Jump to content

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு


Recommended Posts

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு
இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவருக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படாமை காரணமாக இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவார்.

சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamil.srilankamirror.com/news/item/4243-2015-09-03-04-26-53

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து கொண்டு... கொட்டாவி, நித்திரை விடக் கூடாது என்று, 
சம்பந்தனுக்கு.... தெரியும் என்று நினைக்கின்றேன்.
அப்படி நித்திரை கொண்டால்.... சிங்களவர்களே, சம்பந்தனுக்கு  தண்ணீர் ஊற்றி.... எழுப்பி விடுவார்கள். 

முன்பு.... அமிர்தலிங்கம் இருந்தது போல், ஒப்புக்கு சப்பாணியாக அப் பதவியில் இருக்காமல்,
தமிழர்களுக்கு பிரயோசனமான வேலைகளை, சம்பந்தன் செய்ய முன்வர வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுக்கு.. இந்த நியமனம் ஒரு மாபெரும் வெற்றி என்றே கருதுகின்றேன்!

இனி எந்த மூஞ்சியை வைச்சுக்கொண்டு... வெளியால போய்த் தமிழன் இலங்கையில் புறக்கணிக்கப் படுகிறான் எண்டு சொல்லுறது?

பிரித்தானிய மகாராணி...அவுஸ்திரேலியாவின் தலைவராக  (Head of State) இருந்தாலும் ..அவுஸ்திரேலிய அரசியலில் ஒரு புல்லைக்கூடப் பிடுங்க முடியாது!

அது போலத் தான் சம்பந்தனின் பதவியும்...!:)

சிங்களமென்னும்  நதியில் கரையில் வளரும் ஒரு நாணல் புல்லாகத் தான் இருக்க முடியும்!

Link to comment
Share on other sites


எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தருக்கு வாழ்த்துகள்.தமிழர் தரப்பின் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்......... தீர்வு கிடைக்காது இருந்தாலும் உரிமைக்காக குரல் கொடுங்கோ......

Link to comment
Share on other sites

எதிர்க்கட்சித் தலைவராகிய இரா.சம்பந்தன் - வரலாற்றுக் குறிப்புகள் சில

எதிர்க்கட்சித் தலைவராகிய இரா.சம்பந்தன் - வரலாற்றுக் குறிப்புகள் சில- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் பற்றிய சில தகவல்கள...


•    1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார்.


•    சம்பந்தன்இ கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனேயாகும்


•    சம்பந்தன்இ யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார்இ குருணாகல் புனித அன்னம்மாள்இ திருகோணமலை புனித ஜோசப் மற்றும் மொரட்வ புனி செபஸ்தியார் கல்லூரிகளில் பாடசாலை கல்வியை தொடர்ந்தார்.


•    பின்னர்இ இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றி சட்டத்தரணியானார்.


•    சம்பந்தனின் மனைவியின் பெயர் லீலாவதி


•    சம்பந்தனுக்கு சஞ்சீவன்இ செந்தூரன் மற்றும் கிரிசாந்தி ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள்.


•    முதன் முதலாக 1977ம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றிற்கு தெரிவாகியிருந்தார்.


•    1956ம் ஆண்டு சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார்.


•    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வீ. செல்வநாயகம் 1963 மற்றும் 1970 களில் தேர்தலில் போட்டியிடுமாறு சம்பந்தனை அழைத்த போதிலுமை; அதனை அவர் நிராகரித்திருந்தார்.


•    1972ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சிஇ அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்இ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்இ ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணிஇ அகில இலங்கை தமிழர் பேரவை உள்ளிட்டன கூட்டாக இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.


•    1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.


•    எவ்வாறெனினும் 1983ம் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றை புறக்கணித்திருந்தனர்.


•    கறுப்பு ஜூலை தாக்குதல்இ 6ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்திருந்தனர்.


•    தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால்இ 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.


•    1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


•    அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.


சம்பந்தனின் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட விபரங்கள் வருமாறு
 
ஆண்டு    தொகுதி அல்லது மாவட்டம்     கட்சி    வாக்குகள்    வெற்றி தோல்வி
1977    திருகோணமலை                        த.வி.கூ     ♠  15144        வெற்றி
1989    திருகோணமலை மாவட்டம்    த.வி.கூ     ♠6048        தோல்வி
2001    திருகோணமலை மாவட்டம்    த.தே.கூ    ♠40110      வெற்றி
2004    திருகோணமலை மாவட்டம்    த.தே.கூ    47735        வெற்றி
2010    திருகோணமலை மாவட்டம்    த.தே.கூ   ♠24488      வெற்றி
215    திருகோணமலை மாவட்டம்    த.தே.கூ     ♠33834      வெற்றி

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123569/language/ta-IN/article.aspx

 

உட்கார் ஐஸே..! குரங்கு போல செயற்படாதே..! பாராளுமன்றத்தில் பிரதமர் காட்டம்

ranil1

புதிய எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நாடாளுமன்றத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. 
இதன்போது சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 56 பேர் கையெழுத்திட்ட கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாத விமல் வீரசன்ச தெரிவித்தார். எனவே சம்பந்தனுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நியமனம் எவ்வாறு செல்லுபடியாகும் எனவும் கேள்வியெழுப்பினார்.

அவ்வாறானதொரு கடிதம் தமக்குக் கிடைக்கவில்லையென சபாநாயகர் பதிலளித்தார். இதன்போது கருத்துவெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனை சபாநாயகர் தெரிவித்துவிட்டார் எனவும், இனி அதில் மாற்றங்களைக் கொண்டுவர இயலாது எனவும் தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்தும் பிரதமர் உரையாற்றும்போது மகிந்தவின் ஆதரவு அணியினர் கூச்சலிட்டனர்.

இதன்போது கோபமடைந்த பிரதமர் ரணில் ”ஐஸே உட்கார். குரங்குகள் போல செயற்பட வேண்டாம். முந்தைய பாராளுமன்றம் போல இனிமேல் செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது” என்றார்.

http://www.colombomirror.com/tamil/?p=5638

 

 

Link to comment
Share on other sites

சிறீலங்காவில் அனேகமாகப் புத்தகோவில்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் குரங்குக் கூட்டங்களைக் காணலாம்.

thai.macaque-monkeys-lopburi090819r600.j

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பதவியில்லை, பொறுப்பு. உணர்ந்து செயல்படுங்கள்.

 

Link to comment
Share on other sites

இது பதவியில்லை, பொறுப்பு. உணர்ந்து செயல்படுங்கள்.

 

என்ன கோசான் மேலால சொல்லீட்டு போய்டீங்க. இதை எந்த வகையில் பிரியோசனப்படுத்தலாம் என்று நினைக்குறீர்கள்?

ஜேவிபி உடன் கூட்டமைப்பு கைகோத்திருக்கின்றது போல தெரிகின்றது, அது பற்டி என்ன  நினைக்குறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மீண்டும் ஒரு தமிழன் இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கின்றார். வரலாறு மீண்டும் ஒரு வட்டப்பாதையில் சுழல்கின்றது.
அடுத்து........

Link to comment
Share on other sites

சிங்கள அரசுக்கு.. இந்த நியமனம் ஒரு மாபெரும் வெற்றி என்றே கருதுகின்றேன்!

இனி எந்த மூஞ்சியை வைச்சுக்கொண்டு... வெளியால போய்த் தமிழன் இலங்கையில் புறக்கணிக்கப் படுகிறான் எண்டு சொல்லுறது?

 

 

நாம் எல்லா விடயங்களிலும் இப்படித்தானே செய்கின்றோம்.
 
சிங்கள நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லி அகதி அந்தஸ்து பெற்று பின் அதன் மூலம் வெளிநாட்டு   குடியுரிமையையும் பெற்று விட்டு மீண்டும் சிங்கள நாட்டுக்கு சென்று பாதுகாப்பாக திரும்பி வந்து  மேற்குக்கு நாம் தவறான சமிக்ஞ்சைகளை கொடுப்பது போன்று தான் இதுவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுக்கு.. இந்த நியமனம் ஒரு மாபெரும் வெற்றி என்றே கருதுகின்றேன்!

இனி எந்த மூஞ்சியை வைச்சுக்கொண்டு... வெளியால போய்த் தமிழன் இலங்கையில் புறக்கணிக்கப் படுகிறான் எண்டு சொல்லுறது?

பிரித்தானிய மகாராணி...அவுஸ்திரேலியாவின் தலைவராக  (Head of State) இருந்தாலும் ..அவுஸ்திரேலிய அரசியலில் ஒரு புல்லைக்கூடப் பிடுங்க முடியாது!

அது போலத் தான் சம்பந்தனின் பதவியும்...!:)

சிங்களமென்னும்  நதியில் கரையில் வளரும் ஒரு நாணல் புல்லாகத் தான் இருக்க முடியும்!

உண்மை  தான் அண்ணா

ஆனால் இதன் மறுபக்கம் ஒன்றுள்ளது

அதை நாம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பது தான் கேள்வியே...

மறுபக்கம்

1- இலங்கையில் இரண்டாவது சக்தி தமிழர்கள் என்று இது கூறும்

3- எதிர்கட்சித்தலைவர் பேசும்போது குறுக்கிடாது மதிப்பளிப்பார்கள்

3- சர்வதேசங்களுக்கு செல்வதற்கான அழைப்புக்களும் சந்தர்ப்பங்களும் ராதந்திரரீதியில் வரும்

4- தமிழர்கள் இனபேதமற்றவர்கள் நல்லதையே நினைப்பவர்கள் என்பதை சிங்களவர்களுக்கும் செயல்களால் காட்டமுடியும்.....

இப்படிச்சில..

கூட்டமைப்புக்கு இது ஒரு சவால்

பார்க்கலாம்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லா விடயங்களிலும் இப்படித்தானே செய்கின்றோம். 
சிங்கள நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லி அகதி அந்தஸ்து பெற்று பின் அதன் மூலம் வெளிநாட்டு   குடியுரிமையையும் பெற்று விட்டு மீண்டும் சிங்கள நாட்டுக்கு சென்று பாதுகாப்பாக திரும்பி வந்து  மேற்குக்கு நாம் தவறான சமிக்ஞ்சைகளை கொடுப்பது போன்று தான் இதுவும்

என்னைப்பொறுத்தளவில் வெளி நாட்டுக்குடியுரிமை என்பது எனக்குள்ள ஒரு பாதுகாப்பு. இலங்கைக்கு செல்லும் போது வாழும்  நாட்டில் ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்து விட்டுச் சென்றால் இன்னும் அதிக நம்பிக்கை வரும்.
அரேபிய நாட்டில் தொழில் செய்யும் இலங்கையர்களுக்கு (சிங்களவர்கள் உட்பட)  நடக்கும் அநீதிகளுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கும் சிறி லங்காவிற்கும்
தனது குடியுரிமையை வைத்திருக்கும் ஒருவருக்கு வேறு நாட்டில் நடக்கும் அநீதிகளுக்காக உடனே நடவடிக்கையில் இறங்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

ஜேவிபி யின் போக்கில் அனுர குமார வரவின் பின் ஒரு நல்லமாற்றம் காணப்படுகிறது.

ஒன்று பட்ட இலங்கைக்குள் நாம் கோருவது நியாயமான தீர்வு இது ஒரு போதும் பிரிவினைக்கு வழிகோலாது என்றுணர்த்த, சிங்கள மக்களுக்கு எடுத்தியம்ப இது ஒர் வாய்ப்பு.

ஜனாதிபதி, பிரதமர் சிங்களவர்க்கு மட்டுமில்லை முழுநாட்டுக்கும் பொதுவாய் செயல் படவேண்டும் என்று கோரும் நாம். எதிர்கட்சி தலைவராய் வரும் போதும், எதிரிக் கட்சியாய் இல்லாமல், பொறுப்பான, பொதுவான எதிர்கட்சியாய் செயல்படவேண்டும்.

நாம் கோரும் அதிகாரங்கள் சிங்கள மக்களின் நலனை ஒரு போதும் பாதிக்காது. இவர்களுக்கு காணி, பொலீஸ் அதிகாரத்தை கொடுத்தால் ஈற்றில் அது தனிநாட்டில் போய் முடியும் என்று சிங்கள மக்கள் மத்தியில் எழுப்பப் பட்டுள்ள பொய்விம்பம்தான் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்காமைக்கு மூல காரணம்.

இப்பதவி மூலம் இந்த பிம்பத்தை கணிசமாய் உடைத்தாலே தீர்வு நோக்கிய பயணம் அரைவாசி முடிஞ்ச மாரித்தான்.

தீர்வு வந்திடும் போலதான் கிடக்கு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.............35 வருட கனவு கனிந்து விட்டது.

Link to comment
Share on other sites

சேவயர்,

ஜேவிபி யின் போக்கில் அனுர குமார வரவின் பின் ஒரு நல்லமாற்றம் காணப்படுகிறது.

ஒன்று பட்ட இலங்கைக்குள் நாம் கோருவது நியாயமான தீர்வு இது ஒரு போதும் பிரிவினைக்கு வழிகோலாது என்றுணர்த்த, சிங்கள மக்களுக்கு எடுத்தியம்ப இது ஒர் வாய்ப்பு.

ஜனாதிபதி, பிரதமர் சிங்களவர்க்கு மட்டுமில்லை முழுநாட்டுக்கும் பொதுவாய் செயல் படவேண்டும் என்று கோரும் நாம். எதிர்கட்சி தலைவராய் வரும் போதும், எதிரிக் கட்சியாய் இல்லாமல், பொறுப்பான, பொதுவான எதிர்கட்சியாய் செயல்படவேண்டும்.

நாம் கோரும் அதிகாரங்கள் சிங்கள மக்களின் நலனை ஒரு போதும் பாதிக்காது. இவர்களுக்கு காணி, பொலீஸ் அதிகாரத்தை கொடுத்தால் ஈற்றில் அது தனிநாட்டில் போய் முடியும் என்று சிங்கள மக்கள் மத்தியில் எழுப்பப் பட்டுள்ள பொய்விம்பம்தான் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்காமைக்கு மூல காரணம்.

இப்பதவி மூலம் இந்த பிம்பத்தை கணிசமாய் உடைத்தாலே தீர்வு நோக்கிய பயணம் அரைவாசி முடிஞ்ச மாரித்தான்.

தீர்வு வந்திடும் போலதான் கிடக்கு.

 

 

இதில் இரண்டு பெரிய தடைகள் இருக்கின்றன

1. இராஜதந்திரம் என்ற பெயரில் சிங்களவனுக்கு அல்லது இந்தியஅரசு போன்ற நரிகளுக்கு தொடர்ந்தும் விலைபோகாமல் இருக்கவேண்டும்.

2. கிராமமட்டத்தில் மக்களுக்கு தொடர்தும் தெளிவுபடுதப்படவேண்டும். சைக்கிளின் தோல்வி மக்களின் தெளிவை எடுத்துக்காட்டுகின்றது, இருந்தபோதும் 4 தொடக்கம் 5 MP சீட் இழக்கப்பட்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் பல நல்ல மாற்றங்கள் உருவாகி வருவது நல்லதொரு அறிகுறியாக தென்படுகின்றது. குறிப்பாக கோசான் சொன்னது போல ஜேவியின் போக்கில் சோமவங்ச, விமல் ஆகியோரின் வெளியேற்றத்துக்கு பின்னர் பாரிய மாற்றம் உருவாகி இருக்கின்றது. "அவர்கள் அப்பிடித்தான்" என்ற போக்கில் "அவர்களை" விட்டுவிட்டு சம்பந்தர் செயல்பட்டுக்கொண்டுருக்க வேண்டும். சுமந்திரன் இருப்பது இன்னும் சம்பந்தருக்கு பலம். போகிற போக்கில் கஜேந்திரகுமார் கூட "அவர்களை" கழற்றி விட்டால் கூட ஆச்சரியம் இல்லை.:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.

இப்போ கூட்டமைப்பு செய்யப்போவது ரொம்ப கடினமான வேலை. பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இதில் இரண்டு பெரிய தடைகள் இருக்கின்றன

1. இராஜதந்திரம் என்ற பெயரில் சிங்களவனுக்கு அல்லது இந்தியஅரசு போன்ற நரிகளுக்கு தொடர்ந்தும் விலைபோகாமல் இருக்கவேண்டும்.

2. கிராமமட்டத்தில் மக்களுக்கு தொடர்தும் தெளிவுபடுதப்படவேண்டும். சைக்கிளின் தோல்வி மக்களின் தெளிவை எடுத்துக்காட்டுகின்றது, இருந்தபோதும் 4 தொடக்கம் 5 MP சீட் இழக்கப்பட்டிருக்கின்றது.

நல்ல அனுமாணம்.. 

இருந்தாலும் இருபது என்று சம்பந்தர் கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லி இருந்தார்.

நடைமுறையில் பார்த்தால் 18 சாத்தியம்.

 

 

Link to comment
Share on other sites

உண்மை  தான் அண்ணா

ஆனால் இதன் மறுபக்கம் ஒன்றுள்ளது

அதை நாம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பது தான் கேள்வியே...

மறுபக்கம்

1- இலங்கையில் இரண்டாவது சக்தி தமிழர்கள் என்று இது கூறும்

3- எதிர்கட்சித்தலைவர் பேசும்போது குறுக்கிடாது மதிப்பளிப்பார்கள்

3- சர்வதேசங்களுக்கு செல்வதற்கான அழைப்புக்களும் சந்தர்ப்பங்களும் ராதந்திரரீதியில் வரும்

4- தமிழர்கள் இனபேதமற்றவர்கள் நல்லதையே நினைப்பவர்கள் என்பதை சிங்களவர்களுக்கும் செயல்களால் காட்டமுடியும்.....

இப்படிச்சில..

கூட்டமைப்புக்கு இது ஒரு சவால்

பார்க்கலாம்

 

இதுதான் இப்பொழுது தமிழரால் நாட்டில் இருந்துகொண்டு செய்யக்கூடிய விடயம். பார்க்கலாம்

இதட்காகதான் கூட்டமைபுக்கு போடச்சொல்லி குத்திமுறிந்தோம்

Link to comment
Share on other sites

சம்பந்தருக்கு வாழ்த்துக்கள் .

சம்பந்தர் எதிர்கட்சி தலைவராக வந்ததற்கும் தமிழர்கள் புறக்கணிக்கபடுவதை வெளியில் போய் எப்படி முகத்தை காட்டுவதற்கும் என்ன சம்பந்தம் .

சம்பந்தர் எதிர்கட்சி தலைவராக வராவிட்டால் தமிழர்களை புறக்கணிக்கின்றார்கள் என்று ஆயிரம் அலுவல்கள் பார்க்க இருந்தோம் இப்ப எல்லாம் குழம்பி போச்சு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயாவுக்கு மனம் நிறைந்த வாழ்துக்ககள்.
எல்லாம் நன்மைக்கே.

கூட்டமைப்பை எதிர்வரும் காலங்களிலும் முன்னேற்றகரமாக நகர்த்திச் சொல்வதற்கு ஒருவரை தெரிவு செய்து செயல் படுவார்கள் என்று  நம்புகிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி?
சம்பந்தர் ஐயாவின் வயது தான் என்னை மேற்கண்ட வரிகளை எழுதத் தூண்டியது.
ஐயா அவர்களால் இந்த பதவியை தொடர முடியாது போகுமிடத்தில், தற்போதைய பதவி யாரை அல்லது எந்த கட்சியை நாடிச் செல்லும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இராஜதந்திரக் கடவுச்சீட்டுடன் உலகெல்லாம் வலம்வந்து தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வை எடுத்துத் தர சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைக் கோருவார். அப்படியே சொந்த பந்தங்களையும் பார்த்துக்கொள்வார்.

முன்னர் இலவசமாக சந்திக்கமுடிந்தது.

இனிக் கட்டணம் செலுத்தி இராப்போசன விருந்தில்தான் சந்திக்கமுடியும்tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

போராடியதன்  பலனுக்காதல் ஏதாவது ஒரு அரசியல் தீர்வை சிங்களத்திடம் இருந்து பெறாமல் சிங்கள அரச யாப்பை ஏற்று  எதிர்க்கட்சித்தலைவராக பதவி ஏற்றது  துரோகதனம். இறந்தவர்களையும்  ,போராடி மடிந்தவர்களையும் கொச்சை படுத்தி விட்டார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்கமாட்டோம். எங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை  என்று .ஒற்றை ஆட்சி முறையை ஏற்கவில்லை  என்று மறுத்துருந்தால்    35 வருடம் போராடியதற்கான காரணத்தை நியாய படுத்தி இருக்கலாம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாழ்வு முடிந்து விட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கூட்டமைப்பை எதிர்வரும் காலங்களிலும் முன்னேற்றகரமாக நகர்த்திச் சொல்வதற்கு ஒருவரை தெரிவு செய்து செயல் படுவார்கள் என்று  நம்புகிறேன்.

உங்களிடம் ஒரு கேள்வி?
சம்பந்தர் ஐயாவின் வயது தான் என்னை மேற்கண்ட வரிகளை எழுதத் தூண்டியது.
ஐயா அவர்களால் இந்த பதவியை தொடர முடியாது போகுமிடத்தில், தற்போதைய பதவி யாரை அல்லது எந்த கட்சியை நாடிச் செல்லும்?

இதென்ன குழந்தைப்பிள்ளை கேள்வியெல்லாம் கேட்டுக்கொண்டு?????
வேறை ஆர் விண்ணன் சுமந்திரன் தான்!!!!!  :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.