Jump to content

கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா?

சர்வேந்திரா

  •  
Gajendrakumar-e1440486117494-800x365.jpg

படம் | TAMIL DIPLOMAT

நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது துணை புரியும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தேன்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையாவது வெற்றி கொள்ளும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. இதனை கஜேந்திரகுமார் முன்வைக்கும் கொள்கையின் தோல்வியாக வியாக்கியானப்படுத்துவோரும் உள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்காது போனமையை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது? இத்தோல்வி உண்மையில் ஈழத் தமிழர் ஒரு தேசம் என்பதற்கு அங்கீகாரம் கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையின் தோல்வியா? அல்லது இக்கொள்கைசார் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதற்கான ஆதரவை வென்றெடுப்பதற்கான செயற்பாட்டில் ஏற்பட்ட தோல்வியா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது நன்மையானது என்ற கருத்து என்னிடம் இருந்தபோதும் இத்தேர்தலிலும் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்காது போகலாம் என்ற அச்சமும் எனக்கு இருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இத்தடவையும் ஒரு ஆசனத்தையும் பெறமுடியாது போயினும், அது குறித்து நான் ஆச்சரியப்படமாட்டேன் எனத் தேர்தலின் முன்னர் சில நண்பர்களிடம் கூறியிருந்தேன். தேர்தலின் அன்று வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் (முடிவுகள் வெளியாகும் முன்பு) ‘தேர்தல் நாள் குறிப்புகள்’ என்ற தலைப்பில் இட்ட எனது பேஸ்புக் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

“தேர்தல் வெற்றிகளை நாம் இரண்டு முறைகளில் மதிப்பீடு செய்யலாம். கிடைக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை வைத்து கணிப்பீடு செய்வது ஒரு முறை. கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் கிடைத்த மக்களின் வாக்குகளின் எண்ணிக்கையை வைத்து மக்கள் ஆதரவு அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதனை கணிப்பீடு செய்வது இன்னொரு முறை. எதிர்பார்த்த ஆசனங்கள் கிடைக்காவிடினும் மக்கள் வாக்குகளில் ஏற்படும் அதிகரிப்பை வளர்ந்து வரும் அங்கீகாரமாக எடுத்து மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக செயற்படுதலே மக்கள் மீது நம்பிக்கை கொண்ட அரசியற்தலைமையின் பணியாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இது கூடுதலாகப் பொருந்தும்!”

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்காமலும் போகலாம் என நான் நினைத்தமைக்கு பின்வருவன காரணமாக இருந்தன.

  1. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டினைக் கொண்டு தமது வாக்குகளை வழங்கும் மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு பிரதான கட்சிக்கு வாக்களிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றமை.
  2. இலங்கை அரசுக்கு எதிராக ஒரு கட்சியினை அல்லது அமைப்பை நிறுத்துவதே பலம் என்ற மக்களின் ஆழமான நம்பிக்கையை இலகுவில் மாற்ற முடியாமை
  3. உரிமை சார்ந்து உயரிய கொள்கை நிலைப்பாடு மட்டும் மக்கள் ஆதரவை வென்றெடுக்கப் போதுமானதாக இருப்பதில்லை. தந்தை செல்வநாயகத்துக்கு முன்னரே தமிழீழக் கொள்கையினை முன்வைத்த சுயாட்சிக் கழக நவரட்ணம் போன்றோரால் போதிய மக்கள் ஆதரவைப் பெறமுடியவில்லை.
  4. புலம்பெயர் நாடுகளில் இருந்து தெரிவிக்கப்படும் ஆதரவோ அல்லது சமூக ஊடகப்பரப்புரைகளோ, அதில் ஈடுபடும் எமது உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும் அளவுக்கு அவை வாக்களிக்கும் மக்களை சென்றடைவது குறைவு. மக்களின் முடிவுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதும் குறைவு.
  5. விதைப்புக்கும் விளைச்சலுக்கும் உள்ள தொடர்பு. விடுதலைப் புலிகள் தமது உயிர் ஈகம் மூலம் விதைத்ததை கூட்டமைப்பே அறுவடை செய்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது தனித்துவமான அரசியல் குறித்து கருத்துநிலையில் விவாதித்தளவுக்கு மக்கள் மத்தியில் செயற்பட்டிருக்காத நிலை.
  6. 2016ஆம் ஆண்டுக்குள் சமஷ்டி தீர்வு எடுத்துத் தருவதாகக் கூட்டமைப்புத் தலைவர் கொடுத்த வாக்குறுதிக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என மக்கள் நினைக்கக்கூடிய நிலைமை.
  7. கூட்டமைப்புக்கு இருக்கின்ற ஊடக ஆதரவும் தேர்தலின் இறுதி நேரத்தில் இவ் ஊடகங்கள் ஊடாக தேர்தல் முடிவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வகையிலான பரப்புரைகளும்.
  8. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்தால் மீண்டும் பிரச்சினை வந்து விடும் என மக்களில் ஒரு சாராருக்கு இருக்கும் அச்சம்.

நான் இங்கு குறிப்பிட்டுள்ள விடயங்கள் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பாதகமாக அமைந்துள்ளன என்பதனைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இவற்றை விட தேர்தல் களச் சூழலை நன்கு புரிந்து அதற்கமைய வியூகங்களையும் உத்திகளையும் வகுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இயங்குதிறன் மிக்க வகையில் செயற்பட்டிருக்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடந்தகால தேர்தல் பகிஸ்கரிப்பு நிலைப்பாடுகளும் இத்தேர்தலில் அவர்களுக்கு எதிராக இயங்கியிருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. மேலும், கூட்டமைப்பினரை முன்னணி கூடுதலாக விமர்சித்தமையினையும் மக்கள் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதேவேளை, முன்னணி கடைப்பிடித்த சிறு எண்ணிக்கையினைக் கொண்ட மக்கள் சந்திப்புகளில் மக்களோடு நெருங்கி ஆழமாக உரையாடுதல் எனும் அணுகுமுறை சந்திப்புகளில் பங்குபற்றியோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிய முடிகிறது. ஆனால், இத்தகைய சந்திப்புகளில் முன்னணியினர் சந்தித்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. முன்னணிக்கு கிடைத்த வாக்குகளில் கணிசமானவை இத்தகைய சந்திப்புகளின் மூலம் பெறப்பட்டவை என்றே தெரிகிறது.

இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாலும் ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட ‘மாற்றம்’ என்ற நிலைப்பாடு காலத்துக்கு சற்று முந்தியதாகத் தெரிகிறது. இயங்கிக் கொண்டிருக்கிற பிரதான கட்சி தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறித் தோல்வியினைத் தழுவும் போதே ‘மாற்றம்’ என்ற அணுகுமுறை மக்கள் மத்தியில் எடுபடும். தாயக மக்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் தோல்வியடைந்து விட்டதாக அவர்கள் இன்னும் கருதவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்து உரிமைகளைப் பெறமுடியவில்லை என்பதனை கூட்டமைப்பின் குறைபாடாக மக்கள் பார்க்கவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு கூட்டமைப்பு வழங்கிய ஆதரவை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சோதனைக்காலம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது. கூட்டமைப்பு ஆதரித்தவர்கள்தான் இப்போது ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு எடுத்துத் தருவதாக சம்பந்தர் ஐயா வாக்குறுதி அளித்திருக்கிறார். சமஷ்டித் தீர்வினைக் கூட்டமைப்பு தீர்வாக முன்வைத்திருக்கிறது. சிங்களக் கட்சிகள் எவையும் ஒற்றையாட்சியினை விட்டு வெளிவரத் தயாராக இல்லை. இவற்றையெல்லாம் கூட்டமைப்பு எவ்வாறு கையாளப் போகிறது என்பதில்தான் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் உண்டு. எனது பார்வையில் மாற்றம் என்பது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே காலப்பொருத்தமான கோசமாக இருக்கும்.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியடைந்தமையினை தமிழ் மக்கள் ஒரு தனியான தேசம் என்ற அங்கீகாரத்தைக் கோரும் நிலைப்பாடு தோல்வியடைந்து விட்டதாக சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். எனது பார்வையில் இது தவறானது. தமிழ் மக்கள் ஒரு தேசம் (Nation) என முன்னணி கூறுவதற்கும், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் (Nationality) என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதற்கும் மக்களின் பார்வையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. அரசியல்ரீதியாக நோக்கினும்கூட இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் மிகப் பாரியதானதல்ல. எனது புரிதலின்படி தேசம் என்பது மக்களின் அரசியல் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மக்களின் அரசமைக்கும் உரிமையையும் விருப்பத்தையும் தேசிய இனம் என்பதனை விடக் கூடுதலாகச் சுட்டி நிற்கும். தேசம் என்ற பதத்தை பயன்படுத்த விரும்பாதவர்கள் கூட்டமைப்பு கூறும் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதற்கு அங்கீகாரம் பெறுவதற்காகத் தமிழ் மக்கள் போராடுகிறார்கள் என்று இதனை அர்த்தப்படுத்தலாம். எனது பார்வையில் கஜேந்திரகுமாரின் பிரதான அக்கறை தேசம் அல்லது தேசிய இனம் என்ற பதங்கள் தொடர்பானதாகத் தெரியவில்லை. தேசிய இனம் என்பதுவும் சர்வதேசச் சட்டங்களில் கூறப்படும் மக்கள் என்ற வரையறைக்குள் உள்ளடங்கி சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையதுதான்.

கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரை கூட்டமைப்புத் தலைமை தாம் மக்களுக்குக் கூறுவது போல தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கான அங்கீகாரத்தை நோக்கி உண்மையில் செயற்படாமல் தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மையினர் என்ற வகையில் அணுகி தீர்வு நோக்கிச் செயற்படுகிறது என அவர் நம்புகிறார். இவர் இந்த முடிவுக்கு வந்தமைக்கு கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் ஐயாவுக்கு மிக அருகாமையில் நின்று செயற்பட்டமையால் அவருக்குக் கிடைத்த பட்டறிவு காரணமாக இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் மேடைகளிலும் கூட்டமைப்பு கூறியதனை விசுவாசித்து இதற்கான அரசியல் அங்கீகாரம் தேடும் செயற்பாடுகளில் கூட்டமைப்புத் தலைமை உண்மையாகவே செயற்படுமானால் இவர்களுக்கிடையிலான இடைவெளி குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

இதனால், நாம் இங்கு கேட்க வேண்டிய கேள்வி தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் அல்லது தேசிய இனம் என்பதற்கான அங்கீகாரம் கோரும் கொள்கை நிலைப்பாடு இத்தேர்தலில் தோல்விடைந்துள்ளதா என்பதுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் அளித்த ஆணையையும் இக்கொள்கை நிலைப்பாட்டுக்கு மக்கள் வழங்கிய ஆதரவாகவே நாம் நோக்க வேண்டும். இங்கு உண்மையான பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை வெறும் ‘தேர்தல் காலப் பேச்சாகப்’ பார்க்கிறதா என்பதுதான்!

http://maatram.org/?p=3622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முக்கியமாக் புலிவால்களின் கொள்கைகளுக்கு மக்கள் கொடுத்த பலத்த அடி!

ஒரு கட்டுரைபோல இருக்கிறது ..... (எழுதியவருக்கு நன்றி) 

இன்னொரு தேசம் 
சமஸ்டி 
இரண்டும் கிட்டதட்ட ஒன்றுதான் காலம் கடக்கும்போது 

சிங்களவன் இரண்டுக்கும் எதிரி என்னும்போதவது 5ஆம் அறிவுக்கு கொஞ்சம் என்றாலும் எட்டவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.