Jump to content

அறிவியல் அறிவோம் : பூமியின் தூரத்துச் சகோதரி


Recommended Posts

kepler_2497679f.jpg

இரண்டாவது பூமி (பெர்த் 2.0) என்று வானவியலாளர்கள் அழைக்கும் கிரகத்தை நோக்கிய தேடல் வெகு காலமாக நடக்கிறது. அதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாஸாவின் கெப்ளர் கிரக-வேட்டை விண்கலத்தைச் சேர்ந்த வானவியலாளர்கள், இதுவரை கண்டறியப்பட்டிருப்பவற்றிலேயே பூமியுடன் அதிக ஒற்றுமை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தார்கள்.

அதுக்கும் இதுக்கும் இடையே

பூமியின் விட்டத்தை விட ஒன்றரை மடங்குக்குச் சற்று அதிகமான விட்டம் கொண்டது அந்தக் கிரகம். அதன் பெயர் கெப்ளர் 452பி. அந்தக் கிரகம் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுகிறது. சுற்றுப்பாதையை ஒரு தடவை நிறைவு செய்ய 385 நாட்கள் ஆகின்றன. இதனால் மிதமான வெப்பநிலையும், மேற்பரப்பொன்று இருக்குமென்றால், நீரும் இருப்பதற்கு அதில் சாத்தியமுள்ளது.

புதிய கிரகத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, பாறைத்தன்மை கொண்ட கிரகத்துக்கும் நெப்டியூன் போன்ற வாயுக் கோளத்துக்கும் இடையிலான தன்மையில் இந்தக் கிரகம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தக் கிரகம் பாறைத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு 50-லிருந்து 62 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக, ‘தி அஸ்ட்ரானமிகல் ஜர்னல்’ இதழில் ஜோன் ஜென்கின்ஸ் தெரிவிக்கிறார். இது, அந்தக் கிரகம் சார்ந்துள்ள விண்மீனின் அளவைப் பொறுத்தே அமையும். அப்படியென்றால் பூமியின் நிறையை விட ஐந்து மடங்கு நிறையை அந்தக் கிரகம் கொண்டிருக்கும் என்று பொருள்.

சூரியனுக்கு அண்ணன்

அப்படிப்பட்ட கிரகம் அடர்த்தியான, மேகமூட்டமான வளிமண்டலத்தையும், எரிமலைகளையும், பூமியைவிட இரு மடங்கு ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கக் கூடும் என்கிறார் ஜென்கின்ஸ். செய்தியாளர் சந்திப்பின்போது இந்தக் கிரகத்தைப் பற்றி விவரித்த ஜென்கின்ஸ், சாப்மேன் மொழிபெயர்த்த ஹோமரின் இதிகாசத்தை முதன்முதலில் பார்த்த பரவசத்தை விவரித்துக் கீட்ஸ் எழுதிய வரிகளைக் கூறினார்: “வானகத்தை உற்று நோக்குபவர் புதிய கிரகம் ஒன்றைக் கண்டறிந்ததைப் போல நானும் உணர்ந்தேன்.”

இந்தக் கிரகத்துக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கும் விண்மீனுக்கு நமது சூரியனைவிட 150 கோடி ஆண்டுகள் வயது அதிகம். சூரியனை விட 20% அதிக ஒளியையும் கொண்டது அது. உயிர் வாழ்க்கைக்கான அறிகுறிகளையும் அது கொண்டிருக்கிறது என்றும் ஜென்கின்ஸ் கூறுகிறார்.

பூமியின் சகோதரி

“கெப்ளர்-452பி-யை பூமிக்கு ஒன்றுவிட்ட, அக்காவாகக் கருதலாம். பூமியின் பரிணாமமடைந்துவரும் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு நமக்கு” என்கிறார் அவர். “ஒரு விண்மீனைச் சுற்றியுள்ள பகுதிகளுள் உயிர் வாழ்க்கைக்குச் சாதகமாக இருக்கும் ஒரு பகுதியில் 600 கோடி ஆண்டுகள், அதாவது பூமியின் வயதைவிட நீண்ட காலம் இந்தக் கிரகம் இருந்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கவே வியப்பாக இருக்கிறது. உயிரினம் வாழ்வதற்குத் தேவையான விஷயங்கள், சூழல்கள் இந்தக் கிரகத்தில் இருந்திருக்குமென்றால் உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையான வாய்ப்பு அது” என்கிறார் ஜென்கின்ஸ்.

உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்களைக் கொண்ட கிரகங்களின் சிறப்புப் பட்டியலில் கெப்ளர் 452பிக்கும் இடம் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டுமென்றால் அந்தக் கிரகத்தின் நிறையை நேரடியாகக் கணக்கிட வேண்டும். அந்தக் கிரகத்தின் இழுவிசையால் அந்த விண்மீனின் சுழற்சியில் ஏற்படும் தடுமாற்றத்தை உற்று நோக்குவதற்கு ஏதுவான தொலைவிலிருந்து பார்க்க வேண்டும். அதற்குத் தற்போது சாத்தியமே இல்லை. ஏனெனில், கெப்ளர் 452பி பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

பட்டியலில் முதலாக..

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் பட்டியலைக் கடந்த வாரம் கெப்ளர் வானியலாளர்கள் வெளியிட்டனர். அதில் இந்தக் கிரகம்தான் முதலாவது. இதுவரை கெப்ளர் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 4,696-ஐத் தொடுகிறது. இவற்றில் பெரும்பாலானவை பூமியைப் போன்றே சிறியவை. “நாமெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் ரொட்டித் துணுக்குகள்,” என்கிறார் ஜெஃப் காக்ளின். இந்தக் கிரகங்களின் பட்டியலைத் தொகுத்தவர் இவர்தான்.

2009-ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பால்வெளி மண்டலத்தில் சைக்னஸ், லைரா ஆகிய விண்மீன் தொகுப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியை அவதானிப்பதில் நான்கு ஆண்டுகளைக் கழித்தது. கிரகங்கள் கடந்துசெல்லும்போது விண்மீன்களின் ஒளி மங்குவதை அந்த விண்கலம் உற்று நோக்கிக்கொண்டிருந்தது. 2013-ல் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. எனினும் அது திரட்டிய தரவுகளை வானியலாளர்கள் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தத் தரவுகளை ஆராயும்போதெல்லாம் புதுப்புது கிரகங்கள் தலைகாட்டுகின்றன.

உயிர்கள் இருக்கின்றனவா?

இந்தக் கிரகத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பு மிக முக்கியமான தருணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே சமயத்தில்தான் ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிஷேல் மேயரும் டீடீயெய் கேலோஸும் பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தூரத்தில் பேகஸி என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தார்கள். சூரியக் குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற ஒரு விண்மீனுக்குச் சொந்தமான கிரகங்களில் முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் அதுதான். அந்தக் கண்டுபிடிப்புதான் பெரும் வானியல் புரட்சிக்கு வித்திட்டது.

டாக்டர் கேலோஸ் தற்போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், “மகத்தான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதேபோன்று ஊக்கத்துடன் கடுமையாக உழைத்தால் பிற கிரகங்களில் உயிர்வாழ்க்கை சாத்தியமா என்ற கேள்விக்கு விடைகாணப்பட்டுவிடும்” என்றார்.

10 சதவீதம்

பால்வீதியில் இருக்கும் 20 ஆயிரம் கோடி விண்மீன்களில் பூமியின் அளவில் இருக்கும் கிரகங்களைக் கொண்டிருப்பவை சுமார் 10 சதவீதமாக இருக்கலாம் என்பது கெப்ளர் வானியலாளர்களின் கணக்கீடு. கெப்ளர் 452பி அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். இவற்றில் 600 விண்மீன்கள் பூமியிலிருந்து 30 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றன. அவற்றில் 60 விண்மீன்களில் பூமி போன்ற கோள்களுக்கான சாத்தியங்கள் இருக்கின்றன. வருங்காலத் தொலைநோக்கிகளின் நம்பிக்கை இந்த விண்மீன்கள்தான்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

http://tamil.thehindu.com/general/education/அறிவியல்-அறிவோம்-21-பூமியின்-தூரத்துச்-சகோதரி/article7499114.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.   அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.   அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.   சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.   ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார்.   இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம்.  இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.   
    • உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார். 
    • இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம்  உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல்  இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று  Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட)  இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
    • ஹா ஹா அதெல்லாம் அந்த‌க் கால‌ம் இப்ப‌ கூட‌ இவ‌ரின் பெய‌ரை சொன்னால் சில‌ இட‌ங்க‌ள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த‌ பெரிசுக்கு குசும்பு அதிக‌ம் தான்.........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.