Jump to content

மேலோகம்


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள் பலர் எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டனர்.அண்மையிலும் ஒரு இசை அமைப்பாளர் விடைபெற்றார்...

வழமையாக இறந்தவர்களை மேலே போய்விட்டார்கள் என்று சொல்லுவோம்.அப்படி மேல போன திரை பிரபலங்கள் எப்படி உரையாடியிருப்பார்கள் என்ற ஒரு சிறு கற்பனை மட்டுமே......

 

அண்மையில் மேலோகம் போனவர் எம்.எஸ்.வி அவரை வரவேற்பதற்கு பல திரையுலக

பிரமுகர்கள்  பிரமாண்டமானமுறையில் மேடை போட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.பார்வையாளர்கள் பூமி பந்தில் தென்மண்டத்தில் வாழ்ந்து இப்ப மேலோகத்தில் வாழ்பவர்கள்.

பிரமாண்டமானஒரு மேடையை, புலம்பெயர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள் ஒழுங்கமைத்திருந்தனர்.

 

பூமிபந்தின் பிரபல சினிமா நட்சத்திரங்கள் பங்கு பற்றும் மாபெரும் நிகழ்ச்சி.... இதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் சிலோன் வானோலி புகழ் கே.எஸ். ராஜா.....

 

கே.எஸ் ....கையில மைக்குடன்....ராஜாவின் மாலை வணக்கங்கள்

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் புலம்பெயர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் வந்தோர் சங்கத்தினர் ..(பு.மே.மே. ),அதன் தலைவரை வரவேற்புரை நிகழ்த்தவும்,மனைவியை மங்களவிளகேற்ற, பு.மே.மே. சார்பில் அன்புடன் அழைக்கின்றேன்...என கே.எஸ் ராஜா சொன்னவுடன் முன் வரிசையிலிருந்த சங்க தலைவர் மனைவியும் மேடைக்கு சென்றனர் .மனைவி மேடையில் ஏறி கையை மடித்து உயர்த்தி ஐந்து விரல்களிலும் தீபத்தை ஏற்றினார் .சபையில் இருந்தோர் தங்களது கையை பக்கத்தில் இருப்பவரின் கையுடன் அடித்து ஏற்படுத்திய கரோலி மண்டபத்தை அதிரசெய்தது.

அடுத்ததாக செம்மளச்செல்வர் புரட்சிதிலகம்  உரையாற்றுவார் ,என அறிவிக்க

 

ரத்தத்தின் ரத்தங்களே (மண்டபம் சிவப்பு ஒலியால் பிரகாசிக்கின்றது) https://www.youtube.com/watch?v=ZlhaOQSgD_M

"என்னை தெரியுமா நான் சிரித்து"என பாடிய‌  படியே புரட்சி திலகம் மேடையில் தோன்ற‌

சபையிலிருந்தோர் அழத்தொடங்கிவிட்டார்கள் ,பு.மே.மே.தமிழ்நாட்டு மேலோகவாசி" "தலைவாஎன்னா வாத்தியாரு இப்படி கேட்டிங்கள் " என்று தீக்குளிக்க போக உடனே எனைய சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்கள்.

https://www.youtube.com/watch?v=zbpnIpD__KI

பொய்யிலெ பிறந்து பொய்யிலே வளர்ந்து என தேவிகா பாடிகொண்டு மேடையில் வர எம்.ஜி.ஆரும் கூடவே சேர்ந்து ஆடி சபையோரை மகிழ்ச்சி கடலில்ஆழ்த்தி  கொண்டிருக்கும்

பொழுது சபையோர் தங்களுக்குள் முனுமுனுக்க தொடங்கிவிட்டார்கள்'

அருகு அருகே அமர்ந்து பேசிகொண்டிருந்த இருவர்

"உவருக்கு ஆடத் தெரியாது"

"அவற்ற நிறத்திற்கும் ,ஆழகுக்கும் ஒருத்தருமில்லை"

"நடிப்பும் பெரிய திறம் என்றில்லை"

"யோவ் நடிப்பில்லாமலா இவ்வளவு மக்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்"

"ஏய் என்னையா யோவ் என்றாய்"

"உன்னைதான்டா"

உடனே சபையோர் அவர்களை சமாதானப்படுத்த ஒருத்தர் எழும்பி "வெளியால வா பார்த்துகொள்கிறேன்" என்றபடி வேறு இடத்தில் போய் அமர்கிறார்

" என்னை யார் என்று எண்ணி எண்ணி நீங்கள்  பார்க்கின்றிர்கள் "கண்ணை மூடியபடி ஸ்டைல் நடை நடந்து வர சபையோரின்" நடிகர் திலகம் வாழ்க" என்ற ஒலி கூரையை பிளந்தது... https://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8

 

"நலந்தான நலந்தான உடலும் உள்ளமும் நலந்தான" பத்மினியும் சிவாஜியும் ஆடி சபையோரை மகிழ் வித்து கொண்டிருக்கும் பொழுது . https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg சபையோர் மீண்டும் முனுமுனுக்க தொடங்கிவிட்டனர்....

"உவர் ஒவர் அக்டிங்"

"டெய் யாரை பார்த்து ஒவர் அக்டிங்க் எங்கிறாய்"

"யாரையடா டேய் என்றாய்"

"உன்னைதான்டா"

 மீண்டும் சபையோர் தலையிட்டு சமாதானபடுத்தி எம்ஜிஆர் வாலுகளை ஒரு பகுதியிலும் சிவாஜி வாலுகளை இன்னோரு பகுதியிலும் அமரும்படி கேட்டுக்கொண்டனர்.

குழுக்களாக பிரிந்திருந்து  தங்களது நாயகர்கள் வரும் பொழுது கைதட்டி விசிலடிச்சு உற்சாகப்படுத்துவதும் எதிர்குழுவின் நாயகர்கள் வந்தால் கூச்சலிட்டு குழப்புவதுமாக இருந்தார்கள்....நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருதற்காக

"இதோ அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறார்கள் காதல் மன்னன் ஜெமினியும் நடிகைர் திலகம் சாவித்திரியும்"

https://www.youtube.com/watch?v=5cmfqO-e020இப்பொழுது இருபகுதியினரும்   சேர்ந்து விசிலடித்தார்கள்.

"

.

சாவித்திரியை பார்த்த சிவாஜிக்கு பழைய ஞாபகம் வர உடனே "இரவினில் ஆட்டம்"https://www.youtube.com/watch?v=wGmxDapஃப்ல்6ம் பாடியபடியே மேடையில் வந்தார்.

மேடையிலிருந்தோரிக்கிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.இசை அமைப்பாளருக்கு வரவேற்ப்பு என அறிவித்துவிட்டு நடிகை,நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்,முதலே சொல்லியிருந்தால் நாங்கள் இந்த நிகழச்சியை பகிஸ்கரித்திருப்போம் என இசைஅமைப்பாளர்கள் ஆதங்கப்பட்டுகொண்டிருப்பதை கண்ட கே.எஸ் ராஜா .....இன்றைய விழா நாயகன் இதோ உங்கள் முன்

சபையோர் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" கோரோசாக சத்தம் போட ,

விஸ்வநாதன் "அமைதி ,அமைதி....வேலை கொடுப்பது வேலை வாங்குவதெல்லாம்  புலோகத்தில் நாம் இப்பொழுது வாழ்வது மேலோகத்தில்,இங்கு எங்கும் இசை எதிலும் இசை.. இன்றைய இந்த நன்நாளில்பிரபஞ்ச இசை வல்லராசாக நாம் வரவேண்டும் என கனவு காண்போம் "www.youtube.com/watch?v=swzBXaGeJ-0

இந்த பாடலை விஸ்வநாதன் பாட மேடையைலிருந்த ரவிச்சந்திரன், பாலையா, நாகேஸ் என்று ஒரு பட்டாலமே நாட்டியம் ஆடி சபையோரை மகிழ்வித்தனர்.

இப்பொழுது அரை மணித்தியால இடைவேளை  எனஅறிவித்தவுடன் பு.மே.மே. கொமிட்டி அங்கத்தினர்கள் மேடையை நோக்கி படை எடுத்தனர்.மேடையின் வாசலில்நின்ற காவலாளி ஒருத்தரையும் உள்ளே அனுமதிக்கவில்லை .

நாங்கள் தான் இந்த விழாவை ஒழுங்கு செய்தனாங்கள் எங்களையே உள்ள விட மாட்டியோ உனக்கு எவ்வளவு துணிவு என்று ஒருத்தர் காவலாளிக்கு அடிக்க போக உடனே தலைவர் ஒடி வந்து இருவரையும் சமாதனப்படுத்திய பின்பு காவலாளியிடம்

"நாங்கள் பிரபலங்களுடன் செல்பி எடுக்க வேணும் பிளிஸ்"கெஞ்சி கேட்டார்.

காவலாளியும் ஒருத்தர் ஒருத்தராக போய் எடுங்கோ என்று சொல்ல முதலில் தலைவர் போனார். உடனே எம்ஜி ஆரிடம் போய் கையை கொடுத்து

"சார் உங்ககூட ஒரு போட்டோ எடுக்கனும்"

"சரி எடுத்துக்கோ எங்க கமரா"

"இங்க இருக்கு "என பொக்கட்டிலிருந்து போனை எடுத்தார்

"என்னது பொக்கட்டிலிருந்து எடுக்கிற"

"இது போன்"

"யோவ் போன்னில எப்படி ஸ்டில் எடுப்பாய் ,பேய் கதை கதைக்கிறாய்  "

"இதுதான் இப்ப லெட்டஸ்  அடுத்த கிழமை புதுசா வேற வந்திடும் சார்பூலோகம் ரொம்ப வாஸ்டா முன்னேறுது சார்"

"சரி சரி வா வந்து பக்கத்தில நில்லு கமராவை பாலுமாகேந்திராட்ட கொடு அவன் நல்லாய் எடுப்பான்"

"சார் நானே எடுப்பேன்,இது செல்பி"

https://www.youtube.com/watch?v=HenA-OUyo0s

என்ற கிந்தி பாடல் மேடையில் ஒலிப்பதை கேட்ட பையோர் '

"எவன்டா கிந்தி பாட்டை போட்டது,தமிழ் பாட்டை போடு" என கோரோசாககத்தினார்கள்.

சபையோரின் பேய் கூச்சலால் அதிர்ச்சியடைந்த ஒலிபதிவாளர் தவறுதலாக www.youtube.com/watch?v=MM7_TQidv3w&index=29&list=PLatdcG8s43WECBhp3KRxu5wUwfV2gCQ92 இந்த பாடலை போட பார்வையாளர்களுக்கு கோபம் இரடிப்பானது.

பார்வையாளர்கள்  எல்லை மீறி போவதை உணர்ந்த அறிவிப்பாளர் இதோ எமது நிகழ்ச்சி ஆரம்பமாகிறது உங்களை மகிழ்விக்க பின்னனி பாடகர் டி.எம்.எஸ்

"பகலினில் தூக்கம் இரவினில் ஆட்டம்" என்ற பாடலை பாட சபையோர் மிகவும் உணர்வு பூர்வமாக அமைதியாக கேட்டன ர். https://www.youtube.com/watch?v=0yInd43cm3M

தலைவரின்ட பாட்டு ஒன்று பாடுங்கோ என சபையோர் கேட்க டி.எம்.எஸ் ஆத்திரமடைந்து . புலோகத்திலும் நிகழ்ச்சிகளை சவுண்டு வைச்சு  குழப்புற குணம் உங்களுக்கு இங்கு வந்தும் மாறவில்லை... நீங்கள் கேட்டு நான் பாட முடியாது ,என கூறியபடியே மேடையிலிருந்த முருங்கை மரத்தில் ஏறினார்.

 

 

மண்டபத்திற்குள் இடைவேளைக்கு வெளியே சென்ற கூட்டம் ஒன்று ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்தது.. ஆரவாரத்துடன் உள்ளே வந்த கூட்டம்

"என்னாப்பா எல்லாம் ழைய பாடலாக போடுறீங்கள் நல்ல குத்துப்பாட்ட பாடுங்க "என கத்தினார்கள்

 

டி.எம்.எஸ் மாத்தையா "என்னடி ராக்கம்மா பாடு பாடு" என்று ஒரு சிங்கள மேலோக வாசி கேட்க அவரும் அந்த பாடலை அழகாக பாடினார்https://www.youtube.com/watch?v=qXm3lopuhXs

. புலோகம் மேடைகளில் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி பிரபலமைடைந்த பு.மே.மே. செயலா ளர் நன்றியுரை   "அந்த நாலு பேருக்கு நன்றி  " https://www.youtube.com/watch?v=tg-V4PcCJK4 என பாடியும் நடித்தும் சபையோரையும் மேடையிலிருந்தோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திகொண்டிரிக்கையில்,.மேலோக பொலிசார்  திடிரென உள்ளே வந்தனர் .இங்கு மதுபானம் பாவித்தீர்களா? எல்லோரும் இல்லை என்றனர் .பொலிசார் அதட்டி கேட்டவுடன் நான் குடிக்கவில்லை அவர் குடித்தாரோ தெரியவில்லை என க்கத்தில் இருப்பவரை நோக்கி கையை சுட்டி காட்டினார்.

 

"ஏய் உன்டவாயிலிருந்துதான் சாரய நாற்றம் அடிக்கின்றது,எங்கே ஒன்று இரண்டு பத்து வரை சொல்லு" என ஒரு எழும்புத்துண்டை நீட்டினார் பொலிஸ்காரர்.

"13 ஆம் நம்பர் வருகின்றது நீ குடித்திருக்கின்றாய்"

"யார் இந்த நிகழ்ச்சியை நடத்துவது"

"பு.மே.மே. அமைப்பினர்"

"எங்கே தலைவர்"

தொண்டர்கள் தலைவரை தேடினார்கள் ,தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை ,பொலிஸ் வந்து தலைவரை தேடுதாம் என்ற  கதை மண்டபம் பூராவும் காட்டுத் தீ போல பரவியது.

 

நிலமை மோசமடைவதை அறிந்த தொண்டர்கள் ஒருத்தரை திடிர் என தெரிவு செய்தனர்.,தலைவர் இன்னோரு நிகழ்ச்சிக்கு பேசுவதற்கு சென்று விட்டார் இவர் தான் உப தலைவர் என பொலிசாரிடம் அறிமுகம் செய்து வைத்தனர் .

தொண்டர்கள் தங்களுக்குள் , பூலோகத்தில் துட்டு கொடுத்து பொலிஸை மடக்கிவிடலாம் ஆனால் இங்கு அப்படி செய்ய‌முடியாது என‌ பேசிகொண்டிருந்தார்கள்

 

"மதுபான‌ம் பாவிப்பதற்கும்,விற்பதற்கும் அனுமதி பெற்றீர்களா"

"இல்லை"

"அப்ப ஏன் பாவிக்கின்றீர்கள்"

"நாங்கள் பாவிக்கவில்லை யார் சொன்னது நாங்கள் பாவிச்சது எண்டு"

பொலிஸ்காரர் மீற்றரில் 13 எண் வந்த்தை காட்டுகிறார்

"ஐயோ மீற்றர் பொய் சொல்லுது"

ஆத்திரமடைந்த பொலிஸ் துப்பாக்கியை நீட்ட உப தலைவர் காலில் விழுந்து "நாங்கள் பூலோகத்தில் கஸ்டப்படும் ம‌க்களுக்கு நிதி சேர்க்க மது பானம் விற்கின்றோம் பிளிஸ் எஸ்கியுஸ் அஸ்"

"இல்லை நீங்கள் தண்டபணம் 0000000000000000 கட்ட வேணும்"

 "தண்டப்பணம் கட்டுவது என்றால் நாங்கள் இன்னோரு நிகழ்ச்சியில் இது போன்று விற்பனை செய்துதான் கட்டமுடியும் .....உனக்கு முடிந்தால் சட்ட நடவடிக்கை எடு"

பொலிஸாருக்கு பெரிய மானப்பிரச்சனையாக போய்விட்டது.சாரயம் குடிச்சிருக்கிறாங்கள்  ஆனால் மண்டபத்தில் ஒரு இடத்திலும் மதுபானத்துடனோ அல்லது வெற்றுபோத்தல்களோ காணவில்லை.பொலிஸார் மண்டபத்தை சல்லடை போட்டு தேடியும் ஆதாரம் ஒன்றும் கிடைக்கவில்லை.சோர்வடைந்த பொலிஸார் தங்களது பணியை முடித்து கொண்டு வெளியே வந்தனர்.

"சார் சார்..."குரல் வந்த திசையை நோக்கினர்.

" "ஐந்து மடி எருமை அதில ஒன்று தண்ணி அதை நாம் சொன்னால் துரோகி"

பொலிசாருக்கு ஒன்றுமே புரியவில்லை.

"யார‌ப்பா நீ ஒன்றுமே புரியவில்லை"

"உவங்கள் எப்படி தண்ணி பாவிச்சங்கள் என்றுதானே அறியவேணும்"

" ஒம்"

"உவங்கள் உந்த நிகழ்ச்சிக்கு என்னத்தில வந்தவங்கள்"

"எருமையில வந்தவங்கள்"

"அவங்கள் வந்த எருமைகளில் சிலதுகளுக்கு ஐந்து மடி காம்பு இருக்கும்,அதில ஒன்று தண்ணி "

பொலிசார் "ஒமைகோட்"

 

பொலிசார் அவனிடம் ஒரு கேள்வி கேட்டனர் .நீ ஏன் அவங்களை எங்களிடம் காட்டிகொடுத்தாய் அவங்களும் உன்னுடய ஆட்கள் தானே...

"என‌க்கு தலைவர் பதவி தருவதாக சொல்லி கடைசியில் வேறு நபருக்கு கொடுத்துவிட்டார்கள்"

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நீங்கள் ஒரு பேய்க்காய்...... கற்பனை அந்தமாதிரி இருக்கு..:cool:

இந்த கதையை எனது முகப்புத்தத்தில் இணைக்க அனுமதி கோருகின்றேன்.55d5cd6ca731e_tw_smiley.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் அடிக்காது என்ற தைரியம்...ம்...ம்ம்...! நடக்கட்டும்..!!

கற்பனை சுப்பர், ஜெய்சங்கர் பத்மினி நழுவீட்டினம்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமாண்டமான‌ ஒரு மேடையைபுலம்பெயர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள்ஒழுங்கமைத்திருந்தனர்.

எவ்வளவு உண்மை... மேலோகம் எண்டு ஒண்டு இருக்குமெண்டால்... நிச்சயமாய் இப்படித் தான் இருந்திருக்கும்!

 

நல்ல ஒரு கற்பனைக் கதை புத்தன்.... கற்பனைகள் தொடரட்டும்!

 

என்னாடா.. இவங்களுக்கு... கலியாணம் ஏன் கட்டிறதெண்டே தெரியாது போல கிடக்கு !

முகூர்த்தம்... சம்பிரதாயம் எண்டு சும்மா நேரத்தை வீணடிச்சுக்கிட்டு ...!

சாந்தி முகூர்த்ததுக்கு முகூர்த்தம் பார்க்க்க வந்த சாத்திரியைப் பார்த்து.....,

என்னா மேன் ..வாட் இஸ் திஸ் பட்டே...?  இது என்ன கொட்டே...?

 

இந்த நடிகர் யாரென்று சொல்லுங்கோ பாப்பம்....!tw_anguished:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாடா.. இவங்களுக்கு... கலியாணம் ஏன் கட்டிறதெண்டே தெரியாது போல கிடக்கு !

முகூர்த்தம்... சம்பிரதாயம் எண்டு சும்மா நேரத்தை வீணடிச்சுக்கிட்டு ...!

சாந்தி முகூர்த்ததுக்கு முகூர்த்தம் பார்க்க்க வந்த சாத்திரியைப் பார்த்து.....,

என்னா மேன் ..வாட் இஸ் திஸ் பட்டே...?  இது என்ன கொட்டே...?

 

இந்த நடிகர் யாரென்று சொல்லுங்கோ பாப்பம்....!tw_anguished:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி வாய் மூடிறதுக்குள்ள...ஆளைக் கொண்டு வந்திண்டாங்கப்பா...!!!:grin:

சரி...சரி... பச்சை நாளைக்குத் தான்.....!

நன்றி... குமாரசாமியண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நீங்கள் ஒரு பேய்க்காய்...... கற்பனை அந்தமாதிரி இருக்கு..:cool:

இந்த கதையை எனது முகப்புத்தத்தில் இணைக்க அனுமதி கோருகின்றேன்.55d5cd6ca731e_tw_smiley.png

நன்றிகள் கு.சாமி அவர்களே....இந்த கதை முகப்புத்தகத்தில் இணைக்க கூடியதாகின் இணைத்துவிடுங்கள் ....நோ ஒப்யக்சன்....

ஆவிகள் அடிக்காது என்ற தைரியம்...ம்...ம்ம்...! நடக்கட்டும்..!!

கற்பனை சுப்பர், ஜெய்சங்கர் பத்மினி நழுவீட்டினம்...!  :)

நன்றிகள் சுவி.....அவையளை அடுத்தமுறை மேடையேற்றுவோம்...

எவ்வளவு உண்மை... மேலோகம் எண்டு ஒண்டு இருக்குமெண்டால்... நிச்சயமாய் இப்படித் தான் இருந்திருக்கும்!

 

நல்ல ஒரு கற்பனைக் கதை புத்தன்.... கற்பனைகள் தொடரட்டும்!

 

என்னாடா.. இவங்களுக்கு... கலியாணம் ஏன் கட்டிறதெண்டே தெரியாது போல கிடக்கு !

முகூர்த்தம்... சம்பிரதாயம் எண்டு சும்மா நேரத்தை வீணடிச்சுக்கிட்டு ...!

சாந்தி முகூர்த்ததுக்கு முகூர்த்தம் பார்க்க்க வந்த சாத்திரியைப் பார்த்து.....,

என்னா மேன் ..வாட் இஸ் திஸ் பட்டே...?  இது என்ன கொட்டே...?

 

இந்த நடிகர் யாரென்று சொல்லுங்கோ பாப்பம்....!tw_anguished:

 

நன்றிகள் புங்கையூரன் நானும் உப்படி தான் பட்டையும் கொட்டையுமா சிட்னியில் இருக்கிறன்.....எ.ல்லாம் சிட்னி முருகனை  வழிபட்டுகொண்டு தான் எழுதுவது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கற்பனைக் கதை, அடிக்கடி முகட்டைப் பார்ப்பீர்களா புத்தா... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கற்பனைக் கதை, அடிக்கடி முகட்டைப் பார்ப்பீர்களா புத்தா... ?

நான் அடிக்கடி முகட்டை பார்த்து கொண்டிருக்கிறேன் என்று போட்டு மனிசி என்னை நேர்சிங்கோமுக்கு அனுப்புற பிளானில இருக்கு...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் உடையார்........:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" "ஐந்து மடி எருமை அதில ஒன்று தண்ணி அதை நாம் சொன்னால் துரோகி"

 

பொலிசாருக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

"யார‌ப்பா நீ ஒன்றுமே புரியவில்லை"

 

"உவங்கள் எப்படி தண்ணி பாவிச்சங்கள் என்றுதானே அறியவேணும்"

 

" ஒம்"

 

"உவங்கள் உந்த நிகழ்ச்சிக்கு என்னத்தில வந்தவங்கள்"

 

"எருமையில வந்தவங்கள்"

 

"அவங்கள் வந்த எருமைகளில் சிலதுகளுக்கு ஐந்து மடி காம்பு இருக்கும்,அதில ஒன்று தண்ணி "

 

பொலிசார் "ஒமைகோட்"

 

 

 

பொலிசார் அவனிடம் ஒரு கேள்வி கேட்டனர் .நீ ஏன் அவங்களை எங்களிடம் காட்டிகொடுத்தாய் அவங்களும் உன்னுடய ஆட்கள் தானே...

 

"என‌க்கு தலைவர் பதவி தருவதாக சொல்லி கடைசியில் வேறு நபருக்கு கொடுத்துவிட்டார்கள்"

 

 

 

 

 

 

 

 

 

நம்மடை ஆக்கள் எப்பிடியெல்லாம் சுழிக்கிறாங்கள் :innocent:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.