Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: சூப்பர் ஸ்டார் கங்காரு!

 
masala_2433939f.jpg
 

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ் கங்காரு சரணாலயத்தின் சூப்பர் ஸ்டார் ரோஜர். பெண் கங்காருக்களைப் பாதுகாப்பதற்காக மற்ற ஆண் கங்காருக்களிடம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறது ரோஜர். ஒரு குத்துச் சண்டை வீரர் போல இரண்டு கால்களால் நிமிர்ந்து நின்று, உடற்பயிற்சி செய்கிறது. ரோஜருக்குத் தனியாக உலோக டின்களைக் கொடுத்துப் பயிற்சியளிக்கிறார்கள். உலோக டின்களை இரண்டு கைகளால் ஓங்கி அடித்து, உடைத்து, தூக்கி எறிகிறது ரோஜர்.

கிறிஸ் ப்ரோக்லா பார்னெஸ் சரணாலயத்தின் மேனேஜராக மட்டுமின்றி, ரோஜரின் அம்மாவாகவும் பார்த்துக்கொள்கிறார். 9 வயதான ரோஜர் 90 கிலோ எடையும் 7 அடி உயரமும் கொண்டதாக இருக்கிறது. இன்னும் மிகப் பெரியதாக வளரும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். 2006ம் ஆண்டு சாலையோரத்தில் ரோஜரின் அம்மா இறந்து கிடந்தது. உள்ளங்கை அளவு இருந்த ரோஜரை அந்த வழியே வந்த கிறிஸ் எடுத்து வந்து, சரணாலயத்தில் வளர்த்து வருகிறார். சரணாலயத்தின் செல்லக் குழந்தையாகவும் கங்காருக்களில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறது ரோஜர்.

அடேங்கப்பா…

மனச் சோர்வு, மன அழுத்தம், கோபம், பதற்றம், வெறுமை போன்றவை ஏற்படும்பொழுது அதிலிருந்து மீள்வது சற்றுக் கடினமான விஷயமாக இருக்கும். நம் மன நிலையை நாமே சரி செய்துகொண்டு, புத்துணர்ச்சி பெற்றுக்கொள்வதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நரம்பணுவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து `Thync’ என்ற கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவியை முன் தலையில் மாட்டிக்கொண்டால் மனநிலை வேகமாக மாறும். சந்தோஷமாக இருக்க வேண்டுமா, புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா, தீவிரமாகச் சிந்திக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்துகொண்டு, கருவியை அதற்கேற்றவாறு மாற்றிக்கொண்டால் போதும்.

நீங்கள் விரும்பிய மனநிலைக்குத் திரும்பிவிடுவீர்கள். ஸ்மார்ட் போன் மூலம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு கருவியை இயக்கிக்கொள்ளலாம். நிம்மதி தேடுகிறேன், துக்கத்தை மறக்க நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டு மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டிய அவசியமில்லை. இந்தச் சின்னக் கருவியே துக்கத்திலிருந்து விடுவித்து, சந்தோஷமான மனநிலைக்கு மாற்றிவிடுகிறது. ஹார்வார்டைச் சேர்ந்த பொறியியல் நிபுணர்களும் நரம்பணுவியல் நிபுணர்களும் இணைந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்காக 95 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. 3,700 மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் விற்பனைக்கு வந்து, அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது Thync.

அட! நல்ல விஷயமாகத்தான் தெரியுது!

சீனாவின் பீஜிங், ஹாங்ஸோவ் என்ற இரண்டு இடங்களில் புதிய வகை சூப்பர் மார்க்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கே விற்பனைப் பிரதிநிதிகள் கிடையாது. தேவையான பொருட்களைக் கடையில் எடுத்துக்கொண்டு, கணக்குப் பார்த்து, ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்திவிட்டு வர வேண்டும். மக்கள் நேர்மையாக இருப்பதற்குக் கற்றுத் தருகிறது இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் என்கிறார்கள் உரிமையாளர்கள். மிக மிகக் குறைந்த ஆட்களே கடையில் இருக்கிறார்கள். எ

ந்தப் பொருட்களை எடுத்தாலும் கேள்வி கேட்க மாட்டார்கள். எடுத்த பொருட்களுக்குப் பணம் செலுத்தாவிட்டால் கூட விசாரிக்க மாட்டார்கள். “யார் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் நேர்மையாக இருப்பதுதான் உங்களின் அடிப்படைக் குணம். அதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் நம்பிக்கையை நிச்சயம் நீங்கள் காப்பாற்றுவீர்கள்’’ என்கிறார்கள்.

நல்ல நம்பிக்கை..

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/article7301507.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: ஜீன்ஸில் கின்னஸ் சாதனை!

 
 
masala_2856748f.jpg
 

துருக்கியில் தையல் கலைஞராக இருக்கிறார் 34 வயது காசிம் அண்டக். உலகிலேயே மிகச் சிறிய ஜீன்ஸைத் தைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். ’’நாங்கள் பரம்பரையாக தையல் தொழிலைச் செய்து வருகிறோம். நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது மிகவும் அலுப்பாகத்தான் இருந்தது. ஒரே மாதிரி வேலையைச் செய்கிறோம் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. என்னால் வேறு தொழிலையும் செய்ய முடியாத சூழல். இந்தத் தொழிலை இன்னும் சுவாரசியமாக மாற்றிக்கொள்வது எப்படி என்று யோசித்தேன். புதுப் புது யோசனைகள் உதித்தன. அவற்றைச் செய்து பார்த்தபோது, ஏராளமான வரவேற்பு கிடைத்தது. என் அப்பா ஒரு குழந்தைக்கு சிறிய ஜீன்ஸைத் தைத்துக் கொடுத்தார்.

அதைப் பார்த்துதான் மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 7.5 செ.மீ. ஜீன்ஸை உருவாக்கிப் பார்த்தேன். வெற்றிகரமாகத் தைத்து முடித்த பிறகு, 5 செ.மீ. ஜீன்ஸைத் தைக்க ஆரம்பித்தேன். அளவு சிறியதாகப் போகும்போது தைப்பதும் கடினமாகிக்கொண்டே வரும். 2.5 செ.மீ. ஜீன்ஸ் தைத்து முடித்தவுடன், அதை விடச் சிறியதைத் தைக்க முடியுமா என்று என் அப்பா சவால் விட்டார். அந்தச் சவாலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக 0.9 செ.மீ. ஜீன்ஸையும் தைத்து முடித்தேன். இந்தச் சிறிய ஜீன்ஸை தையல் இயந்திரத்தில் தைக்க முடியாது. ஆனால் அதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறேன். கின்னஸ் புத்தகத்துக்கும் தகவல் அனுப்பினேன். உலகிலேயே மிகச் சிறிய ஜீன்ஸ்களை உருவாக்கியவன் என்று கின்னஸ் அமைப்பு என்னைத் தேர்வு செய்துவிட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’’ என்கிறார் காசிம்.

கஷ்டமான சாதனைதான் காசிம்… வாழ்த்துகள்!

வியட்நாமைச் சேர்ந்த டான் வின் இயற்கை ஆர்வலர். ’’என்னுடைய தோட்டத்தில் ஐரோப்பிய பறவை ஒன்று நீல வண்ணத்தில் 4 முட்டைகளை இட்டிருந்தது. முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மரத்தில், கூட்டுக்கு மேலே ஒரு கேமராவைப் பொருத்தியிருந்தேன். அன்று தாய்ப் பறவை வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது. முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளி வரும் நேரமாக இருக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் தாய்ப் பறவை உணவு தேடிச் சென்றுவிட்டது. மிகப் பெரிய பாம்பு ஒன்று கூட்டுக்கு வந்து, 4 முட்டைகளையும் ஒவ்வொன்றாக விழுங்கியது. பிறகு வேகமாக மரத்திலிருந்து இறங்கிச் சென்றுவிட்டது. இந்தக் காட்சியைக் கண்டு நான் அதிர்ந்துவிட்டேன். அழகான குஞ்சுகளை எதிர்பார்த்துக் காத்திருந்த நான், யாரோ துரோகம் இழைத்துவிட்டதைப் போல உணர்ந்தேன். கூட்டுக்குத் திரும்பும் தாய்ப் பறவைக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போதே கஷ்டமாக இருந்தது. இயற்கை எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதில்லை…’’ என்கிறார் டான் வின். பாம்பு முட்டைகளை விழுங்கும் காட்சியை இதுவரை உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

 

ஓர் உயிர் இன்னொன்றுக்கு உணவு…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article8610603.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பயோனிக் கை!

 
 
masala_2857927f.jpg
 

லண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்னணுவியலையும் உயிரியலையும் இணைத்து செயற்கை ‘பயோனிக்’ கையை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கை இயற்கை கை போலவே மென்மையாகவும் பல செயல் களைச் செய்யக்கூடிய தாகவும் இருக்கிறது. அத்துடன் இந்தச் செயற்கைக் கையில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். டார்ச் லைட்டாகவும் பயன் படுத்திக்கொள்ள முடியும். பொழுதுபோகவில்லை என்றால் பாடல்களைக் கூட கேட்க முடியும்.

“நான் உயிரியல் விஞ்ஞானியாக இருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வந்தபோது, ரயிலில் உரசி தண்டவாளத்தில் விழுந்துவிட்டேன். என்னால் அவர்களைக் கூப்பிட முடியவில்லை. கண்காணிப்பு கேமராவில் பார்த்துதான் என்னைத் தூக்கினார்கள். உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள். நுரையீரல் பாதிப்பு, மண்டையோட்டிலும் முகத்திலும் எலும்பு முறிவு, முதுகுத்தண்டு நொறுங்கிவிட்டது, இடது கையும் காலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. 12 நாட்கள் கோமாவில் இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறினேன். 12 அறுவை சிகிச்சைகள் உடல் முழுவதும் செய்யப்பட்டன. மூன்றரை மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். இடது கைக்குப் பதில் ஒரு கொக்கிதான் பயன்படுத்த முடிந்தது.

என்னால் இந்தக் கொக்கியைக் கையாக நினைக்கவே முடியவில்லை. முழு நேர வேலைக் குச் செல்ல முடியவில்லை. உலகமே இருளானது போல உணர்ந்தேன். தனிமையில் யோசித்தேன். எனக்கு வசதியாக ஒரு செயற்கைக் கையை உருவாக்க முடிவு செய்தேன். நிறையப் படித்தேன். பயோனிக் கையை உருவாக்க ஆரம்பித்தேன். தசை, தோல் போன்றவை உணர்ச்சிகளை எவ்வாறு உணர்கின்றனவோ, அதே போல பயோனிக் கையிலும் சிக்னல்கள், சென்சார்கள் பொருத்தினேன். இந்தக் கை பாட்டரி மூலம் இயங்கும்.

கை செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பயோனிக் கை செய்கிறது. கை செய்யாத சில வேலைகளையும் இது செய்கிறது. அதனால் இனி நான் கை இல்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என்னை வைத்தே இன்னும் பல பயோனிக் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். எல்லாம் சரியாக அமைந்தால், எதிர்காலத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு பயோனிக் உறுப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். என்னை டெர்மினேட்டர் என்று அழைப்பதில் விருப்பம் இல்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். பகுதி மனிதன், பகுதி இயந்திரம் என்ற தலைப்பில் என்னை வைத்து, பிபிசியில் ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது’’ என்கிறார் ஜேம்ஸ் யங்.

பல வேலைகள் செய்யும் பயோனிக் கை!

ரஷ்யாவைச் சேர்ந்த டாஷிக் ஃப்ரீகெல், கடந்த 13 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்து வருகிறார். ‘’முடி எவ்வளவு நீளம் வளரும் என்பதைப் பார்ப்பதற்காகவே வளர்க்க ஆரம்பித்தேன். இன்னும் அரையடி வளர்ந்தால் கால் விரல்களைத் தொட்டுவிடும். அதுவரை முடியை வெட்டப் போவதில்லை. மிக நீளமான முடியைப் பராமரிப்பது கடினம்தான். ஆனாலும் இதில் எனக்கு மகிழ்ச்சியே. விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். நான் நினைத்தது போல கால்விரல்களை முடி தொட்டவுடன், முடியை வெட்டி, நன்கொடையாக அளித்துவிடுவேன். அதில் ஏராளமாக விக் தயாரிக்க முடியும். புற்றுநோயால் முடிகளை இழந்தவர்களுக்குப் பயன்படும்’’ என்கிறார் டாஷிக் ஃப்ரீகெல்.

அட! ரியல் ராபுன்செல்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/article8614502.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஸ்ட்ராங் பிரதருக்கு வந்தனம்!

COMMENT   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
maslaa_2859222f.jpg
 

சீனாவின் ஜிலின் நகரில் வசித்து வரும் யூ ஜின், 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி 2 கால்களையும் 9 கை விரல்களையும் இழந்துவிட்டார். முதலில் தனது வாழ்க்கையே முடிந்து போனதாக நினைத்த யூ ஜின், இன்று சைக்கிள் பழுதுபார்க்கும் கடையை வைத்து தனது வாழ்க்கையை உருட்டி வருகிறார். “கடந்த 1993-ல் வேலை செய்யும் இடத்தில் தவறி விழுந்தேன். இதில் கால்களையும் கை விரல்களையும் இழந்தேன். என் மகள் பிறந்த மூன்றாம் நாள் மனைவி இறந்துவிட்டார். கொஞ்ச காலம் பிச்சை எடுத்து குழந்தைக்கு உணவு கொடுத்தேன். பின்னர் என் நிலையைக் கண்ட நண்பர்கள் சிலர் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

பிச்சை எடுப்பதை விட்டு, ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க முடிவு செய்தேன். கையில் இருந்த சேமிப்பைக் கொண்டு, சைக்கிள் ரிப்பேர் செய்வதற்கான கருவிகளை வாங்கினேன். இதுகுறித்த பயிற்சியையும் எடுத்துக்கொண்டேன். தொடக்கத்தில் ஒரே விரலில் கருவிகளைப் பிடிப்பது மிகவும் சிரமமாகவும் சவாலாகவும் இருந்தது. தொடர் பயிற்சி காரணமாக ரிப்பேர் வேலை எளிதானது. என் மீது கருணை கொண்ட வாடிக்கையாளர்கள், என் கடையைத் தேடி வந்தனர். ஓரளவு வருமானம் வந்தது. என் தேவைகளையும் என் மகளின் தேவைகளையும் என்னால் பார்த்துக்கொள்ள முடிந்தது. மகளுக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டேன். கால்களும் விரல்களும் இல்லாவிட்டாலும் என் உழைப்பில் வாழ்வதுதான் என்னை மகிழ்ச்சியாகவும் வாழ்க்கை மீது நம்பிக்கை கொள்ளும்படியும் வைத்திருக்கிறது” என்கிறார் யூ ஜின். கடந்த வாரம் சீன ஊடகங் களில் யூ ஜின் வாழ்க்கை பற்றிய தகவல் வைரலாக பரவியது. இதன் மூலம் பல லட்சம் பேர் உத்வேகம் அடைந்ததாக சொல்லியிருக்கிறார்கள். ‘ஸ்ட்ராங் பிரதர்’ என்ற பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.

ஸ்ட்ராங் பிரதருக்கு வந்தனம்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மிகப் பெரிய நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சமீப காலமாக கழுத்தில் கட்டக்கூடிய டைகளையும் வழங்கி வருகிறார்கள். அந்தப் பகுதியில் வேலை இல்லாத இளைஞர்கள், அகதிகள் ஏராளமாக இருப்பதாலும் அவர்களால் உடைகளுக்கு ஏற்ற டைகளை வாங்க முடியாததாலும் நூலகத்தில் இலவசமாக டைகளை வழங்கி வருகிறார்கள். புத்தகங்களைப் போலவே, டைகளை எடுத்துச் செல்பவர்கள் 3 வாரங்களுக்குள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். மீண்டும் டை தேவை என்றால் வேறொரு டையை எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சேவையை ‘டைப்ரரி’ என்று அழைக்கிறார்கள். “மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் எங்களின் நோக்கம்.

இந்தப் பகுதியில் ஏழ்மை அதிகம். அவர்களின் அறிவு தாகத்துக்கு தீனி போடுவதுடன், இதுபோன்ற உதவிகளையும் செய்து வருகிறோம். நியூ யார்க்கில் உள்ள குயின்ஸ் பப்ளிக் லைப்ரரிக்கு சென்றபோதுதான் டைகள் வழங்குவதைக் கண்டேன். அதைத் தான் எங்கள் நூலகத்திலும் செயல்படுத்தி இருக்கிறேன். மிகப் பிரமாதமான 12 டைகளுடன் இந்தச் சேவையை ஆரம்பித்தோம். இன்று தேவை அதிகம் இருப்பதால் டைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறோம். அவரவர் வேலைக்கு ஏற்ற டைகளை தேர்வு செய்து, எடுத்துச் செல்ல வேண்டியதுதான்” என்கிறார் நூலகர் நாட் எட்டி.

டைப்ரரி… புதிய சேவை !

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8619382.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கடல் கடக்கும் கன்னி!

 
 
masala_2432896f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கிறார் 30 வயது சோனியா பாம்ஸ்டெய்ன். நவீன படகில் தனியாக 6 ஆயிரம் மைல்களைக் கடலில் கடந்து சாதனை செய்வதற்காகக் கிளம்பியிருக்கிறார். தினமும் 14-16 மணி நேரம் துடுப்புப் போடுவார். பிறகு ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் துடுப்புப் போட ஆரம்பித்துவிடுவார். இதுவரை 16 பேர் இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 2 ஆண்கள் மட்டுமே இதுவரை பசிபிக் கடலைக் கடந்து சாதனை செய்திருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சோனியா. செப்டம்பர் மாதம் அட்லாண்டிக்கைக் கடந்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மோசமான கார் விபத்தால் பாதிக்கப்பட்டார் சோனியா.

உடல்நிலை தேறியவுடன் 2012ம் ஆண்டு 3 ஆண்களுடன் சேர்ந்து கடல் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அந்தப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு, இன்று தனியாளாகச் சாதிக்கக் கிளம்பியிருக்கிறார்.

வெற்றியுடன் திரும்பி வாருங்கள் சோனியா!

பிரிட்டனில் இயங்கி வருகின்றன 500 கிளைகள் கொண்ட அஸ்டா சூப்பர் மார்க்கெட்கள். காய்கறிகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பதற்காகக் கடந்த 7 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தது அஸ்டா. மஞ்சள், சிவப்பு குடைமிளகாய்களை இணைத்து ஸ்பெஷல் குடைமிளகாயை உருவாக்கியிருக்கின்றனர். இந்தக் குடைமிளகாயில் மஞ்சளில் சிவப்புக் கோடுகள் கண்களைக் கவர்கின்றன.

இனிப்புச் சுவையுடன் ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிக அளவுக்கு வைட்டமின் சி யும் இவற்றில் அடங்கியிருக்கின்றன. குழந்தைகளிடம் ஸ்பெஷல் குடை மிளகாயைச் சமைத்துக் கொடுத்துவிட்டு, கணக்கெடுப்பு எடுத்ததில் முதல் இடத்தைப் பெற்றுவிட்டது! தக்காளி, கேரட், பட்டானி, ஆரஞ்சு அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. பார்க்கவும் சுவைக்கவும் அட்டகாசமாக இருக்கும் இந்த ஸ்பெஷல் குடைமிளகாய் ஜூன் 8 முதல் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வருகின்றன. 2 ஸ்பெஷல் குடைமிளகாயின் விலை ரூ.195/-

இனிப்பு, புளிப்பு எல்லாம் இருந்தால் குடைமிளகாய் என்ற பெயரை மாற்ற வேண்டும்…

நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயருக்குத் தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கே விதவிதமான கார்ட்டூன் கேரக்டர்கள் வேடமிட்டு மனிதர்கள் உலாவிக்கொண்டிருக்கின்றார்கள். கார்ட்டூன் கேரக்டர்களிடம் கை குலுக்குவதிலும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். அவர்களாக விரும்பி அன்பளிப்பைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.

ஹலோ கிட்டி, மின்னி மவுஸ் போன்று வேடமிட்டு வந்தார்கள் மெலெண்டஸும் மோச்சாவும். இருவரும் சுற்றுலாப் பயணிகளிடம் மிரட்டி பணம் பெற்றுக்கொள்வதும், அதிகப் பணம் தராதவர்களிடம் வன்முறைகளில் இறங்குவதுமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கீகாரம் பெறாத சிலர் இப்படிச் சுற்றுலாப் பயணிகளிடம் மோசமாக நடந்துகொள்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.

கார்ட்டூன் கேரக்டர் வேடமிட்டுக்கொண்டு இப்படிச் செய்யலாமா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/article7297797.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: சுவாரசியமான மனிதர்!

 
 
ulagam_2430885f.jpg
 

சீனாவில் புழங்கும் கள்ள நோட்டில் 97 சதவீதம் ஒரே மனிதரால் உருவாக்கப்பட்ட வார்ப்புருவில் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. 2013ம் ஆண்டு 73 வயது பெங் டாக்ஸியாங் கைது செய்யப்பட்டார். இவர் பல லட்சம் யுவான் அடிக்கும் வார்ப்புருக்களை கைகளாலேயே உருவாக்கியிருக்கிறார். இவருக்குக் கணினி பயன்பாடு தெரியாததால், இந்தக் காலத்திலும் நுணுக்கமாகக் கைகளாலேயே செய்திருக்கிறார். ஓர் எழுத்துருவுக்கு 5 முதல் 12 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டிருக்கிறார். டாக்ஸியாங்கைக் கைது செய்து விசாரித்தபோதுதான் அவர் பெரிய ஓவியர் என்பதும், கள்ள நோட்டுகளுடன் வெளிநாட்டு டிப்ளமோ சான்றிதழ்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் என்ற தகவல்கள் தெரியவந்தன. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் டாக்ஸியாங்குக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

திறமையை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே…

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் வசிக்கிறார்கள் ரிக் மிஸ் குடும்பத்தினர். விடுமுறையில் வெளியூர் சென்றிருந்தனர். திடீரென்று அவர்களது பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் ரிக்கைத் தொடர்புகொண்டார். ‘‘உங்கள் வீட்டையும் காரையும் ஒரு கழுகுக் கூட்டம் பாழாக்கி வருகிறது’’ என்று சொன்னார். ரிக் குடும்பத்தோடு உடனே திரும்பினார். வீட்டிலும் காரிலும் மதிப்பிட முடியாத அளவுக்குத் சேதத்தை விளைவித்திருந்தன கழுகுகள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றன. 2 அடி உயரமும் 5 அடி அகல இறக்கைகளையும் கொண்ட ராட்சச கழுகுகளைப் பார்க்கும்போதே திகில் ஏற்படுகிறது. ரிக் அரசாங்கத்திடம் உதவி கேட்டார். அவர்கள் வந்து ரிக் வீட்டைப் பார்த்தனர். எங்கோ செல்ல வேண்டிய பறவைகள் வழி தவறி இங்கே வந்துவிட்டன. ஒரு சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றனர். அந்தச் சில நாட்களுக்குள் எவ்வளவு சேதாரம் ஆகும் என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார் ரிக்.

ஐயோ… பாவமே…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில் ஃபர்குசன் விதவித குல்லாய்களைத் தலையில் மாட்டி புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். கம்பளியால் பின்னப்பட்ட குல்லாய்கள் அனைத்தும் உணவுப் பொருட்களைப் போன்று வடிவமைக்கப் பட்டிருப்பதுதான் இவற்றில் விசேஷம். பில் ஃபர்குசன் பர்கர் உணவகத்தில் வேலை செய்கிறார். தினமும் பர்க்கரைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு ஒருநாள் கம்பளியில் உணவுப் பொருட்களைச் செய்யும் யோசனை உதித்தது. உடனே களத்தில் இறங்கிவிட்டார். ஆப்பிள், பேகன் எக், ஃப்ரைட் சிக்கன், காபி கப், டோநட், பியர் பாட்டில், வாழைப்பழம், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், பர்கர் என்று மிகச் சிறப்பான 20 குல்லாய்களை மட்டும் தேர்ந்தெடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

சுவாரசியமான மனிதர்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article7291443.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிலநடுக்க பெண்

 
 
masala_2862756f.jpg
 

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மூன் ரிபாஸ். உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிலநடுக்கத்தையும் அவரால் உணர முடியும். அவரது கையில் ’சீஸ்மிக் சென்சார்’ என்ற சிறிய கருவியைப் பொருத்தியிருக்கிறார். தோலுக்கு அடியில் இருக்கும் இந்தக் கருவி, ஆன்லைன் சீஸ்மோ கிராஃப் உதவியுடன் இயங்குகிறது. மூன்ரிபாஸ் ஒரு நடனக் கலைஞர். அவருக்கு இயற்கையிலேயே எதையும் நுட்பமாக அறிந்துகொள்ளும் உணர்வு இருக்கிறது. அதை இன்னும் மேம்படுத்துவதற்காக சீஸ்மிக் சென்சார் கருவியை உடலுக்குள் பொருத்திக்கொண்டார். ‘‘என்னால் பூமியின் ஒவ்வொரு இயக்கத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

அந்த இயக்கத்தின் தன்மையை மொழிபெயர்த்துச் சொல்லவும் முடியும். பூமியின் எந்த மூலையில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடல் நடனமாட ஆரம்பித்துவிடும். நிலநடுக்கத்தின் தன்மையைப் பொறுத்து என் உடலும் குலுங்கும். நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் உடல் அவ்வளவு நடுங்கியது. நானே நேபாளத்தில் இருந்ததுபோல உணர்ந்தேன். பூமியில் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை நானும் உணர்கிறேன், வருந்துகிறேன். இரண்டாவது இதயம் போல சீஸ்மிக் சென்சார் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது. நிலநடுக்கம் மனிதர்களுக்கு அழிவைத் தருவதால், அதை மோசமான விஷயமாக மனிதர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நானோ பூமியின் பரிணாம வளர்ச்சியாகத்தான் கருதுகிறேன். மனிதர்கள் இன்னும் பூமியை நன்கு அறிந்துகொள்ளவில்லை.

பூமியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் பூமிக்கும் நல்லது, மனிதர்களுக்கும் நல்லது. பூமியை அறிந்துகொள்வதற்காகவே இன்னும் பல பரிசோதனைகளை என் உடலில் நிகழ்த்த இருக்கிறேன். ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு கண்டத்தை அறிந்துகொள்ளும் விதமாகக் கருவிகளைப் பொருத்துவதே என் அடுத்த இலக்கு. இப்படிக் கருவிகளைப் பொருத்திக்கொள்வதால் மற்ற மனிதர்களை விட வித்தியாசமாக வாழ முடியும். ஆனால் நம் இயல்பே மாறிவிடும் என்று சிலர் இதை எதிர்க்கிறார்கள். எந்த நல்ல விஷயமும் முதலில் எதிர்க்கப்பட்டு, பிறகுதான் ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் எனக்குக் கவலை இல்லை’’ என்கிறார் மூன் ரிபாஸ்.

நிலநடுக்கத்தை உணரும் பெண்!

 

ரஷ்யாவைச் சேர்ந்த கெவின் பூனைக்கு ஹைட்ரோசெபாலஸ் என்ற குறைபாடு. மூளையில் அதிகமாகத் திரவம் சுரக்கும். இதனால் கேட்கும் சக்தி பார்க்கும் சக்தி பெரும்பாலும் இழந்துவிட்டது கெவின். பிறந்து 4 வாரங்களில் கெவினின் உடல் நிலையை அறிந்த செவிலியர் டெலியா, தத்தெடுத்துக்கொண்டார். ‘‘முதலில் காது கேட்காமல், பார்வை சரியாகத் தெரியாமல் கெவின் மிகவும் கஷ்டப்பட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொண்டது. தன்னுடைய குறைபாட்டால் ஏகப்பட்ட அட்டகாசம் செய்யும். எல்லாவற்றையும் ரசிக்கப் பழகிக்கொண்டேன். இன்று நானும் கெவினும் மிகச் சிறந்த நண்பர்கள். 6 மாதத்துக்கு மேல் உயிருடன் இருக்காது என்று எல்லோரும் சொன்னார்கள். நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டேன்’’ என்கிறார் டெலியா.

பூனையையும் அரவணைக்கும் செவிலியர்

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article8629217.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கவர்ச்சியில்லாத ஃபேஸ்கினி

 
 
facekinie_2428740f.jpg
 

சீனாவில் ஃபேஸ்கினி என்ற முகமூடி பிரபலமாகி வருகிறது. நைலானில் செய்யப்பட்ட இந்த முகமூடியில் கண்கள், மூக்கு, வாய்க்கு மட்டும் துளைகள் இருக்கும். கடலில் நீந்துபவர்களுக்காக வும் கடற்கரைகளில் ஓய்வெடுப்பவர்களுக்காகவும் பிரத்யேகமாக இந்த முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அணிந்துகொண்டால் சூரியனில் இருந்து வரும் கதிர்களிடமிருந்தும் ஜெல்லிமீன்களின் கொடுக்குகளிடமிருந்தும் தப்பி விடலாம். பெண்கள்தான் முகமூடிகளை விரும்பி அணிகிறார்கள். 2006ம் ஆண்டு உருவான ஃபேஸ்கினி, அவ்வளவாகக் கவரக்கூடிய வகையில் இல்லை. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கண்கவர் வண்ணங்கள், டிசைன்களில் இன்று முகமூடிகள் கிடைக்கின்றன.

யார் முகத்தையும் யாராலும் பார்க்க முடியாது…

பிரிட்டனில் வசிக்கிறார் அன்ஜி பார்லோ. அதிகமாகப் புகைப் பிடித்ததால் பத்தாண்டுகளுக்கு முன்பு பார்லோவுக்குப் பற்கள் விழ ஆரம்பித்தன. பல் மருத்துவரிடம் சென்று வேறு பற்களைக் கட்டிக்கொள்ள அவர் விரும்பவில்லை. உடைந்த பற்களை சூப்பர்க்ளூ என்ற பசையைக் கொண்டு ஒட்டிக்கொண்டார். ஒட்டப்பட்ட பற்களால் எதையும் கடிக்க முடியாது. இயல்பாகப் பேச முடியாது. வாயை மூடிக்கொண்டே அளவாகப் பேசுவார், சிரிப்பார். 10 ஆண்டுகள் பசையால் ஒட்டப்பட்ட பற்களாலேயே வாழ்ந்துவிட்டார். இன்று நிலைமை மோசமடைந்துவிட்டது. வேறு வழியின்றி பல் மருத்துவரிடம் சென்றார். ’’பசையில் இருந்த ரசாயனம் அவரது தாடை எலும்புகளை 90 சதவிகிதம் பாழாக்கிவிட்டது’’ என்கிறார் பார்லோவின் மருத்துவர். ‘’என் அம்மாவுக்குத் தொண்டையில் புற்றுநோய் வந்துவிட்டது. அவரது பற்கள் எல்லாம் விழுந்துவிட்டன. அந்த அதிர்ச்சியில் எனக்குப் பல் மருத்துவரிடம் செல்வதென்றாலே பயமாக இருக்கும்’’ என்று வருந்துகிறார் பார்லோ. அறுவை சிகிச்சை செய்து 12 புதிய பற்களைப் பொருத்த இருக்கிறார் மருத்துவர். இதற்கென்று 16 லட்சம் ரூபாய் செலவாக இருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பற்களுக்குக் கொடுக்க இருக்கிறார் பார்லோ.

பயம் வந்திருந்தால் புகைப்பதைத் தானே விட்டிருக்கணும்?

அமெரிக்கத் தொழிலதிபர் ஜெரேமியா ராபெர். ஆண்களுக்கான குண்டு துளைக்காத இடுப்புக் கவசம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். நட்ஷெல்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தக் கவசத்தின் மீது யார் வேண்டுமானாலும் துப்பாக்கியால் சுட்டு, பரிசோதனை செய்துகொள்ளலாம். ஒருவேளை குண்டு துளைத்துவிட்டால் தன்னுடைய அத்தனை சொத்துகளையும் தந்துவிடுவதாகச் சவால் விட்டார் ஜெரேமியா. பரிசோதனையில் இடுப்புக் கவசம் வெற்றி பெற்றுவிட்டது. இதன் மூலம் நட்ஷெல்ஸ் உலகிலேயே மிகவும் உறுதியான ’இடுப்புக் கவசம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது.மார்ஷியல் கலைஞர்கள், குத்துச் சண்டை வீரர்கள், பைக் ரேஸ் வீரர்கள் போன்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, காவலர்கள், ராணுவ வீரர்களுக்கும் இந்த இடுப்புக் கவசம் பயன்படும் என்கிறார் ஜெரேமியா. இந்தக் கண்டுபிடிப்புக்காக இதுவரை ஒண்ணே கால் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார் ஜெரேமியா.

உயிர் காக்கும் கவசம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/article7285657.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: 7 அடி நீள மீன்

 
 
masala_2427109f.jpg
 

நார்வேயில் உள்ள லோஃபோடன் தீவுகளில் எரிக் ஆக்ஸ்னரும் அவரது நண்பர்களும் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு எரிக்கின் தூண்டிலில் ஒரு மீன் மாட்டியது தெரிந்தது. ஆனால் எவ்வளவு போராடியும் அவரால் அதை இழுக்க முடியவில்லை. சிலரை உதவிக்கு அழைத்து தூண்டிலை இழுத்தார். 7 அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட ராட்சச ஆங்கிலர் மீன் ஒன்று தூண்டிலில் சிக்கியிருந்தது. மீனை கயிற்றில் கட்டி, படகில் இணைத்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்தனர். பிறகு மீண்டும் கடலுக்குள்ளே விட்டுவிட்டனர். ஆழ்கடலில் வசிப்பதால் ஆங்கிலர் மீன்கள் கண்கவர் வண்ணங்களிலோ, உருவ அமைப்புகளிலோ இருப்பதில்லை.

நல்லவேளை… மறுபடியும் கடலில் விட்டதற்கு நன்றி எரிக்!

சீனாவில் நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களில் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்வது அதிகரித்து வருகிறது. ஆடம்பர அறைகள், விதவிதமான உணவுகள், சொகுசு கார்கள், நீச்சல் குளம், விளையாட்டுகள் என்று ஒவ்வொன்றையும் ரசித்து, அனுபவிக்கிறார்கள் குழந்தைகள். இப்படி சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், நன்றாகப் படித்து, பெரிய வேலைக்குச் சென்றால்தான் முடியும் என்று பெற்றோர்கள் புரிய வைக்கிறார்கள். இப்படி வரும் குழந்தைகளில் பலர் அதிகமான ஈடுபாட்டுடன் படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே பணம் பணம் என்று அவர்கள் மனநிலையை மாற்றக்கூடாது என்று பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இந்த விஷயம் இணையத்தில் பரவி, அதிகமான பெற்றோர்களை சொகுசு விடுதி நோக்கி நகர்த்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள்?

அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள க்ரோகெர் பல்பொருள் அங்காடியில் புத்தம் புதிய காளான்களை நாமே பறித்துக்கொள்ளலாம். காளான்களைப் பறித்து, பாக்கெட்களில் விற்கும்போது வாடிக்கையாளர்களுக்கு அவை புதிய காளான்கள்தானா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. காளான்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் சமைத்தால்தான் நல்லது என்பதால், கடையிலேயே விதவிதமான காளான்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். நமக்குத் தேவையான காளான்களை நாமே பறித்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் அதிகமான வாடிக்கையாளர்களை இங்கே வரவைத்திருகிறது.

அட! பறிச்ச உடனேயே சமைச்சிடலாம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-7-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/article7279240.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிஜ பொம்மை வீடுகள்

 
 
masala_2863528f.jpg
 

அமெரிக்காவில் குழந்தைகள் விளையாடுவதற்குச் சிறிய வீடுகள் கட்டிக் கொடுப்பதுண்டு. கட்டிட வல்லுனர் ஆலன் மோவர், குழந்தைகளுக்கான ப்ளேஹவுஸ்களை உருவாக்கி வருகிறார். இந்த வீடுகள் கிட்டத்தட்ட நிஜ வீடுகளைப் போலவே இருக்கின்றன. 2 அறைகள் கொண்ட வீடுகளில் இருந்து மாடி வீடுகள் வரை கட்டிக் கொடுக்கிறார். இந்த வீட்டின் சுவற்றில் மலை ஏற்றம் செய்வது போல குழந்தைகள் ஏறி விளையாடலாம். மாடியில் இருந்து சறுக்கிக்கொண்டு கீழே வரலாம்.

ஊஞ்சல் ஆடலாம். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, தோட்டத்தைப் பராமரிக்கலாம். பார்பி பொம்மைகளுக்கு அலங்காரம் செய்யலாம். சமையலறையில் பிடித்த உணவுப் பொருட்களைச் சாப்பிடலாம். ஓவியம் தீட்டலாம். மின்சாரம், தண்ணீர் வசதி இருக்கிறது. ’’எங்களின் ப்ளேஹவுஸில் குழந்தைகள் விளையாடுவதற்கு மணிக்கணக்கில் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறோம். சிலர் சொந்தமாக வீடுகளை வாங்க விரும்புவார்கள். 6 லட்சம் முதல் 50 லட்சம் வரை வீடுகளை விற்பனை செய்கிறோம். சிலர் இன்னும் அதிக வசதி, விளையாட்டுக் கருவிகள் எல்லாம் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் விருப்பப்படி செய்து கொடுப்போம்.

பெரும் பணக்காரர்களே எங்களின் வாடிக்கையாளர்கள். அதனால் கட்டணத்தைப் பற்றியோ, விலையைப் பற்றியோ யாரும் கவலைகொள்வதில்லை’’ என்கிறார் ஆலன் மோவர்.

இதுக்கு நிஜ வீடே வாங்கிவிடலாம் போலிருக்கே!

 

சீனாவில் வசிக்கும் லி யுன்பெங்கும் சென் ஸுவான்சியும் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். கடந்த வாரம் இருவருக்கும் திருமணம் முடிந்தது. அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட அறையில் மணமகன் லி யுன்பெங் சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பார்த்து ஒரு தாளில் எழுத ஆரம்பித்தார். மணமகள் சென் ஸுவான்சி அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தார். 17 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சீனாவின் கம்யூனிஸ்ட் அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது அத்தியாயத்தை திருமணநாள் அன்று மணமக்கள் இருவரும் எழுதிக்கொண்டிருந்த புகைப்படங்களும் செய்தியும் இணையத்தில் பரவி, ஆதரவையும் எதிர்ப்பையும் அள்ளி வருகின்றன. சமீபக் காலமாக இளைய தலைமுறையினரிடம் தேசப்பற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் மீது இருக்கும் அபிமானமும் குறைந்து வருகின்றன.

அதனால் இளைய தலைமுறையினரிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ’100 நாட்களில் கம்யூனிஸ்ட் அரசியலமைப்புச் சட்டத்தைக் கைகளால் எழுத வேண்டும்’ என்ற சவால் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் மீது ஆர்வம் கொண்ட ஏராளமான இளைஞர்கள் இந்தச் சவாலில் இறங்கியிருக் கிறார்கள். அவர்களில் லி யுன்பெங்கும் ஒருவர். சவாலில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகத் திருமணத்தன்றும் எழுதினார். ‘‘நானும் என் மனைவியும் இந்தச் சவாலை மிகவும் மகிழ்ச்சியோடுதான் செய்தோம்.

எங்கள் வாழ்க்கையை இதைவிடச் சிறப்பாக ஆரம்பிக்க முடியாது. நானும் மனைவியும் நம்புகிற சித்தாந்தம் பற்றியும் அதற்காக நாங்கள் மேற்கொண்ட இந்தச் சவால் பற்றியும் யாருக்கும் கருத்து சொல்ல உரிமை இல்லை’’ என்கிறார் லி யுன்பெங்.

அட! புரிதலும் காதலும் இருப்பதால்தான் இந்தச் சவாலை செய்ய முடிந்திருக்கிறது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8631205.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 64 ஆயிரம் ரூபாய்க்கு பாலாடைக் கட்டி

 
 
masala_2426053f.jpg
 

உலகிலேயே விலை மதிப்பு மிக்க பாலாடைக் கட்டி செர்பியாவில் தயாராகிறது. அரிய வகை பால்கன் கழுதைப் பாலில் தயாராகும் இந்தப் பாலாடைக் கட்டியின் விலை ஒரு கிலோ 64 ஆயிரம் ரூபாய். இயற்கையான மணமும் உப்பும் இந்தப் பாலாடைக் கட்டியின் சிறப்பான அம்சங்கள். செர்பியாவின் ஸாசாவிகா இயற்கையால் பாதுகாக்கப்பட்ட பகுதி.

இங்கேதான் பால்கன் கழுதைகள் வசிக்கின்றன. இவை அதிக அளவில் பாலைச் சுரப்பதில்லை. அதனால் ஒரு நாளைக்கு மூன்று வேளை கழுதைகளிடமிருந்து கைகளால் பாலைக் கறக்கின்றனர். ஒரு நாளைக்கு 15 கழுதைகளிடமிருந்து 3.7 லிட்டர் பால்தான் கிடைக்கிறது. 10 லிட்டர் பாலில் இருந்து 1 கிலோ பாலாடைக் கட்டி தயாரிக்கப்படுகிறது.

ஓராண்டுக்கு 90 கிலோ பாலாடைக் கட்டி மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஒருகாலத்தில் செர்பியாவில் பால்கன் கழுதைகள் அதிகம் இருந்தன. காலப் போக்கில் கழுதைகள் வளர்ப்பது குறைந்து போய்விட்டது. அதனால் பால்கன் கழுதைகள் அரிய வகை உயிரினமாக மாறிவிட்டன. 2012ம் ஆண்டு செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றிகளுக்கு எல்லாம் இந்தப் பாலாடைக் கட்டிதான் காரணம் என்று வதந்தி பரவியது. பிறகு அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது.

அதற்குப் பிறகு பாலாடைக் கட்டியின் விலை அதிகரித்து விட்டது. ’’கழுதைப் பால் மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியது. அதனால்தான் கழுதைப் பாலில் இருந்து பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் எண்ணம் வந்தது’’ என்கிறார் கழுதைப் பண்ணையின் நிர்வாகி.

ம்ம்… கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்தார் என்பதால் அதற்கு அழகு தொடர்பான மதிப்பும் இருக்கிறது…

தென்னாப்பிரிக்காவில் உள்ள காடெங் பூங்கா சிங்கங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கே 85 சிங்கங்கள், நெருப்புக்கோழிகள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்றவை வசிக்கின்றன. லயன் சஃபாரி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. வாகனங்களில் அழைத்துச் செல்லும்போதே, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லிவிடுவார்கள்.

இவை தவிர, ஆங்காங்கே பலகையிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. கார் கண்ணாடிகளை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துதான் உள்ளே அனுப்பி வைக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சிங்க உலாவுக்குச் சென்றார். அவருடன் சிம்சன் என்ற பூங்கா ஊழியரும் சென்றார். ஓரிடத்தில் கூட்டமாக அமர்ந்திருந்த சிங்கங்களைக் கண்டதும் அமெரிக்கப் பெண் காரின் ஜன்னல்களைத் திறந்தார். சிம்சன் எவ்வளவோ எச்சரித்தும் அவர் கேட்கவே இல்லை.

சட்டென்று ஒரு பெண் சிங்கம் கார் ஜன்னல் வழியே தாக்குதல் நடத்தியது. அமெரிக்கப் பெண் மோசமான காயங்களுடன் இறந்து போனார். சிம்சன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 4 மாதங்களில் சிங்கங்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நபர் இவர்.

ஆபத்துகளைத் தானே வரவழைத்துக்கொள்கிறவர்களுக்கு என்ன சொல்ல முடியும்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-64-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article7275639.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: நிஜ ஸ்பைடர்மேன்!

 
masal_2866386f.jpg
 

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 12 வயது முகமது அல் ஷேக், தன்னுடைய அசாதாரணமான செயல்களால் ‘ஸ்பைடர்மேன்’ என்று அழைக்கப்படுகிறார். கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்குத் தன்னுடைய கை, கால்கள், உடலை வளைக்கிறார். கால் பாதங்களைத் தூக்கித் தோள்களில் வைக்கிறார். உடலைப் பின்பக்கமாக வளைத்து, தலையை முன்னோக்கிக் காட்டுகிறார். இரண்டு கைகளால் நடக்கிறார். ஒரு கையால் நிற்கிறார். 4 அடி 6 அங்குல உயரமும் 29 கிலோ எடையும் கொண்டவர் முகமது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே இவரின் தற்போதைய லட்சியம். 2014-ம் ஆண்டு இஸ்ரேலின் தாக்குதல்களில் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்கள் நடைபெற்று 50 நாட்களில் முகமதுவின் திறமை லெபனான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

உடல் வளைப்பு போட்டியில் 1.4 கோடி வாக்குகள் பெற்றார் முகமது! தனித்துவம் மிக்க 4 உடல் அசைவுகளை, முகமது போலச் செய்வதற்கு இந்த உலகில் யாரும் இதுவரை இல்லை. ஒரு நிமிடம் நெஞ்சு மூலம் மொத்த உடலையும் நிற்க வைக்கும் சாதனையை கின்னஸுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ’’முகமது ஏற்கெனவே உலக சாம்பியன் ஆகிவிட்டான். முகமதுவின் சாதனைகள் மகிழ்ச்சி அளித்தாலும் குதிரை, ஒட்டகங்கள் மீது அவன் நிகழ்த்தும் சாகசங்கள் என்னைக் கவலைப்பட வைக்கின்றன’’ என்கிறார் முகமதுவின் அம்மா ஹன்னா.

‘’என் திறமைகளை உலகம் முழுவதும் சென்று வெளிப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் எல்லா எல்லைகளும் எங்களுக்கு மூடப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் உள்ள அரபு மக்கள் இணையம், ஃபேஸ்புக் மூலம் வீடியோக்களைப் பார்த்துதான் எனக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்குப் பிறகு எனக்கு வெளிநாடுகளில் தங்கி, பயிற்சி எடுத்துக்கொள்ளவும் போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் சிறுவன் என்பதால் என் குடும்பத்தினர் அதை அனுமதிக்கவில்லை. கின்னஸ் என் சாதனையை ஏற்றுக்கொண்டுவிட்டது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்’’ என்று காத்திருக்கிறார் முகமது.

ஆஹா! இது மனித உடலா, ரப்பரா!

மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. பைலட் என்ற மிகச் சிறிய கருவியைக் காதுகளில் பொருத்திக்கொண்டால், உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்த்துக் கொடுத்துவிடுகிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் இனி மொழி தெரியவில்லை என்ற கவலை இருக்காது. நியு யார்க்கைச் சேர்ந்த வேவர்லி நிறுவனம் மூன்று பாகங்கள் கொண்ட பைலட்டை உருவாக்கியிருக்கிறது. பைலட்டை வாங்கிக்கொண்டு, ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். அவரவர் மொழியில் பேசினால், இன்னொரு மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லிவிடுகிறது பைலட். நாம் பேசப் பேச உடனே மொழிபெயர்ப்பு வந்துவிடாது. சற்று நேரம் கழித்தே மொழிபெயர்த்து, ஒலி வடிவில் வெளிவருகிறது.

தற்போது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளை மொழிபெயர்க்கிறது பைலட். ஹிந்தி, செமிடிக், அரபிக், ஸ்லாவிக், ஆப்பிரிக்க மொழிகளை விரைவில் பைலட் மொழிபெயர்ப்பில் கேட்க முடியும். ’’ஒரு பிரெஞ்சு பெண்ணைச் சந்தித்த பிறகுதான் எனக்கு இந்த மொழி பெயர்ப்பு யோசனை வந்தது. நவீனத் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் மனிதர்கள் இடையே மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். நீண்ட முயற்சியில் இந்த பைலட்டை உருவாக்கியிருப்பதில் மகிழ்ச்சி. பைலட் பற்றிய விளம்பரத்தை இதுவரை 70 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். விரைவில் பைலட் விற்பனைக்கு வர இருக்கிறது. 20 ஆயிரம் ரூபாய். பைலட்டைப் பயன்படுத்தியவர்கள் தங்களின் அனுபவங்களைச் சொல்லும்போது எங்களுக்குப் பெருமிதமாக இருக்கிறது. இன்னும் உலகின் பல மொழிகளையும் மொழிபெயர்த்துச் சொல்லும் விதத்தில் பைலட்டைக் கொண்டு செல்வதே எதிர்காலத் திட்டம்’’ என்கிறார் வேவர்லி நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ ஓசோவா.

வரவேற்க வேண்டிய மொழிபெயர்ப்புக் கருவி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/article8640258.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 7 ஆண்டுகளில் 200 கடல் பயணங்கள்

 
 
masala_2425083f.jpg
 

புளோரிடாவைச் சேர்ந்த 86 வயது லீ வாச்ஸ்டெல்லர் ஆடம்பரக் கப்பலில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். க்ரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பலில் கடந்த 7 ஆண்டுகளாக அவர் வசித்து வருகிறார். இந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறை கூட நிலத்தில் அவர் கால் பதியவில்லை. லீயின் கணவர் கை மசன் வாச்ஸ்டெல்லர் கடல் பயணங்கள் மீது ஆர்வம் உள்ளவர். இவர்களின் 50 ஆண்டு கால மணவாழ்க்கையில் 89 முறை கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கை மசன், “நான் இறந்து போனாலும் கடல் பயணத்தை நீ ஒருபோதும் விட்டுவிடக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

தன்னுடைய பெரிய பங்களாவை விற்றுவிட்டு, கணவரின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக கடல் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் லீ. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 கடல் பயணங்கள் மேற்கொண்டு, நூறு நாடுகளைத் தொட்டிருக்கிறார். இதில் உலகைச் சுற்றி வந்த 15 பயணங்களும் அடங்கும். லீயின் மகன்களும் பேரன் பேத்திகளும் வாய்ப்பிருக்கும் இடங்களில் வந்து, பார்த்துவிட்டுச் செல்கின்றனர். சொகுசுக் கப்பல் அறை வாடகை, உணவு, பொழுதுபோக்கு விஷயங்கள், பார்ட்டிகள் என்று ஆண்டுக்கு சுமார் 1 கோடிக்கு மேல் செலவாகிறது. கப்பலின் உரிமையாளர்களில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் அன்புடன் லீயைக் கவனித்துக்கொள்கிறார்கள். “லீ அற்புதமான பெண்மணி’’ என்று பாராட்டுகிறார்கள்.

80 நாட்களில் உலகைச் சுற்றி வந்த நாவலை எழுதிய ஜுல்ஸ் வெர்ன் கற்பனைக்குக் கூட எட்டாத சாகசக்காரர் லீ!

சீனாவின் ஷாங்காய் நகர் வான்டு செண்டர் வணிக வளாகத்தில் பெண்களுக்கு என்று பிரத்யேக கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. 6 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கார் நிறுத்துவதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பகுதி என்பதைக் குறிக்கும் சின்னமும் இளம் சிவப்பு வண்ணமும் அந்தப் பகுதியில் தீட்டப்பட்டிருக்கின்றன. கார் பார்க்கிங் பகுதிக்கு அருகிலேயே பெண்களுக்கான ஓய்வறை, கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆண்கள் இந்தப் பகுதியில் கார் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை. சமூகத்தில் பெண்களைச் சரியாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தப் பிரத்யேக கார் பார்கிங் வசதி என்கிறார்கள் வணிக வளாகத்தின் உரிமையாளர்கள். தென்கொரியா, ஜெர்மன், சீனாவின் ஹிபெய் மாகாணத்தில் ஏற்கெனவே பெண்களுக்கென்று தனி கார் பார்கிங் வசதி செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு பெண்கள் மத்தியில் ஆதரவும் ஆண்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இது என்றும் தீராத பிரச்சினைதான்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7271918.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பசி வந்தால் எல்லாம் பறந்துபோகும்!

 
 
masala_2867664f.jpg
 

தென்னாப்பிரிக்காவின் குருகர் தேசியப் பூங்காவில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் 41 வயது லிஸி. ‘‘நான் அணையின் மீது உட்கார்ந்து தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளைப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். முதலைகள் அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் கடலாமை ஒன்று நீந்தி வந்தது. உடனே முதலை மிக வேகமாக ஆமையைத் துரத்திச் சென்றது. ஆபத்து அருகில் வந்ததை உணர்ந்த ஆமை, தன்னுடைய தலையையும் கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டது. முதலை வாயில் ஆமையைக் கவ்விக்கொண்டது. கடினமான ஓடு இருப்பதால் முதலையால் கடிக்க முடியவில்லை. அதற்குள் இன்னும் சில முதலைகள் அங்கே வந்துவிட்டன. மூர்க்கமாகச் சண்டையிட்டன. ஆமையைப் பிடித்த முதலை வேறு வழியின்றி, அப்படியே விழுங்கிவிட்டது. பிறகு தண்ணீருக்குள் சென்று மறைந்துவிட்டது. ஒரு முதலை முழுதாக ஆமையை விழுங்குவதை இப்போதுதான் பார்த்திருக்கிறேன்!’’ என்கிறார் லிஸி.

பசி வந்தால் எல்லாம் பறந்துபோகும்!

கனடாவைச் சேர்ந்த 55 வயது பிரையன் ஸெம்பிக் மேஜிக் கலைஞர். சவால்களைச் செய்துப் பார்ப்பது என்றால் பிரையனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு மாதம் முழுவதும் குளியலறையில் வசித்தால், 4.7 லட்சம் ரூபாய் பந்தயம் என்றார் நண்பர். உடனே சவாலை ஏற்று ஒரு மாதம் முழுவதும் குளியலறையில் வசித்து, பணத்தைப் பெற்றுக் கொண்டார் பிரையன். அடுத்து ஒரு வாரம் பாலத்துக்கு அடியில் உறங்கினால் 13 லட்சம் ரூபாய் பந்தயம் என்றார் நண்பர். அதையும் செய்து முடித்து, பணத்தைப் பெற்றுக்கொண்டார். அடுத்த சவால் உண்மையிலேயே சிக்கலானதாக இருந்தது.

‘‘அறுவை சிகிச்சை மூலம் பெண்களைப் போல மார்பகங்களை உருவாக்கி, ஒரு வருடம் வாழ்ந்தால், 67.7 லட்சம் ரூபாய் தருவதாக நண்பர் சொன்னார். சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகச் சட்டென்று சம்மதித்துவிட்டேன். 1997-ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் எனக்கு மார்பகங்கள் கிடைத்தன. இந்தச் செலவையும் நண்பர்களே பார்த்துக்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பாதிப் பணம் கொடுத்தார். ஓராண்டு முடிவில் முழுப் பணமும் பெற்றுவிட்டேன். அதற்குப் பிறகு மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. சோம்பேறித்தனமாகவும் இருந்தது. என்னுடைய தொழிலில் மிகவும் பரபரப்பாகவும் இருந்தேன். மார்பகங்களாலேயே நான் பிரபலமாகவும் ஆரம்பித்தேன்.

விளம்பரங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் திரைப்படங்கள் என்று என் வாழ்க்கை பிரமாதமாகச் சென்றது. அதனால் மார்பகத்தை நீக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. 2014-ம் ஆண்டு வரை அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்து விட்டேன். இதற்குக் காரணம் என்னுடைய மார்பகங்கள்தான். சமீபத்தில் என் மகள் மிகா, மார்பகங்களை நீக்கிவிடச் சொன்னாள். தேவையான அளவுக்குச் சம்பாதித்துவிட்டேன். இனி எனக்குப் பணம் முக்கியமில்லை. என் மகளின் விருப்பத்துக்காக 19 ஆண்டுகளுக்குப் பிறகு மார்பகங்களை நீக்கிவிட்டேன்’’ என்கிறார் பிரையன் ஸெம்பிக்.

பந்தயத்துக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் இந்த மனிதர்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8644616.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வல்லவருக்கு மூங்கிலும் படகு!

 
 
masala_2869084f.jpg
 

சீனாவில் வசிக்கும் 51 வயது ஃபாங் ஷுயுன், 23 அடி மூங்கில் கம்பு ஒன்றில் நின்றுகொண்டு, இன்னொரு கம்பு மூலம் துடுப்பு போட்டபடி ஃபுச்சுன் ஆற்றைக் கடக்கிறார். ‘‘2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை முடிந்து வீடு திரும்பும்போது தாமதமாகிவிட்டது. கடைசிப் படகையும் பிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று கரையில் நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு மூங்கில் கம்பு ஆற்றில் மிதந்து வந்தது. அதில் ஏறி நின்று, அக்கரையை அடைந்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

பல முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தன. கடைசியில் என் உடலைச் சமநிலைப்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டேன். பிறகு கையில் ஒரு கம்புடன் மூங்கில் கம்பில் ஏறி நின்றேன். சில முயற்சிகளில் வெற்றி கிடைத்துவிட்டது. அச்சமின்றி, நம்பிக்கையோடு பயணத்தை மேற்கொண்டேன். பத்திரமாகக் கரையை அடைந்தேன். அன்று முதல் இன்று வரை படகில் பயணிப்பதையே விட்டுவிட்டேன். மூங்கில் கம்புகள் மூலமே ஆற்றைக் கடக்கிறேன்’’ என்கிறார் ஃபாங் ஷுயுன்.

வல்லவருக்கு மூங்கிலும் படகு!

வட அமெரிக்காவில் காணப்படும் செடிகளில் ஒன்று போலிஸ்மா சொனோரே. மணல் மேடுகளில் இவை வளர்கின்றன. இவற்றால் தானாக உணவு தயாரித்துக்கொள்ள இயலாது. அதனால் மற்ற பாலைவனத் தாவரங்களின் வேர்களில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்கின்றன. நிலத்திலிருந்து 2 மீட்டர் தூரத்துக்குக் கீழே தண்டு செல்கிறது. அங்கிருக்கும் வேர்கள் அருகில் உள்ள தாவரங்களின் வேர்களோடு இணைந்துகொள்கின்றன. உணவு, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவற்றை பக்கத்து செடிகளில் இருந்து எடுத்துக்கொள்கிறது. நிலத்துக்கு மேலே தண்டுகள் கிளைகள் பரப்பி இருக்கும். இவற்றில் மணல் பந்து வடிவில் திரண்டிருக்கும். வசந்த காலத்தில் மணல் பந்துக்கு மேலே இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய பூக்கள் பூக்கின்றன. தூரத்தில் இருந்து பார்த்தால் செடி குடை பிடித்தபடி நின்றுகொண்டிருப்பது போலத் தோன்றும்.

விநோத தாவரம்!

சீனாவில் 8 பெண்கள் இணைந்து ஹெச்ஐவி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நடுத்தர வயது கொண்ட இந்தப் பெண்கள், கடந்த 20 ஆண்டுகளாக கூந்தலை வெட்டாமல் வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் 3.5 மீட்டர் நீள கூந்தல் இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான கூந்தல்களைப் பெற்ற 8 பேர் கொண்ட குழு இதுதான்.

“பழங்காலத்தில் சீனப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் இருந்திருக்கிறார்கள். காலப்போக்கில் அது மறைந்துவிட்டது. நீண்ட கரிய கூந்தல்தான் உடல் ஆரோக்கியத்தின் கண்ணாடி. எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறோம். நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதால்தான் இவ்வளவு நீண்ட, கரிய கூந்தல் இருக்கிறது என்பதை உதாரணமாகக் காட்டுகிறோம். எங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான வரவேற்பு இருக்கிறது” என்கிறார் ஆக்ட் அமைப்பின் உறுப்பினர்களில் ஒரு பெண்.

கூந்தலை பராமரிப்பதே பெரிய வேலையா இருக்குமே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வல்லவருக்கு-மூங்கிலும்-படகு/article8649161.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகத்துக்கு நியாயம் சொல்றவங்களுக்கு யார் எடுத்துச் சொல்றது?

 
 
sellam_2422992f.jpg
 

62 வயது மிடானி ஹிசாவோ ஜப்பானில் வசிக்கிறார். இவருக்குக் குழந்தை இல்லை. 19 ஆண்டுகளுக்கு முன், ஒரு செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் இருந்து 5 செ.மீ. அளவே இருந்த ஓர் ஆமையை அவரது மனைவி வாங்கி வந்தார். மிடானியும் அவரது மனைவியும் ஆமைக்கு போன் சான் என்று பெயரிட்டு, தங்கள் மகன் போலவே வளர்த்து வந்தனர். ஒருகட்டத்தில் மனைவி இறந்து போனார். இன்று போன் சான் 70 கிலோ அளவுக்குப் பெரிய குழந்தையாகிவிட்டது. வாரத்துக்கு 3 முறை போன் சானை வெளியில் அழைத்துச் செல்கிறார் மிடானி. ஒரு பையில் கேரட், முட்டைக்கோசு, ஒரு பாட்டில் தண்ணீருடன் கிளம்புகிறார். சின்னஞ்சிறு குழந்தைகளை, போன் சான் முதுகில் அமர வைக்கிறார் மிடானி. குழந்தையைச் சுமந்துகொண்டு சந்தோஷமாக நடக்கிறது போன் சான். களைப்பு ஏற்படும்போது கேரட்டையும் கோஸையும் சாப்பிடுகிறது. “பார்க்கச் சாதுவாகத் தெரிந்தாலும் இவன் குறும்புக்காரன். பெண்களைக் கண்டால் பாதை மாறி, அவர்கள் பின்னாலேயே சென்றுவிடுவான்’’ என்கிறார் மிடானி.

நல்ல மகன்… நல்ல அப்பா!

அமெரிக்காவின் சிகாகோ சிறையில் வசிக்கிறார் 17 வயது லாமண்ட் கதே. கூடைப்பந்து வீரராக இருந்த லாமண்ட், ஒரு பிஸா கடையில் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் சிறைக்குள் வந்தார். இங்கே வந்த பிறகு அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிலைமை மோசமாகும் போதெல்லாம் கையில் கிடைக்கும் உலோகங்கள், தோல் பொருட்கள் போன்றவற்றை விழுங்கிவிடுவார். பொருட்கள் இல்லை என்றால் சிறை கேமராவை உடைத்து, முழுங்கி விடுவார். 24 முறை அறுவை சிகிச்சை செய்து, பொருட்களை வெளியே எடுத்திருக்கிறார்கள். இதற்காக 8 கோடிக்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட காலம் மன அழுத்தத்தில் இருந்த லாமண்ட்டுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கவில்லை. அதனால்தான் மனஅழுத்தம் இவ்வளவு மோசமான நிலைக்கு வந்துவிட்டது என்கிறார் சிறை அதிகாரி.

உலகத்துக்கு நியாயம் சொல்றவங்களுக்கு யார் எடுத்துச் சொல்றது?

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில், லடா 65 என்ற ஓவியப் பயிற்சிப் பட்டறை நடந்தது. இது தெரு ஓவியங்களுக் கான பயிற்சிப் பட்டறை. இதில் கலந்துகொண்ட 100 பேரும் முதியவர்கள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் வண்ணங்களைத் தீட்டித் தள்ளிவிட்டனர். லாரா பெப்பில் ரோட்ரிகுயஸ் என்பவர்தான் லடா 65 என்ற அமைப்பை உருவாக்கியவர். முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கவும், வயதாகிவிட்டது என்ற சிந்தனையை மாற்றவும் இந்த அமைப்பை உருவாக்கியதாகச் சொல்கிறார். இந்த ஓவியப் பயிற்சியின் மூலம் பழைய உற்சாகம் திரும்பிவிட்டது, வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் முதியவர்கள்.

வெல்டன் லாரா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகத்துக்கு-நியாயம்-சொல்றவங்களுக்கு-யார்-எடுத்துச்-சொல்றது/article7267114.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அணில் சண்டை!

 
 
masa_2872259f.jpg
 

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புகைப்படக்காரர் கிஸ்கிலோவ், மிக அரிதான ஒரு சண்டையைப் படம் பிடித்திருக்கிறார்.

‘‘இரண்டு அணில்கள் சண்டையில் இறங்கின. நான் கேமராவோடு தயாரானேன். என்னால் நம்பவே முடியவில்லை… எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ் லீ காற்றில் பறந்து சண்டை போடுவது போல இரண்டு அணில்களும் சண்டையிட்டன. கைகளால் குத்தின. கால்களால் உதைத்தன. தற்காப்பு கலைகள் தெரிந்த ஒருவரால்தான் இப்படிச் செய்ய இயலும். என் வாழ்நாளில் வித்தியாசமான காட்சிகளைப் படம் பிடித்துவிட்டேன்!’’ என்கிறார் கிஸ்கிலோவ்.

அணில்கள் தற்காப்பு கலைகளைக் கற்றுள்ளதோ!

பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர் ஹெர்னான்டோ குவான்லாவோ. கணக்காளராகப் பணிபுரியும் இவர், பொதுமக்களுக்கான நூலகத்தைத் தன் வீட்டில் அமைத்து, பராமரித்து வருகிறார். தினமும் கை நிறையப் புத்தகங்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறார். அதேபோல நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார். ’’எங்கள் பகுதியில் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். படிக்க ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்காகவே இந்த நூலகத்தை உருவாக்கியிருக்கிறேன். நான் 70 வயதை அடைவதற்குள் கல்வி அறிவில் எங்கள் மக்கள் முன்னேறிவிட வேண்டும்.

புத்தகங்கள் அறிவை மட்டும் கொடுப்பதில்லை. மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. கற்பனையை வளர்க்கின்றன. சில புத்தகங்கள் நம்மோடு உறவாடவும் செய்கின்றன. ஒரு புத்தகம் எத்தனை வழிகளில் நமக்குப் பயன் தருகிறது என்பதைப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறேன். குழந்தைகள் இங்கே வந்து எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். படித்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தரலாம். இங்கே விதிகள் எதுவும் இல்லை என்பதுதான் ஒரே விதி.

6 ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறு வயதில் படித்த புத்தகங்களை சேகரித்து, ஒரு அலமாரியில் வைத்தேன். அது நாளடைவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட மிகப் பெரிய நூலகமாக உருவாகிவிட்டது. என்னுடைய முயற்சி வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு பெரிய பெரிய பெட்டிகளில் புத்தகங்கள் நன்கொடையாக வர ஆரம்பித்தன. என் வீட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் புத்தகங்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. மணிலாவில் 50 நூலகங்கள் இருக்கின்றன. அவை எல்லோரும் பயன்படுத்தும் விதத்தில் எளிதாக இல்லை. சில நூலகங்களில் பணம் செலுத்த வேண்டும். ஆனால் என்னுடைய நூலகத்துக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தால் போதும். வேறு எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை’’ என்கிறார் ஹெர்னான்டோ.

தொடரட்டும் உங்கள் சேவை!

கலிபோர்னியாவைச் சேர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களுக்கான நிறுவனம் பிர்ச். வியாபாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது. இங்கே வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதே இந்தக் கடையின் தனிச் சிறப்பு. சமையலறைப் பொருட்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு மிகப் பெரிய சமையலறை இங்கே இருக்கிறது. குளியலறைப் பொருட்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு பெரிய குளியலறை இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்திப் பார்ப்பதற்கு 2 மணி நேரம் ஆகும் என்பதால் காபியும் நொறுக்குத் தீனிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ’’எங்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும்.

ஆனால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திப் பார்த்து, ஒரு பொருளை வாங்கும்போது மன நிறைவு அடைகிறார்கள். அதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம். ஷவர் வாங்குகிறீர்கள் என்றால், குளியலறையில் அந்த ஷவரைப் பயன்படுத்தி, திருப்தி என்றால் வாங்கலாம். இல்லாவிட்டால் வேறு பொருட்களைத் தேடலாம். அமெரிக்கா முழுவதும் 8 கடைகளை நடத்தி வருகிறோம்’’ என்கிறார் பிர்ச் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெஃப்ரி சியர்ஸ். 2015-ம் ஆண்டு மட்டும் இந்தக் கடைகளின் வருமானம் 225 மில்லியன் டாலர்கள். ஒவ்வோர் ஆண்டும் வருமானம் இரட்டிப்பாகிறது. ஒவ்வோர் ஆண்டும் 4 புதிய கடைகளைத் திறக்கிறார்கள்.

புதிய வியாபாரத் தந்திரம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அணில்-சண்டை/article8659540.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாக்கால் தடவிய பின்னர் தாக்கிய புலி!

 
 
masala_2422080f.jpg
 

தாய்லாந்தில் வனவிலங்குகள் பூங்கா மற்றும் கோயில்களில் புலிகள் சுதந்திரமாக வலம் வருகின்றன. புலிக்குட்டிக்குப் பால் கொடுக்கலாம். மடியில் தூக்கி வைத்துக்கொள்ளலாம். பெரிய புலிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். தாய்லாந்து கோயில்களில் புலிகளுடன் பழகவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புலிக் கோயில் ஒன்றில் ஏராளமான புலிகள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் புத்தத் துறவிகள் புலிகளுடன் விளையாடுகின்றனர். மொட்டைத் தலையை, புலி நாக்கால் தடவுவதற்கு அனுமதியளிக்கின்றனர். லுவாங் டா ஜான் என்ற 64 வயது துறவி 300 கிலோ எடை கொண்ட சஹதெப் புலியுடன் விளையாடும்போது, கடுமையாகத் தாக்கிவிட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேறி வருகிறார். தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புலி தாக்கவில்லை. இது இயல்பாக நடந்த நிகழ்ச்சி என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். ஆனால் விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

புலிகளை அதன் வாழ் இடங்களில் விடுவதுதான் புலிக்கும் நல்லது, மனிதர்களுக்கும் நல்லது…

ஐரோப்பிய பனங்காடைகள் வேர்க்கடலைகளைத் தரம் பிரிக்கும் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன. வேர்க்கடலையை எடுக்கும்போதே எடையைக் கண்டுபிடித்து விடுகின்றன. பிறகு அலகால் ஒரு குலுக்குக் குலுக்குகின்றன. இதன் மூலம் உள்ளே பருப்பு இருப்பதை அறிந்துகொள்கின்றன.

பருப்பு இல்லாத, பூச்சி வேர்க்கடலைகளைத் தூக்கி வீசிவிடுகின்றன. சிறந்த வேர்க்கடலைகளை மட்டும் சேமித்துக்கொள்கின்றன. ஆராய்ச்சியாளர்கள் பல விதங்களில் பனங்காடைகளை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தபோதும், வேர்க்கடலைகளை அழகாகத் தரம் பிரித்துக் காட்டின!

அடடா! எத்தனை அறிவு!

செக் குடியரசில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிற ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி மிகவும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அப்படித் தற்போது சிலர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். 2 மாதங்கள் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வெற்றி கரமாகத் திரும்புகிறவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஸோரா செஞ்கோவா, “என் பாட்டி, தாத்தா மூலம் இரண்டாம் உலகப் போர் கதைகளை நிறையக் கேட்டிருக்கிறேன். நாஜி ஆக்கிரமிப்பில் உலகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார். ஸோராவுக்கு ஆதரவாக நிறையப் பேர் இருப்பதைப் போலவே, எதிரான கருத்துகளைச் சொல்லிக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் ஸோரா முதல் பகுதியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நாஜிக்களின் தாக்கம் இருந்துகொண்டிருக்கிறது…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நாக்கால்-தடவிய-பின்னர்-தாக்கிய-புலி/article7263611.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

 

உலக மசாலா: ரோலர்கோஸ்டர் உணவகம்

 
 
masala_2873407f.jpg
 

பிரிட்டனில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்கா ஆல்டன் டவர்ஸ். இங்கே சமீபத்தில் ‘ரோலர்கோஸ்டர் ரெஸ்டாரண்ட்’ ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உணவுகள் தயாரிக்கப்பட்டு, சிறிய ரோலர்கோஸ்டர்களில் மேஜைக்கு வந்து சேர்கின்றன. மக்கள் மத்தியில் ரோலர்கோஸ்டர் உணவு விடுதிக்கு பெரிய அளவில் ஆதரவு பெருகி வருகிறது. உணவு விடுதியில் நுழைந்து, ஒரு மேஜையில் அமர வேண்டும். டேப்லட்டைப் பயன்படுத்தி எப்படி உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்று விளக்கம் தரப்படும்.

ஆர்டர் செய்த பிறகு, 26 அடி உயரத்தில் இருந்து ரோலர்கோஸ்டர்கள் மூலம் உணவுகள் மேஜைக்கு வந்து சேரும். இதில் ஒரே ஒரு சிக்கல்தான். ரோலர்கோஸ்டரைச் சுற்றி 4 மேஜைகள் இருக்கின்றன. அந்தந்த மேஜைகளுக்கான உணவு அங்கே போய் நிற்பதில்லை. மேஜைகளின் வரிசை எண்களைப் பார்த்து, உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கான உணவு இல்லை என்றால், அடுத்த மேஜைக்குத் தள்ளிவிட வேண்டும். உணவுகள் இறுக்கமாக மூடப்பட்ட பாத்திரங்களில் வருகின்றன. குளிர் பானங்கள் பாட்டில்களில் வருகின்றன. அதனால் ஆபத்து நிகழ வாய்ப்பில்லை. சூடான காபி, தேநீர் என்றால் மனிதர்களே வந்து தருகிறார்கள். உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, ரோலர்கோஸ்டர்களை நிமிர்ந்து பார்த்தபடியே, ஆர்வத்துடன் எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். உணவு வந்தவுடன், தாங்களே ரோலர்கோஸ்டர்களில் சுற்றி வந்தது போலப் பரவசப்படுகிறார்கள். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஆல்டன் டவர்ஸுக்கு வரும் மக்களுக்காக இந்த விடுதி திறந்திருக்கும். மாலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. ’’

பொழுதுபோக்கு பூங்காவுக்கு வருபவர்களுக்கு எங்கள் விடுதி நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பிரிட்டனில் இந்த விடுதியைப் போல இன்னொன்று கிடையாது’’ என்கிறார் ஆல்டன் டவர்ஸைச் சேர்ந்த கில் ரைலே. கடந்த ஆண்டு ரோலர்கோஸ்டர் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 5 பேருக்குச் செயற்கைக் கால்கள் வைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. அதைச் சரி செய்வதற்காகவே ரோலர்கோஸ்டர்ஸ் உணவு விடுதியை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரோலர்கோஸ்டரில் வருவதால் உணவுகளின் சுவை அதிகமாகுமா என்ன?

 

எஸ்தோனியா நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் லீலா, லீனா, லிலி லூய்க் சகோதரிகள். ரியோடிஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 120 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பேர் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதான இந்தச் சகோதரிகள் மாரத்தான் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். ‘டிரையோ டு ரியோ’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து, ஆதரவு தேடி வருகிறார்கள். மூவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பே பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டனர். ’’நாங்கள் மூவரும் குழந்தையிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருப்போம்.

மூவரும் நன்றாக நடனமாடுவோம். பிறகு தொழில்முறை விளையாட்டுகளின் மீது எங்கள் ஆர்வம் திரும்பியது. பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்தோம். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தோம். எங்கள் நாட்டுக்கு வெளியே எங்கள் திறமைகளைக் காட்ட வேண்டும் என்றால் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்பதுதான் சிறந்தது. நாங்கள் மூவரும் தனித்தனியாகவே வசிக்கிறோம். விளையாட்டுதான் எங்களை ஒன்றிணைக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உணர்வுபூர்வமாக ஆதரவு அளித்துக்கொள்வோம். விளையாட்டு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

உதவி செய்துகொள்வோம். கென்யா, இத்தாலி என்று நாங்கள் பயிற்சிக்காகப் பல நாடுகளுக்குச் சென்று திரும்பிவிட்டோம். நாங்கள் மூவருமே போட்டியில் வெல்லும் அளவுக்குப் பயிற்சி எடுத்திருக்கிறோம். எங்கள் மூவரில் ஒருவராவது எங்கள் நாட்டுக்குப் பதக்கம் பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் லீலா.

உருவமும் திறமையும் ஒரே மாதிரி பெற்ற சகோதரிகளுக்கு வெற்றி கிடைக்கட்டும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ரோலர்கோஸ்டர்-உணவகம்/article8663004.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 16 வருடங்களாக தினமும் செல்ஃபி!

 
 
masala_2420982f.jpg
 

அலாஸ்காவைச் சேர்ந்தவர் ஜொனாதன் கெல்லர். கடந்த 16 ஆண்டுகளாகத் தினமும் தன்னைப் புகைப்படங்கள் எடுத்து, சேகரித்து வருகிறார். தினமும் ஒரே மாதிரி நின்றுகொண்டு, முகத்தை மட்டும் புகைப்படங்கள் எடுக்கிறார். இதுவரை 5,840 புகைப்படங்களை எடுத்திருக்கிறார். 22 வயதில் ஜொனாதனுக்கு ஏற்பட்ட இந்தப் பழக்கம், இன்று 39 வயதிலும் தொடர்கிறது.

தேதி வாரியாக வரிசையாகப் புகைப்படங்களை அடுக்கி வைத்திருக்கிறார். இவற்றை எல்லாம் மூன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக மாற்றியிருக்கிறார் ஜொனாதன். “நம் உடலில் தினசரி மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் அவற்றை மிகத் துல்லியமாக நம்மால் பார்க்க முடிவதில்லை.

தினமும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டால், என்னுடைய வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடியும். என்னுடைய இந்த ப்ராஜக்ட் பற்றி ஆரம்பத்தில் என் காதலிக்கே சரியாகப் புரியவில்லை. யார் என்ன நினைத்தாலும் சாகும் வரை புகைப்படம் எடுப்பதை நிறுத்தப் போவதில்லை’’ என்கிறார் ஜொனாதன்.

தினமும் உங்களை புகைப்படம் எடுக்க சலிப்பா இல்லையா?

நியுயார்க்கில் வசிக்கிறார் ரிச்சர்ட் பிரின்ஸ். இவருடைய கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான டாலர்களுக்குப் புகைப்படங்கள் விற்பனையாகின்றன. இந்தப் படங்கள் அனைத்தும் பிரின்ஸுக்குச் சொந்தமில்லை. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் பிறரின் புகைப்படங்களை எடுத்து, ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்து, காட்சிக்கு வைத்து விடுகிறார். சம்பந்தபட்டவர்களிடம் அனுமதி வாங்காமல் மிகவும் துணிச்சலோடு இந்தக் காரியங்களைச் செய்து வருகிறார்.

சமீபத்தில் நியு யார்க்கில் நடைபெற்ற அவருடைய கண்காட்சியில் ஒரு புகைப்படம் மட்டும் 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. ஒரு சிலர் பிரின்ஸ் மீது வழக்கு தொடுத்தார்கள். ஆனால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பி விடுகிறார் பிரின்ஸ். தன்னை ஒரு புகைப்படக்காரராக அவர் சொல்லிக்கொள்வதில்லை. `சேகரிப்பாளர்’ என்றே சொல்கிறார். தற்போது `ஒரிஜினல்’ என்ற தலைப்பில் மன்ஹாட்டனில் ஒரு கண்காட்சியை நடத்தி வருகிறார்.

’ஒரிஜினல்’ என்ற பெயரில் கண்காட்சி நடத்துறது எல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா பிரின்ஸ்?

அமெரிக்காவில் வசிக்கிறார் தாமஸ் நீல் ரோட்ரிகுயஸ். 1999ம் ஆண்டு முதல் ஒரு நாயை எடுத்து வளர்த்து வருகிறார். 15 வயதான அந்த நாய்க்குத் திடீரென்று வயிற்றில் இரண்டு கட்டிகள் வந்துவிட்டன. நாய் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். 15 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து வந்த செல்ல நாயை, மீதி இருக்கும் காலத்தில் மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் நீல்.

அரிசோனா, வாஷிங்டன் டி.சி., சான்ஃப்ரான்சிஸ்கோ, பால்டிமோர், கலிஃபோர்னியா, டெக்சாஸ் போன்ற இடங்களுக்கு நாயுடன் சாகசப் பயணங்களை மேற்கொண்டார். “முதலில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே திட்டமிட்டேன். ஆனால் செல்ல நாய் பூவின் ஒத்துழைப்பால் அது 7 வாரங்களுக்கு நீடித்தது. இன்னும் சில நாட்களே அது என்னுடன் இருக்கப் போகிறது. வலியின்றி, நிம்மதியான மரணம் வரவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பமாக இருக்கிறது’’ என்கிறார் நீல்.

எத்தனை அன்பான மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-16-வருடங்களாக-தினமும்-செல்பி/article7259146.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: கரடி நண்பன்!

 
 
masala_2875687f.jpg
 

ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லனா, யூரி பண்டெலீன்கோவும் 3 மாத கரடிக் குட்டியைத் தத்தெடுத்துக்கொண்டனர். ஸ்டீபன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கரடிக்கு இப்போது 23 வயது. 7 அடி உயரமும் 136 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்டமான கரடியாக உருவெடுத்துவிட்டது. ஸ்வெட்லனா, யூரியுடன் சேர்ந்து பந்து விளையாடுகிறது. செடிகளுக்கு நீர்ப் பாய்ச்சுகிறது. சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கிறது. உணவு மேஜையில் அமர்ந்து தேநீர் பருகுகிறது, ரொட்டியைச் சாப்பிடுகிறது. யூரியுடன் கட்டிப் பிடித்து உருளுகிறது. அவர் படித்துக் காட்டும் கதைகளை ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறது. அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தூங்குகிறது.

‘‘ஸ்டீபன் எங்கள் செல்லக் குழந்தை. அவன் எங்களுக்கு அளித்து வரும் சந்தோஷமான தருணங்கள் ஒவ்வொன்றும் மதிப்பிட முடியாதவை. 23 ஆண்டுகளாக ஏராளமான புகைப்படங்கள் எடுத்திருக்கிறோம். அவை அனைத்தும் எங்கள் வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கின்றன. ஒரு நாளைக்கு 25 கிலோ மீன், காய்கறிகள், முட்டைகளைச் சாப்பிடுவான். ஒரு கரடியால் இவ்வளவு மென்மையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் இவனைத் தத்தெடுக்கும்போது, அவன் தாயை இழந்து, மோசமான நிலையில் இருந்தான்.

எங்கள் அன்பாலும் கவனிப்பாலும் விரைவில் குணமடைந்தான். இன்றுவரை அவனுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஸ்டீபன் இசையை மிகவும் விரும்புவான். வீட்டுக்கு வெளியே எந்த உணவையும் சாப்பிட மாட்டான். கால்பந்து விளையாட்டு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வருகிறவர்களிடம் அத்தனை நாகரிகமாக நடந்துகொள்வான். ஆனால் அவனை முதல் முறை பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள். இதுவரை யாருக்கும் சிறிய தீங்கு கூட அவன் இழைத்ததில்லை. அவனுக்கு அதெல்லாம் தெரியாது. சில நேரங்களில் அவன் எங்கள் குழந்தையா, நாங்கள் அவன் குழந்தைகளா என்று குழப்பம் வரும் அளவுக்கு எங்களை கவனித்துக்கொள்வான்’’ என்கிறார் ஸ்வெட்லனா.

ச்சோ ஸ்வீட் ஸ்டீபன்!

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் ‘ஸ்பேஸ்-அவுட்’ என்ற போட்டி நடத்தப்பட்டது. தொழில்நுட்பத்துக்கு அடிமையானவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியாளர்கள் 60 பேர் ஒரு பூங்காவில் அமர்ந்தனர். ஸ்மார்ட் போன், டேப்லட் போன்றவற்றை எடுத்து, எதிரில் வைத்தனர். 90 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல், யாரிடமும் பேசாமல் அமர்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் போட்டி. குறிப்பிட்ட இடைவெளிகளில் போட்டியாளர்களின் இதயத் துடிப்பு பரிசோதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கருவிகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாலும் யாருடைய இதயத் துடிப்பு இயல்பாக இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர்.

தென்கொரியாவில் 80% மக்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் 15% மக்கள் போனுக்கு அடிமையாகி வருகிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணி நேரம் போனில் பேசுகிறார்கள், தகவல்கள் அனுப்புகிறார்கள், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள். இப்படி அடிமையாகிறவர்களின் உடல் நலமும் மன நலமும் பாதிக்கப்படுகிறது. இவற்றில் இருந்து இவர்களை மீட்பதற்காகவே ஸ்பேஸ்-அவுட் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள். அவர்களில் இருந்து 60 பேர் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ‘‘90 நிமிடங்களும் தூங்காமல், பேசாமல், அசையாமல், எதிரிலிருக்கும் எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா என்பதைத்தான் பரிசோதிக்கிறோம். போன், டிவி, கம்ப்யூட்டர் என்று நம் மூளை தொடர்ந்து அதிக வேலை செய்கிறது.

மூளைக்கு சிறிது நேரம் ஓய்வையும் மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கவே இந்தப் போட்டியை நடத்தி வருகிறோம்’’ என்கிறார் நிகழ்ச்சி அமைப்பாளர். ‘‘இந்தப் போட்டி நிச்சயம் என்னைக் கொஞ்சம் மாற்றிவிட்டது. 90 நிமிடங்கள் ஒரு வேலையும் செய்யாமல் போனைத் தொடாமல் என்னால் இருக்க முடிந்ததை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இனி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள இருக்கிறேன்’’ என்கிறார் ஒரு போட்டியாளர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கரடி-நண்பன்/article8671369.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அன்புக்கு எல்லை இல்லை

 
masala_2876952f.jpg
 

பாட்டிகள் அனைவருக்கும் தங்கள் பேரக் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு இருக்கும். வட கரோலினாவைச் சேர்ந்த 66 வயது கார்மென் பாக், பேரக்குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதில் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டார்! அவரது வீடு முழுவதையும் பேரக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களால் நிறைத்திருக்கிறார். வீட்டின் சுவர்கள், திரைச் சீலைகள், சோஃபா உறைகள், குஷன் உறைகள், துண்டுகள், சட்டைகள், காபி கோப்பைகள் என்று அனைத்து இடங்களிலும் அழகான குழந்தைகளின் விதவிதமான அணிவகுப்பு கண்களைக் கவர்கின்றன.

’’என் பேரக்குழந்தைகள் என்னை விட்டு வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டனர். அவர்களின் முகம் என் கண் முன்னே வந்துகொண்டே இருந்தது. அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அப்போதுதான் இந்த யோசனை உதித்தது. இதுவரை சேமித்து வைத்த படங்களை எடுத்து, வீட்டின் சகல இடங்களிலும் பிரிண்ட் செய்து வைத்துவிட்டேன். அவர்கள் எல்லாம் என்னுடனேயே இருக்கிறது போல அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. இந்தச் சுவர் வால்பேப்பர்களும் திரைச்சீலைகளும் குஷன் கவர்களும் என் கற்பனையில் உருவானவை என்பது கூடுதல் திருப்தியை அளிக்கிறது. என் கணவரும் என் விருப்பத்துக்கு மிகவும் மதிப்பளித்து, அமைதி காக்கிறார். அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் என்னை வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.

என் மகளுக்கும் மருமகனுக்கும் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் என் பேரக் குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. எனக்கும் என் பேரக்குழந்தைகளுக்கும் சந்தோஷமாக இருக்கும்போது மற்றவர்களைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் என்னைப் பைத்தியம் என்று நேரிலேயே சொல்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உலகிலேயே மிகவும் பெருமைக்குரிய பாட்டி நான்தான் என்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் இருக்கிறது’’ என்கிறார் கார்மென் பாக்.

அன்புக்கு எல்லை ஏது?

ஜப்பானியர்களின் அதிக நேரம் வேலை செய்யும் கலாசாரத்தால் அவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கோகோ கோலா நிறுவனம் சமீபத்தில் ‘ஸ்லீப் வாட்டர்’ என்ற பானத்தை வெளியிட்டிருக்கிறது. இரவில் தூக்கம் வராதவர்கள், தூக்கத்தில் அடிக்கடி விழிப்பவர்களுக்கு இந்த ஸ்லீப் வாட்டர் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்கள். எல்-தியானின், அமினோ ஆசிட் கலந்துள்ள இந்தப் பானத்தைக் குடித்தால், மன அழுத்தம் குறைகிறது. பதற்றம் குறைகிறது. இதனால் இரவில் நிம்மதியான, 8 மணி நேரத் தூக்கம் சாத்தியமாகிறது. ’’ஸ்லீப் வாட்டரில் கஃபின் கலக்கப்படவில்லை. இரவில் குளித்துவிட்டு, ஸ்லீப் வாட்டரைக் குடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான். நல்ல தலையணை, பிடித்த இசை கேட்டபடி படுத்தால் ஒரு சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடும். அதிகாலை எழும்போது மிகவும் புத்துணர்ச்சியை உணர்வீர்கள். இதில் எந்தவிதமான ரசாயனமும் கலக்கப்படவில்லை. நிம்மதியான தூக்கம் வருவதற்குத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்கிறார் ஜப்பானுக்கான கோகோ கோலா அதிகாரி.

இனி தூக்கத்தையும் காசு கொடுத்துதான் வாங்கணுமா?

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முதலை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். தண்ணீருக்கு அருகில்தான் பொதுவாக முதலைகள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். ஆனால் பெரிய மைதானத்தில் மனிதர்களைப் பார்த்தும் கொஞ்சம் கூடப் பதற்றம் இல்லாமல் நடந்து சென்றது முதலை. ’’ஞாயிற்றுக் கிழமை என்பதால் விளையாடுவதற்காக வந்தோம். திடீரென்று ஒரு டைனோசர் மைதானத்துக்குள் நுழைந்துவிட்டதோ என்று தான் நினைத்தேன். பிறகுதான் அது 16 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய முதலை என்று தெரிந்தது. என்னுடைய கேமராவில் பதிவு செய்துகொண்டேன். ஒரு விளையாட்டு மைதானத்தில் முதலையின் வருகை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்கிறார் வெண்டி ஸ்கோஃபீல்ட்.

பெரிய முதலையைப் பார்த்தால் பயம் வராதா என்ன?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அன்புக்கு-எல்லை-இல்லை/article8676542.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் இளம் நிருபர்

 
 
ulagam_2878223f.jpg
 

10 வயது குழந்தைகள் படிப்பார்கள், விளையாடுவார்கள். ஆனால் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஜான்னா ஜிஹாத் நிருபராக இருக்கிறார். அதுவும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதியில், ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார். நபி சலே கிராமத்தைச் சேர்ந்த ஜான்னா, மிக இளம் வயதிலேயே போர் கொடூரங்களை நேரில் கண்டிருக்கிறார்.“தன்னைவிடச் சிறியவனான ஒரு நண்பனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்தபோது, அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனாள் ஜான்னா. அதிலிருந்து மீண்டவள் தன்னுடைய எண்ணங்களை எல்லாம் ஒவ்வொரு இரவிலும் எழுதி வைக்க ஆரம்பித்தாள். அவளுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, அநியாயங்களை அம்பலப்படுத்த விரும்பினாள். 7 வயதில் நிருபராக மாறினாள். என்னுடைய ஐபோனைப் பயன்படுத்தி இஸ்ரேலிய ராணுவம் செய்து வரும் கொடுமைகளை வீடியோவாகவும் படமாகவும் எடுக்கிறாள். சர்வதேச அமைதிப் போராட்டக்காரர்கள், பத்திரிகைகளுக்கு அதை அனுப்பி வைத்து விடுகிறாள். என் மகளை நினைத்து பயப்படவில்லை. ஒரு சின்னக் குழந்தை வன்முறையை எதிர்த்துப் போராடுகிறாள் என்பது இந்த உலகத்துக்கு எவ்வளவு பெரிய பாடம்! என் மகளை நினைத்து பெருமைகொள்கிறேன்” என்கிறார் ஜான்னாவின் தாய் நவால். “நான் பார்ப்பதை எல்லாம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களை மட்டுமே எழுதுவேன், படம் பிடிப்பேன். டிவி, யுடியூப், ஃபேஸ்புக் என்று நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினரின் வன்முறைகளை அம்பலப்படுத்தி வருகிறேன். நான் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. பலமுறை என் வீடு கண்ணீர்ப் புகையால் நிரப்பப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் எங்களுக்கு வாழ்வதற்கு வேறு வாய்ப்புகளே கிடையாது. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். ஆனால் இதுவா வாழ்க்கை? இங்கே சுதந்திரத்துக்காகப் போராடுவதையே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக நானும் இந்தப் பணியைச் செய்து வருகிறேன்” என்கிறார் ஜான்னா. 2014-ம் ஆண்டு உலகின் மிகச் சிறிய நிருபர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜான்னா. தன் அம்மாவுடன் ஜெருசலம், ஹெப்ரான், நப்லஸ், ஜோர்டான் பகுதிகளுக்கு பயணம் செய்து, அனுபவங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து, சி.என்.என்., ஃபாக்ஸ் நியூஸ் சானல்களில் பணிபுரிய வேண்டும் என்பதே ஜான்னாவின் லட்சியம். ஏனென்றால் பாலஸ்தீன தரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிட மறுப்பதால், தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஜான்னா.

உலகின் இளம் நிருபருக்கு ஏராளமான அன்பும் வாழ்த்துகளும்!

அமெரிக்காவில் வசிக்கும் சஸாரியோவின் குதிரை பிரெட்ரிக் ஸ்டாலியன். உலகிலேயே மிக அழகான கறுப்பு குதிரை என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. பிரெட்ரிக்கின் சிறப்பே அதனுடைய நீண்ட கருங்கூந்தல்தான். நீண்ட முடிகள் காற்றில் அலை மோத, பிரெட்ரிக் ஓடிவரும் அழகே அலாதியானது! “தினமும் பிரெட்ரிக்கைக் குளிக்க வைக்கிறோம். ஷாம்பு, கண்டிஷ்னர் போன்ற அழகுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பயன்படுத்தி வருகிறேன். குதிரையை குளிக்க வைத்து, முடியைச் சிக்கெடுப்பதற்காக 3 பெண்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறேன். குதிரை குளித்து, தயாராக 2 மணி நேரம் ஆகும். ஒரு மாதத்துக்கு 10 சீப்புகள் தேவைப்படுகின்றன. கேரட்களைக் கண்டால் மிகவும் மகிழ்ச்சியாகிவிடும். அதனால் தினமும் கேரட்களைக் கொடுத்துவிடுவேன். வேலையும் அதிகம், செலவும் அதிகம் என்றாலும் என் குதிரையைப் போல இன்னொன்று உலகில் இல்லை என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது! உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளது பிரெட்ரிக்” என்கிறார் அதன் உரிமையாளர் சஸாரியோ.

அன்னா சீவல் கதையில் வரும் ப்ளாக் பியூட்டி இதுதானோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-இளம்-நிருபர்/article8680591.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்!

 
ice_cream_2879840f.jpg
 

நியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்திருக்கிறது. தேங்காய்ப் பால், தேங்காய் க்ரீம், தேங்காய்த் தூள், தேங்காய்க் கரி கலந்த மிகச் சுவையான ஐஸ் க்ரீம் இது. காபி, சாக்லேட் சுவையை விட வித்தியாசமான சுவையில் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். தேங்காயின் சாம்பலை ஐஸ் க்ரீமுக்குள் கலந்தனர். சுவையும் வண்ணமும் இதில் இருந்துதான் கிடைத்தன. விற்பனைக்கு வந்த உடனேயே தேங்காய் சாம்பல் ஐஸ் க்ரீம் விற்பனையில் உச்சத்தைத் தொட்டுவிட்டது. வாடிக்கையாளர்களே சுவையில் மயங்கி, ஐஸ் க்ரீமுக்கு இணையதளங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். தேங்காய் ஓடுகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்துகிறார்கள். ‘’தேங்காய் சாம்பல் உடலுக்கும் நல்லது. வித்தியாசமான சுவையாகவும் இருக்கிறது. பார்க்கவும் கண்களைக் கவர்கிறது. ஒரு தேங்காய் சாம்பல் ஐஸ் க்ரீம் கோன் 470 ரூபாய்’’ என்கிறார் இதன் உரிமையாளர் மோர்கென்ஸ்டெர்ன். இந்த ஐஸ் க்ரீமைச் சாப்பிட்ட பிறகு, சிறிது நேரம் வரை பற்களும் நாக்கும் கறுப்பாக இருக்கும்.

உலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்!

வாகனங்கள் பெருக்கம் அதிகம் உள்ள சீனாவில், கார்களை நிறுத்துவது மிகக் கடினமான விஷயமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஷென்ஸென் யீ ஃபங் ஆடோமேஷன் டெக்னாலஜி நிறுவனம் உலகின் முதல் automatic guided vehicle ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க ரோபோக்களால் இயக்கக்கூடியது. கார்களை உரிய இடத்துக்கு எடுத்து வந்து நிறுத்தினால் போதும். மெட்டல் போர்ட் ரோபோ ஒன்று காருக்கு அடியில் சென்று, கார்களை இழுத்துக்கொண்டு சென்று, சரியான இடத்தில் நிறுத்திவிடுகிறது. இப்படி ஒரு காரை நிறுத்துவதற்கு 120 நொடிகளே ரோபோ எடுத்துக்கொள்கிறது. நெருக்கடி மிகுந்த சீன நகரங்களில் கார்களை நிறுத்தும் பிரச்சினை, தற்போது ரோபோ பார்கிங் மூலம் சரிசெய்யப்பட்டிருக்கிறது. ரோபோ மூலம் பார்க் செய்யும்போது கார்களுக்கு அதிக இடங்களும் தேவைப்படுவதில்லை. ஒரு நொடிக்கு 1.5 மீட்டர் வேகத்தில் 2.5 டன் எடைகளை இழுத்துச் செல்கிறது இந்த ரோபோ.

பார்கிங் பிரச்சினை இனி இல்லை!

அமெரிக்கத் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்டஷியான் போலவே இருக்கிறார் 24 வயது ஜெலினா பெரிக். அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் கிம் கர்டஷியான் என்றே நம்பி விடுகிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவரை 7 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ‘’நான் குரோவேசியாவைச் சேர்ந்தவள். அமெரிக்க ஃபேஷன் மீது எனக்கு ஆர்வம் எப்போதுமே இருந்ததில்லை. இயற்கையிலேயே என் உருவ அமைப்பும் கிம் கர்டஷியான் போலவே அமைந்திருப்பதால்தான் எங்கள் இருவருக்கும் உருவ ஒற்றுமை அதிகம் இருக்கிறது. நான் ஒருநாளும் அவரைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பியதே இல்லை. என்னுடைய ஒப்பனைகளும் ஆடைகளும் அவரது விருப்பத்தைப் போலவே இருப்பதாக மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது.

நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். அவரைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு யுடியூப் சானல் ஒன்றை ஆரம்பித்தேன். அதில் ஒப்பனை நுட்பங்களை விவரித்தேன். உன் கணவர் கான்யே வெஸ்ட், குழந்தை நார்த் படங்கள் எங்கே என்று ஏராளமானவர்கள் கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகுதான் என்னைக் கிம்மாக நினைத்துக்கொண்டார்கள் என்று அறிந்துகொண்டேன். ஏராளமான ஒப்பீடுகள் இருந்தாலும் அதை நான் முக்கியமாகக் கருதவில்லை. நான் புகழ் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால் இன்னொருவரின் புகழை எனதாக்கிக்கொள்ள விருப்பம் இல்லை. இத்தனைப் பேரும் கிம் போல இருப்பதாகச் சொன்னாலும் என் கண்ணாடி என்னவோ என்னை அப்படிக் காட்டவே இல்லை. என் நாட்டில் என் விருப்பப்படி நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் கிம் போல என்னை மாற்றிக்கொண்டிருப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்கிறேன்’’ என்கிறார் ஜெலினா.

நான் அவர் இல்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-முதல்-கறுப்பு-ஐஸ்-க்ரீம்/article8685762.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அபூர்வ மகள்!

 
 
masala_2881240f.jpg
 

பென்னி பேட்டர்சன் 1971-ம் ஆண்டு கோகோ கொரில்லாவைச் சந்தித்தார். பிறந்து சில மாதங்களே ஆன அந்தக் கொரில்லா குட்டியின் தாய் மோசமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் குட்டியைத் தனியாக வளர்க்க வேண்டிய சூழல். பென்னி கோகோ கொரில்லாவைத் தத்தெடுத்துக்கொண்டார். 44 வயது கோகோ இன்று உலகிலேயே பேசக்கூடிய பிரபலமான கொரில்லாவாக மாறியிருக்கிறது! கோகோவுக்கு 1000 சைகை மொழிகள் தெரியும். 2000 ஆங்கில வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும்! ’’கோகோவுக்கும் எனக்கும் அம்மா, மகள் உறவுதான் இருக்கிறது.

10 மனிதர்களுக்கு இணையான பலம் கொண்டவள். எதையும் வேகமாகவும் ஆர்வமாகவும் கற்றுக்கொள்ளக் கூடியவள். புத்தகத்தைப் படிக்கும்போது, விரலை நாக்கில் தடவிவிட்டுதான் புரட்டுவாள். பல் வலி என்றால் மருத்துவரை அழைக்கச் சொல்வாள். திரைப்படங்களில் கொரில்லாக்களை முட்டாளாகவும் முரடாகவும் காட்டுகின்றனர். ஆனால் கொரில்லாக்கள் மனிதர்களைப் போலவே மென்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கின்றன. விலங்குகள் மொழி நிபுணர் யுஜின் லிண்டன் கோகோவைப் பரிசோதித்தார். கோகோவின் சைகை மொழிகளைக் கண்டு பிரமித்துப் போனார்.

ஆரம்பத்தில் ஒர்க் என்ற வார்த்தைக்கும் ராக் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் எல்லாம் தெரியாமல் குழம்பிப் போனவள், இன்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விடுகிறாள். ஒருமுறை என்னுடைய ஷுக்களின் லேஸ்களைக் கட்டிவிட்டு, என்னைத் துரத்திப் பிடி என்றாளே பார்க்கலாம்! கோகோ ஏழு வயதில் நேஷனல் ஜியோகிரபிக் இதழின் அட்டையை அலங்கரித்தாள். கோகோவை வைத்துப் பல வித ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். பல்வேறு ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவளுக்குப் பிடித்த பொருட்களையும் டிவிடிகளையும் பரிசளிப்போம். ஆனால் அவளோ தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்பாள். கோகோவுடன் குடும்பம் நடத்த மைக்கேல் என்ற கொரில்லாவை அழைத்து வந்தோம். ஆனால் மைக்கேல் இறக்கும் வரை கோகோ சேர்ந்து வாழவில்லை. இப்போது இன்னொரு ஆண் கொரில்லாவுடன் வாழ்ந்து வருகிறது. குழந்தை கேட்கும்போது பொம்மைகளைக் கொடுத்தோம், அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வேறு வழியின்றி பூனைக்குட்டிகளை அவளிடம் கொடுத்தோம். ஒரு தாய்க்குரிய அன்போடு, பூனைக்குட்டிகளை அக்கறையாகப் பார்த்துக்கொண்டாள். அவற்றுடன் விளையாடினாள். பாட்டிலில் பால் ஊற்றிக் கொடுத்தாள். திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பாள். ஹாலிவுட் நடிகர்கள் ராபின் வில்லியம்ஸ், லியானார்டோ டிகாப்ரியோ போன்றவர்கள் இவளைப் பார்க்க வந்தபோது மிகவும் கூச்சப்பட்டாள். ராபின் வில்லியம்ஸ் இரண்டாவது முறை வந்தபோது நீண்ட நாள் பழகியவள் போல நடந்துகொண்டாள். அவரது அடையாள அட்டையைப் பரிசோதித்து, அவர்தானா என்று உறுதி செய்தாள்.

ராபின் வில்லியம்ஸ் இறந்த தகவல் அறிந்தபோது மிகவும் வருத்தப்பட்டாள். இப்படிப்பட்ட பண்புகள் நிறைந்த கொரில்லாக்களைப் புரிந்துகொள்ளாமல் கடந்த வாரம் ஒரு கொரில்லாவை அமெரிக்காவில் சுட்டுக் கொன்றுவிட்டனர்’’ என்கிறார் 69 வயது பென்னி பேட்டர்சன். வளர்ப்பு கொரில்லாக்கள் வேறு, இயல்பான கொரில்லாக்கள் வேறு என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். கோகோவுக்காக பென்னி திருமணமும் செய்து கொள்ளவில்லை, குழந்தையையும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை.

அபூர்வமான மகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பாய்ட், தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். சில நாட்களில் புது பாஸ்போர்ட் வந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரது புகைப்படத்தில் சிறிய ஹிட்லர் மீசை வைக்கப்பட்டிருந்தது. ‘’சுற்றுலா செல்வதற்காக அவசரமாக பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் கிடைத்தபோது, அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கவலை இல்லை என்று நினைத்தேன். பிரித்துப் பார்த்தால் ஹிட்லராக மாறியிருந்தேன். கோபத்துக்கு அளவே இல்லை. என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். கோபத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன். இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்காது. விசாரிக்கிறோம். பாஸ்போர்ட்டை மாற்றிக் கொடுக்கிறோம் என்கிறார்கள். இப்படி எல்லாமா விளையாடுவார்கள்?’’ என்கிறார் ஸ்டூவர்ட். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, இங்கிலாந்து பாஸ்போர்ட் அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

பாவம் ஸ்டூவர்ட்! .

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அபூர்வ-மகள்/article8690303.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.