Jump to content

'எனது சாதனைகளுக்கு பெற்றோரே ஊக்க சக்தியாக அமைந்தனர்!'- சங்ககாரா உருக்கம்


Recommended Posts

'எனது சாதனைகளுக்கு பெற்றோரே ஊக்க சக்தியாக அமைந்தனர்!'- சங்ககாரா உருக்கம்

 

ர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற  சங்ககாராவுக்கு, இங்கிலாந்துக்கான இலங்கை தூதர் பதவி வழங்க தயாராக இருப்பதாக பிரிவுபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்தார்.

kumar.jpg

சங்ககாராவை வழியனுப்பும் விதமாக கொழும்பு டெஸ்டின் கடைசி நாளான இன்று, சங்ககாராவின் பெற்றோர், மனைவி, நண்பர்கள், இலங்கை அதிபர் சிறிசேனா , பிரதமர் ரணில் உள்ளிட்டோர் கொழும்பு சாரா ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா,  சங்ககாராவை இங்கிலாந்து நாட்டுக்கான இலங்கை தூதராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்த நிகழ்வில் சங்ககாரா பேசுகையில், " நான் படித்த டிரினிட்டி பள்ளியில் கற்றதும் பெற்றதும் அதிகம், அங்கு பெற்றுக் கொண்ட கிரிக்கெட் பற்றிய  அடிப்படை பயிற்சிக்காக நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். சுனில் பெர்னாண்டோ  எனது போட்டிப் பள்ளியின் பயிற்சியாளர். ஆனால் எனக்கும் அவர் அன்புடன் பயிற்சி அளித்தார். இப்போதும் நான் கண்டி சென்றால் அவரை சந்திக்காமல் வரமாட்டேன்.

எனது அனைத்து முன்னாள் கேப்டன்கள், என்னுடன் விளையாடிய சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு ஊக்கசக்தியாக இருந்த எனது பெற்றோருக்கும் நன்றி.  எனது பெற்றோருக்கு நான் மகனாக பிறந்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் எப்போதும் உணர்ச்சி வசப்படுகிற ஆள் இல்லை.  எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் குழுமியிருக்கும் இந்த தருணத்தில் எனது கண்ணில் இருந்து நீர் கொட்டத்தான் செய்கிறது.

விராட் மற்றும் இந்திய அணிக்கும் இந்த தருணத்தில் நன்றி. உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டத்தை  எங்களுக்கு எதிராக ஆடிக் காட்டினீர்கள். ஓய்வு பெறும் இந்த தருணத்தில் உங்களுக்கு எதிராக கடினமான கிரிக்கெட்டை ஆடியது எனக்கு மனநிறைவைத் தருகிறது.  நாங்கள் உங்களை  வீழ்த்துவதற்கு திட்டமிட்டு தவறியிருக்கிறோம். எனினும் இந்த தருணத்தில் எங்களுடன் இருப்பதற்கு உங்களுக்கு நன்றி" என்றார்.

சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில்  233 இன்னிங்ஸ்களில் விளையாடி  12,400 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில் 38 சதங்களும்  52 அரைசதங்களும் அடங்கும்.  அவர் எடுத்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 319 ரன்கள். அத்துடன் விக்கெட் கீப்பராக 182 கேட்ச்கள் மற்றும் 20 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=51440

Link to comment
Share on other sites

எமோஷனல் ஆகிவிட்டேன் சாரி.. கண்ணீருடன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்னார் குமார் சங்ககாரா!
 
 
கொழும்பு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கையின் குமார்சங்ககாரா, பிரிவு உபசார நிகழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா, சமீபத்தில் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருடன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றது. அப்போட்டியுடன் சங்ககாரா ஓய்வு பெற்றார்.

 

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்தார் சங்ககாரா. தற்போது இலங்கையில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிந்தது. இப்போட்டியுடன், சங்ககாரா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். எனவே, போட்டி முடிந்ததும் மைதானத்தில் பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில்அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சங்ககாராவின் பெற்றோர், குடும்பத்தார், நண்பர்களும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சங்ககாரா, 15 வருட காலமாக கிரிக்கெட்டை நேசித்து ஆடியதாகவும், ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார். தனது குடும்பத்தார் எப்போதாவதுதான் தனது ஆட்டத்தை பார்க்க மைதானத்துக்கு வருவார்கள் என்றும் தற்போது அவர்கள் வந்திருப்பது நெகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறிய சங்ககாராவின் கண்களில் அப்போது நீர் ததும்பியது. சுதாரித்துக்கொண்ட சங்ககாரா, "நான் எப்போதுமே எமோஷனல் ஆக மாட்டேன். ஆனால் இப்போது எமோஷனல் ஆகிவிட்டேன். சாரி" என்று தெரிவித்தார். பேச்சின் பெரும்பாலான நேரங்களில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தாரை புகழ்ந்து பேசிய சங்ககாரா, இலங்கை ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி கூறவும் மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

நான் தோற்றாலும் வென்றாலும் என்னை நேசிக்கும் குடும்பம்: சங்ககாரா நெகிழ்ச்சிப் பேச்சு

 
 
  • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் குமார் சங்ககாரா. | படம்: ராய்ட்டர்ஸ்.
    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் குமார் சங்ககாரா. | படம்: ராய்ட்டர்ஸ்.
  • சங்ககாராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விராட் கோலி. | படம்: ஏ.பி.
    சங்ககாராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விராட் கோலி. | படம்: ஏ.பி.
  • கடைசியாக ரசிகர்களிடத்தில் மட்டையை உயர்த்திக் காட்டும் சங்ககாரா. | படம்: ஏ.எஃப்.பி.
    கடைசியாக ரசிகர்களிடத்தில் மட்டையை உயர்த்திக் காட்டும் சங்ககாரா. | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்பு டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற இலங்கை கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரம் சங்ககாரா, தனது உரையின் போது நெகிழ்ச்சியடைந்தார்.

134 டெஸ்ட் போட்டிகளில் 233 இன்னிங்ஸ்களில் 12,400 ரன்கள். இதில் 38 சதங்கள், 52 அரைசதங்கள், சராசரி 57.40. அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 319 ரன்கள். 182 கேட்ச்கள் 20 ஸ்டம்பிங்.

இன்றுடன் ஓய்வு பெற்ற சங்கக்காராவை முதலில் சுனில் கவாஸ்கர் வாழ்த்தினார், "என்னுடைய தாய்மொழியில் குமார் என்றால் இளம் வயதினன் என்று பொருள். வயதாகும் போது ஸ்ரீ என்று அழைக்கப்படுவர். ஆனாலும், கிரிக்கெட் ஆட்டத்தை நேசிப்பவர்கள் மத்தியில் சங்கக்காரா எப்போதும் குமார் என்றே நினைவில் கொள்ளப்படுவார். நான் இப்போது உங்களை ‘முன்னால் கிரிக்கெட் வீரர்கள் கிளப்புக்கு’ அழைக்கிறேன்” என்றார்.

சங்ககாராவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அர்ஜுனா ரணதுங்கா, சுனில் கவாஸ்கர் இருந்தனர். இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் டெஸ்ட் உடையில் கையெழுத்திட்டு சங்கக்காராவுக்கு பரிசாக அளித்தனர். 269ஆம் எண் ஜெர்சி கோலியினுடையது.

பரிசளிப்பு, பாராட்டுரை முடிந்தவுடன் சங்கக்காரா பேசத் தொடங்கினார்: "நான் நிறைய பேர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் இங்கு வந்தவர்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறேன். பிறகு நான் படித்த காலேஜ், டிரினிடி காலேஜ். அது அபாரமான பள்ளி. அங்கு நான் கற்றதும் பெற்றதும் அதிகம், அங்கு பெற்றுக் கொண்ட அடிப்படைகள் மற்றும் அடித்தளங்களுக்காக நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். சுனில் பெர்னாண்டோ, இவர் எனது போட்டிப் பள்ளியின் பயிற்சியாளரக இருந்தாலும் எனக்கு அன்புடன் பயிற்சி அளித்தார்.

எனது அனைத்து முன்னாள் கேப்டன்கள், என்னுடன் விளையாடிய அனைத்து அணி சகாக்கள், எனக்காக நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் என்னை பெரிய அளவில் அகத்தூண்டுதல் செய்தது. ஓய்வறையின் அனைத்து தருணங்களும் மகிழ்ச்சியளிப்பவை, இனி அதைத்தான் நான் பெருமளவில் இழக்கிறேன். சார்லி மற்றும் சுதாமி ஆஸ்டின் ஆகியோருக்கு நன்றி, என்னை கட்டி மேய்ப்பது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் நீங்கள் மேலாளர் என்பதையும் தாண்டி செயல்பட்டீர்கள்.

நிறைய பேர் என்னிடம் எனக்கு தூண்டுகோலாக அமைந்தது எது என்று கேட்டனர். நான் எனது பெற்றோரைத் தாண்டி இதற்கான விடையைக் காண்பதில்லை. மன்னிக்கவும் நான் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக இதனை கூறவில்லை. நீங்கள்தான் எனது தூண்டுகோல், க்ரியா ஊக்கிகள். பிறகு எனது உறவினர்கள், அம்மா, அப்பாச்சிக்கு நன்றி. நான் வீட்டில் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாம் நம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறுவார்கள், ஆனால் நான் உங்கள் குழந்தையாக பிறந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் எப்பவும் உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆனால் எனது பெற்றோரும் உறவினர்களும் உள்ள இந்தத் தருணம் மிகவும் அரிய தருணமாகும்.

எனது பெரிய சாதனைகள் பற்றி கேட்கின்றனர், சதங்கள், உலகக் கோப்பை வெற்றி, ஆனால் நான் பார்ப்பது, கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற நட்பு வட்டாரங்களையே. இன்று நான் விளையாடுவதை பார்க்கவென்றே வந்திருக்கிறார்கள். நான் வென்றாலும் தோற்றாலும் என்னை எப்போதும் நேசிக்கும் குடும்பத்தை நோக்கி என்னால் எப்பவுமே செல்ல முடிந்துள்ளது இதுதான் எனது சாதனை என்று கருதுகிறேன்.

இறுதியாக விராட் மற்றும் இந்திய அணிக்கு நன்றிகள். அன்பான வார்த்தைகளுக்கு நன்றி, அதைவிடவும் முக்கியமானது நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டத்தை ஆடியது. நான் ஓய்வு பெறும் தருணத்தில் கடினமான டெஸ்ட் போட்டியையே விரும்பினேன் அதனை இந்திய அணி எனக்கு அளித்ததை பெரிதாகக் கருதுகிறேன், இதைவிடவும் மதிப்பு மிக்க ஒன்றை நான் கேட்டு விட முடியாது. நீங்கள் எப்போதும் எங்களது கடினமான எதிரணியினராக இருந்திருக்கிறீர்கள், நாங்கள் உங்களை வீழ்த்துவதற்கு திட்டமிடுவோம், சில சமயங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம், சில வேளைகளில் தவறுவோம், எனினும் இங்கு இந்த தருணத்தில் இருப்பதற்காக நன்றி.

கடைசியாக ஆஞ்சேலோ மற்றும் அணியினர். ஆஞ்சி உங்களிடம் அருமையான அணி உள்ளது, அருமையான எதிர்காலம் உள்ளது. பயமற்று விளையாடுங்கள். வெற்றிக்காக ஆடும்போது தோற்பதைப் பற்றி கவலைப் படாதீர்கள்.”

இவ்வாறு பேசினார் சங்ககாரா.

http://tamil.thehindu.com/sports/நான்-தோற்றாலும்-வென்றாலும்-என்னை-நேசிக்கும்-குடும்பம்-சங்ககாரா-நெகிழ்ச்சிப்-பேச்சு/article7575085.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.