Jump to content

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான்


Recommended Posts

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 1

 
 
ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெவ்வேறு விதமான தலைப்பாகைகளுடன் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள். (கோப்பு படம்)
ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெவ்வேறு விதமான தலைப்பாகைகளுடன் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள். (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான் நமக்கு அப்படியொன்றும் அந்நியப் பிரதேசம் அல்ல. ஒரு காலத்தில் அதன் ஒரு பகுதி நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் கையில் இருந்தது. வேறொரு காலத்தில் இந்தியாவின் சில பகுதிகள் ஆப்கானியருக்கு வசப்பட்டது.

பாகிஸ்தான் மட்டும் உருவாகவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நமது அண்டை நாடு! துரியோதனனின் மாமன் சகுனியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? அவன் இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தார தேசத்து இளவரசன். ரிக்வேதம் தோன்றியது ஆப்கானிஸ்தானில் என்கிறார்கள்.

கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கஜினி முகம்மது நமக்கு அறிமுகமானவர்தான். அவர் பெயரில் கஜினி எப்படி ஒட்டிக் கொண்டது? கஜினி என்ற பகுதியை ஆண்டு வந்ததால்தான். கஜினி என்பது ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு பகுதி.

‘‘இந்தியா என் கடும் எதிரி. அமெரிக்காவும் இந்தியாவும்தான் என் முதல் எதிரிகள்’’ என்ற ஒசாமா பின்லேடன் தன் தலைமறைவு வாழ்க்கைக்குப் பெரும்பாலும் தேர்ந்தெடுத்த நாடு ஆப்கானிஸ்தான்தான். காஷ்மீர் தீவிரவாதிகளால் இந்திய விமானம் கடத்தப்பட்டு பேரம் பேசப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த இடம் காந்தஹார் - இன்றைய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி.

வேறென்ன வேண்டும் நாம் ஆப்கானிஸ்தானைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு?

ஆப்கானிஸ்தான் சரித்திரத்தை முழுமையாக எழுதுவது இருக்கட்டும், நினைத்துப் பார்ப்பதேகூட பிரமிப்பை ஏற்படுத்தும். இதற்கு முன் நியூசிலாந்தைப் பற்றி எழுதியபோது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மட்டுமே குடியேற்றம் நிகழ்ந்த நாடு என்று குறிப்பிட்டோம். ஆப்கானிஸ்தான்? ஐம்பதாயிரம் வருடங்களுக்குக் முன்பாகவே அங்கு மனிதர்கள் குடியேறிவிட்டனர். சிந்துசமவெளி நாகரிகம் பற்றி இன்றைக்கு வியந்து பேசுகிறோம். அப்போது அங்கு வாழ்ந்தவர்களுக்கு உணவுப் பயிர்கள் தயாரானதே ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் என்று குறிப்பிடும்போது நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். கி.பி.1747 அல்லது அதற்குப் பின்னால் வரும் வருடங்களில் இப்படிக் குறிப்பிடும்போது அது நவீன ஆப்கானிஸ்தானைக் குறிக்கிறது. அதற்கு முன்னால் உள்ள காலகட்டத்தைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் எனும்போது தற்போதைய ஆப்கானிஸ்தான் மற்றும் அதைக் சூழ்ந்த பகுதிகள் ஆகியவற்றை இணைத்துதான் குறிப்பிடுகிறோம்.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பத்தான் என்று ஓர் இனம் உண்டு. இவர்களை ஆப்கானிஸ்தானில் பஷ்டூன் என்று குறிப்பிடுகிறார்கள். நவீன ஆப்கானிஸ்தானின் முதல் மன்னர் அகமது ஷா. இவர் பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர். 1978-ல் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் கைப்பற்றும் வரை பஷ்டூன் இனத்தவர்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்தார்கள். எனவே தாங்கள்தான் உண்மையான ஆப்கானியர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு.

பஷ்டூன் இனத்தவர் உயரமாக, சிவப்பாக, கருப்பு அல்லது பழுப்பு வண்ணத் தலைமுடியுடன் காணப்படுகிறார்கள். கண்களும் பழுப்பு வண்ணத்தில் இருக்கும். இவர்களின் மொழியான பஷ்டு என்பது பாரசீக மொழியோடு தொடர்பு கொண்டது. ஆப்கானிஸ்தானைப் பற்றி எழுதும்போது ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றி இவ்வளவு விளக்கம் ஏன்? காரணம் உண்டு. பஷ்டூன்கள் பற்றி மட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வேறு சில இனத்தவரைப் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் ஆப்கானிய சரித்திரத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

அந்த நாட்டின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டதில் இந்தப் பல இனங்களுக்கு நடுவே நிலவிய பகைமைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆப்கானிஸ்தானில் வாழும் அத்தனை பேருமே முஸ்லிம்கள் என்று கூறிவிடலாம். துல்லியமாகச் சொல்வதானால் ‘99 சதவிகிதத்துக்கும் அதிகமாக’.

ஆனால் இந்த முஸ்லிம்களில் இருபதுக்கும் மேற்பட்ட இனங்கள். ஒவ்வொரு இனத்தவரையும் பார்த்தாலே கண்டுபிடித்துவிட முடியும். காரணம் அவர்களின் தலைப்பாகை. ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு விதமான டர்பன். இவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் தீராப் பகைவர்கள்.

பஷ்டூன்களுக்கும் ஹசாராக்களுக்கும் எப்போதுமே ஆகாது. பஷ்டூன்கள் இஸ்லாமின் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஹசாராக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். போதாதா? தவிர ஹசாராக்களுக்கு அடர்த்தியான, நீளமான தாடி கிடையாது. இதனாலேயே பிற முஸ்லிம்களின் வெறுப்புக்கு அவர்கள் ஆளாவதுண்டு. ஹசாராக்கள் மங்கோலிய வம்சாவளியில் வந்தவர்கள் என்பதாலும் பார்ப்பதற்கு அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பஷ்டூன்கள் சுமார் 42 சதவிகிதம்பேர். ஹசாராக்கள் 15 சதவீதம். இரண்டுக்கும் நடுவே உள்ளவர்கள் தஜிக்குகள். தஜிக் இனத்தவர் இரானிய மூதாதையர்களைக் கொண்டவர்கள். இவர்களில் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்களும் உண்டு. ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களும் உண்டு. ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானின் பின்னடைந்த மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்ந்துவர, காபூல், ஹெராத் போன்ற நகரப் பகுதிகளில் சன்னி பிரிவினர் வசிக்கிறார்கள். படிப்பிலும் சிறந்து பணத்திலும் கொழிக்கிறார்கள் இவர்களில் அநேகம் பேர். ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 26 சதவிகிதம் பங்கு வகிப்பது தஜிக்குகள்தான்.

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான தஜிகிஸ்தான் தேசத்தில் பெரும்பான்மையாக வசிப்பது தஜிக்குகள்தான். ஆனால் அங்கு வசிப்பதைவிட மிகமிக அதிகம்பேர் ஆப்கானிஸ்தானில்தான் வசிக்கிறார்கள் (பாகிஸ்தானைவிட இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களே, அதுபோலத்தான்).

போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் எக்கச்சக்கம். வடமேற்குப் பகுதியில் சீனா. கிழக்கிலும், தெற்கிலும் பாகிஸ்தான். மேற்கில் இரான். வடக்குப் பக்கம் உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் (இந்த மூன்றும் இப்போது தனி நாடுகள். முன்பு ஒன்றிணைந்த சோவியத் யூனியனின் பகுதிகள்). இதன் காரணமாகவும், ஆப்கானிஸ்தான் அரசியல் பல பரபரப்புகளுக்கு உள்ளானது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-1/article6695029.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 2

 
ஆப்கானிஸ்தான் மன்னர்களின் இந்திய படையெடுப்பை காட்டும் ஓவியம்.
ஆப்கானிஸ்தான் மன்னர்களின் இந்திய படையெடுப்பை காட்டும் ஓவியம்.

மூன்று இனங்களைப் பற்றிப் பார்த்தோம். மற்றொரு இனமான உஸ்பெக் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஆப்கானிய மக்கள் தொகையில் 6 சதவீதம் உள்ளவர்கள். உஸ்பெக்குகள் இந்துகுஷ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். துருக்கியர்களைப் போல காட்சியளிக்கிறார்கள். பிற ஆப்கானிய இனத்தவர்களைவிட அதிக வெளுப்பாக காட்சியளிக்கிறார்கள். இவர்களும் மங்கோலிய மூதாதையர்களைக் கொண்டவர்கள்.

ஆனால் இப்போதைக்கு எந்த ஆப்கானியரின் உடல் பாகங் களைக் கொண்டும் அவரது இனத்தைக் கண்டுபிடிப்பது சரியல்ல. காரணம் காலப் போக்கில் நடைபெற்ற கலப்புத் திருமணங்கள். ஆனால் தலைப்பாகைகள் இன்னமும் இந்த இனங்களை தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பல வட்டாரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு உள்ளூர் தலைவர். ஆங்கிலத்தில் Warlords. தாதாக்கள் என்று குறிப்பிட்டாலும் தப்பில்லை. இவர்களை ஆப்கானிஸ்தானின் கலவர ஊற்றுகள் எனலாம்.

1747 இதுதான் நவீன ஆப்கானிஸ்தான் உருவான ஆண்டு. இதற்கு மன்னராக முதன் முதலில் பொறுப்பேற்றவர் அகமது ஷா. அப்படி என்ன இவருக்கு சிறப்பு? காரணம் உண்டு.

இந்தியாவின் செல்வங்களை (மயிலாசனம், கோஹினூர் போன்றவை) கொள்ளயடித்துச் சென்றவர் பாரசீக (இன்றைய இரான்) மன்னர் நாதிர் ஷா. அவர் கொலை செய்யப்பட்ட வுடன் அவரது ராணுவ அதிகாரி யாக இருந்த அகமது ஷா பாரசீகத்திலிருந்து வெளியேறி னார், (ஆப்கானிஸ் தானிலுள்ள) காந்தஹாரை அடைந்தார். கூடவே கோஹினூர் உட்பட மதிப்புமிக்க செல்வங்களை அள்ளிச் சென்றார்.

யாரை அடுத்த காந்தஹார் பகுதியின் பஷ்டூன் இனத்தலை வராகத் தேர்ந்தெடுப்பது என்று அந்தக் குழு யோசித்தது. அனைவரும் தேர்ந்தெடுத்தது அகமது ஷாவைத்தான். திறமையான போர்வீரர். ஆயிரக் கணக்கான குதிரைப்படை வீரர்கள் இவரிடம். கொள்ளையடித்த சொத்துகள் வேறு. பிறகென்ன? தலைவரானார்.

அகமது கான் என்று இருந்த தன் பெயரை அகமது ஷா என்று மாற்றிக் கொண்டார் (ஆப்கானிஸ் தானில் மன்னர்களை ஷா என்று அழைப்பது வழக்கம்).

‘’இனி பாரசீகத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆப்கானிஸ்தான் தனி நாடு’’ என்று முழக்கம் செய்தார். பின்னர் கஜினி பகுதியை வசப்படுத்தினார். காபூலை தன் வசம் கொண்டு வந்தார். சிந்து மாகாணமும், சிந்துநதிக்கு மேற்கே இருந்த வட இந்திய பரப்புகளும் தானாகவே அவர் கைக்கு வந்து சேர்ந்தன. (தாக்குதலிலிருந்து தப்புவதற்காக அளிக்கப்பட்ட தானம்).

நாதிர்ஷாவின் பேரன் ஷாருக்கான். ஹெராத் நகரை இவன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடனும் போர் தொடுத்தார் அகமது ஷா. ஒருவருட முற்றுகை. பல உயிர்கள் பிரிந்தன. இறுதி வெற்றி அகமது ஷாவுக்குதான்.

துருக்மென், தஜிக், ஹசாரா, உஸ்பெக் ஆகிய பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களும் அகமது ஷாவின் ஆளுகைக்கு உட்பட்டது. (இப்போது புரிகிறதா இந்த இனங்களின் தொடர் விரோதத்தின் வேர் எது என்று?).

அகமது ஷாவின் பார்வை அடுத்ததாக இந்தியாவின் பக்கம் திரும்பியது. பலமுறை படையெடுத்தார். காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் டில்லியை முற்றுகையிட்டார். ஏற்கனவே அங்கு ஒளரங்கசீப் காலம் முடி வடைந்து மொகலாயப் பேரரசு தேய்பிறையில் இருந்தது. ‘‘என் தலைமையை அங்கீகரியுங்கள் உங்கள் ஆட்சியைத் தொடருங்கள்’’ என்று அவர் கூறியதை மொகலாயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காலப்போக்கில் மராத்தியர்கள் தங்கள் ஆட்சியை பூனாவில் நிலை நிறுத்திக் கொண்டு வடக்கிலும் பரப்பத் தொடங்கினார்கள். அகமது ஷா 1757ல் மராத்தியர்களுடன் போரிட்டார். ஆனால் மராத்திய சேனை வென்றது. ‘’மராத்தியர்கள் மீதான இஸ்லாமியர்களின் புனிதப் போர் தொடங்கியது’’ என்று அலறினார் அகமது ஷா.

மீண்டும் 1761ல் பானிபட் ஒரு கடும் போரைச் சந்தித்தது. இம்முறை பஷ்டூன்கள் மட்டுமல் லாமல் பிற இஸ்லாமியப் பிரிவினரும் அகமது ஷாவிற்குப் பின்னால் அணிவகுத்தார்கள். மராத்திய ராணுவம் தோல்வி கண்டது.

ஆனால் சீக்கியர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். பஞ்சாபின் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். அகமது ஷா உக்கிரம் அடைந்தார். சீக்கியர்களின் பகுதியாக இருந்த லாகூரை சின்னாபின்னமாக்கினார். அமிர்தசரஸில் தங்கியிருந்த சீக்கியர்களைக் கொன்று குவித் தார். அவர்கள் புனிதத்தலங் களில் பசுவின் ரத்தத்தை ஊற்றச் செய்தார். கொடுங்கோன்மையின் சிகரமாகவே மாறினார். மீண்டும் காந்தஹாருக்குத் திரும்பினார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் பஞ்சாபை மீண்டும் சீக்கியர்கள் மீட்டுவிட்டனர்.

காந்தஹார்தான் தன் சாம்ராஜ் யத்தின் தலைநகர் என்பதில் மிக நிச்சயமாக இருந்தார் அகமது ஷா. ஆனால் அவர் இறந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காபூலை அந்த ராஜ்யத்தின் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர் அவரது வாரிசுகள்.

அகமது ஷா இறந்ததும் அவரது இரண்டாவது மகன் தைமூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் இறந்தவுடன் வாரிசு உரிமை போர் உச்சத்தை அடைந்தது. தைமூரின் அத்தனை மகன்களும் அரச பதவிக்கு ஆசைப்பட்டார்கள். இவர்களில் தன் பலம் காரணமாக ஐந்தாவது மகன் ஜமான் ஷா ஆப்கானிஸ்தானின் மன்னரானார். தனக்கு உதவியாக இருந்த பயின்தா கான் என்பவர் தனக்குத் துரோகம் செய்வதாக அறிந்து கொண்டவுடன் அவரைக் கொன்றார் ஜமான்.

பயின்தாகனின் மகன் இரானுக்குத் தப்பியோடி அங்கு வசித்த மகமூது ஷாவுக்கு ஆதரவு தெரிவித்தான். இந்த மகமூது, ஜமானின் அண்ணன்தான். அவன் மீண்டும் படையெடுத்து தன் தம்பியைத் தோற்கடித்து மன்னன் ஆனான். சீக்கிரமே அவனது பிற சகோதரர்கள் அவனைப் பதவியிலிருந்து கீழிறக்கினர். ஷுஜா ஷா என்ற தம்பி ஆட்சியைக் கைப்பற்றினான்.

1809 ஜூன் 6 அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஷுஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ‘‘எந்த வெளிநாட்டுப் படை இந்த இரு நாடுகளில் ஒன்றில் நுழைந்தாலும் மற்றொரு நாடு அதை வெளியேற்ற வேண்டும்’’ என்றது அந்த ஒப்பந்தம். இதுதான் ஐரோப்பிய நாடு ஒன்றுடன் ஆப்கானிஸ்தான் செய்து கொண்ட முதல் ஒப்பந்தம். காட்சிகள் மாறத்தொடங்கின.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-2/article6698516.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 3

 
 
தோஸ்த் முகமதுகான் | படம்: என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
தோஸ்த் முகமதுகான் | படம்: என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

தைமூரின் மகன்களுக்கிடையே உண்டான அரசுரிமைப் போட்டி நின்றபாடில்லை. தம்பி ஷுஜாவை துரத்திவிட்டு அண்ணன் மகமுது ஷா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஒன்பது வருடங்கள் ஆட்சி செய்தார். ஒரு பிரச்சினை உரு வானதால், முன்பு ஜமான்ஷாவைத் தோற்கடிக்க தனக்கு உதவி செய்த ஃபதேகான் என்பவரின் கண்களைக் குருடாக்கினார்.

பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பது தொடர்கதையானது. குருடாக்கப்பட்ட ஃபதேகானின் தம்பி தோஸ்த் முகமது கான் காலப்போக்கில் துரானி வம்சத்த வரை ஒட்டுமொத்தமாக வென்று ஆப்கானிஸ்தானின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார்.

கடுமையாக நடந்து கொண்ட தால், தோஸ்த் முகமதுகான் அரி யணை ஏறிய பிறகு குழப்பங்கள் குறைந்தன. ஆனால் புதிய தலைவலிகள் தொடங்கின. பெஷாவர் பகுதி தங்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்று சீக்கியர்கள் வலிமையாக கேட்கத் தொடங்கினர்.

அதுமட்டுமல்ல. பஷ்டூனிஸ் தான் என்று அழைக்கப்பட்ட பகுதி கைபர் கணவாய்க்கு கிழக்கே இருந்தது. பஷ்டூன்கள் அதிகம் தங்கிய இடம் அது. அந்தப் பகுதியை சீக்கியர்கள் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

இதற்கு நடுவே ஷுஜா ஒரு சிறு படையெடுப்பை வடக்குப் பகுதியில் நடத்த தோஸ்த் முகம்மது அதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது காபூலிலிருந்து தோஸ்த் முகம்மது விலகிச் செல்ல வேண்டியிருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சீக்கியர்கள் பெஷாவரைக் கைப் பற்றினார்கள். சீக்கியர் படைக்கு தலைமை ஏற்றவர் மகாராஜா ரஞ்சித்சிங்.

அடுத்த சில வருடங்களில் சீக்கியரைப் போரில் தோற்கடித் தார் தோஸ்து முகம்மது. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அவர் பெஷாவரை தன் வசம் ஆக்கிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவருக்குப் போதாத காலம். ஜெனரல் ஆக்லன்ட் பிரபுவின் உதவியைக் கோரினார். இந்தப் பிரபு இந்தியாவின் அப்போதைய ஆங்கிலேயே கவர்னர் ஜெனரல் (வணிகத்தில் புகுந்து ஆட்சியை இந்தியாவில் நிறுவியிருந்தது பிரிட்டன்).

தோஸ்த் முகம்மது உதவி கேட்ட தும் பிரிட்டனுக்கு படு சந்தோஷம். உற்சாகம் பொங்க ஆப்கானிஸ் தானின் உள்நாட்டு விஷயங்களி லும் தலையிடத் தொடங்கியது பிரிட்டன். அக்கறை! மத்திய ஆசியாவை பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டிருந்தது. சிந்து, காஷ்மீர் பகுதிகள்கூட பிரிட்டனின் வசம் வந்துவிட்டன.

மற்றொருபுறம் ரஷ்யாவும் தன் பங்குக்கு பல பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்தது. இரானுக்கும், ரஷ்யாவுக்கும் நட்பு உண்டாகியிருந்தது. ஆப்கானிஸ் தானில் உள்ள ஹெராத் நகரை இரான் கைப்பற்றியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தது ரஷ்யா. தோஸ்த் முகம்மது தன்னிடம் உதவி கேட்டதும் பிரிட்டன் நிறைய நிபந்தனைகளை அவருக்கு விதித்தது.

‘ரஞ்சித் சிங் உங்களிடம் தலை யிடாமல் இருக்க உதவுகிறோம். ஆனால் இனிமேல் இரானியர்க ளோடும், ரஷ்யர்களோடும் உங் களுக்கு இருக்கும் தொடர்புகளை யெல்லாம் அறுத்துக் கொள்ள வேண்டும். பெஷாவர் மீது உரிமை கோரக் கூடாது. காந்தஹார் கேட்கும் தன்னாட்சியை மதிக்க வேண்டும். (அப்போது காந்தஹார் தோஸ்த் முகம்மதுவின் சகோதரர்கள் வசம் இருந்தது). ரஷ்யாவின் பிரதிநிதியாக காபூலில் தங்கியிருப்பவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’.

ஆக்லன்ட் பிரபு இப்படி விதித்த நிபந்தனைகளையெல்லாம் (கொஞ்சம் வெறுப்புடன்) ஏற்றுக் கொண்டார் தோஸ்த் முகம்மது. ஆனால் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் வேண்டுமென்று தோஸ்த் கேட்டபோது, தலையாட்டினாலும் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றார் ஆக்லன்ட் பிரபு.

ஒரு கட்டத்தில் இதனால் வெறுப்படைந்தார் தோஸ்த் முகம்மது. பிரிட்டனை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ‘இனி ரஷ்யாதான் என் நண்பன்’ என்பதுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினார். பிரிட்டனுக்கு ஆத்திரம் வந்தது. தோஸ்த் முகம்மதை ஆட்சியிலிருந்து வெளியேற்றத் தீர்மானித்தது. தனக்கு ஆதரவாக இருந்த ஷுஜாவை மீண்டும் அரசர் ஆக்கலாம் என்று முடிவெடுத்தது.

1838ல் ஆக்லன்ட் பிரபு, ஷுஜா, ரஞ்சித் சிங் ஆகிய மூவரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி ‘ஷுஜா காபூல் மற்றும் காந்தஹார் நகரங்களைக் கைப்பற்றுவார். இதற்கு பிரிட்ட னும், சீக்கியர்களும் உதவ வேண் டும். ஏற்கெனவே ரஞ்சித்சிங் வசம் இருந்த ஆப்கானிய மாகாணங் களை இனி சீக்கியர்களே ஆட்சி செய்வார்கள். ஹெராத் இனி சுதந்திரம் பெற்ற பகுதி’.இப்படியெல்லாம் ஒப்புக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து முதல் ஆங்கிலேய-ஆப்கன் போர் வெடித்தது. (நடைமுறையில் சீக்கியர்கள் ஷுஜாவை அரிய ணையில் ஏற்றுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனவே ரஞ்சித் சிங்கின் படை இதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்கவில்லை).

தோஸ்த் முகம்மது ஆட்சியி லிருந்து நீக்கப்பட்டார் ஷுஜா அரியணையில் அமர்ந்தார். காந்தஹார் கைவசமானது. கஜினியிலுள்ள கோட்டையும்தான்.

பாமியன், புக்காரா என்று நகரம் நகரமாக தோஸ்த் முகம்மது கணவாய்கள் வழியாக மறைந்து சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின்னர் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார். 1840-ல் அவர் பிரிட்டிஷ் அரசால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

(இன்னும் வரும்).

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-3/article6703655.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 4

 
 
ஆப்கானிஸ்தான், பிரிட்டன் வீரர்களின் மோதலை காட்டும் ஓவியம்.
ஆப்கானிஸ்தான், பிரிட்டன் வீரர்களின் மோதலை காட்டும் ஓவியம்.

பிரிட்டிஷ் அரசால் தோஸ்த் முகமது நாடு கடத்தப்பட்ட அடுத்த வருடமே (1841) ஆப்கானிய இனத்தவர்கள், பாமியானில் இருந்த தோஸ்த் முகமதுவின் மகன் முகமது அக்பருக்குத் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர். பிரிட்டனுக்கு எதிரான பலமான எதிர்ப்பையும்தான்.

வேறு வழியில்லாமல் காபூலில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. ஆனால் ஆப்கனின் எல்லையை பிரிட்டிஷ் ராணுவத்தினர் தாண்டுவதற்கு முன்பே அவர்கள் (மொத்தம் 16,000 பேர்) படுகொலை செய்யப்பட்டனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் உதவி இல்லாமல் ஷுஜா ஷாவால் சில மாதங்களே ஆட்சியில் தாக்குப் பிடிக்க முடிந்தது. சில மாதங்களே ஆட்சி சுகத்தை அனுபவித்த அவர் உள்ளூர்வாசிகளால் கொலை செய்யப்பட்டார்.

பிரிட்டன் ஆவேசம் அடைந்தது. எத்தனை அவமானம்! காந்தஹாரிலும் பெஷாவரிலும் கூடாரம் அடித்திருந்த பிரிட்டிஷ் ராணுவம், காபூலுக்குள் நுழைந் தது. காபூலின் பெரிய அங்காடியை நெருப்புக்கு இரையாக்கியது.

தங்களுக்குள் அடித்துக் கொண்டிருந்த பல்வேறு ஆப்கானிய இனத்தவர் ஓரணியில் திரளத்தொடங்கினார்கள். காபூல் கலவரங்களைத் தொடர்ந்து, 1834 ஏப்ரலில் முகமது அக்பர், காபூலை கைப்பற்றினார்.

இப்போது சமாதானத்தை விரும்பிய பிரிட்டன் அவர் தந்தை தோஸ்த் முகமதைக் காபூலுக்கு அனுப்ப, அவருக்கு ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார் மகன்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் வருடங்களுக்கு தோஸ்த் முகமதை அலட்சியம் செய்த பிரிட்டிஷ் அரசு, 1854-ல் மீண்டும் அவருடன் நல்லுறவு தொடரவேண்டும் என்று எண்ணியது. 1855-ல் இருதரப்பிலும் தூதரக உறவுகள் உருவாயின. பெஷாவர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. “உன் நண்பன் இனி எனக்கும் நண்பன். உன் எதிரி இனி எனக்கும் எதிரி” என்கிற அளவுக்கு ஒட்டுறவை வெளிப்படுத்தியது அந்த ஒப்பந்தம். சில வருடங்கள் கழித்து பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதி காந்தஹாரில் தங்க அனுமதிக்கப்பட்டது. இரானி யர்களை எதிர்க்க இது உதவும் என்று கூறப்பட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு தோஸ்த் முகமது இறந்தார். அவரது மூன்றாவது மகன் ஷேர் அலி அவரது வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டின் தெற்குப் புறத்தில், ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக எல்லைப்புற ஊடுருவல் செய்தது ஷேர் அலிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதைச் சரிப்படுத்திக் கொள்ள பிரிட்டனின் ஆலோசனையைக் கோரினார் ஷேர் அலி.

அதற்கு முந்தைய வருடம்தான் பிரிட்டனும் ரஷ்யாவும் ஓர் ஒப்பந் தத்தில் கையெழுத்து இட்டிருந்தன. இதன்படி ரஷ்யா தன் வடபகுதியில் உள்ள ஆப்கானிய எல்லைகளை மதிக்க வேண்டும்.

இந்த நிலையில் ஷேர் அலி கோரிக்கை வைத்தவுடன் பிரிட்டன் நினைத்திருந்தால் மேற்படி ஒப்பந்தத்தையே காரணம் காட்டி ரஷ்யாவை கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் இது தொடர்பாக எந்த உறுதி மொழியையும் ஷேர் அலிக்கு அளிக்க மறுத்தது பிரிட்டன். இதில் கடுமையாக ஏமாற்றமடைந்தார் ஷேர் அலி.

அவருக்கு மேலும் பல சோதனைகள் காத்திருந்தன. 1878-ல் ரஷ்யா ஒரு தூதரகக் குழுவை காபூலுக்கு அனுப்பியது. இப்படி ஒரு குழுவுக்கு ஷேர் அலி அனுமதி அளித்திருக்கவில்லை. அதைப் பாதிவழியிலேயே திருப்பி அனுப்புவதற்காக (சமாதான முறையில்தான்) ஷேர் அலி மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

உடனே பிரிட்டன் “எங்களது தூதுக்குழுவும் காபூலுக்கு அனுப்பப்படும்” என்றது. ஷேர் அலி விழித்துக்கொண்டார். ஏனென்றால் இதுபோன்ற தூதுக்குழுக்களின் முக்கிய நோக்கம் நல்லுறவை வளர்ப்பது அல்ல என்பதும், தனது மேலாண்மையை ஆப்கனில் வலியுறுத்திவிட்டுச் செல்வதே என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது. எனவே பிரிட்டிஷ் தூதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க மறுத்தார் ஷேர் அலி.

பிரிட்டனுக்கு இது ஒரு சவாலாக விளங்கியது. நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்பதுபோல் தனது குழுவை அனுப்பியது. ஆனால் கைபர் கணவாயின் கிழக்கு நுழைவாயிலில் அது நுழைய முற்பட்டபோது, ஆப்கன் படைகள் அதைத் திருப்பி அனுப்பி விட்டன.

இதை ஒரு மானப் பிரச்னையாகவே எடுத்துக் கொண்டார் பிரிட்டனின் வைஸ்ராய் லிட்டன் பிரபு. நாற்பதாயிரம் பேர் அடங்கிய பிரிட்டிஷ் ராணுவம், ஆப்கானிஸ்தானின் மூன்று பகுதிகளை முற்றுகையிட்டது.

பதைபதைத்துப்போன ஷேர் அலி, ரஷ்யாவின் உதவி கேட்க முயற்சி செய்தார். மாஸ்கோ சென்றார். ஆனால் அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. அங்கிருந்து திரும்பி வரும்போது மஸார்-இ-ஷெரிப் நகரில் அவர் இறந்தார்.

ஷேர் அலியின் மகன் யாகூப், நிலைமையை யோசித்து (நாட்டின் பெரும்பகுதியை பிரிட்டிஷ் படைகள் ஆக்ரமித்து விட்டி ருந்தன) பிரிட்டனுடன் ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆப்கனின் வெளியுறவுக் கொள்கைகளை இனி பிரிட்டனே தீர்மானிக்கும் என்கிற அளவுக்கு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தமாக அது விளங்கியது.

இதைத்தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதிநிதிகள், காபூலில் தங்கத் தொடங்கினர். பிரிட்டனின் கட்டுப்பாடு கைபர் கணவாய் வரை நீடித்தது. தனது எல்லைப்பகுதிகள் பலவற்றையும் மறைமுகமாக பிரிட்டனுக்குத் தாரைவார்த்தது ஆப்கானிஸ்தான்.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-4/article6707467.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 5

 
ஆப்கானிஸ்தானின் கைபர் எல்லையை 1919-ம் ஆண்டு முற்றுகையிட்ட பிரிட்டன் படை வீரர்கள்.
ஆப்கானிஸ்தானின் கைபர் எல்லையை 1919-ம் ஆண்டு முற்றுகையிட்ட பிரிட்டன் படை வீரர்கள்.

ஷேர் அலியின் மகன் யாகூபின் ஆட்சியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தலைமையை ஏற்றுக் கொண்டவர் அப்துர் ரஹ்மான். இவர் தலைமை பிரிட்டனுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இவர் உள்ளூரிலும் செல்வாக்கு பெற்றிருந்தார். பிரிட்டனின் தலைமையையும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார். பிரிட்டனுக்கு வேறென்ன வேண்டும்?

ஆனால் அப்துர் ரஹ்மானின் சிறப்பு ஒன்றையும் சொல்லத்தான் வேண்டும். ஆப்கானிஸ்தானை நவீனமயமாக்கினார். உள்நாட்டுக் கலவரங்களை, கடுமையான தண்டனை மூலம் அடக்கினார். பஷ்டூன் இனத்தினர் ஒரே பகுதியில் மிக அதிகமாக இருப்பதால் ஒருங்கிணைந்த கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று நினைத்தார். எனவே அந்த இனத்தவரை கட்டாயப்படுத்தி நாட்டின் பல இடங்களில் பரவலாகத் தங்க வைத்தார். அவர்களின் ஒருமித்த வலிமை குறைந்தது.

ஐரோப்பாவிலிருந்து நிறைய இயந்திரங்களை இறக்குமதி செய்தார். ஆப்கானிஸ்தானில் சிறு தொழில்கள் வளரத் தொடங்கின. திறமையான மருத்துவர்கள், பொறியாளர்கள், விவசாய வல்லுநர்கள் போன்றவர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்தார். ஆப்கானிஸ்தானின் வளம் பெருகியது.

ஆனால் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை என்பது அவர் கையில் இல்லாமல் போனது. இதைத் தீர்மானித்ததெல்லாம் வெளி சக்திகள்தான். மத்திய ஆசியாவில் ஊடுருவலைத் தொடங்கியது ரஷ்யா. 1884-ல் மெர்வ் ஒயாசிஸ் என்ற ஆப்கானியப் பகுதிக்கருகே ரஷ்ய ராணுவம் குவியத் தொடங்கியது. பஞ்ச்தேவ் என்ற பகுதியைச் சுற்றியிருந்த பல சிறு சிறு பகுதிகள் சோவியத் வசம் சென்றன.

அதே சமயம் பிரிட்டன் இதைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெறுப்போடு அப்துர் ரஹ்மான் “என் இருபது வருட ஆட்சிக் காலத்தில் என் நாடு இரண்டு சிங்கங்களுக்கிடையே சிக்கிக் கொண்ட ஆடு போலத்தான் இருந்தது. ஆப்கானிஸ்தான் முழுமையாக உருக்குலையாமல் இருந்ததே பெரிய விஷயம்’’ என்றார்.

இவர் காலத்தில்தான் டூராண்டு எல்லைக்கோடு உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானையும், இந்தியாவையும் பிரிக்கும் கோடு இது (இந்தியா என்று இங்கே கூறப்படுவது இன்றைய பாகிஸ்தானையும் சேர்த்துதான்) அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலரின் பெயர் சர் மார்டிமர் டூராண்டு. இவர் இந்த 2460 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லைக் கோடை வரையறுத்ததால் அவர் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது.

அப்துர் ரஹ்மான் தன் மூத்த மகன் ஹபிபுல்லாவை தனது வாரிசாக செதுக்கிச் செதுக்கி வார்த்தெடுத்தார். ஆனால் ஹபிபுல்லா அடிமை வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெண்ணின் மகன் என்பதால், அவன் அரியணை ஏறக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தந்தையின் விருப்பம், ராணுவத்தின் முழு ஆதரவு ஆகிய இரண்டுமே ஹபிபுல்லாவின் தரப்பில் இருந்ததால் அவர் அடுத்த வாரிசாக அரண்மணை கட்டிலில் அமர முடிந்தது.

முதலாம் உலகப் போரின்போது ஆப்கானிஸ்தான் நடுநிலை வகித்தது. இத்தனைக்கும் துருக்கியை ஆண்ட சுல்தான் தன்பக்கம் சேர ஹபிபுல்லாவை மிகவும் கட்டாயப்படுத்தினார். ஆனால் பலன் இல்லை. 1919 பிப்ரவரி 20 அன்று வேட்டையாடச் சென்றபோது ஏதோ மிருகம் தாக்கி ஹபிபுல்லா கொல்லப்பட்டார்.

அடுத்து ஆப்கானிஸ்தான் ஹபிபுல்லாவின் மகன் அமானுல்லாவின் வசம் வந்தது. தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆப்கானிஸ்தானை ஒரு முழு சுதந்திர நாடு என்று பிரகடனம் செய்தார் அமானுல்லா கான். பிரிட்டனால் இந்தப் போக்கை ஏற்க முடியவில்லை.

மூன்றாவது ஆங்கிலேய – ஆப்கானியப் போர் மே 1919-ல் நடைபெற்றது. சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற இந்தப் போரில் பிரிட்டனின் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை முழுவதுமாகவே விடுவித்தார். இறுதிக் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

‘வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை உங்களுக்குச் சுதந்திரம் தரத் தயார். இதை எழுத்தளவில்கூட ஒத்துக் கொள்வோம்’ என்று கூட பிரிட்டன் அறிவித்தது. ஆனால் டூராண்டு எல்லைக்கோட்டுக்கு இருபுறமும் வசித்த பஷ்டூன் இனத்தவர் மீதான உரிமையை ஆப்கானிஸ்தானுக்கு விட்டுக் கொடுப்பதில் பிரிட்டனுக்கு விருப்பமில்லை.

அமானுல்லா கான் தன் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்று அறிவித்ததோடு நின்றுவிடாமல் பல்வேறு நாடுகளுக்கும் ‘’எங்கள் தேசத்துடன் நீங்கள் தூதரக உறவைத் தொடங்க வேண்டும்’’ என்று தூது அனுப்பினார். இந்த நாடுகளில் அவர் தனது குழுவை முதன்முதலாக அனுப்பியது சோவியத் யூனியனுக்குதான்.

போல்ஷெவிக் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு வந்த முதல் தூதரகக் குழு ஆப்கானிஸ்தானுடையதுதான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நடத்தும் போராட்டத்துக்கு தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்யத் தயார் என்று அறிவித்தது சோவியத். ஆப்கானிஸ்தானும், சோவியத் யூனியனும் இணைந்திருந்த தொடர்ந்த வருடங்கள் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தூதரக உறவு தொடங்கியது. இருநாடுகளுக்குமே ஒன்றின் சார்பு நிலை மற்றொன்றுக்கு தேவைப்பட்டது. சில உரசல்கள் எழத்தான் செய்தன. அமு தார்யாவுக்கு மறுபுறமிருந்த சில பகுதிகளை சோவியத் யூனியன் பல வருடங்களுக்கு முன் கைப்பற்றிக் கொண்டிருந்தது. புதிய தூதரக உறவைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை ஆப்கானிஸ்தானுக்கே மாஸ்கோ தலைமை திருப்பியளித்துவிடும் என்று எதிர்பார்த்தது ஆப்கானிஸ்தான். சோவியத் இது தொடர்பாக மெளனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது.

என்றாலும் பிரிட்டிஷ் தொடர்பை முழுவதுமாக துண்டித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான் சோவியத் யூனியனைப் பெரிதும் நம்பியது. ஆப்கானிஸ்தானும், சோவியத் யூனியனும் மே 1921 அன்று ஒரு நட்பு உடன் படிக்கையில் கையெழுத்திட்டன. ஆப்கானிஸ்தானில் சோவியத் விமானங்கள் இறங்கின. பிரிட்டன் பதற்றம் கொண்டது. பிரிட்டனை எதிர்த்த இந்தியப் புரட்சியாளர்களுக்கு காபூலில் அடைக்கலம் கிடைத்தது. பிரிட்டனின் பதற்றம் மிக அதிகமானது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-5/article6709007.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 6

 
மன்னர் அமானுல்லா; படம் - விக்கிபீடியா
மன்னர் அமானுல்லா; படம் - விக்கிபீடியா

சோவியத்துடன் ஆப் கானிஸ்தான் அதிக நட்புடன் பழகுவது பிடிக்காத பிரிட்டன் உடனடியாக ஒரு காரியத்தைச் செய்தது. இந்தியா வழியாக நடைபெற்ற ஆப்கானிய வணிகத்துக்குத் தடை விதித்தது.

சோவியத் யூனியன் ஈடு செய்தது. சோவியத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர். தந்தி, தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு சேவைகள் தொடங்கப்பட்டன. ஆப்கானிய இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் வழங் கப்பட்டது. விமானம் ஒட்டவும், ஆப்கன் ராணுவத்தினருக்கு சோவியத் பயிற்சி அளித்தது.

அதே சமயம் சோவியத் யூனியனில் தயாரான பொருள்கள் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என நினைத்திருந்த பிரிட்டனுக்கு இதெல்லாம் கொஞ் சமும் பிடிக்கவில்லை. பிரிட்ட னுக்கு அருமையான வாய்ப்பு ஒன்று விரைவிலேயே கிடைத்தது.

பல புரட்சி திட்டங்களை தன் நாட்டில் அறிமுகப்படுத்திய மன்னர் அமானுல்லா வேறொன்றி லும் தெளிவு காட்டினார்.

‘ராணுவத்தினரையும், இனத் தலைவர்களையும் வளர விடுவது தனக்கும் நல்லதில்லை, தன் நாட்டுக்கும் நல்லதில்லை’. ராணுவ அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைத்தார். ராணுவ வீரர்களின் எண்ணிக் கையைக் குறைத்தார். முக்கிய மாக நடுவயதைத் தாண்டிய அத்தனை ராணுவ அதிகாரி களையும் வெளியேற்றினார்.

ஆப்கானிஸ்தான் அரசின் ராணுவ அமைச்சர் முகமது நாதிர் கானுக்கு இது பிடிக்கவில்லை. அவர் பதவி விலகினார். பிரான்ஸ் நாட்டின் ஆப்கன் தூதரானார்.

மன்னர் அமானுல்லா கொண்டு வந்த சில சட்டங்கள் நவீன மயமானவை.

‘இனி அடிமைகள் கூடாது. பெண்கள் தங்களைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. காபூலில் சில பகுதிகளில் மேலை நாட்டு நவீன உடைகளை அனுமதிக் கலாம். சிறுவர்களுக்கு மதச்சார் பற்ற கல்விதான் அளிக்கப்பட வேண்டும். வரி விதிப்பு தர்க்க ரீதியானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். ஊழல் கூடாது. வரவிருக்கும் முதல் பட்ஜெட்டி லேயே மெட்ரிக் முறை அமலுக்கு வரும். ஆப்கானின் என்ற புதிய நாணயம் அறிமுகமாகும்’ என்று அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இப்படிப் பல மாறுதல்களை கொண்டு வர வேண்டும் என்பதை வெளிப் படுத்தியதுடன் அவற்றிற்கான நடவடிக் கைகளையும் எடுக்கத் தொடங்கினார்.

ஒரே சமயத்தில் இத்தனை மாறுதல்களா! மக்களில் பலருக்கும் தயக்கம் இருந்தது. அதுவும் ஓரிரு சீர்திருத்தங்களைப் பிடிக்காதவர்கள்கூட ஒட்டு மொத்தமாகவே சீர்திருத்தங் களை குறைகூறத் தொடங்கி னார்கள். ஆனால் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தான் சரித்தி ரத்தில் மிக அழுத்தமாக தன்னு டைய முத்திரையைப் பதித்தார். 1923ல் ஆப்கானிஸ்தானின் முதல் அரசியலமைப்புச் சட்டம் இவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. உரிமைகளும், கடமை களும் வரையறுக்கப்பட்டன. குடிமக்களுக்கான அடையாள அட்டைகளை அப்போதே அறிமுகப்படுத்தினார். அரச குடும் பத்தினருக்கான மானியங் களுக்குத் தடை விதித்தார்.

இப்படியெல்லாம் செய்த மாறுதல்களை தீவிர மதத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைத்ததை ராணுவத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆக ஆப்கானிஸ்தானின் இரண்டு பலம் பொருந்திய பிரிவு கள் அமானுல்லா கானை அந்நியனாக கருதத் தொடங்கின.

இந்தப் போக்கு அமானுல் லாவுக்கு வருத்தத்தை அளித்தது. உடல் பலவீனமும் அடைந்தார். இத்தாலிக்குச் சென்று தலை மறைவு வாழ்க்கை நடத்தி னார். பின்னர் சுவிட்சர்லாந்து சென் றார். ஜுரிச்சில் அவர் காலமான தாகச் சொல்கிறார்கள். ஆக குறிப்பிடத்தக்க ஒரு ஆப்கானியத் தலைவரின் வாழ்க்கை அலைக்கழித்தலிலும், அனுமானங்களிலும் முடிவடைந் தது! அமானுல்லா கான் ஆட்சியை விட்டு விலகியதும் கொஞ்ச காலத்துக்கு சர்தார் அலி அகமத் கான் என்பவர் ஆட்சி செய்தார்.

அமானுல்லா ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த நாதிர் கான் தன் தம்பிகளு டன் சேர்ந்து ஒரு பெரும்படை யுடன் காபூலை நோக்கிப் படை யெடுத்தார். அடுத்த ஆறே நாட் களில் ஆட்சி மாறியது நாதிர் கான் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

அமானுல்லா கான் அறிவித்த சீர்திருத்தங்களை எல்லாம் அலட்சியப்படுத்தினார் நாதிர் கான். ராணுவத்தினரைத் தொடர்ந்து அதிகரித்தார். புரட்சி யாளர்களை அடக்க அவரது ராணுவம் பெரிதும் உதவியது.

நாளடைவில் வன்மம் கொண்ட இளைஞன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப்பின் ஆட்சியைப் பிடித்தவர் அவர் மகன் ஜாகிர் ஷா. ஆப்கானிய மன்னராட்சித் தொடரில் இறுதி இடத்தைப் பிடித்தவர் இவர்.

1935-ல் ஆப்கானிஸ்தானுக்கு ஜெர்மானியத் தொழில் மேதை கள் விஜயம் செய்தனர். தங்கள் தொழிற்சாலைகளையும், நீர்மின் நிலையங்களையும் தொடங் கினார்கள். இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ (ஐ.நா.வின் முன் னோடி) அமைப்பின் உறுப்பின ரானது. அமெரிக்கா ஆப்கானிஸ் தானுக்கு அங்கீகாரம் அளித்தது. இராக், இரான், துருக்கி ஆகிய அண்டை இஸ்லாமிய நாடுகளு டன் ஆப்கானிஸ்தான் உடன் படிக்கை செய்து கொள்ள அமைதிப் போக்கு கொஞ்சம் தொடங்கியது.

ஆனால் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. இரண்டாம் உலகப்போரில் தன் நாடு நடுநிலை வகிக்கும் என்றார் மன்னர் ஜாகிர் ஷா.

போர் முடிவதற்கு சிறிது முன் பாக ஷா மகமூது என்பவர் பிரதமரானார். அரசை விமர்சித்த வர்களை கருணையின்றி நடத்தி னார். அரசை எதிர்த்த நாளி தழ்களுக்கும், நடுநிலை நாளிதழ் களுக்கும் மூடுவிழாக்கள் நடத்தப் பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதனால் புரட்சியாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ் தானுக்கும், சோவியத் யூனியனுக் கும் நடுவே தூதரக உறவு இருந்ததே தவிர, குறிப்பிட்ட வணிகம் எதுவும் இந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற வில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தது. பிரிட்டன் இந்தி யாவை இரண்டாகப் பிரித்து விட்டு, சுதந்திரம் வழங்கிவிட்டு தன் ஊருக்கு நடையைக்கட்டியது.

இந்த நிலையில் தனது பொருளாதாரம் மற்றும்தொழில் நுட்பம் தன்னிறைவு அடைவதற் காக அமெரிக்காவின் உதவி யைக் கோரியது ஆப்கானிஸ் தான். தனது தென்பகுதியில் தரிசு நிலமாகக் கிடந்த பகுதி களில் தொழிற்சாலைகள் நிறு வலாம் என்றது. ஊக்கத் தொகை களையும் அளிக்க முன் வந்தது ஆப்கானிஸ்தான். ஆனால் அமெரிக்கா இந்தச் சலுகை களை சந்தேகத்துடன் நோக்கியது.

ஆப்கானிஸ்தான் பிரதமர் ஷா மகமூது, அமெரிக்க ஜனாதிபதி ட்ருமனிடம் ‘’எங்களுக்கு போர் ஆயுதங்களை விற்க முடியுமா?’’ என்று கேட்டார். அமெரிக்கா கலவரம் அடைந்தது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-6/article6712778.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 7

 
1960ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் வெளியான பத்திரிகையின் அட்டைப்படம்
1960ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் வெளியான பத்திரிகையின் அட்டைப்படம்

போர் ஆயுதங்களை வாங்க ஆப்கானிஸ்தான் முன் வந்ததில் அமெரிக்கா வுக்கு என்ன தயக்கம்? வியாபாரம் அதிகமானால் சந்தோஷம்தானே அடைய வேண்டும்? கலவரம் எதற்கு? இந்தக் கேள்விக்கு பதிலாக ஒரு பின்னணியை விவரிக்க வேண்டும்.

சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் தொடங்கிவிட்ட காலகட்டம் அது. ஐரோப்பிய நாடுகளை தனக்கு ஆதரவாகத் திரட்டிய அமெரிக்கா, அடுத்து ஆசிய நாடுகளையும் தனது ஆதரவாளர்களாக மாற்ற திட்டமிட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு உதவ பாகிஸ்தான் முன்வந்தது.

1947லிருந்தே பாகிஸ்தானுக் கும், ஆப்கானிஸ்தானுக்கும் நடுவே ஒரு உரசல் தொடங்கியிருந் தது. இந்த நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பஷ்டூன்களும், பலூச் இனத்தவர்களும் நிறையத் தங்கி இருந்தனர். அவர்கள் வசிக்கும் பகுதிகள் தங்களைச் சேர்ந்தவை என்று இந்த இரண்டு நாடுகளுமே கூறி வந்தன. 1949ல் அந்தப் பகுதி யில் போர் விமானங்களை அனுப்பி குண்டு வீசியது பாகிஸ்தான்.

இதனால் பஷ்டூன்கள் கடும் கோபம் அடைந்தனர். “இனி நாங் கள் டூராண்டு எல்லைக் கோட்டினை மதிக்க மாட்டோம். அந்தக் கோட்டுக்கு இரு புறமும் உள்ள பஷ்டூன்கள் வசிக்கும் நிலமும் தங்களுக்குதான் சொந்தம்’’ என்று அறிவித்தனர். ஆப்கானிய பஷ்டூன் இனப் போராளிகள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். ஆப் கானிஸ்தான் அரசு இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்தது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் விரோதம் கொண்டன. அடுத்த நாட்டில் இருந்த தத்தம் தூதர் களை இவர்கள் திரும்ப அழைத் துக் கொண்டார்கள்.

இந்த நிலையில்தான் ஆப் கானிஸ்தான் பிரதமர் அமெரிக் காவிடம் போர்த் தளவாடங்களை வாங்க முன்வந்தார். பாகிஸ்தா னுக்கு எதிராகப் பயன்படுத்தத்தான் இந்த ஆயுதங்களை ஆப்கானிஸ் தான் வாங்க முயற்சி செய்கிறது என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. எனவே வணிகம் செய்ய மறுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு தன் மூலமாக பிற நாடுகள் பெட்ரோல் அனுப்புவதை தடை செய்தது பாகிஸ்தான் அரசு.

இந்த நிலையில் சோவியத் துடன் உறவை ஏற்படுத்திக் கொண்டது ஆப்கானிஸ்தான். வேண்டாவெறுப்பாகதான். பத் திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் பிரதமர் ஷா மகமூது இது தொடர்பாக தெரி வித்த கருத்து உலகெங்கும் தலைப்புச் செய்தியானது.

“முஸ்லிம்கள் பன்றி இறைச்சி தின்னக்கூடாதுதான். ஆனால் ஒரு முஸ்லிம் பசியால் இறந்துவிடும் நிலை ஏற்பட்டால், வேறென்ன செய்வான்?’’

ஆப்கானிஸ்தானுக்குத் தேவை யான பெட்ரோல், துணிமணிகள் போன்றவற்றை சோவியத் யூனி யன் வழங்கியது. கம்பளி, பஞ்சு போன்றவற்றை ஆப்கானிஸ்தான் சோவியத்துக்கு ஏற்றுமதி செய்தது. ஆப்கானிஸ்தானிலுள்ள பெட் ரோல் எண்ணெய் வளங்களைக் கண்டுபிடித்து அவற்றை தோண்டி எடுத்து சோவியத் யூனியன் உதவி செய்தது. 1950ல் இந்த இருநாடுகளும் செய்து கொண்ட உடன்படிக்கையின் விளைவு இது.

1953ல் ஆப்கானிஸ்தான் பிரதமரானார் முகம்மது தாவூத். மேலை நாடுகளில் படித்த இளைஞர் இவர். பெண் விடுதலையில் நம்பிக்கை கொண்டவர். 1959ல் நவீன ஆப்கானிஸ்தானின் 40வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டபோது, ஆப்கானிய அமைச்சர்களின் மனைவிகள் அலங்காரம் செய்து கொண்டு தங்களைத் திரையிட்டுக் கொள்ளாமல் கவர்ச்சிகரமாக அந்த விழாவில் கலந்து கொண்டதை உலக நாடுகள் வியப்புடன் பார்த்தன.

மதத் தலைவர்கள் எதிர்த்தனர். குரானில் எந்த இடத்திலும் பெண் கள் பர்தா அணியவேண்டும் என்று கூறப்படவில்லை என்றார் தாவூத். தொடர்ந்து எதிர்ப்பு ஊர் வலங்களை நடத்திய தீவிர மதத் தலைவர்களை ஒருவாரத்துக்கு சிறையில் தள்ளினார். இது அவர் களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

பாகிஸ்தானுடன் கொண்ட பகைமை உச்சத்தைத் தொட்டது. இரு நாடுகளின் எல்லைப் பகுதி 1955ல் ஐந்து மாதங்களுக்கு மூடப் பட்டது. இரானும், அமெரிக்காவும் வேறு வணிகப் பாதைகளை தங்க ளால் அமைக்க முடியவில்லை என்று கைவிரித்தன. ஆப்கானிஸ் தானின் வெளிநாட்டு வணிகமே நின்றுபோகும் நிலை. இந்த நிலை யில் சோவியத் யூனியனை மிக அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய நிலை ஆப்கானிஸ்தானுக்கு உண்டானது.

1955ல் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். பின்னர் காபூலுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்கள் அளிக்கும் என்றார். பஷ்டூனிஸ்தான் (அதாவது ஆப்கானிய - பாகிஸ்தானிய எல்லைப் பகுதியில் பஷ்டூன்கள் நிறைந்த பகுதி) பிரச்சினையில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ் தானுக்கு ஆதரவான நிலையை எடுக்கும் என்றார். 10 கோடி டாலரை நீண்டகாலக் கடனாக ஆப்கானிஸ் தானுக்கு வழங்கினார்.

ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டனர். “கல்வித்துறைகளில் பயிற்சி பெறத்தான்’’ என்றது ஆப்கானிஸ் தான். ராணுவப் பயிற்சிக்கும்தான் என்பதே உண்மை.

தகவல் தொடர்பு மற்றும் இயற்கை வளம் குறித்து ஆராய்ச்சி கள் ஆகிய பிரிவுகளில் ஆப்கானிஸ் தானுக்கு சோவியத் செய்த உதவி கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல பிரதான சாலைகள் நிறுவப்பட்டன. புதிதாக விமான நிலையங்கள் கட்டப்பட்டன. காபூலில் ஒரு பிரம்மாண்டமான தொழில்கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டதுட்டது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-7/article6716879.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 8

 
 
ஆப்கானிஸ்தானில் அதிகம் பயிராகும் மாதுளை பழங்களை தரம் பிரிக்கும் வியாபாரிகள். (கோப்பு படம்)
ஆப்கானிஸ்தானில் அதிகம் பயிராகும் மாதுளை பழங்களை தரம் பிரிக்கும் வியாபாரிகள். (கோப்பு படம்)

1958-ல் பாகிஸ்தானில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அதிபராக ஜெனரல் அயூப் கான் பதவி ஏற்றார். பஷ்டூனிஸ்தான் பிரச்சினை தீவிரமடைந்தது. அதன்விளைவாக செப்டம்பர் 1961-ல் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தமக்கு இடையேயான உறவை முற்றிலுமாக முறித்துக்கொண்டன. ஆப்கானிஸ்தான் தனது முக்கிய விளைபொருள்களான திராட்சையையும் மாதுளையையும் இந்தியாவுக்குத் தரைவழியாக அனுப்ப முடியவில்லை.

வணிக வழி அடைபட்டதால் ஆப்கானிஸ் தானின் பொருளாதாரம் பெரிதும் குறைந்து விட்டது. மன்னர் திகிலடைந்தார். தவிர, நாட்டில் மார்க்ஸியக் கருத்துகளும் வலம் வரத் தொடங்கியிருந்தன. பிரதமர் தாவூதைக் கூப்பிட்டு “நான் உன் ராஜிநாமாக் கடிதத்தை ஏற்றுக்கொண்டேன்” என்றார் மன்னர் நாசூக்காக. புரிந்துகொண்டு தாவூத் ராஜினாமா செய்தார்.

தாவூத் அரசில் சுரங்க மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த முகமது யூசூப் புக்குப் பிரதமர் பதவி அளித்தார் மன்னர். தான் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முகமது யூசுப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும் கொண்டு வர முயற்சி செய்தார்.

செப்டம்பர் 20, 1964 அன்று ஆப்கானிஸ் தானின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயக நெறிமுறைகளைக் கொண்டதாக அது இருந்தாலும், அரசாட்சி மற்றும் இஸ்லாமிய நெறிமுறை களையும் அது அலட்சியப்படுத்திவிட வில்லை. 1965-ல் முதல் முறையாக ஆப்கானிஸ் தானில் தேர்தல் நடைபெற்றது. அதிக இடங்கள் பெற்ற கட்சியிலிருந்து முகம்மது ஹாஷிம் மைவண்ட்வால் என்பவரைப் பிரதமராக்கினார் மன்னர்.

‘’மார்க்ஸிய அரசு ஆப்கானில் தோன்று வதற்கான காலம் நெருங்கிவிட்டது’ என்று சோவியத் யூனியன் தீர்மானித்தது. சுமார் பத்து வருடங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த தாவூத் என்பவரை தடாலடி யாக ஆப்கானிஸ்தானின் தலைவராக்கியது சோவியத் யூனியன். மன்னர் மருத்துவப் பரிசோதனைக்காக ஐரோப்பா சென்றிருந் தபோது இது நடந்தது.

தாவூத் அரசை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக சோவியத் நிதி உதவியை தடையின்றி செய்தது. முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. ரஷ்ய ராணுவத் தளபதிகள் ஆப்கன் ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். சோவியத் அதிபர்களான குருஷ்ஷேவ், ப்ரஷ்னேவ் ஆகியோர் பலமுறை ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்தனர்.

ஆனால் தாவூத் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. பதவிக்கு வர உதவிய தால் சோவியத்துடன் ஒத்துழைத்தார், அவ்வளவே. தொடர்ந்த வருடங்களில் மார்க்ஸிய அமைச்சர்கள் தூதர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அப்படி செக் நாட்டுக்கு அனுப்பப்பட்டவர் தான் கர்மால் என்பவர். சோவியத் பிடியிலிருந்து நீங்க, முஸ்லிம் நாடுகளின் நிதி உதவியைக் கோரினார் தாவூத்.

இந்த மாற்றங்கள் கண்டு ஆப்கானிஸ் தானில் உள்ள கம்யூனிஸ்டுகள் அதிர்ந்தனர். சோவியத் யூனியன் தலையசைத்தது. 28 ஏப்ரல் 1978 அன்று தாவூத் கொல்லப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சி பலவந்தமாக ஆட்சியைப் பிடித்தது. ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக ஒரு மார்க்ஸிய அரசு அமைந்தது. தராகி அதிபரானார். (ஜனவரி 1, 1965 அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) என்ற கட்சி உருவாகியிருந்தது. பெயரில் புலப்பட வில்லை என்றாலும் அடிப்படையில் இது ஒரு கம்யூனிஸக் கட்சிதான். இதன் தலைவராக விளங்கியவர்தான் தராகி).

ஆனால் உள் கட்சி விரோதம் காரண மாக விரைவிலேயே தராகி கொலை செய் யப்பட, அமீன் என்பவர் அந்த நாட்டின் தலைவரானார். ஆனால் அவரைக் குறித்தும் சோவியத்துக்கு சந்தேகங்கள் எழுந்தன. அதன் உளவு அமைப்பான கே.ஜி.பி. ‘‘சோவியத் ஆதரவாளர்களை அமீன் வளர விடாமல் தடுக்கிறார். பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் தூதரகத் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்’’ என்றது. இதைத் தொடர்ந்து அமீன் (நீங்கள் நினைப்பது சரிதான்) கொலை செய்யப்பட்டார்.

செக் நாட்டுக்கு தூதராக அனுப்பப்பட்டி ருந்த கர்மால் என்பவர் காபூலுக்கு வரவழைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் தலைவராக்கப்பட்டார். என்றாலும் காலகாலமாக அந்நியர்களின் கையில் அகப்படாமல் இருந்த தங்கள் மண்ணை ரஷ்ய ராணுவம் கரையானாக ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மதத் தலைவர்கள் ஜிஹாத் (புனிதப் போர்) அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கையில் கிடைத்த ஆயுதங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு கம்யூனிஸ் ஆதரவாளர்களை உள்ளூர்வாசிகள் தாக்கத் தொடங்கினர். ஆனால் வலிமை மிக்கசோவியத்தின் செம்படை ஆப்கானிஸ் தானில் வெளிப்படையாகவே நுழைந்து ஆயிரக்கணக்கானவர்களை கொன்று தீர்த்தது.

ஜனவரி 14, 1980 அன்று ஐ.நா. பொதுச் சபை நடத்திய சிறப்புக் கூட்டத்தில் 104 நாடு கள் ரஷ்யாவின் முற்றுகையைக் கண்டித்தன. முதலில் இது குறித்து கவலைப்படாத சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் கூடாரம் அடித்திருந்த தங்கள் ராணுவத்தின் ஒரு பகுதியை போனால்போகிறதென்று வாபஸ் பெற்றது.

அதே சமயம் அந்த நாட்டிலுள்ள சிறு பான்மையினரின் நம்பிக்கையைப் பெறவும் கம்யூனிஸ அரசு முயற்சிகள் எடுத்தது. என்றாலும் நாட்டில் கலவரங்கள் பெருகிக் கொண்டிருந்தன. 1985ல் கோர்பசேவ் சோவியத் தலை மையை ஏற்றார். ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீடு விரைவில் நின்றுவிடும் என்றார். கர்மால் பதவி நீக்கம் செய்யப்பட, முகம்மது நஜிபுல்லா என்பவர் தலைவ ரானார்.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-8/article6721846.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 9

h_2256135h.jpg
 

சோவியத் ராணுவம் தங்கள் நாட்டில் புகுந்துவிட்டது போதாதென்று சோவியத் போலவே தங்கள் நிலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பொதுவுடமை ஆவதைக் கண்டு முஜாகிதீன்கள் கொதித்தனர்.

ஆனால் இவர்கள் வெவ் வேறு குழுக்களாக இருந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு முக்கிய தலைவர். வடபகுதியில் உஸ்பெக் இனத் தலைவராக தோஸ்தும் வலிமையாக இருந்தார். வடகிழக்குப் பகுதியில் தஜிக் இனத்தலைவர் ரப்பானியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மேற்குப் பகுதியில் இஸ்மாயில் கான் என்பவரும் பானியான் உள்ளிட்ட நடுப் பகுதிகளில் ஹஸாரா இனத்தவரும் அதிகாரம் பெற்று விளங்கினார்கள். தெற்குப் பகுதியில் ஹிக்மக்தியார் என்பவர் ஆட்சி செய்தார். இவர்களைத் தவிர காந்தஹாரிலும் சிறு சிறு பிரதேசங்களிலும் பல குட்டித் தலைவர்கள் அதிகாரம் செலுத்தி வந்தனர்.

இத்தனை பிரிவுகள் இருந்ததி னாலும் அவர்களுக்கிடையே விரோதங்கள் வேர்விட்டிருந்த தாலும் முஜாகிதீன்களால் ஒரு கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை. (இவர்களைத் தாண்டியும் முக்கிய ராணுவத் தளபதியாக விளங்கிய அகமத் ஷா மசூத் பிரிவுகளை ஓரளவு ஒன்றிணைத்து, பின்னர் தாலிபன்களுக்கு பெரும் தலைவலியாக விளங்கி ஒசாமா பின்லேடன் திட்டத்தால் கொலை செய்யப்பட்டது தனிக்கதை)

சோவியத் படைகளும், முஜா கிதீன்களும் புரிந்த போரில் இருதரப்பிலும் பலர் இறந்தனர். இறுதியில் சோவியத் தோற்றது. இதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. முஜாகிதீன்களுக்கு அமெரிக்கா பெரும் நிதி உதவி செய்தது. சோவியத் ராணுவத் தினருக்கு கெரில்லா போர் முறை தெரிந்திருக்கவில்லை. பெரும் பரப் பளவு கொண்ட ஆப்கானிஸ்தா னின் பல்வேறு சீதோஷ்ண நிலைகளால் சோவியத் படை திண்டாடியது. தவிர சோவியத் பொருளாதாரம் இந்தப் போரினால் தள்ளாட ஒரு கட்டத்தில் சோவியத் படைகள் பின்வாங்கின.

முஜாகிதீன்கள் காபூலைக் கைப்பற்றினர். ஆனால் கைப்பற்றி யது தஜிக் படை. இதன் காரண மாக பஷ்டூன்களுக்கு திருப்தி இல்லாமல் போனது. முஜாகிதீன்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு மீண்டார் கள். என்றாலும் தங்கள் நாடு இப்படி சின்னாபின்னாமாவது கண்டு வேதனைப் பட்டார்கள். ஷாரியா சட்டத்தை தங்கள் நாட்டில் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். தாலிபன் பிறந்தது. ஆப்கானியர்களால் உருவா னதுதான் தாலிபன். ஆனால் அது பிறந்தது பாகிஸ்தானில்தான். (தாலிப் என்றால் இஸ்லாமிய மாணவன் என்று பொருள். தாலிபன் என்றால் இஸ்லாமிய மாணவர்கள்). இந்த இயக்கத்தை நிறுவியவர்களில் பலரும் பாகிஸ் தானிலுள்ள மதரஸாக்களில் படித்துக் கொண்டிருந்த ஆப்கன் மாணவர்கள்.

பஷ்டூன்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கத் தொடங் கியது தாலிபன். தாலிபனுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. ஓர் அறிக்கையைக்கூட அவர்கள் ஊடகங்களுக்கு அளித்ததில்லை. தங்கள் பகுதிகளில் புகைப்படம் பிடிக்க தடை. தொலைக்காட்சி கூடாது. இந்தச் சட்டங்களால் தாலிபன் தலைவர்களின் முகங்கள்கூட மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டது.

தாலிபனின் தலைவராக தேர் தெடுக்கப்பட்டவர் முல்லா ஒமர் (கமலின் விஸ்வரூபம் திரைப் படத்தில் ஒற்றைக் கண்ணுடன் காட்சியளித்த பாத்திரம் இவருடை யதுதான்). இன்றுவரை ரகசியங் களில் பின்னப்பட்டிருப்பவர். பெரிய பெரிய தாக்குதல்களை மனதுக்குள்ளே திட்டமிடுவார். சின்ன காகிதங்களில் யாரை, எதை அழிக்க வேண்டும் என்பதை எழுதி செயல்வீரர்களுக்குக் கொடுப்பார். இதுதான் இவர் ஸ்டைல்.

தங்களின் முதல் குறி காந்தஹார் என்று தீர்மானித்தனர் தாலிபன்கள். நினைத்ததை சாதித்தனர். அடுத்து அடுத்து என்று தாக்குதல்களைப் பரவலாக்கினார்கள். அடுத்த மூன்றே மாதங்களில் ஆப்கானிஸ் தானின் 31 மாகாணங்களில் பன்னிரண்டு அவர்கள் வசம். ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் ஆவேசமான பஷ்டூன் இளைஞர் கள் இந்த சேனையில் சேர்ந்து கொண்டனர்.

இந்த இடத்தில் தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் உண்டான நெருக்கத்தின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவை தாலிபன் கள் வலிமையாக உருவாகி காந்த ஹாரின் மீது படையெடுப்பதற்கு முந்தைய நிகழ்வுகள். ஆப்கானிஸ்தானின் கோஷ்டிச் சண்டைகளால் வணிகப் பாதைகள் அடைபட்டதால் பாகிஸ்தான் மிக அதிகம் பாதிக்கப்பட்டது.

பெஷாவரிலிருந்து காபூல் வரையிலான தடம் தடையின்றி இருந்தால்தான் மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகம் நடத்த முடியும் என்ற நிலை. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு வந்த தாலிபன்களிடம் “எங்கள் பொருள்களுக்கு வழி செய்து கொடுத்தால் உங் களுக்கு எரிபொருள்களும், ஆயுதங்களும் தருவோம்’’ என்றது பாகிஸ்தான். இதற்காக முல்லா ஓமருக்குப் பெரும் தொகையையும் அளித்தது. ஒத்துக் கொண்டது தாலிபன்.

ஆப்கானிய ராணுவத் தளபதி மன்சூரை சுட்டுக் கொன்ற தாலிபன் அணி அவர் உடலை ஒரு பீரங்கியின் நுனியில் தொங்கவிட்டு காட்சிப் பொருளாக்கியது. தாலிபனின் வலிமையையும் கொடூரத்தையும் உலகம் பரவலாக அறிந்து கொள்ளத் தொடங்கியது. அதற்குப் பின் காந்தஹாரை தாலிபன் படை அடைந்தபோது எதிர்ப்பில்லாமல் அது அவர்கள் வசமானது. காந்தஹாரில் இருந்த பீரங்கிகள், போர் விமானங்கள் அனைத்தும் தாலிபன்கள் வசமாயின.

தங்களுக்கான வணிகப் பாதைக் கான தடை நீங்க, “நம்ம பசங்க’’ என்று தாலிபன்களை பாகிஸ்தான் அன்புடன் அழைக்குமளவுக்கு நெருக்கமானது. “எங்களுக்கு சுங்க வரி செலுத்தி விட்டு எந்த நாடும் (அதாவது பாகிஸ்தான்) தனது வணிகத்தை காந்தஹார் மூலம் நடத்திக் கொள்ளலாம்’’ என்றது தாலிபன். அது மேலும் மேலும் பலம் பெற்றது. 1994 இறுதியில் மட்டுமே தாலிப னில் 12,000க்கும் அதிகமானவர்கள் இணைந்தனர்.

“ஐ.நா.என்ன செய்யப்போகி றது? தாலிபனுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை அது கண்டிக்கா தது ஏன்?’’ என்ற கேள்விகள் கிளம்ப ஒரு கட்டத்தில் ஐ.நா. பாகிஸ்தானை நிர்பந்தம் செய்தது. “நாங்கள் தாலி பனை ஊக்குவிக்கவில்லை’’ என்றார் பெனாசிர் பூட்டோ. முழுப் பூசணிக்காய்-சோறு. வளர்த்துவானேன், ஹெல் மண்ட், வார்டக் ஆகிய மாகாணங் களைக் கைப்பற்றினர் தாலிபன் கள். தலைநகரம் காபூல் அங் கிருந்து வெறும் 35 மைல் தூரம் மட்டுமே இருந்தது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-9/article6724736.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 10

 
நஜிபுல்லா - முல்லா உமர்
நஜிபுல்லா - முல்லா உமர்

ஆப்கானிஸ்தான் தளபதி மசூத், தாலிபன் தலைமையை சந்தித்தார். பலனில்லை. யுத்தத்தின் புது அத்தியாயம் தொடங்கியது.

தாலிபனுக்கு எதிராக மசூத்தின் படை ஆக்ரோஷமாகப் போரிட்டது. தாலிபனுக்கு வான் பலம் கிடையாது என்பதால் அவர்கள் தரப்பில் நிறைய இழப்புகள். அப்போது தாலிபன்களுக்கு பாகிஸ்தான் கைகொடுத்தது. அதன் உளவு நிறுவனம் காந்தஹாரில் தாலிபன் வசமிருந்த போர் விமானங்களை சரி செய்ய தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பியது. இதனால் ஆப்கான் அரசின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான்மீது கடும் கோபம் கொண்டார்கள். அதன் தூதரகத்தை முற்றுகையிட்டார்கள்.

ஆனால் இதற்குள் வான் படைபலமும் கொண்ட தாலிபன் வசம் நாட்டின் மேற்குப் பகுதி முழுவதுமே வந்து விட்டது.ஒரு கட்டத்தில் காபூலுக்குள் நுழைந்த தாலிபன், அதிபர் நஜிபுல்லாவை அறைந்து உணர்விழக்க வைத்தது. ஒரு ஜீப்பின் பின்னால் அவரைக் கட்டி தரையில் அவர் உடல் இழுக்கப்பட்டது. பின் அவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள். அவரது தம்பியும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இருவர் உடல்களையும் பொது இடத்தில் தொங்க விட்டார்கள்.

காபூல் கைவசம் வந்த ஒரே நாளுக்குள் இஸ்லாமிய வழிமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டன. திருடர்களா? கையை வெட்டு. மது அருந்துபவரா? சாட்டையால் அடி. தொலைக்காட்சி, காற்றாடி, இசை, புகைப்படம் எல்லாவற்றுக்கும் தடை. பெண்கள் அலுவலகம் செல்லக் கூடாது. பள்ளிப் படிப்பு கூட அவசியமில்லை. தாடியில்லாத இளைஞர்களுக்கு தண்டனை காத்திருந்தது. நஜிபுல்லாவுக்குப் பிறகு ஆப்கானின் ஜனாதிபதியாக அவசர அவசரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரப்பானி.

பல இனத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். புதிய அரசில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று ஆசை காட்டினார். தாலிபனைத் தவிர எல்லா எதிரிகளும் ஒரு குடையின்கீழ் வரத் தொடங்கினர். எதிர்த்தரப்பு வலுவடைவதைக் கொண்டு தாலிபன்கள் சீற்றமடைந்தார்கள். நிறைய ராக்கெட் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். ஏதும் அறியா அப்பாவிகள் பலரும் இதில் இறந்தனர்.

எதிரணியும் சும்மா இருக்கவில்லை. உஸ்பெக்குகள் ஆயிரத்துக்கும் அதிகமான தாலிபன்களை சிறைபிடித்து, 600 பேரைக் கொலை செய்தனர். காபூலின் தெற்குப் புறமாக ஹஸாராக்கள் நுழைந்தனர். தாலிபன் சந்தித்த மிக மோசமான தோல்வி இது. அதுவரை காந்தஹாரில் இருந்து கொண்டே கட்டளைகள் பிறப்பித்த ஒமர் காபூலுக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை தோன்றத் தொடங்கியது. அவர் காபூல் சென்றாரா? தெரியவில்லை. ஆனால் அவர் அழைப்பு விடுக்க பாகிஸ்தானிலுள்ள மதரஸாக்கள் மூடப்பட்டன. மாணவர்கள் காபூலை நோக்கி விரைந்தனர்.

1996 ஏப்ரல் 4. ஒமர் காந்தஹார் நகரின் மையப் பகுதியில் இருந்த ஒரு கட்டிடத்தின் கூரைப் பகுதியில் ஏறி நின்று கொண்டார். நபிகள் நாயகத்தின் உடை என்று நம்பப்பட்ட ஒன்றை தன்மீது அப்போது போர்த்திக் கொண்டிருந்தார். அந்த உடையை ஒமர் அப்படியும் இப்படியும் அசைத்துக் காட்ட கைதட்டல் விண்ணைப் பிளந்தது. ‘ரப்பானியின் மீது ஜிஹாத்’ என அறிவித்தார் ஒமர்.

ஐ.நா.வின் சிறப்புத் தூதர் நார்பெல்ட் ஹோல் என்பவரால் தாலிபனை சமாதான மேடைக்கு அழைத்துவர முடியவில்லை. தன் பதவியை ராஜினாமா செய்தார். பெண் நோயாளிகளைப் படம் எடுத்ததற்காக சில ஐரோப்பிய பத்திரிகைக்காரர்களை தாலிபன்கள் சிறையில் அடைத்தனர். வாஷிங்டனில் மகளிர் இயக்கங்

கள் தாலிபனுக்கு எதிராக உரத்து குரல் கொடுத்தன. அதற்கு மேலும் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் தாலிபன் ஆதரவு நிலையை எடுக்க முடியவில்லை. “நாங்கள் தாலிபனை எதிர்க்கிறோம்’’ என்று அமெரிக்கச் செயலாளர் வெளிப்படையாகவே அறிவித்தார். பாகிஸ்தான் பதைபதைத்தது. தாலிபனா? அமெரிக்காவா? யாரை எதிர்ப்பது என்ற கவலை அதற்கு.

“தாலிபன் அல்லாத அரசை ஆப்கானிஸ்தானின் அமைக்க நாங்கள் உதவுவோம்’’ என்று அறிக்கை வெளியிட்டன இரானும், ரஷ்யாவும். ஆக பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் மட்டுமே தங்கள் தூதர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பின.

தாங்கள் ஆள வேண்டிய பகுதிகள் அதிகரித்ததால் அதிக ராணுவ வீரர்கள் தாலிபன் இயக்கத்துக்குத் தேவைப்பட்டனர். புதிதாக இணைவோர் குறைந்தனர். பாகிஸ்தானைத் தவிர அண்டை நாடுகள் தாலிபன் அரசுடனான உறவை முழுவதுமாக வெட்டிக் கொண்டன. சோவியத்யூனியன் பிரிந்து விட்டது. தாலிபனை தங்கள் எல்லைப் பகுதிக்குள் வாலாட்ட விடக்கூடாது என்று ரஷ்யாவும், கஜகஸ்தானும் கூடிப் பேசின.

பாதுகாப்பு அமைச்சராக பதவி பெற்றிருந்த மசூர் காபூலை நோக்கிப் படையெடுத்தார். ஒருவழியாக தாலிபன் படை பின் வாங்கத் தொடங்கியது. பின்னர் அமெரிக்காவின் முதல் எதிரியாக விளங்கியவர். ஒசாமா பின் லேடன். ஆனால் இருதரப்பும் நெருங்கிக் கைகோத்த காலமும் ஒருகாலத்தில் இருந்தது.

சோவியத் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தானை விடுவிக்க வேண்டும் என்று தீவிரம் கொண்டிருந்தார் ஒசாமா. தான் விரும்பிய பணியை ஒசாமா செய்ய முனைந்ததில் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. காலப் போக்கில் ஒசாமாவின் படை சோவியத்தை ஆப்கானிலிருந்து வெளியேற வைத்தது. ஆனால் இதைத் தன்னுடைய வெற்றி என்று அமெரிக்கா அறிவித்துக் கொண்டது ஒசாமாவுக்குப் பிடிக்கவில்லை.

1990ல் சிறிய நாடான குவைத்தை இராக் ஆக்ரமித்தது. இதைத் தொடர்ந்து தான் ஆளும் சவுதி அரேபியாவுக்கும் சதாம் உஸேனால் ஆபத்து வரும் என எண்ணிய மன்னர் அமெரிக்காவின் ஆதரவை நாடினார். இது ஒசாமாவுக்கு கடும் எரிச்சலை அளித்தது. அமெரிக்க – சவுதி நட்பு இறுக இறுக, அமெரிக்க – ஒசாமா பகைமை அதிகமானது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-10/article6725602.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 11

 
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது விமானம் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல். (கோப்புப் படம்)
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது விமானம் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல். (கோப்புப் படம்)

11 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்காவின் உள்நாட்டு விமானங்களை சில தீவிர வாதிகள் கடத்தி நியூ யார்க்கில் இருந்த இரட்டை வணிக கோபுரங் கள் மீது கடும் தாக்குதலை நடத்தி னர். அவை தகர்ந்தன. ஆயிரக் கணக்கானவர்கள் இறந்தனர். கொதித்தது அமெரிக்கா.

அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு மூர்க்கமான தாக்குதல் நடந்ததில்லை. சந்தேகமின்றி ஒசாமா பின் லேடனின் அல்-காய்தாவின் சதிதான் இது என்பதை அமெரிக்காவால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த ஒமரிடம் பின் லேடனை ஒப்படைக்குமாறு மிரட்டியது அமெரிக்கா. ஒமர் மறுத்தார். ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க முடிவெடுத்தது அமெரிக்கா. தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அந்த நாடுகளின் அனுமதியைக் கேட் டன அமெரிக்காவும், பிரிட்டனும் (இந்த இரண்டு ராணுவங்களும் கைகோத்துதான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டன). இரு நாடுகளும் அனுமதியளிக்க, அமெரிக்க - பிரிட்டிஷ் ராணுவம் ஆப்கானிஸ்தானில் நுழைந்தது.

தாலிபன் ஆட்சி தொலைய வேண்டுமென்று ரஷ்யா கருதினா லும் அது நேரடியாக களத்தில் இறங்கவில்லை. ஆப்கானிஸ்தானின் வடபகுதியை தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த அரசுக்கு மட்டும் நிறைய ஆயுதங்களை அனுப்பியது. தாலிபன் அரசுக்கு முதல் வெளிநாட்டு நெருக்கடிகள் வடக்குப் பகுதியிலிருந்து நெருங்கத் தொடங்கின. போர் தொடங்கியது.

பெரும்பாலும் இந்தப் போர் வான்வழியாகவே நடத்தப்பட்டது. ஆக்ரோஷம் அதிகம்தான். என்றாலும் தாலிபனால் எதிரிகளின் நவீனமுறைத் தாக்குதல்களை சமாளிக்க முடியவில்லை. 2001 நவம்பரில் கிட்டத்தட்ட ஆப்கானின் எல்லா நகரங்களும் அமெரிக்க வசமாகிவிட்டது. என் றாலும் ஒசாமா பின் லேடனும், ஒமரும் தப்பித்துவிட்டனர். இதில் அமெரிக்காவுக்கு ஏமாற்றம். “ஒசாமா பின் லேடனைப் பிடித்துக் கொடுத்தாலோ, அதற்கு உதவி னாலோ 23 கோடி ரூபாய் பரிசு உண்டு’’ என்று அறிவித்தது அமெரிக்க அரசு.

2004-ல் ஒசாமா பின் லேடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். செப்டம்பர் 11 வணிக கோபுர தாக்குதல்களுக்கு தான்தான் காரணம் என்று அதில் வெளிப்படையாகவே அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை சல்லடைபோட்டு சலித்தது அமெரிக்க ராணுவம்.

2010 பிற்பகுதியில் பின்லேடன் பாகிஸ்தானிலுள்ள அபோடாபாட் என்ற பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அமெரிக்க அதிபரும், உளவுத் துறையான சி.ஐ.ஏ. இயக்குநர் லியோன் பனேட்டாவும் இணைந்து சுமார் எட்டு மாதங்களுக்கு ஒரு திட்டம் தீட்டினார்கள்.

ஒசாமா பின் லேடன் பதுங்கிய பகுதியில் மின்னலென நுழைந்த அமெரிக்க ராணுவம் அவரை சுட்டு வீழ்த்தியது. அவரது உடல் சோதனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. டி.என்.ஏ. சோதனைகள் அது ஒசாமா பின்லேடனின் உடல் தான் என்பதை உறுதி செய்தன. ‘’அல்-காய்தாவை அடக்குவதில் நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியில் இதுதான் தலைசிறந்த சாதனை’’ என்ற அதிபர் ஒபாமா, அமைதி மற்றும் மனித கெளரவத்தில் நம்பிக்கை கொண்ட யாருமே பின் லேடனின் இறப்பை வரவேற்பார்கள் என்றார்.

பெரும்பாலான அமெரிக்க மக்கள், ஐரோப்பிய யூனியன், பல நாடுகளின் அரசுகள் ஆகியவை பின் லேடனின் இறப்பை வரவேற்றன. ஆனால் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் இந்தக் கொலையைக் கண்டித்தனர். ஆயுதங்கள் இல்லாத நிலையில் பின்லேடன் இருக்கையில் அவரை உயிரோடு பிடிக்காமல், கொலை செய்தது சரியல்ல என்று அம்னெஸ்டி போன்ற அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

பின் லேடனின் இறப்புக்கு முன்னதாக நடந்த காலகட்டத்துக்கு மீண்டும் வருவோம். அதாவது தாலிபன்களிடமிருந்து அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவங்கள் ஆப்கானிஸ்தானத்தை மீட்ட காலம். வசப்பட்ட ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தன் வசம் வைத்துக் கொண்டிருந்தாலும் அதற்கு அவப் பெயர் கிடைக்கும், உடனடியாகத் தேர்தலை நடத்தவும் வழியில்லை. எனவே ஒரு வருடத்திற்காவது யாரையாவது தாற்காலிக அதிப ராக ஆக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு உண்டானது.

தோஸ்தும், ரப்பானி, ஜாகிர் ஷா - இவர்களில் யாரின் வசம் ஆப்கானிஸ்தான் அளிக்கப்படும்? இந்தக் கேள்வி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ஹமீத் கர்ஸாய் டிசம்பர் 2001ல் ஆப்கானிஸ்தானின் அதிபராகப் பதவியேற்றார். இவர் நன்கு படித்தவர். பஷ்டூன் இனத்தவர். காந்தஹாரில் பெரும் செல்வாக்கு கொண்டவர்.

உள்நாட்டு இனத்தலைவர்களை சமாதானப்படுத்துவதும், ஆப்கானிஸ்தானுக்கு நிதி திரட்டுவதும் இவரது முக்கியக் கடமைகள் ஆயின. ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. பெரும்பாலும் சுயேச்சைகள் மட்டுமே களத்தில் நின்ற தேர்தல்.

சீரழிந்த ஆப்கானிஸ்தான் மறுவாழ்வு பெற பல நாடுகள் உதவி செய்தன. தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை ஆஸ்திரியாவும், பிரிட் டனும் அச்சிட்டுக் கொடுத்தன. தேர்தல் செலவுகளை அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஏற்றுக் கொண்டன.

பாராளுமன்ற கட்டிடமே இல்லாமல் ஆப்கானிஸ்தான் இருக்க இந்திய நிதி உதவியில்தான் அது எழும்பியது. பாராளுமன்றத்தின் பெயர் `லோயா ஜிர்க்கா’. இதன் உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண். புதிய அரசியலமைப்பு சட்டத்தில் `இஸ்லாமியக் கொள்கைகளுக்கேற்ப’ என்பது `இஸ்லாமிய சட்டங்களுக்கேற்ப’ என்று மாற்றப்பட்டுள்ளது.

நீண்ட யுத்தங்களைப் பார்த்த நாடு ஆப்கானிஸ்தான். அந்த நாட்டில் ஜனநாயகம் மலரும் என்பது பலரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. ஆனாலும் மலர்ந்தது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-11/article6730407.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 12

 
 
a_2259773h.jpg
 

கர்ஸாயைக் கொல்ல கணிசமான முயற்சிகள் நடைபெற்றன. 2002 செப்டம்பரில் காந்தஹாருக்கு கர்ஸாய் சென்ற போது தன் காரின் ஜன்னல் வழியாக ஒருவன் கர்ஸாய் இருக்கும் திசையை நோக்கி சுட, மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.

2001ல் பதவியேற்றபோது ஆப் கானிஸ்தானின் கடந்தகால ரத்தக் கறையை நீக்குவதாக உறுதி மொழி அளித்திருந்தார் கர்ஸாய். தவிர தனிமையிலிருந்த ஆப்கானிஸ் தானை உலக நாடுகளுடன் ஒன்றிணைப்பதாகவும் கூறினார். இனத் தலைவர்கள் இதை நம்பினார்களோ இல்லையோ பொது மக்களில் பலரும் நம்பினார்கள். ஆனால் பல வருடங்களாகியும் தாலிபன்கள் வேரறுக்கப்படவில்லை. எளிமையாக வாழ்ந்தவர் என்ற பெயர் கிடைத்தாலும், கர்ஸாய் அரசில் ஊழல் மலிந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்கர்கள்கூட கர்ஸாய்மீது தொடக்கத்தில் காட்டிய அதீத நம்பிக்கையை குறைத்துக் கொண்டனர். அதுவும் சோமாலியா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக ஆப்கானிஸ்தானிலும் ஊழல் விஷயத்தில் போட்டி நிலவுவதாக புள்ளி விவரங்கள் கூறப்பட்டது பொது மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அதே சமயம் மேலைநாட்டினர், பழங்குடி இனத்தவர், முன்னாள் கம்யூனிஸ்ட்கள் மற்றும் முன்னாள் தாலிபன்களோடு அவர் இயல்பாகக் கலந்து பழகியது ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக இருந்தது.

என்றாலும் மக்களுக்கு இது போதவில்லை. இனத் தலைவர் களின் பகைமையும் (இவ்வளவு பட்ட பிறகும்) அவ்வப்போது தலைகாட்டவே செய்கிறது. (2011 செப்டம்பர் 20 அன்று முக்கிய அரசியல் தலைவரான ரப்பானி, காபூலில் கொலை செய்யப்பட்டார். மனித வெடிகுண்டாக வந்த ஒருவர் அவரது வீட்டுக்குள் சென்று தன்னை வெடித்துக் கொண்டு அவரையும் கொன்றான். அப்போதைய ஜனாதிபதி கர்ஸாய் ஆப்கானிய நாடாளுமன்றத்தின் பரிந்துரையின்படி அவருக்கு ‘‘அமைதிக்கான தியாகி’’ (Martyr of Peace) என்ற பட்டத்தை அளித்தார்).

மக்களாட்சி மலர்ந்தது என்றா லும் தாலிபன்களின் இடையூறு நின்றுவிடவில்லை. சமீபத்தில்கூட ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் என்ற பகுதியில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தினார்கள். தற்கொலைப் படையாக இவர்கள் செயல்பட்ட தில் பத்து பேர் இறந்தனர்.

வெடி குண்டைக் கட்டிக் கொண்டு வந்த ஒருவன் மனித வெடிகுண்டாகச் செயல்பட்டதில் சிதறுண்டு இறக்க, கூட வந்த தாலிபன் குழுவைச் சேர்ந்த மூவரை ஆப்கானிஸ்தான் ராணு வத்தினர் கொன்றனர். கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற தாக்குதல்களை ஆப் கானிஸ்தான் கிட்டத்தட்ட தினமுமே சந்தித்து வருகிறது. நேட்டோ அமைப்பின் பின் வாங்கல் முடிவை தாலிபன் அணியினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதென்ன பின்வாங்கல் முடிவு என்கிறீர்களா? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நுழைந்தது. தாலிபனை அகற்றியது. இப்படி நுழைந்தது முக்கியமாக அமெரிக்க ராணுவம் தான் என்றாலும் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் (நேட்டோ) சக உறுப்பினர் நாடு களின் ராணுவங்களும்கூட இதில் கூட்டு சேர்ந்து கொண்டன.

பதிமூன்று வருடங்கள் ஆப் கானிஸ்தானில் தாலிபன்களை எதிர்த்துச் செயல்பட்டபின் அங்கி ருந்து ஜனவரி 1 ,2015 அன்று தங்கள் ராணுவத்தின் பெரும் பங்கை வாபஸ் பெறலாம் என்று அமெரிக்கா தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் அமைதிக்காக நேட்டோ ராணுவத்தின் பதிமூன்று வருட முயற்சிகள் முடிவுக்கு வந்தது என்பதைக் குறிக்கும் வகையில் காபூலில் ஒரு விழா நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி அவர் களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதென்ன புதுப் பெயர் என்பவர்களுக்கு - ஹமீது கர்ஸாய்க்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அதிபராகியிருக்கிறார் அஷ்ரஃப் கனி. இந்த ஆண்டில் நடை பெற்ற தேர்தல்களில் காபூல் பல்கலைக் கழகத்தின் வேந்தராக விளங்கிய அஷ்ரஃப் கனி வென்றிருக்கிறார்.

ஆனால் இதற்கு முந்தைய தேர்தலில் தோஸ்தும் ஒரு கொலைகாரர் என்று கூறி, அவரது ஆதரவைப் பெற்றதற்காக கர்ஸாயைப் பழித்தவர் இவர். ஆனால் இந்தத் தேர்தலில் தோஸ்து முடன் கூட்டணி வைத்துக் கொண்டார். ‘‘அரசியல் என்பது காதல் திருமணம் அல்ல. சரித்திரத்தின் அவசியங்கள்தான் அரசியலைத் தீர்மானிக்கின்றன’’ என்று விளக்கம் கொடுத்தார். சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவ பள்ளிக் கூடத்தில் தாலிபன் தீவிரவாதிகள் 132 குழந்தைகளைக் கொன்று குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தாலிபன் ஆதிக்கம் மிகுந்த ஆப்கானிஸ் தானுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் காபூலுக்குச் சென்றார். ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அஷ்ரப் கனி, “தீவிரவாதத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டு, தீவிர வாதிகளை ஒடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.” என்றார். ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் தாலிபன் தீவிர வாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் கணிசமான தீவிரவாதிகள் இறந்தனர்.

தாலிபன்கள் பதிலுக்குத் தாக்க, அதில் சில பாதுகாப்புப் படை வீரர்கள் சிக்கி வீர மரணமடைந்தனர். தன் சரித்திரம் முழுவதும் சர்வாதிகார ஆட்சிகள், தொடர் யுத்தங்கள், இனப் போராட்டங்கள், பேரழிவுகள் இவற்றை மட்டுமே கண்டுவந்திருக்கும் பரிதாபமான நாடு ஆப்கானிஸ்தான். மக்கள் தொடர்ந்து ஏதோ ஓர் அடக்கு முறைக்கு எப்போதும் ஆட்பட்டிருந் தார்கள்.

எப்போதும் போர் முரசு மத்தியிலேயே வாழ்ந்த நாடு. அமெரிக்கா-சோவியத் பனிப்போர் காலத்தில் பகடைக்காயாக பயன் படுத்தப்பட்ட நாடு. தாலிபன்கள் பிடியில் நசுங்கி நடுங்கிய நாடு. இப்போதுதான் சின்னதாக ஒரு ஜனநாயகம் அங்கே எட்டிப் பார்த்தி ருக்கிறது. ஜனநாயகத்தையும், அமைதி யையும் எத்தனை நாட்களுக்கு ஆப்கானிஸ்தான் தக்கவைத்துக் கொள்ளும்? சரித்திரம்தான் விடை யளிக்க வேண்டும். (அடுத்து கர்ஜிக்கும் நாடு) ஆப்கானிஸ்தானில் உள்ள பிரபல நாட்டுப் பாடல் ஒன்றின் முதல் வரி ‘‘தாய்நாடே, எல்லோ ருமே உன் இதயத்தை அடுத் தடுத்து நொறுக்கினார்கள்’’ என்பது தான். இதைப்பாடும் அந்நாட்டு மக்கள் பலரின் கண்களிலும் கண்ணீர் வழிகிறது.

(இன்னும் வரும்..)

http://tamil.thehindu.com/world/ஆபத்துச்-சுழல்களில்-ஆப்கானிஸ்தான்-12/article6732492.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.