Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: மது அருந்துபவர்களுக்கு ஒரு பாடம்...

 
கோப்பு படம்
கோப்பு படம்

மதுவுக்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள்வது மிகவும் துயரமான விஷயமாக இருக்கிறது. சீனாவில் வசிக்கும் 30 வயது ஸாங் ரூய், மதுவுக்கு மிக மோசமான அளவில் அடிமையாகியிருந்தார். அவர் குடும்பம் எவ்வளவோ முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ஸாங்கின் வேலை பறிபோனது. குடும்பமும் பிரிந்து சென்றது. குடிக்க பணமும் இல்லாமல், ஆறுதல் அளிக்க குடும்பமும் இல்லாமல் மிகவும் துயரமான நிலைக்குச் சென்றார் ஸாங். தானே தன்னை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அவரால் மீள முடியவில்லை.

ஏதாவது பொருட்களை விற்றுக் குடிக்க ஆரம்பித்தார். ஸாங்கின் அம்மா மனம் வருந்தி, இதிலிருந்து வெளிவருமாறு மன்றாடினார். இனி தான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், இந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார் ஸாங். ஒரு சிறிய அறைக்குள் சென்றார். மிகப் பெரிய சங்கிலியைக் கழுத்தில் இணைத்துக்கொண்டார். சங்கிலியைப் பூட்டி, சாவியை அம்மாவிடம் கொடுத்தார். ஆறு மாதங்களாக அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. லேப்டாப்பும் டிவியும் அந்த அறையில் இருக்கின்றன. நான்கு மீட்டர் தூரம் வரை சங்கிலியுடன் நடக்க முடியும் என்பதால் அறைக்குள் நடப்பார். உடற்பயிற்சி செய்வார்.

அம்மா கொடுக்கும் உணவைச் சாப்பிடுவார். சிறிது நேரம் டிவி பார்ப்பார். மீதி நேரம் தூங்குவார். ‘’ஒரு லாரி டிரைவராக இருந்தேன். நல்ல வருமானம். அழகான குடும்பம். திடீரென்று மதுவுக்கு அடிமையானேன். அலுவலகம், மனைவி, குழந்தைகளை மறந்து வன்முறையில் இறங்கினேன். குடும்பத்தை இழந்த பிறகுதான் உயிர் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. என்னை நானே சிறைப்படுத்திக்கொண்டேன். இந்த 6 மாதங்களில் ஒரு முறைகூட மது அருந்தவில்லை. கையில் மது பாட்டில் இருந்தாலும் குடிக்க மாட்டேன் என்று தோன்றுகிறதோ, அன்று சங்கிலியை விடுவித்து வெளியே வருவேன். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். மீண்டும் என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்’’ என்கிறார் ஸாங்.

உங்கள் வாழ்க்கை மது அருந்துபவர்களுக்கு ஒரு பாடம்…

எவ்வளவு பணம் கொடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்கினாலும் குறிப்பிட்ட காலத்தில் அழுக்காகிவிடுகின்றன. வாய் மூலமும் காது மூலமும் பாக்டீரியாவும் கிருமிகளும் பரவி, போன்களில் தொற்றிக்கொள்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜப்பானிய நிறுவனம் கியோசிரா, தண்ணீரால் சுத்தம் செய்யக்கூடிய போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. Digno Rafre என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்ட் போன் தண்ணீர், சோப் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டி ருக்கிறது.

அதனால் போனை சோப் போட்டு, தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். கேமரா உட்பட எல்லா பாகங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஸ்பீக்கர் மட்டும் இந்த போனில் கிடையாது. கீழே விழுந்தாலும் சிராய்ப்பு ஏற்படாது. இந்த போன் ஜப்பானில் மட்டுமே கிடைக்கிறது. வெளிநாடுகளில் விற்பனை செய்யும் திட்டம் இதுவரை இல்லை என்று கியோசிரா டெலிகாம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

விரைவிலேயே இந்தத் தொழில்நுட்பம் பரவத்தான் போகிறது…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7979801.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: இயற்கையின் விநோதங்களில் ஒன்று வீனஸ்!

 
red_grabs_2655611h.jpg
 

அடடா! கண்கொள்ளாக் காட்சி!

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிவப்பு நண்டுகள் ஏராளமாக வசிக் கின்றன. காடுகளில் உள்ள வளைகளில் வசிக்கும் நண்டுகள், இனப் பெருக்கக் காலத்தின் போது காட்டை விட்டு வெளியேறுகின்றன. கடற் கரையில் வளை தோண்டி, குடும்பம் நடத்துகின்றன. ஒரு சில வாரங்களில் பெண் நண்டுகள் வளைகளில் முட்டை களை இடுகின்றன. 4,5 நாட்கள் முட்டைகள் இட்ட பிறகு, லட்சக் கணக்கான நண்டுகள் மீண்டும் காடுகளுக்குத் திரும்புகின்றன. காட்டுக்கும் கடலுக்கும் 20 கி.மீ. தூரம். கூட்டம் கூட்டமாக இவ்வளவு தூரத்தையும் கடந்து செல்கின்றன. இந்த ஆண்டு நகரின் முக்கிய சாலைகள், பாலங்கள் மீது எல்லாம் ஏறி தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளன. சிவப்பு நண்டுகளின் சாலை ஆக்கிரமிப்பால் மனிதர்களுக்கான போக்குவரத்தைத் தடை செய்திருந்தது அரசாங்கம்.


உருவத்துக்கும் திறமைக்கும் தொடர்பு இல்லை!

அமெரிக்காவில் வசிக்கும் 17 வயது ஆடம் ரீட், ஹெரிடேஜ் பள்ளி கால்பந்து அணியின் முன்னணி வீரர். 4 அடி 5 அங்குல உயரமும் 43 கிலோ எடையும் கொண்ட வீரராக இருக்கிறார். தேசிய அணியில் இடம்பெற்றிருக்கும் ஆடமை முதல் முறை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் போட்டி முடிந்தவுடன் ஆடமின் திறமை கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள போட்டிப் போடுகிறார்கள். ‘‘புது அணி, புது மனிதர்களைச் சந்திக்கும்போது நான் மோசமான கிண்டலுக்கு உள்ளாவேன். அதற்காக ஒருநாளும் கவலைப்பட மாட்டேன். அவர்களுக்கு என் ஆட்டத்தின் மூலம் மட்டுமே பதில் அளிப்பேன். அவர்கள் தானாகவே மரியாதையும் அன்பையும் கொடுப்பார்கள். என் உயரம் குறித்து எனக்குக் கவலை இல்லை. என்னால் நடக்க முடிகிறது. ஓட முடிகிறது. சிறந்த விளையாட்டு வீரராக இருக்க முடிகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?’’ என்று கேட்கிறார் ஆடம். உருவம் சிறிதாக இருந்தாலும் ஆடமின் இதயம் மிகப் பெரியது. மிகவும் அன்பானது. எல்லோரையும் சரிசமமாக மதிக்கக்கூடியது என்கிறார்கள் அவரது பள்ளி நண்பர்கள்.

இயற்கையின் விநோதங்களில் ஒன்று வீனஸ்!

தென் கரோலினாவைச் சேர்ந்த கிறிஸ்டினா, கிறிஸ் தம்பதியர் வீனஸ் என்ற விநோதமான பூனையை வளர்த்து வருகின்றனர். வீனஸ் முகத்தில் ஒரு பாதி கறுப்பாகவும் மறு பாதி பழுப்பாகவும் இருக்கிறது. அதாவது கருஞ்சிறுத்தையும் புலியும் கலந்த முகமாகத் தெரிகிறது. கறுப்புப் பகுதியில் மஞ்சள் விழியும் பழுப்பு பகுதியில் நீல விழியும் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. வீனஸின் தோற்றத்துக்குப் பல்வேறு உயிரியியல் காரணங்கள் உள்ளன, இரண்டு கருக்கள் சேர்ந்து ஓர் உயிராகப் பரிணமித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வீனஸுக்கு ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறது. 9,13,000 பேர் இந்தப் பக்கத்தை லைக் செய்திருக்கிறார்கள். அதில், ‘‘நான் மேக்அப் போட்டுக்கொள்வதில்லை. என் படத்தை வைத்து போட்டோஷாப் செய்வதையும் வண்ணம் தீட்டுவதையும் நான் அனுமதிப்பதில்லை. இயற்கையாகவே நான் அபூர்வமானவளாக இருக்கிறேன்’’ என்று சொல்கிறது வீனஸ்! நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வீனஸ் இடம்பெற்று வருகிறது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D/article7983181.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பியர் பாட்டில் கட்டிடம்

 
masala_2464769f.jpg
 

சீனாவில் கட்டடக் கலைஞராக இருக்கிறார் லி ரோங்ஜுன். 8,500 பியர் பாட்டில்களை வைத்து, ஓர் அலுவலகத்தை உருவாக்கியிருக்கிறார். 300 சதுர அடி கொண்ட இந்தக் கட்டடத்தை லியும் அவரது தந்தையும் சேர்ந்து 4 மாதங்களில் கட்டி முடித்திருக்கின்றனர். பாட்டில்களுக்கு இடையில் கற்களையும் சிமென்ட்டையும் போட்டு நிரப்பியிருக்கின்றனர். இரவில் விளக்கு வெளிச்சத்தால் இந்தக் கட்டடம் ஜொலிக்கிறது. பாட்டில் கட்டடத்தால் தன்னுடைய தொழில் அமோகமாக இருப்பதாகச் சொல்கிறார் லி.

கலக்குங்க லி!

கலிஃபோர்னியாவின் பாலைவனத்துக்குள் இருக்கிறது டீப் ஸ்ப்ரிங்ஸ் கல்லூரி. ஆண்டுக்கு 12 மாணவர்களை மட்டுமே இங்கே சேர்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் மாணவர்களே செய்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு 20 மணி நேரம் ஆடு, மாடு, குதிரை வளர்ப்பு, தோட்ட வேலை போன்றவற்றில் ஈடுபட வேண்டும். 12 சீனியர் மாணவர்கள், 12 ஜுனியர் மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் இங்கே எப்பொழுதும் இருப்பார்கள். மாணவர்களுக்குள்ளேயே கமிட்டி அமைத்து, யாருக்கு என்ன வேலை என்பதை முடிவு செய்துகொள்கிறார்கள்.

தங்களுக்கு யார் பாடம் எடுக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தக் கல்லூரியின் நிறுவனர் எல்.எல்.நன், `உழைப்பவர்கள் படிக்க வேண்டும், படிப்பவர்கள் உழைக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் இதை உருவாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படிக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் இங்கே கற்றுக்கொள்ள முடியும். இங்கே சேர்ந்த பிறகு எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. பாடம் தொடர்பாகவும் மருத்துவத்துக்கும் வெளியில் செல்லலாம். போதைப் பொருட்கள், மது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

மாணவர்கள் படிப்பதற்கும் தங்குவதற்கும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் உள்ளன. இறைச்சி வெட்டும் பணி, தோட்டப் பணி, நூலகர் பணி என்று எத்தனையோ வேலைகள் இருந்தாலும் கால்நடைகளை மேய்ப்பதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், கோழிகள், வாத்துகள் போன்றவற்றிலிருந்து இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தோட்டத்தில் அவர்களே விளைவித்த காய்களையும் கீரைகளையும் பழங்களையும் சாப்பிட்டுக்கொள்கிறார்கள். ஒரு மாணவருக்கு சுமார் 31 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது இந்தக் கல்லூரி.

ஆஹா… வித்தியாசமான கல்லூரி…

பிரிட்டனில் ஒரு குழந்தையின் பிறந்தநாளுக்காக கேக் ஆர்டர் செய்திருந்தனர். டிஸ்னி திரைப்படத்தில் வரும் எல்சா இளவரசி போல கேக் கேட்டிருந்தனர். வீட்டுக்கு கேக் வந்தது. ஆர்வத்துடன் பிரித்தவர்களுக்கு அதிர்ச்சி. எல்சா இளவரசியின் தோற்றமே மாறிப் போயிருந்தது.

இளவரசி வயதான ராணியாகத் தெரிந்தார். ஆடையின் நிறம் மட்டுமே ஒத்திருந்தது. மற்றபடி எல்சாவுக்கும் கேக்கில் இருந்த உருவத்துக்கும் சம்பந்தமே இல்லை. வரையத் தெரியாதவர்கள் முதல் முறை வரைந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது. கேக்கின் வடிவத்தை விட கேக்கின் சுவை நன்றாக இருந்ததால், பிறந்தநாளைக் கொண்டாடி விட்டனர்.

ஐயோ யார் செய்த வேலையோ… பாவம் அந்தக் குழந்தை…

பாலி தீவில் தங்கும் விடுதி நீச்சல் குளம் ஒன்றில் 4 டால்பின்கள் வளர்க்கப்படுகின்றன. மிகச் சிறிய நீச்சல் குளத்தில் 4 டால்பின்கள் வளர்வது கடினம். இந்த விடுதியில் தங்குபவர்கள் டால்பின்களுடன் பொழுது போக்குவதற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாள் முழுவதும் டால்பின்கள் மக்களுடன் விளையாடுவதும் சாகசம் செய்து காட்டுவதுமாக இருக்கின்றன. அதிக மக்கள் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் அதிக அளவில் க்ளோரின் போடப்படுகிறது. இந்த க்ளோரினால் நான்கு டால்பின்களும் பெருமளவில் பார்வையிழந்துவிட்டன.

மனிதர்களுக்கு நல்ல அனுபவம், ஆனால் டால்பின்களுக்கு…?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7394923.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஆமை மீட்பு முயற்சி

 
masala_2657823f.jpg
 

நியூசிலாந்தில் வசிக்கிறார் அர்ரோன் கல்லிங். சமீபத்தில் அவருடன் பணி புரிபவர் ஒரு கடல் ஆமையை உணவுக்காக வாங்கி வந்தார். 2,200 ரூபாயைக் கொடுத்து, அந்தக் கடல் ஆமையை வாங்கிக்கொண்டார். இன்னும் ஓர் ஆமை மார்க்கெட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அதையும் விலை கொடுத்து வாங்கினார். இரண்டையும் வண்டியில் எடுத்துச் சென்று, மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார் அர்ரோன். “இதுவரை 12 ஆமைகளைக் காப்பாற்றி கடலில் சேர்த்திருக்கிறேன் என்ற செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டேன். என்னால் எத்தனை ஆமைகளைப் பணம் கொடுத்து மீட்க முடியும்? உங்களால் முடிந்த ஆமைகளைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

‘டர்டில்பவர்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும் ஆரம்பித்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று! ஆமைகளைக் காப்பாற்றச் சொல்லி, நன்கொடைகளும் குவிகின்றன’’ என்கிறார் அர்ரோன்.

நல்ல விஷயத்துக்கு எல்லோரும் துணை நிற்பாங்க…

ரஷ்யாவைச் சேர்ந்த மரினா பைச்கோவா ஒரு பொம்மைக் கலைஞர். பீங்கானில் உருவாக்கப்படும் இவருடைய பொம்மைகள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இந்த பொம்மைகளுக்கு வரவேற்பு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சோகத்தில், வருத்தத்தில் இருப்பது போலவே உள்ளன. கண்களும் உதடுகளும்தான் இந்த பொம்மைகளுக்குக் கூடுதல் அழகைத் தருகின்றன.

6 வயதிலிருந்தே மரினா பொம்மைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். எப்போதும் பொம்மைகளைப் பற்றிக் கனவு கண்டுகொண்டே இருப்பார். ஒவ்வொரு பொம்மைக்கும் 150 முதல் 300 மணி நேரங்களைச் செலவிடுவார். ‘’கதைகளிலும் நிஜ வாழ்க்கையிலும் துன்பப்படும் பெண்களைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதனால் என் பொம்மைகளும் துன்பத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துவிடுகின்றன. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணைப் பார்த்த பிறகு, மொட்டைத் தலையுடன் ஒரு பொம்மையை உருவாக்கினேன். என் பொம்மைகள் அனைத்திலும் சோகம் குடிகொண்டிருந்தாலும் அழகில் அவற்றுக்கு இணை வேறு இருக்க முடியாது எனும் அளவுக்கு நான் உருவாக்கியிருக்கிறேன்.

லட்சக்கணக்கில் விலை என்றாலும், பொம்மைகளின் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகச் செலவிடுகிறேன். ஒருமுறை என் பொம்மையைப் பார்த்தால் வாங்காமல் செல்ல மாட்டார்கள்’’ என்கிறார் மரினா.

வலி கடத்தும் பொம்மைகள்!

ஜப்பானைச் சேர்ந்த யுகா கினோஷிடா தனக்குத் தானே உணவு சவால் ஒன்றைச் செய்து காட்டியிருக்கிறார். 10 பாக்கெட்களில் இருந்து 100 பிரெட் துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறார். ஜாம், வெண்ணெய், பாலாடை, தேன் போன்றவற்றைத் தொட்டுக்கொண்டு ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடித்திருக்கிறார். 3.8 கிலோ எடைகொண்ட பிரெட் துண்டுகளைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் தாடை வலியெடுத்துவிட்டது என்கிறார். இதற்கு முன்பு 100 கோழி இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டிருக்கிறார். 100 பர்கர் சாப்பிடும் முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது என்கிறார் யுகா.

ஒரு சின்னப் பெண்ணால் இவ்வளவு உணவுகளை எப்படிச் சாப்பிட முடிகிறது!

ஜப்பானியர்களுக்குப் பூனைகள் மேல் அளவற்ற அன்பு உண்டு. சிலரது வீடுகளில் பூனை வளர்க்கும் சூழல் இருக்காது. அலுவலகம் போன்ற இடங்களுக்கும் பூனைகளை அழைத்துச் செல்ல முடியாது. அதனால் பூனை பொம்மைகளை வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இந்தப் பொம்மைப் பூனைகள் மீது இயல்பான பூனையின் வாசனை வருவதில்லை. இவர்களுக்காகவே பொம்மைப் பூனைகளுக்கான நறுமண திரவியம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பொம்மைப் பூனைகளின் தலை மீது இந்த நறுமணத்தை அடித்தால், நீண்ட நேரத்துக்கு நிஜப் பூனையின் வாசனை நிலைத்து நிற்கும். நான்கு மாதங்கள் நிஜப் பூனைகளின் வாசனையை வைத்து ஆராய்ச்சி செய்த பிறகே இந்த யமமோடோ நறுமண திரவியம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 3 வண்ணங்களில் கிடைக்கும் இந்தத் திரவியத்தின் விலை 1,700 ரூபாய்.

ம்… எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…

Link to comment
Share on other sites

உலக மசாலா: 67 லட்ச ரூபாய் போனஸ்

 
 
masala_2658932h.jpg
 

டெக்சாஸில் இயங்கி வருகிறது ஹில்கார்ப் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம். தன்னுடைய ஊழியர்களுக்கு இதுவரை உலகில் யாரும் செய்யாத அரிய விஷயத்தைச் செய்திருக்கிறது. சிஇஓ ஜெஃப் ஹில்ட்பிராண்ட், நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வோர் ஊழியருக்கும் 67 லட்சம் ரூபாயை போனஸாக அறிவித்திருக்கிறார்! இங்கே 1,381 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ’’எங்கள் சிஇஓதான் உண்மையான சாண்டா க்ளாஸ். இதுவரை கிறிஸ்துமஸ் பரிசாக இவ்வளவு பெரிய தொகையை யாரும் பெற்றிருக்க மாட்டார்கள்.

5 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானம் இரண்டு மடங்காக மாற்றினால், நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு போனஸ் தருவோம் என்றார்கள். 5 ஆண்டுகளின் முடிவில் எங்கள் நிறுவனம் இலக்கை எட்டிவிட்டது. சொன்னது போலவே ஊழியர்களுக்கு கனவிலும் எதிர்பார்க்காத தொகையை போனஸாக வழங்கிவிட்டார்கள். அறிவிப்பு வந்தவுடன் எங்களால் நம்பவே இயலவில்லை. எல்லோருமே கண்ணீர்விட்டு அழுதோம். ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டோம். பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு விஷயம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது! போனஸ் ஏதாவது கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் வாழ்நாளுக்குமான ஒரு தொகை போனஸாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை’’ என்கிறார் ஊழியர் அமண்டா. ஃபார்சூன் வெளியிட்டுள்ள 100 சிறந்த நிறுவனங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இடம்பிடித்து இருக்கிறது ஹில்கார்ப்.

2010-ம் ஆண்டு கார்களை ஊழியர்களுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. சில ஊழியர்கள் வாழ்நாளுக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டதால், விருப்ப ஓய்வில் செல்லும் திட்டத்தில் இருக்கின்றனர். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இன்னும் சிலர் உலக சுற்றுலா செல்ல காத்திருக்கின்றனர்.

அடடா! நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கும் லி ஹைலிங், முடி திருத்துனர். தினமும் முடி வெட்டிய பிறகு, வெட்டப்பட்ட முடிகளைத் தனியாகச் சேகரித்து வைப்பார். ஓய்வு நேரங்களில் முடிகளை வைத்து, பிரபலமானவர்களை ஓவியங்களாகத் தீட்டி விடுவார். ‘’மணல் ஓவியங்களில் இருந்துதான் எனக்கு இந்த யோசனை உதித்தது. கேன்வாஸில் அவுட் லைன் வரைந்துகொண்டு முடிகளை அப்படியே தூவி விடுவேன். பசைகளை வைத்து முடிகளை ஒட்ட மாட்டேன்.

ஒவ்வொரு ஓவியத்தையும் போட்டோ எடுத்துக்கொள்வேன். ஒரு ஓவியத்துக்கு 2 மணி நேரம் ஆகும். இந்த ஓவியங்கள் அதிகக் காலம் உழைப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஓவியங்களைக் குப்பையில் போட்டுவிடுவேன். புது ஓவியம் வரைய ஆரம்பித்துவிடுவேன். மிகக் குட்டையான முடிகளாக இருந்தால்தான் ஓவியம் நன்றாக வரும்’’ என்கிறார் லி. உலகிலேயே மனித முடிகளை வைத்து ஓவியம் தீட்டும் ஒரே கலைஞர் லி ஹைலியாங்தான்!

கற்பனையும் உழைப்பும் இருந்தால் எதிலும் சாதிக்கலாம்!

இங்கிலாந்தில் வசிக்கும் எமி பூல், கடந்த ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையின் மூக்கில் கோல்ஃப் பந்து அளவுக்கு ஒரு கட்டி இருந்தது. மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அது கட்டி அல்ல மூளை என்பது தெரியவந்தது. மிக அரிய குறைபாடு இது. மண்டை ஓடு திறந்திருந்தால், உள்ளிருக்கும் மூளை பின் மண்டை, மூக்கு போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிடும்.

சிறுவன் ஆலீ ட்ரெஸைஸ் பிறந்து 21 மாதங்களாகின்றன. அதற்குள் வலி நிறைந்த, ஆபத்தான பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இவற்றின் மூலம் மூளை மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுவிட்டது. நன்றாக மூச்சு விட முடிகிறது. ’’குழந்தை பிறந்தவுடன் நான் பயந்தே போய்விட்டேன். காரணம் தெரிந்தபோது உடைந்துவிட்டேன். மனதைத் தேற்றிக்கொண்டு, குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினோம். இதோ ஆலீ பல ஆபத்துகளைக் கடந்து ஆரோக்கியமாக இருக்கிறான்.

கதையில் நான் படித்த பினாஹியோ, எனக்கே மகனாகப் பிறப்பான் என்று எதிர்பார்க்கவில்லை! இந்த மகனுக்கு அம்மாவாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார் எமி பூல்.

கஷ்டத்தையும் எவ்வளவு அழகாகக் கையாள்கிறார் எமி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-67-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D/article7995753.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூளையைப் பாதுகாக்கும் தொப்பி

 
 
shield_cap_2660309f.jpg
 

ஸ்லோவாகியாவைச் சேர்ந்த சகோதரர்கள், மின்காந்த சமிக்ஞைகளில் இருந்து பாதுகாக்கும் தொப்பிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளில் இருந்து நமது மூளையைப் பாதுகாப்பதற்கு இந்தத் தொப்பி பயன்படுகிறது. செல்போனில் இருந்து வரும் சமிக்ஞைகள், வை-ஃபை சமிக்ஞைகள், மைக்ரோவேவ் அலைகள் மற்றும் மின்சார சாதனங்களில் இருந்து வெளிவரும் அலைகளில் இருந்து இந்த ஷீல்ட் தொப்பி பாதுகாக்கும். பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே இந்தத் தொப்பிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

மின்காந்த அலைகள், பாக்டீரியா, துர்நாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இதை எளிதாகப் பராமரிக்கவும் முடியும். ஷீல்ட் தொப்பிகள் பல்வேறு அளவு களிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. 1,800 ரூபாயிலிருந்து 2,300 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. நவீன உபகரணங்களை வாங்கிக்கொண்டு, மின்காந்த அலைகளை எண்ணிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இந்தத் தொப்பி நிம்மதியைத் தந்திருக்கிறது.

நல்ல கண்டுபிடிப்பு!

***

சீனாவைச்சேர்ந்த 11 வயது சென் ஸியாவோலின் மிக வேகமாக ஸ்கிப்பிங் செய்யக்கூடியவர். சென்னின் ஸ்கிப்பிங் எண்ணிக்கையைக் கணக்கிடுவதே கடினம், அவ்வளவு வேகம். சமீபத்தில் 30 நொடிகளில் 108 தடவை குதித்து புதிய உலக சாதனையைப் படைதிருக்கிறார் சென். துபாயில் நடைபெற்ற உலக சாம்பியன் ஸ்கிப்பிங் போட்டியில் கலந்துகொண்டு, விளையாடினார். நடுவர்களின் கண்களுக்கு ஸ்கிப்பிங் கயிறே தெரியவில்லை. அவர்களால் எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை. வீடியோவை 8 முறை மெதுவாக ஓடவிட்டுப் பார்த்து, 30 நொடிகளில் 108 தடவை குதித்திருப்பதாக அறிவித்தார்கள். அதே போட்டிகளில் 3 நிமிடங்களில் 548 தடவை குதித்து மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் சென்.

‘‘குவாங்ஸோவ் நகர் பள்ளியில் படிக்கும்போது தினமும் 1.5 மணி நேரம் பயிற்சி இருக்கும். எங்களது ஆசிரியர் 200 ஸ்கிப்பிங் வீடியோக்களைப் பார்த்து, புதிய ஸ்டைலை உருவாக்கினார். அவர் மூலம் எங்கள் பள்ளிக்கு 28 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன’’ என்கிறார் சென்.

உங்க வேகம் பிரமிப்பூட்டுது சென்!

***

சீனாவின் ஸாங்ஜியாகாங் நகரில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில், காற்றைச் சுத்தம் செய்வதற்காக ஒரு யுவான் அதிகமாக வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசாங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

‘‘நல்ல காற்றையும் சுத்தமான இடத்தையும் வழங்க வேண்டியது உணவு விடுதியின் பொறுப்பு. அதற்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பது தவறான செயல். இன்னும் 7 நாட்களுக்குள் காற்று பிரச்சினையைத் தீர்த்துவிட வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.

காற்று, தண்ணீர்னு தனித்தனியா பில் போடுவாங்க போல…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article7999834.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மாடலான துறவிப்பெண்!

 
 
masala_2661949f.jpg
 

தாய்லாந்தைச் சேர்ந்த 22 வயது மிமி டாவோ ஆசியாவின் மிக முக்கியமான மாடல்களில் ஒருவர். சிறிய வயதிலேயே துறவறத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டது. 12 வயதில் மடத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டார். 6 ஆண்டுகள் துறவி வாழ்க்கை. அந்தக் காலகட்டத்தில் அவர் திருநங்கையாக மாற்றம் பெற்றார். மாடலிங் மீது அவரது ஆர்வம் திரும்பியது.

‘‘நான் ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்தேன். பெண் போலவே நடந்துகொண்டேன். ஆனாலும் 200 கடினமான கட்டளைகளைப் பின்பற்றி துறவியாக மாறினேன். அந்த நேரத்தில் என் அம்மா கடனால் மிகவும் கஷ்டப்பட்டார். அந்தக் காரணத்தைச் சொல்லி, மடத்திலிருந்து வெளியேறினேன். பல்வேறு இடங்களில் நடனம் ஆடினேன். யுய் பெட்கன்ஹா என்ற மாடல்தான் என்னுடைய ரோல்மாடல். அவரை 12 முறை சந்தித்த பிறகு, எனக்குப் பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டார்.

3 மாதங்களில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தேன். தாய்லாந்து மாடலிங் துறை என்னை வரவேற்கவில்லை. நிறைய நிராகரிப்புகள். ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. சிங்கப்பூர் சென்றேன். சிறிய ஷோக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பிறகு மாடலிங் வாய்ப்புகளும் வந்தன. மீண்டும் தாய்லாந்து திரும்பியபோது என் பெயர் மாடலிங் துறையில் பரவியிருந்தது. முதல் மாடலிங் வாய்ப்பே மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கிறேன். என் அம்மாவின் கடன்களையும் அடைத்துவிட்டேன். எதிர்காலம் பற்றி யாருக்குத் தெரியும்? மீண்டும் நான் துறவறம் மேற்கொண்டாலும் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ’’ என்கிறார் டாவோ.

வாழ்த்துகள் டாவோ!

பிரான்ஸில் வசிக்கிறார் 47 வயது ஜீன் மாரி ரக்ஹோல். கடந்த 30 ஆண்டுகளாக வீடு இல்லாமல், தெருக்களில் வாழ்க்கை நடத்தி வருகிறார். சிறிய வயதிலேயே ஜீனின் அம்மா தனியாகச் சென்றுவிட்டார். குடிகாரரான அப்பாவுடன் தெருக்களில் வசித்து வந்தார் ஜீன். 20 வயது வரை பாரிஸ் தெருக்களில்தான் வாழ்க்கை. அதற்குப் பிறகு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். முன்னாள் அமைச்சராக இருந்த ஜீன் லூயி டிபேர் இவரது நீண்ட கால நண்பர்.

அவரது உதவியால் எழுதவும் எடிட்டிங் செய்யவும் கற்றுக்கொண்டார் ஜீன். பூங்கா பெஞ்சுகளில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வாழ்க்கையை எழுத ஆரம்பித்தார். 176 பக்கங்களில் ‘தெருக்களில் வாழ்க்கை’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தார் ஜீன் லூயி. தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்று விளம்பரம் செய்தார். இந்த சீசனில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது ஜீனின் புத்தகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தித்தாள்கள் என்று உலகம் முழுவதும் ஜீன் பிரபலமாகிவிட்டார்.

‘‘மிக நவீன ஸ்மார்ட்போன் மட்டுமே என்னிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள். இன்றும் தெருக்களில்தான் வசிக்கிறேன். 10 மாதங்களுக்குப் பிறகு ராயல்டி கிடைக்கும். சொந்த வீடு வாங்கிவிட்டால், கம்ப்யூட்டரில் என் எழுத்துப் பணிகளைத் தொடர்வேன். இந்தப் புத்தகம் மூலம் ஏராளமானவர்களின் அன்பு கிடைத்திருக்கிறது. தெரு வாழ்க்கையால் என்னைவிட்டுச் சென்ற உறவுகள் அனைத்தும் என்னைத் தேடி வருகின்றன. புத்தகம் வெளிவந்த பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து இன்னொரு புத்தகம் எழுதி விடலாம் போலிருக்கிறது’’ என்கிறார் ஜீன்.

இனி எல்லாமே உங்களுக்கு வெற்றிதான்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article8004077.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பெங்குவின்களைக் காப்பாற்றும் நாய்கள்!

 
 
masala_2663263f.jpg
 

உலகிலேயே மிகச் சிறிய பெங்குவின்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள மிடில் தீவில் வசிக்கின்றன. ஓர் அடி உயரமும் ஒரு கிலோ எடையும் கொண்டவை. ஓரிடத்தில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. பெங்குவின்களை நரிகள் வேட்டையாடுவதால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டன. 15 ஆண்டு களுக்கு முன்பு 800 பெங்குவின்கள் இங்கே இருந்தன. 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 பெங்குவின்களே எஞ்சியிருந்தன. இவற்றைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கோழிகள், ஆடுகளைக் காப்பாற்றுவதற்கு நாய்களைப் பயன்படுத்துவதுண்டு. 2006-ம் ஆண்டு நாய்களை அனுப்பி, பெங்குவின்களை காக்கும் முடிவுக்கு வந்தனர்.

நரிகள் வரும் வழிகளில் நாய்களை நிறுத்திவிடுவோம். நாய்களின் குரைப்புக்குப் பயந்துகொண்டே நரிகள் நெருங்கி வருவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நாய்கள் பெங்குவின்களை காக்கும் பணியில் ஈடுபடுகின்றன. நாய்களின் வாசம் அங்கேயே இருப்பதால் சனி, ஞாயிறுகளிலும் நரிகள் எட்டிப் பார்ப்பதில்லை. 9 ஆண்டுகளில் நரிகளால் ஒரு பெங்குவினைக் கூட வேட்டையாட முடியவில்லை. இன்று பெங்குவின்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருக்கிறது. பெங்குவின்களை காப்பாற்றும் நாய்களின் கதை ‘ஆட்பால்’ என்ற பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.

அடடா! மிகச் சிறந்த காவலன்!

கார்லோஸ் அகுலெரா மிகப் பெரிய ஜாஸ் இசைக் கலைஞர். அவருக்கு ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் 12 மணி நேர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளை அறுவை சிகிச்சையால் தன்னுடைய இசை ஆற்றல் அழிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் கார்லோஸ். அறுவை சிகிச்சை செய்யும்போதே அவரிடம் சாக்ஸபோனைக் கொடுத்தனர்.

ஒரு கையால் சாக்ஸபோனைப் பிடித்தபடி அருமையாக இசைத்தார். நரம்பியல் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள், இந்த அறுவை சிகிச்சையால் கார்லோஸின் இசை ஆற்றல் சிறிதும் பாதிக்கப்படவில்லை என்று அறிவித்தனர். 27 வயது கார்லோஸுக்கு வெற்றிகரமாக மூளைக் கட்டி அகற்றப்பட்டது. நலமாக இருக்கிறார். ‘‘என்னையும் என் இசையையும் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்த மருத்துவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்’’ என்கிறார் கார்லோஸ்.

நம்ப முடியாத ஆச்சரியம்!

உலகிலேயே மிக விலையுயர்ந்த பொம்மை வீடு நியூ யார்க்கில் இருக்கிறது. 9 அடி உயரமும் 362 கிலோ எடையும் கொண்ட இந்த வீட்டில் 29 அறைகள் உள்ளன. டென்னிசனின் கவிதைகளில் வரும் அஸ்டோலட் மாளிகை போல இந்த மினியேச்சர் வீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. 1974-ம் ஆண்டு ஆரம்பித்து 1987-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 13 ஆண்டுகளில் ஒவ்வோர் அங்குலமும் அக்கறையுடன் இழைக்கப்பட்டிருக்கிறது. வெண்கலத்தால் கூரையும் மரத்தால் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுவர்கள் எல்லாம் நகரும் விதத்திலும் திறக்கும் விதத்திலும் முப்பரிமாணத்தில் உள்ளன. தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள், கட்டில்கள், விளக்குகள் என்று 10 ஆயிரம் பொருட்கள் இந்த பொம்மை வீட்டில் வைக்கப்பட்டி ருக்கின்றன.

ஆயில் பெயிண்டிங் ஓவியங்களும் டெலஸ்கோப்களும் உள்ளன. முதல் தளத்தில் சமையல் அறை, இரண்டாவது தளத்தில் மது வகைகள், மூன்றாவது தளத்தில் இசைக் கருவிகள், நான்காவது தளத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. உணவு மேஜையில் சிறிய தட்டுகளிலும் பாத்திரங்களிலும் நிஜ உணவுகளே இருக்கின்றன. பாட்டில்களில் மது வகைகள் நிரப்பப்பட்டுள்ளன. மிக மிகச் சிறிய புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. உருப்பெருக்கிக் கண்ணாடியை வைத்து புத்தகத்தைப் படித்துக் கொள்ளலாம். ஐந்தாவது தளத்தில் படுக்கைகள். இந்த பொம்மை வீடு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பவுலா கில்ஹூலே பல கோடி மதிப்புள்ள சிறிய பியானோவில் இசைக்கவும் முடியும். இங்கு எல்லாமே சிறியதாக இருக்கும், ஆனால் எல்லாமே உண்மையானதாக இருக்கும். இங்கே வருகிறவர்கள் வாயடைத்துப் போய்விடுவார்கள். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 56 கோடி ரூபாய்.

அடேங்கப்பா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8008053.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பனிக்கட்டி விடுதி

masala_2664305f.jpg
 

ஸ்வீடனில் 4 ஆயிரம் டன் பனிக்கட்டிகளை வைத்து தங்கும் விடுதியைக் கட்டியிருக்கிறார்கள். 50 அறைகள் கொண்ட இந்தப் பெரிய விடுதியை 2 மாதங்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். விடுதிக்குள் நுழைந்த உடனேயே 3 அடி உயரம் கொண்ட ஆப்பிரிக்க யானையின் பனிச் சிற்பம் வரவேற்கும். ஒவ்வோர் அறைக்கும் சுரங்கப் பாதையின் மூலமாகத்தான் செல்ல வேண்டும். டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை இந்த விடுதி திறந்திருக்கும். 11 ஆயிரம் மக்கள் இங்கே வந்து தங்கிச் செல்வார்கள். பனிக்கட்டிகளால் ஆன அறை, கட்டில் என்று இருந்தாலும் குளிரைத் தாங்குவதற்கான அத்தனை அம்சங்களும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. பனிச் சிற்பங்களை ரசிப்பதற்கும் பனிக் கட்டிடங்களில் தங்குவதற்கும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

துருவப் பிரதேசம் ஸ்வீடனுக்கு இடம் பெயர்ந்துவிட்டது போல இருக்கிறது!

நிறுவனம் ஒவ்வொரு ஜோடியும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறது. உறவு நீடிக்காத ஜோடிகளிடமிருந்தே அதிக வட்டியுடன் கடனை வசூலிக்கிறோம். இப்படி வசூலிப்பதை வைத்துதான் இன்னொரு ஜோடிக்கு கடன் வழங்குகிறோம். அமெரிக்காவில் அதிக அளவில் விவாகரத்துகள் நடப்பதால் எங்கள் நிறுவனம் நஷ்டமடைய வாய்ப்பில்லை’’ என்கிறார் ஸ்வான்லாவ் நிறுவனர்களில் ஒருவரான ஸ்காட் ஏவி.

‘‘எங்கள் அமெரிக்காவில் 40 முதல் 50 சதவீத தம்பதியர் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். ஸ்வான்லாவ் என்ற நிறுவனம் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ரூ.6.5 லட்சம் வரை கடனாக வழங்குகிறது. இந்தப் பணத்தை அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழும் வரை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. விவாகரத்து செய்துகொள்ளும்போது வட்டியுடன் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ்பவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. பிரிந்து செல்லும்போது தம்பதியர் இருவரும் கடனில் சரி பாதியைத் தனித் தனியாகச் செலுத்த வேண்டும். தம்பதியரில் ஒருவர், மற்றொருவரால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் கடனை வசூல் செய்ய மாட்டார்கள். முழுப் பணத்தையும் குற்றம் செய்தவரே செலுத்த வேண்டும்.

ம்… எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இப்படி ஒரு தொழிலில் இறங்க முடியும்…

ஸ்பெயினில் உள்ள சாண்டா பார்பரா தேவாலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 50 ஆண்டுகளாக இந்தத் தேவாலயம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தனியாருக்குச் சொந்தமான இந்தத் தேவாலயத்தை தற்போது திறந்திருக்கிறார்கள். தேவாலயத்தின் இரண்டு சுவர்களையும் இணைக்கும் விதத்தில் அரை வட்ட வடிவில் மரப் பலகைகளை அமைத்திருக்கிறார்கள். இதில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள். யாருக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கட்டிடத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த மக்கள் திட்டமிட்டனர். தேவையான நிதியைச் சேகரித்தனர். ஸ்கேட்டிங் மையமாக மாற்றிவிட்டனர். தேவாலயத்தின் கூரையும் ஜன்னல்களும் வண்ணக் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை வெளிச்சம் விளையாட்டுக்குக் கிடைக்கிறது.

அட! நல்ல காரியம் செய்திருக்கிறார்களே!

‘‘என் அமெரிக்காவின் கன்சாசில் வசிக்கிறார் க்வென். அவருடைய இரண்டு மகள்களும் அரிய நரம்பியல் குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார்கள். இதனால் அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது. க்ளாரிக்கு 14 வயது, லோலா ஹார்லேக்கு 9 வயது. ஆனால் இருவரும் சிறிய குழந்தை போலவே இருக்கிறார்கள். இவர்களால் நடக்க முடியாது, பேச முடியாது. பார்வையும் குறைவாகவே இருக்கிறது. தினமும் வலிப்பு வருகிறது.

மகள்கள் இருவரது எடையும் சேர்த்தே 19 கிலோதான். கைக்குழந்தை போலத்தான் இவர்களைப் பார்த்துக்கொள்கிறோம். குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் நாங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறோம். சத்து மிக்க நல்ல உணவு, மருந்து போன்றவற்றால்தான் இவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் பிறந்தபோதே, பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அவர்களை வளர்த்துவிட்டோம். என் குழந்தைகள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது எங்கள் பொறுப்பு’’ என்கிறார் க்வென்.

எவ்வளவு அற்புதமான அம்மா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article8010720.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தை பருவம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!

 
 
ulaga_2462858f.jpg
 

கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ரஸ்ஸல் பாவெல். இவர் தன்னுடைய இடது கையில், வலது கையால் ஓவியம் தீட்டி வருகிறார். வண்ணம் காய்வதற்குள் ஒரு தாளில் கையை அழுத்துகிறார். ஓவியம் அப்படியே தாளில் பதிந்துவிடுகிறது. அதை ஃப்ரேம் செய்து, நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிடுகிறார். கறுப்பு, வெள்ளையை மட்டும் பயன்படுத்தி, இடது கையின் சமதளமற்ற பகுதிகளில் வேகமாக ஓவியம் தீட்டுகிறார். ஓவியம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியாது. ஓவியம் காய்வதற்குள் அதை பிரிண்ட் எடுத்துவிட வேண்டும். இப்படிக் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவியம் தீட்டி முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறார் ரஸ்ஸல். இவரது இடது கை ஓவியங்களில் பாப் மார்லி, ஃப்ரைடா காலோ போன்ற உலகப் புகழ்பெற்றவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

அட! ஓர் ஓவியரின் கையில் இன்னோர் ஓவியர் ஃப்ரைடா!

ரஷ்யாவில் சமீப காலமாக வீடற்ற ஏழைகளின் ப்ளாக் வீடியோக்கள் பெரிய அளவில் பிரபலமாகி வருகின்றன. ஸென்யா யாகுட் என்பவரின் வீடியோ யூ ட்யூபில் வெளியாகி, 35 ஆயிரம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது. 10 லட்சம் முறை இவரது வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இவரை 3 ஆயிரம் பேர் பின்பற்றுகிறார்கள். 43 வயது யாகுட், 5 ஆண்டுகளாக வீடின்றி, வேலையின்றி வசித்து வருகிறார். மாஸ்கோவில் வேலையும் வீடும் இல்லாத ஒரு மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதைத்தான் இவரது வீடியோ சொல்கிறது. நிலத்துக்கு அடியில் ஒரு குழியில் வசிக்கிறார் யாகுட். முதலுதவி, ஊசி நூல், ரேடியோ போன்ற பொருட்கள் அங்கே இருக்கின்றன. தன்னுடைய வாழ்க்கையை அழகான வார்த்தைகள் போட்டு வீடியோவில் பேசிக்கொண்டே செல்கிறார் யாகுட். ஒவ்வொரு குப்பைத் தொட்டியையும் ஆராய்கிறார். பழைய செருப்புகள், சிறிய சைக்கிள், தின்பண்டங்கள், துணிகள் போன்றவற்றை எடுத்து, தனக்குத் தேவையானவற்றைப் பிரித்துக்கொள்கிறார். பிளாஸ்டிக் பாட்டில்களைக் கடையில் விற்று பணம் வாங்கிக்கொள்கிறார். இவர் சார்பாக ஆண்ட்ரெய் வூடூ என்பவர் வீடியோ எடுத்து, இணையத்தில் ஏற்றுகிறார். யாகுட்டைப் பார்ப்பவர்கள் அவர் ஏழை என்றே சொல்ல மாட்டார்கள். மிக அழகான, தூய்மையான உடைகளோடு காட்சியளிக் கிறார். ‘’என் உடையிலோ, தோற்றத்திலோ எந்தக் குறையும் காட்டிக் கொள்ள மாட்டேன். என்னைப் பார்த்தவுடன் மரியாதை வருகிறது அல்லவா, இதை வைத்துதான் பொதுக்கழிப்பிடங்கள், உணவு விடுதி களுக்கு என்னால் தயக்கமின்றி நுழைய முடிகிறது. என் வீடியோவைப் பார்க்கும் நீங்கள், ஒவ்வொருமுறை க்ளிக் செய்யும்போதும், இந்த வீடற்ற ஏழைக்கு ஒரு மேன்மையான வாழ்க்கை உங்களால் கிடைக்கப் போகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார் யாகுட்.

ம்ம்… ஒருகாலத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துக்கொண்டிருந்த ஒரு நாட்டில் இன்று இந்த நிலை…

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சர்வதேச புகைப்படக் கலைஞர் ஐரினா வெர்னிங். ‘நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு…’ என்ற தலைப்பில் 3 ஆஸ்திரேலியப் பெண்களைப் புகைப்படங்கள் எடுத்தி ருக்கிறார். ஒருவரின் சிறிய வயது புகைப்படத்தை வைத்துக்கொண்டு, இன்று அவருக்கு அதே ஆடை, பொம்மை, செல்லப் பிராணி, செருப்பு, தலை அலங்காரம் போன்றவற்றைத் தானே வாங்கிக் கொடுத்து விடுகிறார். அவற்றை அணிந்துகொண்டு புகைப்படத்தில் இருப்பது போலவே காட்சியளிக்கிறார்கள். இன்றைய உருவத்தில் இருந்தாலும், சின்ன வயது புகைப்படத்தைப் போலவே மற்ற எல்லா அம்சங்களும் பொருந்தியிருக்கும். நடாலியா, அலினா, சூசி என்ற மூன்று பெண்களையும் இப்படிப் படம் பிடித்து அசத்தியிருக்கிறார் ஐரினா. ‘’கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. என் உருவம் மாறாவிட்டாலும் கூட இந்தப் புகைப்படம் எடுக்கும்போது சின்ன வயதுக்குச் சென்று திரும்பி வந்தேன்’’ என்கிறார் நடாலியா.

குழந்தை பருவம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article7388911.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: சலைன் பாட்டிலுடன் வலம்வரும் மக்கள்!

 
masala_2666659f.jpg
 

கம்போடியா கிராமங்களில் மருத்துவம் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை. சலைன் பாட்டிலுடன் சர்வசாதாரணமாக மக்கள் வலம் வருவதைக் காண முடியும். காய்ச்சல் வந்த மகனின் கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்கிறது. சலைன் பாட்டிலைப் பிடித்தபடி அம்மாவும் பையனும் சாலையில் நடந்து செல்கிறார்கள். பைக்கில் பின்னால் உட்கார்ந்திருப்பவர் கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்கிறது. ஹாண்டில் பாரில் சலைன் பாட்டில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இப்படி வீடு, சாலைகள், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் என்று எங்கும் சலைன் பாட்டில்களுடன் சென்றுகொண்டிருக்கிறார்கள் மக்கள்.

சிறிய நோய் என்றாலும் ஓர் ஊசியும் ஒரு சலைன் பாட்டிலும் ஏற்ற வேண்டியது அவசியம் என்று மக்கள் கருதுகிறார்கள். ஊசியோ, சலைன் பாட்டிலோ வேண்டாம் என்று சொல்லும் மருத்துவர்களிடம் மீண்டும் அவர்கள் செல்வதில்லை. இதனால் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அவர்கள் மக்கள் விருப்பப்படி ஓர் ஊசியும் ஒரு சலைன் பாட்டிலும் போட்டு விடுகிறார்கள். இந்த போலி மருத்துவர்கள் ஊசிகளைக் கூடச் சுத்தம் செய்வதில்லை. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

‘‘உடலுக்கு என்ன பிரச்சினை என்றாலும் ஒரு பாட்டில் சலைன் ஏற்றினால் சரியாகிவிடும் என்பது எங்கள் நம்பிக்கை மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. நாங்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. மருத்துவமனையில் தங்கி ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ள இயலாது. அதனால் போகும் இடங்களுக்கு எல்லாம் சலைன் பாட்டிலுடன் சென்றுவிடுவோம். இதனால் எங்கள் வேலையும் பாதிக்காது. உடம்பும் குணமாகும்’’ என்கிறார் ஒரு கிராமத்துவாசி.

‘‘இங்கே உண்மையான மருத்துவர்கள் வேலை செய்வதுதான் கடினம். சலைன் என்பது வெறும் தண்ணீர்தான் என்றாலும் யாரும் நம்பமாட்டார்கள். எல்லா நோய்களுக்கும் சலைன் ஏற்றத் தேவை இல்லை என்பதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அரசாங்கமும் போலி மருத்துவர்கள் மீது அடிக்கடி நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் மக்களின் ஆதரவு போலிகளுக்கு இருப்பதால், அவர்களை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. நோயாளிகளே தங்களுக்கு வயிற்றுவலி, காய்ச்சல் என்று சொல்லிவிட்டு, ஓர் ஊசியும் சலைனும் ஏற்றுங்கள் என்று சொல்லும்போது போலி மருத்துவர்களுக்கு பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. நோய் குணமாகிறதா, இல்லையா என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. ஊசியைப் போட்டுக்கொண்டு தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள்’’ என்று வருத்தப்படுகிறார் ஹெல்த் சென்டரின் டைரக்டர் வோங் டு.

ஐயோ… இது மோசமான பிரச்சினையாக இருக்கிறதே…

இங்கிலாந்தில் வசிக்கும் எம்மா பட்டாரஸ்ஸி, தன் செல்ல நாய் பிரின்ஸின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு 5 லட்சம் ரூபாய்க்குப் பொருட்களை வாங்கியிருக்கிறார். பட்டாடைகள், சாண்டா க்ளாஸ் ஆடை, விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட மாலை என்று ஏராளமான பொருட்கள். பிரிட்டனில் ஒரு சராசரி மனிதனின் கிறிஸ்துமஸ் செலவுகள் 3 ஆயிரத்துக்குள் முடிந்துவிடுகின்றன. 24 வயது எம்மா,

‘‘இவனை நாய் என்று பார்த்தால் அநியாயமாகத் தோன்றலாம். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பார்த்தால் நியாயமான செலவாகத் தெரியும். பிரின்ஸ் மூலம் ஏராளமான சந்தோஷங்களை அனுபவித்து வருகிறேன். அந்த அன்புக்கு முன்னால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. பிரின்ஸுக்காக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவு செய்கிறேன். காலை எழுந்ததும் பல் துலக்கி, மசாஜ் செய்து, குளித்த பிறகே சாப்பாடு. செயற்கை உரம் இல்லாத காய்கறிகள், கோழி இறைச்சி, வேக வைத்த முட்டை, பழக்கலவை, ஆட்டுப் பால், தேன், மசாலா தேநீர், இளநீர் போன்றவைதான் பிரின்ஸின் உணவுகள். இவனுக்கென்று அட்டகாசமான 200 ஆடைகள் இருக்கின்றன. என் சம்பாத்தியம் முழுவதையும் பிரின்ஸுக்குச் செலவு செய்தாலும் எனக்குத் திருப்தி வராது. என் திருமணத்தின்போது இதை விடச் சிறப்பாக பிரின்ஸைக் கவனித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்’’ என்கிறார் எம்மா.

இதில் இல்லாத மக்களுக்கு எவ்வளவோ உதவியிருக்கலாம்… அதுதானே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எம்மா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8017565.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வாழ்த்துகள் ஜார்ஜ்!

 
 
masala_2667823f.jpg
 

தொழில்முறையில் சாண்டா க்ளாஸாக இருப்பது மிகவும் கடினமான பணி. சிவப்பு வெல்வெட் ஆடையை மாட்டிக்கொண்டு, ஒட்டு தாடி, மீசையுடன் பரிசுப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு வருவது மட்டும் சாண்டாவின் வேலை இல்லை. சில சாண்டாக்கள் தங்கள் வேலையில் மிகவும் சிரத்தையாக இருக்கின்றனர். சாண்டாக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் 4 நாட்கள் கொலோரடோவில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 70 பேர் கொண்ட ஒரு குழு இதில் பங்கேற்கிறது. புகைப்படங்களுக்கு எப்படிக் காட்சித் தரவேண்டும், குழந்தைகளை எப்படி மடியில் அமர வைக்கவேண்டும், குழந்தைகள் கேட்கும் அசெளகரிகமான கேள்விகளை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்றெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

‘‘சாண்டாக்கள் மீது இருக்கும் அன்பால்தான் இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த சாண்டாக்கள் குழந்தைகளிடம் வேலை செய்யப்போகிறார்கள். அதனால் கவனமாக அவர்களைத் தேர்ந் தெடுக்கும் வேலையைச் செய்கிறோம். எங்கள் பல்கலைக்கழகம் மூலம் வெளிவரும் சாண்டாக்களில் 96 சதவீதம் பேர் அழகான, தொழில் முறை சாண்டாக்கள்.’’ என்கிறார் ஜுடி நோர். ‘‘9 ஆண்டுகளாக சாண்டா வாக இருந்து வருகிறேன். இங்கே பயிற்சி பெற்ற பிறகு இன்னும் சிறந்த சாண்டாவாக மாறிவிட்டேன்’’ என்கிறார் வேட் பர்லே.

ம்… நல்ல விஷயம்தான்!

கூகுள், டெஸ்லா, மெர்சிடிஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தானாக இயங்கும் காருக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. ஆனால் சான்பிரான்ஸ்சிஸ்கோவைச் சேர்ந்த 26 வயது ஹாக்கர் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டார். ஜார்ஜ் ஹோட்ஸ் தன்னுடைய திறமையால் சில ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவிலேயே சுயமாகக் கண்டுபிடித்துவிட்டார். 17 வயதிலேயே ஹாக் செய்ய ஆரம்பித்துவிட்ட ஜார்ஜ், கூகுள், ஸ்பேஸ்எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் சிறிது காலம் வேலை செய்தார். பிறகு தானாவே இயங்கும் காரை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று வெற்றிகரமாகத் தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டார். இன்னும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அர்ப்பணிக்க இருப்பதாகக் கூறுகிறார் ஜார்ஜ். தகவல் அறிந்த டெஸ்லா நிறுவனம், ஜார்ஜை மீண்டும் வேலைக்குச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தது.

‘நான் இப்போது வேலை தேடிக்கொண்டிருக்கவில்லை. தேவைப்படும்போது உங்களைத் தொடர்புகொள்கிறேன்’ என்று மெயில் அனுப்பிவிட்டார் ஜார்ஜ். இந்தத் தொழில்நுட்பம் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது. அதைப் பார்த்த டெஸ்லா நிறுவனம், தன்னுடைய பிளாகில் ஜார்ஜை விமர்சனம் செய்து எழுதியிருந்தது. பெரிய நிறுவனத்தால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை, தனி மனிதர் செய்துவிட்டார் என்ற உண்மையை டெஸ்லா நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். சந்தைக்கு வரும்போது உண்மை தெரியத்தான் போகிறது என்கிறார் ஜார்ஜ்.

வாழ்த்துகள் ஜார்ஜ்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D/article8021232.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அற்புதமான கண்டுபிடிப்பு!

 
masala_2669009f.jpg
 

சாதாரண தண்ணீரை பழச்சாறு, சோடா போன்ற பானங்களின் சுவையோடும் நறுமணத்தோடும் குடிக்க முடியுமா? முடியும் என்கிறார் ஐசாக் லாவி. ‘ரைட் கப்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் கப்களை உருவாக்கியிருக்கிறார் ஐசாக். இந்த கப்பில் தண்ணீர் ஊற்றிக் குடித்தால் சுவையாகவும் நறுமணத்துடனும் இருக்கும். நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை நமக்கு 80 சதவிகிதம் தெரிவிப்பது நறுமணம்தான். மூக்கையும் கண்களையும் மூடிக்கொண்டால் எந்தச் சுவையையும் சரியாகச் சொல்ல முடியாது. பிளாஸ்டிக் கப்களில் நறுமணத்தைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்.

தண்ணீர் ஊற்றிக் குடிக்கும்போது கப்களில் உள்ள நறுமணம் மூக்குக்கு வரும். சாதாரண தண்ணீரைச் சுவைக்கிறோம் என்றே தெரியாது. நறுமணத்தை உணர்ந்த மூளை, அது சுவையான பானம் என்று நம்பிவிடுகிறது. ஒரு கப்பின் ஆயுள் காலம் 6 மாதங்கள். அதற்குப் பிறகு வேறு ஒரு கப் வாங்க வேண்டியதுதான். “எனக்கு சர்க்கரை நோய் வந்தது. மருத்துவர் இனிப்பு நிறைந்த எந்த பானத்தையும் குடிக்கக் கூடாது என்று கூறிவிட்டார். வெறும் தண்ணீர் எனக்கு சலிப்பைத் தந்தது. இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 6 ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, வெற்றிகரமாக ரைட் கப் உருவாக்கிவிட்டேன். உடல் நலத்துக்கும் தீங்கில்லை.

எனக்கும் சுவையான பானம் குடிக்கும் திருப்தி. இன்று நிறைய குழந்தைகளுக்கு உடல் எடை அதிகமாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் இந்த கப் மூலம் தண்ணீர் குடித்தால், உடல் எடை நிச்சயம் குறைந்துவிடும்” என்கிறார் ஐசாக். ஒரு கப் 2,300 ரூபாய். எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி, ஆப்பிள், பேரிக்காய், கோலா போன்ற 6 சுவைகளில் கிடைக்கின்றன.

அடடா! அற்புதமான கண்டுபிடிப்பு!

Socratea exorrhiza என்பது உலகிலேயே நடக்கக்கூடிய ஒரே மரம் என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தின் வேர்கள் சூரிய ஒளியைத் தேடி நகர்ந்து செல்கின்றன. தினமும் 2-3 செ.மீ. வரை இந்த நகர்வு இருக்கும். ஆண்டுக்கு 20 மீட்டர் வரை ஒரு மரம் நகர்ந்துவிடுகிறது என்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மழைக்காடுகளில் இந்த நடக்கும் மரங்கள் இருக்கின்றன. ஈக்வடாரில் நடக்கும் மரங்களைக் காண்பதற்காகவே கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள். நடக்கும் மரத்தின் வேர்கள் வெளிப் பக்கமாகத் தெரிகின்றன. புதிய வேர்கள் கிளை பரப்பும்போது பழைய வேர்கள் தானாகவே மடிந்துவிடுகின்றன.

தண்டில் இருந்து உருவாகும் வேர்கள், நிலத்தை விட்டுச் சில அடிகள் உயரத்தில் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மரத்தின் கால்கள் போல தோற்றமளிக்கின்றன. “மரங்கள் நடப்பதாகச் சொல்ல முடியாது. சில சமயங்களில் வேர்கள் 20 மீட்டர் தூரம் வரை சென்று நிலத்தில் பதிந்து, புதிய மரமாக மாறுகின்றன. நான் பல மாதங்கள் காடுகளில் இருந்து ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறேன்” என்கிறார் தொல்லுயிரியியலாளர் பீட்டர் வ்சான்ஸ்கி. “மரங்கள் நடக்கின்றன என்ற தகவலில் சிறிதும் உண்மை இல்லை. இது வெறும் கட்டுக்கதை” என்கிறார் ஜெரார்டோ அவாலோஸ் என்ற தாவரவியல் விஞ்ஞானி. மரங்கள் நடப்பதில்லை என்று எவ்வளவு சொன்னாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, ஈக்வடாரில் குவியும் சுற்றுலாப் பயணிகளே சாட்சி!

எத்தனையோ மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8024751.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அவமானச் சின்னமான சுவர்

masala_2670618h.jpg
 

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பது பற்றி காலம் காலமாகப் பேசப்பட்டு வருகிறது. பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் ஒரு சுவர் அவமானத்தின் அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது. 10 கி.மீ. தூரத்துக்குக் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் சுவர் மீது முள் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பணக்காரர்கள் சுவருக்கு அந்தப் பக்கமும் ஏழைகள் சுவருக்கு இந்தப் பக்கமும் வசிக்கிறார்கள்.

பணக்காரர்கள் தங்களையும் தங்கள் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தச் சுவரை எழுப்பியிருக்கின்றனர். பெரு நாட்டில் அதிகப் பணக்காரர்களும் மிக மோசமான நிலையில் உள்ள ஏழைகளும் இந்தப் பகுதியில்தான் வசிக்கின்றனர். மரத்தால் ஆன ஒழுகக்கூடிய சிறிய வீட்டில் மின்சாரமோ, அடிப்படை வசதிகளோ இல்லை. இந்தச் சுவரைத் தாண்டினால் அத்தனை வசதிகளுடன் கூடிய பணக்காரர்களின் பங்களாக்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெரு நாட்டு மக்கள் இந்தச் சுவரை அவமானச் சின்னமாகவே கருதுகிறார்கள். எதிர்ப்புக் குரல்களை எழுப்புகிறார்கள். ’’இந்தச் சுவர் மட்டும் இல்லாவிட்டால் உணவுக்கே கஷ்டப்படுகிறவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் செய்யும் குற்றங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும் எங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும் சுவர் அவசியம்’’ என்கிறார் ஒரு பணக்காரர்.

சமீபத்தில் தான் இந்தச் சுவர் பற்றிய செய்தி வெளியுலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. சில சமூக ஆர்வலர்கள் இந்தச் சுவர் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதற்காக, ஓவியங்களைத் தீட்டி வருகிறார்கள். லீமாவின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அரசாங்கப் புள்ளிவிவரம் சொல்வதால், இந்தச் சுவரை இடிப்பது என்பது எளிதில் நடக்கக்கூடிய விஷயம் இல்லை என்கிறார்கள்.

ஜாதி, ஏழை - பணக்காரன் என்று உலகம் முழுவதும் அவமானச் சின்னமாக உத்தமபுரம் சுவர்கள்…

 

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கிறார் கிம் உட். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்காக அவர் வீடு முழுவதையும் பார்பியின் கனவு இல்லம் போல பிங்க் வண்ணமாக மாற்றியிருக்கிறார். வீட்டுச் சுவர், மேற்கூரை, தரை விரிப்புகள், கதவு, நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள், பாத்திரங்கள், மின்சாதனங்கள், திரைச்சீலைகள், விளக்குகள், படுக்கைகள், ஆடைகள் என்று அனைத்தையும் பிங்க் வண்ணமாக மாற்றியிருக்கிறார். ‘’பிங்க் வண்ணம் மீது அளவு கடந்த ஆசை.

15 ஆண்டுகளாக ஒவ்வொரு பொருளையும் பிங்க் வண்ணத்தில் சேகரித்தேன். இன்று இந்த பங்களா முழுவதும் பிங்க் வண்ணமாக மாறிவிட்டது. வீட்டுக்குள் மட்டுமல்ல, வெளியிலும் இந்த வண்ணம் தொடர்கிறது. பிங்க் பூக்கள் பூக்கும் செடிகளைத் தோட்டத்தில் வைத்திருக்கிறேன். இரவில் பிங்க் வண்ண விளக்குகள் வீட்டை அலங்கரிக்கும். அக்டோபரில் அலங்காரத்தை ஆரம்பித்தேன். பிப்ரவரியில் காதலர் தினம் வரை வீட்டை பொதுமக்கள் பார்க்க அனுமதிப்பேன்’’ என்கிறார் கிம் உட்.

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா கிம்?

டாவோபாவோ என்பது சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனம். ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் ஆன்லைன் வர்த்தகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஆண்களைக் கவரவும் ஓர் உத்தியைக் கையாண்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் விற்பனையாகும் ஆப்பிள்கள் அனைத்தும் அழகான விமானப் பணிப் பெண்கள் முத்தமிட்ட ஆப்பிள்கள் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. ஓர் ஆப்பிள் 100 நூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 500 விமானப் பணிப்பெண்கள் ஆப்பிளை வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆப்பிள்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒருபகுதி விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்னொரு பகுதி முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகிறது. சீனாவின் பெண்ணிய அமைப்புகள் இந்த ஆப்பிள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நினைத்தது போல ஆப்பிள் விற்பனை அவ்வளவு பிரமாதமாக இல்லை என்றும் சொல்கிறார்கள்.

நல்லது செய்வதற்காக என்றாலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கலாமா?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8028693.ece

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: பறவை இயந்திரம்

masala_2671794f.jpg
 

பறக்க விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. ஒரு பறவை போல பறந்து சென்று, அந்த அனுபவங்களைப் பெற ஆர்வம் உள்ளவர்களுக்காகப் பறவை இயந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து கலைஞரும் சாஃப்ட்வேர் நிபுணருமான மாக்ஸ் ரெனெர் இந்தப் பறவை இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். “இந்த இயந்திரத்தில் அமர்வதற்குப் பயிற்சி எதுவும் தேவை இல்லை. கைகள் இரண்டையும் இறக்கை போன்ற தகடுகளில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

தலைக்கு ஸ்பெஷல் கண்ணாடியுடன் கூடிய ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும். கைகள், கால்கள், தலையை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொள்ளலாம். ஸ்பெஷல் கண்ணாடி வழியே அமெரிக்காவின் முக்கியப் பகுதிகள் தெரிய ஆரம்பிக்கும். காற்றைக் கிழித்துக்கொண்டு பறப்பதுபோல செயற்கையாகக் காற்றைச் செலுத்துவோம். கடல் பகுதிக்கு மேலே செல்லும்போது காற்றில் உப்பு இருக்கும். தொழிற்சாலைப் பகுதிகளுக்குச் செல்லும்போது ரசாயன வாசனை வரும். இயந்திரத்தில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே ஒரு பறவையாக உணர ஆரம்பித்துவிடுவீர்கள். அற்புதமான அனுபவங்களைப் பெறுவீர்கள்“ என்கிறார் மாக்ஸ்.

ஜுரிச் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சிறிய மாணவர் குழுவை வைத்துதான் இந்த இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார் மாக்ஸ். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குவதற்கான ஓர் இயந்திரம்தான். ஆனால் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க நாங்கள் உத்திரவாதம் என்கிறார் மாக்ஸ். பறந்து பார்த்த ஒருவர், இது தன் வாழ்நாள் அனுபவம் என்று மெய்சிலிர்க்கிறார்.

ம்… வித்தியாசமான முயற்சி!

பெரு நாட்டின் தலைநகரில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தான் சாண்டா க்ளாஸ் வேடம் போட்டுக்கொள்கிறார்கள். தங்கள் மனைவியுடன் இரு சக்கர வாகனங்களில் வீதி வீதியாகப் பயணிக்கிறார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுடன் போக்குவரத்து விதிகளைச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள். அதிக வேகம் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘’கடந்த 16 ஆண்டுகளாக காவலர்கள் சாண்டாக்களாக மாறிவிடுகிறோம். எங்களிடம் பரிசுப் பொருட்கள் கிடையாது. சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இப்படிக் குடும்பத்துடன் சென்று சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைப் பரப்புவதில் எங்களுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் மார்கோ அன்டோனியோ சிரா என்ற காவல்துறை அதிகாரி.

காவல்துறை எங்கள் நண்பன் என்று உங்களை சொல்லலாம்!

ஒவாகுடானி என்பது ஜப்பானில் உள்ள மிகப் பெரிய வெப்பநீர் பள்ளத்தாக்கு. ஹகோன் மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்தது. சக்தி வாய்ந்த எரிமலை. இன்றும்கூட எரிமலையின் சில பகுதிகளில் இருந்து குழம்பு வெளியேறுகிறது. சில பகுதிகளில் ஆவி பறக்கும் அளவுக்கு கொதிக்கும் நீர் உருவாகிறது. இந்த நீரில் சல்பர் டையாக்ஸைடும் ஹைட்ரஜன் சல்பைடும் அதிக அளவில் இருக்கின்றன. இங்கே கிடைக்கும் கறுப்பு முட்டையைச் சுவைப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

‘குரோ-டமகோ’ என்று அழைக்கப்படும் இந்த மந்திர முட்டை ஒன்றைச் சாப்பிட்டால், மனிதனின் வாழ்நாளில் 7 ஆண்டுகள் கூடும் என்பது நம்பிக்கை. கறுப்பு முட்டைகள் இயற்கையில் உருவானவை அல்ல. சாதாரண கோழி முட்டைகள்தான் இப்படி மாற்றம் அடைகின்றன. பெரிய உலோகக் கூண்டுகளில் நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்து, கொதிக்கும் நீருக்குள் வைத்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து எடுக்கும்போது முட்டை ஓடுகள் கறுப்பாக மாறிவிடுகின்றன. பிறகு 15 நிமிடங்கள் சாதாரண நீரில் வேக வைக்கிறார்கள்.

அடுத்து விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். முட்டை ஓடுதான் கறுப்பாக இருக்குமே தவிர, உள்ளே வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் அப்படியேதான் இருக்கும். சல்பர் அதிகம் உள்ள கொதிநீரில் முட்டையின் ஓடுகள் கறுப்பாக மாறிவிடுகின்றன. 5 முட்டைகள் கொண்ட ஒரு பை 275 ரூபாய். ஒருவர் 5 முட்டைகள் சாப்பிட்டால் 35 ஆண்டுகள் வாழ்நாள் அதிகரிக்கும் என்று வாங்கிச் செல்கிறார்கள்.

அறிவியல் தெரிந்தவர்தான் இந்த ஐடியாவை உருவாக்கியிருப்பார்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8031352.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பிசினஸ் என்றால் எந்த இடத்தையும் விட்டு வைப்பதில்லை...

 
 
pencilart_2672838f.jpg
 

ஷ்யாவைச் சேர்ந்த சலவட் ஃபிடாய் மினியேச்சர் சிற்பங்களை உருவாக்குவதில் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர். அவரது கலைகளில் மிகவும் முக்கியமானது பென்சில் முனையில் வடிக்கும் சிற்பங்கள். உருப்பெருக்கிக் கண்ணாடியையும் கத்தியையும் வைத்துக்கொண்டு மிகப் பிரபலமான உருவங்களை எல்லாம் செதுக்கி விடுகிறார். “என் பெற்றோர் கலைஞர்கள். நான் வக்கீலாக வேலை பார்த்து வந்தேன். ஆனாலும் கலைகள் மீதுதான் என் ஆர்வம் முழுவதும் இருந்து வந்தது. ஒருகட்டத்தில் வேலையை விட்டுவிட்டு, முழு நேர கலைஞராக மாறிவிட்டேன். பென்சில் கிராபைட்டில் உருவங்களைச் செதுக்குவதுதான் மிகவும் சவாலான பணியாக இருக்கும். ஆரம்பத்தில் ஏராளமான தோல்விகள். எவ்வளவு பென்சில்கள் உடைந்தன என்பதற்கு கணக்கே இல்லை. இப்பொழுதும் கூட ஒவ்வொரு உருவமும் செதுக்குவதற்குள் 7 பென்சில்களாவது உடைந்துவிடுகின்றன. நிறைய நேரமும் அளவற்ற பொறுமையும் தேவைப்படும். வான் காவின் இரவு ஓவியத்தை பூசணி விதையில் தீட்டியிருக்கிறேன். அதைப் பார்ப்பதற்கே லென்ஸ் வேண்டும்” என்கிறார் ஃபிடாய்.

ஆஹா! உழைப்புகேற்ற அட்டகாசமான பலன்!

பெரு நாட்டில் இன்கா மக்கள் வாழ்ந்த மலைப் பகுதிகளில் கண்ணாடியால் ஆன 3 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. 1,312 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த விடுதிக்குச் செல்வதே மிகப் பெரிய சாகசமாக இருக்கிறது. இரும்புக் கம்பிகளால் ஆன படிகள் மீது கவனமாக ஏறிச் செல்ல வேண்டும். சின்னஞ்சிறு இடத்தில் படுக்கை, கழிவறை, உணவு மேஜை என்று கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. விடுதியில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்தால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாலை நேரத்தில் ஒருவித அழகும் அதிகாலையில் வேறுவிதமான அழகுடன் மலையும் மலையைச் சுற்றியுள்ள இடங்களும் காட்சி தருகின்றன. “இந்த விடுதிக்கு சாதாரண சுற்றுலாப் பயணிகள் வந்து தங்க முடியாது. மலையேற்றம் செய்பவர்களும் சாகசத்தை விரும்புகிறவர்களும்தான் தங்க முடியும். பார்க்க பயமாக இருந்தாலும் மிகப் பாதுகாப்பாக விடுதியை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் சொல்வது போல நடந்துகொண்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு இரவு இங்கே தங்குவதற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறோம். கீழே இருக்கும்போது இது அதிகக் கட்டணம் என்று நினைப்பவர்கள், இங்கே தங்கிச் செல்லும்போது, “இந்தக் கட்டணம் பெரிய விஷயமில்லை” என்று கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கைலாட்ஜ் கேப்சூல் என்ற இந்த விடுதியின் உரிமையாளர்.

பிசினஸ் என்றால் எந்த இடத்தையும் விட்டு வைப்பதில்லை…

ஷ்யாவின் பனி சூழ்ந்த யுரால் மலையை ஒட்டிய காடுகளில் அங்கீகரிக்கப்பட்ட வேட்டைகள் நடைபெற்று வருகின்றன. பீட்டர் மாக்ஸிமோவ் விடுமுறை நாட்களில் இங்கே வேட்டைகளில் ஈடுபடுவார். மரம் மீது கூடாரம் அமைத்து, வேட்டைக்காகக் காத்திருந்தபோது, தூரத்தில் மிகப் பெரிய காட்டுப் பன்றி வந்துகொண்டிருந்தது. குண்டு களால் இருமுறை சுட்டார். அலறிக்கொண்டே ஓடிவிட்டது. இதுவரை இவ்வளவு பெரிய காட்டுப் பன்றியைக் கண்டதில்லை என்பதால், அருகில் இருந்த கிராமத்திலிருந்து இருவரை அழைத்துக்கொண்டு, காயம்பட்ட காட்டுப் பன்றியைத் தேடிச் சென்றார் மாக்ஸிமோவ். நீண்ட தேடுதலுக்குப் பிறகு காட்டுப் பன்றி தென்பட்டது. உயிர் இருந்தது. மாக்ஸிமோவ் அழைத்து வந்தவர்கள் மீண்டும் சுடவும் உயிர் பிரிந்தது. இதுவரை யாருமே இவ்வளவு எடை கொண்ட பன்றியைப் பார்த்ததில்லை. பன்றியை ட்ரக்கில் ஏற்ற முடியவில்லை. 535 கிலோ எடையும் 1.7 மீட்டர் உயரமும் இருந்தது காட்டுப் பன்றி. கிழக்கு ஐரோப்பாவில் 270 கிலோ எடை வரை காட்டுப் பன்றிகள் இருந்திருக்கின்றன. ரஷ்யாவில் இதுவரை 350 கிலோ எடையுடைய பன்றிதான் அதிக எடையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது 535 கிலோ எடை கொண்ட ராட்சச பன்றியாக இருந்தது. உலகம் முழுவதும் விலங்குகள் வேட்டையாடப்படுவதால் முழு அளவில் வளர்ச்சியடைவதற்குள் மரித்துவிடுகின்றன. இந்தக் காட்டுப் பன்றி வேட்டைக்காரர்களின் கண்களுக்குத் தென்படாமல் இத்தனைக் காலமும் இருந்ததால் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

அநியாயம்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article8034028.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஹீல்ஸ் போட்ட ஆண்!

 
 
masala_2460671f.jpg
 

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் வசிக்கிறார் பிராண்டன் கோன். ஓர் இணையதளத்தில் வேலை செய்து வருகிறார். பெண்கள் எப்பொழுதும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பைப் போட்டால் கூட, அது ஏதோ யாருமே செய்ய முடியாத, கஷ்டமான விஷயமாகச் சொல்லிக்கொள்கிறார்கள் என்றார்.

உடனே ஒருநாள் முழுவதும் அவரை ஹை ஹீல்ஸ் செருப்பைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது அவரது அலுவலகம். சம்மதம் சொன்ன பிராண்டன், தனக்கேற்ற ஹை ஹீல்ஸ் செருப்பை வாங்கினார். காலை 8 மணிக்குச் செருப்பை மாட்டிக்கொண்டு அலுவலகம் சென்றார். அவரது நடையே மாறிவிட்டது. ஒவ்வோர் அடியையும் பார்த்துப் பார்த்து வைத்தார். நடப்பதைத் தவிர்த்தார்.

பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருந்தார். நடக்க வேண்டிய இடங்களுக்கு காரையும் லிஃப்டையும் பயன்படுத்திக்கொண்டார். அவரது கலகலப்பான முகமே மாறிவிட்டது. நேரம் செல்லச் செல்ல வலியால் துடிக்க ஆரம்பித்தார். மாலை வந்தவுடன் வீட்டுக்குச் சென்றவர், ஜன்னல் வழியாக ஹை ஹீல்ஸ் செருப்புகளைத் தூக்கி எறிந்தார்.

பிராண்டனின் அனுபவத்தை அப்படியே படம் பிடித்திருந்தது அவரது அலுவலகம். ‘’பாதம் மட்டுமல்ல, கால் முழுவதுமே பயங்கர வலி’’ என்று சொன்ன பிராண்டன், பெண்களைப் பற்றிய தவறான தன்னுடைய கருத்துகளை மாற்றிக்கொண்டாரா, இல்லையா என்பதை மட்டும் இன்னும் சொல்லவில்லை.

வலியை விலை கொடுத்து வாங்கியிருக்கார் பிராண்டன்…

நியு ஜெர்சி வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வீடு ஒன்று மீடியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த வீட்டில் வசிப்பவர்கள், தங்கள் ரத்தம் உறையும் அளவுக்கு கடிதங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். இந்தக் கடிதங்களை அனுப்புகிறவர் ’வாட்சர்’. அமானுஷ்ய கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயர்தான் வாட்சர். அந்த வீட்டை 2014ம் ஆண்டுதான் டெரெக், மரியா தம்பதியர் வாங்கியிருக்கிறார்கள். வாங்கிய மூன்றாவது நாளில், ‘என் தாத்தா இந்த வீட்டைக் காவல் காத்தார். பிறகு என் அப்பா காவல் காத்தார். இது என்னுடைய நேரம்’ என்று ஒரு கடிதம் வந்தது. யாராவது விளையாடுவார்கள் என்று பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

இரண்டாவது கடிதத்தில், ‘இந்த வீட்டுக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறதா?’ என்று கேட்டு இருந்தது. இந்த முறை உண்மையிலேயே மிரண்டு போனார்கள். அடுத்த கடிதத் தில், ‘இளம் ரத்தத்துக்கு உரியவர் கீழறையில் தானே உறங்கு கிறார்?’ என்று கேட்டிருந்தது. உடனே டெரெக் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டது. காவல்துறை விசாரணையில் இந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இது யாரோ விளையாட்டுக்காகச் செய்த வேலை என்று நினைக்கிறது காவல்துறை. ஆனால் டெரெக் இனி அந்த வீட்டில் குடியேறுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்.

அடப்பாவமே... ஒரு வீட்டை வாங்கி, குடியிருக்கக் கூட முடியலையே...

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D/article7382256.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: எஜமானருக்காக 9 ஆண்டுகள் காத்திருந்த நாய்!

 
masaal_2674947f.jpg
 

டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையம் வாயிலில் வெண்கலத்தால் ஆன நாயின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் நாய் சிலை அருகே வந்து படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஹச்சிகோ நாயின் கதையைப் பேசிக்கொள்கிறார்கள். 1923ம் ஆண்டு தனியாக நின்றுகொண்டிருந்த ஹச்சிகோவை பேராசிரியர் யுனோ எடுத்து வளர்த்தார். மிகப் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டது ஹச்சிகோ. யுனோ மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. தினமும் காலை அவருடன் ஷிபுயா ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பும். மாலை அவர் திரும்பு நேரம் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும். ஒருநாள் யுனோ திரும்பி வரவே இல்லை. அவருக்குத் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.

ஆனால் அடுத்து 9 ஆண்டுகள் தினமும் ரயில் நிலையத்துக்குச் சென்று, தன்னுடைய எஜமானருக்காகக் காத்திருந்தது ஹச்சிகோ. இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் ஜப்பான் முழுவதும் பரவியது. நாயின் அன்பைக் கண்டு கண்கலங்காத ஜப்பானியர்களே இல்லை. ஹச்சிகோ சிலை ஒன்றை ஷிபுயா ரயில் நிலையத்தில் நிறுவினார்கள். பள்ளிகளில் குழந்தைகளிடம் ஹச்சிகோவின் விசுவாசத்தைப் பாடமாகச் சொல்லித் தந்தனர். சிலை வைத்து ஓராண்டில் ஹச்சிகோ மரணம் அடைந்தது. 1948ம் ஆண்டு இந்த வெண்கலச் சிலையை மீண்டும் நிறுவினர். ஹச்சிகோ உலகை விட்டுச் சென்று 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ஜப்பானிய மக்களிடம் ஹச்சிகோவின் செல்வாக்கு குறையவே இல்லை.

அன்பு காட்டுவதில் ஹச்சிகோவுக்கும் மனிதர்களுக்கும் போட்டி!

அமெரிக்காவின் சான் அண்டோனியோவில் வசிக்கிறார் ராப் ஃபெர்ரெல். உப்புத் தூளில் ஓவியங்களைத் தீட்டுவதில் இவருக்கு இணை யாருமில்லை. மேஜை, வண்ண அட்டைகளின் மீது உப்புத் தூளைத் தூவிவிடுகிறார். பிறகு பிரஷ் மூலம் வரைய ஆரம்பிக்கிறார். அச்சு அசலாக உருவத்தைக் கொண்டு வருவதுதான் ஃபெர்ரெலின் சிறப்பு. ஓவியம் தயாரானதும் படங்கள் எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.

மைக்கேல் ஜாக்சன், ஸ்நூப் டாக், பாப் மார்லி, அமெரிக்க அதிபர்கள் என்று இவர் வரையும் ஒவ்வோர் ஓவியத்துக்கும் பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ’’முடி வெட்டுவதுதான் என்னுடைய பிரதான தொழில். சலூன் வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் முடி வெட்டுவேன், லோகோவைப் பதிப்பிப்பேன், பிரபலங்களின் உருவங்களைச் செதுக்கி விடுவேன். அந்த ஆர்வம்தான் என்னை உப்புத் தூளில் ஓவியம் தீட்ட வைத்தது’’ என்கிறார் ஃபெர்ரெல்.

எளிய வழியில் அசத்தும் ஓவியம்!

உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், உடற்பயிற்சி செய்யாமல், அறுவை சிகிச்சை பண்ணாமல் உடல் எடையைக் குறைக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள். உடல் பருமன் உள்ளவர்கள் சிறிய கேப்சூலை விழுங்க வேண்டும். இந்த கேப்சூல் இரைப்பைக்குள் சென்றவுடன் குழாய் வழியே தண்ணீர் செலுத்தப்படும். உடனே கேப்சூல் பலூன் போல உப்பி விடும். இரைப்பையின் பாதிப் பகுதியை பலூன் அடைத்துக்கொள்ளும். நீங்கள் எவ்வளவுதான் சாப்பிட ஆசைப்பட்டாலும் கால் பங்குதான் சாப்பிட முடியும். இப்படிச் சாப்பிடுவதால் உடலில் அளவுக்கு அதிகமான கலோரிகள் சேர்வதில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு பலூனின் ஆயுள் முடிந்துவிடும்.

மீண்டும் உள்ளே அனுப்பியது போலவே பலூனை வெளியே எடுத்துவிட முடியும். இந்த நான்கு மாதங்களில் ஆச்சரியப்படத்தக்க வகையில் உடல் இளைத்திருக்கும். ‘’மனிதர்களை அச்சுறுத்தும் நோய்களில் உடல் பருமன் முக்கியமானது, மோசமானது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இப்பொழுது கிடைத்திருக்கிறது’’ என்கிறார் தலைமை மருத்துவ அதிகாரி டேம் சாலி டேவிஸ். ’’எந்த முயற்சியும் செய்யாமல் நான்கு மாதங்களில் குறைந்தது 10 கிலோ எடையாவது குறைந்துவிடும். ஆனால் உடல் பருமனுக்கு இது நிரந்தர தீர்வல்ல’’ என்கிறார் க்ளாஸ்கோவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைல் லீன்.

இயற்கையாக உடல் எடையைக் குறைப்பதுதான் நல்லது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/article8041181.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கழுகின் முதுகில் அமர்ந்து பயணித்த காகம்!

 
 
maslaa_2458970f.jpg
 

வாஷிங்டனில் பூ சான் என்ற புகைப்படக்காரர் பார்க்கும் விஷயங்களை எல்லாம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந் தார். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு கழுகு அதிகாலையில் உணவு தேடிப் பறந்துகொண்டிருந்தது. திடீரென்று அந்தக் கழுகின் முதுகில் ஒரு காகம் வந்து அமர்ந்தது.

முதுகில் காகத்தைச் சுமந்தபடி கழுகு சென்றுகொண்டிருந்தது. சில நொடிகள் ஓய்வெடுத்த பிறகு கழுகின் முதுகிலிருந்து காகம் பறந்து சென்றுவிட்டது. இந்தக் காட்சியை அற்புதமாகத் தன் கேமராவில் படம் எடுத்துவிட்டார் பூ சான்.

எவ்வளவு தைரியம் இந்தக் காகத்துக்கு!

லைபீரியாவில் வசிக்கிறார் 37 வயது வெஸ்ஸி ஃப்ரீமேன். மிகவும் ஏழ்மை நிலையிலிருக்கும் வெஸ்ஸியால் பார்க்க முடியாது. ஆனால் பிரமாதமான இசை ஞானம் உண்டு. ஒரு தகர டின்னில் மரக்கட்டையை வைத்து, அதில் மூன்று கம்பிகளை இணைத்து, கிடார் ஆகப் பயன்படுத்தி வருகிறார். உருளைக் கிழங்கு சிப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நிகில், சச்சின் ராம்சந்தானியின் கவனத்துக்கு வந்தார் வெஸ்ஸி. இசையைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தனர். தங்களுடைய சிப்ஸ் விளம்பரத்துக்கு ஒரு பாடலை உருவாக்கித் தரும்படிக் கேட்டனர்.

அரை நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக அந்தப் பாடல் வெளிவந்தது. இந்தத் தகர டப்பாவில் இருந்து இப்படி ஓர் இசையா என்று எல்லோரும் மெய்மறந்து போனார்கள். வெஸ்ஸியின் வீடியோ இணையத்தில் வெளியானது. உலகம் முழுவதும் ஏராளமானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நிகிலும் சச்சின் ராம்சந்தானியும் 45 லட்சம் ரூபாய் நன்கொடையை வெஸ்ஸிக்காகச் சேகரித்து வருகிறார்கள். இந்தப் பணத்தின் மூலம் வெஸ்ஸிக்குப் பார்வை கிடைக்கவும், வீடு வாங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திறமைக்கு மரியாதை!

இங்கிலாந்தின் கார்னிஷ் கடற்கரைக்கு அருகில் வசித்து வருகிறார் 77 வயது கிறிஸ்டின் பவ்டென். அவருக்குக் கேட்கும் சக்தி இல்லை. அதனால் புதிதாக ஹியரிங் எய்ட் ஒன்றை வாங்கிப் பொருத்தியிருந்தார். தோட்டத்தில் நின்று கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது, யாரோ அலறும் சத்தம் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தார். ஒருவரும் தென்படவில்லை. ஆனால் அலறல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. கணவரிடம் விஷயத்தைச் சொன்னார். அப்படி ஒரு சத்தமும் தனக்குக் கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார் அவர். ஆனாலும் கிறிஸ்டினால் அலறலைப் புறக்கணிக்க முடியவில்லை. ஒரு பைனாகுலர் மூலம் கடலை ஆராய்ந்தார். அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருவர் படகில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். உடனே அருகில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தினார். சிலர் படகில் சென்று, அவர்களைப் பத்திரமாக மீட்டு வந்தனர். எல்லோரும் கிறிஸ்டினைப் பாராட்டிக்கொண்டிருக்க, அவரோ ஹியரிங் எய்டைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்!

அட… கேட்கற சக்தியைக் கொடுத்ததோடு இரண்டு உயிர்களையும் காப்பாற்றியிருக்கே ஹியரிங் எய்ட்!

சீனாவின் டியான்ஜின் பகுதியில் வசிக்கிறார் 65 வயது யாங் ஸியாவோயுன். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். பிராணிகள் மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார். இதுவரை 1500 நாய்களையும் 200 பூனைகளையும் ஒரே இடத்தில் வளர்த்து வருகிறார். சமீபத்தில் யுலின் நகரில் நாய் இறைச்சி திருவிழாவில் பலியிட இருந்த 100 நாய்களை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார். இதற்காக 1500 மைல்கள் பயணம் செய்து, 65 ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்து, நாய்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஒருநாளைக்கு இருமுறை வேக வைத்த சோள ரொட்டிகளை உணவாக நாய்களுக்கு வழங்குகிறார். நாய்களுக்கும் பூனைகளுக்கும் உணவிடுவதும் பராமரிப்பதும் எளிதான காரியம் இல்லை. அத்தனையையும் யாங் ஒருவரே பார்த்துக்கொள்கிறார். யாங்குக்கு உதவும் விதத்தில் பலரும் நன்கொடைகள், மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

கருணை உள்ளம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7378018.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பனிக்குள் புதைந்த நரி!

 
masa_2675988f.jpg
 

அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் படங்கள் எடுப்பதற் காகக் காத்திருந்தார் புகைப்படக்காரர் டொனால்ட் ஜோன்ஸ். பனிப் பிரதேசத்தில் ஒரு செந்நரி உணவு தேடி வந்தது. நரிக்குத் தெரியாமல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று எலி ஓடி வந்தவுடன் நரிக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. எலியைத் துரத்திச் சென்றது. ஒரு வளைக்குள் நுழைந்துவிட்டது எலி. உடனே நரி மூன்றடி உயரத்துக்குத் தாவி, பனி வளைக்குள் குதித்தது.

பாதி உடல் பனிக்குள் புதைந்துவிட்டது. பின்னங்கால்களும் வாலும் மேலே தூக்கிக்கொண்டிருந்தன. எலியை வாயில் கவ்வியபடி சில நிமிடங்களில் வளையை விட்டு வெளியே வந்தது நரி. ‘‘2 மணி நேரமாகக் காத்திருந்தேன். என் வாழ்நாளில் இதுபோன்ற அற்புதமான படத்தை இதுவரை எடுத்ததில்லை. நரி குதித்த வேகத்தைப் பார்த்து, மூக்கு உடைந்திருக்கும் என்றுதான் நினைத்தேன். அட்டகாசமாக வேட்டையாடி மேலே கம்பீரமாக எழுந்து வந்தது!’’ என்கிறார் டொனால்ட் ஜோன்ஸ்.

ஆஹா! எவ்வளவு லாவகம்!

அல்ஜீரியாவில் வசிக்கும் 70 வயதுக்கு மேல் உள்ள முதிய பெண்கள் தங்கள் முகத்திலும் உடலிலும் டாட்டூ குத்திக்கொண்டிருக்கிறார்கள். டாட்டூ குத்திக்கொண்டுள்ளவர்களை அழகான பாட்டிகள் என்று அழைக்கிறார்கள் குழந்தைகள். ஆனால் இன்று டாட்டூ குத்துதல் இஸ்லாமுக்கு எதிரானது என்று சொல்வதால், பாட்டிகள் மிகுந்த குற்றவுணர்வோடு இருக்கிறார்கள். 106 வயது ஃபாட்மா டர்னவ்னி, ‘‘அந்தக் காலத்தில் டாட்டூ குத்துவது குற்றம் என்றெல்லாம் கருதப்படவில்லை. அழகுக்காக என் முகத்தில் டாட்டூ குத்தினார்கள்’’ என்கிறார். ‘‘என்னுடைய வெள்ளி நகைகளை விற்றுதான் 7 தடவை டாட்டூ குத்திக்கொண்டேன். ஒவ்வொரு தடவையும் வலியால் துடிப்பேன்.

என் கண்ணீரில் மை கரைந்துவிடாதா என்று கூட ஏங்கியிருக்கிறேன்’’ என்கிறார் அயிஷா. ‘‘என்னுடைய 3 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நான் துயரத்தில் இருந்தபோது, என் சித்தி டாட்டூ குத்திக்கொண்டால் இனி பிறக்கும் குழந்தைகள் பிழைக்கும் என்றார். நானும் நம்பிக்கையோடு குத்திக்கொண்டேன். அதற்குப் பிறகு 6 குழந்தைகள் பிறந்தன. டாட்டூ காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் விஷயம். திடீரென்று மதத்துக்கு எதிரானது என்றால் என்ன செய்ய இயலும்?’’ என்கிறார் 68 வயது ஹொவ்காலி.

ம்...வயதான காலத்தில் இப்படி ஒரு டென்ஷனா?

அமெரிக்காவில் உள்ள யூட்டா பாலைவனத்தைச் சுற்றிப் பார்க்க ஏராளமானவர்கள் வருகிறார்கள். இங்குள்ள வெப்பநீர் ஊற்றுகளில் இருந்து 75 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில், நிமிடத்துக்கு 757 லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. இந்தத் தண்ணீர் ஊற்றுகளில் இருந்து வெளியேறி பாலைவனத்தின் பல பகுதிகளுக்கும் ஓடி வருகிறது. அந்தத் தண்ணீரை 2 நீச்சல் குளங்களிலும் சில குளிக்கும் தொட்டிகளிலும் பிடிக்கிறார்கள். இங்கு வரும்போது தண்ணீரின் வெப்ப நிலை பாதியாகக் குறைந்து, குளிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்து விடுகிறது. பல்வேறு கனிமங்கள் நிறைந்த தண்ணீர் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

வெந்நீரில் மணிக்கணக்கில் குளித்தால் தங்களின் நோய் கூட காணாமல் போய்விடுவதாகவும் மிகவும் புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும் சொல்கிறார்கள். கால்சியமும் மக்னீசியமும் அதிக அளவில் தண்ணீரில் இருப்பதால் தொட்டிகளில் பாறை போல படிந்துவிடுகின்றன. இதற்காகவே தினமும் தொட்டிகளைச் சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

உலகத்தில் இருக்கும் அனைத்தும் தனக்காவே இருக்கிறது என்று நினைக்கிறான் மனிதன்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF/article8044811.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிறுமியைக் காப்பாற்றிய நாய்!

 
 
masaka_2679060f.jpg
 

ரஷ்யாவின் யாகுடியா கிராமத்தில் வசித்து வந்த 4 வயது கரினா சிகிடோவா, தன் நாய் நைடாவுடன் அருகில் இருந்த காட்டுக்குள் சென்றுவிட்டாள். திரும்பி வருவதற்கு வழி தெரியவில்லை. அந்தக் காட்டில் ஓநாய்களும் கரடிகளும் அதிகம் வசிக்கின்றன. உறைய வைக்கும் குளிர். போதுமான பாதுகாப்பு இன்றி மனிதர்கள் வசிப்பது கடினம். இரவு நேரத்தை பெரிய மரங்களின் வேர்களுக்கு இடையே கழித்தனர் கரினாவும் நைடாவும். அதிகமான குளிரின்போது நைடா, கரினாவின் மேல் படுத்துக்கொண்டு கதகதப்பை அளித்தது. பசிக்கு பெர்ரி பழங்களையும் ஆற்றில் ஓடிய தண்ணீரையும் சாப்பிட்டாள் கரினா. 9 இரவுகள், 9 பகல்களுக்குப் பிறகு மிகப் பெரிய படை ஒன்று கரினாவைத் தேடிக்கொண்டு காட்டுக்குள் வந்து சேர்ந்தது. நைடா எங்கோ ஓடிவிட, கரினாவைத் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவ மனையில் சேர்த்தனர்.

கரினாவைக் கண்டதும் அவரது அம்மா, ‘‘கரடியும் ஓநாயும் இருக்கும் காட்டுக்குள் எப்படித் தனியா இருந்தே?’’ என்று அழுதுகொண்டே கேட்டார். ‘‘அதெல்லாம் தெரியாது. நைடா கூடவே இருந்தது’’ என்றாள் கரினா. சில நாட்களில் நைடாவும் கரினா வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ‘‘4 வயது குழந்தை காட்டில் தனியாக வசித்ததை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இயற்கைச் சூழ்ந்த கிராமத்தில் வசிக்கும் கரினாவுக்குத் தைரியம் இயல்பாகவே இருக்கிறது. நாய் உதவி இல்லாவிட்டால் பிழைத்திருப்பதே கடினம். குழந்தை என்பதால் காட்டின் சூழல் பற்றிய பயம் தெரிந்திருக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ஃபெடோரா. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரினாவையும் நைடாவையும் கெளரவிக்கும் விதத்தில் வெண்கலச் சிலை ஒன்றைச் செதுக்கியிருக்கிறார் நிகோலே சோச்சாசோவ்.

ஆஹா! ரியல் ஜங்கிள் புக் ஹீரோ!

பால்டிமோரில் துணிக்கடை வைத்திருக்கிறார் கிறிஸ்டோபர் ஸ்ஹாஃபர். 2012-ம் ஆண்டு ‘ஷார்ப் டிரெஸ்ட் மேன்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய கோட், சூட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கிறார். அவற்றை ஓரளவு புதுத் துணி போல மெருகேற்றிவிடுகிறார். பால்டிமோரில் வசிக்கும் ஏழைகள், சிறையில் இருந்து திரும்பியவர்களுக்கு இலவசமாக உடைகளை வழங்கி வருகிறார். ‘‘ஒருவரின் ஆடையை வைத்துதான் அவரை முதல் பார்வையிலேயே மதிப்பிடுகிறோம். ஏழைகளும் சிறையில் இருந்து வெளிவரும் கைதிகளும் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நல்ல துணி அவசியம்.

அவர்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிவித்து, கம்பீரமாக இண்டர்வியூவுக்கு அனுப்பிவைப்பேன். எங்கள் ஆடைகளை அணிந்து சென்ற எவரும் வேலை கிடைக்காமல் திரும்பியதில்லை. நம்மைப் போன்ற மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தவறு செய்துவிட்டு சிறை சென்று திரும்புகிறார்கள். அவர்களை நாமும் தண்டிக்கக்கூடாது.

அவர்கள் பிறரைப் போல வாழ்வதற்கு என்னால் முடிந்த உதவி இது’’ என்கிறார் கிறிஸ்டோபர். ‘‘நான் 30 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பியவன். என்னைப் பார்த்தாலோ, என் கதையைக் கேட்டாலோ யாருமே வேலை தரமாட்டார்கள். கிறிஸ்டோபர் உதவியால் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது. உலகத்தையே வென்றது போல அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஜான்.

உங்க சேவை தொடரட்டும் கிறிஸ்டோபர்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/article8053369.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வீழ்ந்தவர்கள் மீண்டெழுந்த அடையாளம்!

 
masala_2680334f.jpg
 

ஜப்பானில் கோபி வண்ண விளக்குகள் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பரில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. கைகளால் செய்யப்பட்ட 2 லட்சம் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. 30 லட்சம் பேர் பார்வையிடுகிறார்கள். 1995-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் கோபி பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 4,600 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தன.

மின்சாரம், தண்ணீர் எதுவும் கிடையாது. கோபி பகுதியே இருளில் மூழ்கிவிட்டது. சோர்வடைந்த மக்களை மீட்டுக்கொண்டு வரும் விதமாக விளக்குகள் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. மக்களிடம் நம்பிக்கை துளிர்த்தது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் திருவிழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 2 வாரங்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலை சில மணி நேரங்கள் நகரின் விளக்குகள் அணைக்கப்படும். திருவிழா விளக்குகள் மட்டுமே ஒளிரும்.

வீழ்ந்தவர்கள் மீண்டெழுந்த அடையாளம்!

ஸ்பெயினில் விலங்குகள் காப்பகத்தைச் சேர்ந்த இருவர் அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்துவிட்டனர். ஓர் ஆண் நாயின் பின் பகுதியில் ஒரு பெண் நாய் தலை வைத்திருந்தது. ஆண் நாய் மெதுவாக நகர, பெண் நாயும் நகர்ந்து சாலையைக் கடந்து சென்றது. பிறகு பெண் நாய் வேகமாக ஓடியது, அதைப் பின்தொடர்ந்து சென்ற ஆண் நாய் பாதுகாப்பாக அதைச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.

‘‘பெண் நாய்க்குப் பார்வை இல்லை. அதனால் ஆண் நாய் தன் உடல் மீது படுக்க வைத்து அழைத்துச் செல்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாய்களையும் எங்கள் காப்பகத்துக்கு அழைத்து வந்தோம். உடல் பரிசோதனைகள் செய்தோம். பார்வை இல்லை என்பது உறுதியானது. ஒருவித வைரஸ் மூலம் பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்துவிட முடியும் என்றார் மருத்துவர். பெண் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு முற்றிலும் குணமானது. கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு குடும்பம் இரண்டு நாய்களையும் தத்தெடுத்துக்கொண்டது. புதிய வீடு, புதிய மனிதர்களுடன் அண்ணனும் தங்கையும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கின்றன!

விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

கிழக்கு சீனாவின் வுயி பகுதியில் 55 ஆண்டுகளாக இயங்கி வருகிறது யாங்ஜியா மருத்துவமனை. டாங்யிங் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் வந்தன. தங்கள் ஊழியர்களுக்காகவே இந்த மருத்துவமனையை ஆரம்பித்தது நிர்வாகம். ஒருகட்டத்தில் நிறுவனம் திவாலானது. மருத்துவமனையை தொடர்ந்து நடத்த இயலவில்லை. அரசாங்கம் மருத்துவமனையை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் போதுமான நிதி கிடைக்கவில்லை. 400 நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வேறு மருத்துவமனைகளுக்குச் சென்றுவிட்டனர். மீதியிருந்த 36 நோயாளிகள் குடும்பத்தோடு இங்கேயே தங்கிவிட்டனர். அனைவரும் ஒற்றுமையாக மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தில் பயிர் செய்து, உணவு சமைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். விளையாடுகிறார்கள். நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் பணத்தில் ஓரளவு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

‘‘எனக்கு 85 வயதாகிறது. 30 ஆண்டுகளாக இங்கே தங்கியிருக்கிறேன். இங்கே குறைந்த வருமானத்தை வைத்து வாழவும் முடிகிறது, சிகிச்சையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. அதனால்தான் அடிப்படைத் தேவைகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஒரு மருத்துவமனையில் இருக்கும் உணர்வே வந்ததில்லை. எங்கள் வீடுகளுக்கு மருத்துவர்கள் வந்து செல்வதாகவே நினைத்துக்கொள்கிறோம்’’ என்கிறார் லின் ஸிமிங்.

ம்… விநோதமான மருத்துவமனை…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article8057746.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பிரெட் அறை

masala_2681525f.jpg
 

அரிசோனாவில் உள்ள மரானா தங்கும் விடுதியில் பிரெட் மூலம் ஓர் அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. பல நூறு கிலோ மைதா, சர்க்கரை, மசாலா சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் சொன்னால் தவிர, பிரெட் மூலம் உருவாக்கப்பட்ட அறை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மங்கிய வெளிச்சமும் அலங்காரமும் கதைகளில் வரும் சூனியக்காரியின் அறை போல தோற்றத்தைத் தருகிறது. ஆனால் உங்களைச் சாப்பிடுவதற்கு ஒரு சூனியக்காரியும் இங்கே காத்திருக்கவில்லை என்கிறார்கள் விடுதியின் உரிமையாளர்கள்.

’’ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது விடுதியில் ஏதாவது வித்தியாசம் செய்வோம். இந்த ஆண்டு 3 புகழ்பெற்ற சமையல் கலைஞர்களை வைத்து பிரெட் வீட்டை உருவாக்கியிருக்கிறோம். 19 அடி உயரம் கொண்ட இந்த பிரெட் வீட்டை உருவாக்க நிஜமாகவே மிகவும் சிரமப்பட்டோம். ஜுன் மாதம் இந்த வீட்டை உருவாக்க ஆரம்பித்தோம். தினமும் பிரெட்டால் ஆன சிவப்பு செங்கற்களை உருவாக்கினோம். 100 கிலோ இஞ்சித் தூள், 100 கிலோ தேன் கூட சேர்த்திருக்கிறோம். 4 ஆயிரம் பிரெட் செங்கற்கள் தயாரானவுடன் 13 பேரை வைத்து, 4 நாட்களில் வீட்டை உருவாக்கிவிட்டோம்.

அலங்காரத்துக்காக ஆங்காங்கே மிட்டாய்களைப் பதித்துவிட்டோம். பொதுமக்களுக்காகத் திறந்துவிட்டோம். எல்லோரும் பாராட்டினார்கள். ஒரு பணக்காரர் தன்னுடைய பேரக் குழந்தைகளுக்காக இந்த பிரெட் வீட்டை விலைக்கு வாங்கிக்கொள்கிறேன் என்றார். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துவிட்டது’’ என்கிறார் உரிமையாளர் மேங்கியோன்.

பசியோடு எவ்வளவோ பேர் இருக்க, உணவுப் பொருள்களை இப்படி வீணாக்கலாமா?

சிக்கல் விழுந்த நூலை விடுவிப்பது என்பது பொறுமை இழக்கும் விஷயம். கம்பளி நூலில் விழுந்துள்ள சிக்கல்களை அவிழ்ப்பதற் காகவே ஓர் அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் பொழுதுபோக்குக் காக மட்டுமின்றி, சிக்கல்களை விடுவித்து சம்பாதிக்கவும் செய்கிறார்கள். மெல்போர்னைச் சேர்ந்த டாப்னே பாஸ்நெட் கூறியபோது, ‘‘சிக்கல் விடுவிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 5 வாரங்களில் 120 நூற்கண்டு சிக்கல்களை விடுவித்தி ருக்கிறேன். ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டது போல சந்தோஷமாக இருக்கிறது.

என்னைப் போல நிறையப் பேருக்குச் சிக்கல் விடுவிப்பதில் ஆர்வம் என்று தெரிய வந்தது. நாங்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் ‘நாட் அ பிராப்ளம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதில் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நூல் ஆலைகளில் இருந்து எங்களுக்கு கிலோ கணக்கில் சிக்கல் விழுந்த நூற்கண்டுகள் வந்து சேர்கின்றன. அவற்றைச் சரிசெய்து அனுப்பி வைப்பது எங்கள் வேலை. வருமானமும் வருகிறது. சிக்கலை விடுவிக்கும்போது மனதில் உள்ள அழுத்தமும் குறைகிறது. சிக்கல் அவிழ்ப்பதில் நாங்கள் நிபுணத்துவமே பெற்றுவிட்டோம். சாதாரணமானவர்கள் சிக்கல் நீக்குவதற்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது’’ என்கிறார்.

நமக்கு ஒரு சார்ஜர் வயர் சிக்கலானால் கூட எடுக்கச் சிரமமா இருக்கே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/article8060984.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சுவர் ஏறும் குழந்தை!

 
 
masala_2457755f.jpg
 

அரிஸோனாவில் வசிக்கும் எல்லி, 7 அடி சுவற்றில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்து, வேகமாக ஏறிவிடுகிறாள். 20 மாதக் குழந்தையான எல்லி, 8 மாதத்திலேயே சுவர் ஏற ஆரம்பித்துவிட்டாள். எல்லியின் அம்மா ரேச்சலும் அப்பா ஸாக்கும் மலை ஏறும் வீரர்கள், ஜிம் பயிற்சியாளர்கள். வயிற்றில் எல்லி இருந்தபோது கூட மலை ஏற்றம் செய்த துணிச்சல்காரர் ரேச்சல். அதனால்தானோ என்னவோ எல்லிக்கும் சுவர் ஏறுவதில் ஆர்வம் விரைவில் வந்துவிட்டது. எல்லி பிறந்த சில நாட்களிலேயே ரேச்சல் ஜிம்முக்குச் சென்றுவிட்டார்.

அங்கே எல்லி கண் விழித்துப் பார்த்தால், யாராவது சுவரில் ஏறும் பயிற்சியைச் செய்துகொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாத எல்லி, தானே சுவரில் ஏறுவதற்கு முயற்சி செய்தாள். குழந்தையின் ஆர்வத்தை முடக்க மனமில்லாமல், பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். எல்லிக்காக மூன்றடியில் ஒரு சுவர் வைக்கப்பட்டது. கீழே பாதுகாப்புக்கான மெத்தைகள் போடப்பட்டன. அத்துடன் ரேச்சல், ஸாக் அருகில் இருக்க, எல்லி சுவர் ஏற ஆரம்பித்தாள். வெகு விரைவில் இந்தக் கலையின் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டாள். இன்று 7 அடி உயரத்தைச் சில நிமிடங்களில் ஏறிக் கடந்து விடுகிறாள்.

ரேச்சல் எட்டடி பாய்ந்தால் எல்லி 16 அடி பாய்கிறாள்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்திலும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான நன்கொடை சேகரிப்புக்காகவும் ஐன்ஸ்டைன் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 319 பேர் ஐன்ஸ்டைன் போன்று வேடமணிந்து வந்தனர்.

81 வயது பென்னி வெஸ்ஸர்மன் அப்படியே ஐன்ஸ்டைன் போலவே இருந்தார். அவர்தான் தலைமை தாங்கி நடந்து வந்தார். 1921ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார் ஐன்ஸ்டைன். 1933ம் ஆண்டு ஹிட்லரின் யூதர் வேட்டை காரணமாக ஜெர்மனியை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடியேறினார். கடைசி வரை ஐன்ஸ்டைன் ஜெர்மனிக்குத் திரும்பிச் செல்லவே இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியைக் கூட விட்டுவைக்கவில்லை இந்த ஹிட்லர்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/article7373785.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஜெர்மனியின் சூப்பர் போக்குவரத்து!

 
masala_2684015f.jpg
 

எரிபொருள் சிக்கனத்துக்காகவும் காற்றில் மாசு குறைப்பதற்காகவும் ஜெர்மனி சைக்கிள் போக்குவரத்தை ஏற்கெனவே ஊக்குவித்து வருகிறது. இப்போது சைக்கிள் போக்குவரத்துக்காகவே சூப்பர் ஹைவே என்ற பெயரில் மிக நீண்ட நெடுஞ்சாலையை உருவாக்கி வருகிறது. 100 கி.மீ. தூரத்துக்கு, 10 நகரங்களை இணைக்கும் விதமாக இந்த நெடுஞ்சாலை திட்டமிடப்பட்டு உருவாகி வருகிறது. இந்த வழியில் 4 பல்கலைக்கழகங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. போவதற்கு ஒரு பாதையும் வருவதற்கு ஒரு பாதையுமாக மிக அகலமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சைக்கிள் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கும் சுமார் 20 லட்சம் மக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்த இருக்கிறார்கள். வாகன நெருக்கடி, காற்று மாசு போன்றவற்றைப் பெருமளவில் குறைக்க இருக்கிறது இந்த நெடுஞ்சாலை. தினமும் சாலைகளில் செல்லக்கூடிய 50 ஆயிரம் கார்களுக்கு இனி வேலை இருக்காது என்கிறார்கள். 5 கி.மீ. தூரத்துக்கு இந்தச் சாலை தயாராகி, பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. விரைவில் முழுச் சாலையும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள்.

வரவேற்க வேண்டிய விஷயம்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டர்டன், பீட் செக்லின்ஸ்கி இருவரும் கடலைச் சுத்தம் செய்வதற்கான கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கடலில் மிதக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதங்கள், எண்ணெய், சோப் போன்றவற்றை இந்தக் கருவி தானாக இழுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘’நாங்கள் இருவரும் சிறு வயது முதல் கடலில்தான் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம்.

பிற்காலத்தில் நீர் விளையாட்டு வீரர்களாக மாறிவிட்டோம். நாங்கள் சின்ன வயதில் பார்த்த கடலுக்கும் இப்போது இருக்கும் கடலுக்கும் நிறைய வித்தியாசம். கடலைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால் குப்பைகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இது எங்களுக்கு அதிகக் கவலையையும் வருத்தத்தையும் தந்தது. இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்பதற்காகவே நாங்கள் பார்த்து வந்த வேலைகளை விட்டுவிட்டோம். குப்பை உறிஞ்சும் கருவியைப் பலரின் உதவியோடு உருவாக்கினோம். பல்வேறு இடங்களில் இந்தக் கருவியை வைத்துப் பரிசோதனை செய்தோம். திருப்தியாக இருந்தது. நிதி திரட்டி, இந்தக் கருவியை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

இதற்காக ஒரு வீடியோவையும் தயாரித்து வெளியிட்டோம். மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. மறுசுழற்சி முறையில் உருவான சிலிண்டரை கடலில் மிதக்க விடுவோம். குப்பைகள் சிலிண்டருக்குள் இழுக்கப்பட்டு, வடிகட்டப்பட்டு, இன்னொரு பைக்குள் சேர்ந்துவிடும். நீச்சல் குளத்தில் வைக்கப்படும் ஸ்கிம்மர் பாக்ஸ் போலவே இந்தக் கருவியையும் வடிவமைத்திருக்கிறோம். துறைமுகங்களில் இந்தக் கருவி அதிகம் பயன்படும்’’ என்கிறார் ஆண்ட்ரூ டர்டன்.

நண்பர்கள் இருவருக்கும் ஒரு பூங்கொத்து!

அமெரிக்காவில் வசிக்கும் மைக் ட்ராக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விரல்களில் உள்ள நகங்களைச் சேமித்து வருகிறார். ஓர் ஆண்டு முழுவதும் சேமிக்கப்பட்ட நகங்களை வைத்து பேப்பர் வெயிட்டை உருவாக்குகிறார். ஒவ்வொரு பேப்பர் வெயிட்டும் 20 ஆயிரத்தில் இருந்து 33 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ’’எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தது. ஒருமுறை நகத்தை நீளமாக வளர்த்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. வளர்க்க ஆரம்பித்தேன். குறிப்பிட நீளத்துக்கு வளர்ந்த பிறகு அதை வெட்டி, வீச மனம் வரவில்லை. ஒரு பையில் நகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அதை ஒரு கலைப் பொருளாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

பேப்பர் வெயிட் யோசனை உதித்தது. பச்சை வண்ண பேப்பர் வெயிட்களைப் பார்ப்பவர்கள் வாங்காமல் இருக்க மாட்டார்கள்! எனக்குச் செலவு குறைவாகத்தான் ஆகும். ஆனால் ஒரு வருடம் முழுவதும் பொறுமையாக நகங்களைச் சேமித்து வைக்க வேண்டும். இதுபோல இன்னொரு பொருள் உலகத்தில் இருக்காது. அதனால் விலை அதிகமாக வைத்திருக்கிறேன். விலையைப் பற்றிக் கேள்வி கேட்காமல், வாங்கிச் சென்று விடுகிறார்கள்’’ என்கிறார் மைக் ட்ராக்.

பிழைக்கத் தெரிந்தவர்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8067842.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.