நேரம் செல்லச் செல்ல, அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள், வேறு விமானங்களில் ஏறிச் சென்றுவிட்டனர். 10 மணி நேரங்களுக்குப் பிறகு விமானம் கிளம்பத் தயாரானது. ஆனால் ஸாங் என்ற ஒரே ஒரு பெண் பயணி மட்டுமே எஞ்சியிருந்தார். அவர் ஒருவரை மட்டும் ஏற்றிக்கொண்டு, விமானம் பறந்தது. எதிர்பாராமல் தன் ஒருவருக்காகப் பறந்த விமானத்தைக் கண்டு ஸாங் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். பயணம் முழுவதும் தன் அனுபவங்களை வீடியோ எடுத்தார். விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பைலட்டுடன் ஆரஞ்சுப் பழங்களைப் பகிர்ந்துகொண்டார். பல்வேறு இருக்கைகளில் உட்கார்ந்து பார்த்தார். விமானத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பயன்படுத்திப் பார்த்தார். கீழே இறங்கியதும் தன்னுடைய வீடியோவை இணையத்தில் வெளியிட்டார்.

எரிபொருள், செலவு, மனித உழைப்பு எல்லாம் வீணாக்கியதற்கு பதில், சேவையை நிறுத்தியிருக்கலாம்…

ஸ்வீடனில் வசிக்கும் மேரி க்ரான்மரும் சார்லஸ் சசிலோடோவும் தங்கள் வீட்டைச் சுற்றி கண்ணாடிக் கூண்டை அமைத்துவிட்டனர். ஸ்வீடனில் பொதுவாக 27 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது. ஆண்டு முழுவதும் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் வீட்டைச் சுற்றிப் பிரமாண்டமான கண்ணாடிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். இது பசுமைக் குடில் தோற்றத்தைத் தருகிறது.

‘‘ஆண்டு முழுவதும் நாங்கள் இங்கே வசிக்கப் போவதில்லை. கோடை காலத்தில் மட்டுமே இங்கே வரப் போகிறோம். அப்பொழுது இதமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காகவே கண்ணாடியைப் பொருத்தியிருக்கிறோம். இப்படிச் செய்ததால் கணிசமான அளவில் வெப்பம் குறைகிறது. எங்கள் வீட்டை எங்களுக்குப் பிடித்தமான விதத்தில் வடிவமைத்துக்கொண்டோம். சூரிய வெளிச்சம் குறைவாக வீட்டுக்குள் வரும். இதமான வெப்பம் நிலவும். குளிர் காலத்தில் குளிரும் அதிகம் தாக்காது. கண்ணாடிக்குள்ளேயே தக்காளி, வெள்ளரி, திராட்சை, மூலிகை என்று எங்களுக்குத் தேவையான உணவுகளை உற்பத்தி செய்துகொள்கிறோம். இது தரமான, உடையாத கண்ணாடி என்பதால் பாதுகாப்பு குறித்தும் கவலை இல்லை’’ என்கிறார் மேரி.

நம் ஊர் கற்களுக்கு கண்ணாடி வீடு எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article8197205.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ராட்சச நண்டுகள்!

 
 
masala_2726360f.jpg
 

இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது கிறிஸ்துமஸ் தீவு. இந்தத் தீவில் பிரத்யேகமான உயிரினங்கள் வசிக்கின்றன. தீவில் உள்ள காடுகளில் உலகிலேயே மிகப் பெரிய நண்டுகள் வாழ்கின்றன. 4 கிலோ எடையும் 3 அடி நீளமும் கொண்ட இந்த நண்டுகள், ஒரு தேங்காயைத் தங்கள் கால்களால் உடைத்துவிடும் அளவுக்கு வல்லமை பெற்றவை.

இவை தண்ணீரில் வசிப்பதில்லை. நிலத்தில் உள்ள வளைகளில் வசிக்கின்றன. மரங்களில் ஏறுகின்றன. 60 ஆண்டுகள் வாழ்கின்றன. லட்சக்கணக்கில் இருந்து வந்த நண்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் மாமிசத்துக்காக வேட்டையாடப்பட்டு, வெகுவாகக் குறைந்து வருகின்றன. மார்க் பியரோட் என்ற புகைப்படக்காரர் கிறிஸ்துமஸ் தீவுக்குச் சென்று, துணிச்சலுடன் ராட்சச நண்டுகளைப் படங்கள் எடுத்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய உயிரினமாக இருந்தாலும் மனிதன் விட்டுவைப்பதில்லை…

உலகிலேயே மிகவும் வித்தியாசமான உணவுகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானில் உள்ள சின்ஜுயா உணவு விடுதி. இங்கே சமைக்கப்படும் இறைச்சிகள் அனைத்தும் நாம் எந்தப் பகுதியைச் சாப்பிடுகிறோம் என்பது கண்கூடாகத் தெரியும் விதத்தில் தயாரிக்கப்படுகின்றன. முதலையின் பாதம் சமைக்கப்படாமலும் கால் பகுதி சமைக்கப்பட்டும் இருக்கிறது. ஆபத்தான மீன்களில் ஒன்றான பிரானா அப்படியே முழுவதுமாக க்ரில் செய்யப்பட்டிருக்கிறது. சாலமண்டர் முழு உருவத்துடன் பொரிக்கப்பட்டிருக்கிறது. இறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் கூட சாப்பிடத் தயங்குவார்கள். ஆனால் 6 ஆண்டுகளாக இந்த உணவு விடுதியை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

இந்த விடுதியின் தலைமை சமையல் கலைஞர் ஃபுகுஒகா, ‘’எங்கள் வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து வருகிறார்கள். உலகில் வேறு எங்கும் கிடைக்காத உணவுகளை, வித்தியாசமான முறையில் வழங்குவதுதான் எங்கள் விடுதியின் நோக்கம். ஒட்டகக் கறியிலிருந்து கறுந்தேள் வரை எங்கள் விடுதியில் கிடைக்கும். கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமான்களின் உணவுகளைப் பரிமாறினோம். கரடி மாமிசத்துடன் கோழி முட்டைகள், கரப்பான்பூச்சி வறுவல், காட்டுப் பன்றியின் கால்கள் எல்லாம் எங்கள் உணவு விடுதியில் அதிகம் சுவைக்கப்படும் உணவுகள். இறைச்சி கிடைக்கும் காலத்தைப் பொறுத்து உணவுப் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும். எங்களின் வித்தியாசமான உணவுகளுக்காகவே எங்கள் விடுதி மிகவும் பிரபலமாகிவிட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்க்கிறார்கள். தவளை வறுவலையாவது ருசித்துவிட்டே செல்கிறார்கள்’’ என்கிறார்.

என்ன வித்தியாசமோ… முரட்டுத்தனமாகத் தெரிகிறது…

சீனாவில் வசிக்கும் வெங் ஸியோபிங் புகழ்பெற்ற மருத்துவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஆதரவு அற்ற விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பதையே தன்னுடைய முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டார். ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய சொத்துகளை 2.25 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார். அந்தப் பணத்தை வைத்து மலையடிவாரத்தில் ஒரு சரணாலயத்தை ஆரம்பித்தார். யாரும் விரும்பாத, ஆதரவற்ற நாய்களையும் பூனைகளையும் வளர்த்து வருகிறார். அவருக்கு உதவியாக இருவர் வேலை செய்து வருகிறார்கள். தன்னுடைய 72 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையில் இருந்து, ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கிவிடுகிறார். ’’இந்தச் சின்னஞ்சிறு விலங்குகளுக்கு ஒரு வேளைக்கு 18 வாளி உணவு தேவைப்படுகிறது.

அதாவது 50 கிலோ அரிசி தினமும் வேண்டும். என்னுடைய பென்ஷனுடன், ஏராளமான நல்ல உள்ளங்களும் இவற்றுக்காக உணவுகளை வழங்கி வருகிறார்கள். அதனால் என்னால் எளிதாகச் சமாளித்துக்கொள்ள முடிகிறது. இங்கே நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பதை விட, அவற்றை நோய் அண்டாமல் பார்த்துக்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எனக்கும் வயதாகிறது. எனக்குப் பிறகு இந்தச் சரணாலயத்தை யாராவது கவனித்துக்கொள்ள வந்தார்கள் என்றால் நிம்மதியாக இருப்பேன். யாராவது நல்ல உள்ளம் படைத்தவர் வருவார் என்று நம்புகிறேன். எனக்குப் பின்னால் வருபவர்களுக்கு நான் எந்தக் கஷ்டமும் கொடுக்கக்கூடாது என்று ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உருவாக்கி வருகிறேன்’’ என்கிறார் வெங்.

கருணையின் மறு உருவம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8201815.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உங்க ஓவியங்களைப் போலவே உங்க சிந்தனைகளும் பேரழகு!

 
 
art_2727608f.jpg
 

போலந்தைச் சேர்ந்த மரியஸ் கெட்ஸிர்ஸ்கியின் ஓவியங்கள் மற்றவர்களை விடச் சற்று மேன்மையானவை. இவருக்குப் பிறக்கும்போதே கைகள் இல்லை. கைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் குட்டையான இரண்டு கைகள் மற்றும் வாயின் உதவியால் பிரமிப்பு ஏற்படுத்தும் ஓவியங்களை வரைந்துவிடுகிறார் மரியஸ். ஒவ்வோர் ஓவியத்துக்கும் குறைந்தது 20 மணி நேரங்களை எடுத்துக்கொள்கிறார். மிகக் கஷ்டமான ஓவியத்துக்கு 100 மணி நேரங்களைச் செலவிட்டிருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளில் 15 ஆயிரம் மணி நேரங்களைச் செலவிட்டு, 700 ஓவியங்களை வரைந்து முடித்திருக்கிறார்.

‘‘நீண்ட காலம் எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று கடவுளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் என் குறையை ஏற்றுக்கொண்டேன். கைகள் இல்லாவிட்டாலும் நான் எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன். சின்ன வயதில் என் கைகளுக்குப் பல அறுவை சிகிச்சைகள் செய்தோம். ஒரு பலனும் இல்லை. 16 வயதில் நானே சொந்தமாக ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன். ’’ என்கிறார் மரியஸ். ஓய்வு நேரங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, தன்னம்பிக்கை உரை ஆற்றுகிறார். இந்த உலகில் யாரும் குறைபாடு உடையவர்கள் அல்ல. உங்கள் கனவுகளை நினைவாக்க முயன்றாலே, நம் வாழ்க்கைக்கான அர்த்தம் கிடைத்துவிடும். அடுத்தவர்களைப் போல நாமும் இருக்க வேண்டும் என்று நினைப்பதை மாதிரி ஒரு முட்டாள்தனம் வேறு இல்லை என்கிறார் 23 வயது மரியஸ்.

உங்க ஓவியங்களைப் போலவே உங்க சிந்தனைகளும் பேரழகு!

போட்ஸ்வானாவில் உள்ள மோரேமி வனப்பகுதியில் வசிக்கிறது ஒரு பெண் சிங்கம். ஆண் சிங்கத்தைப் போல கர்ஜிக்கிறது, பிடரி முடிகளுடன் காட்சியளிக்கிறது. சட்டென்று பார்த்தால் ஓர் ஆண் சிங்கம் என்றுதான் தோன்றுகிறது. பெண் சிங்கங்களே இந்தச் சிங்கத்தைப் பார்த்து ஆண் சிங்கம் என்று ஏமாந்துவிடுகின்றன. இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கங்களைத் தனிமைப்படுத்தி விட்டது. சிறிய கூட்டத்துக்குள் சிங்கங்கள் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. அப்படிப் பிறந்த குட்டிகளில் சில ஹார்மோன் சமநிலை இன்றி, மரபணு குறைபாட்டுடன் பிறந்தன. இவை உருவத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணுக்குரிய குணாம்சங்களோடு திகழ்கின்றன. பெண் சிங்கத்தின் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஆண்ட்ரோஜென்கள் சுரந்தால், பெண் குட்டி ஆணின் தன்மையோடு பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் 13 வயது எம்மா என்ற சிங்கம் மூன்றாம் பாலினமாக இருந்தது. பல்வேறு பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. பிறகு எம்மாவின் கருப்பைகளை அகற்றினார்கள். உடனே எம்மாவின் பிடரி முடிகள் கொட்டின. சாதாரணமான பெண் சிங்கமாக மாறிவிட்டது. போட்ஸ்வானா சிங்கத்துக்குப் பெண் சிங்கங்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது. ஓர் ஆண் சிங்கத்தை நடத்துவதைப் போலவே இந்தப் பெண் சிங்கத்தையும் நடத்துகின்றன.

இயற்கையின் விநோதம்... சிங்கங்களிலும் மூன்றாம் பாலினம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/article8205777.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒளிரும் மீன் விளக்குகள்!

 
masala_2452061f.jpg
 

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் முதல் ஜுன் வரை ஜப்பானின் டோயமா கடற்கரையில் நீல நிற விளக்குகள் ஒளிர்கின்றன. இவை மின்சாரத்தால் இயங்கக்கூடிய விளக்குகள் அல்ல. இயற்கையிலேயே ஒளிரக்கூடிய கணவாய் மீன்கள்தான் கரைக்கு வந்து ஒளியை வெளிவிடுகின்றன. இவை 1,200 அடி ஆழத்தில் வசிக்கக்கூடியவை.

குறிப்பிட்ட சில காலம் மட்டும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, கரை ஒதுங்குகின்றன. மின்மினியைப் போலவே இந்தக் கணவாய் மீன்களின் உடலும் ஒளியை உமிழ்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இணையை அழைக்க, இரையை அருகில் வரச் செய்ய என்று பலவிதங்களில் ஒளியைப் பயன்படுத்திக்கொள்கின்றன இந்த மின்மினிக் கணவாய்கள்.

பல லட்சக்கணக்கான கணவாய்கள் கரை ஒதுங்கி, இனப்பெருக்கம் செய்து, முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இரவு நேரங்களில் நீல நிறத்தில் கடற்கரை ஒளிரும் காட்சியைக் காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். மின்மினிக் கணவாய்களுக்கு என்றே பிரத்யேகமான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

விசித்திர உயிரினங்கள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7357339.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: காற்றில் இருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம்!

 
masala_2729553f.jpg
 

காற்றில் இருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனம். ஃபான்டஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கருவி சூரிய சக்தியால் இயங்குகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து தண்ணீரை இழுத்து, வடிகட்டி, சுத்தமான தண்ணீராக பாட்டிலில் சேமிக்கிறது. வியன்னாவைச் சேர்ந்த கிறிஸ்டோஃப் ரெடிஸர் இந்தக் கருவியை உருவாக்கியிருக்கிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சோடா பாட்டிலை எடுக்கும்போது அவற்றின் வெளிப்பக்கங்களில் நீர்த்துளிகள் காணப்படும். அந்த நுட்பத்தைப் பயன்படுத்தியே காற்றில் இருந்து தண்ணீரைப் பெறும் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார் கிறிஸ்டோஃப். நீண்ட தூரம் நடைப்பயணம் மேற்கொள்பவர்களும் சைக்கிள் பயணம் மேற்கொள்பவர்களும் தண்ணீரைச் சுமந்து திரிய வேண்டியதில்லை, தண்ணீரைத் தேடி அலைய வேண்டியதில்லை. இவர்களுக்காக 2 விதங்களில் ஃபான்டஸ் கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நடந்து செல்பவர்கள் ஃபான்டஸ் கருவியை சூரிய சக்தி மூலம் சார்ஜ் செய்துகொண்டால், காற்றில் இருக்கும் ஈரப்பதம் தண்ணீராக மாறி, பாட்டிலுக்குள் சேர்ந்துவிடும். சைக்கிளில் செல்பவர்களுக்கு சைக்கிளிலேயே கருவியை இணைத்துக்கொள்ளலாம்.

காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் அதிகம் கிடைக்கும். குளிர்ப் பிரதேசங்களில் இருந்து பாலைவனங்கள் வரை இந்தக் கருவியில் இருந்து தண்ணீர் பெற முடியும். ஒரு மணி நேரத்தில் அரை லிட்டர் தண்ணீர் கிடைக்கும். வெப்பநிலை 86 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்போது 80 முதல் 90 சதவிகித ஈரப்பதம் காற்றில் இருக்கும். அப்பொழுது ஒரு நிமிடத்துக்கு 30 சொட்டுகள் வீதம் ஒரு மணி நேரத்தில் அரை பாட்டில் தண்ணீர் கிடைக்கும். இந்தத் தண்ணீர் தூசி, பூச்சிகளை வடிகட்டிவிடும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக இருக்காது. சுத்தமான காற்றாக இருந்தால் தாராளமாகக் குடித்துவிடலாம். இதற்காகவே கார்பன் ஃபில்டர்களைப் பொருத்தும் திட்டமும் பரிசோதனை முயற்சியில் இருக்கிறது.

காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்து, குடி தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் ஃபான்டஸ் கருவி மிகவும் உதவியாக இருக்கும். ஃபான்டஸ் கருவியைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிதியைத் திரட்டி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது ஃபான்டஸ். ஒரு கருவியின் விலை 6,800 ரூபாய்.

உலகில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் நாள் வெகு தொலைவில் இல்லை!

உகாண்டாவின் குயின் எலிசபெத் நேஷனல் பார்க்கில் இரண்டு புகைப்படக்காரர்கள் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் வெள்ளை மீன்கொத்தி கேமராவில் சிக்கியது. பொதுவாக மீன்கொத்திகள் கண்கவர் வண்ணங்களைக் கொண்ட பறவைகளாகவே இருக்கின்றன. மரம், செடிகளுக்கு இடையே அமரும்போது சட்டென்று கண்களுக்குப் புலப்படுவதில்லை. மீன்கொத்திகளில் 90 வகைகள் இருக்கின்றன. எல்லா மீன்கொத்திகளும் பெரிய தலையுடனும் கூர்மையான நீண்ட அலகுடனும் கண்கவர் வண்ணங்களுடனும் காட்சியளிக்கின்றன. மிக அரிதாகவே வெள்ளை மீன்கொத்திகள் பார்வைக்கு வருகின்றன.

அட! வெள்ளை மீன்கொத்தியும் அட்டகாசமாகத்தான் இருக்கு!

நைஜீரியாவில் வசிக்கும் 24 வயது ஹனீஃபா ஆடம், ‘ஹிஜார்பி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் விதவிதமான பார்பி பொம்மைகளின் படங்களை வெளியிட்டு வருகிறார். இங்கே வெளியிடப்படும் பார்பி பொம்மைகள் அனைத்தும் ஹிஜாப் அணிந்திருக்கின்றன. அதாவது ஹனீஃபாவைப் போலவே ஆடைகளும் ஹிஜாபும் அணிந்துள்ளன. அதனால் இந்தப் பொம்மைகளுக்கு ‘ஹிஜார்பி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். ’’முஸ்லிம் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பார்பி பொம்மைகள் இல்லை. பார்பி பொம்மைகளை எங்கள் கலாசாரத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டேன். பாராட்டுகள் குவிகின்றன. எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. ஹிஜாப் என்பது எங்களுக்கான பிரத்யேக அடையாளம். அதை வைத்து பார்பி பொம்மைகளை உருவாக்கியதில் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. பார்பி பொம்மைகளை இறக்குமதி செய்து, ஹிஜார்பி பொம்மைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறேன்’’ என்கிறார் ஹனீஃபா.

இந்திய பார்பிகள் கூட பாவாடை, தாவணி, சேலை எல்லாம் கட்டுகின்றன!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8211607.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாரம்பரிய டயட்

 
 
masala_2731030f.jpg
 

நியூயார்க்கைச் சேர்ந்த சமையல் கலைஞர் பஸ்க்வாலே கோஸோலினோ 168 கிலோ எடை கொண்டவராக இருந்தார். இத்தாலியில் இருந்து நியூயார்க் வந்ததில் இருந்து தினமும் ஒரு பாக்கெட் ஓரியோ பிஸ்கெட்டும் 2,3 சோடா கேன்களும் குடிப்பார். எடை வெகு வேகமாக அதிகரித்துவிட்டது. எடை அதிகரிப்பால் எந்த நேரமும் மாரடைப்பு வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துவிட்டனர். மூட்டு வலி, முதுகு வலி, அல்சர் என்று பல பிரச்சினைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் கோஸோலினோ. இத்தாலிக்குச் சென்றார்.

அங்கே பாரம்பரியமாகத் தயாரிக்கப்பட்டு வரும் பிட்ஸாவின் செய்முறையைக் கற்றுக்கொண்டார். சுத்திகரிக்கப்படாத மாவு, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் என்ற 4 பொருட்களை மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படும் பிட்ஸா இது. இதில் வெண்ணெய் உட்பட வேறு எந்தப் பொருட்களும் சேர்ப்பதில்லை. இந்த மாவை 36 மணி நேரம் ஊறவைத்து, 12 அங்குல பிட்ஸாவாக உருவாக்கினார். தக்காளி சாஸ், பச்சைக் காய்கறிகள் சேர்த்தார். இதிலிருந்து 600 கலோரிகள் கிடைத்தன. இது மதிய உணவுக்கானது. காலையில் பல வகை தானியங்கள், பழங்கள், ஆரஞ்சு ஜூஸ், காபி எடுத்துக்கொண்டார்.

இரவில் காய்கறிக் கலவை, கடல் உணவு, ஒரு தம்ளர் ஒயின். ஒரு நாளைக்கு 2,700 கலோரிகள் கிடைத்தன. சர்க்கரை சேர்க்காமல், கலோரிகள் குறைய ஆரம்பித்தபோது தலைவலியும் கோபமும் அதிகரித்தன. சில மாதங்களில் உடல் இந்த உணவுக்குப் பழகிவிட்டது. 3 மாதங்களில் 18 கிலோ குறைந்துவிட்டது. ‘‘தினமும் பிட்ஸா சாப்பிடுவதால் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை விட்டுவிட்டேன். உடலுக்குத் தேவையான சரிவிகித சத்துகள் கிடைத்தன. 7 மாதங்களில் 46 கிலோ எடை குறைந்துவிட்டது. இடுப்பு அளவு 48 அங்குலத்தில் இருந்து 36-க்கு வந்துவிட்டது.

‘‘இயற்கையான, பாரம்பரிய உணவுகள் மூலம் எடையைக் குறைக்க முடியும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன். என்னுடைய டயட்டை மருத்துவர்களும் அங்கீகரித்துவிட்டனர். என் முகமே மாறிவிட்டது. மிக உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். தங்களுக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள்’’ என்கிறார் கோஸோலினோ.

ஆச்சரியமான டயட்டாக இருக்கிறதே!

 

அமெரிக்காவில் வசிக்கும் சாராவுக்கு டிஸ்னியின் கதாபாத்திரங்கள் மீது சின்ன வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். அவர் வளர்ந்த பிறகு, எல்லோரும் டிஸ்னி இளவரசியைப் போலவே இருப்பதாகக் கூறினார்கள். மார்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரியும் சாரா, 10 லட்சம் ரூபாயைச் செலவு செய்து 17 இளவரசி உடைகளை வாங்கினார். வார இறுதி நாட்களில் டிஸ்னி இளவரசி போல ஆடைகள் அணிந்து, வலம் வந்தார். ‘‘நான் இவ்வளவு செலவு செய்வதோ, டிஸ்னி இளவரசியாக வலம் வருவதோ என் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை.

ஒவ்வொரு ஆடையையும் தயாரிக்க 6 மாதங்கள் பிடித்தது. முழுநேரமும் டிஸ்னி இளவரசியாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். என்னுடைய பெரிய கண்களும் பொம்மை போன்ற உடலும் கச்சிதமாக டிஸ்னி கதாபாத்திரங்களுக்குப் பொருந்திவிடுகின்றன. பிறந்தநாள், திருமணம் போன்ற விழாக்களில் நான் பங்கேற்றால் 1 மணி நேரத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். சிண்ட்ரெல்லா, ஸ்லீப்பிங் பியூட்டி, லிட்டில் மெர்மயிட், ராபுன்ஸெல், ஸ்நோ ஒயிட் என்று எந்தக் கதாபாத்திரங்களில் வரச் சொன்னாலும் நான் வந்துவிடுவேன்’’ என்கிறார் சாரா.

கலக்குங்க பிரின்சஸ்!

 

கனடாவில் உள்ள க்யூபெக் சஃபாரிக்குச் சென்றது ஒரு குடும்பம். கார் நிறுத்தும் இடத்துக்கு பனிமான் ஒன்று வந்தது. அதைப் பார்த்த தந்தை, ‘‘உனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டு கேரட் ஒன்றைக் கொடுத்தார். சாப்பிட்ட பனிமான், பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையிடம் சென்றது. அந்தக் குழந்தை சிறிதும் பயப்படவில்லை. தன் அப்பாவைப் போலவே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடி, கேரட்டைக் கொடுத்தது. வாங்கிச் சாப்பிட்ட பனிமான், அடுத்து காருக்குள் தலையை விட்டு கேரட்களைத் தேடியது. குழந்தை சிறிது பயந்தாலும் ஆச்சரியமடைந்தது. மீண்டும் கேரட்டைக் கையில் எடுத்தது. பனிமான் அவள் கொடுக்கும் வரை காத்திருக்காமல், கையில் இருந்து தானே எடுத்துக்கொண்டது. பிறகு அங்கிருந்து நகர்ந்தது.

புது விலங்குகளிடம் குழந்தைகளை நெருங்க விடுவது ஆபத்தானது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D/article8217825.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குதிரைகளிடம் இனி முறைக்காதீர்கள்..

 
masala_2732341f.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்த உளவியலாளர்கள், குதிரைகளால் மனிதர்களின் முகபாவனைகளை அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள். 28 குதிரைகளிடம் கோபமான ஆண்களின் புகைப்படங்களைக் காட்டியபோது, அவை கோபத்தை வெளிப்படுத்தின. குதிரைகளால் கோபத்தையும் மகிழ்ச்சியையும் புரிந்துகொள்ள முடிகிறது என்பதை முதல் முறை அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற குதிரைகளுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட வில்லை.

மனிதர்களின் கோபமான முகங்களைக் காணும்போது குதிரைகளின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. அழுத்தம் அதிகரிக்கிறது என்கிறார்கள். விலங்குகள் ஆராய்ச்சியாளரான ஏமி ஸ்மித், ‘’நேர்மறை எண்ணங்களை விட எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன குதிரைகள். நீண்ட காலம் மனிதர்களோடு குதிரைகள் வசித்து வந்தாலும் தற்போதுதான் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த முடிந்திருக்கிறது’’ என்கிறார்.

குதிரைகளிடம் இனி முறைக்காதீர்கள்…

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நோயலா ருகுண்டோ, ஆப்பிரிக்காவின் புருண்டிக்கு கணவர் பலெங்கா கலாலாவுடன் வந்தார். 11 ஆண்டுகளுக்கு முன்பு காங்கோவில் இருந்து அகதியாக வந்தவர் கலாலா. மொழிபெயர்ப்பாளராக அவரைப் பயன்படுத்தினார் நோயலா. பிறகு நட்பு காதலானது. இருவரும் திருமணம் செய்துகொண்டு, 3 குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

‘‘காலப்போக்கில் கலாலாவின் குணம் மிகவும் மூர்க்கமாக மாறியது. ஆனால் என்னைக் கொல்லும் அளவுக்குச் செல்வார் என்று நான் நினைக்கவே இல்லை. ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த என்னை, கதவைத் திறந்து வெளியே வருமாறு போன் செய்தார் கலாலா. கதவைத் திறந்தபோது சிலர் துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். என் கண்களைக் கட்டி, நாற்காலியில் அமர வைத்தனர். ஸ்பீக்கர் போன் மூலம் கலாலா என்னைக் கொன்றுவிடும்படிச் சொன்னதைக் கேட்டதும் நொறுங்கிப் போனேன். கொலை செய்ய வந்தவர்கள், பெண்களைக் கொல்வதில்லை என்ற கொள்கையுடையவர்கள்.

அதனால் என்னை 2 நாட்கள் அறைக்குள் அடைத்து வைத்து, விட்டுவிடுவதாகவும் என்னை எங்காவது சென்றுவிடும்படியும் கேட்டுக்கொண்டனர். அங்கே பேசிய அனைத்து விஷயங்களையும் போனில் பதிவு செய்துகொண்டேன். மெல்போர்ன் திரும்பினேன். தேவாலயத்துக்குச் சென்று ஃபாதரிடம் உண்மையை எடுத்துக் கூறினேன். அவர் என்னைப் பக்கத்து வீட்டில் தங்கி, கவனிக்கச் சொன்னார். என் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார் கலாலா. நள்ளிரவு என் இறுதிச் சடங்கு நடைபெற்றது. காரில் காத்திருந்த நான், வெளியில் வந்தேன். கலாலா அதிர்ச்சியடைந்துவிட்டார். நான் ஏற்கெனவே போலிஸுக்குத் தகவல் கொடுத்திருந்தேன். அவர்கள் கலாலாவைக் கைது செய்து, அழைத்துச் சென்றனர். கொலை முயற்சிக்காக 9 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அவளைக் கொன்றுவிடு என்று என் கணவரே சொன்னதைக் கேட்டு இன்றுவரை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன்’’ என்கிறார் நோயலா.

தன் இறுதிச் சடங்கில் தானே கலந்துகொள்வது எவ்வளவு கொடுமையானது!

நியு யார்க்கில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பேகெல் ஸ்டோர். உலகின் மிக அழகான பேகெல் இங்கிருந்துதான் கிடைக்கிறது. ‘ரெயின்போ பேகெல்’ என்று அழைக்கப்படும் இந்த அழகான பேகெல் சுவையில் பிரமாதப்படுத்துகிறது. பேகெல் ஸ்டோரின் உரிமையாளரும் ரெயின்போ பேகெலை உருவாக்கியவருமான ஸ்காட் ரோசில்லோ,‘‘இது ஒரு கலை. அதிக நேரம் தேவைப்படும். 5 மணி நேரங்களில் 100 பேகெலை மட்டுமே உருவாக்க முடியும். இதுவே சாதாரண பேகெலாக இருந்தால் 5 ஆயிரம் பேகெலை உருவாக்கி விடமுடியும்’’ என்கிறார். பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் என்று நியான் உணவு வண்ணங்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வண்ணத்திலும் தனித்தனியாக மாவு பிசைந்து, தட்டையாகத் தேய்த்து, ஒன்றின் மீது ஒன்று அடுக்கி, வெட்டுகிறார்கள். வெட்டியப் பகுதியை உருளையாக்கி, அவனில் வைத்து எடுத்தால் பேகெல் தயார். இதில் முட்டையோ, பால் பொருட்களோ சேர்ப்பதில்லை. பேகெலின் மீது சீஸ், க்ரீம் வைத்து விதவிதமான சுவைகளில் கொடுக்கிறார்கள். ரெயின்போ பேகெலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் குவிகின்றன. ஆனால் குறைவான அளவிலேயே உற்பத்தி இருப்பதால், எல்லோரும் காத்திருக்க வேண்டும். ஒரு ரெயின்போ பேகெல் 268 ரூபாய்.

அடர் வண்ணங்களில் பார்க்க அழகாக இருந்தாலும் உடலுக்குத் தீங்கு இழைக்காமல் இருந்தால் சரி…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8222158.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இல்லம் தேடி வரும் தேவாலயம்!

 
masala_2734103f.jpg
 

இங்கிலாந்தில் நகரும் தேவாலயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

‘மெர்சி பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தேவாலயம் ஏழை, எளிய மக்களை நாடிச் செல்கிறது. பிரார்த்தனைகள் நடத்துகிறது. ஆசீர்வாதங்களை வழங்குகிறது. பாவ மன்னிப்புகளை அளிக்கிறது. சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறது. நகரும் தேவாலயத்துக்கான திட்டத்தை உருவாக்கியவர் ஃபாதர் ஃப்ரான்கி மல்க்ரூ. கடந்த கோடை காலத்தில் போப் பிரான்சிஸை சந்தித்தபோது அவருக்கு இந்தத் திட்டத்துக்கான யோசனை உதித்தது. ‘அர்ஜெண்டினாவில் ஏழைகள் வாழும் இடங்களில் போப் திறந்தவெளியில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். அப்போது தோன்றியதுதான் இந்த யோசனை. இன்று போப் ஆசியுடன் நகரும் தேவாலயத்தை இயக்கி வருகிறோம். மிக அற்புதமான அனுபவங்கள் கிடைத்து வருகின்றன.’ என்கிறார் ஃப்ரான்கி.

இல்லம் தேடி வரும் தேவாலயம்!

உலகப் புகழ்பெற்ற வான் காவின் ஓவியங்களை நிஜமாக மாற்றியிருக்கிறது சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட். தன்னுடைய படுக்கையறையை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் வான் கா. ஓவியத்தில் இருக்கும் அறையை நிஜமாக உருவாக்கியிருக்கிறார்கள். 1888-ம் ஆண்டு தீட்டப்பட்ட இந்த ஓவியம் பளிச்சென்ற வண்ணங்களுடன் காணப்படுகிறது. ஓவியத்தில் இருக்கும் அதே கட்டில், நாற்காலி, படுக்கை விரிப்பு, சுவர் ஓவியங்கள், ஆணியில் தொங்கும் துணி, மேஜை, தண்ணீர்க் குடுவை, ஜன்னல், கதவு, தலையணை, சுவர், வண்ணங்கள் என்று அத்தனையும் அச்சு அசலாக உருவாக்கியிருக்கிறார்கள். வான் காவின் படுக்கை அறைகள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதில் வான் காவின் படுக்கையறை தொடர்பான ஓவியங்கள், கடிதங்கள், புத்தகங்கள், படுக்கையறை என்று 36 படைப்புகள் இடம்பெற இருக்கின்றன. வான் கா ஓவியப் படுக்கையறையில் ஓர் இரவு தங்குவதற்கு 680 ரூபாய் கட்டணம். வான் கா படுக்கையறை ஓவியம் முப்பரிமாணத்தில் வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியத்தில் 3 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் ஓவியம் தற்போது ஆம்ஸ்டர்டாம் வான் கா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது ஓவியம் சிகாகோ ஆர்ட் இன்ஸ்டிடியூட்டில் இருக்கிறது. மூன்றாவது பாரிஸில் உள்ளது.

ஓவியம் நிஜமாவது ரொம்பவே சுவாரசியம்!

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் 2 வயது பேகல் பூனைக்கு பிறக்கும்போதே கண் இமைகள் இல்லை. கண்ணீரும் சுரப்பதில்லை. உரிமையாளர் கரேன், பேகலுக்குப் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்துவிட்டார். ஆனாலும் பலன் ஒன்றும் இல்லை. பேகலின் கண்களைப் பாதுகாப்பதற்கு தினமும் சொட்டு மருந்துகளை விட்டு வருகிறார், சன் க்ளாஸையும் அணிவிக்கிறார். விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். பேகல் கண்ணாடியுடன் சென்றாலும் கண்ணாடி இன்றி சென்றாலும் மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது. பேகலைப் போல மிகவும் அன்பாகவும் நளினமாகவும் நடந்துகொள்ளும் பூனையை இதுவரை தான் பார்த்ததில்லை என்கிறார் கரேன்.

ஏராளமானவர்களின் அன்பைச் சம்பாதித்திருக்கிறது இந்தக் கண்ணாடி பூனை!

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நியு யார்க்கைச் சேர்ந்த ஓர் ஆணும் முதல் முறை விமான நிலையத்தில் சந்தித்த உடனேயே திருமணம் செய்துகொண்டனர். இதை ‘இன்ஸ்டா திருமணம்’ என்கிறார்கள். எரிகாவும் ஆர்ட் வானும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களானார்கள். பல மாதங்கள் நீடித்த நட்பு ஒருகட்டத்தில் மெதுவாகத் தேய ஆரம்பித்தது. கடந்த மே மாதம் முற்றிலும் தொடர்பு விட்டுப் போனது. இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மூடிவிட்டனர்.

புதிய கணக்குகளில் இயங்கி வந்தனர். சில மாதங்களில் இருவராலும் பிரிவைத் தாங்கிக்கொள்ளவே முடிய வில்லை. தொலைபேசி மூலம் பேசினார்கள். மீண்டும் பழைய இன்ஸ்டா கிராம் கணக்கைப் புதுப்பித்தனர். திருமணம் செய்துகொள்வது என்று முடிவு எடுத்தனர். நேரில் சந்திக்கும் அந்தக் கணமே, விமான நிலையத்திலேயே திருமணம் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்டாரியோ விமான நிலையத்தில் எரிகாவைச் சந்தித்தார் வான். உடனே மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

‘‘உண்மையான அன்பு எத்தனை இடர்பாடுகளைச் சந்தித்தாலும் இறுதியில் வென்றுவிடும் என்பதற்கு நாங்களே உதாரணம்’’ என்கிறார் எரிகா.

உண்மைதான் எரிகா

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article8227053.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஓநாய் நண்பன்!

 
 
masala_2735479f.jpg
 

ப்ளோரிடாவின் சீக்ரெஸ்ட் ஓநாய் பாதுகாப்பு மையத்தில் வேலை செய்து வருகிறார் டேனியால். அங்கே 8 வயதான கெகோவா என்ற ஓநாய் மிகவும் அன்பாக மனிதர்களிடம் நடந்து கொள்கிறது. 7 அடி நீளமும் 52 கிலோ எடையும் கொண்ட பெரிய ஓநாயிடம் டேனியால் எந்தப் பயமும் இன்றி பழகுகிறார். ஓநாய் அவர் முகத்தோடு முகம் வைத்து உரசுகிறது, நாக்கால் முகத்தைத் தடவுகிறது. அவர் தோள் மீது காலைப் போட்டுக்கொள்கிறது.

‘‘இந்த ஓநாய்களுடன் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கிறது. என்னிடம் இவ்வளவு அன்பாக ஓநாய் பழகுவதை நினைத்து, நான் பெருமைகொள்கிறேன். சாம்பல் ஓநாய்கள் அலாஸ்கா, கனடா, ஆசியாவில் அதிகம் வாழ்கின்றன. 6 முதல் 10 ஓநாய்கள் சேர்ந்து வசிக்கின்றன. வேட்டையாடும்போது ஒவ்வொன்றும் உதவி செய்துகொள்கிறன. விலங்குகளில் ஓநாய்கள் அற்புதமானவை’’ என்கிறார் டேனியால்.

உங்க தைரியத்துக்கு பாராட்டுகள்!

நியூயார்க்கில் வசிக்கும் கிறிஸ்டினா கார்டா வில்லா, தன்னுடைய 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் கணவர் கேப்ரியல் வில்லா, கிறிஸ்டினாவை 20 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டார் என்ற விஷயம் சமீபத்தில்தான் அவருக்குத் தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் கிறிஸ்டினா. 20 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயது கிறிஸ்டினா, தன்னை விட 30 வருடங்கள் மூத்தவரான 70 வயது கேப்ரியலைத் திருமணம் செய்துகொண்டார்.

‘‘இருவரும் நண்பர்களாக இருந்து, பிறகுதான் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்குள் வயது வித்தியாசம் ஒரு பிரச்சினையாக வந்ததே இல்லை. ஒரு மகனும் பிறந்தான். நியூயார்க்கிலும் பாரிஸிலும் வாழ்ந்தோம். மிக சந்தோஷமான வாழ்க்கை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். திருமணம் ஆன சில மாதங்களிலேயே எனக்குத் தெரியாமல் டொமினிகன் குடியரசில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்துவிட்டார். வழக்கு குறித்து எந்தத் தகவலும் எனக்கு வராமல் பார்த்துக்கொண்டார். நான் நீதிமன்றம் செல்லாமலே அவருக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது. அதற்குப் பிறகும் என்னுடன் 20 ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியிருக்கிறார். காரணம் அவரது சொத்து.

தன்னுடைய மூத்த மகளுக்கு நியூயார்க் வீட்டைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னை விவாகரத்து செய்து, சொத்தில் உரிமை இல்லாதவளாக மாற்றிவிட்டார். வீட்டு வரியில் என்னுடைய பெயர் இல்லாததைச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன். 20 ஆண்டுகளாக ஓர் ஏமாற்றுக்காரரை நல்ல கணவர் என்று நம்பி வாழ்ந்திருக்கிறேன் என்பதுதான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னை ஏமாற்றிய கேப்ரியலை சும்மா விடப் போவதில்லை. எந்த சொத்துக்காக என்னை விவாகரத்து செய்தாரோ, அந்த சொத்தை விற்க நான் விடப் போவதில்லை. என் விவாகரத்து செல்லாது என்று வழக்குத் தொடுத்திருக்கிறேன். அதே நேரத்தில் அவர் எங்கள் மீது காட்டிய அன்பையும் அக்கறையையும் நான் பொய் என்று சொல்லவில்லை. இப்போது கூட மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அவரைச் சேர்த்திருந்தோம். அருகில் இருந்து ஒரு மனைவியாக அத்தனையும் செய்திருக்கிறேன்’’ என்கிறார் கிறிஸ்டினா.

விநோதமான மனிதர்கள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/article8231992.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அசத்தும் கரண்டி மோட்டர்சைக்கிள்!

 
 
bike_2736664f.jpg
 

மெரிக்காவைச் சேர்ந்த கலைஞர் ஜேம்ஸ் ரைஸ் அற்புதமான மோட்டார் சைக்கிள் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மோட்டார்சைக்கிள் முழுவதும் கரண்டிகளை வைத்தே உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் சிறப்பு. கரண்டி மோட்டார்சைக்கிள் ஒவ்வொன்றும் 2 லட்சம் முதல் 2.75 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ‘‘கரண்டி அசாதாரணமானது. கலை பொருட்கள் செய்வதற்கு ஏற்றது. எங்கள் திருமணத்தில் ஏராளமான கரண்டிகள் எஞ்சிவிட்டன. அவற்றைத் தூக்கி எறிய மனம் இல்லை. உடனே கரண்டிகளை வைத்து ஏதாவது செய்யும்படிக் கேட்டுக்கொண்டார் என் மனைவி. அப்படி உருவானதுதான் இந்தக் கரண்டி மோட்டார் சைக்கிள். வரைவதை விட இதுபோன்ற விஷயங்களை உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் அதிகம். நானே என் பைக்குகளை உருவாக்கியிருக்கிறேன். கார்களைப் புதுப்பித்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போதே மினி பைக் உருவாக்கிவிட்டேன். அந்த அனுபவம் மோட்டார் வாகனங்களைச் சிற்பங்களாக மாற்றுவதற்கும் உதவியது. இது 100 சதவீதம் கரண்டிகளால் ஆன மோட்டார் சைக்கிள். கரண்டிகளைத் தேவைக்கு ஏற்ப வளைத்திருக்கிறேன். மோட்டார்சைக்கிளை விரும்புபவர்களுக்கு மட்டுமின்றி, பார்ப்பவர்கள் அனைவருக்கும் என்னுடைய படைப்புகள் பிடிக்கும்’’ என்கிறார் ஜேம்ஸ். இவரது படைப்புகள் பல விருதுகளைக் குவித்துள்ளன.

அசத்தும் கரண்டி மோட்டர்சைக்கிள்!

ஸ்திரேலியாவில் வசிக்கும் 36 வயது ஆண்ட்ரூ டெய்லர், உருளைக்கிழங்கை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறார். ஒரே மாதத்தில் 10 கிலோ எடையையும் குறைத்திருக்கிறார். இந்த உணவுப் பழக்கத்தை ஓராண்டுக்குத் தொடர முடிவெடுத்திருக்கிறார். ’’நான் 151 கிலோ எடையுடன் இருந்தேன். அதிக எடை என்பதால் எல்லோரும் குறைக்கச் சொன்னார்கள். கெட்ட பழக்கங்களை விடச் சொன்னால் விட்டுவிடலாம். ஆனால் உணவுகளை எப்படிக் குறைப்பது? நானே யோசித்து உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடும் முடிவுக்கு வந்தேன். ஏனென்றால் உருளைக்கிழங்கில் எந்தச் சத்தும் இல்லை என்று எல்லோரும் சொல்லியிருந்தனர். உருளைக்கிழங்குகளை வைத்து விதவிதமான உணவுகளைத் தயாரித்தேன். எண்ணெயைத் தவிர்த்தேன். எனக்குத் தேவையான 99 சதவீத கலோரிகள் இந்த உணவுப் பழக்கத்தின் மூலம் கிடைத்துவிட்டன. இந்த உணவுப் பழக்கம் எனக்குப் புத்துணர்வு அளித்தது. உடற்பயிற்சியும் செய்தேன். ஒரே மாதத்தில் 10 கிலோ குறைந்துவிட்டேன். இதைத் தொடர இருக்கிறேன்’’ என்கிறார் ஆண்ட்ரூ. ஊட்டச்சத்து நிபுணர்கள் இவரது உணவுப் பழக்கத்தைத் தவறு என்கிறார்கள். கிழங்குகளில் இருந்து கிடைக்கும் சத்து மட்டும் மனித உடலுக்குப் போதுமானதாக இருக்காது. கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாஷியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்தும் தேவை என்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஆண்ட்ரூவுக்குச் சலிப்பு வந்துவிடலாம். உடலுக்கு வேறு தொல்லைகளும் வந்து சேரலாம் என்று எச்சரிக்கவும் செய்கிறார்கள். ‘‘இது ஒரு பரிசோதனை முயற்சிதான். யாருக்கும் சிபாரிசு செய்ய மாட்டேன்’’ என்கிற ஆண்ட்ரூ, இந்த உணவுப் பழக்கத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

தவறான உணவுப் பழக்கம் ஆபத்தாக முடியலாம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/article8236894.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: செல்லப் பிராணியான ராட்சத பல்லி, பாம்பு

 
masala_2738995f.jpg
 

கலிபோர்னியாவில் வசிக்கிறார் எரிக் லெப்ளான்க். அவரது வீட்டில் ஊர்வனப் பிராணிகளை ஏராளமாக வளர்த்து வருகிறார். ராட்சத பல்லியில் இருந்து பாம்புகள் வரை இங்கே இருக்கின்றன. எரிக் மட்டுமின்றி, அவரது சின்னஞ்சிறு குழந்தைகளும் பிராணிகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். விளையாடுகிறார்கள். ’’என்னுடைய மகளை டிராகன் ஒன்று கடித்துவிட்டது. ஆனாலும் எனக்கோ, என் மகளுக்கோ டிராகன் மீது வருத்தம் இல்லை. இரண்டு வயது மகனின் நெற்றியில் பைதான் கடித்துவிட்டது. விஷம் இல்லாததால் பெரிய பிரச்சினை வரவில்லை.

என்னுடைய குழந்தைகள் மூவருக்கும் விலங்குகளை எப்படிக் கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதனால் 19 அடி மலைப்பாம்பாக இருந்தாலும் கவலை ஒன்றும் இல்லை. பாம்புகள் குழந்தைகளின் உடலைச் சுற்றி, கழுத்தைச் சுற்றி விளையாடுகின்றன. நாம் விலங்குகளை மதித்தால், அவையும் நம்மை மதிக்கின்றன. அன்பாக இருக்கின்றன. அதற்காக எங்கள் கண்காணிப்பு இல்லாதபோது குழந்தைகளை பாம்புகளுடன் விளையாட நான் அனுமதிப்பதில்லை. உயிரினங்கள் மீது அன்பாக இருக்கலாம்; முட்டாள்தனமாக இருக்கக்கூடாது’’ என்கிறார் எரிக்.

நீங்க சொல்வதெல்லாம் புரிந்தாலும் திகிலாகத்தான் இருக்கிறது எரிக்…

 

பிரிட்டனில் வசிக்கிறார் 66 வயது இலோனா ரிச்சர்ட்ஸ். மிகக் குறைந்த பட்ஜெட்டில் வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஓய்வூதியத்தில் தனியாக வாழ்ந்து வரும் இலோனா, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து, மிகச் சிக்கனமான வழிகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார். ’’இரவு நேரத்தில் கடைகளுக்குச் சென்றால் காலாவதியாகும் பழங்களும் காய்களும் குறைந்தவிலையில் கிடைக்கும்.

அவற்றை வாங்கி வந்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்வேன். சூப்பர் மார்க்கெட்களில் தள்ளுபடி கிடைக்கும் பொருட்களை வாங்கிக்கொள்வேன். அசைவ உணவுகளை விட சைவ உணவுகள் விலை குறைவு என்பதால் சைவத்துக்கு மாறிவிட்டேன். காலாவதியான பொருட்கள் என்றால் கெட்டுப்போன பொருட்கள் அல்ல. அவை அந்தத் தேதியில் இருந்து தரம் குறைய ஆரம்பிக்கும் பொருட்கள். அதனால் பரிசோதித்து, தரமானதாக இருந்தால்தான் வாங்குவேன். தொலைக்காட்சி பார்ப்பதில்லை. கம்ப்யூட்டர் மூலம் அனைத்தும் அறிந்துகொள்கிறேன். இரவில் ஒரு விளக்குதான் பயன்படுத்துவேன். விலை குறைவான ஆடைகளை விற்கும் அறக்கட்டளைகளில் துணிகளை வாங்கிக்கொள்வேன்.

என்னுடைய சிக்கனமான நடவடிக்கைகளை வலைப்பக்கத்தில் எழுதி வருகிறேன். இந்தச் சிக்கனமான வாழ்க்கையைக் கடந்த 8 வருடங்களாகப் பின்பற்றி வருகிறேன். எல்லோரும் பொருளாதாரப் பாதுகாப்பு இன்மையால் நான் இப்படிச் செய்வதாக நினைக்கிறார்கள். நான் தெளிவான மனத்துடன் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மனிதர்களுக்கு விருப்பத்துக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. புது போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பழைய போன் வேலை செய்யும்போது புது போன் வாங்குவது அநாவசியம் என்பதை உணர்வதில்லை’’ என்கிறார் இலோனா.

விருப்பமும் தேவையும் ஒன்றல்ல என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிருக்கீங்க இலோனா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8244223.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொக்கு நடனம்!

masala1_2452062f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கும் ஜார்ஜ் ஆர்ச்சிபல்ட், விருது பெற்ற பறவையியலாளர். அரிய வகை கொக்கு ஒன்றுக்காகத் தன் வாழ்நாளில் 3 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். 1976ம் ஆண்டு அண்டோனியோ உயிரியல் பூங்காவில் டெக்ஸ் என்ற ஒரே ஒரு பெண் கொக்கு மட்டும் இருந்தது. உலகம் முழுவதும் இருந்த 100 கொக்குகளில் இதுவும் ஒன்று.

பூங்கா நிர்வாகிகள் டெக்ஸை இனப்பெருக்கம் செய்ய விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் தன்னுடைய பொறுப்பில் டெக்ஸை எடுத்துக்கொண்டார். ஜார்ஜும் டெக்ஸும் மிக நெருங் கிய நண்பர்களாக மாறினார்கள். இனப் பெருக்க காலம் வந்தது. கொக்குகள் நடனமாடுவது போலவே டெக்ஸோடு சேர்ந்து நடனமாடினார் ஜார்ஜ். டெக்ஸ் மகிழ்ச்சி அடைந்தது. ஒரு முட்டை இட்டது.

ஆனால் அந்த முட்டை குஞ்சு பொரிக்கும் அளவுக்கு இல்லை. அடுத்த ஆண்டு இனப் பெருக்க காலம் வரை காத்திருந் தார் ஜார்ஜ். மீண்டும் கொக்குடன் நடனமாடினார். முட்டையிட்டு, அடை காத்தது டெக்ஸ். ஆனால் முட்டையிலிருந்து இறந்த குஞ்சுதான் வெளிவந்தது. மூன்றாவது ஆண்டு மீண்டும் டெக்ஸ் முட்டை இட்டது.

இந்த முறை முட்டையை செயற்கையாக அடை காத்தனர். முட்டையிலிருந்து குஞ்சு வெளி வந்தது. ‘கீ விஸ்’ என்று பெயர் சூட்டினார் ஜார்ஜ். விரைவிலேயே டெக்ஸ் இறந்து போனது. ஆனால் டெக்ஸின் இனப்பெருக்கத்தால் அரிய கொக்குகள் இன்றும் உலகில் உள்ளன. அரிய கொக்கின் இனத்தைக் காப்பாற்றி, எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த ஜார்ஜுக்கு ஏகப்பட்ட விருதுகளும் பணமும் வழங்கப்பட்டன. கொக்கு பாதுகாப்பு மையத்தில் வேலை செய்து வரும் ஜார்ஜ் வட கொரியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், க்யூபா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, கொக்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறார்.

உங்கள் அரிய சேவை தொடரட்டும் ஜார்ஜ்!

ஸ்காட்லாந்தின் மேற்கு டன்பர்ட்டோன்ஷயர் பகுதியில் இருக்கும் 50 அடி பாலத்தை ‘தற்கொலை பாலம்’ என்று அழைக்கிறார்கள். இதுவரை 600 நாய்கள் அந்தப் பாலத்தில் இருந்து குதித்துவிட்டதாகவும், அதில் 50 நாய்கள் இறந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். பாலத்தின் ஆரம்பத்திலேயே நாய்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை இருக்கிறது.

அடர்ந்த மரங்களும் அமானுஷ்ய அமைதியும் அங்கே நிலவுகிறது. 1994ம் ஆண்டு கெவின் மோய் என்பவர் தன் குழந்தையுடன் குதித்து, இறந்து போனார். அதிலிருந்து அந்த இடத்துக்கு வரும் நாய்கள் எல்லாம் குதித்து விடுவதாகச் சொல்கிறார்கள். கால்நடை மருத்துவர் டேவிட் சாண்ட்ஸ், இது தற்செயலான நிகழ்வுதான் என்கிறார்.

’’எந்த நாயும் உயிரை விடுவதற்காக அங்கே குதிக்கவில்லை. ஏதோ ஆர்வத்தில் குதித்திருக்கலாம். எனக்கே அந்தப் பகுதி ரொம்ப விநோதமான அனுபவத்தைத் தந்தது. அதேபோல நாய்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். 600 நாய்கள் குதித்திருக்கின்றன என்பதெல்லாம் மக்களின் கட்டுக்கதை’’ என்கிறார் டேவிட் சாண்ட்ஸ்.

டிமாண்டி பாலம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article7357340.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மர வீடுகள்

 
 
masala_2741533h.jpg
 

நியூயார்க்கைச் சேர்ந்த 27 வயது ஃபாஸ்டர் ஹண்டிங்டன் ஃபேஷன் டிசைனராக இருந்தார். திடீரென்று அந்த வேலை பிடிக்காமல் போய்விட்டது. 2011-ம் ஆண்டு தன் வேலையை விட்டுவிட்டார். தன்னுடைய வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்றார். சில மாதங்கள் நகரும் வேனில் குடியிருந்தார். பிறகு அதுவும் சலிப்பைத் தந்தது. விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து, போட்டோ புத்தகங்களைத் தயாரித்து விற்பனை செய்தார்.

2014-ம் ஆண்டு தன்னுடைய சிறு வயது கனவான மரவீடு கட்ட முடிவு செய்தார். சேமிப்புகளை எடுத்துக்கொண்டு, வாஷிங்டனில் உள்ள ஸ்காமானியாவுக்கு சென்றார். அவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் 2 மரங்களில் வீடுகளைக் கட்ட திட்டமிட்டார். தன்னுடைய கல்லூரி நண்பர்கள் 20 பேரை அழைத்தார். ஆளுக்கு ஒரு வேலையாகப் பகிர்ந்துகொண்டு மர வீடுகளை உருவாக்கினார்கள். ஒரு வீடு 20 அடி உயரத்திலும் இன்னொரு வீடு 30 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டது. 2 வீடுகளையும் மரப் பாலத்தால் இணைத்தனர்.

“அதிகாலை ஆயிரக்கணக்கான பறவைகள் மரங்களில் இருந்து கிளம்பும் காட்சி அற்புதமாக இருக்கும். மேகங்கள் மிக அருகில் தொட்டுச் செல்லும். மான்கள் துள்ளி விளையாடும். தூரத்தில் அருவி கொட்டிக்கொண்டிருக்கும். பனிக் காலத்தில் மட்டும் கொஞ்சம் கடினமாக இருக்கும். தண்ணீர் உறைந்துவிடும். பொழுது போக்குவதற்காக ஸ்கேட்டிங் திடல் கட்டியிருக்கிறோம். இது மட்டுமே செங்கல், சிமெண்ட் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இயற்கையுடன் சேர்ந்து வாழும் இந்த வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் இதுவரை அனுபவித்தது இல்லை” என்கிறார் ஃபாஸ்டர்.

இப்படி ஓர் இடத்தில் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஒரு பாறாங்கல்லைப் பார்க்கும்போது ஜெர்மனியில் உள்ள ஓர் அருங்காட்சியகம் போல காட்சியளிக்கும். ஆனால் உற்றுப் பார்த்தால் அது ஒரு சாதாரண பாறாங்கல் அல்ல. பாறையைக் குடைந்து சில கருவிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். வெளியில் இருந்து நெருப்பு வைத்தால் அந்த வெப்பம் மின் ஆற்றலாகப் பாறைக்குள் மாற்றம் அடைகிறது. அதிலிருந்து wi-fi இணைப்புக் கிடைக்கிறது. ஸ்மார்ட் போனில் இண்டர்நெட் மூலம் அத்தனை வேலைகளையும் இயல்பாகச் செய்ய முடிகிறது.

இதை உருவாக்கியவர் பெர்லினைச் சேர்ந்த கலைஞர் அரம் பார்தோல். “பழைய நுட்பங்களையும் புதிய நுட்பங்களையும் இணைத்து இதை உருவாக்கியிருக்கிறேன். மின்சாரம் இல்லாவிட்டால் மின்சார அடுப்பை இயக்க முடியாது. அப்பொழுது விறகு அடுப்புதான் கை கொடுக்கிறது. இதுதான் எனக்கு உந்து சக்தியாக இருந்தது. அதிலிருந்து இந்தத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தேன். இதுபோன்ற சிறு அடுப்புகளை உருவாக்கினால் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை, மின்சாரமாக மாற்றிக்கொள்ளலாம். போன்களுக்கு அதில் இருந்து சார்ஜ் செய்துகொள்ள முடியும்” என்கிறார் அரம் பார்தோல்.

வித்தியாசமான கண்டுபிடிப்பு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8252329.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பார்வை இழந்தும் நீர்ச்சறுக்கு விளையாட்டு

 
 
masala_2743167f.jpg
 

பிரேசிலைச் சேர்ந்த டெரெக் ராபெலோ நீர்ச்சறுக்கு விளையாடும்போது எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிறந்ததில் இருந்து ராபெலோவுக்குப் பார்வை தெரியாது. பார்வை இல்லாவிட்டாலும் மற்றவர்களைப் போலவே தன் மகனும் இயல்பாக இருக்க வேண்டும், சாகசம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தார் அவரது அப்பா. தினமும் அதிகாலை கடலுக்கு அழைத்துச் செல்வார். அலைகளின் ஓசைகளையும் நீரின் ஆவேசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ராபெலோவுக்குப் பழக்கினார்.

அலைகளின் ஓசையை வைத்தே, அது எப்படிப்பட்ட அலை என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ராபெலோ நிபுணத்துவம் பெற்றார். நீர் விளையாட்டுகளில் இறங்கினார். ஆரம்பத்தில் ராபெலோவின் அப்பா பயிற்சியளித்தார். பிறகு சக நீர்விளையாட்டு வீரர்கள் ராபெலோவுக்கு உதவி வருகிறார்கள். ‘‘எனக்குப் பார்வை இல்லை என்பது குறித்து கவலைப்பட்டதில்லை. பார்வை இல்லாததால் எந்தவிதத்திலும் இழப்பைச் சந்திக்கவில்லை. சக வீரர்கள் என்னை ஒரு பார்வையற்றவனாக எப்பொழுதும் பார்த்ததில்லை. எல்லா விதங்களிலும் சரி சமமாகவே நடத்துகிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது கனவு இருந்தால், அதை உங்களால் செய்ய முடியும் என்று முதலில் நம்புங்கள். இல்லாவிட்டால் அதைச் செயல்படுத்துவது கடினமாகிவிடும்’’ என்கிறார் 23 வயது ராபெலோ. ’’பார்வையற்றவர்கள் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அத்தனை எளிதான விஷயமில்லை. அபாரமான ஆற்றல் இருந்தால்தான் இது சாத்தியம்’’ என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

பார்வை இல்லாமல் அலைகளைக் கையாள்வது ஆச்சரியமானது!

 

சீனாவில் வசிக்கும் ஸு ஷுன்லுவும் அவரது மனைவி லி ஹுவான்வும் 35 ஆண்டுகளாக ஒரு விருந்தினரைத் தங்கள் வீட்டில் தங்க வைத்து, பார்த்துக்கொள்கிறார்கள்! 35 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் வந்துகொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஸு ஸென்னை எல்லோரும் கிண்டல் செய்தனர். அவர் பதில் பேசவும் இல்லை, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் இல்லை. அந்தக் காட்சியைக் கண்ட தம்பதியர் இருவரும் ஸென்னை வீட்டுக்கு அழைத்து வந்தனர். தங்களது சிறிய வீட்டில் தங்க வைத்தனர். தங்களது குறைந்த வருமானத்தை ஸென்னுக்கும் பகிர்ந்தளிக்க அவர்கள் சிறிதும் தயங்கவில்லை.

ஆரம்பத்தில் புதிய சூழலில் ஸென்னால் பொருந்திக்கொள்ள முடியவில்லை. பல முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். தம்பதியர் இருவரும் அவரைத் தேடிப் பிடித்து அழைத்து வருவார்கள். தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து, குடும்பப் பெயரையும் சூட்டினார்கள். நாளடைவில் சமைக்கவும் சுத்தம் செய்யவும் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளவும் கற்றுக்கொடுத்தனர். இன்று 70 வயதான ஸென் சிறு சிறு வேலைகள் செய்து, தனக்கான உணவைத் தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டார்.

80 வயதைத் தாண்டிய தம்பதியர், இன்றும் ஸென்னை ஒரு குழந்தை போல அன்புடன் கவனித்துக்கொள்கிறார்கள். குடும்பம் பற்றி எப்பொழுது கேட்டாலும் பதிலே சொன்னதில்லை ஸென். இன்று யாராவது அந்தக் கேள்வியைக் கேட்டால் இந்தத் தம்பதியரைத்தான் தன் குடும்பம் என்கிறார்.

எதிர்பார்ப்பில்லாத அன்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8256384.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: செவ்வூதா

 
masala_2744552f.jpg
 

ஜப்பானின் ஷிண்டோமி நகரில் இருக்கும் அந்த வீட்டுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். தோட்டம் முழுவதும் செவ்வூதா நிறத்தில் கம்பளம்போல பூத்திருக்கும் பூக்களைப் பார்ப்பதற்காகவும் நறுமணத்தை நுகர்வதற்காகவும் மக்கள் படையெடுக்கிறார்கள். இந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர் குரோகி. 1956-ம் ஆண்டு குரோகி, யாசுகோவைத் திருமணம் செய்துகொண்டார். உடனே இந்த இடத்தை வாங்கினார். வீட்டைக் கட்டினார். 60 மாடுகளுடன் பால் பண்ணை அமைத்தார். பல ஆண்டுகள் உழைப்பில் ஓரளவு வசதி ஏற்பட்டது.

ஓய்வு பெற்ற பிறகு ஜப்பான் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்று முடிவு செய்தனர். யசுகோவுக்குத் திடீரென்று பார்வை பறிபோனதால் மன அழுத்தத்துக்கு உள்ளானார். புற உலகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டார். மனைவியின் இந்த மாற்றம் குரோகியை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒருநாள் பூங்காவில் நின்றுகொண்டிருந்தபோது, இளஞ்சிவப்பு நிறப் பூக்களின் நறுமணம் அவர் நாசியைத் துளைத்தது. இதேபோல ஒரு பூந்தோட்டத்தைத் தன் வீட்டில் அமைத்தால், மனைவியால் நறுமணத்தை உணர முடியும். தோட்டத்தைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் வருவார்கள். மனைவிக்கும் பேச்சுத் துணையாக இருக்கும் என்று எண்ணினார். உடனே பால் பண்ணையை மூடினார். செவ்வூதா நிறப் பூக்கள் செடிகளைப் பயிரிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் நினைத்தது போலவே அற்புதமான பூந்தோட்டம் உருவாகிவிட்டது. கண்களையும் நாசியையும் கவர்ந்தது. தோட்டம் பற்றிய செய்தி வேகமாகப் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். பூந்தோட்டத்தை மட்டுமின்றி குரோகியையும் யசுகோவையும் பார்த்தார்கள், பேசினார்கள், பாராட்டினார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். நாள் முழுவதும் யசுகோ புன்னகையுடன் வலம் வந்தார். ’’இப்போது என் குறைபாட்டை நினைத்து நான் வருந்துவதில்லை. இத்தனை அன்பான மனிதர் என் கணவராக இருக்கும்போது எனக்கு எதற்குப் பார்வை?’’ என்று கேட்கிறார் யசுகோ.

எத்தனை அற்புதமான கணவர்!

கனடாவின் தென்பகுதியில் இருக்கும் மிகச் சிறிய நகரம் நோர்மன் வெல்ஸ். 800 மக்கள் வசிக்கும் இந்த நகரில் தொழில் முறையில் முடி வெட்டுவதற்கு ஒருவர் கூட இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக பெரும்பாலானவர்கள் தங்கள் முடியைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவருக்கு முடி வெட்டுவதில் உதவி செய்துகொள்கிறார்கள். ஆனால் யார் தலையும் நேர்த்தியாக இல்லை. ‘’இது மிகச் சிறிய நகரம். இங்கே இருந்த முடிதிருத்துனர் வேறு நகரத்துக்குச் சென்றுவிட்டார்.

அதிலிருந்து எங்களுக்கு மோசமான சூழ்நிலை ஆரம்பித்துவிட்டது. அரசாங்கம் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்கிறார்கள். ஆனால் யாராவது வந்தால்தானே? நான் என் கணவருக்கு ஓரளவு நன்றாகவே முடி வெட்டி விடுகிறேன். ஆனால் எல்லோருக்கும் இந்த வேலையை என்னால் செய்ய இயலாது. எங்கள் ஊருக்கு யாராவது நிரந்தரமாகத் தங்கக்கூடிய முடிதிருத்துனர் வந்தால், அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் தொழிலாக இது இருக்கும். அவர்களுக்குப் பணம் மட்டுமல்ல, எங்களின் அன்பையும் ஏராளமாக வழங்குவோம்’’ என்கிறார் நிக்கி ரிச்சர்ட்ஸ்.

அடப்பாவமே… இது 'தலை'யாய பிரச்சினைதான்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE/article8260943.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடடா! நாற்காலிகளில் ஓய்வெடுக்கும் பல்லிகள்!

 
 
leocard_2745648f.jpg
 

லிபோர்னியாவில் வசிக்கும் ஹென்றி லிஸார்ட், பல்லிகள் மீது மிகவும் அன்பும் ஆர்வமும் உடையவர். 1986-ம் ஆண்டு தன்னுடைய பெயரின் பின்பகுதியில் லிஸார்ட் என்று சேர்த்துக்கொண்டார். தன் வீட்டிலேயே பல்லிகள், பச்சோந்திகளை வளர்த்து வருகிறார். அவரது ஹில்ஸ் கஃபே விடுதியில் இரண்டு பச்சைப் பல்லிகளை வைத்திருக்கிறார். சிறிய நாற்காலிகளில் இரண்டும் மனிதர்களைப் போலவே அமர்ந்திருக்கின்றன. நாற்காலிகளைச் சுழற்றினாலும் இரண்டும் கண்டுகொள்ளவில்லை. கையைத் தலைக்கு அடியில் வைத்து ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றன. விடுதிக்கு வருகிற வாடிக்கையாளர்கள் இவற்றைச் சுற்றிச் சுற்றி புகைப்படங்கள் எடுக்கி றார்கள். மனிதர்களின் சத்தத்துக்கோ, கேமராக்களின் வெளிச் சத்துக்கோ இவை சிறிதும் பயப்படவில்லை. எல்லாவற்றையும் அமைதி யாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ‘‘50 பல்லிகள் வீடு முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து, வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள் தயாரித்து வருகிறேன். தனக்கு இந்த இடம் பாதுகாப்பானது என்பதை பல்லி உணர்ந்துகொண்டால், அதைப் போல ஒரு சாதுவான பிராணியைப் பார்க்க முடியாது. பணம் சம்பாதிப்பது அல்ல என் நோக்கம். பல்லிகள் அற்புதமானவை என்பதைக் காட்டுவதே என் நோக்கம்’’ என்கிறார் ஹென்றி.

அடடா! நாற்காலிகளில் ஓய்வெடுக்கும் பல்லிகள்!

ப்பானைச் சேர்ந்த 22 வயது மாணவி ரெய்க்கோ ஹோரி, மனிதர்கள் வசிக்காத தீவுக்குச் சுற்றுலா சென்றார். அந்தத் தீவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாதகமான சூழல் எதுவும் இல்லை. இரவும் பகலும் தன்னந்தனியாக 19 நாட்களைக் கழித்திருக்கிறார். டுகாஸ்டவே என்ற சுற்றுலா நிறுவனம் வித்தியாசமான சுற்றுலாக்களை உலகம் முழுவதும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. ரெய்க்கோ தனியாக ஒரு தீவில் தங்கும் சாகச சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்தார். இதுவரை இந்தச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்த முதல் பெண் ரெய்க்கோதான்! ‘‘நான் இந்தச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்ததில் அந்த நிறுவனமே கவலையடைந்தது. உருப்பெருக்கிக் கண்ணாடியும் தற்காப்புக்கு ஒரு துப்பாக்கியும் என்னிடம் இருந்தன. தீவின் நுழைவாயிலில் ஒரு காவலர் இருந்தார். ஏதாவது ஆபத்து என்றால் நான் அவரைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆனால் அவரைப் பார்ப்பதற்கே 40 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். முதல் 24 மணி நேரம் தனிமை என்னை மிகவும் வதைத்து விட்டது. இப்படியே இருந்தால் நான் வந்த நோக்கம் நிறைவேறாது என்று புரிந்தவுடன், என் மனநிலையை மாற்றிக்கொண்டேன். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதாவது விலங்குகள் வரும் சத்தம் கேட்டால் வேறு இடத்துக்குச் சென்றுவிடுவேன். கடலுக்குள் சென்று வேட்டையாடி, கடல்வாழ் உயிரினங்களை உணவாக்கிக்கொண்டேன். மழை வரும்போது தண்ணீரைப் பிடித்துக் குடித்துக்கொண்டேன். மற்ற நாட்களில் இளநீர் சாப்பிட்டேன். மழை வரும்போதுதான் தங்குவதற்கு ஒரு கூடாரம் இல்லை என்ற வருத்தம் வந்தது. மழைக்குப் பிறகு பூச்சிகளின் தொல்லை வேறு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் கிடைத்தது. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்வதற்குப் பழகிக்கொண்டேன். திருப்தியாக என் தனிமைப் பயணம் முடிந்தது. பொதுவாகத் தனிமையை விரும்பும் நான் இந்த 19 நாள் பயணத்துக்குப் பிறகு, மனிதர்களை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்’’ என்கிறார் ரெய்க்கோ.

கொடுமையிலும் கொடுமையானது தனிமை!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8264150.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: விமானம் ஓட்டும் நாய்கள்

 
 
masala_2748031f.jpg
 

நாய்களை வைத்து விமானம் ஓட்டும் முயற்சி பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நாய்கள் கார் ஓட்டியுள்ளன, காவல்துறைக்குத் துப்பு துலக்கும் பணிகளைச் செய்து வருகின்றன. அதனால் நாய்களால் விமானத்தையும் ஓட்ட முடியும் என்கிறார் நிகழ்ச்சியை வழங்க இருக்கும் ஜாமி தீக்ஸ்டன்.

1 லட்சம் நாய்களில் இருந்து 12 நாய்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த நாய்களுக்கு 10 வாரங்கள் பயிற்சியளிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பயிற்சி காலத்தில் நாய்களின் இயல்பு, புத்திசாலித்தனம், பொறுமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம், நினைவுத் திறன், தகவல் பரிமாற்றம் போன்றவற்றைக் கண்காணிக்க நிபுணர்கள் காத்திருக்கிறார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாய், விமானம் ஓட்டும் பயிற்சிக்கு அனுப்பப்பட இருக்கிறது. நாய்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில் சிங்கிள் இன்ஜின் விமானத்தை ஒரு நாய் ஓட்டிச் செல்வதைக் காட்டப் போகிறார்கள்.

நிச்சயமாக ஒரு புத்திசாலி நாயால் விமானத்தை ஓட்ட முடியும் என்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள். ஆனால் நாய்கள் உளவியல் பேராசிரியர் ஸ்டான்லி கோரென், ‘‘3 வயது மனிதக் குழந்தையை விமானம் ஓட்ட அனுமதிப்போமா? 3 வயதுக்குள்தான் இருக்கின்றன இந்த நாய்கள். நாய்கள் புத்திசாலித்தனமானவைதான். அதற்காக மனிதர்கள் நினைப்பதை எல்லாம் நாய்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என்று கடுமையாக எதிர்க்கிறார். ஆக்ஸ்போர்ட் சயின்டிபிக் ஃபிலிம்ஸின் க்ரியேட்டிவ் டைரக்டர், ‘‘பாதுகாப்பாகவும் துன்புறுத்தாமலும் பயிற்சியளிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதி புத்திசாலி நாயால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என்கிறார்.

உலகின் முதல் நாய் விமானி என்ற பட்டம் எந்த நாய்க்குக் கிடைக்கப் போகுதோ...

 

ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு மொபைல் போன் கடையில், ஐபோன்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்கு ஒரு விநோத வழியைக் கையாள்கிறார்கள். ஒவ்வொரு ஐபோனும் மத குருவால் ஆசிர்வதிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ‘’ஆதாம், ஏவாள் சாத்தானின் ஆப்பிளைச் சாப்பிட்டதால், இங்குள்ள மக்கள் ஆப்பிள் ஐபோன்களைச் சாத்தான்களாக நினைக்கிறார்கள். அதனால் விற்பனை மிக மோசமாக இருந்தது. மத குருவால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்கள் வாங்கினால் எந்தத் தீய சக்தியும் அண்டாது என்பதைச் சொல்லி விற்பனை செய்து வருகிறோம்.

அதனால் ஒவ்வொரு போனையும் குரு மந்திரம் சொல்லி, ஆசிர்வதித்து தருகிறார். இப்பொழுது விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது’’ என்கிறார் கடையின் மேனேஜர் ஜார்ஜி மச்சவாரியானி. இந்த விஷயம் வெளியே வந்து, ஏகப்பட்ட விமர்சனங்களைச் சந்தித்தது. ஒவ்வொரு ஐபோனையும் ஆசிர்வதிக்கவில்லை, கடையையும் கடையின் ஊழியர்களையும்தான் குரு ஆசிர்வதித்தார் என்று இப்போது சொல்லிவிட்டார்கள்.

வியாபாரம் ஆகணும்னா என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8271300.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கலக்கிட்டீங்க டயானா!

 
ulaga_2749159f.jpg
 

கொலம்பியாவைச் சேர்ந்த டயானா பெல்ட்ரன் ஹெர்ரெரா வண்ணக் காகிதங்களில் அற்புதமான பறவைகளை உருவாக்கி விடுகிறார். நிஜப் பறவைகள் போலவே இருக்கும் இந்தக் காகிதப் பறவைகளுக்கு வண்ணக் காகிதங்களுடன் கொஞ்சம் பசையும் கத்தரிக்கோல்கள் மட்டுமே தேவை என்கிறார் டயானா. ‘’காகிதப் பறவைகளுக்கு முன்பு நான் மரங்களில் பலவித உருவங்களை உருவாக்கிக்கொண்டிருந்தேன். மீன்கள், விலங்குகள், பழங்கள் போன்றவற்றை விரும்பிச் செய்து வந்தேன். ஒரு கண்காட்சி நடத்தினேன். வேறு புதுமையாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது காகிதப் பறவைகள் செய்யும் யோசனை உதித்தது. கொலம்பியாவில் வசிக்கும் பறவைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினேன். அத்தனை பறவைகளையும் காகிதங்களில் கொண்டு வர விரும்பினேன். ஒரு பறவை உருவாக வேண்டும் என்றால் என்னென்ன வண்ணக் காகிதங்கள் தேவைப்படும் என்பதை முதலில் யோசித்து, வாங்கி வைத்துக்கொள்வேன். பிறகு ஒவ்வொரு பகுதியையும் அழகாக வெட்டுவேன். பசை கொண்டு ஒட்டிவிடுவேன். ஒரு பறவையை உருவாக்க 5 முதல் 14 நாட்கள் வரை ஆகும். வண்ணக் காகிதப் பறவைகளைச் செய்வதற்காகத் தொடர்ந்து பறவைகள் பற்றி படித்து வருகிறேன். பறவைகளைச் செய்யும்போது மனம் புத்துணர்வு பெறுகிறது. ஒவ்வொரு பறவையை முடிக்கும்போதும் குழந்தையைப் போல என் மனம் குதூகலிக்கிறது’’ என்கிறார் டயானா.

கலக்கிட்டீங்க டயானா!

நியுயார்க்கைச் சேர்ந்தவர் டெர்ரெல் ஃபின்னர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த வாரம் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அதில் மூக்கில் இரண்டு குழாய்கள், கையில் ஒரு குழாய் செருகப்பட்டிருந்தன. ’’ஹெட்போனை மூக்குக்குள் வைத்தேன். மேக்புக் சார்ஜரை என் கைக்கு அடியில் வைத்துக்கொண்டேன். புகைப்படங்கள் எடுத்தேன். என்னைப் பார்ப்பவர்களுக்கு மருத்துவமனை படுக்கையில் இருப்பது போலத் தோன்றும். இந்தப் படங்களை என் கெமிஸ்ட்ரி புரொபசருக்கு அனுப்பிவைத்தேன். மூக்கில் இருந்து ரத்தம் வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னால் பரீட்சை எழுத முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். உலகம் முழுவதும் என்னுடைய புகைப்படங்கள் பரவிவிட்டன. 6 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டேன். உங்கள் அத்தனைப் பேரின் வேண்டுதல்களுக்கும் நன்றி என்று தகவல் போட்டேன். எல்லோரும் என் புகைப்படம் பார்த்து உண்மை என்று நம்பிவிட்டனர். இது ஹெட்போன், மேக்புக் சார்ஜர் என்று யாரும் கண்டுபிடிக்கவில்லை’’ என்கிறார் டெர்ரெல். பல்கலைக்கழகத்தில் நகைச்சுவையாகவும் புத்திசாலித்தனமாகவும் பல விஷயங்களைச் செய்து வரும் டெர்ரெலின் இந்த நடவடிக்கையை பலர் பாராட்டுகிறார்கள். சிலரோ எப்படி எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார்கள்.

உங்க க்ரியேட்டிவிட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்தக்கூடாதா டெர்ரெல்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/article8274737.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொடூர ஒப்பனை அழகி!

 
 
masala_2450481f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கிறார் 24 வயது ஜோர்டன் ஹான்ஸ். இவர் ஓர் ஒப்பனைக் கலைஞர். புராணக்கதைகளில் வரக்கூடிய கொடூரமான உருவங்களைத் தன் முகத்தில் இரண்டு ஆண்டுகளாக வரைந்து வருகிறார். 3 முதல் 5 மணி நேரம் செலவிட்டு, ஓர் ஒப்பனையை நிறைவு செய்கிறார்.

அழகான முகத்தை இப்படிக் கோரமாக மாற்றிக்கொள்ளலாமா என்று ஏராளமானவர்கள் எதிர்மறை விமர்சனங்களைச் சொல்லி வருகிறார்கள். “உலகத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குப் பிடித்த வேலையை நான் செய்கிறேன். என் கணவர் ஒருநாள் கூட ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டது இல்லை. இதைவிட வேறு என்ன வேண்டும்?’’ என்று கேட்கிறார் ஜோர்டன்.

அழகு, பார்ப்பவர்களின் கோணத்தில் இருக்கிறது!

சோம்சாய் நிட்டிமாங்கோல்சாய் பேட்மேனின் மிகப் பெரிய விசிறி. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசிக்கிறார். பேட்மேனுக்கான பிரத்யேக அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கே 50 ஆயிரம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 2005-ம் ஆண்டு பேட்மேன் படம் பார்த்ததில் இருந்து, பேட்மேன் மீது தீவிரமான ஆர்வம் வந்துவிட்டது என்கிறார் சோம்சாய். பேட்மேன் உண்டியல்தான் முதலில் வாங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரிக்க, ஒவ்வொரு பொருளாக வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்துவிட்டார்.

நாளடைவில் அனைத்து கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மீதும் ஆர்வம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் சேகரிக்க ஆரம்பித்தபோது, வீட்டில் இடம் இல்லை. உடனே தனியாக ஓர் அருங்காட்சியகம் வைக்கும் எண்ணம் வந்தது. 2012-ம் ஆண்டு 50 ஆயிரம் பொருட்களுடன் பேட்மேன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இண்டியானா ஜோன்ஸ், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட், ஷ்ரெக், நீமோ, மிக்கி மவுஸ், ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களைப் பார்ப்பதற்காக தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். டி-சர்ட், சாவிக் கொத்து, பணப்பை, கடிகாரம் போன்றவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய பேட்மேன் ஏலம் நடத்துவேன் என்கிறார் சோம்சாய்.

ஏலம் விட்டால் சோம்சாய் கோடீஸ்வரராக மாறிடுவார்!

ஈக்வடாரில் வசிக்கும் 68 வயது பல்டஸர் உஷ்காவை எல்லோரும் ’பனி மனிதன்’ என்று அழைக்கிறார்கள். உஷ்காவின் குடும்பம் பரம்பரையாகப் பனிக் கட்டிகளை வெட்டி, வியாபாரம் செய்து வருகிறது. தினமும் சிம்போராஸோ மலை உச்சி வரை சென்று, பனிக்கட்டிகளை வெட்டி, கீழே கொண்டு வருகிறார் உஷ்கா. 5 மணி நேரத்தை இதற்காகச் செலவிடுகிறார். பனிக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்துவிட்டதால், தற்போது யாரும் இந்த வேலையைச் செய்வதில்லை. உஷ்காதான் இந்த வேலையைச் செய்யும் கடைசி மனிதர்.

காலை 7 மணிக்கு கழுதைகளுடன் செல்கிறார். சுத்தமான பனிக்கட்டிகளை வெட்டி எடுக்கிறார். அருகில் வளர்ந்திருக்கும் கோரைப் புற்களைக் கொண்டு பனிக்கட்டிகளைக் கட்டுகிறார். பிறகு கழுதை மீது வைத்து நகருக்கு எடுத்து வருகிறார். இயற்கையாகக் கிடைக்கும் பனிக்கட்டி, ருசியாக இருப்பதால் பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். பழங்களை வைத்து, அவரே இந்தப் பனிக்கட்டியால் ஐஸ்க்ரீம் தயாரித்து, விற்பனை செய்கிறார். வாரம் ஒருமுறை சந்தைக்குச் சென்று, பனிக்கட்டிகளை விற்று, ரூ.1,500 சம்பாதித்து வருகிறார். சர்வதேச திரைப்படத்துறையினர் உஷ்காவைச் சந்தித்திருக்கிறார்கள்.

குறும்படம் எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் உஷ்காவை நேரில் சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு நேரடியாகத் தன் வேலையைச் செய்து காட்டுகிறார். இதற்காக உஷ்காவுக்கு ஓரளவு அன்பளிப்பும் கிடைக்கிறது. “நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. என் முன்னோர்கள் செய்த, குடும்பத் தொழிலைத்தான் செய்து வருகிறேன். இதில் என்ன விசேஷம் இருக்கிறது?’’ என்கிறார் உஷ்கா.

எளிமையான பனிமனிதர்!

சீனாவின் பல இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நான்ஜிங் பகுதியில் உள்ளவர்கள் தெருவில் சூழ்ந்திருந்த வெள்ளத்துக்காகக் கண்ணீரும் விட்டனர்; சந்தோஷமும் பட்டனர். நீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து கஷ்டமாக இருந்தது. அதே நேரம் தேங்கியிருந்த நீரில் ஏராளமான மீன்கள் துள்ளி விளையாடின. வலைகளைப் போட்டு வீட்டு வாசலில் இருந்தே மீன்களைப் பிடித்துவிட்டனர். அருகிலிருந்த மீன் பண்ணை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், அங்கிருந்த மீன்கள் வெளியேறிவிட்டன. இதனால் மக்களுக்கு லாபம்.

சிரமத்திலும் சில சமயம் லாபம் கிடைக்கும்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF/article7353479.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பொம்மை வேட்டைக்காரர்

 
 
masala_2755049f.jpg
 

சீனாவைச் சேர்ந்த சென் ஸிடோங் தன்னிடம் ஒளிந்திருந்த வித்தியாசமான திறமையைக் கடந்த ஆண்டுதான் கண்டுபிடித்தார். கட்டணம் செலுத்திவிட்டு, கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொம்மைகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் இயந்திரக் கைகளால் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் பொம்மைகள் எடுத்தவருக்கே வழங்கப்படும். பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் யாராலும் பொம்மைகளை எடுத்துவிட முடிவதில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருந்து 3000 பொம்மைகளை எடுத்திருக்கிறார் சென்!

ஜியாங்ஹு ஷாப்பிங் மாலில் இருப்பவர்கள் இவரை, ‘பொம்மை இயந்திரத்தின் கடவுள்’ என்று அழைக்கிறார்கள்! ஆனால் பொம்மை இயந்திரத்தின் உரிமையாளர்களோ, சென்னை எப்படியாவது விளையாட விடாமல் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ’’சூப்பர்மார்க்கெட் வாயிலில் இந்தப் பொம்மை விளையாட்டு இருந்ததைக் கண்டேன். பொழுதுபோக்காக விளையாடிப் பார்த்தேன். என்னால் முதலில் பொம்மைகளை எடுக்கவே முடியவில்லை. பொறுமையாக யோசித்தேன். அதன் பிறகு நான் கை வைக்கும்போதெல்லாம் பொம்மைகள் கிடைக்க ஆரம்பித்தன. எனக்கே ஆச்சரியமாகிவிட்டது.

ஒருதடவை அங்கே சென்றால் 100 பொம்மைகளாவது எடுத்துக்கொண்டுதான் திரும்புவேன். கொஞ்சம் கவனமும் புரிந்துணர்வும் இருந்தால் போதும், பொம்மைகளை அள்ளிவிடலாம். இயந்திரக் கை மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை வைத்து பொம்மைகளைப் பிடிப்பது கடினம். ஒரு பொம்மையின் விலை 100 ரூபாய். நான் 50 ரூபாய் கொடுத்து விளையாடுகிறேன். கை நிறைய பொம்மைகளுடன் திரும்பி வருகிறேன். நண்பன் ஒருவன் பொம்மைகளைப் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டான்.

பொம்மை இயந்திர உரிமையாளர்கள் கதறப் போகிறார்கள்… ஏனென்றால் என் சேகரிப்பில் இருந்து பத்தில் ஒரு பங்குதான் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது!’’ என்கிறார் சென்.

பொம்மை வேட்டைக்காரர்… கதறும் உரிமையாளர்…

 

அமெரிக்காவில் வசிக்கிறார் 7 வயது லெக்ஸி மெல்டன். இவர் பிறக்கும்போதே கீழ்த்தாடை இன்றி பிறந்திருக்கிறார். உலகிலேயே மிக அரிதான auriculo-condylar குறைபாடு இது. கீழ்த்தாடை இல்லாததால் லெக்ஸியால் மூச்சுவிடுவதோ, பேசுவதோ, சாப்பிடுவதோ முடியாத காரியம். மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் ஒரு குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

செயற்கையாகத் தாடையை உருவாக்குவதற்காக இதுவரை 11 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 3 அறுவை சிகிச்சைகளாவது செய்தால்தான் ஓரளவு தாடை முழுமையடையும் என்கிறார்கள் மருத்துவர்கள். ’’ஒரு குழந்தை இத்தனைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் லெக்ஸி மிகவும் உறுதியானவளாக இருக்கிறாள். மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கிறாள். லெக்ஸி எங்களுக்குக் கிடைத்த பரிசு! உலகிலேயே 24 பேர் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் என் மகளும் ஒருத்தி’’ என்கிறார் லெக்ஸியின் அம்மா.

ஐயோ… என்ன கொடுமை இது?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/article8292028.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலக அழகி அனா!

 
masala1_2449419f.jpg
 

ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக இருக்கிறார் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரோச்செல் பாண்டேர். இவருக்கு வயது 18தான் என்றாலும் 144 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி போலக் காணப்படுகிறார். 14 வயதில் அனாவுக்கு மரபணுக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரண மனிதர்களின் வளர்ச்சியை விட 10 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது இவருக்கு. பற்கள் விழுந்து, முகம் சுருங்கி, குறுகிய உருவமாக மாறிவிட்டார் அனா. 80 பேர் உலகில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் இருவர் பிலிப்பைன்ஸில் இருக்கிறார்கள். நீண்ட காலம் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அனாவின் 18வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். அனாவுக்குப் பிடித்த தொலைக்காட்சி பிரபலம் சாரா ஜெரோனிமோவை வரவழைத்தார்கள். மூன்று வெவ்வேறு வித ஆடைகளில் தோன்றிய அனா, மிகவும் மகிழ்ச்சியாகப் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அடப் பாவமே…

அமேசானில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான 10 புத்தகங்களில் 5 புத்தகங்கள் வண்ணம் தீட்டும் புத்தகங்கள்! இவை குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் புத்தகங்கள் அல்ல. பெரியவர்களுக்கான புத்தகங்கள். வீடு, அலுவலகம் என்று பெண்கள் நாள் முழுவதும் பரபரப்பாகவே இருக்கிறார்கள். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும், மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

பதிப்பாளர் மைக்கேல் ஓ மாரா 28 தலைப்புகளில் வண்ணம் தீட்டும் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். மொத்தம் 5 லட்சம் புத்தகங்கள் இதுவரை விற்பனையாகி இருப்பதாகச் சொல்கிறார். பிரிட்டனில் உள்ள பெரும்பாலான பெண்கள் ஓய்வு நேரங்களில் வண்ணங்களைத் தீட்டி வருகிறார்கள். வண்ணம் தீட்டும்போது சோர்ந்திருக்கும் மூளை தூண்டப்படுகிறது என்கிறார் மருத்துவர் டேவிட் ஹோம்ஸ்.

“வண்ணம் தீட்டிய இரண்டு மணி நேரங்களில் குழப்பமான மனம் தெளிவடைகிறது. நல்ல முடிவை எடுக்க வைக்கிறது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது’’ என்கிறார் ஃபியோனா. “வேலை… வேலை என்று இருக்கும் நான் என் உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டேன். அப்பொழுதுதான் வண்ணம் தீட்ட ஆரம்பித்தேன். மனம் சந்தோஷமாக மாறுகிறது. உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்கிறார் கட்டிடக் கலைஞர் நவோமி.

அட! இனி குழந்தைகளுடன் அம்மாக்களுக்கு போட்டி!

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE/article7349673.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அமேசான் மழைக்காட்டு மர்ம நதி!

 
masala_2759160f.jpg
 

பெரு நாட்டுப் பகுதி அமேசான் மழைக்காடுகளில் மர்மமான நதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. 6.4 கி.மீ. நீளத்துக்கு இந்த நதியின் நீர் வெப்ப நீராக மாறி இருக்கிறது. 50 டிகிரியிலிருந்து 90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது. இந்த நதிக்குள் தவறி விழும் விலங்குகள் சில நிமிடங்களில் உயிரிழந்து, மிதக்கின்றன. வெப்ப நதிக்குப் பல காரணங்களைக் கதைகளாகச் சொல்கிறார்கள்.

1930-ம் ஆண்டு முதலே வெப்ப நீர் நதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த நீர் ஏன் வெப்பமாக மாறுகிறது என்பதற்குச் சரியான அறிவியல் விளக்கம் இன்றுவரை கிடைக்கவில்லை. அமேசானிலிருந்து 400 மைல்கள் தூரத்தில் ஓர் எரிமலை இருக்கிறது. அதனால் எரிமலையில் இருந்தும் இந்த நீர் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ரூஸோ என்ற இளம் விஞ்ஞானி இந்தப் பகுதிக்கு வந்து, ஆராய்ச்சி செய்த பிறகு தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

‘‘தண்ணீருக்குள் கை வைத்தபோது, மிகவும் சூடாக இருந்தது. சட்டென்று கையை எடுத்துவிட்டேன். தவறி விழுந்தால் உயிர் பிழைக்க முடியாது. ஆற்றில் இருந்து ஆவி வந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வருவது அத்தனை எளிதல்ல. அதிக வெப்பமாக இருக்கிறது. விஷப் பூச்சிகள் கடிக்கும். இங்கே வருவதே ஆபத்தான விஷயம்’’ என்கிறார் ரூஸோ.

மனிதன் இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன…

அமெரிக்காவைச் சேர்ந்த டிசைனர் சூசன் மெக்லெரி புதிய ஆபரணங்களை உருவாக்கி வருகிறார். தாவரங்களில் இருந்து உருவாக்கப்படும் நெக்லஸ், தோடு, மோதிரம், பிரேஸ்லெட் போன்றவற்றுக்கு ஏராளமான வரவேற்பு இருக்கிறது. 2 முதல் 4 வாரங்களில் வளரும் தாவரங்களின் பகுதிகளை வைத்து இந்த நகைகளை உருவாக்குகிறார் சூசன். ‘’எனக்குத் தாவரங்கள் மீதும் ஆபரணங்கள் மீது ஆர்வம் அதிகம். பூங்கொத்துகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தேன். என்னுடைய தோழிகள் நகைகள் டிசைன் செய்து கொடுக்கச் சொன்னார்கள். தாவரங்களையும் நகைகளையும் இணைத்து புது ஃபேஷனை உருவாக்கி விட்டேன். என்னுடைய தாவர நகைகள் பிரத்யேகமானவை.

திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்குப் பயன்படுத்தக் கூடியவை. நானே ஒவ்வொரு நகையையும் என் கைகளால் உருவாக்குகிறேன். இங்கே என்ன தாவரங்கள் வளர்கின்றனவோ, அவற்றை வைத்தே நகைகளை உருவாக்குகிறேன். இந்த நகைகளை மென்மையாகக் கையாண்டால் சில வாரங்கள் வரை பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் மணப்பெண்கள் இந்த நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர். எளிமையும் அழகும் இந்த நகைகளில் மிளிர்கின்றன. 1,400 ரூபாயிலிருந்து 20 அயிரம் ரூபாய் வரை தாவர ஆபரணங்களை விற்பனை செய்து வருகிறேன்’’ என்கிறார் சூசன்.

எளிய பொருளில் செய்தாலும் விலை எளிமையாக இல்லையே சூசன்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/article8303522.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.