Jump to content

அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்


Recommended Posts

ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்: இங்கிலாந்தை சமாளிக்குமா ஆஸ்திரேலியா

 
1_2533710f.jpg
 

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி கள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சவுதாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது இங்கிலாந்து. டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால், ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஆஸ்திரேலியா. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்திருக்கலாம். ஒரு டி-20 போட்டியிலும் தோற்றிருக்கலாம். ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை தரவரிசையில் அவர்கள்தான் நம்பர் 1. இங்கிலாந்தோ 6-வது இடத்தில் உள்ளது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளவர்களில் 8 பேர் உலகக் கோப்பையை வென்ற அணியில் பங்கேற்றவர்கள்.

கடைசியாக இரு அணிகளும் மோதிய ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கிறது ஆஸ்திரேலியா. இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளின் அடிப்படையில் பார்த்தாலும் புள்ளிவிவரம் ஆஸ்திரேலியாவுக்கே சாதகம்.

கிளென் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், மிட்ஷெல் மார்ஷ் என அதிரடியான ஆல்ரவுண்டர்களால் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் நிரம்பியுள்ளது. வார்னர், ஸ்மித், பெய்லி, ஜோ பர்ன்ஸ் ஆகிய நான்கு பேர் மட்டுமே முழுநேர பேட்ஸ்மேன்கள். இந்த அணிச்சேர்க்கையே இத்தொடர் முழுவதும் இருக்கும் என நம்பலாம்.

அஸ்டோன் அகருக்கு வாய்ப் பளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அணி விவரம்:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜார்ஜ் பெய்லி, கிளென் மேக்ஸ்வெல், ஷேன் வாட்சன், மிட்ஷெல் மார்ஷ், மேத்யூ வாட், கோல்டர் நீல், மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ், அஸ்டோன் அகர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜேம்ஸ் பட்டின்சன்.

வலுவான இங்கிலாந்து

கடந்த 31-ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியை இங்கிலாந்து வென்றுள்ளது. கடந்த ஜூனில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியிருப்பது அந்த அணிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். மோர்கன், பெய்ர்ஸ்டோ ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஸ்டோக்ஸ், ஃபின், டேவிட் வில்லி ஆகியோர் அசத்தலாக பந்து வீசி வருகின்றனர்.

நியூஸிலாந்து தொடரை வென்ற அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஜோ ரூட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மொயீன் அலிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 3-வது விக்கெட்டுக்கு ரூட்டுக்கு பதிலாக அலி களமிறங்குவார். ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க வீரர்கள்.

மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷீத் என இங்கிலாந்திலும் ஆல்ரவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அணி விவரம்:

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

“இங்கிலாந்தின் அதிரடி பாணிதான் எங்களின் பந்து வீச்சாளர்களுக்கான ஆயுதம். நியூஸிலாந்துக்கு எதிராக அவர்கள் நன்றாகவே விளை யாடினர். ஆனால், அப்படி அடித்து ஆட முற்படும்போது நாங்கள் விரைவாக சில விக்கெட்டுகளைக் கைப்பற்றி விடுவோம்” என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஸ்மித்.

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர். வழக்கமான ஆட்டத்திலிருந்து மாறி, கட்டற்ற அதிரடி என்ற முறைக்கு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆதரவு தெரிவிக்கிறார். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இதே உத்தியை அவர் பின்பற்றுவார். வாட்சன் தற்போது சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், அவர் இத்தொடரை மாற்றியமைப்பார் என மேக்ஸ்வெல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

http://tamil.thehindu.com/sports/ஒரு-நாள்-தொடர்-இன்று-தொடக்கம்-இங்கிலாந்தை-சமாளிக்குமா-ஆஸ்திரேலியா/article7610592.ece

Link to comment
Share on other sites

‘வேட்டு’ வைத்த வேட் *இங்கிலாந்து பரிதாப தோல்வி

ODI between England and Australia

 சவுத்தாம்ப்டன்: மாத்யூ வேட்டின் கடைசி நேர அதிரடி கைகொடுக்க, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. 

வேட் விளாசல்:

ஆஸ்திரேலிய அணிக்கு பார்ன்ஸ், வார்னர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பர்ன்ஸ் 44 ரன் எடுக்க, அடுத்து வந்த கேப்டன் ஸ்மித்தும் 44 ரன்னுக்கு அவுட்டானார். வார்னர் அரைசதம் (59) கடந்தார்.

பெய்லி (23), மேக்ஸ்வெல் (15), வாட்சன் (6) ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 37 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது. பின் இணைந்த மாத்யூ வேட், மிட்சல் மார்ஷ் ஜோடி அதிரடியாக ரன்கள் சேர்த்தது.

கடைசி 13 ஓவரில் இந்த ஜோடி 112 ரன் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 305 ரன் குவித்தது. பவுண்டரி (12) மழை பொழிந்த வேட் (50 பந்து, 71 ரன்) மார்ஷ் (40) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஜேசன் ஆறுதல்:

கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியை ஹேல்ஸ் (22) ஏமாற்றினார். ஜேசன் ராய் 67 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். ஜேம்ஸ் டெய்லர் (49), கேப்டன் மார்கன் (38) அணியை கைவிட்டனர். 

பின் வந்த ஸ்டோக்ஸ் (13), பட்லர் (4), மொயீன் அலி (17), ரஷித் (11) என, வரிசையாக ஏமாற்ற, இங்கிலாந்து அணி 45.3 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. உட் (10) அவுட்டாகாமல் இருந்தார்.

59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 1–0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லார்ட்சில் நடக்கிறது.

 

11

 

இரு அணிகள் மோதிய கடைசி 11 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 வெற்றி உட்பட மொத்தம் 10 முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

* சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக கிடைத்த 5 வது தோல்வி இது.

http://sports.dinamalar.com/2015/09/1441349363/ODIbetweenEnglandandAustralia.html

Link to comment
Share on other sites

மேத்யூ வேட், மிட்செல் மார்ஷின் இறுதி கட்ட அதிரடி: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 
  • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திச் செல்லும் ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.பி.
    முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திச் செல்லும் ஸ்டீவ் ஸ்மித். | படம்: ஏ.பி.
  • இங்கிலாந்தின் மார்க் வுட் பந்தை ஆஃப் திசையில் பவுண்டரிக்கு விரட்டும் மேத்யூ வேட். | படம்: ஏ.பி.
    இங்கிலாந்தின் மார்க் வுட் பந்தை ஆஃப் திசையில் பவுண்டரிக்கு விரட்டும் மேத்யூ வேட். | படம்: ஏ.பி.

சவுதாம்டனில் உள்ள ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 1-0 என்று ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்ய, அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

7-வது விக்கெட்டுக்காக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், மிட்செல் மார்ஷ் இணைந்து 13 ஓவர்களில் 112 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலியா 37-வது ஓவர் முடிவில் 193/6 என்பதிலிருந்து 305/6 என்ற நிலையை எட்டியது. இதில் கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள் விளாசப்பட்டது.

மேத்யூ வேட் 50 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுக்க, மிட்செல் மார்ஷ் 34 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து இருவருமே நாட் அவுட்டாக திகழ்ந்தனர்.

தனது கணக்கைத் துவங்கும் அவசரத்தில் மேத்யூ வேட் வாட்சனை (6) ரன் அவுட் ஆக காரணமாக இருந்தாலும், அதன் பிறகு அருமையான ஷாட்களை ஆடினார். பென் ஸ்டோக்ஸ் பந்தில் அடித்த ஸ்வீப் ஷாட் புதிய மேத்யூ வேட் உருவாகியுள்ளதை நமக்கு பறைசாற்றியது. அதே போல் ஆக்ரோஷமான கட் ஷாட்கள், ரிஸ்கான துடுப்பு ஸ்வீப் ஷாட்கள் என்று அவர் ரன்களை குவித்தார். அப்படிப்பட்ட துடுப்பு ஸ்வீப்பில் கிறிஸ் வோக்ஸை ஆஃப் ஸ்டம்பிலிருந்து எடுத்து ஃபைன் லெக்கில் அடித்ததும் ஒரு குறிப்பிடத் தகுந்த புதுமை புகுத்தலே.

தொடக்கத்தில் வாரன்ர், ஜோ பர்ன்ஸ் ஜோடி 76 ரன்களை 14.3 ஓவர்களில் சேர்த்தனர், வார்னர் முதல் 12 ஓவர்களில் ஒரே பவுண்டரியை மட்டுமே அடித்தார். பர்ன்ஸ் குறிப்பிட்ட இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தார் ஆனால் அவர் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து அவரது பந்து வீச்சில் அவுட் ஆனார். பாதி ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 126/1 என்று இருந்தது, 150 பந்துகளில் இத்தனைக்கும் 81 பந்துகளில் ரன் எடுக்கப்படவில்லை. வார்னர் 59 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தில் ஷார்ட் தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

27-வது ஓவரில் 133/1 என்ற நிலையிலிருந்து 37-வது ஓவரில் 193/6 என்று சரிந்தது ஆஸ்திரேலியா. அப்போதுதான் வார்னர், ஸ்மித், பெய்லி மேக்ஸ்வெல், வாட்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் வேட், மிட்செல் மார்ஷ் ஜோடி 300 ரன்களை கடக்கச் செய்தனர், இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அடி வாங்கினார் அவர் 72 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடில் ரஷீத் மட்டுமே நன்றாக வீசி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து ஆக்ரோஷமாக தொடங்கியது, ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டி பவுலரான மிட்செல் ஸ்டார்க்கின் 3 ஓவர்களில் 29 ரன்களை விளாசி அவரை பந்துவீச்சிலிருந்து அகற்றச் செய்தனர். ஜேசன் ராய் மிகச்சிறபாக ஆடி 64 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல்லின் சொத்தை பந்தை அதைவிட சொத்தையாக கட் ஆடி பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக ஹேல்ஸ் 22 ரன்களுக்கு நன்றாக ஆடிவிட்டு மார்ஷிடம் வீழ்ந்தார். ஜேம்ஸ் டெய்லர் 51 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து வாட்சன் பந்தில் பவுல்டு ஆனார்.

29-வது ஓவரில் மீண்டும் ஸ்டார்க் அழைக்கப்பட 13 ரன்களில் இருந்த அபாய ஸ்டோக்ஸை வீழ்த்தினார் அவர் இங்கிலாந்து 172/4 என்று ஆனது. பிறகு இயான் மோர்கன் (38), ஜோஸ் பட்லர் (4), இருவரும் மோசமான ஷாட்டுக்கு ஆட்டமிழந்தனர். வாட்சனை புல் ஆட முயன்று அவுட் ஆனார் மோர்கன், பட்லரோ, கூல்டர் நைல் பந்தை நேராக மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். அதன் பிறகு 246 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.

ஸ்டார்க், கூல்ட்டர் நைல், கமின்ஸ், வாட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மார்ஷ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக மேத்யூ வேட் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/மேத்யூ-வேட்-மிட்செல்-மார்ஷின்-இறுதி-கட்ட-அதிரடி-இங்கிலாந்தை-வீழ்த்தியது-ஆஸ்திரேலியா/article7615524.ece

Link to comment
Share on other sites

இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்களால் வெற்றி
 
 அவுஸ்திரேலியா  309/7 (49 ov)
இங்கிலாந்து  245 (42.3/49 ov)
Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய நடுவரிசை வீரர்களின் பவர் ஹிட்டிங்: 309 ரன்கள் குவிப்பு

 
  • இங்கிலாந்தின் மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மிட்செல் மார்ஷ். | படம்: ஏ.பி.
    இங்கிலாந்தின் மொயீன் அலி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மிட்செல் மார்ஷ். | படம்: ஏ.பி.
  • 70 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஷாட் ஆடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
    70 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஷாட் ஆடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் மழை காரணமாக 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஃபின் வீசிய 2-வது பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் வார்னர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஃபின் வீசிய எகிறு பந்துக்கு வார்னரும் எகிறினார், ஆனால் பந்து கை விரலைக் கடுமையாகத் தாக்கியதன் காரணமாக ஸ்டீவன் ஃபின் வீசிய முதல் ஓவரிலேயே ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இதையடுத்து ஜோ பர்ன்ஸுடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 26 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த ஜோ பர்ன்ஸ், ஸ்டீவன் ஃபின் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து ஸ்மித்துடன் இணைந்தார் பெய்லி. அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. ஜார்ஜ் பெய்லி 72 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த மேக்ஸ்வெல், பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.

மேக்ஸ்வெல் அதிரடி

மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்மித் 87 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வாட்சன் களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கினார் மேக்ஸ்வெல். அதன் உச்சகட்டமாக மொயீன் அலி வீசிய 39-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். 38 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 39.5 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்திருந்தது.

மார்ஷ் விளாசல்

இதையடுத்து ஷேன் வாட்சனுடன் இணைந்தார் மிட்செல் மார்ஷ். இந்த ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. அலி வீசிய 43-வது ஓவரில் மார்ஷ் ஒரு சிக்ஸரை விளாச, வாட்சன் தன் பங்குக்கு இரு சிக்ஸர்களை விரட்டினார். 38 பந்துகளைச் சந்தித்த வாட்சன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். வாட்சன்-மார்ஷ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து வந்த மேத்யூ வேட் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் வெளுத்து வாங்கிய மார்ஷ் 26 பந்துகளில் அரைசதம் கண்டார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய மார்ஷ், கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலியா 91 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டீவன் ஃபின் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொயீன் அலி 8 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இவரது இந்த ஓவர்களில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்த ஆஸ்திரேலியா தனது இன்னிங்சில் 28 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் விளாசியது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளிழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. மோர்கன் 2 ரன்களுடனும், ஜேம்ஸ் டெய்லர் 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், முன்னதாக, ஜேசன் ராய் 31 ரன்களில் கமின்ஸ் பந்திலும், ஒரு முறை மிட்செல் ஸ்டார்க்கின் அதிவேக பவுன்சருக்கு ஹெல்மெட்டில் அடிவாங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் 18 ரன்களில் கூல்ட்டர்-நைல் பந்திலும் வெளியேறினர். இங்கிலாந்து வெற்றி பெற ஓவருக்கு 6.55 ரன்கள் தேவை.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலிய-நடுவரிசை-வீரர்களின்-பவர்-ஹிட்டிங்-309-ரன்கள்-குவிப்பு/article7619693.ece

Link to comment
Share on other sites

மார்ஷ் விளாசல்: மீண்டும் வீழ்ந்தது இங்கிலாந்து

steve smith

லார்ட்ஸ்: ஷான் மார்சின் விளாசல் கைகொடுக்க, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

மழை காரணமாக தலா 49 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பர்ன்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஸ்டீவன் பின் ‘ஷார்ட் பிட்ச்’ பந்தில் வார்னர் (1) இடது கை பெருவிரல் எலும்பு முறிய, பாதியில் திரும்பினார். பர்ன்ஸ் (22) நீடிக்கவில்லை. பெய்லி (54), கேப்டன் ஸ்மித் (70), மேக்ஸ்வெல் (49) ரன் குவிக்க உதவினர்.

கடைசி நேரத்தில் விளாசிய ஷான் மார்ஷ் (64 ரன், 31 பந்து) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 309 ரன் குவித்தது. 

கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (31), ஹேல்ஸ் (18), டெய்லர் (43), ஸ்டோக்ஸ் (10) என, வரிசையாக ஏமாற்றினர். பின் வரிசையில் பட்லர் (0), மொயீன் அலி (8), வோக்ஸ் (6), ரஷித் (2) கைவிட்டனர். 9வது விக்கெட்டுக்கு கேப்டன் மார்கன், பிளங்கட், 21 பந்தில் 55 ரன் சேர்க்க சற்று விறு விறுப்பு ஏற்பட்டது. பின் பிளங்கட் (24), போராடிய மார்கன் (84) அடுத்தடுத்து அவுட்டாக, இங்கிலாந்து அணி 42.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரில் 2–0 என, முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் 3வது போட்டி வரும் 8ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

வார்னர் விலகல்

நேற்று இடது கை பெருவிரலில் வார்னருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இது ‘எக்ஸ்–ரேயில்’ உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வார்னர் குறைந்தது 6 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். ஏற்கனவே கிறிஸ் ரோஜர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில், வரும் வங்கதேச டெஸ்ட் தொடரில் புதிய துவக்க ஜோடியை தேடுகிறது ஆஸ்திரேலியா.

ஸ்டோக்ஸ் பரிதாபம்

நேற்று 26வது ஓவரை மிட்சல் ஸ்டார்க் (ஆஸி.,) வீசினார். இதன் 4வது பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ், தடுத்து விளையாடினார். இந்த பந்தை எடுத்து, ‘ஸ்டம்சை’ நோக்கி எறிந்தார் ஸ்டார்க். இதை தனது இடது கையினால் தடுத்தபடியே கீழே விழுந்த ஸ்டோக்ஸ், ‘பீல்டிங்கிற்கு இடையூறு செய்தார்’ என்ற விதியின் படி ‘அவுட்’ தரப்பட்டது. 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த விதிப்படி அவுட்டான 6வது வீரர் ஸ்டோக்ஸ். தவிர, 1951ல் ஓவல் மைதானத்தில் லென் ஹட்டன் இதுபோன்ற முறையில் அவுட்டானார். இவருக்குப் பின் இந்த விதியில் வெளியேறிய முதல் வீரர் ஸ்டோக்ஸ் தான்.

http://sports.dinamalar.com/2015/09/1441475052/stevesmith.html

Link to comment
Share on other sites

களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக அவுட் கொடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ்: கடும் சர்ச்சை

 
  • ஸ்டோக்ஸ் சர்ச்சை அவுட் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து கேப்டன் மோர்கன். | படம்: ஏ.எஃப்.பி.
    ஸ்டோக்ஸ் சர்ச்சை அவுட் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து கேப்டன் மோர்கன். | படம்: ஏ.எஃப்.பி.
  • அவுட் கொடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ்.
    அவுட் கொடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-0 என்று முன்னிலை வகுத்தாலும், இங்கிலாந்து துரத்தலின் போது பென் ஸ்டோக்ஸுக்கு அவுட் கொடுக்கப்பட்ட விதம் அணிகளுக்கு இடையே கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நடந்தது இதுதான்: இங்கிலாந்து துரத்தலில் 26-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். அப்போது ஸ்டார்க் பந்து ஒன்றை ஸ்டோக்ஸ் அவரிடமே டிரைவ் செய்து ஓரிரு அடிகள் ரன்னுக்காக கிரீஸை தாண்டி வெளியே வந்தார், பந்தை தடுத்த பவுலர் ஸ்டார்க் நேராக ஸ்டம்பை நோக்கி அடித்தார்.

ஆனால் இடையில் ஸ்டோக்ஸ் அதனை தனது இடது கையால் த்ரோவை தடுத்தார், தனக்கு அடிபட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் அப்படி செய்தாரா, அல்லது ரன் அவுட் பயத்தில் செய்தாரா என்பதெல்லாம் எளிதில் விளங்காத விஷயம். ஆஸ்திரேலியர்கள் கடும் முறையீடு எழுப்ப கள நடுவர்கள் அதனை ஏற்கவில்லை, ஆனால் 3வது நடுவர் பந்தை ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தடுத்து இடையூறு செய்ததாகக் கணித்து அவுட் என்று தீர்ப்பளித்தனர். இது இரு கேப்டன்களிடையேயும் வார்த்தைப் பரிமாற்றங்களுக்கு வித்திட்டது. 3வது நடுவர் ஜோ வில்சன் அவுட் கொடுத்தார்.

கிரிக்கெட்டில் 7-வது பேட்ஸ்மெனாக ஸ்டோக்ஸ் இம்முறையில் ஆட்டமிழந்தார்.

இதுகுறித்த விதிமுறை 37 கூறுவது என்னவெனில், ஒரு பேட்ஸ்மென் வேண்டுமென்றே ஸ்டம்புக்கு வரும் த்ரோவை தடுத்தால் அவுட் என்கிறது, ஆனால் தன் மீது பந்து பட்டு காயம் ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடுத்தால் அது அவுட் இல்லை.

ஆனால் ஸ்டோக்ஸ் விஷயத்தில் என்ன நடந்தது எனில், பந்தை ஸ்டார்க் விட்டெறிந்தவுடன் ஸ்டோக்ஸ் வினையாற்றியது வேண்டுமென்றே தடுப்பது என்ற விளக்கத்துக்கு ஆட்படாதது என்று ஒரு புறம் தெரிந்தாலும், பந்து அவரை விட்டு தள்ளி சென்றதும், அவர் இடது கையை நீட்டி தடுத்ததால் அவுட் கொடுக்கலாம் என்பது போலும் தெரிந்தது. எப்படியோ ஸ்டோக்ஸ் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, இங்கிலாந்து ரசிகர்கள், வீரர்கள், கேப்டன் மோர்கன் ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்த சர்ச்சைகள் கிளம்பியது, ஆஸ்திரேலியர்களை இங்கிலாந்து ரசிகர்கள் ஆட்டம் முடிந்த பின்பும் கூட கேலி செய்தனர்.

இது குறித்து பிற்பாடு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறும்போது, “விக்கெட் கீப்பர் வேட் இதனை நன்றாகப் பார்த்துள்ளார். நேரடியாக பந்து ஸ்டம்பைத் தாக்கவிருந்தது, ஆனால் ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தடுத்தார் என்று வேட் கூறினார், என்னைப் பொறுத்தவரை ஸ்டோக்ஸ் கிரீசைத் தாண்டி வந்து விட்டார், அவர் கையை நீட்டி வேண்டுமென்றேதான் தடுத்தார். அதுதான் விதிமுறையும் கூறுகிறது, 3வது நடுவர் அவுட் கொடுத்தார் அவ்வளவே.

எனவே அந்த விவகாரத்தை அத்துடன் முடித்து ஆட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும்” என்றார்.

ஆனால் இங்கிலாந்து கேப்டன் மோர்கனோ, ஸ்டோக்ஸுக்கு 5 அடி அருகிலிருந்து ஸ்டார்க் த்ரோ அடிக்கும் போது இயல்பாக என்ன செய்ய முடியுமோ அதனையே ஸ்டோக்ஸ் செய்தார். என்னைப்பொறுத்த வரையில் ஸ்டோக்ஸ் இயல்பாகவே செயல்பட்டார், அது அவுட் கொடுக்கப்படவேண்டியதில்லை” என்றார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் இது பற்றி கூறும்போது, “லார்ட்ஸில் என்ன நடந்தது என்பது விரும்பத்தகாதது, ஸ்டோக்ஸுக்காக வருந்துகிறேன்” என்றார். வார்னும் ஸ்டோக்ஸ் அவுட்டை அவ்வாறு வாங்கியிருக்கக் கூடாது என்றே கருதுகிறார்.

ஸ்மித் தன் முறையீட்டை வாபஸ் பெற்றிருக்கலாம் என்றே இதில் பெரும்பாலான கருத்துகள் எழுந்துள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தினால் மோர்கன் எழுச்சி பெற்றார், 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்து விட்ட நிலையில் மோர்கன் அடித்து ஆடத் தொடங்கினார். கமின்ஸ், மார்ஷ் வீசிய 5 பந்துகளில் 3 சிக்சர்களை விளாசினார் மோர்கன். அவரது கூட்டாளி லியாம் பிளங்கெட் கமின்ஸின் அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். இங்கிலாந்து வெற்றி பெறத் தேவையான ரன் விகிதம் 10.54லிருந்து 8.50 ஆக குறைந்தது.

ஆனால் பிளங்கெட்டை 24 ரன்களில் ஸ்டார்க் பவுல்டு செய்ய, மோர்கன் 87 பந்துகளில் 85 ரன்களில் கமின்ஸிடம் கடைசியாக ஆட்டமிழந்தார், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆனால் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது கிரிக்கெட்டில் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/களத்தடுப்புக்கு-இடையூறு-செய்ததாக-அவுட்-கொடுக்கப்பட்ட-பென்-ஸ்டோக்ஸ்-கடும்-சர்ச்சை/article7621905.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜேம்ஸ் டெய்லர் சதம்: இங்கிலாந்து வெற்றி

James Taylor, cricket

மான்செஸ்டர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஜேம்ஸ் டெய்லர் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. 

டெய்லர் அசத்தல்:

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (63) சிறப்பான துவக்கம் தந்தார். அதிரடியாக விளையாடிய ஜேம்ஸ் டெய்லர் (101) சதம் கடந்தார். தன் பங்கிற்கு கேப்டன் மார்கன் (62) அரை சதம் கடந்தார். ஸ்டோக்ஸ் (14), போர்ஸ்டோவ் (17) ஏமாற்ற, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்தது. 

பின்ச் ஆறுதல்:

பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பர்ன்ஸ் (9), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (25) விரைவில் வெளியேறினர். ஆரோன் பின்ச் (53) அரை சதம் கடந்தார். மொயீன் அலி ‘சுழலில்’ பெய்லி (25), மேக்ஸ்வெல் (17) சிக்கினர். பின் வந்தவர்கள் விரைவில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி 44 ஓவரில் 207 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

இரு அணிகள் மோதும் 4வது போட்டி வரும் 11ம் தேதி லீட்சில் நடக்கவுள்ளது. 

http://sports.dinamalar.com/2015/09/1441782759/JamesTaylorcricket.html

Link to comment
Share on other sites

3-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 
  • வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி. நடுவில் ஆட்ட நாயகன் ஜேம்ஸ் டெய்லர். | படம்: ஏ.பி.
    வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி. நடுவில் ஆட்ட நாயகன் ஜேம்ஸ் டெய்லர். | படம்: ஏ.பி.
  • சதமடித்த ஜேம்ஸ் டெய்லர். | படம்: ராய்ட்டர்ஸ்.
    சதமடித்த ஜேம்ஸ் டெய்லர். | படம்: ராய்ட்டர்ஸ்.

பென் ஸ்டோக்ஸ் சச்சரவுகளுக்குப் பிறகு நேற்று ஓல்ட் டிராபர்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருண்டது.

32 ஓவர்களில் 200/2 என்று இருந்த இங்கிலாந்து உண்மையில் 300 ரன்களை விடவும் அதிகமாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். குறிப்பாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுட 63 ரன்களையும், மோர்கன் 56 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஜேம்ஸ் டெய்லர், இவர் பொதுவாக அதிரடி முறையில் ஆடக்கூடியவர், நேற்று 114 பந்துகளில் 5 பவுண்டரிகளை மட்டுமே அடித்து 101 ரன்கள் என்று சதம் கண்டார்.

ஆனால் இவர் முதல் பவுண்டரி அடிக்க 53 பந்துகள் எடுத்துக் கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் 8-வது விக்கெட்டாகவே அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் 14 ரன்களில் மேக்ஸ்வெலிடம் அவுட் ஆனார். மொயீன் அலி, லியாம் பிளங்கெட் ஆகியோர் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 300 ரன்களை எடுத்தது.

மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 79 ரன்கள் விளாசித் தள்ளப்பட்டார். பேட்டின்சன் 6 ஒவர்களை வீசி 36 ரன்களுக்கு விக்கெட் இல்லை. கமின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை தொடங்கிய போது ஜோ பர்ன்ஸ் 9 ரன்களில் ஸ்டீவ் ஃபின்னிடம் வீழ்ந்தார், ஆனால் அதன் பிறகு ஏரோன் பின்ச் (53), ஸ்டீவ் ஸ்மித் (25) ஆகியோர் ஸ்கோரை 15 ஓவர்களில் 75 ரன்களுக்கு உயர்த்தினர். இந்நிலையில்தான் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஸ்டீவ் ஃபின் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். முதலில் அவர் ஷார்ட் மிட்விக்கெட்டில் நிறுத்தப்படக்கூடியவர் அல்ல, ஆனால் ஏனோ அங்கு நிறுத்தப்பட்டார்.

ரஷீத் பந்தை மேலேறி வந்து லெக் திசையில் ஆடினார் ஸ்மித், பந்து காற்றில் செல்ல ஸ்டீவ் ஃபின் அந்தரத்தில் ஒரு டைவ் அடித்து வலது கையை நீட்டி பிடிக்க முடியாத ஒரு கேட்சை பிடித்து அசத்தினார். அதே போல் ஆல்ரவுண்டர் ஆஸ்டன் ஆகருக்கு ஜேசன் ராய் பிடித்த ஒரு கேட்சும் அற்புதமானது.

ஏரோன் பின்ச் 60 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கேட்ச் கொடுத்தார்.

மேக்ஸ்வெல் (17), பெய்லி (25) ஆகியோரை மொயீன் அலி காலி செய்தார், மேக்ஸ்வெல் 2 ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார், 3-வது முயற்சியில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. வரும் வெள்ளிக்கிழமை லீட்ஸில் 4-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

ரஷீத் (2/41) அருமையாக பந்தை திருப்பினார், மொயீன் அலி (3/32) கடந்த போட்டியில் அடி வாங்கியதை நினைவில் கொண்டு சிறப்பாக வீச ஆஸ்திரேலியா 172/9 என்று ஆனது, கடைசியில் மேத்யூ வேட் (42) நின்று ஆட ஸ்கோர் 207 ரன்களை எட்டியது. ஸ்டீவ் ஃபின் அருமையான ஒரு கேட்சுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லியாம் பிளங்கெட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/3வது-ஒருநாள்-ஆஸ்திரேலியாவை-வீழ்த்தியது-இங்கிலாந்து/article7632996.ece?homepage=true

Link to comment
Share on other sites

4 வது ஒரு நாள் போட்டி இன்று லீட்ஸ் நகரில் நடைபெற்றது.  அந்த போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியா  299/7 (50.0 ov)
இங்கிலாந்து           304/7 (48.2 ov)
 
Link to comment
Share on other sites

மார்கன் விளாசல்: இங்கிலாந்து வெற்றி

Eoin Morgan, england

லீட்ஸ்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இயான் மார்கன் 92 ரன்கள் விளாச, இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி லீட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

மேக்ஸ்வெல் அபாரம்:

ஆஸ்திரேலிய அணிக்கு ஜோ பர்ன்ஸ் (2), ஆரோன் பின்ச் (15) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (5) ஏமாற்றினார். பின் இணைந்த ஜார்ஜ் பெய்லி, மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக ஆடியது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த போது மொயீன் அலி ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (85) சிக்கினார். மிட்சல் மார்ஷ் (17) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பெய்லி (75) நம்பிக்கை தந்தார். கடைசி நேரத்தில் மாத்யூ வேட், ஜான் ஹாஸ்டிங்ஸ் அதிரடியாக ரன் குவித்தனர். மார்க் உட் பந்தில் 2 சிக்சர் அடித்த வேட் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது. வேட் (50), ஹாஸ்டிங்ஸ் (34) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லி 3, மொயீன் அலி, பிளங்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மார்கன் அசத்தல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் (0) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் ஜாசன் ராய் (36) நிலைக்கவில்லை. ஜேம்ஸ் டெய்லர் (41), பென் ஸ்டோக்ஸ் (41) ஓரளவு கைகொடுத்தனர். அசத்தலாக ஆடிய கேப்டன் இயான் மார்கன் அரைசதம் கடந்தார். இவர் 92 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த பேர்ஸ்டோவ் (31) ஆறுதல் தந்தார். பிளங்கட் (17) சோபிக்கவில்லை. பின் இணைந்த மொயீன் அலி, டேவிட் வில்லி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர். ஹாஸ்டிங்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டேவிட் வில்லி வெற்றியை உறுதி செய்தார்.

இங்கிலாந்து அணி 48.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வில்லி (12), மொயீன் அலி (21) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் பட் கம்மின்ஸ் 4, மிட்சல் மார்ஷ் 2 விக்கெட்  கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2–2 என சமநிலை அடைந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் வரும் 13ல் நடக்கிறது.

http://sports.dinamalar.com/2015/09/1441992855/EoinMorganengland.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 3வது போட்டியில் வென்று தொடரை வெல்ல வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மேக்ஸ்வெல்லின் அரிய திறமை,கமின்ஸ் பந்துவீச்சைக் கடந்து மோர்கனால் இங்கிலாந்து வெற்றி

 
  • மோர்கன், டெய்லர் ரன் ஓடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
    மோர்கன், டெய்லர் ரன் ஓடும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
  • மேக்ஸ்வெல் பிடித்த அற்புதமான கேட்ச். | படம்: ராய்ட்டர்ஸ்.
    மேக்ஸ்வெல் பிடித்த அற்புதமான கேட்ச். | படம்: ராய்ட்டர்ஸ்.

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் 300 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி அபாரமாக வென்று தொடரை 2-2 என்று சமன் செய்தது.

இதில் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் 30/3 என்று ஆஸ்திரேலியா தத்தளித்துக் கொண்டிருந்த போது இறங்கி, விளாசித் தள்ளியதோடு, பிற்பாடு மோர்கன், லியாம் பிளெங்கெட் ஆகியோருக்கு அற்புதமான கேட்ச்களையும் பிடித்து சவாலாகத் திகழ்ந்தார்.

கிளென் மேக்ஸ்வெல் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 64 பந்துகளில் 85 ரன்கள் விளாச, பெய்லி (75), மேத்யூ வேட்(50 நாட் அவுட், 26 பந்து 3 பவுண்டரி 3 சிக்சர்) ஆகியோரின் ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகள இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 15.4 ஓவர்களில் 89/3 என்ற நிலையிலிருந்து கேப்டன் மோர்கன் (92 ரன்கள், 92 பந்து 8 பவுண்டரி 2 சிக்சர்) விளாச அவருக்கு ஸ்டோக்ஸ், டெய்லர் பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோர் தேவைப்பட்ட பங்களிப்பைச் செய்ய இங்கிலாந்து 48.2 ஓவர்களில் 304/7 என்று வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அலெக்ஸ் ஹேல்சை (0) இழந்தாலும், ஜேசன் ராய் (36 ரன்கள் 33 பந்துகள்), ஜேம்ஸ் டெய்லர் (42 பந்தில் 41 ரன்) மூலம் ஓரளவு எழுச்சி பெற்றது. ராய், ஹேல்ஸ் ஆகியோரை கமின்ஸ் வீழ்த்த டெய்லர் மார்ஷிடம் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து 15.4 ஓவர்களில் 89/3 என்று இருந்தது.

அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ், மோர்கனுடன் இணைந்தார். ஆஸ்திரேலியா அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் 9 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து சாத்துமுறை வாங்கினார். ஹேஸ்டிங்ஸ் என்ற பவுலர் 6.2 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்தார். மோர்கன், ஸ்டோக்ஸ் ஜோடி 91 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 54 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் அப்போது மார்ஷ் பந்தில் பவுல்டு ஆனார். பிறகு பேர்ஸ்டோ (31), மோர்கன் ஜோடி 6 ஓவர்களில் 5-வது விக்கெட்டுக்காக 58 ரன்களை விளாசித் தள்ளினர். ஸ்கோர் 40வது ஓவரில் 238/4 என்று மிகவும் எளிதான நிலைக்கு வந்தது.

ஆனால் அப்போது 92 ரன்களில் சதம் உறுதி என்று ஆடி வந்த மோர்கன், கமின்ஸ் பந்தை கட் ஆட, பந்து மேக்ஸ்வெலுக்கு தள்ளி சென்றது, ஆனால் வலது புறம் அந்தரத்தில் பாய்ந்து மிக அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார் மேக்ஸ்வெல். பிறகு லியாம் பிளெங்கெட்டின் ஷாட் ஒன்று சிக்ஸருக்குச் சென்று கொண்டிருந்ததை எழும்பி அபாரமாக கேட்சை பிடித்தார், ஆனால் பேலன்ஸ் தவறி எல்லைக் கோட்டுக்கு வெளியே பந்துடன் சென்று விடுவோம் என்று நினைத்த அவர் பந்தை உயரே விட்டெறிந்து பிறகு பேலன்சை மீண்டும் பெற்று விட்டெறிந்த பந்தை பிடித்தார்.

முன்னதாக ஸ்டோக்ஸ் 11 ரன்களில் இருந்த போது, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்தை எட்ஜ் செய்தார் பந்தை மேத்யூ வேட் பிடித்தார், ஆனால் தரையில் பட்டு பிடித்ததாக 3-வது நடுவர் ஜோ வில்சன் தீர்ப்பளித்தார். பிறகு மேத்யூ வேட், மொயீன் அலிக்கும் கேட்ச் ஒன்றை விட்டார்.

மோர்கன், பிளங்கெட் விக்கெட்டுகளை மேக்ஸ்வெல் தனது அரிய திறமையினால் கேட்ச் பிடித்து இல்லாத விக்கெட்டை விக்கெட்டாக மாற்றினாலும் மொயீன் அலி, டி.ஜே. வில்லே ஆகியோர் இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தனர், குறிப்பாக டி.ஜே வில்லே சிக்சருடன் இலக்கைக் கடந்தார்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சு கமின்ஸ் (4/49) நீங்கலாக மிக மோசமாக இருந்தது, நிறைய ஓவர் பிட்ச் பந்துகளை வீசினர். வெளுத்து வாங்கும் பந்துகள் அதிகம் விழுந்தன, குறிப்பாக ஹேஸ்டிங்ஸ், பேட்டின்சன் படுமோசம். ஸ்விங் இல்லை வேகம் இல்லை, இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் பிரச்சினைக்குள்ளாகவில்லை.

ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/மேக்ஸ்வெல்லின்-அரிய-திறமைகமின்ஸ்-பந்துவீச்சைக்-கடந்து-மோர்கனால்-இங்கிலாந்து-வெற்றி/article7645508.ece

Link to comment
Share on other sites

5 வது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்து  ஆடுகிறது.

இங்கிலாந்து  14/2 (4.2 ov)

Link to comment
Share on other sites

கிரிக்கெட் : தொடரை வென்றது ஆஸி.,
 
 
 

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஐந்தாவது ஒருநாள் போட்டி மான்செட்ரில் நடந்தது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 33 ஓவரில் 138 ரன்களுக்கு 'ஆல் அவுட்டானது'. ஆஸ்திரலேிய அணிக்கு மிட்சல் மார்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கவீரர் பின்ச் (70*) அரைசதம் அடித்து கைகொடுக்க, 24.2 ஓவரி்ல் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, ஒருநாள் தொடரையும் 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1341149

Link to comment
Share on other sites

மார்கனை தாக்கிய ‘பவுன்சர்’

Eoin Morgan, England, Cricket, Bouncer, Starc

மான்செஸ்டர்: ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் நிலைகுலைந்தார்.

கிரிக்கெட் அரங்கில் ‘பவுன்சர்’ அபாயம் இன்னும் ஓயவில்லை. நேற்று, 7வது ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் ‘பவுன்சராக’ வீசினார். மணிக்கு 90 மைல் வேகத்தில் வந்த பந்து, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனின் ‘ஹெல்மெட்’ மீது பலமாக தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர், சிறிது நேரம் அப்படியே நின்றார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. தலையில் காயம் ஏதும் ஏற்பட்டதா என சோதிக்கப்பட்டது. நிலை தடுமாறிய இவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு ரன் எடுத்த நிலையில் ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினார். இவருக்கு பதில் கேப்டனாக ஜேம்ஸ் டெய்லர் செயல்பட்டார்.

இரண்டாவது முறை      

ஏற்கனவே லார்ட்சில் நடந்த 3வது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் வீசிய பந்து மார்கன் ‘ஹெல்மட்டின்’ வலது காது பகுதியில் தாக்கியது.       

பயிற்சியாளர் ஆறுதல்      

கடந்த ஆண்டு சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியின் போது சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியுஸ் மரணமடைந்தார். இச்சம்பவத்தின் போது ஆடுகளத்தில் இருந்த வீரர்களில் ஸ்டார்க்கும் ஒருவர். நேற்றைய சம்பவத்தால் சோகமடைந்த ஸ்டார்க்கிற்கு, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பயிற்சியாளர் லேமன் ஆறுதல் கூறினர்.

http://sports.dinamalar.com/2015/09/1442163557/EoinMorganEnglandCricketBouncerStarc.html

கோப்பை வென்றது ஆஸி.,: இங்கிலாந்து அணி ஏமாற்றம்

Australia, England, One Day Cricket

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3–2 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.      

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.            

மார்ஷ் அசத்தல்: இங்கிலாந்து அணிக்கு ஜாசன் ராய் (4), அலெக்ஸ் ஹேல்ஸ் (4) மோசமான துவக்கம் தந்தனர். ஜேம்ஸ் டெய்லர் (12) ஏமாற்றினார். ஸ்டார்க் வீசிய ‘பவுன்சர்’ பந்து தலையில் தாக்கியதால் அதிர்ச்சியடைந்த கேப்டன் இயான் மார்கன் (1) ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆனார். மிட்சல் மார்ஷ் பந்தில் பேர்ஸ்டோவ் (10), மொயீன் அலி (5) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் (42) அரைசத வாய்ப்பை இழந்தார். மார்க் உட் (13), டாப்லே (6) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் நிதானமாக ஆடிய அடில் ரஷித் ஆறுதல் தந்தார்.            

138ல் சுருண்டது: இங்கிலாந்து அணி 33 ஓவரில் 138 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ரஷித் (35) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் மார்ஷ் 4, ஹாஸ்டிங்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.            

பின் சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜோ பர்ன்ஸ் (0), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (12) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய பின்ச் அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பெய்லி, டாப்லே பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.      

ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பின்ச் (70), பெய்லி (41) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுத்தது.  

ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் வென்றார்.

http://sports.dinamalar.com/2015/09/1442163353/AustraliaEnglandOneDayCricket.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.