Jump to content

உறை பனி உலகில்


Recommended Posts

ஆண்டு 1912. சனவரி 17. பிற்பகல் 3.00 மணி. உலகின் தென் துருவம். அண்டார்டிகா. எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி. மிகப் பெரும் பனிப் பாலைவனம்.

ராபர்ட் பால்கன் ஸ்காட். ஒரு ஆங்கிலேய கடற்படை அதிகாரி. தென் துருவத்தில் காலடி பதிக்கும் முதல் மனிதன் என்ற பெருமையினைப் பெற்றிட வேண்டும் என்பதற்காக, மேற்கொண்ட அயரா முயற்சியின் பயனாய், இதோ, தென் துருவத்தில் நிற்கிறார்.

 

 

amundsen_1911_south_pole.jpg

ரால்ட் ஆமுண்ட்சன்

 

ஆனாலும் அவருக்கு முன்பே, நார்வே நாட்டின் தேசியக் கொடி அங்கு பறந்து கொண்டிருக்கிறது. ரால்ட் ஆமுண்டசன் என்பவர் ஏற்றிய கொடி, பனிக் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது.

 

Robert%2BFalcon%2Bscott%2Bteam.jpg

ராபர்ட் பால்கன் ஸ்காட் தன் குழுவினருடன்

 

முதல் மனிதராக இல்லாவிட்டால் என்ன? என் பயணம் வெற்றி. தன் நாட்டுக் கொடியை ஏற்றுகிறார். உடன் வந்த நால்வருடன் இணைந்து, ஐவருமாய் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

அப்பொழுது மெதுவாக, மிக மெதுவாகத்தான் காற்று வீசத் தொடங்கியது. பனிக் காற்று. நேரம் செல்லச் செல்ல, பனிக்காற்றின் வேகமும் கூடியது. பனிக் காற்று பனிப் புயலாய் உருவெடுத்து, பெரும் வேகத்தோடு, தென் துருவத்தையே புரட்டிப் போட்டது.

 ஐவரும் பனிப் புயலில் மெல்ல மெல்ல முன்னேறி நடக்கத் தொடங்கினர். இன்னும் 67 கி.மீ தொலைவு பயணித்தாக வேண்டும்.

 பனிப் புயலில் தொடர்ந்து நடக்க இயலாத நிலை. கொண்டு வந்த உணவுப் பொருளோ, வேகமாய் தீர்ந்து கொண்டே இருக்கிறது. பனிப் புயலோ இவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

 ஐவரில் ஒருவரான ஓட்ஸ் என்பார், தென் துருவத்தில் இருந்து புறப்பட்ட 21வது நாளில், பிப்ரவரி 18 இல் இறந்தே போனார்.

 பனியிலேயே அவரைப் புதைத்து விட்டு நடந்தனர். பனிப் புயலோ விட்டபாடில்லை. பல மாதங்கள் ஆனாலும் விடாமல் தொடரும் புயலாய் இப்புயல் மாறிப்போனது.

ஈவன்ஸ் என்பார் ஓர் நாள் திடீரென்று மற்றவர்களை விட்டு விட்டு, பனிப் புயலினுள் தனித்து ஓடத் தொடங்கினார். தனது உடல் நிலை மோசமாகவே, மற்றவர்களுக்கு சுமையாய் மாறிவிடக் கூடாது, என்னும் எண்ணத்தில், பனிப் புயலினுள் ஓடிப் போய் தற்கொலையே செய்து கொண்டார்.

மீதமிருப்பதோ மூவர். பனிப் புயலோ ஓய்ந்த பாடில்லை. உணவோ வேகமாய் குறைந்து, குறைந்து, கடைசியில் தீர்ந்தும் போய்விட்டது.

இன்னும் 11 கி.மீ தொலைவு நடந்தால் போதும், உணவும், தங்குமிடமும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஆனாலும் நடக்க இயலவில்லை.

பசியின் கொடுமையால், கை கால்களைக் கூட அசைக்க இயலாத நிலை. மெல்ல மெல்ல இவர்களது உடல், தன் செயற்பாடுகளை, ஒவ்வொன்றாக நிறுத்தத் தொடங்கியது.

தன் உடலில் மீதமுள்ள வலு அனைத்தையும் திரட்டி, ஸ்காட் தனது நாட் குறிப்பை பையில் இருந்து வெளியே எடுத்தார். எழுது கோலைத் திறந்து, நடுங்கும் கரங்களால், மெதுவாக மிக மெதுவாக எழுதத் தொடங்கினார்.

 

 

image-1-for-captain-scott-gallery-695556

 

We shall stick it out to the end. but we are getting weaker.

 

Of course, and the end cannot be far.

 

It seems a pity, but I do not think I can write more.

 

Last entry

 

For God’s sake Look after our people.

 

 

 

என்னால் எதுவும் எழுத முடியவில்லை.

 

நாங்கள் பட்டினியால் இறக்கிறோம் என்பது எவ்வளவு வேதனை.

 

எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்.

 

 

 

 ஸ்காட் தனது நாட்குறிப்பில் எழுதிய நாள் மார்ச் 29, 1912. அன்றே மீதமிருந்த மூவரும் இறந்து போனார்கள்.

ஆண்டு 1987. மே மாதம் 7 ஆம் நாள். ஜம்மு காஷ்மீர் இராணுவ முகாம். கர்னல் கணேசன் அவர்கள், அன்று வந்த அலுவலகக் கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு சாதாரணத் தோற்றத்தில் ஓர் கடிதம். இராணுவத் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதம். பிரித்தார், படித்தார். படித்த அடுத்த நொடி பிரமித்தார்.

ஒரே ஒரு பக்கக் கடிதம். ஆனால் எவ்வளவு பெரிய செய்தி. இக்கடிதம் தன் வாழ்வினையே புரட்டிப் போடும் செய்தியினை அல்லவா, சுமந்து வந்திருக்கிறது.

இந்தியத் தென் துருவ பயணக் குழுவின் துணைத் தலைவராகவும், தென் துருவ ஆராய்ச்சித் தளமாகிய, தக்ஷின் கங்கோத்ரியின் தலைவராகவும்கர்னல் கணேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தொடரும்

 

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/blog-post_18.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனதினுள் பல கேள்விகள் புதைக்கப்பட்டிருக்கின்றன!

அவற்றில் ஒன்று.. மானிடப் பிறப்பின் நோக்கம் என்ன என்பது?

அரிது... அரிது மானிடராதல் அரிது.. என்பதுடன் அவ்வையார் விடை பெற்று விடுகிறார்.. எதற்காக அரிது என்று அவர் கூறவில்லை!

ஆனால் நீங்கள் எழுதிய தென் துருவத்தைத் தேடிய பயணக்கதை, மானிடப் பிறப்பின் நோக்கத்தை ஓரளவுக்கேனும் சொல்லிச் செல்கின்றது என்றே கருதுகின்றேன்!

தொடருங்கள்.. சேர்வயர்!

 

Link to comment
Share on other sites

வருகைக்கு நன்றி அண்ணா. விரைவில் அடுத்தபகுதி தொடரும் .....

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 2

கொந்தளிக்கும் கடலில்

    

 THULELAND_71446.940x1000.jpg

 

1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.

சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக் காத்திருக்கின்றன.

Map.jpg

South%2Bpole%2B5%2Bth%2Bwinter%2Bparty.j

தமிழகத்தில் இருந்து ஐவர், கேரளத்தில் இருந்து மூவர், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், தில்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என 15 பேர் அடங்கிய கூட்டனியினர், கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், கோவாவில் இருந்து, தங்கள் கடல் வழிப் பயணத்தைத் தொடங்கினர்.

ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 12,000 கிமீ தொலைவு, கடலில் பயணித்தாக வேண்டும். முழுவதுமே இடைநில்லா பயணம்தான்.

Antartica%2BRoute%2BMap.jpg

கோவாவில் இருந்து அண்டார்டிகா செல்லும் வழியில், இரண்டே இரண்டு தீவுகள் மட்டுமே உண்டு. ஒன்று மொரீசியஸ் மற்றொன்று மொரியன் தீவு.மற்றபடி கடல், கடல், கடல் மட்டும்தான்.

அண்டார்டிகா சென்றடைவதற்குள் ஒன்பது முறை கால மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. கடிகார முள்ளை நாமே திருப்பி, நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

கப்பலில் தன் அறையில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம், கர்னல், தான் கொண்டு வந்த ஒரு பையினை, ஆசை தீர தொட்டுப் பார்ப்பார்.

தன் சொந்த ஊரான சன்னா நல்லூரில் இருந்தும், தனது வசிப்பிடமான சென்னை, அண்ணா நகரில் இருந்தும், தான் பணியாற்றிவரும் ஜம்மு காஷ்மீரில் இருந்தும் கொண்டு வந்த மண், இந்தப் பையில் அல்லவா இருக்கிறது.

தாய் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி. வழி நெடுக தனக்கு ஊக்கமும், தளரா தன்னம்பிக்கையினையும் அல்லவா, வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தாய் மண்.

டிசம்பர் 10 ஆம் நாள். பயணத்தின் 15 ஆம் நாள் கப்பல் மெதுவாக, முதலில் மெதுவாகத்தான் ஆடத் தொடங்கியது. காரணம் கடல் கொந்தளிப்பு. நேரம் செல்லச் செல்ல, கடல் கோபத்தின் உச்சிக்கே சென்று கொந்தளிக்கத் தொடங்கியது.

கப்பலில் இருந்த பொருட்கள் எல்லாம், மேலும் கீழுமாக பறக்கத் தொடங்கின. சரியான பிடிப்பு இல்லாத கட்டில்கள், மேசைகள், நாற்காலிகள் அனைத்தும் தலை கீழாய் புரண்டன்.

ஆய்வுக் குழுவினர் பலரும், வாந்தி எடுத்து, நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், ஒவ்வொருவராய் மயங்கி விழத் தொடங்கினர்.

 

 தொடரும்.....................

 http://karanthaijayakumar.blogspot.com/2015/08/2.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 3

அண்டார்டிகா

antar1.jpg

உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40 டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் பரப்பை அணுகாமல், பூமியில் சுற்றுப் பாதையில் சுழன்று வருவதைக் காணலாம்.

அட்லாண்டிக் மகா சமுத்திரமும், தெற்கு மகா சமுத்திரமும் ஒன்றோடு ஒன்றாய் இணையும் இப்பகுதி, உலகிலேயே மிகவும் ஆபத்தான கடற் பகுதி ஆகும்.

தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

ஆனாலும் அனைவரின் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.

கி.பி 1578ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் ட்ரேக்  (Francis Drake) என்ற விஞ்ஞானி, இப்பகுதியைக் கடக்கும் போது, பலத்த சூறாவளியால் தூக்கி எறியப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.

உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று எண்ணி, தென் துருவத்தைக் காணாமலேயே ஊர் திரும்பிய, இந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ட்ரேக் அவர்கள்தான், உலகிற்கு, இப்பகுதி பற்றிய உண்மைகளை அறிவித்து, எச்சரித்தார்.

எனவே இப்பகுதி இன்றும்  ட்ரேக் பாதை ( Drake Passage) என்றே அழைக்கப் படுகிறது.

இப்பகுதியைக் கப்பல் கடக்கும் பொழுது, மிகப் பெரிய கடல் கொந்தளிப்பை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

இரண்டு மகா கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதால், கடல் கொந்தளிப்பானது, இடதும் வலதுமாய், முன்னும் பின்னுமாய் கப்பலை அலைக் கழிக்கும்.

பொதுவாக கப்பல், இப்பகுதியைக் கடப்பதற்கு நான்கு நாட்களாகும். நான்கு நாட்களுமே, ஒரு நொடி கூட, அமைதியாய் இராத கடலில்தான் பயணித்தாக வேண்டும். தூங்க முடியாது, உட்கார முடியாது, நிற்கக் கூட முடியாது. வேறு வழியில்லை, சமாளித்துத்தான் ஆக வேண்டும்.

அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரடையவே, ஆய்வுக் குழுவினர், ஒவ்வொருவராய் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

இயற்கையின் எண்ணற்ற வினோதங்களில் கடலும் ஒன்று. நேரில் பார்ப்பதால் மட்டுமே கடலைப் புரிந்து கொள்ள முடியாது. நீரும் அலைகளும் மட்டுமே கடல் அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் அனைவரும் உணர்ந்தனர்.

டிசம்பர் 13 ஆம் நாள், கப்பல் குளிர் பிரதேசத்தை மெதுவாய் நெருங்கியது. குளிர் மெல்ல மெல்ல, உடலின் நாடி நரம்புகளில் எல்லாம் நுழையத் தொடங்கியது.

பனிப் பாறைகள் ஒன்றிரண்டு கடலில் மிதக்கும் காட்சியைக் கண்டார்கள்.

ice-web_1.jpg

அண்டார்டிகாவில் இருந்து உடைந்து, பிரிந்து கடலில் மிதந்த, ஒரு பெரும் பனிப் பாறை, பதிவேடுகளில் பதிவாகி உள்ளது.

அப் பனிப் பாறையின் அளவு என்ன தெரியுமா? 110 கிமீ நீளம், 75 கிமீ அகலம். நாம் வசிக்கும் ஊரினை விட பெரிய பாறை, ஒரே பாறையாய் கடலில் மிதந்தால் எப்படி இருக்கும்.

இரண்டாம் நாள் நீலக் கடல், வெண் பனிப் பரப்பாக மாறும் அற்புதக் காட்சியைக் கண்டார்கள்.

Lemaire_Channel.jpg

இப்படமானது, கப்பல் பனிக்கட்டிகளை உடைத்துக் கொணடு  சென்ற வழியே மீண்டும் திரும்பிவரும்  காட்சியாகும்.ஆனால் குளிர்காலங்களில் இவ்வாறு வருவது இயலாது என கர்னல் அவர்கள் தெரிவித்தார். ஆதிக குளிரால் கப்பலின் நாற்புறமும் பனிக் கட்டிகள் சூழ்ந்து கப்பலை முன்னேற விடாமல் தடுத்து விடும்.கோடைக் காலம் வரும் வரையில், கப்பலிலே இருக்க வேண்டியதுதான்

cruise-antarctica_1403764c.jpg

9577861.jpg

Explorer-6.jpg

aag30-8.jpg

கப்பலானது வெண் பனியைப் பிளந்து கொண்டு மெதுவாய், மிக மெதுவாய் முன்னேறத் தொடங்கியது.

கப்பலின் தலைவர், ஹெலிகாப்டரில் பறந்து, உறை பனி குறைவாக உள்ள இடங்களைக் கண்டு, அவ்வழியே கப்பலைச் செலுத்தத் தொடங்கினார்.

 டிசம்பர் 20. இரவு 8.30 மணி. கப்பலின் தலைவர் அறிவித்தார்.

தக்ஷின் கங்கோத்ரியை அடைந்து விட்டோம்.

ஆய்வுக் குழுவினர் மகிழ்ச்சியோடு, கப்பலின் மேல் தளத்திற்கு ஓடினார்கள்.

சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மணியோ இரவு 8.30.

உச்சி வெயிலோ மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது,

                                                            

தொடரும்

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/3.html

mb_wide_ice-20131225193647184399-620x349

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உறை பனி உலகில் 4

வெயிலில் வாடும் இரவு

    walking-up-to-the-ridge-with-sun-shining

 

 

நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிறது.

என்ன இரவு 8.30 மணிக்கு, சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்ததா? யாரிடம் கதை விடுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் இதுதான் உண்மை, உண்மை, உண்மை.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பதும், பூமி 90 டிகிரி செங்குத்தான் அச்சில் இருந்து இருபத்து ஒன்றரை டிகிரி சாய்வாக இருப்பதும் நாம் அறிந்த்தே.

இதன் காரணமாகவே இரவும், பகலும் மாறி, மாறி வருகிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே.

ஆனால் இந்தக் கதையெல்லாம், பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் செல்லுபடி ஆகாது.

இங்கே பகல் ஆறு மாதம். இரவு ஆறு மாதம்.

 SunRun_.jpg

 

                              The trajectory of the sun above Concordia over a 24 hour period

 

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல், மார்ச் 21 ஆம் தேதி வரை சூரியன் தென் துருவத்தில் மறைவதே இல்லை.

டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து, மார்ச் 21 ஆம் தேதிவரை, சூரிய வெளிச்சம் மெல்ல, மெல்லக் குறையும்.

மார்ச் 21 முதல் ஜுன் 21 வரை சூரியன் தலைமறைவாகி, இருளையே பரிசாய் வழங்கும்.

ஜுன் 21 முதல் வெளிச்சம் மெல்ல, மெல்ல தலை தூக்கி, செப்டம்பர் 21 முதல் மீண்டும் பகல் தொடங்கும்.

இதுதான் அண்டார்டிகா.

அதோ, தொலைவில் தெரிகிறதல்லவா.

Dakshin%2BGangotri%2B1.jpg

 

 அதுதான்,

  தக்ஷின் கங்கோத்ரி.

  தொடரும்

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/4.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 5

தக்ஷின் கங்கோத்ரி

கர்னலும் மற்றவர்களும், கப்பலில் இருந்து இறக்கப் பட்ட வண்டிகளில், தக்ஷின் கங்கோத்ரி நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள், அவர்களுக்கு முன்னே சென்று, தக்ஷின் கங்கோத்ரியை ஒரு முறை நன்றாக பார்த்து விடுவோம்.

Dakshin%2BGangotri%2B1%2B%25281%2529.jpg

நம் இந்திய அரசால், 1982 ஆம் ஆண்டிலேயே, பணிகள் தொடங்கப் பெற்ற போதிலும், 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதிதான், தக்ஷின் கங்கோத்ரி ஆய்வுத் தளம் முறையாகச் செயல் படத் தொடங்கியது.

ஆய்வுத் தளம் இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று பிளாக் . மற்றொன்று பிளாக் பி.

முதலில் தங்குமிடம். ஒன்றிரண்டு அதிகாரிகள் தங்குவதற்கான தனித் தனி அறைகள். அதனைத் தொடர்ந்து, ரயில்வேயின் முதல் வகுப்பு பெட்டி போன்ற, இருவர் இருவராகத் தங்குவதற்கான அறைகள்.

ஒரு ரேடியோ அறை. ரேடியோ மூலமாகவும், தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் மூலமாகவும், வெளி உலகைத் தொடர்பு கொள்வதற்கான தனி அறை. தகவல் தொடர்பு சார்ந்த அத்தியாவசிய உதிரிப் பாகங்களுக்காக, தனியே ஒரு கிடங்கு.

ஒரு சிறிய மருத்துவ மனை.

விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ள ஒரு விசாலமான ஆய்வகம்.

ஒரு அற்புதமான நூலகம்.

அருமையான சமையலறை. சாப்பிடுவதற்குத் தனியே ஒரு பெரிய அறை.

உறை பனியைத் தொட்டிக்குள் தள்ளவும், பின் அத்தொட்டியில் உள்ள பனிக் கட்டிகளை உருக வைத்து, தண்ணீராக மாற்றி, அத் தண்ணீரை மேல் நிலைத் தொட்டியில் நிரப்புவதற்கான வசதி.

இவை அனைத்தும் சேர்ந்தது பிளாக் .

தொழில் நுட்பப் பணிகளுக்காக ஒரு பெரிய தொழிற் கூடம். நான்கு ஜெனரேட்டர்கள். ஒரு ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, இரண்டாவது ஜெனரேட்டர், ஓடுவதற்கான தயார் நிலையில் இருக்கும். முதல் ஜெனரேட்டர் நின்று விட்டால், இரண்டாவது ஜெனரேட்டர், தானே, சுயமாய் உடனடியாக இயங்கத் தொடங்கும்.

மூன்றாவது ஜெனரேட்டர் ஏற்கனவே ஓடியது. பராமரிப்புப் பணிகளுக்காகக் காத்திருக்கும். எதற்கும் இருக்கட்டுமே என, உபரியாய் நான்காவது ஜெனரேட்டர். ஒரு வாரத்திற்குத் தேவையான எரி பொருள்.

என்ன? ஒரு வாரத்திற்குத் தேவையான எரிபொருள் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறதல்லவா? நியாயமான கேள்விதான். ஒன்றரை ஆண்டுகளுக்குத் தேவையான சுமார் ஆறு இலட்சம் லிட்டர் எரிபொருளும், ஐந்து வருடங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும், பீப்பாய் பீப்பாயாக, பெட்டி பெட்டியாக, ஆய்வுத் தளத்திற்கு வெளியே, உறை பனியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

ஒரு வாரத்திற்கு ஒரு முறை, எரிபொருளையும், உணவுப் பொருட்களையும், வெளியே இருந்து எடுத்து, ஆய்வகத்திற்கு உள்ளே கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

ஆய்வுத் தளத்தில் இருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவது என்பது, எப்பொழுதுமே ஒரு சவாலான வேலைதான்.

பெரும்பாலும் கதவைத் திறக்க இயலாதவாறு பனி நிறைந்தே இருக்கும். ஹாட்ச்  (Hatch) என்று சொல்லக் கூடிய, தரை மட்டத்தில் இருந்து, உயரே இருக்கும் கதவினைத் திறந்து கொண்டுதான், பெரும்பாலும் வெளியே வர இயலும்.

சில சமயங்களில், அக் கதவினையும் பனி மூடி விடுமானால், இருக்கவே இருக்கிறது புகைப் போக்கி.

என்ன புகைப் போக்கி வழியாக, வெளியே வருவதா? வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனாலும் வேறு வழியில்லை.

ஆய்வுத் தளத்தின் கூரை மீது, புகை போக்கி போன்று, நீண்டு உயர்ந்த, ஒரு கட்டுமானம் உண்டு. அதன் உட்புறமும், வெளிப் புறமும் ஏணி பொறுத்தப் பட்டிருக்கும்.

பனி அதிகமாகி, எந்தக் கதவினையும் திறக்க இயலாவிட்டால், புகை போக்கியின் ஏணி வழியே, மேலே ஏறி, வெளிப் புற ஏணி வழியே இறங்கியாக வேண்டும்.

பின்ன்ர் வெளிப்புறம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், புல்டோசரை இயங்கி, பனியினை அற்புறப்படுத்தியாக வேண்டும்.

ஒவ்வொரு நாளுமே போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான் அண்டார்டிகா வாழ்க்கை.

Gangothri.jpg

Gangothri1.jpg

img034.jpg

கர்னல் கணேசன் குழுவினர் தக்ஷின் கங்கோத்ரியில் காலடி எடுத்து வைத்தபோது, அவர்கள் கண்ட காட்சி, திகைப்பைத்தான் வாரி வழங்கி வரவேற்றது.

சற்றேறக்குறைய முழு தக்ஷின் கங்கோத்ரியும், பனியில் மூழ்கி மூச்சு விட திணறிக் கொண்டுதான் கிடந்தது.

வெளியே ஒரு சிறிய மூங்கிலில் இந்திய தேசியக் கொடி.

கொடிக்கு அருகே மூவர் நின்றிருந்தனர். சற்று தள்ளி மூவர், அங்கொருவரும், இங்கொருவருமாய் நின்றிருந்தனர். அனைவருமே முகத்தை மறைக்கும் தாடிகளுடனும், சோகம் நிறைந்த முகங்களுடனுமே காணப்பட்டனர்.

இவர்கள்தான் ஏற்கனவே, கர்னலுக்கு முன்பாக, தங்கியிருக்கும், நான்காவது குளிர் காலக் குழுவினர்.

நூற்றுக் கணக்கான பீப்பாய்கள், பெட்ரோலுடன், ஓர் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடந்தன.

ஒருவர் மட்டும் முன் வந்து, கர்னலின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.

பல்வேறு ஆசைகளையும், கனவுகளையும் நெஞ்சில் சுமந்து வந்த கர்னல் அவ்ரகளுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கிடைத்த வரவேற்பு இதுதான்.

பாவம், அவர்கள்தான் என்ன செய்வார்கள். அவர்கள் அனுபவித்த வாழ்க்கை அப்படி.

கர்னல் கணேசன், தக்ஷின் கங்கோத்ரியில் தன் முதல் வேலையாக, தான் உடன் கொண்டு வந்த பையினைப் பிரித்தார். உள்ளே சன்னா நல்லூர் மண்ணும், சென்னை அண்ணா நகர் மண்ணும், ஜம்மு காஷ்மீர் மண்ணும் மெதுவாய் எட்டிப் பார்த்தன. மண்ணை மெதுவாய் விரல்களால் எடுத்து, விதைபோல், அண்டார்டிகா பனியில் தூவினார்.

இங்கும் என் தாய் மண்.

இங்கும் என் தாய் மண்.

இனி இதுவும் என் தாய் மண்.

கர்னல் கணேசன் குழுவினர், தங்களது தினசரி செயல்பாடுகள், மேற்கொள்ளப் பட வேண்டிய ஆய்வுகள் குறித்து, நான்காவது குளிர்காலக் குழுவினரிடம் பயிற்சி பெற்றனர்.

கர்னலும் அவர்தம் குழுவினரும், தக்ஷின் கங்கோத்ரிக்கு வந்துவிட்ட போதிலும், அவர்களோடு பயணித்த, பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் கப்பலிலேயே இருந்தன.

காரணம் பனிப் புயல். உறை பனிக் காற்று வேகமாய் வீசூம் பொழுது, கப்பலை கரையை ஒட்டி நிறுத்துவது என்பது ஆபத்தான செயலாகும். அவ்வாறு நிறுத்தினால், கப்பலானது, காற்றின் வேகத்தால் தள்ளப்பட்டு, உறை பனியில் மோதி உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே கிரேன் உதவியுடன் இறக்கப்பட வேண்டிய பொருட்கள் எல்லாம், இறக்கப் படாமல் கப்பலிலேயே இருந்தன.

1988, சனவரி 13. காற்றின் வேகம் குறைந்துள்ளதால், கப்பலானது, கரையை ஒட்டி நிற்பதாக தகவல் வந்தது.

கர்னல் கணேசன் அவர்களும், அவர்தம் குழுவினர் ஐவரும், இரு வண்டிகளில், கப்பலை நோக்கிப் புறப்பட்டனர்.

கர்னல் அவர்கள் முதல் வண்டியைத் தானே ஓட்டிச் செல்ல, இரண்டாவது வண்டி சற்று தொலைவில் பின் தொடர்ந்தது.

சிறிது நேரம்தான் பயணித்திருப்பார்கள். திடீரென்று ஒரு பலத்த சத்தம்.

வண்டியை கிறீச்சிட்டு நிறுத்திய கர்னல், பின் புறம் பார்த்தார்.

இரண்டாவது வண்டியைக் காண வில்லை.

தொடரும்.

http://karanthaijayakumar.blogspot.com/2015/08/5.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 6

 

பனிப் பிளவு

crevasse-on-larsen-ice-shelf-antarctica.

கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்கே போனது?

சற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும் முதலில் புரியவில்லை.

கர்னல் அவர்களும், அவருடன் பயணித்த இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.

பனிக் காற்று அவர்களின் காட்சியை மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.

பதறியபடி மூவரும் ஓடினார்கள். வண்டியின் அருகில் செல்வதற்குள், காரணம் தெரிந்து விட்டது. ஓட்டத்தை உடனடியாக நிறுத்தினார்கள்.

ஓடக் கூடாது, ஓடினால் ஆபத்து என்பதும் புரிந்து விட்டது. இனி கவனமாகத்தான் காலடியினை எடுத்து வைக்க வேண்டும்.

பனிப் பிளவு.

640_sno-cat.jpg

640_sno-cat-able.jpg

கர்னல் அவர்களைப் பின் தொட்ர்ந்து சென்ற வண்டி அல்ல இது

அண்டார்டிகா பல்வேறு பனிப் பிளவுகளைக் கொண்ட ஒரு மர்ம தேசம்.

பனிப் பிளவுகளின் அகலமும், நீளமும், ஆழமும், சில அடிகளில் இருந்து சில கிலோ மீட்டர்களை வரை இருக்க வாய்ப்பு உண்டு.

பனிக் காற்றின் போது, இப் பனிப் பிளவுகள் மூடப்பட்டு விடும். மூடப்பட்ட நிலையில் இருக்கும் பனிப் பிளவுகள் அதிக ஆபத்தானவை.

காரணம் இவை கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். தவறி இவற்றின் மீது கால் வைத்தால், முழுதாய் உள்ளே போய்விட வேண்டியதுதான்.

அப்புறமென்ன, பனிச் சமாதிதான்.

நல்ல வேளையாக, வண்டி விழுந்த இடத்தில், பனிப் பிளவு அதிக ஆழமில்லை.

முதலில் வண்டியில் இருந்த ஆட்களை மெதுவாக மீட்டார்கள்.

அடுத்து கடற்கரையில் காத்திருந்த கப்பலுக்குத் தகவல் தெரிவித்தார்கள். சிறிது நேரத்தில், தொழில் நுட்ப உபகரணங்களையும், வல்லுநர்களையும் சுமந்தபடி, ஒரு ஹெலிகாப்டர் வந்தது. வண்டி மீட்கப் பட்டது.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கர்னல் கணேசன் குழுவினரைத் தனிமையில் விட்டு விட்டு, நான்காவது குளிர்காலக் குழுவினர், தாயகம் நோக்கிப் புறப் பட்டனர்.

1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல், கர்னல் குழுவினரின் தனிமை வாழ்க்கை, தொடங்கியது.

சூரியனும் இருளைப் பரிசாய் வழங்க, மெல்ல மெல்ல மறையத் தொடங்கினான்.

ஒவ்வொரு நாளாய் நகர்ந்து, வாரங்கள் கடந்தன. வாரங்கள் மாதங்களாகின.

இந்தியாவின் சுதந்திர நாளும் வந்தது.

Independence%2B3.jpg

Independence%2B1.jpg

Independence%2B2.jpg

 

அகஸ்ட்டு 15, ஆண்டு 1988.

நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 50 நாடுகள், தங்களது ஆய்வுக் கூடங்களை அண்டார்டிகாவில் நிறுவியுள்ளன.

ரஷ்யா, கிழக்கு ஜெர்மனி, தென் அமெரிக்காவின் சேன், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள், இந்தியாவின் ஆய்வுத் தளத்துடன் ரேடியோ தொடர்பில் இருக்கும் நாடுகளாகும்.

கர்னர் கணேசன் அவர்கள் உறை பனியாய் இருந்தால் என்ன?, கடும் குளிர்தான் வாட்டினால் என்ன? சுதந்திரத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்தார்.

ஆய்வுத் தளத்தின் வெளியே, உறை பனியில் மேடை அமைத்தார். கலியான பீப்பாய்களை அழுகுற அடுக்கி, இந்தியாவின், பல ஆய்வு அமைப்புகளின் கொடிகளையும் பாங்குற பறக்க விட்டார்.

சுதந்திர தின விழா என்றால் சிறப்பு விருந்தினர்கள் இருந்தாக வேண்டுமல்லவா?

ரஷ்யா மற்றும் கிழக்கு ஜெர்மனியின் ஆய்வுக் குழுவின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொள்ள, தேசியக் கொடியை ஏற்றினார் கர்னல் கணேசன்.

சுதந்திர தின விழாவிற்குப் பின், ஒரு மாதம் நன்றாகத்தான் நகர்ந்தது,

செப்டம்பர் 19 ஆம் தேதியும், வழக்கம் போல்தான் நகர்ந்து கொண்டிருந்தது. பிற்பகல் 3.00 மணி வரை.

Scientist%2BPM%2BGulane.jpg

பிற்பகல் 3.00 மணி அளவில், விஞ்ஞானி திரு குளானே என்பவருக்குத்தான், முதன் முதலில், மெதுவாக, மிக மெதுவாக, அந்த சந்தேகம் வந்தது.

யாரோ ஒருவர் குறைவது போல் தோன்றியது. யாரிடமும் சொல்லாமல், ஆய்வுத் தளத்தின் உள்ளே, ஒரு முறைக்கு இரு முறையாய், சுற்றிச் சுற்றி வந்தார்.

வெளியிலோ, கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து, ஓய்வின்றி வீசிக் கொண்டிருக்கும் பனிப் புயல். ஆய்வுத் தளத்தின் கதவினைத் திறந்தே பல நாட்களாகி விட்டன.

உள்ளே இருப்பவர்களை, ஒவ்வொருவராக எண்ணினார்.

Scientist%2BM%2BSudhakar%2BRao.jpg

விஞ்ஞானி சுதாகர் ராவ் அவர்களைக் காணவில்லை.

தொடரும்.

 

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/6.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 7

 

பனியில் புதைந்தவர்

antarctic%2B%25281%2529.jpg

நண்பர்களே, சம தளத்தில் நாம் நடக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டே நடப்போமேயானால், நமது பயணம் நிச்சயமாக ஒரே நேர்க்கோட்டில் அமையாது. சற்றே இடது புறமோ அல்லது வலது புறமோ நகர்ந்திருப்போம்.

சாலைகளோ, அறிவிப்புப் பலகைகளோ இல்லாத, அண்டார்டிகாவில் நடக்கும் பொழுது, சிறிது வழி மாறினாலும், நம் கதி அதோ கதிதான்.

Colonel%2BGanesan%2Bwith%2Bbeard.jpg

தக்ஷின் கங்கோத்ரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, கர்னல் அவர்கள், தம் குழுவினர் ஒவ்வொருவரையும், கண்களைக் கட்டிக் கொண்டு நடக்கச் சொன்னார். நடக்கச் செய்து சுமார் 100 அடி தூரத்திலேயே, அவர்கள் தங்கள், நேர் பாதையினை விட்டு, எவ்வளவு தூரம் விலகுகிறார்கள் என்பதை உணரச் செய்தார்.

ஆறு மாதங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கும் பகுதியில் அல்லவா இனி குடியிருந்தாக வேண்டும். எனவே இது ஒரு முக்கியப் பயிற்சி ஆகும்.

ஆய்வுத் தளத்திற்கு வெளியே இருக்கும் பொழுது, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், பாதை தெரியாது. அச்சமயங்களில், நாம் நேராகத்தான் நடக்கிறோம் என்று எண்ணி நடக்கத் தொடங்கினால், முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்து, ஆபத்துடன் கை குலுக்க வேண்டிய சூழல் உருவாகும்.

எனவே, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், நடக்கவே வேண்டாம். அங்கேயே உட்கார்ந்து விடுங்கள். பனிக் காற்றில், கொட்டும் பனியில் முழுவதுமான் மூழ்கிப் போகா வண்ணம், அவ்வப்போது இடம் மாறி அமர வேண்டும் என்பதே, கர்னல் அவர்கள், தன் குழுவினருக்கு அளித்த பயிற்சி ஆகும்.

download.jpg

செப்டம்பர் 15ஆம் தேதி அண்டார்டிகாவில் பனிப் புயல் ஆரம்பமானது. நாட்கள் பல கடந்தும் ஓய்வதாகத் தெரியவில்லை.Scientist%2BM%2BSudhakar%2BRao.jpg

இந்நிலையில்தான், செப்டம்பர் 19 ஆம் நாள், சுதாகர் ராவ் காணாமல் போனார்.

தகவல் அறிந்த கர்னல், அனைவரையும் ஒன்று கூட்டினார்.

என் குழு உறுப்பினர்களைக் காப்பது என் பொறுப்பு. நானே செல்கிறேன். பனிப் புயலுள் நுழைந்து தேடுகிறேன் எனக் கிளம்பினா

ர்.Lence%2BNaik%2BP.Sree%2BKumar.jpg

மற்றவர்கள் தடுக்கவே, உறுப்பினர்களிலேயே திருமணமாகாத இளைஞரான ஸ்ரீகுமார் என்பாரை உடன் அழைத்துக் கொண்டார்.

மருத்துவ முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு வேளை சுதாகர் ராவ் அவர்களைத் தேடச் செல்லும் இருவருமே திரும்பி வராவிட்டால், குழுவினை வழி நடத்த, தலைமையேற்க வேண்டியவர் யார் என்பதையும் அறிவித்து விட்டுப் புறப்பட்டார்.

கதவுகளைத் திறப்பது என்பது இயலாது. காரணம் ஆய்வுத் தளமே பனிக்குள் புதைந்திருந்தது. புகைப் போக்கியைத் தவிர வேறு வழியில்லை.

இருவரும் ஏணியில் ஏறி, வெளிப்புற ஏணி வழியே இறங்கினார்கள்.

ஒரு மிகப் பெரிய நைலான் கயிற்றில் தன்னையும், சிறிது இடைவெளி விட்டு ஸ்ரீகுமாரையும் பிணைத்துக் கொண்டார். கயிற்றின் மறு முனையை வெளிப் புற ஏணியில் கட்டினார்

.snow%2Bstorm.jpg

தன்னிடம் இருந்த கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர விட்டுக் கொண்டே, ஒவ்வொரு இடமாக, பனியில் தடவிக் கொண்டே இருவரும் நகர்ந்தார்கள்.

பனிப் புயலின் வேகத்தில் கண்களைக் கூட முழுதாய் திறக்க இயலாத நிலை. 30 நிமிடத் தேடலுக்குப் பின், காலடியில், மிருதுவாய் ஏதோ இடிபட்டது.

               

தொடரும்...................

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/7.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாய் இருக்கும்...!  berufe_0061.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுதான் ஒரு ஆங்கில கட்டுரையில் சர்வதேச வின்கூடத்தில் ஆராய்ச்சிக்காக ஒருவருடம் தங்கி இருந்து விட்டு வந்தவர் கதை படித்தேன் 

இன்று இது ....

உலக மனித கூட்டத்திற்காக 
எமக்கு தெரியாமலே பல மனிதர்கள் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 8

பனிப் புயலின் கோரப் பிடியில்

Scientist%2BM%2BSudhakar%2BRao.jpg

பிற்பகல் 3.00 மணி அளவில், ஆய்வகத்தில் அமர்ந்திருந்த சுதாகர் ராவ், காற்றின் வேகம், திடீர் திடீரென திசை மாறுவதை கவனித்தார்.

காற்றின் வேகத்தையும், திசையினையும் காட்டும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.

வெளியில் உள்ள கருவியில் இருந்து, ஆய்வகத்தில் உள்ள கருவிக்கு வரும் இணைப்பில், ஏதோ கோளாறு என்பது தெரிந்தது.

புகைப் போக்கி போன்ற அமைப்புடைய அவசர கால, பாதை வழியே ஏறி மெதுவாக எட்டிப் பார்த்தார். வானிலைக் கருவி இருக்கும் இடம் 15 மீ தூரத்தில் தெளிவாய் தெரிந்தது.

Dakshin%2BGangotri%2BAriel%2Bview.jpg

Dhakshin Gangothri sky View

சுதாகர் ராவ் அப்பொழுது, கடும் குளிரினை எதிர் கொள்ளும் உடையினைக் கூட அணிந்திருக்க வில்லை. சாதாரண உடையிலேயே இருந்தார். 15அடி தூரம்தானே, ஒரு சில நிமிடத்தில் திரும்பிவிடலாம் என்று நினைத்தார். இறங்கினார். நடந்தார். கருவியைச் சரி செய்தார்.

நிமிர்ந்து பார்த்த பொழுது, ஆய்வகத்தையே காணாமல் திகைத்தார். பனிக் காற்றின் அடர்த்தி ஆய்வகத்தையே மறைத்து விட்டது.

காற்றானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி, வெகு வேகமாய் வீசிக் கொண்டிருந்தது.

சுதாகர் ராவ் யோசித்தார். ஆய்வகம் இருக்கும் திசையை நோக்கி நடந்தால், புயல் காற்றானது, தன்னை அதன் போக்கில் தள்ளும் என்பதையும், அதனால் பாதையில் இருந்து விலகி தத்தளிக்க நேரிடும் என்பதையும் உணர்ந்தார்.

கிழக்கு நோக்கி காற்றை எதிர்த்து நடக்கத் தொடங்கினார்ஆனாலும்தான் இறங்கி வந்த ஏணியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

antarctic%2B%25282%2529.jpg

சற்றே மேற்கு நோக்கி நடந்தால், நிச்சயமாக ஆய்வுத் தளத்தின் சுவற்றினைத் தொட்டு விடலாம். சுவற்றினைப் பிடித்து விட்டோமானால், சுவற்றைத் தடவிக் கொண்டே நடந்தால், ஏணி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று எண்ணி, திசை மாறி நடக்கத் தொடங்கினார்.

பனிப் புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, திசை மாறிவிட்டோமோ என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.

பனிப் புயலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பற்றி, கர்னல் அவர்கள் சொன்னது நினைவிற்கு வரவே, அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டார். அமர்ந்த சில நிமிடங்களிலேயே, பனி உடம்பின் அத்தனை எழும்புகளிலும் புகுந்து, நாடி நரம்புகளை எல்லாம் சில்லிடச் செய்தது.

நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக நினைவினை இழக்கத் தொடங்கினார்.

தொடரும்.....

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/8.html

Link to comment
Share on other sites

உறை பனி உலகில் 9

மறு ஜென்மம்

காலடியில் மிருதுவாய் ஒரு பொருள். கர்னல் குனிந்து தடவிப் பார்த்தார்.

ஓர் மனித உடல்.

பனியில் சற்றேறக்குறைய முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல்.

அவசர அவசரமாகப் பனியினை அகற்றி, உடலினைத் தூக்க முயன்றனர். முடியவில்லை. உடலோடு பனியானது அகற்ற இயலாத நிலையில் ஒட்டிக் கொண்டிருந்தது. தலையும், இரு கைகளும் மட்டுமே வெளிப்புறம் தெரிந்ததே தவிர, உடலானது, பனிக் கட்டிக்குள் முழுவதுமாய் மறைந்திருந்தது.

article-2265089-1709CED2000005DC-894_634

சுகாதர் ராவ்.

லேசாக, மிகவும் லேசாக, இளம் சூடாய், மிகவும் இளம் சூடாய், மெதுவாக, மிக மெதுவாக மூச்சுக் காற்று வந்து கொண்டிருந்தது.

உயிர் இருக்கிறது. காப்பாற்றி விடலாம்.

சுதாகர் ராவ் அவர்களின் இரு கைகளையும், ஆளுக்கொரு கையால் பிடித்து இழுத்தனர். உடல் மட்டும் வரவில்லை. உடலோடு ஒட்டியிருந்த பனியும், ஒரு பெரு மூட்டையாய், ஒடலோடு ஒட்டியவாரே வந்தது.

இருவரும், ஆளுக்கு ஒரு கையால் சுதாகர் ராவ் அவர்களையும், மற்றொரு கையால் நைலான் கயிற்றினையும் பிடித்துக் கொண்டு, பனி மூட்டைக்குள் புதைந்திருந்த சுதாகர் ராவ் அவர்களை, பனியோடு இழுத்துக் கொண்டு ஏணி வரை வந்தனர்.

அதற்குள் மற்றவர்களும் ஏணி வழியே எட்டிப் பார்க்கவே, அனைவரின் உதவியுடனும், ஏணியில், சுதாகர் ராவை மெதுவாக மேலே ஏற்றினர். பின் ஆய்வுத் தளத்திற்குள் இறக்கினர்.

ஆய்வுத் தளத்திற்கு வெளியே அதிக நேரம் இருப்போமேயானால், குளிரினாலும், பனிக் காற்றினாலும், உடலின் வெளிப் பாகங்களிலும், பனி உடையின் மேற்புறத்திலும் பனி உறையத் தொடங்கி விடும்.

முகம், மீசை, தாடி, கண் இமை போன்ற இடங்களில் பனி உறைந்து கட்டியாகிவிடும். கண் இமையினை மூடக் கூட இயலாது.

இப் பனியை கைகளாலும் அகற்ற இயலாது. கைகளால், உடலில் உறைந்திருக்கும் பனியை நீக்க முயன்றால், முகம், தோல், முடி இவையெல்லாம், பனியோடு சேர்ந்து பிய்த்துக் கொண்டு வந்து விடும்.

எனவே இப்பனியினை நீக்குவதற்கான ஒரே வழி, இவற்றை உருக வைப்பதுதான்.

Letter%2Bof%2BHonour.jpg

பாராட்டுக் கடிதம்

சுதாகர் ராவ் அவர்களின் உடலினைச் சுற்றியும், கழுத்திலும், முகத்திலும் சூடான தண்ணீர் பைகள் வைக்கப் பட்டன.

மேலும் ஆய்வுத் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும், ஜெனரேட்டரின், விசிறியின் மூடி திறக்கப்பட்டது. அதன் அருகில் சுதாகர் ராவ் நிற்க வைக்கப்பட்டார்.

ஜெனரேட்டரின் விசிறியானது வெப்பத்தை வெளித் தள்ளும். எனவே மின் விசிறியின் வெப்பத்தால், சுதாகர் ராவ் அவர்களின் உடலில் ஒட்டியிருந்த, பனி மூட்டை, கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்தது.

உடலும் கொஞ்சம் கொஞ்சமாக, சூடேறத் தொடங்கியது.

சுதாகர் ராவ் மெல்லக் கண் விழித்தார்.

ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்ட, சில நாட்களில், இரவில், வானில் அந்த அதிசயம் அரங்கேறியது.

தொடரும்.........................

 

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/9.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

உறை பனி உலகில் 10

 

தாய் மண்ணே வணக்கம்

பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.   சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.   காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.  ஆனாலும் பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இந்தக் காந்த வட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.   எனவே சூரியனின் கதிரியக்க அணுக்கள் இவ்விரு பகுதிகளிலும், பூமிக்கு மிக அருகில் வருகின்றன.

 அப்படி பூமிக்கு மிக அருகில் வரும் கதிரியக்க அணுக்களும், வட தென் துருவ கதிரியக்க அணுக்களும், ஒன்றை ஒன்று நேருக்கு நேராய் சந்தித்து, வான வீதியில், ஒரு மாபெரும் மல்யுத்தத்தினையே நடத்தும்.

3e663.jpg

10008870.jpg

Antarctic-Observatories-Gather-Info-on-0

aurora-003-Small.jpg

aurora_australis.jpg

 

இந்த மின் காந்த மோதல்களால் வானில், வண்ண ஜாலமே உருவாகும். நாம் உலகின் எப்பகுதியிலும் இதுவரை கண்டிராத ஒரு வான வேடிக்கை, தென் துருவத்தில் அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது. கர்னல் அவர்கள் உறைபனியில் மல்லாந்து படுத்துக் கொண்டு முழுக் காட்சியினையும் கண்டு ரசிக்கத் தொடங்கினார். உறை பனி உலகில் இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம், இக் காட்சியினைக் காண்ணாரக் காணத் தானோ என்று எண்ணி எண்ணி வியந்தார்.

மின் காந்த மோதல்களால் வானமானது. பல வித வண்ணங்களில், பலவித உருவங்களில், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்தது. ஐந்தாவது குளிர்காலக் குழுவினருக்கு இயற்கை அளித்த விருந்து இந்த வண்ண ஜாலம். இவ்வாறாக கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், இக் குழுவினர், அண்டார்டிகாவில் செலவிட்ட நாட்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்கள்.  நினைத்துப் பாருஙகள், குடும்பத்தினரை விட்டுவிட்டு, வெளியூர் சென்றால், இரண்டாம் நாளே குடும்பத்தின் நினைவு வந்து, நம்மை வாட்டும். எப்பொழுதடா வீட்டிற்க்குச் செல்வோம் என மனது ஏங்கும். முழுதாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 480 நாட்கள். அதுவும் உறை பனி உலகில். அதுவும் முன் பின் அறிமுகமற்ற 14 பேருடன்.

 தக்ஷின் கங்கோத்ரியில் கால் பதித்த முதல் நாளே, ஆய்வகத்தின் சுவற்றில், அனைவரும் பார்க்கும் வகையில், கர்னல் கணேசன் எழுதினார். இப்பொழுது நீங்கள் உலகிலேயே, தைரியமானவர்களின் மத்தியில் இருக்கிறீர்கள். தனது குழுவினரைத் தொடர்ந்து உற்சாகப் படுத்தியும், அவ்வப்போது குழுவினரிடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை, சலசலப்புகளை, விரக்தி எண்ணங்களை எல்லாம், ஒரு தாயின் பரிவோடு உணர்ந்து, பாசமிகு தந்தையாய் அரவணைத்து, பேசிப் பேசி சரிசெய்து, தன் பயணத்தை வெற்றிப் பயணமாக்கினார் கர்னல் கணேசன்.      தொடக்கம் என்று ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்றிருக்க வேண்டுமல்லவா.

1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள், அடுத்த குளிர்காலக் குழுவினர், தக்ஷின் கங்கோத்ரிக்கு வருகிறார்கள் என்னும் செய்தி வந்தது.   செய்தி கிடைத்த மறு நொடி, கர்னலின் மனம், தங்களுக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணிப் பார்த்தது. அதுவா வரவேற்பு? நாங்கள் தருகிறோம், வரவேற்பு, உண்மையான வரவேற்பு.  அடுத்த நொடி செயலில் இறங்கினார்.

 டிசம்பர் 21, காலை 8.00 மணி. அடுத்த குளிர்காலக் குழுவினரைத் தாங்கிய ஹெலிக்காப்டர், கப்பலில் இருந்து புறப்பட்டு, வின்னில் வட்டமிட்டது. ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடம், உறைபனியில், நீல வண்ணத்தில் பளிச்சிட்டது. அதன் அருகிலேயே, காற்றின் திசையினைத் தெரிவிக்கும், துணியிலான கூம்பு வடிவிலான (wind socks ) கொடி. ஹெலிகாப்டர் இறங்கிய இடத்தில் இருந்து, ஆய்வுத் தளம் வரை, இரு மருங்கிலும், பல்வேறு ஆய்வுத் துறைகளின் கொடிகள் காற்றில் படபடத்து, புதுக் குழுவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தன.  ஆய்வுத் தளத்தின் முன், கைகளை முடிந்த வரையில் உயர்த்திய நிலையில், இரண்டு கிரேன் வண்டிகள். அதில் குழுவினரை வரவேற்கும் வரவேற்புப் பதாகை.

ஹெலிகாப்டர் பனியில் இறங்கியதும், குழுவினர் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஏற்றப் பட்டனர்.  இரண்டு, இருசக்கர பனி வாகனங்கள் (Snow Scooter) வழி காட்டியவாறு முன் செல்ல, வண்டிகள் பின் தொடர்ந்தன.

Reception%2B1.jpg

Reception%2B2.jpg

Reception%2B3.jpg

ஆய்வுத் தளத்தை நெருங்கும் பொழுது, ஆய்வுத் தளத்தின் முன் கட்டப் பெற்றிருந்த ஒலிப் பெருக்கிகளில் இருந்து, வரவேற்புப் பாடல்கள் காற்றில் மிதந்து வந்து, திருவிழாச் சூழலை உருவாக்கின.   இதுமட்டுமல்ல, கர்னல் அவர்கள், குழுவினருக்கு சந்தன மாலைகளை அணிவித்து வரவேற்கும் பொழுது, இதோ நாங்களும் வரவேற்கிறோம் என்று கூறி இணைந்து கொண்டன, தொடர் வெடி முழக்கங்கள். வான வேடிக்கைகள்.

முதன் முதலில் உறை பனியில் கால் வைத்தக் குழுவினர் மயங்கித்தான் போனார்கள். பூமிப்பந்தின் மூலையில், இப்படி ஒரு வரவேற்பா? நெகிழ்ந்துதான் போனார்கள்.    தன் பணியினைச் செம்மையாகச் செய்து விட்டோம் என்ற நிறைவு கர்னலுக்கு.

 தாய் மண் வா,வா என்றழைக்கின்றது.  தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்து விட்டது.

உறை பனியில் வாழ்ந்த நாட்களின் நினைவாக, நினைக்கும் பொழுதெல்லாம், நெஞ்சம் இனிக்கும் வகையில், உறை பனி உலகில் இருந்து, எப் பொருளை எடுத்துச் செல்ல்லாம் என்று யோசித்தார்.

தக்ஷின் கங்கோத்ரியில் குடி புகுந்த முதல் நாளே, கர்னல் கணேசன், சன்னா நல்லூர் மண்ணையும், அண்ணா நகர் மண்ணையும், ஜம்மு காஷ்மீர் மண்ணையும், உறை பனியில் தூவி, விதையாய் வித்திட்டதை அறிவீர்கள்.

இமயம் வரை படையெடுத்து வென்ற, சேரன் செங்குட்டுவன், இமய மலையில் இருந்து கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த காட்சி, கர்னல் அவர்களின் கண் முன்னே தோன்றி மறைந்தது.

நவீன சேரன் செங்குட்டுவன், கர்னல் கணேசன் அவர்கள், சுமார் 50 கோடி ஆண்டுகளாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த கற்பாறைகள் பலவற்றைப் பெயர்த்தெடுத்தார்.

கிரேன்களில் உதவியுடன் கப்பலில் ஏற்றி, தாயகம் நோக்கிப் பயணித்தார்.

1989 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று கோவா கடற்கரையில் கால் பதித்தனர்.

தாய் மண்ணே வணக்கம்.

உறை பனி உலகினல், உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த கற்கள், இன்று பெங்களூர், இந்திய இராணுவத்தின்பொறியாளர் படைப பிரிவின், மூத்த பிரிவான Madras Engineer Group அலுவலகத்தின் முன்பாகவும்,

Stone%2B1.jpg

கர்னல் கணேசன் அவர்களின் வீட்டு வரவேற்பறையிலும்,

Stone2.jpg

சன்னா நல்லூர்அகத்தூண்டுதல் பூங்காவிலும்,

Stone%2B5.jpg

பேரளம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ள, மாங்குடி கிராமத்தில்,வேதாத்ரி மகரிஷியின் சீடர்களுள் முதன்மையானவரான,டாக்டர் அழகர்மானுஜம் அவர்கள் அமைத்துள்ள

பெரு வெளி ஆலயத்திலும் சென்னை, அண்ணா நகர் வீட்டு வாசலுக்கு அருகிலும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

 

---------------சன்னா நல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில்

கர்னல் அவர்களுடன் நானும்

நண்பர்களும்

 

நண்பர்களே,

கடந்த ஒரு மாத காலமாக,

உறை பனி உலவில்

என்னுடன் இணைந்து பயணித்த

தங்களுக்கும்,

இத்தொடரினை எழுதிட அனுமதி வழங்கிய

குடியரசுத் தலைவரின்,

வசிஸ்ட் சேவா விருது பெற்ற

கர்னல் பா.கணேசன் அவர்களுக்கும்

 

நன்றி   நன்றி   நன்றி

----------------------------------------------------

http://karanthaijayakumar.blogspot.com/2015/09/10.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.