Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: திட மழை

 

 
_69356646_solidrai_2997704f.jpg
 

மெக்ஸிகோ விவசாயிகள் திட மழையைப் (Solid Rain) பயன்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியில் இருந்து தப்பி வருகின்றனர். திட மழை என்பது பாலிமர் தூள். இந்தத் தூளைத் தண்ணீரில் நனைத்தால் 500 மடங்கு பெரிதாகிவிடும். அதாவது தண்ணீரை உள் இழுத்துக்கொள்ளும். வறட்சி நிலவும் இடங்களில் இந்தத் தூளைச் செடிகளுக்கு இட்டு, வெற்றிகரமாக விவசாயம் செய்திருக்கிறார்கள் விவசாயிகள். 1970-ம் ஆண்டு அமெரிக்காவில் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயாபர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. மெக்ஸிகோவைச் சேர்ந்த ரசாயன பொறியாளர், ஈரத்தை உறிஞ்சும் பாலிமர் தூளை வைத்து, தங்கள் நாட்டின் வறட்சியை ஒழிக்க முடிவு செய்தார். செர்கியோ ரிகோ வெலஸ்கோ என்பவர் இதை மேலும் பலவிதங்களில் முன்னேற்றினார். திட மழைத் தூளை உருவாக்கினார். இந்தத் தூளைச் செடிகளைச் சுற்றிப் போட்டு, குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும். நீண்ட காலத்துக்குச் செடிக்குத் தண்ணீர் கிடைத்துக் கொண்டே இருக்கும். 10 கிராம் திட மழைத் தூள் ஒரு லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும். செடிகளுக்கு விடும் நீர், மண்ணுக்குள் வழிந்து ஓடாமலும் ஆவியாகாமலும் பார்த்துக்கொள்கிறது. மெக்ஸிகோ அரசாங்கம் ஓர் ஆண்டு முழுவதும் ஆராய்ந்தது. ஒரு ஹெக்டேரில் 1000 கிலோ சூரிய காந்தி விளையும் மண்ணில், திட மழை மூலம் 3000 கிலோ சூரியகாந்தி விளைந்தது. 450 கிலோ பீன்ஸ் விளையக்கூடிய மண்ணில், 3000 கிலோ பீன்ஸ் விளைந்தது. திட மழை வறட்சியான மெக்ஸிகோ பகுதிகளில் அற்புதமாகப் பலன் தருகிறது. இதை உலகம் முழுவதும் வறட்சியான பகுதிகளுக்குக் கொண்டு சென்று, விவசாயிகளை மகிழ்விக்கலாம் என்கிறார்கள். ‘திட மழை நச்சுத் தன்மைகொண்டதல்ல. பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் விருதுகளைப் பெற்றிருக்கிறது’ என்கிறார் நிறுவனத்தின் உதவித் தலைவர் எட்வின் கோன்ஸாலெஸ். பல ஆண்டுகள் பயன்படுத்தும்போது மண் வளம் பாதிக்கப்படும், தண்ணீர் கிடைக்காதபோது, அருகில் உள்ள நீர் வளங்களையும் உறிஞ்சிவிடும் என்றெல்லாம் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

திட மழை வரமா, சாபமா?

ரஷ்யாவின் வோல்கோக்ராட் பகுதியில் வசிக்கிறார் 76 வயது மருத்துவர். அக்கம் பக்கத்தில் யாருடனும் பேச மாட்டார். எப்பொழுதாவது 87 வயது கணவருடன் வெளியே செல்வார். 4 மாதங்களாக மருத்துவர் மட்டுமே வெளியே சென்று வருவதைப் பார்த்து, கணவர் பற்றி விசாரித்தனர். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. திடீரென்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். வீட்டைத் திறந்து பார்த்தபோது, மருத்துவரின் கணவர் உடல் மட்கி, மம்மியாக மாறியிருந்தது. ‘என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு மருத்துவத்தைவிட மந்திரங்களில் நம்பிக்கை அதிகம். புனித மந்திர நீரைக் கொண்டு உடல் மீது தெளித்து வந்தால், என் கணவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று நம்பினேன். அதற்குள் இப்படி நுழைந்துவிட்டீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். கணவர் இயற்கையாக மரணம் அடைந்திருக்கிறார் என்பதை உறுதி செய்த காவல்துறை, மருத்துவரை மனநல மருத்துவமனையில் சேர்த்தி ருக்கிறது.

மருத்துவரே மந்திரத்தை நம்பலாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திட-மழை/article9069086.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: அற்புதமான மனிதர்கள்!

 
sirpam_2998546f.jpg
 

ரலாற்றுக்கு முந்தையக் காலகட்டத்தைச் சேர்ந்த அழகான சிற்பம் ஒன்று பிரான்சில் இருக்கிறது! ஒரு பாறை மீது களிமண் மூலம் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு காட்டெருமைகள் செதுக்கப்பட்டுள்ள அழகைக் கண்டு வியக்காதவர்களே இல்லை! சுமார் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடிக்கப்பட்ட சிற்பம் என்பது மற்றோர் ஆச்சரியம். டுக் டி அடோபர்ட் குகை 1912-ம் ஆண்டு 3 சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. குகைக்குள் களி மண்ணால் வரைந்த ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. அதில் பாறையில் களிமண்ணால் செதுக்கப்பட்ட சிற்பத்துக்கு இணையான வேறொரு சிற்பம் இல்லை என்கிறார்கள். கைகளால், மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு விஷயமும் செதுக்கப்பட்டிருக்கிறது. ஆண் காட்டெருமைக்கும் பெண் காட்டெருமைக்கும் வித்தியாசம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே சில விரிசல்கள் தவிர, சிற்பம் பெரிதாக பாதிக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சிற்பத்துக்கு சேதம் ஏற்படுகிறது என்று தற்போது, பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அட! நம் மூதாதையர்கள் எவ்வளவு திறமை படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்!

தாய்லாந்தைச் சேர்ந்த 44 வயது வோரலோப் மிகவும் ஏழ்மையானவர். அவர் ஒரு மணி பர்சை கண்டெடுத்தார். அதில் ஏராளமான பணமும் கிரெடிட் கார்டுகளும் இருந்தன. அந்தப் பணத்தை வைத்து அவரால் சில மாதங்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். உடனே உரிமையாளர் நிட்டிக்கு தகவல் கொடுத்தனர். பர்சை பரிசோதித்தவர், ஒரு ரூபாய் கூட குறையாதது கண்டு ஆச்சரியமானார். வோரலோப்க்கு நன்றி சொன்னார். அவரைப் பற்றி விசாரித்தார். 4 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, அலுவலகத்தில் வந்து பார்க்கச் சொன்னார். வோரலோப்பும் நிட்டியை சந்தித்தார். 20 ஆயிரம் சம்பளத்தில் ஒரு வேலை கொடுத்தார். தங்குவதற்கு அழகான குடியிருப்பையும் வழங்கினார். “தொலைந்து போன ஒரு பொருளை உரிமையாளரிடம் ஒப்படைத்தேன். இது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால் நிட்டி என் வாழ்க்கையை மிக உயரத்துக்குக்கொண்டு சென்றுவிட்டார்! இப்போது வயிறு நிறைய சாப்பாடு கிடைப்பதுடன் நிம்மதியான தூக்கத்தையும் அனுபவிக்கிறேன்’’ என்று நெகிழ்கிறார் வோரலோப். “எல்லாம் இருக்கிறபோது நேர்மையாக இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாதபோது, தெருவில் கண்டெடுத்த பர்சை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மகத்தானது. எந்த இடத்தில் பர்சை தொலைத்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. அது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் வோரலோப் மூலம் அது கிடைத்துவிட்டது! இவரைப் போன்ற நேர்மையான மனிதர்கள் என் அலுவலகத்தில் வேலை செய்வது எனக்குத்தான் பெருமை. அவரது நேர்மைக்கு என்னால் முடிந்த சிறிய உதவியைச் செய்திருக்கிறேன்” என்கிறார் நிட்டி.

அற்புதமான மனிதர்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அற்புதமான-மனிதர்கள்/article9072184.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அழகிய பெண் ரோபோ 'அய்கோ'!

 

 
masala_2381735f.jpg
 

டோக்கியோவில் உள்ள மிட்சுகோஷி மிகப் பழைமையான பல்பொருள் அங்காடி. இங்கே ஒரு பெண், ஜப்பானிய பாரம்பரிய ஆடையான கிமோனோவை அணிந்து, வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார். ‘’நான் அய்கோ சிஹிரா. உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று ஜப்பானிய மொழியில் கேட்கிறார்.

உற்று நோக்கினாலோ, வேறு கேள்விகள் கேட்டாலோதான் அவர் ரோபோ என்பது தெரியவரும். அத்தனை அட்டகாசமாக இருக்கிறது இந்த அய்கோ சிஹிரா ரோபோ.

புகழ்பெற்ற தோஷிபா நிறுவனம் இந்த ரோபோவைத் தயாரித்திருக் கிறது. எதிர்காலத்தில் மனிதர்களைப் போன்று இன்னும் கச்சிதமான ரோபோக்களைச் செய்யும் முயற்சியில் இருப்பதாகச் சொல்கிறது தோஷிபா.

எளிமையான வேலைகளில் இருந்து கஷ்டமான வேலைகள் வரை ரோபோ செய்தால், மனிதர்களின் பிழைப்பு என்னாவது?

கொலம்பியாவைச் சேர்ந்த மட்டியோ ப்ளான்கோ ஓவியராகவும் பாடகராகவும் இருக்கிறார். நாய்களின் ரோமங்களைப் பயன்படுத்தி மூன்று பிரபலங்களை உருவாக்கியிருக்கிறார். நாய்கள் காப்பகத்தில் இருந்து முடிகளைப் பெற்றுக்கொண்டு வெள்ளை, கறுப்பு, சாம்பல் வண்ண முடிகளை வைத்து அழகாக உருவங்களைக் கொண்டு வந்திருக்கிறார் ப்ளான்கோ.

அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள மைக்கேல் ஜாக்சனின் உருவம் ஒர்லாண்டோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு 10 ஆயிரம் நிலக்கடலைகளை வைத்து, 400 மணி நேரங்களைச் செலவிட்டு ஓர் உருவத்தைப் படைத்திருக்கிறார் ப்ளான்கோ. இந்த நிலக்கடலை ஓவியம்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. வரைவதற்குள் நானே நிறையச் சாப்பிட்டு விட்டேன் என்கிறார்.

எந்தப் பொருளை வைத்து வரைந்தாலும் ஓவியம் என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கு!

தென்கிழக்கு சீனாவின் ஹேவன் நகரில் கழிவுநீர் குழாய்களைப் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டினார்கள். அப்பொழுது டைனோசர் முட்டைகள் வெளிவந்தன. 43 டைனோசர் புதைபடிம முட்டைகள் கூட்டமாக ஒரே இடத்தில் இருந்தன. 10-12 செ.மீ. அகலம் கொண்ட இந்த முட்டைகளில் 19 முட்டைகள் சேதாரமின்றி, முழுதாகக் கிடைத்திருக்கின்றன. ஹேவன் பகுதியில் டைனோசர் படிமங்கள் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன.

இங்கே டைனோசர்களுக்கு என்று பிரத்யேக அருங்காட்சியகம் ஒன்றும் இருக்கிறது. 1996-ம் ஆண்டு முதல் முறையாக இங்கே டைனோசர் படிம முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை 17 ஆயிரம் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக அளவு டைனோசர் படிம முட்டைகளைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகம் கொண்ட நாடு என்ற பெயர் சீனாவுக்குக் கிடைத்திருக்கிறது.

டிராகனுக்குப் பதில் டைனோசரைப் பயன்படுத்தலாம்!

பிரேஸிலைச் சேர்ந்தவர் 28 வயது ஜோய்லிசன் ஃபெர்னாண்டஸ் டா சில்வா. உலகிலேயே மூன்றாவது உயரமான மனிதர்! 7 அடி 8 அங்குலம் உயரத்துடன் பிரபலமாக வலம் வருகிறார். பிறந்ததில் இருந்தே இவர் உயரமாக வளர ஆரம்பித்துவிட்டார். பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ஏற்பட்டு, ஹார்மோன்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்துவிட்டது.

பள்ளியில் படிக்கும்போது உயரத்தை எல்லோரும் கிண்டல் செய்ததால், வீட்டை விட்டுப் பல ஆண்டுகள் வெளியேறவே இல்லை. இவரது ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார் 21 வயது ஈவ்ம் மெடிராஸ். இவர் 5 அடி உயரம் கொண்டவர். இருவரும் ஒருமுறை நேரில் சந்தித்தனர். ஒருவரை ஒருவர் பிடித்து விட்டது. ’’மெடிராஸ்தான் என்னைக் காதலித்த முதல் பெண். என் வாழ்க்கையில் நுழைந்திருக்கும் முதல் பெண்ணும் இவர்தான். எங்கள் இருவருக்கும் உயர வித்தியாசங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

அன்பும் அக்கறையும்தான் வாழ்க்கைக்குத் தேவை. வேறு ஒன்றும் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்துகொண்ட தருணம் இது’’ என்கிறார் சில்வா. ’’அவரது உயரம் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அவருக்குத்தான் என்னுடன் பேச வேண்டும் என்றால் குனிய வேண்டும்… மற்றபடி எந்த ஒரு அசெளகரியமும் எங்கள் வாழ்க்கையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை’’ என்கிறார் மெடிராஸ்.

அன்பு இருந்தால் போதும் என்பதை அழகாக உணர்த்திட்டீங்க!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அழகிய-பெண்-ரோபோ-அய்கோ/article7129315.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: வீட்டு வேலை செய்யும் 'மாயா பெடல்'!

 

 
masala_2380851f.jpg
 

ஏழ்மையான நாடுகளில் ஒன்று குவாதமாலா. சைக்கிளின் பாகங்களை வைத்து கால்களால் மிதிக்கக்கூடிய பல இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். பைக் மெஷின் என்பதை ‘bicimaquinas’ என்று அழைக்கிறார்கள். ’மாயா பெடல்’ என்ற நிறுவனம் 1997-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆரம்பித்தது.

இன்று எரிபொருள், மின்சாரமின்றி மனித சக்தியை மட்டும் பயன்படுத்தி ஏராளமான இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறது. சைக்கிளில் அமர்ந்து கொண்டு பெடலை மிதித்தால் கிணற்றில் இருந்து நீர் கொட்டுகிறது, தானியங்களை மாவாக்குகிறது, சோளத்திலிருந்து சோள விதைகளைத் தனியே பிரிக்கிறது, பழத்தைச் சாறாக மாற்றுகிறது, துணிகளைத் துவைக்கிறது… இன்னும் பல வேலைகளைச் செய்கிறது.

2500 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த மாயா பெடலை வைத்து 19 வகையான வேலைகளைச் செய்ய முடியும். இவற்றைப் பராமரிப்பதும் பழுதுகளை நீக்குவதும் எளிது. ஆரம்பத்தில் மின்சாரம் இல்லாத இந்த இயந்திரத்தை வாங்குவதற்கு மக்கள் தயங்கினர். இன்று மாயா பெடல் இல்லாத வீடுகளே இல்லை. அதிலும் பெண்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.

ஒரு மாயா பெடலை வைத்து, ஏதாவது தொழில் செய்து சம்பாதித்து விடலாம். ஒருமுறை வாங்கிவிட்டால் பிறகு செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. சுற்றுச்சூழலுக்கும் நல்லது. மனிதர்கள் நிலக்கடலையின் தோலை நீக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட நான்கில் ஒரு பங்கு நேரம்தான் இந்த இயந்திரம் கேட்கிறது. இதுவரை 4.500 மாயா பெடல்கள் தங்கள் வேலைகளைச் சிரத்தையுடன் செய்து வருகின்றன.

அடடா! அற்புதமான கண்டுபிடிப்பு!

கடந்த 1911-ம் ஆண்டு தென் துருவத்தில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கேப்டன் ராபர்ட் ஃபல்கன் ஸ்காட் தன் குழுவினருடன் கிளம்பினார். தென் துருவத்தை அவர் அடைந்தபோது, ரோல்ட் அமுட்சென் ஏற்கெனவே தென் துருவத்துக்கு வந்துவிட்டுச் சென்ற செய்தி கிடைத்தது. ஸ்காட் குழுவினர் ஏமாற்றம் அடைந்து, அங்கிருந்து கிளம்பினர். மோசமான வானிலை காரணமாக ஸ்காட் குழுவினர் மடிந்து போனார்கள்.

அவர்கள் எடுத்த அரிய புகைப்படங்கள் தற்போது ஏலத்துக்கு வந்திருக்கின்றன. ஸ்காட் ஆராய்ச்சி மையத்தில் கூட இல்லாத, இதுவரை யாரும் பார்க்காத அரிய புகைப்படங்கள் இவை. நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் நல்ல நிலையில் புகைப்படங்கள் இருக்கின்றன. ஸ்காட் குழுவினர் தென் துருவத்தில் இருந்து கிளம்பும்போது எடுக்கப்பட்டவை இந்தப் புகைப்படங்கள். 33 லட்சம் ரூபாய்க்கு ஏலத்துக்கு வந்திருக்கும் புகைப்படங்களை வாங்குவதற்கு ஏராளமானவர்கள் காத்திருக்கிறார்கள்.

ஸ்காட் குழுவினரின் அர்ப்பணிப்புக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!

ஜப்பானியர்களுக்குப் பூனைகள் என்றால் மிகவும் விருப்பம். பூனைகளை வளர்ப்பதுடன், பூனையின் பாதங்களைப் பிடித்து வாசனையை நுகரவும் செய்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்த நினைத்தது க்ரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. கை தோலை மென்மையாக்குவதற்குப் பயன்படுத்தும் க்ரீமில் பூனை பாதத்தின் வாசனையைக் கொண்டு வர நிறைய ஆராய்ச்சிகளைச் செய்தது.

இறுதியில் வெற்றி கிடைத்துவிட்டது. பூனை, பாதங்கள் அச்சிடப்பட்ட டப்பாவில் 50 கிராம் க்ரீம் விற்பனைக்கு வர இருக்கிறது. விலை 600 ரூபாய். ஆகஸ்ட் மாதம் முதல் கடைகளில் கிடைக்கும் என்கிறார்கள். பூனையின் பாதங்களைப் பிடித்து நுகர்வதைவிட, க்ரீம் வசதியாக இருக்கும் என்கிறார்கள் பூனைப் பிரியர்கள்.

விநோத பழக்கங்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வீட்டு-வேலை-செய்யும்-மாயா-பெடல்/article7125581.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாலைவனம், சோலைவனமாகிய அதிசயம்!

 

 
masala_3000866f.jpg
 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேரப் பயணத்தில் இருக்கிறது செரபியம் காடு. 340 ஹெக்டேரில் பரந்துவிரிந்துள்ள காடு, சுற்றுச்சூழலின் அதிசயம்! பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள இந்தக் காட்டில் மண்ணின் மரங்களும் அந்நிய மரங்களும் செழித்து வளர்ந்துள்ளன. ஜெர்மனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாலைவனமாதலைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுக்கணக்கில் மழை இல்லாத இடங்கள் காலப்போக்கில் பாலை நிலங்களாக மாறிவிடுகின்றன. ஆப்பிரிக்காவில் இப்படிப்பட்ட நிலங்கள் அதிகம்.

ஆராய்ச்சியாளர்கள் பாலை நிலங்களை மீண்டும் வளம் மிக்க நிலங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கி, வெற்றியும் பெற்றுவிட்டனர். நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, குறிப்பிட்ட அளவுக்குச் சுத்திகரிக்கிறார்கள். இந்த நீரை நீண்ட குழாய்கள் மூலம், பாலைவனத்துக்கு அனுப்புகிறார்கள். விதைகள், மரங்கள், செடிகள் என்று நடப்பட்ட இடங்களில் குழாய் மூலம் கழிவு நீர் வந்து சேர்கிறது. மழையை எதிர்பார்த்து இந்தத் தாவரங்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை. ‘கழிவு நீரை ஓரளவு சுத்தம் செய்து பயன்படுத்துவதால் செடிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த நீரை மனிதர்கள் பயன்படுத்த முடியாது. மனிதர்கள் பயன்படுத்தும் அளவுக்குச் சுத்திகரிக்க வேண்டும் என்றால் ஏராளமாகச் செலவாகும்.

இங்குள்ள மரங்களில் இருந்து பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துகளும் சூரிய ஒளியும் செரபியம் காடுகளை வேகமாக வளர வைக்கின்றன. 15 ஆண்டுகளில் மரம் வெட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது. மரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. செரபியம் காடு மனிதர்களால் ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பாலைவனம், சோலைவனமாகிய அதிசயம்!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ஏதென்ஸ் லைம்ஸ்டோன் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள், டிவிடிகள் இருக்கின்றன. இங்கிருந்து எடுக்கப்படும் புத்தகங்களையும் டிவிடிகளையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்காவிட்டால், 30 நாட்கள் சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம். ‘எங்கள் நூலகத்தில் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இதுவரை எடுத்துச் சென்றவர்கள் திருப்பிக் கொடுக்கவே இல்லை. இதைத் தடுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். சரிவர வில்லை. அதனால் இந்த அதீத தண்டனையைக் கொண்டு வரவேண் டியதாகிவிட்டது.

எடுத்தவுடன் தண்டனை விதித்துவிட மாட்டோம். முதலில் நினைவூட்டல் மெயில் அனுப்புவோம். அடுத்து ஒரு எச்சரிக்கை அனுப்புவோம். 10 நாட்களில் திருப்பித் தரவில்லை என்றால் 6,500 ரூபாய் அபராதம் அல்லது 30 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. பொதுச் சொத்தை எதுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. பொதுச் சொத்து அனைவருக்கும் பயன்பட வேண்டும், ஒருவரிடம் முடங்கிப் போகக்கூடாது. இந்தக் கட்டுப்பாடு கொண்டு வந்ததிலிருந்து ஒரு சிலர்தான் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். புத்த கங்கள் பத்திரமாக வந்து சேர்ந்துவிடுகின்றன’ என்கிறார் நூலகர்.

புத்தகம் திருப்பிக் கொடுக்காவிட்டால் சிறை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாலைவனம்-சோலைவனமாகிய-அதிசயம்/article9079977.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: டெஸ்க் சைக்கிள்!

Teacher installs desk cycles to help students focus in class

 

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள வேக் கவுன்டி பள்ளியின் மாணவர்கள் கணித வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். கணித ஆசிரியர் பெதானி லாம்பெத், மாணவர்களின் கவனத்தை ஈர்க்க புதிய முறையை புகுத்த விரும்பினார். மாணவர்களின் மேஜைக்கு அடியில் ஒரு சைக்கிளைப் பொருத்தினார்.

தங்கள் கவனம் சிதறும்போதும் கவனிக்க ஆர்வம் இல்லாதபோதும் சைக்கிளை, கால்களால் மிதிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது கவனம் ஒரே இடத்தில் நிலைகொண்டு விடுகிறது. “முன்பெல்லாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே அருகில் இருக்கும் மாணவர்களைத் தொட்டுக்கொண்டிருப்பார்கள். மேஜையைத் தட்டிக்கொண்டிருப்பார்கள். இப்போது கால்கள் சைக்கிளை மிதிப்பதால் மேஜையைத் தட்டுவதும் இல்லை. அருகில் இருப்பவர்களிடம் பேசுவதும் இல்லை. கால்கள் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தாலும் பாடம் நடத்துவதில் கவனம் குவிகிறது.

சைக்கிள் வருவதற்கு முன்பு இருந்த மாணவர்களின் கற்கும் திறனுக்கும் சைக்கிள் வந்த பிறகு மாணவர்களின் கற்கும் திறனுக்கும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சைக்கிள் மாணவர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்கிறது” என்கிறார் பெதானி லாம்பெத். ஒரு சைக்கிளின் விலை 10 ஆயிரம் ரூபாய். நன்கொடைகள் பெற்று, ஒரு வகுப்பில் பரிசோதனை முயற்சியாக சைக்கிள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. “முன்பெல்லாம் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஏதாவது நினைத்துக்கொண்டிருப்பேன், புத்தகத்தில் கிறுக்கிக்கொண்டிருப்பேன். இப்போது கால்கள் மட்டும் வேகமாக இயங்குகின்றன. கவனம் முழுவதும் பாடத்தில் இருக்கிறது. சைக்கிள் மிதிப்பது உடல் பயிற்சியாகவும் இருக்கிறது. மிகவும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. காலை 10 மணிக்குள் 133 கலோரிகள் எரிக்கப்பட்டு விடுவதால் உடலுக்கும் நல்லது” என்கிறார் மாணவர் ஒருவர்.

மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் டெஸ்க் சைக்கிள்!

நியூயார்க்கைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஜியோவா ரோட்ரிகுயஸ், iBag2 என்ற கைப்பையை அறிமுகம் செய்திருக்கிறார். ஷாப்பிங் செல்லும்போது இந்தப் பையை எடுத்துச் சென்றால், தேவைக்கு அதிகமாக வாங்கும்போது எச்சரிக்கை செய்யும். தேவை இருக்கிறதோ, இல்லையோ பொருட்களை வாங்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்களுக்கு இந்தப் பை மிகவும் பயன்படும்.

அதாவது அதிகமாக பில் வரும்போது பையில் இருந்து வெளிச்சம் வந்து, ‘இனிமேல் வாங்க வேண்டாம்… ஆபத்தான கட்டத்தில் இருக்கிறீர்கள்’ என்று எச்சரிக்கிறது. இந்தப் பை சிறிய ரோபோ தொழில் நுட்பம் மூலம் இயங்குகிறது. “பணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் செலவு செய்கிறவர்களுக்காகவே இதை உருவாக்கியிருக்கிறோம். பையை சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது பையிலிருந்து மொபைல் போனுக்கும் சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஒரு பையின் விலை சுமார் 3 லட்சம் ரூபாய். தேவையின்றி செலவு செய்வதை விட, இந்தப் பைக்கு செலவு செய்து, எதிர்காலத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் ஜியோவா ரோட்ரிகுயஸ்.

ஒரு செலவைக் கட்டுப்படுத்த இன்னொரு செலவு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டெஸ்க்-சைக்கிள்/article9084502.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ‘ஆடு யோகா’!

 

 
yoga_3003925f.jpg
 

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ‘goat yoga’ பிரபலமாகி வருகிறது. ஆடுகளை வைத்துச் செய்யக்கூடிய யோகா இல்லை இது. யோகா செய்யும் மனிதர்களுடன் நட்பாக விளையாடுகின்றன ஆடுகள். ‘நான் புகைப்படக்காரராக வேலை செய்து வந்தேன். கடந்த ஆண்டு உடல் நலம் குன்றியது. வேலையை விட்டுவிட்டு, இந்தப் பண்ணையை வாங்கினேன். இந்த இடத்தைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடுகிறேன். ஒரு பிறந்தநாள் விழாவில், யோகா மாஸ்டர் வந்தார். சுத்தமான காற்றும் பசுமையான தோட்டமுமாக இருக்கும் இந்தப் பண்ணையில் யோகா வகுப்பு நடத்தலாம் என்றார். நானும் சம்மதித்தேன். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு ஆடுகளைப் பயன்படுத்திக்கொண்டோம்.

யோகா செய்யும்போது ஆடுகள் உள்ளே நுழைந்து விளையாடுகின்றன. யோகா விரிப்பில் அமர்ந்துகொள்கின்றன. சீரியஸாக யோகா செய்யும்போது, ஆடுகளின் வருகை எல்லோருக்கும் உற்சாகம் தந்துவிடுகிறது. மன அழுத்தம் குறைகிறது. ‘ஆடு யோகா’ என்ற பெயர் வேகமாகப் பரவிவிட்டது. இந்த வெற்றியை நாங்களே எதிர்பார்க்கவில்லை. 100 மைல் தொலைவில் இருந்தெல்லாம் யோகா வகுப்புக்கு வருகிறார்கள்’ என்கிறார் லெய்னி மோர்ஸ்.

முக்கியமான பிசினஸாக மாறிவிட்டது யோகா!

பாகிஸ்தானில் வசிக்கும் நர்கிஸ் லத்தீப், சுற்றுச்சூழல் போராட்டக்காரர். கடந்த 50 ஆண்டுகளாக குப்பைகளை, மறுசுழற்சி முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கிறார். ‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடியிருப்பில் அடிக்கடி குப்பைகளை எரிப்பார்கள். அங்கு வசிப்பதே சிரமமாக இருந்தது. காற்றும் மாசடைந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் குப்பைகள் எரிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. தனி மனிதர் சொல்வதைப் பெரும்பாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் வழிக்கே சென்று, குப்பைகள் எரிப்பதைத் தடுக்க நினைத்தேன். நானே குப்பைகளைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டேன். தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். குப்பைகளை வைத்து, தங்குவதற்கு இடம் இன்றி வறுமையில் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வீடுகளை உருவாக்கிக் கொடுத்தேன்.

அதற்குப் பிறகு குப்பைகளை யாரும் எரிக்கவில்லை. சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இந்த வேலை கடுமையானது. குப்பைகளுக்குப் பணம் கொடுக்க நன்கொடை திரட்ட வேண்டும். வீடுகளுக்கான கம்பிகள், மூங்கில்கள் போன்றவற்றை வசதி படைத்தவர்களிடமிருந்து பெற வேண்டும். சிலர் வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குப்பையால் கட்டின வீட்டில் குடியிருக்க மாட்டோம் என்பார்கள். சுத்தம் செய்த குப்பைதான் என்று புரிய வைத்து, வீடுகளை வழங்குவோம். கராச்சியில் மட்டும் ஒரு நாளைக்கு 5,500 கிலோ குப்பைகள் கொட்டப்படுகின்றன. இன்று மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் வயதாகி வருகிறது. ஆனாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழலுக்காகவும் எளிய மக்களுக்காகவும் போராடுவதை மிகப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன்’என்கிறார் நர்கிஸ் லத்தீப்.

குப்பைகளை வீடாக மாற்றிய நர்கிஸ்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆடு-யோகா/article9089741.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனைவியுடன் சண்டை போட்டதால் திருடன் ஆனவர்!

 

 
masala_3005325h.jpg
 

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் வசித்து வரும் 70 வயது லாரன்ஸ் ஜான் ரைப்பில், வங்கி கொள்ளைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘எங்கள் வங்கிக்குள் லாரன்ஸ் நுழைந்தார். ஒரு தாளை எடுத்துக் காட்டினார். அதில் என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. 2 லட்சம் ரூபாயைக் கொடுத்துவிடுங்கள் என்று எழுதியிருந்தது. நாங்களும் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டோம். ஆனால் அவர் வங்கியை விட்டுச் செல்லவில்லை. ஒரு நாற்காலியில் பணத்துடன் அமர்ந்திருந்தார். நாங்கள் வாசலில் இருக்கும் காவலருக்குத் தகவல் கொடுத்தோம். காவலர் கொள்ளையன் எங்கே என்று தேடினார். நீங்கள் தேடும் நபர் இங்கே அமர்ந்திருக்கிறேன் என்றார் லாரன்ஸ். எங்கள் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தோம். அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வந்து, லாரன்ஸை கைது செய்தது. இப்படி ஒரு கொள்ளையனை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை’ என்கிறார் வங்கி அதிகாரி.

லாரன்ஸிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. ‘எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும். இன்றும் அப்படித்தான் விவாதம் அளவுக்கு அதிகமாகப் போனது. என்னால் தாங்கவே முடியவில்லை. வீட்டில் மனைவியிடம் இருப்பதற்குப் பதில், சிறையே தேவலாம் என்று முடிவு செய்தேன். ஏதாவது குற்றம் புரிந்தால்தானே சிறைக்குச் செல்ல முடியும். அதனால் வங்கி கொள்ளையைத் தேர்ந்தெடுத்தேன். என்னைச் சிறைக்குள் அடைத்துவிடுங்கள். இனி மனைவியிடமிருந்து ஒரு வார்த்தை கூட கேட்க என்னால் முடியாது’ என்றார் லாரன்ஸ்.

சிக்கலான வழக்குகளை எல்லாம் எளிதாகச் சமாளிக்கும் அமெரிக்க காவல்துறை, லாரன்ஸ் வழக்கை எப்படிக் கையாள்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு தூரம் ஒரு காரியம் செய்தும் தான் விரும்பியபடி சிறைத் தண்டனைக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற வருத்தத்தில் இருக்கிறார் லாரன்ஸ். காவல்துறை லாரன்ஸ் மனைவியிடம் விசாரிக்க முயன்றது. ஆனால் இதுவரை அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை.

இப்படியே போனால் சிறைக்கூடங்கள் தாங்குமா?

சீனாவின் குவாங் ஸோவ் பகுதி யைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் தோழியிடம் காத லைத் தெரிவிக்க வித்தியாசமான வழியைக் கையாண்டார். தோழி முமுக்குப் பிடித்த 999 பாமெலோ பழங்களை வாங்கினார். அதைப் பொதுமக்கள் வந்துபோகக்கூடிய இடத்தில், இதய வடிவில் அடுக்கி வைத்தார். கையில் ஒரு பூங்கொத்துடன் முமுக்காகக் காத்திருந்தார். அவருடன் ஏராளமான நண்பர்களும் பொதுமக்களும் குழுமியிருந்தனர்.

பழங்களையும் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்த நண்பரையும் பார்த்த முமு, அதிர்ச்சியில் உறைந்து போனார். ஒரு பாடலைப் பாடிக்கொண்டே, முமுவிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார் இளைஞர். ஆனால் முமு, ‘நான் உன்னை அப்படி நினைக்கவில்லை. மன்னித்துவிடு. நீ என் மிகச் சிறந்த நண்பன். நீ கொடுத்த இந்தப் பழங்களை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டார்.

masala1_3005324a.jpg

பெண்ணின் விருப்பம் அறிந்து கோரிக்கை வையுங்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனைவியுடன்-சண்டை-போட்டதால்-திருடன்-ஆனவர்/article9093915.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பனி மனிதன், இனிமேல் கிடைக்கப் போகிறானா?

 

 
ulagam_3006405h.jpg
 

பாகிஸ்தானில் உள்ள லாண்டி கோட்டல் ராணுவ முகாமில் ஓர் ஆலமரம் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கிறது. தடி மனான 4 சங்கிலிகள் மரத்தில் இருந்து நிலத்துக்குள் புதைக்கப் பட்டிருக்கின்றன. மரத்தில் இருக்கும் ஒரு பலகையில், ‘நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. 1898-ம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்க்விட் என்ற பிரிட்டிஷ் அதிகாரி, மது அருந்திவிட்டு, மரம் தன் மீது பாய்ந்து மிரட்டுவதாகச் சொன்னார். உடனே ஓர் அதிகாரியை அழைத்து, இந்த மரத்தைக் கைது செய்யுங்கள் என்று ஆணையிட்டார். அவர் சொன்னது போலவே அதிகாரியும் சங்கிலியால் மரத்தைப் பிணைத்தார். அந்தச் சங்கிலிகள் நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் வசித்த பழங்குடி மக்கள், பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தால் மரத்துக்கு ஏற்பட்டுள்ள கதிதான் உங்களுக்கும் என்று எச்சரிக்கும் விதமாகவும் இந்த மரம் கைது செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்த மரத்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கலையே!

ட்டி என்று அழைக்கப்படும் பனி மனிதன் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. சீனாவில் வசிக்கும் 62 வயது ஜாங் ஜியான்ஸிங், பனி மனிதனைத் தேடி கடந்த 22 ஆண்டுகளாக காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார். 1994-ம் ஆண்டு மலைப் பகுதியில் வசிக்க ஆரம்பித்தார் ஜாங். அப்பொழுதுதான் பனி மனிதன் ஆர்வம் வந்தது. 6 அடி உயரமும் சிவப்பு ரோமங்களும் கொண்ட பனி மனிதனைப் பற்றி நிறைய விஷயங்களைச் சேகரித்தார். 22 ஆண்டுகளாக மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிகிறார். ஆண்டுக்கு 10 மாதங்கள் பனி மனிதன் தேடுதல். 2 மாதங்கள் நாட்டுக்குள் வந்து, தேவையான பொருட்களை வாங்குவது, ஓய்வெடுப்பது, தான் சேகரித்தவற்றை ஆவணப்படுத்துவது என்று இருக்கிறார் ஜாங். பச்சை ராணுவ உடை அணிந்து, கேமராவுடன் தினமும் பல மைல் தூரம் பயணம் செய்கிறார். பெரிய பாறைகள், குகைகள், பெரிய மரப் பொந்துகள் என்று ஒவ்வோர் இடமாகத் தேடி அலைகிறார். இதுவரை பனி மனிதனின் 100 முடிகளைச் சேமித்து வைத்திருப்பதாகவும் 3 ஆயிரம் காலடித் தடங்களை ஒளிப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார். 19 முறை பனி மனிதனுக்கு அருகில் தான் இருந்ததாகவும் விரைவில் நேருக்கு நேர் சந்தித்துவிடும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் காத்திருக்கிறார். ’’நான் சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்திவிட்டேன். அப்படி ஓர் உயிரினமே கிடையாது. பனி மனிதனின் முடி, பாதச் சுவடுகள், எலும்புகள் என்று சொல்லப்படுபவை மனிதர்கள், குரங்குகள், கரடிகளின் முடி, எலும்புகள்தான்! பனி மனிதனைத் தேடுவது வீண் வேலை’ என்கிறார் பெய்ஜிங் அருங்காட்சியகத்தின் முன்னாள் அதிகாரி. ஆனால் அறிஞர்களின் வாதத்தை மறுக்கிறார் ஜாங். ஒருநாள் பனி மனிதனைக் கண்டுபிடித்து, விஞ்ஞானிகளின் கூற்றைத் தவறு என்று நிரூபிப்பேன் என்கிறார்.

பனி மனிதன், இனிமேல் கிடைக்கப் போகிறானா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பனி-மனிதன்-இனிமேல்-கிடைக்கப்-போகிறானா/article9096526.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கின்னஸ் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை...

 

 
ulaga_2378225f.jpg
 

சீனாவின் நான்ஜிங் பகுதியில் வசிக்கிறார் காவோ. தினமும் சூயிங்கம் மென்றால் உடல் எடை குறையும் என்ற கட்டுரையைப் படித்தார். சூயிங்கம் மென்றால் ஒரு மணி நேரத்துக்கு 60 கலோரிகள் குறையும் என்றும் ஸ்கிபிங் செய்தால் 10 கலோரிகள்தான் குறையும் என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே எளிதான வழி என்று சூயிங்கம் மெல்ல ஆரம்பித்தார் காவோ. ஒருகட்டத்தில் ஆர்வம் அதிகமாகி தூங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் எல்லாம் சூயிங்கத்தை மென்றுகொண்டே இருந்தார். 6 மாதங்களில் அவரது எடை வேகமாகக் குறைந்துவிட்டது. ஆனால் அவரது தாடை இயல்பை விட அகலமாகி விட்டது. கவலையோடு மருத்துவரைச் சந்தித்தார். சூயிங்கம் மென்றால் சாப்பிடும் ஆர்வம் குறைந்துவிடும். அதனால் எடை குறையும். ஆனால் தாடைக்கு அதிக வேலை கொடுப்பதால், அது தன் இயல்பை இழந்து, அகலமாகிவிட்டது. 15 நிமிடங்களுக்கு மேல் சூயிங்கத்தை மென்றால் அது மேலும் மேலும் கடினத் தன்மையாக மாறிவிடும். அதிக அழுத்தத்தைக் கொடுத்து மெல்ல வேண்டும். அதனால் முகத்தில் உள்ள தசைகள் தளர்வடைந்துவிட்டன என்றார் மருத்துவர். ஒடுக்கமாக அழகாக இருந்த தன் முகம் சதுர வடிவில் மாறியதில் அதிர்ச்சியில் இருக்கும் காவோ, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் முடிவில் இருக்கிறார்.

ம்… நினைக்கிறது ஒண்ணு… நடக்கிறது ஒண்ணு…

ஜப்பானின் தென் பகுதியில் இருக்கிறது டாய்ஜி திமிங்கில அருங்காட்சியகம். இங்கே அரிய வகை அல்பினோ டால்பின் வளர்க்கப்பட்டு வந்தது. சட்ட விரோதமாக அருங்காட்சியகத்தில் டால்பின் பிடிக்கப்பட்டிருக்கிறது என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புக் காட்டினர். ஆய்வு செய்வதற்காக ஒரு குழு சென்றது. வெள்ளை அல்பினோ டால்பின் கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கும்பொழுது இளஞ்சிவப்பாக மாறுவதைக் கண்டனர். டால்பினைத் தொடர்ந்து கண்காணித்து, மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.

அடடா! நிறம் மாறும் டால்பின்!

நியுயார்க்கில் வசிக்கும் பைரன் ஸெலென்கெரும் அவரது மகள் எமிலியும் ஓர் இரவில் மிகவும் பிரபலமாகிவிட்டனர். உலகிலேயே மிக அகலமான நாக்குகளைக் கொண்ட மனிதர்கள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். பைரனின் நாக்கு 8.6 செ.மீ. அகலத்துடன் காணப்படுகிறது. அதாவது ஐபோன்6 விட 2 செ.மீ. அகலமாக இவரது நாக்கு இருக்கிறது. எமிலியின் நாக்கு 7.3 செ.மீ. அகலமாக இருக்கிறது. உலகிலேயே அகலமான நாக்கு என்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் பைரன் இடம்பெற்றிருக்கிறார். பெண்களில் உலகிலேயே அகலமான நாக்கு உடையவர் என்ற கின்னஸ் சாதனை எமிலிக்குக் கிடைத்திருக்கிறது. ஒரே குடும்பத்தில் இரண்டு சாதனைகளை நிகழ்த்திய மகிழ்ச்சியில் இருக்கிறது பைரனின் குடும்பம்.

கின்னஸ் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை…

சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் சிறிய சீனப் பெருஞ்சுவர் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். 1.6 கி.மீ. தூரத்துக்கு பல்கலைக்கழகத்துக்குள் இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் விதத்தில் சுவர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எந்த நேரமும் இங்கே மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதத்தில் சுவர் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 4.2 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் மினி சீனப் பெருஞ்சுவர் எல்லோரையும் வசீகரிக்கிறது.

பெரிய சாதனையும் சிறிய சாதனையும் சீனர்களுக்கே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கின்னஸ்-சாதனைகளுக்குப்-பஞ்சமே-இல்லை/article7116339.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உடல் முழுதும் டாட்டூ!

 

masala_3008483f.jpg
 

அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயது ஷாரலட் குட்டன்பர்க் தலை முதல் பாதம் வரை டாட்டூ போட்டுக்கொண்டிருக்கிறார். 91.5 சதவிகிதம் உடலில் டாட்டூ போட்டதால், முதியவர்களுக்கான பெண்கள் பிரிவில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்! 2006-ம் ஆண்டு முதல் உடலில் டாட்டூ வரைவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரது கணவர் சார்லஸ் ஹெல்ம்க் சமீபத்தில் ஆண்களுக்கான பிரிவில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 1959-ம் ஆண்டில் ராணுவத்தில் பணியாற்றியபோது முதல் டாட்டூ போட்டுக்கொண்டார். இன்று இவரது உடலில் 93.75 சதவீதம் டாட்டூகள் நிறைந்துள்ளன. இன்னும் கூட உடலில் வண்ண மைகளால் வரைந்துகொள்ளும் திட்டத்தில் இருக்கிறார் ஷாரலட்.

கின்னஸ் தம்பதிக்கு வாழ்த்துகள்!

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இளைஞர் எல்லோ அல்விசோ. 16 வயதில் இருந்தே மாடலிங் துறையில் இருந்து வருகிறார். முகத்தில் மிகச் சிறிய குறைகளால், முக்கியமான விளம்பரங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போவதாகக் கருதினார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மூக்கிலும் தாடையிலும் முகச்சீர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார். ஆனால் பணம் அதிகம் செலவு செய்ய விரும்பவில்லை. குறைவான கட்டணத்தில் யார் சிறப்பாகச் செய்வார்கள் என்று தேடியபோது, காஷேகா மகாலன்ஸ் என்ற செவிலியரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இதுபோன்ற முகச் சீர் அறுவை சிகிச்சைகளைச் சர்வசாதாரணமாகச் செய்யக்கூடியவர். 700 ரூபாயில் மூக்கையும் தாடையையும் சரி செய்துவிடுவதாகச் சொன்னார். எல்லோ அல்விசோவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்தது. எதிர்பார்த்ததைப் போலவே முகம் மேலும் அழகானதில் அல்விசோவுக்குத் திருப்தி. முன்பை விட அதிக அளவில் மாடலிங் வாய்ப்புகள் குவிந்தன. தன்னுடைய முகச் சீர் அறுவை சிகிச்சைதான் இதற்கெல்லாம் காரணம் என்று பெருமிதம் அடைந்தார் அல்விசோ. ஆனால் அந்த நிம்மதியும் சந்தோஷமும் இரண்டே ஆண்டுகளில் தொலைந்துபோனது. அவரது மூக்கும் தாடையும் உருமாற ஆரம்பித்தன. மாடலிங் வாய்ப்புகள் சட்டென்று நின்றன. வேறுவழியின்றி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சென்றார் அல்விசோ. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது முன்பு இருந்ததை விட நிலைமையை மோசமாக்கிவிட்டது. கடந்த ஆண்டு அல்விசோவின் சோகக் கதை பிலிப்பைன்ஸ் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

“அறுவை சிகிச்சைக்கு முன்பே நான் நன்றாகத்தான் இருந்தேன். குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கிறேன் என்று காஷேகா மகாலன்ஸ் என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். நான் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்கிறார் அல்விசோ. இரவு விடுதிகளில் பேய் வேஷம் போட்டுச் சம்பாதிக்கிறார். கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் முகத்தைச் சரி செய்வதற்கான சிகிச்சைக்குச் சென்று விடுகிறார்.

படித்தவர்களே இப்படி ஏமாறலாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உடல்-முழுதும்-டாட்டூ/article9103223.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தானாகச் சுற்றும் மர்மத் தீவு!

 

 
masala_3009584f.jpg
 

அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா. இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். ’ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார். அமானுஷ்யம், பேய், வேற்றுகிரக மனிதர்கள் போன்ற விஷயங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்காக, இடம் தேடி வரும்போது இதைக் கண்டுபிடித்துள்ளார்.

‘இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன என்பதைப் பலவிதங்களில் உறுதி செய்தோம். வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன. திரைப்படத்துக்கு இடம் தேடி வந்த நான், இன்று ‘ஐ’ பகுதியை வைத்து, ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். விரைவில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பரானா டெல்டாவுக்கு வரப் போகிறேன். ‘ஐ’ பகுதிக்கான காரணத்தைக் கண்டறிவேன். இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏராளமான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்கு வல்லுநர்களின் உதவி தேவை. நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஏராளமாகச் செலவாகும்’ என்கிறார் செர்கியோ நெஸ்பில்லர். சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பாப்லோ சுவாரெஸ், துல்லிய வட்டமாக இருக்கும் ‘ஐ’ போன்ற ஒரு பகுதியை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்.

தானாகச் சுற்றும் மர்மத் தீவு!

அலெக்ஸ் பெய்லியும் க்ரூட் ஜுராக்கும் நாடக நடிகர்கள். இவர்கள் நடத்தும் நாடகங்கள் செல்லப் பிராணிகளுக்கானவை. அலெக்ஸும் க்ரூட்டும் செல்லப் பிராணிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். விலங்குகளுக்கான உளவியலாளர்களின் உதவியுடன் நாடகங்களை நடத்தி வருகின்றனர். இந்த நாடகங்களில் விலங்குகளின் குரல், உடல் மொழியைப் பின்பற்றுகின்றனர். செல்லப் பிராணிகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். இதுவரை ஜுரிச், பெர்லின், வியன்னா போன்ற இடங்களில் 80 முறை நாடகம் நடத்தியிருக்கிறார்கள்.

பிரிஸ்டோல், இங்கிலாந்து போன்ற இடங்களில் இனி நடத்த இருக்கிறார்கள். ‘செல்லப் பிராணிகளுக்காக நாடகம் போடுவதன் மூலம் விலங்குகளின் மனம், குணம், நகைச்சுவை போன்றவற்றை நன்றாக அறிந்துகொள்ள முடிகிறது. பூனை முதலில் இடத்தை விட்டு அகன்றுவிடும். சிறிது நேரத்தில் திரும்பி வந்து, நாடகம் பார்க்கும். நாய்களுக்குப் பிடித்துவிட்டால், நாக்கால் நக்கும், முகர்ந்து பார்க்கும். ஒரு சில நாய்கள் நாடகம் முடிந்தவுடன் எழுந்து நின்று குரைத்து, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன’ என்கிறார் அலெக்ஸ் பெய்லி.

விலங்குகளுக்கு நாடகம் போடும் மனிதர்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தானாகச்-சுற்றும்-மர்மத்-தீவு/article9106612.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: புற்றுநோயைத் துரத்திய பாப்பா!

 

 
 
masla_3010695f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் 4 வயது குழந்தை பிப்பா கோல். ஒரு வயதில் பிப்பாவுக்கு மூளையில் புற்றுநோய் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்தனர். ஓராண்டு முழுவதும் கீமோதெரபி அளிக்கப்பட்டது. குழந்தைக்கு இனி ஆபத்து இல்லை என்று நினைத்திருந்தபோது, 2015-ம் ஆண்டு ஜனவரியில் புதிய புற்றுநோய் கட்டிகள் மூளையில் உருவாகியிருப்பது தெரிய வந்தது. 48 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளையின் வேறு பகுதியில் கட்டிகள் வளர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகு, மேலும் சில கட்டிகள் மூளையிலும் தண்டுவடத்திலும் பரவியிருந்ததைக் கண்டுபிடித்தனர். நான்காவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் குழந்தை சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். “பிப்பாவும் நாங்களும் எவ்வளவோ போராடிவிட்டோம். சின்னக் குழந்தைக்கு இத்தனை அறுவை சிகிச்சைகள் செய்ததே பெரிய விஷயம். நானும் ஸ்காட்டும் கீமோதெரபி எடுத்துக்கொண்டு, இருக்கும் காலம் வரை பிப்பாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். விதவிதமாக படங்கள் எடுத்தோம். டிஸ்னி லேண்டுக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவத்தையும் தொடர்ந்தோம்.

கடந்த 8 மாதங்களாக பிப்பா அத்தனை சந்தோஷங்களையும் அனுபவித்து வந்தாள். கடந்த மாதம் மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டிருந்தது. மருத்துவரை நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் இல்லை. ஆனால், பிப்பாவின் புற்றுநோய் கட்டிகள் காணாமல் போய்விட்டன என்ற மருத்துவர்களின் உற்சாகக் குரல் கேட்டு ஆச்சரியமானேன். மருத்துவர்களாலேயே இதை நம்ப முடியவில்லை.

பிப்பா புற்றுநோயின் பிடியில் இருந்து முற்றிலும் மீண்டு விட்டாள். இனி கவலை இல்லை. 4 வயதுக்குள்ளேயே அத்தனை வலிகளையும் அனுபவித்துவிட்டாள். சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுப்பாள். அவளது பெற்றோராக இருப்பது பெருமையாக இருக்கிறது. புற்றுநோயைத் துரத்தி அடித்துவிடலாம் என்பதற்கு என் மகளே சாட்சி” என்கிறார் பிப்பாவின் அம்மா ஷெல்.

மூளைப் புற்றுநோயைத் துரத்திய பாப்பாவுக்கு ஒரு பூச்செண்டு!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சக் மெகார்தி, பகுதிநேர தொழிலாக நாய்களை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். இதற்காக ஒரு தொகையை கட்டணமாக பெற்றுக்கொள்வார். இப்பொழுது நாய்களுக்குப் பதிலாக மனிதர்களை அழைத்துச் செல்கிறார். “நாயை அழைத்துச் செல்லும்போது திடீரென்று சிறுநீர், மலம் கழிக்கும் பிரச்சினைகள் இருந்தன. இந்தப் பகுதியில் துணைக்கு ஆள் இல்லாத காரணத்தால் நடை பயிற்சி மேற்கொள்ளாதவர்கள் அதிகம்.

அதனால் மனிதர்களை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை ஆரம்பித்தேன். ஒரு மைல் தூரம் நடப்பதற்கு 420 ரூபாய் கட்டணம். நடக்கும்போது அவர்களுடன் உரையாடுவேன். அவர்களின் கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேட்பேன். ஆறுதல் அளிப்பேன். தீர்வு சொல்வேன். ஆரம்பித்த ஒரு மாதத்துக்குள் இந்தத் தொழில் பிரமாதமாக மாறியது. இன்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 5 பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறேன்” என்கிறார் மெகார்தி.

நடைப் பயிற்சி கூட ஒரு தொழிலாகும் காலம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புற்றுநோயைத்-துரத்திய-பாப்பா/article9110232.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொடூர டால்பின் வேட்டை!

 

 
masala_3012288f.jpg
 

ஜப்பானின் மிகப் பிரபலமான டால்பின் வேட்டை டைஜியில் நடத்தப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைப் பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தினமும் வேட்டையாடப்படுகின்றன. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை 6 மாதங்கள் டால்பின் வேட்டை தொடர்கிறது. ஒவ்வொரு பருவத்துக்கும் 2 ஆயிரம் டால்பின்கள் கொல்லப்படுகின்றன. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே மோட்டார் படகுகளில் மலைக் குகைக்கு வந்து, வலை விரித்து காத்திருக்கிறார்கள். இடப்பெயற்சி செய்யும் டால்பின்கள் கூட்டமாக அந்தப் பகுதியைக் கடக்க முயலும்போது, வலையால் தடுக்கப்பட்டு, மீனவர்களின் ஈட்டிகளுக்குப் பலியாகின்றன. கூர்மையான உலோகக் கம்பிகளை வைத்து, டால்பின் உடலில் பலமுறை குத்துகிறார்கள்.

அந்தப் பகுதி நீரே சிவப்பாக மாறிவிடுகிறது. இப்படிச் செய்வதால் டால்பின்களின் உளவியல் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். குட்டிகளையும் இளம் டால்பின்களையும் கொல்லாமல் விட்டுவிட்டாலும் அவை மன அழுத்தத்தில் விரைவில் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. ஏனென்றால் டால்பின்கள் கூட்டமாக வசிக்கக்கூடியவை. மிக அன்பாகப் பழகக்கூடியவை. கண் முன்னே தங்கள் உறவினர்கள் கொல்லப்படும் காட்சியைப் பார்க்கும் டால்பின்கள், மனிதர்களைப் போலவே துன்பமடைகின்றன. டைஜி டால்பின் வேட்டையை லூயி பிசியோஸ் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டார்.

அதற்குப் பிறகு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. விலங்குகள் நல ஆர்வலர்களும் வேட்டையைத் தடுக்கப் போராடினர். ஆனாலும் தடுக்க இயலவில்லை. பல கோடி பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டதும் ஜப்பானிய அரசாங்கம் ஆதரவு அளிப்பதும்தான் இதற்குக் காரணம். உடலுக்குத் தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட டால்பின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என்று தொடர்ந்து செய்துவந்த விழிப்புணர்வு மூலம், ஜப்பானிய மக்களிடம் டால்பின் இறைச்சிக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டைஜி டால்பின் இறைச்சிகளை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு கொடூர வேட்டை…

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் முடி வெட்டுவதற்காக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். முடிகளை நீளமாக வளர்ப்பது, விதவிதமாகச் சுருட்டிக்கொள்வது, வண்ணங்கள் தீட்டிக்கொள்வது என்று பள்ளி மாணவர்கள் முடி அலங்காரத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்கள். பள்ளியின் கட்டுப்பாடுகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்காகவே முடிதிருத்துபவர்களை நியமித்திருக்கிறார்கள். பள்ளி நுழை வாயிலிலேயே முடியை வெட்டி, அனுப்பி விடுகிறார்கள். ‘அலங்காரத்தில் அக்கறை எடுக்கக்கூடிய பருவம். பெரும்பாலான நேரத்தை அதற்கே செலவிடுகிறார்கள். அதைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. படிப்பு முடித்த பிறகு இவர்கள் தங்கள் விருப்பம் போலதான் இருக்கப் போகிறார்கள்’ என்கிறது பள்ளி நிர்வாகம்.

ம்... பள்ளி செய்யும் வேலையா இது?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கொடூர-டால்பின்-வேட்டை/article9114439.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: லிப்ஸ்டிக் ஓவியம்!

 

 
masala_3013695f.jpg
 

டொரோண்டோவைச் சேர்ந்த ஓவியர் அலெக்ஸ் ஃப்ராசெர், லிப்ஸ்டிக் மூலமே ஓவியங்களைத் தீட்டி வருகிறார்! கேன்வாஸ் துணி மீது லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளைப் பதித்து, முழு ஓவியத்தையும் உருவாக்குகிறார். ஒவ்வொரு முறையும் அலுக்காமல் லிப்ஸ்டிக் போட்டு, முத்திரை பதிக்கிறார். ‘எல்லோரும்தான் ஓவியம் தீட்டுகிறார்கள். வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகவே லிப்ஸ்டிக் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதிக பொறுமை தேவைப்படும். சில மணி நேரங்களில் இருந்து ஒரு வாரம் வரை கூட ஆகலாம். உதடுகள் வலி எடுக்கும். ஆனாலும் எல்லோரும் பாராட்டும்போது வலி மறைந்து போகும். ஆரம்பத்தில் என் ஓவியங்கள் அதிகம் பேசப்படவில்லை. இன்று ஓவியங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்’ என்கிறார் அலெக்ஸ் ஃப்ராசெர்.

அது சரி, இந்த ஓவியம் எவ்வளவு காலம் நிலைக்கும்?

ஆஸ்திரியாவைச் சேர்ந்த 18 வயது அன்னா மெயர், தன் பெற்றோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். கடந்த 7 வருடங்களாக அன்னாவின் அனுமதியின்றி, அவரது பெற்றோர் ஃபேஸ்புக்கில் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். படங்களை நீக்கும்படி பல முறை மன்றாடிப் பார்த்த அன்னா, இறுதியில் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். ‘என்னுடைய 11 வயதிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஃபேஸ்புக் பயன்படுத்தி வருகிறார்கள். என்ன போடுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நான் வளர்ந்த பிறகு, எனக்கும் ஒரு கணக்கு ஆரம்பித்தபோதுதான், அதிர்ந்து போனேன். இதுவரை என்னுடைய 500 படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.

நான் சின்னக் குழந்தையாகக் கழிவறையில் அமர்ந்திருக்கும் படம், தவழும் வயதில் ஆடையின்றி படுத்திருக்கும் படங்களை எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் பார்த்த என் நண்பர்கள் என்னை மிக மோசமாகக் கிண்டல் செய்தனர். அம்மா, அப்பாவிடம் என் நிலைமையைச் சொல்லி, படங்களை நீக்கும்படி கேட்டேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். வீட்டை விட்டு வெளியேறி, என் தோழியுடன் வசித்து வருகிறேன். பெற்றோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன்’ என்கிறார் அன்னா. ‘எங்கள் குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் நாங்கள் மிக முக்கியமாகக் கருதுகிறோம். அதைப் படங்களாக எடுத்து வைத்திருந்தோம். ஃபேஸ்புக் எங்கள் மகிழ்ச்சியை உலகத்துக்குக் காட்ட வழிகாட்டியது. வளர்ந்துவிட்ட அன்னாவின் படங்களை அவள் அனுமதியின்றி பயன்படுத்தினால்தான் தவறு. குழந்தையாக இருந்த படங்களைப் பயன்படுத்த எங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது’ என்கிறார் அன்னாவின் அப்பா.

வழக்கு நவம்பர் மாதம் நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. ஆஸ்திரியாவில் முதல் முறையாக இப்படி ஒரு வழக்கு வந்திருக்கிறது. ஒருவேளை பெற்றோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நஷ்ட ஈடாக அன்னாவுக்கு 2 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். ஜெர்மனியைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள், குழந்தைகளின் அனுமதியின்றி படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடாதீர்கள். இப்படி வெளியிடுவதால் குழந்தைகள் சைபர் க்ரைம்களுக்கும் ஆளாகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் ப்ளீஸ்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-லிப்ஸ்டிக்-ஓவியம்/article9118268.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மாசலா: அட! சின்னப் பையனுக்குள் எவ்வளவு பெரிய மனம்!

 

 
ldaies_3014644f.jpg
 

ப்பான் பாம் பாம் என்ற சியர்லீடிங் குழுவில் 28 பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 55 80 வயது முதியவர்கள். தோற்றத்திலோ, உற்சாகத்திலோ முதுமையை வெளிக்காட்டாமல், கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறார்கள். 84 வயதான ஃபுமி டானகோதான் ஜப்பான் பாம் பாம் குழுவை உருவாக்கியவர். ‘என் இளமைப் பருவத்தில் சியர்லீடிங் குறித்து எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனால் காலம் முதுமையில் அதைச் செய்ய வைத்துவிட்டது. 53 வயதில் டெக்சாஸ் சென்று படிக்க விரும்பினேன். என் அம்மா உட்பட பலரும் என்னை எதிர்த்தனர். ஆனால் குழந்தைகள் என்னை ஆதரித்தனர். 60 வயதில் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த நேரம் வெறுமையை உணர்ந்தேன். அதிலிருந்து மீள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தேன். சியர்லீடிங்கைத் தேர்ந்தெடுத்தேன். என்னைப் போல 5 பெண்களைச் சேர்த்துக்கொண்டு, சியர்லீடிங்கை ஆரம்பித்து விட்டேன். இருபது ஆண்டுகளைக் கடந்தும் எங்கள் குழு உற்சாகமாக இயங்கி வருகிறது. தற்போது 28 பெண்கள் இருக்கிறார்கள். மிகக் கடினமான விஷயங்களை நாங்கள் செய்வதில்லை. ஆனால் புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. வாரம் ஒருமுறை குழுவினர் சந்தித்து, எங்களை எப்படி முன்னேற்றிக்கொள்வது, வித்தியாசப்படுத்துவது, சுவாரசியம் கூட்டுவது என்று திட்டமிடுகிறோம். அதை உடனே செயல்படுத்தியும் வருகிறோம். 55 வயதானால் மட்டுமே எங்கள் குழுவில் இடம் கிடைக்கும். ஓய்வு பெறுவது அவரவர் விருப்பம்’ என்கிறார் ஃபுமி டானகோ.

தன்னம்பிக்கை பெண்கள்!

மெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசித்து வருகிறான் 10 வயது தாமஸ் மூர். 2 ஆண்டுகளுக்கு முன்பு தன் அம்மாவுடன் சேர்ந்து ஒரு வீடியோ பார்த்தான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தை, கீமோதெரபியால் முடிகளை இழந்திருந்தாள். அம்மாவிடம் விளக்கம் கேட்டான். உடனே முடி வளர்த்து, புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்தான். இரண்டு ஆண்டுகளாக முடியை வளர்த்து, நன்கொடையாக வழங்கிவிட்டான். ‘பெண்கள் நீளமாக முடி வளர்க்க விரும்புவார்கள். அதனால்தான் இவ்வளவு நீளமாக வளர்த்தேன். என்னுடைய முடியை வைத்து 3 செயற்கை முடி அலங்காரத்தை உருவாக்க முடியும். என் மூலம் சிலர் சந்தோஷமடைகிறார்கள் என்றால் அதுவே எனக்குப் போதும். ஆனால் நான் யாருக்காக இந்த முடியை வளர்க்க நினைத்தேனோ அந்தப் பெண் இன்று உயிருடன் இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது’ என்கிறான் தாமஸ் மூர். மகனின் செயலை படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார் ஏஞ்சலியா புலோஸ். இதுவரை 55 ஆயிரம் முறை உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

அட! சின்னப் பையனுக்குள் எவ்வளவு பெரிய மனம்!

http://tamil.thehindu.com/world/உலக-மாசலா-அட-சின்னப்-பையனுக்குள்-எவ்வளவு-பெரிய-மனம்/article9120830.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிவப்பி!

 

 
masala_2377052f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் 17 வயது எமிலி ரேயேவுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இயற்கையாகவே முடி சிவப்பாக மாறிவிட்டது. இசைக் கலைஞராகவும் இருக்கும் எமிலிக்கு இந்தச் சிவப்பு முடி சாதகமாகவே அமைந்துவிட்டது. ஆனால் ட்ரினிடி பள்ளியின் தலைமையாசிரியர் முடியின் நிறத்தை மாற்றினால்தான் வகுப்புக்கு வரலாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

பச்சை, நீலம் போன்ற நிறங்களுடைய முடிகளுக்குப் பள்ளியின் சட்டத்தில் இடமில்லை. இயற்கையாகவே சிவப்பாக மாறிவிட்ட முடிக்கு நான் என்ன செய்வது என்று கேட்கிறார் எமிலி. தலைமையாசிரியர் எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

வகுப்புக்குள் எமிலியால் நுழைய முடியவில்லை. ஆனாலும் முடியைக் கறுப்பாக மாற்றும் திட்டம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது பெற்றோரும் எமிலியின் முடிவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதேபோல தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருக்கிறது.

ஆரம்பத்தில் கோபமாக இருந்த எமிலி, தற்போது பாடங்களைக் கவனிக்க முடியவில்லை என்று கண்ணீர் வடித்து வருகிறார்.

மனிதனுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்துக்காக மனிதன் இல்லை…

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசித்து வருகிறார் யுவான். சமீபத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது செல்போனிலிருந்து வந்த அழைப்புகளுக்கு யுவான் நிலைமை தெரிவிக்கப்பட்டது. வரிசையாகப் பெண்கள் யுவானைத் தேடி மருத்துவமனை வந்தனர். 17 பெண்களும் தான் யுவானின் மனைவி என்று கூறினர்.

40 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள பெண்கள் இதில் அடக்கம். எல்லோரும் ஒன்று கூடியதில் உண்மை வெளிவந்துவிட்டது. ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையில் ஒருவருக்கு ஒருவர் முதலில் சண்டையிட்டுக்கொண்டனர். பிறகு யுவான் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். 17 பெண்களும் நல்ல பொருளாதார நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஏராளமான பணத்தைக் கறந்திருக்கிறார் யுவான். ஒருகட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டால், பெரும் பணத்தை வாங்கிக்கொண்டு விவாகரத்து கொடுத்து விடுவார். ஜாமினில் வெளிவந்திருக்கும் யுவானிடமிருந்து பணத்தை வாங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காவல்துறை.

எத்தனுக்கு எத்தன்…

கலிஃபோர்னியாவின் வடக்கு கடற்கரையில் 50 அடி நீளம் கொண்ட ஸ்பெர்ம் திமிங்கிலம் ஒதுங்கியது. திமிங்கிலத்தின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராட்சச திமிங்கிலம் எவ்வாறு இறந்திருக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளில் 17 ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் இறந்து போய், கரை ஒதுங்கியிருக்கின்றன. பாறை போல ஒதுங்கியிருக்கும் திமிங்கிலத்தை நேரில் பார்க்கும் ஆவலில் ஏராளமானவர்கள் வருகின்றனர்.

ஐயோ பாவம்…

பிரிட்டனில் வசிக்கும் 40 வயது புலென்ட் சன்மெஸ்க்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் அவரது இதயம் நின்று போனது. மருத்துவர்கள் பல்வேறு விதங்களில் இதயத்தைத் துடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் பனிக்கட்டி குளியலுக்கு ஏற்பாடு செய்தனர். நின்று போன இதயம் துடிக்க ஆரம்பித்தது.

24 மணி நேரம் இதயத் துடிப்பைக் கண்காணித்து, அவரது உடல் இயல்பான வெப்பநிலைக்குத் திரும்பும் வரை மருத்துவர்கள் அருகிலேயே இருந்தனர். புலென்ட் பிழைத்துவிட்டார். ஆனால் அவரது ஞாபக சக்தி மறைந்துவிட்டது. மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அடையாளம் தெரியவில்லை. மாரடைப்பின்போது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், நினைவு மெதுவாகத் திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். 8 மாதங்களுக்குப் பிறகு தன் மனைவியையும் குழந்தைகளையும் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார் புலென்ட்.

செத்துப் பிழைத்தவர்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிவப்பி/article7112505.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூங்கில் ரயில்!

 

 
masala_3016598f.jpg
 

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடி யாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது! பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும் சென்று வருகின்றன. பிரெஞ்சு காலனிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை, ஒருகட்டத்தில் பயன்படுத்தா மல் கைவிடப்பட்டது. அந்தப் பாதையில்தான் மூங்கில் ரயில்கள் சென்று வருகின்றன. மூங்கில்களை வரிசையாக வைத்து மிதவை போலக் கட்டுகிறார்கள். இரு பக்கங்களிலும் இரும்புச் சக்கரங்களை இணைக்கின்றனர். முன் பகுதியில் சிறிய மோட்டார் வைத்துவிட்டால் ரயில் தயார். மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் பயணிக்கிறது. எதிரில் இன்னொரு மூங்கில் ரயில் வந்தால், எந்த ரயிலில் குறைவான ஆட்களும் பொருட்களும் இருக்கின்றனவோ, அந்த ரயிலைத் தூக்கி, நிலத்தில் இறக்கி வைத்துவிடுகிறார்கள்.

எதிரில் வந்த ரயில் கடந்த பிறகு, மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, இந்த ரயில் பயணத்தைத் தொடர்கிறார்கள். ரயில் கட்டணம் குறைவாக இருக்கும். எங்கே வேண்டுமானாலும் நிறுத்தி இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம். இரு சக்கர வாகனம், விறகுகள், நெல் மூட்டைகள், கால்நடைகள் என்று ஏகப்பட்ட சரக்குகளையும் இந்த மூங்கில் ரயில்கள் சுமந்து செல்கின்றன. மூங்கில் பெட்டிகள் அடிக்கடி உடைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் உடனே சரி செய்துவிடுவார்கள். கம்போடியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, மூங்கில் ரயில் மிகவும் பிரபலமடைந்தது. புதிய ரயில் பாதைகள் போடப்பட்டதைத் தொடர்ந்து, பெரிய அளவில் இயங்கி வந்த மூங்கில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இன்று பட்டாம்பாங் பகுதிகளைச் சுற்றி மட்டுமே இயங்கி வருகின்றன. மெதுவாகச் செல்வதாலும் வசதியாக இல்லாததாலும் எல்லோரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் மூங்கில் ரயிலில் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால், வித்தியாசமான ரயில் அனுபவத்தைப் பெற்றுவிடலாம்.

அதிவேக புல்லட் ரயில் காலத்தில் மூங்கில் ரயில்!

மனிதர்களுக்குப் போலவே விலங்குகளுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ‘‘விலங்குகளின் நோய்கள், வலிகள், ஜீரணப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது அக்குபஞ்சர். மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உதவி வரும் அக்குபஞ்சரை, விலங்குகளுக்குப் பயன்படுத்துவதில் மட்டும் மக்களுக்கு ஏனோ தயக்கம் அதிகம் இருக்கிறது. மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் அக்குபஞ்சர் பலன் அளிக்கிறது. வலியுடன் வரும் விலங்குகளுக்கு 2 ஊசிகள் குத்த ஆரம்பித்த உடனேயே, வித்தியாசத்தை உணர ஆரம்பித்துவிடுகின்றன.

14 வயது பூனை ஒன்று மிக மோசமான நிலையில் வந்தது. ஒருமுறை சிகிச்சை அளித்ததிலேயே ஓரளவு குணம் பெற்றுவிட்டது. அதேபோல நாய் களுக்கும் முயல்களுக்கும் அக்குபஞ்சர் மருத்துவம் கைகொடுக் கிறது. ஆனால் பயிற்சிப் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்’’ என்கிறார் கால்நடை அக்குபஞ்சர் மருத்துவர் நடின் ஹெட்லே.

அட! செல்லப் பிராணிகளுக்கும் அக்குபஞ்சர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மூங்கில்-ரயில்/article9127317.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்!

 

 
masala_3017603f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் கிரஹாம் ஸ்மித், பொறியாளர். சமீபத்தில் தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் ஸ்மித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. சமீபத்தில் தையல் போட்ட இடத்தில் ஏதோ புடைத்துக்கொண்டு வெளியே வந்தது. உடனே மருத்துவரைச் சந்தித்தார் ஸ்மித். ஆனால் அறுவை சிகிச்சைக்கு இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. காத்திருப்போர் பட்டியலில் ஸ்மித் பெயரையும் சேர்த்துவிட்டனர்.

“எனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை வயிற்றுக்குள் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். இந்தச் சூழலில் என்னால் எப்படி காத்திருக்க முடியும்? பல் மருத்துவரான என் நண்பனிடம் கத்திகளையும் தையல் போடுவதற்கான பொருட்களையும் வாங்கினேன். நானே புடைப்பு இருக்கும் இடத்தில் கத்தியால் கிழித்தேன். 8 மி.மீ. அளவுள்ள நைலான் நூல் உள்ளே இருந்தது. வெட்டி எடுத்தேன். 12 தையல்கள் போட்டேன். கொஞ்சம் ரத்தம் வெளியேறியது. ஆனாலும் நான் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை இருந்தது. நம்பினால் நம்புங்கள், நான் செய்த அறுவை சிகிச்சை வெற்றி!

உண்மையிலேயே 15 ஆண்டுகளுக்குப் பிறகு இபோதுதான் நிம்மதியாக இருக்கிறேன். நான் பொறியியல் நிபுணர். அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. நான் இப்படி ஒரு காரியம் செய்திருக்கவே கூடாது. யாரும் இப்படிச் செய்யாதீர்கள்” என்கிறார் ஸ்மித். ராயல் கல்லூரியின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறும்போது, “மருத்துவம் தெரியாத ஒருவர், தானாகவே வீட்டில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதோ, அடுத்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுவதோ கண்டனத்துக்கு உரியது.

மருத்துவ அறிவு இன்றி, இப்படிச் செய்யும்போது, விபரீத விளைவு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பிற உறுப்புகள் பாதிக்கப்படலாம் அல்லது நோய்த்தொற்று ஏற்படலாம்” என்றனர். ஸ்மித்துக்கு ஏற்கெனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை, தானாக முன்வந்து அவரைப் பரிசோதனை செய்திருக்கிறது.

ப்ளீஸ், தானாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதீர்கள்...

நியூசிலாந்தில் இறந்துபோன விலங்குகளைப் பாடம் செய்து, கைப்பைகளாக விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். பூனையின் தோல், தலையை வைத்து உருவாக்கப்பட்ட கைப்பையின் ஆரம்ப மதிப்பு 10 ஆயிரம் ரூபாய். ஃபேஷன் உலகில், விலங்குகளை வைத்துப் பாடம் செய்யப்பட்ட பைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்தப் பைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “நாங்கள் விலங்குகளைக் கொன்று, பைகளை உருவாக்குவதில்லை. தாமாக இறந்து போகும் விலங்குகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். எங்களை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்” என்கிறார் பை தயாரிப்பாளர் ஹாப். “விலங்குகளை கைப்பைகளாகப் பயன்படுத்தும்போது அது இயல்பாக இறந்ததா, கொல்லப்பட்டதா என்றெல்லாம் தோன்றாது. நமக்காக விலங்குகளைக் கொல்வது தவறு இல்லை என்ற எண்ணம் வந்துவிடும்” என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

ஃபேஷன் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தனக்குத்தானே-அறுவை-சிகிச்சை-செய்துகொண்டவர்/article9130931.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குகைக்குள் வாழ்க்கை!

 

 
masala_3018842f.jpg
 

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக் குகைக்குள் 54 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) தம்பதியர். திருமணமான மூன்றாவது ஆண்டில் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தனர். “வறுமை. எங்களுக்கு வீடு இல்லை. வாடகை கொடுக்கவும் வழியில்லாமல் இந்தக் குகைக்கு வந்து சேர்ந்தோம். அப்போது ஏற்கெனவே மூன்று குடும்பத்தினர் இங்கே வசித்து வந்தனர். நாங்களும் ஒரு பகுதியில் எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். 4 குழந்தைகள் பிறந்தனர். சில ஆண்டுகளில் மற்ற குடும்பத்தினர் நகருக்குள் குடிபெயர்ந்துவிட்டனர்.

மொத்த குகையிலும் நாங்கள் மட்டுமே வசித்தோம். நானும் மனைவியும் கடுமையாக உழைப்போம். குகைக்கு மேலே எங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தானியங்களை விளைவித்துக் கொண்டோம். குழந்தைகள் வளர்ந்தனர். நகருக்குள் சென்றுவிடுவோம் என்றனர். பல ஆண்டுகளாக வசித்து வந்த குகையை விட்டு, நகருக்குள் செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. குழந்தைகள் திருமணம் செய்துகொண்டு நகருக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் யாராவது அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துச் செல்வார்கள். இன்று தூய்மையான தண்ணீர், மின்வசதி போன்றவையும் எங்கள் குகை வீட்டில் இருக்கின்றன. மகன்களோ, பேரன், பேத்திகளோ இல்லாத நேரங்களில்தான் நாங்கள் தனிமையை உணர்கிறோம். மனிதர்களுக்காக ஏங்குகிறோம். மற்றபடி எந்தக் குறையும் இல்லை.

மூன்று படுக்கை அறைகள், சமையலறை, நடுக்கூடம் என்று வசதியாக இருக்கிறது குகை. கோடைகாலத்தில் குளிர்ச்சியாக இருக்கும். குளிர்காலத்தில் இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். நாள் முழுவதும் வேலை, ஆரோக்கியமான உணவு என்று வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. பெரும்பாலான வாழ்க்கை இந்தக் குகையிலேயே கழிந்துவிட்டது. இனி எங்கும் செல்ல வேண்டியதில்லை” என்கிறார் லியாங் ஜிஃபு. இவர்களைப் பற்றிய செய்தி சீன ஊடகங்களில் வலம் வருகிறது.

குகைக்குள் வாழ்க்கை!

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இருமுகங்களுடன் கூடிய கன்றுக்குட்டி பிறந்திருக்கிறது. 2 வாய்கள், 2 மூக்குகள், 4 கண்களுடன் இருக்கிறது. ஆனால் இவற்றில் 2 கண்கள் மட்டுமே வேலை செய்கின்றன. நடுவில் சேர்ந்திருக்கும் இரண்டு கண்களில் பார்வை இல்லை. “இரண்டு தலைகளைப் பார்த்ததும் இரட்டைக் கன்றுகளோ என்று நினைத்தோம். ஆனால் இரட்டைத் தலையாகப் பிறந்துவிட்டது. 2 வாய்களிலும் மாற்றி, மாற்றி பாலூட்டுகிறோம்.

குழந்தைகள் அன்பாக கவனித்துக் கொள்கிறார்கள். லக்கி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மரபணு குறைபாட்டால் பிறந்திருக்கும் இந்தக் கன்றுக்குட்டி, வெகுநாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. லக்கி மீது அளவற்ற அன்பு செலுத்தி வரும் குழந்தைகளுக்கு இதை எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. கன்றுக்குட்டியைப் பார்ப்பதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர்” என்கிறார் உரிமையாளர் ஸ்டான் மெக்கபின்.

இருமுகன்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குகைக்குள்-வாழ்க்கை/article9135065.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நம்பிக்கை மனிதர்கள்!

 

 
masala_3020508f.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்த 26 வயது லாரா ஒயிட்ஃபீல்ட் 4 அடி உயரமும் 37 வயது நாதன் பிலிப்ஸ் 3 அடி உயரமும் கொண்டவர்கள். இருவரும் ‘ஸ்நோ ஒயிட்’ திரைப்படத்தில் குள்ளர்களாக நடித்தபோது நண்பர்களாக பழகினர். நட்பு, காதலானது. லாரா பெற்றோரிடம் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டார் பிலிப்ஸ். அனுமதி கிடைத்த ஒரு மாதத்தில் லாரா கர்ப்பமானார். “நாங்கள் இருவருமே வெவ்வேறு வகையான வளர்ச்சிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. கருவைக் கலைத்துவிடும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் எங்களுக்கு மனம் வரவில்லை. மன உறுதியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தோம். அதனால் எங்கள் திருமணத்தைத் தள்ளி வைத்தோம்.

நாங்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டைக் குறைபாட்டுடன் எங்கள் மகன் பிறந்தான். சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். குழந்தை இருக்கும்வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். இதோ எங்கள் மகனுக்கு இரண்டரை வயதாகிவிட்டது. மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை! இனிமேலும் தள்ளிப் போடாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைத்தோம். எங்கள் அருமை மகன் மோதிரம் எடுத்துக் கொடுத்தான். எங்கள் வாழ்க்கையில் அற்புதமான நாளாக அமைந்தது. எங்களைப் போல வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க முடியும் என்பதற்கு நாங்களே சாட்சி. உயரம் மட்டும்தான் எங்களுக்குக் குறைவு. மற்றபடி சக மனிதர்களைப் போல எங்களுக்கும் மென்மையான மனம் உண்டு. அதில் அன்பு, காதல், வலி, கருணை எல்லாம் நிறைந்திருக்கிறது. நீங்கள் எங்களை அரவணைக்க வேண்டாம். கேலியாக பார்க்காமல் இருந்தால் போதும். நாங்கள் தன்னம்பிக்கையுடன் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொள்வோம்” என்கிறார் லாரா ஒயிட்ஃபீல்ட்.

நம்பிக்கை மனிதர்கள்!

பிரிட்டனில் வசிக்கிறார் 80 வயது பார்பரா காக்ஸ். துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக வெளியே வந்தார். எங்கிருந்தோ வந்த சீகல் பறவைகள் இரண்டு அவரை ஆக்ரோஷமாகக் கொத்தி, விரட்டின. கால்களில் ரத்தம் வடிய வீட்டுக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டார். சில மணிநேரம் கழித்து மீண்டும் மெதுவாக வெளியே வந்தார். அப்போதும் பறவைகள் கொத்தி, விரட்டின. மறுநாள் சென்றுவிடும் என்று நினைத்த பார்பராவுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

காரணம் புரியாமல் தவித்த பார்பரா, காவல்துறையில் முறையிட்டார். அவர்கள் பறவைகளால் பிரச்சினை என்றதும் அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து 3 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்பராவைச் சிறை வைத்திருந்தன சீகல் பறவைகள். நான்காவது நாள் மீண்டும் புகார் கொடுத்த பிறகு, காவலர்கள் வந்தனர். பார்பராவின் தோட்டத்தில் சீகல் பறவைகளின் குஞ்சு ஒன்று இறந்திருந்ததைக் கண்டனர். தங்கள் குஞ்சுக்காகத்தான், பார்பராவை விரட்டியிருக்கின்றன என்ற விவரம் அறிந்து, எல்லோரும் நிம்மதி அடைந்தனர்.

பாசப் போராட்டத்தில் பார்பராவைச் சிறை வைத்த பறவைகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நம்பிக்கை-மனிதர்கள்/article9139332.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் அதிசய ‘மெமரி’ மனிதர்!

 

 
masala_3021311f.jpg
 

உலகின் மிகச் சிறந்த நினைவுத்திறன் பெற்ற மனிதர் பிரிட்டனைச் சேர்ந்த டொமினிக் ஓ பிரைன். கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை ‘உலக நினைவுத்திறன் சாம்பியன்ஷிப்’ பட்டங்களை வென்றிருக்கிறார்! ஒரு முழு சீட்டுக்கட்டையும் சில நொடிகளில் நினைவில் வைத்துக்கொள்வதால், உலகம் முழுவதும் உள்ள சூதாட்ட விடுதிகளில் டொமினிக் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகத்தையே தம் நினைவுத்திறனால் அச்சப்பட வைக்கும் 59 வயது டொமினிக், குழந்தையில் மிகவும் மோசமான நினைவுத்திறனோடு இருந்திருக்கிறார். ஆசிரியர் பாடம் நடத்துவதை அவரால் நினைவில் வைக்க முடியாது. மிகுந்த துன்பத்துக்கு ஆளானார்.

பிறகுதான் அவருக்கு நினைவுத்திறன் குறைபாடும், டிஸ்லெக்ஸியா பிரச்சினையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. “நான் குழந்தையாக இருந்தபோது படுக்கையில் இருந்து கீழே விழுந்து, என் தலையில் அடிபட்டிருக்கிறது. ரயிலில் இருந்து தவறி, தண்டவாளத்தில் ஒருமுறை விழுந்துவிட்டேன். இதனால் என் முன் தலைப்பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 1987ம் ஆண்டு தொலைக்காட்சியில் சீட்டுக்கட்டுகளை வைத்து, நினைவுத்திறன் விளையாட்டுகள் ஒளிபரப்பாகின. அதை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக விளையாடிப் பழகினேன். 30 வயதில் முறையாக நினைவுத்திறன் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே என்னிடம் அசாதாரண மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன! முழு சீட்டுக்கட்டையும் வெகுவேகமாக நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது.

ஒரு வருடத்துக்குள் 6 கட்டுகளில் உள்ள 312 சீட்டுகளையும் என்னால் நினைவில் கொண்டுவர முடிந்தது. கின்னஸ் சாதனையும் படைத்தேன். இன்று என்னிடம் 54 கின்னஸ் சாதனைகள் இருக்கின்றன! முயற்சியும் பயிற்சியும் செய்தால், யார் வேண்டுமானாலும் நினைவுத்திறனில் சாதிக்கலாம். என் உத்திகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பின்னர் அறிந்தபோது, மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 1994ம் ஆண்டு, நினைவுத்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி? என்று முதல் புத்தகம் எழுதி, வெளியிட்டேன். இந்தப் புத்தகம் மிகவும் எளிமையானது. நீங்கள் வசிக்கும் வீடு, வேலை செய்யும் அலுவலகம், விளையாடும் பூங்கா என்று எதை வேண்டுமானாலும் வைத்து, நினைவுத்திறனை அதிகரித்துக்கொள்ளலாம்.

நீங்கள் நினைவில் வைக்க விரும்பும் விஷயங்களை எழுத்துகளாக இல்லாமல், படங்களாக நினைவில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் டொமினிக் ஓ பிரைன். கின்னஸ் உலக சாதனை அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான நோரிஸ் மெக்விர்டர், “மனிதர்களால் 6 கட்டுகளில் உள்ள சீட்டுகள் வரையே நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் டொமினிக், 54 கட்டுகளில் இருந்த 2808 சீட்டுகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அனைத்தையும் சொல்லிவிட்டார். இதில் 8 பிழைகள் இருந்ததாகச் சொல்லி, 4 பிழைகளைச் சரி செய்தும்விட்டார். மனிதர்களால் இது சாத்தியமில்லை!’’ என்கிறார்.

உலகின் அதிசய ‘மெமரி’ மனிதர்!

அமெரிக்காவில் வசிக்கும் அஷ்லே நீல்ஸ், பனிப்பிரதேசத்தில் வாழக்கூடிய ஹஸ்கி நாயை வளர்த்து வந்தார். திடீரென்று நாய்க்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் நாய் இறந்துவிடும் என்பதால், நாயின் விருப்பங்களை நிறைவேற்ற முடிவு செய்தார். நண்பர்களின் உதவியுடன், செயற்கைப் பனிப்பொழிவை உருவாக்கினார். நாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

நாயின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றிய அன்பு மனம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-அதிசய-மெமரி-மனிதர்/article9142225.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மாயக் கண்காரி!

 

 
masala_2375609h.jpg
 

ஒப்பனைக் கலைஞர் ஹைகரு சோ தன்னுடைய கற்பனை மூலம் மனித உடல் மீது ஆப்டிகல் இல்யூஸன் எனப்படும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் நிபுணராக இருக்கிறார். முப்பரிமாணத்தில் இவரது ஓவியங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்கின்றன. உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

கழுத்தில் கறுப்பு மையைப் பூசி, பின்பக்கமும் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டால் கழுத்து இல்லாத உடல் போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேபோல் கழுத்தில் ஸ்பிரிங் போன்று வரைந்துவிட்டால், ஸ்பிரிங்கில் தலை நிற்பது போல மாயத்தோற்றத்தைத் தருகிறது.

மூடிய கண் மீது, பச்சை வண்ண திறந்த கண்ணை வரைந்தால் அது வேறொரு விதமான தோற்றத்தைத் தருகிறது. அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு இப்படி மாயத்தோற்றங்களை உருவாக்கலாம் என்கிறார் ஹைகரு.

ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கு!

சீனாவின் யுன்லாங் கவுண்டியில் வசிக்கிறார் 25 வயது ஜியா பின்ஹுய். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏழ்மையான விவசாயி என்பதால் மாற்று எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. தன்னைப் பாதுகாக்கும் முயற்சியில் தானே இறங்கினார் ஜியா. மாற்று மருத்துவத்தைத் தேடிக் கண்டுபிடித்தார். அதில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி வெப்பத்துக்கு இருக்கிறது என்று தெரிந்தது. 42 டிகிரி செல்சியஸில் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

தன்னுடைய தோட்டத்தில் இரண்டு பக்கங்களிலும் செங்கற்களை அடுக்கினார் ஜியா. இரண்டையும் இணைக்கும் விதத்தில் கம்புகளைக் குறுக்கே வைத்தார். கீழே இலை, தழைகள், குச்சிகள், விறகுகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொளுத்தினார். செங்கற்களுக்கு மேலே இருந்த கம்புகளில் வெற்று உடம்புடன் படுத்தார். நேரம் செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்தது. ஆனாலும் பொறுத்துக்கொண்டு படுத்திருந்தார்.

‘’42 டிகிரி கொதிக்கும் தண்ணீரில் படுத்திருக்க வேண்டும் என்றார்கள். அது என்னால் முடியாது. அதனால் நானே இப்படி ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறேன்’’ என்கிறார் ஜியா. நீண்ட காலம் காதலித்த தன் காதலியை ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் செய்திருக்கிறார் ஜியா. ஆனால் இவரின் விநோதமான மருத்துவத்தைக் கண்டு, வீட்டை விட்டுச் சென்றுவிட்டார் மனைவி. பரிசோதனை செய்து பார்த்ததில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்கிறார் ஜியா.

ஐயோ… பாவம் ஜியா…

இங்கிலாந்தில் வசிக்கிறார் 38 வயது டேவிட் நெல்லிஸ்ட். இவர் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் குடித்துவிட்டு, வீட்டில் உள்ள கோகோ என்ற நாயைப் போட்டு அடிப்பார். பிறகு அறைக்குள் தள்ளி, கதவைத் தாழிட்டு விடுவார். அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டேவிட் குற்றச்சாட்டை மறுத்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த காவலர்கள், குற்றச்சாட்டைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2 மாதங்கள் சிறை தண்டனை, 18 மாதங்கள் தொழிலுக்குச் செல்லக்கூடாது, 5 வருடங்களுக்கு எந்தப் பிராணியையும் வளர்க்கக்கூடாது, எங்காவது 200 மணி நேரங்களில் 14.5 லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் டேவிட்.

கோகோவுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது!

சீனாவின் யுன்னன் மாகாணத்தைச் சேர்ந்த தோட்டக்காரர் லி. அவரது தோட்டத்தில் ராட்சச டர்னிப் ஒன்று விளைந்திருக்கிறது. 4 அடி நீளமும் 15 கிலோ எடையும் கொண்ட அந்த டர்னிப்பை, ‘ஃபேட் லிட்டில் கேர்ள்’ என்று செல்லமாக அழைக்கிறார் லி. செயற்கை உரங்களின்றி, இயற்கையாக விளைவிக்கப்பட்டது இந்த ராட்சச டர்னிப் என்பதில் அவருக்குப் பெருமை.

அட!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மாயக்-கண்காரி/article7108438.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மாணவிக்கு சிறுநீரகம் கொடுத்த ஆசிரியர்

 

 
japan_3022768f.jpg
 

ஜப்பானில் கடந்த 13 ஆண்டுகளில் அதிக அளவில் சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 4,43,691 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 50,101 ஓட்டுநர்கள், வாகனம் ஓட்டும்போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்பாடு சமூகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் விதமாக ஜப்பானிய நிறுவனங்களான டொயோடாவும் கொமேடாவும் ‘டிரைவிங் பாரிஸ்டா’ என்ற அப்ளிகேஷனை உருவாக்கி யிருக்கின்றன. இதை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வாகனத்தில் போனை கவிழ்த்து வைத்துவிட வேண்டும். எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம் என்பதை ஜிபிஸ் கணக்கிட்டுக்கொள்ளும். 100 கி.மீ. தூரம் போனைப் பார்க்காமல் ஓட்டிவிட்டால் சூடான காபியோ, குளிர்ந்த காபியோ, கொமெடா காபி கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு எத்தனை 100 கி.மீ. தூரத்தை ஸ்மார்ட்போன் பார்க்காமல் கடந்தாலும் காபி கூப்பன் கிடைக்கும். “சாலைப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் இது. எங்களுடன் வாகன ஓட்டிகளும் ஒத்துழைத்தால் விரைவில் சாலை விபத்துகளோ, சாலை விபத்துகளின் மூலம் உயிரிழப்போ ஏற்படாத நிலை உருவாகிவிடும்” என்கிறார் டொயோடோவின் நிர்வாக அதிகாரி ஷுய்சி முரகாமி. ‘டிரைவிங் பாரிஸ்டா’ அப்ளிகேஷன் தற்போது ஜப்பானில் மட்டுமே வேலை செய்கிறது.

அட! காபியும் குடிக்கலாம்; விபத்தையும் தடுக்கலாம்!

 

 

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வசிக்கும் டினா கெர்ரியின் 4 வயது மகள் லைலாவின் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. சிறுநீரகம் கேட்டு, அமெரிக்கா முழுவதும் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் லைலாவுக்குப் பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கவில்லை. “எங்கள் அன்பு மகள் சிறுநீரகம் கிடைக்காததால் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். ஒரு தாயாக நான் மிகவும் துன்பத்தில் இருந்தேன். அப்போது லைலாவின் பள்ளியில் இருந்து, என்னை அழைத்தார்கள். ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் மாறும்போதோ, புதிய ஆசிரியர்கள் வரும்போதோ என்னைச் சந்திப்பார்கள். லைலாவின் நிலையை எடுத்துச் சொல்வேன். அப்படித்தான் இந்த முறையும் என்னை அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். மூன்று ஆசிரியர்கள் என் எதிரில் அமர்ந்திருந்தனர். நான் வருத்தத்தோடு லைலாவின் நிலையைச் சொன்னேன். பெத் பாட்டிஸ்டா என்ற ஆசிரியர் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் லைலாவுக்குச் சிறுநீரகம் கொடையாகத் தருவதாக எழுதி இருந்தார்! என்னை அறியாமல் கத்திவிட்டேன். பெத் பாட்டிஸ்டாவைக் கட்டிப் பிடித்து அழுதேன். நன்றி சொன்னேன். ஆசிரியர்களை ஹீரோக்களாகச் சொல்வார்கள். நான் அதற்கும் மேலான அற்புதமாக நினைக்கிறேன். என் குழந்தையின் உயிரை மீட்டுக் கொடுத்த பெத் பாட்டிஸ்டாவுக்கு என்றென்றும் நன்றிக்கு உரியவர்களாக இருப்போம்” என்கிறார் டினா கேர்ரி.

மாணவிக்கு சிறுநீரகம் கொடுத்த ஆசிரியருக்கு பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மாணவிக்கு-சிறுநீரகம்-கொடுத்த-ஆசிரியர்/article9146641.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குப்பைகளை உடம்பில் கட்டிக்கொள்ளும் மனிதர்!

 

 
masala_3024885f.jpg
 

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் க்ரீன்ஃபீல்ட், சூழலியலாளர். மனிதர்கள் கொட்டும் குப்பைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு புராஜக்ட்டில் இறங்கியிருக்கிறார். தினமும் அவர் போடும் குப்பைகளை தன் உடலில் சுற்றியுள்ள பைகளில் சேமித்து வந்தார். ‘ஒரு சராசரி அமெரிக்கர் தினமும் 2 கிலோ குப்பைகளைக் கொட்டுகிறார். ஒரு வாரத்தில் 13 கிலோ குப்பைகள், ஒரு மாதத்தில் 63 கிலோ குப்பைகளைக் கொட்டுகிறார். அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்காகவே என் உடல் மீது குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்தில் என் உடல் எடை அளவுக்குக் குப்பைகள் சேர்ந்துவிட்டன. நான் குடிக்கும் காபி கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள், பிட்ஸா டப்பாக்கள், சிப்ஸ் பாக்கெட்கள், ஸ்பூன்கள், அஞ்சல் உறைகள் என்று அனைத்துப் பொருட்களையும் சுமந்துகொண்டு அலைந்தேன். பரிசோதனைக்காக என்றாலும் குப்பையுடன் அலைந்தது கடினமாக இருந்தது.

இந்தக் குப்பைகளைப் பூமியில் வீசுவது அதைவிடக் கொடுமையானது. உணவு சேமிப்பு பற்றியெல்லாம் பேசுபவர்கள்கூட குப்பைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இன்னும் சில ஆண்டுகளில் குப்பைப் பிரச்சினை மிகப் பெரியதாக இருக்கப் போகிறது. ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவுக்குக் குப்பைகளைக் குறைக்க ஆரம்பிக்க வேண்டும்’ என்கிறார் ராப் க்ரீன்ஃபீல்ட்.

குப்பைகளைக் குறைப்போம்; சூழலைக் காப்போம்!

நிஜ ஓநாய் என்று பார்த்ததும் பயந்து ஓடுபவர்கள்தான் அதிகம். ஆனால் இது பொம்மை என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த டெருமி ஓடா. நிஜ விலங்குகளைப் போன்றே கம்பளிப் பொம்மைகளை உருவாக்குவதில் நிபுணராக இருக்கிறார். ‘நான் பூக்களும் விலங்குகளும் நிறைந்த இயற்கை எழில்மிக்கப் பகுதியில்தான் பிறந்து, வளர்ந்தேன். இயல்பாகவே கலைகளில் ஆர்வம். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், லண்டனில் சென்று பூக்கள் அலங்காரத்தைக் கற்றுக்கொண்டு திரும்பினேன். 5 ஆண்டுகளுக்கு முன்புதான் கம்பளியை வைத்து, விலங்குகளை உருவாக்க ஆரம்பித்தேன். நான் என்ன உருவத்தை நினைக்கிறேனோ, அதை என்னால் கம்பளியில் உருவாக்கிவிட முடியும். அதிலும் ஓநாய்க்குக் கிடைத்த வரவேற்பைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. பொம்மை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கும். பாரிஸ், நியூயார்க், லண்டன் என்று அடிக்கடி கண்காட்சிகளுக்காகப் பறந்துவிடுவதால், ஜப்பானில் குறைவான நேரமே இருக்க முடிகிறது’ என்கிறார் டெருமி ஓடா.

உங்கள் கலைத் திறனுக்கு உலகமே மயங்கிக் கிடக்கிறது!

பிரேஸிலின் பரா பகுதியில் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமேசான் நதிக்கு அருகில் இருக்கும் இந்த இடத்தில், 33 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய அனகோண்டாவைப் பிடித்திருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்கள். 400 கிலோ எடையுடன் கூடிய மிகப் பிரம்மாண்டமான அனகோண்டா இது. 25 அடி நீளம் கொண்ட கன்சாஸைச் சேர்ந்த பாம்புதான் இதுவரை மிகப் பெரிய பாம்பு என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.

ராட்சச அனகோண்டா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குப்பைகளை-உடம்பில்-கட்டிக்கொள்ளும்-மனிதர்/article9153231.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.