Jump to content

யூடியூப் பகிர்வு


Recommended Posts

யூடியூப் பகிர்வு: இருவர் தெறிக்கும் 'நெருப்பு டா' நடனம்

 
 
neruppu_2904374h.jpg
 

'கபாலி' படத்தின் நெருப்புடா பாடல் டீஸரை ரசிகர்கள் நெட்டிசன்கள் என எல்லோரும் கொண்டாடினர். அதில் ட்ரீம் டீம் தனி ஸ்டைலில் நெருப்புடா பாடலுக்கு நடனத்தை வடிவமைத்து, யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி ஹிட்டடித்து வருகிறது.

இந்த நடனத்தை வடிவமைத்து, ஃபெர்பார்ம் செய்த ராக்ஸி ராஜேஷ், தளபதி சண்முகத்தின் அதிவேக துள்ளல் ஸ்டெப்ஸைப் பார்த்து நீங்கள் நிச்சயம் மிரள்வீர்கள். சிலிர்த்தெழுவீர்கள். உங்கள் கண்களை நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்ப்பீர்கள்.

நடையா? உடையா? நடனமா? எது பெஸ்ட்? என்று நீங்கள் ஒவ்வொன்றாய் உற்று கவனிக்கும் போது நீங்கள் ஆச்சர்யம் அடைவது உறுதி. அவர்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு இந்த காணொளியைக் காணலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-இருவர்-தெறிக்கும்-நெருப்பு-டா-நடனம்/article8760572.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 158
  • Created
  • Last Reply

யூடியூப் பகிர்வு: சென்னையில் 'நிஜ' கண்கட்டு வித்தை!

 
juggling_2910876h.jpg
 

வாழ்க்கையில் ஏதேனும் விஷயங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு ஓய்ந்து விட்டீர்களா? இதோ உங்களுக்காக நிஜமான ஏமாற்று வித்தை.

மாயாஜாலங்கள் குழந்தைகளின் விளையாட்டு; ஏமாற்றுக்காரர்களின் வித்தை என்றெல்லாம் எண்ணி ஒதுக்கி விடாதீர்கள். நாம் செய்திருக்காத விஷயங்களை மற்றவர்கள் செய்யும்போது அதன் மேல் தனி ஈர்ப்பு ஏற்படுகிறது.

உலக ஏமாற்று வித்தை தினம் கடந்த ஜூன் 18-ம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ’சென்னை வித்தைகள் சங்கம்’ சார்பில் சாகச வித்தைகள் நிகழ்த்தப்பட்டன. இதொயொட்டி எடுக்கப்பட்ட காணொளிப் பதிவு...

நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன். வழக்கமான வாழ்க்கையில், திடீரெனக் கிடைக்கும் இந்த மாதிரியான சின்ன சின்ன சந்தோஷங்கள்தானே நம்மை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சென்னையில்-நிஜ-கண்கட்டு-வித்தை/article8779478.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: முதல் பெண் போர் விமானிகள்!

 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அனைத்துத் துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கான உதாரணம் விமானிகள் பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகியோர்.

இந்திய விமானப்படையில் ஏராளமான பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் பெண்களை போர் விமானத்தில் பணியாற்றுவதற்கு கடந்த ஆண்டுதான் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்கான ஆரம்பகட்டத் தேர்வில் ஆறு பெண்கள் இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விமானப்படையின் கடினமான, சவால்மிக்க பயிற்சிகளை மேற்கொண்டு பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி என்ற மூவரும் போர் விமானிகளாகத் தேர்வாகியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இவர்கள்தான் போர்ப்படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்கள்.

கடந்த ஜூன் 18-ம் தேதி போர் விமானத்தில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுகோய், தேஜாஸ் உள்ளிட்ட ஜெட் போர் விமானங்களை இவர்கள் இயக்க உள்ளனர். ஐந்து ஆண்டுகள் பயிற்சி மற்றும் சோதனைகளுக்குப் பிறகே, பெண் போர் விமானிகள் அனைவரும் பணியாற்ற உள்ளனர்.

மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், ராணுவம் மற்றும் கடற்படை போர்ப்பிரிவுகளில் பெண்கள் பணிபுரிவதற்கான வரம்புகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-முதல்-பெண்-போர்-விமானிகள்/article8779656.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: பொரிவரை- தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியம்!

 
rock_2912008h.jpg
 

நீலகிரி மாவட்டத்தின் இதயப்பகுதி கோத்தகிரி. அங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது பொரிவரை பகுதி. அங்கே சுமார் கி.மு. 2000 வாக்கில் மனித வாழ்வியல் குறித்த வரலாற்று ஆதாரங்கள் பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பாறை ஓவியங்கள் அனைத்தும் 53 மீ நீளம், 15 மீ அகலத்தில் ஒரே பாறையில் வரையப்பட்டுள்ளன.

இதில் மனித உருவங்கள் நடனமாடும் வகையிலும், போர்க் கருவிகளுடன் சண்டையிடும் காட்சிகளும், யானை மீது போர்க் கருவிகளுடன் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. காட்டெருமைகள் நகர்வது போலவும், மனிதத்தலை குதிரை உடல் கொண்ட கடவுள் உருவம் நிற்பது போன்ற ஓவியங்களும் இருக்கின்றன. அத்தோடு குதிரை, குரங்கு, மாடு, காட்டுப் பன்றி, எருது, மான், ராட்சத பல்லி, மீன் போன்ற உருவங்களும் காணப்படுகின்றன.

இப்பாறைகளில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இடை கற்காலத்தில் மனிதன் கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த சான்றுகள் தெரியவருகின்றன. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இவற்றைப் பாதுகாப்பதற்காக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருப்பது போலத் தெரியவில்லை. பொதுமக்களின் கிறுக்கல்களால் ஓவியங்கள் பாழாகி வருகின்றன. நம் கண் முன்னாலேயே பாரம்பரிய ஓவியங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

பாறை ஓவியப் பயணக் காணொலி

 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பொரிவரை-தென்னிந்தியாவின்-மிகப்பெரிய-பாறை-ஓவியம்/article8784059.ece?ref=sliderNews

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: சம்பவ இடத்தில் நாம் இருந்தால்..?

 

 
hi_2912995f.jpg
 

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இரண்டாவது நடை மேடையில் சுவாதியுடன் ஒருவேளை நாமும் நின்றிருந்தால் என்ன செய்திருக்கலாம்? என்ன செய்திருக்க முடியும்? இதைத் தான் இந்த வீடியோ அலசுகிறது. | வீடியோ இணைப்பு கீழே |

சுவாதி கொலை சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகிவிட்டன. கொலையாளியை போலீஸ் நெருங்கிக்கொண்டே இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் சுவாதியை சுற்றி பின்னப்பட்ட விவாதங்களும் விமர்சனங்களும் யோசனைகளும் சர்ச்சைகளும் என பட்டியலை நீட்டிக்கொண்டே சொல்லும் அளவுக்கு கருத்துகள் குவிந்து வருகின்றன.

அவற்றில் ஒரு முக்கியமான விவாதப் பொருளாக இருப்பது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலையான போது நின்றிருந்த 30-க்கும் மேற்பட்டோர் மீதானது. அந்த 30-க்கும் மேற்பட்டோர் கொலையாளிக்கு சமமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படி சுவாதி கொலை பற்றிய பல்வேறு வாதவிவாதங்களுக்கு இடையே யூடியூபில் வெளியாகியிருக்கிறது ஒரு வீடியோ.

அன்றைய தினம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி அருகில் ஒருவேளை நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருக்கலாம். சட்டப்படி என்ன செய்திருக்கலாம், சக மனிதனுக்கு கண்ணெதிரில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்க உணர்வுபூர்வமாக எப்படி செயல்பட்டிருக்கலாம், கண நேரத்தில் நிகழ்ந்துவிடும் கொடூரத்தின்போது சமயோஜித புத்தியோடு எப்படி செயல்பட்டிருக்க முடியும் என்றெல்லாம் விவரித்துள்ளார் ஓர் இளைஞர்.

ஒரு காகம் இறந்து கிடந்தால்கூட தனியாக விட்டுவிடாமல் காக்கைகள் கூடுகின்றன. ஆனால் என் மகள் கொலை செய்யப்படும்போது அங்கிருந்த பயணிகள் வாய்மூடி அமைதியாக இருந்துவிட்டனர். உங்களது தாய் அல்லது சகோதரிக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? மக்களின் மனநிலை மாற வேண்டும் என சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சமூகத்தின் முன் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியத்தை இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று சிபிஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன், நம் இளைய தலைமுறையினருக்கு ஏட்டுக் கல்வியைத் தாண்டியும் தேவைப்படும் கல்வி பற்றி பேசியிருக்கிறார்.

சமூகத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து கொண்டு கொலையாளியை காவல்துறை இன்னும் பிடிக்காத சூழலில் சர்ச்சைக் கருத்தை தெரிவித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனை உள்ளடக்கிய அதே சமூகத்திலிருந்து இளைஞர் ஒருவர் யதார்த்தத்தை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் வீடியோ உங்கள் பார்வைக்காக..

இந்த வீடியோவை பார்த்த பிறகாவாது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அன்றைய தினம் நின்றிருந்த பயணிகள் யாரேனும் அவர்கள் வசம் ஏதாவது சாட்சியம் இருந்தால் அதை போலீஸில் ஒப்படைக்கட்டும்.

இனியாவது பொது இடங்களில் சுவாதியோ, சங்கரோ படுகொலை செய்யப்படாமல் தடுக்க தன்னால் என்ன முடியுமோ அதை செய்யட்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சம்பவ-இடத்தில்-நாம்-இருந்தால்/article8787977.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: கயிற்றுப் பால நடை நாகரிகம்!

 
 
rope_2911949h.jpg
 

மகாராஷ்டிர கிராமமொன்றின் மக்கள் ஒற்றைக் கயிற்றால் ஆன பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேற்கு மகாராஷ்டிரத்தின் ஒரு மூலையில் இருக்கிறது பெண்டாஸ் கிராமம். இங்கு வசிக்கும் மக்கள், பக்கத்து கிராமத்துக்குச் சென்றால் மட்டுமே அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஆனால், அங்கே செல்ல அவர்களுக்கு எளிய வழி உல்ஹாஸ் நதியைக் கடந்து செல்வதுதான். ஆனால் அவர்கள் எப்படிக் கடக்கிறார்கள் தெரியுமா? எந்த விதப் பாதுகாப்பும் பிடிமானமும் இல்லாத கயிற்றின் மூலம்.

மருத்துவமனை, சந்தை, பள்ளி, கல்லூரி, ரயில்நிலையம் உள்ளிட்ட அனைத்துக்குமே பக்கத்து கிராமத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு செல்ல 30 நிமிடங்கள் நடக்க வேண்டும் அல்லது உல்ஹாஸ் நதியைக் கடக்க வேண்டும்.

அதனால் குறைந்த தூரத்தில் அடிப்படை வசதிகளைப் பெறும் நோக்கில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் இந்த கயிற்றுப் பாலத்தை உருவாக்கி இருக்கின்றனர். கான்க்ரீட் பாலம் வேண்டும் என்ற அவர்களின் வேண்டுகோள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

இன்றும் சுமார் 100 பேர் இந்த கயிற்றுப் பாலத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். எந்த விதப் பாதுகாப்போ, பிடிமானமோ, வலைகளோ இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது அந்த கயிற்றுப்பாலம். மழைக்காலத்தில் இந்தப் பயணம் இன்னும் மோசமாகி விடுகிறது.

கான்க்ரீட் பாலம் வேண்டும் என்று 13 வருடங்களாக கோரிக்கை விடுத்தபடியே இருக்கின்றனர் பெண்டாஸ் கிராமத்தினர். உள்ளூர் அரசியல்வாதிகள் 2017-ல் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று வாக்களித்திருக்கின்றனர். அதுவரை அவர்களின் நிலை எப்படி இருக்குப் போகிறதோ?

காணொளியைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கயிற்றுப்-பால-நடை-நாகரிகம்/article8783902.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு!

 
 
bday_2919695f.jpg
 

கேண்டிலை ஊதி அணைத்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மேற்கத்திய கலாச்சாரம்தான். ஆனால் இன்று தமிழ் மண்ணோடும் பிறந்தநாள் கொண்டாட்ட கலாச்சாரம் கலந்துவிட்டது. நம்முள் ஆழ்ந்துவிட்டது இந்த பண்பாட்டை தமிழ் மனத்தோடு கொண்டாட தற்போது ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆம், பிறந்தநாள் வாழ்த்துப் பாடலையாவது இனி தமிழில் பாடுவோம்.

தமிழில்தான் பிறந்தநாள் பாடல் இருக்கிறதே என்று உங்கள் மனம் நினைவுகளை அசை போட்டால் அது சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட "பிறந்தநாள் இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே நாம் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.. " என்ற பாடலுக்கு இட்டுச் செல்லும். உண்மைதான் அதுவும் அழகான பாடலே. ஆனால், தற்போதையை தலைமுறைக்கு ஏற்ற இசையமைப்புடன் தமிழில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பற்றாக்குறையைப் போக்குகிறது அறிவுமதியின் தமிழ் தித்திக்கும் வரிகளாலும், அரோல் கரோலியில் இனிய இசையாலும், உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் உயிர் தொடும் குரலாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்.

என்ன பாடலைக் கேட்டுவிட்டீர்களா. இனி உங்கள் வீட்டு பர்த்டே பங்க்‌ஷனில் சர்க்கரைத் தமிழ் அள்ளி பிறந்தநாள் வாழ்த்துப் பாடுங்கள்.

பாடல் வரிகளை மனனம் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்பதற்காக கீழே வரிகள்:

நீண்ட நீண்ட காலம்

நீ நீடு வாழ வேண்டும்

நீண்ட நீண்ட காலம்

நீ நீடு வாழ வேண்டும்

வானம் தீண்டும் தூரம்

வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்

பண்பு வேண்டும் பணிவு வேண்டும்

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை

நிலவுத் தாளில் எழத வேண்டும்

சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துகிறோம் ...

பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

-கவிஞர் அறிவுமதி

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சர்க்கரைத்-தமிழில்-பிறந்தநாள்-வாழ்த்து-பாட்டு/article8807163.ece

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: 'பஞ்ச தாயம்பகம்'- கேரளத்தின்

இசைமுகம்!

 
 
kerala_2920841f.jpg
 

கேரளத்தின் பாரம்பரிய தாள வாத்திய இசைக் கருவி 'மிழவு'. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பானையின் மேல், இறுக்க மூடப்பட்ட காப்பர் ட்ரம்களால் ஆனது. இது பாரம்பரியக் கலைகளில் முக்கிய பின்னணி வாத்தியமாக இசைக்கப்படுகிறது.

கேரளாவின் பழமையான நாடக வடிவம் 'கூடியாட்டம்'. இதில் 'மிழவு' கருவி பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் 'மிழவு' மூலம் தனியாக இசைக்கும் வடிவத்தை 'தாயம்பகம்' என்கின்றனர். இக்கலையை முதலில் குரு வாசிக்க, அவரைப் பின்பற்றி மற்றவர்கள் வாசிப்பர்.

'மிழவு' கலையில் இருந்து 'தாயம்பகம்' கலையை உருவாக்கிய பெருமைக்கு உரியவர் பி.கே. நாராயணன் நம்பியார். 'மிழவு' என்பது வேகத்தோடு கூடிய தனிநபரின் செயல்திறனைப் பொருத்து அமைகிறது.

கேரளத்தின் இரிஞ்சலகுடா பகுதி உள்ளூர் திரையரங்குகளில், ஐந்து மிழவு கலைஞர்களைக் கொண்டு 'பஞ்ச தாயம்பகம்' இசைக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தின் இசையொளியைக் காண:

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரம்ஜான் திருநாள்!

 

 
 
ramzan_2923285f.jpg
 

அதிகாலை இரண்டரை மணி. அடிக்கும் முரசொலி காஷ்மீர் பள்ளத்தாக்கையே அசைத்துவிட்டுச் செல்கிறது. அங்கே காஷ்மீரிகள் இஸ்லாமியர்களோடு இணைந்து ரம்ஜானைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய காலண்டரின் ஒன்பதாவது மாதம், ரம்ஜான்.

சில மணித்துளிகளில் ரம்ஜான் முரசொலிப்பவர்கள், தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதை மக்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்த வழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நூற்றாண்டு காலப் பழமையானது. அலாரத்தையும், செல்பேசியையும் தவிர்த்த முறை இது. முரசு அறிவிப்பாளர்கள் இது தஹஜ்ஜுத் (தூங்கியெழுந்து தொழுவது) நிகழ்வுக்கான நேரம் என்கிறார்கள்.

பொதுவாக தொழுகையின்போது, இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று விட முடியாது. அலுவலகங்கள், வங்கிகள், சந்தைகளில் தொழுவதற்காக தனியாக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரம்ஜான் மாதத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவுப் பயணத்துக்கு அனுமதி இல்லை. அங்குள்ள பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

நோன்பு இருப்பவர்களுக்கு சூரியன் சாயும்போது பசி எழுகிறது. இஸ்லாமிய சடங்குகளின்படி, இஸ்லாமியர்களின் நோன்பு ஒரு வாய் தண்ணீராலும், சில பேரிச்சம் பழங்களாலும் முடித்து வைக்கப்படுகிறது. காஷ்மீரில் தர்பூசணி, இனிப்புகள் மற்றும் மூலிகை நீரைக் கொண்டு நோன்பை முடிக்கின்றனர். இஃப்தார் முடிந்த பிறகு இரவு முழுவதும் குரான் ஓதப்படுகிறது.

இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகளில் ஒன்று ரம்ஜானின்போது நோன்பு இருப்பது. ரம்ஜானுக்குப் பிறகான மூன்று நாட்கள் கொண்டாட்டங்களில் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் குடும்பமாக ஒன்று கூடுகின்றனர்.

காணொளியைக் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-காஷ்மீர்-பள்ளத்தாக்கில்-ரம்ஜான்-திருநாள்/article8819406.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: 'செஃல்பி' மோக விபரீதம் சொல்லும் குறும்படம்

 
 
selfi_short_movie_2928481f.jpg
 

சுயமோக செல்ஃபிக்களின் ஆபத்தான மரணங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்து குறித்து ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் தெரிந்துதான் இருக்கும் என்பதையும் நிச்சயமாக சொல்லமுடியவில்லை. ஒரு விபரீதம் வரும்போது அதைப் புரிந்துகொள்ள அப்போது நம் உயிர் நம் கையில் இருக்காது என்பது கசப்பான உண்மை.

ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி, அணைக்கட்டு உச்சியில் செஃபி, மலைமுகட்டில் நின்று செல்ஃபி, சிங்கத்துடன் செல்ஃபி, போன்றவற்றை கேட்பதற்கே எரிச்சலாக இருக்கும். ஆனால், இடம், நேரம், ஆர்வம் போன்றவற்றை கருத்தில்கொண்டு இச்செய்திகளை ஓரளவு புரிந்துகொள்ளமுடியும். ஆனால் விடலைத்தனமான பதின்பருவத்தைக் கடந்துகொண்டிருக்கும் இளசுகளின் நிலைமைதான் பலநேரங்களில் புரிந்துகொள்ளமுடியவில்லை.

'செல்ஃபி' குறும்படம் இவற்றின் பலஅம்சங்களையும் விளக்கமுற்படவில்லை. ஆனால் ஆபத்தான இடத்துக்கு ஒரு பிரச்சனை நகர்ந்து செல்லும் திசையை சுட்டிக்காட்டியுள்ளது. மாலைப்பொழுதில் அயர்வாக வீடுதிரும்பினாலும் வரும் குறுஞ்செய்திகளும் பதில்களும் மும்முரமாக அதனால் உற்சாகம் அடையும் பெண்ணைப் பற்றிய குறும்படம் இது.

குறுஞ்செய்திகளின் ஊடே அவ்வப்போது செல்ஃபி படங்களையும் அனுப்புவது அவளுக்கு வழக்கமாகிவிடுகிறது. ''காலைல ஜிம்முக்குப் போகணும் நாளைக்குப் பாக்கலாம்'' என்று கடைசியாக ஒரு செய்தியையும் அனுப்பிவிட்டு குளியலறைக்கு செல்கிறாள். அப்படி சென்றவள் பின் எதற்காக வேகமாக வந்து ஸ்மார்ட்போனை திரும்பவும் எடுத்துச் செல்ல வேண்டும்.

பரவசமும் படபடப்பும் பதட்டமும் கொண்டு ஸ்மார்ட்மோன் செல்ஃபி மோகத்தில் அலைக்கழியும் நிஷா சுப்பிரமணியன் நடிப்பு குறும்படத்தின் செய்தியை உளவாங்கிக்கொள்ள பெருமளவில் உதவுகிறது.

இக்கால இளைஞர்களின் மனநிலையும் அவர்களது போக்கையும் சுட்டிக்காட்டுவதற்காக, 10 நிமிடத்தில் ஒரு நல்ல குறும்படத்தை தந்துள்ளார் இயக்குநர் யோகேஷ். இது ஒரு சிறு உதாரணம் என்பது போல இயக்கியுள்ளார். அப்பெண் ஜிம்மிலிருந்து தனது காரை எடுத்துச்செல்லும் அந்த மலேஷிய வீதிகளின் அழகைக் காட்டியுள்ள ராஜ்குமாரின் கேமரா கோணம் பொறாமையாக இருக்கிறது. யோகேஷ்ஷின் இக்குறும்பட இயக்கத்திற்கு துணைநிற்கும் தினேஷ்ஷின் இசையும் எடிட்டிங்கும் சிறப்பாக பொருந்தியுள்ளது. 3சி கிரியேஷன்ஸ் சார்பாக பணியாற்றிய மொத்த குறுபடக் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

செல்ஃபி குறும்படத்தைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-செல்பி-மோக-விபரீதம்-சொல்லும்-குறும்படம்/article8835087.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: கண்ணீர்விட்ட பிரான்ஸ் ரசிகர்.. ஆறுதல் கூறிய போர்ச்சுக்கல் சிறுவன்!

 
por_2929478h.jpg
 

30 நாட்கள், 50 போட்டிகள், 107 கோல்கள் என்று யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

ஆட்டம் ஆரம்பித்த அரை மணிக்குள்ளாகவே போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர், கேப்டன் ரொனால்டோ காயத்தின் காரணமாக கண்ணீருடன் வெளியேறினார். ஆனாலும் பதிலி வீரரால் அடிக்கப்பட்ட அரிய கோலால் போர்ச்சுக்கல் சாதனை படைத்தது. இதனால் 3-வது முறையாக பட்டம் வெல்லும் பிரான்ஸ் அணியின் கனவு கலைந்தது. இந்த வெற்றி போர்ச்சுகல் கால்பந்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பாரீஸில் நடைபெற்ற இந்த போட்டியை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்தனர். போட்டியின் முடிவால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் ரசிகர் ஒருவர் அழத் தொடங்கினார். தன் நாடு கோப்பையைப் பெற்றதால் மகிழ்ச்சியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தான் போர்ச்சுக்கல் சிறுவன். அந்த நேரத்தில் சிறுவன் கண்ணீர் விட்டுக் கதறிய பிரான்ஸ் ரசிகரைக் காண நேர்ந்தது.

அவரின் அருகில் சென்று கைகுலுக்கிய சிறுவன், அழுகும் ரசிகரின் தோளைப் பற்றி ஆறுதல் சொல்கிறான். பதிலுக்கு போர்ச்சுக்கல் சிறுவனின் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிடுகிறார் பிரான்ஸ் ரசிகர். மீண்டும் ஒருமுறை இருவரும் ஆதரவாகக் கட்டியணைத்துக் கொள்கின்றனர்.

வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத இந்தக் காட்சியின் காணொளியை நீங்களும் காணுங்களேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கண்ணீர்விட்ட-பிரான்ஸ்-ரசிகர்-ஆறுதல்-கூறிய-போர்ச்சுக்கல்-சிறுவன்/article8839410.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: சேதமில்லாமல் தேன் எடுக்க இயற்கை வழி!

 
honey_2928566f.jpg
 

பெங்களூரு இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர் பொன்னண்ணா பாதுகாப்பான முறையில் கூடுகளில் இருந்து தேனெடுக்கும் வழிமுறையைக் கையாள்கிறார். எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் அவருக்கு தேவைப்படவில்லை. ஒரு துணியில் தீயைக் கொளுத்தி புகையை ஏற்படுத்துகிறார்.

பல்வேறு விதமான இலைகளைக் கொண்டு தயாரான மூலிகைக் கலவையால் ஆகியிருக்கிறது அந்தத் துணி. வெளிவரும் புகையை ஒரு கருவியைக்கொண்டு கூட்டின் மேல் படுமாறு பாய்ச்சுகிறார். அதன் மூலம், கூட்டில் இருந்து தேனீக்களை விரட்ட முற்படுகிறார்.

தேனீக்களும் மெல்ல மெல்ல கூட்டை விட்டு விலக ஆரம்பிக்கின்றன. வெற்றுக் கைகளாலேயே கூட்டை நெருங்குகிறார். பின்னர் கூடு எடுக்கப்பட்டு தேன் பிழியப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு பசையைத் தடவுபவர், அந்த இடத்தில் புதிய கூடு உருவாவதைத் தடுக்கிறார். இவை அனைத்துக்கும் அதிகபட்சம் பத்து நிமிடங்களே ஆகின்றன.

இந்த முறை பாரம்பரிய தேன் எடுக்கும் முறையைக் காட்டிலும் நவீனமானது. இம்முறையில் சுமார் 20 சதவீதத்துக்கும் குறைவான தேனீக்களே இறக்கின்றன என்றும் பொன்னண்ணா கூறுகிறார்.

தேன் எடுக்கும் காணொளியைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சேதமில்லாமல்-தேன்-எடுக்க-இயற்கை-வழி/article8835335.ece?homepage=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: சுவையான முறையில் தயாராகும் காஞ்சிபுரம் டம்ளர் இட்லி

 
 
a_2933793f.jpg
 

கோயில் நகரமான காஞ்சிபுரம், அதன் நெடிதுயர்ந்த கோபுரங்களுக்காகவும், பிரமிடுகளைப் போன்ற வாயில்களைக் கொண்ட வளைவுகளுக்காகவும் அதிகமாக அறியப்படுகிறது. நல்ல விஷயம். அதே நேரத்தில் சூடான கோபுரங்களை ஸ்டீல் டம்ளர்களில் அடைத்திருப்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

புரியவில்லையா, காஞ்சிபுரத்தில் சிறப்பாகத் தயாராகும் டம்ளர் இட்லிகள்தான் அவை. கோபுரத்தின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் கோயில் இட்லிக்கும், நிஜ கோபுரத்தின் வடிவத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இந்த இட்லியைத் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 4 - 5 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் அருகில் இருக்கும் தனியார் உணவு விடுதியில் இது அன்றாட மெனுவில் இடம்பெறுகிறது. இந்த கோவில் இட்லி வேறு வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டாலும், இட்லி பொடி மற்றும் புதினா சட்னியோடுதான் அதிகம் பரிமாறப்படுகிறது.

செய்முறை

கெட்டியாக அரைக்கப்பட்ட இட்லி மாவை, ஸ்டீல் பக்கெட்டில் ஊற்றுகின்றனர். புளிப்பதற்காக அதை இரவு முழுக்கவோ அல்லது குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கோ அப்படியே வைக்கின்றனர். வழக்கமாக அரைக்கப் பயன்படுத்தும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றோடு தயிர், சோடா உப்பு, கறிவேப்பிலை, நெய், முந்திரி ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

கவிழ்த்தி வைக்கப்பட்டுள்ள டம்ளர்களை எடுத்து அவற்றில் நெய் பூசுகின்றனர். பின்னர் தயார் நிலையிலுள்ள மாவை டம்ளர்களில் ஊற்றுகின்றனர். பின்னர் அவற்றை எடுத்து நீராவியில் வேக வைக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மூடியைத் திறந்தால் சூடு பறக்க இட்லிகள் வெந்திருக்கின்றன. சூடான, பஞ்சு போன்ற கோபுரங்கள் தங்களைச் சாப்பிடச் சொல்லிக் காத்திருக்கின்றன. அந்த உணவு விடுதியில் தினந்தோறும் சுமார் 100 ப்ளேட் இட்லிகள் விற்பனையாகின்றன.

செய்வதைப் பார்த்தால் கடினமாகத் தோன்றுகிறதா? இருக்கலாம், ஆனால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைத்தான் சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டவர்களும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். செய்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்ணுக்கும் வயிற்றுக்கும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது இந்த காஞ்சிபுரம் டம்ளர் இட்லி.

கண்ணுக்கு விருந்தாகும் காஞ்சிபுரம் இட்லியைக் காண

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-சுவையான-முறையில்-தயாராகும்-காஞ்சிபுரம்-டம்ளர்-இட்லி/article8855360.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: விசாகப்பட்டிணம் கடற்கரையும் பதுங்கு குழி ரகசியமும்

 

 
sea_2931956h.jpg
 

பற்பல ஆண்டுகளாக ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது விசாகப்பட்டிணம் கடற்கரை.

இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகள், அப்போது 'மாத்திரை பெட்டிகள்' (PillBoxes) என்று அழைக்கப்பட்டன. இந்த கான்க்ரீட் கோட்டைகள், கடற்கரையில் பாதுகாப்புக்கான வளையங்களாக உருவாக்கப்பட்டன. எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், கடற்கரையின் குறுக்கே இவை அமைக்கப்பட்டிருந்தன.

இவை சதுரப் பெட்டிகள் போல இப்போது அடுக்கடுக்காகக் காட்சியளிக்கின்றன. ஆனால் இந்த போர் சின்னங்கள் அனைத்தும் பல வருடங்களாக வெளியே தெரியாமல், கடற்கரையாலும் மணலாலும் மூடப்பட்டிருந்தன. விசாகப் பட்டிணக் கடற்கரையில் இருந்த கடைசி பதுங்கு குழி, 1959-ம் ஆண்டு வாக்கில் மறைந்து போனது.

ஆனால் இப்போது கடற்கரை அரிப்பாலும், புயல், சூறாவளிகளாலும் இவை பூமிக்கு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. 2014-ல் ஏற்பட்ட ஹுட் ஹுட் புயல், இந்த இடத்தையே அழித்துள்ளது. அப்போது பதுங்கு குழிகளில் ஒன்று, ஜாலரிபேட்டா என்ற நிலப் பகுதியை வந்தடைந்துள்ளது.

இந்த அமைப்புகள் யாவும், நிரந்தர நினைவுச் சின்னங்களாகவும், 1940-களின் கருப்பு நாட்களை அமைதியாக நினைவூட்டுபவை ஆகவும் இருக்கின்றன.

கட்டுரை தொடர்பான காணொளியைக் காண

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-விசாகப்பட்டிணம்-கடற்கரையும்-பதுங்கு-குழி-ரகசியமும்/article8849594.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யூடியூப் பகிர்வு: மிகவும் யூஸ்ஃபுல்லான 'யூஸ்லெஸ்' குறும்படம்

 
shortfilm_2946033f.jpg
 

'குறும்படமா! அட!' என்று வியந்த திரைஆர்வலர்களே விலகிச் செல்லும் அளவுக்கு இன்று காதல் குறும்படங்களின் வருகை எக்கச்சக்கம். இதைச் சொல்வதால் காதலே தவறு என்று அர்த்தமில்லை. அத்தகைய குறும்படங்கள் சொல்ல வருவதென்ன என்பதுதான் நம் கேள்வி.

''தமிழ் சினிமா ஃபார்முலாவை இதில் மினியேச்சர்தான் செய்துள்ளேன். வாய்ப்புகிடைத்தால் ப்ளாக் பஸ்டர் சினிமாவையே தருவேன்'' என்பதுதானே அத்தகைய குறும்பட இயக்குநர்களின் பதில்.வெற்றிப்பட இயக்குநர்களை திருப்தி செய்து அவர்களிடம் சேர்வதற்காகவோ, படத் தயாரிப்பாளர்களை கவர்வதற்காகவோ வரும் புற்றீசல் பெருக்கமாகவே இவற்றைப் பார்க்கவேண்டியுள்ளது.

மலைமலையாய் வரும் மோசமான குறும்படங்களுக்கு நடுவே அலைஅலையாய் பெருகிவரும் நல்ல படங்களை தவற விட்டுவிடுவோமோ என்று தவிப்பும் தேடல்மிக்க ரசிகனுக்கு ஏற்படுவது இயற்கையே.

அதிலும், ஞானம், வள்ளி, ராகவன், முஸ்டாக் அஹ்மத். சரண், சூர்யா, லலித், விஷால், அசோக், நவீன் கிஷோர், கோவர்த்தன், சேத்தன் சர்மா, ஸ்ரீகிருஷ்ணா, குஹா கார்த்திகேயன், ராஜ்குமார், ஹரி ரகுபதி, விஷ்ணு உள்ளிட்டவர்கள் சிறப்பாக பங்கேற்று சிறகு விரித்துப் பறக்கும் useless போன்ற சில நல்லப் படங்களையும் தவறிவிட்டுவிடும் இழப்புகளும் அதிகம்.

சரண். ஜே அவர்களின் மிகச் சரியான ஒளிப்பதிவில், ராகவன் எனும் இளம் இயக்குநரின் useless குறும்படம் உண்மையில் சமூகத்திற்கு சொல்லும் செய்தி மிகமிக யூஸ்ஃபுல் எனலாம். பத்து நிமிடத்திற்குள்தான் எத்தனை கதைகள். அவசியமிக்க எத்தனை கட் ஷாட்கள்... இப்படத்தின் வெற்றிக்கு எடிடிங்கிற்கு முக்கியப் பங்கு உண்டு.

தனது பணியைச் செய்துவிட்டு பெண்மணி பார்க்கும் உச்சிவெயிலை சூரியனின் கதிர்கள் நம் கண்களைச் கூசவைக்கும் அந்தக் கடைசிக் காட்சி ஒளிப்பதிவில்தான் எவ்வளவு அர்த்தங்கள்.

கல்லூரி வாழ்வை கடந்துகொண்டிருப்பவர்கள், தங்கள் தவறை உணராமல் இளமைத் துடிப்பில் கட்டும் எந்த லட்சியக் கனவுப் பந்தலும் நிலைக்காது என்ற செய்தியை சின்னஞ்சிறு படத்தில் அழகாக உணர்த்திய பொறுப்புமிக்க இயக்குநர் ராகவனுக்கு நம் சல்யூட். இவரைப் போன்றவர்கள் பெரிய திரைக்கு தாராளமாக வரலாம்... வரவேண்டும்.

useless குறும்படத்தைக் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மிகவும்-யூஸ்புல்லான-யூஸ்லெஸ்-குறும்படம்/article8897364.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: கொசுக்களுக்கு எதிராக ஒரு பசுமைப் போர்!

rain_2948023f.jpg
 

மழைக்காலம் எப்போதும் மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தர வல்லது. ஆனால் அக்காலங்களில் மகிழ்ச்சி நீடித்துக்கொண்டே இருக்கிறதா? மழைக்காலத்தில் அதிகமாகப் பெருகும் கொசுக்கள் உருவாக்கும் ஆட்கொல்லி நோய்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.

புகையை செலுத்துவது, பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது உள்ளிட்ட கொசுக்களுக்கு எதிரான வழக்கமான நடைமுறைகளாக இருக்கின்றன. அவற்றைத் தாண்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சில வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது டெல்லி மாநகராட்சி.

நகரத்தை ஒட்டிய யமுனை நதியில் வளர்ந்து வரும் தாவரங்கள் அனைத்தும், கொசுக்களின் விளை நிலமாக இருக்கின்றன. அதனால் தண்ணீரில் உருவாகும் லார்வாக்களை (கொசுக்களின் ஆரம்பநிலை) வலைகளைக் கொண்டு பிரித்தெடுக்கின்றனர். பின்னர் அவற்றை ஒரு மூடப்பட்ட கலனில் சேகரிக்கின்றனர்.

அதற்குப் பிறகு கொசுக்கள் கொல்லப்பட்டு விடுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியால் மாசுக்களில் இருந்து யமுனை நதியைப் பாதுகாக்கவும் முடிகிறது.

யமுனையில் இருந்து எடுக்கப்பட்ட லார்வாக்களில் பெரும்பாலானவை க்யூலெக்ஸ் வகையைச் சேர்ந்ததாக இருக்கின்றன. அவை நோய்களை அதிகளவில் பரப்புபவையாக இல்லாவிட்டாலும், தொல்லைகள் தரக்கூடியவைதான். அதே நேரத்தில் டெங்கு மற்றும் மலேரியாவை உண்டாக்கும் கொசுக்கள், அருகிலிருக்கும் தூய்மையான நீரிலும் பரவுகின்றன.

இதனால் இந்த முறை, பெரிய அளவில் நாள்பட்ட தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்றாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொசுக்களைப் போக்க உதவும் இந்த முறை நல்ல ஆரம்பம்.

காணொளியைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கொசுக்களுக்கு-எதிராக-ஒரு-பசுமைப்-போர்/article8906223.ece

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: கிரஹாம் கூறும் சாலை பாதுகாப்பு உண்மைகள்!

 

 
graham_2952683f.jpg
 

கிரஹாமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்தானே என்கிறீர்களா, இல்லை. இந்த கிரஹாம் விரிந்த தலையும், காணாமல் போன கழுத்தும், தொங்கிய மார்புப்பகுதியும் கொண்டவர். அவரின் உருவத்தை நீங்கள் பார்த்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். ஆனால் இவர் மனிதன் அல்ல. ஆஸ்திரேலியக் கலைஞர் ஒருவரால் செதுக்கப்பட்ட விநோதமான மனித உருவம்.

அதிக விபத்துகள் நிகழ்கின்ற ஆஸ்திரேலியாவில், சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக கிரஹாம் உருவாக்கப்பட்டிருக்கிறார். அங்குள்ள மக்களிடையே சாலைகளில் பாதுகாப்பு குறித்த அக்கறை குறைந்து வருவதாகவும் வேகம் என்பது அதிகமாகி விட்டதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதிவேகம் கட்டுப்பாட்டை இழக்கவைத்து விபத்தை ஏற்படுத்துகிறது என்றும் சொல்கின்றனர். அதனைக் குறைக்க கிரஹாம் நிச்சயம் உதவுவார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

விநோத உருவத்தின் காரணம்

விபத்து ஏற்பட்டால் கபாலம் முன்னோக்கி நகர்ந்துவிடும். உடல் தூக்கி வீசப்படும்போது பின்மண்டை நொறுங்கும். கழுத்துப் பகுதி காணாமல் போகும். இந்த காரணிகளால் கிரஹாம் உருவம் விபத்துக்குப் பிறகான அம்சங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

யாராவது விபத்தில் சிக்கி உயிர் பிழைக்க நேர்ந்தால், கிரஹாமைப் போலத்தான் இருப்பார்கள் என்பதைச் சொல்வதற்காகவே கிரஹாமை வடிவமைத்திருக்கின்றனர். கிரஹாம் கண்ணாடி இழைகள், சிலிக்கன், பிசின் மற்றும் மனித முடியைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

''சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டும்போதும் சாலைகளைக் கடக்கும்போதும் கிரஹாம் கண்முன் வந்து, தவறு செய்யவிடாமல் பாதுகாப்பார். ஆஸ்திரேலியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக கிரஹாம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்'' என்கிறார் ராயல் மெல்போர்ன் மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் கிறிஸ்டியன் கென்ஃபீல்ட்.

கிரஹாமை நீங்களும் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கிரஹாம்-கூறும்-சாலை-பாதுகாப்பு-உண்மைகள்/article8921690.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: ஆப்கன் போரின் வலி சொல்லும் 'ஏ ரே ஆஃப் ஹோப்' ஆவணப்படம்

 

 
hope_2958808f.jpg
 

ஆவணப்படங்கள் பார்ப்பது என்றாலே, பாகற்காய் பச்சடியை பச்சைமிளகாய் சேர்த்துவைத்து கடித்தது போன்ற நிலைதான். உண்மை கசக்கும், அதே நேரத்தில் உரைக்கவும் செய்யும். இதனாலேயே திரைப்படங்களை ரசிக்கும் பலரும் ஆவணப்படங்கள் பக்கம் தலைகூட வைத்துப் படுப்பதில்லை.

ஆனால் உலகின் சிறந்த ஆவணப் பட இயக்குநர்களில் முக்கியமானவர்களான ராபர்ட் பிளஹார்டி, லாரென் கிரீன்ஃபீல்டு, ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்களின் ஆவணப்படங்கள் பார்வையாளரை ஈர்க்கும்விதம் திரைப்படங்களைவிட அழுத்தமும் அடர்த்தியும் மிக்கவை.

'எ ரே ஆஃப் ஹோப்' ஆவணப்படம் பரந்துவிரிந்த மலைகள் சூழ்ந்த ஆப்கானிஸ்தான் நிலப்பரப்புகளைக் காட்டத் தொடங்குகிறது. இந்நாட்டின் தலைமுறைகள் பலவும் வன்முறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகி அரை நூற்றாண்டை கடந்ததைச் சொல்லிச் செல்கிறது. இந்தத் தொடக்கமே ஆவணப்படத்தின் உள்ளடக்கம் குறித்த எதிர்பார்ப்பைக் கிளறிவிடுகிறது.

நேரடியாக போர்ச்சூழலில் சிக்கிய மக்களைப் பற்றி பேசாமல் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்மீது அக்கறைகொண்ட டேபிஷ் தொண்டு நிறுவன அமைப்பின் சேவையைப் பற்றி இப்படம் பேசுகிறது. அதனோடு மக்கள் எவ்வகையான இன்னல்களுக்குள் எல்லாம் சிக்கித் தவித்துவருகிறார்கள் என்பதையும் பார்க்கமுடிகிறது.

ஆப்கானிஸ்தானில் திருமணத்தின்போது பெண்ணின் விருப்பமே கேட்கப்படுவதில்லை என்கிறார் சோஹ்ரா. அதீத குடிப்பழக்கம் கொண்ட தன் கணவரது தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி நரகத்தில் சிக்கித்தவிக்கிறார், கபீசா பகுதியிலிருந்து போர்பாதிப்பினால் காபூல் ஷோர் பஸாருக்கு இடம்பெயர்ந்த அலியா. போர்ச்சூழலில் சிக்கிய கர்ப்பிணிகள் நிலையோ இன்னும் மோசம். தகுந்த அரவணைப்பும் மருத்துவ உதவியும் பெறவில்லையென்றால் இறப்புதான் முடிவு.

போர் எனும் அரக்கனால் பெண்கள் படும்வேதனைகள் அதிகம். பெண்கள் மட்டுமின்றி சமூக, அரசியல், குடும்ப சண்டைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலர் திறன்குறைபாடு கொண்டவர்களாகவும் வளர்கிறார்கள். சரி அரசாங்கமே போரில் நிலைகுலைந்துபோயுள்ள நிலையில் யார் என்ன செய்ய முடியும்?

மக்களுக்குத் தேவையானதை அரசாங்கம் செய்யாதபோது, அங்கு தொண்டுநிறுவனங்கள் களம் இறங்கிவிடுகின்றன. இதனால் அவர்களுக்கு லாபமோ ஆதாயமோ அது நம் கவலையில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயம் தகுந்த உதவிகளும் நிவாரணங்களையும் கிடைக்கின்றதே அதுதான் முக்கியம்.

இந்த ஆவணப் படத்தை எடுத்ததுகூட 'டேபிஷ்' என்ற தன்னார்வ அமைப்புதான். கபீசா பகுதியிலிருந்து போர்பாதிப்பினால் காபூல் ஷோர் பஸாருக்கு இடம்பெயர்ந்த அலியா என்ற பெண்மணி டேபிஷின் உதவியோடு இன்று ஒரு பள்ளி ஆசிரியை ஆகியிருக்கிறார்.

ஒரு காலத்தில் பேரீச்சை உள்ளிட்ட உலர் பழவிளைச்சலுக்கு புகழ்பெற்ற தேசம் இன்று வெடிமருந்துகளின் ரசாயனப் புகை மலிந்த பூமியாகிவிட்டது. இந்தச் சூழலில் எத்தகைய பிரச்சனைகளோடு மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் அறிந்துகொள்ளமுடிகிறது.

ஸ்டீவ்ஸ் ரோட்ரிகிவ்ஸ் சிறந்த ஒளிப்பதிவில், ஐஷ்வர் கிருஷ்ணனின் கவித்துவமான படத்தொகுப்பில், கிறிஸ்டோபர் ராஜாவின் நம்பிக்கையூட்டும் இசையில் வனிதா நாயரின் கம்பீரமான பின்னணி குரலில் மட்டுமில்லை இன்னும் பலரது ஒத்துழைப்பிலும் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் நம்மை கூர்ந்து கவனிக்க வைக்கிறது.

சுதந்திரம், வளர்ச்சி, வன்முறை இல்லாத அன்பு என ஆப்கன் மக்கள் ஏங்கும் வாழ்வை கிழக்கின் ஒளிக்கதிர்கள் வீசும் நாளைநோக்கி நகர்த்த விரும்பும் 'எ ரே ஆஃப் ரோப்' ஆவணப்படம் தவிர்க்கமுடியாத இடத்தில் உள்ளது.

குறும்படத்தைக் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-ஆப்கன்-போரின்-வலி-சொல்லும்-ஏ-ரே-ஆப்-ஹோப்-ஆவணப்படம்/article8943408.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: தெலங்கானாவின் பாரம்பரிய விழா - போனலு!

 

 
bonalu_2960404f.jpg
 

தெலங்கானாவில் வருடந்தோறும் ஜூலை மாதத்தின் பின்னிரண்டு வாரங்களில் கொண்டாடப்படும் விழா 'போனலு'. 1800களின் பின்பகுதி அது. அந்த காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் ப்ளேக் நோய் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கியது.

கொத்துகொத்தாக மக்கள் மடிந்த நிலையில் உஜ்ஜயினி மகாங்காளி என்னும் உள்ளூர் தெய்வத்தால் நோய் குணமாகியது என்று நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் நீட்சியாக இன்றும் பெண்கள் குறிப்பிட்ட மாதத்தில் தலைக்கு குளித்து, தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். பானையில் உணவை நிரப்பி தலை மேல் வைத்து கோயிலுக்கு எடுத்துவருகின்றனர். அந்த உணவு 'போனம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை உணவு என்பதன் சமஸ்கிருத வார்த்தையான 'போஜனம்' என்ற சொல்லில் இருந்து வந்திருக்கக்கூடும்.

வழக்கமாக இவர்களின் ஊர்வலம் கோல்கொண்டா கோட்டையில் இருந்து தொடங்குகிறது. பின்னர் கோயிலில் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. அருகில் இருக்கும் நாகினா பாக் பொழுதுபோக்கு இடத்தை விட, ஆன்மீக சுற்றுலா இடமாக மாறிவிட்டது.

இது பெண்களுக்கான விழா மட்டுமல்ல. இந்த விழாவில் ஆண்களும் கலந்துகொள்கின்றனர். காலங்காலமாக பூசாரிகளாக வாழும் சில ஆண்கள், 'போத்தராஜுக்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உடல் முழுக்க வேடமிட்டு காளியம்மன் கோயில் வரை நடனமாடிக்கொண்டே செல்கின்றனர். குதுப் ஷாஹி மன்னரால் ஒரு மசூதிக்கும் கோயிலுக்கும் இடையில் மாகாளி அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் பரிபூரணமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். போனத்தைத் தலையில் சுமந்து வரும் பெண்களுக்கு கோயிலுக்குள் நுழைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-தெலங்கானாவின்-பாரம்பரிய-விழா-போனலு/article8948425.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: 'அடிமை சுதந்திரம்'- குறும்படம்

 

 
adimai_2965229h.jpg
 

பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன. விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.

பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனை அழைக்கிறார். அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று திரும்ப உறங்குகிறான்.

சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல் துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும் தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான். இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.

ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே.. அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை. அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா? விடை காண படம் பாருங்கள்.

காணொளி இணைப்பு

கொடியை ஏற்றினால் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவற்றைத் தேடி அலைகிறான் அந்தச் சிறுவன். கொடியின் மூன்று வண்ணத் துணிகளையும் மூன்று மதங்களில் இருந்து மூன்று மனிதர்களைக் கொண்டு பெற வைத்தது நல்ல சிந்தனை.

அடிவாங்கும் சிறுவர்களை அருகில் வைத்துக்கொண்டே நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில்தான் இன்று பெரும்பாலானோர் இருக்கிறோம். அடிப்பதைத் தடுக்க முயற்சிக்கும் இளைஞனைத் தடுக்கும் இளம்பெண்ணும், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தரும் கையாலேயே அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் முரடனும் இன்றைய சம கால பாத்திரங்களாக நம்முடன் உலவுபவர்கள்.

மரங்களிடையே புலரும் சூரியன், சேவல் தனது இறக்கைகளை விரித்து நெட்டி முறிப்பது, ஊர்ந்தோடும் எறும்பு உள்ளிட்ட பல காட்சிகள் மனோ ராஜின் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கின்றன. வறுமையின் பிடியில் இருந்து மீளத் துடிக்கும் சிறுவனுக்கு இந்த சமுதாயம் தரும் பரிசை, 'அடிமை சுதந்திரம்' என்னும் குறும்படத்தின் வழியாக புடம்போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-அடிமை-சுதந்திரம்-குறும்படம்/article8964172.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யூடியூப் பகிர்வு: ஒமரானுக்காக கண்ணீருடன் செய்தி வாசிப்பாளர் கேட் போல்டன்..!

 

 
omron1_2979884f.jpg
 

கழுத்தறுப்புகளும், கார் குண்டுகளும், தற்கொலைப்படைகளும் மனிதர்களால்தான் நடத்தப்படுகிறது. சக மனிதருக்கு எதிராகவே. அதே உலகில்தான் முன்பின் பார்த்திராத ஒருவருக்காக கண்ணீர் சிந்தும் சிலரும் இருக்கின்றனர் 'மனித' சாட்சியாக.

ஓமரான் தாக்னிஷ் என்ற 5 வயது சிரிய நாட்டுச் சிறுவன் போரின் கோர முகத்தை தன் முகத்தில் தரித்திருக்கிறான்.

அவனுக்காக அழாத மனம் பயங்கரவாதத்துக்கு துணிந்ததாக மட்டுமே இருக்கும். அதனால்தான் ஒம்ரான் பற்றிய செய்தியை வெடித்து அழுது வாசித்திருக்கிறார் இந்தச் செய்தியாளர்.

சிஎன்என் செய்தியாளர் கேட் போல்டன். அன்றைய பிரைம் டைம் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். செய்தி வரிசையில் சிரிய நாட்டின் அலெப்போ நகரில் நடந்த குண்டுவெடிப்பு குறித்தானது அது. அவர் செய்தியை வாசிக்க கேமரா மங்கிய வெளிச்சத்தில் நடைபெற்ற அந்த மீட்புப் பணிகளை காட்டிக் கொண்டிருந்தது. திடீரென பேன் ஆன கேமராவில் ஒருவர் கையில் குழந்தையை தாங்கியபடி கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே முன்னேறுகிறார். ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் இருந்த ஆரஞ்சி இருக்கையில் ரத்தக் காயங்களுடனும், புழுதியுடனும் ஒம்ரான்.

(கீழே ஸ்காரிலிங்கில் ஓடுகிறது 'ஒரு குண்டு, ஒரு சிறுவன், போரும் அதிலிருந்து மீளும் மிரட்சியும்')

அப்போது கேட் போல்டன் பேசியது, "அவனுக்காக நாம் அழுகிறோம். ஆனால் அவன் ஒருமுறைகூட அழவில்லை. அவன் அதிர்ச்சியில் இருக்கிறான். திகைத்துப்போய் இருக்கிறான். அவன் வீட்டுக்குள் இருந்தபோது வீசப்பட்ட குண்டுகளால் அதிர்ந்தான்... இப்போது போரின் குழப்ப விளைவுகளால் அதிர்ந்து போயிருக்கிறான்" (அழுகையும் வார்த்தையும் கலவையாக வெளிப்படுகிறது) தொடர்ந்து பேசுகிறார்.. "இவன் ஒமரான். இப்போது உயிருடன் இருக்கிறான். இந்தச் செய்தியைத்தான் நான் உங்களிடம் சொல்ல விழைகிறேன்"

மனித நேயம் ஓரளவேனும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் கேட் போல்டின் செய்தி வாசிப்பு அடங்கிய இந்த வீடியோவை மனசாட்சியுள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும்.

 

அன்று அய்லான் போரினால் விரட்டப்பட்டு கரை ஒதுங்கினான் இன்று ஒம்ரான் அதே போரினால் குழம்பிப்போய் நிற்கிறான். கரை சேர்வானா?

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-ஒமரானுக்காக-கண்ணீருடன்-செய்தி-வாசிப்பாளர்-கேட்-போல்டன்/article9011657.ece

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: 'மா உலா'- இது 'கால்' டாக்ஸி ஓட்டுநர் கதை!

 

 
taxi_2984276f.jpg
 

சவால்கள் நிறைந்த உலகத்தில், உடல் சவால் உள்ளவர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், அவர்களில் ஒருவரான பாலாஜி தன் திறனை மாற்று வழியில் பயன்படுத்தி வருகிறார்.

தன்னுடைய இரு சக்கர வாகனத்தையே டாக்ஸியாக மாற்றி, தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் பாலாஜி. தன்னுடைய பயணம் குறித்துப் பேசுபவர், தன்னுடைய டாக்ஸிக்கு 'மா உலா' (மாற்றுத் திறனாளி உலா) என்று பெயரிட்டிருப்பதாகச் சொல்கிறார்.

இனி பாலாஜியின் பயணம் காணொலி வழியாக அவரின் வார்த்தைகளிலேயே..

பாலாஜியின் வாழ்க்கைப் பயணத்தை உயிரோட்டத்துடன் அவர் வழியாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரேம். மாவீரன் சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவில் சென்னை மாநகர சாலைகள் அழகியலுடன் வெளிச்சம் பூக்கின்றன.

பாலாஜியின் கால் டாக்ஸியில் செல்ல விரும்புவர்கள், 8939391259 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மா-உலா-இது-கால்-டாக்ஸி-ஓட்டுநர்-கதை/article9026135.ece

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: மரியாதைக்குரிய 'மருதநாயகம்' இவர்தான்!

 

 
marudhanayagam_2990885f.jpg
 

ஸ்மைல் சேட்டைக்காரர்களின் கலாய்ப்பில் சிக்காத சினிமாக்காரர்களோ, பிரபலங்களோ தமிழ்நாட்டில் இல்லை. அதிலும் தேர்தல் நேரத்தில் அவர்களது அலப்பறை அர்த்தம் பொதிந்தது. எச்சரிக்கை உணர்வோடுதான் மருதநாயகம் வீடியோவுக்குள் நுழைகிறோம்.

எதிர்பார்த்ததற்கு மாறாக முற்றிலும் கண்ணியமான அனுபவத்தை தருகிறது ஸ்மைல் சேட்டைக்காரர்களின் 'மருதநாயகம்'.

இளம் வயதிலேயே போர்த்திறமைகள் மிக்க மருதநாயகத்துக்கு பல பெயர்கள் உண்டு. பல வாழ்க்கைகள் உண்டு என்பதை போகிறபோக்கில் தட்டிவிடுகிறது இந்த வீடியோ பதிவு. மருதநாயகம் எனும் யூசுப்கான் பிரெஞ்சுப்படையில் சிப்பாயாக பணிபுரிந்ததையும். அங்கு திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு காதுஅறுபட்ட நிலையில் ஆர்க்காடு நவாப் படையில் சேர்ந்ததையும் போர்ச்சுகல் காதலியே வாழ்க்கைத் துணையானது குறித்தும் சரித்திரக் குறிப்புகளை சரளமாய் தெறிக்கவிடுகிறார் இயக்குநர் நீலேஷ் சிம்ஹா,

ஒரு சாதாரண சிப்பாயாக இருந்து கடும் உழைப்பினால் நவாப் படையின் தளபதியானதையும் மதுரைக்கு மன்னனான யூசுப்கான் யாரோடு எல்லாம் இணைந்து வளர்ந்தானோ அனைவரையும் எதிர்த்த மருதநாயகத்தின் போர்த்திறத்தையும் வலிமையையும் பேசியுள்ள விதம் அருமை.

கமல் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அது எவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்ள வைத்துள்ளது ஸ்மைல் சேட்டையின் இந்த டீம் முயற்சி, கமல் முயற்சியில் களம் காணஉள்ள முழுநீளப் படத்திற்காக காத்திருப்போம். அதுவரை ஸ்மைல் சேட்டை குழுவின் வீடியோ வழியே சரித்திரத்திற்குள் செல்வோம்... நீங்களும் வாங்க....

வீடியோ பதிவைக் காண....

மருதநாயகம் வலிமையான அரசுகளுக்கெல்லாம் தண்ணீர்காட்டிய தந்திரங்களைப் பற்றிய வரலாறுதான் அவனது தனித்துவமான வரலாறு. அந்த வல்லமை குறித்த பதிவு இக்குறும்படத்தில் மிஸ்ஸிங். தவிர, மேலும் இந்த மாதிரி முயற்சிகளில் போர்ச்சுகல் பெண்ணைப் பற்றி தெரிவிக்கும்போது பொட்டுவைத்த பெண்ணை காட்டியதை சுட்டிக்காட்டுவதைகூட சிறுபிள்ளைத்தனமாகிவிடக்கூடும்.

என்றாலும் சாதாரண ஆக்ஷன் காட்சிகளை வைத்துக்கொண்டே ஸ்பெஷல் எஃபெக்ட், படத்தொகுப்பில் தேர்ந்த விளையாட்டு, நம் இதயத்தோடு பேசும் மெல்லிய இசை என மெனக்கெட்டிருக்கிறார்கள். பழைய நூற்றாண்டுகளின் சரித்திர பக்கங்களுக்குள் இழுத்துக்கொள்ளவைத்த மரியாதைக்குரிய இம்முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மரியாதைக்குரிய-மருதநாயகம்-இவர்தான்/article9045723.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

யூடியூப் பகிர்வு: இந்தியாவும் பாலினப் பாகுபாடும்!

 

 
women_2992317f.jpg
 

இந்திய சமூகத்தில் பெண்களுக்கான நிலை இன்னமும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. புனிதமான இடங்களாகக் கருதப்படும் கோவில்கள், மசூதிகள் மற்றும் சில கிறிஸ்தவ ஆலயங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மும்பையின் புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காக்களில் ஒன்று ஹாஜி அலி தர்கா. அங்கு பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. போராட்டங்கள் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே பெண்களுக்காக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மசூதிகளில், ஆண் துறவிகளின் கல்லறைக்கு அருகில் ஒரு பெண் சென்றால் அது கொடூரமான பாவச்செயல் என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர்.

புனித வழிபாட்டுத்தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது இந்தியாவில் வழக்கமான நிகழ்வாக நடைபெறுகிறது. கேரளத்தில் சபரிமலை கோவில், அஸ்ஸாமில் சங்கரதேவ ஆலயம் மற்றும் ராஜஸ்தானில் சில கோவில்களில் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் தீட்டே அதற்குக் காரணம் என்கிறார்கள் நம்பிக்கையாளர்கள்.

இதுதான் இந்தியாவின் சிறப்புத்தன்மையா?

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவும் பாலினப்பாகுபாடுகள் காலங்காலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. க்ரீஸ் நாட்டில் ஏத்தோஸ் மலை 1000 ஆண்டுகள் பழமையானது. ஆனால் சம்பிரதாயங்களில் ஊறிப்போன கிறிஸ்தவர்களின், துறவிகளுக்கான சடங்குகளால் அங்கு பெண்கள் நுழைய அனுமதியில்லை.

ஜப்பானில் ஷிண்டோ இனத்தவரின் புனித யாத்திரை மையமான ஒமைன் மலை பெண்களுக்கு எப்போதும் மூடியே இருக்கிறது. சவுதி அரேபியாவில் பெண்கள் எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் சந்திக்கின்றனர். ஸ்டார்பக்ஸ் கடைகளில் நுழையக்கூட பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கென்யாவில் இருக்கும் குறிப்பிட்ட கிராமத்தில் ஆண்கள் நுழைய அனுமதி கிடையாது. ஐநா பட்டியலிட்டுள்ள பாலினப் பாகுப்பாட்டு குறியீட்டெண்ணில், இந்தியா 170-வது இடத்தைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியா, நேபாளம், வங்கதேசத்துக்குப் பின்னால் இருக்கிறது இந்தியா என்கின்றன சில முக்கியப் புள்ளிவிவரங்கள்.

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

காணொலியைக் காண

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-இந்தியாவும்-பாலினப்-பாகுபாடும்/article9050381.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யூடியூப் பகிர்வு: விடாமுயற்சியின் வெற்றியை சொல்லும் குறும்படம்

 

 
short_movie_003_3007575f.jpg
 

முயற்சி கைகூடுவதில் ஏற்படும் சிக்கல்களும் தாமதங்களும் கண்டு துவண்டுவிட வேண்டாம் என்கிறது 'பெரிதினும் பெரிதுகேள்' குறும்படம்.

ஃபேஸ்புக் தகவல்கள் சிலநேரங்களில் வாழ்வையே கூட மாற்றும் என்று நண்பனுக்கு சத்யா எழுதும் கடிதத்தோடு தொடங்குகிறது குறும்படம். சில மாதங்களுக்கு முன் பின்னோக்கிச் செல்கின்றன காட்சிகள். குறும்படப் போட்டி நடக்க உள்ளதாகவும் தேர்வாகும் படங்கள் தியேட்டரில் திரையிடப்படும் எனவும் முகநூலில் சத்யாவின் நண்பர் ஆரீஃப் கான் தகவலைக் கண்டு அவன் கண்கள் விரிகின்றன. ஒரு லட்சமாவது பணம்வேண்டுமே... என்ன செய்ய? வாட்ஸ் அப், ஃபேஸ்புக், தொலைபேசி என யார்யாரிடமோ பேசிப் பார்க்கிறான். பயனில்லை.

''பேங்க் பேலன்ஸ் ஒரு லட்ச ரூபாய் இருக்கும்போது கனவு காணலாம். இப்போதைக்கு கனவுகண்டு கம்மாயில விழுந்திராதே'' என்று அப்பாவும் அறிவுரை சொல்லி அல்வா கொடுத்துவிடுகிறார். ஏமாற்றம் வலியைத் தர, முயற்சிகள் நிறைவேறும் விதத்தைக் கூறி இயக்குநர் ஜாஃபர் சாதிக் சிற்சில காட்சிகளிலே நம்மை வளைத்துப் போட்டுவிடுகிறார்.

வேலைநிமித்தமாக மஸ்கட்டில் இருக்கும் ஒருவன் 500 ரியால், நம்மூர் பணம் ஒரு லட்ச ரூபாய் கூட சேமித்துவைக்க முடியாத சூழலில் பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் பணம் கேட்பது துயர் மிகுந்தது.

அப்பா அம்மாவிடமும் மடிக்கணினி, ஸ்மார்ட்போன் வழியாகவும் ஸ்கைப் உரையாடல் நிகழ்த்துவது இன்றுள்ள வாய்ப்புவசதிகளை மிகச்சரியாக கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது. மதங்களைக் கடந்து நீளும் நட்புக்கரங்களின் நேசம் படத்தை ஃபீல் குட் மூவிக்கு கொண்டுசெல்கிறது. இவர்களின் முயற்சியை நீங்களும் பாருங்களேன்.

அமல் நரசிம்மன் ஆரீஃப் பாயாகவும், வினோத் கண்ணன் சத்யாவாகவும் அஹமது ராம் ஆகவும் நடித்துள்ளனர். சத்யாவின் அப்பா அம்மாவாக சங்கர் நாராயணன் கிருஷ்ணமூர்த்தி, கல்பனா என அனைவருமே சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். இப்படத்தை பி.எம்.ஃபாய்ஜி தயாரித்து வழங்கியுள்ளார். கே.என்.முரளிதரனின் இசையில் மஸ்கட்டை அழகாகக் காட்டியுள்ள கார்த்திகேயன் மனோகரன் ஒளிப்பதிவு உள்ளிட்டக் குழுவினர் சாதிக்க விரும்பும் இதயங்களுக்கு நம்பிக்கைத் துளிர்விட நீர்த் தெளித்திருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-விடாமுயற்சியின்-வெற்றியை-சொல்லும்-குறும்படம்/article9099701.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.