Jump to content

ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமஸ்டியே இறுதி தீர்வு : சுமந்திரன் எம்.பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமஸ்டியே இறுதி தீர்வு : சுமந்திரன் எம்.பி
news

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இதற்கு மேலும் அதிகாரங்களைப் பகிர முடியாததன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி முறையிலான தீர்வினை வழியுறுத்துவதாகவும், இதுவே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
- See more at: http://onlineuthayan.com

Link to comment
Share on other sites

"சும் அத்தானை தேர்தலுக்கு பின் காணவில்லை" என யான் "தேடித்தாருங்கள்" என விளம்பரம் கொடுக்க ரெடி!

ஆனால் அதற்குள் திருவாய் மலர்ந்தருளி விட்டார்!

சும் அத்தானுக்கும் இப்போ எப்படி எமக்கு பூ சுத்தி பொட்டு வைத்து தீபம் காட்ட வேண்டும் என்று புரிந்து விட்டது!

சும்மத்தான், முன்பு எமக்கெதிராக எம்முன்னேயே ஏடாகூடமாக பேசியும், சிங்கள தொலைக்காட்சியில் "போர்குற்ற விசாரணை தேவையில்லை, நாம் அனுமதியோம்" அப்படி இப்படியெல்லாம் கதைத்து, சிங்களத்துடன் புலம் வந்து இரகசியமாக பேசி பரகசியமாகியதும் எல்லாம் நடந்தது! இனி சும்மத்தான் அப்படி செய்ய மாட்டார்? வலு கவனமாக இருப்பார்?

அது கிடக்கட்டும் சும்மத்தான் .. தாங்கள் ஜெனீவா வந்து சிங்களத்தை காப்பாற்றும் நோக்கம் இல்லையோ??? ... மன்னிக்கவும்... எமக்காதரவாக போர்குற்ற விசாரணைகளுக்கும், இனவழிப்புக்குமாக குரல் கொடுப்பீர்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்த் திருவிழா முடிய சிலபேர் ஜெனிவா திருவிழாக்கு அடுக்குப்பண்ணுகினம்!:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.