Jump to content

அமெரிக்க ஓபனில் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி: ஜோகோவிச், நடால், செரீனா முன்னேற்றம்


Recommended Posts

அமெரிக்க ஓபனில் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி: ஜோகோவிச், நடால், செரீனா முன்னேற்றம்

 
2-வது சுற்றுக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கிறார் நடால். படம்: ஏ.எப்.பி.
2-வது சுற்றுக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கிறார் நடால். படம்: ஏ.எப்.பி.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

அதேநேரத்தில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 6-0, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அவரை எதிர்த்து விளையாடிய ரஷ்ய வீராங்கனை விட்டாலியா டியாட்சென்கோ காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 30 நிமிடங்களில் முதல் சுற்றை முடித்த செரீனா, அடுத்த சுற்றில் நெதர்லாந்தின் தகுதி நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸை சந்திக்கிறார்.

33 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் 1988-க்குப் பிறகு காலண்டர் கிராண்ட்ஸ்லாம் வென்றவர் என்ற பெருமையைப் பெறுவதோடு, ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) வென்ற ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் சாதனையையும் சமன் செய்வார்.

இவானோவிச் அதிர்ச்சி தோல்வி

மற்றொரு ஒற்றையர் முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தவரும், அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான செர்பியாவின் அனா இவானோவிச் 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் செஸில் காராடன்ட்சேவாவையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 6-7 (7), 6-3 என்ற செட் கணக்கில் பியூர்ட்டோ ரிகோவின் மோனிகா பியூக்கையும் தோற்கடித்தனர்.

போட்டித் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்தவர்களில் 3-வது இடத்தில் இருந்த ஷரபோவா காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், 7-வது இடத்தில் இருந்த இவானோவிச், 8-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, 10-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லா நவரோவ் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறியிருப்பதால் செரீனா மிக எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜோகோவிச், நடால் வெற்றி

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பிரேசிலின் ஜோ சவுசாவை வீழ்த்தினார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், இந்த ஆட்டத்தை 1 மணி, 11 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் விளையாடாத நடால், இந்த முறை தனது முதல் சுற்றில் 6-3, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் போர்னா கோரிச்சை தோற்கடித்தார். இதன்மூலம் பேசல் போட்டியில் கோரிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள நடால், அடுத்த சுற்றில் அர்ஜெண்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மானை சந்திக்கிறார்.

நிஷிகோரி தோல்வி

கடந்த அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரும், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்தவருமான நிஷிகோரி இந்த முறை முதல் சுற்றில் 4-6, 6-3, 6-4, 6-7 (6), 4-6 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 41-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். கடந்த 5 ஆண்டுகளில் 3-வது முறையாக அமெரிக்க ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளார் நிஷிகோரி.

பெனாய்ட் பேர் முதல்முறையாக சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களில் இருக்கும் ஒருவரை வீழ்த்தியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபனில்-நிஷிகோரி-அதிர்ச்சி-தோல்வி-ஜோகோவிச்-நடால்-செரீனா-முன்னேற்றம்/article7606996.ece

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபனில் ஃபெடரர், முர்ரே, வாவ்ரிங்கா முன்னேற்றம்: காயத்தால் விலகியவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு; லூஸி சபரோவா அதிர்ச்சித் தோல்வி

 

  • அர்ஜென்டினாவின் லியானர்டோ மேயருக்கு எதிராக, பந்தை ஆக்ரோஷமாக திருப்பி அனுப்ப எம்பிக் குதிக்கும் ரோஜர் பெடரர்.
    அர்ஜென்டினாவின் லியானர்டோ மேயருக்கு எதிராக, பந்தை ஆக்ரோஷமாக திருப்பி அனுப்ப எம்பிக் குதிக்கும் ரோஜர் பெடரர்.
  • அமெரிக்காவின் ஜாமி லோபுக்கு எதிராக பந்தைத் திருப்பும் டென்மார்க்கின் வோஸ்னியாகி.
    அமெரிக்காவின் ஜாமி லோபுக்கு எதிராக பந்தைத் திருப்பும் டென்மார்க்கின் வோஸ்னியாகி.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஃபெடரர், ஆன்டி முர்ரே, வாவ்ரிங்கா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் போட்டியில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அர்ஜென்டினாவின் லியானர்டோ மேயரைச் சந்தித்தார்.

இப்போட்டியில் ஃபெடரர் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். 77 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இப்போட்டியில் ஃபெடரர் 12 ஏஸ்களை விளாசினார். 29 வின்னர் ஷாட்களை அடித்ததுடன், 6 முறை மேயரின் சர்வீஸை பிரேக் செய்தார்.

2-வது சுற்றில், பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸை எதிர்கொள்கிறார் ஃபெடரர். சைப்ரஸின் பாக் தாதிஸ் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியதை அடுத்து டார்சி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முர்ரே வெற்றி

மற்றொரு போட்டியில், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியாஸை 7-5, 6-3, 4-6, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். இதுவரை 4 முறை கிர்ஜியாஸுடன் மோதியுள்ள முர்ரே, நான்கு முறையும் வென்றுள்ளார். நடப் பாண்டில் மட்டும் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். முர்ரே 2-வது சுற்றில், பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

“இப்போட்டி மிகவும் கடின மானதாக இருந்தது. நான் அதிகமாக ஓடவும், தற்காத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது” என முர்ரே தெரிவித்தார்.

மற்றொரு போட்டியில் ஆஸ்தி ரேலியாவின் கோக்கினாகிஸ், போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்குட்டை எதிர்கொண்டார். ஏற்கெனவே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கோக்கினாகிஸ், போட்டியின்போது 4-6, 6-1, 4-6, 6-3, 2-0 என்ற நிலையில் இருந்தபோது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். முன்னதாக, ஆட்டத்தைத் தொடர்வது அவரின் உடல்நலத்தை மேலும் மோசமாக்கும் என போட்டி நடுவர் எச்சரித்தபோதும் அவர் தொடர்ந்து விளையாடினார். இறுதியில் 5-வது செட்டின்போது போட்டியிலிருந்து விலகினார். இப்போட்டி மூன்றரை மணி நேரம் நடந்தது.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலஸுக்கு எதிரான போட்டியை 7-5, 6-4, 7-6 (8/6) என்ற செட் கணக்கில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சுங் ஹேயோனைச் சந்திக்கிறார்.

10 பேர் விலகல்

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இதுவரை 10 பேர் காயம் காரணமாக போட்டியி லிருந்து பாதியிலேயே வெளியேறி யுள்ளனர். திங்கள்கிழமை வரை 6 பேர் வெளியேறியிருந்தனர். செவ்வாய்க்கிழமை கோக்கி னாகிஸ், பாக்தாதிஸ், எர்னெஸ்ட் கல்பிஸ், கஜகஸ்தானின் அலெக் ஸாண்டர் நெடோவ்யெசோவ் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறினர். இதனால், ஆடவர் ஒற்றையரில் காயம் காரணமாக முதல் சுற்றிலேயே விலகியவர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் லேடன் ஹேவிட்டுடன் மோதிய கஜகஸ் தானின் அலெக்ஸாண்டர், 6-0, 7-6 (7/2), 1-0 என்ற செட் கணக்கில் இருந்தபோது, வலது தோள் காயம் காரணமாக விலகினார்.

ஹேவிட்டுக்கு இது கடைசி அமெரிக்கன் ஓபனாகும். இவர் தனது 2-வது சுற்றில், பெர்னார்டு டாமிக்கை எதிர்கொள்கிறார். ஜெர்மனியின் பெர்னார்டு டாமிக் முதல் சுற்றில், போஸ்னியாவின் டாமிர் ஸும்குரை 5-7, 7-6 (7/4) 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

ஜப்பானின் நிஷிகோரி வெளி யேறிய நிலையில், அந்நாட்டின் யோஷிஹிட்டோ, பிரான்ஸின் பால் ஹென்றி மேத்யூவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி யுள்ளார்.

சபரோவா அதிர்ச்சித் தோல்வி

மகளிர் ஒற்றையரில், செகோஸ் லோவோகியாவின் லூஸி சபரோவா முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளி யேறினார். போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சபரோவா, உக்ரைனின் லெஸியா சுரென்கோவிடம் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.

நியூஹெவன் டென்னிஸ் அரை யிறுதியில் கடந்த வாரம் சுரென் கோவை, சபரோவா வீழ்த்தி யிருந்தார். தற்போது சுரென்கோ பதிலடி கொடுத்துள்ளார்.

போட்டித் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள வீராங்கனைகளில் இதுவரை 4 பேர் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளனர். 7-வது இடத்திலுள்ள இவானோவிச், 8-வது இடத்திலுள்ள கரோலினா லிஸ்கோவா, 10-வது இடத்திலுள்ள சுவாரெஸ் நவர்ரோ மற்றும் சபரோவா ஆகிய நால்வரும் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளனர்.

உலகதரவரிசையில் 2-வது இடத்திலுள்ள சிமோனா ஹாலெப், நியூஸிலாந்தின் மரினா எரகோவிக்குடன் மோதினார். இப்போட்டியில் 6-2, 3-0 என்ற கணக்கில் ஹாலெப் முன்னிலை வகித்த போது, எரகோவிக் முழங்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால், ஹாலெப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2011-ம் ஆண்டு அமெரிக்கன் ஓபன் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா டோசுர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

போட்டித் தரவரிசையில் 4-வது இடத்திலுள்ள டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அமெரிக்காவின் ஜாமி லோபை 6-2, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பர், இத்தாலியின் கரின் நாப் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபனில்-பெடரர்-முர்ரே-வாவ்ரிங்கா-முன்னேற்றம்-காயத்தால்-விலகியவர்களின்-எண்ணிக்கை-10-ஆக-உயர்வு-லூஸி-சபரோவா-அதிர்ச்சித்-தோல்வி/article7610630.ece

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் செரீனா, ஜோகோவிச், நடால்

  • 3-வது சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பெலின்டா பென்சிச்.
    3-வது சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பெலின்டா பென்சிச்.
  • 2-வது சுற்றில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயினின் டேவிட் ஃபெரர். படம்: ஏ.எப்.பி.
    2-வது சுற்றில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயினின் டேவிட் ஃபெரர். படம்: ஏ.எப்.பி.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ், செர் பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன் னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம் பியனுமான செரீனா வில்லியம்ஸ் 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 110-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த தகுதி நிலை வீராங்கனை கிகி பெர்டென்ஸை தோற்கடித்தார். முதல் செட்டில் செய்த தவறுகளால் பின்னடைவைச் சந்தித்த செரீனா, டை பிரேக்கரில் அபாரமாக ஆடி அந்த செட்டை கைப்பற்றினார்.

33 வயதாகும் செரீனா, இந்த ஆண்டில் இதுவரை 52 ஆட் டங்களில் விளையாடி அதில் 50-ல் வெற்றி கண்டுள்ளார். கிராண்ட்ஸ் லாம் போட்டியில் தொடர்ச்சியாக 30-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த முறை அவர் சாம்பியனாகும்பட்சத்தில் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றவர் என்ற பெருமையைப் பெறுவதோடு, ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) பட்டம் வென்றவரான ஸ்டெபி கிராஃபின் சாதனையையும் சமன் செய்வார். ஓபன் எராவில் அமெரிக்க ஓபனில் அதிகமுறை (7) சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைப்பார்.

செரீனா தனது 3-வது சுற்றில் சகநாட்டவரான பெத்தானி மடேக் சேன்ட்ஸை சந்திக்கிறார். சேன்ட்ஸ் தனது 2-வது சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ வந்தேவேகை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர் லாந்தின் பெலின்டா பென்சிச் 5-7, 7-6 (3), 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிசாக்கி டோயை வீழ்த்தினார். பென்சிச் தனது 3-வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சந்திக்கிறார். வீனஸ் தனது 2-வது சுற்றில் 6-3, 6-7 (2), 6-2 என்ற செட் கணக் கில் சகநாட்டவரான ஐரினா பால்கோனியை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் கனடா வின் யூஜீனி புச்சார்டு 6-3, 6-7 (2), 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லாவேனியாவின் போலானா ஹெர்காக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நடால் வெற்றி

ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ரஃபேல் நடால் 7-6 (5), 6-3, 7-5 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் டீகோ ஷ்வார்ட்ஸ்மானை வீழ்த்தினார். 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான நடால், டீகோவை வீழ்த்தியதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 750-வது வெற்றியைப் பதிவு செய்தார்.

உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியாஸ் ஹைதர் மவுரெரை தோற்கடித்தார். ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனின் நடப்பு சாம்பியனான ஜோகோவிச், இந்த ஆண்டில் பல்வேறு போட்டிகளில் 17 முறை இறுதிச்சுற்றுக்கு முன் னேறியுள்ளார். அதில் 14-ல் சாம்பியனாகியுள்ளார்.

சிலிச் வெற்றி

போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச் 6-2, 6-4, 6-7 (5), 7-6 (1) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர் டாஸ்கோவை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் ரயோனிச் 18 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார்.

போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் சர்வதேச தர வரிசையில் 139-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் ஈவ்ஜெனி டான்ஸ்காயை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் சிலிச் 19 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார்.

ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 7-5, 7-5, 7-6 (4) என்ற நேர் செட்களில் செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சை வீழ்த்தினார். காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் விளையாடாத ஃபெரர் இப்போது மீண்டும் பார்முக்கு திரும்பியிருக்கிறார்.

பயஸ், போபண்ணா ஜோடிகள் முன்னேற்றம்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக்-நிகோலஸ் மன்றோ ஜோடியைத் தோற்கடித்தது.

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள போபண்ணா-மெர்ஜியா ஜோடி தங்களின் 2-வது சுற்றில் போலந்தின் மெரியூஸ் ஃபிர்ஸ்டென்பெர்க்-மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸாலெஸ் ஜோடியை சந்திக்கிறது.

இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-7 (5), 7-6 (3), 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் தாமஸ் பெட்னரேக்-ஜெர்ஸி ஜானோவிச் ஜோடியைத் தோற்கடித்தது.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-2, 7-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் ஹாரி-சி லியூஸ் ஜோடியை வீழ்த்தியது.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-3வது-சுற்றில்-செரீனா-ஜோகோவிச்-நடால்/article7614966.ece

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தோல்வியில் இருந்து தப்பினார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே- வோஸ்னியாக்கி, முகுருஸா அதிர்ச்சி தோல்வி

 
  • 2-வது சுற்றில் அட்ரியானுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய முர்ரே.
    2-வது சுற்றில் அட்ரியானுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடிய முர்ரே.
  • வோஸ்னியாக்கியை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெட்ரா செட்கோவ்ஸ்கா.
    வோஸ்னியாக்கியை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெட்ரா செட்கோவ்ஸ்கா.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 2-வது சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அதேநேரத்தில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் முகுருஸா கார்பைன், டென்மார்க் கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நக ரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ரோஜர் ஃபெடரர் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் களில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார் சிஸ்ஸை வீழ்த்தினார். இந்த ஆட் டத்தை 80 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த ஃபெடரர், தனது 3-வது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை சந்திக்கிறார்.

போராடிய முர்ரே

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 2012 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஆன்டி முர்ரே, கடும் போராட்டத்துக்குப் பிறகு 5-7, 4-6, 6-1, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை முர்ரே இழந்ததால், அவர் தோற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 3 செட்களில் ஆக்ரோஷமாக ஆடி வெற்றி கண்டார் முர்ரே. அடுத்த சுற்றில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியை சந்திக்கிறார் முர்ரே.

ஹெவிட் ‘குட் பை’

தனது கடைசி அமெரிக்க ஓபனில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் 3-6, 2-6, 6-3, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பெர்னாட் டாமிக்கிடம் தோல்வி கண்டார். 2001 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் முதல் நிலை வீரருமான ஹெவிட், இந்த ஆட்டத்தை 3 மணி, 27 நிமிடங்கள் ஆடினார். ஹெவிட் வரும் ஜனவரியில் நடை பெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிவிட்டு டென்னிஸி லிருந்து ஓய்வு பெறுகிறார்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 7-6 (2), 7-6 (4), 7-6 (6) என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சங் ஹியெனை வீழ்த்தினார். வாவ்ரிங்கா தனது 3-வது சுற்றில் பெல்ஜியத்தின் பெமல்மேனை சந்திக்கிறார்.

வோஸ்னியாக்கி தோல்வி

மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 7-5, 6-7 (1) என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 149-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் பெட்ரா செட்கோவ்ஸ்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

நீண்ட நேர ஆட்டம்

மற்றொரு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்தவரும், விம்பிள் டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவருமான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-7 (4), 7-6 (4), 2-6 என்ற செட் கணக்கில் உலகின் 97-ம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவிடம் தோல்வி கண்டார்.

இந்த ஆட்டம் 3 மணி, 23 நிமிடங்கள் நடந்தது. அமெரிக்க ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி இதுதான். முன்னதாக 2011-ல் சமந்தா ஸ்டோசர்-நடியா பெட்ரோவா இடையிலான ஆட்டம் 3 மணி, 16 நிமிடங்கள் நடந்ததே சாதனையாக இருந்தது.

தற்போதைய நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டாப்-10 வீராங்கனைகளில் செரீனா வில்லியம்ஸ் (1), சைமனோ ஹேலப் (2), பெட்ரா விட்டோவா (5) ஆகிய மூன்று பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். எஞ்சிய அனைவருமே வெளியேறிவிட்டனர்.

2-வது சுற்றில் பயஸ், சானியா ஜோடிகள்

ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் புளோரின் மேயர்-பிராங்க் மோடர் ஜோடியை வீழ்த்தியது. 2-வது சுற்றில் அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சன்-சாம் கியூரி ஜோடியை சந்திக்கிறது பயஸ் ஜோடி.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கெய்த்லின் கிறிஸ்டியான்-சாப்ரினா சன்டாமேரியா ஜோடியைத் தோற் கடித்தது. 2-வது சுற்றில் ஸ்விட்சர் லாந்தின் டிமியா பேக்சின்ஸ்கை-சீன தைபேவின் சியா ஜங் ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி.

வெளுத்து வாங்கிய வெயில்: சோர்ந்து விழுந்த வீரர்கள்

நியூயார்க்கில் சுமார் 91 பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி வருவதால் வீரர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 4-வது நாளில் அமெரிக்காவின் ஜேக் சாக், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின் ஆகியோர் வெயில் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற நேர்ந்தது. கடந்த 4 நாட்களில் 12 வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆளில்லா குட்டி விமானம் புகுந்ததால் பரபரப்பு

இத்தாலியின் பிளேவியா பென்னட்டா-ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்து வந்து மைதானத்தின் கேலரியில் விழுந்தது. அது வெடிகுண்டாக இருக்கலாம் என அஞ்சப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

vim_2536580a.jpg

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-தோல்வியில்-இருந்து-தப்பினார்-பிரிட்டனின்-ஆன்டி-முர்ரே-வோஸ்னியாக்கி-முகுருஸா-அதிர்ச்சி-தோல்வி/article7618686.ece

 

 

 

Link to comment
Share on other sites

4-வது சுற்று வாய்ப்பை இழந்தார் நடால்: இத்தாலி வீரரிடம் அதிர்ச்சித் தோல்வி

 
நடால், ஃபாக்னீனி.| யு.எஸ். ஓபன் 3-வது சுற்று, 2015. | படம்: ஏ.எஃப்.பி.
நடால், ஃபாக்னீனி.| யு.எஸ். ஓபன் 3-வது சுற்று, 2015. | படம்: ஏ.எஃப்.பி.

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில், இத்தாலி வீரர் ஃபேபியோ ஃபாக்னீனியிடம் கடுமையாக போராடி 5 செட்கள் விளையாடி தோற்றார் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால்.

2 செட்கள் முன்னிலை பெற்ற பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றை நடால் இழப்பது இதுவே முதல்முறை. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆண்டில் எந்த ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இல்லாமல் செல்கிறார் ரபேல் நடால்.

மாறாக கடைசி வரை நடாலை எதிர்கொண்டு ஆட்கொண்ட பேபியோ பாக்னீனி, 3-6, 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட்களில் கடினமாக உழைத்து வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நடாலுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிய பாக்னீனி, 5-வது செட்டிலும் அத்தகைய அணுகுமுறையைத் தொடர்ந்தார். இந்த செட் மட்டும் 52 நிமிடங்கள் நடைபெற்றது. 1-1 என்று இருவரும் அந்த கடைசி செட்டில் இருந்த பிறகு தொடர்ச்சியாக 7 முறை பிரேக் வாய்ப்புகள் ஏற்பட்டன. கடைசியில் நடாலை முறியடித்த பாக்னீனி 5-4 என்று முன்னிலை பெற்றார். பிறகு தனது சர்வை விட்டுக் கொடுக்காது ஆடி 6-4 என்று நடாலை வெளியேற்றினார்.

கடந்த 23 யு.எஸ்.ஓபன் போட்டிகளில் 22-ல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.

நடாலின் ஃபோர்ஹேண்ட் ஷாட்களில் அவரிடம் வழக்கமாகக் காணப்படும் 'டாப்ஸ்பின்' இல்லை. தரை ஷாட்களிலும் தாக்கம் எதுவும் இல்லை. எளிதில் எடுத்து விடக்கூடியதாக இருந்தது.

இது குறித்து நடாலே கூறும்போது, “என்னுடைய தவறுகள் சுலபமாக புரிகிறது, சுலபமாக விளக்கப்படக்கூடியது, ஆனால் சுலபமாக மாற்றிக் கொள்ளக்கூடியதல்ல. ஆனால் நான் மாற்றிக் காண்பிப்பேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/4வது-சுற்று-வாய்ப்பை-இழந்தார்-நடால்-இத்தாலி-வீரரிடம்-அதிர்ச்சித்-தோல்வி/article7619508.ece

Link to comment
Share on other sites

யு.எஸ்., ஓபன்: பெடரர், அசரன்கா வெற்றி

Victoria Azarenka, tennis
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பெலாரசின் அசரன்கா உள்ளிட்டோர் முன்னேறினர். கனடா வீராங்கனை பவுச்சர்டு காயம் காரணமாக இரட்டையர் பிரிவிலிருந்து விலகினார். 

 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ‘நம்பர்–2’ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர், 29வது தரவரிசையில் உள்ள ஜெர்மனியின் பிலிப்பை சந்தித்தார். முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய பெடரர், அடுத்த இரண்டு செட்டையும் 6–4, 6–4 என தன்வசப்படுத்தினார். முடிவில், பெடரர் 6–3, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

இதன் மூலம் இத்தொடரில் 10வது முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

முர்ரே முன்னேற்றம்:

மற்றொரு போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6–3, 6–2, 7–5 என பிரேசிலின் தாமஸ் பெலுசியை வீழ்த்தினார். 

மற்ற போட்டிகளில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்சின் ரிச்சர்டு காஸ்குயட், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 

அசரன்கா அசத்தல்:

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் பெலாரசின் அசரன்கா, ஜெர்மனியின் கெர்பரை எதிர் கொண்டார். முதல் செட்டை 7–5 என கைப்பற்றிய அசரன்கா, அடுத்த செட்டை 2–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய அசரன்கா 6–4 என தன்வசப்படுத்தினார். முடிவில், அசரன்கா 7–5, 2–6, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

மற்ற போட்டிகளில் ருமேனியாவின் சிமோனா ஹாலப், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், ஜெர்மனியின் சபைன் லிசிக்கி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பவுச்சர்டு காயம்:

பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் கனடாவின் பவுச்சர்டு, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, அமெரிக்காவின் ராகல், அபிகெல் ஜோடியை சந்திப்பதாக இருந்தது. ஆனால், தலையில் காயம் ஏற்பட்டதால் பவுச்சர்டு போட்டியிலிருந்து விலகினார். இதனையடுத்து அமெரிக்க ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

* இதே போல இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடிக்கு எதிரான கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றிலும் காயம் காரணமாக கனடாவின் பவுச்சர்டு விலகினார். இதனால், பயஸ், ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இன்று நடக்கவுள்ள ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றிலும் பவுச்சர்டு பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சானியா ஜோடி வெற்றி

 

பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் டமியா, சீன தைபேயின் சியா ஜங் ஜோடியை வீழ்த்தியது. 

போபண்ணா ஜோடி அபாரம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் ஜோடி 6–3, 7–6 என போலந்தின் மரியஸ், மெக்சிகோவின் சாண்டியாகோ ஜோடியை தோற்கடித்தது. 

* கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் போபண்ணா, சீன தைபேயின் யங் ஜன் ஜோடி 3–6, 6–3, 10-8 என ரஷ்யாவின் குட்ரயாவ்ட்செவா, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஜோடியை வென்றது. 

http://sports.dinamalar.com/2015/09/1441433112/NadalUSOpenTennis.html

Link to comment
Share on other sites

பவுச்சர்டு ‘காதல்’ஆட்டம்

Bouchard, US Open Tennis, Injury

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் தொடரில் அழகுப்புயலாக அசத்தும் பவுச்சர்டு, கலப்பு இரட்டையர் பிரிவில் நிக் கியரியாசுடன் காதல் ரசம் சொட்ட விளையாடினார். பின் ஓய்வு அறைக்கு திரும்பிய இவருக்கு தலையில் திடீரென காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு ஒற்றையர் பிரிவில் பவுச்சர்டு தொடர்ந்து பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் கனடாவின் பவுச்சர்டு, ஆஸ்திரேலியாவின் கியரியாஸ் ஜோடி, உக்ரைனின் ஷிவ்டோலினா, நியூசிலாந்தின் சிடாக் ஜோடியை வீழ்த்தியது. இப்போட்டியில் இளம் வீராங்கனை பவுச்சர்டு,21,  ‘சர்ச்சை’ வீரர் கியரியாஸ்,20, காதல் பறவைகள் போல விளையாடினார்கள். அவ்வப்போது சிரிப்பது, இருவரின் துண்டை மாறி மாறி தருவது உள்ளிட்ட செல்ல மோதலில் ஈடுபட்டனர். 

பவுச்சர்டு கூறுகையில்,‘‘ கியரியாசுடன் விளையாடியது ‘ஜாலியாக’ இருந்தது. போட்டி முழுவதும் நான் சிரித்து கொண்டே இருந்தேன்,’’ என்றார்.             

பின் ஓய்வு அறைக்கு திரும்பிய பவுச்சர்டு திடீரென கீழே விழுந்துவிட்டார். இதில், தலையில் காயம் அடைந்த இவர், பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் விலகினார். கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றிலும் விலகினார்.             

இத்தாலியின் ராபர்டா வின்சிக்கு எதிரான பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றிலும் பங்கேற்க வாய்ப்பு குறைவுதான். டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

http://sports.dinamalar.com/2015/09/1441560713/BouchardUSOpenTennisInjury.html

Link to comment
Share on other sites

காலிறுதியில் ஜோகோவிச், செரினா

US Open Tennis, Djokovic, Serena, Venus

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகட் மோதினர். இதில் ஜோகோவிச் 6–3, 4–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ குரோஷியாவின் மரின் சிலிக் 6–3, 2–6, 7–6, 6–1 என்ற கணக்கில் பிரான்சின் ஜெரிமி ஜார்டியை தோற்கடித்தார். மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் பிரான்சின் ஜோ–வில்பிரைட் டிசோங்கா, ஸ்பெயினின் பெர்ணான்டோ லோபஸ் வெற்றி பெற்றனர்.

செரினா–வீனஸ் மோதல்: பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், ‘நடப்பு சாம்பியன்’ உலகின் ‘நம்பர்–1’ அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சகவீராங்கனை மடிசன் கீசை தோற்கடித்தார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6–2, 6–1 என எஸ்தோனியாவின் அனீட் கான்டவைட்டை வீழ்த்தினார். காலிறுதியில் செரினா, வீனஸ் சகோதரிகள் மோதவுள்ளனர்.

காயம் காரணமாக பவுச்சர்டு விலகியதால், இத்தாலியின் ராபர்டா வின்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

சானியா ஜோடி அசத்தல்

பெண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–0 என நெதர்லாந்தின் மிட்சல்லா கிராஜிசக், செக்குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

http://sports.dinamalar.com/2015/09/1441606246/USOpenTennisDjokovicSerenaVenus.html

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வெளியேறினார் ஆன்டி முர்ரே!

 

Andy%20Murray.jpgநியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, தென் ஆப்பிரிக்கா வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 4வது சுற்றில் லிசிகியை (ஜெர்மனி) சந்தித்தார். இதில் ஹெலப் 6–7 (6–8) 7–5, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் பெலாரசை சேர்ந்த அசரென்காவை சந்திக்கிறார். 20ஆம் நிலை வீராங்கனையான அசரென்கா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை லெப்சென்சோவை வீழ்த்தினார்.

5ம் நிலை வீராங்கனை செக்குடியரசின் குவிட்டோவா 7–5, 6–3 என்ற கணக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோகன்னாவை வீழ்த்தினார். அவர் காலிறுதியில் இத்தாலி வீராங்கனை பெனட்டாவை சந்திக்கிறார். பெனட்டா 4வது சுற்றில் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீராங்கனை சமந்தா ஸ்டோசுரை தோற்கடித்தார்.

உலகின் 3ஆம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 4வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 6–7 (5–7), 3–6 7–6 (7–2), 6–7 (0–7) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 15ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனிடம், முர்ரே அதிர்ச்சி தோல்வி தழுவினார். ஏற்கனவே 3வது சுற்றில் மற்றொரு முன்னணி வீரரான நடால்  தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆண்டர்சன் காலிறுதியில் 5ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். இவர் 4வது சுற்றில் 6–4, 1–6, 6–3, 6–4 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட்யங்கை தோற்கடித்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=52111

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், சிலிச், செரீனா

 

1_2539824f.jpg
 

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர் பியாவின் நோவக் ஜோகோவிச், குரேஷியாவின் மரின் சிலிச், அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உல கின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் தனது 4-வது சுற்றில் 6-2, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகட்டை தோற்கடித்தார்.

இந்த ஆண்டில் 60-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஜோகோவிச், வெற்றி குறித்துப் பேசுகையில், “பவுதிஸ்டா வெற்றி வேட்கையோடு கடுமையாகப் போராடினார். இது மிகச்சிறந்த ஆட்டமாகும். 2-வது செட்டை நான் கைப்பற்றுவதற்கான வாய்ப் பிருந்தபோதும் அதைப் பயன் படுத்திக் கொள்ளவில்லை. அத னால் அந்த செட் பவுஸ்திடா வச மானது” என்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ந்து 26-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஜோகோவிச், அடுத்ததாக மற்றொரு ஸ்பெயின் வீரரான பெலி ஸியானோ லோபஸை சந்திக்கிறார்.

14-வது முறையாக அமெரிக்க ஓபனில் விளையாடி வரும் லோபஸ் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அவர் 6-3, 7-6 (5), 6-1 என்ற நேர் செட் களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தினார். வெற்றி குறித்துப் பேசிய லோபஸ், “ஃபாக்னினி தனது முந்தைய சுற்றில் இறுதி செட்டில் அசத்தலாக ஆடி நடாலை வீழ்த்தியதைப் பார்த்தேன். எனக்கு எதிராகவும் அவர் அதேபோன்று ஆடக்கூடும் என்ற அச்சுறுத்தல் எனக்குள் இருந்தது” என்றார்.

ஜோகோவிச்சும், போட்டித் தர வரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் லோபஸும் இதுவரை 5 முறை மோதியுள்ளனர். அவை யனைத்திலும் ஜோகோவிச்சே வெற்றி கண்டுள்ளார். இதில் 2007 ஆஸ்திரேலிய ஓபனில் மட்டுமே ஜோகோவிச்சுக்கு எதிராக ஒரு செட்டை கைப்பற்றியிருக்கிறார் லோபஸ். எஞ்சிய அனைத்திலும் நேர் செட்களில் தோற்றுள்ளார்.

சிலிச்-சோங்கா மோதல்

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச் 6-3, 2-6, 7-6 (2), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் 23 ஏஸ்களை விளாசிய சிலிச், வெற்றி குறித்துப் பேசுகை யில், “2-வது செட்டின்போது எனது கணுக்கால் திருகியது. ஆனால் அது எனது ஆட்டத்தைப் பாதிக்காத வாறு பார்த்துக்கொள்ள முயற்சித் தேன். 3-வது செட்டின் ஆரம்ப கேம்களில் மிகுந்த எச்சரிக்கை யோடு ஆடினேன் அதன்பிறகு எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி யிருப்பதோடு, தொடர்ச்சி யாக 11 வெற்றிகளை பதிவு செய்திருக்கும் சிலிச், அடுத்ததாக மற்றொரு பிரான்ஸ் வீரரான ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார்.

சோங்கா தனது 4-வது சுற்றில் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான பெனாய்ட் பேரை வீழ்த்தினார். சிலிச்சும், சோங்காவும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சிலிச் 4 வெற்றிகளையும், ஒரு தோல்வி யையும் சந்தித்துள்ளார். கடைசியாக மோதிய 3 ஆட்டங் களிலும் நேர் செட்களில் சோங் காவை வீழ்த்தியுள்ளார் சிலிச்.

செரீனா-வீனஸ் மோதல்

இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக் காவைச் சேர்ந்த செரீனா வில்லி யம்ஸ்-வீனஸ் வில்லியம்ஸ் சகோத ரிகள் மோதுகின்றனர். காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வெல்வதில் தீவிரமாக இருக்கும் செரீனா, தனது 4-வது சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான மேடிசன் கீஸை தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 152-வது இடத்தில் இருந்த எஸ் தோனியாவின் அனெட் கொன்டா வெய்டை வீழ்த்தினார்.

புச்சார்டு விலகல்

மற்றொரு 4-வது சுற்றில் இத் தாலியின் ராபர்ட்டா வின்ஸியை எதிர்த்து விளையாடவிருந்த கனடாவின் யூஜீனி புச்சார்டு ஓய்வறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து 4-வது சுற்றில் விளை யாடாமலேயே காலிறுதிக்கு முன்னேறினார் ராபர்ட்டா வின்ஸி.

ஒற்றையர் பிரிவு மட்டுமின்றி, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இருந்தும் புச்சார்டு விலகிவிட்டதாக போட்டி இயக்குனர் டேவிட் பீரிவர் தெரிவித்துள்ளார்.

ராபர்ட்டா வின்ஸி தனது காலி றுதியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மேட்னோவிச்சை சந்திக்கிறார். மேட்னோவிச் தனது 4-வது சுற்றில் 7-6 (2), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரி சையில் 13-வது இடத்தில் இருந்த ரஷ்யாவின் எக்டெரினா மக ரோவாவை வீழ்த்தினார்.

சானியா ஜோடி முன்னேற்றம்

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்த ஜோடி தங்களின் 3-வது சுற்றில் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் மைக்கேலா கிராஜிசெக்-செக்.குடியரசின் பர்போரா ஸ்ட்ரைகோவா ஜோடியை தோற்கடித்தது.

சானியா ஜோடி தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசை யில் 9-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் யங் ஜான் சான்-ஹாவ் சிங் சான் ஜோடியை சந்திக்கிறது. சீன தைபே ஜோடி தங்களின் முந்தைய சுற்றில் 5-7, 6-1, 7-6 (4) என்ற செட் கணக்கில் ருமேனியாவின் ஐரினா-ரலுகா ஒலாரு ஜோடியை வீழ்த்தியது.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-காலிறுதியில்-ஜோகோவிச்-சிலிச்-செரீனா/article7628560.ece?homepage=true

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் பயஸ் இணையுடன் போபண்ணா இணை மோதல்!

 

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில், இந்தியாவின் பயஸ் இணையுடன் போபண்ணா இணை மோத உள்ளது.
 

Paes-%20Bopanna.jpg

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் போபண்ணா, சீன தைபேவின் யங் ஜன் ஜான் இணை, பின்லாந்தின் ஹென்றி, சீன தைபேவின் சூ வை இணையை எதிர்த்து விளையாடியது.

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் இருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடித்த இப்போட்டியை போபண்ணா- யங் ஜன் ஜான் இணை 7-6, 5-7, 13-11 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் இணை, ரோமானியாவை சேர்ந்த சிமோனா ஹலிப்- கொரியா டிகெளவ் இணையை எதிர்கொள்ள இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக ரோமானிய இணை போட்டிக்கு வராததால், லியாண்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியின் அரையிறுதி சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் இணை மற்றும் போபண்ணா இணை மோத உள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=52122

Link to comment
Share on other sites

வீனசை வீழ்த்தினார் செரினா: அரையிறுதியில் ஜோகோவிச்

djokovic,  tennis, us open

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அசத்திய அமெரிக்காவின் செரினா, வீனசை வீழ்த்தினார். ஆண்கள் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–1’ வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தரவரிசையில் 23வது இடத்திலுள்ள தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை சந்தித்தார். முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய செரினா, அடுத்த செட்டை 1–6 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் எழுச்சி பெற்ற செரினா 6–3 என தன்வசப்படுத்தினார். முடிவில், செரினா 6–2, 1–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். 

 

மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ராபர்டா வின்சி 6–3, 5–7, 6–4 என பிரான்சின் கிறிஸ்டினாவை தோற்கடித்தார். 

ஜோகோவிச் முன்னேற்றம்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–1’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 18வது இடத்திலுள்ள ஸ்பெயினின் லோபசை எதிர் கொண்டார். இதில் அசத்திய ஜோகோவிச் 6–1, 3–6, 6–3, 7–6 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். 

மற்றொரு காலிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிக் 6–4, 6–4, 3–6, 6–7, 6–4 என பிரான்சின் டி சோங்காவை வீழ்த்தினார்.

அரையிறுதியில் சானியா ஜோடி:

 

பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீன தைபேவின் யுன் ஜாங் சான், ஹாவ் சிங் சான் ஜோடியை எதிர்கொண்டது.  

இதில் ‛டைபிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 என கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6-1 என தன்வசப்படுத்தியது முடிவில்,சானியா, ஹிங்கிஸ் ஜோடி 7-6, 6-1 என வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.  

http://sports.dinamalar.com/2015/09/1441734815/kvitovatennis.html

Link to comment
Share on other sites

பைனலில் சானியா ஜோடி: அரையிறுதியில் பெடரர்

sania  tennis, us open

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு  சுவிட்சர்லாந்தின் பெடரர், வாவ்ரின்கா முன்னேறினர். 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், இத்தாலியின் சாரா இரானி, பிளாவியா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6–1 என எளிதாக தன்வசப்படுத்தியது. முடிவில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று, பைனலுக்குள் நுழைந்தது. 

பைனலில் பயஸ் ஜோடி:

கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி 6–2, 7–5 என இந்தியாவின் போபண்ணா, சீன தைபேயின் யங் சான் ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. 

பெடரர் அசத்தல்:

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–2’ வீரர் சுவிட்சர்லாந்தின் பெடரர், தரவரிசையில் 12வது இடத்திலுள்ள பிரான்சின் காஸ்குயட்டை சந்தித்தார். முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய பெடரர், அடுத்த இரண்டு செட்டையும் 6–3, 6–1 என தன்வசப்படுத்தினார். முடிவில், பெடரர் 6–3, 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். 

மற்றொரு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 6–4, 6–4, 6–0 என தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார். 

ஹாலப் முன்னேற்றம்:

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6–3, 4–6, 6–4 என பெலாரசின் அசரன்காவை தோற்கடித்தார். 

http://sports.dinamalar.com/2015/09/1441734815/kvitovatennis.html

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா பலப்பரீட்சை,சைமோனா ஹேலப்புடன் மோதுகிறார் பிளேவியா பென்னட்டா

 
  • saimona_jpg1_2543712g.jpg
     
  • அசரென்காவுக்கு எதிரான காலிறுதியில் ஆக்ரோஷமாக ஆடிய சைமோனா ஹேலப். படங்கள்: ஏ.எப்.பி.
    அசரென்காவுக்கு எதிரான காலிறுதியில் ஆக்ரோஷமாக ஆடிய சைமோனா ஹேலப். படங்கள்: ஏ.எப்.பி.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவ ரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், சகநாட்டவரும், நெருங் கிய நண்பருமான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஃபெடரர் 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார். காஸ்கட்டுடன் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ஃபெடரர், அவருக்கு எதிராக 15-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஓபனில் 10-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் ஃபெடரர், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் கடந்த 45 ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் வாகை சூடிய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

அரையிறுதியில் சகநாட்டவரான வாவ்ரிங்காவை சந்திக்கிறார் ஃபெடரர். இவர்கள் இருவரும் இதுவரை 19 போட்டிகளில் மோதி யுள்ளனர். அதில் ஃபெடரர் 16 வெற்றிகளையும், வாவ்ரிங்கா 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள னர். கடைசியாக இருவரும் பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் மோதினர். அதில் வாவ்ரிங்கா வெற்றி பெற்றார். எனினும் ஃபெடருக்கு எதிராக வாவ்ரிங்கா பெற்ற வெற்றிகள் அனைத்துமே களிமண் ஆடுகளத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்ரிங்கா தனது காலிறுதியில் 6-4, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார். அமெரிக்க ஓபனில் வாவ்ரிங்கா 2-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 2013-ல் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார்.

அரையிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய ரோஜர் ஃபெடரர், “அரையிறுதிக்கு முன்னதாக நல்ல தூக்கம் மிக முக்கியமானதாகும். 4-வது சுற்றில் ஜான் இஸ்னருடன் மோதிய பிறகு தாமதமாக தூங்க சென்றதால், எதிர்பார்த்த அளவுக்கு தூங்க முடியவில்லை. நன்றாகத் தூங்கினால் அது போட்டியில் சிறப் பாக ஆடுவதற்கான ஆற்றலைத் தரும். எனவே தூக்கம் மிக முக்கியமானதாகும்.

வாவ்ரிங்கா கடுமையான பயிற்சி பெற்று அரையிறுதியில் களமிறங்குவார் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைத்திருக்கிறார். அதுதான் அவர் சமீபகாலமாக சாதிப்பதற்கு காரணம். ஆனால் அவரிடம் போது மான நம்பிக்கையில்லை” என்றார்.

வாவ்ரிங்கா பேசுகையில், “இந்த முறை நானும், ஃபெடரரும் களம் காணும்போது பதற்றத்தோடு இருப்போம் என நினைக்கிறேன். இதற்கு முன்னர் நான் மட்டுமே பதற்றத்தோடு இருந்திருக்கிறேன். ஏனெனில் அப்போது நான் அவருக்கு இணையான வீரராக இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மோதும் போது ஃபெடரரும் பதற்றத்தோடு இருப்பதை அனைவரும் பார்த் திருக்கலாம். அதுதான் இப் போதுள்ள பெரிய வித்தியாசம்” என்றார்.

ஹேலப்-பென்னட்டா மோதல்

மகளிர் ஒற்றையர் அரையிறுதி யில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பெலாரஸின் விக்டோ ரியா அசரென்காவை தோற்கடித் தார். இதன்மூலம் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் ஹேலப்.

வெற்றி குறித்துப் பேசிய ஹேலப், “இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது என்பது எனக்கு தெரியவில்லை. இங்கு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேற விரும்பினேன். இப்போது அது நடந்துவிட்டதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்” என்றார்.

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் பிளேவியா பென்னட்டா 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய பென்னட்டா, “மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி நம்ப முடியாத ஒன்று. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இவ்வளவு தூரம் நான் முன்னேறுவேன் என நினைத்ததில்லை. எனவே இந்தத் தருணத்தில் இது எனக்கு சிறப்பான ஒரு வெற்றி” என்றார்.

அரையிறுதியில் பென்னட்டா வும், ஹேலப்பும் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் 4 முறை மோதியுள்ளனர். அதில் பென்னட்டா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

பென்னட்டாவுக்கு எதிரான அரை யிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய ஹேலப், “ஒவ்வொரு பந்துக்கும் நான் போராட வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஒவ்வொரு பந்தை யும் கடைசி ஒன்றாக நினைத்து ஆட வேண்டியிருக்கும். அவர் வலு வான வீராங்கனை என்பது எனக்குத் தெரியும். நானும் ஒருநாள் வலு வான வீராங்கனையாக இருப்பேன்” என்றார்.

இறுதிச்சுற்றில் பயஸ், சானியா ஜோடிகள்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சீன தைபேவின் யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது. பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-சாம் கியூரி ஜோடியை சந்திக்கிறது.

மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானி-பிளேவியா பென்னட்டா ஜோடியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-அரையிறுதியில்-ரோஜர்-பெடரர்-வாவ்ரிங்கா-பலப்பரீட்சைசைமோனா-ஹேலப்புடன்-மோதுகிறார்-பிளேவியா-பென்னட்டா/article7640779.ece

Link to comment
Share on other sites

யு.எஸ்., ஓபன்: மழையால் பாதிப்பு

US Open Rain delays

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் அரையிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இத்தாலியின் ராபர்ட்டா வின்சி மற்றும் இத்தாலியின் பிளவியா பென்னெட்டா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப் மோத இருந்தனர்.

ஆனால் இரவில் தொடர்ந்து மழை பெய்தது. விம்பிள்டன் அரங்கம் போல மைதானத்தை மேற்கூரையால் மூடப்படும் வசதி இங்கு இல்லை. வரும் ஆண்டில் தான் இதற்கான பணிகள் முடிகின்றன.

வேறு வழியில்லாத நிலையில், அரையிறுதி போட்டிகள் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டன. 

http://sports.dinamalar.com/2015/09/1441958457/USOpenRaindelays.html

Link to comment
Share on other sites

செரினா கனவு தகர்ந்தது : யு.எஸ்., ஓபனில் ‘அவுட்'

roberta vinci, tennis

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், "நம்பர்-1' வீராங்கனையான  அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். தவிர, ‘காலண்டர்’ கிராண்ட்ஸ்லாம் வெல்லும் கனவும் தகர்ந்தது. 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், ‘நம்பர்–1’ வீராங்கனை அமெரிக்காவின் செரினா , 43வது இடத்தில் உள்ள இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய செரினா, அடுத்த செட்டை 4–6 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டிலும் சொதப்பிய செரினா 4–6 என இழந்தார். முடிவில், செரினா 6–2, 4–6, 4–6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 

கனவு அம்போ:  ஒரு ஆண்டில் நடக்கும் 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் ("காலண்டர் கிராண்ட்ஸ்லாம்') கோப்பை வென்ற 4வது வீராங்கனை என்ற சாதனை படைக்கும் செரினா வில்லியம்சின் கனவு தகர்ந்தது. 

பெனிட்டா அசத்தல்:   மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலியின் பிளாவியா பெனிட்டா 6-1, 6-3 என ருமேனியாவின் ஹாலெப்பை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார். 

பைனலில்  இத்தாலியின் ராபர்டா வின்சி, சகவீராங்கனையான பிளாவியா பெனிட்டாவை எதிர்கொள்கிறார். 

http://sports.dinamalar.com/2015/09/1441992952/FlaviaPennettatennis.html

Link to comment
Share on other sites

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? - ஜோகோவிச்-ஃபெடரர் இன்று பலப்பரீட்சை

 
 
tennis_2546143f.jpg
 

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றை யர் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் மோதுகின்றனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜோகோவிச் தனது அரையிறுதி யில் 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். இந்த ஆட்டம் நவீன கால டென்னிஸ் வரலாற்றில் மிகமோசமான ஒரு தரப்பு ஆட்டமாக அமைந்துள்ளது.

மரின் சிலிச்சுடன் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜோகோவிச், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். ரோஜர் ஃபெடரர் தனது அரையிறுதியில் 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை தோற்கடித்தார்.

அமெரிக்க ஓபனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ரோஜர் ஃபெடரர், இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத் தில் 1970-க்குப் பிறகு அமெரிக்க ஓபனில் வாகை சூடிய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். 2004 முதல் 2008 வரை அமெரிக்க ஓபனில் அசைக்க முடியாத சக்தி யாக திகழ்ந்த ஃபெடரர், அமெரிக்க ஓபனில் 7-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அவர் விளை யாடவுள்ள 27-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று இது.

கடந்த ஜூலையில் நடந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட ஃபெடரர், அதன்பிறகு நடை பெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். கடைசியாக 2012 விம்பிள்டனில் வாகை சூடிய ஃபெடரர் அதன் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டி யிலும் பட்டம் வெல்லவில்லை.

கடந்த ஜூலையில் நடந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில் தோற்ற பிறகு விளையாடிய எந்தப் போட்டி யிலும் ஒரு செட்டைகூட ஃபெடரர் இழக்கவில்லை. அதனால் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந் துள்ளது. ஃபெடரர் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா என்பது இன்று நள்ளிரவு தெரிந்துவிடும்.

2011 அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஜோகோவிச், அமெரிக்க ஓபனில் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத் தத்தில் அவர் விளையாடவுள்ள 18-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று இது. இதன்மூலம் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்துள்ள ஜோகோவிச், 10-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறார்.

ஜோகோவிச்சும், ஃபெடரரும் இதுவரை 41 போட்டிகளில் மோதி யுள்ளனர். அதில் ஃபெடரர் 21 வெற்றிகளையும், ஜோகோவிச் 20 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள னர். அமெரிக்க ஓபனில் 5 முறை மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 3-ல் வென்றிருந்தாலும், கடைசி யாக நடந்த இரு போட்டிகளில் ஜோகோவிச்தான் வெற்றி பெற்றுள் ளார். அந்த இரு போட்டிகளிலுமே 5 செட்கள் ஆடப்பட்டன. இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் 6-வது முறையாக மோதுகின்றனர். அந்த 6 போட்டிகளும் இறுதிச்சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று குறித்துப் பேசிய ஜோகோவிச், “ரோஜர் ஃபெடரர் எந்தளவுக்கு தொடர்ச்சியாக சிறப் பாக ஆடி வருகிறார். அதிலும் கடைசிக் கட்ட போட்டிகளில் எப்படி ஆடியிருக்கிறார் என்பது அனை வருக்கும் தெரியும். அவர் எப் போதும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எதிராளிகளை யும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்த வைப்பார். அவருடைய ஆட்டத்தில் வேகம் அதிகரித்துள் ளது. எனவே இந்த ஆட்டம் கடும் சவாலானதாக இருக்கும்” என்றார்.

இந்தப் போட்டி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்று நடைபெறுகிறது. அதில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட் டினா ஹிங்கிஸ் ஜோடி, ஆஸ்தி ரேலியாவின் டெல்லக்காவ்-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஜோடியை சந்திக்கிறது.

வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தார் செரீனா!

நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றை யர் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங் கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ராபர்ட்டா வின்ஸியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கடந்த அமெரிக்க ஓபனில் ஆரம்பித்து தொடர்ச்சியாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார் செரீனா. இந்த அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் 1988-க்குப் பிறகு காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றவர் என்ற பெருமையை செரீனா பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செரீனா தோற்றது உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

1988-ல் ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றார். அதன்பிறகு யாரும் வெல்லவில்லை. ஒருவேளை இந்த முறை செரீனா வென்றிருந்தால் அந்த சாதனையைப் படைத்திருப்பார். இதுதவிர ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) வென்றவர் என்ற ஸ்டெபி கிராஃபின் சாதனையையும் சமன் செய்திருப்பார்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-ஓபன்-டென்னிஸ்-சாம்பியன்-பட்டம்-வெல்வது-யார்-ஜோகோவிச்பெடரர்-இன்று-பலப்பரீட்சை/article7648175.ece

Link to comment
Share on other sites

யு.எஸ்., ஓபன்: பெனிட்டா சாம்பியன்

Flavia Pennetta, us open

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பிளாவியா பெனிட்டா சாம்பியன் பட்டம் வென்றார். 

நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நம்பர்–26’ வீராங்கனையான இத்தாலியின் பிளாவியா பெனிட்டா, தரவரிசையில் 43வது இடத்திலுள்ள சக வீராங்கனை ராபர்டா வின்சியை சந்தித்தார். ‘டை–பிரேக்கர்‘ வரை சென்ற முதல் செட்டை 7–6 என கைப்பற்றிய பெனிட்டா, அடுத்த செட்டையும் 6–2 என தன்வசப்படுத்தினார். முடிவில், பிளாவியா பெனிட்டா 7–6, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, கோப்பையை கைப்பற்றினார். 

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் ஒற்றையர் பிரிவில் தனது முதல் பட்டத்தை வென்றார். 

முதல் வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம் தொடரில் தொழில்ரீதியான நட்சத்திரங்கள் பங்கேற்க 1968ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் இருந்து ‘ஓபன் எரா’ துவங்குகிறது. இந்த காலத்தில் அதிக வயதில் (33) முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெனிட்டா பெற்றார். 

பெனிட்டா ஓய்வு 

 

இந்த வெற்றியுடன் பெனிட்டா டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,‘‘ கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறி உள்ளது. டென்னிசிலிருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். ஆனால், மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்,’’ என்றார். 

 

http://sports.dinamalar.com/2015/09/1442123679/FlaviaPennettausopen.html

 

Link to comment
Share on other sites

யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

 

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றுள்ளார் ஜோகோவிச்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், சுவிச்சர்லாந்து வீரர் ஃபெடரரும் மோதினர். இந்த ஆட்டத்தில், ஜோகோவிச்சிடம் 4-6, 7-5, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார் சுவிச்சர்லாந்து வீரர் ஃபெடரர்.

JOKOV%29VC1.jpg



இதன் மூலம் ஜோகோவிச் யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றி உள்ளார். மேலும் செர்பிய வீரர் ஜோகோவிச், 10வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=52374

Link to comment
Share on other sites

யுஎஸ் ஓபன் சாம்பியன்: சானியா ஜோடிக்கு குவியும் வாழ்த்து

 

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்ற ஹிங்கிஸ் - சானியா இணை. | படம்: ராய்ட்டர்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்ற ஹிங்கிஸ் - சானியா இணை. | படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையரில் இந்தியாவின் சானிய மிர்சா - ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்த ஜோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த ஜோடி, 4-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் கேஸி டெல்லக்காவ், கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஜோடியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி பட்டம் வென்றது.

சானியா-ஹிங்கிஸ் ஜோடி இந்த தொடரில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு காரா பிளாக்- லிஸெல் ஹுபெர் ஜோடிக்குப் பிறகு இவ்வாறு ஒரு ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.

வெற்றி குறித்து சானியா கூறும்போது, "நடப்பாண்டு எங்களுக்கு மிகச்சிறப்பானதாக அமைந்தது. விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என அடுத்தடுத்து வென்றுள்ளோம்" என்றார். சானியா மகளிர் இரட்டையரில் வெல்லும் 2-வது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.

ஹிங்கிஸ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸுடன் இணைந்து பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இரட்டையரில் இது 11-வது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.

ஹிங்கிஸ் கூறும்போது, "தொடக்கத்தில் இருந்தே நாங்கள் அதிரடியாக ஆடினோம். இந்த ஆட்டமுறை எங்களுக்கு கைகொடுத்தது" என்றார்.

சானியாவும் ஹிங்கிஸும் இணைந்து விளையாடிய 12 தொடர்களில் 6 தொடர்களில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப், மோடி வாழ்த்து

அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற சானியா - ஹிங்கிஸ் ஜோடிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"அற்புதமான வெற்றிக்காக வாழ்த்துகள் சானியா, ஹிங்கிஸ். உங்களின் சாதனைகள் எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது" என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"அமெரிக்க ஓபன் மகளிர் இரட்டையரில் பட்டம் வென்றமைக்காக இதயம் கனிந்த வாழ்த்துகள் சானியா மற்றும் ஹிங்கிஸ். அற்புதம்" என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், அரசியல் தலைவர்களும் பிரபல விளையாட்டு வீரர்களும் சானியா ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/sports/யுஎஸ்-ஓபன்-சாம்பியன்-சானியா-ஜோடிக்கு-குவியும்-வாழ்த்து/article7652011.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.