Jump to content

ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்?

செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!

-    பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்

அம் சொல் மொழியாள் அருந் தவப் பெண் பிள்ளை

     செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை

      தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு

      இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே !

-திருமந்திரம் 1109 (திருப்பணந்தாள் பதிப்பு, ஆண்டு 2012)

     

தமிழ்த் தாய்க்கு யார் சிலை எடுக்கிறார்கள் என்பது அரசியல். அதனை ஏற்பதும் எதிர்ப்பதும் அரசியல். ஆயினும் தமிழ்த்தாயின் வடிவம் என்பது, தமிழறின் மரபறிவு, தமிழ்த் தாய்க்கு ஒரு படிமையை உருவாக்கிக் கொள்வது என்பது தமிழரின் இன உரிமை. இதில் தமிழர் அல்லாதார் கவலைப்பட எதுவும் இல்லை.

 

ஒரு மொழியைப் படிமையாக வடிவப்படுத்துவது சரியா? என்ற அடிப்படைக் கேள்விக்கு நேரடியான விடை கூடாது என்பதுதான். அவ்வாறெனில், தமிழுக்கு ஏன் ஒரு படிமை தேவைப்படுகிறது? என்ற வினா எழும். அதற்கு விடை, ‘தமிழ்’ பிறமொழிகளைப் போன்ற ஒரு மொழி இல்லை! என்பது தான். தமிழ்மொழி, தமிழ் இனத்தின் அறிவார்ந்த கலைப்படைப்பு.

 

உலகில் உள்ள மொழிகளுள், பாவைத் தன்மை கொண்ட தன்னேர் இல்லாத ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே. மாந்த அழகுணர்வின் பிழிவாக ஒரு பெண் பாவையைக் கட்டமைத்து, அதன் வடிவ இலக்கணக் கூறுகளை மொழியின் மீது திருப்பி ஏற்றியவர்கள் தமிழர்கள் மட்டுமே.

 

தமிழ்த்தாய் என்றாலும், தமிழ்ப்பாவை என்றாலும் தைப்பாவை என்றாலும் பொருள் ஒன்றே. பாவை என்பது உருவகம் அல்ல. அது கோட்பாடு. ஒரு கணக்கு வாய்ப்பாடு.

 

காலச் சுழற்சியைக் கறாராகக் கணக்கிட்டுக் கட்டமைக்கப்பட்ட கனகச்சிதமான ஒரு வடிவமைப்பு. வழிபடுவதற்கும், தவம் இயற்றுவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் தமிழைக் காப்பதற்கும் அது ஒரு போர்க்கருவி. விலைமதிப்பற்ற தமிழ் இன அடையாளம்.

தமிழ் மொழிக்கு இலக்கணம் இருப்பது போல, தமிழ்ப்பாவைக்கும் வடிவ இலக்கணம் இருக்கிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலும் 120 கூறுகள் கொண்ட அணங்கு போன்ற ஒரு வடிவம், தமிழர் கலைத் தொழில் மரபில் இன்னும் போற்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறது.

 

‘தொங்கு நூல் பலகை இலக்கணம்’ என்ற வகைப்பாட்டின்படி, ‘பாவை அமைப்பு நுட்பம்’ அறிந்த தமிழ் மரபுக் கலைஞர்கள் பலர் உயிரோடும், விழிப்போடும் இருக்கிறார்கள். அவர்களது மரபறிவின்படியும், தமிழில் அண்மைகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உயர் ஆய்வுகளின் ஓர்மையின் அடிப்படையிலும், தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக உண்மைத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் அடிப்படையிலும், தமிழ்ப் பாவையே ‘தைப் பாவை’ என்று அடித்துக் கூற முடியும்! அறிவார்ந்த உலகின் முன்னால் புரியும்படி எடுத்துக் கூறவும் முடியும்!

 

தமிழ் வாழ்வைத் தவ வாழ்வாக மேற்கொண்டுள்ள ஒவ்வொருவரும், அவரவர் விருப்பப்படி தமிழ்த் தாய்க்கு வடிவங்களைப் படைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு உரிமை இருக்கிறது. உளவியலாக ஒரு தேவையும் இருக்கிறது. உண்மைத் தமிழர் மனம் சோர்வடையும்போது ஆறுதல் தரும் கைக்கருவியாக அதனைப் போற்றலாம். தமிழரின் பகுத்தறிவு மழுங்கிவிடாது. ஏனெனில், பழந்தமிழரின் பகுத்தறிவின் விளைச்சல்தான் தமிழ்த்தாய் படைப்பு.

 

ஒருவேளை ஒரு தமிழ்த்தாய்ப்பாவை தன் கையில் இருந்திருந்தால் முத்துக் குமாரும் செங்கொடியும் நம்மைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டார்கள்.

 

தமிழர்கள் தமக்குரிய இன அடையாளத்தோடு வாழ வேண்டிய இக்காலத்தில், தாம் உயிராக மதிக்கும் மொழிக்கு வடிவம் தந்து அதனையே இனக்காவலாகக் கருதுவதில் தவறு நேர்ந்துவிடாது.

 

தமிழ்ப்பாவையைக் கையாளும் ஒவ்வொருவரும் தமக்கு எட்டும் தொலைவில் ஒரு தமிழ் ஆசானைத் தேர்ந்து கொள்ள வேண்டியதும் கட்டாயத் தேவை.

 

ஓவியமாக, பாவையாக, படிமையாக சிறிய அளவிலும் பெரிய அளவிலும் எப்படியும் அமைக்கலாம்.

 

சுடுமண், மரம், செம்பு, வெள்ளி, தங்கம் என எப்பொருளிலும் அமைக்கலாம். வரவேற்பறையில், மேசை மீது, நிலைவாசலில், அழகுப்பொருளாக, வழிபடு படிமையாக, எப்படியும் அமைத்துக் கொள்ளலாம். கையிலும், கழுத்திலும் சிறிய  வடிவில் தாயத்தாக கூடக் கட்டிக் கொள்வது மூட நம்பிக்கை ஆகாது. ‘தை இத்துக்’ கட்டுதல் என்பது பாவைக் கட்டோடு தொடர்புடைய செயல் ஆகும். அதுவே தமிழ் மந்திர மரபின் சிறப்பும் ஆகும். தமிழ் ஒலிப்புகளை தைப்பாவை ஏற்றுக்கொள்வாள். ஏவினால் பாய்வாள். கடிகை நூல் என்பது காலக்கணக்கு, தமிழ் ஒலிப்பு, பாவை இவற்றோடு தொடர்புடையது. தமிழ் மரபில் அரசியர் கைகளில் அதனைக் கட்டியிருந்தனர்.

 

தமிழ்ப்பாவை அமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

 

      அரசுகள், அரசியல் அமைப்புகள், அறக்கட்டளைகள், இலக்கிய அமைப்புகள், தமிழ் செல்வந்தர் குழுக்கள் போன்றவை நல்லெண்ணத்தால் தமிழ்த் தாய்க்குச் சிலை எடுக்க விரும்பினால் அதற்கு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒரு சிறந்த தமிழ்க் கலைஞனை முதன்மைப் படுத்தலாம். அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளாத வடிவங்களை மக்கள் மீது வலிந்து திணிக்கக் கூடாது.

 

     தமிழ்த் தாய்க்குச் சிலையெடுத்தால் தமிழர்களை ஏமாற்றலாம் என்றால் இராசபக்சேயும் அதற்கு முன் வருவான். தமிழர்கள் ஏமாறக்கூடாது. தமிழர் அல்லாதவர்கள் தமிழ்த் தாய்க்குச் சிலையெடுக்க முயற்சிக்கக் கூடாது.

 

     தனி நிலையில் உயிர் மலர்ச்சி பெற்ற தமிழர் ஒவ்வொருவரும் முயற்சி செய்து அமைக்கும் தமிழ்த்தாய், அவரவர் அகத்தவத்தின் அளவுக்கு ஏற்ப, பொலிவுடன் அமைவாள் என்று எதிர்பார்க்கலாம்.

 

எப்படி அமைக்கலாம்!

1.   பாவையின் உயர அளவு உச்சந்தலை முதல் உள்ளங் கால்கள் வரையிலும் 120 கூறுகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

2.   உடலின் மேற்பகுதி உச்சந்தலை முதல் அரை வரையிலும் 60 கூறுகள் இருக்க வேண்டும் (ஒரு கூறு என்பது அடிப்படை அலகு. அதனை அவரவரே கற்பித்துக் கொள்ளலாம். ஒரு கூறு இவ்வளவு என்று அறிதியிட்ட பின் அதனையே மடக்கி விரித்து அளவு கோலாகக் கையாள வேண்டும். வேறு அளவு கோலைப் பின்பற்றக் கூடாது.)

3.   இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட இலக்கியத் தலைவி போன்ற சாயலில் அமைக்கலாம்.

4.   அகவை பன்னிரண்டுக்குரிய வளர் இளம் பாவையாக அமைக்கலாம்.\

5.   ஒரு பெண்ணுக்குரிய பொதுவான சிறந்த வடிவப் பண்புகள் அனைத்தும் இருக்கலாம்.

6.   பழந்தமிழ் இலக்கியங்கள் பெண்மையை வியக்கும் அனைத்துக் கூறுகளும் அளவு கோலாகக் கருதப்படலாம்.

7.   நின்ற கோலம், அமர்ந்த கோலம், வளைந்த கோலம், போர்க் கோலம், தவக் கோலம் என அவரவர் விரும்பியவாறு அமைத்துக் கொள்ளலாம். எப்படி அமைக்கப்பட்டாலும், ‘120’ கூறுகொண்ட வாய்ப்பாடு மட்டும் மாறக் கூடாது.

8.   கைகளில் ஏடு, எழுத்தாணி, மலர், விளக்கு, நெற்கதிர் என எப்பொருளையும் தரலாம். தராமலும் முத்திரைகளால் அழகுற அமைக்கலாம்.

9.   அமைதி தவழும் முகம், நேரிய பார்வை, நேர்த்தியான தோற்றம், எளிமையான அணி கலன்கள், பொருத்தமான உடை எனப் பெருமிதமான பூரிப்புடன் கூடியதாகத் தமிழ்த்தாயின் படிம வடிவமைப்பு திட்டமிடப்பட வேண்டும்.

10. அரசிக்கு உரிய ‘அரசபூரிமம்’ தலையில் அணி செய்ய வேண்டும்.

 

எப்படி அமைக்கக் கூடாது!

 

1.   60+60=120 கூறுகள் அற்ற, மாறுபட்ட அளவுகளில் திட்டமிடக்கூடாது.

2.   மிகையான பருமனில் அமைக்கக் கூடாது.

3.   நலிவுற்ற தோற்றத்தில் அமைக்கக் கூடாது.

4.   எந்த ஒரு குறிப்பிட்ட பெண்ணையும் பார்த்துப் படியெடுத்து அமைத்து விடக் கூடாது.

5.   முறுக்கேறிய தசைகள், எலும்பு நரம்புகள் தோன்ற அமைக்கக் கூடாது.

6.   முதிர் தோற்றம் கூடாது. கீழும் மேலும் பார்க்கக் கூடாது

7.   இரண்டுக்கு மேற்பட்ட கைகளையுடைய மிகு கற்பனை வடிவமாக அமைக்கக் கூடாது.

8.   ஆரிய வைதிக அடையாளங்களை ஏற்றக் கூடாது.

9.   ‘தை’ முதல் நாளைத் தவிர வேறெந்த நாளையும் குறிவைத்து வணங்குதற் பொருட்டான ஒரு வடிவத்தைத் தமிழர்கள் கண்டிப்பாகக் கற்பிக்கக் கூடாது.

10. தமிழைத் தவிர வேறு எந்த மொழியாலும் தமிழ்த்தாயை வழிபடக்கூடாது.

 

குறிப்பு: ‘பாவை’ ஒரு கோட்டோவியக் கோட்பாடாக வரைவு செய்யப்பட்ட நூல் ‘நெளிவிலிருந்து நிமிர்வுக்கு’ களஞ்சியம் அறக்கட்டளையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

 தொடர்புக்கு: 984247790, 9962519582

 

___---ooo000OOO000ooo---___

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.