Jump to content

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை: நீதிபதி இளஞ்செழியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம் திகதி ஆணைக்கோட்டை பகுதியில் யோகராசா அமுதவர்த்தினி என்பவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி எஸ். சுகுந்தன் யாழ். மேல் நீதிமன்றில், மனைவியை போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் என சாட்சியமளித்துள்ளார்.

எனவே, சாட்சியத்தின் அடிப்படையில, குறிப்பிட்ட கொலைக் குற்றத்திற்கு எதிராக மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். குறித்த தண்டனை ஜனாதிபதி குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில். குறிப்பிட்ட இடத்தில், விதிக்கப்படுமென்றும் கூறி தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=334764225927807407#sthash.l0M8CR2x.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குத் தண்டனையை.... நான் விரும்புவது இல்லை என்றாலும்,
இதில் சம்பந்தப் பட்ட நபர், தனது மனைவியை..... போத்தலை உடைத்து, கழுத்தில் குத்தி கொடூரக் கொலை செய்தமையால்...
நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பை வரவேற்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தூக்குத் தண்டனையை.... நான் விரும்புவது இல்லை என்றாலும்,
இதில் சம்பந்தப் பட்ட நபர், தனது மனைவியை..... போத்தலை உடைத்து, கழுத்தில் குத்தி கொடூரக் கொலை செய்தமையால்...
நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பை வரவேற்கின்றேன் .

ஆனால், இது திட்டமிட்ட கொலையா, கைமோசக் கொலையா (தீடீர் ஆத்திரத்தில் செய்வது ) என்பதில் தெளிவாயில்லையே.

முதலாவது வகைக்கு மரணதண்டனையும்  (திட்டமிட நேரம் இருந்த படியால், அதன் விளைவான தண்டனை குறித்து சிந்தித்து அதை தவிர்த்திருக்கலாம் என்பதால்), இரண்டாவாதாயின் 10 வருடங்களுக்கு உட்பட்ட தண்டனை - சட்டப்படி.

ஒரு கணவன், ஒரு போதும் மனைவியை திட்டம் இட்டு கொலை செய்ய முடியாது - கள்ளத் தொடர்பு இருந்தாலும் (பெரிய இடமாக இருந்தால் அன்றி) அது கை மோசக் கொலையாக இருக்கும். இங்கு அப்படி நடந்ததாக தெரியவில்லை. ஆகவே இது கை மோசக் கொலை போலவே எனக்குப் படுகின்றது.

நான் பார்க்கும் வகையில் இந்த நீதிபதி, மிகவும் அலம்பறை பண்ணுவது போல் படுகிறது.

ஏனெனில், இவர், சட்டப்புத்தகத்தில் இருக்கிறதாம் என்று, ஜனாதிபதிக்கு அனுப்பிய அறிக்கையில், மரணதண்டனையை ஆயுள் தண்டனை ஆக்கலாம் அல்லது மேலும் குறைக்கலாம் என சிபார்சு செய்து காரணங்களையும் கொடுத்துள்ளார்.

அப்படியானால், சுத்தி வளைக்காமல் இவரே, இந்த நீதிமன்றே, செய்து இருக்கலாமே.

பணம் இருந்து நல்ல சட்டத்தரணி இருந்தால் ஒரு நீதியும், இல்லாதவனுக்கு வேறு நீதியும் தவறு.

அதற்காக நடந்த கொலையை நியாயப் படுத்தவில்லை.

இந்த நீதிபதிதான், பிள்ளைகள் தவறு செய்தால், பெற்றோரை கைது செய்ய உத்தரவு இட்டு அவர்களுக்கு தண்டனை தருவேன் என்று, நாட்டில இல்லாத சட்டத்தை அறிவித்தவர்.

http://www.yarl.com/forum3/topic/161545-போதைப்-பொருளுடன்-பிள்ளைகள்-பிடிபட்டால்-பெற்றோரையும்-கைது-செய்யுமாறு-நீதிபதி-இளஞ்செழியன்-உத்தரவு/

Link to comment
Share on other sites

தூக்குத் தண்டனையை.... நான் விரும்புவது இல்லை என்றாலும்,
இதில் சம்பந்தப் பட்ட நபர், தனது மனைவியை..... போத்தலை உடைத்து, கழுத்தில் குத்தி கொடூரக் கொலை செய்தமையால்...
நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பை வரவேற்கின்றேன் .

கொலைக்கான சரியான காரணம் கொலை செய்தவர்க்கு மட்டும் தானே தெரியும்

Link to comment
Share on other sites

ஒரு கணவன், ஒரு போதும் மனைவியை திட்டம் இட்டு கொலை செய்ய முடியாது

என்ன சார் இப்பிடி சொல்லிட்டீங்க.. :rolleyes: அமெரிக்காவில் பல வழக்குகளை இல்லாமலே செஞ்சிடுவீங்க போல இருக்கே.. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் இப்பிடி சொல்லிட்டீங்க.. :rolleyes: அமெரிக்காவில் பல வழக்குகளை இல்லாமலே செஞ்சிடுவீங்க போல இருக்கே.. tw_blush:

இது நம்மூரு கேசுங்க.... தண்ணியப் போட்டுட்டு வந்து, மனிசி பேசினோன்ன, வீராவேசம் வந்து இரண்டு தட்டு போட்டு வைப்போம் என்று கிளம்பி கொலையில் முடிந்து போன கேசு போலத் தான் படுகுது.... :rolleyes:

அதுதான் பெரிய இடம் (அமெரிக்கா) ஆக இருந்தால் அன்றி என்று சொல்லி வைச்சு புட்டோம் இல்ல...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் என்ற ஒன்றை இந்தச் சமூகம் துணித்திருக்காவிட்டால்.. இந்தக் கொலை.. இவரை கொலைக்காரன் என்று சொல்ல வேண்டிய தேவையே வந்திராதே. நீதிபதி இதுக்கு என்ன சொல்லுவார்..?! :unsure:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.